Everything posted by nunavilan
-
கருத்து படங்கள்
பேரணிக்கு போன மக்கள எள்ளெண்ண எரிக்க சொன்ன நீ ஒரு விளகெண்ண!!!
-
உங்களுக்கு தெரியுமா?
கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC)அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன் வந்து அவரை சந்தித்தான். வெற்றியின் ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி சென்று விட்டான்.அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச் சந்தித்தான் அவன்.தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும் நடந்தான்.மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.அப்போதுதான் அது நடந்தது.சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில் இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை.ஒரு நிமிட மரணப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். முகம் சிவந்துவிட்டது. மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான்.ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.சாக்ரடீசின்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அமைதியாகக் கேட்டான்:“ஐயா, ஏன் இப்படிச் செய்தீர்கள்?”“செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல் முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார் சாக்ரடீஸ்.“காற்று. சுவாசிப்பதற்கான காற்று!”“வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ? வெற்றியும் அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம்ஒன்றும் இல்லை! http://arun022131.blogspot.ca/search?updated-max=2016-09-10T18:37:00-07:00&max-results=7
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு,மா அண்ணாவுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
நேரு மட்டும் குறைஞ்ச ஆளோ??- சிரிக்க மட்டும் வாங்க
- கருத்து படங்கள்
"பாவம் தமிழன்"தமிழக முதலமைச்சராக ஒரு கன்னடர் இருக்கிறார் அதனால் இங்கு கன்னடர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எதிர்கட்சி தலைவராக ஒரு தெலுங்கர் இருக்கிறார் அதனால் தெலுங்கர்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். சென்னை காவல்துறை ஆணையராக ஒரு மலையாளி இருக்கிறார் அதனால் மலையாளிகள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். பாவம் தமிழன் அவனுக்கென்று இங்கு யாருமில்லை- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
- சிந்தனைக்கு சில படங்கள்...
- உங்களுக்கு தெரியுமா?
- சிரிக்க மட்டும் வாங்க
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
சென்னை: மறைந்த நா. முத்துக்குமார் எழுதிய ஒரு கவிதை வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. உருக வைக்கும் கவி வரிகள்.. நிதர்சமான உண்மையும் கூட. மழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் ரோஜாப்பூ மிஸ் வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார் "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறங்க?" முதல் பெஞ்சை யாருக்கும் விட்டுத் தராத கவிதாவும் வனிதாவும் "டாக்டர்" என்றார்கள் கோரஸாக இன்று கல்யாணம் முடிந்து குழந்தைகள் பெற்று ரேஷன் கடை வரிசையில் கவிதாவையும்; கூந்தலில் செருகிய சீப்புடன் குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும் வனிதாவையும் எப்போதாவது பார்க்க நேர்கிறது. "இன்ஜினியர் ஆகப்போகிறேன்" என்ற எல்.சுரேஷ்குமார் பாதியில் கோட்டடித்து பட்டுத் தறி நெய்யப் போய்விட்டான். "எங்க அப்பாவுடைய இரும்புக் கடையைப் பாத்துப்பேன்" கடைசி பென்ச் சி.என்.ராஜேஷ் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். இன்றவன் நியூஜெர்சியில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே நுண் உயிரியலை ஆராய்கிறான். "பிளைட் ஓட்டுவேன்" என்று சொல்லி ஆச்சரியங்களில் எங்களைத் தள்ளிய அகஸ்டின் செல்லபாபு டி.ன்.பி.ஸ்.சி. எழுதி கடைநிலை ஊழியனானான். "அணுசக்தி விஞ்ஞானியாவேன்" என்ற நான் திரைப் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் காற்று எல்லாரையும் திசைமாற்றிப் போட, "வாத்தியாராவேன்" என்று சொன்ன குண்டு சுரேஷ் மட்டும் நாங்கள் படித்த அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறான். "நெனைச்ச வேலையே செய்யற, எப்படியிருக்கு மாப்ளே?" என்றேன். சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால் என் கையைப் பிடித்துக்கொண்டு "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க? என்று மட்டும் என் மாணவர்களிடம் நான் கேட்பதே இல்லை! " என்றான். - நா. முத்துக்குமார்Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/na-muthukumar-s-poem-on-kids-260632.html- சிந்தனைக்கு சில படங்கள்...
