Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: எந்த பக்கம் படம்:தர்மதுரை இசை: யுவன் சங்கர் ராஜா பாடியவர்கள்:சின்மயி , ராகுல் நம்பியார்
-
உங்களுக்கு தெரியுமா?
உலக நாடுகள் -தூரப்பார்வை-அங்கோலா- அர்ஜென்டினா அங்கோலா கொய்சாம் எனும் மொழி பேசும் ஆப்ரிக்க இன மக்கள் ஆதியில் வசித்து வந்த அங்கோலா நாட்டில், பான்டு மொழி பேசும் மக்கள் 1000 ஆண்டு களுக்கு முன் பெருமள வில் இடம் பெயர்ந்து வந்து குடியேறினார்கள். நாளடைவில் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியாகிவிட்ட கதை நடந்துவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பான்டு மொழி பேசும் மக்கள் வளர்ந்துவிட்ட னர். 1480 ஆண்டு வாக்கில் போர்த்துகீசிய வணிகர்கள் இந்நாட்டுக்கு வந்தனர். 1575 இல் லுவான்டா எனும் தலைநகரை உரு வாக்கியதே அவர்கள் தான்! அதுவே பின்னர், இந்தியாவுடனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் வணிகம் செய்ய வாய்ப்பான மய்ய இட மாக வளர்ந்தது. கொடுமை என்னவென்றால், போர்த்துக்கீசிய குடியேற்ற நாடான பிரேசில் நாட்டுக்கு ஆப்ரிக்க அடிமைகளை அனுப்பும் முக்கிய நகர மாகவும் வளர்ந்துவிட்டது. அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில் விடுதலை எண்ணம் வேரூன் றத் தொடங்கியது. தேசிய உணர்வு மிக்க இயக்கங் கள் தோன்றின. விடுதலை யைப் பெற வேண்டும் எனும் எண்ணத்தில் கொரில்லாப் போர் முறைத் தாக்குதலில் இறங்கினர். பாப்புலர் லிபரேஷன் மூவ்மெண்ட் ஆப் அங்கோலா எனும் சமதர்மக் கொள்கை கொண்ட அமைப்பு (MPLA) 1956 இல் அமைக்கப்பட்டது. (FNLA)1957இல் போராளி இயக்கம் ஒன்றும் தொடங்கப்பட்டது. (UNITA)எனும் மற்றொரு அமைப்பும் முழுச் சுதந்திரம் அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் 1966இல் தொடங்கப்பட்டது. ஜொனாஸ் சாவிம்பி என்பவர் இதனைத் தொடங்கினார். இவர்களின் போராட்டத்தின் விளைவாக 1975இல் போர்த்துகீசிய ஆதிக்கவாதிகள் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதிகாரத்தை மாற்றிக் கொடுக்காமலே வெளியேறி விட்டார்கள். 500 ஆண்டுக் காலம் ஆண்டு அனுபவித்த நாட்டைக் கைமாற்றிக் கொடுக்க மனம் வரவில்லை போலும்! மவுனமாகப் போய்விட் டனர். உள்ளூரில் இருந்த பல கட்சிகளில் பதவிப் போட்டி தொடங்கியது. ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு வெளி நாட்டின் ஆதரவு தானாகவே கிடைத்தது. MPLA அமைப்புக்கு கியூபா ஆதரவு அளித்தது. FNLAவும் UNITAவும் இணைந்து போட்டியில் இறங்கிய போது தென் ஆப்ரிகாவும் அமெரிக்காவும் ஆதரவு தந்தன. லுவான்டா (தலைநகர்)வில் கட்டுப்பாடு செலுத்திய MPLL அமைப்பு விடுதலை பெற்ற அங்கோலாவின் அரசாங்கமாகத் தம்மை அறிவித்துக் கொண்டது. மற்ற இரு அமைப்புகளும் வேறொரு நகரமான ஹூவாம்போவில் தங்கள் அரசு அமைந்திருப்பதாகப் பிரகடனப்படுத் தினார்கள். இம்மாதிரி நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் போர்த்துகீசியர்கள் பேசாமல் வெளியேறி விட்டார்களோ? பதவிப் போட்டிகளில் ஈடுபட்டிருந்த அமைப்புகளுக்கி டையே 1994 இல் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. லூசாகா அமைதிப் பேச்சு ஒப்பந்தம் 1996 இல் ஏற்பட்டது. MPLA அமைப்பின் எடுவர்டோ டாஸ் சன்டேர்ஸ் என்பவரும் UNITA அமைப்பின் நிறுவனர் ஜொனாஸ் சவிம் பியும் இணைந்து அரசு அமைப்பதாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. 