Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. 1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ் adminNovember 11, 2024 விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் நேற்றையதினம் (10.11.2024) யாழ் ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் என்னைப்பற்றி முழுக்க முழுக்க உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான விடயங்களை கூறியுள்ளார். குறிப்பாக அவரது உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான பரப்புரையானது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு கிடைக்க இருக்கின்ற வெற்றியினை பாதிக்கக்கூடிய வகையில் அவரது பொய்யானதும் மற்றும் உண்மைக்கு மாறானதுமான கூற்று அமைந்துள்ளது. இந்நிலையில் அவரின் இந்த பொய்யான கூற்றுக்களுக் கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக எனது சட்டதரணிகளிடம் பாரப்படுத்தியுள்ளேன். இந்த பொய்யான மற்றும் என் நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்த அவரினது பொய்யான கூற்றிற்கு, 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன். இதேவேளை விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் தான் கூறியது விடயங்கள் பிழை என்றும் உண்மைக்கு மாறான விடயம் என்றும் பத்திரிகையாளர் மாநாட்டினூடாக அல்லது அறிக்கையின் ஊடாக உடனடியாக அறிவிக்க தவறும் பட்சத்தில், அவருக்கு எதிராக 1000 கோடிரூபா நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/208183/
  2. இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் adminNovember 12, 2024 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 – 2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார். கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார். யாழ் போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார். அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செயற்படுகிறார். https://globaltamilnews.net/2024/208189/
  3. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது adminNovember 12, 2024 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இன்று செவ்வாய்கிழமை (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டக்களப்பு வேட்பாளருமான பிள்ளையான எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நாஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு , மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நேற்று திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல்கள் சட்டங்களுக்கு முரணான வகையில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2024/208215/
  4. எனது வாக்கு மணிக்கு! எந்த மணி என்று கேட்கக்கூடாது🤪
  5. பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுவதால், பல கட்சிகளை/குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு புள்ளடி போடுவது நிராகரிக்கப்பட்ட வாக்குகளை அதிகரிக்கச் செய்யும்! @goshan_che, மாம்பழக் கட்சி தெரிவில் உள்ளதா? எனது இரகசிய வாக்கு அவர்களுக்குத்தான்😆
  6. பாராளுமன்றத் தேர்தலில் யார் வெல்வார்கள் என்று சொல்லும் இலங்கைத் தீவு முழுவதுக்குமான கருத்துக்கணிப்பு! https://www.scribd.com/document/770823437/Survey-on-Presidential-Election-2024-By-Pradeep-Chanaka கருத்துக்கணிப்பு யாழில் அநுரகுமார பிரச்சாரம் செய்யமுன்னர்எடுக்கப்பட்டதால் எவ்வளவு தூரம் சரியென்று சொல்லமுடியாது!
  7. வெற்றிவாகை சூட இலங்கைத் தீவு முழுவதுக்குமான கருத்துக்கணிப்பு உதவும்😀 https://www.scribd.com/document/770823437/Survey-on-Presidential-Election-2024-By-Pradeep-Chanaka கருத்துக்கணிப்பு யாழில் அநுரகுமார பிரச்சாரம் செய்யமுன்னர் எடுக்கப்பட்டதால் எவ்வளவு தூரம் சரியென்று சொல்லமுடியாது!
  8. சமுதாய வைத்தியர் Dr முரளி வல்லிபுரநாதன் பதிவு.. தமிழ் வாக்காளர்களில் மாற்றம் அவசியம் தென் பகுதி வாக்காளர்கள் ஊழல்வாதிகள், குற்றச் செயல்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள், பொது சொத்துக்களை அபகரித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்கள் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் ஆகியோரை தவிர்த்து புதிய தலைவர்களை தேடி வாக்களிக்க தொடங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் இதன் பிரதிபலிப்பாக தேசிய மக்கள் சக்தி 42% வாக்குகளை பெற்று வெற்றி ஈட்டி இருந்தது. ஆனால் அந்த மாற்றம் தமிழர் மற்றும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிர்ச்சியால் தென்பகுதியில் பல அரசியல் தலைவர்கள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் இருந்து முற்றாக ஒதுங்கியுள்ளார்கள் அல்லது ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டு பலமான எதிர்க்கட்சி ஒன்றை அமைப்பதற்கு வாக்கு கேட்க தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தி தென்பகுதியில் மேலும் அதிக வாக்குகளை பெற்று 50% எல்லையை கடந்து பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல கருத்துக் கணிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. அதனால் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை ஆராய்ந்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முன்கூட்டியே எதிர்வு கூறுவது இலகுவாக இருந்தது. ஆனால் இம்முறை ஏனைய ஜனநாயக நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஆய்வுகளை இலங்கை தேர்தல் ஆணையம் தெளிவான