Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உன்னை ஒன்று நான் கேட்கவா படம்:18 வயது பாடியவர்கள்: சுதா ரகுநாதன், சிறிராம் பார்த்தசாரதி இசை:டினேஸ், சாள்ஸ் பொஸ்கோ வரிகள்:நா. முத்துகுமார்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:விர்ரு விர்ரு படம்:றெக்க பாடியவர்கள்:ரித்தின் ராஜ் இசை:டி.இமான் வரிகள்:யுகபாரதி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:வீர துறந்தரா படம்:கபாலி பாடியவர்கள்:கானா பாலா,லோரன்ஸ் ராமு,பிரதீப் குமார் இசை:சந்தோஸ் நாரயணன் வரிகள்:உமா தேவி
-
சிந்தனைக்கு சில படங்கள்...
பளை மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இல்லம் ஒன்றின் முகப்பு. அழிக்க முடியாத கனவு.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நான் கொஞ்சம் கறுப்பு தான் படம்:கத்தி சண்டை பாடியவர்:ஹிப் ஹொப் தமிழா இசை: ஹிப் ஹொப் தமிழா வரிகள்:ஹிப் ஹொப் தமிழா- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:வினா வினா படம்:பாபநாசம் பாடியவர்: கரிகரன் இசை: ஜிப்ரான்- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- சிந்தனைக்கு சில படங்கள்...
s- உங்களுக்கு தெரியுமா?
Caught in the NET: A Wolf pack on the move : Fascinating. The first 3 are the old or sick, they give the direction and pace to the entire pack. If it was the other way round, they would be left behind, losing contact with the pack. In case of an ambush they would die Then comes 5 strong ones, the front line ; In the center are the rest of the pack members; Then the 5 strongest following. Last and alone, the Alpha Male (the dominant male and leader of the pack). He controls everything from the rear. In that position he can see everything, decide the direction. He sees all of the pack. The pack moves according to the elders' pace and help each other, watch each other. I am left speechless by nature ... I knew that wolves are different, but didn't realize how much we could learn from them...I didn't know wolves put the elders of the pack FIRST .... A lot of people on this planet should take note... they are to be seen up front, setting the pace and direction while enjoying the protection of the rest... and not invisible at the back of the line. "- அதிசயக்குதிரை
வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு! குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்? குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-non வயலினிஸ்ட்!! தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையேதிரவப்பொருள்!' அதெப்படி? கொட்டுமே! மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமிழ் தெரியாதே! கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...! என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..! என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு! எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு...எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு. உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? அது 'ஈஸி' சேராச்சே! உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? படுத்த படுக்கையாக... தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது?தலையிலே முடி இருக்கிறது தான்...! இந்த ரோடு எங்கே போகிறது? எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது. எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே? எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.... என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- உங்களுக்கு தெரியுமா?
அறிவியல் துறையில் தமிழர்கள் என்பது உலகெங்கும் பரவியுள்ள அறிவியல் துறையைச் சார்ந்த, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அறிவியலாளர்கள், ஆய்வு மாணவர்கள், மற்றும் அவர்களது ஆய்வுகள் குறித்த பட்டியலாகும். இந்தியா[தொகு] ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் - இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் பங்களிப்பு ஐராவதம் மகாதேவன் இரா. மதிவாணன் க. சீ. கிருட்டிணன் கோ. நம்மாழ்வார் கோபால்சாமி துரைசாமி நாயுடு ச. வெ. இராமன் சுப்பிரமணியன் சந்திரசேகர் பத்மநாபன் பலராம் மயில்சாமி அண்ணாதுரை மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் ய. சு. ராஜன் வெங்கட்ரமணன் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ரவி கண்ணன் இராசகோபாலன் சிதம்பரம் சிவதாணு பிள்ளை இராமானுசன் வே. தில்லைநாயகம் சுப்பையா அருணன் இலங்கை[தொகு] ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா எஸ். கே. மகேஸ்வரன் சி. ஜே. எலியேசர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் வீரசிங்கம் துருவசங்கரி https://ta.wikipedia.org/wiki/அறிவியல்_துறையில்_தமிழர்கள் நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் வருடம் பரிசு பெற்றவர் துறை 1930 சர்.