Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. நமது வெற்றி எவ்வளவு பெரியதோ, அதே போல பொறுப்பின் எடை அதே அளவானது November 18, 2024 07:24 pm அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதே அளவானது எனவும், அதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறிப்பாக இலங்கை அரசியலில் மிகவும் முக்கியத்துவமான திருப்புமுனை செப்டம்பர் 21 ஆம் திகதி நிகழ்ந்தது.நீண்டகால எமது நாடு பயணித்த பாதையை மாற்றியமைப்பதற்கு மக்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி தீர்மானம் எடுத்தனர்.அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் செப்டம்பர் 21 ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த மாற்றத்திற்காக எமது நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் வடக்கிற்கு எதிராக தெற்கு அரசியலும் தெற்கிற்கு எதிரான வடக்கு அரசியலும் தான் அரசியல் வரைபடத்தில் பொதிந்திருந்தது. அல்லது ஒவ்வொரு மக்கள் குழுக்களிடையில் சந்தேகம் அவநம்பிக்கை, குரோதம் என்பவற்றை தூண்டும் அரசியலே காணப்பட்டது. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், இனியும் எமது நாட்டுக்கு பிரித்தாலும் அரசியல் செல்லுபடியற்றது என்பதை காட்டுகிறது. வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை ஒரே மையப்புள்ளியில் இணைக்க இந்தத் தேர்தலால் முடிந்துள்ளது.அதற்காக தேசிய மக்கள் சக்திக்கு பலம் வாய்ந்த மக்கள் ஆணையை வழங்குவதற்காக ஆர்வம் காட்டிய அர்ப்பணித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். அதே போன்று எமக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிக்கு வாக்களித்தாலும் நாம் எதிர்பாக்கும் பணிகள் மற்றும் நோக்கங்கள் அவர்களினதும் நோக்கமாகும் என்பது திண்ணம்.பிரித்தாலும் அரசியலை எந்தப் பிரஜையும் விரும்புவார்கள் என நான் நினைக்கவில்லை. ஜனநாயகத்தை முடக்குவதை எந்த அரசியல்வாதியும் விரும்புவர் என்று கருதவில்லை.இவ்வாறான சாதகமான விடயங்கள் அனைத்து பிரஜைகளின் மனங்களிலும் பொதிந்துள்ளது. எமக்கு வாக்களித்தவர்கள் சாதகமான விடயத்தை தேர்தலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.எமக்கு வாக்களிக்காதவர்களிடமும் எமது எதிர்பார்ப்புகள் உள்ளன என நாமும் முழுமையாக நம்புகிறோம்.எனவே இனியும் இந்தத் தேர்தலில் மகிழ்ச்சி அடையும் குழு மற்றும் இந்தத் தேர்தலினால் விரக்தியடைந்த குழு என இரண்டு குழுக்கள் நாட்டில் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் மூலம் இந்த நாடு விரும்பிய இலக்குகளை அடைவதற்கு இந்த மக்கள் அனைவரின் ஆதரவும் நம்பிக்கையும் எங்களுக்குத் தேவை. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும், இந்த நாட்டில் ஜனநாயகத்தை எவ்வாறு அமைதியான முறையில் நிலைநிறுத்துவது, மற்றவர்களின் அரசியல் உரிமைகளை எவ்வாறு மதிப்பது என்பதை நாம் தேர்தல் முடிவுகளின் பின்னர் காட்டியுள்ளோம். இந்நாட்டு மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக நான் கருதுகிறேன். ஆனால் அந்த அனுபவம் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்க்கும் அனுபவம் என்று நாங்கள் கருதுகிறோம். அத்துடன், பொதுத் தேர்தலின் பின்னரும், தேர்தல் காலத்திலும் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எமது ஆட்சியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அது அவர்களின் உரிமையாகும். அத்துடன், இத்தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலாகும். இத்தேர்தலில் பல தனித்துவங்கள் உள்ளன, அளவுரீதியாக நோக்கினால் , இலங்கை வரலாற்றில், பொதுத் தேர்தலொன்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது.அரசியல் கட்சியென்ற ரீதியில் பெற்ற பாரிய வெற்றியாகும். தேர்தல் வரலாற்றில் ஒரு அரசாங்கம் அடைந்த முதல் வெற்றியாகும். மறுபுறம், இது மக்கள் மகிழ்ச்சியடையக் கூடிய வெற்றியாகும். அவ்வாறான வெற்றியொன்று நமக்கும் நமது குடிமக்களுக்கும் எப்படி கிடைத்தது. நம் நாட்டிற்கு அந்த மாற்றங்கள் தேவை. நமது நாட்டுக்கு பல்வேறு வகையான வெற்றிகள் கிடைத்த போதெல்லாம், நமது பொதுவான இயல்பு தோல்வியுற்றவரின் அல்லது மற்ற தரப்பினரின் மனதை நோகடிக்கும் மற்றும் காயப்படுத்தும் வரலாற்றைக் கண்டுள்ளோம். ஆனால் இந்த தேர்தலின் பின்னர் நிரந்தரமாக புதிய அரசியல் கலாசாரத்தை எமது நாட்டுக்கு உருவாக்கியுள்ளோம். பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அதனை தொடர்ச்சியாக நாங்கள் பாதுகாத்துள்ளோம். சம்பவங்கள் நடக்கலாம். மற்றொரு கட்டத்தில், அமைதியான ஜனநாயகம் இருக்கலாம். மற்ற சமயத்தில், மோதல் நிலைமை இருக்கலாம். ஆனால் அவை மீண்டும் மீண்டும் நிகழும் போது மட்டுமே அது சரி செய்யப்படுகின்றன. எனவே, இந்த ஜனநாயகத்திற்காக நாம் திறந்துள்ள கதவுகளும், பொதுமக்களுக்கிருக்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நமது கடமையும் ஓரிரு சந்தர்ப்பங்களுக்கு மட்டுப்படுத்தினால் அவை வெறும் நிகழ்வுகளாக மாறிவிடும். ஆனால் அதனை தொடர்ச்சியாக பேணினால் அவை வெறும் சம்பவங்களாக மாறிவிடாது. எனவே, இந்த ஜனநாயகத்தில், குடிமக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து, அவர்களை உயர்த நிலைக்குக் கொண்டு வருவது நமது பொறுப்பாகும் . இது அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு என்று நான் கருதுகிறேன். குறிப்பாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வெளிநாளில் வாழும் இலங்கையர்கள் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தனர். தேர்தல் வரலாற்றில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டிய மற்றொரு சந்தர்ப்பம் இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை மிஞ்சும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் தலையீடும் பங்களிப்பும் செயற்பாடும் இத்தேர்தலில் கொடுக்கப்பட்டதாகவே கருதுகிறேன். அவர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்தாலும் இந்தத் தேர்தல் முடிவுகளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடியதை நாம் அறிவோம். அவர்களுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.பொதுவாக தேர்தலின் போது அரசியலின் மிக முக்கியமான பகுதி நமது கருத்தையும் நிலைப்பாடுகளையும் சமூகத்திற்கு எடுத்துச் செல்வது என்பதை நாம் அறிவோம். அதனைச் சமூகத்திற்குக் கொண்டு செல்வதில் ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் சில பணிகளைச் செய்தோம்.சமூக ஊடகங்களில் அந்தப் பொறுப்பை தானாக முன்வந்து முன்னெடுத்த புதிய தலைமுறையொன்றும் இருந்தது. அந்த இளம் தலைமுறையினரின் விசேட எதிர்பார்ப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் வெறும் பந்தயம், போட்டி, வெற்றி தோல்வியை பகிர்ந்து கொள்ளும் போட்டி என்பன வெளிப்படுத்தப்படவில்லை. இது புதிய இளைஞர் தலைமுறையின் எதிர்பார்ப்புகளையும் இலக்குகளையும் வெளிக்காட்டியது. எனவே நாம் அதற்கு கடப்பட்டுள்ளோம். அது முக்கியமானது என்று நான் கதுதுகிறேன். எனவே, இந்த வெற்றியை அடைய பல்வேறு வழிகளில் உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒருவிடயம் இருக்கிறது. பெரும் நம்பிக்கையுடன் இந்த மக்கள் எழுச்சி பெற்றதன் இரகசியம் என்ன? நீண்டகாலமாக எமது நாட்டுக் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்தனர். நம் நாட்டின் குடிமக்கள் சட்டத்தின் முன் அநாதரவாகவும் ஒடுக்கப்பட்டும் இருப்பது வழமையான காட்சியாகும். மேலும் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கப்பட்ட ஒரு குழுவினர் உள்ளனர். பொருளாதாரத்தில் அவர்கள் மனிதத் தூசியாகி விட்டனர். போதிய உணவின்றி, சரியான வீடின்றி, ஆரோக்கியமாக வாழ வாய்ப்பில்லாமல் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவொன்று உள்ளது. மேலும், அவர்கள் தங்கள் அறிவையும் திறனையும் தங்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியுமா? எனவே தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழில்துறையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அழுத்தங்களை