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
“வேப்பம் பூ மிதக்கும் எங்கள் வீட்டு கிணற்றில் தூர் வாரும் உற்சவம் வருடத்துக்கு ஒரு முறை விஷேசமாக நடக்கும். ஆழ் நீருக்குள் அப்பா முங்க முங்க அதிசயங்கள் மேலே வரும்... கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி, துருப்பிடித்தக் கட்டையோடு உள் விழுந்த ராட்டினம், வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்... எடுப்போம் நிறையவே! ‘சேறுடா சேறுடா’ வென அம்மா அதட்டுவாள் என்றாலும் சந்தோஷம் கலைக்க யாருக்கு மனம் வரும்? படை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேலே வருவார். இன்று வரை அம்மா கதவுக்குப் பின்னிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள். கடைசி வரை அப்பாவும் மறந்தேப் போனார் மனசுக்குள் தூர் எடுக்க..!” - நா. முத்துக்குமார். Like Like Love Haha Wow Sad Angry CommentShare- உங்களுக்கு தெரியுமா?
Here is a list of Top 5 Oldest University around the World as per the time, they were established. Some are still operating while others are remembered for their rich history. 1. University of Taxila or Takshashila: Ancient India (now Pakistan) - Pakistan Taxila flourished between 600 BC and 500 AD, in the kingdom of Gandhar, in Ancient India, but now in Pakistan. 68 subjects were taught including Vedas, Grammar, Philosophy, astronomy, medicine, surgery, politics, archery warfare, music, commerce etc. Minimum entry age was 16. At the time, 10,500 students studied there, including those from China, Babylon, Syria and Greece. 2. University of Nalanda - India Nalanda functioned from 500 AD to 1300 AD until, it was destroyed by foreign invaders. It had 300 lecture halls, laboratories, libraries and an observatory. Chinese travelers recorded that, 10,000 students were taught by 200 professors in Nalanda. It was founded during Gupta age. 3. University of Al-Karaouine - Morocco Al- Karaounine is situated in Fes, Morocco. It was originally a mosque founded by a woman named Fatima al-Fihri, in 859 AD. It gradually became one of the leading universities of natural sciences. In 1959, the university added subjects like physics, chemistry, mathematics and foreign languages. This is considered the oldest degree-granting university in the world.- உங்களுக்கு தெரியுமா?
1.ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.! 2.தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.! 3. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.! 4.அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!. 5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.! 6.ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.! 7.மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.! 8.வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி> ! 9.வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது ! 10.நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை. 11.நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!! 12.சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும் 13.வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!! 14.கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம். நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம் ! 15.நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டுவந்தா அது ஜாக்கிங் ! 16.பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க ! 17.ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான் !- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியன், நந்தன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இரசித்த.... புகைப்படங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போன வருசம் தானே போனது.அடுத்த வருடம் போகலாம் என இருக்கிறேன்.- உங்களுக்கு தெரியுமா?
