Everything posted by nunavilan
-
உங்களுக்கு தெரியுமா?
- அதிசயக்குதிரை
Job application This is an actual job application that a 17-year-old boy submitted at a McDonald's restaurant in Florida....and they hired him because he was so honest and funny. NAME: Greg BulmashSEX: Not yet. Still waiting for the right person. DESIRED POSITION: Company's President or Vice President. But seriously, whatever's available. If I was in a position to be picky, I wouldn't be applying here in the first place. DESIRED SALARY: $185,000 a year plus stock options and a Michael Ovitz style severance package. If that's not possible, make an offer and we can haggle. EDUCATION: Yes. LAST POSITION HELD: Target for middle management hostility. SALARY: Was less than I'm worth. MOST NOTABLE ACHIEVEMENT: My incredible collection of stolen pens and 'post-it' notes. REASON FOR LEAVING: It sucked.AVAILABLE FOR WORK: Of course. That's why I'm applying.PREFERRED HOURS: 1:30 – 3:30pm., Monday, Tuesday and Thursday. DO YOU HAVE ANY SPECIAL SKILLS?: Yes, but they're better suited to a more intimate environment. MAY WE CONTACT YOUR CURRENT EMPLOYER?: If I had one, would I be here? DO YOU HAVE ANY PHYSICAL CONDITIONS THAT WOULD PROHIBIT YOU FROM LIFTING UPTO 50lbs?: 50lbs. of what? DO YOU HAVE A CAR?: I think the appropriate question here would be "Do you have a car that runs?" HAVE YOU RECEIVED ANY SPECIAL AWARDS OR RECOGNITION? : I may already be the winner of the Publishers Clearinghouse Sweepstakes. DO YOU SMOKE?: On the job, no, on my breaks, yes. WHAT WOULD YOU LIKE TO BE DOING IN FIVE YEARS?: Living in the Bahamas with a fabulously wealthy dumb blond supermodel who thinks I'm the greatest thing since sliced bread. Actually, I'd like to be doing that now. DO YOU CERTIFY THAT THE ABOVE IS TRUE AND COMPLETE TO THE BEST OF YOUR KNOWLEDGE?: Yes. Absolutely. SIGN HERE: Aries.- அழகு நிலவே
- தமிழீழ பாடல்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மன நிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை. - சாக்ரடீஸ் LikeShow more reactions Comment Sha- உங்களுக்கு தெரியுமா?
- உங்களுக்கு தெரியுமா?
தத்துவஞானி ’பிளேட்டோ’ வை பற்றி தெரிந்து கொள்வோம் பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன; ஆராயப்படுகின்றன. எனவே, மேலைநாட்டுச் சிந்தனையின் தந்தையர்களில் ஒருவராக இவர் போற்றப்படுகிறார். ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார். கி.மு. 399 ஆம் ஆண்டில் சாக்ரட்டீஸ் 70 வயதை எட்டியிருந்த போது, அவர் மீது சமயத்தை அவமதித்ததாகவும், ஏதென்ஸ் நகர் இளைஞர்களை ஒழுக்கங்கெடச் செய்ததாகவும் ஆதாரமற்ற குற்றங்கள் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணை நாடகத்திற்குப் பின் சாக்ரட்டீஸ் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, நஞ்சு கொடுத்துச் சாகடிக்கப் பட்டார். "நான் அறிந்த அனைவரிலும் மிகச் சிறந்த அறிவாளி சாக்ரட்டீஸ். அவர் நேர்மை மிக்கவர். பொது நலம் வாய்ந்தவர்" என்று பிளேட்டோ போற்றினார். அத்தகைய பெருமைக்குரிய சாக்ரட்டீஸ் கொல்லப்பட்டது கண்டு பிளேட்டோவுக்கு மக்களாட்சி அரசின் மீது நீங்காத வெறுப்பு உண்டாயிற்று. சாக்ரட்டீஸ் இறந்த சில நாட்களிலேயே பிளேட்டோ ஏதென்சிலிருந்து வெளியேறினார். அடுத்த 10 அல்லது 12 ஆண்டுகளை அயல் நாடுகளில் பயணம் செய்வதில் கழித்தார். கி.