-
Posts
22123 -
Joined
-
Last visited
-
Days Won
63
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by இசைக்கலைஞன்
-
நாம் தமிழர் அரசியல் என்பது ஈழத்தை மட்டும் பேசும் அரசியல் அல்ல!
- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
இவ்வளவுதான் சார் கணக்கு.. அடுத்த தேர்தல் அந்த சேதியை சொல்லும்!
- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
தமிழ் தேசியம் என்பது எதிர்ப்பு தத்துவம் அல்ல. மாறாக, அது ஒரு உயிர்ப்பு தத்துவம்.
- 2995 replies
-
- 1
-
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
2016 தேர்தல்: நகைச்சுவை நடிகர் கருணாசிடம் தோல்வி அடைந்த நாம் தமிழர் வேட்பாளர்தான் இவர். இதுதான் தமிழக அரசியல்.
- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
இந்த வரிகள் நாம் தமிழர் இயக்கத்துக்கு சொந்தமானவை அல்ல. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ளது. நீங்கள் இகழ வேண்டுமென்றால் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்த வெண்பாவை இயற்றியவரையே இகழ வேண்டும்! // உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம்என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம். தமிழ்நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களும், பல குறுநில மன்னர்களும் ஆண்டதாகச் சங்க இலக்கியங்கள கூறுகின்றன. சேர நாட்டிற்கு வஞ்சி மாநகரும், சோழ நாட்டிற்குப் பூம்புகாரும், பாண்டிய நாட்டிற்கு மதுரையும் தலைநகர்களாக இருந்துள்ளன. மூவேந்தர்களில் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்கும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் வைத்து நடத்தியதாகப் பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன. அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் இருந்து தமிழ் ஆய்வு செய்ததாகவும், தமிழில் பல்வேறு செய்யுள்களை இயற்றியதாகவும் சங்க இலக்கியங்கள், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களால் அறியலாம். தமிழ் என்ற சொல் இனிமை என்ற பொருளை உடையது. இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்று பிங்கல நிகண்டு கூறுகின்றது. மதுரமான மொழி என வால்மீகி இராமாயணம்கூறுகின்றது. இந்த இனிமையான தமிழ் மொழியைச் சங்கம் மூலம் புலவர்களும் கற்றறிந்தோரும் சிற்றரசர்களும், பேரரசர்களும் பல்வேறு வகைப்பட்ட செய்யுட்களைப் பாடி வளர்த்தனர். புலவர்கள் அரசர்களால் பெரிதும் போற்றப்பட்டனர்.
-
1) குக்கிராமங்களிலும் கால் பதித்துள்ளது நாம் தமிழர். Environmental wing செய்யும் களப்பணிகளும் கூடுதல் பலம். சென்ற உள்ளாட்சி தேர்தலில் சீரங்கம் (திருச்சி) கவுன்சிலர் தேர்தலில் இரண்டாவது இடம் வந்தது ஒரு ஆச்சரியம். அங்கே ஐயர்கள் அதிகம். 2) ஊடக மறைப்பு இப்போது முன்பை விட அதிகம். ஆகவே வளர்ச்சி என்பது மட்டுப்படுத்தப் படுகிறது. 3) இன்னும் வேகமெடுத்து செயல்படுகிறது. தமிழர்கள் தமிழ்நாட்டில் வந்தேறிகள். தெலுங்கர்கள் நாங்கள்தான் ஆளுவோம் என வெளிப்படையாக பதிவுகளும், மேடைப் பேச்சுகளும் ஆரம்பித்து விட்டன. 4) இன்னும் பணவசதி இல்லாத நிலைமைதான். துளி எனும் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொகுதி பொறுப்பாளரும் மாதம் ரூ.1000 சேர்த்து தர வேண்டும் எனும் திட்டம் ஓடிக்கொண்டிருக்கு. 5) மக்கள் இப்போது நம்ப ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் தராசின் முள்ளை மற்றப் பக்கம் திருப்புவதற்கு கனதியான ஒரு அலை தேவைப்படுகிறது. ஏறு தழுவுதல், காவிரி போராட்டம் போல. ஆனால் காலம் lockdown இல் இருக்கு. 6) தொடர்ந்தும் வாக்குக்கு பணம் தரமாட்டார்கள். மற்றவர்கள் அள்ளி வீசுவார்கள். இது தொடர்ந்தும் ஒரு பெரும் பின்னடைவுதான். 7) கமல் தொடர்ந்தும் நகர அதிருப்தி வாக்குகளை சிதறடிப்பார். குறிப்பாக, சென்னை, சேலம், கோவை. ரஜினி தப்பி ஓடப்பார்க்கிறார். ஆனால் பாஜக பிடித்து இறக்கி விடுவார்கள். இது நடந்தால் சிறு நகரப் பகுதிகளில் வாக்குகள் பறிபோகும்.