2002 பிப்ரவரி மாதத் தில் ஜொனாஸ் சவிம்பி அரசு தரப்புப் படையின ரால் கொல்லப்பட்டார். அதன் பிறகு அரசும் UNITA அமைப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். இது நடந்தது 2002 ஏப்ரல் மாதத்தில்! ஜொனாஸ் சவிம்பி தடையாக இருந்தாரோ? தலைமையை இழந்துவிட்டதால் அமைதியை நாடினார்களோ? ஆப்ரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் கடலோர நாடாக உள்ள அங்கோலா 12 லட்சத்து 46 ஆயிரத்து 700 ச.கி.மீ. பரப்புள்ளது. 1 கோடியே 22 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட இந் நாட்டில், போர்த்துகீசிய மொழியும் பான்டு உள்பட ஆப்ரிக்க மொழிகளும் பேசப்படுகின்றன. ரோமன் கத்தோலிக்க மதத்தை 38 விழுக்காட்டினர் பின்பற்றுகின்றனர். புரொடஸ்டன்ட் பிரிவை 15 விழுக்காட்டினரும் மீதமுள்ள 45 விழுக்காட்டினர் ஆப்ரிக்கப் பழைய நம்பிக்கைகளையும் பெற்றுள்ளனர். வறுமைக் கோட்டுக்குக் கீழே 70 விழுக்காடு மக்கள் உள்ளனர். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அர்ஜென்டினா தென் அமெரிகாவின் தென் பகுதியில் அட்லாண் டிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள அர்ஜென்டினா நாட்டின் டீகோ மாரடோனா, சிறந்த கால் பந்தாட்ட வீரர். இந்நாட்டின் வட மேற்குப் பகுதியில இன்கா வமிசத்தினர் ஆட்சி புரிந்தனர். 1535 ல் ஸ்பெயின் நாடு ஒரு குழுவை இந்நாட்டுக்கு அனுப்பிக் குடியேறச் செய்தது. பெட்ரோ டி மென்டோசா என்பவரின் தலைமையிலான இக்குழுவினர் தொடக்கத்தில் வெற்றிகளைப் பெற்று சான்டா மரியா டெல் புவோன் அயர் நகரத்தை உருவாக்கினர். இந்நகரம்தான் தற்போது போனஸ்அயர்ஸ் எனும் இந்நாட்டின் தலைநகர். 1776 இல் ஸ்பெயின் நாடு தன் சாம்ராஜ்ய எல்லையை விரிவுபடுத்தியது. தற்போதைய அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, பொலிவியாவின் தென்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய நாட்டை உருவாக்கி, போனஸ் அயர்சைத் தலைநகராக்கிக் ஆண்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேசில், உருகுவே, ஆகியவற்றுடன் அர்ஜென்டினாவும் சேர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் ரத்தப் போராட்டம் எனத்தக்க; சண்டையில் இறங்கியது. பராகுவே நாட்டிற்கு எதிராக இந்த மூன்றுநாடுகளும் நடத்திய போரில் பராகுவே தோற்கடிக்கப்பட் டது. 1865 முதல் 1870 வரை 5 ஆண்டுகள் இப்போர் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர் நேரத்தில் தான் ஒரு நடு நிலை நாடு என அர்ஜென்டினா அறி வித்துக் கொண்டது. ஆனாலும் 1943 இல் ராணுவ ஆட்சி இங்கு அமைந்துவிட்டது. கர்னல் ஜூவான் பெரோன் என்பவர் இந்த ஆட்சியின் முக்கியப் புள்ளி. 1944 இல் ஜப்பான், ஜெர்மனி நாடுகளுடன் அரசு ரீதியான உறவை முறித்துக் கொண்ட அர்ஜென்டினா 1945 இல் அந்நாடுகளுடன் போரிட்டது. 1946இல் பெரோன் நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் இரண்டாம் மனைவி ஈவா பெரோன். எவிட்டா என்று அழைக்கப்பட்ட இவர் சமூகநலத் துறையின் பொறுப்பாளராக அதிகார பூர்வமற்ற வகையில் நியமிக்கப்பட்டார். அதன் விளைவாகத் தொழிலாளர்களின் ஊதியங்களை உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்து அதன் வாயிலாக அதிப ரான தன் கணவருக்கு உதவினார். ஆனாலும் 1955 இல் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பெரோன் மீண்டும் 1973 