Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34999
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. சுவீடன் அரசுப் பள்ளியில் தமிழ் மொழிக் கல்வி ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றச் சட்டத்தில், தாய்மொழி வழியிலான கல்வி முக்கியமான ஒன்று. நோர்டிக் நாடுகளான சுவீடன், நார்வே, ஃபின்லாந்தில் மேலும் வலுவான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. நார்வே நாட்டில் வசித்துக்கொண்டிருந்தபோது, தமிழ் மொழிக்கான பாடங்கள் அரசுப் பள்ளிகளில் இருப்பதை ஈழத் தமிழர்களால் நடந்தது என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆதலால், அங்கு வசிக்கும் வரை தாய்மொழிக் கல்விக்கானத் தேடலை ஆய்வு நோக்கில் நடத்தவில்லை. சுவீடன் புலம்பெயர்ந்தபோது, அங்கு இருந்த ஆச்சர்யமூட்டும் தாய்மொழிகளுக்கான கல்வித் திட்டங்கள் வழியாக ஆழமான தேடுதலை மேற்கொள்ளத் தொடங்கினேன். நவீன உலக ஒழுங்கில், ஆங்கில மொழியால் மட்டுமே சாதிக்க இயலும் என்கிற அசைக்க முடியாத கருத்தாக்கம் காலனியாதிக்கச் சுவட்டில் இருந்து உருவானது என்கிற புரிதல் இதன் பின்னரே எனக்கு ஏற்படத் தொடங்கியது. அதோடு, சீன நாட்டின் பல்கலைக்கழக அனுபவமும் தாய்மொழிக் கல்விக்கான வலுவான கருத்தினை எனக்குள் விதைத்தது. நார்வேவின் அனுபவமே அனைத்திற்கும் தொடக்கம் நார்வே நாட்டினில் எங்கள் குழந்தைகள் கருவாகி, பிறந்து, வளர்ந்தக் காலங்களில் மருத்துவர்களும் மழலையர் பள்ளிகளிலும் எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டவையும் நாங்கள் உணர்ந்தவையும் எங்கள் குடும்பத்தில் தமிழ்மொழி தொடர்பான புத்துணர்வை ஊட்டியது. குழந்தைகள் கருவில் இருக்கும் தருவாயில் நார்வே அரசு மருத்துவமனைகளில் இரு வாரங்களுக்கு ஒருமுறை தொடர் உடல்நலச் சோதனை மேற்கொள்வர், கருவில் வளரும் குழந்தை குறித்தும், தாயின் உடல் மற்றும் மனநலன் சார்ந்த புரிதலும் தந்தைக்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சில சோதனைகளின் பொழுதும் தந்தையும் உடன் இருத்தல் அவசியம். அப்போது, வீட்டில் மொழி உச்சரிப்புகள் மற்றும் குழந்தையின் வளர்ச்சித் தொடர்பான கேள்விகளுக்கு, “பன்மைக் காலாச்சாரச் சூழலில் வாழ்வதால், குழந்தையின் மனநல வளர்ச்சியில் நேர்மறையான உறுதியினை வளர்க்க தாய்மொழியில் உரையாடுவது அவசியம்” என மருத்துவர்களும், “நோர்வேஜிய மொழி தொடர்பான குழந்தைகளுக்கான பயிற்சியினை மேற்கொள்வது எங்கள் பொறுப்பு; அதற்கு அடித்தளமாக குழந்தைகளோடு வீட்டினில் தாய்மொழியில் உரையாடி, குழந்தையின் அடிப்படைச் சிந்தனைக் கட்டமைப்பை வளர்த்தெடுக்க வேண்டும்” எனப் பள்ளியிலும் கற்றுக்கொடுத்தார்கள். தாய்மொழியும் குழந்தையின் செயல்பாடுகளும் குழந்தை பிறப்பதற்கு 10 வாரங்கள் முன்பிருந்தே, ஒலியினை கேட்கத் துவங்குகிறது. பிறந்தது முதலே, தாயின்மொழியின் ஓசையால், தன்னைப் பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் கருதுகிறது. இத்தகைய தருணங்களில் இருந்தே, குழந்தையின் தாய்மொழியும் மூளையின் செயல்பாடும் ஒன்றாகிறது. ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒலியின் அடிப்படையில் அனைத்தையும் பகுத்துணரத் தொடங்குகிறது. இவ்வுலகில் அனைத்து மொழிகளையும் உள்ளடக்கினால், மொத்தமாக 800 விதமான ஒலிகள் உள்ளன. குழந்தை இயற்கை வரம், இத்தகைய 800 ஒலிகளையும் பிரித்து உணரும் ஆற்றல் கொண்டது. பிறந்தது முதல் இத்தகைய ஆற்றல் உண்டு என்றபோதிலும், குழந்தை பிற மொழியினைக் கற்க, பகுத்துணர, தொடர்ச்சியான மூளையின் செயல்பாடுகளில் வாய்ப்பு உள்ளது எனினும், முதல் ஆறு மாதத்தில் தன்னைச் சுற்றி ஒலிக்கப்படும் மொழியில் இருந்துதான் மூளையின் தொடக்கக்கால செயலோட்டங்கள் உருவாகிறது. அதனாலேயே, பிற மொழியினை கல்வி மொழியாக ஏற்கும் முன்னர், குழந்தையின் அடிப்படை மூளையில் பதிந்துள்ள மொழியின் வழியே தொடக்கக்கால கல்வியின் மூலம் அறிவூட்டுவது நீண்ட கால ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு உகந்ததாகிறது. இதில் மிகக் குறிப்பாக, குழந்தை பிறந்தது முதலான மூளையின் செயல்பாட்டின்படி, அந்தக் குழந்தையுடன் நேரடியாக உரையாடும் சொற்கள், ஒலி, மொழியில் இருந்துதான் அக்குழந்தை தன் சிந்தனைக்கும், தன் உச்சரிப்பிற்கும், செயல்பாட்டிற்கும் எடுக்கிறது. தன்னுடன் நேரடியாக பேசப்படாத எந்த ஒலியினையும் அது தாய்மொழியின் ஒலியே எனினும் அக்குழந்தையின் மூளையின் செயலோட்டத்தில் இடம்பெறாது. குழந்தை தனது இரண்டாம் வயதில் இருந்து, தான் பார்க்கும் பொருட்களின் பெயரை, தன் சுற்றத்தார் சுட்டிக்காட்டி தன்னுடன் உச்சரிக்கும் வார்த்தையையும் பொருத்திப்பார்த்து, தனக்குத் தெரிந்த தாய்மொழியோடு தன் வாழ்வின் அனைத்து நொடிகளையும் இணைத்துக்கொள்கிறது. கிட்டத்தட்ட, இத்தருணத்தில் இருந்து குழந்தை தாய்மொழி வழியே தனது கற்றலைத் தொடங்குகிறது எனலாம். இத்தகைய நிலையில் இருந்தே, அக்குழந்தை பள்ளிக்கு வரும் முன் 3,000 சொற்களை மூளையில் பதிந்து வளர்ந்துவருகிறது. மருத்துவக் கல்வியும் தாய்மொழி மதிப்பெண்ணும் நார்வேயில் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டும். மேல்நிலை வகுப்பு மூன்று ஆண்டுகளிலும் இந்த மொழிப்பாடங்களில் ஒன்றில் தேர்வு எழுதினால், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்திருந்து, இம்மொழிப் பாடத் தேர்வில் மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தால், மருத்துவம் / பொறியியல் சேர்க்கைக்கான கூட்டு மதிப்பெண்ணில், குறைந்த மதிப்பெண் வாங்கிய பாடத்தை நீக்கிவிட்டு மொழிப்பாட மதிப்பெண்ணைச் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது, நார்வே நாட்டில் தமிழ் மொழி பாடத்தில் பெறும் மதிப்பெண், நார்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது. சமீபத்தில் நார்வே நாட்டில் மருத்துவக் கல்வியியல் சேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. அதற்கு மிக முக்கியக் காரணமாக என் அனுபவத்தில் இருந்து பார்த்தால்கூட, எனக்குத் தெரிந்து நான் தமிழாராசிரியராக வகுப்பெடுத்த பலரும் தமிழால் உயர்வு பெற்றவர்களே! சுவீடனில் நடந்த தமிழ் நேர்முகத் தேர்வு! இத்தகைய அனுபவம் தந்த பாடத்தில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில், தமிழ்வழிப் பிரிவில் என் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துப் படிக்க வைத்தேன். பிறகு, மீண்டும் சுவீடன் வர வேண்டும் என்ற சூழலில், அவர்களுக்குத் தமிழ் மட்டுமே தெரிந்திருந்தது. சுவீடன் பள்ளியில் சேரும் குழந்தைகளோடு பள்ளி நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் ஆசிரியர்கள் கலந்துரையாடி அவர்களின் எண்ண ஓட்டம், அவர்களின் அன்றைய கல்வியின் நிலை, செயற்பாடுகள் குறித்து அறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி வழங்கவும் வளர்த்தெடுக்கவும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுப்பர். சுவீடனிற்குப் புதிதாக வந்திருந்த எங்கள் குழந்தைக்கும் அத்தகைய நேர்முகக் கலந்துரையாடல் நிகழ்ந்தது, ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் தமிழாசிரியர் துணை கொண்டு, முழுக்க முழுக்க தமிழில் நடந்தது. பிறகு, தமிழ் தவிர வேறு மொழியே தெரியாததால், பள்ளி நிர்வாகம் எங்கள் மகன் ஒருவருக்காக வாரத்தில் ஒருநாள் மாவட்ட நிர்வாக தமிழாசிரியர் கொண்டு சிறப்பு வகுப்பினை தமிழ் வழியில் நடத்தி மெல்ல மெல்ல சுவீடிஷ் மொழி அறிவினையும் பாட அறிவினையும் வளர்த்தெடுத்தார்கள். இன்றும்கூட, அரசுப் பள்ளியில் பயிலும் அனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் வாரத்தில் ஒருநாள், அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறான மாணவ எண்ணிக்கையினைக் கொண்டு, பொது வகுப்பினைத் தமிழ் மொழிப் பாடத்தில் நடத்துகிறார்கள். https://www.arunchol.com/vijay-ashokan-on-sweden-government-school
  2. புதினை விமர்சித்த ரஷிய கோடீசுவரர் ஆன்டோவ் உள்காயம் ஏற்பட்டு மரணம்; பிரேத பரிசோதனை அறிக்கை ரஷியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளராக அறியப்பட்டவர் பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ். கடந்த சில நாட்களுக்கு முன் ஒடிசாவுக்கு சுற்றுலாவுக்காக நண்பர்களுடன் வந்துள்ளார். ஒடிசாவின் ராயகடா பகுதியில் உள்ள ஓட்டலில் ஒன்றாக தங்கியிருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மொத்தம் 4 பேர் தங்கியுள்ளனர். இந்த நிலையில், ஓட்டலின் 3-வது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்து அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் தகவல் அறிந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இதுபற்றி ஆன்டோவ் மரண வழக்கை விசாரித்து வரும் போலீஸ் சூப்பிரெண்டு விவேகானந்தா சர்மா கூறும்போது, பாவெல் கடந்த ஞாயிற்று கிழமை (டிசம்பர் 25-ந்தேதி) மரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அவரது உடலை கடந்த திங்கட் கிழமை தகனம் செய்து விட்டோம் என கூறியுள்ளார். இந்த தகவலை உறுதி செய்துள்ள ரஷிய நாடாளுமன்ற துணை சபாநாயகரான வியாசெஸ்லாவ் கார்துகின் மற்றும் ரஷிய சட்டசபை சபாநாயகர் விளாடிமிர் கிசெலியோவ் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர். ஆன்டோவின் சக கட்சி உறுப்பினரான விளாடிமிர் புடானோவ் (வயது 61) என்பவர் அதே ராயகடா ஓட்டலில் மரணம் அடைந்த 3 நாட்களுக்குள் பாவெல்லும் மரணம் அடைந்து உள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பினை அடுத்து, ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தவர்களில் ஆன்டோவும் ஒருவர் ஆவார். எனினும், அந்த வாட்ஸ்அப் தகவல் உடனடியாக அழிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், ஆன்டோவ் மரணம் பற்றிய பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், உள்காயம் ஏற்பட்டதில் ஆன்டோவ் மரணம் உடைந்து உள்ளார் என அதற்கான காரணம் தெரிவிக்கின்றது. அவரது நண்பரான விளாடிமிர் புடானோவ் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார் என்றும் மற்றொரு பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது. சக நண்பர் மரணம் அடைந்ததில் அதிர்ச்சி அடைந்து ஆன்டோவ் தற்கொலை செய்து கொண்டார் என ஒருபுறம் கூறப்படுகிறது. எனினும், அது தள்ளி விடப்பட்டு ஒன்றாக இருக்க கூடும் என்றும் மற்றொரு புறம் கூறப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்காக அவர்கள் தங்கியிருந்த ராயகடா ஓட்டலுக்கு, சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் செல்ல இருக்கின்றனர். ரஷிய சுற்றுலாவாசிகளான இவர்களுடன் தம்பதியான மிகாயில் துரோவ் மற்றும் நடாலியா பனசெங்கோ என்ற தம்பதியும் தங்கி இருந்துள்ளது. அவர்கள் இருவரும், வேறொரு அறையில் தனியாக தங்கியிருந்து உள்ளனர். https://akkinikkunchu.com/?p=233707
  3. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு! அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெட்ஜ்-நிதி நிறுவனத்தின் நிறுவுனரான ராஜ் ராஜரத்தினம் என்பவரே இவ்வாறு அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் யாழ். போதனாவைத்தியசாலைக்குச் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் மேலம் தெரியவருகையில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஹெட்ஜ்-நிதி, உள் வர்த்தக வலயங்களின் பிரதான வகிபாகத்தை கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கையில் பிறந்த கேலியன் ஹெட்ஜ் நிதி நிறுவுனர் ராஜ் ராஜரத்தினம் தற்போது சிறிலங்கா வந்துள்ளார். இவ்வாறான நிலையில், அவர் எதிர்வரும் நாட்களில் சிறிலங்கா அரசியல்வாதிகள் சிலரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 2009 ஆம் ஆண்டில், உள் வர்த்தகப் பத்திர மோசடிகளில் குற்றவியல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சில வருடங்கள் சிறைப்படுத்தலின் பின்னர் விடுவிக்கப்பட்டார். எனினும் தாம் குற்றமற்றவர் என்று கூறி அவர் அண்மையில் ‘சீரற்ற நீதி’ (uneven Justice) என்ற நூலை வெளியிட்டிருந்தார். இதேவேளை தமிழர் புனர்வாழ்வு அமைப்புக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அதிகாரம் இன்றி கிருலப்பனையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட் வங்கிக் கிளையில் வைப்பு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துடன் ராஜரத்தினம் தொடர்புபட்டிருந்தார் என்றும் கூறப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பெயர் இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் இணைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு, பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி பணச் சலவை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கருணாநாயக்க பின்னர் விடுவிக்கப்பட்டார். https://akkinikkunchu.com/?p=233722