காரணம் எதையும் கூறாமல் தடை செய்துள்ளது. இது ஒரு புறம் இருக்க தமிழர் வாழும் பகுதிகளில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஆராய்ந்தால் முன்பை விட இம்முறை அதிகமாக கயவர்கள், பித்தலாட்டக்காரர்கள் மோசடியாளர்கள் தமிழர் பகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது தமிழ் வாக்காளர்களை தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற முழு நம்பிக்கையுடன் இவர்கள் இருப்பதை காட்டியுள்ளது. கடந்த காலங்களில் சிறு சிறு சலுகைகள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் மூலமாக பெற்றுக்கொண்ட உதவிகளுக்காக தமிழ் வாக்காளர்கள் கொலைகாரர்களுக்கும் ஏனைய குற்றவாளிகளுக்கும் வேடதாரிகளுக்கும் வாக்களித்ததன் விளைவாக இம்முறையும் அதே வெற்றியை பெற முடியும் என்று இந்த வேட்பாளர்கள் எண்ணுகிறார்கள். இதன் பின்னணியில் வெளிநாட்டு வியாபாரிகள் ஐந்தாம் படைகள் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் என்ன செய்வது என்று தெளிவான திட்டம் எதுவும் இன்றி எதாவது செய்யவேண்டும் என்று புலத்திலும் நாட்டிலும் உள்ள சில உணர்ச்சிபூர்வமான அப்பாவிகள் உட்பட்ட பலர் இருக்கிறார்கள், இந்தப் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி முன்னிலைப்படுத்தியுள்ள 7 வழக்குகளில் தமிழர்களுடன் தொடர்புடைய 3 முக்கிய வழக்குகளை எடுத்துக் கொள்ளலாம். 1. ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை வழக்கு அமைதியாக மெல்லிய குரலில் பேசும் சித்தார்த்தன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை விட விலையுயர்ந்த வாகனங்களை பல தடவைகள் இறக்குமதி செய்து மக்கள் வரிப்பணத்தை சுருட்டி இருக்கிறார் என்பது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இணைந்து போட்டியிடும் மண்டையன் குழுவின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுன்னாகம் நீர் மாசடைதலில் தமிழ் மக்கள் தான் தங்களுடைய கிணறுகளில் கழிவு ஒயில் கலந்தார்கள் என்று முதுகில் குத்திய ஐங்கரநேசன் என்று ஒரு ஒட்டுமொத்த குற்றக் கும்பல் ஒன்று பட்டு போட்டியிடுகிறது 2. உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை வழக்கு பிள்ளையானும் கருணாவும் இணைந்து செயல்[பட்ட காலத்தில் கிழக்கில் பல படுகொலைகள் காணமல் போதல் இடம்பெற்று இருந்தன. 2009 இல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு சமுதாய மருத்துவம் கற்பிப்பதற்கு உபவேந்தர் காணாமல் போனது மற்றும் விரிவுரையாளர் தம்பையா கொல்லப்பட்டது போன்ற நிகழ்வுகளின் பின்னணியில் எவருமே முன்வராத நிலையில் நான் அங்கு சென்றபோது பலருடைய கண்ணீர் கதைகளை கேட்டேன். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கும் இறந்தவர்களுக்கும் நீதி கிடைப்பது மிகவும் அவசியம். 3. 2011 இல் லலித் மற்றும் குகன் காணாமல் போன படுகொலை வழக்கு உறவினர்கள் கோத்தபாயாவின் மீது குற்றம் சாட்டியுள்ள போதிலும் இவர்கள் ஒட்டுண்ணி குழுக்களின் மூலமே காணாமல் ஆக்கப்பட்டு இருந்தார்கள். 20 வருடங்களுக்கு மேலாக சிறீதர் திரை அரங்கு கட்டிடம் மற்றும் பல தனியார் சொத்துக்களை அபகரித்து வைத்துக் கொண்டு அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி உரிமையாளர்களின் வழக்குகளை தள்ளிப்போட்டு கொண்டு இருக்கும் குற்றவாளிக் கும்பல் அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் தமிழர் பகுதியில் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் தமிழர்கள் தர்மத்தின் வழிநடக்க வேண்டும். தமிழ் வாக்காளர்கள் தொடர்ந்தும் குற்றவாளிகளிடம் பெற்றுக் கொண்ட உதவிகளுக்காக செஞ்சோற்று கடன் தீர்க்க குற்றவாளிகளுக்கு தொடர்ந்தும் வாக்களித்தால் கர்ணனை போல் அழிவுக்கு உள்ளாவார்கள். இந்தக் குற்றவாளிகளுக்கு வாக்களிப்பதை நிறுத்தினால்தான் சட்டத்தின் பிடியில் இவர்களை இலகுவாக நிறுத்தி தமிழர் பகுதிகளில் நீதியையும் தர்மத்தையும் நிலைநாட்ட முடியும் மறுபுறம் தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி பிரபலமான அரசியல் முதிர்ச்சி அடைந்த ஒரு சில வேட்பாளர்களையே குறுகிய காலத்தில் அடையாளம் கண்டு தேர்தலில் நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு தென்பகுதியில் வீசும் அதே வெற்றி அலையை வடக்கு கிழக்கில் பேணுவதில் சங்கடம் ஏற்பட்டுள்ளது. இதைவிட விச(ர்) ஊசிக் கும்பல் தமிழ் வாக்காளர்களை நகைச்சுவை கும்பலாக மாற்ற முயல்கிறது. இதேவேளை தமிழ் தேசியம் என்றால் என்ன என்பதையே அறியாத தமிழ் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க போகிறார்கள் என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும். Dr முரளி வல்லிபுரநாதன் 11.11.2024
  9. பலமான எதிர்க்கட்சியும்; ஜேவிபியின் கட்டமைப்பு மாற்றமும் இலங்கையின் அரசியல் இலக்கு ஒன்றை நோக்கிய திசையில் செல்வதை தற்போது உணர முடிகின்றது. கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசாங்கத்தை நடத்துவதற்கு தேவையான நாடாளுமன்ற அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென அவரது கட்சியும் சில விமர்சகர்களும் கூறுகின்றனர். முரண்பாட்டில் உடன்பாடாக இந்த அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சில எதிர்க்கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் கூட இந்த அரசாங்கம் அதிக அதிகாரத்தைப் பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று வெளிப்படுத்துகின்றனர். தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை சமர்பித்துள்ள 8361 வேட்பாளர்களுள் 1000க்கும் குறைவான வேட்பாளர்கள் மாத்திரமே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இவ்வாறு பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள பல வேட்பாளர்கள் பலமான எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்ற தொனிப் பொருளில் பிரசாரம் செய்வதை தற்போது காணக்கூடியதாக உள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் கூட ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதியளித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த தடையற்ற நாடாளுமன்ற அதிகாரம் அல்லது அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதில் எந்த சிக்கல்களும் இல்லை. எனினும், நாடாளுமன்றம் என்பது ஆளும் கட்சி மட்டும் இருக்கும் இடம் அல்ல. இப் பின்னணியில்தான் ‘நாடாளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்புவோம்’ என மேற்கொள்ளும் பிரசாரங்கள் அடிப்படை தன்மை அற்றவையாக பார்க்கப்படுகின்றன. நாடாளுமன்றம் என்பது ஒரு தனித்துவமான விவாத மைதானமாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மாத்திரம் இருக்குமானால் அவ்வாறான அரசாங்கம் அதிகாரமிக்க சர்வாதிகார அரசாங்கமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய அரசாங்கங்கள் நாட்டிற்கு அழிவுகரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமலுமில்லை. எனவே, புதிய நாடாளுமன்றம் பற்றி சிந்திக்கும் போது பலமான எதிர்க்கட்சி பற்றி பேசுவதிலும் தவறுகள் எதுவும் இல்லை. ‘இது எதிர்க்கட்சி அல்ல, ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு’ என்ற தொனியில் பிரசாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வெளியேற்ற வேண்டும் என கடந்த காலங்களில் கோஷங்கள் எழுப்பப்பட்ட போது கூட தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் கூட தங்களை ஆட்சி அமைக்க அழைத்தால், ஊழலற்ற ஏனைய கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் கூட்டி, அமைச்சரவையை அமைத்து, ஆட்சி அமைப்போம் என, பலமுறை தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கூறினர். ஆக, ஒரு கூட்டுறவு அரசாங்கத்தை நடத்துங்கள் என்பதே மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது. நாடாளுமன்றில் நான்காவது அதிகாரம் எதிர்க்கட்சி தலைவருக்கு உரியது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் உள்ள குழுக்களின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சியினரிடம் உள்ளது. கடந்த காலங்களில், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இத்தகைய குழுக்களுக்கு தலைமை தாங்கினர். அதற்குக் காரணம் எதிர்க்கட்சிகளின் பிரதான பங்கு. எனவே, அதிகாரப் பேராசை இல்லாவிட்டால், பலமான ஆட்சியைக் கட்டியெழுப்பவும், வலுவான எதிர்க்கட்சியைத் தக்கவைக்கவும் எங்களைப் போன்ற பொருத்தமானவர்களை எதிர்க்கட்சிக்குத் தெரிவு செய்யுங்கள் என்று தேசிய மக்கள் சக்தி பிரசாரம் செய்தால் அது அரசியல் அறமாக இருக்கும். எவ்வாறாயினும், பிரசாரம் செய்யும் வேட்பாளர்களும் அதனை புரிந்து பலமான ஒரு எதிர்க்கட்சியை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதும் வரவேற்கத்தக்கது. ஏனெனில், இலங்கை நாடாளுமன்றத்திற்கு பலமான எதிர்க்கட்சி அத்தியாவசியம்! அதேநேரம் தேசிய மக்கள் சக்தி தங்கள் அடிப்படை அமைப்பான ஜேவிபியின் கொள்கை மற்றும் கட்டமைப்பிலும் மாற்றங்களை உருவாக்க வேண்டும். இலங்கைத்தீவில் ”பன்மைத்துவ அரசு” என்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும் அது தமிழர்களின் சுயநிர்யண உரிமைக்கு வழி சமைக்கவும் வேண்டும். மலையகத் தமிழர்கள், முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் எது என்பதிலும் அவதானம் தேவை. ஜேவிபிவியின் ஆரம்பகால ”கொள்கை” ”கட்டமைப்பு” என்பது தற்போது இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் மலையகத் தமிழர்கள் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் போன்றவற்றை ஏற்றுக் கொண்டதாக இருக்கவில்லை. தற்போது தேசிய மக்கள் சக்தி என்று மாற்றமடைந்திருந்தாலும் ஜேவிபியின் அடிப்படைக் கொள்கைகளில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லவும் முடியாது. தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் பலமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கும் நிலையில் ஏனைய சமூகங்களின் அரசியல் உரிமைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேசிய மக்கள் சக்தியிடம் உருவாக வேண்டும். அரசியல் தூய்மைவாதம் பேசுவது போன்று அரசியல் அறத்துக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். https://akkinikkunchu.com/?p=298803
  10. தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர் கொள்ள முடியும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தியை கேடயமாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தை தமதாக்குவதற்கு முன்பே வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக தேசிய அரசியலுக்கு எதிரான போரை ஆரம்பித்துள்ளது. அன்றைய ஆயுத யுத்த காலத்தில் சிங்கள பௌத்த இனப்படுகொலை ஆட்சியாளர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களை பாவித்ததை போன்று எம் மத்தியில் தமிழ் தேசியத்துக்கு எதிரான சக்திகளை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளனர். இன்னும் பலர் திருவிழா கால வியாபாரிகள் போன்று உழைப்புக்காக சுயமாகவும் இறங்கி உள்ளனர். அவர்களோடு சேர்ந்து சுயநல சுக போக அரசியல்வாதிகளும் போலி தேசியம் பேசி வாக்கு வேட்டையாட முற்படுகின்றனர். இவர்களை வடக்கு கிழக்கு தமிழ் தேசிய பற்றாளர்கள் தமது வாக்கினால் வீழ்த்த வேண்டும். அதுவே மாவீரர் மாதத்தில் மாவீரர்களுக்கு நாம் செய்யும் கௌரவமாகும்.