இல் அதிகாரத்திற்கு வந்தார். ஆனால் 1974இல் மரணம் அடைந்துவிட்டார். பெரோனின் மூன் றாம் மனைவியும் துணை அதிபராக இருந்தவருமான இசபெல் அடுத்த அதிபராகப் பதவி ஏற்றார். பணவீக்கம் எக்கச்சக்கமாக ஏறிக் கொண்டே போய், 1976இல் ராணுவம் புரட்சி செய்து, ஜார்ஜ் விடெலா எனும் ராணுவத் தளபதியின் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கொடுமைகளும் கொலைகளும் திட்டமிட்டுச் செய்யப் பட்டன. அசிங்கமான போர் என வருணிக்கப் படும் சண்டைகளில் ஆட்சியை எதிர்த்தவர்கள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்டனர். 1981 இல் லியோ போல்டோ கல்டியரி எனும் தளபதி ஆட்சித் தலைமையை ஏற்றார். இவர் காலத்தில்தான் பக்கத்தில் இருந்த ஃபாக் லாண்டு தீவில் அர்ஜென்டினா தாக்குதல் நடத்தி கைப்பற்றிக் கொண்டது. வல்லரசுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தீவு இது. பிரிட்டன் எதிர்த் தாக்குதல் தொடுத்து மீண்டும் தீவைக் கைப்பற்றிக் கொண்டது. இதனால் தளபதி கல்டியரி பதவி இழக்கும் நிலை ஏற்பட்டு ஜெனரல் ரெனால்டோ பிக்னான் என்பார் அதிபரானார். 1983 இல் நாட்டில் மீண்டும் மக்களாட்சி மலர்ந்தது. ரவுல் அல் போன்சின் என்பவர் அதி பரானார். பணவீக்கம் மீண்டும் தாறுமாறாக உயர்ந்தது. 900 விழுக் காடு எனச் சொல்லக் கூடிய அளவுக்கு உயர்ந்து விட்டது. அதன் காரண மாக கார்லோஸ் மெனம் என்பவர் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளை எடுத்தார். புதிய பண நோட்டுகளைப் புகுத்தினார். பழைய நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார். ஆயினும் என்ன? பொருளாதார மந்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. 2002 இல் உலக வங்கிக்குச் செலுத்தவேண்டிய 8 ஆயிரம் லட்சம் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடிய வில்லை. மேற்கொண்டு சர்வதேச நிதியத்திடம் (IMF) இருந்து கடன் பெறவும் முடியவில்லை. கடன் தொகைக்கான வட்டியை மட்டும் செலுத்தினால் போதும் என்கிற அளவில் அர்ஜென்டினாவும் சர்வதேச நிதியமும் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதுவாவது அந்நாட்டைக் காப்பாற்றிக் கரை சேர்க்குமா? 27 லட்சத்து 66 ஆயிரத்து 890 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 4 கோடி ஆகும். 92 விழுக்காட்டி னர் ரோமன் கத்தோலிக்க மதத்தினர். யூதர்களையும் புராடெஸ்டன்ட் கிறித்தவர்களும் 2 விழுக்காடு வீதமே உள்ளனர். ஸ்பெயின் நாட்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு ஜூலை 9 இல் விடுதலை பெற்ற பழம் பெரும் குடியரசு நாட்டின் கதி என்று தேருமோ? ------------------நன்றி:-"விடுதலை" 28-5-2009
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:சல்மார் படம்:தேவி பாடியவர்:பெனி டயாள் இசை:சஹிட் வாஜி வரிகள்:நா.முத்துக்குமார்
-
கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அவளும் நானும் படம்: அச்சம் என்பது மடமையடா இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்:விஜய் ஜேசுதாஸ் வரிகள்: பாவேந்தர் பாரதிதாசன்- சிரிக்க மட்டும் வாங்க
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ராசாளி படம்: அச்சம் என்பது மடமையடா இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: சத்தியபிரகாஸ் & சாசா திருப்பதி வரிகள்: கவிஞர் தாமரை- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கூரான பார்வைகள் படம்: தூங்கா நகரம் இசை: சுந்தர் சி. பாபு பாடியவர்கள்: ஹரிகரன், சின்மயி வரிகள்: கவிஞர் தாமரை- அழகு நிலவே
