Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34999
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. சீனாவை உலுக்கும் கொரோனா: தகவல்களை பகிருமாறு WHO அறிவிப்பு கொவிட் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீனாவின் கொவிட் பற்றிய தற்போதைய தகவல்களைப் பகிருமாறு என்று உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சீன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சீனா பல கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளோர் மற்றும் மரணங்கள் பற்றிய மேலதிக தகவல்களையும் தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிவரங்களையும் WHO அதிகாரிகள் பார்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொவிட் பரிசோதனைகளை கட்டாயமாக்கியுள்ளன. அங்கிருந்து வைரஸ் மீண்டும் பரவக்கூடும் என்று அவர்கள் அஞ்சுவதாகவும் சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் எதிர்மறை பரிசோதனை முடிவை பெறவேண்டும் என்று அந்த நாடு குறிப்பிட்டுள்ளது. கடுமையான பொது முடகத்தை அமுல்படுத்தியருந்த சீனா திடீரென்று முடக்கத்தையும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் இரத்துச் செய்துள்ளது என சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. 5 ஆயிரம் பேர் வரை தொற்றுக்கு உள்ளாவதாக சீனா அறிக்கையிடுகின்ற போதும் சீனர்கள் வெளிநாடு செல்ல சுதந்திரமாக அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனா வெளியிடும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மிகவும் குறைவாக கணக்கிடப்படுவதாகவும் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் நாளாந்தம் தொற்றுக்கு உள்ளாகலாம் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கொவிட் காரணமாக 13 பேர் மாத்திரமே டிசெம்பர் மாதத்தில் மரணமடைந்துள்ளதாக சீனா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதும், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சுகாதார தரவு நிறுவனமான ஏர்ஃபினிட்டி சீனாவில் சுமார் 9,000 பேர் இந்த நோய்த்தொற்றால் நாளாந்தம் மரணமடைவதாக அறிக்கையிட்டுள்ளது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சீனாவை-உலுக்கும்-கொரோனா-தகவல்களை-பகிருமாறு-WHO-அறிவிப்பு/150-309910
  2. ”2023 புதிய தீர்க்கமான ஆண்டாக இருக்கும்” 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்துச் செய்தி வருமாறு, புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம். முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமை மற்றும் நம்மில் பெரும்பாலானோர் சந்தித்த பின்னடைவு ஆகியவற்றை நான் நன்கு அறிவேன். எனினும், நாம் ஏற்கனவே நெருக்கடியான நிலையைக் கடந்துவிட்டதாக கருதுகின்றேன். 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும். பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் இன்னும் அடையத் தவறிவிட்டோம். நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல் முறைமையில் மாற்றம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாது. எதிர்வரும் தசாப்தத்திற்குள் வளமான இலங்கையை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வேலைத்திட்டத்தில் நாட்டை முன்னிலைப்படுத்தி, அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் தீர்க்கமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நம்பிக்கைகளுடன் நாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். http://www.samakalam.com/2023-புதிய-தீர்க்கமான-ஆண்டாக/
  3. யாழ். மாநகர சபைக்கான மேயர் தேர்வு இனி நடக்காது! யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று (31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் யாழ் மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அங்கும் பதில் கிடைக்கவில்லை என்றார். http://www.samakalam.com/யாழ்-மாநகர-சபைக்கான-மேயர/
  4. டுபாய் விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமை டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இது தொடர்பான தொகையை கோட்டாபய ராஜபக்ஷ செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://akkinikkunchu.com/?p=234029
  5. 13 ஆவது திருத்தச்சட்டத்தை அகற்ற ரணில் திட்டம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செய்து இந்தியத் தலையீட்டை இல்லாமல் செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராக அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட 13 ஐ இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றுவற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்பதைச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. மிலிந்த மொறகொட 2002 சமாதானப் பேச்சுக் காலத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையைத் தரமிறக்கும் சர்வதேச நகர்வுகளில் ரணிலுக்கு விசுவாசமாக செயற்பட்டாரோ, அதனையும் விட கோட்டாபய ராஜபக்ச மிலிந்த மொறகொட மீது அதீத நம்பிக்கை வைத்துச் செயற்பட்டிருந்தார். அதாவது 2009 இல் போரை ஆயுதரீதியாக வெற்றிகொண்டது போன்று, அரசியல் ரீதியாக அதுவும் சர்வதேச அரங்கில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்ய மிலிந்த மொறொகொட, சுவிஸ்லாந்தில் தூதுவராகப் பதவி வகிக்கும் சி.ஏ.பிரேமச்சந்திர ஆகியோரை கோட்டாபய நம்பியது போன்று தற்போது ரணிலும் நம்புகிறார். கோட்டாபயவின் நிழல் ஆலோசகராக இருந்த பேராசியர் றொஹான் குணரட்ன “சிறிலங்கா மிலிற்றரி அக்கடமிக் ஜேர்னல்” என்ற ஆங்கிலச் சஞ்சிகையில் எனன சொல்கிறார்? ஏறத்தாள கோட்டாபய வகுத்த வியூகமே இது. மைக் பொம்பியோ அமெரிக்க வெளியுறவுச் செயலாளராகப் பதவி வகித்திருந்தபோதே, இந்தியாவைக் கடந்து அமெரிக்காவுடன் உறவைப் பேணும் உத்தி வகுக்கப்பட்டிருந்தது. போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சர்வதேச பயங்கரவாதத் தடுப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு கோட்டாபயவுக்கும் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த பேராசிரியர் றொஹான் குணரட்ன, மிலிந்த மொறகொட, சி.ஏ.பிரேமச்சந்திர ஆகியோர் தற்போது 13 ஐ நீக்கும் விடயத்தில் குறிப்பாக, இந்தியத் தலையீட்டை தவிர்க்கும் உத்திகளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வகுத்துக் கொடுக்கிறார்கள். இதனை மூத்த இராஜதந்திரியான தயான் ஜயதிலக கொழும்பில் இருந்து வெளிவரும் த.ஐலன்ட் என்ற ஆங்கில நாளிதழில் கடந்த ஒக்டோபர் மாதம் பதினாறாம் திகதி எழுதிய கட்டுரையில் நாசூக்காக விபரிக்கிறார். அதாவது ஜெனிவாவில் இந்தியா மாத்திரமே 13 ஐ வலியுறுத்தி வருகின்றது. அது ஒன்றுதான் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான தொடர்பாகவும் உள்ளது. ஆகவே மேற்படி மூன்றுபேருடைய 13 இற்கும் எதிரான நகர்வுகளைப் பயன்படுத்துவதன் ஊடாக இந்தியத் தலையீட்டை அகற்ற ரணில் முற்படுகின்றார் என்ற தொனியைத் தயான் ஜயதிலக தனது கட்டுரையில் வெளிப்படுத்துகிறார். 13 ஐ அகற்றுவது இலங்கைத்தீவுக்கு ஆரோக்கியமானதல்ல என்ற கருத்தையே அவர் கட்டுரையில் முன்வைத்து ரணிலையும் கண்டிக்கிறார். ஆகவே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு 13 தீர்வு அல்ல. 13 ஐ அடிப்படையாகக் கொண்டு சமஸ்டி முறையை உருவாக்கவும் முடியாது. அதனால் முழுமையான சமஸ்டி முறைதான் தீர்வு என்பதைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2009 இற்குப் பின்னரான சூழலில் இந்தியாவுக்கு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். இந்திய மாநிலங்களில் ஒற்றையாட்சித் தன்மை கொண்ட சமஸ்டி ஆட்சி முறைக்கு மேலதிகமான அதிகாரங்களை உள்ளடக்கிய அரசியல்தீர்வின் அவசியத்தை இந்தியாவுக்கு ஊட்டியிருக்க வேண்டும். இந்தியாவில் பல இனங்கள் வாழ்வதாலும் சீனா – பாகிஸ்தான் போன்ற பெரிய நாடுகள் இந்திய எல்லையில் இருப்பதாலும் அங்கு ஒற்றையாட்சி முறையிலான சமஸ்டி ஆட்சி பொருத்தமானது. ஆனால் இலங்கைத்தீவில் வடக்குக் கிழக்கில் முழுமையான சமஸ்டி ஆட்சிமுறை ஏற்படுத்தினால் மாத்திரமே ஈழத்தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ முடியும். அத்துடன் இந்தோ – பசுபிக் பிராந்தியத்திற்கும் அது பாதுகாப்பானது என்ற கருத்தியலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவுசார்ந்து வலியுறுத்தத் தவறியுள்ளது. 2015 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திரமோடி, பல தேசிய இனங்கள் வாழும் நாடுகளில் கூட்டாச்சி முறையே சிறந்த அரசியல் தீர்வு என்று வலியுறுத்தியிருக்கிறார். மோடி, இலங்கை என்று நேரடியாகக் கூறவில்லை. சிங்கள ஆட்சியாளர்களின் நகர்வை அறிந்து தமது புவிசார் அரசியல் நலனுக்கு ஏற்ப பதின்மூன்றுடன் மட்டுப்படுத்திக் கையாண்ட புதுடில்லியின் போக்குக்கு ஏற்ப தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டதன் ஆபத்துக்களையே, தற்போது ரணில் ஆட்சியில் எதிர்நோக்க நேரிட்டுள்ளது. அதன் வலியை இந்தியாவும் இன்று அனுபவிக்கின்றது. ஆனாலும், இலங்கை நாடாளுமன்றத்திற்குள் நின்றுகொண்டு அந்தக் கருத்தைப் பகிரங்கப்படுத்தியிருக்கிறார் என்றால், அதனைப் புரிந்துகொண்டு தமிழ்த்தேசியக் கட்சிகள் அவ்வாறான ஆட்சி முறைக்குத் தொடர்ந்து வலியுறுத்திருக்க வேண்டும். அத்துடன் இந்திய மாநிலங்களுக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என மோடியை மையப்படுத்திய பா.ஜா.கவும் தற்போது கூறி வருகின்றது. ஆகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பத்தைச் சரியாகக் கையாளவில்லை. இந்த டிசம்பர் மாதம் பன்னிரண்டாம் திகதி த.ஐலன்ட் ஆங்கில நாளிதழுக்குச் சம்பந்தன் வழங்கிய நேர்காணாலில் ரணில் மீதும் இந்தியா மீதும் நம்பிக்கை இழந்து காணப்படுவதை அதவானிக்க முடிகின்றது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிச் சம்பந்தன் அந்த நேர்காணலில் வற்புறுத்துகிறார். இந்தியா மாத்திரமல்ல அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கூட்டுச் சேர்ந்தே ஈழத்தமிழர் விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டுமெனவும் இடித்துரைக்கிறார். அதாவது தனியாக நின்று ஈழத்தமிழர் பிரச்சினையை இந்தியாவினால் கையாள முடியாது என்று சம்பந்தன் எடுத்துரைக்கிறார். ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தை இந்தியா மாத்திரம் தனியாகக் கையாள வேண்டுமென்பது புதுடில்லியின் நீண்டகால விருப்பம். ஆனால் தற்போது இந்தியாவையும் 13 ஐயும் நீக்கிவிட்டு அமெரிக்காவோடு சேர்ந்து வேறொரு வடிவில் புதிய தீர்வை முன்வைக்க ரணிலும் முற்படுகின்றார். தனது நகர்வுக்குச் சாதகமாகவும், தன்னைச் சந்தேகப்படாத முறையிலும் இலங்கையில் இந்தியாவுக்கான முன்னுரிமையை ரணில் வழங்கியுள்ளார். ஆனால் இந்தியாவைக் கடந்து அனைத்து விடயங்களிலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் சமந்தரமான முறையில் கையாள வேண்டும் என்பதையே ரணிலுடைய நகர்வுகள் காண்பிக்கின்றன. 2015 இல் ரணில் பிரதமராகப் பதவி வகித்திருந்தபோதும் அமெரிக்க – சீன அரசுகளுடன் இலங்கை சமாந்தரமான உறவைப் பேணும் என்று ரணில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார். ரணிலின் சர்வதேச ஆதரவின் மாயை’ என்ற கட்டுரையில், தயான் ஜயதிலக. ரணில் விக்கிரமசிங்கவின் மேற்படி அணுகுமுறையைக் கடுமையாகச் சாடுகிறார். எனவே கோட்டாய ராஜபக்சவின் கொள்கையோடு ரணில் பயணிப்பதன் மூலம் ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து ஒதுக்கி அதனை உள்ளக விவகாரமாக மாற்றும் முயற்சி தற்போது வெளிப்படுகின்றது. புதிய அரசியல் யாப்பின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறி ரணில் மேற்கொள்ளும் பரப்புரையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகள் இணங்கிப் போகக் கூடிய வாய்ப்பும் உண்டு. ஆனால் சம்பந்தனுக்கு அந்த நம்பிக்கை இல்லை. