Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. உள்ளொழுக்கு : விமர்சனம்! christopherJun 26, 2024 12:35PM இப்படியெல்லாம் எப்படிப் படமெடுக்க முடியுது?! மழை எப்படிப் பெய்தாலும் பிடிக்கும் என்று சொல்பவர்கள் மிகச்சிலரே. தூறல், சாரல், வெயில் மழை, அடைமழை, சூறைக்காற்று அல்லது இடி மின்னலுடன் கூடிய பேய் மழை, புயல் மழை என்று ஒவ்வொருவரின் மன இயல்புகளுக்குத் தகுந்தவாறு ஒரு சில வகை பொழிதல் மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். அப்படிப்பட்டவர்களும் கூடத் திரைப்படங்களைப் பார்க்கும்போது, அதில் வரும் திருப்பங்கள் இடி மின்னலைப் போலத் தாக்கம் தர வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவ்வாறில்லாமல் பூகம்பம் போன்ற பேரிடர் தன்மையிலான திருப்பங்களையும், மழை நீர் மௌனமாக வடிவதைப் போலச் சொல்வதென்பது ரொம்பவே அரிது. அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது ‘உள்ளொழுக்கு’. மனிதர்கள் என்னதான் சிரித்துக்கொண்டும், அழுதுகொண்டும், இன்னபிற உணர்வுகளையும் புறத்தில் கொட்டினாலும், அவர்களது உள்ளத்தின் அகத்தே வேறு ஏதோ ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். அகத்திற்கும் புறத்திற்குமான இடைவெளி, அவர்களது மனநிலையின் வேரையே அசைத்துப் பார்க்கக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட உண்மைகளை, அவற்றைச் சுமக்கும் மனிதர்களை, அவர்களிடையே விளையும் முரண்களைப் பேசுகிறது இப்படம். கிறிஸ்டோ டோமி எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் இப்படத்தில் ஊர்வசி, பார்வதி திருவோத்து, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், பிரசாந்த் முரளி, அலான்சியர் லோபஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இதற்கு இசையமைத்துள்ளார். ’உள்ளொழுக்கு’ திரைப்படம் நம்மை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறதா? சூழும் மழை வெள்ளம்! ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் அஞ்சு (பார்வதி திருவோத்து) ஹோட்டலொன்றில் ‘சர்வர்’ ஆக இருந்துவரும் ராஜீவை (அர்ஜுன் ராதாகிருஷ்ணன்) விரும்புகிறார். ஆனால், அவரது பெற்றோர் ஜார்ஜ் – ஜிஜி (அலான்சியர் லோபஸ், ஜெயா குரூப்) வேறொருவருக்கு அவரைத் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கின்றனர். அதனால், லீலாம்மா (ஊர்வசி) மகன் தாமஸ்குட்டியை (பிரசாந்த் முரளி) மணக்கிறார் அஞ்சு. அவர்களது மண வாழ்க்கை சில நாட்களிலேயே அசாதாரணமானதாக மாறுகிறது. சிறு வயதில் கணவரை இழந்தபிறகு, மகள் ஷீபாவும் மகன் தாமஸுமே தனது உலகம் என்றிருந்தவர் லீலா. ஷீபாவுக்குத் திருமணமாகிப் பேத்தி பிறந்தபிறகு, மகன் தாமஸின் அருகாமை மட்டுமே அவருக்குக் கிட்டுகிறது. அதனால், மருமகளைத் தனது மகள் போலவே கருதுகிறார் லீலா. சில நாட்கள் கழித்து தாமஸ்குட்டியின் உடல்நலம் பாதிக்கப்பட, அவர் படுத்த படுக்கையாகிறார். அவரை அருகில் இருந்து லீலாவும் அஞ்சுவும் கவனித்துக் கொள்கின்றனர். எந்நேரமும் தாமஸ் வாந்தியெடுப்பதைச் சுத்தம் செய்வது, அவருக்கு மருந்துகள் கொடுப்பது, இரவிலும் பகலிலும் கண்ணும்கருத்துமாகக் கவனித்துக் கொள்வது என்றிருக்கிறார் அஞ்சு. அது அவரை அசூயைக்கு உள்ளாக்குகிறது. ஒருநாள் மருத்துவமனைக்கு தாமஸ்குட்டி உடன் லீலாவும் அஞ்சுவும் செல்கின்றனர். அன்று ராஜீவைச் சந்திக்கிறார் அஞ்சு. அவர்களுக்கு மீண்டும் தொடர்பு ஏற்படுகிறது. அது எல்லை மீறுகிறது. அஞ்சு கர்ப்பமுறுகிறார். அஞ்சுவின் கர்ப்பத்திற்கு ராஜீவ் காரணம் என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். இந்த நிலையில், திடீரென்று தாமஸ்குட்டியின் உடல்நிலை மோசமடைகிறது. அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அப்போது, உடனடியாக ராஜீவைத் தான் இருக்குமிடத்திற்கு வரச் சொல்கிறார் அஞ்சு. ’குழந்தை குறித்த விஷயத்தைத் தன்னால் மூடி மறைக்க இயலவில்லை’ என்று அவரிடம் போனில் கதறுகிறார். ராஜீவ் சமாதானப்படுத்த, மெல்ல அந்த கொதிப்பில் இருந்து விடுபடுகிறார். பிறகு, ஒரு அறையில் லீலாவுடன் தூங்குகிறார். நள்ளிரவில் கண் விழிக்கும் அஞ்சு, கண்ணாடி முன் நின்று தன் வயிற்றைத் தடவிப் பார்க்கிறார். தற்செயலாக அதனைப் பார்க்கும் லீலா, தான் பாட்டி ஆகப் போவதாக மகிழ்ச்சி கொள்கிறார். பொழுது விடிந்ததும், அதனை தாமஸ்குட்டியிடம் சொல்ல வேண்டும் என்கிறார். அடுத்த நாள் காலையில், அஞ்சுவை அழைத்துக்கொண்டு தாமஸ் குட்டியைக் காணச் செல்கிறார் லீலா. கணவரிடம் எப்படி தான் கர்ப்பமுற்றிருப்பதைச் சொல்வது என்று அஞ்சு தயங்கிக் கொண்டிருக்க, அந்த நொடியில் தாமஸின் இதயத்துடிப்பு மங்கி உயிர் பிரிகிறது. லீலாம்மாவின் வீட்டில் தாமஸ்குட்டியின் இறுதிச்சடங்குகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த நேரத்தில், அப்பகுதியில் மழை பெய்யத் தொடங்குகிறது. அது சில நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிந்தபிறகு, தாமஸ்குட்டியின் ஆன்மாவைச் சாந்தப்படுத்தும் நோக்கில் பைபிள் வாசிப்பும் பிரார்த்தனையும் அங்கு நடத்தப்படுகின்றன. அந்த வீட்டின் மருமகளாக, தாமஸின் மனைவியாக, அச்சடங்குகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கிறார் அஞ்சு. ராஜீவை அழைத்து, ’என்னை உடனடியாக எங்காவது அழைத்துச் சென்றுவிடு’ என்கிறார். அவரோ, தன்னிடம் பணமோ, உரிய வேலையோ இல்லை என்று பதில் சொல்கிறார். இந்த நிலையில், அஞ்சுவின் மொபைல்போனில் ‘மரியா’ என்ற பெயரில் ஒரு அழைப்பு வருகிறது. அஞ்சு பாத்ரூமில் இருப்பதை அறியும் லீலா, அதனை ‘அட்டெண்ட்’ செய்கிறார். எதிர்முனையில் ராஜீவ் பேசுவதைக் கேட்டு அதிர்கிறார். அதன்பிறகு, தொடர்ந்து அஞ்சுவின் செயல்பாடுகளை உற்றுநோக்கத் தொடங்குகிறார். ஒருகட்டத்தில், தன் மருமகளின் வயிற்றில் வளர்வது மகனின் கருவல்ல என்பதை அறிகிறார். அதனை அஞ்சுவே லீலாவிடம் நேரடியாகத் தெரிவிக்கிறார். அவரால் அந்த உண்மையை எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை. அப்போதும், மழை