மு. 387 ஆம் ஆண்டில் மீண்டும் ஏதென்ஸ் திரும்பி, அங்கு "கலைக்கழகம்" (Academy) என்று அழைக்கப்படுகின்ற புகழ் பெற்ற பள்ளியை நிறுவினார். இந்தப் பள்ளி 900 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்தது. பிளேட்டோ தமது வாழ்நாளில் கடைசி 40 ஆண்டுகளை ஏதென்சில் கழித்தார். அப்போது அவர் கல்வி கற்பித்தார். தத்துவம் பற்றி நூல்கள் எழுதினார். இவருடைய மாணவர்களில் மிக்க புகழ் பெற்றவர் அரிஸ்டாட்டில் ஆவார். பிளேட்டோ 60 வயதை எய்திருந்த போது அரிஸ்டாட்டில் தமது 17 ஆம் வயதில் பிளேட்டோவிடம் கல்வி பயில்வதற்காக வந்தார். பிளேட்டோ கி.மு. 347 ஆம் ஆண்டில் தமது 80 ஆம் வயதில் காலமானார். பிளேட்டோ 36 நூல்கள் எழுதினார். அவை பெரும்பாலும் அரசியல், அறவியல் பற்றியவை. மெய்விளக்கவியல், இறைமையியல் பற்றியும் அவர் எழுதியுள்ளார். இந்நூல்களை சில வாக்கியங்களில் சுருங்க உரைப்பது அத்தனை எளிதன்று. என்னும், அவருடைய சிந்தனையை அளவுக்கு மீறி எளிமைப் படுத்தும் அபாயம் இருந்த போதிலும், பிளேட்டோவின் மிகப் புகழ் பெற்ற "குடியரசு" (The Republic) என்ற நூலில் கூறப்பட்டுள்ள முக்கியமான அரசியல் கொள்கைகளை இங்கு சுருக்கமாகக் கூற முயல்கிறேன். "உன்னதச் சமுதாயம்" பற்றிய பிளேட்டோவின் கோட்பாட்டினை இந்த நூல் விவரிக்கிறது. பிளேட்டோவின் கருத்துப்படி, மிகச் சிறந்த அரசு முறை என்பது "உயர் குடியினர் ஆட்சியே" (Atistocracy) ஆகும். இவ்வாறு கூறுவதால், அவர் ஒரு பரம்பரை உயர் குடியினர் ஆட்சியையோ, ஒரு முடியாட்சியையோ ஆதரிக்கவில்லை. மாறாக, தலைமை வாய்ந்த ஓர் உயர் குடியினர் ஆட்சியை அதாவது, நாட்டில் உள்ளவர்களில் அறிவிலும், திறமையிலும் மிகச் சிறந்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியை அவர் விரும்பினார். இந்த ஆட்கள், குடி மக்கள் வாக்களிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாகாது. மாறாக, அமைப்பின் உறுப்பினர்கள் தங்களுக்குள் மனம் ஒத்துத் தேர்ந்தெடுக்கும் (Co-operation) ஒரு முறையின்படி அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். ஏற்கனவே ஆட்சி செலுத்துகின்ற உறுப்பினர்களாக அல்லது காப்பாளர் வர்க்கமாக (Guardian Class) இருக்கின்ற ஆட்கள் கூடுதலான ஆட்களை முற்றிலும் தகுதி அடிப்படையில் தங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். காப்பாளர் வர்க்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதற்குத் தங்களுடைய தகுதியை மெய்ப்பித்துக் காட்டுவதற்கு எல்லா மக்களுக்கும் ஆண் - பெண் இருபாலருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனப் பிளேட்டோ கருதினார். (ஆண் - பெண் இருபாலருக்கும் அடிப்படைச் சமத்துவம் அளிக்கப் பட வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் கூறிய தத்துவஞானி, நீண்ட வரலாற்றில் இதை வலியுறுத்திய ஒரேயொரு மனிதர் பிளேட்டோ தான்) சமவாய்ப்பினைக் காப்புறுதி செவ்தற்காக, குழந்தைகள் அனைவரையும் அரசாங்கமே வளர்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசாங்கமே கல்வி புகட்ட வேண்டும் என்றும் பிளேட்டோ வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு முதலில் கண்டிப்பாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும். எனினும், இசை, கணிதம் போன்ற மற்றக் கல்விப் பாடங்களைப் புறக்கணிக்கலாகாது. பல்வேறு கட்டங்களில் விரிவான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இத்தேர்வுகளில் குறைந்த வெற்றி பெறுபவர்களுக்குச் சமுதாயத்தின் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொறுப்பு குறித்தளிக்கப் படவேண்டும். நல்ல வெற்றி பெறுவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். இந்த உயர் கல்வியில் வழக்கமான கல்விப் பாடங்கள் மட்டுமின்றி "தத்துவ" ஆராய்ச்சியும் சேர்க்கப்பட வேண்டும். "தத்துவ ஆராய்ச்சி" என்ற பிளேட்டோ குறிப்பிட்டது உன்னத வடிவங்களில் மெய்விளக்கவியல் கோட்பாட்டினை ஆராய்வதாகும். 