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் ரணிலின் புதிய ஏமாற்றுப் புரிகின்றது. ஆனால் சம்பந்தனின் வயது மூப்பினால் கூட்டமைப்பின் தலைமை மாறுமாக இருந்தால், இந்தியாவைக் கடந்து ரணில் கையாள முற்படும் உத்திக்குள் ஈழத்தமிழர் விவகாரத்தை உட்செலுத்துக்கூடிய ஆபத்துக்கள் நேரலாம். ஏனெனில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்களைத் தமிழ்த்தேசிய அரசியலில் இருந்து நீக்கம் செய்து தமிழரக் கட்சியை மாத்திரம் தனித்துச் செயற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சுமந்திரன். ஆகவே ஐலன்ட் நேர்காணலின் பிரகாரம் ரணில் மீதும் இந்தியா மீதும் நம்பிக்கை இழந்து காணப்படும் சம்பந்தன், ஈழத்தமிழர் விவகாரம் இனிமேல் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்ற தனது உத்தியை இறுதிக் காலகட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தாலும், அதனை நேர்த்தியாகக் கொண்டு செல்லக் கூடிய ஆற்றல் மற்றும் இதயசுத்தி உள்ளவர்கள் கூட்டமைப்புக்குள் இல்லை. அப்படி இருந்தாலும். சுமந்திரனைக் கடந்து எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியருந்த சம்பந்தன், போரை முடிவுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நிரந்த அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றும் அப்போது கொழும்பில் இருந்த அமெரிக்க, இந்தியத் தூதுவர்கள் 2009 இல் தனது கொழும்பு இல்லத்துக்கு வருகை தந்து உறுதிமொழி வழங்கியதாகச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் பத்து வருடங்கள் சென்ற நிலையில் இன்னமும் அரசியல் தீர்வு ஏற்படவில்லை என்று கூறியதோடு, அமெரிக்க இந்திய அரசுகள் மீதும் குற்றம் சுமத்தியிருந்தார். தான் ஏமாற்றமடைந்து விட்டதாகவும் அந்த உரையில் கவலை வெளியிட்டிருந்தார். அதேநேரம் வடக்குக் கிழக்குத் தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பதாகச் சம்பந்தன் ஐலன்ட் நேர்காணலில் கூறியிருப்பது மிகத் தவறு. வரலாற்று வாழ்விடங்கள் என்றே ஒப்பந்தத்தில் உள்ளன. அப்போதைய இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் 1998 இல் தான் எழுதிய அசைமென்ற் கொழும்பு (Assignment Colombo) என்ற நூலில் வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகம் (Homeland) என்ற வாக்கியத்தை ஒப்பந்தத்தில் இணைக்க ஜே.ஆர். விரும்பவில்லை என்றும், அதனாலேயே மிகவும் கஷ்டப்பட்டுத் தேடிப் பிடித்து வரலாற்று வாழ்விடங்கள் (Historic) என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகவும் விபரிக்கிறார். அதாவது ஜே.ஆர்.பிடிவாதமாக நின்றதாகக் கூறுகிறார். ஆகவே வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம் என்று ஒப்பந்தத்தில் இல்லை என்பது நிரூபணமாகிறது. இதனைச் சம்பந்தன் போன்ற மூத்த தமிழ்த் தலைவர்கள் மூடி மறைக்காமல், தமிழ் பேசும் தாயகம் என்ற அங்கீகாரத்துடனேயே அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதையும் இந்தியாவுக்கு வலியுறுத்த வேண்டும். இந்தியா அதனை ஏற்குமானால் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அதில் பிரச்சினை இருக்காது. ஆகவே இந்த விடயங்களைப் புரிந்து கொண்டு ஒருமித்த குரலில் தமிழ்த்தரப்பு இந்தியாவை அணுகவில்லை என்பது பட்டவர்த்தனமாகிறது. இருந்தாலும் ரணில் மேற்கொள்ளும் உத்தியின் ஆபத்தை உணர்ந்து இந்தியா மாத்திரமல்ல, அமெரிக்கா பிரித்தானிய போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்தே கையாள வேண்டுமெனச் சம்பந்தன் ஐலன்ட் நேர்காணலில் விடுத்துள்ள எச்சரிக்கையையின் பின்னணியை அறிந்து தமிழ்த்தரப்பு இயங்குமாக இருந்தால், ரணில், மிலிந்த மொறொகொட போன்ற சிங்கள இராஜதந்திரிகளின் ஒற்றையாடசிக் கோட்பாட்டைத் தகர்க்க முடியும். அமெரிக்க – இந்தியப் பனிப்போருக்கு மத்தியில், அவசர அவசரமாக இனப்பிரச்சினைத் தீர்வு என்று கூறிக் கொண்டு 13 ஐ அகற்றி இந்தியத் தலையீட்டையும் நீக்கம் செய்து, புதிய அரசியல் தீர்வு என்ற தோற்றப்பாட்டை உருவகப்படுத்த ரணில் எடுக்கும் முயற்சிக்குத் தமிழர்கள் சிலர் ஒத்துழைப்பு வழங்குகக்கூடிய ஆபத்துக்களும் இல்லாமல் இல்லை ரஷ்ய ஆதரவும் இந்தோ – பசுபிக் விவகாரத்தில் அமெரிக்க ஆதரவு என்றும் இரட்டைத் தன்மையுடைய இந்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அமெரிக்கா பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்திருக்கிறது. எனவே உக்ரைன் போர்ச் சூழலில் இந்திய நிலைப்பாடு குறித்து அமெரிக்கா அதிருப்தியடைந்துள்ளதை ரணில் அறியதாவரல்ல. அமெரிக்காவும் ரணிலின் உத்திக்கு ஆதரவும் வழங்கக்கூடும். ஏனெனில் உக்ரைன் போர்ச் சூழலில் உலக அரசியல் ஒழங்கு இன்னமும் ஒரு சமன்பாட்டுக்கு வரவில்லை. ஆகவே அமெரிக்க – இந்தியப் பனிப்போருக்கு மத்தியில், அவசர அவசரமாக இனப்பிரச்சினைத் தீர்வு என்று கூறிக் கொண்டு 13 ஐ அகற்றி இந்தியத் தலையீட்டையும் நீக்கம் செய்து, புதிய அரசியல் தீர்வு என்ற தோற்றப்பாட்டை உருவகப்படுத்த ரணில் எடுக்கும் முயற்சிக்குத் தமிழர்கள் சிலர் ஒத்துழைப்பு வழங்ககக்கூடிய ஆபத்துக்களும் இல்லாமில்லை. அதாவது கோட்டாபயவின் இந்த நகர்வை அவருடன் சேர்ந்து 2020 இல் கையாளத் தயங்கிய சில தமிழர் தரப்புகள் தற்போது ரணிலுடன் இணைந்து கையாள விரும்பக்கூடும். ஆனால் ரணிலின் இந்த நகர்வில் அரசியல் தீர்வு என்ற கதை வெறுமனே ஒரு உருவகப்படுத்தல் மாத்திரமாகவே அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. அத்துடன் ஈழத்தமிழர் விவகாரம் என்பது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பிரச்சினையாகவும் ரணில் சித்தரிக்கிறார். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், சிங்கள மக்கள் எல்லோருக்கும் பிரச்சினை உள்ளது என்று பொதுமையாகக் கூறுவதன் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய தமிழ்த்தேசியக் கோட்பாட்டை அகற்றுவதே அதன் பிரதான நோக்கம். ஆகவே இறுதியில் பதின்மூன்றும் இல்லை, இந்தியத் தலையீடும் இல்லை என்ற நிலை உருவாகும். ‘ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குப் பிரச்சினைகள் இருக்கலாம். ஆகவே வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினை வேறு அதனைத் தனியாகவே பேசித் தீர்க்க வேண்டும் என்று சம்பந்தன் ஐலன்ட் நேர்காணலில் அடித்துக் கூறியதன் காரண காரியமும் இதுவாகத்தான் இருக்க வேண்டும். எனவே 13 அரசியல் தீர்வு அல்ல என்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்ற தமிழ்த்தரப்புகள், இறுதி நேரத்தில் சம்பந்தன் தான் விட்ட தவறுகளை உணர்ந்தோ அல்லது விரும்பியோ விரும்பாமலோ ஐலன்ட் நாளிதழில் முன்வைத்துள்ள சில நியாயங்களை ஒருமித்த குரலில் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமிது. எதிர்த்துவிட்டு வெளியில் நிற்காமல், தற்போது உருவாகியுள்ள புவிசார் அரசியல் – பொருளாதார நெருக்கடிக்குள் ஈழத்தமிழர் தொடர்பாகச் சர்வதேசத்தை நோக்கிய சரியான உத்தியை வகுக்க வேண்டும். ஒருமித்த குரலில் கூட்டாச்சி முறைக்கு அல்லது முழுமையான சமஸ்டிக் கோரிக்கையை முன்வைப்பதற்குரிய ஏற்பாட்டை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தற்துணிவோடு நகர்த்த வேண்டிய தருணமிது. “இலங்கையின் தேசிய பாதுகாப்பை மறுபரிசீலனை செய்தல் புரிந்து கொள்ளுதல் தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்களுக்கு பதிலளிப்பது” என்ற தலைப்பில் கோட்டாபயவின் நிழல் ஆலோசகராக இருந்த பேராசியர் றொஹான் குணரட்ன (Rohan Gunaratna) சிறிலங்கா மிலிற்றரி அக்கடமிக் ஜேர்னல் (Sri lanka Military Academy Jurnal) என்ற ஆங்கிலச் சஞ்சிகையின் இந்த மாதம் வெளியான நான்காவது இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு பலவீனமாகியுள்ளது எனவும் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தக் கூடியதாக இல்லை என்றும் அதற்குரிய காரண காரியங்களையும் பேராசிரியர் தனது கட்டுரையில் முன்மொழிந்திருக்கிறார். இறுதிக்காலத்தில் சம்பந்தன் தான் விட்ட தவறுகளை உணர்ந்தோ அல்லது விரும்பியோ விரும்பாமலோ ஐலன்ட் நாளிதழில் முன்வைத்துள்ள சில நியாயங்களை ஒருமித்த குரலில் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமிது தேசிய பாதுக்காப்புச் சட்டங்கள், இலங்கை இராணுவத்தைப் பாதுகாத்தல், இராணுவத்துக்கு எதிரான இணையத்தளப் பிரச்சாரங்கள் மற்றும் இலங்கையின் காலநிலை. உணவுப் பாதுகாப்பு. சுகாதாரம் ஆகியவற்றை மேற்படுத்த வேண்டிய அவசியம் பற்றிய நீண்ட ஆய்வுச் சஞ்சிகையில் இலங்கையின் ஒருமைப்பாட்டை, அதாவது ஒற்றையாட்சி மற்றும் சிங்கள தேசம் என்பதை நிறுவும் கோட்பாட்டு முறையை அறிமுகம் செய்துள்ளார். வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்ற தொனியைப் பேராசிரியர் வெளிப்படுகிறார். ரணில் மாத்திரம் அல்ல, இலங்கைத்தீவில் எவர் ஆட்சியமைத்தாலும் றொஹான் குணரட்ன வகுத்த ஆய்வின் அடிப்படையில் இலங்கை நிர்வாகம் அமைய வேண்டும் என்ற பரிந்துரையும் கண்கூடாகத் தெரிகிறது. எனவே 13 ஐ ஆரம்பப் புள்ளியாக நோக்கி மோடிக்குக் கடிதம் எழுதிய ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகளும் முழுமையான சமஸ்டிக்கு ஏற்ப இந்தியாவைக் கையாளக்கூடிய உத்திகளை அப்போதே வகித்திருக்க வேண்டும். மாறாகச் சிங்கள ஆட்சியாளர்களின் நகர்வை அறிந்து தமது புவிசார் அரசியல் நலனுக்கு ஏற்ப பதின்மூன்றுடன் மட்டுப்படுத்திக் கையாண்ட புதுடில்லியின் போக்குக்கு ஏற்ப தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டதன் ஆபத்துக்களையே, தற்போது ரணில் ஆட்சியில் எதிர்நோக்க நேரிட்டுள்ளது. அதன் வலியை இந்தியாவும் இன்று அனுபவிக்கின்றது. அதாவது பதின்மூன்றுடன் சேர்த்து இந்தியாவையும் அகற்றி அமெரிக்க – சீன அரசுகளுடன் இந்தியாவைக் கடந்து நேரடி இராஜதந்திர உறவைப் பேண வேண்டும் என்ற சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பங்களின் ஆபத்துக்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பகிரங்கப்படுத்தவில்லை. அத்துடன் ஈழத்தமிழர்களின் இந்தியா மீதான நம்பிக்கையின் வகிபாகம் எதுவாக இருக்கும் என்பது பற்றி உரிய முறையில் வெளிப்படுத்தவுமில்லை. வெறுமனே கையாளப்படும் சக்தியாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தியதன் பாதக விளைவுகளையே இன்று இந்தியா அனுபவிக்கின்றது. ஈழத் தமிழர்களை திரிசங்கு நிலைக்கும் அது தள்ளியுள்ளது. தற்போது ரணில் நடத்தவுள்ள பேச்சுக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோருவது பாதை தவறிய நீதி எனலாம். https://akkinikkunchu.com/?p=234036