எதிர்கொண்டனர் . மேலும், தாம் பேசும் மொழியின்படி, பின்பற்றும் மதத்தின்படி, அவர்களின் கலாச்சாரத்தின்படி ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இருந்தது. எப்போதும் தாம் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் ஒதுக்கப்பட்ட மக்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் சம உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் குழுவென கருதுகிறார்கள். எனவே, அத்தகைய துன்புறுத்தல் இருந்தது. ஒவ்வொரு துறையிலும் உள்ள மக்கள் குழுக்களை அவதானித்தால், அவர்களுக்கே உரித்தான, அவர்களுக்கே தனித்துவமான பல அடக்குமுறைகளை பொதுமக்கள் எதிர்கொண்டனர். சட்டத்தை அமுல்படுத்த முயலும் அரச அதிகாரிகள் இந்த அடக்குமுறைக்கு பலியாகி இருப்பதை நான் அறிவேன். அதுதான் உண்மை நிலை. எனவே, இந்தத் தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்தின் அழைப்பாகும். அவர்கள் இந்த சுதந்திரத்தை எதிர்பார்த்தனர். இந்த பல்வேறு வழிகளிலுமான அடக்குமுறைகளில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும். இந்த தேர்தல் முடிவு சுதந்திரத்தின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. எனவே அந்த குடிமக்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை மட்டுப்படுத்த எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, ஒவ்வொரு துறையிலும் முழு சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும். தொழில் வல்லுநர்களாகிய நாம் அவர்களின் அறிவுக்கு ஏற்ப தங்கள் பங்கை சரியாகச் செய்ய வழங்கப்படும் சுதந்திரம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளுக்கு அவர்களின் பங்கைச் செய்ய நாம் வழங்கும் சுதந்திரம், பொருளாதாரத்தில் நியாயமான பங்கைப் பெறுவதற்கு நாம் வழங்கும் சுதந்திரம், தமது மதம், மொழி மற்றும் கலாச்சாரத்தின் படி நாம் வாழ்வதற்கான உரிமை போன்ற அனைத்தையும் நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அதனால்தான் இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறோம். இந்த நாட்டு மக்களுக்கு இதனை விட சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டும். இந்த வெற்றியை அடைவதில் பொது மக்களின் பெரும் ஈடுபாடு இருந்ததை நாம் அறிவோம். எங்களுடைய அரசியல் இயந்திரத்துடன் தொடர்பில்லாத, எங்களைச் சந்திக்காத, எங்களுடன் கதைக்காத, ஊர், இடம் தெரியாத ஏராளமான மக்கள் எங்களுக்காகப் பாடுபட்டனர். பஸ்ஸில், ரயிலில், பணியிடத்தில், நிகழ்வுகளில் எங்கள் வெற்றிக்காக பெருமளவானவர்கள் பங்களித்தனர். இந்த வெற்றிக்காக நாங்கள் நீண்ட காலமாக போராடினோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல தசாப்தங்களாக போராடினோம். இங்குள்ள பலர் தங்கள் இளமைக் காலத்திலிருந்தே இந்தக் கனவுக்காகப் போராடியதை நான் அறிவேன். இந்தப் போராட்டத்தில், அவர்களின் நேரத்தையும் உழைப்பையும் மட்டுமல்ல, இந்த வெற்றிக்காக அவர்களின் உயிரையும் கூட தியாகம் செய்தனர். அது மட்டுமின்றி, ஆரம்பத்தில் மிகவும் கடினமான சந்தர்ப்பங்களில் இந்த இயக்கத்தைப் பாதுகாக்க தலையிட்டோம். சிலர் நடுவழியில் சென்றுவிட்டனர். பாதியில் விட்டு சென்றாலும், இந்த வெற்றியை அடைவதற்கு, ஆரம்பத்தில், நடுவில், எந்த கட்டத்திலும் எங்களுக்கு ஆதரவு வழங்கினர். அவைகளும் இந்த வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது. எனவே, எங்களுக்கு இரு வகையான பொறுப்புகள் உள்ளன. ஒன்று பொது மக்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்கான பொறுப்பு. இரண்டாவது இயக்கம் தொடர்பான பொறுப்பு. அதிகாரம் என்பது மிகவும் விசேடமான ஒன்று என்று நாங்கள் கருதுகிறோம். அதிகாரத்தில் இருந்து அதிகாரம் பிறப்பிக்கப்படுகிறது. அதிகாரத்தில் இருந்து அதிகாரம் விரிவுபடுத்தப்படுகிறது. அதிகாரத்தில் இருந்து மேலும் அதிகாரம் வளர்க்கிறது. ஆனால் சிலர் அதிகாரத்தை மோசடி என்று கூறுகின்றனர். அந்த எல்லையற்ற அதிகாரமானது எல்லையில்லாத அளவு மோசமானது என்கிறார்கள். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் இதுபோன்ற அதிகாரங்கள் உருவாக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், அந்த அதிகாரங்களின் இறுதி முடிவை எடுத்துக் கொண்டால், அவை மக்களுக்கு நியாயமான பெறுபேறுகளை கொண்டு வரவில்லை. அந்த அதிகாரங்கள் எப்போதும் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராகவே பயன்படுத்தப்பட்டன. எல்லையில்லா அதிகாரம் கிடைத்திருப்பதால் அந்த எல்லையற்ற அதிகாரம் நம்மை எங்கே தள்ளும் என்ற சந்தேகம் சமூகத்தில் உருவாக்கி இருக்கிறது. கொஞ்சமாவது சந்தேகம் கொள்ளும் அனைவருக்கும், நாம் சொல்வது ஆம் எமக்கு அதிகாரம் கிடைத்திருப்பது உண்மைதான். ஆனால் இந்த அதிகாரத்தின் எல்லைகளையும், இந்த அதிகாரம் நமக்குக் கையாளக் கொடுத்துள்ள எல்லையின் அளவையும் நாங்கள் அறிவோம். அதிகாரம் இருக்கிறது. ஆனால் அந்த அதிகாரத்திற்கு நமக்கு வரம்புகள் உண்டு. நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அதிகாரத்தில் ஒரு நோக்கம் இருக்கிறது. மக்களுக்கு வழங்கப்பட்ட நல்ல இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் பொறுப்பு நீண்ட காலமாக அந்த அதிகாரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்கிறது. யாருக்கு? ஒருபுறம், குடிமக்களுக்கான பொறுப்பு. மறுபுறம் இயக்கத்திற்கான பொறுப்பு. எனவே, சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் எங்களுக்காக எந்த வகையான அதிகாரத்தை உருவாக்கினாலும், இந்த அதிகாரத்தை நாம் கையாள்வதில் நாம் பொறுப்புக் கூற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எமக்கு பொறுப்பு உள்ளது.பிணைப்பு இருக்கிறது. எனவே, ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கு ஒரு சாதாரண குடிமகனை விட பாரிய பொறுப்பு உள்ளது. உங்களுக்கெல்லாம் அது புரியும். நான் புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. உங்களிடம் அந்த வரம்புகள் உள்ளன. உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. உங்களிடம் ஒரு பிணைப்பு உள்ளது. அதனைப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும், இங்கு அமைச்சரவைக்கு மாத்திரமன்றி பாராளுமன்றத்துக்கும் பலர் புதியவர்கள். ஆனால் நாங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக பணியாற்றியுள்ளோம். நீங்கள் ஒரு தொழிற்துறையைப் போலவே வேகமாக பணியாற்றியிருக்கிறீர்கள். அரசியல் செயற்பாட்டாளராக பணியாற்றியுள்ளீர்கள். எனவே, நீங்கள் அனைவரும் அமைச்சரவைக்கு புதியவர்கள், பாராளுமன்றத்திற்கு புதியவர்கள், ஆனால் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. பணியாற்றுவதில் புதியவர்களல்ல, எனவே இந்த அமைச்சரவையினால் புதுவிதமான முன்மாதிரிகள் பலவற்றை மக்களுக்கு வழங்க முடியும் என்று நினைக்கிறோம். நாடு எதிர்பார்க்கும் சாதனைகளை முன்னெடுக்க இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையால் முடியும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் சிறப்பாக வழிநடத்தி பாடுபட்டால் அந்த இலக்கை அடையலாம். அதற்கான திறமை உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு அந்த நோக்கம் இருக்கிறது.