35 ஆம் வயதில், கோட்பாட்டுத் தத்துவங்களில் தமது புலமையைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியவர்களுக்கு மேலும் 15 ஆண்டுகள் நடைமுறைச் செயல்முறை அனுபவப் பயிற்சியளிக்க வேண்டும். ஏட்டறிவை உலகியலில் பயன்படுத்தும் திறனைக் காட்டுகிறவர்கள் மட்டுமே காப்பாளர் வர்க்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும், பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களெனத் திட்டவட்டமாக மெய்ப்பித்துக் காட்டுகின்றவர்கள்தாம் காப்பாளர்களாக ஆக வேண்டும். காப்பாளர் வர்க்கத்தில் உறுப்பினராவதை எல்லோரும் விரும்ப மாட்டார்கள். காப்பாளர் செல்வந்தர்களாக இருக்கலாகாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சொந்தமாக சொத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சொந்தமாக நிலமோ, தனி இல்லங்களோ வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை (அது பெருந்தொகையாக இருக்காது) பெறுவார்கள். அவர்கள் (சொந்தமாகத் தங்கமோ, வெள்ளியோ வைத்துக் கொள்ளலாகாது) காப்பாளர் வர்க்கத்தின் உறுப்பினர்கள், தனியாகக் குடும்பங்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து உணவு உண்ண வேண்டும். பொதுவாக துணைவியை அல்லத துணைவரைத்தான் கொண்டிருக்க வேண்டும். இந்த "தத்துவ வேந்தர்" களுக்கு (Philosopher Kings) இழப்பீடாகக் கிடைப்பது பொருட்செல்வம் அன்று; மாறாக, பொது மக்ளுக்குத் தொண்டு செய்யும் மன நிறைவேயாகும். உன்னதக் குடியரசு பற்றி பிளேட்டோவின் கருத்தின் சுருக்கம் இதுதான்: "குடியரசு" நூல், பல நூற்றாண்டுகளாக, மிகப்பரவலாகப் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. எனினும், அதில் விவரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு முறையை, உள்ளப்படியான குடியியல் அரசுக்கான ஒரு முன்மாதிரியாக யாரும் கொள்ளவில்லை. பிளேட்டோவின் காலத்திற்கும், இப்போதைக்கும் இடைப்பட்ட இடைவெளிக் காலத்தின் பெரும்பகுதியில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப் பரம்பரை முடியாட்சிகளே ஆண்டு வந்திருக்கின்றன. அண்மை நூற்றாண்டுகளில் பல நாடுகள் மக்களாட்சி அரசு முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஹிட்லர், முசோலினி ஆகியோருடையதைப் போன்ற இராணுவச் சர்வாதிகார ஆட்சி அல்லது கட்சிவாத கொடுங்கோலாட்சிகளும் ஏற்பட்டுள்ளன. அந்த அரசு முறைகளில் எதுவும் பிளேட்டோவின் கொள்கைகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏற்றுக் கொண்டதில்லை. கார்ல் மார்க்சின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசியல் இயக்கம் தோன்றியது போல், பிளேட்டோவின் கொள்கைகயை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கம் எதுவும் தோன்றவில்லை. அப்படியானால் பிளேட்டோவின் படைப்புகள் மதித்துப் போற்றப்பட்டாலும் நடைமுறையில் அடியோடு புறக்கணிக்கப் பட்டன என்ற முடிவுக்கு நாம் வர முடியுமா? முடியாது என்றே நான் கருதுகிறேன். ஐரோப்பாவிலுள்ள குடியியல் அரசு எதுவும் பிளேட்டோவின் உன்னதக் குடியரசை நேரடியாக முன் மாதிரியாக கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆயினும், மத்திய காலத்து ஐரோப்பாவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைக்கும், பிளேட்டோவின் காப்பாளர் வர்க்கத்திற்குமிடையே மிகுந்த ஒப்புமை காணப்படுவதை