-
Posts
34948 -
Joined
-
Days Won
173
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கிருபன்
-
பகிடிவதை வன்முறையை ஒழிக்கமுடியாத அரசுகளும் முதல் பலியான தமிழ் மாணவனும் By T. Saranya 21 Dec, 2022 | 02:19 PM ம.ரூபன். மாணவர்களின் பகிடிவதை வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.முன்னாள் துணைவேந்தரையும் மகனையும் தாக்கும் அளவுக்கு இவை மோசமாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்கள் கல்விசார் ஊழியர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகியுள்ளது. கற்பிக்கும் ஆசான்களைத் தாக்கும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தலைவர் பேராசிரியர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். கடந்த 13 பௌத்த பாலி பல்கலைக்கழகத்தில் பகிடிவதை தொடர்பான மோதலால் மாணவர் சங்க செயலர் தலாவ தம்மிக்க தேரர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் தலைமுடி,தாடி வளர்த்து பௌத்த மத கோட்பாட்டை மீறுவதாகவும்,இவர்களை 3 -4 வருடங்களுக்கு பின்பு பல்கலைக்கழத்தை விட்டு வெளியேற்றும் சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என மிகிந்தலை விகாராதிபதி தம்மரத்தின தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களில் சிலர் போதைக்கு அடிமையாகி பாலியல் குற்றம் புரிவதால் புதிய மாணவர்கள் உடல் மன வேதனைக்கு உள்ளாகி அங்கு கல்வியை தொடரமுடியாமல் விலகுவதாகவும் பரீட்சைக்கு இவர்கள் தோற்றும் காலம் இனி மட்டுப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த (10) சனி பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்தினவும் மகனும் மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர்.அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் பலவந்தமாக புகுந்த சுமார் 300 மாணவர்கள் தாக்கி சொத்துக்களும் சேதமாகின. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின்படி இவர்கள் மாணவர் தர நிலையில் இருந்தும் நீக்கப்பட்டனர்.புலமைப்பரிசில் கொடுப்பனவும் இரத்து. பல்கலைக்கழகத்தை விட்டு முற்றாக நீக்குமாறு விரிவுரையாளர்கள் கோரியுள்ளனர்.1989 மார்ச் 8 இல் கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரான்லி விஜயசுந்தரவின் ஜே.வி.பி.படுகொலைக்கு பின்னர் ஒரு பேராசிரியர் தாக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் பொலிஸ் பிரிவை துணைவேந்தர்களின் கீழ் பல்கலைக்கழகங்களில் இயங்க வைத்து அங்கு இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை விசாரணை செய்யவும், கைது செய்யவும் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என 2015 இல் துணைவேந்தராக இங்கு இருந்தபோது அரசிடம் விடுத்திருந்த கோரிக்கையை செயற்படுத்தியிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது எனவும் இதனை உடன் அமுல்படுத்தினால் மாணவர்களின் பகிடிவதையை முற்றாக நிறுத்தப்படும் எனவும் பேராசிரியர் அத்துல சேனாராத்தினா ஊடகங்களுக்கு டிச. (17) கூறியுள்ளார். செப்.14 இங்கு கலைப்பிரிவு மாணவர்கள் உணவகத்தில் சட்டப்பிரிவு மாணவர்களை தாக்கியதில் இரு மாணவர்களும் இரு மாணவிகளும் படுகாயம். 11 கலைப்பிரிவு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டு கலைப்பீடமும் மூடப்பட்டது. நீண்டகாலமாகவே கலைப்பிரிவின் ஒரு குழுவினர் " பகிடிவதை எதிர்ப்பு மாணவர்கள்" என சிலரை வளாகத்தின் உணவகம் போன்ற பொது இடங்களுக்குள் நுழையாது தடுத்துவருவதாகவும் பேராசிரியர் அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டார். கலைப்பீடாதிபதி கலாநிதி எக்கநாயக்க இவர்களின் பகிடிவதையை எதிர்த்ததால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவரது உருவப்பொம்மையும் எரிக்கப்பட்டது.சிறந்த அழகான பேராதனைப் பல்கலைக்கழகம் சில மாணவர்களின் இச்செயல்களால் மோசமான பல்கலைக்கழகம் எனக்கூறப்படுவதாக பேராசிரியர் திலக விஜய பண்டார கவலை தெரிவித்தார். மூடப்பட்ட கலைப்பீடம் 3 மாதங்களால் மாணவர்கள் அளித்த உறுதிமொழிகளால் நவம்பர் 14 மீள ஆரம்பிக்கப்பட்டும் ஒரு மாதத்தில் கலைப்பிரிவு மாணவர்களே தமது உறுதிமொழிகளையும் மீறி டிசம்பர் 10 முன்னாள் துணை வேந்தரையும் மகனையும் தாக்கியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வியமைச்சராக இருந்தபோதே 1981 மே 11-12 இங்கு தமிழ் மாணவர்களை துளசி விக்கிரமசிங்க மற்றும் எக்கநாயக்கா தலைமையிலான ஐ.தே.கட்சி ஆதரவு மாணவர் குழு தாக்கியதை மறக்கமுடியாது.தப்பிக்க மாடியிலும்,கூரையிலும் இருந்தும் குதித்த இரு தமிழ் மாணவர்கள் படுகாயமடைந்தனர்.18 சிங்கள மாணவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டனர். (13 பேர் மருத்துவர்கள்). துளசி விஞ்ஞான பீட உதவி விரிவுரையாளராக நீண்ட காலத்தின் பின்னர் நியமனம்.ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜி.என்.பண்டிதரத்தினாவின் சகோதரரே துணைவேந்தர். கல்வியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பல்கலைக்கழக மாணவர்கள் தேர்தலில் தலையிட்டிருந்தார்.(பேராசிரியர் பண்டிதரத்தினா விசாரணை அறிக்கை) (பேராசிரிசர் எஸ். சிவசேகரம் எழுதிய ஓரிரவு நூல்) ஒக்.26 காலி அக்மீமன ருகுணு தேசிய கல்வியற் கல்லூரியில் இறுதியாண்டு ஆசிரிய மாணவர்கள் 40 பேர் நள்ளிரவு 2 மணிக்கு விடுதிக்குள் மதுபோதையில் புகுந்து புதிய மாணவர்களை பலவந்தமாக நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். ஒக் 28 பட்டம் பெறவிருந்தவர்களே தாக்கியவர்கள். பட்டமளிப்பும் இரத்தானது.ஆசிரிய சேவையில் இவர்களை இணைக்காது பணி நீக்க கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நடவடிக்கை எடுத்துள்ளார். ஒழுக்கமுள்ள மாணவ சமூகத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்களே கேவலமாக செயற்பட்டது இக்கல்லூரியின் நற்பெயருக்கே அவமானம் என பிரதி பீடாதிபதி ஹேவா தேவுந்தரகேவ சரத் தெரிவித்தார். பகிடிவதைகளில் இதுவே மோசமானது. இதேபோல 1974 இல் வித்தியலங்கார பல்கலைக்கழகத்தில் கணிதப் பயிற்சி ஆசிரியர்களை பகிடிவதை செய்த மூத்த 12 ஆசிரியர்களை சிறிமாவோ அரசு பதவி நீக்கியதுடன் தடுக்காத 4 அதிகாரிகளுக்கும் தண்டப்பணம் அறவிட்டது.பல்கலைக்கழக பகிடிவதைக்கு எதிராக அரசு எடுத்த முதலாவது அதிரடி நடவடிக்கை இதுவே. பேராதனை பகிடிவதை குறித்த புகார்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்படும் மாணவர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு வேறு பல்கலைக்கழகங்களிலும் படிக்கமுடியாமல் பட்டங்களும் இரத்து செய்யப்பட்டு அரச பணியில் இணையவும் முடியாது என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் பதவியேற்றதும் கூறியிருந்தார். மாணவர்கள் உரிய காலத்தில் பரீட்சைக்கு தோற்றியதும் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிவிடவேண்டும். பல மாணவர்கள் பரீட்சை எழுதாது பட்டப்படிப்பு காலம் முடிந்தும் பல வருடங்களாக விடுதிகளில் தங்கி அரசியலில் ஈடுபட்டு காலத்தை வீண்டிக்கின்றனர். இதனை சட்டமாக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். சகல பல்கலைக்கழகங்களிலும் 4 வருட கல்விக்காலம் முடிந்தும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பந்த் அமரதுங்க துணைவேந்தர்களுக்கும் அறிவித்துள்ளார். 90 வீதமானவர்கள் 4 வருடங்களில் பட்டப்படிப்பை முடிக்கும்போது ஏனையோருக்கு 3 வருடங்களில் படிப்பை முடிக்கவே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இனிமேல் 3 வருடங்களில் வெளியில் இருந்தே பரீட்சைக்கு தோற்றுவதுடன் சகல கட்டணங்களையும் செலுத்தி படிப்பை முடிக்க வேண்டும். 5 வீதமானோர் படிப்பு காலம் முடிந்தும் விடுதிகளில் தங்கியிருப்பது சட்டவிரோதம். 4 வருடங்களில் பட்டம் பெறாவிடில் தங்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் பகிடிவதையால் ஒரு மாணவியும் ஒரு மாணவனும் மணமானார்கள். 1 வது சம்பவம் 1975 இல் விவசாய பீட மாணவி ரூபா ரட்னசீலியின் ( 22 வயது) பெண் உறுப்பில் மெழுகுதிரியை செலுத்த முயலவே தப்பிக்க மாடியிலிருந்து குதித்து ஊனமுற்றார்.இதில் ஈடுபட்டவர்கள் இன்றும் பல துறைகளில் உயர் பதவிகளில் இருப்பதாகவும் விசாரணைகள் மூடி மறைக்கப்பட்டதாகவும் சக மாணவி ஒருவர் கூறினார். நாட்டுக்கும் சிங்கள இனத்துக்கும் அவமானம் பெண் பிரதமரின் ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என ஐ.தே.க.எம்.பிக்கள் கண்டித்தனர். இதுபோன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறாது என பிரதமர் சிறிமாவும் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்முத்தும் உறுதியளித்திருந்தனர். ரூபா ரட்னசீலி 3 ஆண்டுகள் சிகிச்சையின் பின் சக்கர நாற்காலியில் நடமாடி வேதனை தாங்கமுடியாது 2002 இல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 2 வது சம்பவம் 1997 ஒக்.06 இல் பொறியியல் பீட மாணவன் வரப்பிரகாஷ் 8 மூத்த தமிழ் மாணவர்களின் 500 தடவைகள் தோப்புக்கரணம் பகிடிவதையால் சிறுநீரகம் பாதித்து மயங்கி விழுந்து ஒக்.26 இல் மரணமானார். தமிழ் பயங்கரவாத மாணவர்களின் பகிடிவதை என தெற்கில் கேலி செய்தனர். அன்றைய உயர் கல்வி அமைச்சர் ரிச்சரட் பத்திரான இனிமேல் பகிடிவதை இடம்பெறாது தடுக்க குற்றவாளிக்கு பிணை வழங்காது 10 வருட சிறைத்தண்டனையை கொண்டுவந்தார்.அவருக்கு பின்னர் வந்த உயர் கல்வி அமைச்சர்களும் பகிடிவதையை முற்றாக ஒழிப்பதாகவே கூறிவருகின்றனர். 1998 முதல் கண்டி நீதிவான் (Magistrate) நீதிமன்றத்திலும் பின்னர் 2013 கண்டி மேல் நீதிமன்றத்திலும் வரப்பிரகாஷ் மரண விசாரணை நடைபெற்று 1 ஆம் எதிரிக்கு மரணதண்டன விதிக்கப்பட்டு வெளிநாட்டில் உள்ள அவரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யுமாறு நீதிபதி மணிலால் வைத்தியதிலக உத்தரவிட்டிருந்தார்.இத்தீர்ப்பை எதிர்த்து எதிரி மேன்முறையீடு செய்திருந்தார். கடந்த ஒக். 28 மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் இத்தீர்ப்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டது.வரப்பிரகாஷ் மரணித்து 25 வருடங்களால் இத்தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. பகிடிவதைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழக முதல் தமிழ் மாணவன். ஆண்டு தோறும் 2,000 மாணவர்கள் பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியை கைவிடுவதாக கல்வி அமைச்சு புள்ளி விபரங்கள் கூறுகின்றன.கடந்த 15 வருடங்களில் 9,834 மாணவர்களும் பாலியல் துன்புறுத்தல்களால் 9,900 மாணவிகளும் படிப்பை கைவிட்டுள்ளனர். 1977 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சி, சந்திரிகா,ராஜபக்ச ஆட்சியிலும் யுத்தத்தில் அக்கறை காண்பித்தனரே தவிர பகிடிவதை பிரச்சினையை கணக்கெடுக்கவில்லை. கோட்டாபய ஜனாதிபதியானதும் இதனை முற்றாக ஒழிப்பதாக கூறியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2017 இல் பிரதமராக இருந்தபோது பகிடிவதையை ஒழிப்பது குறித்து அலரி மாளிகையில் நடாத்திய கூட்டத்தில் உயர் கல்வியமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, துணை வேந்தர்கள்,பல்கலைக்கழக மானியங்கள் ஆணக்குழு அதிகாரிகள் கலந்துகொண்டனர். கடந்த ஒக்.24 ஜனாதிபதி ரணில் றோயல் கல்லூரி அதிபர்,மாணவர்களை சந்தித்தபோதும் பகிடிவதையால் மன உடல் உளைச்லுக்கு உள்ளாகும் மாணவர்களின் தொகை அதிகரிப்பதாகவும் பகிடிவதையை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கூறியிருந்ததை செயற்படுத்தி மாணவர்கள் எதிர்காலத்தில் சுதந்திரமாக கற்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா! https://www.virakesari.lk/article/143721
-
ஆங் சான் சூகியை விடுவிக்கக் கோரி ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம் By Sethu 22 Dec, 2022 | 11:54 AM மியன்மாரின் முன்னாள் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களைக் கோரும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது. 2021 பெப்ரவரி முதல் மியன்மாரில் இராணுவ ஆட்சி நிலவுகிறது. நோபல் பரிசு பெற்ற 77 வயதான ஆங் சான் சூகி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் அவருக்கு சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்புச் சபை நேற்று புதன்கிழமை நிறைவேற்றியது. மியன்மார் தொடர்பாக ஐநா பாதுகாப்புச் சபையினால் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் இதுவாகும். 15 அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான அப்பிராய பேதங்கள் காரணமாக, இதற்கு முன், மியன்மார் நிலைவரம் தொடர்பாக சம்பிரதாய பூர்வ அறிக்கைகள் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில், ஆங் சான்சூகி மற்றும் முன்னாள் ஜனாதிபதி வின் மியின்ட் உட்பட கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களை ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் கோரியுள்ளது. அதேவேளை, அனைத்து வகையான வன்முறைகளையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், அனைத்து தரப்பினரும் மனித உரிகைமகள், அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் இத்தீர்மானம் கோரியுள்ளது. ஐநா பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்தவர்களில் 12 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அதன் நிரந்தர அங்கத்தவர்களான ரஷ்யா, சீனா வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. தீர்மான வரைபில் மாற்றங்கள் செய்யப்பட்டதையடுத்து, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதை இந்நாடுகள் தவிர்த்துக்கொண்டன. இந்தியாவும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. https://www.virakesari.lk/article/143832
-