சி.வி.ராமன் இயற்பியல் 1983 எஸ்.சந்திரசேகர் இயற்பியல் 2009 வெங்கட் ராமன்,ராமகிருஷ்ணன் வேதியியல்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஓயா ஓயா படம்: காஸ்மோரா இசை: சந்தோஸ் நாராயணன் வரிகள்: லலிதானந்த் குரல்: கல்பனா ராகவேந்தர் ஓயா ஓயா ஓயா தீயா மேய மேய அழகினை மேயும் மாயா மன்னா நீ மதி காண வாராயோ என் மறுபக்கம் பார்த் தென்ன ஆவாயோ பார்க்காத கோணங்கள் பாராயோ பெண் பாவைக்குள் பேராசையோ ஓயா ஓயா ஓயா தீயா மேய மேய அழகினை மேயும் மாயா அழகினை மேயும் மாயா நீங்காத மேலாடை நீங்க என் நிழல் கூட நீ தீண்ட ஏங்க நீள் கூந்தல் பூவின்றி வாட அதில் நீ வந்து உன் மூச்சை சூட அணைக்காத பாகங்கள் நோக ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக கையை கையால் நீ கிள்ள மெய்யையாய் மெய்யால் நான் அள்ள ஆஹா ஆசை நீள அய்யய்யோ அச்சம் நாணம் நான் கொள்ள உச்சம் என்று நீ துள்ள தீர ஏக்கம் தீர ஓயா ஓயா ஓயா தீயா மேய மேய அழகினை மேயும் மாயா அழகினை மேயும் மாயா கால் வெட்டு போல் எந்தன் கன்னம் உன் பால் பத்து வரலாற்று சின்னம் முறசுள்ள மஞ்சள் என் நெஞ்சம் அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம் விடியாதே இரவென்று கெஞ்சும் வரும் விடி காலை பொழுதே என் வஞ்சம் கொத்திக் கொல்லும் என் பார்வை குத்தி தள்ளும் உன் பார்வை யாரோ யார் வெல்வாரோ ஓ எம்மை கொஞ்சும் உன் காமம் உம்மை விஞ்சும் என் யாமம் யாரோ யார் மிஞ்சுவாரோ ஓயா ஓயா ஓயா தீயா மேய மேய அழகினால் மேயும் மாயா- சிந்தனைக்கு சில படங்கள்...
பல கோடிக்கு அதிபதியான 92 வயதானவர். யார் சொல்லுங்கள் பார்போம்?- உங்களுக்கு தெரியுமா?
பாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் பாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் உயர்ந்த இரண்டு விருதுகளான பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு போன்றவற்றைப் பெற்ற தமிழர்களைக் காண்போம். பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள் வருடம் விருது பெற்றவர்கள் 1954 சி.இராசகோபாலாச்சாரி 1954 எஸ்.இராதாகிருஷ்ணன் 1954 சர்.சி.வி.இராமன் 1976 கே.காமராஜ் 1988 எம்.ஜி.ஆர் 1998 அப்துல் கலாம் 1998 எம்.எஸ்.சுப்புலட்சுமி 1998 சி.சுப்பிரமணியம் கே.காமராஜ் அவர்களுக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மறைந்த பிறகே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சர்.சி.வி.இராமன் நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் வருடம் பரிசு பெற்றவர் துறை 1930 சர்.சி.வி.ராமன் இயற்பியல் 1983 எஸ்.சந்திரசேகர் இயற்பியல் 2009 வெங்கட் ராமன்,ராமகிருஷ்ணன் வேதியியல் சர்.சி.வி இராமன் அவர்கள் விருது பெற்ற ஆராய்ச்சி இராமன் விளைவு(1888-1975) எஸ்.சந்திரசேகர் அவர்கள் விருது பெற்ற ஆராய்ச்சிசந்திரசேகர் எல்லை(1910-1995) https://mayadigimedia.blogspot.ca/2015/02/blog-post_811.html- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- அதிசயக்குதிரை
வாரத்தில் மூன்று முறை உடலுறவு ! ஒரு கணவனும் மனைவியும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றனர் . அவரது மனைவியின் இதயத்தை பரிசோதித்த மருத்துவர் “உங்களுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது ,அதனால் வாரத்தில் முன்று நாட்களேனும் தாங்கள் உடலுறவில் ஈடுபடுவது தங்களுக்கு நல்லது “என்றார் அந்தப் பெண் மிகவும் வெட்க்கப்பட்டு பின் “இதை நீங்களே எனது கணவரிடம் சொல்லிவிடமுடியுமா ? “ எனக் கேட்டார் உடனே மருத்துவர் வெளியில் வந்து அவளது கணவனை அழைத்து “உங்களுடைய மனைவிக்கு வாரத்தில் மூன்று நாட்களேனும் உடலுறவு அவசியம் “என்றார். அந்த கணவர் “ எந்தெந்த நாட்களில் டாக்டர் ? “ என்றார் அதற்க்கு மருத்துவர் “ திங்கள் , புதன் மற்றும் வெள்ளி சரியாக இருக்கக்கூடும் “ எனச் சொன்னார் அந்த அப்பாவி கணவரோ “ திங்கள் மற்றும் புதன் அவளை நான் இங்கு அழைத்து வரமுடியும் , ஆனால் வெள்ளிக்கிழமை அவள் தான் பேருந்தில் வந்துகொள்ள வேண்டும் “என்றார்- உங்களுக்கு தெரியுமா?