நீங்கள் மோசடியற்றவர்கள். நீங்கள் நேர்மையானவர் என்று தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். இந்தப் பணியை நிறைவேற்றும் தைரியம் உங்களுக்கு இருக்கிறது. எனவே, இந்தப் பணியை நேர்மையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையுடன் தான் நாம் செயல்படுகிறோம். மேலும், ஒரு சமயத்தில் அரசியலில், அரசியல் நோக்கங்களுக்காக இயக்கத்தைக் கட்டியெழுப்ப அதற்காக பங்காற்ற வேண்டியிருந்தது. எங்களிடம் நல்ல நோக்கங்கள் இருந்தன. அந்த நோக்கங்களை அடைவதற்கான அதிகாரத்தைப் பெறுவதற்கு நாங்கள் பாடுபட்டோம். நமது கோசங்கள், நமது செயல்பாடுகள், இவை அனைத்தும் அதிகாரத்தைப் பெறும் போராட்டத்தின் போக்கில் தான் இருந்தன. நாம் முட்டிமோதி இந்த நாட்டு மக்களுக்கு இந்தத் தேவையை உணர்த்தியுள்ளோம். அதுதான் பெறுபேறு. அரசியல் வெற்றி கிடைத்துள்ளது. எம்மை இனி அரசியல் கோஷங்களால் மட்டும் அளவிடக் கூடாது. செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னரும், நவம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னரும், எங்கள் கோஷங்களின் அடிப்படையில் தான் எம்மை அளவிட்டார்கள். ஆனால், நவம்பர் 14ஆம் திகதிக்குப் பிறகு, ஆட்சியில் நாம் சிறப்பானவர்களா இல்லையா என்ற காரணிக்கமையவே அளவிடுவர். முன்பெல்லாம் நமது அரசியல் செயல்பாடு நல்லதா கெட்டதா என்பதை வைத்து அளவிடப்பட்டது. இனிமேல் நமது ஆட்சி நல்லது கெட்டது என்ற காரணியால் எம்மை அளவிடுவர். எனவே, எமது நீண்டகால முயற்சிகளையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்கள் எதிர்பார்த்த இலக்குகளையும் வெற்றியடையச் செய்வதற்கு நல்லாட்சி அவசியமாகும். இனியும் நாம் கோஷங்களாலும் சித்தாந்தங்களாலும் அளக்கப்படப் போவதில்லை. இன்றிலிருந்து நமது கோஷங்களுக்கு எவ்வளவு உயிர் கொடுக்க முடிந்துள்ள ஆட்சி என்பதை வைத்து அளவிடப்படுவோம். எனவே,எங்கள் வெற்றி பாரியது என்பதோடு வெற்றி ஊடாக ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பின் பாரமும் அதற்கு சமமானது. சில சமயங்களில் வெற்றிக்காக போராடுவோம் என்றும், வெற்றிக்குப் பிறகு திறமையுள்ள குழுக்கள் அடுத்த அடியை எடுத்து வைக்கும் என்றும் எமக்குக் கூறப்பட்டது. ஆனால் நல்லதோ கெட்டதோ வெற்றிக்காக போராட வேண்டியிருந்தது. வெற்றிக்குப் பிறகு அந்தப் பணியில் வெற்றிபெறும் முன்னோடிகளாகிவிட்டோம். எனவே அனைத்தும் உங்கள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. நீங்கள்தான் பிரதானம். உங்களால் எந்த அளவிற்கு உங்கள் துறைகளை திறம்பட நிர்வகித்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற முடியும்? தனிப்பட்ட போக்குகள்,பொறுப்புகள் என்பவற்றை எந்தளவு உங்களால் நிறைவேற்ற முடியும்? இந்த அடிப்படையில் தான் நமது அடுத்த வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. செப்டம்பர் 21 மற்றும் நவம்பர் 14 ஆகிய இரு கட்டங்களிலும் நாம் சித்தியடைந்துள்ளோம். அடுத்து, நாங்கள் சித்தியடைவோமா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் உங்கள் வகிபாகம் பெரியது. சிறந்த ஆட்சிக்கான உங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் அர்ப்பணிப்பினால் தான் இதனை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும். அதற்காக ஒன்றுபட்டு செயற்படுவோம். அதற்காக ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். https://tamil.adaderana.lk/news.php?nid=196073
  2. அச்சம் என்பது மடமையடா... படம் : மன்னாதி மன்னன் இசை : M.s.v, ராமமூர்த்தி பாடல் : கண்ணதாசன் பாடியவர் : T.M.S அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா (அச்சம்) கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மன்னன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இசை பட வாழ்ந்தான் பாண்டியனே (அச்சம்) கருவினில் மலரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்) வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்(அச்சம்) http://tamiloldlyrics.blogspot.com/2016/09/blog-post_0.html
  3. தன்னுடன் இருந்த குழந்தை யார் Nov 17, 2024 14:32PM IST ஷேர் செய்ய : ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 16) கஸ்தூரியை போலீசார் கைது செய்தபோது, தனது 12 வயது மகனை விட்டு பிரிந்து வர முடியாமல், சிலமணி நேரம் பாசப்போராட்டம் நடத்தியுள்ளார். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், “மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கர்கள்” என்று கஸ்தூரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு பல தரப்பிலும் கண்டனங்கள் குவிந்தது. கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார். இந்தநிலையில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் டாக்டர் கண்ணன் ஐபிஎஸ் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து கஸ்தூரியை தேடி வந்தனர். அதில் எழும்பூர் காவல் ஆய்வாளர் மோகன் ராஜ் தலைமையிலான தனிப்படை டீம் கஸ்தூரி தங்கியிருந்த ஹைதராபாத் வீட்டுக்கு சென்றனர். தங்களை சென்னை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டதும், “எனக்கு உடல்நிலை சரியில்லை. நிறைய மாத்திரைகள் எடுத்து வருகிறேன். என்னுடைய குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும். நானே நீதிமன்றத்தில் ஆஜராகிறேன். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்று போலீசாரிடம் கெஞ்சி அழுதிருக்கிறார் கஸ்தூரி. இதுகுறித்து, குழந்தையுடன் கஸ்தூரி கைது என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று (நவம்பர் 16) நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். அப்போது இன்ஸ்பெக்டர் மோகன், “யார் இந்த குழந்தை?” என்று கஸ்தூரியிடம் கேட்டிருக்கிறார். “இது என்னுடைய 12 வயது ஆண் மகன். கருத்து வேறுபாட்டால் எனது கணவரும் நானும் சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டோம். அவர் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். என் குழந்தையை வெளியில் காட்டாமல் வளர்த்து வந்தேன். குழந்தைக்கும் உடல்நிலை சரியில்லை. நான் அவனை எப்படி பிரிந்து வருவது?” என்று மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார் கஸ்தூரி. இதனையடுத்து கூடுதல் ஆணையர் கண்ணனைத் தொடர்புகொண்ட மோகன் ராஜ், “குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காலதாமதம் பண்றாங்க சார். என்ன பண்ணலாம்” என்று ஆலோசனை கேட்டிருக்கிறார். “அவரது உறவினர் அல்லது தெரிந்தவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அழைத்து வாருங்கள் அல்லது குழந்தையோடு அழைத்து வாருங்கள். சட்டப்பூர்வமாக பார்த்துக்கொள்ள வழி இருக்கிறது. நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நாம செயல்படலாம்” என்று இன்ஸ்பெக்டருக்கு கூடுதல் ஆணையர் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார். இதை கஸ்தூரியிடம் சொன்னபோது, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார். பின்னர், “சார் கொஞ்சம் டைம் கொடுங்க” என்று கேட்டிருக்கிறார். போலீசாரும் சிறிது நேரம் டைம் கொடுத்திருக்கிறார்கள். அப்போது கஸ்தூரி தனது நண்பரான பாமக மாநில துணை செயலாளரும் toni & guy ஹேர்டிரெஸ்ஸிங் மற்றும் புதுச்சேரியில் கல்லூரி நடத்தி வரும் சாம்பால் மனைவியை தொடர்புகொண்டு நேரில் அழைத்தார். அவரிடம் தனது 12 வயது மகனை ஒப்படைத்துவிட்டு சிறையில் இருந்து வரும்வரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று, தனது இரண்டு கையால் மகனின் கன்னத்தை வருடி உச்சியில் முத்தமிட்டு கண்ணீரோடு போலீஸ் வாகனமான பொலிரோ காரில் ஏறினார் கஸ்தூரி. ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது பொலிரோ கார். அலுங்காமல் குலுங்காமல் சொகுசு காரில் பயணித்து வந்த கஸ்தூரி, போலீஸ் வாகனமான பொலிரோ காரில் வசதியாக காலை நீட்டி மடக்க முடியாமல் பின் இருக்கையில் அமர்ந்து இரவு நேரத்தில் பயணித்தபோது உறக்கமில்லாமல் உடல் சோர்ந்து தளர்ந்து காணப்பட்டார். இரவு முழுவதும் களைப்புடன் காரில் பயணித்த கஸ்தூரி இன்று காலையில் தமிழக எல்லைக்கு வந்தபோது, “சார் மாத்திரை போடணும். ஏதாவது ஒரு ஹோட்டல்ல கொஞ்சம் நிறுத்துங்க” என்று போலீசாரிடம் கேட்டிருக்கிறார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் பாதுகாப்பு நலன் கருதி ஒரு ஹோட்டலில் ஜீப்பை நிறுத்தினார். அப்போது கஸ்தூரி அந்த ஹோட்டலில் ஃபிரெஷ் அப் செய்துகொண்டார். பின்னர் டிபன் மற்றும் காபி சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக்கொண்டு மீண்டும் அதே பொலிரோ காரில் ஏறி அமர்ந்தார். 12 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி. காவல்நிலையத்தில் ரிமாண்ட்டுக்கு அனுப்புவதற்கான ஃபார்மாலிட்டிக்களை முடித்துவிட்டு சென்னை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். கஸ்தூரிக்கு நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/political-news/kasthuri-arrested-who-was-the-child-with-her-opened-up/
  4. அநுர சகோதரயவை X தளத்தில் பின்தொடர்கின்றேன்! சமூகவலைத் தளங்களில் நான் இணைத்துக்கொண்ட முதலாவது சிங்களவர்!
