Everything posted by வல்வை சகாறா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காவாலிக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெல்லையனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் அத்தோடு சொப்னாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்
-
எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.
மௌனித்துக் கொண்டவர்களே! இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள். பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும். எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து, இந்த இனஅழிப்பிற்கு, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்று முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள். இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது. வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்... நாங்கள்தான் முட்டாள்கள் போலும். எங்கள் ஒப்பாரிகள்... உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி, ஏமாந்து கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள் என்பதை சில சமயங்களில்... பிறழ்வுக்கு உள்ளாக்கிவிடும் தவறைச் செய்கிறோம் தன்கையே தனக்குதவி எனும் இனம் பிறன் காலடியில் உயிர்வாழ, கையேந்த சபிக்கப்பட்டது எப்படி? காலங்காலமாக வாழ்ந்த மண்ணில், எத்தனை காலமாக ஏதிலிகளாகக்கப்பட்டு, இனஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுகச் சிறுக சீரழிக்கப்பட்டோம். எவரேனும் எங்கள் வாழ்வைப்பற்றிக் கவலையுற்றுக் குரல் தந்தீர்களா? இல்லையே.... உங்கள் நாட்டில் நீங்கள் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று அறியவில்லை என்று எங்கள் காதுகளில் பூச்சுத்தாதீர்கள்;. இப்போது நாளாந்தம் எம்மண்ணில், துடிக்கத் துடிக்க சாவணைக்கும் உறவுகளின் எண்ணிக்கையை, ஏதோ உணவுப் பயிருக்கு தீங்கு செய்யும் பூச்சி, புழுக்களைக் கொல்லும் கணக்கில் போட்டுவிட்டதுபோல், துளியும் மனவருத்தமின்றி மெத்தனமாக கதைக்கிறீர்களே தவிர, அதிலும் கொஞ்சம் நிவாரணப்பணம் தந்துதவ நினைக்கிறீர்களே அன்றி, நாளாந்தச் சாவுகளையும், கைகால் இழப்புகளையும், மனநலம் குன்றுவதையும்.... உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று யாரும் அறைகூவல் செய்யாமல் மழுப்புகிறீர்கள். அப்படியாயின், எங்கள் தாயக மண்ணில் நடைபெறும் இனஅழிப்பு என்பதை நீங்கள் எல்லோரும் மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கின்றீர்களா? அனைத்துலகமே! போதும்.. உங்கள் மனித காருண்யத்தை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள் ஈழத்தமிழர்களாகத்தான் இருக்கமுடியும். எங்களுக்கான தொப்புள் கொடி உறவுகள்தான், எமக்காக தம் வாழ்வைக் கருக்கி நாளாந்தம் தமை வருத்தி வாழ்கிறார்கள். அவர்களின் கூக்குரல் கூடவா எவருக்கும் கேட்கவில்லை. உலகமெல்லாம் தாவரம், பறவை, விலங்கு என்று எல்லாவற்றையும் பாதுக்காக்க திரளுங்கள். மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள். எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம். சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது வழங்காமல் விடலாம் அல்லவா. ஐயோ..!! நாற்காலி மனிதர்களே! நாறும் பிணமாகவும், நாயிலும் கேவலமான வாழ்வானதாகவும் எங்கள் வாழ்வின்று நலிந்து கிடக்கிறது. எங்கள் வலிகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை. நீங்கள் எவரும் புரிய முயற்சிக்கப்போவதும் இல்லை. தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கென்றால் தெரியும் அதன் வேதனை. உலகே! ஒரு கண்ணில் வெண்ணையும், மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவிக் கொண்டிருக்கும் உன் போக்கு மாறும் காலம் வரும். எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும். எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும். வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம். சர்வதேசம் கண்ணிழந்த கதையை, ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும். இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின் கண்களில் வழியும் கண்ணீரே தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள் முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும். யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ... வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.
-
பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே! உன்னை இனி நானே பாடுவேன்.
