Everything posted by nunavilan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுனுக்கும், நாட்டாண்மைக்கும், பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:எனக்கு ஒரு தேவதை இசை:Chakri பாடியவர்கள்:ஹரிகரன், கௌசல்யா http://www.youtube.com/watch?v=F8JCYOEfVG0
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:எட்டடுக்கு சோலை
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:முதல் கனவு கனவு படம்:மஜ்னு இசை : ஹாரிஸ் ஜெயராஜ் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ முதல் கனவே முதல் கனவே மறுபடி என் வந்தாய் நீ மறுபடி என் வந்தாய் விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா முதல் கனவு முதல் கனவு மூச்சுல்ல வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் உடைத்து காதல் சாகாது அல்லவா முதல் கனவே முதல் கனவே மறுபடி என் வந்தாய் நீ மறுபடி என் வந்தாய் விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா — எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்பேன் தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய் இதயத்தாய் பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் — முதல் கனவே முதல் கனவே மறுபடி என் வந்தாய் நீ மறுபடி என் வந்தாய் விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா — ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம் ஓசையொடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு தென்றலை வரசொல்லு தென்றலை — தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்துகொண்டே விரல் நீட்டி திறக்கிராய் மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளதுக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் நீ தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நங்கை படம்:எங்கேயும் காதல் இசை:ஹரிஸ் ஜெயராஜ் http://www.youtube.com/watch?v=b9IMG6p0Gck&feature=related
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:தீயில்லை படம்:எங்கேயும் காதல் இசை:ஹரிஸ் ஜெயராஜ் http://www.youtube.com/watch?v=i5n5NINNlDE
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ராசாத்தி போல படம்:அவன் இவன் இசை:யுவன் பாடியவர்: ஹரிசரண் http://www.youtube.com/watch?v=MF20Yk_XTmw&feature=related
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:விழியும் விழியும் படம்:சதுரங்கம் (புதிது) இசை:வித்தியாசாகர் பாடல்கள்;அறிவுமதி பாடியவர்கள்:பொனி , மதுபாலகிருஸ்ணன் ,ஹரிணி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மழை உதிர் காலம் படம்:எத்தன் இசை:தாஜ்நூர்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:சின்னஞ்சிறிசு படம்:குங்குமபூவும் குஞ்சுப்புறாவும் இசை:யுவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரன் வல்வை லிங்கத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கடலோரம் படம்:குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் இசையமைத்து பாடியவர்:யுவன்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
ஏதிலி அழகான ஊர் திருபொதிகையூர் அது எங்கள் ஊர். குளம் , குட்டை , பல்வகை மரங்கள் , சிறு சிறு குடில்கள், அதற்கு முற்றம், பெற்றம், நாற்று நடும் வயல், கிணறு , தோட்டம். அன்புடன் தென்னம்பிள்ளை ஐந்து, புன்செயில் இரண்டு பனைமரங்கள், பாசி , உளுந்து என பருப்புகள் , மக்கா, கம்பு என்ற சோள வகைகள். பருத்தி ஆமணக்கு ... மாமரமும் , வாழையும் , மாதுளமும் ஒவ்வொன்று . என எங்களுக்காக எங்களுடன் வாழ்ந்தது. கிழக்கே உதிக்கும் கதிரவனை அரை நாழிகை பொழுது மறைக்க முற்படும் மலை குன்று ஒன்று. மாதம் மும்மாரி பெய்ய, ஏர் கொண்டு உழுது உழைக்க. கடும் உழைப்பில் செழிக்க, இல்லாதவர்க்கு வாரி கொடுத்தே வாழ்ந்து வந்தோம். பசுமையான ஊர், பாசம் கொட்டும் தாய், பண்பு சொல்லும் தந்தை, அன்பு காட்டும் அக்கா , நேசம் வளர்த்த நண்பர்கள், கதை சொல்லும் ஆயி என்றே பிறந்த மண்ணில் தமிழினிற்கினியன் ஆக ஏழு வயது வரை வாழ்ந்து வந்தேன் . தந்தை வன்னியரசு, தாய் இசைப்பிரியா, அக்கா தமிழினி ஆயி சண்முகவடிவு