இலங்கை சீனா இந்தியாவின் கடன் உத்தரவாதங்களிற்காக காத்திருக்கின்றது - மத்திய வங்கி ஆளுநர் By Rajeeban 22 Dec, 2022 | 11:28 AM இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக இலங்கையின் மத்தியவங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். தசாப்த காலங்களில் இல்லாத வகையில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை செப்டம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின்2.9 பில்லியன் நிதி உதவிக்கான இணக்கப்பாட்டிற்கு வந்தது. இலங்கை வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை நிறுத்தியதுடன் பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்ட பல மாதங்களின் பின்னர் இது இடம்பெற்றது. எனினும் சர்வதேச நாணயநிதியத்தின் உறுதியளிக்கப்பட்ட ஈஎவ்எவ் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கை தனக்கு கடன் வழங்கிய நாடுகளிடமிருந்து உரிய உத்தரவாதங்களை பெறவேண்டும் . கொழும்பு 2.9 மில்லியன் டொலரை எப்படியாவது பெறவேண்டிய நிலையில் உள்ளது - அது மிகப்பெரிய தொகை என்பதற்காக இல்லை - இலங்கை அந்த நிதி உதவியை வைத்துக்கொண்டு இரண்டு மாதங்களிற்கே இறக்குமதியில் ஈடுபடமுடியும். ஆனால் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பயன்படுத்தி சர்வதேச அளவில் மேலும் கடனை பெறுவதற்கு இலங்கை தகுதி பெறக்கூடும். இலங்கை பொதுமக்களை பல மாதங்களாக வீதிக்கு தள்ளிய மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக போராட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளது. பாரிய ஆர்ப்பாட்டங்கள் ராஜபக்சாக்களை அதிகாரத்திலிருந்து அகற்றின. நாடாளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப போவதாக உறுதியளித்துள்ளார். அதேவேளை இதற்காக கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இலங்கைதனக்கு கடன்வழங்கிய சீனாஜப்பான் இந்தியா ஆகிய நாடுகளுடன் அவர்களிற்கு வழங்கவேண்டிய மில்லியன் டொலர் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. நாங்கள் இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் வெளிப்படையான திறந்த ஒப்பிடக்கூடிய விதத்தில் பரிமாறியுள்ளோம் என இலங்கையின் பிரதான வங்கியின் ஆளுநர் இந்துவிற்கு செவ்வாய்கிழமை வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். இனி அவர்கள் இது குறித்து ஆராய்ந்து தங்கள் முடிவுகளை தீர்மானித்த பின்னர் எங்களிற்கு பதிலளிக்கவேண்டும் - விரைவில் அவர்கள் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கி;ன்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் ஆரம்ப கட்ட உடன்படிக்கையை செய்துகொண்ட தருணத்திலிருந்து இலங்கையிடம் கடன் வழங்குபவர்களின் சமத்துவம் மற்றும் வெளிப்படைதன்மையின் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது கொழும்பு எந்த கடன் வழங்குநர்களிற்கும் முன்னுரிமை அளிக்க கூடாது எனவும்இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் நிவாரணத்தை இந்த வருட இறுதிக்குள் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை- இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீடிப்பதே இதற்கு காரணம். சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் சிறிது தாமதமாகின என தெரிவித்துள்ள இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர்ஒக்டோபரில் இடம்பெற்ற சீன கம்யுனிஸ்ட் கட்சியின் வருடாந்த காங்கிரஸ் கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் தாமதமாகின என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். எனினும் சர்வதேச நாணயநிதியத்தின் உடன் உதவி தாமதமாவதற்கு சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் மாத்திரம் காரணமில்லை என குறிப்பிட்டுள்ள அவர்ஜப்பானும் பாரிஸ் கிளப்பும் கடன் மறுசீரமைப்பு குறித்து நன்கு அறிந்துள்ளன பல வருடஙகளாக அவை அந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன இதன் காரணமாக அவை தமது ஈடுபாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன,அவர்கள் இலங்கை நிலையை ஆய்விற்கு உட்படுத்தி பாரிஸ் கிளப்பில் இடம்பெறாத இந்தியா சீனா போன்ற நாடுகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளன இனி கடன் அந்த நாடுகளே இது குறித்து தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளின் உத்தரவாதம் கிடைத்த பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி கிடைப்பதற்கு நான்குமுதல் ஆறு வாரங்களாகும் எனவும் நந்தலால்வீரசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/143827
-
கிழக்கில் நெல் பயிர்ச்செய்கை மூலமாக அரிசியை நியாய விலையில் பெற சீன அரசாங்கத்துடன் கிழக்கு ஆளுநர் பேச்சு By Nanthini 22 Dec, 2022 | 12:09 PM கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சீன அரசாங்கத்திடம் அடுத்த பருவத்திலும், கடந்த பருவத்திலும் விவசாயிகளுக்கு இலவச அரிசியை வழங்குவதற்கு பதிலாக சந்தை வாரியத்தின் மூலம் கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்குமாறு திருகோணமலையில் சீன தூதுக் குழுவுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றபோது தெரிவித்திருந்தார். இதன்போது இந்த நிதியுதவி மூலம் விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கான நியாயமான விலை கிடைப்பதுடன், நுகர்வோரும் அரிசியை நியாயமான விலையில் வாங்க முடியும். இதனூடாக அரிசி கொள்முதல் செய்வதற்கு அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு அரசு நிதி ஒதுக்குவதில் உள்ள சிரமம் நீங்கும் என்றும் ஆளுநர் கூறினார். அத்தோடு சீனாவின் வுஹான் மாகாண மக்கள் சங்கத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சூரிய ஒளி விளக்குகளை அன்பளிப்பாக வழங்கியமைக்கும் தனது விசேட நன்றிகளை தெரிவித்த ஆளுநர், விவசாய அபிவிருத்திக்கான மேற்படி முன்மொழிவுக்கு ஆதரவளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். விவசாய அமைச்சின் அறிக்கையின்படி, எதிர்வரும் பருவத்தில் 609,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் விவசாயிகளின் நெற்பயிர்களை சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால், அது விவசாயிகளுக்கு மேலும் உதவியாக அமையும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். இதேவேளை மாகாணத்தின் சுத்தமான குடிநீர் தேவைக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு சீன தூதுக்குழுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார். https://www.virakesari.lk/article/143821
-
அமைச்சர் உதயநிதி - வியாபார அரசியலா? விரும்பத்தக்க அரசியலா?
கிருபன் replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
உதயநிதியின் முதல் நிகழ்ச்சியில் இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு அவமதிப்பு!.. ஒடிசா மாநிலத்தில் வரும் ஜனவரி 13 முதல் 29ம் தேதி வரை உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹாக்கி கோப்பை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, மேடையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்ட 8 பேருக்கு முதல் வரிசையிலும், ஓய்வுபெற்ற மூத்த ஹாக்கி வீரர்களுக்கும் 2வது வரிசையிலும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இதனால், இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரருமான வாசுதேவன் பாஸ்கரன் கடுப்பாகினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரிடம், இது என்ன கட்சி நிகழ்ச்சியா? இல்லை விருது வழங்கும் விழாவா?, முன்னாள் ஹாக்கி வீரர்களுக்கு பின் வரிசையிலா இருக்கை போடுவீங்க..? என்று கோபமாக லெஃப்ட்& ரைட்வாங்கினார். இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போகினர். பின்னர், நீண்ட சலசலப்புக்கு பிறகு, வாசுதேவன் பாஸ்கரன் உள்பட 4 ஹாக்கி வீரர்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நடக்கும் முதல் நிகழ்ச்சியிலேயே, இருக்கையால் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் அவமதிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் வாசுதேவன் பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=233167 -
நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்! ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் எப்போதும் தனித்து நிற்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமான அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேற்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உட்பட மேலும் 2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவிகளுக்கான தொகுப்பினை பைடன் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பைடன், ‘சர்வதேச கூட்டணியை ஒன்றாக வைத்திருப்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இந்த கொடூரமான போரை நிறுத்தும் எண்ணம் இல்லை’ என கூறினார். அமெரிக்காவின் ஆதரவுக்கு தனது நன்றியைத் ஸெலென்ஸ்கி, தெரிவித்தார். உக்ரைனின் மிக முக்கியமான நட்பு நாடாக, அமெரிக்கா ஏற்கனவே 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மனிதாபிமான, நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது. இது மற்ற எந்த நாட்டையும் விட அதிகம். எங்கள் மதிப்புகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க எங்களுக்கு உதவ உக்ரைனுக்கு காங்கிரஸ் கூடுதல் 45 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று ஸெலென்ஸ்கி, நம்பிக்கை தெரிவித்தார். குடியரசுக் கட்சியினர் ஜனவரியில் பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவார்கள். ஆனால், உக்ரைனுக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என எச்சரித்துள்ளனர். காங்கிரஸில் மாற்றங்கள் இருந்தாலும், தனது நாட்டிற்கு இரு கட்சி ஆதரவு இருக்கும் என்று நம்புவதாக ஸெலென்ஸ்கி, கூறினார். வெள்ளை மாளிகை கூட்டத்திற்குப் பிறகு, 44 வயதான உக்ரைனிய ஜனாதிபதி காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றினார், அங்கு அவர் கைத்தட்டலுடன் வரவேற்கப்பட்டார். அவர் அமெரிக்க சட்டமியற்றுபவர்களிடம் தனது நாடு இன்னும் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக நிற்கிறது என்றும் அடுத்த ஆண்டு மோதலில் திருப்புமுனை என்றும் கணித்தார். உக்ரைன் ஒருபோதும் சரணடையாது என்று உறுதியளித்தாலும், அதற்கு மேலும் ஆயுதங்கள் தேவை என அவர் கூறினார். ‘ரஷ்ய இராணுவம் முழுமையாக வெளியேற, மேலும் பீரங்கி மற்றும் குண்டுகள் தேவை,’ என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு உதவித் தொகுப்பில் ஒரு புதிய பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு உள்ளது, இது உக்ரைன் தனது நகரங்களை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் இருந்து பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=233185
-
வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை
கிருபன் replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
சிரிப்பு, அழுகை இரண்டும் கூடாது: இது எங்கு தெரியுமா? Dec 21, 2022 16:37PM IST ஷேர் செய்ய : சிரிப்பதற்கும், அழுவதற்கும்கூட ஒரு நாடு தடையை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளுக்கு எல்லாம் கிலியை ஏற்படுத்தி வருகிறது வடகொரியா. இந்த நாட்டுத் தகவல்கள் அவ்வளவு எளிதில் கசிய வாய்ப்பில்லை. காரணம், அந்த நாட்டின் கட்டுப்பாடுகள் அப்படி. என்றாலும், இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக வடகொரியா திகழ்கிறது. அதிலும் அடிக்கடி ஏவுகணைகளை ஏவி அண்டைநாடான தென்கொரியா, ஜப்பான், வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இதனால், அந்த நாட்டிற்குப் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி வடகொரியா கவலைப்படுவதில்லை. தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருகிறது. சமீபத்தில்கூட இரண்டு ஏவுகணைகளை ஏவியிருந்தது. இந்த நிலையில், மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை வடகொரியா அரசு விதித்துள்ளது. தற்போது வடகொரியா நாட்டு அதிபராக கிம் ஜாங் வுன் உள்ளார். இவருடைய தந்தை கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அந்நாட்டில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி முதல் 11 நாள்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இந்த 11 நாள்களுக்கும் மக்கள் சிரிக்கக் கூடாது என்று மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பல ஆண்டுகாலமாக அங்கு அமலில் உள்ளது. என்றாலும், இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால்கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, 11 நாள்களுக்குப் பிறகே அவரது இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என கடுமையான தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக்கூட கொண்டாட முடியாது என அந்நாட்டு ஊடகங்கள் மேற்கொள் காட்டியுள்ளன. இதுதவிர, மது அருந்தக்கூடாது; மக்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அந்நாட்டு மக்கள் வெளிநாட்டுப் படங்களைப் பார்த்தாலோ, உடைகளை அணிந்தாலோ, அவற்றின் மொழி வழக்கைப் பயன்படுத்தினாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும். அதிலும் தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவற்றை யாராவது அதிக அளவில் வைத்திருந்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அத்தகைய படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது பிடிபட்டால் 15 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும். இதுபோக அந்த நாட்டில், இன்டர்நெட், சமூக வலைத்தளங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில தொலைக்காட்சிகளில் அரசு என்ன விரும்புகிறதோ அதை மட்டுமே பார்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறது. https://minnambalam.com/archives-trending-news-in-tamil/peoples-laugh-and-cry-ban-in-northkorea-orders/ மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் தமிழர்களில் @Kapithan போன்ற சிலர் அதி உத்தமர் கிம் ஜாங் வுன்னின் வடகொரியாவில் இப்போது இருக்கின்றார்கள் போலிருக்கு! -
இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் – தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம் ?