வெள்ளம் வடிந்து தனது கணவர் கல்லறை இருக்குமிடத்திற்கு அருகிலேயே மகன் சடலம் புதைக்கப்பட வேண்டும் என்பதில் லீலா உறுதியாக இருக்கிறார். அஞ்சுவுக்கோ, அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் மரண வேதனையைத் தருவதாக இருக்கிறது. அந்தச் சூழலில், லீலா மற்றும் அஞ்சுவின் மனதுக்குள் புதைந்திருக்கும் உண்மைகள் ஒரு ‘பூகம்பம்’ போல அடுத்தடுத்து வெளிப்படுகின்றன. அதன்பிறகு என்னவானது? மரணச்சடங்குகளுக்கு வந்த குடும்பத்தினர் எவ்வாறு அந்த உண்மைகளை எதிர்கொண்டார்கள்? அவர்களது மனதின் ஆழத்தில் இதுவரை என்னென்ன உண்மைகள் மறைந்திருந்தன என்பதைச் சொல்கிறது ‘உள்ளொழுக்கு’வின் மீதி. இத்திரைக்கதையின் பெரும்பாலான காட்சிகளில் மழையும் வெள்ளமும் பாத்திரங்களாக இடம்பெற்றுள்ளன. அந்தப் பின்னணியே, வெம்மை பொங்கச் செய்யும் இக்கதையின் போக்கினை ஆற்றுப்படுத்துகின்றன; ஒருகட்டத்தில் இது போன்ற கதைகளில் பார்வையாளர்களான நாம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறோமோ, அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்குகின்றன. இயக்குனருக்கு ’சபாஷ்’! பெரும்பாலான ஷாட்கள் ‘குளோஸ் அப்’ மற்றும் ‘மிட் ஷாட்’களாக இருந்தபோதும், இதில் நடித்திருக்கும் எவரும் நம்மை அயர்வுக்கு உள்ளாக்கவில்லை. அதுவே, மிகக்குறைவான நடிப்புக் கலைஞர்கள் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் மிகப்பெரும் சிறப்பாக உள்ளது. ஊர்வசியைப் பொறுத்தவரை, தான் ஒரு நடிப்பு ராட்சசி என்பதை இதில் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார். சோகத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று வாழ்ந்துவரும் ஒரு பெண்மணி, மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் எதிர்நோக்கினால் எப்படியிருக்கும் என்பதைத் தனது பாவனைகளால் நமக்குக் காட்டுகிறார். அந்த நடிப்புக்காக, ஊர்வசியை விருதுகள் சூழாவிட்டால் தான் ஆச்சர்யம். பார்வதி திருவோத்து இப்படத்தில் குலுங்கி அழாமல், ஓவென்று அலறாமல், அதற்கு இணையான உணர்வை நமக்குள் உருவாக்குகிறார். ’பூ படத்துல நடிச்சவரா இவர்’ என்று எண்ணும் அளவுக்குப் பருமன் ஆனபோதும், படம் பார்க்கும்போது அது தோன்றாமல் இருக்குமளவுக்குத் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். மேற்சொன்ன இருவருமே பெரும்பாலான பிரேம்களை ஆக்கிரமித்துக் கொள்வதால் ஆங்காங்கே மற்றவர்கள் தலைகாட்டுகின்றனர். உடல்நிலை ஒத்துழைக்காதபோதும் மனைவியின் அழகை அள்ளிப் பருக முடியாமல் தவிக்கும் காட்சியில், ஒரு நோயாளியாக மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறார் தாமஸ்குட்டியாக வரும் பிரசாந்த் முரளி. கிளைமேக்ஸ் காட்சியில் தனது கோபம் மகிழ்ச்சியாக மாறுவதை மிகச்சில நொடிகளில் நமக்குக் காட்டுகிறார் அலாய்சியர் லோபஸ். ’அந்த உண்மை தெரிஞ்சும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாதாங்கற எண்ணத்துல, அதை உன்கிட்ட சொல்லாம மறைச்சுட்டேன்’ என்று சொல்லும் இடத்தில், ஒரு ஏழைத்தாயைத் திரையில் வெளிப்படுத்துகிறார் ஜெயா குரூப். வீணா நாயர், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் போன்றவர்களும், பின்னணியில் நடமாடியவர்களும் சொல்லத்தக்க வகையில் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கின்றனர். ’டெக்னோ மியூசிக்’ மட்டுமல்லாமல், மனிதர்களின் அடிப்படை உணர்வுகளை மீறி மனதுக்குள் புதைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் வகையிலான இசையையும் தன்னால் தர முடியும் என்று காட்டியிருக்கிறார் சுஷின் ஷ்யாம். அவரது பின்னணி இசை, வழக்கத்திற்கு மாறான காட்சிப்போக்கினை உயர்த்திப் பிடிக்கிறது. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால் ஒரு அறைக்குள் எத்தகைய ஒளி இருக்குமோ, அப்படியொரு ‘லைட்டிங்’கை படம் முழுக்கக் கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெனாத் ஜலால். டிஐ மற்றும் காட்சிகளின் தன்மையை மனதில் கொண்டு ஒவ்வொரு பிரேமையும் வடிவமைத்துள்ளது அவரது ஒளிப்பதிவு. கிரண் தாஸின் படத்தொகுப்பு, ஒரு நீரோட்டம் போலக் கதை நீள உதவியிருக்கிறது. முகம்மது பாவாவின் கலை வடிவமைப்பு, நாமே வெள்ளம் சூழ்ந்த இடத்தில் இருக்கும் உணர்வை உருவாக்குகிறது. ஜெயதேவன் சக்கடத்தின் ஒலி அமைப்பு மற்றும் அனில் ராதாகிருஷ்ணனின் ஒலி வடிவமைப்பு, இப்படத்தின் உள்ளடக்கத்தினை இன்னும் செறிவானதாக மாற்றுகிறது. இயக்குனர் கிறிஸ்டோ டோமி, இந்தப் படத்தின் வழியே மனிதர்களின் இயல்பையே மாற்றும் வேலையொன்றைச் செய்திருக்கிறார். ஒரு கதையில் வழக்கத்திற்கு மாறான விஷயங்கள் நிகழும்போது, அதன் முடிவு குறிப்பிட்ட வகையிலேயே இருக்கும். ஆனால், ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ஒளிந்திருக்கும் சில ரகசியங்கள் எரிமலைக் குழம்பாய் வெளிப்படுகையில் வேறோரு திசையில் அவர்கள் மனம் சிந்திக்கும் என்பதனை இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதனை நாம் ஏற்றுக்கொள்ளும்படியாகத் திரையில் சொல்லியிருக்கிறார் என்பதே ‘உள்ளொழுக்கு’ படத்தின் யுஎஸ்பி. அந்த வகையில் இயக்குனர் கிறிஸ்டோ டோமிக்கு மிகப்பெரிய ‘சபாஷ்’ சொல்லியே தீர வேண்டும். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..?! ’உள்ளொழுக்கு’ கதையில் சில திருப்பங்கள் உள்ளன. அவற்றை மிகுந்த ‘பில்டப்’ உடன் காட்சிப்படுத்தியிருக்கலாம்; குறைந்தபட்சமாகப் பின்னணி இசை வாயிலாக, அதனைச் சன்னமாக நிகழ்த்தியிருக்கலாம். மாறாக, வெறுமனே அடைமழை மற்றும் வெள்ள நீர் பாயும் சத்தம் பின்னணியில் ஒலிக்க, நடிப்புக்கலைஞர்களின் முகபாவனைகள் வழியாகவே பார்வையாளர்கள் அவற்றை உணர வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் கிறிஸ்டோ டோமி. ‘எப்படியெல்லாம் ஒரு கதைய எப்படி யோசிக்கிறாங்க’ என்ற வகையில் சில கதைகள் உண்டு. காரணம், அவை நம்மைச் சுற்றி நிகழ்ந்தாலும், அவற்றைப் பற்றி விவாதிப்பதில் பெரும் தயக்கம் இருக்கும். அதனைத் திரையில் சொல்வது இயலாத காரியம் என்று கூட நினைத்திருப்போம். அப்படிப்பட்ட கதைகளைச் சிறப்பான திரைக்கதையாக்கம் வழியாக, மாபெரும் நடிப்புத்திறன் கொண்டவர்களின் மூலமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்த முடியும் என்று உணர்த்தியிருக்கிறது ‘உள்ளொழுக்கு’. சாதாரணமாக ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றாலே, பல கதைகளை அள்ளி எடுத்து வருவதே நம்மில் பலரது வழக்கம். அவை அங்கு கண்ட முகங்களின் பின்னால் இருக்கும் பல உண்மைகளைச் சொல்லும். அவற்றைப் பிரித்துணரும் சாதுர்யமும் நமக்கு நிறையவே உண்டு. அதனால் இத்திரைப்படம் நமது மனதுக்கு நெருக்கமானதாகவே இருக்கும். கமர்ஷியல் பொழுதுபோக்கு படங்களுக்கான அம்சங்களை அறவே தவிர்த்து, அதற்கு எதிர்த்திசையில் பயணிக்கும் இதன் திரைமொழி கொஞ்சம் ஒவ்வாமையை தரலாம். அதனைச் சகித்து ‘உள்ளொழுக்கு’ படத்தை முழுமையாக ரசித்தால் பெருமழையில் திளைத்த உணர்வு கிடைப்பது நிச்சயம்! https://minnambalam.com/cinema/parvathy-thiruvothus-ullozhuku-movie-review/
  2. கல்கி 2898 AD : விமர்சனம்! christopherJun 28, 2024 08:42AM அறிவியல் புனைவோடு கலந்த மகாபாரதக் கதை! ’பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகம் தந்த ‘பான் இந்தியா’ அந்தஸ்தினால், தனது அடுத்தடுத்த படங்களை எப்படித் தருவது என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொண்டார் பிரபாஸ். ’பான் இந்தியா’ படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் தான். சாஹோ, சலார், ஆதி புருஷ் போன்ற படங்கள் வந்து போன தடம் தெரியாமல் ஆனதுக்குக் காரணமாகவும் அதுவே இருந்தது. இந்தச் சூழலில் ‘பான் வேர்ல்டு’ படமாக இருக்க வேண்டுமென்ற வேட்கையுடன் வெளியாகியிருக்கிறது, அவர் நடித்துள்ள ’கல்கி 2898 ஏடி’. நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, சாஸ்வதா சாட்டர்ஜி, ஷோபனா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பான் வேர்ல்டு படமாக அமைந்திருப்பது சரி, பார்க்கும்படியாக இருக்கிறதா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பல கதைகள்! ’கல்கி 2898 ஏடி’ திரைக்கதை மகாபாரதத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வில் இருந்து தொடங்குகிறது. அர்ஜுனன் மகனையும் அவரது மருமகள் வயிற்றில் வளரும் கருவையும் அழித்த அஸ்வத்தாமனுக்கு (அமிதாப் பச்சன்), ‘கலியுகத்தில் மரணிக்காமல் வாழ்வதே தண்டனை’ என்கிறார் கிருஷ்ணர். ’ஆறாயிரம் ஆண்டுகள் கழித்து நான் ஒரு தாயின் வயிற்றில் கருவாக உருவாகும்போது, என்னை நீயே பாதுகாப்பாய்’ என்றும் சொல்கிறார். பிறகு, கதை கி.பி.2898க்கு தாவுகிறது. வறண்ட பாலையாக மாறியிருக்கிறது பூமி. லேசர் நுட்பம் பெருகினாலும், காட்டுமிராண்டிகளை விடக் கேவலமாக வாழ்கின்றனர் மக்கள். குடிக்கத் தண்ணீர் இல்லை. பூமியில் மீதமுள்ள ஒரே நகரமாக காசி இருக்கிறது. அதை நோக்கி ஒரு வாகனம் பயணிக்கிறது. காசியில் அதனை நிறுத்திச் சோதனையிடுகின்றனர் சிலர். அவர்கள், அங்கு அந்தரத்தில் தொங்கும் ‘காம்ப்ளக்ஸ்’ எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள். அந்த வாகனத்தில் இருக்கும் பெண்களைத் தனியே சோதனை செய்து, அவர்களில் சிலரைத் தங்களது ஆய்வகத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். அதற்குக் காரணம், அவர்களது தலைவரான ‘சுப்ரீம் யஷ்கின்’ (கமல்ஹாசன்). 200 வயதான சுப்ரீம் யஷ்கின் தனது இளமையையும், உலகையே வெல்லும் ஆற்றலையும் பெற, 150 நாட்களைத் தாண்டிய கர்ப்பிணிகளின் கருவில் இருந்து எடுக்கப்படும் ஒரு திரவத்தைத் தனது உடலில் செலுத்த விரும்புகிறார். அதற்காகப் பல பெண்களைக் கடத்தி, செயற்கை முறையில் கருவூட்டி, ஆய்வகத்தில் அவர்களது கருவை வளர்த்தாலும், எவரது வயிற்றிலும் 90 நாட்களைக் கடந்து எந்தவொரு கருவும் வளர்வதில்லை. இந்தச் சூழலில், எஸ்யுஎம் 80 (தீபிகா படுகோனே) எனும் பெண் 5 மாதங்களுக்கும் மேலாகத் தனது கர்ப்பத்தை வெளியே தெரியாமல் மறைத்து, அந்த ஆய்வகத்தில் பணியாற்றுகிறார். ஒருநாள் அவர் கர்ப்பமாக இருப்பது அங்கிருப்பவர்களுக்குத் தெரிய வர, உடனடியாக அவரது கர்ப்பத்தில் இருந்து திரவத்தை உறிஞ்ச ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்போது சில குளறுபடிகள் ஏற்பட, அந்தப் பெண் அங்கிருந்து தப்பிக்கிறார். அதற்கு, அங்கு வேலை செய்யும் இன்னொரு பெண் உதவுகிறார். தான் புரட்சிப்படையைச் சேர்ந்தவர் என்றும், சுரங்கப்பாதை வழியாகத் தப்பித்துச் சென்றால் வெளியே தனது சகாக்கள் காத்திருப்பார்கள் என்றும் அப்பெண்ணிடம் கூறுகிறார். அவர் சொன்னது போலவே, காம்ப்ளக்ஸின் வெளியே ஒரு வாகனத்தில் வீரன் (பசுபதி) உள்ளிட்ட சிலர் காத்திருக்கின்றனர். தங்களது இடமான சம்பாலாவுக்கு அந்தப் பெண்ணை அவர்கள் அழைத்துச் செல்கின்றனர். அதற்குள், அந்தப் பெண் தப்பித்துவிட்ட விவரம் காம்ப்ளக்ஸை நிர்வகித்துவரும் மனஸுக்கு (சாஸ்வதா சாட்டர்ஜி) தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது படைகளை அனுப்பி, அந்தப் பெண்ணை இழுத்து வருமாறு கட்டளையிடுகிறார். ஆனால், வீரனின் ஆட்கள் அவர்களை அழித்தொழிக்கின்றனர். இந்த நிலையில், பைரவா (பிரபாஸ்) எனும் நபர் அந்தப் பெண்ணைக் கடத்தி மீண்டும் காம்ப்ளெக்ஸில் சேர்க்கத் திட்டமிடுகிறார். யார் அவர்? எதற்காக, அவர் அந்தப் பெண்ணைக் கடத்த முற்படுகிறார்? சம்பாலாவில் இருப்பவர்கள் அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார்களா? இந்தக் கதையில் அஸ்வத்தாமன் எங்கு வருகிறார்? இது போன்ற பல கேள்விகளுக்கு நீட்டி முழக்கிப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி. உண்மையைச் சொன்னால், பல கிளைக்கதைகளை ரொம்பப் பொறுமையாகச் சொல்லி, பின்னர் அவற்றை ஒன்றிணைக்கும் வேலையைச் செய்திருக்கிறது இயக்குனர் நாக் அஸ்வின் அமைத்துள்ள திரைக்கதை. அந்த ‘கிளாசிக் அப்ரோச்’, அதற்காக நிறைய நேரத்தையும் விழுங்கியிருக்கிறது. அதனைக் கடந்தால் மட்டுமே திரைக்கதையோடு நம்மால் ஒட்ட முடியும். ’கல்கி 