-
Posts
32973 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
இந்த வினைத்திறனற்ற இன தேசப்பற்றற அரசியல் வியாதிகளை பூண்டோடு அழிச்சிட்டாவது புலிகள் போயிருக்கலாம்... என்று தான் எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இவங்கள் 2009 இலும் போனை நிற்பாட்டிட்டு ஒளிஞ்சு கிடந்தாங்கள். மாவீரர் நினைவிடங்கள் அழிக்கப்படும் போதும் சும்மா கிடந்தாங்கள். போர் முடிந்து இவ்வளவு காலமாகியும்.. இவ்வளவு சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளும் இருக்கவும் சும்மா கிடக்கிறாங்கள்.. ஏனெனில் இவங்களுக்கு அவங்கள் தான் பொடிகாட். இவ்வளவு போதைவஸ்து வந்தும்.. கண்முன்னாள் இளைய சமூகம் அழிக்கப்படும் போது கண்டுகொள்ளாமல் கிடக்கிறாங்கள்.. இப்ப மட்டும் பெளத்த விகாரைகள் கண்டு கிளம்புவாங்களா என்ன. 2009 மே க்குப் பின் சராணாகதி அரசியலை ஆரம்பிச்சாங்கள். இப்ப தூய புலி நீக்க அரசியலை செய்யுறாங்கள்.. அதில தான் அவங்களுக்கு பதவிகளும் மாடி வீடுகளும் சிங்களப் பொலிஸ் பாதுகாப்பும்.. சொகுசு வாகனங்களும்.. வாழ்க்கையும் கிடைக்கும். இவ்வளவும் கிடைக்கேக்க.. அவங்களுக்கு இதைப் பற்றி எல்லாம் கதைச்சு எதுக்கு எஜமானரின் விசரைக் கிளப்பனும். அப்பப்ப வெளிநாட்டு தூதுவர்கள் வந்து.. இவையை தட்டிக்கொடுத்திட்டுப் போகச் சரி. அதிலும் அண்டை நாட்டு அரசியல் வியாதிகள் வந்து கூட நின்று போட்டு எடுத்திட்டு.. எயார் போட்டும்.. போட்டும் துறக்கிறம் என்றிட்டு போனாலே போதும்.. அந்தக் கூச்சல் அடங்க முதல் 100 விகாரைகள் கட்டிடுவாங்கள்.
-
சிவசேன இலங்கையில் சிங்கள பெளத்த மயமாக்கலை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. ஏன் இலங்கையில் சைவத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு கோவில்கள் அழிக்கப்பட்ட போது கூட சிவசேன கவலை தெரிவிக்கவில்லை. தடுக்கக் கோரவில்லை. ஆனால்.. தமிழர்கள் வெறுமனவே சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு விரிவாக்கத்துக்கு மட்டும் முகம் கொடுக்கவில்லை.. அதோடு இன்னும் பல திட்டமிட்ட செயற்பாடுகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். அதில் ஒன்று மதமாற்றங்கள். அதிலும் கிறிஸ்தவ மதமாற்றத்தை தான் சிவசேன எதிர்க்கிறது. இஸ்லாமிய மதமாற்றங்களை அது இலங்கையில் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. அந்தவகையில்.. வெளிப்படையாக தன்னை சிவசேன ஆள் என்று அறிவித்துவிட்டுள்ள சச்சியிடம் வேறு எதனை எதிர்பார்க்கிறீர்கள். குறைந்தது மதமாற்றங்களையாவது எதிர்க்கினமே என்று தான் கொள்ள வேண்டி இருக்குது. ஏனெனில் ஈழத்தமிழர்கள் இன்று பலதலைக் கொள்ளி எறும்புகளிடம் மாட்டிய புழுக்களாகிக் கிடக்கின்றனர். புலிகளாய் வாழ்ந்த இனம்.. புழுவாகிக் கிடக்கையில் இதுதான் நிகழும்.
-
இன்றுவரை எம் அரசியல்வியாதிகள்.. சிங்கள ஆக்கிரமிப்புப்படை வெளியேற்றம் குறித்து.. இணைத்தலைமை நாடுகளையோ.. நோர்வேயையோ.. ஹிந்தியாவையோ கேட்டதில்லை. மாறாக.. சிங்களப் படைகள் தமிழர் நிலத்தில் ஒரு மூலையிலாவது இருக்கட்டும் என்று தான் கருத்துச் சொல்லி இருக்கினம். இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புக்குள் சுகம் தேடக் கூடிய அரசியல் வியாதிகளை வைச்சுக் கொண்டு தமிழர்கள்.. என்ன செய்ய முடியும்.. இவற்றையும் இன்னும் அரங்கேறப் போற இதை விட மோசமான நிகழ்வுகளையும் பார்த்து அங்கலாய்க்கத்தான் முடியும். சுமந்திரன் 2009 மே க்குப் பின் அரசியலுக்குள் கொண்டு வரப்பட்ட ஒரு சிங்கள பெளத்த விசுவாசி. அது அப்படித்தான் பேசும். வேடிக்கை என்னவென்றால்... புலிகள் இல்லை என்றால் எப்பவோ தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்திருப்போம்.. புலிகள் தான் எல்லாத்துக்கும் தடை என்றவர்கள்.. இப்பவும் உயிரோடு தான் இருக்கினம். அவை கூட.. சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் வெளியேற்றம் குறித்துப் பேசுவதில்லை. வட அயர்லாந்தில்.. பெரிய வெள்ளி உடன்படிக்கையோடு.. பிரித்தானிய இராணுவ ஆக்கிரமிப்பு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால்.. பிரித்தானியா கூட தமிழர்கள் நில ஆக்கிரமிப்பில்.. சிங்களப் படை வெளியேற்றம் குறித்துப் பேசுதில்லை. புலம்பெயர் அமைப்புக்கள் கூட அதனை தெளிவாக கால வரையறுத்துப் பேசுவதும் இல்லை.. வலியுறுத்துவதும் இல்லை. சிங்களப் படை ஆக்கிரமிப்பு இருக்கும் வரை.. சிங்கள பெளத்த மயமாக்கம்.. மிக வேகமாக நிகழும்.