  6. ரஷ்யா உக்கிரேனில் நடாத்தும் விஷேட நடவடிக்கையில் வெற்றியீட்டியதாக அறிவிக்கும். ரணில் சிறிலங்காவில் மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். பிரித்தானியாவில் வீட்டு விலைகள் குறையும். ஆனால் வாங்க காசு இருக்காது! தமிழ்த் தேசிய அரசியலில் இந்தியாவின் தலையீடு அதிகரிக்கும்
  7. தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது புருஜோத்தமன் தங்கமயில் அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும். தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியலும், இன்றைக்கு தோல்வியின் அடையாளமாக நோக்கப்படுவதற்கு, சந்தர்ப்பங்களைக் கையாளத் தெரியாத, தூரநோக்கற்ற, குறுகிய சுயநல அரசியலே பிரதான காரணம் எனலாம். இலங்கை, உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார - இராஜதந்திர நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான அவசரத்தைக் காட்டுகின்றது. அதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய படை பட்டாளத்தோடு களத்தில் இறங்கியிருக்கிறார். உள்ளூரில் ராஜபக்‌ஷர்களோடு கூட்டு அமைத்திருக்கின்ற ரணில், சர்வதேச நெருக்கடிகளை நீக்குவதற்காக எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்களை அழைத்து வந்திருக்கிறார். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாள்வது மாத்திரமன்றி, சந்தர்ப்பங்களை உருவாக்கி, அதிலும் வெற்றிபெறுவதற்காக அவர் இயங்கிக் கொண்டிருக்கின்றார். அதன்போக்கில்தான், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு, அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வைக் காண்பது என்கிற பொறியையும் அவர் வைத்திருக்கின்றார். ரணில் வைத்திருக்கின்ற பொறியில் சிக்கிக் கொள்ளாமல், தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றியை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் சிந்திப்பதுதான் தமிழ்த் தேசிய கட்சிகள் முன்னாலுள்ள ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளும் அதன் தலைவர்களும், தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றி என்கிற புள்ளியைப் புறந்தள்ளிவிட்டு, தனிப்பட்ட தங்களின் பதவி வெ(ற்)றிக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து நின்று போட்டியிட்டன. அதனால், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் வெற்றி, வடக்கு - கிழக்கில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அதிகரிக்கக் காரணமானது. யாழ்ப்பாணத்தில் அங்கஜனின் பெரு வெற்றியும், சுமார் 3,000 விருப்பு வாக்குகளைப் பெற்ற திலீபன், வன்னி மாவட்டத்திலிருந்து ஈ.பி.டி.பி சார்பில் வெற்றி பெறுவதற்கும், அம்பாறையில் கிடைக்க வேண்டிய ஓர் ஆசனமும் கருணாவிடம் காவு கொடுக்கப்படவும் தமிழ்த் தேசிய கட்சிகளின் முரண்பாடுகள் காரணமாகின. இந்த முரண்பாடுகள் கொள்கை, கோட்பாடுகள் சார்ந்து எழுந்ததல்ல; மாறாக, தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள் ‘நான் பெரிதா, நீ பெரிதா’ என்கிற இழுபறியாலும் சுயநல போக்காலும் ஏற்பட்டது. இப்போது, தமிழ்த் தேசிய கட்சிகளை ஓர் அணியாகப் பேச்சுவார்த்தை மேடைக்கு வருமாறு ரணில் வலையை விரித்திருக்கின்றார். அவர் விரித்திருக்கும் வலை, கிட்டத்தட்ட ‘மாயவலை’. சர்வதேச ரீதியில் இலங்கையை நெருக்கடிகளில் இருந்து மீட்பதோடு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கங்களைக் கொண்டது. குறிப்பாக, தமிழ் மக்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தனக்கு எதிராகக் களத்தில் நிற்கவுள்ள சஜித்துக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதால், அதை இல்லாமல் செய்வதற்கான நோக்கத்திலானதாகும். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் தேர்தல் வாக்களிப்பை புறக்கணித்ததால், ஒரு இலட்சத்து எண்பதாயிரம் வாக்குகளால் அவர் ராஜபக்‌ஷவிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். தமிழ் மக்கள் அப்போது வாக்களித்திருந்தால், அந்த வாக்குகளில் 90 சதவீதமானவை ரணிலுக்கே கிடைத்திருக்கும். ஆனால், இப்போது நிலைமை அப்படியல்ல; ரணில் - ராஜபக்‌ஷர்களின் கூட்டு. அதனால், ரணிலுக்கு எதிரான வேட்பாளரை நோக்கியே, தமிழ் மக்கள் நகர்வார்கள். அந்த நகர்வில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். அப்படியான நிலையில், கூட்டமைப்பை உடைத்து, பல கோணங்களில் சிதற வைப்பது என்பது, தமிழ் மக்களின் வாக்குகளை ஓரணியில் திரள்வதைத் தடுப்பதற்கான உத்தி என ரணில் நினைக்கிறார். அதனால்தான், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, தனக்கு வாக்களித்தவர்கள் யார் யார் என்பதெல்லாம் தனக்குத் தெரியும் என்று, கூட்டமைப்புடனான சந்திப்பில் ரணில் கூறவும் செய்தார். கூட்டமைப்பு பலம் பெறுவதையோ, தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள்வதையோ, தென்இலங்கையின் எந்தச் சக்தியும் எந்தக் காலத்திலும் விரும்பாது. ரணிலும் அதே புள்ளியில் நின்றுதான் விடயங்களைக் கையாள்கிறார். ஆனால், இந்த வெளிப்படையான சதி வலையில் சிக்காமல், விலகி நின்று, தமிழ் மக்களின் இறைமையையும் உரிமையையும் காக்க வேண்டிய பொறுப்புடையனவாக இருக்கும் தமிழ்த் தேசிய கட்சிகள், தங்களின் தனிப்பட்ட தேர்தல் இலாபநட்டக் கணக்கை பார்க்கத் தொடங்கி விட்டன. எதிர்வரும் ஆண்டு முதல் காலண்டுக்குள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அதன், பின்னராக வரப்போகும் மாகாண சபைத் தேர்தல்கள், பொதுத் தேர்தலுக்கான பரீட்சார்த்த களமாக இருக்கும். ஏனெனில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட ராஜபக்‌ஷர்கள், 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களது மீள்வருகையைப் பதிவு செய்தனர். தென்இலங்கை பூராவும் ராஜபக்‌ஷர்களுக்கான வெற்றி பறைசாற்றப்பட்டது. அந்தத் தேர்தலில் வடக்கு - கிழக்கில், கூட்டமைப்பு முதல் முதலாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அது, கடந்த பொதுத் தேர்தலில் பெருவாரியாக பிரதிபலிக்கவும் செய்தது. 16 பாராளுமன்ற உறுப்பினர்களோடு இருந்த கூட்டமைப்பு, 10 உறுப்பினர்களுக்குள் சுருங்கியது. தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்கள் தோற்றும் போனார்கள். அப்படியான நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என்பது, தமிழ் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் களம். அந்தக் களத்தை சாதகமாகக் கையாள வேண்டும் என்பது ஒவ்வொரு தேர்தல் மையக் கட்சியினதும் இலக்காக இருக்கும். இது, அடிப்படையில் தவறும் இல்லை. ஆனால், இந்தத் தேர்தல் களத்தில் வெற்றி காண்பதற்காக, மிக முக்கியமான பேச்சுவார்த்தைக் கட்டத்தை வைத்து, கேலிக்கூத்து நாடகத்தை தமிழ்த் தேசிய கட்சிகள் ஆடுகின்றன. அரசுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை திகதிகளை திட்டமிடும் சந்திப்புக்கான அழைப்பை ஜனாதிபதி விடுத்தால், அந்தக் கூட்டத்தில் தங்களால் பங்கெடுக்க முடியாது என்றதும், அதில் குறு அரசியல் செய்ய சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் முயல்கிறார்கள். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னமும் தமிழ்த் தேசிய கட்சிகளின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன்தான். அவரை முன்னிறுத்தித்தான் பேச்சுவார்த்தை மேடையில் எந்தத் தமிழ்த் தேசிய கட்சியாக இருந்தாலும் அமர வேண்டும். அதனால்தான், தமிழ்த் தேசிய முன்னணி, பல்வேறு காரணங்களைச் சொல்லி அதனை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டது. சம்பந்தன் முன்னிலை வகிக்கும் தரப்பில், எம்.ஏ சுமந்திரன் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பார். ஏனெனில், தந்தை செல்வாவின் மனச்சாட்சியாக இருந்த அமிர்தலிங்கம் மாதிரி, இன்றைக்கு சம்பந்தனின் குரலாக சுமந்திரனே ஒலிக்கின்றார். சுமந்திரன் இல்லாமல் சம்பந்தன் எந்தச் சந்திப்பிலும் கலந்து கொள்வதில்லை. பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திக்க விரும்பினாலும் கூட, “சுமந்திரனையும் அழைக்கவா” என்று அவர் கேட்கும் நிலையில் இருக்கிறார். ஏனெனில், அவரது உடல்நிலை தளர்வடைந்துவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பது, பல தருணங்களில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கே விளங்குவதில்லை. அதனால், சம்பந்தனின் குரலாக அங்கு சுமந்திரன் அவசியமாகிறார். அது, சுமந்திரனுக்கான முக்கியத்துவத்தை உருவாக்கிவிட்டது. அதனால்தான், பேச்சுவர்த்தைக்கான திகதிகளை, முன்னேற்பாடுகளை தீர்மானிக்கும் சந்திப்புக்கு, தங்களை நேரடியாக அழைக்காமல் சுமந்திரன் ஊடாக அழைத்ததால், விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கெடுக்கவில்லை. அதில், அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தது முக்கிய காரணம். இவ்வாறான சூழலில், ரணிலுடன் சம்பந்தனும் சுமந்திரனும் சந்திப்பதானது, தங்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்கின்றது என்று எண்ணியதும், பேச்சுவார்த்தைக்கான விடயத்தில் சுமந்திரனை முன்னிறுத்தக்கூடாது என்ற சாரப்பட ரணிலுக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதுகிறார். உண்மையில் இந்தக் கடிதம், தென் இலங்கையில் கொண்டாட்டங்களை வரவழைக்கக்கூடியது. இருக்கின்ற 13 தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் பல பிரிவுகள்; இவர்கள் எந்த இடத்திலும் ஓரணியில் வரமாட்டார்கள்; அதனால், பேச்சுவார்த்தை மேடையில் ஏதுவும் நிகழாது; சர்வதேசத்துக்கு தமிழ் மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாதிரி காட்டியும் ஆகிவிட்டது; அது சாத்தியமான அடைவுகளை அடையாது விட்டமைக்கு, தமிழ்த் தேசிய கட்சிகளின் இழுபறியை காரணம்காட்டியும் ஆகிவிட்டது என்று விடயத்தை முடித்துவிடுவார்கள். அதற்கான ஏற்பாடுகளைத்தான், தமிழ்த் தேசிய கட்சிகளின் தூரநோக்கற்ற தலைவர்கள் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இது, தமிழ்த் தேசிய போராட்டத்தை இன்னும் பலமாக தோற்கடிக்கவே செய்யும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகள்-தமிழ்-மக்களைத்-தோற்கடிக்கக்-கூடாது/91-309879
  8. உங்களுக்கு தோதான கோவாக்காரியை பார்க்க மெதுவாகவே போயிருக்கலாம்🤪