கண்ணெதிரே கலையுமா கனவு? மண்ணெனவே உதிருமா மனது? நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம் ஒப்பேற முன்னரே உருகியா போகும்? இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை? இது காலச்சுழி சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது. சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும். தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும். மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும். உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும். இன்றைய பொழுதுகள் எமக்கானவை. ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர் முக்காற்சுற்று முடித்துவிட்டது. சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர். காது கொடுக்காதே.. கலங்கிப் புலம்புவாய். நம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும். மாவீரத்தோள்கள் சுமந்த வரலாற்றை முனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும். ஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு உடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது. வெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது. என்ன இருக்கிறது? எல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம். உயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது. அச்சப்பட்டதற்காய் அங்கெவரும் காப்பாற்றப்படவில்லை. அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளர். உறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால் உந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய். கண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது. மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு. புலத்திற்குள் பொருந்திக் கொள். புலன் தெளிவுறு. உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு. கால எழுதியிடம் புதுக் கணக்கை திற. ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு. ஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன் பஞ்சபூதங்களாய் பலவழிகள் திறந்துள்ளான். அவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது. அழிவுற்றுப் போகாது. பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே! உன்னை இனி நானே பாடுவேன். அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை உன்னை இனி நானே பாடுவேன். என்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும் கொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன். விழுதனைத்தும் பிணைத்து, வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி, மீண்டெழும் மிடுக்கை மிகைப்படுத்துவேன். புலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின் கூர் உனை பொசுக்கும். பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே! உன்னை இனி நானே பாடுவேன். அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை உன்னை இனி நானே பாடுவேன்.
-
இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!
உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே! உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே! ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக் காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே! எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ? வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம். ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும், பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும், கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும், ஈர்ப்பு இருக்கிறது,.... எனினும் இப்போது முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க, உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி, கூப்பிடு தொலைவில்த்தானே... எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது. ஆற்ற ஒரு நாதியின்றி, - எம்மினத்தின் அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி, அம்மா!.......உன் கையணைக்கும் தூரத்திலல்லவா... எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது. வாதைகள் பல சுமந்து, கந்தகக் காலனின் குடியிருப்பில், குடி சுருங்கி, கொப்பளிக்கும் குருதிவழி குலைசிதற, இடிதாங்கி, இடிதாங்கி.... அடிதாங்கும் நிலை கூட... இன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன? உன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா? இல்லாவிடின் வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா? கட்டாய வலி வந்து, கால் அகட்டிக் கிடக்கையிலே ஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை... எங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே.... எப்படித் தனிக்க விட்டாய்? ஏதிலியாய் தவிக்கவிட்டாய்? சாவின் விளிம்பினிலே, கூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே, ஆவி துடித்தெழுந்து... தாவி அணைக்கும் தாய்மடி நீதானே! வாரியணைத்து எம் புவியின் வண்ணமுகம் பார் தாயே! - எவ் வல்லமையும் உடைக்க முடியாத் தாய்மைவேதம் நீதானே! தாயே!...... குமுறும் எம் உள்ளக் கோபுரத்தை வருடி எப்போது ஆற்றுவாய் தனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும் வலுவாய் தோற்றுவாய் அம்மா! இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! பாராமுகம் வேண்டாம். வா!... பக்கத்துணையாய் இரு! வேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம். எம் புவியின் பேற்று மருத்துவச்சியாய் நீயே பிள்ளைக் கொடி அறு!