இங்கு கவனிக்க வேண்டும். மத்திய காலத்துத் திருச்சபை, தாமே நெடுநாள் அதிகாரத்தில் நீடிக்கும் உயர்ந்தோர் குழாமை (Elite) கொண்டிருந்தது. இதன் உறுப்பினர்கள், எப்பொழுதும் அதிகாரமுறைத் தத்துவத்தில் பயிற்சி பெற்றவர்கள். கொள்கையளவில், எல்லா ஆண்களும் அவர்களின் குடும்பப் பின்னணி எதுவாக இருந்தாலும் சமய குருவாக ஆவதற்குத் தகுதியுடைவர்களாக இருந்தார்கள். (ஆனால், பெண்கள் இதிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்கள்). கொள்கையளவில், சமயகுருவுக்குக் குடும்பம் கிடையாது. தமது சொந்த செல்வத்தைப் பெருக்குவதில் அக்கறை கொள்வதைவிட பொது மக்களின் நலனிலேயே அவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியும் பிளேட்டோவின் உன்னதக் குடியரசின் காப்பாளர் வர்க்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதுண்டு. பொதுவுடமைக் கட்சியிலும், தாமே ஆட்சியில் நிலைத்து நீடிக்கும் ஒரு குழாம் அதிகாரம் செலுத்துகின்றது. அந்தக் குழாத்தின் உறுப்பினர்களும், அதிகார முறைத் தத்துவத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள். அமெரிக்க அரசின் கட்டமைப்பில் கூட பிளேட்டோவின் கொள்கைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. அமெரிக்க அரசமைப்பு மாநாட்டில் பங்கு கொண்ட பல உறுப்பினர்கள், பிளேட்டோவின் அரசியல் கொள்கைகளை நன்கறிந்திருந்தார்கள். மக்களின் விருப்பத்தைக் கண்டறிந்து, அதற்குச் செயல் விளைவு அளிப்பதுதான் அமெரிக்க அரசமைப்பின் குறிக்கோளாக இருந்தது. அதே சமயம், நாட்டை ஆள்வதற்கு மிகச் சிறந்த அறிவும் திறமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அது தனது நோக்கமாகக் கொண்டிருந்தது. பிளேட்டோவின் செல்வாக்கு காலங்காலமாகப் பரந்துபட்டதாகவும், ஊடுருவி நிலவுவதாகவும் இருந்த போதிலும், அவருடைய செல்வாக்கு நேரடியாக அல்லாமல் மறைநுட்பமாகவே நிலவி வந்துள்ளது. அவரது அரசியல் கோட்பாடுகளுடன் சேர்ந்து அறவியல், மெய் விளக்கவியல் பற்றிய அவரது விவாதங்களும், பிற்காலத் தத்துவஞானிகள் பலர் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளன. (ஆதார நூல்: நூறு பேர் the 100 ) https://valaiyukam.blogspot.ca/2015/03/blog-post_31.html- அதிசயக்குதிரை
இசைக்கலைஞர்களின் அங்க சேஷ்டைகள் கருநாடக இசைக்கலைஞர்கள் சிலர் பாடும்போது அங்க சேஷ்டைகள் செயவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளில் சில ரசிக்கக் கூடியதாக இருக்கும். சில அளவுக்கதிகமாகப் போய் விடும். அனேகமாக சகிக்கவே முடியாதபடி இருக்கும். பெரிய வைத்தியநாத ஐயர் என்னும் பிரபல கருநாடகப் பாடகர் ஒருவர் சிவகெங்கைச் சமஸ்தானத்தில் வித்துவானாக இருந்தவர். இவரைப் பற்றி உ. வே. சாமிநாதையர் அவர்கள் மிகவும் சுவையான தகவல்களைத் தருகிறார். தமக்கே உரிய நடையில் நகைச்சுவையும் கலந்து எழுதியுள்ளார். பெரிய வைத்தியநாதையரின் சங்கீதத் திறமை மிக்க வன்மையானது. இவருக்குக் கனத்த சாரீரம் அமைந்திருந்தது. அது மூன்று ஸ்தாயியிலும் தடையின்றிச் செல்லும். பாடும்போது அவ்வொலி கால் மைல் தூரம் கேட்குமாம். பாடும்போது பல வகையான அங்க சேஷ்டைகள் செய்வது இவருக்கு இயல்பு. எத்தனை விதமாகச் சரீரத்தை வளைத்து ஆட்டி முறுக்கிக் குலுக்கிக் காட்டலாமோ அத்தனை விதங்களையும் இவர் செய்வார். ஊக்கம் மிகுதியாக ஆக அந்தச் சேட்டைகளும் அதிகரிக்கும். நீண்ட குடுமியை யுடையவராதலின் இவர் பாடுப்போது குடுமி அவிழ்ந்துவிடும்; தலையைப் பலவிதமாக ஆட்டி அசைத்துப் பாடுகையில் அந்தக் குடுமி மேலும் கீழும் பக்கத்திலும் விரிந்து சுழலும். இவர் அதை எடுத்துச் செருகிக் கொள்வார்; அடுத்த கணத்திலேயே அது மீண்டும் அவிழ்ந்து விடும். கழுத்து