Vijay TV சூப்பர் சிங்கர்-5 சுற்றுக்கு இலண்டனில் இருந்து தெரிவாகி இருக்கும் ஈழத்து தமிழ் மகள் மாதுலானி பார்னாண்டோ (Maathulaani Fernando)- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- அழகு நிலவே
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நில்லாயோ படம்:பைரவா இசை: சந்தோஸ் நாராயணன் பாடியவர்: ஹரிசரண் வரிகள்: வைரமுத்து- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
- சிரிக்க மட்டும் வாங்க
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: shoot the குருவி படம்:Jil Jung Juk இசை:விசால் சந்திரசேகர் பாடியவர்: அனிருத்- அழகு நிலவே
பாடல்: செந்தூரா படம்: போகன் இசை: டி.இமான் பாடியவர்: லக்ஸ்மி சிவனேஸ்வரலிங்கம்[கனடா]- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர் படம்:வானவில் வாழ்க்கை பாடியவர்கள்:ஜித்தன், ஜனனி- சிரிக்க மட்டும் வாங்க
HR: What is your name?* Muzo: MP, sir* HR: In full, please* Muzo: Muzo Phiri* HR: Your father's name? Muzo: MP, sir* HR: What does that mean?* Muzo: Melvin Phiri* HR: Your native place?* Muzo: MP, sir* HR: What's that?* Muzo: Muchinga Province * HR: What is your qualification?* Muzo: MP, sir* HR: (Somewhat agitated…..) What is that!!?* Muzo: Mathematics professor* HR: So why do you need a job?* Muzo: It is because of MP, sir* HR: Meaning?* Muzo: Money problems* HR: What is your personality like?* Muzo: MP, sir* HR: Huh? And what is that?* Muzo: Marvellous personality* HR: I see…... I will get back to you* Muzo: Sir, how was my MP? * HR: And what's that again?* Muzo: My performance* HR: I think you have MP* Muzo: Meaning?* HR: Mental problem *- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
மரம் - வைரமுத்து கவிதை- அதிசயக்குதிரை
- உங்களுக்கு தெரியுமா?
1). உலகம் 1900 -ஆம் ஆண்டுக்குள் அடி எடுத்து வைத்தது! அப்போதே அச்சு இயந்திரத்துக்கு வயது 400 என்பதால், அவை உலகின் பெரிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டன! புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கணிசமான அளவுக்கு மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தது! ரயில் போக்குவரத்தும் புழக்கத்துக்கு வந்துவிட்டது. மோட்டார் கார்கள்கூட வீதிகளுக்கு வந்துவிட்டன என்றாலும், உலகின் பெரும்பாலான நாடுகளில் குதிரை வண்டிகளும் மாட்டுவண்டிகளுமே வீதிகளில் தென்பட்டன! ரேடியோ, டி.வி. என்று எல்லாமே ஆராய்ச்சி கட்டத்திலேயே இருந்ததால், மக்களுக்கு நாடகத்தையும் இசையையும் விட்டால் வேறு பொழுதுபோக்கு கிடையாது! 2). ஏன் இந்த கனவு? 1900 -ஆம் ஆண்டு, ஆஸ்திரியாவை சேர்ந்த சிக்மண்ட் ப்ராய்டு என்ற மனோதத்துவ நிபுணரின் கண்டுபிடிப்பு, தூக்கத்தில் தோன்றும் கனவுகள் பற்றி மனிதனுக்கு இருந்த பல சந்தேகங்களுக்கு விடை சொன்னது! மூட நம்பிக்கைகளுக்கும் தேவையில்லாத பயத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. 