-
நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்
பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே! இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம். ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்? மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது? மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும் கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்? கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும், கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்? கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம் செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே! அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா? அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நலிகிறது கண்ணை மூடி நீ காணாது நிற்பது ஏன்? கந்தகம் துப்பத் துப்ப நொந்தழுதோர் நாம்தானே! வெந்துஅகம் விழிசுரக்க வேதனைகள் சுமந்தோமே! இந்த நிலம் வந்தபின்னால் அந்த வாழ்வு மறந்தோமா? குந்த நிலம் கண்டவுடன் கூன் முதுகு கொண்டோமா? உன் காலுதைப்பை தன்மேல் காலமெல்லாம் தாங்கியள் நீ கல் தடுக்கி விழுந்தாலும் காயத்தில் ஏந்தியவள். சூழ் கொண்ட கருவறைதான் வெவ்வேறு என்னினமே! சேர்த்தணைத்து சுமந்தது ஈழத்தாய் மடிதானே! வசந்தச் சோலையிலே வளவுக்குயில் பாடியதும், இசைந்த தெங்கிடையே தென்றல் நடம் ஆடியதும், கண்ணுரசும் அலையிடையே கயல்கள் விளையாடியதும், எண்ணிப் பார்த்திடுக என்னினமே! என்னினமே! வாயொடுக்கி, மெய்யொடுக்கி விதியென்று கிடவென்று வந்தோரும் போனோரும் தந்தனத்தோம் போடுகிறார். நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள் எம் தாயொடுக்கல் காணாமல் தீர்வெழுத முனைகின்றர். எம்மினத்தின் வேதனையை ஏன் அறியாதிருக்கின்றார்? எண்திக்கும் எவரிருந்து எம் கழுத்தை நசிக்கின்றார்? கண்ணில் வெண்திரையா? காரணங்கள் பலதிசையா? எம்மிறக்கை துண்டித்து எது செய்ய நினைக்கின்றார்? ஈழத் தமிழினமே! உன்னி மூச்செடுத்தால் உலகெம் திசை திரும்பும். - தாய் மண்ணுக்கு வலுவூட்ட வல்லமைக் குரல் செய்க! எமைப் பிள்ளையெனப் பெற்றதெண்ணி ஈழநிலம் பூரிக்கும். பின்னாளில் போற்றும் வரலாறும் வாழ்த்துரைக்கும். விழவிழ எழுகின்ற வேதம் என்பதெல்லாம் அழகாக தமிழ் தொடுத்து அரங்கேற்றும் கவிகளுக்கா? குலம் விளங்க வாழ்ந்தமண் கும்மிருட்டில் விழி கரிக்க கோடை வசந்தத்தில் கூத்தாடி மகிழ்வதென்ன? பொங்கு தமிழ் குலமே! சொந்த உறவுக்குச் சோகங்கள் தருவதற்கா உந்திக் கிளம்பாமல் உட்கார்ந்து கிடக்கின்றீர்? முந்திச் செய் தவறால் வெந்தநிலை போதும் பந்தி படுக்கை விட்டு எப்போது எழுந்திடுவீர்? அன்னை திருமேனி அந்தரித்துக் கிடக்கிறாள். - எம்மினம் நொந்து குலையவோ? வேரடி வெம்பி மனையவோ? எழில்தரும் பனிமுகத்தின் ஈரமலர்களே! கண்களில் தீ மூட்டுக! ஈழம் காத்திடும் பணி ஏற்றுக.
-
நீர் ஊற்றி நிறைத்தாலும், பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும், கார் காற்று மேனியத
என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக. முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை, மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த்து, தள்ளாடி நான் விழுந்தால் தாங்கி இரசித்தவளை, சித்தமெலாம் எனையாளும் சித்திரையின் நாயகியாம் உலக சக்தியவள் பெருந்தாயை, நான் செத்தழிந்து போனாலும் என் சாம்பல்கூடத் தலைவணங்கும் மாவீரத் தோழர்களை, பத்திரமாய் தொழுது, எந்தன் தமிழுக்கு நிமிர்வு தந்த தானைத் தலைவன் வழியதைச் சிரமேற்று, உயிர்ப்பின் வலி