கிருபன் replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
கட்சி சின்னம், பெயர் விவகாரம்: ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்! KalaiDec 22, 2022 10:38AM கட்சியின் சின்னம், பெயரை பயன்படுத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமான பிறகு ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடத்தி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். அதிமுகவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார். மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு உரிமை கோருவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று(டிசம்பர் 20) அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஓபிஎஸ்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் லெட்டர் பேட் மற்றும் சீல் போன்றவற்றை முறைகேடாக பயன்படுத்தி அதிமுக தலைமையக அறிவிப்பு என்று கூறுவதற்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் இது போன்று செயல்படுவதற்கு உரிமையில்லை என்றும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறும் நோட்டீஸ் (Legal notice) விடுக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/political-news/party-symbol-name-issue-notice-to-ops-admk/ -
சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர் – சிறிலங்கா இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய சிக்கல் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லை குறிக்கும் வகையில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய தொடர்ந்து போராடிவரும் உறவினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. முல்லைத்தீவு இராணுவ முகாமில் பதிமூன்று வருடங்களுக்கு முன்னர் சரணடைந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரையாவது இராணுவம் காணாமல் ஆக்கியுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமையை சட்டத்தரணிகளினால் வெற்றியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு கிடைத்து மூன்று நாட்களுக்குப் பின்னர் முல்லைத்தீவுக்குச் சென்ற காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் ஆணையாளர்கள் உறவினர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில், இராணுவத்திடம் சரணடைந்தவர்களைக் கண்டறியுமாறு உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்லையா விஸ்வநாதனைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்துள்ளார். இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “மனுதாரரின் கணவர் இராணுவத்திடம் சரணடைந்தார். அதன் பின்னர், அவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இராணுவமே பொறுப்புக் கூற வேண்டும் என, மனுதாரருக்கு ஆதரவாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.” இராணுவத்திடம் சரணடைந்த செல்லையா விஸ்வநாதனை அடுத்த வருடம் மார்ச் மாதம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இராணுவத் தளபதி மற்றும் 58ஆவது படைத் தளபதி ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். “செல்லையா விஸ்வநாதன் என்ற நபரை இந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் இல்லையெனின் அவரை ஏன் முன்னிலைப்படுத்தவில்லை என்ற காரணத்தை மார்ச் 22ஆம் திகதி தெளிவுபடுத்த வேண்டுமென இலங்கை இராணுவத் தளபதி, 58ஆவது பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” செல்லையா விஸ்வநாதன் இராணுவத்தின் பிடியில் இருந்தபோதே காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல், நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என வலியுறுத்தியுள்ளார். “இது இந்தக் குடும்பங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி, இதற்கு இராணுவம்தான் பொறுப்பேற்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒருவரைப் பொறுப்பேற்று, பின்னர் அவர் தொடர்பில் ஒன்றும் தெரியாது எனக் கூறுவது அரசாங்க நிறுவனமான இராணுவத்திற்கு பெரிய பிரச்சினை.” 2018ஆம் ஆண்டு 58ஆவது படைப்பிரிவு மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாமின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன, இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு இராணுவ முகாமில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் பட்டியல் இராணுவத்திடம் உள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார். ஆனால் அவர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. பின்னர் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் வழங்கிய ஆவணம் மாத்திரமே தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்த எவரும் பதிவு செய்யப்படவில்லையென கடந்த நவம்பரில் இலங்கை இராணுவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருந்தது. ஊடகவியலாளர் பி. நிரோஷ்குமார் மூன்று வருடங்களுக்கு முன்பு கோரிய தகவல் மறுப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீடு, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவால் நவம்பர் 3 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போரின் இறுதி நாட்களில், யுத்த வலயத்திலிருந்து வெளியேறிய இலட்சக்கணக்கான மக்களில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டனர். வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் புள்ளிவிபரங்களுக்கு அமைய அவர்களில் குழந்தைகளும் பெண்களும் இருந்துள்ளனர். இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களா என்பது தமக்குத் தெரியாது எனக் கூறி தமிழ் ஊடகவியலாளரின் தகவல் கோரிக்கையை இராணுவம் 2019ஆம் ஆண்டு நிராகரித்திருந்தது. “போர் பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்கள் விடுதலைப் புலிகளா அல்லது பொதுமக்களா என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பொறுப்பேற்ற போது பதிவு செய்யவில்லை. “எங்களிடம் வந்தவர்களை பேரூந்துகளில் அழைத்துச் சென்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கீழ் முகாம்களில் தங்க வைத்தோம். அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகம் அவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டது” என இராணுவத்தினர் சாட்சியமளித்தனர். இராணுவம் அளிக்கும் தகவல்கள், அரசாங்கம் அவ்வப்போது தெரிவித்து வரும் கருத்துகளுக்கு முரணாக அமைந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது வெள்ளை கொடிகளை ஏந்திவந்த ஒரு குழுவை அப்போது 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பொறுப்பேற்றதாக 2013ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதானப் பணியகத்தின் தலைவர் சிவரத்தினம் புலிதேவன் ஆகியோர் பொறுப்பேற்றவர்களில் அடங்குவதாக உள்ளுர் மற்றும் சர்வதேச ஆணைக்குழுக்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி 58ஆவது படைப்பிரிவினரால் நடேசனும் புலிதேவனும் கொல்லப்பட்டதாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டனர். அரசாங்கத்திடம் பாதுகாப்பு உத்தரவாதம் பெற்று வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைய வந்த நடேசன் மற்றும் புலிதேவன் கொலையை போர்க்குற்றம் என அறிவித்த ஐக்கிய நாடுகள் சபையும் பரணகம அதிபர் ஆணைக்குழுவும் சுதந்திரமான விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. வன்னி இராணுவத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களால் நியூயோர்க்கில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் துணை நிரந்தரப் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டமையால் அவருக்கு காணப்பட்ட இராஜதந்திர விலக்கு பாதுகாப்பு உத்தரவாதம் காரணமாகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. https://akkinikkunchu.com/?p=233143
-
மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரின் விவசாய அறுவடை விழா!!
கிருபன் posted a topic in ஊர்ப் புதினம்
மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரின் விவசாய அறுவடை விழா!! kugenDecember 21, 2022 (கல்லடி நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய பண்னையின் அறுவடை நிகழ்வு 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலூப பண்டாரவின் தலைமையில் பாவற்கொடிச்சேனை சிப்பிமடு பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பண்ணையின் பொறுப்பதிகாரி , லெப்டனன் கேணல் , ஜே.ஏ.பீ.குணரெட்ணவினால் விவசாய அறுவடைகள் வவுணதீவு பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) வீ.பேரின்பராசா ஆகியோரிடமும் கையளிக்கப்பட்டது. வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் சிப்பிமடு பகுதியில் தரிசி நிலமாக காணப்பட்ட 20 ஏக்கர் நிலத்தினை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தரிசு நிலத்தில் 16 ஏக்கரில் உன்னிச்சை இராணுவ படைப் பிரிவினால் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேதன விவசாயப் பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு கௌப்பி, பயறு, கச்சான் போன்ற தானியங்களுடன் மரவள்ளி, பயற்றை, புடலங்காய், பாகல், சுரக்காய், வயல் போன்ற மரக்கறி வகைகள் பயிரிடப்பட்டுள்ள நிலையில் இவற்றின் அறுவடைகளை மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய விரிவாக்கல் திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர். http://www.battinews.com/2022/12/blog-post_288.html -
தமிழ்த் தேசிய அரசியல்: ‘தேவையில்லாத ஆணிகள்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்று ‘மாலுமி இல்லாத கப்பலாக’, கடலில் அலையின் போக்குக்கு ஏற்ப, தன்பாட்டுக்கு மிதந்துகொண்டு நிற்கிறது. ஆளாளுக்கு தனக்குப் பிடித்த திசையில் கப்பலைச் செலுத்த, துடுப்புப் போடும் நிலையில், திக்குத் தெரியாது, கரை தெரியாது, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது கட்சியும் தமிழ்த் தேசியமும்! கிட்டத்தட்ட 20 டிரில்லியன் டொலர் பொருளாதாரம் கொண்ட சீனாவுக்கு, இலங்கை 7.4 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது என்றும், இலங்கையின் உண்மையான நண்பனாக சீனா இருந்தால், இலங்கையின் கடனை தள்ளுபடி செய்ய அல்லது குறைந்தபட்சம் மறுகட்டமைப்பு செய்ய ஒப்புக்கொள்ளும் என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி சாணக்கிய ராகுல், வெள்ளிக்கிழமை (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், கிட்டத்தட்ட 20,000 பில்லியன் டொலரை வைத்திருக்கும் சீனா, உண்மையிலேயே இலங்கையின் நண்பன் என்றால்..., 9 மில்லியன் லீற்றர் டீசல் அல்லது அரை மில்லியன் கிலோ கிராம் அரிசி வழங்குவது, உண்மையான உதவியல்ல என்றும் சிங்களத்தில் பேசிய சாணக்கிய ராகுல் குறிப்பிட்டிருந்தார். மேலும், “சீனர்கள் இந்த நாட்டில் என்ன செய்தார்கள்? ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்த்தால், சீனா அதைக் கைப்பற்றியுள்ளது. இலங்கை மக்களுக்கு வேலை கொடுக்கப்பதற்காக இந்த நாட்டில், சீனர்கள் செய்த முதலீடு ஒன்றைச் சொல்லுங்கள். ஒரு தொழில் கூட இல்லை” என்றும் சாணக்கிய ராகுல் கூறினார். மேலும், “ராஜபக்ஷ குடும்பத்துக்கு நன்றி செலுத்துவதற்காக, அவர்கள் இந்த நாட்டில் முதலீடுகளை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவை பயனற்ற முதலீடுகள்” என்றும் குறிப்பிட்டார். இந்தப் பேச்சு, இலங்கை என்ற நாட்டுக்கோ, அல்லது தமிழ்த் தேசிய அரசியலுக்கோ பிரயோசனமில்லாத பேச்சு. சீனா, இலங்கைக்கு என்ன செய்தது என்ற கேள்வியை சாணக்கிய ராகுல் கேட்க முதல், அவர் கொஞ்சம் வரலாற்றைப் படிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ காலம் வரை, சீன-இலங்கை உறவு எப்படி இருந்தது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். பிரபல்யம் தேடுவதற்காக, சமூக ஊடகங்களின் பரவல் மூலம், பிரபல்யம் கிடைக்கும் என்பதற்காக, எதையும் பேசலாம் என்பதற்குப் பெயர் ‘அரசியல்’ அல்ல. அத்தகைய அரசியலை முன்னெடுப்பது, ஒரு சமூகத்துக்கு மிகமிக ஆபத்தானது. 