-
Posts
32991 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் புள்ள சிநேகிதி. புள்ள வெண்ணிலாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்த்தப் பிந்திட்ட.. உறவுகளுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
அனிதா பாட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்த்தத் தவறிய உறவுகளுக்கும்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
-
பேரப்பிள்ளையள (கிராண்ட் சன்..கிராண்ட் டோட்டரையில்ல ) பேராண்டி என்று சொல்லுறது ஊர் வழமை. பிறகு பேரப்பிள்ளை என்றால் என்னென்று கேட்காதீர்கள்..! ரெம்ப ஓவராகிடும்..!
-
இன்னிசை பாட்டிக்கும் கிசான் பேராண்டிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். முன்னர் வாழ்த்த தவறியவங்களுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
(4-9/2)^2 =(5-9/2)^2 4-9/2 = -1/2 5-9/2= 1/2 -1/2 =/= 1/2 அடிகள் (Bases) சமனில்லாததால் அடுக்குகளை (powers) சமன் செய்ய முடியாது. ஆகவே நீங்கள் (4-9/2) = (5-9/2) என்று எழுத முடியாது. இந்த இடத்தில் உங்கள் சமன்பாடு தவறி இருக்கிறது.
-
இணையவனுக்கு உண்மையாவே இன்று பிறந்த நாளா...?! உண்மை என்றால் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
எனக்கு என்ர பேராண்டி போல. 96 வயசு எனக்கு.. அவர் பேராண்டி தானே..! அந்த உறவுதாங்க..!
-
யாழ் கள உறவு ஈழத்திருமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
என்ன கேள்வி இது. கேக் எப்படி முட்டை போடும்.. கோழி போன்ற பறவைகள் தானே அதிகம் முட்டை போடும்..??! நான் சைவம். ஆனா கோழி பொரிச்சிருந்தா சாப்பிடுவன். பூச்சி அல்ல.. லேடி பேட் என்று அழைக்கிற வண்டு அது. அது என்னை பிறந்த நாளுக்கு வாழ்த்த வந்திச்சு. பிடிச்சு கேக்கு மேல விட்டிருக்கேன்..! என்னை மலர்களும் வாழ்த்த வந்திச்சுதுகள். அதுகளையும் கேக்கு மேல பிடிச்சு விட்டிருக்கேன். மனிசரை விட இவற்றின் வாழ்த்துக்கள் இதய சுத்தியானவை.. அதுதான் இத்தனை மதிப்பளிப்பு..! மனிசர் ஒருக்கா வாழ்த்துவாங்க அடுத்த தடவை மனமாறி திட்டுவாங்க.. இல்ல திட்டிக்கொண்டே ஓடி ஒளிச்சிடுவாங்க..!
-
வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் பிறந்த நாள் பரிசு...! சண்டை பிடிக்காம பங்கிட்டு சாப்பிடுங்க..! அடுத்தவன் பங்கை பறிக்க நினைக்காம அடுத்தவனுக்கும் கொடுத்து நீங்கள் உங்கட பங்கைச் சாப்பிடுங்க.
-
எப்படியோ இறக்கப் போற நாள் வரத்தானே போகுது. அதைத்தான் எதிர்பார்த்திட்டு இருக்கிறன். எண்டன். 40க்குள்ள என்றா என்ன எனக்கு 2 வயசு என்றீங்களா..??! ஐயோ ஐயோ எனக்கு 96 வயசுதாங்க..! வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.
-
என்ன நக்கலா.. பிள்ளை குட்டி வைச்சிருக்கிற எவன் சந்தோசமா இருக்கிறான்..??! நாளைக்கு எல்லோ என்ர பிறந்த நாள். ஒரு நாள் முந்தி பிறக்க வைச்சிட்டீங்களே பேராண்டி. நான் பிறந்த நாள் எல்லாம் கொண்டாடிறதில்ல. இறந்த நாளை எதிர்பார்த்திட்டு இருக்கிறன்..!