  4. ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி நின்று ஆட எவரையும் அனுமதியேன் – அமைச்சர் டக்ளஸ் சூளுரை என்னுடன் பழகிய பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை – அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் என கேள்வியெழுப்பிய ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாநகரசபையின் பாதீட்டு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை எனவும் அதே சமயம் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஹையா ஹையா என ஆடவும் விட முடியாது என்றார். நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மாவீரர் தினம் மற்றும் திலீபனின் நினைவேந்தல் போன்றவற்றை மணிவண்ணன் தரப்பு மேற்கொண்டதாலா மாநகர சபையின் பாதீட்டுக்கு ஆதரவளிக்கவில்லை என கேள்வியெழுப்பிய போது, அவ்வாறு கூற முடியாது. இது கட்சியின் கொள்கை. அவர்கள் வேண்டுமானால் தங்கள் சுயலாபத்திற்கு அவ்வாறு கூற முடியும் என்றார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் அபிவிருத்தி, அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பயணித்துவரும் கட்சியாகும். அந்த வகையில் யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது. ஆனால் எமது கட்சியின் ஆதரவில்லாமல் பாதீட்டினை நிறைவேற்றவும் முடியாது. கடந்த வாரம் யாழ்.மாநகர சபையின் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டபோது நாம் அதில் பங்கு கொள்ளவில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு. மாநகர முதல்வர் தெரிவில் எமது கட்சி ஆதரவை வழங்கிய நிலையில் சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி விடயங்களில் எமது கட்சி புறக்கணிக்கப்படுகிறது. மாநகர சபையில் ஆதிக்கமுள்ள எமது கட்சி மீது தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் தொடர்ந்தும் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆடுவதற்கு விடமுடியாது. ஆகவே யாழ்.மாநகர சபையின் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பது தொடர்பில் பரிசீலிப்போம். என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் ஆதரவைக் கோர இதுவரை பேசவில்லை. கட்சி அங்கத்தவர்களுடன் பேசினார்களோ தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=233737
  5. பொன்னியின் செல்வன்- 2: லைகா கொடுத்த அப்டேட்! Dec 28, 2022 16:44PM IST ஷேர் செய்ய : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தில், கார்த்திக், விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா புரோடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வெளியான முதல் நாளே திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடினர். தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் பலரும் காத்திருந்தார்கள். இந்நிலையில் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் கொடுக்க உள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த அப்டேட் மகிழ்ச்சியளித்துள்ளது. https://minnambalam.com/cinema/lyca-productions-announced-the-ponniyin-selvan-part-2-release-date/
  6. மறைமுகமான சமாதான துாதுவராக செயற்படுகின்றாரா சொல்ஹெய்ம்?-அகிலன் December 28, 2022 இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சுவாா்த்தைகளில் தாம் எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்று எரிக்சொல்ஹெய்ம் கூறியிருக்கின்றாா். கொழும்பில் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சொல்ஹெய்ம் அதிரடியாகப் பல அரசியல் தலைவா்களைச் சந்தித்துவருகின்றாா். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கின் காலநிலை ஆலோசகா் என்ற பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும்கூட, அதற்கு மேலாக சமாதானத் துாதுவராகவே அவா் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்திருப்பதற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன. சொல்ஹெய்ம் கொழும்பில் இருக்கும் பின்னணியிலேயே அரசாங்கத்திற்கும் தமிழ் தலைமைக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இரண்டாம் கட்டத்திற்கு சென்றிருக்கின்றது. புதன்கிழமை இரவு இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது முக்கியமான சில விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த இணக்கப்பாடு எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஜனவரி மாதத்தில் தான் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். புதன்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது அரசு தரப்பினரும் தமிழரசு கட்சியினரும் மட்டுமே பங்கேற்றிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும், முன்னாள் வடமகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை. இதனால் தமிழர் தரப்பில் சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமே பங்கேற்று இருந்தார்கள். இது உத்தியோகப்பற்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் ஒரு பேச்சுவாா்த்தை என்று ஜனாதிபதி தரப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த சந்திப்புக்கான அழைப்பு அனுப்பப்பட்ட முறை குறித்தும் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி செயலகத்திலிருந்து தமிழ் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு நேரடியாக அனுப்பப்படவில்லை. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தாந்தன் ஆகியோருக்கு இந்தக் கூட்டம் தொடர்பாக சுமந்திரனே தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தாா். சுமந்திரன் மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றார். இருந்த போதிலும் இந்தக் கூட்டத்தில் முக்கியமான சில விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக சுமந்திரன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர். நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் தரப்பில் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கின்றது. இந்த விடயத்தில் ஐந்து கைதிகளை ஜனவரி முதல் வாரத்தில் விடுதலை செய்வதற்கு இணக்கம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. ஏனையவர்கள் தொடர்கள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் ஆராயப்பட்ட பின்னர் முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருக்கின்றது. சில காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் ஜனவரி மூன்றாம் தேதி நடைபெறும் தேசியப் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் பின்னர் அது குறித்து இறுதி முடிவு கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் ஜனவரி 5ஆம் தேதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கும் இடையிலான மற்றும் சந்திப்பு இடம் பெறும். இவை தவிர அரசியல் தீர்வு முயற்சி தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கின்றது. அதாவது ஜனவரி 13ஆம் திகதியிலிருந்து நான்கு தினங்களுக்கு தொடா்ச்சியாக இது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. அதாவது, பொங்கலுக்கு முன்னதாக முக்கியமான முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது எனக் காட்டிக்கொள்வதற்கு ரணில் விரும்புகின்றாா் என்பது தெரிகின்றது. பெப்ரவரி நான்காம் திகதி இடம்பெறும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வந்து முக்கியமான சந்திப்புகளை அவசரமாக மேற்கொண்டு வருகின்றார். சமாதான தூதுவராக இலங்கைக்கு தான் வரவில்லை என அவர் தெரிவித்து இருக்கின்ற போதிலும் கூட பிரதான அரசியல் கட்சியுடன் பேச்சுக்களின் போது இன நெருக்கடிக்கான தீர்வு குறித்து அவர் முக்கிய கவனத்தை செலுத்தி இருந்தார். இது அவா் உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒரு அனுசரணையாளராகச் செயற்படுகின்றாா் என்ற கருத்தை உறுதிப்படுத்துவதாகத்தான் இருந்தது. காலநிலை ஆலோசகா் சம்பந்தன், மனோ கணேசன் போன்றோருடன் பேச்சுக்களை நடத்தவேண்டிய அவசியம் இருந்திருக்காது. பொருளாதார ரீதியாக இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு இன நெருக்கடிக்கான ஏதோ ஒரு தீர்வை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, சா்வதேச நாணய நிதியம், மற்றும் புலம்பெயா்ந்த அமைப்புக்கள் போன்றன இவ்விடயத்தில் அழுத்தம் கொடுக்கின்றன. நிதியை நாட்டுக்கு வரவளைப்பதற்கு ஏதோ ஒருவகையில் இனநெருக்கடி தீா்க்கப்பட்டு சுமூக நிலை உருவாகியிருப்பதாகக்காட்ட வேண்டிய நிா்ப்பந்தம் ரணிலுக்குள்ளது. இவ்விடத்தில் ரணில் விக்கிரமசிங்க இரண்டு விதமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார். ஒன்று – சர்வதேச ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய அழுத்தங்களை எதிர்கொள்வது. இரண்டு – தமிழ் தரப்புகளை பேச்சு வார்த்தை மேசைக்கு கொண்டு வந்து அதனை முன்னெடுத்து செல்வது. பொருளாதார நெருக்கடித் தீா்வுக்கு மட்டுமன்றி, ரணிலின் கனவாகவுள்ள அடுத்த ஜனாதிபதித் தோ்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறுவதற்கும் இந்த இரண்டும் அவருக்கு அவசியம். இந்த இரண்டையும் சமாளிப்பதற்கு தன்னால் முடியாது என்ற நிலைமையில்தான் சொல்ஹெய்மை அவா் களமிறக்கியுள்ளாா். உண்மையில் காலநிலை ஆலோசகர் என்ற பெயரில் இலங்கையில் அவர் மீண்டும் கால் வைத்திருந்தாலும் ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்கின்ற இந்த நெருக்கடிகளுக்கு தீர்வுகளை முன் வைப்பது அல்லது அந்த தீர்வுக்காக உதவுவதுதான் அவரது நியமனத்தின் நோக்கம். மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் இல்லை என ரணில் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாாா். மூன்றாம் தரப்பு என்றால் சிங்களக் கடும் போக்காளா்கள் குழம்புவாா்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், தமிழ்த் தரப்பையும், சா்வதேசத்தையும் ஒரேயடியாகக் கையாள்வதற்கு இவ்விடயத்தில் அனுபவம் வாய்ந்த ஒருவா் தேவை என்பது ரணிலுக்குத தெரிந்தே இருந்தது. அதுதான் சொல்ஹெய்மை காலநிலை ஆலோசகா் என்ற பெயரில் களமிறக்க காரணம். சொல்ஹெய்ம் இலங்கை வந்து முக்கியமான பேச்சுக்களை நடத்தியுள்ள பின்னணியில்தான் தமிழ் தரப்புடன் இரண்டாம் கட்ட பேச்சுக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க, அவசர அழைப்பை விடுத்திருந்தார். விரைந்து தீர்வொன்றை காண வேண்டும் என்பதிலும் அவர் அவசரம் காட்டுகிறார். சமாதான முயற்சிகள் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டும் நிலையில் அடுத்த நவம்பருக்கு பின்னா் திடீா் ஜனாதிபதித் தோ்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு ரணில் திட்டமிடலாம். இதன்மூலம் மக்கள் ஆணையுடன் அதிகாரத்துக்கு வந்து பிரச்சினையைத் தீா்த்துவைப்பதாக சொல்லி தமிழ் மக்களுடைய ஆதரவை அவா் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிடுகின்றாா். சர்வதேச நாணய நிதியம் உட்பட உலக அமைப்புகள் பலவும் இலங்கைக்கான நிதி உதவிய வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தி இருக்கும் பின்னணியில் இலங்கையில் ஒரு சமூகமான நிலைமை ஸ்திதமான அரசு இருக்கிறது என்பதை காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ரணில் விக்கிரமசிங்காவுக்கு இருக்கின்றது. அதற்கான ஆலோசகராக மட்டுமின்றி அனுசரணையாளராகவும் எரிக் சொல்ஹெய்ம் செயல்பட்டு வருகின்றார் என்பதை கடந்த சில தினங்களாக அரசியல் அரங்கில் இடம் பெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. விடுதலைப் புலிகளின் காலத்தில் சமாதான செயல்பாட்டாளராக பிரவேசித்த எரிக்சொல்ஹெய்ம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. சமாதான செயற்பாட்டாளர் என்ற முறையில் பிரதேசித்த சொல்ஹெய்ம் இறுதி போரின் போது இடம் பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூறவேண்எயவராகவும் இருக்கின்றாா். சொல்ஹெய்ம் இப்போது எவ்வாறான பாத்திரத்தை ஏற்று செயல்படுகின்றார் என்பது தெளிவாக தெரியாத போதிலும், தற்போது கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை தமிழ் தலைமைகள் மதிநுட்பமாகவும், சிறந்த இராஜதந்திரத்துடனும் கையாள்வதன் மூலமாக மட்டுமே தாம் சாா்ந்த மக்களுக்கு எதனையாவது பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும். https://www.ilakku.org/is-solheim-acting-as-a-hidden-angel-of-peace/