2898 ஏடி’ படத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலே அதுதான். அயர்வூட்டும் திரைக்கதை! நாக் அஸ்வின் இப்படத்திற்குத் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். மகாபாரதத்தின் சிறு கிளையொன்றில் தொடங்கி இறுதியாக அதனை மையப்படுத்தும் கிளைமேக்ஸை கொண்டிருக்கிறது இப்படம். அதற்காக, இதனை முழுமையான புராணப் படமாகக் கருத முடியாது. தரைக்கு மேலே பறக்கும் வாகனங்களையும், லேசர் கற்றையைப் பாய்ச்சும் ஆயுதங்களையும் காட்டுவதால், இதனை எதிர்காலத்தில் நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்ட அறிவியல் புனைவாகவும் கருத முடியாது. அவ்விரண்டுக்கும் இடையே நடுவாந்தரமாக ஒரு புள்ளியில், இரண்டு கழைகளுக்கு நடுவே கட்டப்பட்ட கயிற்றில் சின்னக்குழந்தைகள் நடந்து செல்வது போன்று ‘சாகசங்களை’க் கொட்டியிருக்கிறது ’கல்கி 2898 ஏடி’. அந்தக் கற்பனையைச் சொல்வதற்கான பாத்திர வார்ப்பு, அவற்றின் தோற்றம், ஆடை அணிகலன்கள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள், அவர்கள் வாழும் சூழல், இடங்கள் என்று ஒரு உலகத்தையே இதில் படைத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். அதற்காக, இதே பாணியில் அமைந்த ‘ஸ்டார் வார்ஸ்’, ‘மேட் மேக்ஸ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களின் சாயலையும் இதில் புகுத்தியிருக்கிறார். இயக்குனரின் கற்பனை உலகத்திற்குள் நாம் புகுவது சிரமமாக இருக்கிறது. உண்மையைச் சொன்னால், அயர்ச்சியில் பல இடங்களில் தூக்கம் கண்களைத் தழுவ முற்படுகிறது. அதனைப் படக்குழு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதிக விஎஃப்எக்ஸ் நிறைந்த ‘சாகச’ திரைப்படங்களைப் பார்ப்பவர்களும், வீடியோ கேம் பிரியர்களும் கூட இப்படத்தோடு ஒன்ற நிறையவே சிரமப்படுவார்கள். அத்தடைகளை மீறிப் படத்தோடு ஒன்றிவிட்டால் அவர்கள் ரசித்துக் காணப் பல அம்சங்கள் இதிலுண்டு. மேற்சொன்ன விஷயங்களே, இப்படத்தில் லாஜிக் சார்ந்த கேள்விகளுக்கு இடமில்லை என்பதைப் புரிய வைத்துவிடும். போலவே, ‘விஎஃப்எக்ஸ்’ நுட்பம் நிறைந்திருக்கும் படங்களை வெறுப்பவர்களால் இப்படத்தில் ஒரு ‘பிரேம்’ கூட பார்க்க முடியாது. அவர்களது ‘கப் ஆஃப் டீ’யாக இது நிச்சயம் இருக்காது. முழுக்க ‘க்ரீன்மேட்’ கொண்டு எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதால் விஎஃப்எக்ஸ், டிஐ நுட்பங்களுக்கான தேவை இதில் அதிகம். என்றபோதும், இப்படத்தில் போதுமான அளவுக்குக் கதை நிகழும் களங்களும் கதாபாத்திரங்களின் உணர்வுகளும் காட்டப்படுவதற்கேற்ப ஒளிப்பதிவாளர் டியோகே ஸ்டோயில்கோவிக், கேமிரா நகர்வுகளையும் ஒளி அமைப்பையும் வடிவமைத்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளர் நிதின் ஜிகானி சவுத்ரி இதுவரை வழக்கமாக நாம் படங்களில் பார்த்திராத சூழலைக் காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அவரது கற்பனைக்கு மேற்கத்திய படங்களே ‘ரெஃபரன்ஸ்’ என்பது தெளிவாகத் தெரிகிறது. படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் பல இடங்களில் கத்திரி போட்டபிறகும் கூட, இப்படம் சுமார் 3 மணி நேரம் வரை ஓடுகிறது. ரசிகர்கள் கதையோடு ஒன்றுவதில் சிரமங்களை எதிர்கொள்ளக் கூடும் என்று ரொம்ப இறுக்கமாக ‘கட்’ செய்யாமல் தனது ‘கத்திரி’க்கு ‘ரெஸ்ட்’ கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இதில் பாடல்களுக்கு அதிக நேரத்தைச் செலவிடவில்லை. அதே நேரத்தில், இரண்டாம் பாதியில் வரும் கடைசி ஒரு மணி நேரத்தைத் தனது பின்னணி இசையால் சட்டென்று ரசிகர்கள் கடக்க உதவியிருக்கிறார். இதுவரை அவர் தந்த படங்களில் இருந்து அவ்விசை ரொம்பவே விலகி நிற்பதும் சிறப்பு. படம் ஓடத் தொடங்கி சுமார் 25 நிமிடங்கள் கழித்தே பிரபாஸ் திரையில் ‘எண்ட்ரி’ ஆகிறார். ஹீரோயிசம் அதிகமிருக்கும் படங்களில் அது ஒரு ‘பார்முலா’வாக பயன்படுத்தப்படும். ஆனால், இந்த படத்தில் அவரது அறிமுகத்திற்குப் பிறகு தீபிகா படுகோனேவுக்குத் திரையில் முக்கியத்துவம் தரப்படுகிறது. பிறகு, இரண்டாம் பாதியில் தான் அவர் முழுமையாக வருகிறார். அதற்குப் பதிலாக, அவரது அறிமுகத்தையே இடைவேளைப் பகுதியில் அமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்தப் படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார். பெரும்பாலும் அக்காட்சிகள் ‘க்ரீன்மேட்’டில் எடுக்கப்பட்டு விஎஃப்எக்ஸ் நிபுணர் குழுவால் செதுக்கப்பட்டதாக இருக்கின்றன. அதனால், கரகரத்த குரலில் வெளிப்படும் அவரது பேச்சை மட்டுமே கேட்டு ரசிக்க வேண்டியதாக இருக்கிறது. மிருணாள் தாகூர், ராஜேந்திர பிரசாத், ஷோபனா, சாஸ்வதா சாட்டர்ஜி, பசுபதி, அன்னா பென், மாளவிகா, காவ்யா ராமச்சந்திரன் என்று பலரும் இதில் நான்கைந்து நிமிடங்களுக்கு மேல் வந்து போயிருப்பதால், ‘இந்த படத்துல நானும் இருக்கிறேன்ங்க’ எனும் விதமாகத் தலைகாட்டியிருக்கும் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், ஸ்ரீனிவாஸ் அவசரலா மற்றும் தெலுங்கு இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, ராம்கோபால் வர்மா, கே.வி.அனுதீப் இருப்பையே நாம் ‘கேமியோ’வாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பிரபாஸின் வீட்டு உரிமையாளராக வரும் பிரமானந்தம், தெலுங்கு ரசிகர்கள் தியேட்டரில் கூக்குரலிடுவதற்காகப் படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ’ஏஐ பாட்’ ஆக ஒலிக்கும் கீர்த்தி சுரேஷின் குரலும் அவ்வாறே இதில் இடம்பெற்றிருக்கிறது. சரி, இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளும் அளவுக்கு இதில் எவரும் ‘ஸ்கோர்’ செய்யவில்லையா என்ற கேள்வி எழலாம். அதற்குப் பதிலாக அமைந்திருக்கிறது அமிதாப் பச்சனின் நடிப்பு. ஆறாயிரம் ஆண்டுகளாக உயிர் வாழும் அஸ்வத்தாமனாக வந்து ஒரு பெருங்கற்பனைக்குத் தீனி போட்டிருக்கிறார். அவரது இருப்பே இப்படத்தின் யுஎஸ்பி. இந்தப் படத்தின் உள்ளடக்கத்தில் இருந்து சிலர் ‘டீகோடிங்’ முறையில் பல தகவல்களைக் கண்டறியலாம். இக்கதை