எம் தேச விடுதலைக்காக தீரமுடன் செயல்படுவோர்க்கு வாக்களித்து தேசம் காக்குமாறும் வேண்டுகோள் விடுகின்றோம். தற்போதைய ஜனாதிபதி தனது பதவிக்கதிரையில் அமரும் முன்பே “யுத்த குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டிலேயே விசாரணை நடக்கும். ஆனால் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்” என்றார். அதிபர் பதவியில் அவர் அந்த பின் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்; முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பின்பற்றி “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51/1 தீர்மானத்தை ஏற்க மாட்டோம்” எனக் கூறினார். அவரே தற்போது “சமஸ்டி தீர்வுக்கு இடமே இல்லை” எனவும் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் “13 திருத்தமும் அதிகாரப் பகிர்வும் வடக்கு மக்களுக்கு தேவை இல்லை. பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வே அவசியம்” என்றார். இவை எல்லாம் தமிழர்களை அரசியல் போருக்கு அழைப்பதாகவே பொருள்கோடல் வேண்டும். இவற்றிற்கு எதிராக அரசியல் போர் தொடுக்க கூடியவர்களையே எம் தேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். போதாக்குறைக்கு மொட்டு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சரத் விஜேசேகர அவர்கள் “தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு சமஸ்டியை கொடுக்க போகின்றது அதற்கு இடமளிக்க மாட்டோம்” என கூறியிருப்பது அவருடைய அரசியல் அறியாமையும் வாக்கு வேட்டை காண பிரகடனமாகவே நாம் உணர்கின்றோம். தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் இன்றைய ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2015-2019 காலப்பகுதியில் நாடாளுமன்ற அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட வரைவின் அடிப்படையில் அரசியல் தீர்வு தொடர்பில் பேசித்திருப்போம் என கூறுகின்றார். அதில் ஏக்கிய ராஜ்ய(ஒற்றை ஆட்சி) ஆட்சியை அவர்களை வலியுறுத்தியதோடு வடகிழக்கு இணைய விடாது தடுப்பதற்கான முன் மொழிவையும் மக்கள் விடுதலை முன்னணி கொடுத்துள்ளது.தற்செயலாக தற்போதைய ஆட்சியாளர் காலத்தில் ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட்டாலும் நியமிக்கப்படும் ஆளுநர்கள் மூலம் அவர்களின் அதிகாரத்தை பாவித்து மகாணசபைகளை கட்டுப்படுத்தும் முன் மொழிவுகளையும் கொடுதுள்ளதோடு இவர்களால் பிரிக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் இணைவதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் கொடுகப் போவதில்லை. அதனாலேயே டில்வின் சில்வா வடக்கு மக்களுக்கு 13 தேவை இல்லை என்பது கிழக்கை பிரித்து விட்டே. என்கிறார்.இதுவே தமிழர்களின் அரசியலுக்கு எதிரான அவர்களின் அரசியல் மனநிலை. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தேசியத்தின் அரசியலுக்கு எதிரான புல்லுருவிகள் தமிழர் தேசம் என்றும் வியாபித்துள்ளனர். அவர்களை சரியான வகையில் நாம் அடையாளம் கண்டு களைதல் வேண்டும். அவர்களோடு தமிழ் தேசியம் பேசி பேசிய நாடாளுமன்றம் சென்றவர்கள் சுகபோகங்களை மட்டும் அனுபவித்து சிங்கள பௌத்த பெரும் தேசியவாதிகளுக்கு துணைநின்று சர்வதேச ரீதியில் போர் குற்றங்களுக்கான விசாரணைகளையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்னொரு பக்கம் 13 அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்தவர்கள் தற்போது தேர்தல் களத்திலே நிற்கின்றனர். தமிழர்களின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மிகவும் பயங்கரமானது. தெற்கின் பெரும் தேசிய வாதத்திற்கு எதிராகவும் எம் மத்தியிலே தோன்றியுள்ள எம் தேச அரசியலுக்கு எதிரான சக்திகளையும் நேரடியாக மோதி தோற்கடிக்க வேண்டிய நிலையிலே நாம் உள்ளோம். இம்முறை நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு எதிரானவர்கள் புள்ளடியினால் தோற்கடிக்க வேண்டும். எமக்காக நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க வல்லவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர் கொள்ள முடியும். அத்தகைய பெரும் சக்தியாக அணி திரண்டு எமது எழுச்சியை தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தி மாவீரர் மாவீரர்களுக்கு சுடரேற்றுவோம். அது தேசத்தின் ஒளியாகட்டும் சர்வதேசமெங்கும் வியாபிக்கட்டும். நாம் ஓர் அணியாக திரண்டு எதிர்கொள்ளும் போர் இறுதியானது. இதுவரை நாட்டை ஆண்ட பேரினவாத சக்திகள் பேச்சு வார்த்தை என்றும் தீர்வு என்றும் ஏமாற்றினார்கள். தற்போதைய ஆட்சியாளர்கள் மாற்றம் என மக்களை கவர்த்து நாடாளுமன்றில் பெரும்பான்மை பெற்று ஊழலுக்கு எதிரான போரை ஒரு பக்கம் நடத்தி க்கொண்டு இன்னொரு பக்கம் தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரையும் தொடுக்க உள்ள நிலையில் இதற்கு முகம் கொடுக்க எமது வாக்குகளை பயன்படுத்துவோம். எமது சக்தியை வெளிப்படுத்துவோம். என்றுள்ளது. https://akkinikkunchu.com/?p=298718
  11. செய்தி ஒரு வேனும் மோட்டார்சைக்கிளும் விபத்து என்று சொல்கின்றது. வேன் சாரதி விபத்து நடந்த இடத்தில் இருந்து போயுள்ளார் சிவில் உடையில் பொலிஸார் மறித்தபோது தர்க்கப்பட்டுள்ளார். மோதல் நடந்துள்ளது. யார் முதலில் கை வைத்தது என்பது தெளிவில்லை. இதை இனக்கலவரத்துடன் ஒப்பிடவேண்டியதில்லை.
  12. விபத்து நடந்தால், அதில் ஒருவர் காயப்பட்டால், பொலிஸ்வரும்வரை காத்திருக்கவேண்டும். தப்பி ஓட முனைந்ததும் சிவில் பொலிஸுடன் சண்டைபோட்டதும் அப்பாவி எனக் காட்டவில்லை. சரியாக விசாரணை நடந்தால்தான் உண்மை தெரியும்.