1950களில், இலங்கை அந்நிய செலாவணி பற்றாக்குறையின் விளைவாக, பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்திருந்தது. அதன் விளைவாக, அரிசி இறக்குமதி குறைந்ததில் நாட்டில் அரசிக்கான பற்றாக்குறை நிலவியது. கொரியப் போர் முடிவுக்கு வந்ததன் விளைவாகவும், செயற்கை இறப்பரின் அறிமுகத்தாலும் உலக சந்தையில் இறப்பருக்கான தேவை கணிசமாகக் குறைந்தது. உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக, தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற இலங்கை ஏற்றுமதி செய்த பொருட்களுக்கான தேவையும் குறைந்தது. ஆகவே, எமது அந்நியச் செலாவணி வரவு குறைந்தது. ஆனால், அரிசிக்கு இறக்குமதியில்தான் நாம் தங்கியிருந்தோம். ஆகவே, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வந்தது. எனவே, 1952 ஒரு மிகச் சவாலான காலமாக இருந்தது. இந்த நிலையில்தான், சீனாவுக்கு இறப்பரின் தேவை அதிகமாக இருந்தது. தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, சீனாவால் இலகுவாக இறப்பரை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. இலங்கைக்கு அரிசி தேவையானதாக இருந்தது. இந்த நிலையில்தான், அன்றைய வர்த்த அமைச்சர் றிச்சட் கோட்டாபய சேனநாயக்கவின் முயற்சியால், 1952இல், ‘சீனா-சிலோன் அரிசி - இறப்பர் ஒப்பந்தம்’ கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்தோம்; அதற்குப் பதில், சீனா எங்களுக்கு அரிசியைக் கொடுத்தது. அதுவும் சும்மா அல்ல; சீனா மிகவும் தாராளமாக இலங்கை இறப்பருக்கான சந்தை விலையை விட 40% அதிகமாகவும், அரிசிக்கான சந்தை விலையில் 1/3 பங்கையும் இலங்கைக்கு வழங்கியது. இலங்கைக்கு மிகப்பெரிய அனுகூலமான ஒப்பந்தம் இது! இதனால் ஏனைய சில நாடுகள், இலங்கைக்கான உதவிகளை நிறுத்தியிருந்தாலும், இதனால் இலங்கைக்கு கிடைத்த அனுகூலம் பெரியதுதான். இந்த ஒப்பந்த, இலங்கையும் சீனாவும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட 1957இற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பதாகவே கைச்சாத்திடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1976இல் சீனா, இலங்கைக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தைப் பரிசளித்திருந்தது. அன்றைய காலத்தில், தென் மற்றும் தென் கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய மாநாட்டு மண்டபமாக இது இருந்தது. இந்த மண்டபத்தில்தான் 1976இல் இலங்கை அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தியிருந்தது! இதைவிட சிறுநீரக வைத்தியசாலை, தேசிய வைத்தியசாலை வௌிநோயாளர் பிரிவு என சீனா செய்யும் உதவிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, இலங்கைக்கான எதிரி நாடல்ல சீனா என்பதைப் புரிந்துகொள்ளுதல்தான் அரசியல் பக்குவம். இலங்கையின் நெருங்கிய நண்பன் இந்தியா என்பதில், மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இலங்கை தனது வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இலங்கைக்கு ஏறத்தாழ நான்கு பில்லியன் டொலர் வரை கடனுதவி செய்தது இந்தியா. இதற்காக சீனாவை மோசமான எதிரியாகச் சித்திரிக்கத் தேவையில்லை. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு செய்த, செய்கின்ற உதவிகளுக்கு நிகராக, ஏனைய பல செல்வந்த நாடுகள் உதவவில்லை. அதற்காக, அவர்களை வைது கொண்டிருக்க முடியுமா என்ன? மறுபுறத்தில், இந்தக் கருத்தைச் சொன்னவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால், இலங்கை அரசியல் என்பதற்கப்பால், தமிழ்த் தேசிய அரசியலுக்கு, சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. சீனா, வௌிநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதை, தனது வௌிநாட்டுக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. அதன்படி, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அது பேசுவதில்லை. ஆனால், யுத்தகாலத்தில் இலங்கைக்கு அது நிறைய ஆயுத, மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கியிருக்கிறது. ஆனால், சீனா மட்டும்தான் ஆயுத, மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியதா என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா என 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தில், இலங்கைக்கு பல நாடுகளும் இராணுவ உதவிகளைச் செய்துள்ளன. சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய எந்தத் தேவையும், தமிழ்த் தேசிய அரசியலுக்குக் கிடையாது. இவ்வளவும் ஏன், இலங்கை அரசியலுக்கே, சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை கிடையாது. சமகாலப் பேச்சு வழக்கில் சொல்வதானால், இது ‘தேவையே இல்லாத ஆணி’. குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் சீனா பற்றிய கருத்து, அறவே தேவையற்றதொரு கருத்து! சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பதுபோலத்தான், தமிழ்த் தேசிய அரசியலின் நிலை இன்று மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்றார் வள்ளுவர். ஆனால், தமிழ்த் தேசியமானது, பார்வையாளர்களைக் கண்டதும் கிளர்ச்சியுறும் குரங்கின் கையில் பூமாலையாக, சிக்கிச் சீரழிந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. தமிழ் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்! ஒருவன் எந்த மொழியில் பேசுகிறான் என்பதைவிட, என்னத்தைப் பேசுகிறான் என்பதில்தான் விடயம் இருக்கிறது. அடிமுட்டாள்தனமான கருத்தை ஆங்கிலத்திலோ, ஃபிரஞ்சிலோ, லத்தீனிலோ, ஹிந்தியிலோ, சிங்களத்திலோ பேசினாலும், அது அடிமுட்டாள்தனமான கருத்துதான்! இந்தத் தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்குவதை, தமிழ்த் தேசிய அரசியல் நிறுத்திக்கொள்வது அதன் ஆரோக்கியத்துக்குச் சாலச்சிறந்தது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியல்-தேவையில்லாத-ஆணிகள்/91-309439
-
சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜெயன் மஹாதேவன் (ஜெயன் தேவா) மறைவு! - வ.ந.கிரிதரன் 21 டிசம்பர் 2022 நண்பரும், எழுத்தாளரும், முகநூலில் ஜெயன் தேவா , Jeyan Deva , என்னும் பெயரில் அறியப்பட்டவருமான மகாதேவன் ஜெயக்குமரன் (விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அமைப்பின் போராளியாகவும், அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினி ஜெயக்குமரனின் கணவர்) மறைந்த செய்தியினை எழுத்தாளர் காத்யான அமரசிங்க மூலம் அறிந்து கொண்டேன். அண்மைக்காலமாகச் சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்தார். தனிமையில் வாழ்ந்து வந்த ஜெயன் தேவாவின் மறைவு துயர் தருவது. தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' (சுயசரிதை) 'மழைக்கால இரவுகள்' (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை தமிழினி ஜெயக்குமரனின் மறைவையடுத்து வெளியிட்டார். இவரது முக்கிய சமூகப் பங்களிப்பாக இதனை நான் கருதுவேன். இவரது கட்டுரையொன்று 'பதிவுகள்' இணைய இதழில் ' மற்றொரு செப்ரெம்பர் 11ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும். சல்வடோர் அயெண்டே (1908-2008)' என்னும் தலைப்பில் , ஜெயன் மஹாதேவன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியான ஜெயன் தேவாவின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன். https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/7634-2022-12-21-16-55-00
-
டுவிட்டர் சிஇஓ பதவியை விரைவில் இராஜினாமா செய்கிறேன் ; ஒரு முட்டாளை தேடிப்பிடிப்பேன் - எலான் மஸ்க் By Digital Desk 2 21 Dec, 2022 | 09:44 AM டுவிட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியை (சிஇஓ) இராஜினாமா செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "டுவிட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி (சிஇஓ) பதவியை நான் விரைவில் இராஜினாமா செய்கிறேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாளை தேடிப்பிடித்துவிட்டு இராஜினாமா செய்வேன். அதன் பின்னர் மென்பொருள், சர்வர் அணிகளை மட்டும் ஏற்று நடத்துவேன்" என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு 2 மாதங்களாக பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்கள் பணி நீக்கம் உட்பட அவர் எடுத்த பல முடிவுகள் உலகளவில் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், எலான் மஸ்க் டுவிட்டரின் பிரதம நிறைவேற்று அதிகாரி (சிஇஓ) பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து நேற்று முன்தினம் கருத்துக் கணிப்பு நடத்தினார். கருத்து கணிப்பில், 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் சிஇஓ பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எலான் மஸ்க்கை பின்தொடர்பவர்கள் கூறும்போது, “ரஷ்யா - உக்ரைன் போரை எவ்வாறு தீர்ப்பது என்று கூட ஏற்கெனவே கருத்து கணிப்பு நடத்தி உள்ளார். எனவே, பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிக்கு ஏற்கெனவே ஒருவரை தெரிவு செய்து விட்டு அவர் இந்த கருத்து கணிப்பை நடத்துவது போலவே தெரிகிறது” என்று தெரிவித்தனர். இந்நிலையில், அவர் முன்னெடுத்த வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்த நிலையில் ராஜினாமாவை அவர் உறுதி செய்துள்ளார். வாக்கெடுப்புக்கு முன்னரே பல்வேறு தருணங்களில் மஸ்க் தான் அளவுக்கு அதிகமாகவே பொறுப்புகளை சுமப்பதாகக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. https://www.virakesari.lk/article/143690
-
ஆப்கான் பெண்கள் பல்கலையில் கற்கத் தடை: தாலிபான் அரசுக்கு அமெரிக்கா கண்டனம் By Digital Desk 2 21 Dec, 2022 | 10:56 AM ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்த மோசமான முடிவுவானது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தலிபான்கள் தலைமையின் எடுக்கப்பட்ட அண்மைய முயற்சியாகும். ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் பாதியளவு உள்ள பெண்களின் கல்வியை தடுத்து நிறுத்தும் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டின் விளைவாக, தலிபான்கள் சர்வதேச சமூகத்திலிருந்து மேலும் விலகி அவர்கள் விரும்பும் சட்டபூர்வமான தன்மை மறுக்கப்படும். இந்தப் பிரச்சினையில் எங்களின் கூட்டு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது. ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்கும் எங்களின் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/143693
-
8 பில்லியன் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி By Digital Desk 2 21 Dec, 2022 | 12:04 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் உள்ள 12 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு குறைவாக விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு மேல் விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20,000 ரூபாவும் அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலடப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/143719
-
திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 9 பேருக்கு ஜன.3 வரை நீதிமன்ற காவல்: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு By Rajeeban 21 Dec, 2022 | 12:06 PM திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 9 பேரை, ஜன.3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களைத் தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கை தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்தஜூலை 8-ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஜூலை 20-ம் தேதி சோதனை நடத்தினர். திருச்சி சிறப்புமுகாமிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், லேப்டாப், வைஃபை மோடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை கேரளா கொண்டு சென்றஎன்ஐஏ அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமிலிருந்த இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் என்ற பிரேம்குமார், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணா, முகமது ஆஸ்மின், அழக பெருமக சுனில் காமினி பொன்சேகா என்ற கோட்ட காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னான்டோ என்ற பொம்மா, தனுகா ரோஷன், லடியா, காமேஷ் சுரங்கா பிரதீப் என்ற வெள்ள சுரங்கா, திலீபன் ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களை ஆயுதக் கடத்தல் வழக்கில் கைது செய்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரும்,சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 3 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். https://www.virakesari.lk/article/143727