என்று நாங்கள் வாழ்ந்து வந்த குடும்பம் ஓர் மாலை பொழுது , பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் இல்லத்தின் முற்றத்தில் நானும் அக்காவும் ஆயிடம் கதை பேசிக் கொண்டிருந்தோம் ... அம்மா இராச்சோறு ஆக்கி கொண்டும் , தந்தை பெற்றத்தை குளிப்பாட்டிகொண்டும் இருந்தோம். திடீரென சமருக்கு வரும் வானூர்திகள் குண்டுமழை பொழிய , எங்கள் தோட்டம் கண் முன்னே அழிந்தது. மறுமுறை திரும்ப வருவதற்குள் பதுங்குகுழியை தேடி ஓடினோம் எல்லாரும். மறுமுறை வந்த வானூர்திகள் - ஆம் இரண்டு ... ஊரில் ஒரு வீட்டையும் விடாது அழித்தது - சிதறி கதறி ஓடினோம் . குற்றுயிராய்... நாங்கள் மட்டும் அல்ல எங்கள் மண்ணும் வீடும் ஊரும். குண்டுகள் வந்து விழுந்த அடுத்த நாழிகை பொழுது நாங்களும் வீழ்ந்தோம். நிலை குலைந்தோம் எங்கள் நிலம் இழந்தோம் எங்கள் உறவுகள் பலரை இழந்தோம். என்னில் நேசம் வளர்த்த நண்பர்கள் சிலரும் அவற்றில் அடங்கும். கனவில்லை, காலிவூட் படமில்லை மெய்யே, பதுங்கு குழிகள் பாடம் சொன்னது எங்களுக்கு, மக்களே இன்னும் ஒரு நாள் கூட இங்கு இராதீர்கள். எங்கோ சென்று உயிர் பிழைத்து கொள்ளுங்கள். உங்கள் உறவுகளை இழந்தது போதும், உடல் உறுப்பிழந்து ஊனமானது போதும். இங்கு சுகமுடன் வாழ்ந்தது போதும் நலமுடன் வாழ எங்காவது புறப்படுங்கள், வீற்றிருந்த இல்லம் காணோம், வாழ்ந்த ஊரே காணோம் , தோட்டம் துரவுகள் காணோம் , தென்னம் பிள்ளைகள் காணோம் , மா வாழை காணோம், பனை மரங்கள் கருகின, நாங்கள் உயிருக்கு உயிராக கண்ணும் கருத்துமாய் வளர்த்த ஓர் அறிவு உயிர்கள் செத்தே அழிந்தது கண்டோம், நிலங்கள் அழிந்தது, ஊரும் ஒருக்குலைந்தது. ஐந்து சிவன் கோயில்கள் இடிக்கப்பட்டது கிருத்துவ ஏசு தேவாலையங்கள் தகர்க்கப்பட்டது. எல்லாம் படைவீரர்கள் போட்ட குண்டுகளில் தரை மட்டம் ஆனது கண்டோம். தாமதியாதீர் புறப்படுங்கள் இவ்விடத்தி நின்று தாய்மண் சொன்ன அறிவுரைகள் என் தந்தைக்கு எட்டியது , வானூர்திகள் குண்டுகள் நிரப்ப சென்ற அரைநாழிகை இடைவெளியில் எங்கள் தந்தை எரிந்து மீதியாகி இருந்த மனை கண்டு குமுறி அழ நேரமில்லை குண்டுகள் நிரப்பி திரும்புமோ வானூர்தி என்ற அச்சம். உடுப்புகள் எல்லாம் எரிந்தது அம்மா ஆக்கிய சோறு அடுப்பிலேயே அணைந்தது , எங்கள் பாட நூல்கள் , நாங்கள் சேர்த்த உண்டியல்- என்று எரியாத பொருளே இல்லை எரிந்தும் எரியாத தகரப்பெட்டி தவிர, அதில் தாய் தந்தை திருமணநாள் உடுப்புகள், புகைப்படங்கள் மீதியாக, கடைசி ஆண்டு வரவை - எங்க நிலம் ஈந்த ஒரு நூறாயிரம் காசு மட்டும். அழகோவிய இல்லம் தழலில் கருகியதே. கண்ணீர்த்துளிகள் என்றால் என்னவென்று தெரியாது வளர்ந்த நாங்கள், என் தந்தை அழுவது கண்டு தாயும் அழுதார் எல்லோரும் அழுதோம். புறப்பட துணிந்தோம் - கண்ணீர் கொப்பளிக்க, திரும்பி பாராது - அழுத விழிகளோடு. ஓடினோம் எங்கள் ஊரைவிட்டு நாங்கள் பிறந்த மண்விட்டு நாடி இருந்த நாட்டைவிட்டு போகும் வழியிலே நெஞ்சை பதற வைக்கும் மாந்த பேரழிவு கண்டோம் வெந்தோம். வெந்து நெருடலில் நொந்தோம். பேருந்துக்கு நின்றிருந்த பள்ளி ஆசிரிய ஆசிரியை சிறியோர் பெரியோர் என்று பாராது உடல் சிதறி செத்து கிடந்தனர் பார்க்க இயலாது கண்களை மூடிக்கொண்டோம் நானும் அக்காவும். எங்கள் ஊரை இலங்கை படையணி கைப்பற்றியது ... உலகுக்கு உரைத்த இலங்கை வானொலி செய்திகள் - ஒளிபரப்பியது. கேட்டோம் எங்களுடன் வருபவர்களின் வானொலி பெட்டியில். ஏதேதோ வண்டி பிடித்து நகர்ந்தோம் எங்கள் ஊர்விட்டு நாட்டைவிட்டு உயிருகாகவே. இலங்கையின் வடமேற்கு கடற்கரை . நள்ளிரவு செல்ல சில நாழிகைகள். எங்களுடன் வந்தவர்கள் கூட்டமாக மீன்பிடி படகு என்று கள்ளத்தோணியில். அலைகளின் ஆர்ப்பரிப்புடன் உப்புக்காற்று புடைசூழ கடல் வழிப்பயணம் தொடர்ந்தோம் நாங்கள். தமிழகத்தின் தனசுகோடியில், அதோ விளக்கு தெரிவது தமிழகமென்று ... எல்லோரும் இறக்கப்பட்டோம். எங்களிடம் இருந்த நூறாயிரம் காசை பிடுங்கி கொண்டு திரும்பினான் படகோட்டி. முட்டு நனைய கடல்நீரில் நடந்தோம். கை கோர்த்துக்கொண்டு ஏதுமில்லா ஏதிலிகளாய். தமிழ்நாடு கடற்கரையில் ஒதுங்கிய நாங்கள் ஒளிவிளக்கு தெரிந்தது - மீனவ குடியிருப்பு. குளிரில் நடுங்கியபடி ஒரு வீட்டுக் கதவை தட்ட அவர்கள் தந்த உபசரிப்பு எங்கள் துன்பமெல்லாம் கனவென