Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வல்வை சகாறா

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  5,736
 • Joined

 • Last visited

 • Days Won

  37

Everything posted by வல்வை சகாறா

 1. ணக்கம் சுமே சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள் “கல்யாணம் பேசட்டோ” இன்றைய நாளில் பேசப்படவேண்டிய விவாதிக்க வேண்டிய விடயம். இந்த தலைப்பில் எழுத முற்படும்போது “திருமணம் அவசியமா” என்ற கருத்து என்னுள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. இக்கேள்வி எனக்குள் எழுவதற்கான காரணங்கள் பல அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். முதலில் திருமணம் பேசுதல் என்பது ஒரு ஆணோ பெண்ணோ தம்மை தம்முடைய வாழ்வை நிர்ணயிக்கும் திறமையற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் பெற்றோரால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆக பெற்றோரால் சுட்டிக்காட்டப்படும் வரன்களுக்குள் முடக்கப்பட்டதாகவே அந்த ஆண், பெண் இருவருக்குமான கனவு குறுக்கப்படுகிறது. பெற்றோரால் இந்த பரந்த வெளியில் விரிந்து பயணிக்கமுடியாது. புலம் பெயர்ந்து வாழும் பிள்ளைகளால் முடியும், ஆனால் அவர்களுக்கான அனுமதி பெற்றோர் தமக்குள் வகுத்திருக்கும் எல்லை மீறிப் போனால் மாத்திரமே கிடைக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த நிலைக்குள் தத்தளிக்கும் பிள்ளைகள் அதிகம். பெற்றோரை மீறுவதா இல்லை தமக்கான எல்லைகளை பெற்றோர் சமூகத்திற்கு ஏற்ப மட்டுப்படுத்திக் கொள்வதா என்பதில் இருதலை கொல்லியாக தடுமாறி தோற்றுப்போனவர்களும் உண்டு. வெற்றி பெற்றவர்களும் உண்டு. ஆக திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் குடும்ப, சமூக வாழ்விற்கேற்ப மாறுபடும். முற்போக்கு என்று எடுத்துக் கொண்டால் ஆணோ , பெண்ணோ தனக்கான துணையை தானே தெரிவு செய்து வாழ்வது ஆகும். அங்கு இனம், சாதி , மதம் , பிரதேசம், தராதரம் , சாதகம் என்பன விடை பெற்றிருக்கும். அவர்கள் திருமணம் செய்வது கூட அவர்கள் விரும்பினால் மாத்திரமே. இதில் துணை மாற்றங்கள் கூட அடிக்கடி நிகழ வாய்ப்புண்டு. இதை நமது சமூகம் மிருகவாழ்விற்குள் உள்ளடக்கிவிடும். ஆக கூடிய சுதந்திரம் என்பதை நம்மால் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தனது இனத்திற்கான வாழ்வியல் பண்பை எந்த ஒரு இனமும் அவ்வளவு சீக்கிரம் இழந்து விடாது. அந்த வகையில்தான் நாம் இன்று., கடந்த 3 வருடங்களாக ஒரு திருமண ஒருங்கிணைப்பாளராக பயணித்துக் கொண்டிருக்கிறேன். எனது அடிப்படை அநுபவத்திலிருந்தே இங்கு எழுத முற்படுகிறேன். “கல்யாணம் பேசுதல்” என்பது பெற்றோரின் விருப்பு அடிப்படையிலேயே நிகழ்கிறது. முக்கியமாக சமூக குழும ம் (சாதி) மதம், பிரதேசம், தராதரம், உத்தியோகம், சாதகம் இந்த ஆறுவகையாக எதிர்பார்ப்புகளும் நிரவப்படும்போதே பெற்றோரால் பிள்ளைகளுக்கு அவர்களுக்காக தாங்கள் தெரிவு செய்தவர்களின் படங்களைக்காட்டி உனக்குப் பிடிக்கிறதா? என்ற