-
கச்சதீவில்.. இல்லாத அரசமரத்தை வைச்சு.. வளர்த்து.. அதில் புத்தரை இருத்தினவங்களுக்கு இது பெரிய வேலையா..??! தீவகத்தில் முன்னர் ஏன் நயீனாதீவில் கூட பெளத்த விகாரை.. இருக்கவில்லை. எப்போ சிங்களக் கடற்படை ஆக்கிரமிப்பு வந்திச்சோ அப்ப தான் எல்லாமே முளைவிட்டது. இப்போ நயீனாதீவு.. நாகதீப ஆகிட்டுது. மயிலிட்டி.. மயிலிட்டிய புர என்று ஆனாலும் ஆச்சரியமில்லை. எம் அரசியல் வியாதிகள்.. கட்டிலை வியாபித்திருக்கத்தான் சரி. வடக்குக் கிழக்கில் முக்கிய இடங்கள் எல்லாம் பெளத்த விகாரைகள் வந்திட்டுது. அதில் அநேகம் 2009 மே க்குப் பின் வந்தவை.
-
சிங்கள பெளத்த மயமாக்கத்தில்.. சொறீலங்கா கடற்படை தான் முக்கியமா செயற்படுகுது. இவ்வளவு பொருண்மிய நெருக்கடியிலும்.. அது தனது ஆக்கிரமிப்புக் கொள்கையில் உறுதியா இருக்குது என்றால்.. இதன் பின்னால் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் பக்கபலம் இல்லாமல் இல்லை. அதுசரி.. இப்படியான விடயங்கள் குறித்து எங்கட தமிழ் அரசியல் வியாதிகள்... ஏன் பிரஸ்தாபிப்பதே இல்லை..??! தையிட்டி என்ன முழு சிங்கள பெளத்த பிரதேசமா..??! இதற்கு பதில் அளிக்கனுன்னா.. தென்னிலங்கை பூராவும் சைவ ஆலயங்கள் அமைக்கப்படனும். அதுதான் மத நல்லிணக்கமாகும்.. என்று சொல்லிக்கொள்ளனும்.
-
Convicted traffickers who can prove that they were only couriers may be able to avoid the death penalty. Drug possession and consumption draw lesser punishments including prison and fines. In Tangaraju Suppiah's last appeal, the judge agreed with the prosecution that he had been responsible for co-ordinating the delivery, which made him ineligible for a more lenient sentence. Activists had raised concerns that he had not been given adequate access to a Tamil interpreter and had been forced to represent himself at his last appeal because his family was unable to secure a lawyer. (https://www.bbc.co.uk/news/world-asia-65395390) நீங்கள் சொல்லுற இலவச சட்ட வல்லுனர்கள் ஏன் உதவவில்லை...??! மேலும்.. மலேசிய - சிங்கப்பூர் எல்லை திறந்து தானே இருக்குது சிங்கப்பூர் ஆக்களுக்கும் மலேசிய ஆக்களுக்கும். குற்றவாளிகள் சுதந்திரமாகப் போய் வரக் கூடிய சூழல் இருக்குது. மேலும்.. போதைவஸ்து வைச்சிருந்தால்.. பாவிச்சால்.. குற்றம் குறைவு. ஆனால்.. கடத்தலை திட்டமிட்டு நடத்தினால்.. மரண தண்டனை..??! இதுதான் சிங்கப்பூர் சட்டமென்றால்.. எல்லைகளை மூடுவது தானே தகும். ஏனெனில் அயல்நாடுகளில் அது குற்றமில்லாத போது. மேலும் தமிழர்கள் குற்றவாளிகளாகப் பெருகனுன்னு இதைச் சொல்லவில்லை.. தமிழர்கள் தான் குற்றவாளிகள் என்பதான மனோநிலை வளர்வது ஆபத்து என்பதை தான் வலியுறுத்துகிறோம்.
