Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34948
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. இருக்கிற உற்சாகமும் வடிந்துபோய்விடும்😛 இதுக்குப் பதிலாக சிவபுராணம் பாடலாம்!
  2. தடம் புரண்டு போயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கான தருணத்தைத் தவறவிடக்கூடாது. December 13, 2022 -தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்- (செயலாளர், அகில இலங்கை தமிழர் மகா சபை/தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு) 1944 இற்கு முற்பட்ட காலத்து – சேர்.பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர்.பொன்னம்பலம் அருணாசலம் காலத்து – அரசியல் சீர்த்திருத்தக் கோரிக்கைகள்; 1944 இலிருந்து 1949 வரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் முன்னெடுக்கப்பெற்ற ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை உள்ளடங்களான அரசியல் முயற்சிகள்; 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் பின்பு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் 1972 வரை ‘சமஸ்டி’ கோரி முன்னெடுக்கப்பெற்ற அகிம்சைப் போராட்டங்கள் – இலங்கை அரசாங்கங்களுடனான ஒப்பந்தங்கள்; 1972 இல் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் அகில இலங்கைத் தமிழக் காங்கிரஸும் இணைந்து தமிழர் கூட்டணியாகி 1976 வரை முன்னெடுக்கப்பெற்ற அரசியல் செயற்பாடுகள் ; 1976 இல் தமிழர் கூட்டணி தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பெயர்மாற்றம் பெற்று வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பெற்ற தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானம்; 1976 இலிருந்து 2009 மே வரை தமிழ்த்தரப்பில் முன்னெடுக்கப்பெற்ற தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம்; 2009 மேயிலிருந்து இன்றுவரை 2001 இல் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராஜதந்திரப் போராட்டம் என்று தமிழ்த்தேசிய அரசியல் தரப்பின் அத்தனை முயற்சிகளும் – முன்னெடுப்புக்களும் – போராட்டங்களும் தோல்வியுற்று இறுதியில் பேரழிவைக்கண்டு தமிழ்த்தேசிய அரசியல் தடம்புரண்டுபோயுள்ளதொரு தருணத்தில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தமிழர்தரப்பை நோக்கி மீண்டுமொருமுறை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுத் தலைவர்களின் தமிழர்தரப்பை நோக்கிய பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கள் – ஒப்பந்தங்கள் – சர்வகட்சி மாநாடுகள் – அனைத்துக்கட்சி மாநாடுகள் – பாராளுமன்றத் தெரிவுக் குழுக்கள் – அரசியல் பொதிகள் – அரசியலமைப்புக் குழுக்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்குப் புதியனவல்ல. இந்த விடயங்களில் தமிழர்தரப்பு பலதடவைகள் ஏமாந்த -சூடுகண்ட பூனையாகும். இந்தப் பின்னணியிலேயே மீண்டுமொருமுறை இலங்கை அரசுத்தலைவரால் தமிழர்தரப்பை நோக்கிய பேச்சுவார்த்தைக்கான அழைப்பு 23.11.2022 அன்று பாராளுமன்றத்தில் வைத்துப் பகிரங்கமாக விடுக்கப்பட்டுள்ளது. தடம்புரண்டு போயுள்ள தமிழ்த்தேசிய அரசியல் இத்தருணத்தைப் பயன்படுத்தி மீண்டும் சரியானதொரு தடத்தில் தன்னைத் தகவமைத்துக் கொள்வது எவ்வாறு என்பது பற்றியே இவ் அரசியல் பத்தி தன் கவனத்தைக் குவிக்கிறது. கடந்தகாலங்களில் தமிழ்த்தேசிய அரசியல் அகிம்சைப் போராட்டத்தினாலும், ஆயதப்போராட்டத்தினாலும் பெற்றுக்கொண்ட யதார்த்தபூர்வமான ஓர் அரசியல் அடைவுதான் 1987 யூலை 29 இல் கைச்சாத்தான இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தமும் அதன் விளைவான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமும், அதன்கீழ் உருவான – தற்காலிகமாகவேனும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண ஒற்றை அதிகாரப்பகிர்வு அலகுமாகும் என்பதையும்; ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அறிவுபூர்வமற்ற அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து வந்த தமிழர்தம் அரசியல் தலைமைகளின் தவறான அரசியலுமே இந்த ஒப்பந்தத்தினால் விளையக்கூடிய நன்மைகள் தமிழ்மக்களைச் சென்றடைவதை இன்றுவரை தடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் தமிழர்களுடைய அரசியற்தரப்பு முதலில் நேர்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் ஒத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் விட்ட இடத்திலிருந்து – தடம்புரண்ட இடத்திலிருந்து – அடுத்தகட்டப் பயணத்தை ஆரம்பிக்கலாம். தடம்புரண்டுபோயுள்ள தமிழ்த்தேசிய அரசியல் பயணம் தன்னை மீள்தகவமைத்துக்கொண்டு தொடர்ந்து பயணிப்பதற்கான ஆரம்பப்படி பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் முழுமையான – முறையான – அரசியல் விருப்புடனான – அர்த்தமுள்ள வகையிலான அமுலாக்கலேயாகும். அதனைவிடுத்து, தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் அல்லது குறிசுட்டுக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் தற்போதைய தென்னிலங்கை- இந்துசமுத்திரப் பிராந்திய – பூகோள அரசியல் களநிலையில் ‘சமஸ்டி’யை முன்னிலைப்படுத்துவதும், அதிகாரப்பகிர்வு ஒற்றையாட்சியின் கீழா அல்லது ‘சமஸ்டி’க் கட்டமைப்பின்கீழா என்று தமக்குள் கயிறிழுத்து, மல்லுக்கட்டுவதும் தவிர்க்கப்படவேண்டும். தமிழர்களைப் பொறுத்தவரை அதிகாரப்பகிர்வும் அதன் பிரயோகமும்தான் முக்கியமானது, பாத்திரத்தின் வடிவத்தைவிடப் பாத்திரத்தின் உள்ளீடுதான் முக்கியமானது. இந்திய அரசியலமைப்பில் ‘சமஸ்டி’ என்ற வார்த்தைப் பிரயோகமில்லாமலே மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர்களது சமூக பொருளாதார அரசியல் அபிலாஷைகளும் எதிர்பார்ப்புக்களும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார, அரசியல் நலன்களை மீறலாகாது. இவ்விதமான எல்லைக் கட்டமைப்புக்குள் நின்றுதான் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சமூக, பொருளாதார, அரசியல் இருப்பைப் பேணி வளர்த்துக் காப்பாற்ற முடியும் என்பதையே இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் எமக்கு உணர்த்தும் உண்மையாகும். இந்த யதார்த்தத்தை ஓரம் தள்ளிவிட்டுப் புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை நாடுவதும் தேடுவதும் பலனளிக்கப்போவதில்லை. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்தும் கோரிக்கையை ஒற்றுமையாக நின்று வலியுறுத்துவதைத் தள்ளிவைத்துவிட்டுப் புதிய அரசியலமைப்பொன்றின் மூலம் இனப் பிரச்சனைக்கான தீர்வை நாடுவது அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாகவே முடியும். எனவே, உத்தேச பேச்சுவார்த்தை மேசையில், தமிழர்தரப்பில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் இணைந்ததோர் ஐக்கியப்பட்ட அணி பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் முழுமையான – முறையான – அரசியல் விருப்புடனான – அர்த்தமுள்ள விதத்திலான அமுலாக்கலை மட்டுமே ஒற்றைக் கோரிக்கையாக (Single Demand) முன்னெடுக்க வேண்டும். பல கோரிக்கைகளை முன்வைத்தால் தமிழர்தரப்புக் கோரிக்கை ஐதாகிவிடும் ஆபத்துண்டு. இழுத்தடித்து ஏமாற்றும் எண்ணம் கொண்ட இலங்கை அரசாங்கத்திற்கும் அது வாய்ப்பைக் கொடுத்ததாகிவிடும். மேலும், பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வெறுமனே மொட்டையாக முன்வைக்காமல் அதன் அமுலாக்கலுக்கான சில களவேலைகளைத் தமிழ்த்தரப்பு உத்தேச பேச்சுவார்த்தைக்கு முன்னரே பூர்த்தி செய்து தயாராகவிருக்க வேண்டும். இதற்கு முதலில் தேவை அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கிடையேயான ஓர் ‘ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறை (வியூகம்)யேயாகும். தற்போது தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் தமிழ்த்தேசியக் கட்சிகள் எனக் குறிசுட்டுக்கொண்டு (தமிழ் ஊடகங்களுக்கும் இக்குறி சுட்டுதலில் பங்குண்டு). குறுகிய வட்டத்திற்குள்ளே செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமே ஒன்றிணைவது அர்த்தமுள்ள அரசியல் ஐக்கியம் ஆகாது. இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட ஐக்கியத்தை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஆதரிக்கும் சிங்கள சமூகத்திற்கிடையேயுள்ள முற்போக்குச் சக்திகளும்கூட ஆதரிக்கப்போவதில்லை. இதுமட்டுமல்ல, இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட ஐக்கியத்தை இந்தியாவோ அல்லது சர்வதேச சமூகமோ அங்கீகரித்து அனுசரணை வழங்கவும் மாட்டாது. இந்தியா அங்கீகரிக்காத ஒன்றைச் சர்வதேச சமூகமும் அங்கீகரிப்பது அரிது. எனவே, பலனளிக்கக்கூடிய – வலுவான – தமிழ்மக்கள் ஏங்கிநிற்கும் – எதிர்பார்க்கும் – நம்பிக்கை கொள்ளக்கூடிய – இந்தியாவும் சர்வதேச சமூகமும் அங்கீகரித்து அனுசரணை வழங்கக்கூடிய தமிழ் மக்களின் அரசியல் ஐக்கியம் என்பது, பாராளுமன்றத்தில் வடக்குக்கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காது தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் செயற்படுகின்றதும், தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகாரம் பெற்றதுமான அனைத்துத் தமிழ்க் கட்சிகளும், தேர்தல் திணைக்களத்தினால் இதுவரை அங்கீகாரம் பெறாது, ஆனால் அதன் அனுமதியுடன் செயற்படுகின்ற பதிவு செய்யப்பெறாத அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் கட்சி மற்றும் தேர்தல் அரசியல் நலன்களைக் கடந்து – தனிநபர் மற்றும் கட்சி, அரசியல் முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் மறந்து – அரசியல் தத்துவார்த்த/ கோட்பாட்டு முரண்பாடுகளுக்கும் அப்பால் ஒட்டுமொத்தத் தமிழர்களினதும் நலன் கருதி ஓர் ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையை (வியூகத்தை) தமிழ்த் தரப்பில் ஏற்படுத்துவதேயாகும். இத்தகைய ஐக்கியத்திற்கான பிள்ளையார்சுழியை இடுவது அதாவது பூனைக்கு மணிகட்டுவது யார்? அதற்கான பொறுப்பும் பொருத்தப்பாடும் தகுதியும் மூத்த அரசியல்வாதியும், வடக்குக் கிழக்குத் தமிழர்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்தலில் பெரும்பான்மையாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியென்ற வகையில் அதன் சரி- பிழை; பலம்-பலவீனங்களுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சி ஆதிக்கம் செலுத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே உண்டு. கடந்தகாலங்களில் இரா.சம்பந்தன் தன் பொறுப்புணர்ந்து நடக்கவுமில்லை. தன் தகுதியுணர்ந்து செயற்படவுமில்லை. அவற்றை மறப்போம். பழைய விடயங்களைக் கிண்டாதிருப்போம். ஆனால், இரா.சம்பந்தன் அவர்கள் தனது சார்பில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் பொறுப்பைச் சுமந்திரனிடமோ அல்லது தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ ஒப்படைக்காது, தனது மூப்பையும் அதனால் ஏற்பட்டுள்ள உடற் தளர்வையும் பொருட்படுத்தாது தானே நேரில் களமிறங்க வேண்டும். ஏனெனில், சுமந்திரன் தமிழ்த்தேசிய அரசியலின் நீள – அகல – ஆழம் தெரியாதவர். அவர் பகைமையை வளர்ப்பவரே தவிர, ஐக்கியத்தின்பால் அர்ப்பணிப்புடன் செயற்படுபவரல்லர். மாவை சேனாதிராசாவுக்கு நீண்டகால அரசியல் அனுபவமும் பாரம்பரியமும் உண்டெனினும், அதற்கான ஆளுமையும் அறிவும் ஆற்றலும் பற்றாக்குறையுடையவர். அனுபவம் வேறு; அறிவு வேறு. மூப்பு வேறு, முதிர்ச்சி வேறு. இதனால், இரா.சம்பந்தன் அவர்களே இவ்விவகாரங்களைக் கையாள வேண்டும். இந்த விடயத்தில் அவர் சாவைத் தழுவினாலும்கூட அது சங்கைக்குரியதே. கடந்தகாலத்து முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் பகைமைகளையும் களைந்துவிட்டுப் பார்த்தால், இன்று வடக்குக் கிழக்குத் தமிழர்களிடையே நீண்டகால அரசியல் அனுபவமும் ஆளுமையும் ஆற்றலும் அறிவும் படைத்த மூத்த அரசியல் தலைவர்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் – தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி – அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர் கலாநிதி. எந்திரி கா.விக்னேஸ்வரன் ஆகியோரையே அடையாளப்படுத்தலாம். இவர்கள் மூவருமே இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்துடன் சம்பந்தமுடையவர்களும் கூட. தமிழர் தரப்பில் ஓர் ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையை ஏற்படுத்தும் வியூகத்தின் முதற்கட்டமாக இந்த மூன்று மூத்த அரசியல் தலைவர்களும் முதலில் ஒன்றுகூடி தமக்குள்ளே மந்திராலோசனை கலக்கவேண்டும். இதற்கான முதல் அடியை எடுத்துவைக்கும் பொறுப்பும் பொருத்தப்பாடும் தகுதியும் அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இரா.சம்பந்தனுக்கே உண்டு. இரண்டாம் கட்டமாக இந்த மூவரும் ஒன்றிணைந்து அடுத்த தலைமுறைத் தலைவர்களாகவும் அரசியல் அனுபவமிக்கவர்களாகவும் கட்சித் தலைவவர்களாகவும் உள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்) – சித்தார்த்தன் (புளொட்) – செல்வம்அடைக்கலநாதன் (ரெலோ) – ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் (முன்னாள் ரெலொ / இந்நாள் தமிழ்த்தேசியக் கட்சி) – வரதராஜப்பெருமாள் (முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். / இந்நாள் தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி) – மாவை சேனாதிராசா (தமிழரசுக்கட்சி) – சி.வி.விக்னேஸ்வரன் (தமிழ்மக்கள் கூட்டணி / தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி / – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் / தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) – மு.