Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வல்வை சகாறா

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  5,736
 • Joined

 • Last visited

 • Days Won

  37

Everything posted by வல்வை சகாறா

 1. அன்புத்தோழியர் கண்மணி தமிழினிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு சில வருடங்களாக துயர் சூழ்ந்த காலத்தில் மூழ்கி இருப்பதை அறிவேன். பொலிற்றாவிற்கு ஆத்ம சாந்தியையும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனத்திடத்தையும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்
 2. இப்ப இல்லை எப்பவோ சிங்கள மக்களும் உணரத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்களை ஓப்பினாக உலக ஆதரவோடு அடிமையாக்கியவர்கள் தங்கள் இனத்தையும் வெளியே தெரியாதமாதிரி பயமுறுத்தி பழிவாங்கி அடக்குகிறார்கள். எப்போதோ அழியத் தொடங்கிய நாடு இப்போது மிகவும் வேகமாக அழிகிறது.
 3. அடுப்படிப்பூனை அவ்வளவு சீக்கிரம் யாழை விட்டு போய்விடமுடியுமா? சதா எல்லாவற்றையும் வாசிக்கிறனாக்கும். இங்க கனபேர் கிரீடங்களோட சுத்தினம் நமக்கு பூந்திரிதான்...
 4. சீனாவுக்காக இலங்கை எதுவும் செய்யும் இது என்ன புதினமா?
 5. இப்ப என்னதான் முடிவு தெளிவாக சொல்லுங்கள். பௌத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டல் பற்றி, அதற்கு மறுப்புத் தெரிவித்து எமது தமிழர் தரப்பு ஏதாவது அறிக்கை விட்டார்களா? அத்து மீறிய செயலாக அறிவித்தார்களா? அல்லது நமது தனித்துவங்களைத் தாரவார்த்து சிங்களத்திற்கு எழுதிக் கொடுத்து விட்டார்களா?
 6. நீண்டகாலமாக இந்த களத்தில் நீங்கள் எழுதுகிறீர்கள். ஏதோ வாதாடுவதாக நிறையவே சொதப்புவது உங்களுக்கு அத்துப் படி மருது. நீங்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை சரியென்று நிறுவ ஏகப்பட்ட சம்பந்தம் இல்லாதவற்றை பத்தி பத்தியாக எழுதுவதொன்றும் உங்களுக்குப் புதியதல்ல. நாதமும் நீங்களும் ஒருவரா? உங்களுக்கு பழைய கதைகள் நிறையத் தெரியும். அவ்விடயங்களில் நிறையவே ஏற்புடைய கருத்துகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் விவாதங்களை நீர்த்துப் போகவைக்கும் பாணி உங்களுடையது. இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள். உங்களுடைய சீமான் சொக்கத்தங்கம் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். தயவுசெய்து என்னை என் ஒழுக்கத்தை சேறடித்து விடாதீர்கள்
 7. தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர் என்றால் சுய கருத்தை வெளிப்படுத்தினால் அந்த நிறுவனம் பாதிக்கப்படும். சுய தொழில் வைத்திருப்பவரும் சுரணையற்றவராக இருந்தால் முன்னேற முடியும். உண்மைதான். கடந்த காலத்தில் நமக்காகப் போராடியவர்கள் எல்லோருக்கும் அறிவுரை சொல்ல உங்களைப் போன்றவர்கள் இல்லாததே எங்களின் தலைவிதியை இப்படி மாற்றிவிட்டது. தொழில் , தொண்டு என்பதைக் கருத்தில்கொண்டுதான் இந்த உலக இயக்கம் இருக்கிறது. தொல் திருமா 2009 இல் மகிந்தவைச் சந்தித்தது தவறு என்றுதான் நிறையக் கூப்பாடுகளை இக்களத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் கூற்றின் படி அது தவறல்ல, காரணம் தொல் திருமா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு தலைவன் அந்த மக்களுக்காக அன்றைய நிலையில் ஆட்சியில் இருந்தவர்களுடன் இணைந்து நடக்கவேண்டிய கடப்பாடு அவருக்கு முன்னே இருந்தது. அவர்களுடைய நலனுக்காக அவர் செயற்பட்டார். உங்கள் கூற்றின் அடிப்படையில் அவரின் மீதான