  5. மெதுவாக ஆனால் உறுதியாக முன்னிலை நோக்கி🦾
  6. தன்னறம் இலக்கிய விருது : 2024 கிரிசாந் மெய்யிலேயே ஈழத்தின் முதன்மையான இலக்கிய சாதனை ஷோபா சக்தியில் நிகழ்ந்தது. தன் கதைகளைச் சற்றே நீளமான அரசியல் துண்டுப்பிரசுரங்கள் எனச் சொல்லும் தற்பகடிக் கலைஞன் ஷோபா. தமிழீழம் எனும் பெருவேட்கை நெருப்பெரிந்த காலத்தில் அதன் உளச்சான்றை நோக்கியெழுந்த முதன்மையான கலைக்குரல். அறங்களை மாபெரும் கூட்டு உணர்ச்சிகள் பலவேறாக வகைப்படுத்துகின்றன. ஒன்றில் பொருந்துவது பிறிதில் பிழைப்பது. அறங்களை ஆக்குதலும் விரித்தலும் விவாதித்தலும் மறு விசாரணை புரிவதை இலக்கியம் தான் விழைந்தோ விழைவின்றியோ நிகழ்த்தியே ஆவது. தன்னை முழுமையாகத் தன் எழுத்திற்கு அளித்தல். தன் கலைக்கு அளித்தல். தான் நம்பும் அறங்களுக்கு அளித்தல் என்பது முழுமையான அம்சங்களைக் அக் கலைக்கும் கலைஞனுக்கும் அளிப்பவை. ஷோபா சக்தி எழுத்திற்கு அப்பாலும் கலைஞன் என்ற தருக்கில் நின்றமைவதும் ஈர்ப்பதும் அந்த அம்சங்களின் விசையாலேயே. அவர் சொல்லும் அரசியல் என்பது அன்றாடங்களின் தத்துவார்த்த அரசியல் என்பதல்ல என்பது எனது புரிதல். அறங்களும் மானுட வாழ்வும் தீராது மோதிக்கொள்ளும் களங்களின் நுண்மையில் ஒளிந்திருக்கும் பகடியை அவர் காண்கிறார். அல்லது அவரது கலை அதை நிகழ்த்துகிறது. வாழ்க்கையை அதற்கு வெளியிலிருந்து நோக்குபவரின் புன்னகை அவரது எழுத்துகளில் மின்மினிப்பூச்சிகளின் பச்சையொளியெனப் பூசியிருப்பது அதையே. நம் காலத்தில் தமிழில் எழுதுபவர்களில் முதன்மையான சிறுகதை எழுத்தாளர் ஷோபா சக்தியென்பதே எனது மதிப்பீடு. நாவல் எனும் வடிவத்தில் அவர் எழுதியவை முக்கியமானவை எனினும் ஒருவரது ஆளுமையும் அவரது மேதமையும் ஒன்றிலேயே கூர்முனை முற்றி எழும். தேர்ந்த கொல்லனின் இழைத்து இழைத்துப் பழகிய விரல்களால் தொட்டு நுணுக்கப்படும் பொன்னென மொழியை அளைபவர். அவரில் நவீன தமிழின் உரைநடை புதிய உச்சங்களை அடைந்தது. அவ்வகையில் அவரது பல முக்கியமான சிறுகதைகள் மானுட வாழ்வை விளையாட்டென்றாக்கி தீவிரம் கொண்டதாக்கி அங்கிருந்து தெறித்து மிதந்து எழும் கணங்களை அளிப்பவை. ஈழத்தின் முதன்மையான எழுத்தாளரும் நாடகக் கலைஞரும் திரைக்கலைஞரும் ஆகிய எங்கள் மூத்தவருக்கு “தன்னறம் இலக்கிய விருது 2024” அவரது பங்களிப்பை ஏற்று கெளரவிப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. விருதுகளுக்கோ மரியாதைகளுக்கோ அப்பால் நின்று மெல்லிய புன்னகையுடன் சிறுவனைப் போல உடல் ஒசிந்து இந்த விளையாட்டை நோக்கும் எங்கள் மண்ணின் பெருங்கலைஞனுக்கு வாழ்த்துகள். https://kirishanth.com/archives/2094/
  7. தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும் November 17, 2024 வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் தனியொரு கட்சியைச் சேர்ந்த கூடுதல் எண்ணிக்கையானவர்கள் என்றால் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே. தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னரும் இரு மாகாணங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்கள். ஆனால், இந்த தடவை நடந்திருப்பதைப் போன்று ஒரு தேசிய கட்சி அதுவும் ஓர் இடதுசாரிக்கட்சி தமிழ்பேசும் மக்களை பாரம்பரியமாக பிரதிநிதித்துவம் செய்துவந்த அரசியல் கட்சிகளை இவ்வாறாக தோற்கடித்ததில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆறு பாராளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியவாத கட்சிகளினால் ஒவ்வோர் ஆசனத்துக்கு மேல் பெறமுடியாமல் போகிற அளவுக்கு அவற்றை பின் தள்ளியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய நான்கு மாவட்டங்களிலும் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றிய முன்னிலைக் கட்சியாக தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்திருக்கிறது. இந்த அரசியல் கோல மாற்றத்துக்கு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழ்க்கட்சிகளின் செயல்பாடுகளில் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியும் வெறுப்பும் காரணமா அல்லது ஜனாதிபதி திஸநாயக்கவினதும் அவரது கட்சியினதும் கொள்கைகள் மீதான ஈர்ப்பு காரணமா? தமிழ் மக்கள் வாக்களித்த முறையை தமிழ்க் கட்சிகளும் தேசிய மக்கள் சக்தியும் எவ்வாறு வியாக்கியானப்படுத்துகின்றன என்பது அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விடயமாகும். இரு மாகாணங்களிலும் தங்களுக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்ததை ஒரு வெற்றியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில தலைவர்கள் பெருமைப்படுகிறார்கள். முன்னைய பாராளுமன்றத்தில் தங்களுக்கு இருந்த ஆறு ஆசனங்களையும் விட இரு ஆசனங்களை கூடுலாக தந்து தமிழ் மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் இயக்கமாக மீண்டும் அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாகவும் அந்த தலைவர்கள் தர்க்கநியாயம் செய்கிறார்கள். ஆனால், தமிழ் அரசுக் கட்சி பெற்றிருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை குறித்து பெருமைப்படுவதையும் விட தேசிய மக்கள் சக்தியினால் இரு மாகாணங்களிலும் தமிழ்க் கட்சிகளை பின்தள்ளி எவ்வாறு கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது என்பதை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டியதே முக்கியமானதாகும். கடந்த காலம் குறித்து சுயபரிசோதனை செய்வதில் ஒரு போதும் அக்கறை காட்டாத தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய நிலைவரம் குறித்தாவது ஆழ்ந்து சிந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் கட்சியாக – எட்டு ஆசனங்களுடன் என்றாலும் – விளங்கும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் அதன் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் அரசுக் கட்சி அதன் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு உட்பூசல்களினால் சீர்குலைந்து கிடக்கிறது. பாரம்பரியமாக அதன் கோட்டையாக விளக்கிய யாழ்ப்பாண மாவட்டமே கைவிட்டுப் போயிருக்கிறது. இவ்வருட முற்பகுதியில் திருகோணமலையில் நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கு பிறகு கட்சி உள்ளுக்குள் எத்தனை முகாம்களாக இருக்கிறதோ தெரியாது, ஆனால் வெளிப் படையாக இரு முகாம்களாக பிளவுபட்டு நிற்கிறது. கடந்த பதினைந்து வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வந்த மதியாபரணம் சுமந்திரனும் சிவஞானம் சிறீதரனுமே அந்த எதிரெதிர் முகாம்களின் ‘தளபதிகள்’. சுமந்திரனால் இந்த தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவாக முடியவில்லை. அதேவேளை அவர் தெரிவாகாமல் போனதும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக கூடுதல் விருப்பு வாக்குகளுடன் தான் தெரிவானதும் இன்றைய தமிழர் அரசியலின் கோலங்களுக்கு மத்தியில் சிறீதரன் பெரிதாகப் பெருமைப்படக்கூடிய அம்சங்கள் அல்ல. தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர இணக்கப்போக்கை கடைப்பிடிப்பதிலும் தலைமைத்துவத் தகராறை முடிவுக்கு கொண்டுவருவதிலும் சிறீதரன் அக்கறை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விலக்கிக்கொள்ளச் செய்து கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கான வழிமுறைகளை அவர் கடைப்பிடிக்கவேண்டும். தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்களில் அனுபவம் கூடியவர் என்ற முறையில் அதன் பாராளுமன்றக் குழுவின் தலைவராக பதவியேற்று தனது தலைமைத்துவ ஆளுமையை சீறீதரன் நிரூபிக்க வேண்டும். சிந்தித்துச் செயல்படாவிட்டால் எதிர்காலத் தேர்தல்களில் பாதிப்பு மேலும் மோசமாகலாம். சுமந்திரனும் இது விடயத்தில் தனது பக்குவத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம். https://eelanadu.lk/தமிழரசின்-எதிர்காலமும்-ச/
  8. தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு! November 17, 2024 02:45 pm தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்றது. இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன. விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற் குறித்த தீர்மானம் இவ்வாறு எடுக்கப்பட்டதாக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196026