  9. பள்ளிகளில் தமிழ் காணாமல் போனது எப்படி? -சாவித்திரி கண்ணன் மூன்று தலைமுறைகள் தமிழ் தெரியாமல் உருவாகியுள்ளன! இளம் தலைமுறையினருக்கு தாய்மொழியே அன்னியமாகி விட்டது. பள்ளிகளில் தமிழை கற்பிக்க தமிழ்நாட்டில் 1968 தொடங்கி, இன்று வரை பல ஆணைகள், சட்டங்கள் போட்டுள்ள போதிலும், கல்வி நிலையங்களில் தமிழ் காணாமல் போன மர்மம் என்ன..? தமிழ்நாட்டில் தமிழ் உணர்ச்சியைத் தூண்டி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடித்த இயக்கம் திமுக! ஆனால், அப்படி ஆட்சிக்கு வந்து 54 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கல்விக்கூடங்களில் முன்பு இருந்த தமிழ் ஏன் தற்போது இல்லாமல் போனது என்பது ஆச்சரியமாக உள்ளது! இத்தனைக்கும் தமிழைக் கட்டாய பாடமாக்க திமுக, அதிமுக அரசுகள் தொடர்ந்து பல சட்டங்கள் போட்டனர். ஆயினும், தமிழகத்தில் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாமலே இரண்டு தலைமுறை உருவாகி, மூன்றாவது தலைமுறையும் தமிழ் கற்காமலே உருவாகிக் கொண்டுள்ளது! இது தொடர்பாக சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழகப் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டும் ஏன் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை? எனக் கேட்டு, அதற்கு தமிழக அரசு விபரமாக பதில் அளிக்கும்படி உத்திரவிட்டு உள்ளது. தமிழ் கற்பித்தல் தொடர்பாக இது வரை தமிழ்நாட்டு திமுக, அதிமுக அரசுகள் ஏராளமான அரசு ஆணைகள் வெளியிட்டு உள்ளனர். ஆயினும், நாளுக்கு நாள் தமிழகப் பள்ளிகளில் தமிழ் காணாமல் தான் போய்க் கொண்டுள்ளது! பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரா போன்றவற்றில் அவரவர்களின் தாய் மொழிக் கல்வி எந்த சிரமமும் இல்லாமல் ஒரு மொழிப் பாடமாக இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் என்ன காரணத்தால் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் கூட அமல்படுத்த முடியவில்லை என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம். பயனற்றுப் போன அண்ணாவின் ஆணை பேரறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்த போது ஜனவரி 1968 ல் மும்மொழிக் கொள்கையை தவிர்த்து, இருமொழிக் கொள்கைக்கான (அரசாணை எண். 105) ஆணை பிறப்பித்தார்! ‘தமிழகத்தில் “வட்டார மொழி அல்லது தாய்மொழி”வழியாக பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டது. இதில், தமிழ் என்ற வார்த்தை இல்லாத காரணத்தால் இந்த ஆணைப்படி தமிழ் கற்பிக்காமல் தவிர்க்கவும் வாய்ப்பு தரப்பட்டதாகவே கருதி, தனியார் பள்ளிகள் வட்டார மொழியாக, தாய் மொழியாக ஏதேனும் ஒரு மொழியை அடையாளப்படுத்தி தங்கள் கல்வி வியாபாரத்தில் தொடர்ந்து கல்லா கட்டி வந்தனர். அறிஞர் அண்ணா இதை அறிந்த தமிழ்ச் சான்றோர்கள், ”இந்த ஆணையில் தமிழ் என்ற வார்த்தை தெளிவாக குறிப்பிடாதது தான் தோல்விக்கு காரணமாயிற்று” என கொந்தளித்து பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தினர்.இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகே தன் தவறை திருத்திக் கொள்ள திமுக அரசு முன் வந்தது! கண் துடைப்பான கருணாநிதியின் ஆணைகள் தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்த போது டிசம்பர்.1999 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 354ன்படி, “தமிழ் அல்லது தாய்மொழி” என்று திருத்தப்பட்டது. மேலும், அரசாணை எண். 324 ன் படி, ”அனைத்துப் பள்ளிகளிலும் (மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளிகள், உதவி பெறும், உதவி பெறாத அங்கீகாரம் பெற்ற பள்ளிகள்) முதல் மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி இருக்கும்” எனச் சொல்லப்பட்டது. மேலும், ”பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி பயிற்று மொழியாக இருக்கும். 6ஆம் வகுப்பு முதல் தமிழ், தாய்மொழி அல்லது ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும்’’ என்றது. சொக்க வைக்கும் தமிழில், சுவைபடப் பேசிய கலைஞர் கருணாநிதி! இந்த ஆணையிலும் கூட தமிழ் அல்லது தாய்மொழி என இரண்டு வாய்ப்புகள் தரப்பட்டுள்ளதன் மூலம் தழிழை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தனியார் கல்வி நிறுவன முதலாளிகள் கண்டடைந்தனர்! எனினும் கூட, இந்த அரசாணையை 324ஐ எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் பல்வேறு அமைப்புகள் ரிட் மனுக்களை முதல் பெஞ்சில் தாக்கல் செய்தார்கள். உயர்நீதி மன்றத்தின் முழு பெஞ்ச் ரிட் மனுக்களை ஏற்றுக் கொண்டு அரசாணையை ரத்து செய்தது. உயர்நீதி மன்ற முழு பெஞ்சின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையிலே உள்ளது. இன்று வரை தமிழ் கற்பதில் இருந்து மொழி சிறுபான்மையினர் விலக்கு பெற்றே வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் 2003-2004 கல்வி ஆண்டு முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிப்படியாக அறிவியல் தமிழ் என்னும் பாடத்தைக் கற்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிறகு, 12 ஆம் வகுப்பு வரை அறிவியல் தமிழ் கற்பிக்க வேண்டும் என்றார். இந்த ஆணை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரளவு நடைமுறையில் உள்ளது. செல்லுபடியாகாத ஜெயலலிதாவின் ஆணைகள்! ஆனால், இந்த ஆணை பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அமலாகவில்லை! அப்படி அமலாக்கப்படுவதிலும் அரசு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தனியார் பள்ளி முதலாளிகளுக்கு தான் அரசியல் லாபி கைவந்த கலை ஆயிற்றே! பிறகு, 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கருணாநிதி தமிழ் மொழி கற்கும் சட்டத்தை அமல்படுத்தினார். இந்த முறை மிக ஜாக்கிரைதையாக தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொள்ள நிர்பந்திக்காமல், தமிழை ஒரு பாடமாகவேனும் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க அரசு தனியார் பள்ளி முதலாளிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டது. அதையும் கூட, இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்புக்கு மட்டும் தொடங்கினால் போதும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு மூன்று என விரிவுபடுத்தி பத்தாண்டுகளில் பத்தாம் வகுப்பு வாரி தமிழும் ஒரு மொழிப் பாடமாக ஆகட்டும் என்றது தமிழக அரசு! இதிலும் கூட, ஆத்திரம் அடைந்து தனியார் பள்ளி முதலாளிகளும், டிராபிக் இராமசாமி போன்ற பார்ப்பனர்களும் நீதிமன்றம் சென்றனர். ஆனால், நீதிமன்றம், ”இந்த நியாயமான சட்டத்தையும் எதிர்ப்பது முறையல்ல” என தமிழக அரசின் சட்டத்தை அங்கீகரித்தது. ஆனால், மிகப் பெரிய துர்அதிர்ஷ்டம் இந்த சட்டமும் பெயரளவுக்கு தான் கொண்டுவரப்பட்டது. சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. தமிழ் ஆசிரியர்கள் நியமனமே இல்லை! ஜெயலலிதா அரசும், கருணாநிதிக்கு போட்டியாக 2014 ஆம் ஆண்டு இதே போல ஒரு ஆணை பிறப்பித்து, அதுவும் அம்பேல் ஆனது. இன்று வரை தமிழக அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளுமே கூட தமிழுக்கான ஆசிரியர் பணியிடங்கள் சரியாக நிரப்படுவதில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு ஒப்புதலே தருவதில்லை என நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கே இந்த நிலைமை என்றால், தனியார் பள்ளி விவகாரங்களில் அரசு தலையிட்டு தமிழ் விஷயத்தில் நியாயத்தை நிலை நாட்டிவிடும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அப்புறம், எப்படி தமிழ் கற்பது நடைமுறைக்கு வரும்? தமிழ் என்றாலே கதி கலங்கும் மாணவர்கள் இந்த சட்டத்தை திமுக, அதிமுக மனப்பூர்வமாக அமல்படுத்தாதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டுமே 47,055 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த மாணவர்களை பொறுத்த வரை தமிழால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. முறையான தமிழ் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், தற்போது தமிழக மாணவர்கள் பெரும்பாலோருக்கு தமிழ் என்றாலே, எட்டிக்காயாகக் கசக்கிறது! இப்படி இன்பத் தமிழை இளம் தலைமுறையினர் துன்பத் தமிழாக உணர்வதற்கு யார் பொறுப்பு? என்ன காரணம்..? எனத் தீவிரமாக ஆய்வு செய்து உடனடியாக அதை களைய வேண்டும். எழிலார்ந்த பள்ளி கட்டிடத்தை நோக்கி ஷு, சாக்ஸ் போட்டு பொதி மூட்டை சுமக்கும் குழந்தைகளுக்கு தமிழ் எட்டாக் கனியானது! உலகத்தில் முன்னேறியுள்ள பல நாடுகளில் – குறிப்பாக ஜெர்மன், ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா..போன்ற நாடுகளில் – தாய் மொழியில் தான் அனைத்தும் கற்பிக்கப்படுகிறது. அங்கெல்லாம் தாய் மொழி படிப்பதும், பேசுவதும் இயல்பாக உள்ளதே அன்றி, இழிவாகக் கருதப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட ஆங்கில மொழியையே இன்னும் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். காரணம், இங்குள்ள ஆதிக்க சக்திகள் தொடர்ந்து எளிய மக்களை கல்வியில் இருந்தும், சமூக கருத்தாக்கத்தில் இருந்தும் தள்ளி வைக்க ஆங்கிலம் ஒரு கருவியாக உள்ளது. அதனால் தான், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், அரசு நிர்வாக அலுவலகங்கள் அனைத்திலும் ஆங்கிலத்தையே இன்னும் கோலோச்ச வைத்துள்ளனர். ஆகவே, நாட்டிற்கு சுதந்திரம் பெற்ற போதிலும், இன்றைய ஆட்சியை நாம் அடிமை ஆட்சியின் நீட்சியாகக் கொள்வதே சரியாகும். இந்தியை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட, இந்தி எதிர்க்கப்படுவதை விட, ஆங்கிலம் எதிர்க்கப்படுவதற்கே அதிக நியாயம் உள்ளது. ஏனென்றால், இந்தி ஒரு வெகுமக்கள் மொழி என்பதால் அது கற்றுக் கொள்வது சற்று எளிது. ஆங்கிலம் அளவு அதில் சிரமம் இருந்திருக்காது. ஆனால், வெளிநாடுகளுக்கு செல்வதற்கும், அறிவியல் அறிவு பெறுவதற்கும் ஆங்கிலம் அவசியம் என்ற வாதம் வைக்கப்பட்டது. இது ஒரு மிகத் தவறான வாதம். எப்படி என்றால், தமிழ் மொழியிலேயே எல்லா அறிவியல் நுட்பங்களையும் எளிதில் கொண்டு வரத்தக்க அறிஞர்கள் நம்மில் நிறைய பேர் இருக்கின்றனர். அது மட்டுமின்றி, பள்ளி பயிலும் மொத்த மாணவர்களில் அதிக பட்சம் மூன்று சதவிகிதமானவர்கள் தான் வெளிநாட்டு வேலைக்கு செல்லக் கூடியவர்கள். அவர்களுக்காக எல்லோரும் சிலுவை சுமப்பதா? அதற்கும் கூட, ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக இருந்தாலே போதுமானது! அப்படித்தான் பல பெரும் அறிஞர்கள் தமிழ் வழி கல்வி கற்று பெரிய அறிவாளிகளாக, துணைவேந்தர்களாக, அறிவியலாளர்களாக உயர்ந்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் என்பது தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கான கருவி என்ற அளவிலேயே அரசியல்வாதிகளுக்கு பயன்படுகிறது. அதே சமயம் மத்திய ஆட்சியாளர்கள் இந்தி மற்றும் சமஸ்கிருதம் விவகாரத்தில் மிகத் தெளிவாக உள்ளனர். பள்ளிக் கூடத்தின் பெயர் பலகையிலேயே இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளன மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலயாவில் ஹிந்தி, சமஸ்கிருதம் மட்டுமே கட்டாயமாக உள்ளது. அங்கு தமிழோ பிற இந்திய மொழிகளோ சொல்லித்தரபடுவதில்லை மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டாயம் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும். அவர்கள் 6 ஆம் வகுப்பில் சமஸ்கிருதம் படித்து பாஸ் செய்தால் மட்டுமே 7 ஆம் வகுப்பு தேர்ச்சி அறிவிக்கப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சம்ஸ்கிருத மொழியை தவிர்த்து தமிழ் மொழியை படிக்க முடியாது. தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என்பது தான் நிலவரமாகும்! மலிவான விளம்பரத்திற்காக பள்ளிக் கூட வகுப்பறை சென்று உட்காரும் முதல்வர் ஸ்டாலின்! தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களால் தமிழ் கற்றல் தொடர்பான சட்டங்களோ, ஆணைகளோ தொடர்ந்து தெளிவில்லாமல் போடப்படுகின்றன! தமிழ் நாட்டில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்க வேண்டும் என இதுவரை எந்த அரசும் ஆணை பிறப்பிக்கவில்லை. அதிலேயே, ஒரு உறுதிப்பாடின்மை தெரிகிறது. பயன்பாடில்லாத சமஸ்கிருதத்தின் மேல் மத்திய ஆட்சியாளர்கள் காட்டும் ஆர்வத்தில் சிறுதுளியேனும் நம் ஆட்சியாளர்களுக்கு இல்லையே! அதுவும், தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை அழிப்பதற்கு மத்திய ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பின்றி நிறைவேற்றி வருகிறது. இந்தச் சூழலில் தமிழ் கல்வி குறித்த ஆர்வம் இவர்களிடம் எள்ளவும் தெரியவில்லை. பொதுவாக, தாங்கள் போடும் தமிழ் கல்வி சார்ந்த ஆணைகளை நிறைவேற்றுவதில் உள்ளார்ந்த, உண்மையான ஈடுபாடு தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா போன்றவற்றில் தாய் மொழியை தவிர்க்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாய்கின்றன! தமிழ் நாட்டில் அவ்வாறு இல்லை. மொழி உணர்வு பொங்கி பிரவாகமெடுக்கும் தமிழகத்தில் தான் மொழியின் பெயராலான பித்தலாட்ட அரசியலும் தழைத்தோங்குகிறது! சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ் https://aramonline.in/11790/why-tamil-education-failure-in-t-n/