'மனிதனின் ஆசை அல்லது பயம் - இவைதான் அவன் தூங்கும்போது கனவாக வெளிப்படுகிறது' என்பது இவரின் கண்டுபிடிப்பு. இதுதான் மனோதத்துவ இயல் பற்றி பிறகு எழுதபடவிருந்த அத்தனை உண்மைகளுக்கும் முன்னுரை... அடிப்படை.. ஆணிவேர்.. எல்லாம்! 3). 1901 -ஆம் ஆண்டு, பார்சலோனாவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன், முதன் முதலாக தான் வரைந்த ஓவியங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்தான். 'என்ன கண்றாவி இது?' என்று பலர் முகம் சுளித்தார்கள். சுலபத்தில் புரியாத ஆந்த ஓவியங்களை வரைந்த இளைஞனின் பெயர் - பிக்காஸோ! 4). 1901 -ஆம் ஆண்டு, சூரியனே அஸ்தமிக்காத அந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணி ஜனவரி 22 -ஆம் தேதி தனது கடற்கரை மாளிகையில் அஸ்தமித்தார். 64 ஆண்டுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணியாக இருந்த விக்டோரியாவுக்கு ஒன்பது குழந்தைகள். இதில் பலர் ஐரோப்பாவில் உள்ள பல ராஜகுடும்பங்களின் வாரிசுகளுடன் மணம் முடித்துக் கொண்டதால், மகாராணி 'ஐரோப்பாவின் பாட்டி' என்று செல்லமாக அழைக்கப்பட்டார். 5). 1903 -ஆம் ஆண்டு, வானத்தில் பறக்கவேண்டும் என்ற மனிதனின் ஆயிரம் ஆண்டுக் கனவு இந்த ஆண்டுதான் நிறைவேறியது! சைக்கிள் தயாரிப்பில் அனுபவமுள்ள ரைட் சகோதரர்கள் வடிவமைத்த முதல் விமானம் ஆகாயத்தில் பறந்தது. 6). 1903 -ஆம் ஆண்டு, தங்களின் நிலத்திலிருந்து தானியங்களை ரயில்நிலையம் வரை கொண்டு போக ஒரு வாகனம் தேவைப்பட்ட காலம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, ஹென்றி போர்டு ஒரு மோட்டார் வாகனத் தொழிற்சாலையை அமெரிக்காவின் டெட்டராய்ட் நகரில் நிறுவினார். இந்த Ford தான், இப்போது நமது சென்னை - மறைமலைநகர் வரை பரவியிருக்கிறது! 7). 1903 -ஆம் ஆண்டு, 'கதிர்வீச்சு' (Radium) பற்றிய கண்டுபிடிப்புக்காக மேடம் க்யூரியும் அவரின் கணவரும் நோபல் பரிசு பெற்றார்கள். ஆராய்ச்சிக்காக இரவு பகலாக உழைத்ததால், பரிசு கொடுக்கப்பட்ட நாளன்று அவர்களால் அதை நேரில்கூடப் போய் வாங்க முடியவில்லை. ஆனால், விஞ்ஞானத்தின் மீதிருந்த ஆசை க்யூரியை துரத்தியது. 1911 -ஆம் ஆண்டு ரசாயனத்துக்காக மேடம் க்யூரி இரண்டாவது முறையாக நோபல் பரிசு வாங்கினர். 8). 1903 -ஆம் ஆண்டு, வெள்ளைக்காரர்கள் தங்கும் வசதி மிகுந்த ஓட்டல்களில் இந்தியர்களுக்கு அனுமதி கிடையாது. அதனால் இந்தியாவின் முதல் ஐந்து நட்சத்திர தாஜ் ஓட்டலை பம்பாயில் ஆரம்பித்த ஜெம்ஷட் ஜி டாடா இந்த ஆண்டில் மறைந்தார். 9). 1904 -ஆம் ஆண்டு, ஐரோப்பாவை தபால் கார்டு மேனியா பிடித்து ஆட்ட ஆரம்பித்தது! பேப்பரில் கடிதம் எழுதி அதை ஓர் உறையில் போட்டு அனுப்புவதை விட்டுவிட்டு பலர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போஸ்ட் கார்டுக்கு தாவினார்கள். 10). 1904 -ஆம் ஆண்டு, மணி அடித்து அழைத்து உணவு போட்டுப் பழக்கப்பட்ட நாயின் நாக்கிலிருந்து எச்சிலை வரவழைக்க உணவு மணி அடித்தாலே போதும்.. நாயின் நாக்கில் தானாகவே எச்சில் சுரக்கும். அதுதான் Conditional Reflex என்று கண்டுபிடித்துச் சொன்ன ரஷ்யாவின் பாவ்லோவ் நோபல் பரிசு வென்றார். 11). 1905 -ஆம் ஆண்டு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஊற்றுக்கண்களாக இருந்த வங்காள மக்களின் கண்களில் நீர் ஆறாக பெருகெடுத்தது! ஒரு தாயின் பிள்ளைகளைப் போல ஒற்றுமையாக இருந்த வங்காளத்தை பிரிட்டிஷ் அரசு இரண்டாக பிரிக்க... இந்து - முஸ்லிம் என்று இரு பிரிவினருமே ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதன் எதிரொலியாக, சுதேசி இயக்கம் பிறந்தது! 12). 1905 -ஆம் ஆண்டு, குட்டியுண்டு நாடான ஜப்பான், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை பறந்து கிடக்கும் ரஷ்யாவை யாருமே எதிர்பாராத வகையில் கடற்ப்போரில் தோற்கடித்தது! கடைசியில், கொரிய நாட்டின்மீது தனக்கிருந்த உரிமையை ரஷ்யா விலக்கிக் கொண்டது! ஜப்பானின் இந்த வெற்றி, ரஷ்யாவின் முப்பத்தைந்து கப்பல்களைக் கடலிலும் உலகத்தை ஆச்சிரியத்திலும் மூழ்கடித்தன. 13). 1906 -ஆம் ஆண்டு, 'முப்பது கோடி முகம் உடையாள்' என்று பாரதியார் எழுதுவதற்கு மூல புள்ளிவிவரமான Blue Book இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின்படி அன்றிய தேதிக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்மீது நாற்பது கோடி பேர் இருந்தார்கள். அதில் முப்பது கோடி இந்தியாவில்! 14). 1907 -ஆம் ஆண்டு, விமானம் மாதிரி ஓடுதளம் எல்லாம் எதுவும் தேவைப்படாமல் செங்குத்தாக விண்ணில் எழுந்து பறக்கக்கூடிய ஒரு விமானம் பிரெஞ்சு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது! அது, ஹெலிகாப்டர். 15). 1907 -ஆம் ஆண்டு, தென் ஆப்ரிக்க அரசு, அங்கே வாழும் இந்தியர்களை இரண்டாம்தரக் குடிமக்களுக்கும் கீழாக நடத்த ஆரம்பித்தது! 'இந்தியர்கள் அனைவரும் தங்களின் கைவிரல் ரேகைகளை அரசிடம் பதிவுசெய்ய வேண்டும். எங்கே சென்றாலும் அரசு கொடுத்திருக்கும் அடையாள பத்திரத்தை எடுத்து செல்ல வேண்டும்' என்றெல்லாம் சட்டம் கொண்டு வர.. அப்போது தென் ஆப்ரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்துவந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்த சட்டத்தை எதிர்த்தார். அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது! 16). 1908 -ஆம் ஆண்டு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் வருடங்களில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டி இந்த ஆண்டு லண்டனில் நடந்தது! இதில் மொத்தம் 21 விளையாட்டுகள் இருந்தன! இந்தப் போட்டியில் பெரும்பாலான மெடல்களை அள்ளியது அமெரிக்கா! 17). 1910 -ஆம் ஆண்டு, War and Peace போன்ற சாகாவரம் பெற்ற படைப்புகளை உருவாக்கிய ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறந்தார். மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர், ரயில்வே நிலையத்தில் அனாதையாக இறந்தார். 18). 1911 -ஆம் ஆண்டு, மணியாச்சி ரயில் நிலையசந்திப்பில் நெல்லை கலெக்டர் ஆஷ் துரை, வாஞ்சிநாதனால் சுட்டுகொல்லப்பட்டார். அடுத்த சில கணங்களில் வாஞ்சிநாதனும் தற்கொலை செய்து கொண்டார்.19). 1912 -ஆம் ஆண்டு, பக்கெட், குடம் போன்ற எவர்சில்வர் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்படும் Stainless Steel அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தயாரானது. இதை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்... F.M. பக்கெட். 20). 1913 -ஆம் ஆண்டு, தாதா சாகிப் பால்கே 'ராஜா ஹரிச்சந்திரா' படத்தை தயாரித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் இதுதான். '57,000 புகைப்படங்கள்... இரண்டு மைல் நீளத்துக்கு இருக்கும்... கட்டணம் 3 அணா' இப்படித்தான் இந்தப் படம் விளம்பரம் செய்யப்பட்டது. 21). 