சேறடிப்பு விலத்தப்படுகிறது. இது உதாரணந்தான் நாதம். நேற்று வரைக்கும் வீரமாகவும் மொக்கையாகவும் கர்ச்சித்தவர் இன்று கும்பிடு போட்டு கூனலாக மாறிய பொழுதில் உரையாடுகிறோம். வீரமாக கர்ச்சித்தவர் மொக்கையாகவும் கர்ச்சிப்பதை முன்னர் சுட்டிக்காட்டி இருந்தேன். அப்போதும் மென்போக்காக சில எச்சரிக்கைகளை நாதம் நீங்கள் மட்டுமல்ல இன்னும் சிலரும் முன்வைத்திருந்தீர்கள் என்பது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. உங்கள் எவரிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே பல்லவி. எல்லோரையும் எதிர்ப்பதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நிறைய எதிரிகளை உருவாக்குமேயன்றி வளர்ச்சியைத் தராது. தோற்போம் என்று தெரிந்தும் மிகத் தீவிரமாக எதிர்ப்போம். எதிர்ப்பக்கம் வென்றபின் மண்டியிடுவோம். இதெல்லாம் எதற்கு? ஓ... உங்கள் பார்வையில் நமது பொது வளர்ச்சிக்கு என்பதாக இருககும். இதனை நீங்கள் சரியென்று ஆணித்தரமாக ஆதரிப்பவராக இருந்தால் சாந்தியையோ என்னையோ ஏன் எச்சரிக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை. ஆக சூழலுக்கேற்ப மாறிப்பயணித்தாலே வளர்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். கொள்கை கோதாரியெல்லாம் நம்ம வளர்ச்சிக்கு உதவாது அப்படித்தானே. என்னய்யா நாதம் உங்கள் அத்திவாரமே ஜெலி மாதிரி நொழுநொழுக்கிறது. இங்க பாருங்கோவன் மருதற்ற சீண்டலை...... போற போக்கில தேன் கூட்டில கல்லெறியிறன் என்று நம்ம மருதர் நினைத்தால் பாவம் மருதர் ஏமாந்து போவார். குளம் குட்டையில கல்லெறிந்தால் எதிர் வினை வராது கண்டியளே.
 8. நாதம் நான் முற்றிலும் உங்களிடம் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனையில் இலாவகமாக மாட்டிவிட்டீர்களே. விளக்கத்தை சற்று நேரம் கழித்து பதிவிடுகிறேன். வீட்டில் ஒரு கடமை அதை முடித்துவிட்டு வருகிறேன்
 9. நாதம் ஒருவர் ஒரு தொண்டு நிறுவனத்தை நடாத்துபவராக இருந்தால் நியாயமாக எழும் கேள்விகளை கேட்பதை தவிர்க்கவேண்டும் என்பதை நீங்கள் மென்மையாக சுட்டிக்காட்டுவது ஏற்க முடியாது. ஒருவர் தனது கருத்தை ஒரு விவாதத்தளத்தில் முன்வைக்கும்போது பின்னால் ஏற்படப்போகும் தாக்குதல்களுக்கும் தயாரான நிலையில் இருப்பார். பெண் என்ற பிம்பத்தின் மீதான தாக்குதல்கள் கீழ்த்தரமானவையாக இருக்கும் . இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பேசக்கூடிய பெண்கள் ஏதோ வகையில் பொதுத்தளத்தில் நிற்பவர்களே தயவு செய்து சேவையைக் காட்டி முடக்க எண்ணாதீர்கள்
 10. நாத்ஸ் இந்த திசை திருப்பல்கள் வேண்டாம் சாந்தியின் கேள்விக்கு என்ன பதில்?
 11. தமிழ் மக்களின் துயரத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்ததில் ஆயருக்கு பெரும் பங்கு உண்டு அதி வணக்கத்திற்கு உரியவர் ஆழ்ந்த இரங்கல்கள்
 12. அமானுஷ்யத் தொடரா....... அப்ப காத்திருந்து வாசிக்கலாம்.
 13. இயற்கை என்பது வரம். வரங்களை சாபங்கள் ஆக்கியே மானுடத்தேடல்கள் பயணப்படுகின்றன. இயற்கையை பாதுகாக்க மானுடம் தேடல்களை முடக்குமா? இயற்கையை நேசிக்கும் மானுடத்தை கவிதையில் காணமுடிகிறது. வாழ்த்துகள் பசுவூர்கோபி.
 14. வெட்டுக்கிளி ராசுக்குட்டிக்கு கதைக்கா.. பஞ்சம் நல்ல இலகுவான எழுத்து நடை. கொஞ்சம் எழுத்துப பார்த்து பொறாமையாகவும் இருக்கிறது.
