-
Posts
32973 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
பல்துறை ஆற்றல்கொள் கலைஞன். ஆழ்ந்த இரங்கல்கள்.
-
எங்கள் துறையிலும் பயிற்சிக்காக சிங்கள மருத்துவர்கள் பலர் இங்கிலாந்து வந்திருக்கினம். கடந்த சில வாரங்களாக consultant பயிற்சிக்காக வந்திருந்த ஒரு சிங்கள பெண் மருத்துவருக்கு பயிற்சி அளிக்க கேட்டுக் கொண்டதற்கு இணங்க பயிற்சி அளித்தது. அவாட கதையை பார்த்தால்.. அவாவும் திரும்பி போவமா விடுவாமா என்ற நிலை தான். இப்ப மட்டுமல்ல.. முன்னைய காலங்களிலும் சொறீலங்கா அரச நிதியில் பயிற்சிக்கு வந்து தங்கிவிட்ட பலர் பல துறைகளிலும் இருக்கினம். பொன்ட் பிரேக் (ஒப்பந்த முறிவு) பண்ண நிறைய காசு கட்டி பிரேக் பண்ணிட்டு நிரந்தரமாக இங்கிலாந்தில் குடியேறியோர் பலர். இது புதிதல்ல. ஆனால் இப்ப அதிகம். வந்திட்டு சொறீலங்கா அதிகாரிகளிடம் பிடிபடாத வகைக்கு.. ஒளிச்சு.. நிரந்தரமாக குடியேறி வாழுறவையும் இருக்கினம்.
-
இருவருமே தமிழர்களுடான இனப்பிரச்சனையை தீர்க்காமல் சிக்கலாக்கி.. இறுதியில் நாட்டை ஒரு உள்நாட்டுப் போருக்குள் தள்ளி உதவியவர்கள். நாடு இன்று இந்த நிலையை அடைய இவர்களின் தவறான கொள்கைகளும் முக்கியமாகும். ரணில் அதே பாதையில் போய் நாட்டில் வாழும் பிற இனங்களின் உரிமையை மறுத்து நாட்டை சிங்கள பெளத்த நாடாக ஒருபோதும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. மாறாக எல்லா இனங்களின் உரிமையும்.. இருப்பும் பாதுகாக்கப்பட்டால் அன்றி.. சொறீலங்கா கடன் மேல் கடன் வாங்கும்.. நாடாகவே இருக்கும்.
-
ஆனால்.. ரஷ்சியாவை மேற்கு நாடுகள் உடைக்க முயலும் என்பதை புட்டின் ஏற்கனவே வெளிப்படையாகக் கூறிவிட்டுத்தான் இந்த யுத்தம் செய்கிறார். மேலும் உக்ரைனை முற்றாக ஆக்கிரமிப்பது ரஷ்சியாவின் நோக்கமல்ல.. எனபதையும் புட்டின் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார். ஆப்கானித்தான்.. ஈராக்கில்.. தலிபான்களிடமும் ஐஸ் காரர்களிடமும் அமெரிக்கா விட்டிட்டு ஓடினதுகளோடு ஒப்பிடும் போது ரஷ்சியாவின் இழப்பு உக்ரைனில் குறைவே.
-
காதல், குடும்ப உறவுகளுடன் வாழ்க்கையில் நண்பர்கள் அவசியமா? ஏன்?