-
பூமியை கடக்கும் மிகப் பெரிய விண்கல்: நாசா தகவல்
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in அறிவியல் தொழில்நுட்பம்
பூமிக்கு வெளியில் இருந்தான ஆபத்தை விட.. அமெரிக்காவும் அதன் வால்பிடிகளும் தயாரித்து வைத்திருக்கும் ஆயுதங்களாலும்.. அணு குண்டுகளாலும்.. கக்கும் புகைகளாலும் தான் ஆபத்து அதிகம். -
என்ன அக்னி.. தனது பிரஜை ஒருவரின் மனோநிலையில் மாற்றத்தை உருவாக்க முடியாத சிங்கப்பூர்.. கடும் சட்டங்களை தனது எல்லைக்குள் வைச்சிருப்பது.. அதன் தோல்வி தானே...???! ஏன் பிற நாடுகளில் குற்றங்களை பதிவு செய்யும் தனது பிரஜைகளை அதன் கடவுச் சீட்டு மூலம் கண்காணிக்கலாம்.. தானே.. ஆளுக்கு பின்னால் திரியனுன்னு இல்லையே. அதன் மூலம்.. தன் நாடு சட்டங்கள் மூலம் மட்டுமல்ல.. தனது பிரஜைகள் மூலமான குற்றங்களையும் தடுப்பதாக உலகிற்கு காட்டலாம் தானே.. ஏன் செய்ய முடியவில்லை..???! சிங்கப்பூர் எல்லாத்திலும் திறம்.. கள்ளமட்டை போடுவதில் இருந்து போதை வஸ்து பாவிப்பது.. விபச்சாரம் வரை எல்லாத்திலும் திறம் தான். ஆனால்.. மனிதர்களை அடிப்படை மனிதாபிமான முறையில் கூட நடத்தாமை.. சிறுபான்மை இன மக்களை குற்றவாளிகள் என்ற மனோநிலையில் நடத்துவது.. தெற்காசிய பிரஜைகளை அடிமைகள் போல நடத்துவது.. இவை எல்லாம் அங்குண்டு. குறிப்பாக.. ஹிந்திய வேலையாட்களை நடத்தும் முறைமை சர்வதேச தரத்தில் இல்லை. நவீன அடிமைத்தன தரத்தில் தான் உள்ளது. மேலும் நீதிமுறையில்.. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பில்லை. இந்த இளைஞரின் விடயத்தில் கூட அவர் தனக்காக இறுதியாக வாதாட ஒரு சட்டவாளரை கூட வைக்க முடியவில்லை. அதற்கான அவகாசம் கூட இல்லை. சிங்கப்பூரில்.. ஊழல்.. நடக்கவில்லையோ..??! புலிகள் கூட போதைவஸ்துக் குற்றங்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்குவதில்லை. தொடர் எச்சரிப்புகளுக்கு பிறகும் தொடர்ந்து குற்றம் செய்தால் மட்டும் தான் தண்டனை. அதுசரி.. புலிகளின் இந்த நடைமுறைகளை பயங்கரவாதம் என்று சொல்லி புலிகளையே அழிச்சவை.. சிங்கப்பூரின்.. செயற்பாடுகளை.. சவுதியின் செயற்பாடுகளை ஏனோ.. பயங்கரவாதம் என்று சொல்லுவதில்லை. ஏனேனில்.. ஒன்று சர்வதேச வியாபார காம்பிளிங் மையம். இன்னொன்று உலக எண்ணெய் வியாபார காம்பிளிங் மையம்.
-
உங்களுக்கு எழுதிற கருத்தை வாசிச்சு விளங்கிற பிரச்சனை இருக்குது. எல்லா சமூகங்களிலும் குற்றவாளிகள் உள்ளனர். ஆனால்.. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு சில சிறுபான்மை இன மக்கள் தொடர்ந்து ராகெட் குறூப்புக்குள் வைக்கப்பட்டு.. கண்காணிக்கப்படுவதும்.. அவர்கள் தான் குற்றங்களை அதிகம் செய்கிறவர்கள் என்ற மனோபாவமும் வளர்க்கப்பட்டு இருக்கிறது. அதில் தமிழர்கள் அடங்குவது.. ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. இதே நிலை அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு உள்ளது. பிரித்தானியாவிலும் வெள்ளைகளை விட கறுப்பர்கள்.. அதிகம் தடுத்தி நிறுத்தி.. உடற்சோதனை செய்யப்படுகிறார்கள். இதற்கு கறுப்பர்கள் என்றால்.. குற்றம் செய்பவர்கள் என்ற மனோபாவத்தின் தாக்கமே அதிகம். அதே தான் சிங்கப்பூரிலும்.. தமிழர்கள் மீது உள்ளது. அதனால் தான்... தமிழர்கள் மீதான.. சிங்கப்பூரின் நடவடிக்கைகள்.. சும்மா சிலாகித்துப் போகிற விடயம் அல்ல. நீண்ட மனோபாவப் பிரச்சனையின் பின்னணியில் தான் அதன் நீதிச் செயற்பாடு உள்ளது. அதனால்.. தான் சிங்கப்பூர் தொடந்து சர்வதேச அளவில் மனித உரிமைகள் விடயத்தில் அதிகம் எதிர் விமர்சிப்பை எதிர்கொள்ளும் நாடாக உள்ளது. இந்த விடயத்தில்.. சிங்கை.. மற்றும் மலேசியா வாழ் தமிழ் மக்களுக்கு எமது ஆதரவு இருக்கும். அதற்காக தமிழ் குற்றவாளிகள் பெருக உதவுவதாக அது அமையாது. தமிழ் மக்கள் மீதான இரண்டாம் தர மூன்றாம் தர அணுகுமுறைகளை இந்த நாடுகள் கைவிட வேண்டும். அதே.