பேசும் ’இந்துத்துவ’ அரசியலைக் கேள்வி எழுப்பலாம். ஆனால், அவையெல்லாமே இப்படத்தை ரசிகர்கள் காணத் துணை நிற்காது என்பதே நிஜம். அதேநேரத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கொண்டாடுவதற்கான வாய்ப்பையும் இப்படம் தன்னகத்தே கொண்டிருப்பதை நம்மால் மறுக்க முடியாது. பார்க்கலாமா? கொண்டாடலாமா? ’கல்கி 2898 ஏடி’யில் இயக்குனர் உள்ளிட்ட எண்ணற்ற கலைஞர்களின் உழைப்பு குவிந்து கிடக்கிறது. இயக்குனர் எண்ணிய திசையில், அது சீராகப் பாய்ந்து கதை சொல்லவும் உதவியிருக்கிறது. ஒரு புராணப்படமாகவும் இல்லாமல், அறிவியல் புனைவாகவும் அமையாமல், சூப்பர்ஹீரோ சாகசமாகவும் தென்பட முடியாமல் தவிக்கிறது இதன் திரைக்கதை. ஆனால், அவற்றின் கலவையாகத் திகழ்வதே ’கல்கி 2898 ஏடி’யின் அடையாளம் என்று உறுதியாக நம்பியிருக்கிறார் நாக் அஸ்வின். அது உங்களுக்கு உவப்பானதாக இருந்தால் இப்படம் பிடிக்கக்கூடும்; கொண்டாடக்கூடும். கே.சங்கர், ராம.நாராயணன் போன்ற இயக்குனர்கள் பக்திப்படங்களின் வழியே வசூலை அள்ளிய காலகட்டத்தில் அவற்றின் ஒரு பிரேமில் கூடத் தலைகாட்ட விரும்பாத கமல்ஹாசன், இந்த வயதில் ’கல்கி 2898 ஏடி’யில் நடித்திருப்பது சினிமா விரும்பிகள் மனங்களில் சில கேள்விகளை எழுப்பக்கூடும். அப்படியொன்று நிகழவில்லை என்றால், இப்படம் வசீகரித்திருக்கிறது என்று அர்த்தம்! https://minnambalam.com/cinema/prabhas-kamal-amithab-kalki-2898-ad-movie-review/
  3. வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் - இறுதிப் போட்டிக்கு தென்னிந்திய பாடகர்களும் வருகை PrashahiniJune 28, 2024 வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியொன்று நடாத்தப்படவுள்ள நிலையில் அதன் இறுதிப் போட்டி 2024 செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. C J Pramoters & Dhedjassam Event Solutions அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார நிலையத்தில் நடத்தப்படும் இந்த இறுதிப் போட்டியில், வடமாகாணத்தில் மாபெரும் ஜுனியர் சுப்பர் சிங்கர் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி. கே. பட்டம்மாளின் பேத்தியான நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ் திரைப்பட பாடகரும் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவருமான திவாகர், சுப்பர் சிங்கர் புகழ் தென்னிந்திய பின்னணிப் பாடகர் சத்தியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலாம் பரிசாக பத்து லட்சம் ரூபாவும் இரண்டாம் பரிசாக மூன்று லட்சம் ரூபாவும் மூன்று பரிசாக ஒரு லட்சம் ரூபாவும் வழங்கப்படும். இந்தப் போட்டியின் முதலாவது குரல் தேர்வு யாழ்ப்பாணம், பிரதான வீதியிலுள்ள திருமுறைக்கலாமன்றத்தில் எதிர்வரும் 2024 ஜுலை 06ஆம், 07ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தப் போட்டியின் இரண்டாவது குரல் தேர்வு யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் உள்ள வடஇலங்கை சங்கீத சபை மண்டபத்திலும் சாவகச்சேரி நகராட்சி மண்டபத்திலும் எதிர்வரும் 2024 ஜுலை 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தப் போட்டியின் மூன்றாவது குரல் தேர்வு மன்னார், நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 2024 ஜுலை 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தப் போட்டியின் அடுத்த குரல் தேர்வு பருத்தித்துறை, வல்லை, யாழ் பீச் ஹோட்டலில் எதிர்வரும் 2024 ஜுலை 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தப் போட்டியின் குரல் தேர்வொன்று கிளிநொச்சி, பரந்தன் ஆர்ஜே மஹாலில் எதிர்வரும் 2024 ஓகஸ்ட் 03 ஆம், 04ஆம் திகதிகளில் நடைபெறும். https://www.thinakaran.lk/2024/06/28/breaking-news/69114/வடமாகாணத்தில்-மாவட்ட-ரீத/
  4. வடக்கை வலுப்படுத்துவதே ஜனாதிபதியின் இலக்கு : ஆளுநர் தெரிவிப்பு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய ஆளுநர், ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார். தொழில் அற்றோர் பிரச்சினைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்வு திட்டங்கள் தொடர்பிலும், வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார். ஏனைய மாகாணங்களை போல வடக்கையும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாகாணமாக மாற்றுவதே ஜனாதிபதியின் ஆசை எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். இந்த திட்டத்திற்கு தேவையான அடிப்படை கட்டுமானங்களையும், வசதிகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். பொருளாதார வலயங்களை ஸ்தாபிப்பதோடு, பலாலி விமான நிலைய சேவைகளையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார். இவ்வாறன திட்டங்கள் ஊடாக மாகாணத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார். (க) https://newuthayan.com/article/வடக்கை_வலுப்படுத்துவதே_ஜனாதிபதியின்_இலக்கு_:_ஆளுநர்_தெரிவிப்பு
  5. இரண்டாவது அரையிறுதிப் போட்டி மழையால் குறித்த நேரத்திற்கு நடக்காமலும், இடையே தடங்கலுக்கு உள்ளாகியிருந்தும் இருந்தது. எனினும் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் 57 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 103 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதால், ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 13 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 121 2 ஈழப்பிரியன் 114 3 ரசோதரன் 113 4 கந்தப்பு 113 5 சுவி 111 6 குமாரசாமி 109 7 கோஷான் சே 108 8 நீர்வேலியான் 105 9 தமிழ் சிறி 102 10 கிருபன் 102 11 வீரப் பையன்26 100 12 எப்போதும் தமிழன் 100 13 நந்தன் 99 14 வாத்தியார் 98 15 வாதவூரான் 97 16 நிலாமதி 96 17 அஹஸ்தியன் 96 18 தியா 94 19 ஏராளன் 94 20 P.S.பிரபா 93 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! @குமாரசாமி ஐயா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்!