கேள்வியே முன்வைக்கப்படுகிறது. அங்குதான் விருப்பம் அல்லது இல்லை என்பதை பிள்ளைகளுக்கு முடிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. படத்தை மட்டுமல்லாமல் கதைக்கவும் அதன் பின்னர் முடிவெடுக்கவும் பெற்றோர் சுதந்திரம் வழங்குகிறார்கள். அதாவது தாங்கள் தீர்மானித்தவர்களுக்குள் மாத்திரமே பிள்ளைகள் தெரிவு செய்ய வேண்டும் என்று பெற்றோரின் எதிர்பார்ப்பு இருக்கிறது. உண்மையிலேயே பல வழிகளிலும் வடிகட்டி பிள்ளைகளுக்கான தெரிவுகளை மட்டுப்படுத்தி பிள்ளைகளில் திணிக்க முற்படுகிறார்கள். இக்காரணத்தாலேயே இன்றைய காலத்தில் புலம் பெயர்ந்த நமது சமூகத்தில் அதிகபடியான பிள்ளைகள் திருமணம் செய்யும் எண்ணமே குறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதிலும் 83 ஆம் ஆண்டுக்கும் 90 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த பலரின் திருமணம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. பெற்றோர் பிள்ளைகளின் விருப்பிற்கேற்ற துணையைத் தெரிவு செய்வதைக்காட்டிலும் தம்முடைய விருப்பிற்கேற்ப பிள்ளைகளுக்கான துணைகளைத் தேடி தோற்றுப் போய்கொண்டிருக்கிறார்கள். 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட பிள்ளைகள் தமக்கு முன்னரானவர்களின் நிலையை உணர்ந்து தமது வாழ்வை நிர்ணயிக்கும் வலிமையை அதிகம் பெற்றிருக்கிறார்கள். பெற்றோர் திருமணம் பேசுவதில் தவறில்லை. ஏனெனில் புலம் பெயர்ந்த இனமாக இருக்கும் நாம் நம் இனத்தின் அடையாளத்தை பேணுதல் வரவேற்கவேண்டிய விடயமே ஆனால் நாமோ வச்சா குடுமி அடிச்சா மொட்டை என்பதற்கு ஒப்பாகவே உள்ளோம். பிற நாட்டவரை பிள்ளைகள் திருமணம் செய்தால் ஏற்றுக்கொள்வதில் காட்டும் அக்கறையை நம்மவர்களுக்குள் பிள்ளைகள் காதலித்தால் காட்டுவதில்லை. ஏகப்பட்ட விசாரணகளூடாகவே கடக்கிறோம். அல்லது பிள்ளைகளின் மனங்களில் விசவிதைகளை நம்மை அறியாமலே திணித்துவிட்டு திருமணத்திற்கு சம்மதிக்கிறோம். பெற்றோர் சம்மதித்து திருமணம் செய்து கொடுத்த பிற்பாடு பிள்ளைகள் மனதில் அவர்கள் விதைத்த விசவிதைகள் இளங்குடும்பத்தில் பிரச்சனையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி விடுகின்றன. விவாதிக்க வேண்டிய விடயத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ செல்கிறேன் என்று எண்ண வேண்டாம். இத்திரியில் கல்யாணம் பேசட்டோ என்று ஆரம்பித்து தராதரத்தில் வந்து நிற்கிறோம். நமக்குள் மாற்றங்கள் சாத்தியமற்றது( இன்றைய பெற்றோர்) இந்த தலைப்பை தொடக்கிய சுமேயே பல இடங்களில் முற்போக்காக இருந்தாலும் நம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாபங்களின் எச்சத்தையும் அவரிடம் காணமுடிகிறது. என்னுடைய அநுபவத்தில்… என்னிடம் திருமணம் பேசத் தந்தால் தங்கள் பிள்ளைக்கு வேற சாதி ஆட்களை தருகிறீர்கள் என்று என்னிடமிருந்து தம்முடைய விண்ணப்பங்களை மீளப்பெற்ற அதி உச்ச சாதிய திமிரில் என்னைக் காயப்படுத்தியர்களையும் கடந்திருக்கிறேன். தீவுப்பகுதி , மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குள் மணமக்கள் வேண்டாம் என்று நிபந்தனைகள் இட்டவர்களையும் கண்டுள்ளேன், யூனியில்கூட தராதரம் தேடுபவர்களோடும் பயணிக்கின்றேன். நம்மவர்களுக்குள் இரத்த த்தோடு ஊறிப்போனவை சாதி , மதம், பிரதேசம், தராதரம் , சாதகம் ஆக்குறைந்த பட்சம் இதில் ஏதாவது ஒன்றாகிலும் கல்யாணம் பேசும் பெற்றோரிடம் கண்டிப்பாக இருந்தே தீரும். சாதியே தேவையில்லை என்று விண்ணப்படிவத்தில் கேள்வியைச் சேர்க்காமல் விட்டேன். பதிவு செய்பவர்கள் கேள்வியைக்காணாமல் தேடிவிட்டு சொல்கிறார்கள். நாங்கள் நல்ல ஆட்கள் பாருங்கோ மற்ற ஆட்களுக்குள் எங்களுக்கு மணமகனோ மணமகளோ வேண்டாம். நானும் அப்படியா நல்ல ஆட்கள் என்றால் யார் என்று கேட்பேன். பதில் இதில் வாசிக்கும் அனைவருக்கும் விளங்கும். இந்த இடத்தில் நான் தென் தமிழீழ மக்களுக்கு மிகப்பெரிய சல்யூட் அடிக்கவேண்டும். இன்னொரு இனத்தால் அதிக துன்பத்தை அநுபவிக்கும் அவர்களுக்குள் சாதி, மதம், தராதரம், பிரதேசம் என்ற எண்ணப்பாடு மிகக்குறைவு. திருமணத்திற்குத் தகுதியான பெண் அல்லது ஆண் என்பதை மாத்திரமே எதிர்பார்க்கின்றார்கள். சுமே கல்யாணம் பேசட்டோ என்ற கேள்வியில் நீங்கள் பேச முற்பட்ட விடயங்களுக்கு தீர்வு கிடைக்காது. விவாத்தில் தெளிதலை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் முடிவை அடைவது மிகக்கடினம்.
 2. கண்மூடி திறந்த மாதிரி இருக்கு அதற்கு; 1 வருடம் கடந்துவிடடதா? ஏதாவது கிறுக்கவேண்டுமே.......
 3. அவர்கள் கௌரவக் கொலையை செய்து கொலைகாரர்கள் ஆகியுள்ளார்கள். வெளிப்படையாகத் தெரிகிறது. நம்மவர்கள் கௌரவத்தனிமையைப் பெண்பிள்ளைகளுக்கு உருவாக்கிவிட்டு குற்றமற்றவர்களாகவும் நீதிமான்களாகவும் சமூகவெளியில் வலம் வருகிறார்கள். என்னைக் கேட்டால் அவர்களுக்கும் நம்மவர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பேன். கலகப்போர் தொடுத்தால் பதில் விவாதம் செய்ய நேரம் இல்லை.
 4. உண்மையிலேயே ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகள் மென்மேலும் சிதைக்கப்படுகிறது. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்பதுபோல எப்பக்கத்திலும் எதனையும் உறுதியாக முன்னெடுக்கமுடியாத அவலம் எம்மக்களைச்சூழ்ந்திருக்கிறது. மூழ்கிறவன் கிடைக்கும் சின்னத் துரும்பையும் பற்றுவான் என்பதற்கிணங்க விக்னேஸ்வரன் இதனை மேற்கொண்டிருக்கலாம். ஏனெனில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு எவராலும் தீர்வெழுத முடியாது என்பதே நிதர்சனம். அவ்வகையில் விக்னேஸ்வரன் பிரபலங்கள் ஊடாக ஏதாவது முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்று அறிய முயற்சித்திருக்கக்கூடும். ரதி சொல்வதுபோல சிங்களம் நினைத்தாலன்றி தமிழருக்கான எதனையும் எவராலும் பெற்றுத்தரமுடியாது. புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு அவன் பிழை இவன் பிழை என்று உரைப்பதைத்தவிர எம்மால் எதனை உறுதியாக உருவாக்க முடிந்தது? நம்பிக்கையீனங்களூடாக பயணிக்கும் நாம் வெற்றியை தொடுவது கடினம்.