  7. சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை – விக்னேஸ்வரன் பதிலடி! தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது. இந்த வகையில், அண்மையில் தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் பின்னர், மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள முடியாது போயுள்ளது. முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிய வேளையிலேயே அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தகுந்த கால அவகாசம் கிடைக்காமையால் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியவில்லையென அறிவிக்கப்பட்டது. ஆகவே இது தொடர்பில் விக்னேஸ்வரன் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த கடிதம் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தன்னை விமர்சனம் செய்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “என்னைவிட இரண்டரை மடங்கு வயது குறைந்த சாணக்கியன் ஒன்றும் விளங்காமல் புலம்பியுள்ளார். மேலும் நான் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சாணக்கியன் குறிப்பிட்டார் என்று சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர். அவர் சிறியவர். அப்படித்தான் பேசுவார். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை. நான் அதிபருக்கு கடிதம் எழுதியமை சிறுபிள்ளைத்தனம் என அவர் சொன்னாராம். ஆனால், அந்தக் கடிதம் எழுதியதால் பல விடயங்கள் நடந்துள்ளன. நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் சுமந்திரன் தொலைபேசியில் அழைத்து ரணில் கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் என்றார். ஆகவே போதிய அவகாசம் வழங்காமல் சந்திப்பு திகதி குறிப்பது பொருத்தமற்றது என அதிபருக்கு நான் ஒரு கடிதம் அனுப்பினேன். அந்தக் கடிதம் அனுப்பியதன் பின்னர் தான் அதிபர் செயலகத்திலிருந்து சொன்னார்கள், அந்தச் சந்திப்பு அதிபர் திட்டமிட்டதல்ல, சந்திக்க வரலாமா என சுமந்திரன் கேட்டுள்ளார், சரி,கேட்கிறீர்கள் வாருங்கள் என்று தான், அதிபர் கூறியுள்ளார். அதிபர் அழைக்கின்றார் என எமக்குச் சுமந்திரன் சொன்னார். அதையும் நாங்கள் யாழ்ப்பாணம் வந்த பின்னர் தான் சுமந்திரன் அழைப்பு விடுத்தார். நாங்கள் சந்திப்புக்கு வரக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படி செய்திருக்கின்றார். நான் அதிபருக்கு அனுப்பிய கடிதத்துக்கு அனுப்பப்பட்ட பதிலில், சுமந்திரன் கேட்ட சந்திப்பு உத்தியோகப்பற்றற்றது எனவும், ஜனவரி முதல் வாரத்தில் திட்டமிட்டுள்ள சந்திப்புக்கு போதிய அவகாசத்துடன் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தாலேயே இதெல்லாம் நடந்துள்ளது. என்ன விட இரண்டரை மடங்கு வயது குறைந்த சாணக்கியன் இவையெல்லாம் விளங்காமல் புலம்பியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=233611
  8. வியட்நாமிலிருந்து நாடு திரும்பிய 152 இலங்கையர்கள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது கப்பல் பழுதடைந்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்கள் இன்றைய தினம் தத்தமது வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக குடிப்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த இலங்கையர்கள், நவம்பர் 8ஆம் திகதி ஜப்பானிய கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டு வியட்நாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்தனர். அவர்களில் யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் நீண்ட நாட்களின் பின்னர் கடந்த 17ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு மீதமிருந்த 302 பேரில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு இணக்கம் வெளியிட்டனர். இந்தநிலையில் குறித்த 152 பேரும் விசேட விமானம் ஒன்றின் ஊடாக நேற்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/வியட்நாமிலிருந்து-நாடு-திரும்பிய-152-இலங்கையர்கள்/175-309718
  9. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் – 2022 …. வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும். லெட்சுமணன் முருகபூபதி தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் இலங்கையில் பிறந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி அவர்களுக்கு வழங்குகிறது. 1972 இல் எழுத்தாளராக அறிமுகமான இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி பத்திரிகை ஆசிரிய பீடத்தில் இவர் பணியாற்றியபோது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் – மாணவர் விழாவில் கலந்து கொண்டார். 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என எழுதி வெளியிட்டு வருகிறார். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர், 2011 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளராக செயல்பட்டார். அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் ஆகியனவற்றின் ஆரம்ப உறுப்பினருமாவார். இலங்கையில் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் 13 யூலை 1951 இல் பிறந்த முருகபூபதி , விவேகானந்த வித்தியாலயத்தில் ( தற்போது விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) தமது ஆரம்ப கல்வியை தொடங்கி பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும், ( தற்போது கனகரத்தினம் மத்திய கல்லூரி ) நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இவருடைய வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி என்ற ஆவணப்படத்தை 2017 இல் மெல்பேர்ன் எழுத்தாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், வீடியோ கலைஞர் மூர்த்தியும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர். இவருடைய சிறுகதை தொகுதிகள் ஏழும், புதின, சிறுவர், பயண இலக்கியம் மூன்றும், கடித இலக்கியம், நேர்காணல் தொகுதி இரண்டும், கட்டுரை தொகுதிகள் பதினாறும் வெளிவந்துள்ளன. இவர் பெற்ற இலக்கிய விருதுகள்: – சுமையின் பங்காளிகள் – 1975 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதை தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது. – பறவைகள் – 2002 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது. – அக்கினிக்குஞ்சு இணைய இதழ் 2018 இல் வழங்கிய வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது. இதர விருதுகள்: – 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தினத்தின்போது விக்ரோரியா மாநில டெறபின் மாநகர சபை வழங்கிய சிறந்த பிரஜைக்கான விருது. – 2011 ஆம் ஆண்டு விக்ரோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது. – 2022 Aust Tamil TV -( Tamil Linguistics Award ) விருது. இவருடைய இலக்கிய, ஊடகத்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் சம்பந்தமான சேவைகளைப் பாராட்டி 2022 ஆம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. https://akkinikkunchu.com/?p=233366
  10. ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா? December 26, 2022 —ஸ்பார்ட்டகஸ் — உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நியமனப்பத்திரங்கள் தாக்கலுக்கான ஏற்பாடுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இவ்வாரம் வெளியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா ஏற்கெனவே பல தடவைகள் அறிவித்துவிட்ட போதிலும், அந்த தேர்தல்கள் குறித்து நிச்சயமற்ற தன்மை தொடரவே செய்கிறது. சகல உள்ளூராட்சி சபைகளும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 20க்கு முன்னதாக அமைக்கப்படக்கூடியதாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று இடையறாது கோரிக்கை விடுத்துவரும் எதிரணி கட்சிகள் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துக்கொண்டிருப்பதாக சந்தேகத்தை வெளியிட்ட வண்ணமே இருக்கின்றன. மார்ச் 20க்கு முன்னதாக தேர்தல்களை நடத்துவது தொடர்பில் பிரகடனத்தை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக்கோரி எதிரணி கட்சிகள் இரு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றன. இந்த மனுக்கள் ஜனவரி 18 பரிசீலனைக்கு எடுக்கப்படவிருக்கின்றன. உயர்நீதிமன்றம் வழங்கக்கூடிய உத்தரவு தேர்தல்களுக்கான சாத்தியத்தின் மீது தாக்கத்தை செலுத்தும். உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதில் ஆணைக்குழுவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றுகூறிய அதன் தலைவர் உயர்நீதிமன்றத்தினாலும் பாராளுமன்றத்தினாலும் மாத்திரமே தேர்தல்களை ஒத்திவைக்கமுடியும் என்றும் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச போன்ற அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் தேர்தல்களை நடத்துவதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாடுகளில் அரசாங்கம் தலையிடப்போவதில்லை என்று கூறினாலும், உள்ளூராட்சி சபைகளின் வட்டாரங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அஙனகீகாரத்தைப் பெறுவதற்கான செயன்முறைகளில் அரசாங்கம் தாமதத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் குறித்து எதிரணி கட்சிகள் கடுமையான சந்தேகத்தை கிளப்பவே செய்கின்றன. நியமனப்பத்திரங்கள் தாக்கலுக்கான ஏற்பாடுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஆணைக்குழு வெளியிட்டு குறிப்பிட்ட திகதிகளில் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட உயர்நீதிமன்றம் வழங்கக்கூடிய உத்தரவு அல்லது பாராளுமன்றத்தின் ஒரு தீர்மானம் தேர்தல்களை தாமதிக்கச் செய்யலாம். அத்தகையதொரு நிலைஏற்படாது என்பதற்கு உத்தரவாதத்தை ஆணைக்குழுவின் தலைவரினாலும் கூட தரமுடியாது. இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுவதை விரும்பவில்லை. அவர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களையே வெளியிட்டவண்ணம் இருக்கின்றனர். நாடு எதிர்நோக்கியிருக்கும் படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல்களைநடத்துவது கட்டுப்படியாகாத ஒன்று. எதிரணி கட்சிகள் கோருவதன் பிரகாரம் உள்ளூராட்சிதேர்தல்களை நடத்துவதானால், ஏற்படக்கூடிய செலவுகளுக்கு பிறகு அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மக்கள் அரசாங்கத்தை குறைகூறக்கூடாது என்று அகில விராஜ் காரியவாசம் சில தினங்களுக்கு முன்னர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார உள்ளூராட்சி தேர்தல்களுக்கு அவசரமில்லை. அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற தோரணையில் அண்மையில் கருத்து வெளியிட்டார். ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் குறிப்பாக பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் போன்றவர்கள் எந்த தேர்தலயைும் எந்த நேரத்திலும்சந்திக்க தங்கள் கட்சி தயாராகவே இருக்கிறது என்று கூறினாலும், உண்மையில் அவர்கள் உள்ளூராட்சி தேர்தல்களை விரும்பவில்லை. பொதுஜன பெரமுனவையும் ஐக்கிய தேசியகட்சியையும் பொறுத்தவரை, தற்போது மக்கள் முன் செல்வது என்பது கஷ்டமான காரியமேயாகும். அண்மையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்தித்த பொதுஜன பெரமுனவின் நிருவாகத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் தேர்தல்களை ஒத்திவைக்குமாறுதான் கேட்டுக்கொண்டதாக அறியமுடிகிறது. உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து எதிரணி கட்சிகள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அவை திட்டமிட்டபடி நடைபெறும் என்று இதுவரையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் இருந்து உறுதிமொழியும் வரவில்லை. அண்மையில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது அடிக்கடி சபைக்கு வந்து பதிலளித்த ஜனாதிபதியிடம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுராகுமார திசாநாயக்க உள்ளூராட்சி தேர்தல்கள் பற்றிய நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும் என்றுகேட்டார். ஆனால் அதற்கு பிறகு பல தடவைகள் சபைக்கு வந்த ஜனாதிபதி அது குறித்து ஒருபோதும் பேசவில்லை. ஜனாதிபதியின் இந்த மௌனம் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்படலாம் என்ற எதிரணியின் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. எந்தவொரு தேர்தலுக்கு முன்னதாகவும் பொருளாதார நெருக்கடியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்க இருக்கிறார். தற்போதையசூழ்நிலையில் தேர்தல் ஒன்றை நடத்தினால் ஆளும் கட்சிக்குள் ஆழமான பிளவுகள் ஏற்படக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார். தீவிரமான பொருளாதார மீட்சிச் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துவிட்டு ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் மக்களிடம் ஆணையைக் கேட்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்று பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறியதாககடந்த வாரம் ‘சண்டே ரைம்ஸ்’ அரசியல் ஆசிரியர் எழுதியிருந்தார். அதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் உள்ளூராட்சி தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தவேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியபோது “தேர்தல் பற்றி பேசுவதானால் ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுங்கள். அதை அடுத்த வருட இறுதியில் நடத்தலாம்” என்று கூறியதாக அறியமுடிகிறது. ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் எண்ணத்தின் அடிப்படையில்தான் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையே அரசியல் கூட்டணியொன்றை ஏற்படுத்துவது குறித்து அவற்றின் தலைவர்கள் அண்மைய நாட்களாக பேசுகிறார்கள் போலும். அண்மைய மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வும்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கை கொண்டவையாக இருக்கின்றன என்பதை வெளிக்காட்டியிருக்கி்ன்றன. பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும் பின்னடைவான நிலையில்தான் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் இவ்விரு கட்சிகளும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய கூட்டணி எந்தளவுக்கு ஒப்பேறக்கூடியது என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ராஜபக்சக்களை விட்டால் வேறு எந்த கட்சியும் கூட்டுச்சேர முன்வரப்போவதில்லை. ஜனாதிபதியே கூறுவதைப் போன்று அடுத்த வருடம்பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் பட்சத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பலத்துடன் ஜனாதிபதி விக்கிரமசிங்க நடத்திவரும் அரசாங்கம் மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்கை இழக்கக்கூடிய சாத்தியமே இருக்கிறது. ஜனாதிபதிகளின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக மீண்டும் மக்கள் ஆணை கேட்டு தேர்தல்களை நடத்துவது இலங்கையில் ஒன்றும் புதியதல்ல. ஆனால், மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதையடுத்து பாராளுமன்றத்தினால் தெரிவான ஜனாதிபதி முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்த உத்தேசிப்பதே இங்கு புதிய விடயம். இலங்கையில் இதுவரை பதவியில் இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் டி.பி.விஜேதுங்கவும் ரணில் விக்கிரமசிங்கவுமேயாவர். 1993 மே தினத்தன்று கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டதையடுத்து அன்றைய தினமே பதவியேற்ற விஜேதுங்கவை ஏழு நாட்களுக்குள் பாராளுமன்றம் ஏகமனதாக அங்கீகரித்தது. அவரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. ஜனாதிபதி பிரேமதாச தனது முதலாவது பதவிக்காலத்தின் நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டார். அதனால் 1994 நவம்பர் வரையான அவரது எஞ்சிய பதவிக்காலத்துக்கே விஜேதுங்க ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தார். மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருக்கவில்லை. பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால் ஒருவேளை தனது ஆறு வருட பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருக்கக்கூடும். முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன 1972 முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்து 1978 சுதந்திரதினத்தன்று தனது முதலாவது பதவிக்காலத்தை தொடங்கினார். அந்த பதவிக்காலம் 1983 ஆம் ஆண்டில் முடிவடைவதற்கு முன்னதாக இரண்டாவது பதவிக்காலத்துக்காக அவர் 1982 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி அதில் வெற்றிபெற்றார். அதுவே இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தலாகும். ஜனாதிபதி ஜெயவர்தன தனது இரண்டாவது பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருந்துவிட்டு 1988 இறுதியில் ஒய்வுபெற்றார். அடுத்து முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்டு தேர்தலை நடத்தியவர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. 1994 நவம்பரில் தொடங்கிய அவரது முதலாவது பதவிக்காலம் 2000 நவம்பரில்தான் முடிவடையவிருந்தது. ஆனால் அவர் ஒரு வருடம் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தி மீண்டும் வெற்றிபெற்றார். கொழும்பில் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு பதவிப்பிரமாணம் செய்துகொண்ட திருமதி குமாரதுங்க தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைந்த 2000 நவம்பரிலும் மீண்டும் ஒரு தடவை பகிரங்கத்தில் இல்லாமல் பதவிப்பிரமாணம் செய்தார். முதலாவது பதவிக்காலத்தின் ஆறு வருடங்களையும் பூர்த்தி செய்துகொண்டு இரண்டாவது பதவிக்காலத்தின் ஆறு வருடங்களுக்கும் பதவியில் இருக்கும் நோக்குடனேயே அவர் அவ்வாறு செய்துகொண்டார். ஆனால் இரண்டாவது தடவை தேர்தலில் வெற்றிபெற்ற உடனடியாகவே பதவிப்பிரமாணம் செய்த காரணத்தால் 2005 நவம்பருக்கு பிறகு அவர் பதவியில் இருக்கமுடியாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக மொத்தமாக 11 வருடங்கள் ஆட்சியில் இருந்தபின்னர் அவர் ஓய்வுபெற வேண்டியதாயிற்று. திருமதி குமாரதுங்கவுக்கு பிறகு 2005 நவம்பரில் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ச தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக 2010 ஜனவரியில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தேர்தலை நடத்தி வெற்றியும் பெற்றார். அரசியலமைப்பு திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் இரு பதவிக்கால வரையறையை இல்லாமல் செய்த மகிந்த இரண்டாவது பதவிக்காலம் ஒரு வருடம் முன்னதாக மூன்றாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்க 2015 ஜனவரியில் தேர்தலை நடத்தி அதில் தோல்வி கண்டார். அவரை தோற்கடித்து ஜனாதிபதியாக வந்த மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது பதவிக்காலத்துக்கு பிறகு இரண்டாவது பதவிக்காலத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. அவ்வாறு மக்களிடம் மீண்டும் ஆணையைக் கேட்கக்கூடியதாக அவரின் ஆட்சியின் இலட்சணம் அமையவுமில்லை. 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் பெரு வெற்றி பெற்ற கோட்டாபயவின் முதலாவது பதவிக்காலத்தின் இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில் நடந்தவற்றை அண்மைய மாதங்களில் கண்டோம். இப்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க, கோட்டாபயவின் ஐந்து வருட பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடையும் வரை பதவியால் இருக்கமுடியும். ஆனால் அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக 2023 இறுதியளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் நாட்டம் கொண்டிருப்பதாக தெரிகிறது. தங்களது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு தேர்தல்களை நடத்திய ஜனாதிபதிகள் எல்லோரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். ஆனால், மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியான விக்கிரமசிங்க அவ்வாறு செய்யமுடியுமா என்பதில் ஒரு சட்டப்பிரச்சினை இருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். அரசிலமைப்புக்கான மூன்றாவது திருத்தமே உரிய காலத்துக்கு முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அனுமதிக்கும் ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதியொருவர் பதவிவிலகியதால் அல்லது மரணமடைந்ததால் ஏற்படுகின்ற வெற்றிடத்துக்கு பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்டு ஜனாதிபதியாக வருபவர் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான உரித்தைக் கொண்டவர் அல்ல. அவர் வெற்றிடத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருக்கவேண்டும் என்று அந்த ஏற்பாடு கூறுகிறது. அதனால் ஜனாதிபதி விக்கிரமசிங்க உரிய காலத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தமுடியாது — இவ்வாறு கூறுகிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விமானும் அரசியலமைப்பு அறிஞருமான ரொஹான் எதிரிசிங்க. https://arangamnews.com/?p=8445
  11. புடினை கடுமையாக விமர்சித்த ரஷ்ய எம்.பி..! இந்தியாவில் மர்ம மரணம் – தொடரும் விசாரணை புடினின் உக்ரைன் போரை கடுமையாக விமர்சித்த ரஷ்யாவின் பணக்கார எம்.பி. இந்தியாவில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பணக்கார எம். பி.களில் ஒருவரும், அதிபர் விளாடிமிர் புட்டினின் தீவிர விமர்சகருமான பாவெல் அன்டோவ் (Pavel Antov), இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள விடுதியில் இருந்து மர்மமான முறையில் விழுந்து இறந்து கிடந்தார். கோடீஸ்வரர் பாவெல் அன்டோவ் தனது 66 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஒடிசாவின் Rayagada பகுதியில் விடுமுறையில் இருந்தார். அவர் மாடியில் இருந்து குதித்ததாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷ்ய தூதரக ஜெனரல் அலெக்ஸி இடம்கின், அவர் ஜன்னலில் இருந்து விழுந்ததாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவரது மரணம் குறித்த விசாரணையை உன்னிப்பாகப் பின்பற்றுவதாகவும் மற்றும் ஒடிசா காவல்துறையினரிடமிருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வியாழன் அன்று மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படும் அவரது கட்சி சகாவான விளாடிமிர் புடானோவ் (61) மர்மமான முறையில் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இவர் இறந்துள்ளார். உக்ரைன் மீதான புடினின் போரை கடுமையாக எதிர்த்தவர்களில் அன்டோவ்வும் ஒருவர் ஆவார். கடந்த ஜூன் மாதம், ஒரு சமூக வலைதள பதிவில், உக்ரைன் மீதான போர் மற்றும் விமானத் தாக்குதல்களை ரஷ்ய “பயங்கரவாதம்” என்று அவர் விமர்சித்தார். ஆனால் இறுதியில், பெரும் அழுத்தத்திற்கு ஆளானதையடுத்து அவர் தனது அறிக்கையை திரும்பப் பெற வேண்டியதாயிற்று. மேற்கத்திய ஊடகங்கள் அவர் ஒரு “குழப்பமான மன்னிப்பு” வெளியிட்டதாக செய்தி வெளியிட்டது. அவரது பதிவு “துரதிர்ஷ்டவசமான தவறான புரிதல்” மற்றும் “தொழில்நுட்பப் பிழை” என்று அவர் கூறினார். மேலும் அவர் “எப்போதும் புடினை ஆதரிப்பதாக” கூறினார். https://akkinikkunchu.com/?p=233537
  12. தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றுபடுவதிலும் வெடித்தது பூகம்பம் – இறுதி முடிவில் குழப்பம்! தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என்று அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூம் செயலி ஊடாக நேற்று மாலை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இதன் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 75 ஆம் ஆண்டு விழா சர்ச்சை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுவில் இறுதித் தீர்மானம் எடுப்பது எனத் தெரிவிக்கப்பட்டு அந்த விடயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாகப் பயணிப்பது குறிப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாகச் செயற்படுவதன் நன்மை அதன் அவசியம் தொடர்பிலும் விளக்கினார். வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இப்போதுள்ள நிலையிலேயே தேர்தலை எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டார். மேலும், கூட்டமைப்பின் வாக்காளர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் புதிய கூட்டுத் தேவையில்லை என்றும் அது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார். கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், கருத்துத் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அனந்தி போன்று பலரும் வெளியேறிச் சென்று தனிக் கட்சி உருவாக்கினார்கள். இனிமேல் வந்து அதிக ஆசனங்களைக் கேட்பார்கள். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளால் கூட எமக்கு பல இடங்களில் பாதிப்பே” என்று குறிப்பிட்டார். இதன் போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், எந்தக் கட்சியோடும் சேராமல் இலங்கைத் தமிழரசுக் கட்சியாகவே, தனித்துத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இந்த விடயங்கள் தொடர்பில் பரந்துபட்டு ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று கருத்து வெளியிட்டார். அதேவேளை அதிபர் சட்டத்தரணி கே.வி. தவராசா, தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்தே இனிவரும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து, இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கடும் வாக்குவாதத்தின் மத்தியில் இழுபறிபட்ட நிலை தொடர்ந்ததால், எதிர்வரும் 6ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுப்பது என்று தெரிவித்து கூட்டம் முடிவுறுத்தப்பட்டது. https://akkinikkunchu.com/?p=233576
  13. யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில் ,யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை இடமாற்றம் குறித்து பிரதேச செயலர்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலதிக யாழ். மாவட்ட செயலர் (காணி) எஸ். முரளிதரன், ஊர்காவற்துறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் , நல்லூர் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி , தெல்லிப்பளை பிரதேச செயலர் சண்முகராஜா சிவசிறி , சங்கானை பிரதேச செயலர் பொன்னம்பலம் பிறேமினி மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் ஆகிய ஐவருக்குமே இடம்மாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(15) http://www.samakalam.com/யாழ்ப்பாணத்தில்-ஐந்து-பி/