வீங்குதல், கண்கள் பிதுங்குதல், முகம் கோணுதல், கைகள் உயர்த்தல் முதலிய செயல்கள் இவருடைய உற்சாகத்தின் அறிகுறிகள். வாயைத் திறந்தபடியே சிறிது நேரம் இருப்பார். ஸ்வரம் பாடும்போதும், மத்தியம காலம் பாடும்போதும் இவருக்குச் சந்தோஷம் வந்துவிட்டால், அருகில் யாரேனும் இருப்பாராயின் அவர் துடையிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தாளம் போடுவார். இப்படி ஆடி ஆடிப் பாடுவதோடு நில்லாமல் முழங்காலைக் கீழே ஊன்றி எழும்பி எழும்பி நகர்ந்து கொண்டே செல்வார். பாட்டு ஆரம்பித்த காலத்தில் இவர் இருந்த இடத்திற்கும், அது முடிந்த பிறகு இருக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரத்தைக் கொண்டே இவருக்கு இருந்த உற்சாகத்தின் அளவை மதிப்பிடலாம். இவர் பாடும்போது தாம் நகர்ந்து செல்வதல்லாமல் தம்முடைய கையடிக்கும், மயிர்வீச்சிற்கும் மற்றவர்கள் அகப்படாமல் இருக்கும் வண்ணம் அடிக்கடி அவர்களையும் நகர்ந்து செல்லும்படி செய்வார். இவருக்குப் பொடி போடும் வழக்கம் உண்டு. பாடிக்கொண்டே வருகையில் இவருடன் இருப்பவர் இடையிடையே பொடி டப்பியை எடுத்து நீட்டுவார். இவர் இரண்டு விரல்களால் எடுத்துக் கொண்டு போடுவார். பின்பு கையை உதறுவார். அப்பொடி அருகிலுளவர்கள் கண்களிலும் வாய்களிலும் விழும். இந்தக் காரணங்களாலும் இவருக்கு அருகில் இருந்து கேட்கவேண்டுமென்ற அவா ஜனங்களுக்கு உண்டாவதில்லை. அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு தூரத்திலிருந்து கேட்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நன்றாகவும், அமைதியாகவும் இவருடைய பாட்டின் இனிமையை அனுபவித்து வருவார்கள். இப்படியாக ஒரு நாள் எட்டயபுரம் ஜமீனில் ஒரு பெரிய விருந்து நிகழ்ந்தது. பல சங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். அவர்களுள் பெரிய வைத்தியநாதையரைப் பாடும்படி செய்தார்கள். இவருடைய சங்கீத சாமர்த்தியம் எவ்வளவுக்கெவ்வளவு மிகுதியாக வெளிப்பட்டதோ, அவ்வளவுக்கவ்வளவு இவருடைய அங்கசேஷ்டைகளும் வெளிப்பட்டன. அங்கே வந்திருந்த ஜில்லா சர்ஜன் ஒரு வெள்ளைக்காரர். அவருக்கு நம்முடைய தேசத்துச் சங்கீதம் விளங்கவில்லை. அதனால் காது அப்பொழுது பயன்படவில்லை. ஆயினும் வைத்தியநாதருடைய தேகத்தில் உண்டாகும் சேஷ்டைகளை அவர் கண்கள் கூர்ந்து கவனித்தன. நேரம் ஆக ஆக அந்தச் சேஷ்டைகள் அதிகப்பட்டன. சர்ஜனுடைய கவனமும் அதிகமாயிற்று. வைத்தியநாதருடைய குடுமி அவிழ்ந்து நான்கு புறமும் விரிந்து பரவியது; கண்கள் பிதுங்குவதுபோல் இருந்தன; வாய் ஆவெனத் திறந்தது; கைகளோ தரையிலும் துடையிலும் பளீர் பளீரென்று அறைந்தன; அருகிலுள்ளவர்கள் விலகிக் கொண்டார்கள்; இவற்றையெல்லாம் சர்ஜன் பார்த்தார்; "சரி, சரி, இவர் பாடவில்லை; மத்தியிலே இவருக்கு ஏதோ வலிப்பு வந்துவிட்டது; இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் இதைச் சங்கீதமென்று எண்ணி இந்த மனுஷனைச் சாவ அடித்து விடுவார்களென்று தோற்றுகிறது" என்று எண்ணினார். வித்துவான் துள்ளித் துள்ளி நான்கு புறமும் திரும்பித் திரும்பிச் செய்யும் சேஷ்டைகளை மட்டும் கவனித்த அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவற்றோடு மிக்க உச்சஸ்தாயியில் வித்துவான் பல்லவியை ஏகாரத்துடன் முடிக்கும் போது, அந்தக் கோஷம் வலிப்பு வந்தவன் உயிருக்கு மன்றாடிக் கத்துவதைப்போல சர்ஜனுக்குத் தோற்றியது. அதற்கு மேல் அவராற் பொறுக்க முடியவில்லை. தம் கைக்கடியாரத்தை எடுத்தார். கலெக்டரை நோக்கினார். "ஐயா, இந்த மனுஷர் இன்னும் ஐந்து நிமிஷம் இப்படியே கத்தினால் நிச்சயமாக உயிர் போய்விடும். நிறுத்தச் சொல்ல வேண்டும். இப்போது இவருக்கு வலிப்பு ஏதோ கண்டிருக்கிறது" என்று வேகத்தோடு சொன்னார். அதிகாரி