மறந்தோம். எங்களை தமிழகம் கட்டியணைத்து வரவேற்றது. காலையில் அகதி முகாம் அனுப்பப்பட்டோம், எல்லாம் இருந்த நாங்கள் ஏதுமில்லாது . எங்களுகென்று ஒரு குடியிருப்பு பகுதி, அதே செடிகள் கொடிகள் மரங்கள். ஆனால் நிலமும் கோயில்களும் இல்லை. ஆயி மட்டும் இறந்துவிட்டார் வருத்தப்பட்டே. நாங்கள் தமிழகத்தில் நலமுடன் உள்ளோம் படித்த மேதையாய் அறிவுடன் உள்ளோம் பொன்பணம் கொண்டு செழிப்புடன் உள்ளோம் . நாங்கள் உறவுகளை உருவாக்கிக் கொண்டோம். நாங்கள் முதலில் வாழ்ந்த திருப்பொதிகையூர் வாழ்கையை திரும்பி வாழ்கிறோம் ... இன்று. ஆனால் ஊர் பெயரில்லை எங்களுக்கென்று, தெருவின் பெயரோ இல்லை எங்களுக்கென்று. முகவரி ஏதும் இல்லை எங்களுக்கென்று. இதுவெல்லாம் எங்கள் மனதின் நெருடல். கடைசியாக, பிறந்தமண்ணில் சாக வேண்டும் இது என் தந்தையின் ஏக்கம் பக்றுளி நெடியோன்.
-
உங்களுக்கு தெரியுமா?
ஈபிள் கோபுரம்(Eiffel Tower) - சில முக்கியத் தகவல்கள். பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. 1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்கள்கள். கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்). கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7,300 டன்களாகவும் உள்ளது. இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது. இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (Elevator) வசதியும் உள்ளது . இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது. இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரிகின்றது. பிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள். கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது. இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ஆம் வருடம் வரை சுமார் 40 வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது. இக்கோபுரம இதுவரை 243 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப் பட்டுள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
டன், எரிமலை ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நங்கை படம்:எங்கேயும் காதல்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:சொல்லாயோ சோலைக்கிளி பாடியவர்கள்:பாலு& சுவர்ணலதா http://www.youtube.com/watch?v=xpBgsrJEJ6g
-
தமிழீழ பாடல்கள்
வரவுக்கு நன்றி, ரதி. பாடல்:மாவீரரே
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஒரு நாள் உனை விழிகள் பார்க்க படம்:ஆனந்த மழை பாடியவர்:ஹரிகரன் http://www.youtube.com/watch?v=dT7OfVupBfI http://www.sensongs.com/UNDG/Tamil/Vennilave - Loveable Songs - Melodies Of Hariharan/06 Orunaal Unnai.mp3
-
அதிசயக்குதிரை
1000 ரூபாய்க்கு பழைய கார்’ என்று பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒருவர் கார் உரிமையாளரைப் பார்க்கச் சென்றார். விளம்பரம் கொடுத்திருந்தது ஒரு பெண்மணி. காரைப் பார்த்தார். புத்தம் புதிது போலிருந்தது. அசல் விலை 10 லட்சம் இருக்கும் என்று தோன்றியது. இவ்வளவு விலையுயர்ந்த காரை எதற்கு வெறும் 1000 ரூபாய்க்கு விற்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி சொன்னார்: “இது என் கணவருக்குச் சொந்தமான கார். போன வாரம் தனது செகரட்டரியுடன் ஓடிப் போய்விட்டார். நேற்று எனக்கு அவரிடமிருந்து ஒரு ஈமெயில் வந்தது. எனக்கு பணம் தேவைப்படுகிறது. எனது காரை விற்று, அதில் வரும் பணத்தை அனுப்பி வைக்கவும் என்று கூறியிருந்தார். அதனால்தான் விற்கிறேன்”
-
அதிசயக்குதிரை
சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்: 'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?' 'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு' 'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?' 'மாப்பிளைக்கு சோதனை காலம் ஆரம்பம் அதான்'
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மெக்ஸி மெக்சிக்கன் படம்:மகாராஜா பாடியவர்:ஹரிகரன் http://www.youtube.com/watch?v=OiqN8i1yA4E
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஏனையோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.