  10. மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல். kugenDecember 30, 2022 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (29) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடலின்போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளும்போது எற்படும் நிர்வாக எல்லை பிரிப்புக்கள் தொடர்பான பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கான ஆலோசனை மற்றும் கருத்துக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமுக அமைப்புக்களின் பிரதி நிதிகளினால் முன் மொழியப்பட்டு அதன் சாத்திய வள நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் பொருத்தமான தீர்மானம் எடுக்கப்பட்டது. தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் எல்லை நிர்ணயம் தொடர்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னால் இராஜாங்க அமைச்சர் அமிர்அலி, முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் தனிப்பட்ட செயளாலர் த.தஜிவரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ஜெய்தன்,பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாலர் சுபியான் , உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரகாஷ், துரைசார் நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். http://www.battinews.com/2022/12/blog-post_439.html
  11. இந்தியப் பிரதமர் மோடியின் தாயார் காலமானார் 30 Dec, 2022 | 08:08 AM உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 100 என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, வைத்தியசாலை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்தோ எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தோ வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்படாத நிலையில் சற்றுமுன் அவர் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன். 100 ஆவது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/144488
  12. எத்தியோப்பியாவில் முடிவுக்கு வந்தது உள்நாட்டு போர் 30 Dec, 2022 | 09:11 AM ஆபிரிக்க ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மூலம் எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இந்த போரில் அப்பாவி மக்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலவரக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் நெருக்கடி நிலையை எத்தியோப்பியா அரசு அறிவித்தது. இதனால் நாட்டின் ஏனைய நகரங்களுடனான போக்குவரத்து வசதி திடீரென துண்டிக்கப்பட்டது. மேலும் தொலைபேசி சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிக்கி கொண்டவர்கள் தங்களது சொந்த பகுதிகளுக்கு கூட செல்ல முடியாமல் கடந்த 2 ஆண்டுகளாக தவித்தனர். இந்தநிலையில் தற்போது ஆப்பிரிக்க ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மூலம் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கி கொண்டவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். https://www.virakesari.lk/article/144491
  13. கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க அலுவலகத்தை உடைத்தமைக்கு எதிராக போராட்டம் By Vishnu 30 Dec, 2022 | 01:51 PM கிளிநொச்சி தொண்டமான் நகர் பகுதியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பு அலுவலகம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதை கண்டித்து இன்றையதினம் (30) வாயில் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான் நகரில் அமைந்துள்ள பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் மாவட்ட இணைப்பு அலுவலகம் நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த இரண்டு மடிக்கணினிகள் மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்களும் ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தை கண்டித்து இன்று பகல் 10 மணிக்கு கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தின் முன்பாக கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் வயில் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்தில் பொது அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/144539
  14. கட்சிகளின் இணைவுகள் அர்த்தபூர்வமாக இருந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை - சந்திரகுமார் By Digital Desk 2 30 Dec, 2022 | 02:42 PM கட்சிகளின் இணைவு என்பது முக்கியமல்ல அது ஒரு அர்த்தபூர்வமாக இருக்க வேண்டும். தமிழ் கட்சிகளுக்குள் நான் பெரிய கட்சி நீ பெரிய கட்சி என்ற நிலைப்பாடு மாறும் வரை ஒற்றுமையும் இல்லை, தமிழ் மக்களுக்கு விடுதலையும் இல்லை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். வவுனியாவில் சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலக திறப்பு விழாவின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார் ஏன் சமத்துவக் கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணையக் கூடாது என்று நாங்கள் இணையமாட்டோம் என்று எமது கதவுகளை இழுத்து மூடிவிடவில்லை. ஆனால் முதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போதே இணைவும் அர்த்தபூர்வமாக காணப்படும். அதுவே தமிழ் மக்களுக்கு நன்மையினையும் பெற்றுக்கொடுக்கும். நாட்டில் இனங்களுக்கிடையேயும், இனத்திற்குள்ளும் சமத்துவம் இன்மையே எமது கட்சியின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது. எங்களுடைய கட்சியில் அதிகளவான பெண் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். ஆனால் இங்கு மிக கவலையோடு ஒரு விடயத்தை கூறுகின்றேன். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் புலிகள் அமைப்பில் அனைத்து துறைகளிலும் மகளீர் அமைப்புக்களை உருவாக்கி பெண்களின் சமத்துவத்தை செயல்வடிவில் காட்டியவர். ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் தமிழரசுக் கட்சியை சேர்ந்த சிலர் கிளிநொச்சியில் சமத்துவக் கட்சியின் பெண் வேட்பாளர்களை நோக்கி கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது மிக மிக கேவலமாக அவதூறுகளை செய்தார்கள். சபையில் பேசமுடியாத வார்த்தைகளை பயன்படுத்தினார்கள் பெண்களுக்கு சமத்துவத்தை வழங்கிய தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சியை சேர்ந்தவர்களா இவர்கள் என்று மக்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் காணப்பட்டன. இன்று உள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராட்டக் காலங்களில் ஒரு துளி வியர்வை சிந்தாதவர்கள். இவர்கள் தான் அன்று வியர்வை சிந்தியவர்களுக்கு, ஆயுதம் ஏந்தி போராடியவர்களுக்கு, துரோகிகள் என்று பட்டம் வழங்குகின்றவர்களாக காணப்படுகின்றனர். துரோகி பட்டம் வழங்குவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது. இன்று ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் துரோகிகள் என்றால் அவர்களை ஆதரித்த மக்களும் துரோகிகளா? எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/144550
  15. சூகிக்கு மேலும் 7 ஆண்டுகால சிறை மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூகிக்கு எதிராக மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் இன்று (30) வழங்கியுள்ளது. மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது. தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், இன்னொரு ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மியான்மர் ராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இதன் மூலம் தற்போது அவரது சிறைத் தண்டனை காலம் 26 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மீதான 18 மாத விசாரணையில் மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்குகிறது. அதன்படி, அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியான்மார் இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது https://www.tamilmirror.lk/செய்திகள்/சூகிக்கு-மேலும்-7-ஆண்டுகால-சிறை/175-309863
  16. கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே க. அகரன் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் 'ராஜபக்‌ஷ குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகிறோம், நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத்தா, வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே' என கோசங்களையும் எழுப்பியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் என கொண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும், வைத்தியசாலையில் இருந்தும், வீடுகளில் இருந்தும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம். அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கூட்டமைப்பே-நிபந்தனையின்றி-பேச்சுக்கு-செல்லாதே/150-309865
  17. கடல் அட்டைப்பண்ணை வேண்டுமென யாழில் போராட்டம் கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு கடலட்டை பண்ணைகள் வேண்டுமென இன்று (30) வெள்ளிக்கிழமை யாழ் கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பேரணியில் ஈடுபட்டவர்களால் கடற்தொழில் அமைச்சுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது. பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப்பண்ணை காணப்படுகின்றது. சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடல் தொழிலும் அட்டப்பண்ணையும் செய்யாதவர்கள் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். யாழில் முறையான அனுமதிகளை உரிய திணைக்களங்கள் ஊடாக பெற்றே அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளோம். அட்டப்பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த மக்களுக்கு பண்ணைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/கடல்-அட்டைப்பண்ணை-வேண்டுமென-யாழில்-போராட்டம்/175-309867
  18. நீங்கள் சமந்தா ரேஞ்சில எதிர்பார்த்ததால் மிஸ் பண்ணிட்டீங்கள்!😂 ஐந்தாவதாக இருக்கா!