என்ன செய்வார் பாவம்! ஜில்லாவுக்கே வைத்திய அதிகாரியாக இருப்பவர் வலிப்பென்று சொல்லும்பொழுது அதை மறுத்துப் பேச அவருக்குத் துணிவு உண்டாகவில்லை. அதிகாரி மெல்ல வித்துவான் அருகில் சென்று பக்குவமாக, இன்னும் சில வித்துவான்கள் பாடவேண்டும். அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். உயர்ந்த சன்மானத்தையும் அளித்தார். ஐயரும் ஒருவாறு தமது பாட்டை முடித்துக் கொண்டு மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார். பெரிய வைத்தியநாதையருடைய குறைகள் பல; இவருடைய வித்தை பெரிது. அந்த வித்தையின் பிரகாசம் சில காலம் வீசியது; பிறகு இவருடைய குறைகளால் அது மங்கியது. அதுவே இவர் ஜாதகமாக அமைந்து விட்டபோது நாம் என்ன செய்யலாம்! இவ்வாறு குறிப்பிடுகிறார் உ. வே. சாமிநாதையர் அவர்கள். http://srinoolakam.blogspot.ca/2006/12/blog-post_15.html- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
https://www.facebook.com/eelamranjanvot/videos/10157720245895637/- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: நான் இசை: விஜய் அன்ரனி வரிகள்: மறைந்த கவிஞர் அண்ணாமலை- அழகு நிலவே
- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஏய் சுழலி படம்: கொடி இசை: சந்தோஸ் நாராயணன் பாடியவர் : விஜய் நரேன்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
கழுத்தை நெரிக்கும் அளவிற்கு கடன் பொருளாதாரத்தில் ஊசலாடும் 10 நாடுகள் உலகளாவிய பொருளாதாரச் சூழல்நிலை பங்குச் சந்தை சரிவு, பணவாட்டம், கடன், தீவிரவாதம், இயற்கை சீற்றம் என பல காரணிகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்து வருகிறது. இத்தகைய சூழல்நிலையில், உலக நாடுகள் தங்களது நாட்டு வளர்ச்சிக்காக பெறும் கடன் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. கடன் சுமையைக் குறித்து ஒவ்வொரு நாடும் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையிலும், உலக நாடுகள் உலகளாவிய உறுதியற்ற நிதி தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இதனை சமாளிக்க, அரசாங்கங்களுக்கு வரியை உயர்த்துவதும் மட்டுமே சாத்தியமாக கூறுகிறது. இப்படி மிகப்பெரிய கடனில் தத்தளிக்கும் ஜப்பான் நாட்டையும், அதிக கடன் வாங்கி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாடுகளையும், திவாலாக காத்துகிடக்கும் நாடுகளையும் பார்போம். இப்பட்டியலில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. வளரும் நாடுகள் சீனாவின் பொருளாதார மந்த நிலை மற்றும், கிரீஸ் நாட்டின் கடுமையான கடன் நெருக்கடி போன்றவை வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நெருக்கடி பற்றிய அபாய மணியை அடிக்கின்றன. ஏனெனில் வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை என்பது எப்பொழுது வேண்டுமானாலும், எந்தவித முன்னறிவிப்பின்றி வரலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி - ஜிடிபி இந்நிலையில்அரசாங்கக் கடனுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் அடிப்படையில், அதிகக் கடனில் தத்தளிக்கும் உலக நாடுகளை நாங்கள் இங்கே பட்டியலிடுகின்றோம். இங்கே அந்தப் பட்டியலில் உள்ள முதல் 10 நாடுகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்கா கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 104.5 சதவீதம். அமெரிக்க அரசாங்க பொறுப்பு அலுவலகத்தின் கணக்கின்படி, அமெரிக்காவின் நிகரச் சொத்து மதிப்பு 3.2 டிரில்லியன் டாலர் ஆகும். அவ்வாறு இருந்த போதிலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் பெயர் வருகின்றது. ஏனெனில் சமீபத்திய மத்திய அரசின் கணக்கீட்டின் படி