  14. அதிகாரப் பங்கீடின்றி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்யலாமா? -தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன– அ.நிக்ஸன்- அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வர்த்தகச் செயற்பாடுகள் போன்ற பல திட்டங்களை முன் அறிவித்தல்கள் இன்றி ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கின்றனர். அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்பச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களைச் சிறிய தீவான இலங்கை ரத்துச் செய்யும் சூழலில், எந்தவிதமான அரசியல் அதிகாரங்கள் – பாதுகாப்புகள் இல்லாத புலம்பெயர் தமிழர்கள் எந்த நம்பிக்கையோடு இலங்கையில் முதலிட முடியும் என்ற கேள்விகள் நியாயமானவை. பொருளாதார நெருக்கடியில் இருந்து குறைந்த பட்சமேனும் மீள புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை எதிர்பார்க்கும் நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் மக்களின் முதலீடுகளை எதிர்பார்க்கிறார் என்பது தெரிகிறது. தமிழ் உறுப்பினர்களைப் பேச்சுக்கு வருமாறு அழைத்த பின்னணியும். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைக் காண வேண்டும் என்ற நோக்கில் அமைந்தமை என்பதும் கண்கூடு. ஆகவே இரண்டு விடயங்களை இங்கே அவதானிக்க வேண்டும். ஒன்று, புலம்பெயர் மக்களின் உதவிகளைப் பெறுவது. இரண்டாவது அரசியல் தீர்வுக்கான பேச்சு என்று கூறி, இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் விரிவடைகின்றன என்ற தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்குக் காண்பிப்பது. ஆனால் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்ற பட்டறிவு தமிழர்களிடம் உண்டு. அதுவும் புலம்பெயர் தமிழர்களிடம் அந்தப் பட்டறிவு அதிகமாகவே உண்டு என்பதைச் சிங்கள ஆட்சியாளர்கள் நம்ப மறுக்கின்றனர் அல்லது அவர்கள் சார்பான தமிழ் முகவர்கள் உர மூட்டுகின்றனர் எனலாம். 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்திலேதான் சில சர்வதேச ஒப்பந்தங்கள் செயலிழந்தன. குறிப்பாக 2016 ஆம் ஆண்டு செய்யப்பட்ட கொழும்புத் துறைமுக கிழக்கு முனை அபிவிருத்தி ஒப்பந்தம், ஜப்பான் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையுடன் இணைந்து அபிவிருத்தியை மேற்கொள்வதென ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாகக் கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனை அபிவிருத்தி சீனாவிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று 2018 இல் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் அபிவிருத்தி உடன்படிக்கை தன்னிச்சையாகவே ரத்துச் செய்யப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன மிலேனியம் சவால்கள் நிறுவன தலைவருடன் உரையாடி இணக்கம் தெரிவித்த நிலையிலேயே ஒப்பந்தம் கைச்சாத்தாகியது அதேபோன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜப்பான் அரசின் கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் சேவைத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக ரத்துச் செய்துள்ளது. திட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக ஜப்பான் அரசுடன் எந்தவிதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை. இலங்கைக் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் அறிக்கையின் படி செப்டம்பர் 24, 2020 அன்று அங்கீகாரம் பெற்றிருந்த நிலையில் இத் திட்டம் ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளை, பதினைந்து வருடங்களுக்கு முன்னா் இந்தியாவும் இலங்கையும் 2006 இல் சம்பூர் மின் உற்பத்தி மற்றும் 2009 இற்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தன. ஆனால் இவை உரிய முறையில் செயற்படவில்லை. 2002 இல் கொழும்பில் அமைக்கப்பட்ட இந்தியாவின் அப்பலோ மருத்துவனை, 2006 இல் இலங்கையினால் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச விதிகளுக்கு மாறாக இலங்கை வர்த்தகர் ஒருவர் மூலம் வெவ்வேறு பெயர்களில் அதிகளவு பங்குகளைக் கொள்வனவு செய்து அப்பலோ மருத்துவமனையை இலங்கைக்கு உரியதாக்கி லங்கா மருத்துவமனை என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அப்போது கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் நிருபன் சென், அமைச்சராக இருந்த அமரர் அனுரா பண்டாரநாயக்கவுடன் கடுமையாகத் தர்க்கப்பட்டார். இலங்கை நாடாளுமன்றத்திலும் இந்தியாவுக்கு எதிரான விமர்சனங்களை அனுரா பண்டாரநாயக்க அள்ளி வீசினார். சென்னை இராமச்சந்திர மருத்துவமனையைக் கொழும்பில் அமைக்க சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது 2004 இல் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தயாராகியிருந்தது. ஆனால் 2005 இல் மகிந்த ராஜபக்ச ஜனாதியாகப் பதவியேற்ற பின்னர் அதனை ரத்துச் செய்தார். கொழும்பு கொள்பிட்டி காலி வீதியில் இந்திய தூதரகம் அமைப்பதற்கு 2013 இல் இடம் ஒதுக்கிவிட்டுப் பின் அதனை மீளப் பெற்றுச் சீன விமான நிறுவனம் ஒன்றுக்குக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் மகிந்த கைச்சாத்திட்டார். இவ்வாறு பல ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டும் வேறு சில வெளிநாட்டு வர்த்தக முதலீடுகள் அபகரிக்கப்பட்டும் உள்ள சூழலில், புலம்பெயர் தமிழர்கள் எதனை நம்பி இலங்கையில் முதலீடு செய்ய முடியும்? இலங்கை அரச நிறுவனங்களை அல்லது அரச – தனியார் கூட்டு நிறுவனங்கள் சிலவற்றைப் பொறுப்பேற்றுச் செயற்படுத்த முடியுமா என்ற கேள்விகளும் நியாயமானவை. உதாரணமாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியே அதன் பங்குகள் எமிரேட்ஸ் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால் லாபம் ஈட்ட ஆரம்பித்ததும், பின்னர் அந்த நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் மீளவும் பெற்றுக் கொண்டது. ஆகவே வல்லாதிக்க நாடுகளின் பிரபல சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் இலங்கையோடு நம்பிக்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களைத் தன்னிச்சனையாக ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், அதிகாரமே இல்லாத எந்த ஒரு நாடுகளினதும் ஆதரவு இல்லாத சூழலில், புலம்பெயர்ந்த தமிழ் வர்த்தகர்கள் முதலீடு செய்தால், அல்லது சில அரச – தனியார் கூட்டு நிறுவனங்களின் பங்குகளைக் கொள்வனவு செய்து இயக்கினால் அதனை மீண்டும் தட்டிப்பறிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? வல்லரசு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டமை குறித்து இன்று வரை எந்த ஒரு சிங்கள ஆட்சியாளர்களும் பொறுப்புக்கூறவும் இல்லை. ஆகவே புலம்பெயர் அமைப்புகள் இந்த அநீதிகளைச் சுட்டிக்காட்டியும், எழுபது வருடங்களாகத் தமிழர்கள் ஏமாற்றபட்டமை குறித்தும் பரப்புரை செய்ய வேண்டும். அத்துடன் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்ற அங்கீகாரத்துடன் சுயாட்சி அதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்படாமல், இலங்கையில் எந்த ஒரு முதலீட்டுக்கும் தயார் இல்லை என்ற உறுதியான தகவலை சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்தவும் வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாசாவோ, சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்ற விரும்பமாட்டார்கள் என்பது எழுபது வருட உண்மை. முதலீடுகளைச் செய்யுமாறு ரணில் அழைப்பு விடுத்துள்ள நிலையில், உள்ளகப் பொறிமுறைதான் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் ஏழாம் திகதி புதன்கிழமை செய்தியாளர்களிடம் துணிவுடன் கூறியிருக்கிறார். ஆகவே இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் மாற்றத்தைச் செய்யாமல், உள்ளக ரீதியான ஒற்றையாட்சிப் பொறிமுறைகள் ஊடே கொழும்பை மையமாகக் கொண்ட அதிகாரப் பரவலாக்கத்தை மாத்திரம் இலங்கை விரும்புகிறது. அத்துடன் சிங்களவர்கள் விரும்பும் அரசியல் தீர்வின் மூலம் புலம்பெயர் மக்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமெனவும் சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர் என்பதும் இங்கே பகிரங்கமாகியுள்ளது. ஆகவே தமிழர்களுக்குரிய அரசியல் – பொருளாதார பாதுகாப்பு அற்ற ஒரு சூழலில் துணிவோடு அழைப்பு விடுக்கப்படுகின்றது என்றால், இதன் பின்னால் வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பும் இல்லாமல் இல்லை. ஏனெனில் தம்முடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் பலவற்றை மீறியதால். அதற்குப் பதிலாக இலங்கையோடு பேரம் பேசி இலங்கையில் தமக்குரிய வேறு ஏதேனும் லாபங்களை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லாதிக்க நாடுகள், அரசுக்கு அரசு என்ற இராஜதந்திர உறவுகளின் மூலம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே அரசற்ற சமூகமாகக இருக்கும் புலம்பெயர் தமிழர்களைச் சிங்கள ஆட்சியாளர்கள் கன கச்சிதமாக ஏமாற்றுவர்கள் என்ற நுட்பமான அடிப்படை உண்மை இந்த வல்லாதிக்க நாடுகளுக்குத் தெரியாததல்ல. இலங்கையைத் திருப்திப்படுத்தவே ஈழத்தமிழர் தொடர்பான சிங்கள ஆட்சியாளர்களின் சமீபகால நகா்வுகளை அமைதியாக இந்த வல்லாதிக்க நாடுகள் அவதானித்தக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகத் தமது புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார நோக்கில் செயற்படும் இந்த வல்லாதிக்கச் சக்திகள், இலங்கைத்தீவில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இன முரண்பாடுகள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. ஆனால் முடிந்தவரை சிங்கள மக்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்குத் தமிழர்கள் இணங்கிச் செல்ல வேண்டுமென வற்புறுத்தியும் வருகின்றன. 2002 சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலும் இந்த நிலைப்பாட்டோடுதான் குறித்த வல்லாதிக்க நாடுகள் செயற்பட்டுமிருந்தன. ஆகவே இதற்குச் சரியான பதில் கொடுக்க வேண்டியது புலம்பெயர் தமிழர்கள்தான். குறிப்பாக இலங்கையில் முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் சில புலம்பெயர் வர்த்தகர்கள், சிங்கள ஆட்சியாளர்களின் நுட்பமான காய் நகா்த்தல்களையும், அது பற்றிய வல்லாதிக்கச் சக்திகளின் கள்ள மௌனத்தையும் ஆழமாக நோக்க வேண்டும். தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல வடக்குக் கிழக்குச் சிவில் சமூக அமைப்புகளுக்கும் இந்தப் பொறுப்பு உண்டு. வெறுமனே ஆரவாரங்களுக்கும் பரபரபரப்புப் பேச்சுக்களுக்கும் இடமளித்து ஈழத்தமிழர்களின் சுயமரியாதையை இழக்கும் ஆபத்துக்களில் சிக்கிவிட முடியாது. புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னணியிலேதான் இலங்கை வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கே முன்னுரிமை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பதாக நம்பகமான உள்ளகத் கூறுகின்றன. இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எட்டாம் திகதி வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதையும் அவதானிக்க வேண்டும். இந்தியாவை இலங்கை பல சந்தா்ப்பங்களில் இராஜதந்திர ரீதியாகவும், வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டதன் ஊடாகவும் அவமானப்படுத்தியிருக்கின்றது என்று தெரிந்தும், “இலங்கைக்கு முக்கியத்துவம்” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார் என்றால், இந்தியாவுக்கான முக்கியத்துவத்தை இலங்கை கொடுத்திருக்கிறது என்ற பின்புலத்தை அறியலாம். ஈழத்தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கவும் புலம்பெயர் மக்களின் முதலீடுகளை உள்ளீர்க்கவும் இந்திய ஆதரவுத் தளத்தை நீட்ட வேண்டுமென ரணில் கருதியிருக்கலாம். இந்தியாவும் ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கைக்கு எதிரான ஆயுதமாக்கித் தமக்குரிய புவிசார் நலன்களை அடைந்து வருகிறது என்பதும் புதிய விவகாரமல்ல. ஆகவே இக் காரண காரியங்களை ஈழத்தமிழர்கள் மிக நுட்பமாக அறிந்து காய் நகா்த்த வேண்டும். குறிப்பாக இந்தியாவைக் கையாளும் பொறிமுறை ஒன்றைக் கட்சி அரசியலுக்கு அப்பால் வகுக்க வேண்டும். வடக்குக் கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற கருத்தை அது பிரதிபலிக்கவும் வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கு, தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதை உறுதிப்படுத்த எடுத்த முயற்சிகள் பற்றி அப்போது கொழும்பில் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிற் ”கொழும்பு அசைமென்ற்” என்ற தனது நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஜே.ஆர்.ஜயவர்த்தன எப்படிப் பிடிவாதமாக நின்றார் என்பது பற்றி டிக்சிற் தனது நூலில் விபரிக்கிறார். ஆகவே மேலும் அது பற்றிய ஆழமான உள்ளக விபரங்களைப் பெற வேண்டியது தமிழ்த் தரப்புக்கு அவசியமானது. இன்றும் கூட அதே பிடிவாதத்துடனேயே சிங்கள ஆட்சியாளர்கள் நகருகின்றனர். ஆனால் தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன. 2009 மே மாதத்திற்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியல் பரப்பு திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட பொறிமுறை ஊடாகச் செயற்படவில்லை. இப் பலவீனங்களை அறிந்தே ரணில் புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடு செய்ய வருமாறு அழைத்திருக்கிறார் என்பதும் பகிரங்க உண்மை. http://www.samakalam.com/அதிகாரப்-பங்கீடின்றி-புல/