-
கலைஞனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வாழ்த்துகின்றோம். அப்பு ராசா நான் 95 வயசு வந்தும் இன்னும் இளந்தாரி போல இருக்கிறன். வயசில எதுவும் இல்ல எல்லாம் மனசில இருக்குது. 15 வயசில இருக்கிறதுதான் 95 வயசிலும் இருக்கு..! நீங்கள் இளந்தாரிகளே இப்படி வயசுக்கு.. கணக்குப் போட்டா.. என் பாடு..! மனசு இளமையா இருந்தா.. எல்லாம் இளமையாவே இருக்கும்..!
-
சப்போஸ் இதை இங்கால திரியுற பூனைக்குட்டி கேட்டுபுட்டா என்னாகிறது..!
-
ஏன் இல்லை ரெஸ்கோ.. சேன்ஸ்புரி.. சமர்பீல்ட்.. அஸ்டா.. மொரிசன்.. மார்க்.. இப்படி எல்லா இடமும் இருக்கே.. அப்புறம் என்ன...! உங்களுக்கு ஒன்று தெரியுமா வெள்ளையர்கள் வேண்டிக் கொடுத்து பாட்டி வைக்கிறதில்ல...! பாட்டிக்கு அழைச்சிட்டு.. வேண்டச் செய்யுறதுதான்.. பாட்டி..! நம்மவர்கள் அதற்கு நேர் எதிர். ஓசின்னா... ஓசிதான்..! ஆனா இப்ப எல்லாம் பேர்தே பாட்டிக்கும் நம்மாக்கள் மொய் எழுதிறதாக் கேள்வி..!
-
வி.கவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். முன்னம் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். எனிக் கொண்டாடப் போறவங்களுக்கும் வாழ்த்துக்கள். வருசா வருசம் கொண்டாடேக்க சொல்ல வேண்டிய வாழ்த்துக்கள் அனைத்தையும் இப்பவே சொல்லிவிட்டோம்..!
-
பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று தனது 99வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரியசகி பாட்டிக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். என்னை விட மூத்தவங்க கூட இங்க இருக்கிறாங்கப்பா.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
2001 கட்டுநாயகா தாக்குதலில் அழிந்த விமானப்படை விமானங்களின் விபரங்கள்..! பலரும் அறியாத சங்கதிகள்... - 24 July 2001: Kfir C.2 CF-722, destroyed at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: Kfir C.2 CF-723, destroyed at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: Kfir C.2 (reported) destroyed at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: K-8 CF-741, destroyed at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: K-8 CF-743, destroyed at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: K-8 CF-745, destroyed at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: MiG-27M CF-732, destroyed at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: MiG-27M badly damaged at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: Mi-24 destroyed at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: Mi-17 CH-590, destroyed at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: Mi-17 CH-597, destroyed at Katunayake AB by LTTE sappers. - 24 July 2001: Bell 412 destroyed at Katunayake AB by LTTE sappers. இதில் பொதுவாக அறியப்படாத K-8 (பாகிஸ்தானிடம் உள்ள பயிற்சிச் சண்டை விமானம்) சிறீலங்கா வான்படை தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிய முதல் தாக்குதல் விமானம் இத்தாலிய தயாரிப்பு சியாமாசெட்டி (SF.260) படத்தில் கீழ் பகுதியில் உள்ள விமானம். (யாழ் கோட்டைச் சண்டையில் பண்ணைக் கடலுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. முதலாம் ஈழப்போர் ஆரம்ப காலங்களில் யாழ் நகரையும் அண்டிய பிரதேசங்களின் மக்களின் அழிவுக்கு காரணமான