உரைக்க, எனை வனைந்த என்குருவிற்குத் தலைவணங்கி, தாயின் மணிவயிற்று பசியென்னும் தீயணைக்க சிறங்கை பொருள் கொடுக்கும் செந்தமிழ உறவுகளே! சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இது புதுவரவு. கல்லி எடுக்கவும், களைகள் பிடுங்கவும், நன்னீர் பாய்ச்சி, நற்பயிர் வளர்க்கவும் களத்து மேடு தேடிக் கால்கள் வந்துள்ளன. கார் சூழ்ந்த பொழுதிடையே கவிவிளக்கு ஏற்றியுள்ளோம். ஒளி காட்டும் திசை நல்ல வழிகாட்டும் உணர்ந்திடுக. ஏர் பூட்டி வந்துள்ளோம். விடுதலைத் தேரிழுக்க ஊர்கூட்ட வந்துள்ளோம். கார்காற்றில் தீ மூட்ட கவி நெருப்பேந்தி, இக்களத்து மேட்டிடையே.. கண்ணீர் வைரங்களில் கனல் ஏற்றி வந்துள்ளோம். ஆர் ஆற்றுவார் எங்கள் ஆழ்மனதின் தீப்பிழம்பை? நீர் ஊற்றி நிறைத்தாலும், பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும், கார் காற்று மேனியதைக் தழுவிக் குழைந்தாலும், அணையாது அணையாது எரிகிறது என் தாய்மூச்சு. எந்தையும் தாயும் கூடிய எம்மண்ணிலே எத்தர்கள் நுழைந்தது எப்படி? கந்தகம் தினம் தினம் காற்றிலே பூத்து காலனை அழைத்தது எப்படி? வந்தேறு குடியென்று வந்தவன் விரட்டிட வேர் நொந்து போனது எப்படி? அந்தரித்து அந்தரித்து அவலத்தைச் சுமந்து அகிலத்தில் பரந்தது எப்படி? வந்தரை ஏற்று விருந்தோம்பி நின்றதில் வந்தது தந்தது வேதனை. எந்தையர் விரட்டியே எம்நிலம் பிடித்திட திணித்தனர் இனவாதத் தீதினை. சிங்களத்தரசுகள் செந்தமிழ் தீய்த்ததில் கந்தகம் விழுந்தது எம் கைகளில். நின்றாடும் துணிவின்றி நம் வட்டம் சிறுத்ததனால் அந்தரித்துலகினில் தலைவதாய் வாழ்வணை. முடிந்ததா நம்மால்.... வேர் பிடுங்கி எங்களை வேற்றுநிலம் நட்ட பின்பும்.. ஊர் நினைப்புதானே உள்ளுக்குள் எரிகிறது. அன்னை திருமேனி அந்தரிக்க அந்தரிக்க கண்ணை அயரவிட எண்ணங்கள் மறுக்கிறதே... போர் மூசும் பெருங்காற்றில் ஊர்கிழித்து விழுகிறதாம் ஒரு மூச்சில் நாற்பது செல்கள். கார் கிழித்து வான் வெளியில் கரணங்கள் போட்டு, வண்டி பருத்தவரும், வாய் முகப்பு நீண்டவரும் குந்தி எழும்பினாலே... ஆழக் கிணறு வெட்டும் வேலை மிச்சமாம். நச்சரவம் ஒருபுறம், நாசத்திரவம் மறுபுறம்... எத்தனை நாள் தாங்குவர் எம் உறவுகள்? காட்டு வெளிகளிலே காஞ்சோண்டி செடியிடையே, நாயுருவி முத்தமிடும் நாணற்புதரிடையே, பாறிச் சரியுதடா பாசத் தோள்கள். ஈரவயிற்றுள்ளே கோரப்பசி விழிதிறக்க, பித்தச் சுனையிடையே எரிமலைகள் குமுறுதடா. சேறெடுத்த மண்ணிடையே பாய் விரிக்க முடியுமா? தோள் சாயும் இடந்தானே படுக்கையாய் கிடக்கிறது. ஈரவிழிகளெல்லாம் இலக்கேந்திக் கிடக்கின்றன. ஓரவிழி கசிய.... தூரத்து வெளிகளிலே துயர் துடைக்கும் உறவுண்டு எனும் பாரிய நினைவோடு உயிர் வலிக்க நிமிர்கின்றன. ஓரவிழி கசிகிறதா? ஈரக்குலை அசைய உள்ளிழுக்கும் மூச்சில் ஆழத்து அகம் விரித்து அழுகை எழுகிறதா? உறவுக் கொடியெல்லாம் ஓடிவந்து அணைப்போமென்று ஊர் போகும் காற்றிடையே உறுதி மொழி சொல்லிவிட பாவி மனம் கிடந்து பாடாய் படுகிறது. வாருங்கள்..... ஆவி துடிக்கும் இக்கவி கேட்டு தாவி உறவெல்லாம் நாமுள்ளோம், நாமுள்ளோம் என்றுரைத்தால் போதும். எம்மினம்.... போரின் அனலிடையே வேகாது. விதியென்று சாகாது. எண்திக்கு உறவுகளும் வேர் மடிக்கு நீர் பாய்ச்சும் எனும் வீச்சில் மூசியெழும். தற்காப்பு நிலையென்று உட்கார்ந்த நிலை உடைத்து உக்கிர மூச்செடுத்து உலைக்களத்தில் நிமிரும். படலைக்குள் நின்றாடும் யுத்தச் சாத்தானைப் பந்தாடிக் காலிடையே பிழியும். ஊர் போகும் காற்றிடையே..... 'நாமுள்ளோம் அஞ்சற்க.. நாமுள்ளோம் அஞ்சற்க' எனும் உறுதி மொழி சொல்ல... உரத்து கூறுக. நாமுள்ளோம் அஞ்சற்க..... நாமுள்ளோம் அஞ்சற்க.