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in சமூகச் சாளரம்
நிச்சயம் தேவை. நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதை மனைவி/கணவருடன் அல்லது தாய் தந்தை சகோதரங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாது. மனைவி/கணவனுடன் பகிர்ந்து கொள்வதை நண்பர்கள்.. தாய் தந்தை சகோதரங்களோடு பகிர முடியாது. அதேபோல் தாய் தந்தையோடு பகிர்வதை சகோதரங்களோடு பகிர முடியாது. சகோதரங்களோடு பகிர்வதை மற்றவர்களோடு பகிர முடியாது. இப்படி சில தனித்துவமான தேவைகள்.. உறவுகள்.. பகிர்வுகள்.. நடத்தைக்கோலங்கள்.. ஒவ்வொரு உறவு நிலைகளோடும் உள்ளது போல்.. நண்பர்களுடனும் உள்ளது. ஆகவே நட்பு.. நிஜ நட்பு.. நிச்சயம் அவசியம். எதுவும் எல்லை தாண்டினால் ஆபத்தே. -
இந்த வீதியில் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. யாழில் இருந்து தீவகத்துக்கு பல்வேறு பணிகளுக்கும் போகும் பெண்கள் ஸ்கூட்டியில் தான் போய் வருகிறார்கள். அதேவேளை இராணுவ வாகனங்கள்.. குறிப்பாக கடற்படை மற்றும் இராணுவ வாகனங்கள்.. பார ஊர்திகள் (டிப்பர் உட்பட).. போக்குவரத்து பேரூந்துகள்.. மீன்வடிகள்.. கார்கள்.. மோட்டார் சைக்கிள்கள்..ஆட்டோக்கள்.. இவை வேகத்தடுப்பற்ற இந்த வீதியில் மிக வேகமாக செல்வதோடு.. பெரும் வீதி வளைவுகளும் காணப்படுவதால்.. வாகனங்கள் வருவது.. கடந்து செல்வதை காண்பதிலும் பிரச்சனைகள் உள்ளன. கடந்த கால விபத்துக்களில் இருந்து சரியான பாடம் கற்கப்பட்டு.. ஆபத்தான வீதியின் பகுதிகளில் வேகத்தடை நிர்மானிக்கப்பட்டிருந்தால்.. வாகனங்களை கண்ட வீதி ஓரத்திலும் நிறுத்த முடியாத வகைக்கு இரட்டை சிவப்புக் கோடிடல்.. போட்டிருந்தால்.. அதை மீறுபவர்களை கண்காணிக்க கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால்.. இந்த வீண் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆக.. சம்பந்தப்பட்டவர்களின் அசமந்தப் போக்கும்.. கார் மற்றும் கனரக வாகனங்கள்.. பேரூந்து ஓட்டுனர்களின் சமூக அக்கறையற்ற நடத்தைகளுமே இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம்.
-
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.. பேய் எல்லாம் மனித வடிவில் தான் இருக்குது. ஆடு.. கோழி.. மாடு.. மீன்.. இறால்..கணவாய்.. நண்டு.. மான்.. மரை.. என்று எத்தனயோ உயிர்களைக் கொன்று அதன் உடல்களை நன்கு பொரித்தும்.. குழம்பு வைத்தும்... உண்ட போதும்.. ஏன் அவை பேயாக வந்து மனிதர்களை பிடிப்பதில்லை.. அமுக்குவதில்லை. சக மனிதன் மட்டும்.. ஏன் சொந்த பந்தங்கள் மட்டும்.. இறந்ததும்.. பேயாவதாக எப்படி மனித நம்புகிறான். ஆக மொத்தத்தில்.. இது மனக்கிலேசத்தின் மூளை விளைவு. அவ்வளவும் தான்.
-
யுத்தத்திற்கு முந்தைய காலத்திலும் வடக்குக் கிழக்கில் பெளத்த மயமாக்கத்திற்காக பிக்குகள் காணிகளை வாங்கி இருக்கின்றனர். ஈனத்தமிழர்கள் சிலர் அவற்றை விற்றும் இருக்கின்றனர். குறிப்பாக புங்குடுதீவில் புத்த பிக்குகள் நிறைய காணிகளை கொள்வனவு செய்ததாக முன்னர் சொல்லப்பட்டு வந்தது. நயினாதீவு புத்த விகாரை காணியும் கொள்வனவு செய்யப்பட்டே பின்னர் கடற்படையும் சேர்ந்து காணி பிடிச்சு விரிவாக்கினது. புத்த சின்னம் எங்கு இருந்தாலும் அது சிங்கள பெளத்தத்தின் வெளிப்பாடு என்று நம்பும் சொறீலங்கா பேரினவாத பயங்கரவாதப் பிக்குகள்..புத்த மதம் பின்பற்றப்பட்ட மற்றைய நாடுகளுக்கும் பெளத்த சாயம் பூசி உரிமை கோருவார்கள் போல இருக்கே. 35 ஆண்டுகால யுத்தம்.. இனப்படுகொலைகள்.. இனக்கலவரங்கள்.. போர்க்குற்றங்கள்.. இவ்வளவையும் சந்தித்த ஒரு இனம்.. இவ்வளவையும் செய்த இனத்திற்கு அதுவும்.. பெளத்த மத ஆக்கிரமிப்புக்கு காணி வழங்குது அல்லது விற்குது என்றால்.. இப்படியாப்பட்ட இனம்.. இந்த உலகில் சுதந்திரமாக வாழத்தான் வேணுமா..??! இப்படியே அடிமையாகக் கிடந்து சாகட்டும்.