-
அண்ணன் சீமானை சென்ற தேர்தல் வரையில் தமிழகம் கண்டு கொள்ளாமல் இருந்த காரணங்கள். 1) பட்டி தொட்டி எங்கும் சென்று சேரவில்லை. 2) ஊடக மறைப்பு (விஜயகாந்துக்கு எவ்வளவு coverage கொடுத்தார்கள்; கமலுக்கு எவ்வளவு என ஒப்பீடு செய்தால் தெரிய வரும்) 3) அந்நிய lobby (குறிப்பாக தெலுங்கு lobby) 4) பணவசதி இன்மை 5) இவரும் கூட்டணிக்கு போய்விடுவார் எனும் மக்களின் அவநம்பிக்கை 6) வாக்குக்கு பணம் தரவில்லை. 7) சினிமாகார்ர்களை (கமல், இனிமேல் ரஜினி) தேர்தலில் இறக்கி வாக்குகளை சிதறடிக்கும் ஆரிய சிந்தனைகள். ”8) சமூக ஊடகங்களில் நடுநிலைவாதிகள் எனும் பெயரில் திராவிடத்தார் எழுதும் பொய்கள். (உ+ம்: சுபவீ, ஆழி செந்தில்நாதன், மே 17, கொளத்தூர் மணி, மதிமாறன், etc) =================================== ஈழத்தமிழர்களில் சிலர் அண்ணன் சீமானை எதிர்க்க காரணங்கள். 1) அண்ணன் வைகோ மீது வைத்த கண்மூடித்தனமான விசுவாசம்; ஏமாறும் தன்மை 2) மே 17 திருமுருகன் காந்தியின் உரை வீச்சு. இவர் வைகோவின் சீடர் என்பது கூடுதல் தகவல். 3) மேலே குறிப்பிட்ட காரணம் 8 ஐ வாசித்து, குழம்பிப் போய் அதை மற்றவர்களுக்கும் கடத்தி விடுவது.
-
பையன்.. இந்த கதிர்காமரை யார் கொலை செய்தார்கள் என்று தெரியாது. ஆனால் அவரைப் பற்றி இங்கிலாந்து காரர் ஒருவர் புத்தகம் எழுதியுள்ளார். அதன் சில பக்கங்களை கூகிள் புத்தக பக்கத்தில் முன்னம் வாசிச்சு இருக்கிறன். நேற்று தேடினேன். கிடைக்கவில்லை. அதில் கதிர்காமர் சந்திரிகாவுக்கு எழுதிய கடிதங்கள் பற்றி இருக்கு. அதாவது கதிர்காமருக்கு பிரதமர் ஆகும் கனவு இருந்ததாக. தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு அந்த கடிதங்கள். ஆனால் இனவெறிக்குப் பயந்த சந்திரிக்கா இழுத்தடித்து உள்ளார். எப்படியானாலும் தமிழன் பிரதமர் ஆகிவிட்டார் என வந்துவிடும் அல்லவா?! அப்போது சந்திரிக்காவை கடிந்தும் கடிதம் எழுதினாராம் கதிர்காமர். கடைசியில் அவரை மேலே அனுப்பியதும் கீழே இருந்த மகிந்த சகோதர்ர்கள் மேலே வந்தார்களாம். சந்திரிக்காவுக்கு கவலையாம். இப்படி அந்த புத்தகத்தில் இருக்கு.
-
இதை சீமான் செய்ய முன்னரே ம பொசி, கிஆபெ விஸ்வநாதம், பாவேந்தர், பெருஞ்சித்திரனார் அனைவரும் பேசி தோற்றே போனார்கள். தெலுங்கு லாபி அவ்வளவு வலிமையானது. சீமானும் திராவிடத்தார்தான் ஒரு காலத்தில். ஆனால் ஹைட்ராக்சிகுளோரகுயின் (திராவிடம்) கொரோனாவை (ஈழப்பிரச்சினை) தீர்க்க உதவாது என்பது 2009 இல் தெரிந்துவிட்டது. அதன் பின்னரும் அந்த மாத்திரையை பாவிப்பது சிறந்த செயல் அல்ல. அன்று திராவிடத்தாரிடம் மாநில அதிகாரம் (powers) இருந்தது. With great power comes great responsibility. ஈழ விவகாரத்தை கையில் வைத்திருந்த (அவர்களது வகிபாகத்தை) திராவிட சித்தாந்தம் இன்னும் தமது அன்றைய பொறுப்புணர்வை சுட்டிக்காட்டி மன்னிப்பு கோரவில்லை. எனது நண்பன் 24 மனை தெலுங்கு செட்டி. அவர்களது வீட்டு திருமணத்திற்கு சென்றேன். உறவினர் அனைவரும் தெலுகில்தான் பேசுவார்கள். ஆனால் பல தலைமுறைகளாக தமிழகத்தில்தான் உள்ளார்கள். ஆனால் வைகோ கட்சி, விஜயகாந்த் கட்சி என்று இருப்பார்கள். இதுதான் உண்மை நிலவரம். நமக்கு எப்படி ஆங்கிலமோ, அதுபோல் அவர்களுக்கு தமிழ். ஆனாலும் நூற்றாண்டு கடந்தும் தாய்மொழியை மறக்காத அவர்களது பண்பை பாராட்ட வேண்டும். கனடாவின் எட்மன்டன் தமிழ் சங்கத்திலும் தெலுங்கர் ஆதிக்கமே. ஒரு தமிழ் அறிஞரை அழைத்து கூட்டம் நடத்த விடமாட்டார்கள். இது ஒரு சிக்கல்.