சந்திரகுமார் (சமத்துவக்கட்சி) ஆகியோரை அழைத்துப்பேசி ஐக்கியம் குறித்த சாதகமான முடிவுக்கு வரவேண்டும். இம்முடிவுக்குக் கட்டுப்படாதவர்களை வெளியே விடவேண்டியதுதான். வேறு வழியில்லை. அவர்களை மக்கள் இனங்கண்டுகொள்வார்கள். இப்போது ஐக்கியத்தின் இரண்டாம் கட்ட அணி உருவாகிவிடும். இதுதான் ஐக்கியத்தின் ஆரம்பத் திரட்சியாகும். மூன்றாம் கட்டமாக, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக விளங்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா (ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி) மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான் – தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி) ஆகியோரை அழைத்து இரண்டாம்கட்ட அணி பேசி ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஏற்கெனவே இருவரும் ஐக்கியத்திற்கான- பேச்சுவார்த்தைக்கான பச்சைக்கொடி காட்டியுள்ளனர். நான்காம் கட்டமாக தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அடையாளம் காணப்பட்ட – தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளுடைய தலைவர்களோடு கலந்துரையாடி அவர்களையும் அணைத்துக்கொண்டு தமிழர் தரப்பின் ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறைக்கு இறுதி வடிவம் கொடுக்க வேண்டும். இதற்குத் தேவையானவை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களின் தன்னலமறுப்பும் – விட்டுக்கொடுப்பும் – சகிப்புத்தன்மையும் – அர்ப்பணிப்பும் – விசாலமான மனப்பக்குவமும் – ஒட்டுமொத்தத் தமிழர்களினதும் ஐக்கியத்தின் மீதான ஈடுபாடுமே தவிர வேறில்லை. மேலும், ஒரு சாதகமான விடயத்தை இப்பத்தி வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றது. அது என்னவெனில், கடந்தவருடம் 09.04.2021 அன்று தமிழர் விடுதலைக்கூட்டணி – அகில இலங்கைத் தமிழர் மகாசபை – தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துக்கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் கொழும்பில் ஒன்றுகூடி, அதிகாரப்பகிர்வுக்கான இயக்கம் ( MOVEMENT FOR THE DEVOLUTION OF POWER) எனும் அமைப்பை உருவாக்கி அதன் விளைவாக அரசியலமைப்பின் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான வழிகாட்டி| ( A guide for full implementation of the 13th amendment to the constitution) எனும் தலைப்பிலான ஆங்கிலமொழிமூல ஆவணமொன்றைத் தயாரித்து இவ்வருடம் மார்ச் மாத நடுப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி/பிரதமரிடமும் பின்னர் முன்னாள் பிரதமர் (இந்நாள் ஜனாதிபதி) ரணில் விக்கிரமசிங்க உட்படப் பல சிங்கள தமிழ் அரசியல் பிரமுகர்களிடமும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடமும் கையளித்துள்ளது. உத்தேச பேச்சுவார்த்தையின் ஆரம்பக் கட்டத்திலேயே தமிழர்தரப்பு இந்த ஆவணத்தைப் பேச்சுவார்த்தை மேசையில் சமர்ப்பித்து இவ் ஆவணத்திலுள்ள விடயங்களைத் தாமதமின்றி உடனடியாக அமுல்படுத்தும்படியானதொரு ஒற்றைக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுக்கமுடியும். இத்தகையதொரு அரசியல் செயற்பாடு நிச்சயம் அரசாங்கத்திற்கு ஓர் இராஜதந்திர அழுத்தத்தைக் கொடுக்கும். இந்தியாவும் இக்கோரிக்கையை அனுசரித்து அனுசரணை வழங்கும். சர்வதேச சமூகமும் ஒத்தாசைதரும். மேலும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழர்களின் மரபுவழித் தாயகம் என்பது இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதனால், ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ்விடயத்தைப் பேச்சுவார்த்தை மேசையில் விவகாரமாக்கத் தேவையில்லை. இதுமட்டுமல்ல தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே தற்போது பேசுபொருளாக இருக்கின்ற ‘சமஸ்டி’யை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு இப்பேச்சுவார்த்தையினூடாக எட்டப்படப்போவதில்லை. எனவே, தமிழர் தரப்பு இப்பேச்சுவார்த்தை மேசையில் ‘சமஸ்டி’ க் கோரிக்கையை முன்னிலைப்படுத்துவதைத் தந்திரோபாயத்தோடு தவிர்த்துக் கொள்ளலே அரசியல்ரீதியாக அறிவுபூர்வமானது. பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டுக் கோவணத்தை இழக்கக்கூடாது. கனவுகளையும் கற்பனாவாதங்களையும் விட நடைமுறைச் சாத்தியமான விடயங்களே நன்மைகளைக் கொண்டுவரும். இத்தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர்தரப்பைப் பேச்சுக்கு அழைப்பது பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் / சமூகம் திருந்திவிட்டது அல்லது மனமாற்றமடைந்துவிட்டது என்பதற்கான அறிகுறியல்ல. இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற, மாகாணசபைகள், உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் தேவைகளுக்காகவுமே இந்த அழைப்பு என்பது சாதாரண அரசியல் மாணவனும் புரிந்துகொள்ளக்கூடிய இலகு எண்கணிதமாகும். நாம் விரும்பியோ விரும்பாமலோ சரியோ பிழையோ எதிர்காலத்தில் இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதார, அரசியல் விவகாரங்களைத் தீர்மானிக்கும் காரணியாக இந்துசமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியல்தான் இருக்கப்போகிறது, பூகோளரீதியாக இந்தியாதான் இந்துசமுத்திரப் புவிசார் அரசியலில் தீர்மானிக்கும் காரணியாக விளங்கப்போவதைத் தவிர்க்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது. இதனை நன்கு புரிந்துகொண்டுதான் ஜனாதிபதி 13 ஐப் பாதுகாப்பேன் என்பதும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச 13+க்கு ஆதரவு என்பதும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ 13 இன் கீழான அதிகாரப் பகிர்வுக்கு முழுமையான ஒத்துழைப்பு என்பதும். இக்கூற்றுக்களெல்லாம் 13 இன் மீது கொண்ட அளப்பரிய காதலால் அல்ல தத்தம் அரசியல் தேவைகளுக்காகத் தமிழர்களைத் தாக்காட்டுவதையும் இந்தியாவைத் தாஜா பண்ணுவதையுமே அரசியல் நோக்கமாகக் கொண்டவை. ஆனாலும் 13 க்கு ஆதரவான இக்கூற்றுக்களையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் தமிழர் தரப்பு தந்திரோபாயமாகத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். இந்துசமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் இந்தியாவின் வகிபாகத்தை பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களும் மேற்குலக நாடுகளும் புரிந்து கொண்ட அளவுக்குத் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பு புரிந்துகொள்ளாமல் விட்டதும் /இருப்பதும் துரதிர்ஷ்டமே. இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் அமுலாக்கலைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன்பின் தமிழர்களுடைய அரசியல் தலைமைகளும் கடந்த காலங்களில் விட்ட தவறை இனிமேலும் இழைக்கக்கூடாது. மொத்தத்தில் தமிழர் தரப்பை நோக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தந்திரோபாயம்மிக்கது, அரசியல் என்பது தர்மநியாயங்களுக்கும் அறவிழுமியங்களுக்கும் அப்பால் தந்திரோபாயமான அணுகுமுறைகள் நிறைந்ததுதான். கடந்தகாலங்களில் தமிழர்தரப்பு (தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட) ‘ வளர்த்தால் குடும்பி வழித்தால் மொட்டை’ – ‘அறக்குழைப்பேன் அல்லது அரிசியாக்குவேன்’ – ‘அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி’ எனும்படியான அறிவுபூர்வமற்ற அரசியல் நிலைப்பாடுகளை எடுத்துச் சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விட்டு அதனால் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியது போலல்லாமல் இந்தத் தருணத்தையாவது தந்திரோபாயமாகக் கையாளவேண்டும். ‘சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்வதும் தர்மமே’ இதற்கு முதலில் தேவையானது தமிழர் தரப்பில் ‘ஐக்கியப்பட்டதோர் அரசியல் பொறிமுறையே’. இந்த விடயத்தில் எறிகிற பொல்லு இப்போது இரா.சம்பந்தன் அவர்களிடமே இருக்கிறது. தமிழர்களிடையே அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக எவ்வாறு 1972 இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தனது அரசியல் எதிரியான ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் வீடுதேடிச் சென்றாரோ அதே மனமாற்றத்துடனும் மனப்பக்குவத்துடனும் ஈடுபாட்டுடனும் இரா.சம்பந்தன் அவர்கள் தனது அரசியல் பயணத்தினதும் வாழ்நாள் பயணத்தினதும் இறுதிக்கட்டத்திலாவது செயற்பட வேண்டும். இல்லையேல் எதிர்காலம் அவரைச் சபிக்கும். https://arangamnews.com/?p=8390
  3. உலகின் முதல் பெண் பிரதமர்! நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட தகவலால் எழுந்துள்ள சர்ச்சை உலகின் முதல் பெண் பிரதமர் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறித்த நிகழ்ச்சியின்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பெண்களின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன் உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று குறிப்பிட்டுள்ளார். உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையை சேர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்க முதலாவது பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கமைய , உலகின் முதல் பெண் பிரதமர்’ எனும் பெருமை இலங்கைக்குரியதாகும். தவறான தகவலால் எழுந்துள்ள சர்ச்சை இந்நிலையில்,அரசியல்வாதியாகவும்,பலரும் இரசிக்க கூடிய நடிகராகவும் உள்ள கமல்ஹாசன் இவ்வாறு தவறான தகவலை வெளியிட்டுள்ளமை பலர் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, இந்தியாவின் முதலாவது பெண் பிரதமரான இந்திரா காந்தியை நினைத்து, ‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ என்று, கமலஹாசன் கூறியிருக்கக் கூடும் என்றும் சிலர் மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். கமல்ஹாசன் தெரிவித்த இந்த தகவல் தவறானது என்பதால் பலரும் தமது தனிப்பட்ட கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றனர். இருப்பினும், இது தொடர்பில் கமல்ஹாசன் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதுடன்,அடுத்த வார நிகழ்ச்சியில் இதற்கு பதிலளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்கவின் மனைவியான சிறிமாவோ பண்டார நாயக்க கணவரின் மரணத்தை அடுத்து பிரமதராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், ‘உலகின் முதலாவது பெண் பிரதமர்’ எனும் பெருமை அவருக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=232596
  4. அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல்; 6 பேர் பலி By Digital Desk 2 13 Dec, 2022 | 09:53 AM அவுஸ்திரேலியாவில் காணாமல் போன நபரை தேடி சென்ற பொலிஸாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல்போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை (டிச.12) மாலை 5 மணியளவில் பொலிஸார் சென்றுள்னர். அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் பொலிஸார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த தாக்குதலையடுத்து, பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதுடன் கூடுதல் பொலிஸாரை அனுப்பும்படி தகவல் கொடுத்துள்ளனர். பண்ணை வீட்டில் இருந்த பெண் உட்பட 3 பேர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் அதிகாரிகள் ரஷெல் மெக்கிரவ்ன் மற்றும் மேத்திவ் அர்னால்டு ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சத்தம் கேட்டு அருகில் வசித்து வந்த நபர் அந்த பண்ணை வீட்டிற்கு ஓடி சென்றுள்ளார். அப்போது, அந்த நபர் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பு இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 6 மணி நேரம் நடந்த இந்த மோதலில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், இந்த மோதலில் 2 பொலிஸார், ஒரு பொதுமக்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சில பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/142942
  5. பிக்கு மாணவர்களின் ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை : ஹோமாகம பௌத்த பல்கலையில் சம்பவம்! By Vishnu 13 Dec, 2022 | 11:25 AM ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் சித்திரவதைக்குள்ளான மூன்று மாணவ பிக்குகள் ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அபய என்ற சித்திரவதை அறையில் வைத்து கொடூரமான தாக்குதல் நடத்தி ஆடைகளை களைந்து பாலியல் வன்கொடுமை செய்தமை மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் குறித்தும் முறைப்பாடு செய்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். இலங்கையில் இரண்டு இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், அவர்களில் இந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் உள்ளதாகவும் அவர்கள் பொலிஸாரிடம் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் https://www.virakesari.lk/article/142966
  6. அடுத்த வருடம் போட்டி நடாத்தவேண்டுமென்றால் சியர்ஸ் கேர்ள்ஸ் கட்டாயம் ஒழுங்குசெய்து தரவேண்டும்🤪 அது நானில்லை! கடைசிக் கேள்விகளுக்கு மூளையைக் கசக்காமல் மூக்குச்சாத்திரம் பார்க்கும் பதில்கள்தான் இறக்கிவிடும்!😁
  7. நான்கு நாடுகளை அவசரமாக அழைக்கிறார் செல்வம் எம் .பி க. அகரன் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடருமானால் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற செல்வம் அடைக்கலநாதன், இல்லாவிட்டால் எம்மை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார். வவுனியாவல் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “5 தமிழ் கட்சிகள் சம்பந்தர் தலைமையில் கூடி சில தீர்மானங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தோம். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம். நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு ஏற்கெனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீள ஒப்படைக்கப்படவேண்டும் எனவும் அதிகார பகிர்வு சம்பந்தமாக அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாணசபை தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒழுங்கு முறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதையும் நாம் வரவேற்கின்றோம் என்ற கோரிக்கைகள் அடங்கிய செய்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தோம். இந்த அடிப்படையிலேயே நாம் பேசலாம் என்று இருக்கும் அதேவேளை, இந்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும் எனவும் கூறியிருக்கின்றோம். அதைவிட சட்டத்தில் உள்ள மாகாணசபை முறைமை அதிகாரங்களோடு பகிரப்படும்போதுதான் எங்களுக்கு தற்போது உள்ள பிரச்சனைகளை நிறுத்த முடியும் என்ற அடிப்படையில் மாகாணசபை தேர்தலை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள சகல அதிகாரங்களோடும் நடத்தவேண்டும். அதிகாரங்கள் பகிரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதும் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க உள்ளோம். இனப்பிரச்சனை தொடர்பாக மஹிந்த காலத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது. நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரப்பட்டாலும் ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமருக்கும் பிரச்சனை வந்ததால் தட்டிக்கழிக்கும் முனைப்பு இருந்தது. தற்போதும் இந்த பேச்சுவார்த்தை ஐ.நா சபையின் தீர்மானம், உலக நாடுகளின் அழுத்தம் அல்லது பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இதனை காரணம் காட்ட இந்த பேச்சு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இருந்தாலும் பேச்சுக்கு சென்று எமது நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம். இல்லாவிட்டால், அவர்கள் பேச்சுக்கு வராததால் எம்மால் எதனையும் செய்ய முடியவில்லை என நல்ல பெயரை எடுக்கும் சந்தர்ப்பமும் அரசாங்கத்துக்கு உள்ளது. இதுவரை காலம் அரசாங்கங்களோடு இனப்பிரச்சனை விடயத்தை பேசி வந்து நாம் ஏமாற்றப்பட்டவர்கள். இந்த பேச்சுவார்த்தை தொடருமாக இருந்தால் இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை இருக்க வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும். இல்லாவிட்டால் எம்மை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும். அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த விட முடியாது” எனவும் அவர் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நான்கு-நாடுகளை-அவசரமாக-அழைக்கிறார்-செல்வம்-எம்-பி/150-308876
  8. நாளை முதல் அரை இறுதிப் போட்டிகள் ஆரம்பாகின்றன. நாளை செவ்வாய் (13 டிசம்பர்) முதலாவது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 77) போட்டி 61: அரை இறுதிப் போட்டி: செவ்வாய் டிச 13 7pm: ஆர்ஜென்டினா எதிர் குரோசியா (Lusail Iconic Stadium, Lusail) - 4 புள்ளிகள் ARG எதிர் CRO 06 பேர் ஆர்ஜென்டினா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள குரோசியா வெல்லும் எனக் கணிக்கவில்லை. ஆட்டத்தில் இல்லாத வேறு நாடுகளைக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ARG சுவி GER வாத்தியார் BRA பிரபா BRA முதல்வன் BRA கந்தையா BRA ஏராளன் BRA சுவைப்பிரியன் ARG நுணாவிலான் BRA கல்யாணி ARG கிருபன் BRA தமிழ் சிறி GER புலவர் GER அகஸ்தியன் BRA வாதவூரான் ESP நிலாமதி ARG பையன்26 BRA எப்போதும் தமிழன் ARG குமாரசாமி BRA கறுப்பி BRA நீர்வேலியான் ARG நாளைய முதலாவது போட்டியில் ஆர்ஜென்டினாவின் தயவால் யாழ்களப் போட்டியாளார்கள் அறுவருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா? நிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுமா?