-
கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மனோ ஆதரவு அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்.பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்.பிக்களும், ஒரு முஸ்லிம் எம்.பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்இபி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்தார். ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது. அந்த நியமனம் உதய கம்மன்பில எம்.பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம். இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் மனோ எம்.பி மேலும் கூறியதாவது, அரசியலமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஏழு எம்பிக்களும், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இடம் பெற வேண்டும். இந்த எம்.பிகளில், நான்கு சிங்கள எம்.பிகளும், தலா ஒரு எம்.பியாக மூன்று எம்.பிக்கள், வடக்கு, கிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இதுவே நியாயமான நடவடிக்கை. ஆனால், இது நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும் தம் பதவிநிலை காரணமாக அரசியலமைப்பு பேரவையில் இடம் பெறுகின்றார்கள். ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் தம் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி ரணில் விக்கிரமசிங்க, தமது பிரதிநிதியாக எம்பி. நிமல் சிறிபால சில்வாவையும், சஜித் பிரேமதாச தமது பிரதிநிதியாக எம்.பி கபீர் ஹசீமையும் நியமித்துள்ளனர். அரசாங்கம், பிரதான எதிர்க்கட்சி ஆகிய கட்சிகளை சாராத சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். அதன்படி, சித்தார்தன் எம்.பியின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இப்போது இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது. மொட்டு கூட்டணியில் தெரிவாகி விட்டு, அரசாங்கங்கத்தின் எல்லா தவறுகளுக்கும் காரணமாகி விட்டு, இப்போது எதிர்க்கட்சி பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ள உதயகம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல், இதையும் தட்டி பறிக்க பார்க்கிறது. உண்மையில், இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம், அவர்கள் நியமிக்கும் எம்.பியாக இந்திய வம்சாவளி தமிழரை பிரதிநித்துவம் செய்யும் ஒரு எம்பியை நியமிக்கும்படி, நானும், பழனி திகாம்பரம் எம்.பியும் கோரிக்கை விடுத்தோம். தான் ஏற்கெனவே, நிமல் சிறிபால சில்வாவை பெயரிட்டு விட்டதாகவும், முதலிலேயே கூறி இருந்தால், பரிசீலிக்க இடமிருந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார். தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பி ஒருவரை தமது பிரதிநிதியாக நியமிக்க முதலில் எம்மிடம் உடன்பட்ட, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிறகு தமது கட்சியில் இருந்து, எம்.பி., கபீர் ஹாசிமை நியமிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக கூறினார். கபீர் ஹாசிம் சகோதர முஸ்லிம் எம்.பி என்பதால் அதை நாம் புரிந்துக்கொண்டோம். இந்நிலையில், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவர், கட்டாயம் மலையக இந்திய வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கான பெயரையும் நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, பிரதமர், எதிர்கட்சி தலைவர்ஆகியோரிடம் சிபாரிசு செய்து வழங்கியுள்ளோம். இத்தகைய பின்னணியில், இறுதியான ஒரேயொரு எம்.பி நியமனத்தில், எம்.பி சித்தார்தனின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது. அது சட்டப்படியும், அரசியல் நியாயப்படியும் சரியானது. ஆகவே அதை நாமும் ஆதரிக்கிறோம். இதையே இன்று பிரச்சினைக்கு உள்ளாக்கி, அதையும் தட்டிப்பறித்து, ஈழத்தமிழ், மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் எம்.பி.கூட அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கிறார்கள் என்றும் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/கூட்டமைப்பின்-நிலைப்பாட்டுக்கு-மனோ-ஆதரவு/95-309413
-
கந்தையா அண்ணைக்கு பின்னாலை தாத்தாவும் பேராண்டியும் ஆடுற ஆட்டம் நன்னாயிருக்கு!😇🤣
-
பெருமளவு போதைப்பொருளை விட்டு விட்டு சிறிதளவை பிடித்து படம் காட்ட வேண்டாம் – உமா சந்திர பிரகாஷ் காட்டம்! பெருந்தொகையான போதைப்பொருட்களை நாட்டுக்குள் வரும்போது அதனை பிடிப்பதை விட்டுவிட்டு சிறியளவிலான போதைப்பொருட்களை பிடித்து படம் காட்டவேண்டாமென ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்தார். சமகாலநிலை தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் புள்ளிகளும் பிரபலங்களும் ஈடுபடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பான விபரங்களும் பொலிஸாரிடம் இருக்கும்போது போதைப்பொருள் தொடர்பாக பாடசாலை செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. வானத்தில் இருந்து விழும் ரொபி போல நினைத்து இந்த சோதனை நடவடிக்கையை செய்கிறார்களோ தெரியவில்லை. பாடசாலை மாணவர்களின் புத்தகப்பையை சோதிப்பது மாத்திரம் பொலிஸாரினதோ இராணுவத்தினரோ வேலை அல்ல என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். பெருந்தொகையான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடல் வழியாகவோ ஆகாய வழியாகவோ வரும்போது அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://newuthayan.com/536-3/
-
கம்பன் கழக ஜெயராஜ் பத்திரிகை ஆசிரியர்களை கொச்சைப்படுத்துகிறார்: பத்திரிகையாளர் நிக்ஸன் குற்றச்சாட்டு தமிழ் பத்திரிகைகளின் நான்கு பிரதம ஆசிரியர்கள் பற்றிக் கம்பன் கழக ஜெயராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றுக்குக் கொழும்பில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் ஊடகம் மற்றும் அரசறிவியல் விரிவுரையாளருமான அ.நிக்ஸன் தனது முகநூலில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.ஈழத்தமிழர்களுக்கு ஜெயராஜ் என்ற மனிதரின் முழு அடையாளமும் தெரியும். விரைவில் அவரின் வேஷம் முழுமையாகக் கலையும் எனவும் நிக்ஸன் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.பகிரங்கக் கடிதத்தின் விபரம் வருமாறு- கம்பன் கழகம் ஜெயராஜ் அவர்களுக்கு, 17-12-2022 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையில் தங்கள் குறிப்பொன்றை வாசித்தேன். சில பத்திரிகை ஆசிரியர்கள் பற்றியும் பத்திரிகை நிறுவன முதலாளிகள் பற்றியும் தாங்கள் குறிப்பிட்ட கருத்துத் தங்கள் அறிவைத் தரம் தாழ்த்தியுள்ளது. பிரதான ஊடகங்களின் (Mainstream Media) பிரதம ஆசிரியர்களுக்கென்று ஒழுக்க விதிகள் – கட்டுப்பாடுகள் உண்டு. கருத்துச் சுதந்திரம் என்பதற்காக வன்மத்துடன் ஒருவரைத் தாக்கி எழுதவும், பரிகாசம் செய்யவும் முடியாது. இது பொது விதி. கருத்துச் சுதந்திரம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி அரசின் தோற்றம் பற்றிய சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் தந்தையர்களில் ஒருவரான அறிஞர் ரூசோ தெளிவாக விபரிக்கிறார். கருத்துச் சுதந்திரம் என்பதை மையமாகக் கொண்டே எழுத்துச் சுதந்திரம், எத்தகையை நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்கு பழந் தமிழ் இலக்கியங்களே சான்று. நகைச் சுவையோடு, ஆனால் ஒருவரின் மனம் நோகாமல் கதை சொல்லி இலக்கியத்தின் வழி நின்று ஒருவர் விடும் தவறை உணரவைத்திருக்கிறார்கள். இலக்கிய – ஆன்மீகப் பேச்சாளரான தங்களுக்கு இது தெரியாததல்ல. ஜனரஞ்சகம் என்ற போர்வையில் குப்பை மொழி நடைகளை தமிழகப் பேச்சாளரான சாலமன் பாப்பையா இறக்குமதி செய்கிறாரெனப் பலரும் அன்று பேசியதைக் கேட்டிருக்கிறேன். அவ்வாறு பேசியவரைத் தங்கள் கம்பன் கழக மேடைகளில் பேச வைத்தும் தாங்களே. அவரைத் தங்கள் மேடைக்கு அழைத்து வந்தது மாத்திரமல்ல, அவரைவிடவும் நாகரிகமற்ற பரிகாசப் பேச்சுக்களைப் பேசத் தாங்களும் ஆரம்பித்துவிட்டீர்கள். ஆகவே கம்பன் புகழ்பாடும் விவாத மேடைகளில் வேண்டுமானால் ஒருவரைப் பரிகாசம் செய்தோ வசைமொழிகாளாலோ தாங்கள் பேசலாம். அதனை நகைச்சுவைப் பேச்சு என்றும் தாங்கள் விளக்கம் கொடுக்கலாம். சலமன் பாப்பையா கொழும்புக் கம்பன் கழக விழா மேடையில் தங்களைப் பார்த்து நகைச்சுவை என்ற போர்வையில் பேசிய நாகரிகமற்ற வசைமொழிகள் எத்தனை? தங்கள் பற்றிய அங்கதப் பேச்சுக்களைச் செய்தியாளர் ஒருவர் செய்தியாக்கியிருந்தால், தாங்கள் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? ஆகவே பிரதான ஊடகங்களுக்கென்று ஒழுக்கம் – பொறுப்பு உண்டு. தாங்கள் மேடையில் பரிகாசம் செய்வது போன்று பத்திரிகைகளில் துறைசார்ந்த ஒருவரைப் பரிகாசம் செய்யவோ வசைமொழிபாடவோ முடியாது. இதன் காரணமாகவே தாங்கள் குறிப்பிட்ட நான்கு பத்திரிகை ஆசிரியர்களும் தங்கள் பத்தி எழுத்தை இடையில் நிறுத்தியிருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனம். இது தங்கள் அறிவுக்கு எட்டவில்லையா? தாங்கள் குறிப்பிட்ட நான்கு பத்திரிகை ஆசிரியர்களும் வெவ்வேறுபட்ட காலத்திலேதான் தங்கள் பத்தி எழுத்தை இடைநிறுத்தியிருக்கிறார்கள் என்பதைக்கூட தாங்கள் புரிந்துகொள்ளவில்லையா? யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகை ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் தங்கள் பத்தி எழுத்தை இடை நிறுத்தியது 1989 ஆம் ஆண்டு. கொழும்பில் இருந்து வெளிவந்த தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தங்கள் பத்தி எழுத்தை இடைநிறுத்தியது 1998 ஆம் ஆண்டு. வீரகேசரியில் முன்னர் பதவி வகித்த பிரதம ஆசிரியர் ஆர். பிரபாகன் தற்போது பதவி வகிக்கும் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் ஆகிய இருவரும் தங்கள் பத்தி எழுத்தை இடை நிறுத்தியமை ஆறு வருட இடைவெளிக்குள்தான். ஆகவே நான்கு ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் கூடிப் பேசித் திட்டமிட்டு ஜெயராஜின் பத்தி எழுத்தை நிறுத்தவில்லை என்பது இங்கே கண்கூடு. முரசொலி பிரதம ஆசிரியர் தங்கள் பத்தி எழுத்தை இடைநிறுத்தியபோது, வீரகேசரியில் தற்போது ஆசிரியராகப் பதவி வகிப்பவருக்குப் பன்னிரண்டு வயது. தினக்குரலில் பிரதம ஆசிரியராகப் பதவி வகித்தவருக்கு வயது முப்பத்து ஒன்று. அப்போது அவர் கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த வீரகேசரியில் சாதாரண உதவி ஆரியர் மாத்திரமே. அன்று முரசொலியில் பிரதம ஆசிரியராக இருந்தவருடன் இவருக்கு நட்பபுக்கூட இருக்கவில்லை. ஆகவே வெவ்வேறுபட்ட காலங்களில் தங்கள் பத்தி எழுத்துக்கள் குறித்த நான்கு பிரதம ஆசிரியர்களிளாலும் இடை நிறுத்தப்பட்டிருக்கின்றது என்றால் யார் பக்கம் தவறு? தினக்குரலில் தாங்கள் எழுதிய பத்தி எழுத்துக்கு அமரா் பேராசிரியர் கா.சிவத்தம்பி பதில் எழுதியிருந்தார். அந்தப் பதில் விமர்சனம் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதாலேயே தாங்கள். தங்களுடைய பத்தி எழுத்தை நிறுத்தியிருந்தீர்கள் அல்லவா? ஆசிரியர் தங்கள் பத்தி எழுத்தை நிறுத்தவில்லையே! துறைசார்ந்த ஒருவரைப் பற்றி பிரபலமான ஒருவர் பத்திரிகையில் எழுதினால், அதற்கு மறுபதில் எழுத அனுமதிக்க வேண்டும் என்ற ஊடக விதி தங்களுக்குத் தெரியாதா? பத்திரிகை தர்மம் தெரியாமல், மூத்த பத்திரிகை ஆசியர் ஒருவரைப் பற்றிப் பிரதான ஊடகம் ஒன்றில் பகிரங்கமாக எழுதிய தங்கள் சிறுமையை தமிழ் உலகம் எப்படிப் பார்க்கும்? 