 15. நம்பவே முடியவில்லை எப்போதிருந்து இந்த சாந்தி இப்படி பலவீனமாக மாறினாள் என்று புரியவில்லை. இப்போதெல்லாம் எழுத்துகளில் பழைய சாந்தியை காணவே முடியவில்லை. காலம் நிறையவே பிணிகளை தந்திருக்கிறது என்பதை எழுத்துகள் உணர்த்துகின்றன. பழைய துடிப்பான சாந்தியை மீளப்பார்க்கமாட்டோமா என்று மனம் அங்கலாய்க்கிறது. பிள்ளைகள் என்று வந்துவிட்டால் ஒரு தாய்க்கு எதுவும் தேவையில்லை என்பதை மீள மீள உணர்த்துகிறது நம்பிக்கைகளை விதைத்து நதியாக ஓடும் தாய்மையின் எழுத்து. மனவலிமை கொள் தோழி.
 16. தொலைத்த இடத்திலேயே தேடவேண்டும் ஓசோவின் தத்துவ வார்த்தைகள். தொலைத்த இடத்தில் நாங்களும் இல்லை. தொலைந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தேடும் சக்தியும் இல்லை. தர்மம் வெல்லும் என்ற சொல்லைக்காட்டிலும் வல்லவன் வாழ்வான் என்ற சொல்லே இக்காலத்தில் மிளிர்ச்சியாக இருக்கிறது. சுவியண்ணா.
 17. விவசாயி உண்மையிலேயே உங்கள் எழுத்தை வாசித்து பிரமித்துப் போய் நிற்கிறேன். நீங்கள் வேற லெவலய்யா. நமக்குள் இப்படியான எழுத்தை இப்போதுதான் முதல்முதலாக வாசிக்கிறேன். கிண்டலாக பேசலாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிலேடையாக நெளிக்கலாம். உங்கள் படைப்பு பிரமாண்டம். தேர்ந்த உலக அரசியல் அறிவுள்ள ஒருவரால் மட்டுந்தான் இப்படி எழுதலாம். விவசாயி உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன்.
 18. பா. உதயகுமார் அருமை மிகச் சிறப்பாக இருக்கிறது. இலகுவான வார்த்தைப்பிரயோகம் கேட்பவரை ஒரு நிலைக்குள் கட்டிப்போடுகிறது. ஒலிப்பதிவும் பிசிறின்றி அமைதியாக நகர்கிறது. இசையும் கவிதையின் ஓட்டமும் நிகழ்காலத்தை மனக்கண்முன் காட்சியாக விரிக்கிறது. உணர்வுகளுக்குள் கலக்கின்ற வரிகள் வடிவங்களை பின்னி அசைத்திருக்கிறது. சிறப்பு வாழ்த்துகள். கு.சா உங்களைப்போலத்தான் எனக்கும் சந்தேகம் எங்கட சனியனைத்தான் சாந்தி மறைமுகமா போட்டுத்தாக்கிறாவோ?
 19. இம்முறை கு.சா ஒரு முடிவோடதான் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்போல. அம்மாவுக்கு கு.சா எழுதும் கடிதம் நிச்சயமாக நம் எல்லோரும் அநுபவிக்கும் நன்மை தீமைகளை இயம்பும் என்பதை ஆரம்ப எழுத்துகள் புரிய வைக்கின்றன. வரவேற்பும் வாழ்த்தும் உரித்தாகட்டும். இப்பதான் விளங்குது ஏன் கு.சா இங்கின குழப்படியாகத் திரிகிறார் என்று எல்லாம் அம்மா செல்லந்தான் அதுவும் கடைக்குட்டி என்றால்..... அம்மா இருக்கும்வரை குட்டு கூட விழாது....
 20. கொலைவெறி என்று சொல்லுவாங்களே.... அது இப்ப எனக்கு வந்திருக்கு. இலையான் கில்லர் மாட்டினா அவ்வளவுதான்
 21. லொட்டோவில் அதீத பணம் கிடைத்த இருவர் வாழ்வை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையான அன்புக்காக ஏங்கிக்கொண்டே விரக்தியுடன் காலம் கழிக்கிறார்கள். மனம் விட்டு என்னுடன் பேசுவார்கள். கிட்டத்தட்ட நான் ஒரு கவுன்சிலிங் செய்பவர்போல . அவர்களின் கதைகளைக் கேட்கும்போது தடாலடியாக இப்படி பணம் வரக்கூடாது என்று நினைப்பேன். பணத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு இல்லை.
 22. நல்ல பதிவு ஒவ்வொரு மதத்திற்கும் வழிபாட்டு முறைகள் வித்தியாசமாக இருந்தாலும் சொல்லும் பொருள் ஒன்றே.. அவ்வளவுதான் இதற்கு அடையாளப்படுத்தல் அவசியமில்லை என்றே கருதுகிறேன். என் தாய் தந்தை இருவரும் எதிரெதிரான வழிபாடுகளை கோட்பாடாக கொண்டவர்கள். நான் எனது தந்தையை பின்பற்றுபவள். அம்மாவின் மனம் நோகக்கூடாது என்பதற்காக அம்மா வழிக்கும் செல்வேன். அப்பா வழி பட்டினத்தார் வழி "மனமது லிங்கமாகும் நேசமே நெய்யும் பாலும்"
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.