  6. ICC மட்டுமா விதிகளை வைக்கின்றார்கள்? நாமளும் வைத்திருக்கின்றோம் அல்லவா!
  7. முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் துடுப்பாட்டக் களத்தில் நிற்கமுடியாத அளவிற்கு தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சு அகோரமாக இருந்தது. ஒரே ஒருவர் பத்து ஓட்டங்களை எடுத்தார். மூன்றுபேர் ஓட்டம் எடுக்காமாலேயே ஆட்டமிழந்தனர். மிகுதிப்பேர் பத்துக்கும் குறைவான ஓட்டங்களையே எடுத்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி உதிரியான 13 ஓட்டங்களுடன் 11.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 8.5 ஓவர்களில் குயின்ரன் டிகொக்கின் விக்கெட்டை மாத்திரம் இழந்து 60 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த @Ahasthiyan க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. முதலாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 118 2 ஈழப்பிரியன் 114 3 ரசோதரன் 110 4 கந்தப்பு 110 5 சுவி 108 6 கோஷான் சே 108 7 குமாரசாமி 106 8 நீர்வேலியான் 102 9 எப்போதும் தமிழன் 100 10 தமிழ் சிறி 99 11 கிருபன் 99 12 நந்தன் 99 13 வீரப் பையன்26 97 14 வாதவூரான் 97 15 அஹஸ்தியன் 96 16 வாத்தியார் 95 17 நிலாமதி 93 18 P.S.பிரபா 93 19 தியா 91 20 ஏராளன் 91 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78
  8. முன்விளையாட்டுக்குப் போயிட்டினமாக்கும்😻
  9. கிளிநொச்சியில் பரபரப்பு; கடத்தப்பட்டு 24 நாட்களுக்கு பின்னர் பொலிஸாரிடம் சரண் கிளிநொச்சியில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலையில் 24 நாட்களின் பின் பொலிசாரிடம் சரணடைந்த நபரால் கிளிநொச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிங்கராஜன் ஜெயக்குமார் என்பவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை, காணாமல் போனதாக தேடப்பட்ட குறித்த நபர் வெட்டுக்காயங்களுடன் அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்ததுடன், வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். சரணடைந்த நபரை அவர் தப்பி வந்த வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிசார் சாட்சியங்களை பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காயங்களுடன் சரணடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://akkinikkunchu.com/?p=281488
  10. பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் பின்லாந்தில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உயிரிழந்த பெண் உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை குடும்பத்தின் வீட்டுக்குச் சென்ற அயலவர் வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதை முதலில் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலதிக விசாரணை பின்னர் அவர், குறித்த பெண் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதாகவும், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://tamilwin.com/article/sri-lankan-woman-killed-in-finland-1719458733
  11. ஆப்கானிஸ்தான் வீரர்கள் அரையிறுதிக்குப் போனதுக்கான கொண்டாட்டத்தில் போட்டியை மறந்திட்டனம் போலிருக்கு! இப்படி மோசமாக துடுப்பாட்டத்தில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!
  12. முழுமையாகப் பார்க்கவேண்டிய காணொளி அண்ணா மீதான பட்சம் ஒரு துளியும் குறையாமல் இருப்பவர்களையும் காணலாம்
  13. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (27 ஜூன்) இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் அணிகள் குழம்பியதாலும் இந்தியா இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடும் எனத் தீர்மானிக்கப்பட்டதாலும் புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியை ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் சரியாகக் கணித்திருந்தால் மூன்று புள்ளிகள் வழங்கப்படும். போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG எதிர் SA போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 ENG சுவி IND நிலாமதி ENG குமாரசாமி NZ தியா WI தமிழ் சிறி ENG புலவர் PAK P.S.பிரபா ENG நுணாவிலான் PAK பிரபா USA IND வாதவூரான் AUS ஏராளன் IND கிருபன் AUS ரசோதரன் WI அஹஸ்தியன் SA கந்தப்பு AUS வாத்தியார் IND எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி NZ கோஷான் சே WI 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, இந்தியா எதிர் இங்கிலாந்து IND எதிர் ENG போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ENG வீரப் பையன்26 IND சுவி AUS நிலாமதி IND குமாரசாமி IND தியா IND தமிழ் சிறி IND புலவர் AUS P.S.பிரபா AUS நுணாவிலான் NZ பிரபா USA AUS வாதவூரான் SL ஏராளன் AUS கிருபன் IND ரசோதரன் IND அஹஸ்தியன் ENG கந்தப்பு IND வாத்தியார் WI எப்போதும் தமிழன் ENG நந்தன் AUS நீர்வேலியான் AUS கல்யாணி PAK கோஷான் சே ENG இரண்டு போட்டிகளிலும் ஏதாவது ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் என ஒருவரும் கணிக்கவில்லை! தென்னாபிரிக்கா முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றால் @Ahasthiyan க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கும். இந்தியா இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றால், இரண்டு போட்டிகளிலும் ஏதாவது ஒன்றில் இந்தியா வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றால், இரண்டு போட்டிகளிலும் ஏதாவது ஒன்றில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 08 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கும். அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெறாத மேற்கிந்தியத் தீவுகள், சிறிலங்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. நாளைய அரையிறுதிப் போட்டிகளில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  14. காணி உறுதி வழங்குவதில் பாகுபாட்டைத் தவிருங்கள்; சிறீதரன் எம்.