  9. நாடாளுமன்றத் தேர்தல் 2024 : தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள் - நிலாந்தன் தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன. வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என் பி பி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும், பிள்ளையான் கிழக்கில் இருந்தும் சென்றார்கள். மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரதிநிதிகள். இப்பொழுது ஒரே தென்னிலங்கைக் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர். என்பிபி இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பி தமிழ் மக்கள் அதற்கு வாக்களிக்கவில்லை. பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதன் விளைவே அது. தமிழ்ச் சமூகமானது ஒருவர் மற்றவரை நம்பாத; தன் பலத்தை தானே நம்பாத; ஒருவர் மற்றவரை சந்தேகத்தோடு பார்க்கின்ற; ஒருவருக்கு எதிராக மற்றவர் சூழ்ச்சிக் கோட்பாடுகளைப் புனைகின்ற; சமூகத்தில் மினுங்கிக் கொண்டு தெரியும் ஒருவரை சந்தேகத்தோடு வெறுப்போடு அணுகுகின்ற; வெறுப்பர்கள் அதிகம் நிறைந்த; கூட்டுணர்வு குறைந்த; தாய் நிலத்தை விட்டுப் புலம்பெயரும் வேட்கை மிகுந்த ஒரு சமூகமாக மாறி வருகின்றது. அவ்வாறு தூர்ந்து கொண்டு போகும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு. தன் பலம் உணர்ந்து ஒருவர் மற்றவரை நம்பிக்கையோடு பார்க்கின்ற; உருகிப்பிணைந்த ஒரு திரட்சியாக தமிழ் மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உண்டு. ஆனால் தேசியவாத அரசியல் என்றால் மக்களைத் திரளாக்குவதுதான் என்ற எளிமையான பேருண்மையை விளங்கிக் கொள்ளாத அல்லது அதை விளங்கிக் கொள்ளத் தேவையான பண்பாட்டு இதயத்தைக் கொண்டிராத; தேசிய கூட்டுணர்வைக் கொண்டிராத, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்வியின் விளைவே, அதிகரித்த சுயேச்சைகளும் கட்சிகளும் ஆகும். இதனால் ஏற்பட்ட சலிப்பினாலும் விரக்தியினாலும் வெறுப்பினாலும் ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் என்பிபியை நோக்கிப் போனார்கள். நாடாளுமன்றத்தில் என்பிபி பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது திருப்பகரமான மாற்றங்களைச் செய்யப் போதுமான ஒரு பெரும்பான்மை. அப்படிப் பார்த்தால் என்பிபி இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் புரட்சிகரமான முடிவை எடுக்குமா? அல்லது மகாவம்ச மனோநிலையின் கைதியாக மாறி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தானே தோற்கடிக்குமா? இலங்கைத் தீவியின் எந்த ஒரு தேர்தல் வெற்றியும் எப்பொழுது முழு வெற்றியாக மாறுகிறது என்றால், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் போதுதான். என்பிபி கருதுவதுபோல இனப்பிரச்சினை, ஒரு மனிதாபிமானப் பிரச்சினையல்ல. அது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமையின் விளைவுதான். இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள்,தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இறமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு, இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பை பல்லினத் தன்மை கொண்ட ஒன்றாகக் கட்டமைக்க வேண்டும். அவ்வாறான அடிப்படை மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு என்பிபி தயாரா? இப்போதிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதைச் செய்யப் போதுமானது. அதே சமயம் இம்முறை தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் நம்பிக்கையூட்டும் விடயங்கள் எவை என்று பார்த்தால், கிழக்கில் பிரதேச வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் தோற்று விட்டார். அது பெரிய வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியல்ல. சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்விதான். சங்குக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த தோல்விபோல. எனினும் தேர்தல் கணக்கில் அது தோல்வி. கிழக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஐந்து ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்துக்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தாயக ஒருமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியின் அடுத்த கட்ட வளர்ச்சி. ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மைய பிரதேச வாதத்துக்கு தலைமை தாங்கும் அரசியல்வாதி தோல்வியுற்றிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்திருக்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரித்த ஜேவிபிக்கு வடக்கு கிழக்கில் 7 ஆசனங்கள் கிடைத்திருக்கும் ஒரு பின்னணியில் கிழக்கில் தாயக ஒருமைப்பாட்டுக்கான பலமான மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது. மேலும் தமிழரசுக் கட்சி அதிகம் ஆசனங்களை பெற்ற ஒரு தனிக் கட்சியாக மேலெழுந்திருக்கிறது. கடந்த முறையைவிட இந்த முறை இரண்டு ஆசனங்கள் அதிகம். ஒரு கட்சியாக அந்த வெற்றியைக் கொண்டாடலாம். ஆனால் தேசத்தைத் திரட்டுவது என்பது கட்சியைப் பலப்படுத்துவது மட்டும் அல்ல. கடந்த நாடாளுமன்றத்தோடு ஒப்பிடுகையில் மொத்த தமிழ் தேசியப் பிரதிநிதித்துவத்தில் மூன்று ஆசனங்கள் இழக்கப்பட்டமை வீழ்ச்சி. என்பிபி யாழ்ப்பாணத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கிறது. கிழக்கிலும் அதற்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன. அவை தமிழ்த் தேசிய அரசியலின் தோல்விகள். இந்தத் தோல்விகளுக்கு ஊடாகப் பார்த்தால் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றியைக் கொண்டாட முடியாது. ஆனால் சுமந்திரன் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறார். கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாகத் தமிழரசியலைத் தீர்மானிக்கும் சக்திபோல செயற்பட்ட சுமந்திரனும் இந்தத் தோல்விக்குப் பொறுப்பு. அதற்குரிய தண்டனையை வாக்காளர்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டு கட்சி பெற்ற சிறு வெற்றியை எப்படிக் கொண்டாட முடியும்? ஏனைய கட்சிகள் இல்லாமல் தனிக் கட்சியாக வெல்ல முடியும் என்று மார்தட்டுவதே தேசியவாத அரசியலுக்கு,தேசத் திரட்சிக்கு எதிரானது. முன்னணி ஏற்கனவே இருந்த ஓர் ஆசனத்தை இழந்திருக்கிறது. சங்கிற்கு ஒரேயொரு ஆசனந்தான். மானும் மாம்பழமும் வெற்றி பெறவில்லை.சங்குச் சின்னதைப் பயன்படுத்துவதன்மூலம் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை நாடாளுமன்றத் தேர்தலுக்கும் மடை மாற்றலாம் என்ற எதிர் பார்ப்பு வெற்றி பெறவில்லை. செல்வம் அடைக்கலநாதனுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகள் மொத்தம் 5695. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இம்முறையும் வெற்றி பெறவில்லை. தென்னிலங்கையில் இரண்டு தடவை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேவிபிக்கு வடக்கில் 5 ஆசனங்கள். ஆனால் ஆயுதப் போராட்டத்தில் உறுப்புகளை இழந்தவர்களும் உட்பட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் வெற்றி பெறவில்லை. சசிகலா எதிர்பார்த்த அனுதாப வாக்குகள் அவருக்குக் கிடைக்கவில்லை. தென்மராட்சியில், ரவிராஜ்ஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் கலகம் அதிக வாக்குகளை வென்றிருக்கின்றது. அர்ஜுனாவுக்கு கிடைத்த வெற்றியை வைத்து சமூக வலைத்தளங்களில் யாழ்ப்பாணத்தவர்கள் பரிகசிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த வெற்றியை சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியுப்கள் உருவாக்கும் புதிய அரசியல் பண்பாட்டுக்கூடாகவே விளங்கிக்கொள்ள வேண்டும். யுடியூபர்களின் காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் பொருத்தமான உபாயங்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதைவிட முக்கியமாக தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம்தான் அர்ஜுனாவைப் போன்றவர்களின் வெற்றிகளுக்கு மூலகாரணம். அந்த வெற்றிடத்திற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளே பொறுப்பு. முடிவாக, தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் வருமாறு. முதலாவது பேருண்மை. தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஒரு பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. தேசத்தைத் திரட்டத் தவறினால்,தென்னிலங்கை மையக் கட்சிகள் வாக்குகளைக் கவர்ந்து சென்று விடும். இரண்டாவது பேருண்மை, சமஸ்ரியை தேர்தல்மூலம் அடைய முடியாது. தேர்தல்களின் மூலம் மட்டும் தேசத்தைத் திரட்ட முடியாது. மூன்றாவது பேருண்மை, சமஸ்ரியை அடைவதாக இருந்தால் ஈழத் தமிழர்கள் நாட்டுக்கு வெளியே அணிகளையும் கூட்டுக்களையும் உருவாக்க வேண்டும். அந்த அணிகளின் மூலம் தீர்வுக்கான பிராந்திய மற்றும் அனைத்துலகச் சூழலைக் கனியச்செய்ய வேண்டும். அவ்வாறு உலகத்தைத் திரட்டுவது என்றால் அதற்கு முதல் இங்கு தாயகத்தில் தேசத்தைத் திரட்ட வேண்டும். தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புகளை ஒரு பெருந்திரளாக்க வேண்டும். தேசத்தைத் திரட்டினால்தான் உலகத்தைத் திரட்டலாம். அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறினால் தென்னிலங்கையை மையக் கட்சிகள் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் படிப்படியாக அரித்துத் தின்று விடும். https://www.nillanthan.com/6972/