-
விந்து வங்கியூடாக தனது விந்தணுக்களை வழங்கி 550 பிள்ளைகளுக்கும் அதிகமான பிள்ளைகள் உருவாக்கக் காரணமாக இருந்த 41 வயதான நெதர்லாந்து ஆண் ஒருவர் எனியும் விந்து வங்கிக்கு விந்தணுக்கள் தரக்கூடாது.. அதனை பாவிக்க அனுமதிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளார். மீறின் 88,000 பவுன்கள் அபராதம் விதிக்கப்படுமாம். இந்த வினோதச் செய்தியை பிரசுரித்திருப்பது பிரித்தானிய ஊடகம் ஒன்று.
-
வசந்தகரணாகொடவிற்கு எதிரான அமெரிக்க தடை - ரஸ்யா அதிருப்தி
nedukkalapoovan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
தாயகத்தில் உள்ளவர்களுக்கு இவை தெரியாமல் இல்லை. அல்லது இப்படிச் சிந்திக்கத் தெரியாமலும் இல்லை. ஆனால் அதனை செயற்படுத்த ஆர்வமற்றிருக்கிறார்கள்... தொடர்புகளை பேண வேண்டிய ராஜதந்திரிகள்.. மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றோடு பேச ஆர்வம் காட்டாமல்.. புலி நீக்க அரசியலைப் பேசிக்கிட்டு திரிகிற சிலரின் பின்னால் கட்டுண்டு கிடக்கிறார்கள். தேர்தல் அரசியலை மையப்படுத்தி எதிரியின் நகர்வுகளுக்குள் நசுங்கிக் கிடந்தாவது பதவிகளை அனுபவிக்கவே நிற்கிறார்கள்.. அப்படியானவர்களை வழி நடுத்துபவர்கள் தான் கட்டிலில் கட்டுண்ட தலைவர்களாகவும் உள்ளனர். -
கனடாவில் இருக்கிறவைக்கு.. கனடாவில்.. ஹிந்தியாவில்.. சொறீலங்காவில் எல்லாம் கொலைக்கூலிப்படை இருக்குது. இவர்களுக்கு இவற்றை எப்படி பராமரிக்க முடியுது.. அதற்கான பணப்பரிவர்த்தனை எப்படி நடக்குது.. இவர்களின் செயற்பாட்டுப் பின்னணி என்ன.. இப்படியானவர்களின் கனடா பிரஜா உரிமையை ரத்துச் செய்து.. நாடு கடத்தி.. நாடு கடத்தப்படும் நாட்டில் அதி உச்ச தண்டனை வழங்க ஏன் கனடா முடிவெடுக்காது இருக்கிறது??! இந்த வழக்கில்.. ஒரு மொழிபெயர்ப்பாளரின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. ஆனால்.. சிங்கப்பூரில் அந்த தூக்கில் இடப்பட்ட தமிழ் இளைஞனுக்கு.. மொழிபெயர்ப்பாளர் கூட வழங்காது.. விசாரணைகளை தமக்கு சாதகமாக்கி தூக்கிலிட்டிருக்கிறது சிங்கப்பூர். அந்த நிலைக்கு கனடா போகாது.. கனடாவில் இருந்து இயங்கும் இந்த கும்பல்களையும் அதன் உதவி பெறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பது.. கனடாவின் மதிப்புக்கும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அதன் உயரிய கோட்பாட்டுக்கும் நன்மையாகும்.