-
என்ன அமெரிக்காவின் கீழ்த்தரமான 3ம் தர அரசியல் இதுதான். பெண்களை வைச்சு.. அரசியல் செய்வது. இப்படி அமெரிக்காவில் தமக்கு வேண்டாதவர்கள் மீது திருட்டுப் பழி.. பாலியல் பழி.. பெண் பழி... போடுவது சர்வசாதாரணம். கிளிங்டன் - மோனிக்கா விடயம் 90களில் சக்கை போடவில்லையா..?! விக்லீக்ஸ் நிறுவனர் மீதும் இப்படித்தான் போட்டது அமெரிக்கா..?! அமெரிக்கா ஒரு கடைந்தெடுத்த காவாலி சன நாய் அக நாடு.
-
தலைப்புபே பிழை... நீரிழிவு ஒரு நோய் அல்ல. ஒரு உடற்கோளாறு அல்லது நிலை. நீங்கள் எதையும் சாப்பிடுங்கோ.. ஆனால் சாப்பிட்டது உடலில் எரிந்து போகும் அளவுக்கு வேலையோ.. உடற்பயிற்சியோ.. யோகாப் பயிற்சியோ.. ஏன் நல்லா சைக்கிள் ஓட்டமோ... இல்ல ஓட்டநடையோ நடவுங்கோ. சும்மா நடையை விட ஓட்ட நடை/ விரைவு நடை நல்லது. நீச்சல் நல்லது. வீட்டு மாடியில் ஏறி இறங்கி வேலை செய்வது நல்லது. மேலும் உள்ளெடுக்கும் உணவில் உள்ள கலோரி அளவை பருமட்டாகக் கணித்து அது எரிய வேலை செய்வது... போதும். சாப்பிட்டிட்டு சும்மா குந்தி இருப்பதால் தான் நீரிழிவு வகை 2 அதிகம் ஏற்படுகிறது. வகை 1 பிறப்புரிமை சார்ந்தது. அதனை ஜீன் சரிபார்ப்புச் சிகிச்சை மூலம் திருத்த ஆய்வுகள் நடக்கின்றன. முன்னேற்றமும் காணப்பட்டுள்ளது.
-
சொறீலங்கா துறைமுக சுங்கப்பிரிவை பற்றி பலரும் சரியாக அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. அங்கு இலஞ்சமும்.. பதவி மோகமுமே.. தலை விரித்தாடுகிறது. இது கூட அவைட திட்டமிட்ட செயலோ யார் அறிவார். என்ன இதனை வைச்சு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பெட்டிகள் எல்லாம் திறக்கப்பட்டு.. பெறுமதியான பொருட்கள் கபளீகரம் செய்யப்படும். இப்பவும் அப்படி நடக்குது.. எனி இன்னும் அதிகரிக்கும். அதற்கு தான் இந்தப் படங்காட்டல். சிங்களவர்கள் சொகுசுக்கார் அது இதென்று களவாக இறக்கித் தள்ளுகிறார்கள்.. அனுப்பித் தள்ளுகிறார்கள்.. அதெல்லாம்.. இலஞ்சம் வழி இலகுவாக சோதனைகளை தாண்டியும் விடுகின்றன.
-
சிங்கப்பூர் சனத்தொகையில்.. 30 சதவீதம் தமிழர்களா... அவர்கள்.... குற்றவாளிகளா..??! சிங்கப்பூரில்.. போதைவஸ்தை தமிழர்கள் தான் கடத்துகிறார்களா.. அல்லது பாவிக்கிறார்களா..??! போதைவஸ்து பாவனையை தடுப்பது சிங்கப்பூரின் கொள்கை. அதே நாடு தன் பிரஜைகள்.. மற்றைய நாடுகளில் அதை பாவிப்பதை தடுக்க ஒரு ஒத்துழைப்பும் இல்லை. மேலும்.. இந்த வழக்கில்... குறித்த தமிழ் இளைஞன் போதை வஸ்தை வைத்திருந்ததோ.. கடத்தினதோ இறுதி வரை உறுதி செய்யப்படவில்லை. அவரது தொலைபேசில்.. ஒரு போதைவஸ்து சப்பிளையரின் போன் நம்பர் இருந்தது தான்.. மரண தண்டனைக் குற்றமாகி இருக்கிறது. இதனை தான்.. மனித உரிமை அமைப்புக்கள்.. மற்றும் மரண தண்டனைக்கு எதிரான அமைப்புக்கள் கேள்விகுரியதாக்கி உள்ளன. தமிழர்கள் விடயத்தில் சிங்கப்பூர் நெகிழ்வுப் போக்கில்லாமல் நடந்து கொள்வது இது முதற்தடவையும் அல்ல. அதற்காக சிங்கப்பூர் மலே ஆக்கள் திறம்.. குற்றம் செய்யாத சுத்தவான்கள் என்ற சிங்கப்பூரின் காட்சிப்படுத்தல்.. கேவலமானது.