பொதுப்பணித்துறை அமைச்சர் கறை படியாத தலைவர் "கக்கன்" ! தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார். உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார். கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன். எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்தவர். பிறப்பு என்பது தற்செயலாக நடக்கும் இயற்கை நிகழ்வு. இதில் பெருமை படவோ அல்லது சிறுமை கொள்ளவோ எதுவுமில்லை. சுய (சொந்த) சாதி பெருமை பேசுவதும் சக மனிதனை தன்னை விட தாழ்தவன் என்று கருதுவதும் ஒரு வகையான ?மன நோய்? கக்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர்.ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர். இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது.(நாம் நடிகர் கருணாஸ் போன்ற தியாகிகளை ஜெயிக்க வைப்பவர்கள் ) அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்: எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’ தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன். 1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார். அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு, ‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார். மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்., எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது. கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்? சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார். கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார். அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன். கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை! http://mdusskadl.blogspot.ca/2016/12/blog-post_29.html- சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
- சிரிக்க மட்டும் வாங்க
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
காளைகளை நாங்கள் கவனித்துக் கொள்கின்றோம். நிணம் ஒழுகி வழியும் உன் ஓட்டைகளை நீ கவனி. xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx பொன்னையா விவேகானந்தன்.. மாடும் மானமும் தமிழருக்கொன்றே. நீதான் சட்டமா? கொஞ்சம் நில் நிதானமிருப்பின் கேள். மாட்டுக்கும் மனிதனுக்கும் உண்டான உறவிலிருந்து, தமிழனுக்கும் மாட்டுக்கும் உண்டான உறவை வேறுபடுத்து. ஆண்டின் அத்தனை நாட்களிலும் மாட்டிடம் நாங்கள் காட்டும் பரிவை நீ பார்த்ததுண்டா? ஒரு குடும்பத்தில் மகவு ஐந்தெனில் மாடு ஆறாம் மகவு என்பதை நீ அறிவாயா? மாடுகளை நேசிப்பது எப்படி என்பதை எம்மிடம் கற்றுக் கொள். ஆநிரை கவர்தலும் ஆநிரை மீட்டலும் காலவழி வந்த தமிழர் மரபு. கடவுளர் கண்டறியப்பட முன்பே கதிரவனுக்கு முதல் வணக்கமும் காளைக்கு மறு வணக்கமும் வைத்தோர் வழிவந்தவர் நாம். ‘மாட்டா’ரைக் கணம் பண்ணுவது எப்படி என்பதை ‘கணம் கோட்டா’ரை விட அதிகம் அறிந்தவர் நாங்கள். ஆடு கோழி பலியிட்ட தமிழர் மாட்டைப் பலியிட்டதில்லை. எம் வீட்டுக்கடுத்து நாம் உணவூட்டிப் போற்றிய ஒற்றை உயிர் மாடு மட்டுமே. மாடு எழுப்பிய மணியோசைக்காய் மகனையே பலியிட்டான் மனுநீதி. செல்வத்தைக் கூட மாடென்றே மதித்தவர் நாங்கள் வள்ளுவன் கூட ‘மாடல்ல மற்றுப் பிற’ என்றான். அஞ்சாநெஞ்சொடு நிமிர்ந்து நடை பயிலும் காளைகளை ‘ஏறு’ என்றழைத்தல் எம் வழக்கு. ஆண்டிலே ஒருநாள் ஏறோடு கூடி எம் காளையர் ஆடுவர். ஏறுகளும் வீழ்வதுண்டு காளைகளும் கவிழ்வதுண்டு இது, தோன்றிய காலம் எதுவென்றறியா வீர விளையாட்டு. தழுவப்படுவதற்காக ‘ஏறு’ களும் தழுவி மகிழ்வதற்காகவே காளைகளும் வளர்கின்ற மண் இது. கழனியிலே ஏர் பூட்டவும் களத்திலே மார் தட்டவும் தமிழன் பயில்கின்ற பள்ளி இது. மாடும் மானமும் தமிழருக்கொன்றே. இவை பறிக்கப்படுகின்ற போதெல்லாம் வெறி கொண்டெழுவர். ஒப்புக்கு உலா வரும் சட்டமே! துள்ளியெழும் அலைகளைச் சுட்டு வீழ்த்தலாம் என்று எண்ணாதே. நாளொன்றில் மாடுகளை விடவும் மனிதர்களே அதிகம் வதைக்கப்படுகின்றார்கள். காளைகளை நாங்கள் கவனித்துக் கொள்கின்றோம். நிணம் ஒழுகி வழியும் உன் ஓட்டைகளை நீ கவனி. - தமிழன், பொன்னையா விவேகானந்தன்Important Information
By using this site, you agree to our Terms of Use.
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.