  15. அரசியலில் சூழ்ச்சி? - யதீந்திரா ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக தமிழர்களை ஏமாற்றப் போகின்றார். ஜெனிவாவை கையாளும் ஒரு உக்தியாகவே ரணில் ஒரு புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். விடயம் தெரியாமல் தமிழ் தலைமைகள் கொழும்பின் பொறிக்குள் சிக்கப்போகின்றன. இதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் பலவீனமடையப் போகின்றது. இவ்வாறான கருத்துக்களை சிலர் முன்வைப்பதை காணமுடிகின்றது. அரசாங்கத்துடன் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்பங்களிலும் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவது சாதாரணமானது. ஒரு நம்பிக்கையற்ற சூழலில் இடம்பெறும் அனைத்துமே அவநம்பிக்கையினூடாகத்தான் நோக்கப்படும். அவ்வாறாயின் ரணில் சூழ்ச்சி செய்யமாட்டாரா? இப்படி எவரேனும் கேட்டால் – பதில் சுலபமானது. அவர் நிச்சயம் சூழ்சிகள் புரிவார். அதில் நாம் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. ஏனெனில் அரசியல் என்பது எப்போதுமே அரசியல்தான். அரசியலும் சூழ்ச்சியும் பிரிக்கமுடியாதவைகளாகும். அரசாங்கம் – ரணில், சூழ்சிகள் புரிவாரென்றால் அதனை முறியடித்து, தமிழ் மக்களின் நலன்களை வெற்றிகொள்வதுதானே தமிழர்களின் அரசியல் கெட்டித்தனமாக இருக்க முடியும். சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல, உலகில் அனைத்து ஆளும் தரப்புக்களும் சூழ்சிகளுடன்தான் வரும். ஒரு அடிப்படையான வேறுபாடுண்டு. நாம் சூழ்ச்சியாக விளங்கிக்கொள்வது, அவர்களது பார்வையில் ராஜதந்திரமாகும். ராஜதந்திர அரசியலை இரத்தமும் சதையுமாக புரிந்துகொள்வதாயின், தந்திரங்கள் இல்லாமல் ராஜ்யங்கள் இல்லை. தந்திரங்கள் இல்லாமல் அரசியலுமில்லை. ராஜ்யங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் தந்திரங்களிலேயே தங்கியிருக்கின்றது. எனவே உணச்சிகளுக்கு பலியாகாமல் விடயங்களை நோக்கப் பழகுவோம். முதலில் சர்வதேச அழுத்தங்களை உற்றுநோக்குவோம். இது தொடர்பில் பல்வேறு சந்தர்பங்களில் இந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் சில விடயங்கள் தமிழ் சூழலில் கூறியது கூறலாகவே இருக்கின்றது. உணர்சிவசப்பட்ட கருத்துக்கள் கூறியது கூறலாக தொடர்வதால், யதார்தங்களையும் திரும்பத்திரும்ப அழுத்தி கூறவேண்டியிருக்கின்றது. சர்வதேச அழுத்தங்களை ரணில் பலவீனப்படுத்திவிடுவாரென்று நாம் கூறுகின்ற போது, ஒரு விடயத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதாவது, ரணில் பலவீனப்படுத்தக் கூடியளவிற்கு, சர்வதேச அழுதங்கள் பலவீனமாக இருக்கின்றன. அந்தளவிற்கு அவை பலவீனமானவையா? இந்த அடிப்படையில் ஏன் எவரும் சிந்திப்பதில்லை? ரணில் விக்கிரமசிங்க வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள நாடொன்றின் ஜனாதிபதி. வெளிநாடுகளின் உதவிக்காக கையேந்திக் கொண்டிருக்கும் ஒருவர். இவ்வாறான ஒருவரால் பலம்பொருந்திய நாடுகளின் அழுத்தங்களை எவ்வாறு பலவீனப்படுத்த முடியும்? ஈழத் தமிழர்களுக்கு உறுதியானதொரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று மேற்குலகம் தீர்மானித்தால் அந்த தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்கவினால் என்ன செய்துவிட முடியும்? நிச்சயமாக முடியாது. எனவே மனித உரிமைசார்ந்த அழுத்தங்களை ரணில் விக்கிரமசிங்க சூழ்சியால் மடைமாற்றிவிட முடியாது. அடுத்தது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது சொந்த நலன்களுக்காக காட்டிக்கொடுப்புக்களை செய்கின்றாரென்று எவரேனும் கூற முற்பட்டால், அதுவும் பலவீனமானதொரு வாதமாகும். ஏனெனில் நம் அனைவருக்குமே ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். கூட்டமைப்பினர், இந்தியாவையும் அமெரிக்காவையுமே நம்பி அரசியல் செய்பவர்கள். அவனின்றி அனுவும் அசையாதென்பது போல், அவர்களின்றி கூட்டமைப்பினர் அசையப் போவதில்லை. உண்மையிலேயே சர்வதேச அழுத்தங்களை இறுக்கமாக பேணிக்கொள்ள அந்த நாடுகள் விரும்பினால், கூட்டமைப்பை அவர்கள் அதற்கேற்பவே கையாண்டிருப்பர். அதில் எந்தவொரு தடையுமில்லை. ஆனால் அவர்களோ அரசாங்கத்தோடு பேசுமாறு கூட்டமைப்பை ஊக்குவிக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினாலும் ரணில் சர்வதேச அழுத்தங்களை பலவீனப்படுத்தவே, கூட்டமைப்புடன் பேசுகின்றாரென்பது, பலவீனமானதொரு வாதமாகும். ஏனெனில், விடயங்களை ஆழமாக நோக்கினால், ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்களை பலவீனப்படுத்துவதற்கான துருப்புச் சீட்டுக்கள் எவையும் ரணிலிடம் இல்லை. ரணிலால் அது முடியாது. 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், ரணில் மற்றும் மங்களசமரவீர போன்றவர்களின் திறமையினால் அல்லது கூட்டமைப்பின் சதியால் விடயங்களில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தங்களுக்கு விருப்பமான ஆட்சியாளர்கள் பலமடைவதற்கும், முன்நோக்கி பயணிப்பதற்குமான கதவை பலம்பொருந்திய நாடுகள் திறந்துவிட்டன. உண்மையில் உள்நாட்டில் முன்னேற்றங்களை காண்பிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கினர். ஆனால் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. ஒரு வேளை ரணில்-மைத்திரி அரசாங்கம் முரண்பாடுகளில்லாமல் நகர்ந்திருந்தால், இப்போது நாம் கூறிக் கொண்டிருக்கும் சர்வதேச அழுத்தங்களில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும் ஒரு குறிப்பிட்டளவில் மனித உரிமைசார்ந்த அழுத்தங்கள் இருந்து கொண்டேயிருக்கும். மனித உரிமைசார்ந்த அழுத்தங்கள் முற்றிலும் இல்லாமல் போய்விடாதென்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கு தெரியாத விடயமுமல்ல. ஆனால் அந்த அழுத்தங்கள் தங்களால் கையாளக் கூடிய எல்லைக்குள் இருக்க வேண்டுமென்பதுதான் அவர்களது விருப்பமாகும். ஏனெனில் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களால் நாடுகளை கட்டுப்படுத்த முடியாது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பலவீனத்தை புரிந்துகொள்வதற்கு, பேரவையின் முன்னைநாள் ஆணையாளர் நவிப்பிள்ளையின் கூற்றே போதுமானது. அதாவது, ஜ.நா மனித உரிமைகள் பேரவையானது, புவிசார் அரசியல் நலன்களாலும் குறுகிய தேசியவாத நலன்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இதற்கு தனது சொந்த நாடான தென்னாபிரிக்காவும் விதிவிலக்கல்ல. இந்த யதார்தங்களை புரிந்துகொள்ளாத வாதங்களால் பயனில்லை. சர்வதேச அரசியல் சூழலை இரத்தமும் சதையுமாக நோக்க வேண்டும். அடிப்படையில் இந்த உலக அரசியல் ஒழுங்கானது, அரசுகளை பாதுகாக்கும் ஒழுங்காகும். இந்த ஒழுங்கில் அரசல்லாதவர்களிடம் என்னதான் நியாயங்கள் இருந்தாலும் கூட, அது சபையேறாது. இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பே மிகச் சிறந்த உதாரணம். விடுதலைப் புலிகள் அமைப்பு மேற்குலகிற்கு எதிரான அமைப்பல்ல. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுடன் ஒரு போதுமே விடுதலைப் புலிகள் அமைப்பை ஒப்பிட முடியாது. இது மேற்குலகத்திற்கும் தெரியாத விடயமல்ல. எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் யுத்தத்தை நோக்கி நகர்ந்த போது, அதுவரையில் விடுதலைப் புலிகளை கண்டும்காணாமல் விட்டிருந்த ஜரோப்பிய ஒன்றியமும், கனடாவும் விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் (பிரபாகரனின்) யுத்த முடிவை மறுபரீசீலனை செய்வதற்கானதொரு அழுத்தமாகவே மேற்படி தடை பிரயோகிக்கப்பட்டது. ஆனாலும் அதனை விடுதலைப் புலிகள் அமைப்பு பொருட்படுத்தவில்லை. ஒட்டுமொத்த மேற்குலகத்தினாலும் எதிர்க்கப்பட்ட பின்புலத்தில்தான், விடுதலைப் புலிகள் யுத்தகளத்தில் நிர்மூலமாக்கப்பட்டனர். மேற்குலகம் ஒட்டுமொத்தமாகவே விடுதலைப் புலிகளுக்கு எதிராக திரும்பிய போது, புலம்பெயர் சமூகத்தினால் அதனை தடுக்க முடியவில்லை. இந்தக் காலத்தில் மேற்குலக ராஜதந்திரி ஒருவருடன் பேசிய அனுபவத்தை ஒரு நண்பர் பின்னர் பதிவு செய்திருந்தார். அதாவது, மகிந்த ராஜபக்ச அடிப்படையிலேயே மேற்குலகிற்கு எதிரான பார்வைகொண்டவர். அவ்வாறான ஒருவர் முன்னெடுக்கும் யுத்தத்ததை நீங்கள் ஏன் ஆதரிக்கின்றீர்கள்? இதற்கு அந்த ராஜதந்திரியின் பதில், பிரபாகரனை இப்போது மகிந்த பார்த்துக் கொள்ளட்டும் பின்னர் நாம் மகிந்தவை பார்த்துக் கொள்வோம். பலம்பொருந்திய நாடுகளின் சிந்தனையை புரிந்துகொள்வதற்கு இது ஒரு சிறந்த கூற்றாகும். ஏனெனில் தங்களது நலன்களை பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களிடம் பல வழிமுறைகள் உண்டு. இறுதி யுத்தத்தின் போது, பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படுவர் என்பதை அனைவருமே அறிந்திருந்தனர். உண்மையிலேயே அப்பாவி ஈழத் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமென்று எண்ணியிருந்தால், உலகின் பலம்பொருந்திய நாடுகள் அழிவை தடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறானதொரு யுத்த நிறுத்தம் ஏற்பட்டால் புலிகள் தப்பிவிடுவார்கள் – முக்கியமாக பிரபாரனும் தப்பிவிடுவார் – என்னுமடிப்படையில்தானே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சாதாரண மக்களின் உயிர்களை கருத்தில் கொண்டு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஏன் இவ்வாறு நடந்தது? ஏனெனில் சாதாரண அப்பாவி ஈழத் தமிழர்களின் உயிர்கள் உலகின் மூலோபாய நலன்களுக்கு தேவைப்படவில்லை. ருவாண்டா இனப்படுகொலையின் போது, ருவாண்டாவின் ஜ.நா அமைதிப் படை நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த மேஜர் ஜெனரல் ரோமியோ டலாரி – இவ்வாறானதொரு இனப்படுகொலையை உலகம் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் உலகம் தடுக்கவில்லை ஏனெனில் உலகின் மூலோபாய நலன்களுக்கு இந்தச் சிறிய ஆபிரிக்க நாட்டின் ஏழை மக்களின் உயிர்கள் தேவைப்பட்டிருக்கவில்லையென்று எழுதியிருந்தார். முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த ஈழத் தமிழ் மக்களின் நிலையும் இதுதான். இறுதி யுத்தத்தின் போது, ஜ.நாவின் பேச்சாளராக இருந்த கோடன் வைஸ், 2011இல், புலிகளின் இரத்தம் என்னும் தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். புலிகள் இல்லாத உலகம் முன்னரை விடவும் இப்போது சிறப்பாக இருக்கின்றதென்று அதில் குறிப்பிட்டிருந்தார். ஒரு மேற்கு நாட்டவரின் பார்வையின் எல்லை இதுதான். இதனை புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது நமது பணியாகும். இந்த பின்புலத்தில் நோக்கினால் சர்வதேச அழுத்தங்களின் எல்லைகளை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு துருப்புச்சீட்டும் எவரிடமுமில்லை. அவர்களுக்கு தேவையென்றால் அதனை குறைக்கவும், கூட்டவும் அவர்களால் முடியும். அவர்களால் மட்டும்தான் அது முடியும். அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் அமைதியாக இருக்க வேண்டுமென்பதல்ல மாறாக, பாதிக்கப்பட்ட தரப்பினர் என்னதான் நியாயங்களை கூறினாலும் கூட, அந்த நியாயங்கள் மட்டும், உலகின் தீர்மானங்களை மாற்றுவதற்கு போதுமானதல்ல. ஆனால் இவ்வாறான அழுத்தங்களின் எல்லையை புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயற்பட வேண்டியது நமது கடமையாகும். அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசத்தான் வேண்டும். அதனை கையாளத்தான் வேண்டும். சூழ்சிகளை எதிர்கொள்வதற்கு, சூழ்சியை எதிகொள்ளாமல் தப்பியோடுவது ஒரு உபாயமாகவே இருக்கவே முடியாது. http://www.samakalam.com/அரசியலில்-சூழ்ச்சி/
  16. வான்கோழி lean meat என்பதால் protein எடுக்க சாப்பிடுவதுண்டு! வான்கோழி கிரேவியுடனும் அதிகம் கிரான்பெர்ரி சோஸும் சேர்த்து அடித்தான் அந்த மாதிரி இருக்கும்! கொஞ்சம் உப்புப் போட்டு அவிச்ச ரெயிண்டியரையே லின்கொம்பெர்ரியியுடனும், மாஷ் பண்ணின உருளைக்கிழங்குடனும் உள்ளே தள்ளிய நமக்கெல்லாம் பார்ட்டிகளில் சோறைக் கண்ணில் காட்டக்கூடாது!
  17. என்னுடைய பெயரை tag பண்ணினால் எனக்கு notifications வரும் @Kandiah57 அண்ணை! பென்சனியர்கள் எல்லாம் பென்ஷன் எடுக்கும் வயதில் இருக்கும் யாழ் கள முதியவர்கள்!
  18. நாய் “லொக்” பண்ணுவதற்கு தருமரின் சாபம் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை மறுப்பது கடமை! சிங்களவன் நாயுடன் செக்ஸ் வைத்தது கனடாவிலும் நடந்திருக்கு. அது யாழிலும் வந்திருக்கு! அந்தப் பழைய திரியில் நெடுக்ஸ் நாயின் “லொக்”கிற்கு விளக்கம் வேற தந்திருக்கின்றார்!