  13. NPP யாக JVP — கருணாகரன் — மாற்றத்துக்குரிய சக்தியாக ‘தேசிய மக்கள் சக்தி‘ (NPP) யை நம்புகின்ற – வரவேற்கின்ற அளவுக்கு அதைக் குறித்த வலுவான சந்தேகங்களும் உண்டு. இதற்குக் காரணம், JVP யாகும். NPP க்குள் ஒலிக்கும் அல்லது NPP யை இடையிடு செய்யும் JVP யின் எதிர்மறையான குரல்கள் பலமானவையாகவே உள்ளன. அதுவே சந்தேகம் (நம்பிக்கையீனம்) அச்சம் ஆகியவற்றுக்குக் காரணமாகும். குறைந்த பட்சம் NPP முற்போக்கு முகத்தையும் முகாமையும் கொண்டுள்ளது. அதனுடைய இன்றைய கவர்ச்சியே இதுதான். ஆனால், NPP யைக் கட்டுப்படுத்தக் கூடிய அல்லது அதை இடையீடு செய்யக்கூடிய நிலையிலுள்ள JVP யோ கடந்த காலத்தின் ஒளி மங்கிய பிரதேசத்திலேயே இன்னும் இருக்கப்பார்க்கிறது. இதற்கு அது தன்னுடைய அரசியல் உள்ளடக்கத்தில் கொண்டிருந்த இனவாதக் கூறுகளும் ஆயுதந்தாங்கிய அரசியற் பாரம்பரியமும் காரணமாக இருக்கக் கூடும். கைவிட முடியாத இந்தப் பலவீனங்களால்தான் JVP யாக அதனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக முன்னிலையைப் பெறவும் முடியவில்லை. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றவும் முடியவில்லை. NPP யாக தோற்றம் கொண்ட பின்பே அதற்கு ஒளிகூடியுள்ளது. அதுவே இப்பொழுது ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதனை JVP புரிந்து கொள்வது அவசியமாகும். JVP யும் NPP யும் ========== JVP யின் 60 ஆண்டுகால முயற்சிக்கும் காத்திருப்புக்கும் ஒரு வாய்ப்பை JVP தோழர்களும் அதனுடைய ஆதரவாளர்களும் இப்போது பெறுகின்றனர். ஆனால், அது தனியே JVP யினால் மட்டும் சாத்தியமாக்கப்பட்ட வாய்ப்பு அல்ல. JVP யின் முதன்மைப் பங்களிப்பு உண்டு. அதை மறக்க முடியாது. ஆனால் அந்தப் பங்களிப்பு மட்டும் வாய்ப்பை அளிக்கவில்லை. அந்த வாய்ப்பை அளித்தது JVP, NPP யாக மாற்றமடைந்ததால் உருவாகியது. இப்பொழுது வெளியரங்கில் அல்லது பொது அரங்கில் NPP க்கே செல்வாக்கும் அறிமுகமும் உண்டு. இன்றைய தலைமுறை அதிகம் அறிந்திருப்பதும் NPP யைத்தான். அதுவே வெற்றிக்கு அருகில் இருக்கிறது. வெற்றிகளைக் குவிக்கிறது. ஆனால் இதனை முழுதாக ஏற்றுக் கொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் JVP முயற்சிக்க வேண்டும். ஆனால் நடப்பதைப் பார்த்தால் இதையெல்லாம் உணர்ந்து கொள்வதற்கு JVP யினால் முழு அளவில் முடியவில்லை என்றே தெரிகிறது. JVP யின் ஐம்பது ஆண்டுகாலத் தாக்குப் பிடிப்பும் அதற்குள் அது இயக்கமாகவும் கட்சியாகவும் தன்னுடைய அரசியல் இருப்பைக் கொண்டிருந்ததும் JVP யினருக்கு ஒரு முன்னிலை உணர்வை அளிக்கிறது. ஐம்பது ஆண்டுகால அரசியற் சூறாவளிகளுக்குள் தாம் தாக்குப் பிடித்து நின்றிருக்காவிட்டால், இப்போது NPP யும் இல்லை. ஆட்சியுமில்லை என்றே அவர்கள் கருதுகிறார்கள். இது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், அதே அளவுக்கு மறுக்க முடியாத உண்மை பழைய JVP யை அப்படியே மேடையேற்ற முடியாது என்பதுமாகும். ஆனால், என்னதானிருந்தாலும் தாம் கொண்டிருந்த இலட்சியக் கனவுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று JVP யினர் எண்ணுகிறார்கள். இந்த மாதிரியான ஒரு உணர்நிலையும் உளவியற் சிக்கலும் அரசியல் இயக்கங்களில் பொதுவாக இருப்பதுண்டு. அதிலும் ஆயுதம் தாங்கிப் போராடிய இயக்கங்களின் உணர்ச்சிகரமான அணுகுமுறை (Emotional approach ) மிகச் சிக்கலானது. அதுவே JVP க்குள்ளும் கிடந்து புரள்கிறது. ஆனால், காலமும் சூழலும் இதற்கப்பால் வேறு விதமான ஒரு யதார்த்த வெளியை உருவாக்கிக் கொள்ளும். அது கடந்த காலத்தின் அத்தனை விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் இடமளிக்காது. தனக்குரிய – தனக்கு வேண்டிய – கனவுகளுக்கும் தேவைகளுக்குமே முதல்நிலையை அளிக்கும். ஆகவே இந்த யதார்த்தச் சூழலை விளங்கிக் கொண்டு செயற்படுவது மெய்யாகவே மாற்றத்தை விரும்புவோருக்கு அவசியமாகும். (இது தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். தமிழர்கள் இன்னும் போருக்குப் பிந்திய (Post – War Politics) பற்றிச் சிந்திக்க முடியாமலிருப்பது, அவர்கள் கடந்த காலத்தில் உறைந்து கிடப்பதுதான். ஆகவேதான் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியாதுள்ளது). ஆனால், JVP யினரிடம் இந்தப் புரிதலைக் காண முடியவில்லை என்பது கவலைக்குரியது. என்பதால்தான் அவர்களால் இலங்கை ஒரு பல்லின தேசம், பன்மைத்துவச் சூழலுக்காக இடம் அளிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் உணர முடியாமலிருக்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்க வேண்டும் என்று முற்போக்காகச் சிந்திக்க முடியாமலுள்ளது. இவ்வளவுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலமும் அவசரகாலச் சட்டத்தின் மூலமும் தங்களுடைய முகமும் முள்ளந்தண்டும் சிதைக்கப்பட்ட அனுபவத்தைக் கொண்டவர்கள். இருந்தும் அதிகாரத்துக்கு வந்தவுடன் பழைய காயங்களும் வலிகளும் சட்டென மறந்து, அதிகார ருசி மட்டும் தலைக்குள் ஏறுகிறது. மட்டுமல்ல, தமிழ்பேசும் மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பற்றி