-
சிங்கப்பூர் பிரஜைகள் மேற்கு நாடுகளுக்கு வந்து போதைப் பொருள் பாவிப்பதற்கு சிங்கப்பூரின் வருமானம் பாவிக்கப்படுகிறது. இவர்களுக்கும் அதி உத்தம சிங்கப்பூர் மரண தண்டனை வழங்குமா..????! என்ன மலே காரர் என்றால்.. கடத்தலாம்.. பாவிக்கலாம். தமிழன் என்றால்.. ஒரு போன் நம்பரை வைச்சே.. குற்றம் சாட்டி.. தூக்கில போடலாம். பிறகு.. தமிழனால் தான் சிங்கப்பூர் வளர்ந்தது என்றும்.. சொல்லிக்கிறது. அதே தமிழனை... தேவைக்கு ஏற்ப பாவிச்சுக்கிறது. ஆக மொத்தத்தில் தமிழன் நாடில்லா.. நாதியில்லாத ஒரு பரதேசி. அவனை எவரும் என்னவும் செய்யலாம்.
-
இந்தக் கத்தியால... தேங்காய் கூட உரிக்க முடியாது. இதால ஆக்களை வெட்டிக் கொன்றானாம்..?! நாய்க்கு விழுந்துள்ள வெட்டுக்காயப்படி பார்த்தால் கூட கூரிய ஆயுதத்தால் வெட்டிய அடையாளம் போன்றே தெரிகிறது. குறிப்பாக துப்பாக்கி முனைக் கத்தியால் குத்தியது போன்ற காயம் நாயில் காணப்படுகிறது. மேலும்.. இந்த கத்திக்கதை நேற்று முந்தினமே வெளியாகிட்டுது. ஆனால் படம் இன்று வந்திருக்குது. கிணற்றுக்குள் இருந்து மீட்ட சாரத்தில் இரத்தக்கறை அப்படியே கரைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டிருக்குது. என்ன கலிகாலம் என்றால்.. ஒரு இனத்தையே மொத்தமாகப் படுகொலை செய்து அந்தக் கொலைகளில் இருந்தெல்லாம் தம்மை விடுவித்துக் கொண்ட சிங்களப் படைகளுக்கும் கூலிகளுக்கும்.. வக்காளத்து வாங்குவோரைப் பார்த்தால்.... இவர்களின் கருத்துப் பஞ்சத்துக்கு என்ன விலையும் கொடுக்கக் கூடியவர்கள் என்று தெரிகிறது. சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். நானும் இதே பகுதியால் நயினாதீவுக்கு பயணித்திருக்கிறேன். சொறீலங்கா கடற்படை ஒழுங்கு படுத்தலில் தான் படகுகள் ஓடுகின்றன. குறிக்காட்டுவானில்.. சொறீலங்கா கடற்படை கண்காணிப்பு நிலை இருக்குது. அதேபோல்.. நயினாதீவில்... கோவில் இறங்குறையில் வெளிப்படையாக இல்லை. ஆனால் சொறீலங்கா கடற்படை புலனாய்வாளர்கள் மற்றும் ஈபிடிபி குப்பல் ஆட்களின் நடமாட்டம் இருப்பதை கூட்டிச் சென்ற உள்ளூர் மக்களே சொல்கிறார்கள். உங்களை சொறீலங்கா கடற்படை தனது வோட்டர் ஜெட்டில் கூட்டி கொண்டு போய் கொண்டு வந்துவிட்டது.. பால் சோறும் கட்டாச்சம்பலும் தந்தது என்றும் எழுதலாம்... அது உங்களின் செல்வாக்கிற்கு உண்மையாகவும் இருக்கலாம்.. ஆனால்.. உள்ளூர் மக்களை விட உங்களுக்கு அங்குள்ள நிலைமையின் உண்மைத் தன்மையோ.... கஸ்டமோ தெரிய வாய்ப்பில்லை.
-
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதிய கடிதம்..
nedukkalapoovan replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
இல்லையே.. அண்மையில் சிவலிங்கம் உடைப்பு... நாகபூசனி அம்மன் சிலை நகர்த்தல்.. இவற்றிற்கு எதிராகவும்.. புத்தர் வரவுகளுக்கு எதிராகவும் மிக அண்மையில் ஒரு அறிக்கை தந்திருந்தாரே. ஒரு மனிதனின் பொருண்மிய ஏழ்மை.. அறியாமையைப் பயன்படுத்தி.. கட்டாய அல்லது ஏமாற்றிய மதமாற்றச் செயற்பாடுகள்.. சிங்களம் கட்டமைத்து ஒரு இனத்தின் தேசிய இருப்பை அழிக்க செயற்படுத்தும்.. மத அடையாளத் திணிப்பிற்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல. இதில் சச்சிதானந்தம்.. குறைத்து மதிப்பளிப்பதால்.. அது எதிர்க்கப்படக் கூடாது.. தடுக்கப்படக் கூடாது என்றும் அர்த்தப்பட முடியாது. போர் காலத்திலும் கட்டாய மதமாற்றங்கள் பேசு பொருளாக இருந்தன. முக்கிய கிறிஸ்தவ தலைமைகள்.. இதனை ஒரு அருவருக்கத்தக்க செயலாகவே பார்த்தனர். புலிகள் வெளிப்படையாக கட்டாய மதமாற்றங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தாவிட்டாலும் அவர்கள் அதனை விரும்பவில்லை என்பதை அவர்களின் பிரசுரங்களில் வெளிப்படுத்தி இருந்தனர். கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான கருத்து அல்லது நிலைப்பாடு என்பது அந்தந்த மதங்களுக்கு எதிரான நிலைப்பாடு.. என்ற திரிபுக்கு ஆளாக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதால்.. புலிகள்.. அதனை முதன்மைப்படுத்தவில்லை. இதனை ஏலவே.. முஸ்லிம்கள் வெளியேற்றத்தோடு பார்த்தும் விட்டோம். முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது அண்றைய சூழலில்.. சமூகங்களின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் நம்பிக்கையீனங்களை அகற்றவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்காலிக செயற்பாடு. ஆனால்.. பின்னர் அதே புலிகள்.. இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் என்று சித்தரிக்க பயன்படுத்தப்பட்டது.. சந்தர்ப்பவாதிகளால். இந்த ஆபத்து இப்பவும் இருக்குது. அதனை சச்சி பொருட்படுத்துவாரா என்று தெரியவில்லை. திட்டமிட்ட மதமாற்றம் என்பது வருவாய் சார்ந்த செயற்பாடு. அது சுயநலம் சார்ந்தது. அதனை குறித்த மத எதிர்ப்பாக சித்தரிக்கவோ.. திரிபு படுத்தவோ கூடாது. -
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதிய கடிதம்..