  10. பிராந்திய அரசியலின் முடிவும் தேசிய அரசியலின் தொடக்கமும் November 17, 2024 — கருணாகரன் — மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர, நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தியே (NPP) வெற்றியடைந்துள்ளது. மட்டக்களப்பிலும் இரண்டாவது இடத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) யே நிற்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு தேசியக் கட்சி, நாடு முழுவதிலும் வெற்றியீட்டியது இந்தத் தடவைதான். இதற்கு முன்னான தேர்தல்களில் ஐ.தே.கவோ, பொதுஜன பெரமுனவோ சு.கவோ பெரும்பான்மையை அல்லது அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும், அதில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்கள் விலகியே இருந்தன. அல்லது வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களை அவற்றினால் வெற்றி கொள்ள முடியவில்லை. ஆனால், இந்தத் தடவை வடக்குக் கிழக்கிலும் முதன்மையிடத்தை தேசிய மக்கள் சக்தி (NPP) பெற்றுள்ளது. இது தேசிய மக்கள் சக்தியின் அரசியற் கோட்பாட்டினதும் நடைமுறைகளினதும் வெற்றியா? அல்லது அதன் மீதான நாடளாவிய நம்பிக்கைகளின் விளைவா? என்பது ஆராய்வுக்குரியது. பல தசாப்தங்களாக சமூகப் பிராந்தியம் (Social region) மற்றும் புவியியற் பிராந்திய (Geographical region) அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த தமிழ்த்தேசிய, முஸ்லிம் தேசிய, மலையகத் தேசியக் கட்சிகளையும் அவற்றின் அரசியலையும் கடந்து தேசியமக்கள் சக்தி (NPP) யை மக்கள் நெருங்கிச் செல்ல நேர்ந்தது எதற்காக அல்லது எதனால்? தேசிய மக்கள் சக்தி இந்த மக்களுக்கு இதுவரை ஆற்றிய நல்விளைவுகளினாலா? நிச்சயமாக இல்லை. அதற்கான ஆட்சியதிகாரத்தை அது கொண்டிருக்கவுமில்லை. அதனுடைய ஐம்பது ஆண்டுகால அரசியற் செயற்பாட்டுப் பரப்பில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களோ, மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகப் பிராந்தியங்களோ உள்ளடங்கியிருக்கவுமில்லை. உதிரிகளாக சிலர் தேசிய மக்கள் சக்தியோடு அல்லது ஜே.வி.பியோடு இணைந்திருந்தனரே தவிர, சமூகப் பிராந்தியமாகவும் புவியியற் பிராந்தியமாகவும் இணைந்திருக்கவில்லை. ஆனால், தேசிய மக்கள் சக்தி (NPP) யை இன்று சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம், மலையக மக்களும் நம்பியிருக்கிறார்கள். அதனுடைய இளைய தலைமுறை உறுப்பினர்களின் ஆற்றலையும் நேர்மையையும் மதிக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் – மதிப்பின் வெளிப்பாடே நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் நாடளாவிய ரீதியில் பெற்ற மாபெரும் வெற்றியாகும். இது வரலாற்று வெற்றியாகவே கருதப்படுகிறது. அது உண்மையும் கூட. மாற்றத்தை அல்லது தாங்கள் விரும்புகின்றதொரு அரசியற் சூழலை – தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே அதனை நோக்கி மக்களை நெருங்கிச் செல்ல வைத்தது. அதுவே தேசிய மக்கள் சக்தியின் பிராந்திய வெற்றியாகும். அதேவேளை மக்கள் எதிர்பார்க்கின்ற – விரும்புகின்ற வெற்றியை தேசிய மக்கள் சக்தி வழங்கினால், அது மக்களுக்குக் கிடைக்கும் – மக்கள் பெறுகின்ற வெற்றியாக அமையும். இந்தப் பின்னணியில் மக்கள் தமக்குரிய – தமக்குப் பொருத்தமானதெனக் கருதுகின்ற – அரசியற் தெரிவைச் செய்வது அவர்களுடைய உரிமையும் தேவையுமாகும். அதை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இந்தச் சூழலிற்தான் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் பிராந்திய அரசியலின் எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளைப் பலமாக்கியிருக்கிறது. இப்படித்தான் நடக்கும் என விடயங்களைக் கூர்மையாக நோக்குவோர் ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தனர். அது நடந்திருக்கிறது. இதற்குக் காரணம் – 1. பிராந்திய (தமிழ்த்தேசியம், முஸ்லிம் தேசியம், மலையகத் தேசியம்) அரசியற் கோட்பாட்டின் வீரியமின்மையும் நடைமுறைப் பலவீனங்களும். 2. ஆளுமைக் குறைபாடும் ஆற்றலின்மையும் கொண்ட தலைமைகள். 3. கட்சிகளின் கட்டமைப்புப் பலவீனம். 4. செயற்பாட்டுத் திறனின்மை. 5. மக்களுடனான உறவுச் சிக்கல். 6. நேர்மையீனம். 7. ராசதந்திரப் போதாமை. 8. சமூக, பொருளாதார அடிப்படைகளில் அக்கறையற்ற தன்மை 9. அர்ப்பணிப்பின்மை 10. வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை. 11. பொறுப்புக் கூறல் – பொறுப்பெடுத்தல் – பொறுப்புணர்தல் ஆகியவை இல்லை. 12. ஜனநாயக விழுமியங்களைப் பொருட்படுத்தாக நடவடிக்கைகளும் நடத்தைகளும். 13. பிராந்திய அரசியலையும் தேசிய அரசியலையும் கையாள்வது தொடர்பில் கொண்டுள்ள குழப்பங்களும் முரண்பாடுகளும். 14. பிராந்திய மட்டத்திலும் தேசிய ரீதியிலும் காணப்பட்ட குறைபாடுகள், குற்றச் செயல்கள், அநீதிகள், மக்கள் விரோதச் செயல்கள், இயற்கை வளச் சிதைப்புகள், ஊழல் முறைகேடுகள், நிர்வாக துஸ்பிரயோகம் போன்ற எதைப்பற்றியும் பொருட்படுத்தாத அரசியல் தலைமைகளின் பொறுப்பின்மை. இப்படியான பல காரணங்களால் பிராந்திய அரசியலின் அடித்தளம் பலவீனப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பினை பிராந்திய அரசியலை மேற்கொண்டு வந்த – வருகின்ற அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் நேர்மையோடு ஏற்க வேண்டும். அத்துடன், பிராந்திய அரசியலை ஆதரித்த – ஆதரிக்கின்ற – ஊடகங்களும் அதை முன்னிறுத்தி எழுதும் பத்தியாளர்களும் அதனுடைய ஆதரவாளர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே அரசியல் நேர்மையும் அறமுமாகும். அப்படிச் செய்தால்தான் அடுத்த கட்ட அரசியலையாவது பொருத்தமானதாக – யதார்த்தமானதாக – முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். பிராந்திய அரசியல் வீழ்ச்சிக்கான காரணங்கள் வெளிப்படையாகவே தெரிந்தவை எனக் கண்டோம். இவை அனைத்தும் ஏற்கனவே பலராலும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டவை. ஆனாலும் அவை குறித்து எந்தக் கவனமும் கொள்ளப்படவில்லை. (இப்போதும் அதுதான் நிலைமை) பதிலாக அவை அனைத்தும் உதாசீனப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டன. மட்டுமல்ல, இந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டியோரையும் இவற்றின் மீதான விமர்சனங்களை வைத்தவர்களையும் புறமொதுக்கி, துரோகப்பட்டியலில் சேர்த்ததே நடந்தது. விளைவு? இன்று பிராந்திய அரசியல் நெருக்கடிக்குள்ளானதேயாகும். இதை உரிமைகளுக்கான அரசியல் எனச் சித்திரித்தாலும் மறுபுறத்தில் குறுந்தேசியவாத அரசியலாகவே சுருக்கப்பட்டிருந்தது. குறுந்தேசியவாத அரசியலினால் ஒருபோதும் மக்களுடைய தேவைகளையோ பிரச்சினைகளையோ தீர்த்து வைக்க முடியாது. ஆனால், குறுந்தேசியவாதத்தினால் ஒரு எல்லைவரையில் மக்களுடைய உணர்வுகளைச் சீண்டிக் குவிமையப்படுத்த முடியும். அதுவே நடந்தது. ஆனால், மக்கள் எப்போதும் தங்களுடைய வாழ்க்கைக்கான தேவைகளையும் பிரச்சினைகளையும் ஓரங்கட்டி விட்டு உணர்ச்சிகரமான அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படியிருக்கவும் முடியாது. ஏற்கனவே இந்த அரசியல் விளையாட்டில் ஈடுபட்ட பலரும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியேறிப் புலம்பெயர்ந்து விட்டனர். (அங்கே போயிருந்து கொஞ்சம் தங்களை வளப்படுத்திக் கொண்டு, பிறகு இந்த அரசியல் விளையாட்டில் ஈடுபடுகின்றவர்களும் உண்டு). மிஞ்சியோர் மாற்று வழிகளைத் தேடிக் கொண்டனர். சிலர் இதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். ஒரு தொகுதியினர் மட்டும் இதை ஒரு வியாபார உத்தியாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே ஒரு சிறிய தரப்பைத் தவிர, ஏனையோர் ஏதோ ஒரு நிலையில் அல்லது வேறு சூழலில் தமது வாழ்க்கையையும் அதற்கான தேவைகளையம் முதன்மையாகக் கொண்டுதான் சிந்திப்பர். அதற்கான அரசியலையே அவர்கள் நாடுவர். இதுதான் உலகெங்கும் உள்ள பொதுவான இயல்பும் நடைமுறையுமாகும். இது தவிர்க்க முடியாதது. ஏனென்றால், எல்லாவற்றையும் விட முக்கியமானது வாழ்க்கை. வாழ்க்கைக்கே விடுதலையும் பொருளாதாரமும் அரசியலும். ஆகவே ‘வாழ்க்கையை விட்டு விட்டு நீங்கள் உங்களை முழுதாக ஒறுத்து, விடுதலைக்கான அரசியலுக்காக முன்வாருங்கள். வாழ்க்கையையும் விட விடுதலையே முதன்மையானது‘ என்றால் ஒரு எல்லை வரைதான் வருவார்கள். அதற்குப் பிறகு, தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்கத் தொடங்குவர். அதுவே இப்பொழுது நடந்திருக்கிறது. இதை –இந்த உண்மையை – இந்த யதார்த்தத்தை – உணர்ந்து கொள்ளத் தயாரில்லாதவர்கள், தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தமிழ் மக்களெல்லாம் தமது இன உணர்வையும் உரிமைக்கான அரசியற் பயணத்தையும் மறந்து விட்டனர் என்று சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் புலம்பத்தொடங்கி விட்டனர். தாங்க முடியாமற் துயரத்தைப் பகிர்கின்றனர். சிலர் இதற்கும் மேலே சென்று சனங்களைத் திட்டித் தீர்க்கின்றனர். எந்த வகையான உத்தரவாதத்தின் அடிப்படையில் NPP க்கான ஆதரவைத் தமிழ் மக்கள் வழங்கலாம் என்று சிலர் கேட்கின்றனர். இதுவரையில் NPP யோ JVP யோ தமிழ்மக்களுக்குச் செய்த நன்மைகள் என்ன? என்றும் கேட்கிறார்கள். சனங்களைத் திட்டுவதற்கான உரிமையும் தார்மீக அடிப்படையும் யாருக்கும் இல்லை. சனங்கள் இவ்வளவு காலமும் பிராந்திய அரசியலை மேற்கொண்ட தலைவர்களின் கருத்துகளையும் அந்தக் கட்சிகளின் அரசியலையும் ஏற்றே நின்றனர். ஏறக்குறைய 75 ஆண்டுகள். 