  19. சொல்ஹெய்மின் மீள்வருகை: தமிழ்த் தரப்புக்கான பொறி புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அடிக்கடி கொழும்பு வந்து இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்திச் செல்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசிய கூட்டமைபின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்களை, கடந்த சில நாள்களுக்கு முன்னரும் சந்தித்துச் சென்றிருக்கின்றார். இந்தச் சந்திப்புகள் அனைத்திலும், அண்மையில் நடைபெற்ற சர்வகட்சித் தலைவர்கள் மாநாட்டில் உரையாடப்பட்ட, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்கள் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னராக, இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்கிற அவசரத்தை ரணில் காட்டுகின்றார். சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் தோன்றிவிட்ட தமிழர் அரசியல் பிரச்சினைக்கு, சுமார் இரண்டு மாத கால இடைவெளிக்குள் தீர்வு காண்பது என்பது, நடக்கக் கூடிய காரியமல்ல! அப்படியான நிலையில், ரணில் காட்டும் அவசரத்துக்குப் பின்னாலுள்ள சூட்சுமங்களை அவதானிப்பது, பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தை மேடைகளிலும் இராஜதந்திர ஊடாட்டங்களிலும் அமரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசிய தரப்புக்களுக்கு முக்கியமானது. சம்பந்தனுக்கும் சொல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பு, திங்கட்கிழமை (19) இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே, தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்திப்புக்கு வருமாறு ரணில் அழைத்தார். அதன் பிரகாரம், நேற்று புதன்கிழமை மாலை அந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். சி.வி விக்னேஸ்வரனும், செல்வம் அடைக்கலநாதனும் கொழும்பில் இல்லாத காரணத்தால் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியும் வழக்கமாக பேச்சுகளை புறக்கணிப்பதால், அவர்கள் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார்களா இல்லை என்பது தெளிவில்லை. ஆனால், அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றதும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்மை, காலநிலை தொடர்பான தனது சர்வதேச ஆலோசகராக அவர் நியமித்தார். இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்ட பின்னர், சொல்ஹெய்ம் நோர்வேயில் சில காலம் அமைச்சராகப் பணியாற்றினார். பின்னரான நாள்களில் அவர், இந்தியாவை முன்னிறுத்திக் கொண்டு சுற்றுச்சசூழல் பாதுகாப்பு, காலநிலை அவதானிப்பு தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். அவர், இப்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் ஆலோசகர் பொறுப்பிலும் இருக்கிறார். அப்படியான நிலையில்தான், ரணில் மீண்டும் பதவிக்கு வந்ததும் சொல்ஹெய்முக்கு ஆலோசகர் பொறுப்பொன்றை வழங்கி, இலங்கை விவகாரங்களில் நேரடியாகப் பங்கெடுப்பதற்கான முக்கியஸ்தாராக அழைத்திருக்கின்றார். தென் இலங்கையின் அரசியல் பிடுங்குப்பாடுகளில் சிக்காமல் இருப்பதற்காகவே, சொல்ஹெய்முக்கு ‘காலநிலை தொடர்பான சர்வதேச ஆலோசகர் பதவி’ என்கிற பெயரில் ஒரு பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அவரின் உண்மையான பணி அல்லது அவசியம் என்பது, சர்வதேச ரீதியில் இலங்கை இன்று சந்தித்து நிற்கும் நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பதாகும். அதன்போக்கில், தமிழர் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என்கிற விடயம் முக்கியமாகக் கருதப்பட்டு, அவை தொடர்பிலான பேச்சுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. சொல்ஹெய்ம், தனக்கு வழங்கப்பட்ட தூதுவர் பொறுப்பை அனைத்துக் காலங்களிலும், அந்தப் பொறுப்பை வழங்கிய தரப்புகளுக்கு சாதகமாக முடித்துக் கொடுத்திருக்கின்றார். அதனால்தான், புதிய பதவிப் பெயரோடு, மீண்டும் சொல்ஹெய்மை ரணில் அழைத்து வந்திருக்கின்றார். காலநிலை தொடர்பான ஆலோசகராக ரணிலால் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டாலும், அது தொடர்பிலான எந்தச் செயற்பாட்டிலும் அவர் இலங்கை தொடர்பில் ஈடுபடவில்லை. மாறாக, இலங்கை வந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலேயே அவர் கவனம் செலுத்தியிருக்கின்றார். காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நாடுகளுக்கு இடையில் பிணக்குகள் ஏற்பட்டு பிளவுகள் ஏற்படுவதுண்டு. அப்படியான பிணக்குகளை சுற்றுச் சூழலியலாளர்களும் இராஜதந்திரகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துக் கொள்வது உலக வழக்கம்தான். ஆனால், இலங்கையின் இனமுரண்பாடு என்பது, சுற்றுச்சூழலியலாளர்கள் தீர்த்து வைக்கும் அளவுக்கானது அல்ல. அது, பௌத்த சிங்கள மேலாதிக்கக்க அடக்குமுறைகளால் எழுந்தது. அதைக் கையாள்வது என்பது, இலகுவான ஒன்றுமல்ல. ஏனெனில், இலங்கையில் ஆட்சி அதிகாரங்களை அடைவதற்கான ஒற்றை வழி, பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையின் வழியாக இயங்குவதும், இயக்குவதுமாகும். அப்படியான நிலையில், அந்த மனநிலையை மாற்றாமல், முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது என்பது நடக்கக் கூடிய காரியமல்ல. அப்படியான நிலையில், சொல்ஹெய்மின் மீள்வருகையை ‘கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு’ கவனித்தாக வேண்டும். சொல்ஹெய்ம் நோர்வேயில் இருந்து கொழும்புக்கு வரும் வழியிலோ, அல்லது திரும்பிச் செல்லும் போதே புதுடெல்லியில் தங்கி, இந்திய இராஜதந்திரிகளைச் சந்திப்பது வழக்கமான செயற்பாடு. இது, இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்திலேயே வழக்கம். அப்படியான நிலையில், சொல்ஹெய்மின் மீள் வருகை என்பது புதுடெல்லியின் ஆசிர்வாதம் இல்லாமல் ரணிலால் நிகழ்த்தப்பட்ட ஒன்றாகவும் கருத வேண்டியதில்லை. சொல்ஹெய்ம், புதுடெல்லியை தன்னுடைய இன்னொரு வாழ்விடம் மாதிரியே கையாண்டு வருகின்றார். அவருக்கு புதுடெல்லியின் இராதஜந்திர தரப்புகளோடு இருக்கும் இணக்கமும் நெருக்கமும், இங்குள்ள எந்த தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் இல்லை. தமிழ்க் கட்சிகளால் இராஜதந்திர ரீதியாக இந்தியாவின் முக்கிய தரப்புகளை கையாள முடியவில்லை. அந்த இடங்களில் எல்லாம், சொல்ஹெய்ம் மிக நெருக்கத்தோடு இயங்குபவர். எப்போதுமே, இலகுவாக கையாளக் கூடிய தரப்புகளை, அதாவது அடிமை சேவகம் செய்யக்கூடிய தரப்புகளை இராதந்திர கட்டமைப்பு, கடைநிலையில் வைத்தே அணுகும். முக்கிய தீர்மானங்களை எல்லாம் எடுத்துவிட்டு, அதனை செய்வதற்கான ஏவல் தரப்புகளாக மட்டுமே கையாள நினைக்கும். அப்படியான நிலையில், தமிழ்க் கட்சிகளின் புதுடெல்லியுடனான உறவு என்பது, பெரும்பாலும் ஏஜமானுக்கும் ஏவலாளிக்கும் இடையிலானது பொன்றதே! அதனாலும், சொல்ஹெய்மின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இந்தியப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், இரகசியமாக ரணிலை சந்தித்துச் சென்ற விடயம் கொழும்பில் புகைந்து கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவுகளைச் சந்திக்காத ஒரு சூழல் நிலவுமாக இருந்தால், இந்தியா புலனாய்வுத்துறை அதிகாரியின் வருகையை தென் இலங்கை பெரிய விடயமாக்கி ரணிலை அலைக்கழித்திருக்கும். ஆனால், தற்போதைய நெருக்கடி நிலைமை, தென் இலங்கை கட்சிகளையும், பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புகளை எல்லாம் வாயை மூடிக்கொண்டிருக்க வைத்திருக்கின்றன. நாடு இன்று சந்தித்திருக்கின்ற நெருக்கடிகளில் இருந்து, எப்படியாவது மீள வேண்டும் என்பது தென் இலங்கையின் எதிர்பார்ப்பு. அதற்காக ரணிலின் அனைத்து நகர்வுகளையும் ஆமோதித்து அமைதியாக இருக்கின்றன. அதனை தன்னுடைய அரசியல் வெற்றிகளுக்காகவும் ரணில் கையாள முனைகின்றார். அடுத்த ஆண்டு முதல் தொடர்ச்சியான தேர்தல்களை, நாடு எதிர்கொள்ளப் போகின்றது. தென் இலங்கையின் உணர்நிலை, ராஜபக்ஷர்களுக்கும் ரணிலுக்கும் எதிரானதாகவே இப்போது இருக்கின்றது. அதனால், அதனை மாற்றுவதற்கான உத்திகளின் போக்கிலும், சொல்ஹெய்மைக் கொண்டு விடயங்களை ரணில் கையாள நினைக்கின்றார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷர்களின் ஆதரவோடு ரணில் போட்டியிடுவார். ஆனால், அந்த ஆதரவு நிலை, அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க போதுமானதாக இருக்காது. எப்படியும், சஜித் அவரின் வெற்றியை தென் இலங்கை வாக்குகளைக் கொண்டு தடுப்பார். அந்த வாக்குகளோடு, வடக்கு கிழக்கு மக்களின் வாக்கும் இணைந்தால் சஜித் இலகுவாக வென்றுவிடுவார். அந்த நிலையை உணர்ந்து கொண்டுதான், வடக்கு கிழக்கு வாக்குகளை கணிசமாக கவர்ந்திழுக்கும் நோக்கில், இரண்டு மாதங்களுக்கு தீர்வு என்ற விடயத்தை ரணில் கையாளத் தொடங்கி இருக்கின்றார். அதன்மூலம், தமிழ்த் தரப்புகளை முழுமையாக தன் பக்கத்துக்கு நகர்த்த முடியாவிட்டாலும், பகுதி பகுதிகளாக உடைத்து விடவாவது முடியும் என்பது அவரது எதிர்பார்ப்பு. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, தான் பதவியேற்ற குறுகிய காலத்துக்குள்ளேயே தீர்வை வழங்கிவிட்டேன் என்ற பிம்பத்தை நிறுவி, மேற்குநாடுகளை இலகுவாக கையாள ரணில் இன்னொரு பக்கம் முனைகிறார். அதன் மூலம் பொருளாதார பின்னடைவுகளில் இருந்து உதவிகளைப் பெற்று விடுபட முடியும். தென் இலங்கை இப்போது எதிர்பார்ப்பது பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்பதற்கான ஒரு மீட்பரையே! அப்படியான நிலையில், தமிழர்களுக்கு தீர்வு என்ற ஒரு கல்லைக் கொண்டு, இரண்டு மூன்று காய்களை அடிக்க நினைக்கிறார் ரணில். அவரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவே சொல்ஹெய்ம் வந்திருக்கிறார். இதைப் புரிந்து கொண்டு கவனமாகச் செயற்பட வேண்டியது, பொறுப்புள்ள தமிழ்த் தரப்புகளின் முதல் வேலை. இதைப் புறந்தள்ளிவிட்டு நின்று, தமிழ் மக்களின் தலைகளில் அழுகிய மூட்டைகளை ஏற்றிவைக்கக் கூடாது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சொல்ஹெய்மின்-மீள்வருகை-தமிழ்த்-தரப்புக்கான-பொறி/91-309870
  20. கார் விபத்து: படுகாயமடைந்த ரிஷப் பண்ட் Dec 30, 2022 10:29AM IST ஷேர் செய்ய : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குள்ளானதால், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து , உத்ரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டுக்கு தனது பிஎம்டபிள்யூ காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, முஹம்மத்பூர் ஜால் அருகில் உள்ள ரூர்க்கி என்ற இடத்தில் அவர் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அங்கிருந்த சாலை தடுப்பில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இன்று (டிசம்பர் 30 ) அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ரிஷப் பண்ட் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி அசோக் குமார் “ரிஷப் பண்ட் கார் ஓட்டும் போது தூங்கி விட்டார். அதனால் தான் கார் அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி உள்ளது. தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்று கூறியுள்ளார். https://minnambalam.com/sports/car-accident-rishabh-pant-critically-injured/