 5. கிருமி அந்த நாட்களில் கதைப்புத்தகம் வாசிப்பது என்றால் சரியான கிலி.... அம்மா நிறைய்புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கி வாசிப்பார்..... ஆனால் அந்த வயதில் என்னை நாவல்கள் வாசிக்க அம்மா அநுமதிப்பதில்லை. அம்புலிமாமா, ரத்தினபாலா அப்படியே குமுதம் கல்கி கலைமகள் ஆனந்தவிகடன் என்று மட்டுப்படு;தி வைத்திருந்தார். அவர் மட்டுப்படுத்தியதாலோ என்னமோ எனக்கு கிடைப்பதையெல்லாம் வாசித்து முடித்துவிடுவேன் அப்படி ஒரு வெறி.... பலசரக்குக்கடைகளில் பொதிசெய்ய வைத்திருக்கும் என்ன புத்தகமென்றாலும் இரவல் வாங்கி வந்துவிடுவேன். அம்மாவிடம் ஒரு பலவீனம் புத்தகங்களை நேசிப்பது அவற்றை அழகாக உறைபோட்டு வைப்பது... வீட்டில் அடுக்கபட்டிருந்த புத்தகங்களெல்லாம் என் வாசிப்புப்பசிக்கு தீனிபோடும் வல்லமையை சொற்ப காலத்திற்குள் இழந்துவிட்டன. நமக்குக் கிடைத்த வரம் எனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த வாசிகசாலை. அங்கு புதன்கிழமையும், சனிக்கிழமையும் இரண்டு நாவல்கள் 3 சஞ்சிகைகள் அங்கத்தவராக இணைந்தால் வாசிக்க எடுக்கலாம். என் வாசிப்பை கட்டுப்படுத்திய அம்மா தன் வாசிப்பை முடக்க முடியாதவராக இருந்தார் எனக்கு அது பெருவரமாக இருந்தது. நாவல் புத்தகங்களை எடுத்து வந்து அம்மாவுக்கு கொடுப்பது நான்தான்.... அப்படியே அம்மா அசண்டையான தருணங்களில் அரை மணிநேரத்திற்குள் ஒரு நாவலை வாசித்து விழுங்கிவிடுவேன். சிறிது காலத்திற்குப் பிறகு அம்மாவால் என்னைக்கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விட்டது. இந்த நாயைத் திருத்த ஏலாது என்று கைவிட்டுவிட்டார். அப்போதெல்லாம் வாசிப்பை நின்று நிதானித்து அவற்றின் விம்பங்களை கிரகித்துக் கொள்வதில்லை. இதில் நாவல்கள் மட்டுமல்ல தேவார , திருவாசகம், சோதிடம், இலக்கியம் இதிகாசம் இப்படி எல்லாப்பக்கமும் சூறாவளி வாசிப்பு இருந்தது. ஒணவு உடகொள்ளும் நேரத்திலேயே ஒரு நாவல் முடியும்... உணவுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்று அம்மாவிடம் நிறைய பேச்சு வாங்கியிருக்கிறேன். அம்மா என்னை அதிகம் கடிந்து கொண்டது இதற்காகத்தான் இருக்கும். இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் என்னுடைய சகோதரர்கள் என்னை நிலைகுலைய வைக்கமேண்டுமென்றால் அவர்கள் எனக்கு எதிராகப்பயன்படுத்தும் ஆயுதமும் அதுதான். நான் எனது ககோதரர்களுடன் போடும் சண்டைகளில் அதிகம் காயப்பட்டு தோல்வியடைவது நான் வாசிக்கும் புத்தகங்களில் அவர்கள் கைதொடும்போதுதான்... அது எல்லாம் ஒரு கனாக்காலம் கிருமி..... எல்லாவற்றையும் கலந்து வாசித்ததால் பிஞ்சில் பழுக்கும் நிலை ஏற்படவில்லை என்று நினைக்கிறேன். அராபிய இரவுகள் கதையைக்கூட வாசித்திருக்கிறேன். சடுதியாக வாசித்து கிரகிக்கும் வேகம் இருந்தளவுக்கு எண்ணங்களை அலைக்கழிக்கவில்லை. தோழி கண்மணி கூடக் கேட்டார் அந்த வயதில் சடங்கு கதையை வாசித்து அதனை சரியாக உள்வாங்கிப் புரிந்து கொள்ள முடிந்ததா? ஏன் இல்லை சராசரி கொழும்பில் வேலை செய்யும் கதாநாயகன் மனைவி பிள்ளைகளைப்பார்க்க ஊர் வந்த நிற்கும் நாட்கள் கதையாக விரிந்துள்ளது. அநேகமாக நான் அன்றாடம் பார்த்தவர்களின் கதையாகவே இருந்தது. கணவன் மனைவி கூடல்கூட நாம் வெளிப்படையாக பேசிக்கொள்ளாத விடயமாக இருந்தாலும் கொழும்பிலிருந்து வந்தவருக்கும் ஊரில் அவரை எதிர்பார்த்து இருக்கும் மனைவிக்கும் கிடைக்கின்ற சில நாட்கள் எப்படிக் கழிந்தன என்பதை அவ்வளவு உயிரோட்டமாக எஸ்.பொ எழுதியிருப்பார். இன்றும் கூட அக்கதை பழைய கதையாக இல்லாமல் நடைமுறைக்கதையாக தெரிவதுதான் எஸ் . பொ அவர்களுக்குக் கிடைத்த பெருவெற்றி. காலத்தால் கரைக்கமுடியாத கதையாக அடுத்த தலைமுறைக்கும் தொடரக்கூடியது.
 6. நான் ஆறாம் ஆண்டில் படிக்கும்போது வாசித்த கதை*
 7. Last Updated: December 29, 2019, 2:49 PM IST கேரளாவில் முதியோர் இல்லத்தில் காதலித்த 67 வயதான கோச்சானியன் என்பவரும், 65 வயதான லட்சுமி அம்மாள் என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். திருச்சூர் மாவட்டம் ராமாவர்மபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில் வேளாண்துறை அமைச்சர் சுனில் குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். லட்சுமி அம்மாளின் கணவரிடம் கோச்சானியான் உதவியாளராக இருந்துள்ளார். 21 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த பின்பு லட்சுமி அம்மாள் உறவினர்களுடன் சென்றுவிட்டார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ராமாவர்மபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் லட்சுமி அம்மாள் சேர்ந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு அங்கு கோச்சானியானும் சேர்க்கப்பட்டுள்ளார். கொஞ்சம் மனங்களைப்பற்றி பேசலாமே..........
 8. புத்ஸ்சை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி கவனம் மூச்சு சீராக இருக்கவில்லை என்றால் வயசு வேலையைக்காட்டிடும்...
 9. கேலிச்சித்திரம் பூனையும் எலியுமாக இருப்பது சாத்தியமா? இயல்பில் பூனை எலியை கபாளீகரம் பண்ணிவிடுமல்லவா இலங்கை என்ற எலியை இந்தியா என்ற பூனை விழுங்கக்கூடிய வல்லமையுடன் உள்ளதா? பூனையின் குறியீடும் எலியின் குறியீடும் சொல்ல முற்படுவது ரொம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் கதாப்பாத்திரங்களையா?
 10. ஒரு பெண்பிள்ளையை கடத்த உதவி செய்து அப்பிள்ளை கொலையாக காரணமாக அமைந்து குற்றஞ்சாட்டப்பட்டு பணப்பட்டுவாடாவால் நீதி வழுவ விடுதலை செய்யப்பட்ட ஒருவரை 83 காலப்பகுதியில் வல்வெட்டித்துறைச் சந்தியில் நின்ற அரசமரத்தில் அக்குற்றவாளியைக்கொண்டே கயிற்றைக் கட்டி அக்குற்றவாளியின் இரு கால்களிலும் தடம்போட்டு "v" போல கால்களை இழுத்துக்கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு மக்கள் பார்க்க மரணதண்டனை கொடுக்கப்பட்டது ஒரு காலம். அது விடுதலைப்புலிகளால் மட்டுமே சாத்தியம். இப்போது தண்டிக்க ஆட்கள் இல்லை.
 11. பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன நண்பர்களுக்கு நன்றிகள். அடா அடா அடாபிறந்தநாள் வாழ்த்துக்குள்ளேயே இன்னாமா கலாய்ச்சிருக்கறாங்கப்பா அரசியலில இதெல்லாம் சகயம்பா இருந்தாலும் அண்மைக்காலத்துல கொஞ்சூண்டு பேமசாயிட்டம்போல... சகாறா கீப் இட் அப் ரொம்ப நன்னா வரப்போறேன்னு பட்சி சொல்லுது கேலிச்சித்திரம் வரைந்து கலாய்க்கும் "மூனா" விற்கும் நன்றிகள். மனதில் எதிர்காலம் பற்றி பெரிய இலட்சியங்கள் வியாபித்தே இருக்கின்றன. நிச்சயமாக அரசியல் சார்ந்து அல்ல. ஆனால் தாயகத்தோடு பின்னிப்பிணைந்ததே..... இந்தக் கேலிச்சித்திரம்கூட மனதில் உதித்த இலட்சியம் கைகூடும் அந்நாளில் மிகப்பெறுமதியானதும் காலத்தால் நினைவுகொள்ளக்கூடியதாகவும் அமையக்கூடும்.
 12. ம் என்னத்தைச் சொல்ல...... எங்கள் முனிவர்ஜியும் ஆசிரமம் வச்சு படாத பாடுபட்டதை பாத்தனாங்கள்தானே....
 13. மறுத்துவிட்டு அகல முடியாத விடயம். பெற்றோர் திருமணம் செய்து வைக்கிறார்கள் பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள் இதில் உங்களுக்கு ஏன் வருத்தம் என்று பலர் கேட்கக்கூடும். ஒரு திருமண முகவராக செயற்படுவதால் இவ்விடயத்தில் இருக்கும் உண்மையை அதிகம் அறியக்கூடியதாக இருக்கிறது.
 14. இந்தியா காப்பாற்றும் என்ற வார்த்தைக்கே இடமில்லை. தமிழகத்திலிருந்து ஆதரவுக்குரலுக்கு அப்பால் எதுவுமே கிடைக்கப்போவதில்லை. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் வந்தால் கூட ஈழவர் தொடர்பாக பெரிய அளவில் எந்த மாற்றமும் வந்துவிடாது. இலங்கையைத் தன்பக்கம் ஈர்க்க இந்தியா முயற்சி செய்யலாம். கடந்த காலத்தில் இந்திரா காந்தி முயற்சித்ததைப்போல் தமிழர்கள் மத்தியில் உள்ள தேடலையும் தேவையையும் இந்தியா என்னும் நாடு தனது நலனுக்காக பயன்படுத்த முயற்சிக்கும். இம்முயற்சிக்கு இலகுவாக தமிழர் பக்கம் பலியாகும். காரணம் சிதறிக்கிடக்கும் தாயகமும், தமிழகமும் மிகப்பலவீனமான நிலையில் இருக்கின்றன மட்டுமல்ல இன்னும் அதிக நலிவை நோக்கி பயணிக்கின்றன. நாம் இன்னும் பலியாக தமிழகம் தெரியாமலே உடந்தையாகப்போகிறது.
 15. சுமே ஏன் ராசாத்தி எல்லாம் ஒழுங்காத்தானே போயிட்டிருக்கு.... இதில் நம்ம பங்குக்கு நம்ம எண்ணத்தை எழுதினோம் தப்பா...... ஐ கெய்ட் யுவர் கொலைவெறி
 16. இலங்கைத் தீவை முன்பு கைப்பற்றி ஆண்ட ஒல்லாந்தர், போர்த்துக்கீசருக்கும் இப்போது அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் சீனாவுக்கும் என்ன வித்தியாசம்? அறிந்தவர்கள் கூறுக
 17. விவசாயி நீண்ட நாட்களாக காணாமல் இருந்து மீள வந்திருக்கிறீர்கள். உங்கள் அநேகமான அநுபவங்கள் எனக்கும் உண்டு. இதுவரைக்கும் ஊர்போய் வந்த பயணங்கள் பற்றி எங்குமே எழுதியதில்லை. எல்லாவற்றையும் எழுத முடியாத நிலை. வருடத்திற்கு இரண்டு தடவைகளாவது அங்கு சென்று திரும்பும் நிலை. ஒரு பக்கம் நம்மண்ணின் ஸ்பரிசம் இன்னொருபக்கம் பெரும் மனக்கவலை. எங்கு போகிறோம் வருகிறோம் என்பதும் எம்மோடு புதையுண்டபடி...
 18. மற்றைய நாடுகளோடு ஒப்பிடும்போது சுவிஸ் எப்போதுமே நம்மவர்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.
 19. இது என்ன புதிய செய்தியா? நீங்கள் முகவர் என்பது தெரியும். உங்கள் முகவர் பதவியை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள என்ன முயற்சியும் செய்வீர்கள் என்பதும் தெரியும். நான் கேட்டது பையனுடைய முகவரை உங்களை அல்ல.... ஒரு வேளை நீங்கள்தான் பையனின் முகவராக இருந்தால்... நாம ஏன் இவ்வளவு மொக்கையாக இருக்கிறோம் என்பதை விளக்கம் வைத்து எழுதவேண்டியதில்லை.
 20. சுமே ஆண்களைக்காட்டிலும் பெண்களால் எவ்விடயத்தையும் கூர்மையாக அவதானிக்கமுடியும். உங்கள் கட்டுரை சொல்லும் செய்தி அதுதான். அநேகமாக புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு பொருளாதார உதவி செய்பவர்கள் இப்படியாக இக்கட்டில் கணிசமாகவே மாட்டுப்பட்டுள்ளனர். தாயகத்தின் மீதான பற்றுதலால் அங்குள்ள உறவுகளுக்கு நேர்ந்த துன்பங்களால் இப்படியான கசப்பான உணர்வுகளை நேர் கொண்டபோதும் அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். ஒரு புதிய சமூகம் அங்கு உருவாகி இருக்கிறது என்பது உண்மை. சில சமயங்களில் தம் குண இயல்புகளுக்கு அப்பால் பொருளாதார மோகம் பிறள்வுகளை உருவாக்கி அவர்களை சுரணையற்றவர்களாகக்கூட ஆக்கிவிடுகிறது. அன்பொழுக அழைப்பார்கள் உணவு தருவார்கள் என்பதெல்லாம் போராட்டகாலத்திற்கு முந்தையது அந்த எதிர்பார்ப்பை இப்போது நாங்கள் தேடுவது தவறு. ஏனென்றால் அச்சத்துடனான அவர்கள் அன்றாட வாழ்வை பெரும் பிணியோடு கடந்தவர்கள். ஒரு வேளை உணவுக்காகக்கூட ஒவ்வொரு குடும்பமும் தத்தளித்திருக்கின்றன. அதன் நிமித்தம் மற்றவரை உபசரிக்கும் பண்புகள் இழந்திருக்கின்றன. நீண்ட காலமாக எதிலியாக இடங்கள் மாறி