வணக்கம் தோழர்
உங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து எழுதியதில்லை
காரணம்
உங்களின் முன்னால்
எந்தவகையில் பார்த்தாலும் நானொரு துரும்பு.
ஆனால்
இந்த திரியில்
தாயகம் சார்ந்து உயிரும் உதிரமும் சதையும் கலந்த
தமிழரின் போராட்ட நலன் கருதி எழுதுவதாயின்.......
இந்த பயணம்
கைது
அதனூடான தங்களது நடவடிக்கைகள்
அறிக்கைகள்
பேட்டி
தற்போதைய எழுத்துக்கள்..........
இவற்றினூடாக என்னிடமிருந்து நீங்கள் அதிக தூரம் விலகிச்சென்றுள்ளீர்கள்.
அதை மட்டுமே தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்
நீங்கள் ஒரு சமுத்திரம்
எனது ஆதங்கத்தின் தார்ப்பரியத்தை புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.