விமானம்..) இதே படத்தில் சற்றுமேலே உள்ள விமானம் ஆஜென்ரீனா தயாரிப்பான புக்காரா விமானம். ஆஜென்ரீனா -பிரிட்டன் auckland - war இல் ஆஜென்ரீனாவின் பிரதான சண்டை விமானமாக செயற்பட்ட விமானம் இறுதியில் உற்பத்தி நிறுத்தப்பட தேங்கிக் கிடந்ததால் சிறீலங்காவின் தலையில் தமிழர்களை தாக்க கட்டப்பட்டது..! (புலிப்பாய்ச்சலின் போது சண்டிலிப்பாயில் சுட்டு வீழ்த்தப்பட்டது - நவாலி தேவாலயப் படுகொலையின் சூத்திரதாரி, இந்தத் தாக்குதலில் 150 வரையான பொதுமக்கள் உயிரிழக்க பலர் படுகாயமடைந்தனர்.) http://www.acig.org/artman/publish/article_336.shtml -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
அரசின் தெளிவின்மை தான் அதற்குக் காரணமே அன்றி புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட சந்தர்ப்பம் இல்லை என்று அரசு நம்பி இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம்.. ஆகாய கடல் வெளி சமரில் தாம் பாவித்த விமான எதிர்ப்பு பீரங்கியின் மாதிரியை புலிகள் நாவற்குழி வெளியில் ஆனையிறவு சமர் தொடர்பான நினைவு கூறல் நிகழ்வில் வைத்திருந்தனர். அது குறித்த உளவுத் தகவல் கிடைக்காமல் அரசு இருந்திருக்கும் என்றில்லை..! அரசுக்கு நடந்த சம்பவம் தொடர்பில் இருந்த தெளிவின்மையே இரண்டாவது விமானமும் ஏவுகணைக்கு இரையாக வாய்ப்பானது புலிகளைப் பொறுத்தவரை. அதை அப்பவே புலிகளின் குரல் சொன்னது..! -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
முதலாவது விமானம் பலாலியில் இருந்து புறப்பட்டு தென்மராட்சி வான் பரப்பில் பறந்து கொண்டிருக்கும் போது சுடப்பட்டது. அது இயந்திரம் ஒன்று தாக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் அவசர தரையிறக்கம் கருதி பலாலிக்கு மீளத் திரும்புகையில் விழுந்து நொருங்கியது. சிறீலங்கா அரசுக்கு அது சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறா என்ற தெளிவின்மை இருந்ததே தவிர சுட்டு வீழ்த்த சந்தர்ப்பம் இல்லை என்று அவர்கள் கருதி இருக்க முடியாது. காரணம் ஆகாய கடல் வெளிச்சமரில் சீனத் தயாரிப்பு Y - 8 சுட்டு வீழ்த்துப்பட்டதை அரசு நன்கு அறியும்..! அதற்கு முன்னர் யாழ் கோட்டைச் சண்டையில் சியாமாசெட்டி போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அரசு மேற்கூறிய இரண்டையும் இயந்திரக் கோளாறு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தது. அதேபாணியைத்தான் அவ்ரோ விசயத்திலும் செய்யப் போயினர். அரசுக்கு விமானம் ஏவுகணையால் தாக்கப்பட சந்தர்ப்பம் இல்லை என்று தெரியவே தெரியாது அல்லது புலிகளால் சுட்டு விழுந்த முடியும் என்பது தெரியாது என்பதை இலகுவாக ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. காரணம் ஏவுகணை வெடிப்புச் சத்ததை ஊர் மக்கள் கேட்கக் கூடியதாகவே இருந்தது. அப்படி இருக்க அந்தத் தகவல் அரசை சரியாக அடையாததால் தான் அடுத்த தினம் அடுத்த விமானம் இரையாக வாய்ப்பிருந்திருக்குமே தவிர அரசுக்கு புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த சந்தர்ப்பம் உள்ளது என்பது தெரியாது என்பதை ஏற்றுக் கொள்வது கடினமானதாகவே உள்ளது..! 5 July 1992: Y-8 "CR-872" shot down by LTTE SA-7 near Iyakatchitchy, during landing in Palay, killing all 20 on board. இப்படித்தான் இருக்கிறது செய்தி. இந்த இணையத்தளத்தில் சிறீலங்கா விமானப்படை தொடர்பான நாமறியாத பல விபரங்கள் உள்ளன. விமானப்படையின் இழப்புகளும் ( 1971 - 2004) வரை இடப்பட்டுள்ளது. http://www.acig.org/artman/publish/article_336.shtml -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