பி. கோரிக்கை! கிளிநொச்சி மாவட்டத்தில் காலங்காலமாக வசித்து வரும் மக்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதிலுள்ள இடர்பாடுகளை தவிர்த்து பாகுபாடற்ற முறையில் அனைத்து மக்களுக்கும் காணி உறுதிகளை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டம் தொடர்பில் கடந்த 21ஆம் திகதிய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- கிளிநொச்சியின் முதலாவது குடியேற்றக் கிராமமாக 1930இல் கணேசபுரம் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. வட்டக்கச்சி படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம், உருத்திரபுரம் படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம், இராமநாதபுரம், அக்கராயன், வன்னேரிக்குளம் மற்றும் பூநகரி. முழங்காவில் உள்ளிட்ட குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கம் பெற்றிருந்தன. பரம்பரை பரம்பரையாகவும் ஆட்சியுரிமை ரீதியாகவும் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்துவரும் காணிகளுக்கான உரித்தை உறுதிசெய்யக்கூடிய காணி உறுதிகள் இதுவரை வழங்கப்படவில்லை. குறிப்பாக, கிளிநொச்சியின் நகரசபை எல்லையாக குறித்துரைக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள உதயநகர், கணேசபுரம், கிளிநொச்சி நகரம், இரத்தினபுரம், திருவையாறு கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கும் இதுவரை காணி உறுதிகள் வழங்கப்படவில்லை. தற்போது உறுதிகளை வழங்குவதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் அமைச்சு மற்றும் திணைக்கள மட்டங்களால் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்போது அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சாதாரண நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதிகளை வழங்கமுடியாதெனவும், அவர்கள் தமது சொந்தக் காணிகளை பெருந்தொகைப் பணம் செலுத்தி நீண்டகாலக் குத்தகை அடிப்படையிலேயே பெறமுடியும் எனவும் நிர்ப்பந்திக்கப்படுகிறது. இந்த நடைமுறை, அவர்களின் அடிப்படை இருப்பையே நசுக்கக் கூடிய செயற்பாடாகும். எனவே, கிளிநொச்சி மாவட்ட மக்கள் காணி உறுதிகளை பெறுவதில் உத்தியோகத்தர்கள், சாதாரண பொதுமக்கள் என்ற பாகுபாடுகளற்று அனைத்து மக்களுக்கும் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- என்றார். (ச) https://newuthayan.com/article/காணி_உறுதி_வழங்குவதில்_பாகுபாட்டைத்_தவிருங்கள்_சிறீதரன்_எம்.பி._கோரிக்கை
  15. மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உடல் சிதறி பலி! மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் வருகை தந்த லொறி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியதில் வீதியில் நின்ற நபர்கள் மூவர் லொறியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி பலியாகியுள்ளனர் லொறியின் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த இன்னொருவர் என இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . http://www.samakalam.com/மாங்குளத்தில்-கோர-விபத்த/
  16. கிரகங்கள் எல்லாம் ஒரு நேர்கோட்டில் வந்தால் அரையிறுதிப்போட்டியிலும், இறுதிப்போட்டியிலும் அனைத்துப் புள்ளிகளையும் @Ahasthiyan பெற்றுக்கொள்வார்😎! கிரகபலன் எப்படி என்று பார்ப்போம்!😆
  17. கேள்விகள் 67) க்கும் 70) க்குமான புள்ளிகள்: இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் இறுதியாக வரும் அணியாக ஐக்கிய அமெரிக்கா அல்லது பங்களாதேஷைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும். ஐக்கிய அமெரிக்கா - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது. பங்களாதேஷ் - மூன்று பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா ஒரு புள்ளி வழங்கப்படுகின்றது. 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SL வீரப் பையன்26 SA சுவி BAN நிலாமதி SL குமாரசாமி SL தியா SL தமிழ் சிறி SL புலவர் ENG P.S.பிரபா SL நுணாவிலான் ENG பிரபா USA SL வாதவூரான் AFG ஏராளன் SL கிருபன் BAN ரசோதரன் BAN அஹஸ்தியன் SL கந்தப்பு SL வாத்தியார் SL எப்போதும் தமிழன் SL நந்தன் SL நீர்வேலியான் SL கல்யாணி WI கோஷான் சே SL 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் PAK வீரப் பையன்26 PAK சுவி AFG நிலாமதி PAK குமாரசாமி PAK தியா SA தமிழ் சிறி PAK புலவர் AFG P.S.பிரபா PAK நுணாவிலான் AFG பிரபா USA AFG வாதவூரான் NZ ஏராளன் AFG கிருபன் NZ ரசோதரன் PAK அஹஸ்தியன் WI கந்தப்பு PAK வாத்தியார் PAK எப்போதும் தமிழன் PAK நந்தன் AFG நீர்வேலியான் PAK கல்யாணி NEP கோஷான் சே PAK கேள்விகள் 70) வரைக்குமான பதில்களின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 118 2 ஈழப்பிரியன் 114 3 ரசோதரன் 110 4 கந்தப்பு 110 5 சுவி 108 6 கோஷான் சே 108 7 குமாரசாமி 106 8 நீர்வேலியான் 102 9 எப்போதும் தமிழன் 100 10 தமிழ் சிறி 99 11 கிருபன் 99 12 நந்தன் 99 13 வீரப் பையன்26 97 14 வாதவூரான் 97 15 வாத்தியார் 95 16 நிலாமதி 93 17 P.S.பிரபா 93 18 அஹஸ்தியன் 93 19 தியா 91 20 ஏராளன் 91 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 @பிரபா USA தொடர்ந்தும் முன்னணியில் நிற்கின்றார். அவருக்கு பின்னால் இரண்டு அமெரிக்கர்கள் மரதன் ஓட்டம் போல தொடர்ந்தும் வருகின்றனர். எனினும் @கந்தப்பு பலரை முந்திக்கொண்டு நான்காவது நிலை வரை முன்னேறியுள்ளார்! யாழ்களப் போட்டியில் யார் வெற்றி பெறக்கூடும்?
  18. கேள்விகள் 66) க்கும் 69) க்குமான புள்ளிகள்: இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் முதலாவதாக வரும் அணிகளாக இந்தியா அல்லது தென்னாபிரிக்காவைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கும். இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் இரண்டாவதாக வரும் அணிகளாக ஆப்கானிஸ்தான் அல்லது இங்கிலாந்தைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா இரண்டு புள்ளிகள் கிடைக்கும். இந்தியா - 10 பேர் சரியாகக் கணித்துள்ளனர். தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது. தென்னாபிரிக்கா - நான்கு பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது. இங்கிலாந்து - 10 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) ஈழப்பிரியன் WI IND வீரப் பையன்26 IND WI சுவி IND ENG நிலாமதி WI IND குமாரசாமி IND AUS தியா WI PAK தமிழ் சிறி IND WI புலவர் PAK NZ P.S.பிரபா ENG IND நுணாவிலான் PAK NZ பிரபா USA IND WI வாதவூரான் IND ENG ஏராளன் PAK ENG கிருபன் AUS IND ரசோதரன் WI IND அஹஸ்தியன் AUS IND கந்தப்பு IND ENG வாத்தியார் IND AUS எப்போதும் தமிழன் AUS IND நந்தன் PAK WI நீர்வேலியான் IND ENG கல்யாணி SA IND கோஷான் சே WI IND 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் #அணி 2A - ? (3 புள்ளிகள்) #அணி 2B - ? (2 புள்ளிகள்) ஈழப்பிரியன் SA ENG வீரப் பையன்26 SL ENG சுவி IRL AUS நிலாமதி ENG NZ குமாரசாமி SA ENG தியா IND ENG தமிழ் சிறி ENG NZ புலவர் AUS IND P.S.பிரபா AUS WI நுணாவிலான் AUS IND பிரபா USA AUS SA வாதவூரான் SL AUS ஏராளன் AUS IND கிருபன் ENG PAK ரசோதரன் AUS NZ அஹஸ்தியன் ENG SA கந்தப்பு AUS SA வாத்தியார் WI SA எப்போதும் தமிழன் ENG SA நந்தன் AUS IND நீர்வேலியான் WI AUS கல்யாணி PAK NZ கோஷான் சே SA ENG கேள்விகள் 66) வரைக்கும் 68, 69) க்கும் பின்னரான யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 118 2 ஈழப்பிரியன் 114 3 கந்தப்பு 110 4 ரசோதரன் 109 5 கோஷான் சே 108 6 சுவி 107 7 குமாரசாமி 106 8 நீர்வேலியான் 102 9 எப்போதும் தமிழன் 100 10 தமிழ் சிறி 99 11 நந்தன் 99 12 கிருபன் 98 13 வீரப் பையன்26 97 14 வாதவூரான் 97 15 வாத்தியார் 95 16 நிலாமதி 93 17 P.S.பிரபா 93 18 அஹஸ்தியன் 93 19 தியா 91 20 ஏராளன் 91 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78
  19. கேள்விகள் 65) க்கும் 68) க்குமான புள்ளிகள்: இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இந்தியா - அனைவரும் தெரிவு செய்ததால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது. தென்னாபிரிக்கா - 09 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. இங்கிலாந்து - 17 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் A1 B2 C1 D2 ஈழப்பிரியன் IND WI வீரப் பையன்26 IND WI சுவி IND ENG நிலாமதி IND WI குமாரசாமி IND AUS தியா PAK WI தமிழ் சிறி IND WI புலவர் PAK NZ P.S.பிரபா IND ENG நுணாவிலான் PAK NZ பிரபா USA IND ENG வாதவூரான் IND ENG ஏராளன் PAK ENG கிருபன் IND AUS ரசோதரன் IND WI அஹஸ்தியன் IND AUS கந்தப்பு IND ENG வாத்தியார் IND AUS எப்போதும் தமிழன் IND AUS நந்தன் PAK WI நீர்வேலியான் IND ENG கல்யாணி IND SA கோஷான் சே IND WI 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் A2 B1 C2 D1 ஈழப்பிரியன் ENG SA வீரப் பையன்26 ENG SL சுவி IRL AUS நிலாமதி ENG NZ குமாரசாமி ENG SA தியா IND ENG தமிழ் சிறி ENG NZ புலவர் IND AUS P.S.பிரபா AUS WI நுணாவிலான் IND AUS பிரபா USA AUS SA வாதவூரான் AUS SL ஏராளன் IND AUS கிருபன் PAK ENG ரசோதரன் AUS NZ அஹஸ்தியன் ENG SA கந்தப்பு AUS SA வாத்தியார் WI SA எப்போதும் தமிழன் ENG SA நந்தன் IND AUS நீர்வேலியான் AUS WI கல்யாணி PAK NZ கோஷான் சே ENG SA கேள்விகள் 65) வரைக்கும் 68) க்கும் பின்னரான யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 115 2 ஈழப்பிரியன் 109 3 ரசோதரன் 109 4 கந்தப்பு 105 5 கோஷான் சே 103 6 சுவி 102 7 எப்போதும் தமிழன் 100 8 நந்தன் 99 9 குமாரசாமி 98 10 கிருபன் 98 11 நீர்வேலியான் 97 12 தமிழ் சிறி 96 13 நிலாமதி 93 14 P.S.பிரபா 93 15 அஹஸ்தியன் 93 16 வீரப் பையன்26 92 17 வாதவூரான் 92 18 வாத்தியார் 92 19 ஏராளன் 89 20 தியா 86 21 புலவர் 80 22 கல்யாணி 79 23 நுணாவிலான் 78
  20. இன்றுடன் சுப்பர் 8 போட்டிகள் நிறைவுபெற்றன. சுப்பர் 8 போட்டிகளில் நிலைகள் பற்றிய கேள்விகளுக்கு குழு 1 அல்லது குழு 2 இல் இருந்து உள்ள அணிகளைச் சரியாகத் தெரிவு செய்திருந்தால் புள்ளிகள் வழங்கப்படும்! அரையிறுதிக்குத் தெரிவான அணிகள்: குழு 1: இந்தியா ஆப்கானிஸ்தான் குழு 2: தென்னாபிரிக்கா இங்கிலாந்து
  21. இன்றைய இறுதியான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் மெதுவான ஆடுதளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு மழை காரணமாக 19 ஓவர்களில் 114 ஓட்டங்கள் வெற்றி இலக்காக DLS முறையில் குறிக்கப்பட்டது. எனினும் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்கள் எடுத்த லிற்றன் டாஸைத் தவிர அனைவரும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் 17.5 ஓவர்களில் 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவிக்கொண்டது. ஆப்கானிஸ்தானின் வெற்றி, அவர்களுக்கு அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும் தகுதியை கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்துள்ளது! முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் (DLS method) வெற்றியீட்டியது. ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் வெல்லும் என ஒருவரும் கணிக்கவில்லை! எனினும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு D இல் முதலாவதாக வந்திருந்த தென்னாபிரிக்கா அணியை இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கும் புள்ளிகள் கிடையாது. சுப்பர் 8 சுற்றின் இறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 109 2 ரசோதரன் 107 3 ஈழப்பிரியன் 103 4 கந்தப்பு 99 5 சுவி 98 6 நந்தன் 97 7 கோஷான் சே 97 8 கிருபன் 94 9 எப்போதும் தமிழன் 94 10 நீர்வேலியான் 93 11 குமாரசாமி 92 12 தமிழ் சிறி 92 13 நிலாமதி 89 14 P.S.பிரபா 89 15 வீரப் பையன்26 88 16 வாதவூரான் 88 17 வாத்தியார் 88 18 அஹஸ்தியன் 87 19 ஏராளன் 85 20 தியா 82 21 புலவர் 78 22 நுணாவிலான் 76 23 கல்யாணி 75 முதல் மூன்று நிலைகளிலும் கடைசி நான்கு நிலைகளிலும் மாற்றமில்லை!
  22. பெண் ஒருவரால் பேய் வீட்டில் பிசாசுகள் ஆட்டம் பொசன் போயா தினத்தன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் தானசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பேய் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு, நவகமுவ பிரதேசத்தில் பேய் வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அங்கு பெண்ணொருவர், மற்றுமொரு நபருடன் சென்றிருந்துள்ளார். எனினும், அங்கிருந்த சவப்பெட்டியில் படுத்திருந்தவர், தன்னுடைய கணவர் என்று அப்பெண்ணுக்கு தெரியாது. எனினும், மற்றுமொரு நபருடன் வந்திருக்கும் பெண், தன்னுடைய மனைவி என்பதை அறிந்துகொண்ட சவப்பெட்டியில் படுத்திருந்த நபர், மனைவியுடன் வந்திருந்த நபரையும் அப்பெண்ணையும் (மனைவியையும்) தாக்கியுள்ளார். எனினும், பேய்தான் நண்பனையும் அவரது காதலியையும் தாக்குவதாக ஊகித்த சக நண்பர்கள், அந்த பேயை அடித்துள்ளனர். இதனால், நவகமுவ பேய் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. அதன்பின்னர், மோதல்களில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் 12 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 12 பேரை விடுதலை செய்யுமாறு கடுவலை நீதவான் சனிமா விஜயபண்டார, திங்கட்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார் நவகமுவ ரணவல் பகுதியைச் சேர்ந்த 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 12 இளைஞர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பொசன் போயாவை முன்னிட்டு நவகமுவ ரணல பிரதேசத்தில் இளைஞர்கள் குழுவொன்று பேய் வீடு கட்டியதாகவும், 21 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலனுடன் மேலும் சில இளைