கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு - தமிழ்விக்கிபீடியா
கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம்.
இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் [1]. கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.[2]
மே 09, 2008 அன்று கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு ஏ-520 துருப்புக்காவி-விநியோகக்கப்பலை மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தாக்குதல்கலில் ஒன்று [3]
சிறீலங்கா ஆழ ஊடுருவும் பிரிவால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேர்ணல் கங்கை அமரனின் வீரவணக்க நாள் இன்று ஆகும்.
======================
29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
. கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன் அவர்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர்.
. மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவியிருந்த சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
. இத்தாக்குதலின்போது மேஜர் தசரதன் (தசா) (சந்திரன் சுபாகரன் - கீரிமலை, யாழ்ப்பாணம்) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.
ஈழநாதம்.
வீரச்சாவடைந்த தளபதிக்கும் போராளிக்கும் ஏனைய போராளிகளுக்கும் வீரவணக்கம்.