75 ஆண்டுகள் என்பது ஆறு தலைமுறையின் இளமை அழிந்த காலமாகும். இதற்குள் தங்களுடைய இளமையை மட்டும் அவர்கள் இழக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் உறவுகளையும் வாழிடங்களையும் வளமான சூழலையும் இழந்திருக்கின்றனர். ஆனால் இந்தக் காலத்தில் மக்களை விடப் பன்மடங்கு மேலான வாழ்க்கையையே தலைவர்கள் வாழ்ந்தனர். அதேவேளை மக்கள் தமது சக்தியையும் மீறி இவர்களுடைய தலைமையை, அரசியலை ஏற்று நின்றனர். அதற்காகப் பெருந்தியாகங்களைச் செய்தனர். இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், தாம் எப்படி நடந்து கொண்டாலும் தமிழ்த்தேசியத்தின் பேராலும் இன உணர்வினாலும் அதையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்வர் என்ற திமிரோடிருருந்தனர். அந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டே இந்தத் தேர்தலில் கூட இந்தக் களைக் கூத்தாடிகள் கூத்தாடினர். இதைக் குறித்தெல்லாம் அதாவது இந்தத் தவறுகளைக் குறித்தெல்லாம் இவர்களில் எவரும் கவலைப்படவில்லை. இவர்களை ஆதரித்தோரும் கண்டு கொள்ளவில்லை, கண்டிக்கவில்லை. இவர்களைப் பொறுத்த வரையில் தாம் எப்படி, எதைச் செய்தாலும் அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு மக்கள் மந்தைகளாகவே இருப்பர். அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடாகும். ஆனால் மக்களோ வரலாறோ ஒரு போதும் அப்படியே இருப்பதில்லை. அதுவே இப்போது நிகழ்ந்திருப்பதாகும். தென்னிலங்கையிலுள்ள மக்கள் விரோதச் சக்திகளுக்கு நடந்ததே வடக்குக் கிழக்குப் பிராந்தியத்திலும் நடந்திருக்கிறது. ஏறக்குறைய இதே காட்சிகள் மலையகத்திலும் முஸ்லிம் பிராயத்தியத்திலும் நடந்திருக்கிறது; சிற்சில வேறுபாடுகளுடன். பிராந்திய அரசியலினதும் அதை மேற்கொண்டு வந்த அரசியற் கட்சிகளின் தவறுகளுக்கான கூட்டுத் தண்டனையாகவே தற்போதைய தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. இது கூடச் சடுதியாக ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்கு முன் கடந்த தேர்தல்களின் போதே இந்த வீழ்ச்சியை – மாற்றத்தை மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர். கடந்த தேர்தல்களில் யாழ்ப்பாணத்தில் டக்களஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன், அங்கயன் ராமநாதன் போன்றோரும் கிழக்கில் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வியாழேந்திரன் போன்றோரும் இதற்கான அடையாளங்களாகும். அதைக்கூட இந்தத் தலைமைகள் எதுவும் கணக்கிற் கொண்டு திருந்திக் கொள்ளவில்லை. விளைவு இப்போது ஒட்டு மொத்தமாக ஒரு பாரிய வீழ்ச்சியையும் மாற்றத்தையும் சந்திக்க வேண்டி நேர்ந்திருக்கிறது. ஆக பிராந்திய அரசியலைப் பலவீனப்படுத்தியதில் முக்கியமான பங்கு அந்த அந்த அரசியற் குறைபாட்டுக்கும் அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தியோருக்கும் அதை மேற்கொண்டோருக்குமே உரியது. பழியை பிறரின் மீது போட்டுத் தப்பி விட முடியாது. இப்போது நிலைமை கையை மீறி விட்டது. இது பிராந்திய அரசியலைக் கடந்த தேசியவாத அரசியலின் காலம். மக்கள் இலங்கை முழுவதற்குமான பொதுப்பிரச்சினைகளில் ஒன்றிணையத் தொடங்கி விட்டனர். அவர்களை நேரடியாகத் தாக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், ஊழல், அதிகார துஸ்பிரயோகம், சூழல் பாதுகாப்பு, சமத்துவமின்மை, பன்மைத்துவத்துக்கான இடம், வேலை வாய்ப்பு போன்றவற்றையே தமது அரசியற் பரப்பாகக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். அதனால் அதற்குரிய அரசியலையும் அரசியற் தரப்பையும் அவர்கள் தெரிவு செய்துள்ளனர். இதிற் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம் ஒன்று உள்ளது – அரசியலில் தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய புதிய தலைமுறை உருவாகி விட்டது. அதனுடைய உணர்நிலைகளும் பிரச்சினைகளும் வேறானவை. அந்தத் தலைமுறை முதல் தலைமுறையினரைப்போலவே சிந்திக்கும் என்றில்லை. ஆகவே இந்தப் பின்னணியில் தெரிவு செய்யப்பட்ட தரப்பு (NPP) அதற்கான உத்தரவாதத்தோடு நடந்து கொள்ளுமா? அவர்களுடைய தேவைகள் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்படும்? அவர்களுடைய பிரச்சினைகள் எவ்வளவுக்குத் தீர்த்து வைக்கப்படும் என்பதைச் சில ஆண்டுகள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். புதிய ஆட்சித் தரப்பு இதுவரையிலும் அதிகாரத்தில் இருக்காதது. ஆட்சியதிகாரத்துக்கு வெளியே இருந்து அதிகாரத் தரப்பின் தவறுகளையும் ஆட்சிக்குறைபாடுகளையும் கண்டு, விமர்சித்து வந்தது. அதனால் தன்னுடைய ஆட்சியையும் தான் பெற்றுள்ள அதிகாரத்தையும் முடிந்த வரையில் அது மிகப் பொறுப்புடன் நிர்வகிக்கும் என நம்பமுடியும். ஆனாலும் அதனுடைய ஆட்சி எவ்வாறு அமையும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், அவர்கள் (NPP) வந்த வழிகளின் சுவட்டைக் கொண்டு மதிப்பிடும்போது, மக்களுக்கான ஒரு நல்லாட்சியை நடைமுறைப்படுத்துவதில் கூடுதலான அக்கறை கொள்ளப்படும் என நம்பலாம். இந்த நம்பிக்கை வெற்றியளிக்குமானால், பிராந்திய அரசியல் முடிவுக்கு வந்து விடும். அதாவது, தற்போது உருவாகியிருக்கும் தேசிய அரசியலே மேலும் வலுப்பெறும். குறுந்தேசிய அரசியல் இல்லாதொழியும். எந்த வழியிலாயினும் மக்கள் மீட்சியடைவதே அரசியற் சிறப்பாகும். https://arangamnews.com/?p=11449
  11. பின்கதவால் மறுபடியும் சுமந்திரன்? அம்பலமாகும் சதி! Vhg நவம்பர் 17, 2024 தமிழ் மக்களால் ஜனநாயகரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட சுமந்திரனை மறுபடியும் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் அனுப்ப சதிகள் நடைபெற்றுவருவதாக தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள். தமிழரசுக் கட்சிக்குள் திட்டமிட்டு சுமந்திரனால் புகுத்தப்பட்ட நபர்களை வைத்து சுமந்திரனுக்கே தேசியப் பட்டியல் ஆசணம் வழங்கப்படவேண்டும் என்று அழுத்தங்களை அவர் வழங்கிவருவதாகவும் கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றார்கள். மக்கள் ஆணை வழங்காமல் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என்று சுமந்திரன் ஊடகங்களிடம் கூறியிருந்தபோதும், கட்சி முடிவுசெய்தால் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்றும் கூறி, தேசியப்பட்டியல் நியமனத்திற்கான தனது நகர்வை வெளிப்படுத்தியும் இருந்தார். அதேவேளை, மாவை சேனாதிராஜா, சத்தியலிங்கம் போன்ற தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் இல்லாத, தமிழ் மக்களுக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனம் இல்லாத நபர்களின் பெயர்களை தேசியப்பட்டியலுக்கு முன்மொழிந்து, இவர்களைவிட சுமந்திரனே மேல் என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தும் சதிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் விட, தமிழசுக் கட்சி தயாரித்த தேசியப் பட்டியல் பெயர்விபரக் கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சியின் செயலாளர் அனுப்பவேயில்லை என்று தற்பொழுது தெரியவந்துள்ளது. பட்டியலைத் தயாரித்து கடிதத் தலைப்பில், செயலாளர் சத்தியலிங்கம் கையொப்பம் இட்டு அந்தக் கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டனவே தவிர, அந்தக் கடிதத்தை அவர் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கவேயில்லை. இது கூட சுமந்திரனை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அனுப்புவதற்கான சதி என்றே கூறுகின்றார்கள் கட்சி உறுப்பினர்கள். யாழ்மக்கள் இத்தனை தண்டணை கொடுத்தும் தமிழரசுக் கட்சி இன்னமும் திருந்தவில்லை என்பது கவலையளிப்பதாகக் கூறுகின்றார் ஒரு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர். https://www.battinatham.com/2024/11/blog-post_310.html
  12. தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும்- தர்மலிங்கம் சித்தார்த்தன் ! By Shana இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை அக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு, கிழக்கில் ஏழு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் தேசியப் பட்டியல் ஆசனமொன்றும் கிடைத்துள்ளது. குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். ஏனென்றால், தேசிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்பினை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 2015ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டில் அவர் ஈடுபட்டவராக உள்ளார். அவருடன் இணைந்து நானும் செயற்பட்டிருந்தேன். அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் அவரது வகிபாகம் முக்கியமானது, கடந்த அரசியலமைப்புக்கான உருவாக்கச் செயற்பாடுகளில் ‘ஏக்கிய ராஜ்ய’ ஒருமித்தநாடு என்ற விவகாரத்தினை தவிர ஏனைய விடயங்களில் அவர் கணிசமான பணிகளை ஆற்றியிருந்தார். ஆகவே புதிய அரசியலமைப்பு விடயத்தினை கையாள்வதற்கு பொருத்தமானவராக அவரை நான் பார்கின்றேன். அந்த வகையில் அவருக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்புரிமை வழங்குவது பொருத்தமானது என்று கருதுகின்றேன். எனினும் அவர்களின் கட்சியே எதிர்காலத்தினை மையப்படுத்தி அந்த தீர்மானத்தினை எடுக்க வேண்டும் என்றார். https://www.battinews.com/2024/11/blog-post_253.html