  9. SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல் ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது. கையிருப்பு குறைந்துவிட்டது. கஜானா முற்றாக காலியாகிவிட்டது. கையேந்தும் நிலையை விடவும் மாற்று வழிகளே இல்லை, இன்றேல் நாளுக்கு நாள் பணத்தை அச்சடிக்கவேண்டும். அந்தளவுக்கு பொருளாதாரம் ஆட்டங்கண்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாண நிதியத்தின் உதவிக்காக காத்திருக்கும் இலங்கை, நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. அதற்காக சட்டங்களில் திருத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றது. விலை அதிகரிப்புகளும் வரி அதிகரிப்புகளுக்கும் குறைவே இல்லை. மக்கள் தலைநிமிர்ந்து வாழமுடியாத அளவுக்கு விலையேற்றம் அதிகரித்துவிட்டது. இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் மின்சாரக்கட்டணமும் மீண்டும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏககாலத்தில் மின்வெட்டும் அமுல்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அகதிகமாகும். இலங்கை ரூபாயில் 5,000 தாளொன்றை வெளியில் எடுத்தால் என்ன? நடந்தது என்று யூகிக்கக்கூட முடியாதுள்ளது. அந்தளவுக்கு விலையேற்றம் தலைவிரித்தாடுகின்றது. ஏனைய நாடுகளின் தாள்களை கண்களில் காண்பதே அரிதாகும். இந்நிலையில்தான், 10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் பணமாக வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்திய ரூபாய் இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை இது வழங்கும் என்றும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இலங்கையர்கள் இந்திய ரூபாயை வேறொரு நாட்டின் நாணயமாக மாற்ற முடியும் என்றும் அதற்காக இலங்கையின் வர்த்தக வங்கிகள், இந்தியாவின் வங்கிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இலங்கையின் வங்கிகள், வெளிநாட்டு நாணயத்தை இந்திய வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளான இந்திய நாஸ்ட்ரோ கணக்குகளை திறக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உட்பட அனைத்து கணக்கு பரிவர்த்தனைகளும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வசிக்காதவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் வங்கிச் சேவைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்பட முடியும் எனவும் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏற்பாட்டிற்கு இந்தியா அனுமதி அளித்த போதிலும், இலங்கை மத்திய வங்கி இன்னும் இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த செயற்பாடானது ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயின் பெறுமதியை வலுவாக்கவும், ஐக்கிய அமெரிக்க டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய ரூபாய் இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதனை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதியழித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கை இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை வழங்கும் எனவும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைய நாட்டவர்களுக்கிடையிலான வங்கி பரிவர்த்தனைகள் ,சேவைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்பட முடியும் எனவும் இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ஏற்பாட்டிற்கு இந்தியா அனுமதி அளித்த போதும், இலங்கை மத்திய வங்கி இன்னும் இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய ரூபாயை இலங்கையின் நாணயமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தோன்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத் தலைவர்கள் தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தி நாட்டை இந்தியாவிடம் பணயக்கைதிகளாக இழுத்துச் செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்துடன் நாட்டின் தேசிய வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு விற்று இலங்கையை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றும் மனநிலையில் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இவ்வாறானதொரு குழு தொடர்ந்தும் நாட்டில் ஆட்சியமைப்பது ஆபத்தானது எனவும், உடனடியாக சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் விமல் வீரவன்ச வலியுறுத்தினார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டார். எரிபொருளை விநியோகிக்க வந்தாலும் அவர்களின் சொந்த செலவில் இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வர முடியாது எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதேசமயம் எதிர்காலத்தில் சுமார் பத்து மணித்தியால மின்வெட்டு ஏற்பட்டால் அரசாங்கத்தினால் தனியாக மின்சாரம் வழங்க முடியாது எனவும் அதனை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம் எனவும் விமல் வீரவன்ச கூறினார். அரசாங்கம் கடந்த 20 மாதங்களில் 125,747 கோடி ரூபாக்கு மேல் அச்சடித்துள்ளது வரையறையின்றி பணம் அச்சிடப்பட்டுள்ளமையால் பாரிய நிதி நெருக்கடிக்குள் இலங்கையை தள்ளியுள்ளது சர்வதேச நாணய நிதியம் போன்ற அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம் ஊடாக உதவிகளைப் பெறாமல், அரச சொத்துக்களை விற்பது, தமது நண்பர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை வழங்கி திறைசேறியை வெறுமையாக்குதல் போன்ற காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் பாதாளத்திலேயே விழும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய, 2020 ஜனவரி முதலாம் திகதி இலங்கை மத்திய வங்கியிடமிருற்த அரசாங்க திறைசேறியின் கணக்கு மற்றம் திறைசேறி பிணைமுறியின் மதிப்பு 74.74 பில்லியன் ரூபாயாகும். அது 2021 செப்டம்பர் மாதம் நேற்று (30) வரை 1,3332.21 பில்லியன்களாகியுள்ளன.20 மாதங்களுக்கு அச்சிடப்பட்டுள்ள நிதி 1,257.47 பில்லியனாகும். அஜித் நிவ்ராட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், இதுவரை 4,784 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் பணமானது மத்தள விமான நிலையத்தை அமைப்பதற்கு செலவான நிதிக்கு அண்மித்த தொகை என்றார். 2019ஆம் அண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், தனவந்த வர்த்தகர்களுக்கு வரி நிவாரணம் வழங்கப்பட்டதன் காரணமாக, அரசாங்கத்தின் வருமானம் பாரியளவு வீழ்ச்சியடைந்து தற்போதைய நெருக்கடி நிலை தோன்றியுள்ளது. தனவந்தர்களுக்கு வரி நிவாரணத்தை வழங்கியதால் ஏற்பட்ட வருமான இழப்பை அடைத்துக்கொள்ள நாட்டின் டொலர் இருப்பை கடன் செலுத்த பயன்படுத்தியுள்ளனர். டொலர் இருப்பு இழக்கப்பட்டதால் எரிபொருள் இறக்குமதிக்காக டொலர் செலுத்துவதை கட்டுப்படுத்தியுள்ளது. டொலர் இழப்புக்கு பரிகாரமாக உரம், மருந்து, உணவுப் பொருள்கள், இலத்திரணியல் உபகரணங்கள் உள்ளிட்டவைகளின் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கத்துக்கு நேர்ந்துள்ளது. அதன் பலனாக இன்று நாடு முழுவதும் வரிசைகளை காணக் கூடியதாகவுள்ளது என்றார். பொருளாதார நெருக்கடியால் நடந்த போராட்டங்கள் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியபின் பதவியேற்ற ரணில் தற்போதைய சிக்கல்களுக்கு என்ன தீர்வைத் தரப்போகிறார் என்று இலங்கை மட்டுமல்லாது உலகமே எதிர்நோக்கியுள்ள சூழலில் இவ்வாறு கூறியுள்ளார். ''விருப்பமில்லாமலேனும் இந்த நிலையில் பணத்தை அச்சிட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டியுள்ளது. அரச ஊழியர்களின் இந்த மாதத்திற்கான சம்பளத்தை செலுத்துவதற்காகவும், அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு செலவிட வேண்டியுள்ளமைக்காகவும் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது,'' என்று கூறியுள்ளார். அப்படியானால், ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பில் கூறியுள்ளத்தைப் போல அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டின் நாணயத்தை (கரன்சி) அச்சிடுவதன் மூலம் ஏன் தங்கள் பிரச்னைகளையும், மக்களின் பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்ளக் கூடாது? ''பணம் அச்சிடுகின்றமையினால், ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்," என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதே அந்த பதில். அதாவது அளவுக்கும் அதிகமாக ஒரு நாடு தனது பணத்தை அச்சிடுகிறது என்றால் அந்த பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும். வீழ்ச்சி என்றால் நாணய மதிப்பில் உண்டாகும் வழக்கமான சரிவல்ல. இந்த சரிவு ஏன் உண்டாகிறது என்று பாப்போம். ஒரு பொருளை வாங்க வேண்டும் அல்லது ஒரு சேவையைப் பெற வேண்டும் என்றால் அந்தப் பொருளையோ சேவையையோ பெறுபவர் அதற்கான பணத்தைக் கொடுக்க வேண்டும். அதுதான் அதன் 'விலை' என்று கூறப்படுகிறது. ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருளின் உள்ளடக்க விலை (தயாரிப்புச் செலவு), சந்தையில் அதற்கு இருக்கும் தட்டுப்பாடு, வேறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் அதே பொருளின் விலை, வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன், அரசு விதிக்கும் வரி, சந்தைப்படுத்தலுக்கு உள்ளாகும் செலவு உள்ளிட்ட பல காரணிகள் அந்த விலையை நிர்ணயிக்கின்றன. ஒரு வேளை பணம் அச்சடிக்கப்பட்டு எல்லோருக்கும் வழக்கப்படுகிறது என்றால், சந்தையில் இருக்கும் பொருட்கள் அல்லது சேவைகள் ஆகியவற்றைப் பெற எல்லோரிடத்திலும் பணம் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் கொடுக்கும் அளவுக்கு அந்தப் பொருள் இருக்காது. அதாவது சந்தையில் அதன் தட்டுப்பாடு அதிகரிக்கும். இப்போது அந்தக் குறிப்பிட்ட பொருளை வாங்க விரும்புவோரில் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். எல்லோரிடத்திலும் பணம் இருக்கிறது என்பதால் எல்லோருமே இப்போது அதிகமான பணத்தைக் கொடுக்க முன்வருவார்கள். ஒருவரைவிட ஒருவர் அதிகம் பண கொடுத்து வாங்க முயல்கிறார், அவரைவிட இன்னொருவர் அதிகம் பணம் தர முயல்கிறார், மற்றோருவர் இன்னும் கூடுதலாகப் பணம் கொடுக்க முயல்கிறார் என்றால் அப்பொருளின் விலை அதிகரித்துக்கொண்டே போகும். இறுதியாக யாரிடத்திலும் மேலதிக பணம் இல்லை எனும் சூழல் வரும்போது அப்பொருளின் விலை பன்மடங்கு அதிகரித்திருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் வழக்கமான பணப்புழக்கம் இருந்த நேரத்தில், ஒரு கிலோ அரசியை 50 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பணம் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்தபின் அதன் விலை 100 ரூபாயாகவோ, 500 ரூபாயாவோ, ஏன் 5,000 ரூபாயாகவோ கூட உயர்ந்திருக்கலாம். முன்னர் நீங்கள் ஒரு விலை கொடுத்து எவ்வளவு அரிசி வாங்கினீர்களோ, இப்போது அதே அளவு அரிசியை வாங்க கூடுதலாக விலை கொடுக்க வேண்டி உள்ளது. இதை வேறு சொற்களில் சொல்வதானால், பணத்துக்கு மதிப்பு குறைந்துவிட்டதால் கூடுதலான பணத்தை அதே ஒரு கிலோ அரிசிக்குச் செலவிடுகிறீர்கள். இந்த விலை உயர்வுதான் பொருளாதாரத்தில் 'பணவீக்கம்' என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, மத்திய வங்கியிடம் (இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல ) இருக்கும் அந்நியச் செலாவணி (foreign exchange), தங்கம், வெள்ளி போன்றவற்றின் கையிருப்பு (bullions), பற்று வரவு சமநிலை (ஒரு நாடு வெளிநாடுகளுக்கு செலுத்தவேண்டிய பணத்துக்கும் வெளிநாடுகள் அதற்கு செலுத்தவேண்டிய பணத்துக்கும் இடையிலான வேறுபாடு - இதை ஆங்கிலத்தில் 'Balance of Payments' என்கிறார்கள்) ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எவ்வளவு பணத்தை அச்சிடுவது என்பதை ஒவ்வொரு நாடும் முடிவு செய்யும். ஆனால், புதிய பணவியல் கோட்பாட்டில் மேற்கண்ட காரணிகள் பரிசீலிக்கப்படுவதில்லை. அரசு தாம் விரும்பும் அளவு பணத்தை அச்சிட்டுக்கொண்டாலும் பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்தக் கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த கோட்பாட்டை பெரும்பாலான பொருளியல் அறிஞர்கள் ஏற்பதில்லை. இந்திய ரூபாய் இலங்கையில் புழக்கத்தில் விடப்படுமாயின், இந்திய நிறுவனங்களுக்கு அது வாய்ப்பாக அமைந்துவிடும். எனினும், இலங்கையின் பொருட்களுக்கும், இலங்கையின் ரூபாய்க்கும் எவ்விதமான மதிப்பும் மரியாதையும் கிடைக்காது. ஆக மொத்தத்தில் இலங்கையின் காசு செல்லாக்காசாகி விடும் என்பது மட்டுமே உண்மையாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/SL-இல்-INR-ஐ-சர்வதேச-நாணயமாக-நியமித்தல்/91-308792
  10. பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? December 12, 2022 — கருணாகரன் — எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த் தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் இதைப் பற்றிக் கூடிப் பேசுவது, பேச்சுகள் குறித்துப் பொதுவெளியில் உரையாடுவது, பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று பச்சைக் கொடி காட்டியுள்ளன. ரெலோ இதில் இன்னும் முன்னுக்கு வந்து இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக – பேச்சுக்கு செல்லும்போது நாம் ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று ரெலோவின் பேச்சாளரான சுரேந்திரன் கேட்டுள்ளார். “ஐ.நா. விடயங்களில் மாத்திரமல்லாமல் அன்றாட விடயங்களிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அவசர அவசியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் அக்கறையோடும் செயலாற்றுவோம். அறிக்கைகளைத் தாண்டி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற செயல் வடிவம் கொடுப்பதே அர்த்தமுள்ளதாக அமையும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக பல வழிகளிலும் போராடி வரும் வரலாற்றைக் கொண்ட எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்” என்று சொல்லியுள்ளார். ஆனால், இந்தப் பேச்சுகள் எந்த அடிப்படையில் நடக்கும் என்பதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அனைத்துக் கட்சிகளுடனும் நடக்குமா? பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுடன் நடக்குமா? அரசுக்கும் தமிழ் தரப்புக்கும் இடையில்தான் நடக்குமா?தமிழ்த் தரப்பினரோடு முஸ்லிம்களும் இணைத்துக் கொள்ளப்படுவரா? மலையகக் கட்சிகளுக்கான இடம் இதில் உண்டா? சிறுபான்மைத் தேசிய இனங்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்ற அடிப்படையில் நடக்குமா? அல்லது பல்லினங்களைக் கொண்ட நாட்டுக்குரிய அடிப்படைகளைப் பேணி பன்மைத்துவ இலங்கை என்பதாக நடக்குமா? அல்லது இது பற்றிக் கேள்வி எழுப்பியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருப்பதைப்போல, “வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பானதா?” (இதில் அவர் வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை). “அல்லது புதியதோர் யாப்புத் தொடர்பானதா?” “அல்லது வடக்குக் கிழக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பானதா?” (அன்றாடப் பிரச்சினைகளுக்கான பேச்சுகள் என்றால், அது இன்று நாடு முழுவதற்குமானதாகவே உள்ளது. முக்கியமாக பொருளாதார நெருக்கடி. இதைக் கடந்து வடக்குக் கிழக்குப் பிரச்சினை பிரத்தியேகமானது என்றால் இராணுவ நெருக்கடி, நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் போன்றவையாகும். இதற்குப் பெருமெடுப்பிலான பேச்சுகளை அரசாங்கம் இப்பொழுது முன்னெடுக்கும் என்றில்லை) என எதுவும் தெரியவில்லை. ஆனால், பேச்சுகள் நடக்கவுள்ளன. எந்த அடிப்படையில் பேச்சுகள் நடக்கும் என்று முற்கூட்டியே அறிவித்தால் அதையொட்டி ஆயிரம் பிரச்சினைகளை ஒவ்வொரு தரப்பும் கிளப்பக் கூடும். போதாக்குறைக்கு ஊடகங்கள் கண்டபாட்டுக்கு எழுதி சூழலைக் கெடுத்து விடக் கூடும். மேலும் பௌத்த பீடங்கள் உறங்கு நிலையிலிருந்து விழித்துக் கொண்டு சந்நதமாடலாம். எல்லாவற்றையும் விட சமாதானத்தின் எதிரிகளும் இனவாதிகளும் துள்ளிக் குதித்துக் கொண்டு வீதியில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடும் என்று கருதி இதைப்பற்றி முற்கூட்டியே பகிரங்கமாகப் பேசாமல் விடலாம். ஆனாலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதைப் பகிரங்கமாகப் பேசிய ஜனாதிபதி, அதற்கு எல்லோரும் தயாரா என்பதையும் கேட்டிருந்தார். இது அவர் சமாதானத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தையும் விருப்பத்தையும் காட்டுகிறதா? அல்லது இந்த இனப்பிரச்சினையை இதற்கு மேலும் தாங்க முடியாதடா ராமா என்று எண்ணினாரோ தெரியவில்லை. எப்படியோ, இந்த அறிவிப்பு வந்து ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. இதுவரையில் எந்தப் பெரிய சலசலப்பையும் காணவில்லை. ஆகவே கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டிய விடயங்களை அரசாங்கம் பேசலாம். அல்லது பொறுத்திருந்து பேச்சு மேசையில்தான் பேசப் போவதாக இருந்தால், அதுதான் சரியென்று அரசாங்கம் கருதினால் நாமொன்றும் அதை மறுத்து முந்திரிக் கொட்டை போல அப்படி இப்படி ஒன்றும் சொல்லிக் கெடுக்கப்போவதில்லை. இருந்தாலும் இந்தப் பேச்சுகளைக் குறித்து (பேச்சுக்கான அறிவிப்பைக் குறித்து) சந்தேகத்தைக் கிளப்புவோர் பலவற்றையும் சொல்லிக் கொண்டேயிருப்பதையும் நாம் புறக்கணித்து விட முடியாது. ஏனென்றால் பலரும் கருதுவதைப்போல இந்தப் பேச்சுவார்த்தையும் காலத்தைக் கடத்தும் தந்திரோபாயமாக இருக்குமா? என்ற ஐயமும் ஒரு பக்கத்தில் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறை, அரசியற் தந்திரோபாயம், தற்போதைய சூழல் எல்லாம் அப்படிச் சிந்திக்க வைக்கிறது. ஏன் சிங்களத் தரப்பின் அரசியல் முதிர்ச்சியை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் தமிழ்த் தரப்பில் இன்னும் வளர்ச்சி இல்லை. ஒரு பழைய வாய்பாட்டை மட்டும் வைத்துக்கொண்டு, அதே பழைய பாணி அணுகுமுறையில் போய்ப் பேச்சுக் கதிரையில் குந்த வேண்டிய நிலைதான் உள்ளது. ஆனால், பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய வரலாற்றுச் சூழல் இது என்பதை பலரும் புரிந்துள்ளனர். இதில் ரணில் விக்கிரமசிங்கவும் அடங்குவார். வழமையான தந்திரோபாயங்களை இனிமேலும் தொடர முடியாது என்று உள்ளுணர்வு உணர்த்தலாம். அதற்காக பேச்சுவார்த்தையில் எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதோ பின்னிற்பதோ பொருத்தமானதில்லை. வரலாற்றுப் படிப்பினைகளை மனதில் கொள்வது வேறு. அதை எந்த அடிப்படையில் நோக்க வேண்டும் என்பது முக்கியமானது. இதன் அர்த்தம் கண்மூடித்தனமான நம்பிக்கையோடு பேச வேண்டும். விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அல்ல. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் அனைவரும். இது போர்ச் சூழலோ போர் முடிந்த போதிருந்த சூழலோ இல்லை. போர்ச் சூழலில் புலிகள் (தமிழர் தரப்பும்)) பலமாக இருந்தனர். ஏறக்குறைய சமனிலையில் இருந்தனர். அந்தச் சூழல் வேறு. அதனால் அப்போதைய பேச்சுகளின் தன்மையும் வேறாகவே இருந்தது. அடிப்படைப் பிரச்சினை, தீர்வின் இலக்கு பொதுவாக இருந்தாலும் சூழலின் தன்மை வேறாக இருந்தது. போரின் முடிவுக்குப் பின்னர் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, அரசு வெற்றிபெற்று மேலெழும்பியிருந்த சூழல். ஆகவே அந்த மனநிலையிலிருந்தே (வெற்றிபெற்ற மனநிலை) பல விடயங்களும் அணுகப்பட்டன, கையாளப்பட்டன. போர்ப் பாதிப்புத் தொடர்பாக எழவேண்டிய, எழுந்திருந்த குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ பெரிய அளவில் – அதிகார மட்டத்தில் ஏற்படவில்லை. அமைதி, சமாதானம், அன்பு, கருணை என்று போதனைகளைச் செய்யும் பௌத்தத் தரப்பும் இந்தப் பொறுப்பையும் கடப்பாட்டையும் உணர்ந்து செயற்படவில்லை. இதைப்போலவே மிஞ்சியுள்ள நிலைமை, யதார்த்தச் சூழல் போன்றவற்றைக் கவனத்திற் கொண்டு தமிழ்த் தரப்பும் செயலாற்றவில்லை. ஆனால், சிங்களத் தரப்பின் தவறும் தமிழ்த் தரப்பின் தவறுகளும் சமனிலையானவை அல்ல. தமிழ்ச் சூழலை யதார்த்தத்துக்கு வெளியே நிறுத்தியதில் புலம்பெயர் தரப்பில் ஒரு பகுதியினருக்கும் உண்டு. அவர்கள் வாழ்க –பிரச்சினையின் தாற்பரியத்துக்கு – யதார்த்தத்துக்கு வெளியே நின்று (கற்பனாவாத) அரசியலைச் சிந்திப்பதன் வெளிப்பாடு அது. எது எப்படியோ இன்னும் நாம் எதையும் சுழித்து விளையாடலாம் என்றில்லை. அது இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கலாம். பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம். ஊழல் முறைகேடுகளாக இருக்கலாம். இவை எதற்கும் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிக்கலாம் என்று கருதிச் செயற்பட்டால் அதன் விளைவு மிக மோசமானதாகவே இருக்கும். அப்படி இழுத்தடிப்புச் செய்து சுத்து மாத்துக் காட்டியதன் விளைவையே நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்று ஒவ்வொரு குடிமக்களுடைய தோளிலும் நெருக்கடிச் சுமை ஏறியுள்ளது. தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், மலையக மக்கள், பிற இனத்தவர் என்ற எந்தப் பேதமும் இல்லாமல் அனைவரும் சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய இந்தச் சுமையேற்றத்துக்கு தனியே சில அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மட்டும் காரணமில்லை. மக்களாகிய நாமும்தான் காரணம். நம்முடைய அசமந்தத்தனமும் கண்மூடித்தனமாக செயற்பாடுகளும் காரணம். நாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்ற அதீத நம்பிக்கையினால் அவர்கள் எடுத்த, எடுக்கின்ற தீர்மானங்கள் –முடிவுகள், அவர்களுடைய அணுகுமுறைகள் எதைப்பற்றியும் நாம் கேள்வி கேட்கவில்லை. இதனால் தவறுகள் வளர்ந்து பெருத்தன. அது வளர்ந்து இன்று நம்முடைய கழுத்தைப் பிடித்து இறுக்குகின்றன. இன்று நாடு உலக வங்கி, ஐ.நா. அனைத்துலக சமூகம் என அனைவரிடத்திலும் கையேந்தி நிற்கிறோம். வளமான ஒரு நாட்டை நம்முடைய கையில் வைத்துக் கொண்டு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறோம். ஒரு அழகிய, சிறிய நாட்டில், இரண்டு மொழியைப் பேசுகின்ற நான்கைந்து இனத்தைச் சேர்ந்த மக்களாகிய நாம் ஒற்றுமையாக நின்று செயலாற்ற முடியாமல் உள்ளோம். ஆளாளுக்குப் பழியைச் சுமத்திக் கொள்ளும் பழங்குடிச் சமூக மனநிலையில் உள்ளோம். காற்சட்டை அணிந்து அதி நவீன கணினியையும் கைத் தொலைபேசியையும் நம் கையில் வைத்திருப்பதால் மட்டும் நாம் நவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தமல்ல. நம்முடைய சிந்தனை முறையினால், நடைமுறைகளால், எண்ணங்களால், செயற்பாடுகளில், நாம் உண்டாக்குகின்ற விளைவுகளால், நம்முடைய அணுகுமுறைகளால், சவால்களை எதிர்கொள்ளும் முறையினால், பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் விதத்தினால், அவற்றைத் தீர்க்கும் வழிகளால், சிந்தனையினால் நாம் நவீனமானவர்களாக இருக்க வேண்டும். நவீனத்தின் முக்கியமான அடிப்படை பன்மைத்துவமும் ஜனநாயகமுமாகும். இதை மறுக்கும்தோறும் நாம் பழங்குடி மனநிலையுடையோராகவும் பழங்குடிச் சமூகத்தினராகவுமே இருப்போம். இன்றைய இலங்கை மக்களில் எண்பது வீதமானோர் அப்படித்தான் உள்ளனர். இதனால்தான் இனவாதக் கட்சிகள் வெற்றிவாக சூடுகின்றன. சாதியம் அப்படியே பேணப்படுகிறது. நீதிபதிகளே நீதி மன்றத்துக்கு வெளியே தங்கள் வீடுகளிலும் வாழ்விலும் சாதியத்தையும் இனவாதத்தையும் தாராளமாகப் பேணுகிறார்கள் என்றால்…இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? நீதிபதிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், கல்விப்புலத்தினர், ஆன்மிகத்துறையில் இயங்குவோர், மதகுருக்கள் எனப் பல தரப்பினரும் இனவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் மதவாதிகளாகவும்தானே உள்ளனர். இந்த மாதிரி வாத நோய்களைக் கொண்டிருப்போர் பழங்குடி மனநிலையின் பிரதிநிதிகளேயாவர். பழங்குடி மனநிலை என்பது எப்போதும் பிறரை எதிர்ப்பதிலும் பிறரைக் குறித்து சந்தேகப்படுவதுமாகவே இருக்கும். ஆனால், இதையெல்லாம் கடந்து விடுமாறு வரலாறு நம்மை நிர்ப்பந்திக்கிறது. ஏனென்றால் வரலாறு நிகழ்ந்து கொண்டிருப்பது நவீனத்துவத்தின் காலத்தில். உலகம் இயங்குவதும் நவீனத்துவத்தின் காலத்தில்தான். ஆகவே அது அதன் அடிப்படையிலேயே நிபந்தனைகளை விதிக்கும். அதற்கு மாறாக நாம் சிந்தித்தால், செயற்பட்டால் நம்மைத் தூக்கி எறிந்து விடும். அதனுடைய சுழற்சி அப்படியானது. இப்பொழுது கூட நாம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளத் தவறினால் தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும். இதை இலங்கையர்கள் ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம். இப்பொழுது நம்முன்னே உள்ள தெரிவுகள் இரண்டுதான். பிரச்சினையை வளர்க்கப்போகிறோமா? தீர்க்கப்போகிறோமா என்பதேயாகும். பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சினையை வளர்க்க வேண்டும் என்றே அரசியற் தரப்பினர் சிந்தித்தனர். செயற்பட்டனர். இந்த இடைவெளி நிகழ்ந்து கொண்டே இருந்தது. இனி இப்படி நிகழ முடியாது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மக்கள் விழிப்படைய வேண்டிய சூழல் – காலகட்டம் இது. இலங்கையர்களாக நாம் மகிழ்ந்திருக்கப் போகிறோமா? அல்லது முரண்பாடுகளை வளர்த்து, உள் நாட்டில் நீதியை மறுத்து, பிறருக்கு அடிமையாக இருக்கப்போகிறோமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேணும். சகோதரர்களுக்கு நீதியை மறுத்து விட்டு அந்நியருக்கு அடிமையாக இருப்பது எவ்வளவு முட்டாள்தனமாகும்? அதை விட முட்டாள் தனமானது சகோதர்கள் அடிபட்டுக் கொண்டிருப்பதாகும். இந்தப் பேச்சுவார்த்தையை ஆக்கபூர்வமானதாக முன்னெடுத்து அர்த்தபூர்வமானதாக்குவதற்கு முயற்சிப்போம். https://arangamnews.com/?p=8383
  11. தேர்தல்களில் கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட ஆராய்வு! தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (11) வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றது. அதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. தற்போது ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் அரசியல் அமைப்பு விடயங்கள் கட்சியின் உடைய நிலைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டது. அத்துடன் உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்கனவே தமிழ் தேசிய கட்சிகளோடு பேசி மூன்று விடயங்களை அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளோம். அரசாங்கத்திடம் தற்போது அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும், தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும், காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். இரண்டாவதாக தற்போது அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் உள்ள அதிகார பகிர்வு விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். மூன்றவதாக வடக்கு கிழக்கில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு முறையில் சமஸ்டி கட்டமைப்பில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற 3 விடயங்களையும் சமாந்தரமாக முன்கொண்டு செல்வதென தீர்மானித்து அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளோம். சில கால எல்லைகளுக்குள் இவை நடந்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு சொல்லவுள்ளோம். அவற்றை ஏனைய கட்சிகளுடனும் பகிர்ந்து ஒற்றுமையான நிலைப்பாட்டை இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்க தீர்மானித்துள்ளோம். தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக பாராளுமன்றத்தில் இருக்கும் கட்சிகளை ஜனாதிபதி பேச்சுக்கு அழைத்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக தற்போது இடம்பெறும் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம். இந்த எல்லை மீள் நிர்ணயம் சில இடங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அவற்றை உடனடியாக ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்துவதாகவும், அத்தோடு 60 இற்கு 40 என்ற வீதத்தில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாக உள்ள சட்டம் 70 இற்கு 30 ஆக மாற்றப்பட வேண்டும் என்பதனை பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்துவதாகவும் தீர்மானித்துள்ளோம். அடுத்த மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 17, 18 ஆம் திகதிகளில் இடம்பெறும். அங்கு எமது கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான திகதியை தீர்மானிப்போம். தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் இவ் விடயம் ஆராயப்பட்டுள்ளது. வட்டார ரீதியாக ஒரு வீதமும் அதற்கு மேலதிகமாக விகிதாசார முறையில் இன்னொரு வீதமும் சேர்த்துக்கொள்ளப்படுவது தொடர்பில் சென்ற முறை எமக்கு இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பார்த்து தனித்தனியாக போட்டியிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூடுதலான உறுப்பினர்களை சேர்க்குமா இல்லையா என்கின்ற தொழில்நுட்ப ஆராட்சியில் ஈடுபட்டுள்ளோம். அது தொடர்பில் நாம் சிந்திப்போம். ஜனாதிபதியுடனும் நீதி அமைச்சருடனும் நான் பேசிய போது அரசியல் கைதிகள் 32 பேர் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதில் ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலை செய்யப்படக்கூடியவர்கள் எவரும் இல்லை என்ற கருத்தும் கூறப்பட்டது. எனினும் ஜனாதிபதி அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியில் அவர்கள் குறித்த கொள்கையில் செயற்படுகின்றனர். அதாவது தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் குண்டு வைத்தவர்கள், அரசியல் படுகொலைகளில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை விடுவிப்பது இல்லை என முடிவு அவர்களிடம் காணப்பட்டது. எனினும் அவர்கள் நீண்டகாலம் சிறையில் இருந்திருக்கின்றனர் என்ற அடிப்படையில் அதனை மறுபரிசீலனை செய்வது என தெரிவித்துள்ளனர். திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பலவித சிக்கல்களை கையாள்வதற்கு ஒரு பொறிமுறை அவசியம் என்ற அடிப்படையில் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. நானும் மாவை சேனாதிராஜாவும் சம்பந்தரை சந்தித்து கலந்துரையாடினோம். அவர் அதனை வெவ்வேறு விதத்தில் கையாள்வதாக கூறியிருக்கின்றார். எனவே அவ் விடயங்கள் கையாளப்படும் என நம்புகின்றோம் எனத் தெரிவித்தார். http://www.samakalam.com/தேர்தல்களில்-கூட்டமைப்ப/
  12. ரணில் வகுக்கும் வியூகத்தில் விழாமலிருப்பது எப்படி? - நிலாந்தன் ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரசாலி என்பது தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்த ஒரு படிமம்.எனவே அவர் தந்திரசாலி என்று தெரிந்து கொண்டும் அவருடைய பொறியில் போய் விழுவது என்பது சுத்த முட்டாள்தனம். ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பும் தந்திரமாக யோசிக்க வேண்டும். ரணிலை எதிர் கொள்வதற்கு தமிழ் தரப்பு தயாராக வேண்டும். கஜேந்திரக்குமார் கூறுகிறார்,ரணில் கூட்டாட்சிக் கட்டமைப்பை உருவாக்கத் தயார் என்று அறிவித்தால் தாங்களும் பேசத்தயார் என்று. ரணில் அதைச் செய்ய மாட்டார். அதை செய்துவிட்டு அவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது. எனவே பேச்சுவார்த்தைகளை அவர் அங்கிருந்து தொடங்கப் போவதில்லை. அந்த நிபந்தனையை கைவிடாத வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாது. விக்னேஸ்வரன் கூறுகிறார் உயர்ந்தபட்ச கூட்டாட்சி அதாவது கொன்பெடரேஷன் என்று. ரணில் அதைத் தர மாட்டார். அதுதான் விக்னேஸ்வரனின் மாறாத நிலைப்பாடு என்றால்,அக்கட்சி ஒரு கட்டத்துக்கு மேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது. அடுத்தது கூட்டமைப்பு கூட்டமைப்பும் சமஷ்டி என்றுதான் கூறுகிறது. ஆனால் ஏற்கனவே 2015 இலிருந்து 2018 வரையிலும் லேபல் இல்லாத ஒரு சமஸ்டி ,அல்லது “ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி” என்று கூறிக்கொண்டு யாப்புருவாக்க முயற்சியில் ஈடுபட்டது. அதன் விளைவாக அடுத்து வந்த தேர்தலில் அக்கட்சி தமிழ்மக்கள் மத்தியில் தனக்கிருந்த ஏகபோகத்தை இழந்தது. தனது ஆசனங்களில் ஆறை இழந்தது. எனவே கூட்டமைப்பு அதே தவறை மறுபடியும் விடுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேசமயம்,சிங்களத் தரப்பு எதைத் தரும்? ரணில் விக்ரமசிங்க இதுவரையிலும் சமஸ்டிக்குத் தயார் என்று கூறவில்லை. சஜித் தெளிவாகக் கூறுகிறார் 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்று. மஹிந்த ராஜபக்ச தெளிவாகக் கூறுகிறார் 13 பிளஸ் என்று. சிங்களமக்கள் மத்தியில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் 13ஐச் சுற்றியே சிந்திக்கின்றன. அதாவது ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றியமைக்க அவர்கள் இப்பொழுதும் தயாரில்லை. மேலும் 13ஐ வலியுறுத்துவதன் மூலம் இந்தியாவையும் அவர்கள் வெற்றிகரமாகக் கையாளலாம் என்று நம்புகிறார்கள். தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிளவை அதிகப்படுத்தலாம் என்று அவர்கள் சிந்திக்க முடியும். எனவே வரும் 13ஆம் தேதி பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்போகும் தரப்புகள் எதைக் கேட்கின்றன அல்லது எதைத் தரக்கூடும் என்பவற்றின் அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இப்பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்துக்கு மேல் வளர முடியாது. அப்படி வளர்வதாக இருந்தால் இரண்டு தரப்பும் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். இதில் சிங்களத் தரப்பு ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். தமிழ்த் தரப்பு முழுச் சமஸ்டி என்ற கோரிக்கையில் இருந்து இறங்கிவர வேண்டி இருக்கும். அதாவது பொழிவாகச் சொன்னால் 13-க்கும் சமஸ்டிக்கும் இடையில் இணக்கப் புள்ளியொன்றைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். ஆனால் இதிலோர் அடிப்படையான கோட்பாட்டுப் பிரச்சினையும் நடைமுறைப் பிரச்சினையும் உண்டு. அதாவது,ஒற்றையாட்சியும் சமஷ்டியும் ஒன்றாக இருக்க முடியாது. அப்படியிருந்தால் அது சமஷ்டி அல்ல. ஒற்றையாட்சிதான். மேலும் இலங்கைத்தீவின் யாப்பு மரபு எனப்படுவது தமிழ் மக்களுக்கு எதிரானது. எனவே யாப்பில் தெளிவாக்க கூறப்படாதவற்றை அவர்கள் எப்படி வியாக்கியானம் செய்வார்கள் என்ற அனுபவம் தமிழ் மக்களுக்கு உண்டு. இந்த அடிப்படையில் சிந்தித்தால் ரணில் தொடங்கப் போகும் பேச்சுவார்த்தைகள் எங்கேயோ ஒரு கட்டத்தில் தேங்கி நிற்கும் வாய்ப்புக்களே அதிகம். அதாவது பொழிவாகச் சொன்னால் கஜேந்திரகுமாரின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவே முடியாது. அதேசமயம் விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்துக்கு மேல் முறிந்து போகும். மொத்தத்தில் பேச்சுவார்த்தைகள் முறிந்து போகும் ஆபத்தே அதிகம். ஆனால் அதற்காக தமிழ்த் தரப்பு பேசாமல் இருக்க முடியாது. பன்னாட்டு நாணய நிதியத்தை கவர்வதற்கும், மேற்கு நாடுகளைக் கவர்வதற்கும் ரணில் ஒரு நாடக மேடையைத் திறக்கப் போகிறார். அதில் பங்காளிகளாக மாறி தமிழ் பிரதிநிதிகளும் தமது மக்களுக்கு நடிக்க போகிறார்களா? அல்லது அந்த நாடக மேடையை உலக சமூகத்துக்கு அம்பலப்படுத்துவதா? என்ற முடிவை இப்பொழுது தமிழ்த் தரப்பு எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதை விடவும்,பேச்சுவார்த்தைகளை அம்பலப்படுத்துவதே தமிழ்த் தரப்பின் பேர பலத்தை அதிகப்படுத்தும். ஏனெனில், பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கும் பொழுது அதை உலக சமூகம் பொதுவாக வரவேற்பதில்லை. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைகளை நிராகரித்தது உண்டு. தேர்தல்களை புறக்கணித்ததும் உண்டு. அதற்கு ஒரு தர்க்கம் உண்டு. அந்த இயக்கத்தின் பிரதான ஒழுக்கம் ஆயத்தப் போராட்டந்தான். அந்த இயக்கம் ஒரு நிலத்தை கட்டுப்படுத்தியது. ஒரு கருநிலை அரசை வைத்திருந்தது. தேர்தல் அல்லது பேச்சுவார்த்தை எனப்படுவது அவர்களை பொறுத்தவரை பிரதான ஒழுக்கமில்லை. ஆனால் தமிழ்க்கட்சிகளின் பிரதான ஒழுக்கமே தேர்தல்தான். இங்கு மக்கள் இயக்கம் கிடையாது. இருப்பவையெல்லாம் தேர்தல் கேட்கும் கட்சிகளே. தேர்தல் தான் அவர்களுடைய பிரதான ஒழுக்கம். இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு எந்த வழியையும் அவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக உருவாக்கியிருக்கவில்லை. தேர்தல் மைய அரசியலிலும் தமிழ் மக்கள் ஒரு தேசத்திரட்சியாக இல்லை. வடக்கு கிழக்கு இணைப்பை அரசாங்கத்தோடு நின்று எதிர்க்கக்கூடிய கிழக்கு மையத் தமிழ் அரசியல்வாதிகள் இருவர் இப்பொழுது நாடாளுமன்றத்தில் உண்டு. எனவே வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்ற கோட்பாடு சோதனைக்கு உள்ளாகும் ஒரு காலகட்டம் இது. மேலும் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்மக்கள் தங்களுடைய போராட்டம் நீதிக்கானது என்று கூறி வருகிறார்கள். ஆனால் நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்களின் பலங்களில் ஒன்றாக காணப்படும் தமிழ் டயாஸ்போறா ஒரு பலமான திரட்சியாக இல்லை. அதோடு மேற்கு நாடுகளும் தமிழ் மக்களுக்கு இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை பெற்றுத்தரும் வாய்ப்புகள் இதுவரையிலும் கனியவில்லை. மேற்கு நாடுகள் மட்டுமல்ல,ஐநா போன்ற உலகப் பொது மன்றங்கள் மட்டுமல்ல,எந்த ஒரு வெளித்தரப்பும் தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்று தர மாட்டார்கள். தமிழ் மக்கள்தான் தங்களுக்கு வேண்டிய நீதிக்காக போராட வேண்டும். ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் நிலைமை எவ்வாறு உள்ளது? ஐநா தமிழ் மக்களுக்கு பரிகார நீதியைப் பரிந்துரைக்கத் தயாரில்லை. மாறாக நிலைமாறுகால நீதியைத்தான் பரிந்துரைத்தது. அது வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் ஒரு நீதி. இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னிருந்து நூரம்பேர்க் தீர்ப்பாயத்தில் தொடங்கி அண்மைக்கால கம்பூச்சியத் தீர்ப்பாயங்கள் வரையிலும் நிலைமாறுகால நீதி எனப்படுவது வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் ஒரு நீதிதான். எனவே தொகுத்துப் பார்த்தால்,கடந்த 13ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தில் அனைத்துலக சமூகம் தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடந்ததா அல்லது தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டதா?என்ற சந்தேகமும் உண்டு. இதில்,அனைத்துலக சமூகத்தில் தங்களுக்குள்ள வரையறைகளை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும்,பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவானது, கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தை எப்படிக் கையாளலாம் என்றுதான் சிந்திக்கின்றது.தமிழ்மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வைகோவின் கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அந்தத் தொனி உண்டு. தமிழகம் அண்மை ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்காக பெரியளவில் நொதிக்கவில்லை. தமிழ் கட்சிகளும் அதற்காக வேலை செய்யவில்லை. எனவே கூட்டிக் கழித்து பார்த்தால் ஈழத் தமிழர்கள் ஒப்பீட்டளவில் பலவீனமாக காணப்படுகிறார்கள். தமது பலம் எது பலவீனம் எது என்பதை குறித்து ஈழத் தமிழர்களிடம் சரியான மதிப்பீடு இருக்க வேண்டும். கற்பனையில் திழைக்க முடியாது. கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்க் கட்சிகள் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை என்று ஒரே ஒரு வழியைத்தான் நம்பியிருக்கின்றன. பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் கட்சிகள் மக்கள் இயக்கத்தை உருவாக்கி,தொடர்ச்சியாகப் போராடி,தியாகம் செய்து, தமது பேரபலத்தை அதிகப்படுத்திக் காட்டட்டும். இவ்வாறான பரிதாபகரமான ஓர் அரசியற் சூழலில் பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதைவிடவும் பேச்சுவார்த்தைகளில் இறங்கி அவற்றை அம்பலப்படுத்துவதுதான் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தமிழ் மக்களின் அந்தஸ்தை உயர்த்தும்.ரணில் ஒரு நாடக மேடையை திறக்கிறார். அதில் சேர்ந்து நடிப்பதல்ல தமிழ் தரப்பின் வேலை.அதை ஒரு நாடகம் என்று அம்பலப்படுத்த வேண்டும். யுத்தத்தைப் போலவே பேச்சுவார்த்தையும் ஒரு கலைதான். அது ஒரு கூட்டு ஒழுக்கம். யுத்தத்தைப் போலவே பேச்சுவார்த்தைகளுக்கும் வியூகங்கள் உண்டு. எனவே ரணில் வகுக்கும் வியூகத்துக்கு எதிர் வியூகத்தை தமிழ்த் தரப்பும் வகுக்க வேண்டும். http://www.nillanthan.com/5793/
  13. அடுத்த 25ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தினை உருவாக்குவேன்- ஜனாதிபதி ரணில் 11 Dec, 2022 | 02:14 PM இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றவுள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்கவுடன் இளைஞர்கள் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்கள் முன்வைத்த கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பதில்களும் வருமாறு : கேள்வி : இந்த ஆண்டு வரவு, செலவுத்திட்டம், ஏன் இளைஞர்களுக்கான வரவு, செலவுத்திட்டம்என்று அடையாளப்படுத்தப்படுகிறது? இதில் இளைஞர்களுக்கு என்ன வாய்ப்புக்கள் இருக்கின்றன? பதில் : எமது பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இது ஒரு பெரிய நெருக்கடி. நாம் இதிலிருந்து மீள வேண்டும். அப்போதுதான் நாம் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியும். ஆனால், நாம் இந்த நிலையில் இப்படியே இருக்கப் போகிறோமா? அல்லது இதிலிருந்து மீளப் போகிறோமா என்பதே முதல் கேள்வியாகும். புதிய பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்ப முடியாது. 25 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு இதனை முன்னெடுக்க வேண்டும். இது பெரியவர்களுக்கான வரவு, செலவுத்திட்டம் அல்ல. பொதுவாக 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு என்று சொல்ல வேண்டும். இன்று உங்களுக்கு 40 வயது என்றால், உங்களுக்கு 65 வயது ஆகும் போது இந்த இலக்கை அடைய முடியும். இன்று 20 வருடங்கள் என்றால் 45 வயது ஆகும் போது இந்த இலக்கை அடைய முடியும். அப்போது அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நான் பிறந்தபோது ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. இன்றைய நிலையில் ஆப்கானிஸ்தான் மட்டுமே நமக்கு கீழே உள்ளது. இந்தப் பிரச்சினையால் எமது இளைஞர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். நாட்டில் சிறிது காலம் நிலவிய இனக் கலவரத்தால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று அப்படிப்பட்ட கலவரங்கள் இல்லாவிட்டாலும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பெரும்பாலான மக்கள் இங்கு வாழ விரும்பவில்லை. தற்போதைய அரசியல் அமைப்பில் அவர்களுக்கு திருப்தியில்லை. இந்த ‘முறைமையில்’ மாற்றம் வரவேண்டும் என்கிறார்கள். மேலும் நாம் பொருத்தமான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதன்படி, அடுத்த 25 ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க உள்ளேன். ஜப்பான், சீனா, சிங்கப்பூர், கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் வகையில் முன்னேறிச் செல்லக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். இது இந்த வரவு, செலவுத் திட்டத்தில் இருந்து இந்தப் பணி ஆரம்பமாகிறது. ஆகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட வரவு,செலவுத் திட்டம் இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்திற்கு ஓரளவு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவந்தது. 2023 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதன்மூலம் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். கேள்வி : அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் தேசியமயமாக்கப்படும் போது பிரதேச செயலகத்தின் ஊடாக மாத்திரம் காணி அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து மக்கள் அஞ்சுகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன? பதில் : நான் முதலில் நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தப் பார்க்கிறேன். ஒட்டு மொத்த மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியை தடுக்க வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு நபர்களுக்கு காணி வழங்குகின்றன. யாருக்கு கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. என்ன காரணத்திற்காக கொடுக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. 1977இல் இந்த காணிகள், காணி ஆணையாளருக்கு கீழே இருந்தன. கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு காணி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த அமைப்புகள் தங்களுக்குத் தேவையான விதத்தில் நிலத்தைப் பிரித்துக் கொள்கின்றன. அன்றைய நிலப் பங்கீட்டு முறை இன்று இல்லை. நிலச் சீர்திருத்தப் பேரவைக்கு மட்டுப்படுத்தப்பட்ட பணியைக் கொடுத்தோம். ஆனால் இப்போது நிலத்தையும் பிரித்துக் கொடுக்கிறார்கள். நகர அபிவிருத்தி அதிகார சபை, ரயில்வே திணைக்களம் போன்ற பல நிறுவனங்கள் முறையற்ற விதத்தில் காணிகளை விநியோகம் செய்கின்றன. சில சமயங்களில் காணி ஆணையாளர் திணைக்களத்தில் இருந்து காணி வழங்குவதும் பிரச்சினையாக உள்ளது. இன்று அரசிடம் எவ்வளவு காணி இருக்கிறது என்று தெரியவில்லை. விவசாயத்தை நவீனப்படுத்த விரும்பினோம். காணி வழங்குவதற்கு நாட்டில் உள்ள காணிகளின் அளவு குறித்து தமக்கு தெரியாது என சம்பந்தப்பட்ட பலர் தெரிவித்தனர். அதனால்தான் நிலத்தை விநியோகிக்க அதிகாரம் ஒன்றை வகுக்க முயற்சித்தேன். தற்போது ஒரு குழுவை நியமித்து உள்ளோம். அந்த குழுவின் அறிவுறுத்தல்களின்படி மட்டுமே காணி பகிர்ந்தளிக்க வாய்ப்பு வழங்கப்படும். இது ஒரு தற்காலிக முறையாகும். இதற்காக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். கேள்வி : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில் அரச பாதுகாப்பு சேவைகளுக்கு 10 சதவீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? பதில் : பாதுகாப்பு அமைச்சகம் என்பது இராணுவம் மட்டுமல்ல. இடர்முகாமைத்துவம் உள்ளிட்ட பல பகுதிகள் இதில் அடங்கும். அதற்கான செலவுகளும் உள்ளன. எனவே, இராணுவச் செலவு,ஏனைய விடயங்களைப் போல, 24 மணி நேரத்தில் மாற்ற முடியாது. நமது இராணுவம்,பணியாளர்களுக்காக அதிக பணத்தை செலவிடுகிறது. அவற்றை ஒரேயடியாக 40,000-50,000 குறைக்க முடியாது. அவர்கள் விருப்பத்துடன் சேவையில் இருந்து விலக அனுமதிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி இராணுவத்தையோ அல்லது வேறு எந்த அரச சேவையையோ விட்டு யாரும் விலகவில்லை. எதிர்காலத்தில் கடற்படை மற்றும் விமானப்படையில் கவனம் செலுத்த வேண்டும். இராணுவத்தில் ஆட்கள் குறையலாம். ஆனால் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்று இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது. செலவு செய்ய்பட்டது. அந்தப் போர் முடிவுக்கு வந்ததால், அவர்களை மறுநாளே வெளியேற்ற முடியாது. கேள்வி : நாட்டில் உள்ள மருத்துவ பீடங்களில் இருந்து வெளியேறும் மருத்துவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஏதாவது வேலைத்திட்டம் உள்ளதா? பதில்: உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது. எனவே அதனுடன் போட்டியிட முடியாது. ஐயாயிரம் டொலர்கள் என்று சொன்னால் அவர்களை எப்படி தடுக்க முடியும்? ஒரு பகுதியினர் செல்ல வேண்டும். முடிந்த அளவு மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்காக குருநாகல், பொலன்னறுவை போதனா வைத்தியசாலையை திறந்து மருத்துவ பீடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். கேள்வி : வரவு, செலவுத்திட்டம் உரையின்படி அரச நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கள் குறித்து முன்மொழிந்துள்ளீர்கள். தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்துவது பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். அதைப் பற்றி அறிய விரும்புகிறோம். ? பதில்: நமது நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் 1930 - 1940 களில் தொடங்கியது. அது அவ்வப்போது திருத்தப்பட்டு வந்தது. ஆனால் ஒரு முழுமையான சட்டம் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. 30-40களில் சூழல் வேறு. உதாரணமாக, நமக்கு இருக்கும் ஓய்வூதியம் பெரும் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை. இதையெல்லாம் பார்த்து இதற்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அந்தச் சட்டங்களின்படி நாம் செயல்பட வேண்டும். சிலர் இன்று வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். இன்றைய தொழிலாளர் சட்டத்தில் அத்தகைய சட்டம் இல்லை. இதற்கான உரிய சட்டங்கள் இதுவரை கொண்டு வரப்படவில்லை. தொழிலாளர் சட்டத்தை எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். கேள்வி : ஆராய்ச்சி துறைக்கு எவ்வளவு பணம் ஒதுக்கினாலும் அதன் நிலை திருப்திகரமாக இல்லை. இதற்காக இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில் இருந்து பணம் ஒதுக்க ஏற்பாடுள்ளதா? பதில் : மேலும் நிறுவனங்களை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. ஏற்கனவே உள்ள நிறுவனங்களில் இருந்து திட்டங்களை தொடங்க பணம் கொடுக்க முடிவு செய்தோம். இந்த தொகையை வர்த்தக மதிப்புள்ள திட்டங்களுக்கு வழங்குவோம். பணம் ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை. பொருளாதாரத்திற்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வோம் என்று நம்புகிறோம். கேள்வி : பொதுப் பல்கலைக்கழகங்களில் பகிடி வதையை நிறுத்த முடியவில்லையா? பதில் : பகிடிவதை நிறுத்தப்பட வேண்டும். அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். அடுத்த ஆண்டு முதல் கண்டிப்பாக இவை அமுல்படுத்தப்படும். பகிடிவதை செய்வது கொடுமைக்காரனின் உரிமை அல்ல. பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். எங்கள் காலத்திலும் பகிடிவதை இருந்தது. அவர் என்னை ஒரு பாடலைப் பாடச் சொன்னார்.அல்லது புதிய ஆடைகளை அணியச் சொன்னார். ஆனால் தற்போது ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது மனித நேயமற்ற செயல். பல்கலைகழக துறையினர் இதுபற்றி மௌனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் அதை நிறுத்த வேண்டும். கேள்வி : வங்கி அமைப்பு தற்போது படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாக ஒரு கதை உள்ளது. இதனைத் தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இது நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியுமா? பதில் : முதலில் வங்கி அமைப்பு சீர்குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வட்டி வீதம் அனைத்தும் உயரும் நிலையில் நாடு உள்ளது. வட்டி வீதம் உச்சத்தை எட்டியுள்ளன. இது படிப்படியாக குறையும். இது ஒரு அசாதாரண நிலை. இங்கே நீங்கள் சாதாரணமாக செயல்பட முடியாது. அடுத்த ஆண்டு இதை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன். கேள்வி : வரவு, செலவுத்திட்டம் முன்மொழிவுகளில் ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் ஹில்டன் போன்ற அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைகின்றன. இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்? பதில் : எங்களிடம் பணமில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை. தந்திரோபாயங்கள் மூலம் அதைக் கட்டியெழுப்புவதுதான் ஒரே வழி. அரசுக்கு வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தொடர்ந்து கொண்டு நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளோம். மேலும் இங்கு சுமார் 03 பில்லியன் டொலர்கள் உள்ளன. எனவே எங்கள் திட்டத்தின் மூலம் ரூபாவும் வலுவடையும். கேள்வி : அரசு சேவையின் செலவுகளையும் வீண் விரயத்தையும் குறைக்க இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில் ஏதாவது திட்டம் உள்ளதா? பதில் : அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையும், வட்டியையும் செலுத்துவதில் இந்தப் வரவு, செலவுத்திட்டத்தில் பெரும் பங்கு இருக்கிறது. உண்மையில் அது பெரும் சுமைதான். எதிர்காலத்தில்இ ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதிகரித்து அவர்களுக்கு எப்படி பணம் செலுத்துவது என்று கூட யோசிக்காமல், அவர்கள் உழைத்துள்ளனர். தேவையில்லாமல் அரச பணியில் ஆட்களை நியமித்ததில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. 2035இற்கு பின்னர் இவர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவது பெரிய பிரச்சினையாகிவிடும். இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான முறையான தீர்வு எங்களிடம் உள்ளது. அதற்கான கொள்கை இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கேள்வி : சமூகத்தில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வரவு, செலவுத்திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இந்த வரவு, செலவுத் திட்டத்தில் வணிக நீதிமன்ற விவகாரங்கள் குறித்து உங்கள் நிலைப்பாட்டை விபரிக்க முடியுமா? பதில் : வரவு, செலவுத் திட்டத்தில் இருந்ததைப் போலவே, அதற்கு முன்னரும் மேற்பார்வைக் குழுக்களை நியமிக்கவும், நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுக்களை வலுப்படுத்தவும் நான் முன்மொழிந்தேன். முதலில் பாராளுமன்றத்தில் பொதுக் கணக்குக் குழு மட்டுமே இருந்தது. பின்னர் பொது விவகாரங்களுக்கான இரண்டாவது குழு அமைக்கப்பட்டது. 2016இல் இன்னொரு குழுவை உருவாக்கினேன். மேலும், கண்காணிப்புக் குழுக்களையும் நியமித்தோம். அதன் ஒரு பகுதி குறிப்பாக பொருளாதார மற்றும் நிதித் துறையில் உள்ளது. இந்தக் குழுக்கள் பலப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, முறைகள் மற்றும் நடைமுறைகள் குழு நியமிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு வருமானத்தைப் பெறுவதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும். உண்மையில் ஆறு குழுக்கள் உள்ளன. இனி இதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்மூலமே இதனை வெற்றியடையச் செய்ய முடியும். அதற்கு ஆதரவாக பாராளுமன்ற பட்ஜெட் அலுவலகம் என்ற பெயரில் ஒரு சுயாதீன அலுவலகம் அமைக்கப்படுகிறது. இந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி திடீரென ஏற்படவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த நெருக்கடி தெரிந்தது. இது பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து இந்த நிலைக்கு வரும் என்று ஒரு பாராளுமன்ற அறிக்கை கூட சமர்ப்பிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். அப்படியிருந்தும் சிறுபான்மையினருக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியும். சிறுபான்மையினர் கூட அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. எனவே, இரு தரப்பினரும் இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மத்திய வங்கி ஆளுநர் குறித்து பேசினாலும், அவரும் இதுகுறித்து எச்சரிக்கைவில்லை. எனவே, தற்போதுள்ள இந்த குழுக்களை பயன்படுத்தி,அதன்படி செய ற்பட வேண்டும். இரண்டாவது விடயம், கொழும்பில் வர்த்தக நீதிமன்றம் உள்ளது. ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் இன்னும் கொழும்பில் மட்டுமே உள்ளது. கொழும்பில் இருப்பதற்கு அதுவே காரணம். தனி பிராந்திய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு மாகாணத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். கேள்வி : இ-கொமர்ஸ் என்ற இணைய வணிக வளர்ச்சிக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் எந்த அளவு ஆதரவை வழங்க முடியும்? பதில்: டிஜிட்டல் மயமாக்கலில் மட்டுமல்ல, வர்த்தகத்திலும், சட்டத்திலும் நாம் பின்தங்கியுள்ளோம். ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு கொள்கைகள் இருந்தாலும், அவை செயல்படுத்தப்படவில்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கத்திற்காக நிறுவப்பட்டன. டிஜிட்டல் துறை அசுர வளர்ச்சியடைந்துள்ளதால், உலக அளவில் அந்நியச் செலாவணியை நிச்சயம் ஈட்ட முடியும். ஆனால் இந்த நிறுவனங்கள் இறுதியில் லாபத்தை மட்டுமே சார்ந்துள்ளன. நாம் செய்ய வேண்டியது முதலில் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தில் நுழைய வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது. அது போதுமான அளவு வளர்ந்துள்ளது. டிஜிட்டல் தொழில்துறையில் உள்ளவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். அவர்களை எப்படி ஆதரிப்பது என்பதை நாங்கள் விவாதிக்கிறோம். அவர்களை போட்டித்தன்மையுடன் வைத்திருக்க வேண்டும். கேள்வி : இலங்கையின் தற்போதைய கல்வி முறைமையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாடசாலைகளுக்கு வழங்கப்படும் வசதிகளுக்கு இடையில் பாரிய இடைவெளி இருப்பதை நாம் அறிவோம். தற்போதைய வரவு, செலவுத் திட்டத்தில் இந்த இடைவெளியைக் குறைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? பதில்: நமது முழு கல்வி முறையையும் மறுசீரமைக்க வேண்டும். கொரோனா பாதிப்பால், கல்வி முறை முன்பு போல் செயல்படவில்லை. மேலும், பாடத்திட்டத்தைப் பார்த்தால், பல பாடங்கள் பின்தங்கியுள்ளன. நீங்கள் கூறியது போல், பாடசாலைகளுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் இடையில் தரத்தில் வேறுபாடு உள்ளது. இந்த குறைபாடுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் வெவ்வேறு பிரிவுகள் ஒன்றுக்கொன்று இணக்கமாக இல்லை என்பதே பிரச்சினையாக இருக்கிறது. முதலில் பல்வேறு துறைகளில் உள்ள குறைபாடுகளை கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒரு விரிவான கல்வி முறை குறித்து ஆராய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.இதற்கு ஓரிரு வருடங்கள் ஆகும். இதனை நடைமுறைக்குக் கொண்டுவர சுமார் ஐந்து முதல் ஏழு வருடங்கள் ஆகும். எனவே நாம் இப்போதே இதனை ஆரம்பிக்க வேண்டும். கேள்வி : சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இலங்கையில் உயர்கல்வி கற்கும் இளைஞர்களை எவ்வாறு ஈடுபடுத்துவது? பதில் : சுமார் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வழமையாக இலங்கைக்கு வருகின்றனர். ஒருநாளைக்கு ஒரு சுற்றுலாப் பயணி 500 டொலர்களை செலவிடும் வகையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். அத்துடன் புதிய சுற்றுலாப் பயணிகளை நாம் ஈர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். அதற்கு நாங்கள் என்ன சேவையை வழங்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். இரண்டாவது, நமது சந்தை என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாம் எந்த நாடுகளில் கவனம் செலுத்துகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 500 டொலர்கள்செலவழிக்கும் மக்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? முன்பு அறைகளை விற்பனை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தினோம். ஆனால் இந்த முறையில் புதிய விடயங்களை முயற்சிக்க வேண்டும். அதற்குத்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுலாத் துறைக்கு போதிய பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் இல்லை. பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் போதுமானதாக இருக்காது. முதலில் இந்த குறைபாடுகளை நாம் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். கேள்வி : கடல்சார் சுற்றுலாவில் இளைஞர் சமுதாயத்திற்கு என்ன மாதிரியான வாய்ப்பு உள்ளது? பதில் : ஒருபுறம், கப்பல் சுற்றுலா. தற்போது இலங்கையைச் சுற்றிச் செல்லக்கூடிய பல கப்பல்கள் எங்களிடம் உள்ளன. இதனைத்தவிர, வங்காள விரிகுடாவை ஒட்டிய சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். அந்தமான் தீவுகள் வழியாக, பங்களாதேஷ், மியான்மர், இந்தியாவின் துறைமுகங்களில் இருந்து திருகோணமலை வழியாகவும், அதே நேரத்தில் தாய்லாந்து, மலேசியா,சிங்கப்பூர் வழியாகவும் விரிவாக்கப்பட வேண்டும். உண்மையில், வங்காள விரிகுடா, கரீபியனை விட பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது. கேள்வி : முதலீட்டை ஊக்குவிக்க, முதலீட்டுச் சூழலை உருவாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? பதில் : முதலீட்டாளருக்கு அனுமதி வழங்க ஒரு வருடம் ஆகின்றது. முதலீட்டாளர் வந்து தன் வேலையை எளிதாகச் செய்வதற்கு சாதகமான சூழல் அமைய வேண்டும். அந்த முதலீட்டாளருக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் அவர்களின் பணிகளை செய்துமுடிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதன்பின்னர் முதலீட்டிற்குத் தேவையான விடயங்களை அங்கீகரிக்க பல துறைகள் உள்ளன. இவை அனைத்தும் துரிதமாகசெய்யப்பட வேண்டும். சில நாடுகள் இதை மூன்று நாட்களில் செய்கின்றன. முதலீட்டு ஊக்குவிப்புச் சபை மற்றும் ஏற்றுமதி சபை இரண்டையும் இணைக்க வேண்டும். ஏனெனில் இவற்றின் சேவைகளில் திருப்தி அடைய முடியாது. உண்மையில், இந்நாட்டில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை இருக்க முடியாது. நமக்குப் பின்னர் இந்தப் பணியைத் தொடங்கிய நாடுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/142816
  14. தமிழர்களை ஆதரிக்குமா இந்தியா ? By Digital Desk 2 11 Dec, 2022 | 02:44 PM (என்.கண்ணன்) “இலங்கையில் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா விரும்பினாலும், தமிழர்களின் பக்கம் மட்டுமே அது நிற்கும் என்றில்லை” “சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவினதும், மக்களினதும் நலன்களை உறுதி செய்வதாயின், இலங்கையில் எந்த தரப்பையும் முன்னிலைப்படுத்தக் கூடாது என்று கருதுகிறது இந்தியா” இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த புதன்கிழமை ராஜ்ய சபாவில் உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அவரது அந்த உரை, இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது, இந்தியாவினதும், இந்திய மக்களினதும் நலன்களுக்கானதாகவே இருக்கும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது. “இந்திய வெளிவிவகாரக் கொள்கை, அனைத்து இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சவாலான சூழ்நிலையில், இந்திய மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்திய வெளிவிவகாரக் கொள்கை. அந்த பொறுப்பை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்.” என்று அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்து இந்தியாவையும், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையையும் வெளியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை இலங்கையில் தமிழர்களின் நலன்களை உறுதி செய்வதானதாகவே இருக்கும் என்பது பல பேரின் நம்பிக்கை. தமிழர்களை கைவிட்டு விடாது, தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் என்று இன்றைக்கும் பலர் உறுதியாக நம்புகின்றனர். ஆனால், இந்தியா அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதா என்ற கேள்வியை, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்தில் இருந்து எழுப்ப வேண்டியிருக்கிறது. இலங்கை, சீனா, பலஸ்தீனம் போன்ற நாடுகள் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். “தமிழ், சிங்கள மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் இந்தியா ஆதரவை வழங்கி உள்ளது. கடுமையான பொருளாதார சூழ்நிலையில் சிக்கியுள்ள அண்டை நாட்டிற்கு ஆதரவு வழங்குவதில் நாம் வகுப்புவாத அணுகுமுறையை எடுக்கவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது, இலங்கையில் உள்ள இனங்களை வேறுபடுத்தி இந்திய வெளிவிவகாரக் கொள்கை, அணுகவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளை, ஐ.நா.விலும் பிற சந்தர்ப்பங்களிலும், இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தி வந்திருக்கிறது. தமிழர்களுக்கு சமத்துவமான, நீதியான, கௌரவமான உரிமைகளுடன் கூடிய தீர்வு பற்றி இந்தியா அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. இதனை தமிழர் தரப்புக்கு மாத்திரமே இந்திய ஆதரவு உள்ளது என்ற தோற்றப்பாட்டை பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தியிருக்கிறது. அதனைக் கொண்டு தான், இந்தியா எங்களின் பக்கம் இருக்கிறது என்றும், இந்தியா தீர்வைப் பெற்றுத் தரும் என்றும், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், இன்றைக்கும் நம்பியிருக்கின்றனர். இலங்கையில் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா விரும்பினாலும், தமிழர்களின் பக்கம் மட்டுமே அது நிற்கும் என்றில்லை. ஜெனிவாவில், அதனை நாம் பல ஆண்டுகளாகப் பார்த்து வந்திருக்கிறோம். இலங்கை தொடர்பான தீர்மானங்கள் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் தான், இந்தியா அதற்கு ஆதரவு அளித்தது. அதுவும், அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அதன் தமிழக கூட்டாளியான தி.மு.க. கொடுத்த அழுத்தங்களால் நிகழ்ந்த ஒன்று. மற்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவில்லை. வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கும் இராஜதந்திரத்தையே கையாண்டு வந்திருக்கிறது. உக் ரேனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து ரஷ்யாவை எதிர்க்காமல் எவ்வாறு நடுநிலை வகிக்கிறதோ -அவ்வாறு தான் இலங்கை விவகாரத்திலும், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் சமநிலை உறவைப் பேண முனைகிறது இந்தியா. 1987இற்கு முன்னர் இந்த நிலைப்பாட்டில் இந்தியா இருந்ததெனக் கூற முடியாது. அப்போது, தமிழர்களுக்கு சார்பானது போன்ற தோற்றப்பாட்டை இந்திய வெளிவிவகாரக் கொள்கை வெளிப்படுத்தியது. ஆனால் இப்போது, அனைத்து மக்களுக்குமான இலங்கையையே ஆதரிப்பதாக கூறுகிறது இந்தியா. இந்தியாவின் இந்த வெளிவிவகாரக் கொள்கை, இந்திய மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டது என்பதே, இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து. இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு எவ்வாறு இந்திய மக்களின் நலன்களை உறுதி செய்யும் என்ற கேள்வி எழுகிறதா? இந்திய மக்களின் பாதுகாப்பையும், செழிப்பையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கையில் இந்தியா அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. இலங்கையில் சீனா தனது செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் – இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இந்திய அரசாங்கத்துக்கு உள்ளது. முன்னர் இலங்கை தொடர்பான தீர்மானங்கள், கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, இந்தியாவுக்கு இந்தச் சிக்கல் இருக்கவில்லை. சீனாவின் ஆதிக்கம் அப்போது இலங்கையிலோ, இந்தியப் பெருங்கடலிலோ, இந்தியாவுக்கு அச்சுறுத்தலானதாக இருக்கவில்லை. அப்போது இந்தியா போட்டியாக கருதியது அமெரிக்காவைத் தான். அமெரிக்காவிடம் இருந்து இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்களை பாதுகாப்பது மட்டும் தான், இந்தியாவின் பிரதான திட்டமாக இருந்தது. 1987இல் இந்திய – இலங்கை உடன்பாட்டின் மூலம் அந்த அச்சத்தை இந்தியா போக்கிக் கொண்டது. அதையடுத்து, விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி, அழிப்பதற்கு இந்தியா முக்கிய கவனம் செலுத்தியது. அதனைச் செய்து முடித்ததன் மூலம், இந்தியா தனக்கான அச்சுறுத்தல்களை நீக்கி விட்டதாக கருதிய போதும், அதற்குப் பின்னர் தான் இந்தியாவுக்கே உண்மையான அச்சுறுத்தல் உருவாகியது. விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தான், இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம் விரிவடைந்தது. அந்த வகையில் பார்த்தால், சிறிய அச்சுறுத்தலை நீக்கிக் கொண்டு, இந்தியா பெரிய அச்சுறுத்தலை விலைக்கு வாங்கிக் கொண்டது என்றும் குறிப்பிடலாம். இப்போது சீன ஆதிக்கத்தை மையப்படுத்தியே இலங்கை தொடர்பாக இந்தியா முடிவுகளை எடுக்கிறது. தனது வெளிவிவகாரக் கொள்கையை செயற்படுத்தி வருகிறது. இதனை இந்திய மக்களின் நலன்களுக்கானதாக வலியுறுத்துகிறது. சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவினதும், மக்களினதும் நலன்களை உறுதி செய்வதாயின், இலங்கையில் எந்த தரப்பையும் முன்னிலைப்படுத்தக் கூடாது என்று கருதுகிறது இந்தியா. இவ்வாறான நிலையில் தமிழர்களின் பக்கமே இந்தியா நிற்கும் என்பதோ, தமிழர்களுக்காக மட்டும் இந்தியா செயற்படும் என்பதோ, வீண் நம்பிக்கை. தமிழர்களுக்கும் நோகாமல், சிங்களவர்களையும் பகைக்காமல் தான் இந்தியா நடந்து கொள்ளும். அதனையே ஜெய்சங்கரின் இந்த விளக்கம் வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனாலும், தமிழர்களுக்குச் சார்பாக இந்தியாவை முற்றிலுமாக வளைப்பதற்கு சாத்தியமே இல்லை என்று கூற முடியாது. அதற்கான சிறிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்தக் கட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ள ஒரு வாசகம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். “இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்திய வெளிவிவகாரக் கொள்கை. அந்த பொறுப்பை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்.” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய மக்களின் நலன்களுக்காக, அதனை உறுதி செய்வதற்காக, அந்தப் பொறுப்பை நிறைவேற்றவதற்காக எதையும் செய்வோம் என்று அவர் கூறியிருப்பது, கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இந்தியாவின் நலன்களுக்கு பாதகமான நிலை ஏற்படுகின்ற போது, இந்தியா எந்த முடிவுகளையும் எடுக்கத் தயங்காது என்பதே அதன் உட்பொருள். இந்தியா தனது வழக்கமான கொள்கைகள், நிலைப்பாடுகளில் இருந்து விலகியும் முடிவுகளை எடுக்கும் என்பதையே அவர் கூற முனைந்திருக்கிறார். விதிவிலக்கான அந்தச் சந்தர்ப்பங்களை அவர் விபரிக்காவிட்டாலும், இந்தியாவுக்கு பாதகமான நிலை ஒன்றை தவிர்க்கும் சந்தர்ப்பமாகவே அது இருக்கும். அத்தகையதொரு நிலை எப்போதாவது தான் ஏற்படும். அத்தகையதொரு நிலை வாய்த்தால் அது தமிழர்களுக்கு சாதகமானதாக அமையலாம். அவ்வாறான நிலையிலன்றி, இந்தியா தமிழர்களின் பக்கத்தில் மட்டும் நிற்கின்ற கொள்கையை கடைப்பிடிக்காது என்பதே, ஜெய்சங்கரின் உரையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. https://www.virakesari.lk/article/142799
  15. உக்ரைன் போர், ரஷியா-நேட்டோ போராக உருவெடுக்கும் அபாயம் – நேட்டோ பொதுச்செயலாளர் அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ. உலகின் மிகவும் வலிமையான ராணுவ கூட்டமைப்பாக அறியப்படும் இந்த அமைப்பில் இணைவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. நேட்டோவும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. இந்த சூழலில் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அதன் அண்டை நாடான ரஷியா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இன்னும் சில தினங்களில் இந்த போர் 11-வது மாதத்தை எட்டவுள்ளது. ரஷியா குற்றச்சாட்டு இந்த போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வழங்கி பக்கபலமாக இருந்து வருகின்றன. ஆனால் ரஷியாவோ உக்ரைன் போரில் அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் நேரடியாகப் பங்கேற்பதாக குற்றம் சாட்டி வருகிறது. ரஷியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது, உக்ரைன் வீரா்களுக்கு தங்கள் நாடுகளில் போா்ப் பயிற்சியளிப்பது, ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு உளவுத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் போரில் மேற்கத்திய நாடுகள் நேரடியாக பங்கேற்பதாக ரஷியா கூறுகிறது. நேட்டோ பொதுச்செயலாளர் எனவே உக்ரைனில் நேட்டோ தளவாடங்கள் மற்றும் அந்த அமைப்பின் அதிகாரிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த தங்களுக்கு சட்டபூா்வ உரிமை உள்ளது என்றும் ரஷியா எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்து வரும் போா், தங்களது அமைப்புக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுப்பதற்கான அபாயம் உள்ளதாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் எச்சரித்துள்ளாா். நார்வே நாட்டின் முன்னாள் பிரதமரான ஜென்ஸ் அந்த நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து கூறியதாவது:- மிகப்பெரிய போராக உருவெடுக்கும் உக்ரைனில் நடந்து வரும் போா் மிகவும் அபாயகரமானது. அதில் ஒரு சிறு தவறு நேர்ந்தால் கூட நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் உள்ளது. அதனைத் தவிா்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வருகிறோம். தற்போது உக்ரைனில் மட்டும் நடைபெற்று வரும் சண்டை, ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் பரவி, முழு போராக உருவெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அதே வேளையில் அதனைத் தடுப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் யாரும் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. இவ்வாறு ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறினார். https://akkinikkunchu.com/?p=232482
  16. புடின் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பப்படுவார்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை உக்ரைன் – ரஷ்ய போர் சுமார் கடந்த 10 மாதங்களாக நிலவி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடின் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பப்படுவார், மீண்டும் அவர் எழுந்திருக்கவேமாட்டார் என முன்னாள் ரஷ்ய தூதர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நாவுக்கான முன்னாள் ரஷ்ய தூதரான Boris Bondarev என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புடின் பதவி விலக கட்டாயப்படுத்தப்படலாம். புடினுடைய ஆட்சி பயங்கரமான முறையில் கவிழ்க்கப்படலாம் அல்லது அவர் கொல்லப்படலாம். உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோல்வியை சந்திக்குமானால், ரஷ்ய செல்வந்தர்களாலேயே நிரந்தர தூக்குத்துக்கு புடின் கொண்டு செல்லப்படுவார். தங்களிடம் பொய் சொல்லி புடின் தங்களை முட்டாள்களாகிவிட்டதாக ரஷ்ய மக்கள் கருதும் நிலையில் புடின் பதவி விலக கட்டாயப்படுத்தப்படலாம். இருப்பினும், தோல்வி பயத்தில் புடின், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவெடுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=232493
  17. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை ஆட்சியாளர்களுக்கு எதிராகவேதான் போராடுகின்றோம் – சாணக்கியன் இலங்கை நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும் சரி உங்கள் மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை தினத்தையிட்டு கலந்து கொண்ட பேரணியல் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் “பல மனித உரிமைகளுக்கு பேர் போன நாடுதான் இலங்கை 1948 ம் ஆண்டில் இருந்து மனித உரிமை மீறல் பெருமளவு நடந்தது பெரும்பான்மை மக்களால் எங்கள் சமூகத்திற்கு எதிராகதான் நடந்தது பல இடங்களில் பலர் சொல்லுவார்கள் இது தமிழர்களுக்கான பிரச்சனை மட்டும் என இவ்வாறான கருத்துக்கள் வருவதற்குhன காரணம் பல மனித உரிமை மீறல்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் நடந்தது கோட்டா கோ கம என்று எல்லாம் தெற்கிலே பெரும்பான்மை சமூகங்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களிலே பாதுகாப்பு படையினர் அந்த போராட்டகார்ர் மீது வன்முறையில் ஈடுபட்டபோது நாடு முழுதும் பொங்கி எழுந்தது அப்போது அவர்களுக்கு அன்றும் சொன்னோம் இன்றும் சொல்லுகின்றேன் வடக்கு கிழக்கில் ஒவ்வொரு நாளும் சர்வ சாதாரணமாக நடக்கும் விடையம் தான் நீங்கள் குறிப்பிட்ட நாள் பார்த்திருந்தவை. இந்த மனித உரிமை மதிக்கும் நாடாக இலங்கை மாறும் வரைக்கும் இந்த நாட்டிற்கு எந்தொவொரு எதிர்காலமும் இல்லை மனிதனுக்கே மதிப்பில்லை என்றால் அவ்வாறான நாடு எவ்வாறு ஒரு ஜனநாயக வழியிலே பொருளாதார வழியில் அபிவிருத்தியடைய முடியும் என பெரும்பான்மை சமூகம் உணரவேண்டும் சிலர் நினைக்கலாம் தமிழர்களுக்கு அடித்து அடித்து அவர்கள் கழைத்து விட்டார்கள் என நினைக்கின்றனா.; ஆனால் நாங்கள் எவ்வளவு அடித்தாலும் எவ்வளவு கொடுமை செய்தாலும் களைத்து போகமாட்டோம் எங்களது அரசியல் உரிமைக்காகவும் மக்களுடைய மனித உரிமை மீறல்களுக்கான நீதி கிடைக்கும் வரைக்கும் எத்தனை தலைமுறை எடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரா போராடவில்லை நாங்கள் போராடுவது சிங்கள மக்களால் தெரிவு செய்த அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் போராடுவது எஙகளடைய மக்களுக்கு நடந்த அநீதிக்கு நீதிவேண்டும் எனவும் இந்த நாட்டில் சமத்துவமான அரசியல் உரிமை வேண்டும் போராடுகின்றோமே தவிர சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=232499
  18. தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.இதன்போது கட்சியின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமாக மத்திய குழுவின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டு, பொதுச்சபையின் அனுமதிக்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ள நிலையில், அதில் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதில் கரிசனை கொள்ளப்படவுள்ளது.இதேவேளை, கடந்த மத்திய குழு கூட்டத்தில் இம்மாதம் 18ஆம் திகதி திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது. அத்தினத்தில் மாநாடு தாமதமடைவதற்கான காரணங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதோடு, மாநாட்டுக்கான புதிய திகதி முன்மொழியப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன் இந்தக் கூட்டத்தின்போது, சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(15) http://www.samakalam.com/தமிழரசுக்-கட்சியின்-மத்-3/
  19. சனிக்கிழமை நடந்த இரண்டு காலிறுதிப் போட்டி முடிவுகள்: --------- முதலாவது காலிறுதிப் போட்டியில் மொரோக்கோ அணி போர்த்துக்கல் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இவ்வெற்றி மூலம் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவான முதலாவது ஆபிரிக்கநாடு என்ற சாதனையை மொரோக்கோ பெற்றுக்கொண்டுள்ளது. மொரோக்கோ 1 - 0 போர்த்துக்கல் போர்த்துக்கல் மீதான மொரோக்கோவின் அதிர்ச்சிதரும் வெற்றியை யாழ்களப்போட்டியாளார்கள் எவரும் கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! --------- இரண்டாவது காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இங்கிலாந்து 1 - 2 பிரான்ஸ் பிரான்ஸ் அணியின் வெற்றியைச் சரியாகக் கணித்த 17 பேருக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. ---- காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 முதல்வன் 73 2 நீர்வேலியான் 73 3 அகஸ்தியன் 72 4 கல்யாணி 71 5 தமிழ் சிறி 71 6 ஏராளன் 70 7 நுணாவிலான் 70 8 புலவர் 69 9 வாதவூரான் 68 10 எப்போதும் தமிழன் 68 11 கிருபன் 67 12 வாத்தியார் 66 13 ஈழப்பிரியன் 65 14 சுவைப்பிரியன் 65 15 சுவி 64 16 பிரபா 58 17 நிலாமதி 58 18 குமாரசாமி 57 19 கறுப்பி 57 20 பையன்26 56 21 கந்தையா 51 @பையன்26 போன போக்கைப் பார்க்கக் கலக்கமாக இருக்கின்றது!
  20. நந்தன் எப்படி ஓடுவார் என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன்😂🤣
  21. இன்று இங்கிலாந்தா பிரான்ஸா வெல்லும் என்று பார்ப்போம்! பிரான்ஸ் வெல்லும் என்றுதான் யாழ்களப் போட்டியாளர்களில் பெரும்பான்மையானோர் நம்பியிருக்கின்றார்கள்!
  22. காசி தமிழ்ச் சங்கமம் – ஒரு நேரடி அனுபவம்! -அ.உமர் பாரூக் ”இந்தியாவில் எந்த அரசும் செய்யாத சாதனை! காசியில் தமிழ்க் குரல் ஒலிப்பதற்கான பெருமை பிரதமருக்கே” என்று வட இந்திய ஊடகங்கள் ஒருபக்கம் எழுதிக் குவிக்கின்றன. இன்னொருபுறம், ”காசி தமிழ்ச் சங்கமத்தால் தமிழுக்கு எந்த பயனும் இல்லை” என்ற கடும் எதிர்ப்புகள்!உண்மையில் காசியில் என்ன நடக்கிறது? இது ஒன்றிய பாஜக அரசு சொல்வது போல கலாச்சாரப் பரிமாற்றப் பயணம்தானா..? உண்மையில் கங்கைக் கரையில் தமிழ் ஒலிகிறதா? ஒன்றிய பாஜக அரசின் கல்வித்துறை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி இணைந்து எட்டு நாட்களுக்கான தமிழ்ச் சங்கமம் பயணத்தை அறிவித்திருந்தன. நவம்பர் 17 துவங்கி டிசம்பர் 16 வரை நடைபெறும் இப்பயணத்தில் தமிழகத்தில் இருந்து சுமார் 2500 பேர் பங்கேற்கும் விதத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது. மாணவர்கள், தொழில் முனைவோர், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட 12 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் 212 பேர் என்ற விதத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். சென்னை, கோவை, இராமேஸ்வரம் நகரங்களில் இருந்து காசி செல்லும் ரயில்களில் பயணம் குறித்த விளம்பரங்களோடும், மோடியின் படங்களோடும் மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்படுகின்றனர். நவம்பர் இறுதிவரை ஆறு குழுக்கள் சென்றுள்ளன. தொடர்ந்து இன்னும் ஆறு குழுக்கள் செல்ல உள்ளன. காசி பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட முன்னாள் மாணவன் என்ற அடிப்படையில் தமிழ்ச் சங்கமத்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. சார்ந்த நபர்களோடு எவ்வாறு பயணிப்பது? என்ற தயக்கம் இருந்தாலும், எழுத்தாளர்கள் குழுவில் என்னை இணைத்திருந்ததால் ’என்ன செய்கிறார்கள்?’ என்று பார்த்து விட்டு வரலாம் என்று மூன்றாவது குழுவில் பயணித்தேன். ரயில் பயணம், உணவு ஏற்பாடு, தங்குமிடம், சுற்றுலாவிற்கான பேருந்துகள் என எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். போலீஸ் பாதுகாப்புடன் கான்வாய் வரிசையிலேயே எல்லா இடங்களுக்குமான பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. பயண, உணவுச் செலவுகள் மட்டும் 2500 பேருக்கு சுமார் 5 கோடி ஆகியிருக்கலாம். இதுதவிர, பிரமாண்டமான நிகழ்ச்சிகள், பரிசுப் பொருட்கள், ஏற்பாடுகள் என்று எளிமையாகக் கணக்கிட்டாலும் குறைந்தபட்சம் 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கலாம். இவ்வளவு பெரிய பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்ட தமிழ்ச் சங்கமத்தால் தமிழிற்கு ஏதும் பயனில்லை என்பதுதான் அடிப்படையான பிரச்சினையே. புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தமிழ்க் கொலையை அரங்கேற்றிய வரவேற்பு பேனர்! தமிழ்ச் சங்கமம் நிகழ்வினை ஒன்றிய பாஜக அரசு ஒருங்கிணைக்கிறது. விழா நடைபெறுவது உத்திரப்பிரதேச மாநிலத்தில். பயணத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் தமிழ்நாட்டு மக்கள். இந்த அடிப்படையில் இரண்டு மாநில அரசுகளின் ஓருங்கிணைப்பும், பங்கேற்பும் இருந்திருக்க வேண்டும். ஆனால், உ.பி.முதல்வர் யோகி மட்டுமே எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்றிருக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. அரசு சார்பில் யாரும் அழைக்கப்படவும் இல்லை. ஒரு மாநில அரசுக்கு தகவலே அளிக்காமல் அம்மாநிலத்தில் இருப்பவர்களை வைத்து நிகழ்வினை திட்டமிட்டுள்ளனர். இது, தமிழ்ச் சங்கமத்தின் நோக்கத்தையே சந்தேகிக்க வைக்கிறது. காவி மயமான பயணங்கள் எழுத்தாளர்கள் குழுவின் பயணம் நவம்பர் 22 ஆம் தேதி சென்னையில் இருந்து துவங்கியது. மூன்று பெட்டிகளில் நிறைந்திருக்கும் எழுத்தாளர்களில் நிச்சயம் நமக்கு யாரையாவது தெரிந்திருக்கும் என்று அலைந்து, திரிந்ததில் கடைசி நேரத்தில் அவசரமாகச் சேர்க்கப்பட்ட மிகச் சிலரைத் தவிர யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது என்ன குழு என்று தெரியாமலேயே பயணிப்பவர்களும் இருந்தார்கள். முகநூல் எழுத்தாளர்களும் இருந்தார்கள். புதுச்சேரி பல்கலைக்கழக்த்தின் தமிழ்த் துறை சார்பில் 30 கல்லூரி மாணவர்கள் இக்குழுவில் இணைக்கப்பட்டிருந்தார்கள். ஆக, 212 பேரில் சுமார் 40 பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் பி.ஜே.பி. கட்சிக்கார்களாகவோ, ஏதோ ஒருவகையில் கட்சியோடு தொடர்புடையவர்களாகவோ இருந்தார்கள். காசி தமிழ்ச் சங்கமத்திற்காக மோடி படம் வரைந்த ரயில் பெட்டிகள்! ஒவ்வொரு முக்கியமான நிறுத்தத்திலும் அங்குள்ள பி.ஜே.பி. ஆட்கள் கொடிகளோடு பங்கேற்று வரவேற்பளித்தார்கள். ரயில் தமிழ்நாட்டைக் கடந்தவுடன் பயணத்தின் நிறம் காவியாக மாறிக் கொண்டேயிருந்தது. ரயில் பயணத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ரயில்வே பொறுப்பாளர்கள் சிலரும், சென்னை ஐ.ஐ.டி. அலுவலர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் நபர்களாக பி.ஜே.பி. ஆட்களே இருந்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. சென்னை, கோவை பகுதிகளைச் சேர்ந்த பி.ஜே.பி. ஆட்களே முழு பயணத்தையும் ஒருங்கிணைத்தார்கள். ‘வணக்கம் அயோத்தியா’ என ஆங்கிலத்தில் வரவேற்கும் பேனர்! ”புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் நம்ம கட்சி ஆட்கள்தான்” என்றும், ”இது கட்சி ஆட்களுக்கான ஏற்பாடு” என்றும் பலர் வெளிப்படையாகவே பேசினார்கள். காவிக் குரல்களுக்கு மத்தியில் அவர்களின் வரலாற்று அறிவை யோசித்தபடி பயணம் செய்வது தனிமைச்சிறை போல கொடுமையானதாக இருந்தது. பங்கேற்றதிலும், ஒருங்கிணைத்ததிலும், ஊர் ஊருக்கு வரவேற்றதிலும் காவியே தூக்கலாக இருந்தது. இது கலாச்சாரப் பகிர்விற்கான பயணமா? ஒன்றிய அரசு இப்பயணத்தை கலாச்சாரப் பகிர்வுப் பயணம் என்று பெருமையாக அழைத்துக் கொள்கிறது. உண்மையில் இது வட இந்திய – தென் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிதத்தா..? என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். ரயிலில் போய் இறங்கிய முதல் நாள் முழுவதும் காசி கோயில்களைப் பார்வையிடுதல். இரண்டாம் நாளில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன! இடையில் அசோகரின் நினைவுச் சின்னம் இருக்கும் சாரநாத்திற்கு சென்று திரும்புதல். மூன்றாம் நாள் அலகாபாத் கோயில்கள், நான்காம் நாள் அயோத்தி கோயில்கள். மறுபடியும் ஊர் திரும்புதல். இந்த நான்கு நாள் சுற்றுலா திட்டத்தில் எந்த கலாச்சாரம் இருக்கிறது? காசி விஸ்வநாதர் கோவில் புத்த மத்தின் புனிதச் சின்னமாக கருதப்படும் சாரநாத் தவிர, மற்ற அனைத்து இடங்களுமே இந்து மதக் கோயில்கள்தான். அதிலும், சாரநாத்தின் மிக முக்கியமான அருங்காட்சியகத்தின் விடுமுறை நாளன்று அழைத்துச் சென்றிருந்தார்கள். மிகக் குறைவான நேரத்தில் சாரநாத்திற்கு பெயரளவில் அழைத்துச் சென்று திரும்பினார்கள். வட இந்தியாவின் பெளத்தம், ஜைனம், இஸ்லாம், கிறிஸ்துவம் உள்ளிட்ட இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் எந்த இடமுமே சுற்றுலாவில் இல்லை. குறைந்த பட்சம் இந்து மதத்தின் பன்முகத்தன்மைக்காவது நியாயம் செய்திருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. சைவ சமயத்தின் புனிதத் தலமான காசிதான் சுற்றுலாவின் மையம். அங்கிருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் இருக்கும் வைணவத் தலமாகவும். புத்த சமயத்தின் புனிதத்தலமாகவும் கருதப்படும் கயா தவிர்க்கப்பட்டிருக்கிறது. கலாச்சாரம் குறித்த எவ்வித உரையும் விழாவில் இடம்பெறவில்லை. பனாரஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு கரகாட்டமும், அயோத்தி நிகழ்ச்சியில் ராமர் கதை நடனமும் தவிர தமிழ் பன்பாடு சார்ந்த எந்த கலை நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. இதுதான் கலாச்சாரப் பகிர்வுக்கான திட்டம் என்று ஊடகங்களால் புகழப்படுகிறது. கங்கைக் கரையில் தமிழ் முழக்கமா..? மொத்த பயணத்திலும் இரண்டே இரண்டு நிகழ்வுகளை நல்லதெனச் சொல்லலாம். ஒன்று – காசியில் பாரதியார் 7 ஆண்டுகள் தங்கியிருந்த வீட்டினைப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆர்வத்தோடு கூட்டமாக அங்கு செல்லும் போது வீட்டின் கதவு அடைத்துக் கிடந்தது. வாசலில் கட்டிடத் தொழிலாளர்கள் வேலைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடனான ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, தரையை பழுதுபார்த்துக் கொண்டிருந்த பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு பத்து நிமிடத்தில் பார்த்து விட்டு வந்து விடுமாறு உள்ளே அனுமதித்தார்கள். பாரதியாரின் அத்தை மகன் கிருஷ்ணன் (வயது 96) ஓய்வில் இருந்தார். அவருடைய மகள் வந்தவர்களோடு உரையாடினார். பனாரஸ் நிகழ்ச்சிக்காக வருகை தரும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளநதரராஜன் இன்னும் சற்று நேரத்தில் பாரதி இல்லம் வருவதாகவும், அதற்காகத்தான் தரையை சரி செய்யும் பணி நடைபெறுவதாகவும் , எனவே அனைவரும் பார்த்து விட்டு உடனடியாக வெளியேறிவிடும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார். பாரதிக்கு சுதந்திர உணர்வும், பெண்ணுரிமை குறித்த புரிதலும் ஏற்பட்ட வீடு இது. தலையில் இருந்த குடுமியை கத்தரித்து எறிந்து விட்டு, முண்டாசு கட்டிய நகரம் காசி. அதனை கொஞ்சம் நிதானமாகப் பார்க்கும் வாய்ப்பினையும் ஆளுநர் தமிழிசை பறித்துக் கொண்டார். இன்னொரு முக்கியமான இடம் – அலகாபாத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சந்திர சேகர ஆசாத் பிரிட்டிஷ் போலீசிடம் போரிட்டு, அவர்களிடம் சிக்கக் கூடாது என்பதற்காக தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இடமான ஆசாத் பூங்கா. இந்த இரண்டு இடங்களையும் பயணத்திட்டத்தில் கழித்து விட்டால், இது முழுமையான காவிப் பயணமாகவே இருந்திருக்கும். சரி.. இந்தப் பயணம் தமிழுக்கு என்ன செய்தது..? கங்கைக் கரையில் தமிழ் ஒலித்ததா இல்லையா..? மொத்த நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரே ஒரு கருத்தரங்கம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் சில பேராசிரியர்களும், எழுத்தாளர் மாலனும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்கள். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடவும், பல்கலைக்கழக கீதம் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்த் தாய் வாழ்த்திற்கு இடமளிக்கப்படவில்லை. தீடீரென்று தமிழுணர்வு பெற்ற தமிழிசை மேடையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொன்னார். அதற்கான எந்த ஏற்பாடும் இல்லாததால் பங்கேற்றோர் அனைவருமே இணைந்து பாடினோம். இது தான் காசி தமிழ்ச் சங்கமம் தமிழுக்குச் செய்த சிறப்பு. தமிழிசை செளந்திரராஜனும், மாலனும் பங்கேற்ற கருத்தரங்கம். கருத்தரங்கில் தமிழ் குறித்த உரைகள் எதுவும் நடைபெறவில்லை. மாலனின் உரையில் பாரதியின் காசி வாழ்க்கை குறித்த செய்திகள் இடம்பெற்றிருந்தன. மகாகவி பாரதியார் காசியில் வாழ்ந்த காலத்தில்தான் தன்னுடைய குடுமியைக் கத்தரித்து, கிராப் வைத்துக் கொண்டார். நிவேதிதா அவர்களைச் சந்தித்து பெண்ணுரிமை குறித்த புரிதல் பெற்றார். சுதந்திர இந்தியா குறித்த கனவுகளை வளர்த்துக் கொண்டார். ஆக, பாரதியின் காசி வாழ்க்கை என்பது வைதீகத்திற்கு எதிரான மனநிலையை அளித்ததில் முக்கியப் பங்கு வகித்தது. மாலன் உரையில் தவிர்க்கவே முடியாத நிலையில் இச்செய்திகள் இடம்பெற்றிருந்தன. பாரதியார் குறித்த இன்னும் சில செய்திகளை தமிழிசை பகிர்ந்து கொண்டார். பாரதி குறித்த இந்த உரையை மட்டும் விட்டு விட்டால், தமிழ் பற்றிய எந்த உரையோ, நிகழ்வோ திட்டத்தில் இல்லை. காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் கேமரா அனுமதி இல்லாததால் தப்பும், தவறுமாகத் தமிழ் தாண்டவமாடும் வரவேற்பு பலகைகளை பதிவு செய்ய இயலவில்லை. ஆனாலும், ஒரு பேனர் முகநூலில் பரவிவருகிறது. கங்கைக் கரையிலும்சரி… கட்சிக்காரர்களைப் பார்க்கும் போதும் சரி.. அங்கு ஒலித்த குரல்கள் அனைத்தும் “பாரத் மாதாகீ ஜே” எனவும், “வந்தே மாதரம்” ”ஜெய்ஸ்ரீ ராம்“ “மோடிஜி வாழ்க” என்பதாகவுமே இருந்ததே தவிர, தாய்த் தமிழை வாழ்த்தும் குரல் எங்கும் ஒலிக்கவில்லை. பயணத்தின் உள்நோக்கம் என்ன? இந்தப் பயணம் கலாச்சார பரிமாற்றத்திற்கானதும் இல்லை.. தமிழ் வளர்ச்சிக்கானதும் இல்லை. என்றால், அதன் நோக்கம்தான் என்ன? சுற்றுலா செல்லும் இடங்களை கூர்மையாகக் கவனித்தால் இரண்டு நகரங்கள் வெளிப்படையாகத் தெரியும்… ஒன்று – காசி. இன்னொன்று – அயோத்தி. இடைச் செருகலாகவே அலகாபாத்தும், பெயரளவில் சாரநாத்தும் இருக்கிறது. காசிக்கும் – அயோத்திக்கும் ஒரு மிக முக்கியத் தொடர்பு உண்டு. இரண்டு நகரங்களில் உள்ள கோயில்களுமே பல ஆண்டுகளாக பிரச்சினைக்குரியவை. மிக பிரமாண்டமாக கட்டி எழுப்பபட்டு வரும் அயோத்தி ராமர் கோவில்! அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் இருந்த கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக இருந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. ராமர் கோயில் – பாபர் மசூதி விவகாரத்தில் ஆதாயம் அடைந்தவர்கள் சங்கிகளும், பி.ஜே.பி.யும்தான் என்பது நமக்கு வெளிப்படையாகவே தெரியும் உண்மை. காசியிலும் அதே போன்ற சர்ச்சை நடந்து வருகிறது. இப்போது காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள இடத்தின் மிக அருகே, கோயிலுக்குள் செல்லும் அனைவரும் கடந்து செல்லும் இடத்தில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இப்போது அது ராணுவத்தின் பாதுகாப்பில் தடை செய்யப்பட்ட பகுதியாக, நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் முன்பு காசி விஸ்வநாதர் கோயில் இருந்தது. அதனை முகலாய மன்னன் ஒளரங்கசீப் இடித்து விட்டு, மசூதியைக் கட்டினான் என்ற நம்பிக்கை இங்கும் உண்டு. அந்த நம்பிக்கையில் 1750 இல் ஜெய்ப்பூர் மன்னர் மசூதிக்கு அருகில் இருந்த இடத்தை விலைக்கு வாங்கினார். மராட்டிய ராணி அகிலா பாய் அதில் சிறிய கோயிலை மசூதியின் அருகில் 1780 களில் கட்டினார். 1835 இல் பஞ்சாப் ராஜா ரஞ்சித் சிங், கோயிலை விரிவு படுத்தினார். இப்போது கோயிலின் அருகில் இருந்த வீடுகள், கடைகள் அனைத்தும் அரசால் கையகப் படுத்தப்பட்டு விரிவான கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மசூதியின் தண்ணீர் தொட்டியில் சிவலிங்கம் இருந்ததாக சர்ச்சை எழுப்பப்பட்டு, வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆக, பாபர் மசூதி இருந்த இடத்தில் இப்போது கோயில் கட்டப்படுகிறது. ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என்று எண்ணத்தை உருவாக்கும் விதமாக சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் காசிக்கு அழைத்துச் செல்லப்படும் நபர்களிடம் ஞானவாபி – விஸ்வநாதர் கோயில் இவற்றைக் காட்டி பயணத்தில் இணைந்திருக்கும் சங்கிகள் “கோயில் இருக்கும் இடத்தில் எல்லாம் மசூதியைக் கட்டி வைத்திருக்கிறார்கள்” என்ற கருத்தினை உருவாக்குகிறார்கள். மசூதியை எப்படி அப்புறப்படுத்தலாம் என்ற முன்மாதிரிக்காக தொடந்து, அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு ராமர் கோயில் காட்டப்படுகிறது. அங்கும், கோயில் வந்த கதை வெற்றிக் கதையாக சொல்லப்படுகிறது. அயோத்தியில் வரவேற்பிற்காக வைக்கப்பட்டிருக்கும் பேனர் ஒன்று இவ்வாறு கூறுகிறது “Experience ayodhya in it’s original form”. அயோத்தியின் உண்மையான அமைப்பில் இப்போது பார்க்க முடியுமாம்… அப்படியானால், இது எதைக் குறிப்பிடுகிறது..? பாபர் மசூதியில்லாத அயோத்தியைத் தானே..? பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அரசு பாஜகவிடம் இல்லை. ஆனாலும், வன்முறை மூலம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. ஞானவாபி மசூதியை சட்டத்தைப் பயன்படுத்தியே கைப்பற்றிக் கொள்ள முடியும். ஏனென்றால், இப்போது அரசும் தொல்லியல் துறையும், நீதித் துறையும் அவர்கள் கையிலேயே இருக்கிறது. தமிழ்ச்சங்கமம் நிகழ்வு கலாச்சாரப் பரிமாற்றத்திற்குப் பயன்படவில்லை. தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படவில்லை. மாறாக, ஒற்றைக் கலாச்சாரத்தை நிறுவுவதற்கான கருத்தியலைப் பரப்பப் பயன்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டப்படி, தமிழ் நாட்டின் வெகுமக்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்றிருந்தால் கருத்தியல் ரீதியாக காவியின் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், சங்கிகளின் அவசரத்தால், பி.ஜே.பி. ஆட்களே இருக்கைகளைப் பூர்த்தி செய்து கொண்டதால், அந்த நோக்கமும் நிறைவேறப் போவதில்லை. காசி தமிழ்ச் சங்கமத்தினை, காவி – தமிழ் சங்கமமாக மாற்ற முயற்சித்த ஒன்றிய அரசின் இந்த திட்டம் படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதே கள எதார்த்தம். https://aramonline.in/11533/kashi-tamil-sangamam-direct-visit/
  23. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: விமர்சனம்! KaviDec 10, 2022 09:16AM ஷேர் செய்ய : அட்லி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த “மெர்சல்” படத்திற்கு பிறகு கடந்த ஐந்து வருடங்களாக நடிகர் வடிவேலு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் மருதமலை, தலைநகரம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சுராஜ் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. அப்போது தமிழ் பேசும் சமூகம் அந்தப் படம் வெளியாகும் நாளை ஆசையுடன் எதிர்பார்த்து காத்திருந்தது. ஐந்து ஆண்டுகாலமாக வடிவேலு நடித்த புதிய படங்கள் வெளியாகவில்லை என்றாலும் தொலைக்காட்சி, வலைதளங்கள், வாட்சப், மீம்ஸ்கள் என தமிழ் பேசும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் எப்போதும் இருந்தார். அவரை அகன்ற திரையில் காண காத்திருந்தனர். இந்நிலையில் தான் நேற்று (டிசம்பர் 9) உலகம் முழுவதும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” வெளியானது. இப்படத்தில் நாய்சேகர் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு, சிவாங்கி கிருஷ்ணகுமார், ரெடின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேசு, பூச்சி முருகன், மனோபாலா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டிரெய்லரில் வடிவேலுவை ‘இந்தியாவின் முதல் நாய் கடத்தல்காரன்’ என்று அறிமுகப்படுத்தினார்கள். வடிவேலு நடந்தால், நின்றால், பேசினால், அழுதால், சிரித்தால் எல்லாமே பார்ப்பவர்களை மனம்விட்டு சிரிக்க வைக்கும் அற்புத கலைஞன். ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவர் நடிப்பில் வெளியாகும் படம் நகைச்சுவையில் அதகளம் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் படத்தை பார்த்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. புதிய மொந்தையில் ஊற்றிய பழைய கள்ளாகவே இருக்கிறது, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கதையும், அதில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகளும். அப்படி என்னதான் கதை வடிவேலுவின் பெற்றோர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வருகிறது. குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது அங்கு ஒரு சித்தரும் வருகிறார். பசியுடன் இருக்கும் அவருக்கு உணவளித்து உதவும், வடிவேலு பெற்றோருக்கு அந்த சித்தர் நாய் ஒன்றை பரிசாக கொடுக்கிறார். அந்த நாய் வந்த நேரம் அந்த தம்பதிகளுக்கு குழந்தை ஒன்று பிறக்கிறது. அவர் தான் நாய் சேகர்(வடிவேலு). அதே நேரம் வறுமையில் வாடிக் கொண்டிருந்த அந்த குடும்பத்திற்கு வசதி வந்து சேர்கிறது. ஒரு கட்டத்தில் வீட்டில் வேலை செய்து வரும் ஒருவர் அந்த ராசியான நாயை திருடி சென்று விட திருடியவர் பணக்காரனாகி விடுகிறார். நாய் சேகரின் குடும்பம் மீண்டும் பழையபடி வறுமை நிலைக்கு செல்கிறது. அந்த நாயை தேடி கண்டுபிடிப்பதற்காக தனது குழுவை அழைத்துக் கொண்டு நாயை தேடிச் செல்கிறார் வடிவேலு, அவர் இறுதியில் அந்த நாயை மீட்டாரா? என்ன நடந்தது என்பது குறித்த கதை தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். அதேசமயம் பணக்காரர்களின் நாய்களையும் கடத்தி பணம் பறிக்கும் வேலையில் வடிவேலு ஈடுபட்டு வருகிறார். அப்படி தன் குழுவினருடன் ஒரு நாயை கடத்திக் கொண்டு வருகிறார். அந்த நாய் வில்லன் ஆனந்தராஜுடையது என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. ஹைதராபாத்தில் இருக்கும் வசதியானவரிடம் இருந்து தன் குடும்பத்திற்கு ராசியான நாயை நாய் சேகர் மீட்க முயற்சிப்பதை இரண்டாம் பாதியில் காட்டியிருக்கிறார்கள். அந்த முயற்சியில் நாய் சேகர் ஜெயித்தாரா என்பதுதான் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை. நாய்களை கடத்தும் கதைநாயகன் என்பது வித்தியாசமான கதையாக இருந்த போதிலும் திரைக்கதையை குதறி எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாதி திரைக்கதையில் நகைச்சுவை வறட்சி தலைவிரித்தாடுகிறது. வடிவேலு நாய் கடத்துபவர் என காட்ட நினைத்து வைக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் எரிச்சல் அடைய வைக்கிறது. ஆனந்த்ராஜ் – வடிவேலு நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் சுவாரஸ்யம். காமெடி நடிகர்கள் கூட்டமாக இருந்தும் அவர்களால் திரைக்கதைக்கு தேவையான நகைச்சுவையை கொடுக்க முடியாததாலும், அழுத்தமில்லாத காட்சிகளாலும், வடிவேலு தன்னால் முடிந்த நடிப்பையும், உழைப்பையும் கொடுத்தும்ப்கூட படத்தை காப்பாற்ற முடியவில்லை. படம் எப்படி இருந்தாலும் சில படங்கள் வணிகரீதியாக திரையரங்குகளில் கல்லா கட்டிவிடும். படத்தின் பெயர் அறிவித்த நாள் முதல் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் தகவல்கள், அதிகாரபூர்வ செய்திகள், முதல் சிங்கிள்ஸ், பாடல் வெளியீடு, டிரைலர் வெளியீடு என எல்லாவற்றிலும் பிரம்மாண்டத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதற்குரிய வரவேற்பு திரையரங்குகளில் நேற்றையதினம் காலைக்காட்சி முதலே இல்லை என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில். அதனை முதல் நாள்” நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” தமிழ்நாடு முழுவதும் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் அளவில் மொத்த வசூல் செய்துள்ள தகவல் உறுதிப்படுத்துகிறது. https://minnambalam.com/cinema/naar-sekar-returns-movie-review/
  24. பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் ஆகிய மாவீரர்களின் தந்தையார் சாவடைந்தார்! AdminDecember 9, 2022 தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் அவர்களின் தந்தை கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் நேற்று (08.12.2022) காலமானார். யாழ்.தென்மராட்சி, கொடிகாமம் வரணிப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் சுகயீனம் காரணமாக நேற்றுக் காலமானார். http://www.errimalai.com/?p=79992
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.