அக்கறை கொள்வதற்கு இன்னும் JVP க்குச் சிரமமாகத்தானிருக்கிறது. தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலிருக்கும் (வடக்குக் கிழக்கில் மக்கள் மத்தியில் உள்ள) படைகளை விலக்குவதற்கு விருப்பமில்லாதுள்ளது. தென்னிலங்கையிலும் பிற இடங்களிலும் உள்ள ஏனைய எந்த அரசியல் தரப்புகளோடும் இடையீடுகளை நடத்துவதற்கு ஆர்வமில்லாதிருக்கிறது. பிற அரசியற் சக்திகள் எதையும் விட்டு வைப்பதற்கு, அதற்கான ஜனநாயக வெளியை அனுமதிப்பதற்கும் தயக்கமாகவுள்ளது. ஏன், NPP யுடன் கூட முழு அளவில் உடன்படவும் முடியாதுள்ளது. இதனை NPP க்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் உட்கொதிப்புகள் காட்டுகின்றன. அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகிய பிறகும் JVP யின் முக்கிய தலைவர்களான ரில்வின் சில்வா, லால்கந்த, விஜித ஹேரத், சுனில் கந்துநெத்தி போன்றோர் பழைய தொனியிலேயே கடுமையான அறிவிப்புகளை விடுக்கின்றனர். இது அநுர குமார திசநாயக்கவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று தெரிந்துதான் செய்கிறார்களா? அல்லது எந்தச் சூழலிலும் இனவாதத்தைக் கைவிடப்போவதில்லை. இலங்கையில் நீடித்த ஆட்சிப் பாரம்பரியத்தைக் கைவிடப்போவதில்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்களா? அப்படியென்றால் NPP யின் ஆட்சி எப்படி இருக்கும்? NPP கூறுகின்ற மாற்றம் எப்படியானது? என்ற கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விதான் இன்று பலரிடத்திலும் அச்சத்தை உண்டாக்குகிறது. அந்தக் கேள்விகள்தான் நடக்கப்போவது NPP யின் ஆட்சியா? அல்லது NPP யின் பேரில் நடத்தப்படும் JVP யின் ஆட்சியாக இருக்குமா? எனச் சந்தேகப்பட வைக்கிறது. இதற்கான பதிலை NPP தெளிவாகச் சொல்ல வேண்டும். சொல்ல வேண்டும் என்பது, NPP தன்னுடைய நடைமுறைகளின் வழியாக அதைக் காட்ட வேண்டும். அரசியலில் சொல் என்பதையும் விட செயலே முக்கியமானது. சொல்வதை விடவும் செய்து காட்டுவது முக்கியமானது. மக்கள் செயலையே எதிர்பார்க்கிறார்கள். NPP தன்னைச் செயல்களால் நிரூபிக்க வேண்டும். செயலே விளைவுகளை உருவாக்குவது. 75 ஆண்டுகால ஆட்சித் தவறுகளையும் மக்களின் நீடித்த துயரையும் போக்குவதற்கான செயல்களாக அவை இருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகான இரண்டு மாத ஆட்சிக் காலத்தில் NPP, இன்னும் அப்படிச் செழிப்பான முன்னுதாரணங்கள் எதையும் காட்டி அரசியற் பெறுமானங்களாக்கவில்லை. நடந்திருப்பதெல்லாம் மேலோட்டமாக சில விடயங்களே. முழுமையான அளவில் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் பலமான பாராளுமன்ற அதிகாரம் வேணும். அதற்கான கால அவகாசம் வேண்டும் என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்குள்ளும் அநுர குமார திசநாயக்க ஒரு எதிர்பார்ப்பை நாடு முழுவதிலும் உருவாக்கியுள்ளார் என்பது உண்மையே. அது வளர்ந்து ஒரு செல்வாக்கு மண்டலத்தை உருவாக்கக் கூடிய ஏதுநிலைகள் இன்னும் ஏற்படவில்லை. அதனால் NPP யின் ஆதரவுத் தளம் எதிர்பார்க்கப்பட்டதையும் விடச் சற்று மெல்லியதாக உள்ளதாகத் தென்படுகிறது. இது சரியா இல்லையா என்பதை அடுத்த வாரம் நடக்கவுள்ள தேர்தல்தான் தெளிவாக உரைக்கும். ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடந்த தேர்தல்வரையில் நாடு முழுவதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் செல்வாக்கு மண்டலங்கள் இருந்தன. இனவாதத்தை முழு அளவில் பிரயோகப்படுத்தியபோது கூடச் சிறிய அளவிலேனும் வடக்குக் கிழக்கில் ஐ.தே.கவும் சு.க வும் செல்வாக்கைக் கொண்டிருந்தன. ஐ.தே.க வும் சு.க வும் இன்று சீரழிந்த பிறகு அவற்றின் மண்டலங்கள் இல்லாதொழிந்தது வேறு கதை. NPP, தன்னை விரிவாக்கி நிலைப்படுத்த வேண்டும். மெய்யாக அது மாற்றத்தை உருவாக்க வேண்டும் என விரும்பினால், அல்லது அதனுடைய சிந்தனையில் மாற்றத்தைக் குறித்த சித்திரங்கள் இருக்குமானால் அது அதற்குரிய அடிப்படைகளை உருவாக்க வேண்டும். புதிய எல்லைகளை நோக்கிப் பயணிக்க முற்படுவது அவசியம். பழைய – தூர்ந்து போக வேண்டிய சங்கதிகளை எடுத்து மேசையில் வைக்க முயற்சிக்கக் கூடாது. அனைத்துச் சமூகத்தினரையும் உள்வாங்குவதற்கான இடத்தை – பன்மைத்துவத்துக்குரிய அடிப்படைகளை – ஏற்படுத்துவதற்குத் தயாராக வேண்டும். ஆம், NPP மேலும் நெகிழ்ந்து, நவீனமாக வளர்ச்சியடைய வேண்டும். உணர்ச்சிகரமான உளக் கொந்தளிப்புகளுக்குப் பதிலாக உளப்பூர்வமான மகிழ்ச்சிச் சூழலை மலர்விக்க வேண்டும். அதற்கான அரசியற் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவது அவசியம். அதற்கான அர்ப்பணிப்பு கட்டாயமானது. காலம் அதையே எதிர்பார்க்கிறது. காலம் என்பது அரசியல் அர்த்தத்தில் வாழும் மக்களும் வாழ வேண்டிய மக்களுமேயாகும். https://arangamnews.com/?p=11429