ஹிரோஷிமா அணு என்பதற்கு அக்கால பாரதமே அனுமானம் சொல்லியிருந்தது, பெரும் அழிவு ஆயுதங்கள் சாத்தியம் என்பதனை மகாபாரதம் படிப்போரின் கண்முன்னே காட்டிற்று. சாதரண தர்ப்பை புல்லினை அஸ்வத்தாமன் பெரும் அழிவாக்கும் பிரம்மாஸ்திரமாக மாற்றினான் என்கிறது அது, இந்நாளில் அப்படி யுரேனியம் எனும் மணல் கட்டியிலிருந்து உருவாக்கபடுவதுதான் அணுகுண்டு அணுவின் இயக்கமே சிவனின் இயக்கம் என கண்டவர்கள் தமிழர்கள், நடராஜரின் சிலை தத்துவம் அதனைத்தான் குறிக்கின்றது, திருமூலர் அப்படியே அணுவின் வடிவத்தையே சிவனாக சொன்னார், ஏதோ மூட நம்பிக்கையாளன், இந்துஸ்தான் வெறியன் என என்னை நீங்கள் சொல்லிவிடலாம், ஆனால் அமெரிக்க அணுஆய்வுகூடங்களில் நடராஜர் சிலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி. அப்படி உலகமே அணுவை என்ன செய்யலாம் என நோக்கியபொழுதுதான் ஜாண் டால்டன் அணுவினை பற்றி புதிய கருத்துக்களை சொன்னார், பின்னாளில் அது ஜெர்மானிய விஞ்ஞானிகளின் ஆராய்சி ஆயிற்று. அன்று அவர்கள்தான் அறிவு களஞ்சியங்கள், அன்று என அன்று, இன்று வரை ஜெர்மானியர்கள் அப்படியே நீல்ஸ்போர், ஐன்ஸ்டீன் எல்லோரும் மண்டையை போட்டு உருட்ட, உலகினை உருட்ட தொடங்கினான் ஹிட்லர். ஹிட்லரிடம் இருந்து தப்புவது யூதர்களுக்கு மகா சவாலானது. மதுவிற்கு எதிராக தமிழகம் போராடுவதை போல எப்படியாவது உயிர்தப்பிவிட கடும் முயற்சிசெய்த காலம், நிரந்தரமாக தப்பிக்க ஒரே வழி ஹிட்லரை கொல்வது. அமெரிக்காவில் யூதரான ஐன்ஸ்டீனிடம் அணுஆராய்ச்சி செய்ய பணித்தனர், ஐன்ஸ்டீனும் அவருடன் இனொரு யூதரான ஹைமரும் இணைந்தார், யூதர்களை காப்பாற்றும் ஒரே நம்பிக்கையாக அவர்கள் அமெரிக்காவை கண்டனர், இஸ்ரேல் கூட அன்று இல்லை. ஏதாவது செய்து ஹிட்லரை அடக்காவிட்டால் யூத இனம் பிரபஞ்சத்திலே இருக்காது. அதுவரை ஐன்ஸ்டீனின் ஆற்றல் கொள்கை தாளில் மட்டும் இருந்தது, அது உண்மை என்றால் அணுகுண்டு வெடிக்கவேண்டும், இல்லாவிட்டால் ஐன்ஸ்டீனுக்கு "ராமர் பிள்ளை" நிலைதான். அவரும் பல்லை கடித்துகொண்டுதான் இருந்தார், ஹிட்லரிடம் உயிர்தப்பிய ஹைமரோ அணுகுண்டினை உருவாக்கி தீரவேண்டும் வெறியில் இருந்தார். ஆனால் அணுகுண்டு ஆராய்ச்சியினை தொடங்கி இருந்தார் ஹிட்லர், ஆனால் அணுகுண்டினை விட அவரின் கவனம் விண்வெளி ஆதிக்கத்திலே இருந்தது, எனினும் கிட்டதட்ட பாதி அணுகுண்டு கிணற்றினை தாண்டியிருந்தார் ஹிட்லர், ரஷ்யாவில் அகலக்கால் வைத்து அகாலமரணமடைந்தார். அப்படி இல்லாவிடால் என்றோ அணுகுண்டு செய்திருப்பார், காலம் அவனுக்குத்தான் கனிந்திருந்தது