  19. நான் மூடமுடியாது! ஆனால் பென்சனியர்களின்👴🏼 அலப்பறை தாங்காமல் இந்தப் பக்கம் வருவதை நிப்பாட்டியாச்சு😃
  20. தினேஷ் ஷாப்டர் மரணம்; கொலையா? தற்கொலையா? ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தினேஷ் ஷாப்டர் இறுதியாக பயணித்த தனது காரில் வேறு யாரும் பயணிக்கவில்லை என்பது CCTV காட்சிகளில் தெளிவாக ஆதாரங்கள் இருந்தாலும், காரில் இருந்தவை குறித்து நீண்ட விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தினேஷ் ஷாப்டர் தனது மனைவியுடன் இங்கிலாந்து செல்வதற்கு சில மணித்தியாலங்கள் இருந்த நிலையில், பொரளை மயானத்தில் காரில் அவரது கைகள் கட்டப்பட்டு மீட்கப்பட்டிருந்ததுடன், மயானத்தின் ஊழியர் ஒருவரின் உதவியுடன் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், ஐந்து மணித்தியால சிகிச்சையின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாவை தனது வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்தும், எதிர்பார்த்தபடி பணத்தை வசூலிக்க முடியாமல் போனதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால், நாளுக்கு நாள் தினேஷ் ஷாப்டர் நட்டமடைந்து வந்துள்ளார். தினேஷ் ஷாப்டர் சுமார் 2,000 கோடி ரூபாவை இழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் வசிக்கும் கறுவாத்தோட்டம் – ப்ளவர் வீதி வீட்டை விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியாகியிருந்தமை தொடர்பிலும் தெரியவந்துள்ளது. தினேஷ் ஷாப்னரின் உயிரிழப்பு தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 70 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், சுமார் 70 CCTV காணொளிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. R https://www.tamilmirror.lk/செய்திகள்/தனஷ-ஷபடர-மரணம-கலய-தறகலய/175-309624
  21. நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள்.... சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், இன்று நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. வெருகல் பிரதேசத்தில் நினைவேந்தல் நிகழ்வு.. உடுத்துறையில் சுனாமி நிகழ்வு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் திருக்கோவிலில் ஆழிப்பேரலை நினைவு தினம் காரைதீவில் ஆழிப்பேரலை நினைவு தினம் கண்ணீரில் நனைந்த முல்லைத்தீவு சுனாமி நினைவாலய வளாகம் அம்பாறையில் ஆழிப்பேரலை நினைவு தினம் தும்பளையில் சுனாமி நிகழ்வு சுனாமி தாக்கத்தின் 18 வது ஆண்டு நினைவுதினம் மட்டு.மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் இரண்டு நிமிடம் அகவணக்கம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நாடளாவிய-ரீதியில்-நினைவேந்தல்-நிகழ்வுகள்/150-309628
  22. மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலையில் மறைக்கப்படும் நீதி -பா.அரியநேத்திரன் December 25, 2022 இன்று (25/12/2022) மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலை இடம்பெற்று 17, வது நினைவு நாள். தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001.ல் உருவாக்கப்பட்டாலும் 2004,ஏப்ரல்,04,ல் இடம்பெற்ற பொதுத்தேர்தல் என்பது வரலாற்றில் முதல்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து 633,654 வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்று 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரு தேர்தலாகும். 2004, பெப்ரவரி,06,ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மறுநாள் வேட்பு மனு கோரல் அறிவிப்பு விடுக்கப்பட்டு சகல மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜோசப்பரராசசிங்கம் தலைமையில் வேட்பாளர் பட்டியலை தயாரித்து நானும்(பா.அரியநேத்திரன்) ஜோசப்பரராசசிங்கம் அவர்களும் மட்டக்களப்பு கச்சேரியில் வேட்பு மனுவை கையளித்தோம். அதன்பின்னர் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்து கூட்டங்களையும், தனித்தனியாக வேட்பாளர்கள் பிரசாரங்களையும் மேற்கொண்டு வரும்நிலையில் விடுதலைப்புலிகளில் இருந்து மட்டக்களப்புக்கு பொறுப்பாக இருந்த கருணா என்பவர் பிரிந்ததாக 2004,மார்ச்,02, ல் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டு அதை ஊடகங்களில் கொடுத்ததால் “கருணா அம்மான் புலிகளில் இருந்து பிரிந்து விட்டார்” என தலைப்புச்செய்திகள் மறுநாள் 2004, மார்ச்,03, ல் பரபரப்பாக வெளிவந்தன. வடக்கு கிழக்கு முழுவதும் பலத்த குழப்பம் தமிழ்மக்கள் மத்தியில் பீதியும் சந்தேகமும் தேர்தல் பிரசார வேலைகளிலும் அச்சம் என தொடர்கிறது. இதன்பின்னர் விடுதலைப்புலிகளுடைய அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வனால் வழங்கப்பட்ட அறிக்கை 2004,மார்ச்,06,ல் விடுதலைப்புலிகளில் இருந்து கருணா நீக்கப்பட்டார் என்ற செய்தி அன்று இரவு வானொலிகளில் கூறப்படுகிறது. இந்த பரபபரப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயர் கிஷ்லி சுவாம்பிள்ளை தலைமையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எட்டு வேட்பாளர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் சாள்ஷ்மண்டபத்தில் விசேட கூட்டம் ஒன்று 2004, மார்ச்,08, ல் கூட்டப்பட்டு இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படுகின்றது. பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் இப்படி விடுதலைப்புலிகளுக்குள் பிளவு ஏற்பட்டது துயரமான சம்பவம் எனவும் மீண்டும் கருணாவை விடுதலைப்புலிகளுடன் இணைத்து செயல்படவைக்கவேண்டும் என சிலர் கூறுகின்றனர், இன்னும் சிலர் சமரசமாக இரு சாராரும் இணங்க வைப்பதற்கு சாதகமாக என்னசெய்யலாம் என கூறுகின்றனர் பின்னர் ஒரு குழு வன்னிக்கு சென்று தலைமைகளுடன் பேசி உண்மை நிலவரங்களை அறிவது எனவும் முடிவு எடுக்கின்றனர். இந்த சந்திப்புக்கு பின்னர் 2004, மார்ச்,10, ல் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எட்டு வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யும் பிரசாரக்கூட்டம் இடம்பெறுகிறது அந்தக்கூட்டத்தில் உரையாற்றிய தலைமை வேட்பாளரான ஜோசப்பரராசசிங்கம் அவர்கள் “ தற்போது விடுதலைப்புலிகளுக்குள் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டு கருணா அம்மான் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது அதை நான் நம்பவில்லை எனது வலது கண்ணாக தலைவர் பிரபாகரனையும் இடது கண்ணாக கருணா அம்மானையும் நான் பார்கிறேன் இரட்டை குழல் துப்பாக்கியாகவே தலைவர் பிரபாகரனும் கருணாவும் உள்ளனர் அப்படி அவர்கள் பிரிவதற்கு வாய்பில்லை” இவ்வாறு ஜோசப்பரராசசிங்கம் பேசியபோது கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அதனை தொடர்ந்து ஏனைய வேட்பாளர்களும் கருணா பிரிவு பற்றி ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்த பின்னர் மறுநாளில் இருந்து பிரசாரங்களை முன்எடுக்கின்றனர். மட்டக்களப்பில் இருந்து வன்னிக்கு தப்பிச்சென்ற கௌசல்யன், ரமேஷ், றமணன் ஆகிய மூவரும் கிளிநொச்சியில் வைத்து கருணா விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த விடயத்தையும் கருணா நியாயப்படுத்திய பொய் விடயங்களையும் ஆதாரத்தோடு ஊடக மகாநாடு நடத்தி கருணா விட்ட பிழைகளை கூறுகின்ற VDO காட்சி தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறது. நான்(பா.அரியநேத்திரன்) வேட்பாளராக நியமிக்கப்பட்டாலும் கொக்கட்டிச்சோலையில் இருந்து வெளிவரும் “தமிழ் அலை” பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன், பிரதம ஆசிரியராக வந்தாறுமூலையை சேர்ந்த வேணுகோபால் இருந்தார். வன்னியில் சென்ற விடுதலைப்புலிகள் கருணாவுக்கு எதிராக பேட்டி கொடுத்ததை அறிந்த மட்டக்களப்பில் இருந்த கருணாக்குழு உறுப்பினர் ஒருவர் எனது (அம்பிளாந்துறை) வீட்டுக்கு இரவு 7, மணியளவில் வந்து “அண்ணன் உங்களை தமிழ் அலை காரியாலயத்திற்கு வரட்டுமாம் என றாபட் அண்ணரும் விசு அண்ணரும் கூறினார்கள் உடனே வாருங்கள்” என கூறிவிட்டு சென்றான். நான் அங்கு இரவு 8, மணிக்கு சென்ற போது பலர் சீருடையில் கருணா குழு உறுப்பினர்கள் உள்ளனர் பிரதம ஆசிரியர் வேணுகோபால்இருக்கைக்கு முன் சீருடையுடன் கருணா குழுவை சேர்ந்த ராபட்,விசு,துரை ஆகிய மூவரும் இருக்கையில் இருந்தனர் என்னை அமரும்படி பக்கத்தில் ஒரு கதிரையை தந்தனர் பின்னர் விசு கூறினார்” அண்ணர் வன்னிப்புலிகளுடன் துரோகிகள் ரமேஷ், றமணன், கௌசல்யன் சேர்ந்து கருணா அம்மானை தவறாக கூறி ஊடகசந்திப்பு நடத்தியுள்ளனர் இதற்கு எதிராக நீங்கள் நாளைய “தமிழ் அலை” பத்திரிகையில் தலைப்புச்செய்தியாக “துரோகிகளான ரமேஷ் றமணன், கௌசல்யன் கருணா அம்மனை பற்றி பொய்கூறுகிறார்கள் வேட்பாளர் அரியம் தெரிவிப்பு” என்று ஒரு செய்தி உங்கள் படத்துடன் வெளிவரவேண்டும் அதற்குத்தான் உங்களை வரச்சொன்னோம் என்றார். நான் சடார் என சொன்னேன் இப்படி ஒரு செய்தி நான் போடமாட்டேன் யார் துரோகி யார் தியாகி என்பதெல்லாம் எனக்கு தெரியாது “ நீங்கள் விடுதலைப்புலிகளில் இருந்து விலகியதற்காக வன்னியில் சென்றவர்கள் எல்லாம் துரோகி என கூற எனக்கு எந்த தகுதியும் இல்லை இது ஒரு விடுதலை இயக்க உள்முரண்பாடு வெளியில் இருந்து நான் இதைகூற முடியாது” என்றேன். உடனே துரை என்பவர் “இந்த செய்தி போடாவிட்டால் அண்ணன் நீங்கள் வேட்பாளராக போட்டிபோட முடியாது விலகிவிடுங்கள்” என்ரார். நான் நிதானமாக கூறினேன் இது நல்ல முடிவு சரி அப்படி எனில் நாளைய தமிழ் அலை பத்திரிகையில் தலைப்பு செய்தியாக “மட்டக்களப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பில் முதலாம் இலக்க வேட்பாளர் அரியநேத்திரன் வேட்பாளரில் இருந்து விலகினார்”இப்படி தலைப்பை போடுகிறேன் எனறேன். விசு என்பவர் அப்படி அதைப்போடவேண்டாம் வேட்பாளரை விட்டு விலகவேண்டாம் ஆனால் நீங்கள் வன்னிப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் பாதிப்பை சந்திப்பீர்கள் என்ரார். சரி என கூறி வீடுசென்றேன்.ஆனால் ராபட் எதுவுமே பேசவில்லை. மறுநாள் மட்டக்களப்பு நகரில் சுபராஜ் படமாளிகை அண்டிய இடத்தில்தான் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்கள் இல்லம் இருந்தது அங்கு சென்ற கருணாகுழுவை சேர்ந்த சிலர் ஜோசப்பரராசசிங்கத்திடம் நீங்கள் எந்த இடத்திலும் தேர்தல் பிரசாரங்கள செய்யக்கூடாது துண்டுப்பிரசுரங்களையும் வினியோகிக்ககூடாது வீட்டை விட்டு வெளியேறக்கூடாது உங்கள் ஆதரவாளருக்கும் இதனை சொல்லுங்கள் என எச்சரித்து சென்றதாக அறியமுடிந்தது. இந்த எச்சரிக்கை காரணமாக செயவதறியாது ஜோசப்பரராசசிங்கம் மனைவி சுகுணம் அக்கா இருவரும் வீட்டுக்காவலில் இருப்பது போன்று இருந்தனர் ஆதரவாளர்களும் பயத்தால் அவரின் வீட்டுக்கு செல்லவில்லை தேர்தல் பிரசாரத்தை முழுமையாக அவர் நிறுத்திவிட்டார். ஏனைய ஏழுபேர் நான் உட்பட பிரசாரம் செய்தாலும் பல கெடுபிடிகள் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. 2004,ஏப்ரல்,2,ல் தேர்தல் இடம்பெற்று முடிவுகள் வெளியான பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இரண்டு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தது அந்த இடத்தில் ஒருவராக ஜோசப்பரராசசிங்கம் நியமனம் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார் அவருடன் இணைந்து முதன்முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள்(ஜோசப்பரராசசிங்கம்,கனகசபை, தங்கேஷ்வரி, ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன்) தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்றம் செல்லப்பட்டனர். ஜோசப்பரராசசிங்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி சரியாக ஒருவருடம் எட்டுமாதங்களால் நத்தார் நன்நாள் 2005, டிசம்பர்,25 இரவில் மட்டக்களப்பு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது தமிழ் ஆயுத ஒட்டுக்குழு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சுடப்படும்போது பக்கத்தில் இருந்த அவரின் மனைவி சுகுணம் அக்கா படுகாயம் அடைந்தார். அவரின் புகழுடல் மட்டக்களப்பில் இருந்து வன்னிக்கு கொண்டுசெல்லப்பட்டு கிளிநொச்சியில் வைத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரடியாக அஞ்சலி செலுத்தியதுடன் மாமனிதர் என்ற கௌரவமும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மாமனிதர் அமரர் ஜோசப்பரராசசிங்கம் அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவி பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை. மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் எனும் பெயரில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர் இவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே.அவரால் ஆரம்பித்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்தான் 2001, ல் தமிழ்தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கு உறுதுணையாக செயல்பட்டவர்கள் என்பது வேறு கதை. 1989இல் பல தமிழ் அமைப்புகள் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் தேர்தலில் போட்டியிட்ட சமயம் இவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றார். ஆயினும் அப்போது அவர் அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாம் தம்பிமுத்து, கொழும்பில் கனடியத் தூதரகத்துக்கு முன்பாக வைத்து தனது மனைவியார் கலா தம்பிமுத்து சகிதம் சுட்டுக்கொல்லப்படவே, அந்த இடத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஜோசப் நியமிக்கப்பட்டார். அதனை அடுத்த 1994 தேர்தல்களில் ஜோசப் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த போதிலும், வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் காரணமாக கடந்த பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைய நேர்ந்தது. ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சி) சார்பில் தேசியப் பட்டியல் மூலமான உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் கொலை செய்யப்பட்டு அது தொடர்பாக பத்து வருடங்கள் கடந்து சந்தேகத்தில் பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், தற்போதய இராஜாங்க அமைச்சர் சிவனேசததுரை சந்திரகாந்தனை 2015, ஒக்டோபர்,10, ம் திகதி கைது செய்யப்பட்டு 2015, நவம்பர்,4 ஆம் திகதி வரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பின்கீழ் வைத்திருப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அப்போது அனுமதி வழங்கிய நிலையில் சந்தேகநபரை 90 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் டி.டபிள்யூ.ஆர்.டி. செனவிரத்ன நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, சிவனேசத்துரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைத்திருக்க நீதவான் உத்தரவிட்டார். அதன்பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 24.11.2020 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த பின்னர் , கடந்த 2021, ஜனவரி,13 அன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இன்று 2020, டிசம்பர்,25 மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலை இடம்பெற்று 17, வருடங்கள் கடந்தபோதும் இதுவரை அவரின் கொலை தொடர்பாக குற்றவாளிகளோ சூத்திரதாரிகளோ கண்டறிந்து தண்டனை வழங்கப்படவில்லை என்பது இலங்கையில் நீதித்துறையின் வரலாறு இதற்காகவே தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேசத்தை நோக்கி கேட்கின்றனர் என்பதே உண்மை. -பா.அரியநேத்திரன்- https://www.ilakku.org/justice-is-being-hidden-in-the-killing-of-honorable-joseph-pararasam/