-
வசந்தகரணாகொடவிற்கு எதிரான அமெரிக்க தடை - ரஸ்யா அதிருப்தி
nedukkalapoovan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ஆக... மொத்தத்தில் அமெரிக்காவின் எதிரி ரஷ்சியா ஆதரிக்கிற சிங்களப் படைத் தலைமைகள்.. அரசியல்வாதிகள் எல்லோர் மீதும் அவர்களின் கடந்த கால போர்க்குற்ற.. மனித உரிமைகள் மீறல்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ.. அமெரிக்காவும் மேற்குநாடுகளும்.. கூட்டுப்பங்காளியாக இருந்ததற்கு பிராய்ச்சித்தமாக.. ராஜபக்ச குடும்பம்.. உட்பட ஐநா அறிக்கையில்.. ஐநா மனித உரிமை மையம்.. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால்.. இனங்காணப்பட்டுள்ள.. மோசமான மனித உரிமை மீறல்களை செய்து.. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த.. போர்க்குற்றவாளிகள்.. மற்றும் அவர்களின் வால்பிடிகள் மீது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் தடை விதிப்பதோடு.. அவர்கள் இந்த நாடுகளின் எல்லைக்குள் பிரவேசிக்கும் சமயம் கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும். மேலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள்.. போர்க்குற்றங்கள்.. அங்கு அரங்கேறிய தமிழினப் படுகொலையின் விளைவுகள் என்பதை ஏற்றுக் கொண்டு.. தமிழர் தாயக இருப்பையும் பாதுகாப்பையும் அமெரிக்காவும் மேற்நாடுகளும் ஐநாவின் உதவியோடு அங்கீகரித்து ஏற்று நின்று அவர்களின் முதன்மைப் பங்களிப்போடு தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான... சுயநிர்ணய உரிமையுள்ள.. இறையாண்மை உள்ள தேசத்தை உருவாக்கி தமிழ் மக்களை சிங்களப் படை ஆக்கிரமிப்பில் இருந்தும்.. இனப்படுகொலைகளில் இருந்தும் பாதுகாக்க முன்வர வேண்டும். இதனை செய்ய அமெரிக்கா முன்வரவில்லை என்றால்.. அமெரிக்கா - ரஷ்சியாவோடு சேர்ந்து கூட்டிணைந்து நாடகமாடுவதாகவே கொள்ளப்பட வேண்டும். -
ஏன் சொறீலங்காவிலும்... கிருசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் இருந்து வித்தியா கொலை வழக்கு வரை.. கொலையாளிகள்.. அரச தரப்பு சாட்சியங்களாக மாறி தண்டனை குறைப்பு.. விடுவிப்பு பெற்றவர்கள் தானே. இதுதான் அண்ணே நீதி. குற்றம் செய்யாதவனை செய்தது என்று ஒப்புக் கொள்ள வைப்பது செய்தவை செய்தது என்று சொல்ல வைச்சு தண்டனைக் குறைப்புச் செய்வதும்.. பின் அவன் வந்து இன்னொரு கொலை செய்வதும்.. கடந்த ஆண்டு லண்டனில் ஒரு இளம் பெண் வீதியில் வைச்சு சுவருடன் அடித்துக் கொல்லப்பட்டார்.. அதற்கான குற்றவாளி.. கடந்த குற்றங்களில்.. குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனைக் குறைப்புப் பெற்று வெளில வந்தவன் தான். எனி அந்த இறந்து போன பெண்ணுக்கு நீதி..??! நீதி கிடைத்தும்.. அவர்கள் அனுபவிக்கவா போகிறார்கள். அதேபோல் தான் இந்த தமிழ் இளைஞனும்.. தான் குற்றமே செய்யவில்லை என்கிறான்.. ஆனால்.. குற்றம் செய்தனி என்று தூக்கில் போட்டு கொன்று விட்டார்கள். நாளை அவன் குற்றமே செய்யவில்லை என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தால்.. அந்த இளைஞனின் உயிரை நீதிமன்றம் திருப்பி.. வழங்குமா..?? ஆக.. நீதிமன்றங்களும்.. நீதிபதிகளும்.. நீதி வழங்குவதில் விரைவு காட்ட வேண்டும்.. ஆனால்.. அவசரப்படக் கூடாது. அது தவறான நீதிக்கும் தண்டனைக்கும் வழிவகுக்கும். மேலும் மரண தண்டனை என்பது தவறான நீதிக்கு பின் மீளப் பெற முடியாத நீதியாகிவிடும். அதனால்.. அது தொடர்பில் நீடித்த அவதானமும் அவதானிப்பும் அவசியம். நீதிபதிகளும் மனிதர்களே. அங்கும் தவறுக்கும் பக்கச்சார்புகளுக்கும் இடமிருக்குது.