-
வேறு வழியில்லை. அவரவர் உய்த்துணரும் தன்மையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊடக செய்திகள், ஆராய்ச்சி கட்டுரைகள் கூட உள்நோக்கம் கொண்டவையாக இருக்கலாம். தனிப்பட நான் ஒபாமாவையும் நம்பியதில்லை. ட்ரம்பையும் நம்பியதில்லை. ஹிலரியையும் நம்பியதில்லை. அவர்கள் ஏற்கனவே வரைந்த வேலைத்திட்டத்தில்தான் இயங்குவார்கள், வெளியுறவை பொறுத்தவரையில். மற்றும் அமெரிக்க மக்களில் ஒரு தொகுதியினர் பெரும் முட்டாள்கள் என்பது எனது கருத்து. ஆனால், ஆகச்சிறந்த மதிநுட்பம் கொண்ட ஒரு சிறு தொகையினர் அதிகாரத்தை கைப்பற்றி நாட்டை வார்த்தெடுத்துள்ளார்கள். ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்பதே அமெரிக்க வாக்காளரின் தன்மையை உணர்த்துகிறது. 2020 இல் வெற்றி பெற்றாலும் ஆச்சரியம் இல்லை.
-
திராவிடம் என்பது சமூக நீதி கொள்கை அல்ல. திராவிடர் என்றாலே தென்னகத்து பிராமணர் என்று பொருள். பொருந்தாத ஒரு வார்த்தையை கொண்டு தமிழரல்லாதவர்கள் தமிழகத்தை ஆளும் பொருட்டு எடுத்துவைத்த கொள்கைதான் திராவிடம் என்பது. தமிழரை அடிமைப்படுத்துவதில் யார் முன்னணி?! ஆரியமா திராவிடமா என்று ஒரு பட்டிமன்றம் வேண்டுமானால் நடத்தலாம். தமிழகத்தை திராவிடம் ஆண்டால் என்ன தவறு என்று கேட்பதும், தமிழ் ஈழத்தை சிங்களம் ஆண்டால் என்ன என்பதும் ஒன்றுதான். அடிமை சிந்தனையில் இருந்து முதலில் வெளியேறுங்கள். திராவிட கருணாநிதி, வைகோ இல்லங்களில் தெலுங்குதான் மொழி என்பது சிறப்பு தகவல். வீட்டில் தமது தாய்மொழி தெலுங்கில் பேசும் நபர்கள் தமிழ் தேசியத்துக்கு எப்படி ஆதரவாக இருப்பார்கள்?! Probability சரியாக இருக்காதே?! இந்த சகடையில் இருந்து வெளியே வந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் “நாம் தமிழர்”.
-
இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன. 1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு. 2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். “ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”
-
டப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையை ஒருவழியாக தேடிப் பிடித்துவிட்டேன். Yumpu.com/en/document/read/43514302/dublin-tribunal-final-report-tamilnet இந்த இணைப்புக்கு முன்னால் www போட்டுக் கொள்ளுங்கள். இந்த இணைப்பின் 40 ஆவது பக்கத்தில் பால் நியூமன் 2009 ஆண்டு எழுதிய ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையை வாசித்து பார்க்க வேண்டும். பொதுமக்கள் மீதான தாக்குதல் (Civilian Targets)என்பதற்கு ஆதாரங்களாக இந்தக் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. 2009 இல்தான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பால் நியூமன் அதில் இல்லை. 2015 வாக்கில் இணைந்தார் என நினைக்கிறேன். வழக்கம்போல கீற்று, மே17 இவர்கள் எல்லாம் நாம் தமிழர் கட்சியின் மீதான தாக்குதல் செய்ய இந்த விடயத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த சக்தியை திமுக, காங்கிரஸ், மதிமுக மீது பயன்படுத்தலாம்.