அமெரிக்காவின் மொத்தக் கடன் சுமார் 19 டிரில்லியன் என்கிற அளவில் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அதோடு நாட்டின் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாகப் பாதுகாப்புச் செலவுகள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் போன்றவற்றில் அமெரிக்கா அதிக அளவில் செலவழித்து வருவதால் அதனுடைய கடன்களும் அதிகரித்து வருகின்றன. பூட்டான் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 110.7 சதவீதம். உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்ட போதும், இந்த நாட்டின் அதிகரித்து வரும் கடன் அளவுகள், இந்த நாடு மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்காது என நாம் நம்புவோம். வெளிநாடுகளில் இருந்து பூட்டானுக்கு வரும் நிதி உதவி அதிகரிப்பதால், பூட்டான் மிக விரைவாகக் கடன் நெருக்கடி நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் கடன்களின் பெரும் பகுதி இங்குக் கட்டப்பட்டு வரும் நீர் மின் நிலைய திட்டங்களுக்குச் செல்கின்றது. இந்தக் கட்டுமான திட்டங்கள் முடிக்கப்பட்டால் அந்த நாடு ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்படுகின்றது. சைப்ரஸ் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 112.0 சதவீதம். ஏராளமான தொல்லியல் செல்வம் உள்ள நாடான சைப்ரஸ் இன்று உலகின் மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாகும். வங்கி வைப்பு நிதி மற்றும் அந்நிய நாடுகளில் இருந்து வாங்கிய கடன்களின் காரணமாக, சைப்ரஸ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நேர்மறையான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும், 2012 ல் கிரேக்கத்தில் நடைபெற்ற அரசாங்கக் கடன் மறு சீரமைப்பானது, சைப்ரஸ்ஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதித்தது. சைப்ரஸ் நாட்டின் மீட்பு நடவடிக்கை இன்னும் தொடர்கின்றது. அயர்லாந்து கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 122.8 சதவீதம். அயர்லாந்து நாட்டின் மொத்த கடன் அளவு உண்மையில் மிகவும் அதிகம். ஆகவே அயர்லாந்து இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஐரிஷ் டைம்ஸ் படி, அயர்லாந்து நாட்டின் மொத்த தேசிய கடன் அளவு, தற்போது 203.2 பில்லியன் யூரோ என்கிற அளவில் உள்ளது. நிலைமை இவ்வாறு மோசமாக இருந்தாலும், அயர்லாந்து தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டே இருக்கின்றது. அதன் காரணமாக அதன் செலவுகள், மற்றும் வாங்கிய கடனுக்கான வட்டி போன்றவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போர்ச்சுகல் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 128.8 சதவீதம். கிரீஸ் நாடு கடுமையான நிதி சரிவை சந்தித்த பிறகு, போர்ச்சுக்கல், ஐரோப்பாவில் கடன் நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. தொடர்ந்து வாங்கி வரும் கடன்களின் காரணமாக இந்த நாடு தாங்க முடியாத கடன் சுமையால் தத்தளித்து வருகின்றது. இது இந்த நாட்டின் நிதி நிலைமை பற்றிய கவலைகளை அதிகரிக்கச் செய்கின்றது. சமீப காலங்களில் இந்த நாட்டின் பொருளாதாரம் சற்றே முன்னேறிச் சென்றாலும், அங்கே நிலவும் மோசமான பணக் கொள்கையின் காரணமாக, இந்த நாடு கடன் பொறியில் சிக்கித் தவிக்கின்றது. இத்தாலி கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 132.5 சதவீதம். இத்தாலிய வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்பில், கடனின் அளவு அதிகரித்திருப்பது, இத்தாலியின் பொருளாதாரம் நல்ல நிலைமையில் இருப்பதைக் கண்டிப்பாகக் குறிப்பிடவில்லை. இந்த ஆண்டின் முற்பகுதியில், நாட்டின் முக்கிய வங்கிகளின் பங்குகள் சரிந்தது. அது