1914 -ஆம் ஆண்டு, யுத்தத்தால் சோர்ந்து போன பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைகளுக்கு சார்லி சாப்ளினின் 'Making a Living' என்ற படம் உற்சாக மூட்டியது! போர் வீரர்களுக்குக்கூட அரசே இந்தப் படத்தைத் திரும்பத் திரும்பத் திரையிட்டுக் காட்டியது. 22). 1917 -ஆம் ஆண்டு, ரஷ்யாவில் புரட்சி வெடித்த இதே ஆண்டில், 'புரட்சித் தலைவர்' என்று தனது கட்சியினரால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர் பிறந்தார். சுமார் இருபது ஆண்டு காலம் இந்தியாவின் தலைஎழுத்தை தீர்மானித்த இந்திராகாந்தி & அமெரிக்க ஜனாதிபதி கென்னடியும் பிறந்தது இதே ஆண்டில் தான். 23). 1919 -ஆம் ஆண்டு, சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்திய ரௌலட் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே திரண்டிருந்த இருபதாயிரம் பேரைக் கலைக்க, ஜெனரல் டயர் தலைமையிலான சிப்பாய்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர் உட்பட சுமார் 1500 பேர் துடிதுடித்துச் செத்தனர். 24). 1920 -ஆம் ஆண்டு, வெள்ளையர்களை எதிர்த்து மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இந்தியா நாடே அந்நிய நாட்டுத் துணிமணிகளை தீவைத்து கொளுத்தியது. 'சுதேசப் பொருட்களையே பயன்படுத்துவோம்' என்ற முழக்கம் இந்தியாவின் மூலை முடுக்கு ஏங்கும் ஒலித்தது!. 'சுயராஜ்யம்' கேட்டு நாக்பூரில் நடந்த அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியது. 25). 1921 -ஆம் ஆண்டு, பேஷனின் பெயரில் பெண்கள் ஸ்கர்ட்டுகளை மடக்க... ஸ்கர்ட்டின் நீளம் குறைய ஆரம்பித்தது. வேறு சில பெண்களோ இன்னும் ஒரு படி மேலே சென்று சிகரெட், மது ஆகியவற்றைக் கையில் எடுத்தார்கள். 'ஐரோப்பியப் பெண்களின் இந்தத் தாக்கம் எங்கே நமது நாட்டுக்கு வந்து விடுமோ? என்று அஞ்சிய அமெரிக்கா, பெண்களின் ஆடைகள் சம்பந்தமாக புதிய சட்டம் கொண்டு வந்தது! 26). 1921 -ஆம் ஆண்டு, ஏழைப் பெண்கள் கருவுற்று, குழந்தையும் பெற்றுக்கொண்டு பிறகு அதைச் சுமக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர்! இதுபோன்ற ஏழைப் பெண்களுக்கு உதவ கிறிஸ்துவத் தேவாலயங்களின் எதிர்ப்பை மீறி மார்ச் 17 -ஆம் தேதி லண்டனில் 'குடும்பக் கட்டுப்பாடு' மருத்துவமனை ஒன்று முதன் முதலாகத் தொடங்கப்பட்டது! 27). 1926 -ஆம் ஆண்டு, '2000 -ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?' என்ற கேள்வியை மூலக்கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'Metropolis' என்ற மாபெரும் திரைப்படம் வெளியிடப்பட்டது! படத்தின் இயக்குனர் பிரிட்ஸ் லேங். 28). 1927 -ஆம் ஆண்டு, மோனோ ப்ளைன் என்ற விமானத்தில் தனி ஆளாக நியூயார்க் நகரத்திலிருந்து கிளம்பி அட்லாண்டிக் கடலை ஒரே மூச்சில் கடந்து சார்லஸ் லிண்ட்பர்க் என்பவர் சாதனை நிகழ்த்தினார். 29). 1928 -ஆம் ஆண்டு, லாரல் - ஹார்டி இரட்டையர்களின் நகைச்சுவையை உலகமே வயிறு வலிக்க சிரித்து ரசித்தது! இந்த ஆண்டில் மட்டும் இவர்கள் நடித்த நான்கு படங்கள் திரைக்கு வந்தன. 30). 1929 -ஆம் ஆண்டு, சரத்திரம் கண்டிராத அளவுக்கு பங்குச் சந்தை வியாபாரம் வீழ்ச்சி அடைந்தது. இதை அடுத்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் அநாதரவாக வீதிகளுக்குத் தள்ளப்பட்டனர். நன்றி: வாவ் 2000, விகடன் பிரசுரம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தமிழரசு .Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி