Everything posted by கிருபன்
-
மட்டக்களப்பில் கருணா - பிள்ளையான் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ! வேட்பாளர் உட்பட மூவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பில் கருணா - பிள்ளையான் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ! வேட்பாளர் உட்பட மூவர் வைத்தியசாலையில் Batticaloa மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணாவின் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (3) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது; மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் ஜனநாயக முன்னணி கட்சியான கருணாவின் கட்சியின் வேட்பாளரின் காரியாலயத்தின் முன்னாள் உள்ள வீதியில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (3) இரவு ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந் துள்ளார். இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்குள்ள மதில்களில் கருணாவின் கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளுக்கு மேல் பிள்ளையானின் கட்சி சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டபோது கருணாவின் கட்சியின் வேட்பாளர் சென்று எங்கள் சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகளை ஒட்டவேண்டம் என தெரிவித்த நிலையில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து கருணாவின் வேட்பாளர் மீதும் அவரது ஆதரவாளர் மீதும் பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். இதனையடுத்து கருணாவின் கட்சி வேட்பாளர் முனிசாமி நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர் இருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்ததையடுத்து பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து படுகாய மடைந்தவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். https://www.battinews.com/2024/11/blog-post_04.html
-
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி adminNovember 4, 2024 மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(3) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில் ,மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் தூவி,சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் குறித்த சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. https://globaltamilnews.net/2024/208000/
-
அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து வெளிவந்த உண்மை
அறுகம்பே விவகாரம்: ஆறு பேர் கைது அறுகம்பே குடாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பில் இதுவரையில் மாலைத்தீவு பிரஜை உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அறுகம்பே குடா பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார். “இதுவரை, நாங்கள் ஆறு நபர்களை கைது செய்துள்ளோம். மாலைத்தீவு பிரஜை மற்றும் ஐந்து இலங்கையர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இது என்ன வகையான திட்டம் அல்லது முயற்சி என்று எங்களால் தற்போது சொல்ல முடியாது. ஏனெனில் கைது செய்யப்பட்ட ஆறு பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்து அப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது. எனவே, தேவையற்ற தவறான விளக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். -(3) http://www.samakalam.com/அறுகம்பே-விவகாரம்-ஆறு-பே/
-
மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு!
மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு! தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை மீள உருவாக்குவதில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் என சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தமிழரசு கட்சியிலிருந்து ஏன் விலகினோம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் அதை பற்றி நான் இங்கு கூற விரும்பவில்லை. நாங்கள் தற்போது சனநாயக தமிழரசு கூட்டமைப்பாக மாம்பழ சின்னத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் களமிறங்கி உள்ள நிலையில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்கி வருகிறார்கள். நான் ஒரு வேட்பாளராக மாம்பழ சின்னத்தில் போட்டியிடுகிறேன். தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களுக்கான ஒரு கூட்டமைப்பாக நாங்கள் செயல்படுகிறோம். நான் ஒரு ஊடகத்துறையை நடத்தி வரும் நிலையில் 38 தடவைகள் தாக்குதலை மேற்கொண்டார்கள். இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஜனாதிபதிகளிடம் கூறினேன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளிநாட்டு தூதரகங்களுக்கு கூறினேன் சர்வதேச நிறுவனங்களுக்கு கூறினேன் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் தமிழ் தேசியத்திற்காக பயணிப்பவர்கள் பல்வேறு தடைகளை சந்திப்பது வழமையான செயல்பாடு ஆனால் நானும் என் சாந்த நிறுவனமும் பல்வேறு தடவைகள் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்படுவதும் தொடர் செயற்பாடாக இருந்து வருகிறது. தமிழ் தேசியத்திற்காக பயணிப்பவர்கள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதும் இலங்கையில் சாதாரணமான ஒரு விடயமாக நடந்து வந்த நிலையில் இதுவரை எந்த ஒரு விசாரணை முடிவுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தருவதாக அமையவில்லை. தமிழ் மக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். தமிழ் தேசியத்தை விலைபேசி விற்பதற்கு பல்வேறு தரப்புக்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் . தமிழ் மக்கள் அவர்களிடமிருந்து விடக் கூடாது தமிழ் தேசியத்தை உண்மையாக நேசிப்பவர்கள் அதற்காக போராடுபவர்களையும் மக்கள் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும். நான் சென்ற தடவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வட்டுக்கோட்டை தொகுதிக்கு முன்னுரிமை கொடுத்து சுமார் 600 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இருக்கிறேன். அவற்றோடு நின்றுவிடாமல் ஏனைய தொகுதிகளுக்கும் என்னால் இயன்றவரை அபிவிருத்திகளை கொண்டு சென்றிருக்கிறேன். நான் அந்த தொகுதிகளுக்கு செல்லும்போது மக்கள் கூறினார்கள் நீங்கள் எந்த கட்சியில் கேட்டாலும் உங்கள் சிறப்பான சேவைக்கு நமது ஆதரவு இருக்கும் என்று. நாங்கள் தமிழ் தேசியத்தை விலை பேசி விற்றவர்கள் அல்ல விக்கப் போவார்கள் அல்ல அது மக்களுக்கு தெரியும். ஆகவே தமிழ் மக்கள் மாவீரர் நாளில் தமது வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாக தமிழ் தேசியம் சார்ந்தவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். (ப) https://newuthayan.com/article/மாம்பழ_சின்னம்_தமிழ்_தேசியத்தை_மீள்_உருவாக்கும்_: -_சரவணபவன்_சூளுரைப்பு!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 26 முக்கிய தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்! christopherNov 03, 2024 14:07PM விஜய் தலைமையில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தவெக கட்சியின் முதல் மாநாட்டை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவை பின் வருமாறு :- 1. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கொள்கைத் தலைவர்களை உறுதியாகப் பின்பற்றும் தீர்மானம் நிறைவேற்றம். 2. கொள்கைத் திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும், பந்தல் வடிவமைப்பாளர் ஜே.பி.விஸ்வநாதனுக்கும், மாநில மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம். 3. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்கத் தீர்மானம் நிறைவேற்றம். 4. ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும், அதைச் சட்டமாக்குதலுக்கும் முனையும் பாஜக அரசிற்கு எதிராக ஐனநாயகக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம். 5. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் உச்சபட்ச தண்டனை வழங்க ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பெண்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம். 6. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக நீதிக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம். 7. மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி, எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலும் என்பதை வலியுறுத்தி மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம். 8. விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதை வலியுறுத்தி விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம். 9. தொழில் நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றம். 10. ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர, பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், ஈழத் தமிழர்கள் மற்றும் இலங்கை அரசால் சிறைப்படிக்கப்பட்டு, தாக்கப்படும் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றம். 11. மொழி உரிமையே எங்கள் தமிழ்த் திருநாட்டின் முதல் உரிமை என்ற எங்கள் கொள்கைப்படி, எங்கள் தாய்மொழி காக்கும் எல்லா முயற்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிச் செயல்படும். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக, மூன்றாவது மொழியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்கு எதிராக மொழிக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம். 12. அரசின் வருவாயைப் பெருக்க எந்த ஓர் அறிவார்ந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்று பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரிச் சுமையை மட்டுமே அதிகமாக விதித்து வரும் திமுக அரசுக்கு எதிராக மக்கள் மீது நிதிச் சுமைத் திணிப்பு சார்ந்த தீர்மானம் நிறைவேற்றம். 13. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், தொடரும் கள்ளச் சாராய விற்பனை, போதைப் பொருட்களின் பழக்கம் போன்ற நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்யாமல், ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து சட்டம் – ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம் நிறைவேற்றம். 14. தேர்தல் வாக்குறுதியை வழக்கம்போலக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத் திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கத் தீர்மானம் நிறைவேற்றம். 15. மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் மதுக்கடைகளைத் திறந்து, அதன் மூலம் அரசுக்கு வருவாயைப் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வலியுறுத்தும் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம். 16. தென்னிந்தியாவிற்கான உரிய பிரதிநிதித்துவம் வழங்குகின்ற வகையில், உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்கவும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீதிபதி ஒருவரை நியமித்து சட்டரீதியாக ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் உச்ச நீதிமன்றக் கிளையை அமைக்க தீர்மானம் நிறைவேற்றம். 17. தமிழ் மண்ணின் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆட்சியின் வரலாற்றுப் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், பிரமாண்டமான அருங்காட்சியகத்தை தமிழத அரசு சென்னையில் கட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டின் தொன்மப் பெருமைப் பாதுகாப்புத் தீர்மானம் நிறைவேற்றம். 18. தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தலைவர்களை, எவ்விதச் சமரசமும் இன்றிப் போற்றுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கோரி விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்குப் பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம். 19. இஸ்லாமிய சகோதரிகளின் தமிழ்த் தொண்டை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு அரசு சார்பில் விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம். 20. தமிழ்நாட்டில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரி முதியோர் நல்வாழ்வை உறுதி செய்யத் தீர்மானம் நிறைவேற்றம். 21. இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இந்த இன்னொரு முயற்சி உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம். 22. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கின்றது என்று கூறி எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இஸ்லாமியர் உரிமைத் தீர்மானம் நிறைவேற்றம். 23. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் அனைவருமே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு விலக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம். 24. ஆளும் அரசுகள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஆதரித்து வரவேற்பதையும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகக் கருதுகிறோம். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்குகிறது. இதனை பாராட்டும் வகையில் தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம் நிறைவேற்றம். 25. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் சுமார் 2,376 எக்கர் நிலப் பரப்பளவில் அமைக்க உள்ளது. பெரும் வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம் நிறைவேற்றம். 26. நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தீராப் பற்றுடன், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த போராளிகள் சிலர் அண்மையில் மறைந்த நிகழ்வுகள், அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன. இயக்கத்திற்காகவும் கழகத்திற்காகவும் நீண்ட காலமாகப் பணியாற்றி, உடல்நலக் குறைவால் திடீரெனக் காலமான புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் மற்றும் மாநாட்டில் பங்கேற்க வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த சீனிவாசன், விஜய்கலை, வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார் மற்றும் சார்லஸ் ஆகியோர் மறைவை கட்சி வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம். https://minnambalam.com/political-news/26-resolutions-passed-by-the-tvk-executive-committee/
-
விருந்தகங்களில் வேட்பாளர்கள் தேங்காய் கியூவில் வாக்காளர்கள்? – நிலாந்தன்.
விருந்தகங்களில் வேட்பாளர்கள் தேங்காய் கியூவில் வாக்காளர்கள்? – நிலாந்தன். மருத்துவர் அர்ஜுனா மான் கட்சியின் பெண் வேட்பாளரோடு நாகரீகமின்றி நடந்து கொண்டது ஒரு விருந்தகத்தில் ஆகும். அது தொடர்பாக ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட பெண் வேட்பாளராகிய மிதிலைச்செல்வி அந்த விருந்தகத்துக்கு தானும் உணவருந்தச் செல்வதுண்டு என்று கூறுகிறார். தனக்குத் தெரிந்தவர்களையும் அங்கு விருந்துண்ண அழைத்துச் செல்வதுண்டு என்றும் கூறுகிறார். சம்பவம் நடந்த போது அந்த விருந்தகத்தில் நிறையப் பேர் தெரிந்த ஆட்கள் இருந்ததாகவும், அவர்களில் அனேகர் ஏதாவது ஒரு கட்சியோடு தொடர்புடைய ஆட்கள்தான் என்றும் கூறுகிறார். அதாவது அவர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்த தகவல்களின்படி அர்ச்சுனாவும் உட்பட தமிழ் வேட்பாளர்களில் ஒரு பகுதியினர் அப்படிப்பட்ட உயர்தர விருந்தகங்களில்தான் உணவு அருந்துகிறார்கள். தமது ஆதரவாளர்களையும் அங்கே அழைத்துச் செல்கிறார்கள். இது முதலாவது சம்பவம். இரண்டாவது சம்பவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. யாழ்ப்பாணத்தில் ஒரு விருந்தினர் விடுதியில் தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பின் கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது. தேர்தல் திணைக்களத்துக்கு நிதி அதிகாரம் வழங்குவது குறித்தும் தேர்தல்கள் தொடர்பில், மேற்கத்திய ஜனநாயகங்களில் உள்ளதுபோல நிரந்தரமான ஒரு நேர அட்டவணை அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கருத்துக்களைத் திரட்டுவதற்கான ஒரு கருத்தமர்வு அது. இதில் கலந்து கொண்ட வளவாளர்கள் மற்றும் பயனாளர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகை பணம் வழங்கப்பட்டது. பொதுவாக அரசு சார்பற்ற நிறுவனங்களின் கருத்தரங்குகளில் அப்படித்தான், பெரும்பாலும் விருந்தினர் விடுதிகளில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது; வருகை பதிவை எடுப்பது; முதலில் சிற்றுண்டியும் பின்னர் மதிய உணவும் கொடுத்து முடிவில் பயணச் செலவு என்று சொல்லி ஒரு தொகையை கொடுப்பது. இதுபோன்ற பெரும்பாலான கருத்தரங்குகள் “ஏசி” வசதி கொண்ட விருந்தினர் விடுதிகளில்தான் நடக்கும். மின்விசிறிகளைக் கொண்ட, ஜன்னல்கள் திறந்து விடப்படும் சாதாரண மண்டபங்களில் நடப்பது குறைவு. பவ்ரல் எனப்படுவது நேர்மையான, முறைகேடுகளற்ற ஒரு தேர்தல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்காகச் செயற்படும் ஒரு சிவில் அமைப்பு. அது தனது கூட்டத்தை வளிபதன வசதி கொண்ட விருந்தினர் விடுதிகளில் நடத்துவதோடு பயனாளிகளுக்கு பணமும் கொடுக்கின்றது. அதாவது நேர்மையான தேர்தலைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்குகளுக்கு வருபவர்களை ஊக்குவிப்பதற்கு காசு கொடுக்க வேண்டியிருக்கிறதா? இதுபோன்ற கருத்தரங்குகளை ஏன் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பொதுவான வாய்ப்பாட்டுக்கு வெளியே போய் சாதாரண மண்டபங்களில் நடத்தக்கூடாது? பவ்ரல் போன்ற அமைப்புக்கள் அப்படிச் செய்யலாமென்றால், கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வாகனங்களை ஒழுங்குப்படுத்தி, அதில் வருபவர்களுக்கு சாப்பாடும் சிற்றுண்டியும் குடிபானமும் காசும் கொடுத்து அழைத்துக் கொண்டு வருவதில் என்ன தவறு? தமிழ்ப் பகுதிகளில் சில கட்சிகள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்துக் கொண்டு வரும் ஆதரவாளர்களுக்கு உணவு அல்லது சிற்றுண்டி, குடிபானம் என்பவற்றோடு காசும் கொடுக்கின்றன. கிட்டத்தட்ட 2500 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. தேர்தல் நாளன்று தூர இடங்களில் இருக்கும் வாக்காளர்களை வாகனம் விட்டு ஏற்றி இறக்குவதற்கும் அதாவது வாக்களிப்பதற்கும் காசு கொடுக்கப்படுகிறது. அல்லது மது கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் உண்டு. மேற்கண்ட இரண்டு சம்பவங்களையும் தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? வேட்பாளர்களில் ஒரு தொகுதியினர் உயர்தர விருந்தகங்களில் உணவருந்துகிறார்கள். அங்கே தமது ஆதரவாளர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். வாக்காளர்களுக்கு அறிவூட்டும் நோக்கத்தோடு நடாத்தப்படும் கருத்தரங்குகளும் அப்படிப்பட்ட விருந்தகங்களில்தான் நடக்கின்றன. அங்கேயும் பயனாளிகளுக்கு அந்த விருந்தினர் விடுதியின் தரத்துக்கு ஏற்ப உணவு கொடுக்கப்படுகிறது. சராசரி வாக்காளர்கள் அண்ணாந்து பார்க்கும் விருந்தகங்களில் வேட்பாளர்கள் சாப்பிடுகிறார்கள். நேர்மையான தேர்தலை குறித்து வகுப்பெடுப்பவர்களும் சாப்பிடுகிறார்கள். ஆனால் சராசரி வாக்காளர்கள் எங்கே சாப்பிடுகிறார்கள்? நட்சத்திர அந்தஸ்த்துள்ள விருந்தகங்களில் உணவருந்தும் வசதி வாய்ப்புகளைக் கொண்டிராத சராசரி வாக்காளர்கள் “மந்தை மனோநிலை”யோடு வாக்களிக்கிறார்கள் என்று புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகிறார். லண்டனில் வசிக்கும் அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளர். ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களைக் குறித்து முகநூலில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்.. ”பொதுகட்டமைப்பு என்ற தற்காலிக அமைப்பு (ad hoc committee) முன்வைத்த கோசங்களுக்காக மக்கள் வாக்களித்தார்களா? அல்லது ஒரு மந்தை மனப்பாங்கில் (herding mentality) தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தார்களா? முதலாவது எனில் அரசியல் விழிப்புணர்வுமிக்க இரண்டு லட்சம் பேரை திரட்டிவிட்டீர்கள் என்று கூறுவீர்களா?” இங்கு அவர் மந்தை மனப்பாங்கு என்று குறிப்பிட்டிருப்பது தமிழ்மக்கள் இன உணர்வின் அடிப்படையில் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததைத்தான். அதாவது ஒரு தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்த சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் மக்களும் மந்தை மந்தை மனப்பாங்கோடு வாக்களித்ததாக அவர் கூறுகிறார். சுமந்திரன், யாழ்ப்பாணத்தில், சஜித் பிரேமதாசாவின் மேடையில் வைத்து கூறினார்,பொது வேட்பாளருக்குப் போடும் வாக்குகள் வீணாகப் போகும் வாக்குகள் என்று. அதாவது, தமிழ்ப் பொது வேட்பாளருக்கு விழுந்த இரண்டு லட்சத்து 26 ஆயிரத்துக்கும் குறையாத வாக்குகள் வீணாய்ப்போன, மந்தைத்தனமான வாக்குகளா? ஆயின்,தமிழ் வாக்காளர்களை, விமர்சன பூர்வமாக சிந்திக்கும்(Critical thinking), “அரசியல் விழிப்புணர்வுமிக்க” வாக்காளர்களாக வளத்தெடுப்பதற்கு எந்த ஒரு கட்சியிடமாவது ஏதாவது ஒரு பொறிமுறை உண்டா? இல்லையே? எல்லாக் கட்சித் தலைவர்களும் குருட்டு விசுவாசிகளைத்தானே அருகில் வைத்திருக்கிறார்கள்? விழிப்படைந்த தொண்டர்களை ஏன் அருகில் வைத்திருப்பதில்லை ? குருட்டு விசுவாசிகளை, விமர்சனபூர்வமாக சிந்திக்கும் விழிப்படைந்த வாக்காளர்களாக மாற்றுவதற்கு கட்சிகளிடம் பொருத்தமான அரசியல் தரிசனங்களோ கட்டமைப்புகளோ இல்லை. கட்சித் தலைவர்களிடமும் அதற்குரிய கொள்ளளவு இல்லை. இந்நிலையில்,தேர்தலை புத்திபூர்வமாக அணுக முற்றப்படும் பவ்ரல் போன்ற அமைப்புகள் தமது விழிப்பூட்டும் கருத்தரங்குகளை ஏசி வசதிகளைக் கொண்ட விருந்தகங்களில் நடத்துவதை விடவும் கிராமங்களை நோக்கிச் சென்றால் என்ன? தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தேர்தல் காலத்தில் மட்டும் ஊர்களை நோக்கிச் செல்லாமல்,தொடர்ச்சியாகத் தமது ஆதரவாளர்களுக்கு விழிப்பூட்டும் கூட்டங்களை நடத்தினால் என்ன? தமிழ்க் கட்சிகள் பெரும்பாலானவை விசுவாசிகளைத்தான் கட்சி உறுப்பினர்களாக வைத்திருக்கின்றன. விமர்சனபூர்வமாக சிந்திக்கும் விழிப்படைந்த அரசியல் செயற்பாட்டாளர்களை அல்ல. விசுவாசிகள் முகநூலில் ஒருவர் மற்றவரைத் துரோகி என்பார்கள். நேற்று நண்பனாக இருந்தவர் இன்று கட்சி மாறிவிட்டால் அவர் துரோகியாகி விடுகிறார். தமது கட்சித் தொண்டர்களுக்கு விழிப்பூட்டி அவர்களை அரசியல் மயப்படுத்தும் வேலை திட்டங்கள் எந்த ஒரு கட்சியிடமும் இல்லை. இந்த லட்சணத்தில் ஒரு கட்சியின் ஆதரவாளர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களை மந்தைகள் என்று கூறுகிறார். ஆனால் தமிழ் வாக்காளர்களை மந்தைகளாக வைத்திருக்கத்தான் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். இனமான மந்தைகள்; ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசுகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் மந்தைகள்; ஆயுதப் போராட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு துரோகி பட்டம் சூட்டி அதன்மூலம் தங்களைத் தியாகிகளாகக் காட்டிக் கொள்ளும் மந்தைகள்; சாராயப் போத்தலுக்கு வாக்களிக்கும் மந்தைகள்; காசு கொடுத்துப் பேருந்துகளில் ஏற்றுக் கொண்டு வரப்படும் மந்தைகள் ; முகநூலில் நேரலையில் தோன்றும் மருத்துவரை நம்பிக் காசை விசுக்கும் மந்தைகள்; போன்ற எல்லா எல்லாவகை மந்தைகளையும் குருட்டு விசுவாசிகளையும் மேய்க்கத்தான் எல்லாக் கட்சிகளும் விரும்புகின்றன.வாக்காளர்களை மந்தை மனோநிலையில் இருந்து விடுவித்து அரசியல் விளக்கமுடைய விழிப்படைந்த வாக்காளராக மாற்றுவதற்கு எந்தக் கட்சியாவது தயாரா? அல்லது எந்த என்.ஜி.யோவாவது தயாரா? https://www.nillanthan.com/6954/
-
அம்பாறைத் தமிழர்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் வாக்குப் பலத்தைச் செலுத்தாவிடின் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம் : தவராசா கலையரசன் !
அம்பாறைத் தமிழர்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் வாக்குப் பலத்தைச் செலுத்தாவிடின் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம் : தவராசா கலையரசன் ! on Sunday, November 03, 2024 By kugen NO COMMENTS (சுமன்) அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் எமது வாக்குப் பலத்தைச் செலுத்தவில்லை என்றால் நாங்கள் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம். எனவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விட்ட தவறினைத் திருத்தியமைக்க வேண்டும். என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விட்ட தவறிலிருந்து விடுபட்டு எமதுபிரதேசத்திலே எமது அரசியல்வாதியைத் தெரிவு செய்வதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட வேண்டும். எமது அம்பாறை மாவட்டம் மூன்று இனங்களும் வாழுகின்ற மாவட்டம். நாங்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் எமது வாக்குப் பலத்தைச் செலுத்தவில்லை என்றால் நாங்கள் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம். எமது சமூகம் எவ்வாறான துன்ப துயரங்களை அனுபவித்தது என்பது அனைவருக்கும் தெரியும். எமது மக்களின் துன்ப துயரங்களை எதிர்த்து நின்றதும், அவற்றை வெளி உலகத்திற்குக் கொண்டு சென்றது தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகளே. இந்த நாட்டிலே பல வருடங்களாக யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட தமிழர்களை அந்த யுத்த சூழ்நிலைகளில் இருந்து மீள்வதற்கான செயற்பாடுகளை இந்த நாட்டை ஆண்ட எந்த அரசாங்கங்களும் முன்னெடுக்கவில்லை. தற்போதும் நூறு வீதம் தமிழ் மக்கள் வாழுகின்ற இந்த பிரதேசமாகிய இந்த திருக்கோவில் பிரதேசத்திலும் கூட இன்னும் முழுமையான மீள்குடியேற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இன்னும் எத்தனையோ பாடசாலைகள் இன்னும் புனரமைக்கப்படாமல் இருக்கின்றன. எமது மக்களின் இவ்வாறான பிரச்சனைகள் தொடர்பாகவே எங்கள் வலியுறுத்தல்கள் இருந்தன. அதன் காரணமாகவே எங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. இந்த அடிப்படையில் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் பல கட்சிகள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. அம்பாறை மாவட்டத்திலே தமிழர்களின் வாக்குகள் சுமார் 108000 மட்டில் இருக்கின்றன. இங்கு 66 கட்சிகள் களமிறங்கியுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு கட்சிகளும் வாக்குகளை சிறுகச் சிறுகப் பிரித்தார்களாயின், எமது தமிழ் பிரதேசங்களில் அவ்வாறு வாக்குகள் அளிக்கப்படுமாயின் எமது பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்படும். அவ்வாறு இல்லாமல் ஆக்கப்பட்டால் நிச்சயமாக எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியிடம் இருந்து தேசியப் பட்டியல் எதிர்பார்க்க முடியாது. இதை நாங்கள் உறுதியாகச் சொல்லுகின்றோம். நாங்கள் எம் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் 2020ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தலைவர், மட்டக்களப்பில் செயலாளர் ஆகியோர் தோல்வியுற்றிருந்த நிலையிலும், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் தேவை என்பதற்காக கட்சிக்குக் கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியலை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்மானித்து எனக்கு வழங்கியிருந்தது. நானும் என்னால் இயன்ற வரையில் பல சேவைகளைச் செய்திருக்கின்றேன். அம்பாறை மாவட்டம் என்ற ரீதியில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை மாத்திரம் பார்க்க முடியாது. ஆனால் பரவலாக எமது தமிழ் பிரதேசங்கள் பலவற்றில் பல காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகளை ஓரளவுக்கேனும் தீர்த்து வைத்திருக்கின்றோம். தற்போது மாற்றம் என்ற ரீதியில் பல இளைஞர்கள் திசைமாறிச் செல்லுகின்ற நிலைமைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது தேசியப்பட்டியல் என்றும் எமது மக்களை ஏமாற்றுகின்ற முன்முனைப்பிலே களமிறங்கியிருக்கின்றார்கள். இதிலே எமது மக்கள் தான் சிந்திக்க வேண்டும். எமது சமூகத்திற்குப் பொருத்தமான அரசியல் எது என்பதை மக்கள் உணர வேண்டும். தமிழ்த் தேசியப் போராட்டத்தில் எமது அடிப்படை உரிமை மீட்பு, நில மீட்பு என்ற விடயங்களையே நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் பொத்துவில் கனகர் கிராமம், திருக்கோவிலில் வன இலாகாவினால் தடுக்கப்பட்டிருந்த காணிகள் என்பன எமது தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகளால் மாத்திரமே மீட்கப்பட்டன. இங்கு திருக்கோவிலில் இல்மனைட் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது நாங்களே எமது மக்களுக்காக முன்வந்தோம். அவ்விடத்திலேயே எமது தலைவர்களுடன் கதைத்து அதனைத் தடுத்தோம். அது நிரந்தரமான தடையாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே எமது மக்களுக்கான சேவைகள் பலவும் எம்மால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே எமது மக்கள் எப்போதும் எம்முடன் இருக்க வேண்டும். எமது அம்பாறை மாவட்டத் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்து தெரிவித்தார். https://www.battinews.com/2024/11/blog-post_12.html
-
அதிகாரப் பகிர்வும் தோழர் அநுரவும்
அதிகாரப் பகிர்வும் தோழர் அநுரவும் ஒஸ்ரின் பெர்னாண்டோ (முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்) ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு முன்னர், அதிகாரப் பகிர்வு தொடர்பில் நான் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுரகுமார திஸாநாயக்கவுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் கலந்துரையாடினேன். அப்போது அதிகாரப் பகிர்வு தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி கணிப்பிடப்பட்ட அவரது குறைந்தளவில் முன்னுரிமை கொடுக்கும் அணுகுமுறையின் விளைவுகள், வடக்கு மற்றும் கிழக்கில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தன. அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு குறைந்ததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். தற்போது அவர் 2 கோடி 0 இலட்சம் இலங்கையர்களின் ஜனாதிபதியாக இருப்பதால் வடக்கு மற்றும் கிழக்கின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வழிகாட்டியாக கருத வேண்டும். அநேகமாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஏற்கனவே அவருக்கு அதை நினைவூட்டியிருக்கலாம். மாற்றமடையும் இலங்கை அரசியல்வாதிகளின் மனநிலை அதிகாரப் பகிர்வு தொடர்பான இலங்கை அரசியல்வாதிகளின் கொள்கைகள் முரண்பாடுகளால் வகைப்படுத்தப்படுகின்றன. முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் 13 வது திருத்தச் சட்டத்தை (13ஏ) அமுல்படுத்துவதாக இந்தியர்களுக்கு உறுதியளித்தனர். காணி மற்றும் பொலிஸ் அதிகாரப் பகிர்வை நாமல் ராஜபக்ச நிராகரித்த போதிலும்,அவை உட்பட “13+” ஐ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். டில்லியில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச “பெரும்பான்மை (சிங்கள) சமூகத்தின் விருப்பம் மற்றும் உணர்வுகளுக்கு எதிராக 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது” என்றார். ஆனால், 13ஆவது திருத்தம் ஒருங்கிணைந்த பகுதியாகவிருக்கும் அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பாரென ஆணித்தரமாக அறிவித்திருந்தார்! இங்கு அதிகாரப்பகிர்வு குறித்த இந்திய அரசியல் தலைவர்களின் கொள்கை நிலையானதாகவே உள்ளது. 05 டிசம்பர் 2002 இல் ஒஸ்லோ சமாதானப் பேச்சுக்களின் போது, ஜி.எல். பீரிஸ் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகளும், அன்டன் பாலசிங்கம் தலைமையிலான விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவும் “ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுபூர்வ வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்வை ஆராய ஒப்புக்கொண்டதை நாங்கள் வசதியாக மறந்துவிட்டோம். .” “சமஷ்டி ,” “வரலாற்றுபூர்வ வாழ்விடப் பகுதிகள்” மற்றும் “உள்ளக சுயநிர்ணய உரிமை”என்பன தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலருக்கு வெறுப்பாக இருந்ததுடன், வெறுப்பு மற்றும் பொதுமக்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. இன்று ரணில் விக்கிரமசிங்கவும் பீரிஸும் ஒஸ்லோ பிரகடனத்தில் இருந்து நிச்சயமாக விலகியிருப்பார்கள் . 13 ஆவது திருத்தம் மற்றும் துணைச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். ஒஸ்லோ பிரகடனம் செய்யப்பட்டபோது பிரதமராக இருந்தார்.ஆனால் இப்போது அவர் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க விரும்பவில்லை. கோத்தாபய ராஜபக்ச இந்தியர்களுக்கு “13ஆவது திருத்தத்தின் பலவீனங்களையும் பலங்களையும் பார்க்க வேண்டியது அவசியம்” என்று அறிவித்தார். 2019 இல் அனுபவமற்ற ஜனாதிபதியாக அவர் அவ்வாறு கூறியிருந்தால், அது பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.ஆனால் அவர் 22 மாதங்கள் பதவியில் இருந்த பிறகு அவ்வாறு கூறினார். இது அவரது பங்கில் உள்ள நிர்வாக முறைமைகள் பற்றிய அறிவின் பற்றாக்குறையை அல்லது அவர் இரகசிய திட்டங்களை வைத்திருந்ததை பிரதிபலிக்கிறது. 13ஆவது திருத்தத்தின் பரிணாமம் இந்தப் பின்னணியில், 13 ஆவது திருத்தத்தின் பரிணாமத்தைப் பிரதிபலிப்பது, அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் கோரப்பட்டதற்கு எதிராக மதிப்பிடுவது பொருத்தமானது. கறுப்பு ஜூலை (1983) மற்றும் ஆயுதப் போரின் ஆரம்பத்தை தொடர்ந்து இலங்கையானது அதிகாரத்தைப் பகிர்வதற்கான அழுத்தத்திற்கு உள்ளானது. அதிகாரப்பகிர்வு மூலம் இலங்கையைப் பிரிக்க இந்தியர்கள் விரும்பினார்கள் என்ற வாதம் உண்மையல்ல. மிசோரம், நாகலாந்து போன்றவற்றில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக இந்தியா எப்போதும் எமது இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளித்து வருகிறது. 01 மார்ச் 1985 அன்று, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியாவில் இருந்து ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மற்றும் இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கையர்களின் நடமாட்டத்தை தடுக்க இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலையீட்டை தனிப்பட்ட முறையில் கோரினார். 01 டிசம்பர் 1985 அன்று, தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யூ.எல்.எவ் ) அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் அதிகாரப் பகிர்வுக்கான தனது யோசனைகளை காந்தியிடம் முன்வைத்தது. அந்த யோசனைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: • இலங்கை—”இலங்கை” என்பது மாநிலங்களின் ஒன்றியம், • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து, ஒரு ‘தமிழ் மொழிவாரி மாநிலம்’, அவர்களின் அனுமதியின்றி அதனை மாற்ற முடியாது. • பாதுகாப்பு, வெளியுறவு, நாணயம், பதவிகள் / தொலைத்தொடர்பு, குடிவரவு/குடியேற்றம், வெளிநாட்டு வர்த்தகம்/வணிகம், இரயில் போக்குவரத்து விமான நிலையங்கள்/விமானப் போக்குவரத்து, ஒளிபரப்பு/தொலைக்காட்சி, சுங்கம், தேர்தல்கள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய விவகாரங்களுக்கு “பட்டியல 1″” இன் கீழ் இன விகிதாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சட்டத்தை தயாரிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும். • பட்டியல் 2”, சட்டம் மற்றும் ஒழுங்கு, நிலம் போன்றவற்றை உள்ளடக்கிய ஏனைய அனைத்துப் விடயதானங்களையும் கொண்டிருந்தது, மாநில சபைக்கு சட்டம் இயற்றும் அதிகாரங்கள் உள்ளன, • 1981 நவம்பர் 1, இல்இலங்கையில் வசிக்கும் எந்தவொரு நபரும் ஒரு வெளிநாட்டவராக இருக்கக்கூடாது இலங்கை குடிமகனாக இருக்கவேண்டும் , • எந்தவொரு “தேசியத்தையும்” பாதிக்கும் எந்தவொரு தீர்மானமும் அல்லது சட்டமூலமும் அந்த “தேசியத்தின்” உடன்பாடு இல்லாமல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படக்கூடாது (‘தேசியம்’ என்ற சொல் தவறாக வழிநடத்தப்படுகிறது.) • வரிகள், தீர்வை /கட்டணம், மற்றும் கடன்கள்/மானியங்களைத் திரட்ட மாநில சட்டசபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். • இந்திய தமிழர்களுக்கான விசேட ஏற்பாடுகள், • தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேம்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், • நீதித்துறை முறைமையை மேம்படுத்துதல், உதாரணமாக மேன் முறையீட்டு நீதிமன்றம் மாகாண மேல் நீதிமன்றம், மற்றும், • முஸ்லிம் உரிமைகள் கவனிக்கப்பட வேண்டும். ஜெயவர்த்தன அரசாங்கம் பிரேரணையை நிராகரித்தது.தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் காந்திக்கு எழுதியது (17-1-1986), ‘பாரம்பரிய தாயகம்,’ குடிப்பரம்பல் ஏற்றத்தாழ்வு போன்ற மிகவும் முக்கியமான பிரச்சினைகள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஜெயவர்த்தன உறுதியுடன் இராணுவத் தீர்வை ஆதரித்தார் போரை “இனப்படுகொலை” என்று முன்னாள் இந்திய அமைச்சர் பி.ஆர். பகத் மற்றும் பல மக்களவை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். பிந்தையவர்கள், ‘இலங்கையை 24 மணி நேரத்தில் நசுக்குவது” போன்ற தலையீடுகளை கோரினர் (ஸ்ரீ குழந்தைவேலு 29-4-1985), மற்றும் ஸ்ரீ கோபாலசுவாமி 13-5-1985 போன்றவர்கள் இந்தியாவை “இராணுவத் தலையீடுகள் உட்பட சாத்தியமான எல்லா வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். 09 ஜூலை 1986 இல் இலங்கை அரசியலமைப்பு அடிப்படைகளுக்கு பொருத்தமான விதத்தில் அமைச்சர் ப.சிதம்பரத்துடன் கலந்தாலோசித்த பின்னர் தயாரிக்கப்பட்ட இலங்கை முன்மொழிவுகளில் காந்தி திருப்தி அடைந்திருப்பார். மாகாண சபைகள், சட்டம் ஒழுங்கு, மற்றும் மகாவலி திட்டத்தின் கீழ் காணி அபகரிப்பு உள்ளிட்ட காணி குடியேற்றங்கள் குறித்த முன்மொழிவுகளில் ‘குறிப்புகள்’ இணைக்கப்பட்டு, இன அடிப்படையில் ஒதுக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். 1986,செப்டம்பர் 30 அன்று, தமிழர் விடுதலை கூட்டணியானது அரசாங்கத்தின் முன்மொழிவுகள் குறித்து விரிவாக இந்தியாவிற்கு பதிலளித்தது, மேலும் முன்மொழிவுகளைச் சேர்த்திருந்தது . மக்களவையின் [லோகசபை] கோரிக்கைகளை காந்தி கவனத்தில் கொண்டார். மக்களவையிலும் வெளிநாட்டிலும் (உதாரணமாக ஹராரேயில் ) விரக்தியை வெளிப்படுத்தினார். அவரையும் இந்தியாவையும் பலவீனமாக முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் அவரைக் கோபப்படுத்தியது மற்றும் அவரை கடினமாக்கியது. 02 ஜூன் 1987 இல், அவர் ‘மனிதாபிமான உதவியுடன்’ கப்பல்களை அனுப்புவதாக அச்சுறுத்தினார், மேலும் 04 ஜூன் 1987 அன்று இந்திய விமானம் இலங்கையின் வான்வெளியை மீறி வடக்கில் உதவிவழங்கும்நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த அப்பட்டமான அத்துமீறலில் எந்த வல்லரசும் எங்களுடன் நிற்கவில்லை. ஜெயவர்த்தன ஒரு உடன்படிக்கையில் கையொப்பமிட ஒப்புக்கொண்டார் மற்றும் 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தியதில் ஆச்சரியமில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்திய அமைதி காக்கும் படை (ஐ பி கே எவ் ) இலங்கையில் நிறுத்தப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட், நிதின் கோக்லேவுக்கு அளித்த பேட்டியில், இந்திய ராணுவத்தை இங்கு நிறுத்தியது தவறு என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஜெய்சங்கர் (ஐ பி கேஎவ் – 1988-1990-ன் ஒரு முறை அரசியல் ஆலோசகர்), இது ஒரு ‘தவறான செயல்’ என்று கூறியுள்ளார்.மேலும் பல, கல்கட் மற்றும் ஜெய்சங்கருக்கு நன்கு தெரியும். முக்கியமாக ஐ பி கே எவ் செயற்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்தியது, குறிப்பாக தமிழ் மக்களின் மனதில் சாத்தியமான தீர்வைத் தேடும் நிலையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் விளக்கியபடி, ஜெயவர்த்தன காந்தியை 1986 நவம்பர் நடுப்பகுதியில் பெங்களூரில் சந்தித்தார், அமைச்சர்கள் நட்வர் சிங், சிதம்பரம் மற்றும் தானும், ஜெயவர்த்தனவும் காந்தியிடம் அரசாங்கம் வீழ்வதை தடுக்க இந்திய இராணுவத்தை அனுப்புமாறு ‘மன்றாடி வேண்டுகோள் விடுத்ததாக ‘ கூறப்படுகிறது. தெற்கில் ஜே.வி.பி மற்றும் வடக்கில் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக அவரது அரசாங்கம் வீழ்ச்சியடையாமல் தடுக்கவே படைகளை அனுப்புமாறு கோரியதாக கூறப்படுகிறது. அவரது கடும் விரக்தியே ஜெயவர்த்தனவை உடன்படிக்கை மற்றும் 13 ஆவது திருத்தத்தை தேர்ந்தெடுக்கத் தூண்டியது. இந்தக் சந்திப்பிற்கு பிறகு காந்தி சிதம்பரத்தையும், நட்வர் சிங்கையும் கொழும்புக்கு அனுப்பினார். 1986 டிசம்பர் 19, அன்று, அவர்கள் “வெளிவந்த” முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். முக்கிய விடயங்கள் வருமாறு: * சிங்கள பெரும்பான்மை அம்பாறைத் தொகுதியை நீக்கியதாக கிழக்கு மாகாணம் மீள எல்லை வகுக்கப்படவேண்டும் . * புதிய கிழக்கு மாகாணத்திற்கு ஒரு மாகாணசபை நிறுவப்பட இருந்தது. * வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிறுவன ரீதியான இணைப்புகள் குறித்து முன்னதாக விவாதிக்கப்பட்டது. இரண்டாவது கட்ட அரசியலமைப்பு மேம்பாட்டின் பின்னர் கீழ் பின்னர் ஒன்றிணைக்க எண்ணம் இருந்திருக்கும். * குறிப்பிட்ட காலத்திற்கு துணை ஜனாதிபதி பதவியை உருவாக்க இலங்கை தயாராக இருந்தது. * பரஸ்பர அக்கறையுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தியாவிற்கு அழைக்கப்படலாம். மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள், பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, தமிழர்களின் நலன்களை இந்தியா எவ்வாறு பொருத்த முயற்சித்தது என்பதைக் காட்டுகிறது.இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தியாவைத் தூண்டிக்கொண்டே இருந்தன. கொழும்பு அரசியல் தீர்வைத் முன்னெடுக்காவிட்டால், அதன் தலையீட்டுக்கான வகிபாகத்தை கைவிடுவதாக அது 09 பெப்ரவரி 1987 அன்று அச்சுறுத்தியது. ஜெயவர்த்தன 1987 பெப்ரவரி 12 இல் பதிலளித்தார். இராணுவ நடவடிக்கைகளை அமைதிப்படுத்தவும், பேச்சுவார்த்தை மற்றும் நிர்வாகத்தை ஊக்குவித்தல் மற்றும் காவலில் உள்ளவர்களை விடுவிக்க வழிவகை செய்வதாக பதிலளித்திருந்தார் . இவ்வாறுதான் தவறாக இந்தியாவுக்கு விசனமூட்டப்பட்டபொது அது பிரதிபலிப்பை வெளிப்படுத்தியிருந்தது . அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ், அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டதால் மாகாண சபைகள் பலவீனமடைந்தன மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தன. இது ஜெய்சங்கரை ஜனாதிபதி திசாநாயக்கவிடம் பேசுவதற்கு வழிவகுத்திருக்கலாம், அவருடைய கட்சி 13 ஆவது திருத்தத்துக்கு எதிரானதென கருதப்படுகிறது. அண்மையில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் தலையீட்டைக் கோரிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து இதுவாகும். அதிகாரப்பகிர்வில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடக்கப்படாது என்ற தேசிய மக்கள் சக்தியின் பகிரங்க அறிக்கையின் மூலம் மாகாண சபைகள் மீதான இத்தகைய வெறுப்பை வெற்றி கொள்வது கடினம். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற ஜெய்சங்கரின் கோரிக்கை இதற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. 1986 நினைவு மீட்பு பாரதீய ஜனதா கட்சியின் பிரமுகர், ஜஸ்வந்த் சிங், 13 மே 1986 அன்று, இலங்கை நிலைவரத்தின் அடிப்படையில் மக்களவையில் ஏழு கேள்விகளை முன்வைத்தார். அவை இன்றும் பொருத்தமானவை. * அதிகாரப்பகிர்வு மற்றும் அதிகாரப் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதத்தில் இந்திய நிலைப்பாடு என்ன? * வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைப்பில் இந்தியாவும் இலங்கையும் எங்கே நிற்கின்றன? * நிலப் பயன்பாடு குறித்த இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் தமிழ் குழுக்களின் நிலைப்பாடு என்ன? * மொழியின் அந்தஸ்து என்ன? * சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த நிலைப்பாடு என்ன? * தீர்வை எட்டுவதற்கான கால வரையறை என்ன? * இலங்கைப் பிரச்சினைகளின் பின்னணியில் வெளிவரும் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் குறித்து இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? ஜஸ்வந்த் சிங் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் முக்கியமான மக்களவை உறுப்பினர்களுடன் சேர்ந்து கொள்வார் அல்லது ஒப்பந்தம் ஏன் அமுல்படுத்தப்படவில்லை என்று பிரதமர் மோடி மற்றும் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்புவார். ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கு ஜெய்சங்கரின் நினைவூட்டல் பின்வரும் விடயங்களிலிருந்தான அவரது விரக்தியின் காரணமாக இருந்திருக்கும்: * பகுதியளவு அமுலாக்கம் மற்றும் தாமதமான தேர்தல்களா 13ஆவது திருத்தம் “முடங்கி” உள்ளது. * வடக்கு மற்றும் கிழக்கு சட்ட ரீதியாக பிரிக்கப்பட்டமை * காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் தாமதம் * அரசியலமைப்பு உத்தரவாதங்கள் இருந்தும் மொழிப் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை * 2009ல் புலிகளை நசுக்கிய பிறகும், தீர்வுக்கான காலவரையறை இல்லாதது, மற்றும், * இந்தியாவுக்கு, குறிப்பாக சீனாவிலிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல். இதற்கு சமாந்தரமாக கள நிலவரங்கள் மாறிவிட்டன. இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்களின் கவனம் மோதலில் இருந்து மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான அக்கறைகள், திரும்பும் அகதிகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு மாற்றப்பட்டுள்ளது. 2009 மற்றும் 2015 இல் முறையே மகிந்த ராஜபக்ச மற்றும் விக்கிரமசிங்க ஆகியோரால் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் இணைக்கப்பட்டதன் காரணமாக 13ஆவது திருத்தம் சர்வதேசமயமாக்கப்பட்டது. புலம்பெயர் குழுக்களின் தீவிர பரப்புரைகளும் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளன. இவை ஜனாதிபதி திஸாநாயக்கவின் முன் உள்ள அச்சுறுத்தும் சவால்களாகும். 13ஆவது திருத்தம் அவற்றில் ஒன்று மட்டுமே. என்ன நடைபெறும் ? மேலே பார்த்தபடி, 13 ஆவது திருத்தம் உள்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கடினமான பாதையைத் தாண்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பிக்குகள் இதற்கு எதிராக வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர் மற்றும் வன்முறையை அனுபவித்தனர். நிராகரிக்கப்பட்ட முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். எனினும், அதிகாரப்பகிர்வு நிலைத்து நிற்கிறது மேலும் இது ஒரு ‘இந்தியாவின் தயாரிப்பு ’ தீர்வாக பார்க்கப்படுகிறது. அதிகாரப்பகிர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி திஸாநாயக்க தயாராக இருக்க வேண்டும்.எனவே அதிகாரப்பகிர்வு தொடர்பான இந்தியாவின் அனுபவத்தை ஆய்வு செய்ய வேண்டும். உதாரணமாக, காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில், இந்திய அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் விதிகளை மாற்றியமைத்தது, அபிவிருத்தி/முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்தியர்களுக்கு நிலங்களை விடுவிப்பதற்கு மத்திய அரசு அனுமதித்தது என்பதை திஸாநாயக்க குறிப்பிடலாம். ஜம்மு காஷ்மீரில் குடியுரிமை பெறாதவர்கள் கூட அசையாச் சொத்துக்களை வைத்திருக்கவும் விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றவும் அவர்கள் அனுமதித்தனர். மாற்றங்களை இந்தியா தனது “உள் விவகாரங்கள்” என்று கருதியது, 13ஆவது திருத்தத்தில் நாம் அவ்வாறு கூறினால் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது! அபிவிருத்தியை இழந்த அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்பை இது போன்ற ரத்து ஏற்படுத்தியது என்றும், ஊழலை ஒழிக்க உதவியது என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அவர் விரும்பினால், அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது வாதங்களை வலுப்படுத்த ஜனாதிபதி திஸாநாயக்கவும் இதேபோன்ற காரணத்தை முன்வைக்கலாம். ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்தியர்களும் சமச்சீரற்ற நிர்வாகத்தைக் கொண்டுள்ளனர், ஆனால் ஜம்மு-காஷ்மீருக்கு அதைப் பயன்படுத்துவதில்லை, அதை நாமும் நகலெடுக்கலாம். இருப்பினும், சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு மிகவும் சிக்கலானது மற்றும் தீவிர சட்டப்பூர்வமான கவனம் தேவை. இது இப்போது ஜனாதிபதி திஸாநாயக்கவின் சட்ட மற்றும் நிர்வாக நிபுணர்கள் எவ்வாறு முன்மொழிய வேண்டும் என்பதை பொறுத்ததாகும். உத்தேச புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு தொடர்பான முன்மொழிவுகளை இணைத்தல். அதிகாரப் பகிர்வில் இந்தியா சமரசம் செய்து கொண்டு பொருளாதார மற்றும் மனிதாபிமான உரிமைகள் தலையீடுகளில் அதிக கவனம் செலுத்தலாம். இத்தகைய அணுகுமுறை மாற்றம் காலத்தின் தேவை. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கசானில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கால் அங்கீகரிக்கப்பட்ட, மரியாதைக்குரிய பேச்சுவார்த்தையாளர்/மூலோபாய நிபுணர், தமிழ் அரசியல்வாதிகள் வெற்றிபெறக்கூடிய வேட்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களின் அபிலாஷைகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அவரது புத்திசாலித்தனமான ஆலோசனையை சில தமிழ் அரசியல்வாதிகள் செவிசாய்க்கவில்லை, அவர்கள் 13 ஆவது திருத்தத்தை நிராகரிக்கும் அதே வேளையில், தமிழர்களுக்கு சுயநிர்ணய அதிகாரம் கொண்ட சமஷ்டி முறையைக் கோரினர், இது வெற்றிபெறுவதற்கான வாய்ப்பற்றது. தோவலின் விஜயத்தின் பின்னர் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு நினைவூட்டியதன் மூலம், புதுடில்லி இலங்கை தொடர்பாக ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது: அது சுயநிர்ணயம் அல்லது சமஷ்டி முறையை தீர்வாகக் கருதவில்லை. எனவே, தமிழ் அரசியல்வாதிகளும் மேற்கூறிய செய்தியின் வெளிச்சத்தில் தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜஸ்வந்த் சிங்கின் கேள்விகள் மற்றும் தற்போதைய அரசியல் போக்குகளின் அடிப்படையில், தமிழ் குழுக்கள் 13ஆவது திருத்தத்தை நிராகரித்தால், சமஷ்டி இல்லாத புதிய அதிகாரப் பகிர்வு பொறிமுறையை முன்மொழிய வேண்டும். ஒருவேளை, திசாநாயக்கவினால் வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு, சமத்துவம், கண்ணியம், நீதி, சுயமரியாதை மற்றும் உள்ளடக்கிய தன்மையுடன் கூடிய தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு மாற்றீட்டை அரசியல் முன்னெடுப்புகள் மூலம் வழங்கலாம். அவையே தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கை. அதிகாரப் பகிர்வுக்கான சர்வதேச நியமங்கள் மற்றும் துணைக் கொள்கைக்கு முரணாக உள்ளூராட்சி அதிகார சபைகள் மூலம் அதிகாரப் பகிர்வை அடைய முடியும் என சிலர் நம்புகின்றனர். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளையும் யோசிக்க வைப்பது பெரும் சவாலாக உள்ளது. ஆயினும்கூட, எந்தவொரு பொறிமுறையின் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த ஒருமித்த முடிவெடுப்பது அவசியம். இதுகுறித்து தி இந்து பத்திரிகையில் மீரா ஸ்ரீநிவாசன் கூறியதாவது: 2009ல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த மகிந்த ராஜபக்ச நிர்வாகத்திற்கு இந்தியாவின் ஆதரவு இருந்த போதிலும், இலங்கையின் தென்பகுதி மக்களிடையே உள்ள பகுதியினர் இந்தியா மீது சந்தேகம் கொண்டவர்களாகவும், இலங்கையின் இன மோதலில் ‘தலையிட்ட’ ‘தமிழர்களுக்கு ஆதரவான’ பெரும் அண்டை நாடு குறித்து எச்சரிக்கையாகவும் உள்ளனர். . அதிகாரப் பகிர்வு அல்லது மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றிய இந்தியாவின் கருத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள் மற்றும் தேசிய சொத்துக்களை மேம்படுத்துவதில் இந்தியப் பங்கை எதிர்க்கிறார்கள். இந்தியாவும் தமிழ் அரசியல் தரப்பும் இந்த சிங்கள மனநிலையை அனுசரித்து போகக்கூடும் . எதிர்வரும்பாரா ளுமன்றத் தேர்தலில் என் பி பி ஆட்சி அமைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால், அரசாங்கத்தின் அரசியல் விசுவாசம் வேறு எங்கும் திசைதிருப்பப்படாமல், கதைகளை மாற்றுவது சரியான நேரத்தில் இருக்கும். இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பரந்த ஆலோசனைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் மாற்றம் அடையப்பட வேண்டும். பண்டாரி முதல் விக்ரம் மிஸ்திரி வரை, மற்றும் ராஜீவ் காந்தி முதல் நரேந்திர மோடி வரை, இங்குள்ள தேசியப் பிரச்சினையை நிர்வகிப்பதில் இந்தியர்களும் தங்கள் இலங்கை சகாக்களைப் போலவே செயற்பட்டுள்ளனர். 37 ஆண்டுகளாக இலங்கை 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தத் தவறியது மற்றும் இந்தியாவும் இலங்கையை நம்பத் தவறியது. தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண 13 ஆவது திருத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இலங்கைக்கு உள்ளது. முன்னோடிகளில் இருந்து வேறுபட்ட இலங்கைத் தலைவரை இன்று இந்தியா சமாளிக்க வேண்டியுள்ளது. தேசியப் பிரச்சினைக்கான தீர்வை ஆராய்வதற்கான உண்மையான பாதையில் செல்ல ஜெய்சங்கரும் மற்றவர்களும் அவரை வற்புறுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. அமைச்சர்களான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் விஜித ஹேரத், செயலாளர்கள் விக்ரம் மிஸ்திரி மற்றும் அருணி விஜேவர்தன, மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சந்தோஷ் ஜா மற்றும் க்ஷேனுகா செனி விரட்ண ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்! – ஐலண்ட்- https://thinakkural.lk/article/311477
-
மனித உயிர் பறிக்கும் வல்லைப் பாலம்
மனித உயிர் பறிக்கும் வல்லைப் பாலம் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்றாகும். மன்னராட்சி காலத்திலிருந்து பல சிறப்புகளையும் வரலாற்றினையும் தன்னகத்தே கொண்டதுதான் யாழ்ப்பாணம். 30 வருட யுத்தத்தினால் யாழ்.மண் பலமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக கட்டி எழுப்பப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தின் உடுப்பிட்டியில் அமைந்துள்ள வல்லைப்பாலம் ஒரு புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இப்பாலம் யாழ்.மண்ணின் இயற்கை அழகையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் முக்கியமான கட்டுமானங்களில் ஒன்றாக காணப்படுகிறது. வல்லைப் பாலம் வல்லைக் கடல் நீர் வழியைத் தாண்டி அமைக்கப்பட்டிருப்பதால் அதன் கட்டுமானம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த பாலம் கட்டப்பட்ட இடத்தின் நெருங்கிய சுற்றுப்புறம் தாழ்வான நீர்நிலைகளாலும் வயல்கள் மற்றும் கிராமப்புற இயற்கை காட்சிகளாலும் சூழப்பட்டுள்ளது. எனவே இந்த பாலம் இயற்கையுடனும், மண்ணுடனும் அடையாளம் காணப்படும் ஒரு பண்பாட்டுச் சின்னமாக இருக்கிறது. இப்பாலமானது தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. அதில் இருக்கின்ற ஆபத்து தொடர்பில் இதுவரை எவரும் கவனம் செலுத்தவில்லை. அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் -பருத்தித்துறையை இணைக்கும் வீதியின் முக்கிய பாலமாக விளங்கும் வல்லைப் பாலமானது பழுதடைந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு வீதி அதிகார சபையால் செப்பனிடப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 1995 ஆம் ஆண்டு சூரியக்கதிர் நடவடிக்கை காலப்பகுதியில் குண்டுவைத்து தகர்க்கப்பட்ட குறித்த பாலமானது பின்னர் தற்காலிக பாலமாகவே பல தடவைகள் செப்பனிடப்பட்டு மக்களின் போக்குவரத்துக்கு விடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் இரும்புக் கேடர்களால் குறித்த பாலம் புனரமைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பாலத்தின் அலுமினிய தகடுகள் வழுக்கல் தன்மை உடையதாக இருப்பதினால் பல விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருந்ததுடன், அப்பாலத்தை கொங்கிரீட் பாலமாக அமைத்து தருமாறும் கோரி இருந்தனர். ஆனால் இன்றுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வல்லைப் பாலத்தில் அண்மை காலத்தில் விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்வோம் எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. காலையிலும் மாலையிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் இருவர் சிவப்பு கொடியுடன் நின்று அவ்வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளிடம் மெதுவாக பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். 2004 ஆம் ஆண்டு திருத்த வேலை காரணமாக வல்லைப் பாலத்தினூடான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இன்றுவரை இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. வல்லைப் பாலத்தில் இருந்து தொண்டமனாற்றுப்பாலம் வரை இரண்டு மைல் நீளமான பகுதி உவர்நீர் தன்மை கூடியதும் மீன்பிடித் தொழில் நடைபெறும் பகுதியும் ஆகும். 2022 ஆம் ஆண்டு வல்லைப் பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அண்மையில் மழைக்காலம் ஏற்பட்டதனால் அப்பாலமானது வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதோடு, விபத்துகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளர் 38 வயதுடைய நபர் வல்லைப் பாலத்தில் ஏற்பட்ட விபத்தால் அண்மையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மழைகாலங்களில் மாத்திரம் அன்றி வழுக்கும் தன்மை அபாயமாக இருப்பதோடு பனி பெய்யும் காலங்களிலும் வழுக்கும் தன்மையாக இருப்பதாக வாகன சாரதிகள் கூறுகின்றனர். பொதுமக்களது போக்குவரத்துக்கு தடையாக -ஆபத்தாக இருக்கும் இப் பாலத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். பாலத்தினூடாக மேற்கொள்ளப்படும் போக்குவரத்துக்கு ஆபத்து இன்றி மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு வல்லைப் பாலத்தினை நிரந்தரமாக புனரமைத்து தர வேண்டும் என்பதே மக்களுடைய கோரிக்கை ஆகும்.இதனை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும். சி.கதீசனா https://thinakkural.lk/article/311487
-
பாசிக்குடாவில் பலத்த பாதுகாப்பு
பாசிக்குடாவில் பலத்த பாதுகாப்பு ரீ.எல்.ஜவ்பர்கான் அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா கடற்கரை இலங்கையின் புகழ்பெற்றதும் உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களின் ஒன்றாகவும் கருதப்படுகிறது குறித்த பாசக்குடா கடற்கரையில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர் விடுமுறை தினங்கள் மற்றும் முழுமதி போயாதினங்கள் உட்பட பல்வேறு பண்டிகை காலங்களிலும் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் பாசிக்குடா கடற்கரை நிறைந்து காணப்படும் குறித்த கடலில் மகிழ்ச்சியான முறையில் நீராடி மகிழ்வதற்கும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஓய்வு நேரத்தை கழிப்பதற்குமாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது பாசிக்குடா கடற்கரை திடலில் பொலிஸார் மற்றும் கடற்கரையினர் சுற்றுலா பொலிசார் உட்பட பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24 மணித்தியாலமும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம் பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/பாசிக்குடாவில்-பலத்த-பாதுகாப்பு/175-346473
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியில் கலந்துகொள்ள பல யாழ்கள அரசியல் ஆர்வலர்கள் பின்னடிப்பது இந்தத் தேர்தல் சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த😱 நிலையை உருவாக்கியிருக்கின்றது😜
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
என்னதான் தலைகீழாக நின்றாலும் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது! அடுத்த நாலு வருடங்கள் உலகில் பெரிய மாற்றங்களை உருவாக்குமா தெரியவில்லை, ஆனால் போலியான தகவல்கள் மூலம் போலியான உலகம் கட்டமைக்கப்படும்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார்? November 3, 2024 அடுத்த வாரம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள அரச தலை வருக்கான தேர்தலில் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார் என உல கின் எதிர்கால பொருளாதார நில மைகளை துல்லியமாக கணிப்பு செய்துவரும் பொருளியல் நிபுணர் கிறிஸ்தோப் பாரோட் தெரிவித்துள் ளார். ஜனநாயகக் கட்சியின் வேட் பாளரும், தற்போதைய துணை அரச தலைவருமான கமலா ஹரீஸ் ஒரு விகிதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் முன்னியில் உள்ளதாக அண்மையில் த நியூயோக் ரைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு வேட்பாளர்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. வெற்றியீட்டும் விகித வேறுபாடுகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. வேறுபட்ட கருத்துக்கணிப்புக்கள், பங்குச் சந்தை நிலவரம், பொருளாதார நிலமைகள், பந்தையங்கள், எதிர்வுகூறல்கள் மற்றும் தேர்தல் மாதிரி களை ஆய்வு செய்ததன் மூலம் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பாரோட் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் வெற்றி காங்கி ரஸ் சபையில் பிளவுகளை ஏற்படுத்தும், அது வரிக் குறைப்பு, வர்த்த கக் கட்டுப்பாடுகள் மற்றும் வெளி விவகாரச் கொள்கைகளில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தும். ஹரீஸ் வெற்றிபெற்றால் பொருளா தாரத் தில் அதிக மாற்றம் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதேசமயம், எதிர்வரும் வாரம் இடம்பெறும் தேர்தலில் ஹரீஸ் வெற்றிபெறுவார் என அலன் லிற்ச்மன் தெரிவித்துள்ளார். இவர் 1984 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இடம்பெற்ற 10 அரச தலைவர் தேர்தல்களில் 9 தேர் தல்களின் முடிவுகளை சரியாக கணிப்பிட்டவர். https://www.ilakku.org/அமெரிக்க-தேர்தலில்-டொனால/
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனத்தில் திருத்தம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், வெளியான விஞ்ஞாபனத்தில் திருத்தமொன்றைச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக குறித்த விஞ்ஞாபனம் மாவை. சேனாதிராஜாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதன்போது அங்கு பிரசன்னமாகியிருந்த சிவஞானம் சிறிதரன் விஞ்ஞாபனத்தின் ஐந்தாவது பிரிவில் காணப்படுகின்ற தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து விஞ்ஞாபன வரைவில் பங்கேற்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அதனை மீளத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குறித்த விஞ்ஞாபனத்தில் ‘கடந்த காலத்தினை கையாளுதல்’ எனும் ஐந்தாவது பகுதியின் முதலாவது பிரிவான ‘நீதி மற்றும் பொறுப்புக்கூறல்’ தலைப்பின் கீழ் “இனக்கலவரத்தின் வரலாறு முழுவதும் தமிழ் மக்கள் அனுபவித்த மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு நீதி என்பது விட்டுக் கொடுப்பற்றதாகவும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் இன்றியமையாத ஒரு அங்கமாக அமைகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ‘இனக் கலவரத்தின் வரலாறு முழுவதும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளமையானது, தவறானது என்று சுட்டிக்காட்டப்பட்டமைக்கமைவாக குறித்த சொற்றொடர் இன முரண்பாட்டின் வரலாறு முழுவதும் என்றோ அல்லது இன அழிப்பின் வரலாறு முழுவதும் என்றோ மாற்றப்படவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://newuthayan.com/article/தமிழரசுக்கட்சியின்_விஞ்ஞாபனத்தில்_திருத்தம்
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
சுமந்திரன் – அனுர உடன்படிக்கை: வெளியிடுமாறு கம்மன்பில கோரிக்கை! பொதுத் தேர்தலின் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க தமிழ் அரசுக் கட்சியுடன் ஒப்பந்தமொன்றை ஜனாதிபதி செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். சுமந்திரனின் அமைச்சுப் பதவி பெறுவதை வரவேற்கிறோம். அதே வேளையில், அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு நிபந்தனைகள் குறித்து கவலையடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இது தெடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ இலங்கையை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்றி, புதிய அரசியலமைப்பை அமுல்படுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளமை முதல் நிபந்தனை யாக உள்ளது. அந்த அணுகுமுறை நாட்டு மக்களை இன ரீதியாக பிரிக்கும் பிரிவினைவாத நலன்களுடன் ஒத்துப்போகிறது. இரண்டாவது நிபந்தனையில் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (UNHRC) இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தவும் இராணுவத்தினரை சர்வதேச கூண்டில் நிறுத்தவும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார். வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் முதல் மாதத்திற்குள்ளேயே அரசியல் நண்பர்களை பாதுகாக்க இவ்வாறு செயற்பட்டதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் இதுதொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவி நீக்கம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் பொது மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/சுமந்திரன்-அனுர-உடன்படி/
-
”சுமந்திரன் போன்றோர் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்” - இராமலிங்கம் சந்திரசேகர்
”சுமந்திரன் போன்றோர் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்” சுமந்திரன் போன்றோர் எங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும் அநுர ஜனாதிபதி தேர்தலின் போது மிக தௌிவான கொள்கை பிரகடனம் ஒன்றை வௌியிட்டு இருந்தார். தேர்தல் விஞ்ஞாபனங்களில் நாங்கள் கூறியுள்ள பல்வேறு விடயங்கள் இருக்கும் நிலையில் இங்கு இருக்கும் தமிழ்க்கட்சிகள் எங்கள் மீது பல்வேறு போலியான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்காது அதை பரிசீலனை போகிறார்கள் என தெரிவிக்கிறார்கள், அத்தோடு அநுரவின் அரசாங்கத்திலும் இவ்வாறான போக்குகளை காணக்கூடியதாக இருக்கிறது என கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்த விடயத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சுமந்திரன் முன்னிலை வகிக்கின்றார். எங்களுக்கு அவர் மீது மரியாதை இருக்கிறது. ஆனால் நாங்கள் தெரிவிக்கும் விடயங்களை நீங்கள் உங்களது வாயால் திரிபுபடுத்துதல் உங்களுக்கு நல்லது கிடையாது என தெரிவித்தார். http://www.samakalam.com/சுமந்திரன்-போன்றோர்-போல/
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு adminNovember 2, 2024 கட்சித் தலைவர், முதன்மை வேட்பாளர் இன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு செய்யப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தைசெல்வா கலையரங்கில் வெளியிடப்பட்டது. இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. எனினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் உடல்நலக் குறைவு காரணமாக வரவில்லை என கூட்டத்தில் கூறப்பட்டது. https://globaltamilnews.net/2024/207965/
-
அமரன் : விமர்சனம்!
உன்னதமான தேச பக்தி எதற்காக? யாருக்காக? -சாவித்திரி கண்ணன் தேச பக்தியையும், உயிர்ப்பான காதலையும் ஆழமாக காட்சிப்படுத்தியதில் படம் முழு வெற்றி பெற்றுள்ளது. ராணுவ வீரர்களின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், சொந்த மக்களுக்கு எதிராக ராணுவம் ஏன் இவ்வாறு செயல்பட வேண்டும் போன்ற கேள்விகளை படம் ஏற்படுத்துகிறது; காதல், வீரம், தேசபக்தி, தியாகம்..என கலவையாக வெளிவந்துள்ள அமரன் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைக் காவியம் என்பதில் சந்தேகமில்லை. மேஜர் முகுந்த் தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் படிக்கும் போது இயல்பாக மலரும் காதல், அதை இரு வீட்டார்களும் எதிர்கொள்ளும் விதம், பெற்றோர்களை சம்மதிக்க வைப்பதில் காதலர்கள் கடைபிடிக்கும் பொறுமை, காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் நெஞ்சை அள்ளும் காட்சிகள்…என பல வலிமையான காட்சிப் பின்னல்களோடு படம் நகர்கிறது. மேஜர் முகுந்தாக நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்பு முனை படமாகும். பல படங்களில் பெண்களை கிண்டலடித்து சுற்றும் பொறுப்பில்லாத வாலிபனாக வந்து டூயட் பாடிச் சென்ற சிவகார்த்திகேயன், இது போன்ற நல்ல வாய்ப்புகளில் முழுமையாக ஸ்கோர் பண்ணிவிடுகிறார். அவரை விஞ்சும் வகையில் அன்பும், அர்ப்பணிப்புமுள்ள ஒரு காதலியாக, மனைவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். காதலில் சொந்தக் குடும்பத்தின் எதிர்ப்புகளை மீறி அவர் காட்டும் உறுதி, காதலனே பின்வாங்கிக் கொள்கிறேன் என்ற போதும், தான் பின் வாங்கப் போவதில்லை எனக் காட்டும் காதல் மீதான ஆழம், கல்யாணத்திற்கு பிறகு காதல் கணவனை ராணுவத்திற்கு தாரை வார்த்து பிரிந்து வாட நேரும் எனத் தெரிந்தும் காதலில் காட்டும் பிடிவாதம், கல்யாணத்திற்கு பிறகு கணவன் எப்போது வருவார் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளக் கூட முடியாத சூழல்கள், துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே பயணப்படுவனை நம்பி தன் வாழ்க்கை பயணத்தை துணிவாக அமைத்துக் கொள்வது, இளம் வயதில் சின்னஞ்சிறு குழந்தையுடன் கணவனை பறி கொடுத்தும் உறுதி குலையாமல் வாழ்வை எதிர் கொள்ளும் காதலியும், மனைவியுமாக இந்து ரெபக்கா என்ற சாய் பல்லவி கதாபாத்திரம் மேஜர் முகுந்தின் தியாகத்தை விட ஒருபடி மேலானது என்பதில் சந்தேகமில்லை. இந்த கதாபாத்திரத்தை மிகுந்த உயிர்ப்புடன் நடித்துள்ளார் சாய் பல்லவி. 77 ஆண்டுகளாக தீர்வில்லாமல் நீடிக்கும் காஷ்மீரை வலிந்து இந்தியாவோடு இணைப்பதற்கான ராணுவச் செயல்பாடுகளில் நம் வீரர்கள் எடுத்துக் கொள்ளும் உயிரை பணயம் வைக்கும் ரிஸ்க் இப்படத்தில் சிறப்பாகவே பதிவாகியுள்ளது. மேஜர் முகுந்தின் நெருங்கிய ராணுவ சகாவாக விக்ரம் சிங்காக வரும் (புவன் அரோரா) கதாபாத்திரம் இந்திய ராணுவத்தில் தொன்று தொட்டு உயிரைத் தியாகம் செய்யும் ஒரு ராணுவ பாரம்பரியக் குடும்பத்தின் மன நிலைக்கு சரியான உதாரணமாகும். தன் தந்தையை ராணுவத்திற்கு தந்து, தன் உயிரையும் ராணுவத்திற்கு தத்தம் செய்கிற அந்த வீரன், தன் ஏழரை வயது மகனையும் ராணுவத்திற்கு தயார் படுத்தி வருகிறேன் என்று சொல்லியபடி உயிர் விடுகிறான். இப்படியாக ராணுவ விரர்கள் செய்யும் தியாகங்கள் எதற்காக? அந்நிய நாட்டு பகை ராணுவத்தை எதிர்த்து நாட்டை காப்பதற்கென்றால், அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நாம் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதும் காஷ்மீரில் உள்ள மக்களை எதிர்த்து எனும் போது தான் மனம் பதறுகிறது. அவ்வளவு பீரங்கி வண்டிகள் அணிவகுத்து ராணுவ வீரர்கள் வந்தாலும், தாங்கள் மதிக்கும் போராளிகளை காப்பாற்ற அந்த மக்கள் ஆயுதங்களின்றி வெறும் கற்களை எறிந்து ராணுவத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது இந்தப் படத்தில் பல இடங்களில் பதிவாகியுள்ளது. இன்னொரு காட்சியில் ராணுவத்தின் பார்வையில் தீவிரவாதியாக கருதப்படும் ஒருவரின் வீடு தேடி சென்று மேஜர் முகுந்த் பேசும் போது, அந்த வயதான தந்தை, ”என மகன் இந்த காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுகிறான், அவன் பயங்கரவாதியல்ல, சுதந்திர போராட்ட வீரன், நீங்க போகலாம்” என்ற காட்சியும் பதிவாகியுள்ளது. இன்னொரு காட்சியில் மேஜர் முகுந்தின் வயதான அப்பா தன் மகனிடம், ”ஏண்டா காஷ்மீரில் மட்டும் தொடர்ந்து சண்டைகள், அங்கே அமைதி வராதா?” எனக் கேட்கும் போது, ”இதை நீயும், நானும் பேசி என்ன ஆகப் போகுது நைனா! பேச வேண்டியவங்க பேசணும்” என அவர் சொல்வார். அங்கே அமைதி திரும்புவதற்கு இந்திய ஆட்சியாளர்கள் அங்குள்ள மக்கள் மனநிலை அறிய வேண்டும். அங்கு மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு முடிவை எடுக்க வேண்டும். இந்த பெருந்தன்மையான முடிவில் தான் நமது ராணுவ வீரர்களின் விலை மதிப்பில்லாத உயிர் பலிகள் தடுக்கப்படும். அங்குள்ள கொந்தளிப்பு சூழல் முடிவுக்கு வரும். அமைதி நிலை பெறும்! இதைச் சொல்லும் துணிச்சல் இங்கு எந்த படைப்பாளிக்கும் இருக்கிறதா? எனத் தெரியவில்லை. அப்படி படம் எடுத்தால், அதைப் படைப்பு சுதந்திரம் என்ற தன்மையில் இந்திய அரசு அணுகுமா? என்றும் தெரியவில்லை. கனத்த மெளனத்துடன் படம் ஏற்படுத்திய தாக்கங்களை நாம் அசைபோடுகையில், தேச பக்தி என்ற உணர்ச்சியில் இந்திய ராணுவ வீரர்களும், அவர்கள் குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் ஈடு செய்ய முடியாத இழப்புகளுக்கு ஒரு தீர்வு கிடைக்காதா? இந்திய பட்ஜெட்டின் பெரும்பகுதி காஷ்மீருக்காக விரயமாவது முடிவுக்கு வரதா..? என்ற ஏக்கங்களை ஏற்படுத்துகிறது. படம் மாபெரும் வசூலை அள்ளித் தருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் வசூலில் மேஜர் முகுந்த் குடும்பத்திற்கும் ஒரு சிறு பங்களிப்பை தந்தால் அது சிறப்பாக இருக்கும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/19719/amaran-cinema-review/
-
அமரன் : விமர்சனம்!
அமரன் : விமர்சனம்! christopherNov 01, 2024 19:28PM மேஜர் முகுந்த் ஆக மிளிர்கிறாரா எஸ்கே?! தீபாவளி பண்டிகையையொட்டி தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ரசிகர்களால் முதன்மையாக நோக்கப்படும் படம் ‘அமரன்’. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடி மட்டுமல்லாமல், ‘ரங்கூன்’ தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இரண்டாவது படம் இது என்பது அதற்கான காரணங்களில் ஒன்று. அதனைக் காட்டிலும் பெரியது, காஷ்மீரில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பொதுமக்களைக் காக்கும் முயற்சியின்போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை என்பது. தமிழில் ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘ரத்த திலகம்’ காலம் முதல் அதற்குச் சில உதாரணங்களும் இருக்கின்றன. ஆனால், அப்படங்களில் ராணுவத்தில் இருப்பவர்களின் அன்றாட வாழ்க்கையோ, முக்கிய நிகழ்வுகளோ பதிவு செய்யப்பட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை. அந்த வகையில், எந்தச் சமரசமும் இல்லாமல் ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையைக் காட்டுவது போன்று தோற்றம் தந்தது ‘அமரன்’ டீசர், டிரெய்லர் போன்றவை. அவை அதன் மீதான எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தின. படம் பார்த்து முடிந்த பின்னர் அந்த எதிர்பார்ப்பு என்னவானது? அமரத்துவமான ஒருவன்! ’அமரன்’ படத்தின் கதை மிக எளிமையானது. சிறு வயது முதலே ராணுவ வீரனாக, உயரதிகாரியாக உயர வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரு மனிதர், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனேயே அதனை எட்டுகிறார். ராணுவத்தில் சேவையாற்றுவதில் இருக்கும் அபாயங்களை ரசித்துச் செயல்படுகிறார். பணியில் அவர் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைக் காண்கிறார். சக வீரர்களிடத்தில் மாபெரும் அன்பையும் நட்பையும் சம்பாதிக்கிறார். அதேநேரத்தில் தனது பெற்றோர், மனைவி, மகளுடன் நேரம் செலவிட முடியாத ஒரு வாழ்வைக் கொண்டிருக்கிறார். முடிந்தபோதெல்லாம், அந்த இடைவெளியைச் சரிசெய்ய முயற்சிக்கிறார். ஒருநாள், தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பொதுமக்களைக் காக்கும் நடவடிக்கையின்போது, அவர் வீர மரணம் அடைகிறார். மரணத்திற்குப் பின் அவருக்கு ’அசோக சக்ரா’ பதக்கம் வழங்கப்படுகிறது. அதனை அவரது மனைவி பெற்றுக்கொள்வதோடு இப்படமும் முடிவடைகிறது. அந்த மனிதர் தனது பெற்றோர், மனைவி, மகள், உடன் பணியாற்றியவர்கள் என்று பலரது நினைவில் ‘அமரத்துவத்துடன்’ வாழ்ந்து வருகிறார் எனச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது இப்படம். அதனை என்றென்றைக்கும் சினிமா ரசிகர்கள் நினைவில் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையில் நாயகன் பெயர் முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்), நாயகி பெயர் இந்து ரெபேக்கா வர்கீஸ் (சாய் பல்லவி) என்பது நாம் அறிந்தது தான். போலவே, இதில் வரும் பெரும்பாலான காட்சிகள் முகுந்த் – இந்து வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் தான். ஆனால், அதனைத் திரைக்கு ஏற்றவாறு எழுத்தாக்கம் செய்த விதமும், காட்சியாக்கம் செய்த விதமும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை வியந்து பார்க்கச் செய்கின்றன. வழக்கமான படமல்ல இது..! முதல் பார்வையிலேயே தனது இணையைக் கவரும் வகையில் நடந்து கொள்வது, கேர்ள்ப்ரெண்டை பெற்றோரிடம் தைரியமாக அறிமுகப்படுத்துவது, காதலியின் பெற்றோர் கல்யாணத்திற்குத் தடை சொல்கையில் அவர்களை நேரில் சந்தித்துப் பேசுவது, ராணுவத்தில் வேலை என்பதனைக் குடும்பத்தினர் அனைவரும் ஏற்கும்படியாகச் செய்வது, மனைவி மற்றும் மகளை ஆச்சர்யப்படுத்தும் விதமாகத் திடீரென்று வீடு திரும்புவது என்று முகுந்த் வரதராஜனின் இயல்பான வாழ்வே ‘நாயகத்தனமாக’த்தான் இருந்திருக்கிறது. அந்நிகழ்வுகளுக்குத் திரைவடிவம் கொடுக்க சில ‘பாலீஷ்’ முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது படக்குழு. முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸின் பார்வையிலேயே ‘அமரன்’ படம் அமைந்திருக்கிறது. ஒரு ராணுவ வீரரின் மரணம் என்பது அவர் சார்ந்த குடும்பத்திற்கு எத்தகைய வலியைத் தரும் என்றுணர்த்தும் விதமாகப் பல பாத்திரங்கள் அமைந்துள்ளன. ராணுவ வீரர்கள் முகாம் எப்படியிருக்கும் என்பதில் தொடங்கி, ஒரு தேடுதல் நடவடிக்கைக்குத் தயாராவது வரை பல விஷயங்களைப் போகிற போக்கில் சொல்கின்றன இதன் காட்சிகள். பல காட்சிகள், உண்மையிலேயே இக்கதை நிகழ்ந்த இடங்களுக்குச் சென்று படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்தரப்பினரின் குடும்பம், உறவுகள், அவர்களது பார்வையும் இதில் குறிப்பிடத்தக்க அளவில் காட்டப்பட்டுள்ளது. இது ஆச்சர்யம் தரத்தக்க விஷயம். அதுவே, இப்படத்தின் திரைக்கதை 360 டிகிரியில் அணுகப்பட்டது போன்ற தோற்றத்தைத் தருகிறது. இப்படிப் பல அம்சங்கள் இதில் பாராட்டும்படியாக உள்ளன. ஒரு உண்மைக்கதையைத் திரைப்படம் ஆக்குகையில், அது திரையில் இப்படித்தான் நகரும் என்று நம் மனதுக்குள் ஒரு படம் ஓடும். கிட்டத்தட்ட அதே தொனியில் இப்படம் அமைந்திருப்பது நிச்சயம் மைனஸ் தான். ஆனால், அதனைத் தனது காட்சியாக்கத்திறன் மூலமாகச் சரிசெய்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். இப்படத்தில் இயக்குனரும் அவரைச் சார்ந்தவர்களும் கொட்டியிருக்கும் உழைப்பு அபரிமிதமானது. ஒரு காட்சியில் பல ஷாட்களை நிறைத்து, ‘இது செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டது’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது ‘அமரன்’. அந்த பிரமிப்பு படத்தின் இறுதி வரை தொடர்வது படத்தின் ப்ளஸ். போலவே, ’சிவகார்த்திகேயன் படம் என்றால் இப்படித்தான் இருக்கும்’ என்ற எண்ணத்தைச் சுக்குநூறாக்குகிறது இப்படத்தில் அவரது இருப்பு. அதோடு பொருந்திப் போகும் வகையில் இருக்கிறது சாய் பல்லவியின் நடிப்பு. பல விருது விழாக்களில் இருவரது பெயர்களைப் பரிந்துரைக்கும் வகையில் ‘அமரன்’ படத்தில் அவர்களது பங்களிப்பு அமைந்திருக்கிறது. முக்கியமாக, சாய் பல்லவியை நாயகி ஆக்கியிருப்பதன் காரணமாக இப்படத்தைப் பெண்கள் பலர் ரசித்து நோக்குவார்கள். சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் குழந்தைகளும் பெரியவர்களும் பார்ப்பார்கள் என்ற உத்தரவாதம் இருக்கிறது. அதனைத் தக்க வைக்கும் வகையில், இதில் சண்டைக்காட்சிகளில் அதீத வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கிறது. மேஜர் முகுந்த் போன்று தோற்றம் தராதபோதும், ‘இப்படித்தான் அவரும் இருந்திருப்பார்’ என்று நம்ப வைப்பது போன்று அப்பாத்திரமாக மிளிர்கிறார் எஸ்.கே. வழக்கமான ‘மசாலா’ படங்களிலேயே, ‘ஆக்ஷன் காட்சிகளுக்காகவே ஒரு லாரி முழுக்க ‘போலி ரத்தம்’ தயாரா இருக்கு’ என்று படக்குழுவினர் சொல்கிற காலகட்டத்தில், ராணுவப் பின்னணியில் அமைந்த ‘அமரன்’னில் கோரமான காட்சிகளோ, மோதல் ஷாட்களோ இல்லை. மிகச்சில இடங்களில் சில ஷாட்கள் வந்து போகின்றன கதைக்குத் தேவைப்படுகிற அளவுக்கு.. அதற்காகவே சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவ், ஸ்டீபன் ரிச்டருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம். ராணுவ வாகனத்துக்குள் நிகழும் வீரர்களின் உரையாடல்களைக் காட்டுவது முதல் தொடக்க காட்சியில் ஒரு ராணுவ முகாமை ‘ஸ்டெடிகேம்’ பார்வையில் ஒரே ஷாட்டாக உணரும் வகையில் காட்சிப்படுத்தியது வரை, சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவருக்கு இது அறிமுகப்படம். வாழ்த்துகள்! பிளாஷ்பேக் உத்தியுடன் கூடிய, முன்பின்னாக நகரும் திரைக்கதை. பலருக்கும் தெரிந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்த கதை. கால வரிசைக்கு அப்பாற்பட்ட காட்சி வரிசை என்று பலவற்றைத் தாண்டி திரையில் சொல்லப்படும் விஷயங்கள் ரசிகர்களுக்குப் புரியும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கலைவாணன். தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர் கூட்டணியின் உழைப்பில், இயக்குனர் திரையில் காட்ட விரும்பிய உலகம் உயிர் பெற்றிருக்கிறது. காஷ்மீர் மக்களின் வாழ்வைச் சொல்கிற வீடுகள், கடை வீதிகளைக் காட்டும்போதும், சண்டைக்காட்சிகள் நிகழும் களங்களைச் சொல்கிற போதும், அவை ‘உண்மை’ என்றே நம்பத் தோன்றுகின்றன. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கின்றன. இந்த உத்தியுடன் வெளியான சமீபத்திய படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதுவே, இப்படத்தினை ‘வழக்கமான படம்’ என்று சொல்லவிடாமல் தடுக்கிறது. கூடவே, பின்னணி இசையில் ஜி.வி.பி மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் இடைவேளைக்கு முன்னதாக வரும் சுமார் 20 நிமிட ஆக்ஷன் காட்சிகளில் பரபரப்பை எகிற வைத்திருக்கிறது அவரது இசை. இவை தவிர்த்து ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, டிஐ, விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு, டப்பிங் என்று பல நுட்பங்கள் கவனமாகக் கையாளப்பட்டுள்ளன. புவன் அரோரா, ராகுல் போஸ், கீதா கைலாசம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். ‘பிரேமலு’ ஷ்யாம் மோகன், சீரியல் நடிகர் ஸ்ரீ, லல்லு போன்றவர்களும் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். இவர்கள் தவிர்த்துப் பல புதுமுகங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களது சீரிய நடிப்பே, இப்படத்தை ‘நிறைவானதாக’ ரசிகர்கள் உணர உதவியிருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ‘அமரன்’ படத்திற்காகப் பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார். ‘தமிழில் இது போன்று ராணுவத்தை மையப்படுத்தி படங்கள் உருவானதில்ல’ என்று சொல்லும்விதமான காட்சியாக்கத்தை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘இந்தியாவிலேயே அது போன்றில்லை’ என்று விவாதம் ஏற்படுத்தும் வகையில் பிற மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற திரைமொழியை இதில் அமைத்திருக்கிறார். மிக முக்கியமாக, உண்மையான நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிற இப்படத்தில் மருந்துக்குக் கூட ‘இது ஒரு கற்பனை’ என்று சொல்லும்விதமான அதீதச் சித்தரிப்பு இல்லை. முகுந்த் வரதராஜன் குடும்பத்தினரோ, அவருடன் பணியாற்றியவர்களோ அப்படிச் சொல்ல வாய்ப்புண்டு. ஆனால், படம் பார்க்கிற ரசிகர்கள் அப்படி ஒரு இடத்தைக் கூடச் சுட்டிக்காட்டா வண்ணம் இதனை உருவாக்கியிருப்பது அசாதாரண விஷயம். அதனால், சக இயக்குனர்களால் ராஜ்குமார் கொண்டாடப்படுவார். மேஜர் முகுந்த் பற்றியோ, ராணுவ வீரர்களின் வாழ்வு பற்றியோ தெரியாதவர்கள் கூட, இப்படம் பார்த்ததும் தங்களது பார்வைகளை மாற்றிக் கொள்வார்கள். அந்த வகையில், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கான ஒரு விளம்பரப் படமாகவும் இது அமைந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் நிகழ்வதாகக் காட்டப்பட்டுள்ள இக்கதையில் அங்குள்ள மக்கள் இழிவாகச் சித்தரிக்கப்படவில்லை. அதுவும் கூட, இதுவரை எல்லைப்பகுதிகளில் நிகழ்வதாகக் காட்டப்பட்ட திரைப்படங்களில் இருந்து ‘அமரன்’னை வேறுபடுத்துகிறது. ’சிவகார்த்திகேயன் சீரியசான கேரக்டர்ல நடிச்சா ஓடுமா’ என்பதே இப்படம் தயாரிப்பின் போது எதிர்மறையாக எழுந்த கேள்விகளில் முதன்மையானதாக இருந்தது. அதற்கு அவர் மட்டுமல்லாமல் மொத்தப் படக்குழுவும் தங்களது ஆக்கம் மூலமாகப் பதிலளித்திருக்கிறது. அந்தப் பதிலை ஏற்க மறுப்பவர்களும் தீவிரமான மசாலா பட ரசிகர்களும் மட்டுமே இப்படத்தைப் புறந்தள்ளுவார்கள். மற்றபடி, எப்படிப்பட்ட நிலைப்பாடு கொண்டவரையும் ஒருசேர ஓரணியில் திரள வைக்கிற திறன் ‘அமரன்’னுக்கு உண்டு. ராஜ்குமார் குழுவினருக்கு வாழ்த்துகள்! https://minnambalam.com/cinema/sivakarthikeyan-sai-pallavi-amaran-movie-review/
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவு...சுமந்திரனை கடுமையாக சாடும் சிறிநேசன்
தமிழரசுக் கட்சிக்குள் பிளவு...சுமந்திரனை கடுமையாக சாடும் சிறிநேசன் நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் (S. Shritharan) மற்றும் சிறிநேசனை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை என்று சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசன் (G. Sirinesan) தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் சுமந்திரன் (M. A. Sumanthiran) இப்படியான தவறான கருத்துக்களை வெளியில் விடக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு (Batticaloa) - செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (31.04.2024) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சமாதான தேவதை அவர் மேலும் தெரிவிக்கையில், ”புதுக்கடைகள் ஆரம்பித்து விட்டால் அந்த கடைகளுக்குள் சென்று கொள்வனவு செய்து பார்ப்பதும், அது ஒரு உணவகமாக இருந்தால் அங்குள்ள உணவுகளை உண்டு பார்ப்பதும் வாடிக்கையாக இருக்கின்றன. இந்த தேசிய மக்கள் சக்தி என்கின்ற அந்த கடைக்குள் தமிழர்கள் சென்று அதனை பார்ப்பதற்கு அல்லது அதை சுவைப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் அதற்கு முன்பாக நான் சொல்லக்கூடிய ஆலோசனை என்னவெனில், நடைபெறப் போகின்ற தேர்தலில் நாங்கள் ஏமார்ந்து விடாமல் தமிழ் தேசிய பிறப்பில் சோடை போகாமல், சோரம் போகாமல், பயணிக்க கூடிய தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமாக அதனை ஒரு பலமான சக்தியாக மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பேரினவாத கட்சிகள் எங்களை ஏமாற்றாமல் நாங்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வழி கூற வேண்டும், என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறி வைக்கின்றேன். கடந்த காலத்தில் சமாதான தேவதையாக வந்த சந்திரிக்கா (Chandrika Kumaratunga) பற்றி தப்பான கணக்கு போட்ட பின்னர் ஆறு மாதத்தில் அவருடைய சுய ரூபத்தை, விகார முகத்தை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது. பேரம் பேசுகின்ற ஒரு சக்தி அதேபோன்றுதான் இப்போது சொல்லுகின்றேன் இந்த தேசிய மக்கள் சக்தி என்கின்ற விடயத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களது நடத்தைகளை போக்குகளை அவதானிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. இந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பாக வாக்குகளை அளித்து ஏமாந்து போகாமல் தமிழ் தேசியத்தை, தமிழர் உரிமையை, தமிழரின் ஒரு இனப்பிரச்சினை தீர்க்கக்கூடிய விதத்தில் செயற்பட்டு வருகின்ற தமிழரசுக் கட்சிக்கு சாதகமாக வாக்களியுங்கள். இதன் மூலமாக கீரை கடைக்கும் எதிர்க்கடை இருக்க வேண்டும் என்று சொல்வது போன்று தென்னிலங்கையில் பாரிய சக்தியாக விளங்குகின்ற இந்த ஆளுங்கட்சிகளுக்கு நாங்கள் பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக இருந்து தமிழர்களின் உரிமைகளை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். சர்வதேசத்தின் பொருளாக நாங்கள் இருக்க வேண்டுமே ஒழிய அந்த அமைச்சரவையில் இருந்து கொண்டு நாங்கள் எதனையும் சாதிக்க முடியாது என்பதை வெளிப்படையாக கூறி வைக்க விரும்புகின்றோம். எமது கட்சியிலிருந்து எவராவது அமைச்சர் பதவி எடுக்க வேண்டும் அதன் மூலமாக ஒரு கௌரவத்தை பெறவேண்டும் அதிகாரத்தை பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்க முடியாது. என்றுதான் நான் கருதுகின்றேன். மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்கள் அதைவிட எங்களுடைய யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரான சுமந்திரன் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். அதாவது சிறீதரன், மற்றும் சிறிநேசன் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட வேண்டும் என்கின்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை, அவர்கள் களமிறக்கப்பட்டு இருப்பதை தான் விரும்பவில்லை என்ற பாணியில் கூறியிருக்கின்றார். ஒரு முடிவு எடுக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு கூறுவது ஒரு பொருத்தமற்ற செயல் என்று நான் கூறுகின்றேன். மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்கள்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் களம் இறக்கப்பட வேண்டுமே தவிர சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டவர்கள் களத்தில் இறக்கப்பட வேண்டும் என்று கனவு காண்பது ஒரு விபரீதமான சிந்தனை அல்லது வெறுப்பு சிந்தனை அல்லது பழி வாங்குகின்ற சிந்தனையாக இருக்க முடியும். தயவு செய்து சுமந்திரன் அவர்களே தேர்தல் காலத்தில் இப்படியான தவறான கருத்துக்களை வெளியில் விடக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகின்றது மக்களின் பார்வை எப்படி இருக்க போகின்றது ஒரு குறித்த மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை பற்றி நாங்கள் எந்த பேச்சும் பேசவில்லை. மக்களை குழப்புகின்ற செயற்பாடு அப்படி இருக்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற என்னைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு அல்லது விபரீதமான ஒரு கருத்தினை வெளியிடுவதற்கு அவருக்கு அப்படியான உரிமை இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இயன்ற வரைக்கும் நாங்கள் ஒரு கட்டுக்கோப்பாக இருந்து தேர்தலை முகம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற போது சுமந்திரன் விபரீதமான கருத்துக்களை விமர்சன ரீதியான கருத்துக்களை இவ்வாறு கூறிக் கொண்டிருப்பது ஒரு மாவட்டத்தில் தீர்மானத்தை அல்லது ஒரு மாவட்டத்தின் தேர்தல் போக்குகளை தேர்தல் கணிப்புகளை மக்களின் தீர்ப்புகளை மாற்றி விடுகின்ற ஒரு செயற்பாடு போன்று நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. தேவையற்ற கருத்து உழறினால் நாங்களும் அதற்குரிய பதில்களை அளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்படுகின்றோம். குறிப்பாக எங்களிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்கின்றார்கள். எனவே மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு வேட்பாளரை, மட்டக்களப்பு மக்களை குழப்புகின்ற செயற்பாடுகளில் எவரும் செயற்படக்கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். புதிய ஆட்சியில் இணைந்து அமைச்சரவையை பெற்றுக்கொண்டு நடாத்துகின்ற ஒரு இணக்க அரசியல் என்று ஒன்று காணப்படுகின்றது. அரசாங்கம் நல்ல திட்டங்களை கொண்டு வந்தால் நல்ல செயற்பாடுகளை முன்னெடுத்தால் அதனை ஆதரித்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ளுகின்ற முயற்சி இருக்கும்.” என தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/itak-issue-candidate-sirinesan-slams-sumanthrian-1730449441
-
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி
👇🏿 https://www.facebook.com/share/v/2XJYVrfH1FutB15b/?mibextid=WC7FNe
-
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி Vhg நவம்பர் 01, 2024 தமிழ்தேசிய முகமூடியை அணிந்துக் கொண்டு சுமந்திரன் - சாணக்கியன் போன்றோர், தமிழ்தேசியத்திற்கு எதிராக இதுவரை காலமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என பி2பி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “தமிழரசுக்கட்சியை ஒதுக்குவதற்கான நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். கட்சியை கடந்து தமிழ் தேசியம் என்கின்ற ஒரே இலட்சியத்தை ஒருங்கிணைத்து இந்த நாடாளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும். தமிழரசுக்கட்சியில் சுமந்திரன் சாணக்கியன் போன்றோர் தாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் பதவி வேண்டும் என்பதற்காக தமக்கு சார்பானவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி கீழ்தரமான அரசியலில் ஈடுப்பட்டுள்ளார்கள்.” என்றார். https://www.battinatham.com/2024/11/blog-post.html
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
கெளரவ மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் சேரின் கடுமையான முயற்சியின் பின்னர் திறக்கப்பட்ட வீதியை மெச்சுவதை விடுத்துக் கொச்சைப்படுத்தலாமா? சுமந்திரன் சேர் அநுர ஆட்சியில் அமைச்சரானால் இன்னும் பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டுவார்!
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
அநுர அரசில் அமைச்சுப் பதவிகள் பெறுவதற்கான சந்தர்ப்பம்; சுமந்திரன் வெளியிட்ட தகவல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போது அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு வருகின்ற வரைக்கும் மத்திய அரசில் நாங்கள் பங்குபெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவின. ஆனால், அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறது. ஆகவே, அப்படியான ஒரு சூழ்நிலை வருகின்றபோது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அந்த நேரத்தில்தான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். எனினும் என்னுடைய சொந்த நிலைப்பாடு செல்லையா குமார சூரியரைப் போலவோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவைப் போலவோ தனி ஒரு அமைச்சராக அமைச்சரவையில் போய் சேருவதென்பது மக்களுக்கு நன்மை பயக்காது. ஆனால், முருகேசு திருச்செல்வம் போல் கட்சி சார்பாக – கட்சியினுடைய தீர்மானமாக மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால், அமைச்சராக இருந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனத் தெரிந்த உடனேயே கட்சியின் கட்டளைப்படி அரைவாசிக் காலத்திலேயே அமைச்சுப் பதவியை அவர் இராஜிநாமா செய்து வெளியே வந்தார். அது வித்தியாசமான ஒரு விடயம். எங்களுடைய மக்களையும் கட்சியையும் பிரபலப்படுத்தி இரண்டோ, மூன்று பேர் அமைச்சரவையில் சேர்ந்திருந்து செயற்பட்டு எங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதென்பதும் நாங்கள் கண்கொண்டும் பார்க்க மாட்டோம். அப்படியான தெரிவு எங்களுக்குக் கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது. என்றார். https://akkinikkunchu.com/?p=297496
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்… ’கேப்டன்’களை அகற்றிய அணிகள் : காரணம் என்ன? christopherOct 31, 2024 22:15PM ஐபிஎல் தொடரில் முக்கிய கேப்டன்களாக கருதப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விடுவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் இன்று (அக்டோபர் 31) தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. அதில் பல்வேறு ஆச்சரியங்கள் இருந்த போதிலும், 5 முக்கிய கேப்டன்களின் பொறுப்பு பறிக்கப்பட்டதுடன், அணியில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரை அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளது. அதேபோன்று கடந்த நான்கு ஆண்டுகளாக டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்டை நீண்ட ஆலோசனைக்கு பிறகு விடுவித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஷிகர் தவானும், பெங்களூரு அணியில் இருந்து ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், சென்னை அணியில் ருத்துராஜ் கெய்க்வாட், மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா, குஜராத் அணியில் சுப்மன் கில், ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஹைதராபாத் அணியில் பாட் கம்மின்ஸ் ஆகியோர் மீண்டும் கேப்டன்களாக பெரும் தொகைக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக ருத்துராஜ், சஞ்சு சாம்சன் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் விடுவிக்கப்பட்ட கேப்டன்களான கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை எடுக்க மற்ற அணிகள் இடையே ஐபிஎல் மெகா ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://minnambalam.com/sports/kl-rahul-rishabh-pant-shreyas-are-removed-from-their-teams-as-captains-what-is-the-reason/