நிதிச் சுமையை மேலும் கவலைக்குள்ளாக்கியது. வங்கித் துறையில் கட்டமைப்புக் குறைபாடுகள் காரணமாகக் குவிந்து வரும் இழப்புகள் காரணமாக, மிகவும் குறைவான விகிதத்தில் அரசாங்க பத்திரங்களை விற்பது ஒன்றே தற்பொழுது இத்தாலிக்கு இருக்கும் ஒரே ஒரு வழி. ஜமைக்கா கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 138.9 சதவீதம். ஜமைக்காவின் புதிய பிரதமராக ஆண்ட்ரூ ஹொல்னெஸ் நியமிக்கப்பட்டார். இது அந்த நாடு கடனை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்பதைக் குறிக்கும் ஒரு சமிக்கையாகப் பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும் கடன்களைத் தீர்க்க இந்த நாடு கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும் கடன் பிரச்சனைகளை ஒரே இரவில் தீர்க்க முடியாது என்பது வெளிப்படை. லெபனான் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 139.7 சதவீதம். குப்பை குவியலுக்கு எதிரான மக்களின் வன்முறை எதிர்ப்பின் காரணமாக, லெபனான், கடந்த ஆண்டுத் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது. எனினும், கடன் சுமையால் தத்தளிக்கும் 'தோல்வியுற்ற நாடான' லெபனானின் மிக முக்கியப் பிரச்சனை என்பது அதன் கடனை செலுத்த இயலாமை ஆகும். சிரியாவில் நிலவும் பிரச்சனைகள், அரசியல் ரீதியாக லெபனானிற்கு நெருக்கடிகளை அதிகரித்து அதை இன்னும் ஒரு மோசமான நிலைக்குக் கொண்டு சென்று விட்டது. கிரீஸ் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 173.8 சதவீதம். அதிகரித்து வரும் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் காரணமாக 2010 ம் ஆண்டில் கிரீஸில் பத்திர சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கான அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த ஆண்டு நாட்டின் மொத்தக் கடன் தொகை 320 பில்லியன் யூரோ என்கிற அளவை அடைந்தது மற்றும் கிரீஸின் பொருளாதாரம் கிட்டத்தட்ட நின்றுபோனது. அதன் காரணமாகக் கிரீஸ் உலகின் கவனத்தை ஈர்த்தது. ஜப்பான் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 243.2 சதவீதம். ஜப்பானின் வேலையின்மை சதவீதம் மிகவும் குறைந்த நிலைக்கு வந்து விட்டது. மேலும் அங்கு வெட்டியாக ஒருவரும் இல்லை என்கிற நிலை நிலவுகின்றது. ஆயினும் ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் பற்றாக்குறை நிலவுகின்றது. செலவினங்களைக் குறைத்து அதிக வரி விதிப்பது மட்டுமே தற்போதைக்கு ஜப்பான் அரசுக்கு உள்ள ஒரே வழி. http://eluthu.com/kavithai/306871.html- சிரிக்க மட்டும் வாங்க
பாணி பூரி செய்வது எப்படி??- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- தமிழீழ பாடல்கள்
- சிரிக்க மட்டும் வாங்க
GIRL : நீங்க சிகரெட் புடிப்பீங்கலா?BOY : ஆமா.GIRL : எவ்ளோ நாளா இந்த பழக்கம்?BOY : கிட்ட தட்ட பத்து வருசமா.GIRL : ஒரு நாளைக்கி எத்தன பாக்கெட் தம் அடிப்பீங்க?BOY : மூனு பாக்கெட்GIRL : அப்படினா ஒரு பாக்கெட் சிகரட் எவ்வளவு?BOY : 40 ரூபாய்.GIRL : அப்ப ஒரு நாளைக்கு 120 ரூவாய்(3 பாக்கெட்) செலவு பன்றீங்க.BOY : ஆமா.GIRL : அப்போ மாசத்துக்கு 3,600 ரூபாய்.BOY : ஆமா.GIRL : வருசத்துக்கு 43,200 ரூபாய்?BOY : கரெக்ட்டா சொன்னீங்க.GIRL : பத்து வருசத்துக்கு 4,32,000 ரூபாய்.BOY : ஆமா.GIRL : சிகரெட் அடிக்காம,நீங்க இந்த காச சேர்த்து வச்சிருந்தா ஒரு சான்ரோ கார் வாங்கிருக்கலாம்.BOY : ஓ அப்படியா.!! சரி நீங்க தம் அடிப்பீங்கலா?GIRL : ச்சீ ச்சீ எனக்கு அந்த பழக்கமே கிடையாது.BOY : அப்போ உங்க சான்ரோ கார் எங்க நிக்கிது?GIRL : !!!!! (speechless)- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அதிசயக்குதிரை