தத்தம் சொந்தத்தேவைகளைப் பாதுகாக்க சுயநலமியாக மாறவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டவர்கள். இன்னும் அந்நிலையின் ஆதிக்கத்திலிருந்து விடுபடாத தன்மைகள் அவர்களை உபசரிக்கும் பண்பிலிருந்து விலத்தி வைத்திருக்கிறது. இவற்றை தவறென்று கருதிவிட முடியாது. புலம்பெயர்ந்தவர்கள் கஸ்டப்படுகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று சொல்லிவிடமுடியாது நாங்கள் கஸ்ரப்படுவதை தாங்கள் அறிந்திருப்பதாக காட்டிக்கொண்டால் உங்களிடம் பெறக்கூடிய ஏதேனும் உதவிகளை கேட்க முடியாதே அதுதானே அடிப்படை நீங்கள் சரியாக கஸ்ரப்படுகிறீர்கள் என்று சொல்லிவிட்டு எனக்கு ஏதேனும் உதவி செய்யலாம்தானே என்று கேட்க முடியுமா? இல்லைத்தானே... அடுத்து போராட்ட காலத்தில் ஓடியோடி அன்றாட தொழில்களை செய்யாமல் நிலையற்ற தன்மையால் சோம்பேறிகள் ஆகியிருக்கிறார்கள். தொழில் ரீதியாக நமக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் சாதிய வன்மங்களால் இப்போது அங்குள்ள இளையவர்கள் அவர்களுக்கான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். கூலித் தொழில் செய்பவர்கள் அநேகமாக முதியோர்களாகவே இருக்கிறார்கள். இளைவர்கள் மத்தியில் உழைப்பு என்றால் வெளிநாடு என்பதுதான் வேதமாக இருக்கிறது. எப்படியாவது வெளிநாடு போய்விட்டால் இந்த பொருளாதாரம் மற்றும் சமூக வன்மங்களிலிருந்து விடுபட்டுவிடுவோம் என்ற நப்பாசைதான். நாங்கள் புலம்பெயர்ந்து இருந்தாலும் எங்கள் சமூக அடிப்படைக்குணத்திலிருந்து விடுபட்டுவிட்டோம் என்று சொன்னால் அது வேசமாகும். புலம்பெயர்ந்த நாங்கள் கொஞ்சம் பொருளாதார மேம்பாட்டுடன் எம் சமூகத்திற்கே உரிய அடிப்படை குணங்களை மறைத்து மேக்கப்போட்டு மறைத்திருக்கிறோமேயன்றி மாறவில்லை. வசதி வாய்ப்புகள் இருக்கும் நாங்களே மாற்றமில்லாதவர்களாக பயணிக்கும்போது வாய்ப்புகளும் இல்லாமல் வசதியும் இல்லாமல் அத்தோடு ஒடுக்கப்பட்ட வாழ்வியலுக்குள் நின்று மன அழுத்தங்களுக்குள் ஆட்பட்டிருக்கும் சமூகமாகவே அவர்களை நாங்கள் நோக்கவேண்டும். கூர்மையான நோக்கல்கள் உங்கள் கட்டுரையில் நிறைந்திருக்கின்றன. அதே நேரம் உள் ஊடுருவும் பார்வையைத் தவிர்த்து விட்டீர்கள். உங்கள் நேரடியான அநுபவங்களும் ஆதங்கமும் தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அநுபவங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் அவை அவரவர்கள் உணரும் விதம் வேறல்லவா. உங்களுடைய பதிவில் உள்ளவைகள் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றன. நாம் ஏற்றுக்கொள்ளும் விதம் மாறுபடுகிறது சுமே. ஆரோக்கியமான பதிவுதான் பலரை பேசவைக்கிறது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.