மேலை படத்தில் காட்டியவாறு ஒரு போட்டிக்கு A,B,C,D என்ற 4 நபர்கள் கறுப்பு, வெள்ளை என்று நான்கு வடிவமைப்பில் ஒத்த தொப்பிகளை ஆளுக்கு ஒன்றென்ற முறையில் 5ம் நபரால் அணிவித்துக் கொள்ளப்படுகின்றனர். தொப்பிகள் அணிவிக்கப்படும் போது அவர்கள் அவற்றைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால்.. ஆரம்பத்தில் இரண்டு கறுப்பும் இரண்டு வெள்ளைத் தொப்பிகளும் அவர்கள் நால்வரிடமும் அணிவிக்கப்படப் போன்றன என்பது மட்டும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
போட்டியின் விதிமுறைக்கமைய... D மறுபுறம் உள்ளவர்களை பார்க்க முடியாத சுவரை அடுத்தும்.. மற்றைய மூவரும் சுவருக்கு மறுபுறமும்.. படத்தில் காட்டியவாறு உள்ளனர்.
இதில்.. C மட்டும் தன் முன்னுள்ள இருவரையும் பார்க்க முடியும். B தன் முன்னுள்ள.. A ஐ மட்டுமே பார்க்க முடியும் C ஐ பார்க்க முடியாது. A சுவரை மட்டுமே பார்க்க முடியும். எவரும் மறுபுறம் திரும்பிப் பார்க்க முடியாது. சுவரை நோக்கிய திசையில் மட்டுமே பார்க்க முடியும். தமக்குள் பேசிக்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதியில்லை.
இந்த நிலையில்.. தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறம் அறிந்தவர்.. போட்டியின் பரிசை வெல்லத்தக்க வகையில் தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை உரத்துச் சொல்லக் கேட்கப்பட்டார். சரியான விடை தெரிந்தால் மட்டுமே விடை சொல்ல வேண்டும். தவறான விடை சொல்வோர்.. சும்மா கத்துவோர்.. தூக்குத் தண்டனைக்கு இலக்காக நேரிடும்..!
இந்தப் போட்டியில் ஒருவர்.. தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை கண்டறிந்து கத்தினார். இந்த நால்வரில் அவர் எவர்..???! எப்படி அவர் அதனைக் கண்டறிந்தார்..??!
இதுதான் உங்கள் முன்னுள்ள கேள்விகள்..??!
விடையோட வாங்க நான் இப்ப போயிட்டு அப்புறம் வாறன்..!