ஆனால் அவர் வீழ்த்தபட்ட பின்புதான் அணுகுண்டு தயாரிக்கபட்டது, அப்படி அதனை பயன்படுத்தாமலே விட்டிருக்கலாம். ஹிட்லர் தான் இல்லையே, இனி ஏன் அணுகுண்டு என யாரும் கேட்கவில்லை காரணம் ஜப்பான். கிழக்காசியாவில் சாமியாட்டம் ஆடிகொண்டிருந்தது, இன்னும் கொஞ்சநாளில் இந்தியா, நேதாஜி "இந்தியாவின் தேசிய தலைவர்" என அறிவிக்கபட இருந்த நிலை. அது நேதாஜி மூலமாக ஜப்பானிய ஆதிக்கத்தை இந்தியாவில் கொண்டுவரும் முயற்சி என்பதும் தியரி, சொல்லமுடியாது, நேதாஜியினை விரட்டிவிட்டு ஜப்பானிய அரசரை இந்திய அரசராக்க அதிக நேரம் ஆகியிருக்காது, ஆனானபட்ட அமெரிக்காவினையே அன்று நம்ப வைத்து பேர்ஸ் ஹார்பரில் தாக்கியவர்கள் ஐன்ஸ்டீன் & கோ ஒரு வழியாக 3 ஆண்டுகள் உழைத்து அணுகுண்டினை செய்து 100 அடி உயரகூண்டில் வைத்து சோதித்தார்கள். ஆயிரம் சூரியன் வெடித்த வெளிச்சம், பெரும் சக்தி. தான் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானி என்பதை ஐன்ஸ்டீன் நிரூபித்த தருணமது. அப்பொழுது ஹைமரின் மேற்கோள் குறிப்பிடதக்கது, "ஓராயிரம் சூரியன்கள் ஒன்றாய் விரவி விண்ணில் தோன்றினால், அதுதான் பரம்பொருளின் பிரகாசமாக இருக்கும்" என்ற பகவத் கீதையின் சுலோகமே தனக்கு நினைவு வந்த்தாக சொன்னார். (ஒரு யூதன், அதுவும் தலை சிறந்த விஞ்ஞானி அவரே பகவத்கீதையை படித்திருக்கிறார், அப்துல் கலாமும் அப்படி பட்டவரே. இன்றோ வேற்றுமத நூல்களை படிப்பது பாவம், படித்தால் நரகத்திற்கு போவாய் என் போதிக்கபடுகின்றது) பின்னர் அந்த நுட்பம் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கபட்டது, அரசு ராணுவத்திற்கு அணுகுண்டு அனுமதி அளித்தது. நினைத்தவுடன் செய்வதற்கு அணுகுண்டு ஒன்றும் உப்புமா அல்ல, மகா சிரமாமானது. 1 டன் யுரேனியத்தில் 1 கிலோதான் தேவைக்கு மிஞ்சும், அணுகுண்டின் மிக குறைந்த எடையே 50 டன், கணக்கிட்டுகொள்ளுங்கள். ஆனால் குறுகிய காலத்தில் 10 குண்டுகள் செய்தார்கள், பெர்லினில் வேண்டாம் அது நமது கையில், இத்தாலியும் தோற்றாகிவிட்டது, அன்று அமெரிக்காவிற்கு வேறு பெரும் எதிரி ஜப்பான் மட்டுமே, ரஷ்யா மறைமுக எதிரி ஆனால் ஆபத்தில்லை. தனது பலத்தினை உலகிற்கு காட்டவேண்டும், முதல் முறையாக பேர்ள் ஹார்பரில் தனது சொந்த மண்ணில் மரித்த ராணுவத்திற்கு பழிவாங்க வேண்டும், அதைவிட மகா முக்கியம் அமெரிக்க தரத்தில் பொருளும்,கார்களும் செய்து அடிமாட்டு விலைக்கு விற்ற ஜப்பானையும்,ஜப்பான் கம்பெனிகளையும் அலறவைக்க வேண்டும். செய்தார்கள்,பேர்ள் ஹார்பர் போல ஹிரோஷிமா ஒரு துறைமுக நகரம், இதே ஆகஸ்ட் 6ம் தேதி, 1945 ஒரு விமானத்தில் அணுகுண்டினை ஏற்றி பைலட்டுக்கும் சொல்லாமல் அனுப்பினார்கள், அவரும் கடமையை செவ்வனே முடித்தார், எதற்கும் என்ன நடக்கிறது என பார்க்க சற்று விமானத்தினை திருப்பினார், அதிர்ச்சியில் உறைந்தார், அவசரமாக அமெரிக்கா திரும்பினார். 10 கி.மி உயரத்திற்கு குடைகாளான் தோன்றியிருந்தது, வெப்பநிலை 2500 டிகிரிக்கு மேல் சென்றது. இரும்பு கட்டங்கள் உருகும் போது மனிதர்கள் அப்படியே ஆவியானார்கள், ஆறுகள் கொதித்தன. 1 லட்சம் பேர் உடனடி மரணம் எல்லாம் நடந்தது 5 நிமிடத்தில். என்ன நடந்தது என சொல்லகூட யாருமில்லை, சகலமும் அழிவு. அடக்கம் செய்யகூட ஒன்றுமில்லை, சர்வமும் சாம்பல். அதிர்ந்த ஜப்ப்பான் போரை நிறுத்தவில்லை, எப்படியும் இந்த குண்டுகளை எதிர்கொள்வோம் என நெஞ்சு நிமிர்த்தினார்கள். விளைவு ஆகஸ்ட் 9ல் அடுத்த குண்டு இம்முறை நாகசாகி, குண்டு கொஞ்சம் நகருக்கு தள்ளிவிழுந்ததில் 50,000 பேர் பலி ஆனால் கடும் சேதம். ஜப்பான் போரை நிறுத்தி ராணுவத்தையே கலைத்தது, ஜப்பானிய ஆதிக்கத்திலருந்த நாடுகள் விடுதலை ஆயின, இந்தியாவும் ஜப்பானிய மிரட்டலில் இருந்து தப்பியது, காரணம் சீனாவில் பிலிப்பைன்சில் ஜப்பானிய ராணுவம் ஆடிய ஆட்டம் அவ்வளவு கொடூரமானது. (ஆனால் அமெரிக்காவை பழிதீர்போம் என சொல்லும்ஒரு கும்பல் இப்போதும் உண்டு) நேதாஜியின் தலைவிதி மாறிபோனது. உலகமே ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்தது. பழிவாங்கிய அமெரிக்கா சந்தடி சாக்கில் ரஷ்யாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது "நான் யார் தெரியுமா? மவனே என்கிட்ட வச்சிகிட்ட அவ்வளவுதான்." பெர்லினில் ஹிட்லரின் ராணுவம் மீது விழவேண்டிய குண்டு, அரசியல்வாதிகளால் ஜப்பானின் மீது விழுந்து அப்பாவிகள் செத்ததில் கலங்கினார் ஐன்ஸ்டீன், அணுஆராய்ச்சியை கைகழுவிவிட்டு வான்கொள்கள் ஆராய்ச்சிக்கு தாவினார் (மேலே சென்ற ஜப்பானியார்களை தேடியிருக்கலாம்), பின்னாளில் இஸ்ரேல் அதிபர் பதவி தேடிவந்த போதும் மறுத்துவிட்டார். அரசியலும் விஞ்ஞானமும் கலப்பது பேரழிவு என்பது அவரின் இறுதிகால கொள்கை அது உண்மையும் கூட. உலகெங்கும் அச்சமும்,பீதியும் ஆட்கொண்டன, வழக்கம்போல சில கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் இதுதான் கடைசிகாலம், மனம் திரும்புங்கள் என போதனையை தீவிரபடுத்தின (அவர்களுக்கென்ன ஒரு குடிசை தீயில் எரிந்தாலும் கடைசிகாலம் என கத்துபவர்களுக்கு, நகரமே எரிந்தால் விடுவார்களா?) ஆனால் ஒருவர் மனம் திரும்பினார் அவர் ஜப்பானை எதிர்த்து போரிட்டு ஜப்பானை விரட்டிய அமெரிக்க தளபதி மெக் ஆர்தர். மனம் திரும்பிய அவர் பெண்டகனில் அமெரிக்க அதிபரை சந்திக்கும் பொழுது, வாயில் இருந்த சிகரெட் பைப்பினை எடுத்துவிட்டு ஒரு கோரிக்கையை சொன்னார், எளிதான கோரிக்கைதான் "மிஸ்டர் பிரசிடெண்ட், இது போன்று எனக்கு 15 குண்டுகள் தரமுடியுமா?, நான் சில நகரங்களை பட்டியலிட்டிருக்கின்றேன், ஒரு 25 வருடங்களுக்கு போர் இருக்காது" மிக சீரியசாக அவர் சொன்னதை கேட்டு, வியர்த்து கொட்டியபடி எழுந்து அமர்ந்தார் அந்நாளைய அமெரிக்க அதிபர். அனுமதி மறுத்தார் அதனால் இன்றுவரை அணுகுண்டு வெடித்த கடைசி இடம் நாகசாகி அமெரிக்கா செய்தால் ரஷ்யா செய்யவேண்டுமல்லா, தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், சீனா எல்லாம் செய்தன இன்றைய உலகில் சுமார் 12 நாடுகளிடம் அணுகுண்டு உண்டு ஆனால் எந்த நாடும் அவ்வளவு எளிதில் இன்னொரு நாடு மீது அதனை ஏவாது, காரணம் அது ஒரு பாதுகாப்பே தவிர பயன்படுத்தினால் சர்வ அழிவு இன்னும் அதற்கு மாற்று இல்லை, வீசிவிட்டால் அவ்வளவுதான் ஆனால் மகா பாரதம் ஒரு தீர்வினை சொல்கிறது, அதாவது அஸ்வத்தாமனும் பிரம்மாஸ்திரம் வீசினான், அர்ஜூனனும் வீசினான், இரு பிரம்பாஸ்திரம் மோதினால் உலகழியும் என்பதால் அர்ஜுனன் அதன திரும்ப பெற்றான் ஆனால் அஸ்வத்தாமனின் கனையால் அழிந்த அழிவினையும் அதே தான் சொல்கிறது, அதாவது அந்த பெரும் சக்தியினை கட்டுபடுத்தும் சக்தி ஒன்று உள்ளது, பிரம்மாஸ்திரம் போல அணுகுண்டையும் கட்டுபடுத்தலாம் என பாரதம் சொல்கிறது, அந்த கண்டுபிடிப்பு வரும் வரை நாகசாகியே அணுகுண்டு வெடித்த கடைசி இடமாக வரலாற்றில் இருக்கட்டும் என்ன தான் சொல்லுங்கள், நவீன விஞ்ஞானத்திற்கு மகாபாரதம் ஒரு முன்னோடி. யானை குதிரை என வாகனம் வைத்திருக்கின்றார்களே தவிர, ஆயுதங்கள் எல்லாம் மகா நவீனமானவை ஒப்பன் ஹைமர் எனும் யூத விஞ்ஞானியே அணுகுண்டில் கிருஷ்ணனைத்தான் கண்டிருக்கின்றான், அவனே சொல்லியும் இருக்கின்றான் மகாபாரதத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நவீன விஞ்ஞானமும் அதற்கான தீர்வுகளும் இருந்துகொண்டே இருக்கின்றன, மகா ஆச்சர்யமான விஷயம் இது .http://vallioorpost.blogspot.ca/2016/08/blog-post_8.html- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன். கு.சா அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- அழகு நிலவே
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.