  21. ஒரே பெண்: ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அழகு! Dec 30, 2022 12:28PM IST ஒரே பெண்ணின் புகைப்படத்தை வைத்து இந்தியாவின் அனைத்து மாநில கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (artificial intelligence) அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டுத்தபட்ட ஒன்றாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் அனைத்து வகையான படங்களையும் உருவாக்க முடியும். டெல்லியைச் சேர்ந்த மாதவ் கோஹ்லி என்ற கலைஞர் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப அவர்களின் முக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை சித்தரிப்பதாக உள்ளது. அதில், டெல்லி, மும்பை, அசாம், கோவா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, காஷ்மீர் உள்ளிட்ட 31 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் முக அமைப்பானது கலைஞர் மாதவ் கோஹ்லியின் கற்பனை திறனில் வியக்க வைப்பதாக உள்ளது. இதுகுறித்து மாதவ் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண்களின் தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்கியிருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. https://minnambalam.com/archives-trending-news-in-tamil/ai-generated-images-depicting-indian-women-from-different-states/
  22. தலைசிறந்த கால்பந்தாட்ட வீரனுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிகள்…
  23. வாக்குறுதி : அகரன் ஓவியம்: செயற்கை நுண்ணறிவு 1 கனடா, யூகொன். மாயோன், மயூரன் என்னும் பெயரில் தனது இரண்டு வயதில் கனடாவில் உள்ள மொன்றியல் என்ற நகரத்தில் தன் கால்களை ஊன்றியவன். இப்போது தனது முப்பத்தி ஏழாவது வயதில் கனடாவின் மேற்கு பாகத்தில் அலாஸ்காவோடு ஒட்டிக்கொண்டிருக்கும் யூகொன் (yukon) என்ற மாநிலத்தில் அமெரிக்க-கனடிய விஞ்ஞானிகள் குழுவில் ஒருவனாக போராடுகிறான். தனக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வங்கிக்கு வருகிறது ? என்பது அவனுக்கு தெரியாது. அதைப்பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. ஆனால் உலகின் பல நாட்டு அதிபர்களை விட அவனுடைய மாத கொடுப்பனவை கனடிய அரசு உயரமாக கொடுப்பதில் கவனமாக இருக்கிறது. மாயோன் பூமிக்காக போராடுகிறான் என்பதுதான் அதற்குக்காரணம். ‘யூகொன்’ ஆண்டின் அதிக காலத்தை வெண்நிலமாகவே வைத்திருக்கும். கடும் வெயில் காலத்தில் 18 இல் இருந்து இருபது பாகை வெப்பம் மட்டுமே அங்கிருக்கும். மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஒருவருடம், ஒருநாள் முன்னதாக அங்கு -51 குளிர் பதிவாகியது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் யூகொன் கண்ட உயர்ந்த குளிர் அதுதான். உயிர்களையும் இயற்கையையும் சம ஆத்மாவாக நேசித்த மகாத்மா ஒன்று, கொல்லப்பட இருப்பதை இயற்கை தனது முன்னறிவிப்பால் வெளியிட்டுக்கொண்டது. மனிதர்களின் தோல்களே கல்லாகி இறுகிவிடும். யூகொன் கனடாவின் வெண்கட்டி இரும்புகளின் குளிர்..நிலம். சூரியனுக்கும், நிலவுக்கும் பெரிய குணவேறுபாடு அங்கில்லை. யூகொன் நதி பனிக்கட்டிக்கு கீழ் ஓடுவதைத்தான் பெருமையாகக் கருதுகிறது. ஆற்றின்மேல் சறுக்குப்பலகையில் மக்கள் செல்வார்கள். பனிக்கிணறு கிண்டி மீன்பிடிப்பார்கள். மாயோன் கடந்த இருபது ஆண்டில் வேகமாக உருகும் பனிக்கட்டிகளையும், நுண்ணுயிர்களையும் ஆராய்வதும், வெப்பமாதலில் இருந்து துருவ வெண்நிலங்களை காப்பதற்கான கட்டுரைகளை எழுதுவதும்தான் அவனது பணி. அவன் தன் வாழ்நாளில் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துபவன். ‘நெகிழியை கையால் தொடுவதில்லை’ போன்ற மூட நம்பிக்கை அவனிடம் உண்டு. யூகொன் ஆராட்சிப்பணிக்கு தனக்கு நாய் வண்டியொன்றை அமர்த்தியுள்ளான். ஐந்து நாய்கள் அவனை வேண்டிய இடங்களுக்கு இழுத்துச்செல்லும். அன்று இரவு பன்னிரெண்டுமணி. சூரியனையும், நிலவையும் காணவில்லை. வானம் மென் வெளிச்சத்தில் முயங்கி இருந்தது. அந்த நேரத்தில் வானம் சிலவேளை பாடும். ஒளி நடனம் நிகழ்த்தும். பிரபஞ்சத்தின் அந்தப்பாடலை கேட்பதில் அவனக்கு அவ்வளவு பிரியம். நாய்வண்டியில் வானத்தை பார்த்தவாறே சென்றுகொண்டிருந்தான். அந்த நடனத்தை பார்த்தால் அவன் மனம் நிறைந்து விடும். ஆண்டின் எட்டு மாதங்களை கடும் குளிரில் கழிக்க அதைத்தவிர உற்சாகப்படுத்தும் காரியம் அவனுக்கு வேறில்லை. அப்போதுதான் அவன் கைக்கடிகாரத்தில் தாயாரின் அழைப்பு வந்தது. இப்படியான நேரத்தில் வனசா அவனை தொந்தரவு செய்வதில்லை. அவன் ‘அம்மா ஆர் யூ குட் ?’ என்றதும் வனசா கைக்கடிகாரப்பேசி கழன்றுவிடும் அதிர்வுடன் பேச ஆரம்பித்தாள். அந்த நேரம்பார்த்து ஐந்து நாய்களும் குரலெழுப்ப துருவ வானம் பாட ஆரம்பித்தது. ஒளிநடனம் பச்சை, மஞ்சள், நீலம், நாவலென மாயம் செய்தது. இயற்கைக்காக போராடும் போராளி பேரொளியில் நனைந்திருந்தான். 2. பிரான்ஸ். பாரிஸ். இன்றுதான் இறுதிச் சவாரி என்று நினைத்துக் கொண்டு வண்டியை எடுத்தேன். இரண்டு வருடமாக டாக்சி ஓடுவது தான் என் தொழில். ஒரு அறைக்குள் இருந்து வேலை செய்வது கூண்டுக்குள் வளரும் பறவை போல உணரச் செய்தது. டாக்சி ஓட்டுவதால் பாரிஸ் நகரை அறியலாம், அங்கு வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை அறியலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும், என்னைத் திருமணம் முடித்தவளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுதான் எல்லாவற்றையும்விட முன்னுக்கு என்னை தள்ளிய விடயம். அவள் ஊரில் இருந்து வந்த புதிதில் நான் வேர்க்க விறுவிறுக்க சமையல் வேலைமுடித்து வந்தபோது அவள் முகம் வெம்பிப்போன பப்பாப்பழம்போல் சூம்பிக்கிடந்தது. « என்ன ?… என்ன.. ? உமக்கு ஏதும் உடம்பு சரியில்லையா ? » என்று நான் கேட்டபோது, ‘வெளிநாட்டு மாப்பிள்ளை ரை கட்டி வேலை செய்வார் என்று நான் நினைத்தேன்,. நீங்கள் படுற பாட்டைப்பார்த்தால் கவலை.. கவலையாய் கிடக்குது.. ‘’ என்று அவள் சொன்ன மறு நொடி எனக்கு ‘பக்’ என்று இருந்தது. எனக்கு கிடைத்த ஒரே ஒரு பெண்ணின் மனக்கவலையின் ஆழம் என்னை அதிர்வுக்குள்ளாக்கிற்று. சமையல் வேலையை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக என் மூளையில் எல்லா பாகங்களும் இயங்க வைத்து டாக்ஸி ஓட்டும் உரிமையைப்பெற்றேன். பிரெஞ்சு மொழியையும் ஓரளவு சீர் திருத்தி வாசனைதிரவியம் போட்டு பாரிசுக்கு ஏற்றபடி நளினமாக்கி மனைவி பெருமைப்படும்படி ரை கட்டி டாக்சி ஓட்ட ஆரம்பித்தேன். இப்போது அந்தத்தொழிலையும் கைவிடும் நிலைக்கு நிலமைகள் வந்துவிட்டிருக்கிறது. பாரீஸ் நகரின் வாகன நெரிசல், வங்கிக்கணக்கே எரிந்துவிடும்படி ஏறி நிற்கும் எரிபொருள் விலையேற்றம். வாடிக்கையாளர்கள் மோசமாகிச்செல்லும் போக்கு, கரியமில வாயுவின் அடர்த்தியால் பாரீஸ் காற்று அழுக்காவதற்கு என் வண்டியும் காரணமாக இருப்பது பேன்ற காரணங்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை. அதிகமானவர்கள் ஓய்வெடுப்பதால் சாலை சற்று ஓய்வாக இருக்கும். நீண்ட தூர ஓட்டங்கள் வந்துசேர வாய்ப்புண்டு.. என்று கொக்கின் காத்திருப்புப்போல வண்டியில் இருந்தேன். பாரீஸ் றுவசி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வனசா என்ற பெயரில் அழைப்பு வந்தது. அது ஒரு பெரிய சவாரி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வனயா, வனயாதேவி என்ற பெயர்களில் தமிழ்ப் பெண்களுக்கும் பெயருண்டு. முதல் முறையீடு நிராகரிக்கப்பட்டால் மேன்முறையீடு செய்யவேண்டும். அதற்கு அப்புக்காத்துமார்களை அகதி ஒருவன் அமர்த்தவேண்டும். அப்படி அகதிகளின் மேன்முறையீடுகளால் புகழும் செல்வச்செழிப்பும் அடைந்த சில பிரஞ்சு சட்டவாளர்கள் பாரீசில் உண்டு. அதில் ஒருவரின் பெயர் ‘வனசா’. அதன்பின்னர்தான் தமிழின் பெருமை எனக்கு பிடிபட்டது. இப்போது என் வண்டியில் வர இருப்பது தமிழ்ப்பெண்ணா ? பிரஞ்சுப்பெண்ணா ? என்பதில் மனம் குழைந்துகொண்டிருந்தது. பாரீஸ் றுவசி சார்த்துகோல் சர்வதேச விமான நிலையம் மூன்று முனையங்களை வைத்திருக்கிறது. இதில் முனையம் இரண்டில் சிறுபிள்ளை அரிவரி படிப்பதுபோல் A, B, C, D, F என்று ஆறு வாசல்கள். இதில் F வாசலில் தான் நிற்பதாக வனசா குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். நான் அழைப்பெடுத்து அந்தக்குரலை ஆராய விரும்பினேன். அவர் ஆங்கிலத்தில் பேசினார். நானும் பிடி கொடுக்காமல் பேசினேன். ‘அம்மணி, உங்களை நான் இலகுவாக கண்டுபிடிக்க உங்கள் தோற்றத்தை கூறமுடியுமா ?’ என்றேன். ‘நீலக்கோட்டும், மூன்று சிவப்புப் பயணப்பெட்டிகளுடன் நிற்கிறேன்’ என்றார். ‘அம்மணி, வனசா நீங்கள் இந்தியப்பெண்ணின் தோற்றத்தில் இருப்பீர்களா ? ‘ ‘ஓ.. கடவுளே ! எப்படித்தெரியும் ?’ ‘உங்கள் பெயரை வைத்து ஊகித்தேன்’ ‘உங்கள் கணிப்பு கிட்டத்தட்ட சரியானது. நான் இலங்கைப்பெண்’ ‘நீங்கள் தமிழ் பேசுவீர்காளா ?’ ‘கந்தனே.. ! யேஸ்.. யேஸ்.. நான் தமிழ்ப்பெண்தான்’ (மொழி மாறியது) ‘மகிழ்ச்சி, இன்னும் ஐஞ்சு நிமிசத்தில வந்திடுவன்’ ‘நன்றி, பாரிசில் தமிழ் டாக்சி கிடைச்சது மகிழ்ச்சி. நான் ஐம்பத்தி ஐந்தாவது வாசலில் நிற்கிறேன்.’ முனையம் F இல் நுழைந்ததும் ஐப்பத்தைந்தாவது வாசலைப்பார்த்தேன். வனசா கொண்டைபோட்டு, கறுப்பு நீள்சட்டையும், மேல் நீலக்கோட்டும், கறுப்புநிற கைப்பையை தள்ளுவண்டியின் முன் கூடையில் வைத்துக்கொண்டு மீன்பறவையின் தலையசைவுகளோடு என்னைத்தான் தேடிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஐம்பது வயதுகளை யோசித்துக் கடந்த தோற்றம். செவ்விளநீர் கோம்பைகள் போன்ற கன்னம். புன்னகைக்கும், அழுகைக்கும் நடுவில் களைத்துப்போய் இருக்கும் முகம். சராசரியான தமிழ்ப்பெண்களைவிட உயரமும் அதற்கேற்ற பருமனும். தரிப்பிடத்தில் இருந்தே அவரை அவதானித்துவிட்டு, வண்டியின் பிருட்டம் வாய்பிளந்து திறப்பதற்கு கட்டளை கொடுத்துவிட்டு அவரருகே நடந்தேன். என்னை இனங்கண்டவர் அவர் வீட்டுக்குச் சென்ற விருந்தாளி போல.. ‘’வாருங்கோ தம்பி. சொன்ன நேரத்திற்கு வந்திட்டீர்கள். நீங்கள் தமிழ் எண்டது எனக்கு மகிழ்ச்சி. பாரிசுக்கு முதல்முறை வருகிறேன். உங்கள் உதவி தேவை.’ ‘கட்டாயம் அன்ரி. நீங்கள் காறுக்குள் ஏறுங்கோ நான் சூட்கேசுகளை ஏத்துறன்.’’ ‘நன்றி ராசா’ ஒரு நொடியில் என்னைத் தன் ‘ராசா’ ஆக்கிவிட்டு அவர் ‘ராணி’ போல வண்டிக்குள் அமர்ந்திருந்தார். தாய்மார்கள் பிள்ளைகளை ‘ராசா’ என்று சொல்லும்போது வரும் சொல்வாசம் பூவாசம் நிறைந்தது. அதனால் வனசாவை எனக்குப்பிடித்துப்போனது. ‘அன்ரி, நீங்கள் போகவேண்டிய முகவரி என்ன ?’ ‘தம்பி, ஒரு கொட்டல் முகவரியை என்ர மகன் அனுப்பி இருக்கிறார். அங்குதான் போகவேண்டும். நான் இரண்டு நாளில் மீண்டும் கனடாவுக்கு பிளைட் பிடிக்கோணும். என்னால் தொடர்ந்து இலங்கையில் இருந்து கனடாவிற்கு பயணம் செய்யமுடியாதென்பதால் பாரிசில் இரண்டுநாள் தங்கி பின்னர் பயணம் செய்யும்படி மகன் ரிக்கற் போட்டவர். உங்களுக்கு நல்ல கொட்டல் தெரிஞ்சா அங்க என்னை விட்டு விடூறிங்களா பிளீஸ் ? ’’ ‘ அன்ரி, உங்களுக்கு பாரிசில் சொந்தக்காரர் ஒருவரும் இல்லையோ !’ ‘இல்லத்தம்பி, எல்லாரும் கனடாவில இருக்கிறம். இலங்கையில கூட இப்ப சொந்தபந்தம் இல்லையெண்டா பாருமன்’ ‘அன்ரி பாரிசில் எல்லாக் கோட்டலும் நல்லதுதான். ஆனால் நீங்கள் விரும்பினால் எங்கள் வீட்டில் தங்கலாம். இரண்டு நாட்கள்தான ? நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.’ ‘ஐயோ..