nedukkalapoovan replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
திட்டமிட்ட மத மாற்றங்கள்.. மத அடையாளத்திணிப்புக்கள்.. திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள்.. ஒரு இனத்தின் தேசிய விழுமியங்களை.. பண்பாட்டை..பாரம்பரியத்தை.. மொழியை அழிக்கும் சேதப்படுத்தும் செயற்பாடுகள் எந்த வடிவில் நிகழ்ந்தாலும்.. தடுக்கப்பட வேண்டும்.. எதிர்க்கப்பட வேண்டும். அதேவேளை.. ஒரு மனிதனுக்குரிய அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.. அது மற்றைய சக மனிதர்களின் உரிமையில் தலையிடாத வரை. அந்த வகையில்.. சச்சிதானந்தம் ஐயா.. காவி உடை போட்டுச் செய்தால் என்ன போடாமல் செய்தால் என்ன திட்டமிட்ட மத மாற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை வரவேற்க வேண்டும். அது அந்த களத்தில் அவசியமானதும் கூட. இந்த மதமாற்றக்காரர்களின் கையில் சிக்குவது. ஏழை எளிய மக்கள் தான். அந்த மக்களின் பலவீனத்தை இவர்கள் பலமாக்கிக் கொள்கின்றனர்.. தங்களின் வருவாய்க்காக. அந்த வகையில்.. அந்த ஏழை எளிய மக்களின்.. வாழ்வாதாரத்தை கல்வி அறிவை உயர்த்துவதன் மூலம்.. அவர்களை இந்த ஆபத்தில் இருந்தும் விடுவிக்க முடியும். வெறுமனவே மத மாற்றுக்காரர்களை எதிர்ப்பது அல்லது வெறுப்பதன் ஊடாக.. அந்தச் செயலை தடுக்க முடியாது. அந்த மதமாற்றக்காரர்களின் இலக்குகளாக மாறும் மக்களின் சமூக பொருண்மிய நிலையை மாற்றியமைக்க.. உதவுவது தான் இதற்கு நிரந்தர முடிவை தரும். அதேவேளை.. ஒரு சிலர் தாமாக விரும்பி மதம் மாறுவதை தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது. அது தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயலாகவே இருக்கும். -
நிலோஷனுக்கு வயசு போட்டுது. முதலில் 5 பேர் கொலை என்கிறார்.. பின்னர் கொல்லப்பட்ட அறுவருமே.. என்கிறார்.. அது கிடக்க.. இவரின் கருத்துப்படி.. நீண்ட குடும்பப் பகை என்கிறார்... சொறீலங்கா பொலிஸ் ஜேர்மனிக்குப் போக பணத்துக்கு கொலை என்கிறது.. பணத்தை கொள்ளையிட்டால்.. பொலிஸ் பிடிக்கும் என்று பயந்தாராம்.. ஆனால் கொலை செய்தால் பிடிக்காது.. என்று நம்பினாராம்... அதுபோக கொலை செய்தவர்.. எப்படி சொறீலங்கா கடற்படைக் கண்காணிப்பை தாண்டி படகில் புங்குடுதீவுக்கு போனார்.. அதுவும் அந்த அதிகாலை வேளை..????! ஆக.. இந்த நபர் சொறீலங்கா கடற்படைக்கு பரீட்சயமான ஆளாக இருக்க வேண்டும் அல்லது கடற்படையின் தேவைக்காக..இந்தக் கொலையில் இவர் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்..??! இன்றேல்.. கடற்படை எப்படி ஒத்துழைப்பு வழங்கும்...??! ஒருவேளை கடற்படைக்கு இந்த முதியவர்களின் வீடு பிரதேசம்.. முகாம் விரிவாக்கத்திற்கு அவசியமோ.. அல்லது கடற்படை.. ஈபிடிபி கூட்டிணைந்து இந்தப் பகுதியை கைப்பற்றி தாம்.. ஆதாயம் தேட விளைச்சவையோ..??! ஏனெனில்.. பணத்துக்காக கொலை செய்தேன் அதுவும் பொலிஸ் பிடிக்காது என்று நம்பினேன் என்பது ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமே அல்ல. கொள்ளையை விட கொலை பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஜேர்மனியில் இருந்து வந்தவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் நம்பத்தகுந்ததாக இல்லையே. ஆக.. இந்தக் கொலைக்கான பின்னணி வேறு. ஒருவேளை இந்த நபர் 3ம் நபர்களுக்காக.. அதில் சொறீலங்கா கடற்படை முதன்மையாகிறது.. அவர்களுக்காக அவர்களின் ஒத்துழைப்போடு.. இந்தக் கொலையை அவர்களிடம் இருந்தான உத்தரவாதங்களின் பெயரில் செய்திருக்க வேண்டும். அதில் இவரின் பணத்தேவையும் அவர்களின் தேவையும் சமப்பட்டிருக்க வேண்டும். சொறீலங்கா பொலிஸாரின் கதை திரைக்கதை வசனம்.. தமிழக சீரியல் மாதிரி நம்பத்தகுந்ததா இல்லையே...??!
