Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், கலைஞன்.
  2. **கலைய மறுக்கும் கனவு !** தரையில் நீ நடந்து வந்தாய் தமிழ்த் திரையுலக கலைமகள் நீ என்றேன்-- மயக்கும் மலர்களைச் -சூடி வந்தாய்- மலைகளை ஆட்சி செய்யும் மலைமகள் நீ என்றேன் !! சிரிப்பொலிகளின் சிதறல்களை அலைஅலையாய் .அழைத்துவந்தாய் அலை மகள் தான் -நீ என்றேன் மழைநீரில் நீ நனைந்து-உன் மலர்க் கூந்தல் அதை விரித்து வளைந்தும் நெளிந்தும் . நீ - ஆடுவது மயிலாட்டம் தான் என்றேன் !! குத்துவிளக்கு நீ ஏற்றி--உன் பத்து விரல்களால் அதைப் பற்றி சுற்றம் சூழ நான் இருக்க-- சுருதி விலகாமல் நீ படிப்பாய் தேவாரம்- அதை குயில் பாட்டுத் தான் என்றேன்-- இன்று அருகிலும் நீ இல்லை அண்மித்த நாட்டிலும் உன் வீடில்லை- கனவில் மட்டும் ஏனோ- கதவுகள் திறந்து வருகின்றாய் காலமெல்லாம் வாழ்கின்றாய் **** நன்றியுடன் வேலணையூர் லிங்கா
  3. கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும் முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்? கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர ்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைபெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..? ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது http://aanmeegaiyarkai.blogspot.ca/2014/12/blog-post_10.html
  4. யாதவி சண்முகலிங்கம்
  5. இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி சில சுவாரசியங்கள் @ இந்திய மக்கள் தொகை 121 கோடியை தாண்டியிருப்பது கணக்கெடுப்பில் மூலம் தெரிய வந்துள்ளது @ கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர். @ இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கபடுகிறது @ 2001 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு எடுக்கப்ட்டுள்ளது @மக்கள் தொகை வளர்ச்சி அரசின் விழிப்புணர்வு மற்றும் மக்களின் விழிப்புணர்வு மூலம் தற்போது 17% குறைந்துள்ளது. @மக்கள் தொகையில் மற்றும் ஒரு சுவாரசியம் இந்திய ஆண்களின் எண்ணிக்கை 62.3 கோடி பெண்களின் எண்ணிக்கை 58.6 கோடியாகவும் உள்ளது @இந்தியாவின் மக்கள் தொகை ஐந்து நாட்டு மக்கள் தொகையுடன் கூட்டினால் கூட அவர்கள் நம்மை நெருங்க முடியாது (என்ன ஒரு சாதனை ) இந்தோனேசியா,அமெரிக்கா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் ‌மக்கள்தொகையை கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. @இரண்டு மாநில மக்கள் தொகையுடன் கூட்டினால் கூட அமெரிக்க மக்கள் தொகை ஈடாகாது அந்த இரண்டு மாநிலங்கள் உத்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா @அதே அளவில் படிப்பதிலும் இந்திய மக்கள் முன்னேற்றம் அடைந்து உள்ளனர் கற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 9.21 உயர்ந்துள்ளது @இந்த விசயத்தில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் படிப்பறிவு பெற்றுள்ளனர் @ இந்திய மக்கள் தொகையில் 74 % விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்கள். 26 % படிப்பறிவு பெறாதவர்கள் ஆவர். @ இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா ? ரூ.2,200 கோடி @ அதிகம் மக்கள் தொகை உள்ள மாநிலம் எது தெரியுமா உத்தரபிரதேசம். அங்கு மக்கள் தொகை 19.9 கோடி. @ குறைவான மக்கள் தொகை உள்ள மாநிலம் சண்டிகர் @உலக அளவிலான மக்கள் தொகைக்கு நம்மால் முடிந்த உதவி எவ்வளவு தெரியுமா ? 17 % http://arumbavur.blogspot.ca/2011/03/121.html
  6. *மாலை கல்லூரி உருவான வரலாறு..* ஒரு முறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து... தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், எனக்கு கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டராம்.... காமராஜர் சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு கேட்க... கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்கு தான் ளப் வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணை சேர்க்க இயலாது என்று சொல்ல.... காமராஜர்... உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு சமைக்கிறீர்கள் ? என்று கேட்டாராம்... அந்த முதல்வர் 4 பேருக்கு என்று சொல்ல, இன்னும் 4 பேர் வந்தால் என்ன செய்வீர்கள்... அதற்கு அந்த முதல்வர் இல்லை ஒரு முறை சாதம் செய்து விட்டு இரண்டாம் முறையும் செய்வேன் என்று சொன்னாராம்.... அதையே ஏன் கல்லூரியிலும் செய்யக்கூடாது. 3.30 க்கு கல்லூரி முடிந்ததும், இன்னும் 12 பேருக்கு கல்லூரி வைத்து, அதே ளப் ஐ பயன்படுத்தலாமே என்று சொல்ல, அப்படி பிறந்தது தான் மாலை கல்லூரி ஏவெனிங் Cஒல்லெகெ. முடியாது என்று சொல்வதை விட தீர்வை நோக்கி பயணிப்பதே மக்கள் பணி என்பதற்கான எடுத்துக்காட்டு தான்... *கர்மவீரர் காமராஜர்.* http://nadarmakkaljothi.blogspot.ca/2016/10/blog-post_79.html
  7. 1. கணவன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“ மனைவி – “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“ 2. கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“ மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“ கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“ 3. மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“ கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“ மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“ 4. கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே....!“ மனைவி – “நீங்க தானே சொன்னீங்க.... பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“ 5. கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“ மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“ 6. மனைவி – “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“ கணவன் – “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“ 7. மனைவி – “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“ கணவன் – “நிஜமாவா சொல்லற?“ மனைவி – “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது.....“ 8. கணவன் – “இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“ மனைவி – “சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“ 9. கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“ மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?“ கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“ மனைவி – கர்ர்ர்ர்ர்ர்..... 10. மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“ கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“ 11. கணவன் – “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“ மனைவி – “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“
  8. சசி, ராஜவன்னியன், அக்கினியஸ்திரா ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.