  23. போராட்டகாரர்கள் தேர்தலில் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும்-நிமல் சிறிபால டி சில்வா உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படாது கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதில் சில சிக்கல்கள் இருந்த போதிலும் நடந்த முடிந்த முதல் சந்தர்ப்பத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் தேர்தலில் போராட்டகாரர்கள் அனைவரும் போட்டியிட்டு தமது பலத்தை நிரூபிக்க வேண்டும். ரெட்டா, பெட்டா மட்டுமல்லாது தொலைக்காட்சிக்குள் புகுந்து போதனை நடத்தியவர்களும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் சமூகத்திற்குள் தமக்கு இருக்கும் பலத்தையும் வரவேற்பையும் காட்ட வேண்டும். முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்ட தமது பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=233413
  24. கடந்து செல்லும் கொந்தளிப்பான ஆண்டு - நிலாந்தன் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் பல மாற்றங்கள் ஒன்றாக நிகழ்ந்து மிகக் கொந்தளிப்பான ஒரு ஆண்டு நம்மைக் கடந்து போகிறது. இந்த ஆண்டில்தான் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முப்பொழுதும் ஏற்பட்டிராத ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு எதிராக சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். அரகலய என்று அழைக்கப்பட்ட அப்போராட்டமானது உலகத்தின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு படைப்புத்திறன் மிக்கதாக காணப்பட்டது. போரை வெற்றி கொண்ட ஒரு குடும்பம் நாட்டின் கருவூலத்தை திருடிவிட்டது என்று சிங்கள மக்கள் குற்றம்சாட்டினார். போராட்டத்தை ஒடுக்குவதற்கு அக்குடும்பம் குண்டர்களை ஏவி விட்டது. ஆனால் அது விபரீதமான விளைவைக் தந்தது. ஓரிரவுக்குள் 30 க்கும் குறையாத அரசியல்வாதிகளின் வீடுகளும் சொத்துக்களும் எரித்து அழிக்கப்பட்டன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு பிரதேச சபைத் தலைவரும் கொல்லப்பட்டார்கள். இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அப்படியோர் அச்சம் நிறைந்த இரவு முன்னெப்பொழுதும் வந்ததில்லை. அதன் விளைவாக ராஜபக்சக்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்கள். ஏந்த ஒரு குடும்பத்துக்கு சிங்கள மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்களோ,அதே குடும்பத்தை அவர்கள் பதவிகளிலிருந்து துரத்தினார்கள். எனினும் அந்த குடும்பம் ஒற்றை யானைக்குப்பின் பாதுகாப்பைத் தேடிக் கொண்டது. மக்களால் நிராகரிக்கப்பட்டவரும் தனது அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்துவரும் ஆழங்காண முடியாத தந்திரசாலியுமாகிய ரணில் விக்ரமசிங்க அந்தப் போராட்டத்தின் கனிகள் அனைத்தையும் தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். அந்தப் போராட்டம் அவருக்கு ஓய்வூதியம் பெறும் காலத்தில் வாழ்வு கொடுத்தது. அப்போராட்டத்தை அவர் நசுக்கினார். மன்னராட்சிக்கு எதிரான பிரஞ்சுப் புரட்சியின் கனிகளை நெப்போலியன் திருடியது போல,சிஸ்டத்துக்கு எதிரான அரகலயவின் கனிகளை அந்த சிஸ்டத்தை பாதுகாக்கும் ஒருவர் தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். இப்படியாக கடந்து போகும் ஓர் ஆண்டு என்பது இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் நம்பமுடியாத மாற்றங்கள் நிகழ்ந்த ஓராண்டாக காணப்படுகிறது. இந்த மாற்றங்களின் தொகுக்கப்பட்ட விளைவுகளே இனிவரும் காலங்களில் இலங்கைத்தீவின் அரசியல் போக்கை தீர்மானிக்கப் போகின்றன. இந்த மாற்றங்கள் அல்லது கொந்தளிப்புகள் எவையும் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. அவை அவற்றுக்கான தர்க்கபூர்வ வளர்ச்சிகளின் தவிர்க்கப்படவியலாத விளைவுகளே. அவை இந்த ஆண்டில் ஒன்றாகத் திரண்டு வெளிப்பட்டன என்பதே சரி.ஆனால் அவற்றின் தோற்றுவாய்கள் பல தசாப்தகாலதுக்கு முந்தியவை. பொருளாதார நெருக்கடி வானத்திலிருந்து தோன்றவில்லை. ராஜபக்சக்கள் கூறியதுபோல அது வைரஸினால் வந்ததும் அல்ல. அல்லது வெரிட்டே ரிசேர்ச் இன்ஸ்டிட்யூட் கூறுவதுபோல 2019இல் கோட்டாபய வரியைக் குறைந்ததால் மட்டும் தோன்றவில்லை.அல்லது ஈஸ்டர் குண்டுவெடிப்பின் விளைவாக மட்டும் தோன்றவில்லை.மாறாக அதன் வேர்கள் மிக ஆழமானவை, வெளிப்படையானவை. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமும் அதன் தமிழ் நண்பர்களும் திட்டமிட்டு மறைபவை. ஆம். இனப்பிரச்சினைதான் பொருளாதார நெருக்கடியின் வேர்நிலைக் காரணம். தீர்க்கப்படாத இனப்பிரச்சினையின் மீது எனைய உப பிரச்சினைகள் பிதிபலித்தன என்பதே சரி. எந்த ஒரு குடும்பத்துக்கு சிங்கள மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்களோ அதே குடும்பத்தை நாட்டை விட்டு துரத்தும் ஒரு நிலை ஏன் வந்தது என்பது முதல் கேள்வி. ராஜபக்ஷக்களுக்கு சிங்களமக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியது ஏனென்றால் அவர்கள் யுத்தத்தில் பெற்ற வெற்றிக்காகத்தான். ராஜபக்ஷக்கள் யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கினார்கள் .ஈஸ்ரர் குண்டு வெடிப்பின் மூலம் வெற்றி வாதத்தை 2020க்குப் புதுப்பித்தார்கள். கோவிட-19 இன் மூலம் அதை 2021க்குப் புதுப்பித்தார்கள். இவ்வாறு யுத்த வெற்றி வாதத்தை அவர்கள் புதுப்பித்த போதெல்லாம் சிங்கள மக்கள் அவர்களுக்குத் தேர்தல் வெற்றிகளைக் கொடுத்தார்கள். யுத்த வெற்றிவாதம் என்பது அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானது. ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் அது முஸ்லிம்களுக்கு எதிரானது. இவ்வாறு இரண்டு சிறிய தேசிய இனங்களுக்கும் எதிராக ஒரு இரும்பு மனிதனை தெரிந்தெடுத்த சிங்களமக்கள் அதே இரும்பு மனிதனை நாட்டை விட்டு ஓட விரட்டினார்கள். இதன் பொருள் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் ஞானம் அடைந்துவிட்டது என்பதல்ல. யுத்தத்தை வென்ற ஒரே தகுதி காரணமாக ராஜபக்சக்கள் நாட்டின் கருவூலத்தை திருடி விட்டார்கள் என்பதுதான் அவர்களுடைய கோபம். இங்கு உற்றுக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், யுத்தத்தை வென்றமை எங்கே ஒரு தகுதியாக மாறுகிறது ?என்பதுதான். ஆம். யுத்த வெற்றி என்பது அடிப்படையில் தமிழ்மக்களுக்கு எதிரானது. தமிழ்மக்களுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் ஒரு அரசியல் பரப்பில்தான் ராஜபக்சக்கள் சிங்கள மக்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வெல்ல முடிந்தது. எனவே இங்கு பிரச்சினையாகவிருப்பது ஒரு குடும்பம் அல்ல. யுத்த வெற்றியைக் கொண்டாடும் இனவாத அரசியல்தான். இருந்த ஒரே தகுதி காரணமாக ஒரு குடும்பம் முறைகேடான ஆட்சியை நடத்துவது என்பதே சரி. எனவே சிங்கள மக்கள் போராட வேண்டியது இனவாதத்தை எதிர்த்து தான். ஆனால்,யுத்த வெற்றியை சிங்கள மக்கள் இப்பொழுது நிராகரிக்கவில்லை. அது மஹிந்தவுக்கு தெரிகிறது. அதனால்தான் பிலிப்பைன்சில் மார்க்கோசின் மகன் வந்ததுபோல நாமலையும் ஒருநாள் ஜனாதிபதியாக்கலாம் என்று அவர் கனவு காண்கிறார். எனவே சிங்கள மக்கள் ராஜபக்சக்களைத் துரத்தியமை என்பது அவர்களுடைய முறைகேடான நிர்வாகம் குடும்ப ஆட்சி போன்றவற்றுக்கு எதிராகத்தான். நிச்சயமாக யுத்த வெற்றி வாதத்துக்கு தலைமைதாங்கியதற்காக அல்ல. ஆனால் முறைகேடான ஆட்சியும் குடும்ப ஆட்சியும் யுத்த வெற்றியின்மூலம் தங்களை பலப்படுத்திக் கொண்டன என்பதே உண்மை. யுத்த வெற்றியின் மினுக்கத்துக்கு முன் ராஜபக்சக்களின் குடும்ப ஆதிக்கம் முதலில் சிங்கள மக்களுக்குத் தெரியவில்லை. சாதாரண சிங்களமக்கள் மட்டுமல்ல அரகலயவை வழிநடத்திய கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் பொருளாதார நெருக்கடியின் மூல காரணங்கள் தொடர்பாக சரியான விளக்கம் இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம்தான் எல்லா பாவங்களுக்கும் முதல் பாவம் என்பதை அரகலயக்காரர்களில் அநேகர் இப்பொழுதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் மூலம் வெற்றி பெறமுடியாத இடதுசாரி அமைப்புகள் சில அரகலயவை பின்னிருந்து இயக்கின என்று ராஜபக்சக்கள் குற்றம்சாட்டினர். அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சிகூட,தமிழ்மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்டியை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதான் அரகலயவின் அரசியல் நிலைப்பாடு. அதாவது 2022 க்குப் பின்னரான சிங்கள பௌத்த தேசியவாதத்தின் நிலைப்பாடு அதுதான். அதனால்தான் தமிழ்மக்கள் அரகலயவுடன் முழுமையாக இணையவில்லை. அதாவது 2009 க்குப் பின்னரும் வென்றவர்கள் தோற்றவர்கள் என்று இரண்டாகப் பிளவுண்டிருந்த நாடு அரகலயவின் போதும் போராட்டக்காரர்களும் விலகிநிற்கும் சாட்சிகளும் என்று இரண்டாகப் பிரிந்து நின்றது. மின்சாரம் இல்லாத இருண்ட இரவுகளில் மெழுகுதிரிகளுக்கும் பாண் துண்டுகளுக்குமாக தெருவில் இறங்கிப் போராடிய அரகலயகூட சிங்களபௌத்த பெரும் தேசியவாத சிந்தனை கட்டமைப்பிலிருந்து திருப்பகரமான விதத்தில் விலகி வரவில்லை.அதுதான் பிரச்சினை. அந்த சிந்தனைக் கட்டமைப்புக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு சிந்திக்கும்வரை தமிழ் மக்களின் கவலைகளை,அச்சங்களை, காயங்களை விளங்கிக்கொள்ள முடியாது. இதனால் அரகலய தமிழ் மக்களை தன்னோடு முழுஅளவுக்கு இணைத்துக்கொள்ள முடியவில்லை. இச்சிறிய தீவின் நவீன வரலாற்றில் வந்த மிகக் கொந்தளிப்பான ஓராண்டில் கூட நாடு தமிழர்கள் சிங்களவர்கள் என்று இரண்டாகப் பிளவுண்டு நின்றது. அதாவது நாட்டின் மிகக் கொந்தளிப்பான ஓராண்டில் கூட நாடு இனரீதியாக இரண்டாகப் பிறவுண்டிருந்தது. அரகலயவின் பிரதான கோஷம் சிஸ்டத்தை மாற்றுவது என்பதாகும். ஆனால் அவர்கள் சிஸ்டம் என்று கருதியது எதனை? ஆட்சி நிர்வாகதத்தைதான். அரசுக் கட்டமைப்பை அல்ல. சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பையல்ல. அங்கேதான் அடிப்படைத் தவறு நிகழ்ந்தது. அவர்கள் அந்தக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்தார்கள். அதிலிருந்து விடுபட்டு அதையே எதிராக பார்க்க அவர்களால் முடியவில்லை. நாட்டில் அடிப்படையான அரசுக் கட்டமைப்பு மாற்றத்தை வேண்டி அவர்கள் போராடவில்லை. அரகலயவுக்குள் தீவிர இடதுசாரிகளிலிருந்து தீவிர வலதுசாரிகள் வரை எல்லாரும் இருந்தார்கள். அது ஒரு கதம்பமான கலவை. அதனால்,மேலிருந்து கீழ்நோக்கிய தலைமைத்துவ கட்டளைக் கட்டமைப்பு இருக்கவில்லை. பதிலாக பக்கவாட்டிலான இன்டர்நெட் போன்ற இறுக்கமில்லாத ஒரு வலையமைப்பெ இருந்தது. அதனால்தான் ரணில் அதை இலகுவாக நசுக்கினார். இலங்கைத்தீவில் தோன்றிய நூதனமான பல முன்னுதாரணங்கள் கொண்ட படைப்புத்திறன் மிக்க ஓர் அறவழிப் போராட்டம் நசுக்கப்பட்டு விட்டது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இலங்கைத்தீவு நான்கு போராட்டங்களை வெற்றிகரமாக நசுக்கியிருக்கிறது. ஜேவிபியின் இரண்டு போராட்டங்கள், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம்,அரகலய என்று அழைக்கப்பட்ட சிங்கள மக்களின் அறவழிப் போராட்டம் என்று நான்கு போராட்டங்களை நசுக்கியிருக்கிறது. சிங்கள ஆட்சியாளர்கள் அதை அரசியல் வெற்றியாக கொண்டாட்டக் கூடும். ஆனால் அரை நூற்றாண்டு காலத்தில் நசுக்க நசுக்க மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்ற கேள்விக்கு அவர்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும். சிங்கள பௌத்த அரசியல் பண்பாடு யாரைத் தோற்கடிக்கின்றது? தன்னைத்தானே தோற்கடித்துக்கொண்டிருக்கிறதா? இந்த ஆண்டு பிறந்தபோது மக்கள் தெருக்களில் நீண்ட வரிசைகளில் நின்றார்கள். பால்மா இருக்கவில்லை. ஏழைகளின் வீடுகளில் பால்தேநீர் இருக்கவில்லை. இந்த ஆண்டு முடியும்போது முட்டை விலை உயர்ந்துவிட்டது. ஏழைகளின் வீடுகளில் கேக் இல்லாத கிறிஸ்மஸோடு முடிகிறது இலங்கைத்தீவின் மிகக் கொந்தளிப்பான ஓராண்டு. http://www.nillanthan.com/5826/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.