-
இப்ப எல்லாம் வடக்கில் என்ன கொலை நடந்தாலும்.. புலம்பெயந்தவர்களை கோர்த்து விடுவது பாசனாகி விட்டது. ஏனெனில் சிங்களப் பொலிஸாரின் பொதுவான மனநிலை என்பது வெளிநாட்டுக் காசு தான் குற்றங்களுக்கு காரணம் என்பது. மேலும் இந்தச் சம்பவத்தில் கைதானவர் சந்தேக நபர் தான். அவர் ஜேர்மனியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தால்.. அதற்குப் பின்னால் அவர் முன்னர் எந்தக் கூலிப்படையில் இருந்தவர்.. இப்போ அவருக்குள்ள தொடர்புகள்.. அதில் சிங்களப் படைகளுடனான தொடர்புகள்..குறிப்பாக கடற்படையுடனான தொடர்புகள்.. (குற்றத்தை செய்துவிட்டு.. ஒருவர் படகில் நெடுந்தீவில் இருந்து புங்குடுதீவு போகும் வரை சொறீலங்கா கடற்படை என்ன நித்திரையா செய்தது.. நம்ப முடியவில்லையே...) அவர் மீதான குற்றங்கள் என்ன.. அவர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பப்படக் காரணம் என்ன உள்ளிட்ட பல கேள்விகள் தொக்கு நிற்க.. சிங்களப் பொலிஸ் சொல்வதெல்லாம்.. சோடிப்பதெல்லாம்.. உண்மை என்று சொல்ல முடியாது. எனவே சாத்தியமான அளவுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். குற்றங்கள் நடக்க முதல் இயன்ற அளவு தடுக்கப்பட வேண்டும். ஏனெனில்.. ஒருவர் உயிரிழந்தால்.. அவரை உயிர் மீட்டு.. நீதி வழங்க முடியாது. எனவே குற்றவாளிகள் இனங்காணப்பட்டால்.. அவர்கள் தொடர்ந்து குற்றம் செய்யா வண்ணம் தொடர் கண்காணிக்கப்படனும் இல்லை என்றால்.. குற்றத்துக்கு தண்டனையாக சிறையில்.. நன்நடத்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும்.. பகை என்று பார்த்தாலும்.. 5 பேர் மேல் ஒரு பகை.. நாய் மீது பகை என்றெல்லாம் அமைய முடியாது. முன்னர் தனிப்பட்ட பகை என்ற கோணத்தில் வந்த செய்தி.. இப்போ.. கொள்ளைக்கான கொலை என்ற கோணத்தில் போகுது. இப்படித்தான்.. புங்குடுதீவு மாணவியையும் கொலை செய்தவர்கள் இருக்க.. கொலை செய்ய தூண்டியவர்களை சிங்களப் பொலிஸும்.. அரசியல்வாதிகளும் காப்பாற்றியமை அறிந்ததே. இதில் டக்ளஸ் மக்கள் அக்கறையில் கருத்துச் சொன்னாரா.. இல்லை உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றக் கருத்துச் சொன்னாரா என்பதுதான் முக்கிய விடயம். ஏனெனில்.. இவர் மீதே பகிரங்க கொலை குற்றச்சாட்டு உள்ளது. அதன் வழக்கில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.
-
நெடுந்தீவுப் குமுதினிப் படுகொலை முதல் இன்று வரை.. தமிழர் படுகொலைகள்.. பல்வேறு வடிவங்களில்.. குமுதினிப் படகேறி உறவுகள் சென்றனர் கரைதனை எட்டாமல் கறைதனில் வீழ்ந்தனர் அலைகடல் நடுவினில் அராஜகம் நடந்தது புத்தன் புதல்வர்கள் கொலைவெறியாட்டம் போட்டனர் அகிம்சை என்பது அகத்தினில் அழிந்தது ஆயுதம் என்பது ஆர்ப்பரித்து எழுந்தது திசைகள் எங்கினும் முடிவுகள் கோரம்…! புலிதனின் வீரத்தில் கிளர்ந்தனர் வேங்கைகள் அப்பாவிகள் அழித்தவன் கலம்தனைத் தகர்த்தனர் ஆதிக்கம் என்பது அடங்கியே போக…! வேங்கையின் வீரத்தில் விடுதலைக்காய் ஏங்கினர் வேள்விகள் தனில் ஆயிரம் ஆயிரமாய் உயிர்கள் உறங்கின…! விடியல் என்பது விலை கொடுத்த பொருளாய் வாங்க மடியேந்தும் நிலை இன்னும் தொடர்கதையாய்..! முடிவுகள் என்பது முடிவிலியாய்….. தமிழன் குருதியென்பது பெருகும் ஆறாய் தீர்வுகள் மட்டும் கேள்விக் குறியாய்…???! காலம் என்பது மக்களுக்காய் கனிய தலைவன் வழியில் காத்திருப்புத் தொடருது..! சேதி ஒன்று வரும் தேசம் விடிந்ததென்று எதிர்பார்ப்பு விரைவாக ஒற்றுமை என்பது திடமாக கடந்ததுகள் நினைவாக்கி வேற்றுமைகள் கலைத்துக் கலந்திடுவோம் இலட்சியப் பயணத்தில் வேங்கையின் பாதையில்…! https://kuruvikal.wordpress.com/2020/11/02/எழுத்துப்-பொறுக்கி-குரு/
-
தீவகத்திற்குள் எவர் புதிதாக நுழைந்தாலும் சில மணித்துளிகளுக்குள் சொறீலங்கா கடற்படைக்கு விபரமான விடயம் போய்விடும். தீவகம் முழுவதும் ஈபிடிபி ஒட்டுக்குழு ஆதரவோடு சொறீலங்கா கடற்படைக்கு உளவு சொல்ல ஆக்கள் இருக்கினம். மேலும்.. நெடுந்தீவுக்கு போகும் வழி எங்கும் தடை முகாம்கள் உள்ளன. மண்டைதீவில் ஆரம்பித்து கடைசி இறங்கு துறை வரை. இவ்வளவையும் தாண்டி இவ்வளவு ஆயுதங்களோடு போய் 5 பேரை வெட்டிச் சாய்ப்பது என்பது புதிய கள்ளருக்கு அவ்வளவு இலகுவாக நடத்தக் கூடிய விடயமல்ல. இது ஏலவே அறிமுகமான ஆட்களின் வேலை. இதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் இருக்க வாய்ப்புள்ளது. நெடுந்தீவை சீனாவிடம் கையளிக்கும் நோக்கமும் அதில் அடங்கக் கூடும். நெடுந்தீவை விட்டு மக்களை அச்சுறுத்தி வெளியேற்றும் நோக்கமும்.. தீவக அதிகார சபை உருவாக்கமும்.. மகாவலி அபிவிருத்தி சபையை உருவாக்கி அம்பாறை... திருமலையில் இருந்து தமிழர்களை வெட்டி விரட்டி.. இன்று அந்த இரு மாவட்டங்களும் சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களாகும் அளவுக்கு கொண்டு வந்ததில்.. இதே ரணில் இருந்த கட்சியில் ஜே ஆர்.. காமினியின் பங்கோடு ரணிலுக்கும் குறிப்பிடத்தக்க பங்குண்டு. வடக்கில் அதன் ஆரம்பமோ இது என்று அச்சப்படக் கூடிய விடயமே இது. தமிழின அழிப்பில்.. மகிந்தவை விட ரணிலின் பங்களிப்பு நீண்டது நெடியது.. நரித்தனமானது. தீவக மக்கள் ஒருங்கிணைவதும்.. தங்கள் மண்ணை வளத்தை காக்க உறுதி பூணுவதுமே.. இந்த நேரத்தில் செய்யக் கூடிய விடயமாக இருக்க வேண்டும். ஏனெனில்.. தீவகம் என்பது மிகவும் வளம் பொருந்திய பூமி. அது கடல் சார்ந்து மட்டுமல்ல.. விவசாயம்.. கால்நடை வளர்ப்பு.. உட்பட ஏனைய தொழில்துறைகளிலும் அது வடக்கின் அபிவிருத்தியில் முக்கிய பங்களிக்கக் கூடிய பூமி.
-
காலங்காலமாக எதிரியோடு கூட்டு நின்று சொந்த இனத்தை கொன்றொழித்தவர்கள் எவருமே சொறீலங்கா சட்டத்தால் தண்டிக்கப்படாத நிலையில்.. குறிப்பாக ஒரு தாடியர் அமைச்சர் பதவிக்கு வரும் காலங்களில் எல்லாம் தீவகத்தில் இப்படி படுகொலைகள் நிகழ்வது சாதாரணமாகி விட்டது. நெடுந்தீவில் நடப்பது இது முதற்தடவையும் அல்ல. இத்தனைக்கும் இது ஈபிடிபி ஒட்டுக்குழுக் கும்பலின் வாக்கு வேட்டை கோட்டையாகவும்.. சொறீலங்கா கடற்படையின் முழு கண்காணிப்பு ஆளுகையின் கீழும் இருக்கிற தீவுகளில் ஒன்று.