  14. கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் ! November 10, 2024 கடந்த தேர்தலில் கருணா செய்தது தவறு. அவர் தெரியாமல் அதை செய்தார்.ஆனால் இம் முறை தமிழருக்கான ஒரேஒரு பிரதிநிதித்துவம் ஊசலாடுகிறது என்று தெரிந்தும் இங்கு வரிந்து கட்டிக் கொண்டு சங்கு போட்டியிடுவது மகாதவறு. எனவே அம்பாறைத்தமிழர்களுக்கு கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்கின்ற துரோகம் மகா துரோகம் ஆகும். இவ்வாறு காரைதீவில் தனது பிரச்சார அலுவலகத்தை நேற்று (9) சனிக்கிழமை மாலை திறந்து வைத்து பேசிய அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார் . இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று சரித்திரம் படைக்கும் என்றும் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.. அன்று கருணா மட்டும் வந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை சிதறடித்தார். இன்று படகு வீடு சைக்கிள் திசைகாட்டி மணிக்கூடு என வந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை அழிக்க புறப்பட்டு இருக்கின்றனர் . இவர்களெல்லாம் கடந்த காலத்தில் இங்குள்ள தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள்? என்பதை மக்கள் அறிவார்கள். தாங்கள் வெல்ல முடியாது என்று அறிந்தும் தெரிந்தும் களம் இறங்கி இருக்கின்றார்கள். புளட் சித்தார்த்தன் இயக்கத்தில் இயங்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சங்கு படு தோல்வி அடைய இருக்கின்றது. தெரிந்தும் சுரேஷ் சித்தரின் தேசிய பட்டியலுக்காக இங்கு அவர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றார்கள் . 75 வருட கால பழந்தமிழ் கட்சியான எமது கட்சியை உடைப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எதுவுமே எடுபடாது . நாங்கள் அம்பாரை மாவட்டத்தில் 2015 தொடக்கம் 2020 வரைக்கும் 1800 மில்லியன் பெறுமதி யான அபிவிருத்தியை செய்து இருக்கின்றோம். இம்முறை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இலங்கை தமிழரசுக் கட்சி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று சரித்திரம் படைக்க இருக்கிறது. எனவே தமிழரசுக் கட்சி வெல்லப்போவது தெரிந்த விஷயம்.அதுக்கு மட்டும் ஆதரவு அளித்து உங்களது வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் . வேட்பாளர் கே.யசோதரனும் கலந்து சிறப்பித்தார். https://www.supeedsam.com/209335/
  15. தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை! “நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நானும் எனது கட்சி சார்ந்த ஒன்பது பேரும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும், அவர்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அடைகின்ற வகையிலும், எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே கூறப்பட்ட அடிப்படைக் கொள்கைகளை மையமாக வைத்தும் ஒரு நீண்டகால வரலாற்றைக் கொண்ட தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு தேசியத் தலைவர் பிரபாகரனால் வழிகாட்டப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கொள்கையை தாரக மந்திரமாக வைத்துக்கொண்டு எங்கள் மக்களுக்கான பயணத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்கின்றோம். எமது மக்களுக்கான இந்தப் பயணத்திலே தேர்தல்கள் ஒரு பெரிய முக்கிய புள்ளிகளாக மாறுகின்றன. அந்த முக்கியமான புள்ளிகளாக இருக்கின்ற தேர்தல் காலங்களில் மக்களுடைய ஆணை திரும்பத் திரும்ப வழங்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் என்பது தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் வாழ்வை, தங்களுக்கான அரசியல் உரிமையை, தங்களுக்கான அரசியல் இருப்பைத் தீர்மானித்துக் கொள்வதற்கான ஒரு தேர்தல் களமாக – அதற்காக தாங்கள் தெரிவு செய்கின்ற ஆணை வழங்குகின்ற ஒரு தேர்தலாக அமைகின்றது. அந்தவகையில்தான் தமிழ் மக்கள் கூருணர்வோடும் தெளிவான பார்வையோடும் இந்த அரசியல் பெருவெளியில் நாங்கள் எப்படி இருக்க வேண்டும், நாங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், யார் யாரைத் தெரிவு செய்ய வேண்டும், யார் யார் நாடாளுமன்றம் சென்றால் எங்களுக்காக பேசுவார்கள், எங்களினுடைய மக்களின் உரிமைகளை கொண்டு செல்வார்கள் என்ற அடிப்படையில் உங்களுடைய தெரிவுகள் இருக்கும் என்று நான் நம்புகின்றேன். ஒட்டுமொத்தத்தில் இந்தத் தேர்தலுக்கான நீதிபதிகளாக தமிழர்களே அமைவதால் அவர்களுடைய வாக்குகள் சிதறிப் போகாமல் அது தமிழ்த் தேசியத்துக்கான தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்றவர்களுக்கான வாக்காக மாற வேண்டும். இப்போது யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 44 தரப்புகளாக 396 பேர் 6 ஆசனங்களுக்காக களத்திலே இருக்கின்றார்கள். ஆகவே, தேர்தலில் வாக்குகள் சிதறடிக்கப்பட்ட இருக்கின்றன. எங்கள் மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்ட இருக்கின்றன. மக்களுடைய உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் நிலைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் கேட்பது வடக்கு, கிழக்கில், மலையகத்தில், கொழும்பில் வாழுகின்ற தமிழர்கள் தமிழ்த் தேசியத்துக்காகத் தமிழர்களுடைய உரிமைக்காக யார் யார் உரத்துக் குரல் கொடுக்கின்றார்களோ, யார் யார் தேவையென்று கருதுகின்றீர்களோ, அந்தவகையில் தமிழ்த் தேசியத்துக்காக உங்களுடைய வாக்குகள் அமைய வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய வேண்டுகோளாகும். நான் மதுபானசாலைக்குப் சிபாரிசு செய்ததாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து எனக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவது கூட்டுச் சதியாகும். எங்களது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரும், கிழக்கிலே இருக்கின்ற ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து எனக்கு எதிராகத் திட்டமிட்ட கூட்டுச்சதியாகவே இந்த விடயத்தைக் கையாளுகின்றார்கள். இந்தக் கூட்டுச் சதி மக்களுக்கு மிகத் தெளிவாகவே தெரியும். மக்கள் அதைப் புரிந்துகொள்கின்றார்கள். யாராவது கூடுதலாக விருப்பு வாக்குகளை எடுத்து விடுவார்கள் அல்லது கட்சியை மீண்டும் கட்டியமைப்பதற்கு அவருக்கு ஓர் ஆணையை மக்கள் வழங்கிவிடுவார்கள் என்ற பயத்தில் கட்சிக்குள் இருக்கின்ற சில அநாமதேயமான சந்தேகப் பிறவிகளுடைய அல்லது தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே இந்த விடயத்தைக் கையாளுகின்றார்கள். எங்கள் மீது மதுபானசாலை இருப்பதாகக் குறிப்பிடும் இவர்கள் தங்களுடைய படத்துடன் என்னுடைய படத்தை இணைத்து கிளிநொச்சிக்குத் தபாலில் அனுப்புகின்றார்கள். நீங்கள் அவருக்கும் (எனக்கும்) போடுங்கோ, எங்கள் இருவருக்கும் போடுங்கோ என்று. இது ஒரு கேவலமான செயல் இல்லையா? மதுபானசாலை இருக்கு என்று கூறிக்கொண்டு எங்கள் படத்தைப் போட்டு வாக்கு கேட்கும் போக்கிலித்தனத்துக்கு ஏன் போகின்றீர்கள்? என்னுடைய அனுமதி இல்லாமல் மேற்கொள்ளும் இந்தச் செயற்பாடு கீழ்த்தரமான செயற்பாடாகும். வரலாறும் காலமும் இதற்குச் சரியான பதிலை வழங்கும். தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரு எழுச்சி ஏற்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப் போட்டு தடுக்காது இருந்திருந்தால் எமது கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் 4 – 5 ஆசனங்களை அலுங்கல் – குலுங்கல் இல்லாமல் நாங்கள் எடுத்திருக்க முடியும். தங்களுடைய சுயநலத்துக்காகவே எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய பதவி மோகங்களுக்காகத் தமிழ்த் தேசியத்தை அழித்து தமிழ் மக்களை வேறு திசைக்குக் கொண்டு செல்வதற்காக அவர்கள் செய்த கைங்கர்யம்தான் வழக்கு. அதன் காரணமாகத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இடைக்காலத் தடை எப்போது விலக்கப்படுகின்றதோ அப்போது நான் தலைவராகப் பொறுப்பெடுப்பேன். அன்புக்குரிய மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது இம்முறை எனக்கு ஒரு ஆணை தாருங்கள். சிறீதரன் ஆகிய நான் திரும்பவும் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்தி, புலம்பெயர் நாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களையும், நிலத்தில் இருக்கின்ற தமிழர்களையும் ஒருங்கிணைத்து வடக்கு – கிழக்கு, மலையகம், கொழும்பு என்று எங்கள் தமிழர்களை ஓரணியாக ஒன்றாக்கி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் எல்லாக் கட்சிகளையும் ஒரு பாதையில் கொண்டுவந்து, தேசிய விடுதலைக்கான இயக்கத்தை அமைப்பதற்கு என்னாலான முழு முயற்சிகளையும் மற்றவர்களையும் அரவணைத்து நான் செய்வதற்கு எனக்கொரு ஆணை தாருங்கள். மீண்டும் நான் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பணியாற்றுவதற்கான ஆணையாக அது இருக்கட்டும் என எனது மக்களிடம் வினவி நிற்கின்றேன். தேர்தல் முடிந்த பிற்பாடு நான் கட்சியின் அடுத்த தலைமைத்துவத்தைப் பொறுப்பெடுப்பேன். வழக்குகள் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என நினைக்கின்றேன். 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி வழக்கின் தவணை. மேலும் தவணைகள் போகும் வாய்ப்பு உள்ளது. இப்போதும் வழக்கைப் போட்டவர்கள் கைவாங்க முடியும். அவ்வாறு செய்தால் கட்சி மீண்டும் நல்ல நிலைக்கு வரும். மக்களிடம் கட்சி மீது நம்பிக்கை வரும். கட்சிக்குள் இருப்பவர்களே கட்சிக்கு எதிராக வழக்குப் போட்டிருக்கும்போது தமிழ் மக்களுடைய விடங்களை எப்படிப் பார்ப்பார்கள் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. தற்போது மக்கள் யாவற்றுக்கும் தீர்ப்பு எழுதுகின்ற காலம். யார், யார் என்னென்ன கேவலங்களைச் செய்கின்றார்களோ, யார் யார் மக்களுக்கு எதிரான விரோதமான நடவடிக்கைகளை ஆற்றுகின்றார்களோ அவர்களுக்குத் தீர்ப்பு அளித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குகின்ற காலம் மக்களிடம் வந்திருக்கின்றது. மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்ற காலம் போய் மக்கள் நீதிபதிகளாக மாறி இருக்கின்றார்கள். உங்களுடைய நீதிக்காக எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி கடந்து 15 ஆம் திகதி வரக் காத்திருக்கின்றோம்.” – என்றார். https://akkinikkunchu.com/?p=298659

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.