ஒலியை விட வேகமாகப் பறக்கும் விமானங்கள் அனைத்துமே சுப்பர் சொனிக் தான். ஈழப்போர் வரலாற்றில் சிறீலங்காவுக்கு சுப்பர் சொனிக் அல்லது மிகையொலி விமானங்களை வழங்கிய முதல் நாடு சீனா. அது அப்போது தனது F-7 ரக மிகையொலி தாக்குதல் விமானங்களை வழங்கியது. அப்புறம் பிரேமதாச கொல்லப்பட்டதன் பின்னர்.. இஸ்ரேலுடன் இராணுவ நெருக்கம் மீளவும் ஏற்பட்டு கிபீர் போன்றவை கிடைக்க அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வகை செய்யப்பட்டன. http://www.cdi.org/terrorism/iraqifighters-pr.cfm ஈழப்போட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படையா எதிர்க்கும் நாடு அமெரிக்கா. :P -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
எட்டாக்கனி புளிக்கத்தான் செய்யும்...! :P உங்கட எயார் டிபென்ஸ் சிஸ்டம் என்னாச்சு..! பதிலே சொல்லாம ஓடிட்டிங்க. தவறைத் திருத்திக்கோங்க..! :P -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
கள விதி... கள விதியே தெரியாமல் தான் எழுதுறீங்களா.. புதிய கள விதி 13-04-2007 இல் இருந்து அமுலில் உள்ளது..! 4. உரையாடல் "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது. "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது. புலிப்பாய்ச்சல் நடவடிக்கை பின்னிரவு தொடங்கி காலை வர நடந்த ஒரு தாக்குதல். முறியடிப்புச் சமரைத் தொடர்ந்து இப்பாய்ச்சல் நிகழ்ந்தது. புக்காரா விமானம் நண்பகல் போல் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் விமானத்தாக்குதல்கள் சில தினங்கள் கழித்தே நிகழ்ந்தன. பலாலி தளத்தில் இருந்து ஆட்லறித்தாக்குதல்களே அதிகம் நிகழ்த்தப்பட்டன..! இது நமக்கு கிடைச்ச தகவல்..! இதைவிட நீங்கள் சொல்லுறது..??! :P இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க..! நாம சொல்லுறம் விமானத்தாக்குதலை நிறுத்தும் படியா மிக் விழுந்தது என்ற செய்தி சரியா இல்லை...என்பதைத்தான்..! அரசுக்கு கணிக்க கூட்டத் தெரியா என்று சொன்னமா சார்..??! -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
நீங்கள் சொல்லுறாப் போல கற்பனை செய்ய சிறீலங்கா விமானப்படை ஒன்றும் கேணத்தனமா இல்ல. இந்திய மற்றும் ரஷ்சிய விமான ஓட்டிக்களின் உதவியைக் கொண்டுள்ள அது வெறும் அணுமானிப்புக்கள் மூலம் முடிவெடுக்கும் என்று கருத முடியாது. காரணம் 1995 இல் புலிகள் முதல் அவ்ரோவை சுட்டதும்.. அதை இயந்திரக் கோளாறு என்று அரசு மூடி மறைக்கப் போய் இரண்டாவது அடுத்த நாள் விழுந்ததும்.. சந்திரிக்கா அம்மையார் கூட இருந்த தற்போதைய அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..! அப்படி இருந்தும்..???! :P -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
கள விதியைக் கருத்தில் கொண்டு கருத்துப்பகர முற்படுங்கள். இராணுவம் கல்லுண்டாய் வர வந்து பின் வாங்கி.. பிறகு புலிகள் புலிப்பாய்ச்சல் மூலம் அடிச்சு.. அன்று பகல் புக்காரா சுட்டு வீழ்த்தப்பட்டு.. மக்கள் விமானத்தாக்குதல் அச்சம் குறைந்து...இருந்த சில தினங்களை குறிப்பிட முடியும்..! அப்போ சீனத் தயாரிப்பு எப் 7 ரக சுப்ப சொனிக் விமானங்கள் மட்டுமே விமானம் சுடப்பட்டு சில தினங்கள் கழித்து தாக்குதல் சிலவற்றில் ஈடுபட்டன..! இங்கு சிலர் சொன்னது போல கிபீர் 1993 இல் தாக்குதல் பாவனையில் இருக்கவில்லை சிறீலங்கா விமானப்படையில்..! :P