-
வசந்தகரணாகொடவிற்கு எதிரான அமெரிக்க தடை - ரஸ்யா அதிருப்தி
nedukkalapoovan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ரஷ்சியா தொடர்ந்து அமெரிக்காவை மேற்குலகை கண்டிப்பது நல்லது. அப்போதுதான் அவர்கள் தாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில்.. இணைத்தலைமை நாடுகள் என்ற கூட்டு வழிகாட்டலின் கீழ் இலங்கையில்.. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி நின்று மிகப் பெரிய மனித இனப் படுகொலைகளை உரிமை மீறல்களை நாடத்த துணை நின்றதை வெளிப்படையாக உணரத்தலைப்படுவர். இன்று பூகோள அரசியல் பாதுகாப்பு நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தாமே உதவி நின்ற... மனித இன படுகொலையாளர்களுக்கு எதிராக தாமே நடவடிக்கை எடுக்க நிற்பந்திக்கப்பட்டுள்ளனர். ரஷ்சியாவின் இந்தக் கண்டனம்.. அமெரிக்காவும் மற்றும் மேற்குலக நாடுகளும்.. மேலும் மேலும் உண்மையான இனப்படுகொலையாளர்களுக்கு.... கொடிய மனித உரிமை மீறல் செய்த சிங்களப் படைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டப்படுவர்.. மாறாக கூட்டுப் பயிற்சியும்... ஆயுத சப்பிளையும் செய்வதை தவிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். -
வெளியில் இருந்து சொல்லும் கருத்துக்களுக்கு அப்பால்.. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள மண்ணில் இருந்து தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வேண்டுகோள்களே.. ஒரு நாள் உலகால் கருத்தில் கொள்ளப்படும். அதுவே அவர்களின் விடிவுக்கு உதவி நிற்கும்..! அப்படித்தான் பல தேசங்கள் உருவாகின.. மக்கள் விடிவைச் சந்தித்தார்கள். அதைச் செய்யாமல்.. வாழாதிருப்பதும்.. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று பயங்காட்டி.. அச்சுறுத்தி வைப்பது ஆக்கிரமிப்பாளனின் செயலை தான் தீவிரமாக்குமே தவிர ஆக்கிரமிப்பு வலியை சுமக்கும் மக்களுக்கு.. அதில் இருந்து மீள உதவாது. இதுவே எங்கள் நிலைப்பாடு. இது உங்களதில் இருந்தும் மிகவும் மாறுபட்டது.
-
சொறீலங்கா கடற்படை ஆசாமிகள் அனைவரையும் கறுப்புப் பட்டியலில் இட வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள்.. இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்கள். இப்போதும் நில மற்றும் மத ஆக்கிரமிப்புச் செயல்களை முன்னின்று நடத்துபவர்கள். யுத்தம் முடிந்து 14 என்ன 50 ஆண்டுகள் ஆனாலும் காலத்தைக் கடத்தினாலும் செய்த குற்றங்களுக்கு தண்டனை அவசியம். அதில் இருந்து யாரும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. இவர்களை குற்றம் செய்யத் தூண்டிய அமெரிக்காவே இவர்களை முதலில் தண்டிக்க வேண்டும். அது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
-
அப்போ நீங்கள் செய்யாத குற்றத்துக்கு போலிச் சாட்சியங்கள் அல்லது சூழ்நிலைச் சாட்சியங்கள்.. உங்களைக் குற்றவாளி ஆக்கி தூக்கிலிட்டால்.. அது செய்த குற்றமாகிடும்.. இல்லையா..??! நல்ல நீதிதான். இதனை நன்கு வலியுறுத்தி வக்காளத்து வாங்கனும். இந்த முறைமையை நீக்க அல்லது முன்னேற்றி உண்மையில் குற்றம் செய்யாதவர்களை பாதுக்காக்க கோருவது.. குற்றம் செய்பவர்களை தூண்டுவதாகும் என்று சொல்ல வேண்டும். அப்படித்தானே. நல்ல நியாயமான கருத்துப் பரிவர்த்தனை.