தம்பி நீர் எவ்வளவு நல்லபிள்ளையாய் இருக்கிறீர் ? உமக்கு இடைஞ்சல் தர நான் விரும்பேல்லை. என்ர மகனும் விரும்பமாட்டார்.’ ‘அன்ரி,பாரிஸ் வினோதமானது. உங்கள் மகன் தெரிவு செய்த கோட்டல் இருக்குமிடம் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாதது. ஆனால் உடைமைகளுக்கு உத்தரவாதம் இல்லாத பகுதியில் இருக்கிறது. உங்களைப்போன்ற புதியவர்களை அவர்கள் இலகுவாக இனம்கண்டு விடுவார்கள். வனசா மறுகதை பேசவில்லை. ‘உங்கள் வீட்டில் சிரமம் இல்லையோ ? என்ர பிள்ளை போல இருக்கிறீர்’ (இப்போது தான் நீங்கள் கதையின் வாசலுக்கு வந்திருக்கிறீர்கள். இந்தக்கதை வனசா மூலம்தான் கிடைத்தது. அவரே அதைச்சொல்லட்டும். விமான நிலையத்தில் இருந்து ஒருமணி நேர பயண தூரத்தில் என் வீடு உள்ளது. அந்த ஒரு மணி நேரத்தில் என் காதுகளில் வந்த கதைதான் உங்கள் கண்களுக்கு வர இருக்கிறது) ‘அன்ரி இலங்கையில் ஒருவரும் இல்லை என்கிறீர்கள். அப்ப, யாரிடம் சென்று வருகிறீர்கள் ?’ ‘ராசா, முப்பத்தி ஐந்து வருடத்தின் பின்பு என் நண்பியை சென்று பார்த்துவிட்டு வாரன். என்ர மனுசன் 1987 இல் இலங்கையை விட்டு வெளிக்கிட்டு கனடா போனவர். உங்களுக்கு அந்தக்கதைகள் தெரியாது. அப்பேக்க ஒரு இனம் மற்ற இனத்த அடக்குதெண்டு போராட வெளிக்கிட்ட காலம். பிறகு எல்லா இடத்திலும் போர் ஆட வெளிக்கிட்டுது. என்ர மனுசன் ‘இந்தத் தீவில் இனி மனுசர மனுசர் கொல்லத் தெரிஞ்சாத்தான் வாழலாம் வனசா’ என்று அங்கலாய்த்துக்கொண்டே இருந்தார். எண்பத்தி ஏழுல இந்தியன் ஆமி வந்தபிறகு பிரச்சினை தீர்ந்து விடும் என்று ஆறுதலாய் இருந்தனாங்கள். அவரோட பள்ளியில் உயிரியல் படிப்பித்த சினேகிதர் ஒருத்தர எங்கோ வெடித்த குண்டுக்கு பதிலாய் வந்த இந்தியன் ஆமி சுட்டுக்கொன்றது மட்டுமல்லாமல். அந்த சடலத்தை நாலுதுண்டா வெட்டிப்போட்டு போயிட்டினம்’ அந்த அதிர்ச்சியில் இலங்கையை விட்டு வெளிக்கிட்டவர், அவற்ற வாழ்நாளில இலங்கை திரும்பேல்லை. அவற்ற அப்பா, பெரியவர் கன்டி பேரின்பநாயகம் உடன் சேர்ந்து மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்தவர்களில் ஒருவர். அந்த நேரத்தில் கதர் போராட்டத்துக்கு எங்கட சனத்திட்ட காசு தெண்டி காந்தியின் கையில் லட்ச ரூபா கொடுத்தவர்கள் தம்பி. அதைப்பற்றி இப்ப யாருக்கு மோன தெரியப்போகுது ? இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு நான் மட்டும் திரும்பக்காரணம் என்ர நண்பி அதே கிராமத்தில வாழ்கிறாள் என்ற சேதி கிடைத்தது. இத்தனை ஆண்டுகளும் அவளை நினைக்காத நாளில்லை. நம் ஊரை விட்டு வெளிக்கிடேக்க அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால் அவள் காதலித்து திருமணம் செய்த மனுசன் யாராலோ கடத்தப்பட்டு விட்டிருந்தார். அவள் ஒரே அழுகையாய் இருந்தவள். பள்ளியில் படிக்கேக்க நான் முதலாம் பிள்ளையாக வந்தால் அவள் இரண்டாம் பிள்ளையா வருவாள் : நான் இரண்டாம் பிள்ளை என்றால் அவள் முதலாம் பிள்ளையா வருவாள். இருவரும் வேறு யாருக்கும் அந்த இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை. குடும்ப ரகசியங்களையும் நாம் பகிர்ந்து கொண்டோம். தோற்றத்தில் கூட இருவரும் ஒத்து போனோம். அப்போது பள்ளிக்கூடம் பூராவும் எங்களை ‘இரட்டை இராட்சசிகள்’ என்று தான் சொல்லுவினம். நான் அவளை விட்டு பிரியேக்க என் மகன் மயூரனுக்கு இரண்டு வயது. அவள் மகள் பச்சைக்குழந்தை. அவள் பிறந்த மணம் மாறாத அந்தக்குழந்தையை மடியில வைச்சுக்கொண்டு ‘வனசா இந்தப்பிள்ளையும் நானும் என்ன சொய்யப்போறோமோ தெரியேல்ல’ என்று சொன்னதும் அவளை கட்டிக்கொண்டு இருவரும் அழுததும் என் மனதில் அப்பிடியே இருக்குது. ‘தம்பி மயூரனுக்கு இவளைத்தான் கட்டிக்கொடுக்கிறது. எப்படியாவது நான் எங்கிருந்தாலும் வருவன். நீ காத்திரு. ஒருபோதும் உன்னை மறக்கமாட்டன்’ என்று சொல்லிப்போட்டு அந்த பெண்குழந்தையை வாரியெடுத்து அணைத்து வெளிக்கிடும்போது அந்த குழந்தை என் ஆட்காட்டி விரலை விடவே இல்லை. அவர்களின் படலை தாண்டி நான் வரப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. கனடா வந்த பிறகு ஊரில் நடந்த ஓவ்வொரு இரத்தக்களறியிலும் கனகாம்பிகையும், குழந்தையும் என்ன பாடோ ? அவர்கள் உயிரோடு இருப்பார்களோ என்று நினைத்தவாறே இருப்பேன். ‘ பிறகு ?’ கனடா வந்து மொன்றியலில் குடியேறினோம். சகோதரம், சொந்தபந்தம் என்று எல்லோரும் கனடா வந்துவிட்டார்கள். நாங்கள் இருந்த வீடு அந்த ஊரிலேயே பெரிய வீடு. முதலில் போராளிகள் இருந்தார்கள். பிறகு ஐ. சி. ஆர். சி இருந்தார்கள். பிறகு 1999 இல் கிபிர் விமானத்தால் எங்கள் வீட்டை தாக்கி அது தரைமட்டமாய் கிடந்ததை அப்போது பி. பி. சி இல் பார்த்து தெரிந்துகொண்டோம். நாள்பட.. நாள்பட இலங்கைய பற்றி நினைப்பதே நின்றுபோனது. அம்பியையும், குழந்தையும் நினைத்தால் கடும் கவலைதான் வரும். அண்மையில் ரொரன்ரோவில் ஒரு விழாவில் எங்கள் ஊரைச் சேர்ந்த, அந்த காலத்தில் கனகாம்பிகையை காதலிக்க முன்னும் பின்னும் திரிந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் கனடாவில் பெரும் பணக்காரர். அவரிடம் கேட்டால் கனகாம்பிகை பற்றி தெரியும் என்று விசாரித்தேன். அவர், ‘அவள் யுத்தத்தில் இருந்து மீண்டு ஊரில் மீள் குடியேறி வாழ்வதாகவும் தேடிப் போனபோது வீட்டு முத்தத்தில்(முற்றம்) வைத்துப் பேசிவிட்டு அனுப்பி விட்டதாகவும், தான் பணம் கொடுத்தபோது அதை விரும்பவில்லை என்றும் தனக்கு அவமானமாக போய் விட்டது தான் வந்து விட்டேன்’ என்றும் சொன்னார். கனகாம்பிகையின் மகள் பற்றிக் கேட்டேன். மகள் இருப்பது பற்றி தனக்கு தெரியாது. ஆனால் அவள் வாழும் இடம் அவர்களின் தோட்டக்காணியில் சிறு வீட்டில் வாழ்வதாக கூறினார். எனக்கு உடலெல்லாம் உவர் நீர் சுரந்து அடுத்த நொடியே அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. விபரத்தை மகனுக்கு கூறியபோது உடனே ரிக்கற் போட்டுத்தந்தான். அப்படித்தான் என் நண்பியையும் அவள் மகளையும் பார்க்க இலங்கைக்குப்போனேன். ‘அப்ப, உங்கட மகன் திருமணம் செய்து விட்டாரா ? ‘ ‘இல்லைத் தம்பி. அவனுக்கு இப்ப மயூரன் பெயரில்லை. அவனை பள்ளியில் சிறு வயதில் இருந்து எல்லோரும் மாயோன்… மாயோன் என்று கூப்பிட்டினம். அவனுக்கும் அது பிடித்துப்போய் விட்டது. பிறகு நாங்கள் அகராதியெல்லாம் ஆராய்ந்தால் மாயோன் நல்ல தமிழ்ப்பெயர்தானே ? கனடிய குடியுரிமை பெற்றபோது மாயோன் என்றே பெயரை மாற்றிவிட்டோம். தம்பி, என்ர மகன் முதலில் தத்துவம் படித்தான். பிறகு உயிரியல் படித்தான். பிறகு இயற்கையியல் படித்து அதில் அவன் எழுதிய காலநிலை பற்றிய கட்டுரை பெரிய விஞ்ஞானிகளின் தொடர்பை அவனுக்கு ஏற்படுத்தியது. காசுக்காக வேலைக்கு போக முடியாது என்று அடம்பிடித்துக்கொண்டு எப்போதும் படித்துக்கொண்டே இருப்பான். காலியான வயது வந்தும் அவனுக்கு அதைப்பற்றி கவலையில்லை. ‘பூமி ஆபத்தை நோக்கி நகர்கிறது. இந்தத்தலைமுறைக்கான இயற்கையை மீட்டெடுக்கும் பெரும் சண்டையை நாம்தான் செய்யவேண்டும்’ என்று எனக்கு புரியாத பல விசயங்களை சொல்வான். எனக்கு சிலநேரம் பயம் பிடித்துவிடும். அவன் ஆசைப்பட்டது போல கனடிய-அமெரிக்க அரசாங்கங்கள் சேர்ந்து ‘வடதுருவ பாதுகாப்பு ஆராட்சி விஞ்ஞானிகள்’ குழுவில் ஒருவனாக கனடாவின் யூகொன்(yukon) என்ற இடத்தில் இருக்கிறான். அந்த இடத்துக்கு மொன்றியலில் இருந்து விமானம் மூலம் செல்வதானால் பத்து மணிநேரம் பிடிக்கும். அங்கு கடும் குளிர். அவன் சொல்லும் கதைகளைக் கேட்டாலே எனக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். இலங்கையை விட எட்டு மடங்கு பெரிய அந்த கனடிய மாவட்டத்தில் நாற்பத்தி ஐஞ்சாயிரம் சனம் தான் இருக்குதெண்டால் யோசித்துப்பாரன் தம்பி. மகன் காதலித்ததாகவும் தெரியவில்லை. அவனுக்கு முப்பத்தி ஏழு வயதாவதை நினைத்தால் எனக்கு கவலைதான். மகனிடம் சிறு வயதிலேயே நண்பி அம்பியைப் பற்றியும், அவள் மகள் பற்றியும் கூறியிருக்கிறேன். அம்பி பற்றி அறிந்தபோது அவள் பற்றிச் சொல்லி சிலவேளை அவள் மகள் திருமணம் செய்யாது இருந்தால் நீ அவளை திருமணம் செய்வாயா ? என்று கேட்டேன். ‘நான் எதிர்பார்க்கவில்லை ‘அந்தப்பெண் இப்போதும் இருந்தால் நான் திருமணம் செய்கிறேன்.’ என்று சொல்லி விட்டான். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. இந்த சந்தோசத்தோடுதான் இலங்கை போனேன். «’கனகாம்பிகையை கண்டீர்களா? மகனுக்கு மருமகள் கிடைத்தாளா? ‘ வனசாவின் முகம் சிவக்க ஆரம்பித்தது. பேச்சு வரவில்லை. முன் கண்ணாடியால் பார்த்தபோது துன்பச்சாக்கை கட்டிவிட்டதுபோல் உதடுகள் குவிந்திருந்தது. வார்த்தைகள் வராதபோது கண்கள் முட்டி நின்றது. இடது கையால் அதை ஒற்றி எடுக்கிறார். நான் அமைதியாக வண்டியை ஏகாந்த நிலையில் செலுத்தினேன். ‘ஊருக்குப்போய் கனகாம்பிகை இருப்பதாகச் சொல்லப்பட்ட அவர்களின் தோட்டக்காணியில் இருந்த இடம் அடைந்தேன். ஒர் சிறு வீடு. பனமட்டை கட்டிச்செய்த கதவு. வீடு பூட்டப்பட்டிருந்தது. பெட்டிகளை திண்ணையில் வைத்துவிட்டு அயல் வீட்டில் சென்று விசாரித்தேன். கனகாம்பிகை கூலி வேலைக்கு சென்றிருப்பார் வருவார் என்றார்கள். நினைவுகளோடும், ஏக்கத்தோடும் அவளின் திண்ணையில் காத்திருந்தேன். பொழுதுபடும் நேரம் படலை திறந்து அவள் வந்தாள். அவள் என்னைக்கண்டு கத்திவிட்டாள். இருவரும் மணிக்கணக்காக முதலில் அழுதோம். அம்பிகை ஒரு தாமரை போல இருக்கவேண்டியவள் ; கப்பியில் தொங்கும் கயிறுபோல இருந்தாள். நான் தன்னைப்பார்க்க வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றாள். பின்பு அயல் வீட்டில் ஓடிச்சென்று கறி வேண்டி வந்தாள். தடபுடலாக உணவு தயாரிக்க ஆரம்பித்தாள். நான் முப்பத்தி ஐந்து ஆண்டுகளின் பின் கிணற்றில் அள்ளிக்குளித்தேன். மகளைப்பற்றி எப்படிக்கேட்பது என்று தெரியாமல் இருந்தது. இளம் பெண் வாழும் தடயங்கள் அந்த வீட்டில் இல்லை. சிலவேளை மகள் திருமணம் செய்து வேறெங்கும் வாழலாம் என்று நினைத்துக்கொண்டேன். இருவரும் சாப்பிட உட்கார்ந்தோம். அப்போதுதான் ‘அம்பி மகள் எங்க ?’ என்றேன். அந்த வீட்டில் அவள் கணவனின் படம் மட்டும் மாலையிடப்பட்டிருந்ததால் என் மனதில் தைரியம் இருந்தது. அம்பி எழுந்தாள். என்னைக் கை பிடித்து அறைக்குள் அழைத்துப்போனாள். அங்கு ஒருவரும் இல்லை. சாமியறையில் இரண்டு சாமிப்படங்கள் இருந்தன. மலர் வாசனையும், அகில் வாசனையும் அந்த குடிசை அறையை நிறைத்திருந்தது. அம்பி அதில் ஒரு சாமிப்படத்தை எடுத்து பின்பகுதியைத் திருப்பினாள். கறுப்பு வெள்ளை படத்தில் வரி உடையுடன் ஒரு இளம் பெண் கனகாம்பிகை இளமையில் இருந்த தோற்றத்தில் புன்னகைத்தபடி இருந்தாள். பெயர் :-கேணல் இதயக்கனி வீரச்சாவு :- 04 :04 :2009 இடம் :-ஆணந்தபுரம். என்றிருந்தது தம்பி.’’ என்றவர், விம்ம ஆரம்பித்தார். அந்த வாய்மூடி அழும் சத்தம் கேட்டு என் இதயம் தொண்டைக்குள் வந்து அடைத்துவிட்டது போல் இருந்தது. என் வீடு வந்திருந்தது. என் மனைவி வனசாவிற்கான அறையை தயார் செய்திருக்கக்கூடும். இரண்டு நாட்களுக்குள் மீதிக்கதையை அவள் கேட்கட்டும். அவர் எம்மை விட்டு பிரியும்போது எம் பெண் குழந்தைக்கு ஏதாவது வாக்குறுதி கொடுத்துவிட்டு கனடா செல்லக்கூடும். அதை அவர் நிறைவேற்றுவார். சர்வ நிச்சயமாக அதுதான் எனது கடைசிச் சவாரியாக இருக்கும். அகரன் பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார். https://akazhonline.com/?p=3993
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.