  13. தமிழரசுக்கட்சி அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம்! November 17, 2024 11:59 am தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா, ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், குகதாசன், இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், த.கலையரசன் மற்றும் துரைராஜசிங்கம், குலநாயகம் செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://tamil.adaderana.lk/news.php?nid=196018
  14. இரண்டரை வருடங்களில் எம்.பி. பதவியை இராஜினாமா செய்யும் மருத்துவர் அர்ச்சுனா யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள மருத்துவர் அர்ச்சுனா இரண்டரை வருடங்களில தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார். சுயேட்சைக் குழுவாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் அர்ச்சுனா தங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் என்று தேர்தலுக்கு முன்னர் எதிர்வுகூறியிருந்தார். ஆயினும் அவரது சுயேட்சைக் குழுவுக்கு ஒரு ஆசனமே கிடைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்தள்ள மருத்துவர் அர்ச்சுனா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரண்டரை வருடங்களில் இராஜினாமா செய்து, தனது கட்சியில் உள்ள மற்றொரு பெண் வேட்பாளருக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், ஆசனத்தைக் கைப்பற்றிய ஒரேயொரு சுயேச்சைக் குழு என்ற சிறப்பை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட மருத்துவர் அர்ச்சுனா தலைமையிலான சுயேச்சைக் குழு 17 தரப்பினர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/எம்.பி._பதவியை_இராஜினாமா_செய்யும்_மருத்துவர்_அர்ச்சுனா#google_vignette
  15. ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி SelvamNov 17, 2024 12:41PM தெலுங்கர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 16) கைதான நடிகை கஸ்தூரியை போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கஸ்தூரி, மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தநிலையில், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார். இந்தநிலையில், ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக குழந்தையுடன் இருந்த நடிகை கஸ்தூரி கைது என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில், கஸ்தூரி இன்று சென்னை அழைத்துவரப்பட்டார். அவரிடம் சிந்தாதரிப்பேட்டை காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவரை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்த உள்ளனர். https://minnambalam.com/tamil-nadu/police-investigate-with-kasturi-in-chennai/
  16. தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை ! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது. வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா குறிப்பிடப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராஜா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இன்று கூடுகின்றது. https://akkinikkunchu.com/?p=299504
  17. ஒற்றையாட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்! ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80,000 வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் மற்றும் அங்கஜன் போன்றோரின் வாக்குகளே NPP இற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம். தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=299458
  18. இரண்டெழுத்து என்றால் புலி என்றுதான் எனக்குத் தெரியும்😜 https://www.facebook.com/share/p/15HdbvCenB/?mibextid=WC7FNe
  19. சுமந்திரன் தமிழரின் அரசியலை பிரதிநிதித்துவம் செய்யக்கூடாது என்று நீண்டகாலமாகவே விரும்பினாலும் “ஆம்” என்றே வாக்களித்தேன்! அவர் எல்லா வழிகளிலும் பாராளுமன்றம் போக எத்தனிப்பதாலும் பொதுக்குழு அவருக்கு சார்பானவர்களின் பெரும்பான்மையுடன் உள்ளதாலும் 👇🏿இந்தக் கேள்விக்கு “ஆம்” என்பதே அதிகம் பொருந்தும்😃 திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
  20. இந்த நவீன விவசாயி மாதிரி மலையகத்தில் வடிவேல் சுரேஷின் மகன் பிரதீஷ் கொழுந்து பறிப்பதில் வல்லவர்.😃 56 ஆவது செக்கனில் திரும்பவும் பாருங்கள்😂🤣
  21. சுமந்திரன் வாக்காளரிடம் தோற்றாலும், பாராளுமன்றம் போக வாய்ப்பு உள்ளது போல நான் யாழ்களப் போட்டியில் வெல்ல இன்னும் நிறைய வாய்ப்பு உள்ளது😬
  22. சுமந்திரன் பாராளுமன்றம் போவதற்கான யாழ் கள உறுப்பினர்களின் ஆதரவும் எதிர்ப்பும் இறுக்கமாகப் போகின்றது! இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை😮🫨 சுமந்திரனின் மீள்வரவு எதிர்ப்புக்களையும் மீறி நடப்பது அவர் கையில்தான் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அவர் தேசியப்பட்டியல் ஊடாகப் போகமாட்டேன் என்று உறுதியான சமிக்ஞை எதனையும் காட்டாதது அவர் போகவிரும்புகின்றார் என்றுதான் உணர்த்துகின்றது. சிறிதரன் உறுதியைக் காட்ட சந்தர்ப்பம் இது. ஆனால் கட்சிமேலான வழக்கு தலைக்கு மேல் கத்தியாக இருக்கு நிலையில் சுமந்திரனின் தந்திரங்களுக்கு ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத நிலையில்தான் உள்ளார்!
  23. சமூகவலைத் தளங்களில் இருந்து துரித அறிவைப் பெற்றுக்கொள்ளலாம் என்பவர்களை நினைத்தால் ஆசான் பாஷையில் நகுகவேண்டியதுதான்! இணையக்குப்பை பதிவில் இருந்து சில பகுதிகள் சில அடிப்படைகளை நான் சொல்லமுடியும் அ. ஊடகம் என்பது நமக்கு அறிவூட்டுவது அல்ல, நமக்கு கேளிக்கை அளிப்பது அல்ல, நம் செயற்களமும் அது அல்ல. இந்த தெளிவை நாம் முதலில் அடையவேண்டும். அது நம்மை அடிமைப்படுத்துவது, அது நம்மை வாங்கவைக்கும் விளம்பரத்துக்கான கருவி, அதற்கப்பால் ஒன்றும் அல்ல. ஆ. நமக்கான ஒரு செயற்களத்தைக் கண்டடையவேண்டும். அது வெறும் சொற்களால், சிந்தனைகளால் ஆனதாக இருக்கலாகாது. புறவயமான செயலாக இருக்கவேண்டும். அது எதுவானாலும் சரி. சமூகப்பணி, அறிவுப்பணி, கலைப்பணி, வேளாண்மை, கைத்தொழில். அதில் மட்டுமே முழுமையாக ஈடுபடவேண்டும். இ. அந்தச் செயற்களத்திற்கு தேவையான அளவுக்கு மட்டும் ஊடகத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஊடகத்தை பயன்படுத்துவதற்கு நாமே நமக்கு ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு அதை கறாராக பின்பற்றவேண்டும். ஈ. நம் செயல்பாடுகள் தனித்தவையாக இருக்கலாகாது. அவை நீடிக்காது. நம்மைப்போன்றவர்களுடன் தொடர்புகொள்ளவேண்டும். ஒரு சிறு ‘துணைச்சமூகமாக‘ நாம் நம்மை திரட்டிக்கொள்ளவேண்டும். நம்முடைய சோம்பல், அகங்காரம், சில்லறைப்பூசல்களால் ஒருபோதும் அந்த சமூகத்தில் இருந்து பிரியக்கூடாது. அச்சமூகம் உடைய வழிவகுக்கலாகாது. அது இருந்தால்தான் நாம் இருப்போம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். கவனச்சிதைவு என்பது மிகையின் இன்னொரு வடிவம். ஒன்று செய்யவேண்டிய இடத்தில் நூறு செய்யவேண்டியிருந்தால் கவனம் சிதறுகிறது. ஒன்று தேவையான இடத்தில் ஆயிரம் அளிக்கப்பட்டால் கவனம் சிதறுகிறது. ஒரு டம்ளர் நீரை ஓர் அறைமுழுக்க பரப்பினால் ஒரே நிமிடத்தில் அது ஆவியாகும். நமக்கு இருக்கும் நேரம், கவனம், நினைவு மூன்றும் ஒரு டம்ளர் நீர் போல எல்லைக்குட்பட்டவை. அவற்றை மிகக்கவனமாக செலவிட்டாகவேண்டும். அதற்கான வழிமுறைகள் அ. நம் செயற்களம் வரையறுக்கப்படவேண்டும். அதற்கு வெளியே நாம் எதையும் கவனிக்கவேண்டியதில்லை. எந்த மனிதனும் உலகை முழுக்க கவனிக்க முடியாது. எல்லா துறைகளையும் கவனிக்க முடியாது. எல்லாருடனும் விவாதிக்கமுடியாது. ஆ. செயல் இல்லாத நிலையிலேயே கவனம் சிதறுகிறது. ‘ஓய்வு நேரம்‘ என ஒன்று தேவையில்லை. நம் வேலை ஒரு களம் என்றால் இன்னொன்றாக நமக்கான தனிப்பட்ட ரசனைக்கான களத்தை வைத்துக் கொள்வோம். அங்கே செயலாற்றுவோம். செயலாற்றும்போது கவனம் குவிந்தே ஆகவேண்டும். ‘சும்மா‘ இருக்கையில்தான் கவனம் சிதறுகிறது. இ. எதையாவது உருவாக்காத, எதையாவது கற்காத எல்லா கேளிக்கைகளையும் முழுமையாகத் தவிர்த்துவிடுவோம். வெற்றுக்கேளிக்கைதான் நம்மை சிதறடிக்கிறது. https://www.jeyamohan.in/206616/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.