-
உங்களுக்கு கருத்துக்களை வாசிச்சு உள்வாங்குவதில் பிரச்சனை இருக்குது அல்லது.. தலைப்புக்கு சம்பந்தமில்லாததை தீவிரமாக்கிக் காட்டும் நோக்கமிருக்கிறது. இங்கு பிரச்சனை யாழ்ப்பாணம் அல்லது வடக்குக் கிழக்கு வாழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க நிகழ்ச்சி நடத்துவதா இல்லையா என்பதல்ல.. பிரச்சனை.. பல்வேறு வகையான ஆக்கிரமிப்பு வடிவங்களை கவனித்து மக்களையும் சர்வதேசத்தையும் தெளிவூட்ட வேண்டிய தமிழ் தேசியக் கட்சிகள்.. அதைவிட்டுவிட்டு.. யாரோ மான்சி குழுவை கூட்டி வந்து மக்களைக் குசிப்படுத்துவதாக வருவாய் தேடுவதற்கு விளம்பரம் செய்து கொண்டு இருப்பது தான். இதாவது புரிகிறதா இங்கு. அங்குள்ள மக்களின் மகிழ்ச்சியை வெறும் இசை நிகழ்ச்சிகள் மட்டும்.. தீர்மானிக்க முடியாது.. அவர்களைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு நீக்கமும் அங்கு.. முதன்மை அவசியமாகும். புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் முப்படை ஆயுத ஆக்கிரமிப்பின் கீழ் அடாத்தான.. ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் கீழ் வாழவில்லையே. அதையேன் சுட்டிக்காட்டி படைவெளியேற்றம் தான் அந்த மக்களின் நீடித்த மகிழ்ச்சிக்கு உதவும் என்பதை வலியுறுத்த பின்னடிக்கிறீர்கள் நீங்கள் சிலர். அப்போ.. அந்த ஆக்கிரமிப்பின் கீழ் ஆதாயம் தேடும் நபர்களா நீங்கள் எல்லாம். உங்களை எல்லாம் கடந்து இந்தச் சவால்களை எல்லாம் கடந்து.. ஆக்கிரமிப்பு நீக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துவது.. மிக அவசியமானது..வேண்டியதும் கூட.. அதனை செய்ய வேண்டியவர்களும்.. அதனைச் செய்யாமல் காலம் கடத்துவதுதான் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது விளங்குதா..??!
-
நீங்கள் துரையப்பா காலத்து ஆள் என்பது விளங்குது. யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சிக்கு எப்பவும் குறை இருக்கவில்லை. போர் காலத்திலும் இசை நிகழ்ச்சிகள்.. முத்தமிழ் விழாக்கள் நடந்தன. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா போன்று பல தென்னிந்திய.. தமிழக கலைஞர்கள் வந்தே போயினர். நீங்கள் ஒருவேளை அந்த வேளைகளில்.. ஓடி ஒளித்திருந்திருக்கலாம். ஆனால்.. ஒரு பிரதான தமிழ் தேசியக் கட்சி என்று சொல்லுபவர்களின் அதுவும் இருதேசம் ஒரு நாடு கொள்கை கொண்டவர்களின் நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நீக்கத்திற்கு எதிரான.. குறுகிய கால.. நீண்ட கால செயற்திட்டங்கள் எதுவும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. களத்தில் எத்தனையோ முக்கிய விடயங்கள் வெளிக்கொணரவும் பேசப்படவும் தீர்க்கப்படவும் உள்ள நிலையில்.. மான்சியை தூக்கிப் பிடிக்க.. வேறு அமைப்புக்கள் இருக்கினம். அவை அதை மக்களுக்காகவும் வருவாய்க்காகவும் செய்து கொள்ளுவினம். அங்கு அதற்கு எந்தச் சவாலும் இல்லை. ஆனால்.. மண்ணின் இருப்புக்கும் மக்களின் இருப்புக்கும் உள்ள ஆபத்தை சிறுமைப்படுத்தி.. பல விடயங்களை மறைக்க மான்சியை தூக்கிப் பிடிக்க வேண்டியது ஒரு அரசியல் கட்சிக்கு அவசியமா என்பது தான் கேள்வி..?! இது தானா தமிழ் தேசிய அரசியலின் தேவை இப்போ..??!