1987 இல் முரசொலியிலும், 1998 இல் தினக்குரலிலும் தங்கள் பத்தி எழுத்து இடை நிறுத்தப்பட்டமைக்கான காரண காரியத்தைத் தாங்கள் கொஞ்சம் சுயபரிசோதனை செய்திருந்தால், வீரகேசரியில் தங்கள் பத்தி எழுத்தைக் குறித்த இரண்டு பிரதம ஆசிரியர்களும் இடை நிறுத்தியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதல்லவா? ஓன்றைப் புரிந்துகொள்ளுங்கள்– பத்திரிகை ஆசிரியர்களுக்கென்று ஒழுக்க விதிகள் மாத்திரமல்ல சமூகப் பொறுப்பும் உண்டு. தற்போது தமிழ்ப் பத்திரிகைகள் எல்லாம் சமூகப் பொறுப்புடன்தான் செயற்படுகிறதா என்று தாங்கள் திருப்பிக் கேட்கலாம். சமூகப் பொறுப்பு உண்டு. எப்படி? அரசியல் – பொருளாதார செய்திகள் கட்டுரைகளைத் தவிர்த்துத் தங்கள் பத்தி எழுத்துக்கள் போன்ற சமூகச் செய்திகள் சமூகக் கட்டுரைகள் தொடர்பாகப் பிரதம ஆசிரியர்கள் பொறுப்புடன்தான் செயற்படுகின்றனர். அவ்வப்போது ஏற்படுகின்ற தவறுகளுக்குப் பிரதம ஆசிரியர் என்ற முறையில் மன்னிப்புக் கோருதல். விளக்கமளித்தல் மறுப்புச் செய்திகளைப் பிரசுரித்தல் என்ற ஊடக ஒழுக்க விதிகளை அவர்கள் பேணுகின்றனர். ஆனால் தற்போதைய ஈழத்தமிழ் அரசியல் சூழல், பொருளாதார நெருக்கடி பற்றிய விடயங்களில் தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடும் செய்திகள் கட்டுரைகளில் போதாமை உண்டு. தகவல் பிரச்சினைகளும் உண்டு. ஆனால் அந்தக் குற்றச்சாட்டைத் தனியே பத்திரிகை ஆசிரியர்களின் தலையில் மாத்திரம் எவரும் சுமத்திவிடவும் முடியாது. அதற்கான காரணங்கள் விரிவானவை. நிறுவனத்தின் கொள்கை, விளம்பரங்கள், லாப நட்டங்கள் போன்ற பல விடயங்களிலும் அவை தங்கியிருக்கின்றன. விருப்பு வெறுப்புகளும் சம்பள முரண்பாடுகளும் ஆளணிப் பற்றாக்குறைகளும் உண்டு. அத்துடன் ஈழத்தமிழர் அரசியல் கோட்பாடுகளை எந்தக் கோணத்தில் வைத்து எழுதுவது என்பதிலும் சில தமிழ் பத்திரிகைகளுக்குச் சிக்கல் உண்டு. சிலருக்குப் அரசியல் விளக்கப் பற்றாக்குறைகளும் இல்லாமலில்லை. ஆனாலும் இவற்றையெல்லாம் சுதாகரித்துக் கொண்டுதான் திறமையுள்ள பத்திரிகை ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பைச் சுமக்கிறார்கள். சகிப்புத்தன்மையோடுதான் திறமையுள்ள செய்தியாளர்கள் பலரும் தங்கள் பணியில் ஈடுபடுகின்றனர். பல நெருக்கடிகள், அவமானங்கள், குடும்பப் பொருளாதாரச் சூழல் என்று சொல்ல முடியாத வலிகளோடுதான் முழு நேரப் பத்திரிகையாளன் ஒருவர் பணியாற்றுகிறான். ஜெயராஜ் போன்ற பிரபலமுள்ளவர்கள் வெளியில் இருந்து கொண்டு பத்திரிகை ஒன்றுக்கு எழுதினால், அந்தப் பத்தி எழுத்துக்கான கொடுப்பனவு முறைமை எந்த ஒரு ஊடக நிறுவனத்திலும் இல்லை. எழுத இடமளிப்பதைக் கௌரவமாகவே அவர்கள் கருத வேண்டும். ஆனால் பத்திரிகையில் தொடர் ஒன்றை எழுதுங்கள் என்று கூறிய கௌரவத்தையும் சுதந்திரத்தையும் தனிப்பட்ட வன்மங்களுக்குப் பயன்படுத்தினால், எழுத்தை நிறுத்துவதைத் தவிர பத்திரிகை ஆசிரியரால் வேறெதுவுமே செய்ய முடியாது. அரசியல் – பொருளாதார விவகாரங்களில் மேற்குலக ஊடக நிறுவனங்களில் கூட பத்திரிகை நிறுவனத்தின் சில கட்டுப்பாடுகள், விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே பத்திரிகை ஆசிரியர்கள் செயற்படுகின்றனர். அதுவும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெளிநாட்டுத் தூதுவர்கள் – அரசியல் பிரமுகர்கள் போன்றோர் நிறுவனத்துடன் ஏற்படுத்தும் உறவுகள் – தொடர்புகள் என்று பல்வேறுபட்ட தன்மைகளைப் புரிந்துகொண்டுதான் பணியாற்ற வேண்டிய சூழலும் உண்டு. சுயமரியாதையுடன் ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியர்களும் செயற்பட வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக பிரபல்யம் என்று சொல்லிக் கொள்ளும் ஜெயராஜ் போன்றவர்களின் பத்தி எழுத்துக்களைப் பத்திரிகை ஆசிரியர்கள் கண்ணை மூடிக் கொண்டு அனுமதிக்க வேண்டும் என்பது மறுதலையானது. தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் அண்ணன் வித்தியாதரன் 2012 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைத்து என்னிடம் நேரடியாகச் சொன்ன ஒரு விடயம்– ‘நிக்ஸன் நீங்கள் எல்லாம் ஒரு முதலாளியின் நிர்வாகத்தில் பணியாற்றிய செய்தியாளர்கள். ஆனால் நான் எனது மச்சானின் (ஈ.சரவணபவன்) நிறுவனத்தில் செய்தியாளராக இருந்து இரண்டு பத்திரிகைகளுக்குப் பிரதம ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றவன். ஆகவே உங்களை எல்லாம் என்னோடு ஒப்பிட்டுப் பேச முடியாது. அதாவது நீங்கள் செய்தியாளனாகப் பணியாற்றியபோது எதிர்நோக்கிய வலிகளை நான் எதிர்கொள்ளவில்லை’ என்றார். ஆகவே ஜெயராஜ் அவர்களே, வித்தியாதரன் தனது காலைக்கதிர் பத்திரிகையில் தங்களை எழுத அனுமதித்த சுதந்திரத்தைத் தாங்கள் வேறு பத்திரிகைகளில் எதிர்பார்க்க வேண்டாம். அத்துடன் சிங்கள ஆட்சியாளர்களைக் கொழும்புக் கம்பன் கழக மேடைகளுக்கு அழைத்து, புகழ்பாடிப் பொன்னாடை போர்த்தி முடி சூட்டிக் குடை பிடித்து அழகுபார்த்த தாங்கள், தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் பற்றிப் பேசத் தகுதியற்றவர் என்பதை நினைவில் கொள்க. தமிழ் மக்கள் போரில் மடிந்து இரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்தபோதும், எந்தவித உணர்வுகளுமின்றி கொழும்பில் கம்பன் விழா நடத்தியவர்தான் இந்த ஜெயராஜ். ஈழத்துச் சைவ சமயப் பாரம்பரியங்களை மறந்து தென்னிந்திய வழிபாட்டுக்கும் சமஸ்கிருத மொழிக்கும் முக்கியத்துவம் வழங்கும் தங்களைப் பற்றிய மேலதிக விபரங்களை நான் எழுத வேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில் ஈழத்தமிழர்களுக்கு ஜெயராஜ் என்ற மனிதரின் முழு அடையாளமும் தெரியும். விரைவில் தங்கள் வேஷம் முழுமையாகக் கலையும். தங்களை ஈழத்தமிழ் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. ஆனால் வரலாற்றின் நீட்சியாகத் தங்களுக்குக் காலம் பதில் சொல்லும். குறிப்பு– பிரதான தமிழ் பத்திரிகைகள் சிலவற்றின் மீது என்னைப் போன்ற சில பத்திரிகையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் – விமர்சனங்கள் என்பது வேறு. அவை தொழில்சார்ந்த முன்னேற்றமான கருத்துக்கள்– –ஆனால் ஜெயராஜ் குறிப்பிடும் பரிகாசங்கள் ஒட்டுமொத்த தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஈழத்தமிழ்ச் சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதாகவே அமைகின்றன. இப்படிக்குஅ.நிக்ஸன், பத்திரிகையாளர் கொழும்பு -06 http://www.samakalam.com/கம்பன்-கழக-ஜெயராஜ்-தமிழ்/
-
தமிழ் தேசிய அரசியலில் கொள்கை – ஒரு பகிரங்க சவால்? - யதீந்திரா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் காலமாகி 16 வருடங்களாகின்றன. கடந்த 14ம் திகதி, அவரது பதினாறாது நினைவுதினம். அதற்கு முதல் நாள்தான், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ரணில் விக்கிரசிங்கவின் சர்வகட்சி கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியமை தொடர்பில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. நிபந்தனையுடன் பேசியிருக்க வேண்டுமென்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. சமஸ்டியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சிங்கள தரப்புடன் பேசவேண்டுமென்று, இன்னொரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. மூன்றாம் தரப்பு இல்லாமல் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளக் கூடாதென்று, இன்னொரு பார்வை முன்வைக்கப்படுகின்றது. இவைகள் எவையுமே தவறான கருத்துக்கள் அல்ல. ஏனெனில் சிங்களவர்களோடு பேசிப், பேசி ஏமாந்துபோனதே தமிழர் வரலாறு. ஆனால் இந்த இடத்தில் எழும் கேள்வி இவற்றையெல்லாம் அழுத்திக்கூற, அடம்பிடிக்க, பேரம்பேச, நம்மிடமுள்ள பலம் என்ன ? ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் முதல் நாளில், அன்ரன் பாலசிங்கம் கூறுகின்றார். அவரது குரல் மிகவும் கம்பீரமாக ஒலிக்கின்றது. ஆயுதக் களைவு விடயத்தில் சமரசமில்லை. அது எங்களுடைய மக்களின் அதிகாரமாகும். அது தமிழர்களின் பேரம் பேசும் பலம். அது எங்களுடைய மக்களின் பாதுகாப்பிற்கான கருவி. இதற்கு சிறிலங்கா அரசிலிருந்து எந்தவொரு எதிர்ப்பும் வரவில்லை. ஏனெனில் எதிர்க்க முடியாது. எதிர்த்தால் பேச்சுவார்த்தை இடம்பெறாது. உண்மையில் பாலசிங்கம் பேசவில்லை, பிரபாகரனது இராணுவாற்றல் அவரை அவ்வாறு பேசவைத்தது. தமிழர்கள் உச்ச பலத்தோடிருந்த காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையது. அது இனிமையான நினைவுகளை தரவல்ல கடந்தகாலம். கடந்த காலம் என்னதான் அற்புதமான உணர்வை தந்தாலும் கூட, நிகழ்காலத்தில் அதற்கு எவ்வித பெறுமதியும் இல்லை. எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானையிருந்ததென்று, கூறுவதைப் போன்ற ஒன்றுதான் இதுவும். யானை தாத்தாவிடம் இருந்திருக்கலாம் ஆனால் நம்மிடம்? தமிழ் தேசிய அரசியலை நான்கு கட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, செல்வநாயகம் காலகட்டம். இரண்டு விடுதலை இயக்கங்களின் காலகட்டம். மூன்று, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலகட்டம். நான்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலகட்டம். இந்த பின்புலத்தில் நோக்கினால், தமிழர்கள் கொழும்மை நிர்பந்திக்கும் பலத்தோடிருந்த காலமாக, இரண்டு காலகட்டங்களைத்தான் குறிப்பிட முடியும். மேற்படி இரண்டு காலகட்டங்களும் தமிழர்கள் ஆயுத பலத்துடனிருந்த காலகட்டங்களாகும். அன்று 36 ஆயுத இயக்கங்கங்கள் இருந்ததாக ஒரு பதிவுண்டு. சிலர் இதனை 32 என்றும் பதிவிடுக்கின்றனர். இதனை சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. ஆங்கில எழுத்துக்கள் அனைத்தையும் முன்னுக்கு பின்னாக போட்டுக் கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கங்கள். ஜந்து இயக்கங்கள் மட்டுமே இதில் பிரதானமாக பேசப்பட்டது. இயக்கங்களின் அன்றைய ஆளணி, சிறிலங்கா இராணுவத்தைவிடவும் மூன்று மடங்கென்று சொல்வார்கள். இந்த இயக்கங்களின் பிரதான இலக்கு என்னவாக இருந்தது? மிதவாதிகளால் அடைய முடியாமல் போன தனிநாட்டை ஆயுத பலம்கொண்டு அடைவதுதான் இவர்களுடைய இலக்காக இருந்தது. இந்த இயக்கங்கள் அனைத்தும் இறுதியில் சிறிலங்காவிற்கு ஒரு பலமான இராணுவத்தைத்தான் உருவாக்கிக் கொடுக்கப் போகின்றன – என்று தங்களுடைய ஆசிரியர் ஒருவர் கூறியதாக ஒரு நண்பர் என்னிடம் கூறினார். இன்று திரும்பிப்பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்கின்றது. தமிழர்கள் பலத்துடனிருந்த முதல் காலகட்டமும், இரண்டாவது காலகட்டமும் இயங்கங்களின் காலகட்டம்தான். ஒரு வேறுபாண்டு. அதாவது, முதல் கட்டத்தில் இயங்கங்கள் – இரண்டாவது கட்டத்தில் இயக்கம். இயக்கங்களின் முதல் கட்டத்தில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு, அதன் விளைவாகவே திம்புப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன் பெறுபேறாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றது. மாகாண சபை முறைமை ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் இராணுவ பலத்தின் விளைவாகவே, ஒஸ்லோ பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக எதனையும் அடைய முடியவில்லை மாறாக, தமிழர்களின் ஒட்டுமொத்த பலமும் அழிக்கப்பட்டது. திம்பு பேச்சுவார்த்தைக்கும், ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கும் இடையில் ஒற்றுமையுமுண்டு. அதேவேளை வேற்றுமையுமுண்டு. ஒற்றுமை, இரண்டிலும் மூன்றாம் தரப்பிருந்தது. வேற்றுமை, இந்திய தலையீட்டினதும் நோர்வேயின் தலையீட்டினதும் கனதி முற்றிலும் வேறானது. இந்திய தலையீட்டின் போது, இந்தியா, கொழும்மை நிர்பந்திக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் ஒஸ்லோ பேச்சுவார்தையின் போது, நோர்வே ஒரு நிர்பந்திக்கும் சக்தியாக இருக்கவில்லை. இந்த பின்புலத்திலிருந்துதான் சம்பந்தனின் காலகட்டத்தை நோக்க வேண்டும். 2009இற்கு பின்னர் தமிழ் தேசிய அரசியல் நிலைமை முற்றிலும் மாற்றமடைந்தது. உண்மையில் 2009இற்கு முன்னரான தமிழ் தேசிய அரசியலானது, இராணுவ ஆற்றல் மீதான நமபிக்கையின் வழியாகவே நோக்கப்பட்டது. 2009இற்கு பின்னர், நிலைமைகள் பழைய மிதவாத அரசியலை நோக்கித் திரும்பியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது சம்பந்தனது தலைமையின் கீழ் வந்ததோ, அப்போதே தமிழ் தேசிய அரசியல் பழைய மிதவாத அரசியலுக்கள் பிரவேசித்துவிட்டது. ஆனால் முன்னரைவிடவும் அது பலவீனமாகவே காட்சியளித்தது. ஏனெனில் சம்பந்தன் ஒரு தேசிய இயக்கத்திற்கு தலைமைதாங்கக் கூடிய ஆற்றலுள்ள ஒருவர் அல்ல. ஏனெனில் அவரிடம் இயல்பிலேயே மோதும் பண்பில்லை. அப்படியான பண்பு அமிர்தலிங்கத்திடமிருந்ததாக சொல்வார்கள். ஒரு மூத்த தலைவரென்னும் தகுதியை கொண்டே, சம்பந்தன் கூட்டமைப்பை வழநடத்த முற்பட்டார். ஆனால் அதனைக் கூட அவரால் சரிவரச் செய்ய முடியவில்லை. 2009இற்கு முன்னரான தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, விடுலைப்புலிகளின் தேர்தல் முகமாக மட்டுமேயிருந்தது. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம்? ஏற்கனவே தோல்வியடைந்த மிதவாதிகளால் புதிதாக எதைச் செய்ய முடியும்? இந்தக் கேள்விகளிலிருந்துதான், 2009இற்கு பினனரான அரசியலை மதிப்பிட வேண்டும். மிதவாதிகளால் எதனையுமே கையாள முடியாமல் போனதால்தான், ஆயுத இயக்கங்கள் தோற்றம்பெற்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்த அமிர்தலிங்கம், மாகாண சபை தேர்தலில் போட்டியிட மறுத்தார். இந்தப் பின்புலத்தில்தான், விடுதலை இயக்கங்கங்களில் ஒன்றான, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அந்த இடத்தை நிரப்பியது. அதாவது, மாகாண சபைக்கு வடிவம் கொடுப்பதற்கும் ஒரு இயக்கம்தான் தேவைப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில், இன்றுள்ள அரசியல் கட்சிகளால் கொழும்மை நிர்பந்திப்பதற்கு என்ன செய்ய முடியும்? இந்தக் கேள்வியிலிருந்துதான், நாம், இன்றைய சூழலை மதிப்பிட வேண்டு;ம். விமர்சிக்க வேண்டும். கோபப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும். நடக்க முடியாத ஒருவரைப் பார்த்து ஏன் நீங்கள் நடக்கவில்லையென்று கேட்கலாமா? இன்றுள்ள சூழலில் பேச்சுவார்த்தையை எவ்வாறு கையாளலாமென்று கூறுகின்ற போது, இந்த அரசியல் யதார்த்தத்தை நாம் மறந்துவிடக் கூடாது. 2009இற்கு பின்னரான சூழலில், கொழும்மை நிர்பந்திக்கும் பலத்தை தமிழர்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். இந்தச் சூழலில் போரின் இறுதிக் காலத்தில் இடம்பெற்றதாக நம்பப்படும் மனித உரிமை மீறல்களையே ஒரு துருப்புச் சீட்டாக நாம் கையாண்டு வருகின்றோம் ஆனால் அதிலும் ஒரு பிரச்சினையுண்டு. கடந்த 13வருடங்களாக பொறுப்பு கூறல் விடயத்தை கொழும்பு ஏதோவொரு வகையில் இழுத்தடித்தே வருகின்றது. கொழும்பால் இவ்வாறு இழுத்தடிக்க முடிகின்றதென்றால், இங்கு கொழும்பு மட்;டும் பிரச்சினையில்லை – மாறாக, அவ்வாறானதொரு வாய்ப்பு சர்வதேச பொறிமுறையில் இருக்கின்றது என்பதையே நாம் உற்றுநோக்க வேண்டும். இந்த பின்புலத்தில் நோக்கினால். உள்நாட்டில் பலமில்லை. பிராந்திய சக்தியான இந்தியாவின் நிலைப்பாடு இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் மட்டுப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் கரிசனையோ, மனித உரிமைகள் விவகாரத்தை தாண்டி அசைவதாக இல்லை – அரசியல் தீர்வு தொடர்பில் அவர்கள் இதுவரை உச்சரித்ததில்லை. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்கள் நமது எதிர்பார்ப்புக்களை சிறியளவில் கூட, பூர்த்திசெய்யவில்லை. இந்த நிலையில் என்ன செய்ய முடியும்? கொழும்பிற்கு நிபந்தனை வைக்கலாம். சமஸ்டியை பகிரங்கமாக அறிவித்தால்தான், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோமென்று உரத்து பேசலாம் – ஆனால், அதற்காக அவர்களை எவ்வாறு நிர்பந்திப்பது? இந்த இடத்தில் தமிழர்கள் என்னதான் செய்வது? நாம் எப்போது மீளவும் பலம் பெறுவோம்? எப்போது முன்னைய கம்பீரத்துடன் பேசச் செல்வோம்? எந்த ஆய்வாளரிடம், எந்த புத்திஜீவிடம், எந்த சிவில் சமூகத்திடம் இதற்கு பதிலுண்டு. புலம்பெயர் அமைப்புக்களிடம் பதிலிருக்கின்றதா? ஓரு மொங்கோலிய கூற்றுண்டு. அதாவது, குதிரை கிடைக்கும் வரையில் கழுதையை ஓட்டுங்கள். இப்போது அந்தக் கழுதை எதுவென்பதில்தானே நமக்குள் விவாதங்கள் இடம்பெறுகின்றன. இப்போது, 13 என்னும் எண்ணை உச்சிரித்தாலே, மகா பாவம் என்பது போல் சிலர் சிலிர்த்துக் கொள்கின்றனர். அனைவரையும் நோக்கி இந்தக் கட்டுரையாளர் ஒரு கேள்வியை முன்வைக்கின்றார். மனச்சாட்சிப்படி பதில் கூறுங்கள். கடந்த 73 வருடகால தமிழ் தேசிய அரசியல் பயணத்தின் போது, நாம் கொள்கை வழியில் மட்டும்தான் பயணித்திருக்கின்றோமா? நாம் கொள்கை தவறியதேயில்லையா? சூழ்நிலைகருதி சிந்தித்ததில்லையா – செயற்பட்டதில்லையா? சமஸ்டிக் கோரிக்கை முன்வைத்த செல்வநாயகம் எந்த அடிப்படையில் பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்பாடுகளுக்கு சென்றார். தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் எந்த அடிப்படையில் மாவட்ட சபைக்கு இறங்கினர்? எந்த தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில், தமிழரசு கட்சி, 1965இல், டட்லி சேனநாயக்க தலைமையிலான, ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கத்தில்; அங்கம் வகித்து, அமைச்சரவையிலும் பங்குகொண்டது? ஜம்பதிற்கு ஜம்பது கோரிய ஜி.ஜி.பொன்னம்பலம், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியில் அமைச்சராக இருந்த கதையை மறக்க முடியுமா? இவைகள் அனைத்தும் எந்த தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில் இடம்பெற்றன? இவற்றுக்கு பதில் என்ன? இவற்றுக்கான பதில் தந்திரோபாயமென்றால் – ஏன் இருக்கின்ற ஒரேயொரு துருப்புச் சீட்டான மாகாண சபையை உச்சபட்டசமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அது ஏன் ஒரு தந்திரோபாயமாக இருக்க முடியாது? இல்லை! – இது பச்சைத் துரோகமென்றால், முன்னர் இடம்பெற்றவைகளையும் பச்சைத் துரோகமென்று அறிவிக்கும் துனிவுண்டா? இன்று சூழ்நிலை கருதி, தந்திரோபாயமாக சில விடயங்களை முன்னெடுப்பது தவறென்றால், தமிழினத்தின் முதல் துரோகி எஸ்.ஜே.வி.செல்வநாயகமாகத்தானே இருக்க முடியும்? அதற்கு முன்னர் பச்சைத் துரோகமிழைத்தவர் (கஜன் பொன்னம்பலத்தின் பாட்டன்) ஜி.ஜி.பொன்னம்பலமல்லவா? இயக்கங்களின் வரலாறு என்ன? எந்த இயக்கம் எதிரியென்று கூறப்பட்டவர்களோடு தேவைகருதி ஊடாடாத இயக்கம். இந்திய அமைதிப் படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்;டுவிடுவோமென்னும் சூழலில்தான், அதிலிருந்து, தப்பித்துக் கொள்வதற்காக, விடுதலைப் புலிகள் பிரேமதாசவோடு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டனர். 2000இல், அன்ரன் பாலசிங்கம், இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை பச்சையாக போட்டுடைத்திருந்தார். இந்திய அமைதிப்படை வடக்கு கிழக்கு முழுவதையும் கட்டுப்பாட்டுக் கொண்டுவந்திருந்தது. இந்த நிலையில், முழுமையான அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில்தான், பிரேமதாசவோடு புரித்துணர்வு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்தியாவின் தேவையை உணர்ந்து, பாலசிங்கம் இந்தியாவை நோக்கித் திரும்பினார். (When we entered into negotiations with President Premadasa, we were on the brink of destruction. The IPKF had taken over the entire north and east and the LTTE and Prabhakaran were fighting for survival. So we entered into an understanding with Premadasa to escape from total annihilation. ) ஒரு வீழ்சியை எதிர்கொள்ளும் போது, தந்திரேபாயமாக செயற்பட முடியும் – அந்த தந்திரேபாயத்திற்காக எந்தவொரு எல்லைக்கும் செல்லலாமென்பதுதானே இதன் பொருள்! இதில் எங்கிருக்கின்றது கொள்கை? எனவே தந்திரேபாயத்தை கொள்கையோடு இணைத்து குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை என்பதுதானே விடயம். இந்த பின்புலத்தில் சிந்தித்தால், கடந்த 73 வருடகால தமிழ் தேசிய அரசியலில் கொள்கை வழியை மட்டுமே முன்னிறுத்தி சிந்தித்த – கட்சிகளும் இல்லை, இயங்கங்களும் இல்லை. சூழ்நிலை கருதிய முடிவுகளுக்கு எவருமே தங்கவில்லையென்பதுதான் வரலாறு. இப்போது புதிதாக தமிழ்-தேசிய வகுப்பெடுப்போர், இந்த அடிப்படையில் விவாதிப்பதற்கு தயாராக இருக்கின்றீர்களா? விவாதிப்போமா? இந்தக் கட்டுரை துனிவுள்ளவர்களை அழைக்கின்றது. நாம் ஒவ்வொரு விடயங்களை உச்சரிக்கின்ற போதும், நாம் – நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய அரிவரிக் கேள்வி – நாம் கூறும் விடயத்தை எவ்வாறு அடையப் போகின்றோம்? அதற்கான பலத்தை எவ்வாறு திரட்டிக்கொள்ளப் போகின்றோம்? அதனை எங்களால் திரட்டிக்கொள்ள முடியுமா? விடுதலைப் புலிகள் இராணுவநிலையில் பலமாக இருந்த காலத்தில் கூட, நிலைமைகள் பாரதூரமாவதை உணர்ந்த பாலசிங்கம், இந்தியாவை நோக்கித் திரும்பினார். உண்மையில் பாலசிங்கத்தை இன்று நினைவு கூறுவோர் எவருமே – அவரது இறுதிக்கால நகர்வுகள் தொடர்பில் பேசுவதில்லை. பலத்தோடு இருந்த காலத்திலேயே ஒரு கட்டத்திற்குமேல் எதனையும் முன்னெடுக்க முடியவில்லை. பேச்சுவார்த்தையிலிருந்து பிரபாகரன் வெளியேறிய பின்னர், நிலைமைகள் மிகவும் வேகமாக அவருக்கு எதிராகத் திரும்பியது. ஒரு கட்டத்தில் அனைத்துமே கைமீறியது. விடுதலைப் புலிகள் பலத்தோடு இருக்கின்ற காலத்திலேயே எதிர்கொள்ள முடியாத விடயங்களை, இன்று எந்தவிதமான பலமுமில்லாத சூழலில் எவ்வாறு நம்மால் முன்னெடுக்க முடியும்? அதற்காக இந்தக் கட்டுரை இலக்கை கைவிடுமாறு வாதிடவில்லை. மாறாக, இருப்பதை பாதுகாத்துக் கொண்டு. எடுப்பதை எடுத்துக் கொண்டு, முன்னேறுவோமென்றே வாதிடுகின்றது. நம் கனவுகளை சேமித்துவைப்போம். மீண்டும் பலம்பெறும் காலமொன்று வரும்போது, அந்தச் சேமிப்பை கவனமாகப் பயன்படுத்துவோம். வரலாறு முழுவதிலும் – இவ்வாறுதான் வீழ்ந்த சமூகங்கள், எழுந்திருக்கின்றன. http://www.samakalam.com/தமிழ்-தேசிய-அரசியலில்-கொ/
-
தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள் கனகராசா சரவணன் “வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதியில்; இந்து ஆலயங்கள் இடிப்பு காணிகள் அபகரிப்புக்களை நிறுத்தினால் தான் அரசாங்கத்துடன் பேச்சுக்கு வருவோம் என்று சொல்ல தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள், 70 வருடகாலமாக தீர்க்க முடியாத அரசியல் பிரச்சனையை ஒன்றரை மாதத்தில் ஜனாதிபதி தீர்ப்பார் என நம்பிப் சென்று தமிழ் மக்களை மடையர்கள் ஆக்குகின்றனரா?” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தால் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்ததாவது, “அண்மையில் சர்வகட்சி மாநாட்டை கூட்டிய ஜனாதிபதி, கட்சி தலைவர்கள் இல்லாதவர்களை அழைத்துள்ள போதும் என்னை அழைக்கவில்லை. ஏன் என்றால் சங்கரி வந்தால் பிரச்சனை என்று ரணிலுக்கு தெரியும். கடந்த 2005ஆம் ஆண்டு ரணில் சமஷ்டியை தீர்வாக வைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது இரா.சம்பந்தன் தலைமையிலான 22 எம்.பிக்கள் தேர்தலை பகிஷ;கரியுங்கள் என பிரச்சாரம் செய்து ரணிலின் சமஷ்டியை தோக்கடித்து மஹிந்தவின் ஓற்றையாட்சியை வெல்லவைத்து ஒற்றையாட்சியை நிலைநிறுத்தி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தனர். எனவே அன்று சமஷ்டி வேண்டாம் என பிரச்சாரம் செய்த இரா. சம்பந்தன் மற்றும் தமிழ் தலைமைகள், தற்போது வடக்கு, கிழக்கில் இந்து ஆலயங்கள் இடிப்பு காணிஅபகரிப்பில் ஜனாதிபதி செயற்பட்டுக் கொண்டு தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுக்கு பேச்சுக்குவருமாறு அழைக்கின்றபோது, முதலில் தமிழர்களின் காணி அபகரிப்பு இந்து ஆலயங்கள் உடைப்பை நிறுத்தினால் தான் பேச்சுக்கு நாங்கள் வருவோம் என சொல்ல தைரியம் இல்லாதவர்கள். 2009ஆம் இறுதி யுத்தத்தின் போது 3 இலட்சம் மக்கள் இறக்கும் போது மௌனிகளாக இருந்துவிட்டு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, இன்று அரசாங்கத்துடன் வெக்கமில்லாமல் சமஷ்டியை பற்றி பேசப்போகிறனர் என்பது வேடிக்கையானது என்பதுடன் இப்படியான சூழ்நிலையில் இனி சமஷ்டி கிடைக்குமா? மக்களை ஏமாற்றினால் போதும் எனது அரசியல் செய்கின்றனர். பொருளாத நெருக்கடியால் பட்டினியால் மக்கள் சாகின்றனர் இவ்வாறு எரிகின்ற பிரச்சனையை எரியவிட்டுக் கொண்டு இருக்கின்றனர். தனது இப்போதைய ஆட்சி ஜனநாயக ஆட்சி அல்ல என்று ரணிலுக்கு நன்றாக தெரியும். இந்த தலைவர்களின் ஊழலை பற்றி அமம்பலபடுத்தாது விடுவதால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இரா.சம்மந்தன் பாராளுமன்றபடி எற தகுதியில்லாதவர். ஏன் என்றால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பாராளுமன்றம் அல்ல. பேச்சு வார்த்தைக்கு மத்தியஸ்துவம் செய்ய 3 வெளிநாடுகளை கூப்பிட்ட வேண்டும் என அறிக்கை விட்ட அடி முட்டாள்கள். எங்கள் மக்களை ஏமாற்றாதீர்கள் செய்தது போதும். எந்த நாடும், இதை செய் என்று சொல்லமுடியாது என்பது சட்டத்தரணிகளான உங்களுக்கு தெரியாதா? ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள். இந்தியாவில் இருந்து கப்பலில் பொருட்கள் வந்ததும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று அங்கு அருகில் நிற்கின்றனர். என்னவென்றால் நாங்கள் சொல்லிதான் இந்தியா பொருட்களுடன் வந்தது என சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட தமிழ் தலைமைகள் தமது வரலாற்றை பின்னோக்கி பார்க்கவேண்டும். அப்போது தான் தாங்கள் சொந்த மக்களுக்கு எவ்வளவு தூரம் ஏமாற்றி துரோகம் செய்துள்ளது என தெரியும். இல்லை என்று ஒருவர் சொல்லட்டும் நான் பகிரங்கமாக மேடைக்குவர தயார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/தைரியம்-இல்லாத-தமிழ்-தலைமைகள்/175-309215
-
காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..! (மௌன உடைவுகள் -13) December 18, 2022 —- அழகு குணசீலன் —- முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் பேசுவதற்கு திகதி குறிக்கக் கோரியும் அவர்அதனைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று புலம்பிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இந்தியா முதல் அமெரிக்கா வரை சென்று முறையிட்டார்கள். இறுதியில் இலங்கை இனப்பிரச்சினையை இலங்கை அரசியலே தீர்க்கவேண்டும். என்ற “அட்டமெல்லாம் ஓடினாலும் இட்டது இட்டது தான்” என்றாகிவிட்டது. மறுபக்கத்தில் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வதற்கான முன் நிபந்தனைகளை விதிப்பதற்கான பலம் தமிழ்தரப்பிடம் அறவே இல்லை. இதனால் பெரும்பாலான தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் பேச்சுக்களில் பங்கேற்கின்றன. சிங்கள தேசியக்கட்சிகளின் நிலையும் இதுதான். பலவீனமான இரு அரசியல் தரப்புக்களுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தை இது. ரணில் பொதுஜன பெரமுனவிலும், தமிழ்த்தரப்பு எதிர்கட்சிளிலும் தங்கியிருக்கிறார்கள். எல்லாத் தரப்புக்கும் அடுத்த தேர்தலில் மக்களிடம் வாக்கு “உண்டியல்” குலுக்க இது அவசியம் என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள உண்மை. இவர்கள்தான் உண்டியல் குலுக்குகிறார்கள் என்றால் காசி.ஆனந்தனும் தன்பாட்டுக்கு கதை சொல்லத் தொடங்கிவிட்டார். எல்லோரும் ஒரே உண்டியலைக் குலுக்கமுடியுமா…?என்ன…? கட்சிப் பெயர்கள் போன்று காங்கிரஸ், தமிழரசு, கூட்டமைப்பு, முன்னணி, கூட்டணி, பின்னணி, மையம் என்று ஏதாவது வித்தியாசம் தேவை. இல்லையா…? அப்படியே பேச்சுவார்த்தை மேசையில், ஊடகச் சந்திப்பில் வார்த்தையாடல்களால் ஒவ்வொரு தரப்பும் தம்மை வேறுபடுத்திக் காட்ட முண்டியடிக்கின்றனர். இந்த வார்த்தையாடல்களுக்குப் பெயர் “முன்நிபந்தனையாம்” என்கிறார்கள், “பொறிமுறை” என்கிறார்கள் மக்களுக்கோ கிறுகிறுப்பும், தலைச்சுற்றுமாக உள்ளது. “ஒற்றையாட்சியைக் கைவிட்டு சமஷ்டி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளிக்காமல் பேச்சுவார்த்தைக்கு செல்லப்போவதில்லை….” இது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியின் கூற்று. இத்தனைக்கும் அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தத்தின் கீழ் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு விசுவாசமாக எம்.பி.யாக பதவி ஏற்றவர்கள் இந்த தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள். “ஒற்றையாட்சியின் கீழான எந்தத் தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு..” என்று கூறுகிறார் விக்கினேஸ்வரன். “இரண்டு இலட்சம் சிங்களப்படைகளை தமிழீழத்தில் இருந்து வெளியேற்றக் கோராமலும், மரபுவழித் தமிழர் தாயகத்தை அங்கீகரிக்கக் கோராமலும், சமஷ்டி கோருகிறீர்களே யாருக்குத் தேவை இந்த “வெங்காயச் சமஷ்டி” என்று கேட்கிறார் கவிஞர் காசி.ஆனந்தன். ஆக, காசி.ஆனந்தன் கோரும் கடுமையான முன்நிபந்தனைகள் இராணுவ, அரசியல் இலக்கான தமிழீழக் கோரிக்கைதான் . மேலும் “பண்டா -செல்வா முதல், ஜே.ஆர் -அமிர்தலிங்கம் வரையான பேச்சுவார்த்தைகளைக் குறிப்பிட்டு ரணிலோடு சம்பந்தன் பேசி தீர்வுவரும் என்பது முட்டாள்தனம்” என்றும் “உயிர் இழந்த தாயகத்திற்கு சமஷ்டி கேட்பது செத்த சடலத்திற்கு பூமாலை வாங்கும் உதவாத வேலை” என்றும் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை கடுமையான வார்த்தைகளால் சாடுகிறார் காசி. காசி.ஆனந்தனின் வார்த்தைப் பிரயோகங்கள் உணர்ச்சிக் கவிஞரின் மொழிநடை வழக்கத்திற்கு மாறானவை இல்லைத்தான். ஆனால் இது பேச்சு வார்த்தை தொடர்பான இராஜதந்திர அணுகுமுறை அறிக்கையாக இருக்கவேண்டும் இல்லையா? அங்குதான் உதைக்கிறது. “வெங்காயச் சமஷ்டி”, “சவத்திற்கு பூமாலை”, “மண்ணாங்கட்டி” என்றெல்லாம் பேசும் அளவுக்கு ஈழத்தமிழர் நட்புறவு மையத்திற்கு உள்ள ஆயுத, அரசியல் பலம் என்ன..? பலம் அறிந்து ஜதார்த்த பூகோள அரசியலைச் புரிந்த கதையா? இது. அல்லது வெறும் உணர்ச்சிக் கவிதையா…? “மன்னிப்பு கிடைக்காத பாவத்தைச் செய்யாதீர்கள். மாவட்டசபை, அதிகாரசபை என்றோ, ஏதாவது ஒரு மண்ணாங்கட்டிக்கு நீங்கள் தலையசைப்பீர்கள் ஆனால் தமிழீழ மக்கள் உங்கள் முகத்தில் காறித்துப்புவார்கள்” என்ற இடத்தில் அவரின் சமஷ்டி ஒவ்வாமையின் உச்சம் தொடுகிறது. எது பாவம்..? எது மன்னிப்பு..? என்று புலிகளின் பாணியில் தானே நீதி வழங்குகிறார் காசி.ஆனந்தன். “புவியியல் அரசியல் சூழலில் இந்திய அரசின் தெற்கு எல்லைப் பாதுகாப்பும் பின்னிப்பிணைந்த நிலையில் காய்களை நகர்த்தி வருகிறோம் ” . “காத்திருங்கள் தமிழீழம் கனவல்ல காலத்தின் கட்டாயம்” என்று அவரே செத்த சவத்திற்கு பூமாலை போடுகிறார். இதன் மூலம் இந்தியா தமிழீழத்தை சீனாவுக்கு எதிராகப் பெற்றுத்தரும் என்ற படம் காட்டப்படுகிறது. திம்பு பேச்சுக்கள் முதல் ராஜுவ்காந்தி கொலை வரையும், மற்றும் முள்ளிவாய்க்காலுக்கும் இந்திவைத் திட்டிய இவருக்கு இப்போது பூகோள அரசியல் முக்கியத்துவம் புரிந்திருக்கிறது. ஆனால் அது தமிழீழத்தை தரும் என்பதுதான் தேசிய விடுதலை குறித்த தவறான புரிதல். ஒருபுறம் பேச்சுக்களில் பங்குகொண்டும், பேச்சாளராக பவனிவந்தும், மறுபக்கத்தில் “இந்தப் பேச்சுக்களில் நம்பிக்கை இல்லை. ரணில் ஏமாற்றுவார். ஆனால் பங்கு கொள்கிறோம்” என்று தனது வழக்கமான பல்லவியை பாடுகிறார் சுமந்திரன். மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் ஜனாதிபதியா? ஏற்கமுடியாது! அவர் பதவிவிலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாடகமாடிய சாணக்கியன் ஜனாதிபதியோடு பேசாமல் வேறு யாரோடு பேசுவது என்று தலைகீழாக நிற்கிறார். ஏட்டிக்குப் போட்டியான தேர்தலை மையப்படுத்திய இந்த “உண்டியல் குலுக்கல்” இவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதனால்தான், இவற்றைக் கேட்கும்போது கிழக்காருக்கு “கிறுகிறுப்பும்” ,வடக்காருக்கு “தலைச்சுற்றும்” வருகிறது.. கவிஞர் காசி.ஆனந்தன் கடந்த காலங்களில் தான் தலைவராகவுள்ள ஈழத்தமிழர் நட்புறவுமையத்தின் ஊடாக அறிக்கைகளை விட்டு தனது இருப்பை நினைவூட்டிவருகிறார். அந்த வரிசையில் வட்டுக்கோட்டை மாநாட்டு மீள் பிரகடனம், இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம், அண்மையில் புதுடெல்லியில் இடம்பெற்ற சந்திப்பு என்பனவற்றை அவதானிக்கும்போது அவரின் “இந்திய உறவை”, “போலிப்புலிகள்” கெடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறார் போலும். காசி. ஆனந்தன் உலகத்தமிழர் நன்கறிந்த உணர்ச்சிக் கவிஞர், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர், ஆரம்பத்தில் இருந்தே ஈழப்போராட்ட வரலாற்றில் தடம்பதித்தவர், சிறிலங்கா தமிழ் அரச ஊழியர்கள் சிங்களம் படிக்கவேண்டும் என்பதை தனது பதவியைத் துறந்து எதிர்த்தவர், பலமுறை சிறை சென்று மீண்ட செம்மல் என்பதெல்லாம் பழைய பெருங்கதைகள். இந்தத் தகுதிகளைக்கடந்து அவரது அறிக்கையில் ஜதார்த்த அரசியல், இராஜதந்திர உள்ளடக்கத்தை தேடினால் அதுவும் ஒரு “வெங்காயம்” தான். கஜேந்திரகுமாருக்கு எதிராக, விக்கினேஸ்வரன், இவர்கள் இருவருக்கும் எதிராக சம்பந்தன் அன்கோ, எல்லோருக்குமே எதிராக காசி.ஆனந்தன் இப்படி அனைவரும் கனவு அரசியல் செய்கின்றனர். வெறும் கடிதத்தலைப்பு ஈழத்தமிழர் நட்புறவு மையத்தை வைத்துக்கொண்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்று பாடுவது அவருக்கு பழக்கதோசமாகிவிட்டது. 2009 க்குப் பின்னரும் அவர் இதைப்பாடுவது அவரது அரசியல் வெறுமையை வெளிப்படுத்துகிறது. இதற்காக மக்கள் கொடுத்த விலை என்ன…? அதற்கு ஈடாக இதுவரை அவர்கள் பெற்ற அடைவுஎன்ன..? தமிழ்த்தேசிய தலைமைகளை நோக்கி “முன் நிபந்தனைகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏன் முகம்கொடுக்கவில்லை என்பதே என் முதல் கேள்வி” என்று கேட்கிறார் காசி.ஆனந்தன். எந்த ஒருபேச்சு வார்த்தைகளிலும் முன் நிபந்தனைகளை விதிப்பதற்கு ஒரு பலம் தேவை. பேரம்பேசும் சக்தி தேவை. 2009 க்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலில் அது இல்லை என்பதை காசி.ஆனந்தன் அறிவாரா? அல்லது தமிழர்கூட்டணி தமிழீழம் கேட்டதுபோல் வெறும் கையோடு “சும்மா” நிபந்தனைகளை முன்வைத்திருக்கலாம் என்று நினைக்கிறாரா? காசி.ஆனந்தன் கூறும் ஒரு முன்நிபந்தனை: “வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் என்று அரசியலமைப்பில் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோரியிருக்கவேண்டும் என்பதாகும். 13 வது திருத்தம் இதை ஏற்றுக்கொண்டதாகத்தான் அமைகிறது. ஆனால் அது அவர் கூறுவது போன்று தமிழர்களை மட்டும் குறித்து நிற்கவில்லை. குறித்து நிற்கவும் முடியாது. அதேபோன்று தேசிய இனங்களின் மரபுவழி வாழ்விடம் இணைக்கப்பட்ட -ஒன்றிணைந்த பிரதேச நிர்வாக அலகாக இருக்கவேண்டும் என்பதும் அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச நிர்வாக அதிகாரப்பகிர்வு அலகாக இருக்க முடியும். இப்படி ஒன்றிற்கும் அதிகமாக பிரிந்து இருப்பதால் அது மரபுவழி வாழ்விட அந்தஸ்த்தை இழப்பதும் இல்லை. இவை அனைத்தும் தமிழ்த்தரப்பு பேச்சுவார்த்தை உள்ளடக்கம் என்றால் மறுபக்கத்தில் சிங்களத்தரப்பின் பேச்சுவார்த்தை உள்ளடக்கத்தையும் நோக்கவேண்டியதாகிறது. சிங்களத்தரப்பானது உண்மையில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைக் காண்பதைவிரும்புகிறது. பேச்சுவார்த்தைக்கான ரணிலின் அழைப்பின் பின்னணியும் இதுதான். ஆனால் தமிழ்த்தேசிய அரசியல் தமிழீழம் வரை கேட்டு வாங்க பேச்சுவார்த்தையை நம்பியிருப்பதுபோல் தெரிகிறது. இந்த முரண்பாட்டு அணுகுமுறை இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய வரலாற்று நகர்வில் மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறி முறிந்து வீழ்ந்த கதையாகிவிடும். அப்போது மக்களின் நிலை மாடேறிமிதித்த கதையாகும். முக்கிய சிங்கள தேசியக்கட்சிகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டையே சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்துள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிகாரப்பகிர்வினூடாக அமையவேண்டும். அந்த அதிகாரப்பகிர்வு ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒற்றையாட்சியின் கீழ்இடம்பெறவேண்டும். தமிழ்த்தரப்பு ஒற்றையாட்சிக்கு வெளியே தீர்வைக்தேட சிங்களத்தரப்பு ஒற்றையாட்சிக்குள் தீர்வைத்தேடுகிறது. இந்த இருதரப்பு கொடுக்கல் வாங்கல்களுக்கான இடைவெளி மிக, மிக அதிகமானது. அந்த இடைவெளியைக் குறைப்பதும் அவ்வளவு இலகுவானதல்ல. கஜேந்திரகுமார் அணியை தேர்தலில் சமாளிக்க வேண்டுமானால் சம்பந்தன் அன் கோ கோரிக்கையில் இருந்து இறங்கிவருவது அரசியல் நட்டத்தை ஏற்படுத்தும். அதே போன்று சிங்களத்தரப்பு 13,13+ க்கு மேலதிகமாகப் போனால், ஒற்றையாட்சிக்கு அப்பால் பரிசீலனை செய்யத்தயாரானால் சிங்கள தேசியவாதிகளின் எதிர்ப்பை சந்திக்கவேண்டிவரும். இது அடுத்த தேர்தலில் அவர்களின் தலைவிதியை நிர்ணயிப்பதாக அமையும். காசி.ஆனந்தனின் இந்தியாவுக்கான மறைமுக அழைப்பு சிங்கள தேசியவாதிகளை தட்டி எழுப்புவதாக உள்ளது. தமிழ்த்தேசிய தரப்பு தமது கட்சிகளின் அடிப்படைக் கொள்கைகள் , நிலைப்பாடுகள் பற்றியே பேசுகிறது. ஆனால் இந்த நிலைப்பாடு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாகும். ஆனால் பேச்சுவார்த்தையின் வெற்றி, தோல்வியை சமகால அரசியல் இராஜதந்திர நகர்வுகளே தீர்மானிக்கும். இதுவரையான எந்த ஒரு பேச்சு வார்த்தைகளிலும் தமிழ்தரப்பு மக்கள் நலன்சார்ந்த இராஜதந்திர நகர்வுகளை முழுமையாக மேற்கொண்டதில்லை. இயக்க, கட்சி நலன் சார்ந்த அரசியலுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, கொடுக்கப்படுகிறது. கட்சிகள் மக்களைச் சுத்துகின்றன…! ஆக, பேச்சுவார்த்தையில் மிச்சம் “கிறுகிறுப்பும்”.! “தலைச்சுற்றும்”…!! தான். https://arangamnews.com/?p=8394
-
தாத்தா என்ன செய்வார்! அவர் பேராண்டியின் வார்த்தைகளில் அளவில்லா நம்பிக்கையோடு இருப்பவர்! ஆனால் கந்தையா அண்ணை எப்படி கோட்டைவிட்டார்?
-
யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் வெற்றியாளர்களே! என்ன நிலைகள் முன்னுக்குப் பின்னர் நிற்கும்😄 அடுத்த போட்டி நடாத்த வாய்ப்பிருந்தால் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும்! வெற்றியாளர் எடுத்த புள்ளிகளில் அரைவாசிக்கு மேலாவது எடுக்கவும் முயற்சிக்கலாம்😂