-
தகிக்கும் தீயாய், தளரா வலுவாய் உதிக்கும் சுடராய், ஓர்ம உணர்வாய் பதிக்கும் பொறியாய், பாரிய மல
உலக வல்லாதிக்கத்தின் அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன. தொடரும் போரும், கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும், பொருத்தமில்லாச் சமன்பாடுகளும் எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன. எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும் மறுக்கப்படுகின்றன. குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒரு இனவாதத்தின் படர்கை எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது. முற்றுப் பெறாத கால நீட்சியில் எம்மினத்தின் வாழ்வு வேதனைக்குள்ளாகிறது. வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம் உசுப்ப உசுப்ப உக்கிரமாகிறது விடுதலை மூச்சு. ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு வியாபிக்க விடுதலைச் சுடரில் சுதந்திர வாசனையை எம்வாசல் நோக்கி அள்ளிவருகிறது காற்று. அற்றதொரு பொருளுக்குள் புதையும் சுயத்தை உணர்ந்தாலே அடங்காச்சினம் அவதாரம் எடுக்கும் வெறுமையும் விரக்தியும் வைரம் பாயப் பாய மரணத்தை மீறி எழும் எம்வாழ்வு. நிமிர்ந்த பரம்பரை நிலை குலைவதில்லையென எழுகைப் பாட்டெழுதும் ஓர்மக் கோல்கள் அடிக்கின்ற காற்றிற்கெல்லாம் அள்ளுண்டு போகாது. துருவப் பனிக்காட்டில் அனல்பற்றி எரிகிறது. உருளும் உலகிருப்பில் ஊர்மூச்சு எழுகிறது. சத்திய வேள்விகள் சாய்ந்ததாய்ச் சரிதம் இல்லை சந்தனக் காடுகள் வாசத்தைத் தொலைப்பதில்லை நித்திலச் சூரியனை இருள் மூடித் தின்பதில்லை நிலம் பிடித்த பகையும் நீடிக்கப் போவதில்லை தேசத்தின் திசையெங்கும் தீ மூண்டு எரிகிறது மனிதத்தின் உயிர்ப்பெல்லாம் மண்மூடிக் கிடக்கிறது தமிழா உனக்கு என்ன விதி? தணிந்தது போதும். தணல் மூட்டு இனி. கந்தகம் குதறும் கார்காலப் பொழுது இது காரணம் பலகூறி கண்வளர்தல் ஆகாது வீட்டோடு மாப்பிள்ளை என்று கூற்றுவன் ஆனபின்னால் வேதாந்தம் பேசுதல் விக்கினத்தைத் தீர்க்காது. வேட்டுக்கள் மாள்வளித்தால் விதியென்று நோகாதே. வீணே வெளிப் புலத்தில் விலகி நின்று வாடாதே. ஊர் உறவு கூர் முனையில் உருக்குலையும் நிலை போதும் உழு ஒடுக்கும் உலகமுகம் உடைத்தெறிவோம் வருக. தாயகம் தன்னை நெஞ்சிலே தாங்கினால் சாதரும் நஞ்சிலும் அமுதமே சுரக்கும். விழுதுகள் பலம் எது விடைதரும் காலம். அழுததும், தொழுததும், அலைந்ததும் போதும். விழி மடல் திறவா விதியையும் தகர்ப்போம். உழு களம் நிமிர்கையில் உலகதை ஏற்கும் நிலை தர முனைவதே நிகழ்காலப்பணியது. இயல்பாய் எழுவாய் புயலாய்ச் சுழல்வாய் தமிழா. இதுவே முடிவாய் முயல்வாய் எழும் தழல் மூச்சில் தமிழ் முகம் சிரிக்க, விழும் கனி மடியினில் உலகமும் வியக்க புலரும் பொழுதினில் உளக்கனல் ஏந்து. தடைகளை உடைத்திட உலகினை உலுக்கு. எழும் பெரும் புயலென மிளிர் தமிழ்மகவே! தமிழ் நிலம் விரிகையில் தழுவும் கரமே! வலுமிகக் கொண்ட வடிவம் கொள்க. தகிக்கும் தீயாய், தளரா வலுவாய் உதிக்கும் சுடராய், ஓர்ம உணர்வாய் பதிக்கும் பொறியாய், பாரிய மலையாய் எதுக்கும் துணிவாய் என்பதாய் எழுக.
-
கொற்றவைத்தமிழே! நற்றுணை பொங்கு!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் அதிகபடியான திட்டுகள் வாங்கி ஓகோ என்று இருக்க வாழ்த்துகின்றேன்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
I.V.Sasi க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். Atonk, மாதுகா, அறிவழகன் ஆகியோருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பர் நிழலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். பொயட் அவர்களுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நவம். (அண்ணா/ தம்பி)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அன்னிலிங்கம் இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் பனங்காயிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய இனிய தோழர்களான வந்தியதேவன் சுந்தரம், புங்கையூரான், குமாரசாமி அண்ணா, துளசி, தமிழ்சிறீ, தமிழ்சூரியன், கறுப்பி, சாந்தி, தமிழரசு, தப்பிலி, உடையார், வாதவூரான் , நெடுக்காலபோவான், யீவா, காவலூர் கண்மணி, சபேசன், யாயினி, நீலப்பறவை, நிழலி, நிலாமதியக்கா, அபராயிதன், ஈஸ், அலைமகள், தமிழினி, விசுகு அண்ணா, ரதி, சுபேசு, அர்யூன், கிருபன், வாத்தியார், ராஜா, அகூதா, நுணாவிலான் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். இன்றைய நாள் என்னோடு இணைந்து பிறந்தநாளை வரவேற்ற ரகு, ராஜா, மற்றும் சிதம்பரநாதன் ஆகியோருக்கும் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்னி லிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதுதான் இசை... :lol:- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேசன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் அன்புவுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பெயர் மாற்றங்கள்.
கருத்துகளை வெளிப்படையாகக்கூறுவதால் நாம விருப்பமின்றியே அரசியல்வாதிகளாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இனிவரும் காலங்களில் நம்மட ஆட்கள் இந்திய அரசியல்வாதிகளைச் தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் பார்த்துக்கொண்டிருங்கள்.- பெயர் மாற்றங்கள்.
சுண்டல் நேற்று வாங்கிய மிதியை நினைச்சேன் தம்பியா கோபமே வரமாட்டுதாம் :lol:- பெயர் மாற்றங்கள்.
மதிப்பிற்குரிய நிர்வாகத்திற்கு நன்றிகள் என்னுடைய இரண்டு நாள் வேண்டுகோளை ஏற்றதற்கு. இந்தத்திரியில் என்னுடைய பெயர் மாற்றம் சம்பந்தமாக தங்கள் ஆதங்கங்களை வைத்த நண்பர்களுக்கு முதற்கண் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு திரியில் ஏற்பட்ட கலகத்தின் நிமித்தம் என்னுடைய பெயர் மாற்றத்தை வேண்டினேன் ஆனால் இரண்டு நாட்கள் ஆற யோசித்தபோது என்னுடைய அடையாளத்தை இழப்பதற்கு ஒப்பான ஒன்றை விட்டுக்கொடுக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்ந்து தொடர்ந்தும் வல்வை சகாறாவாகவே பயணிக்கப்போகின்றேன். சிந்தித்துப் பார்த்தபொழுது என்னுடைய இந்தப் பெயரில் இருந்தபடி எங்குமே பிரதேசவாத்தை தூண்டி இதுவரை என்னுடைய எழுத்துக்கள் பயணிக்கவில்லை. இனிமேலும் என்னுடைய எழுத்துக்கள் எந்த இடத்திலும் பிரதேசவாதத்தை முன்வைக்கப்போவதில்லை அப்படி இருக்கும்போது நான் அப்பெயரை மாற்றுவது என்பது எனக்கே என்மீதான நம்பிக்கையீனத்தைத்தானே குறிக்கும். எனக்கு என்மீதான நம்பிக்கை எள்ளளவும் குறையவில்லை காட்சிப்பிழைகள் தவறான கண்ணோட்டத்தைத் தூண்டிவிடுமோ என்று சிறிது அச்சமுற்றது என்னவோ உண்மைதான்... நான் யார்? எனக்கும் இந்தப்புனைபெயருக்குமான உறவு எங்கிருந்து ஆரம்பித்தது? என்ற அடிப்படைக் கேள்விகள் என்னுடைய பாதையை செம்மையுற நிர்ணயம் செய்கின்றன. ஏற்கனவே இந்தப் பெயருடன் நீண்ட தூரம் கடந்து விட்டேன் இப்போது மாற்றுவதென்பது நான் இதுவரை எழுதிய என் எழுத்துக்களைக் களங்கத்திற்கு உள்ளாக்கிவிடும். ஆகவே பொதுமைத்தளத்தில் பிரதேசவாதத்தைத் தூண்டாத என் எழுத்துகள் இந்த வல்வைசகாறா என்ற பதத்தினூடே பயணிப்பதில் எத்தவறும் இல்லை. இது எனது அடையாளம் இது எனது முகவரி. இதுவே என்னுடைய ஒவ்வொரு எழுத்திற்கும் வல்லமை கொடுக்கும் பூமி. இந்தப் பூமியில் விளைவதெல்லாம் கதிர்களாக இருக்குமே தவிர களைகளாகாது. இதுவரை எனைத் தீண்டாத பிரதேசவாதம் இவ்வளவு பக்குவம் அடைந்தபின்னா.. என்னை தீண்டப்போகிறது. மீண்டும் என் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத நண்பர்களுக்கும் சில விடயங்களை தெளிவுபடுத்திய கருத்தாளர்களுக்கும் மிகப்பெரிய நன்றியைக் கூறி மீண்டும் வல்வை சகாறாவாக உங்களுடன் பயணிக்கிறேன். நன்றி- பெயர் மாற்றங்கள்.
நெடுக்கு தற்போது சமீப காலமாக குழப்பமான சூழலிலேயே உள்ளேன். உங்களுக்கு அது ஏன் என்பது வெள்ளிடை மலை. மீளமுடியாத அந்தகாரத்துக்குள் அகப்பட்டுக்கிடப்பதுபோல் மனம் பதைக்கிறது. அதன் நிமித்தம் தனித்துவங்களாக நான் கருதும் விடயங்களில் இருந்து விடுபட்டுசெல்கின்றேன் என்பது புரிகிறது. எல்லாம் ஒருவகை இயலாமைதான். எதையும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது கடினமாக இருக்கிறது. ஏன் வம்பென்று ஒதுங்கி இருப்பதற்கும் இயலாமல் இருக்கிறது. எங்களுக்குள் புரையோடிக்கிடக்கும் பல புண்களை சமீப காலங்களில் சந்தித்து வருகின்றேன். அவற்றைப்பற்றி பேசும் தகுதியைக்கூட இழக்கின்ற சந்தர்ப்பங்கள் உருவாகின்றன என்பதை சில சமயங்களில் உணர்கிறேன். உங்கள் கருத்தை மிகவும் கவனத்தில் கொள்கின்றேன். எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டு நாள் அவகாசம் தரும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.