நெடுக்கு
தற்போது சமீப காலமாக குழப்பமான சூழலிலேயே உள்ளேன். உங்களுக்கு அது ஏன் என்பது வெள்ளிடை மலை. மீளமுடியாத அந்தகாரத்துக்குள் அகப்பட்டுக்கிடப்பதுபோல் மனம் பதைக்கிறது. அதன் நிமித்தம் தனித்துவங்களாக நான் கருதும் விடயங்களில் இருந்து விடுபட்டுசெல்கின்றேன் என்பது புரிகிறது. எல்லாம் ஒருவகை இயலாமைதான். எதையும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது கடினமாக இருக்கிறது. ஏன் வம்பென்று ஒதுங்கி இருப்பதற்கும் இயலாமல் இருக்கிறது. எங்களுக்குள் புரையோடிக்கிடக்கும் பல புண்களை சமீப காலங்களில் சந்தித்து வருகின்றேன். அவற்றைப்பற்றி பேசும் தகுதியைக்கூட இழக்கின்ற சந்தர்ப்பங்கள் உருவாகின்றன என்பதை சில சமயங்களில் உணர்கிறேன். உங்கள் கருத்தை மிகவும் கவனத்தில் கொள்கின்றேன்.
எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டு நாள் அவகாசம் தரும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்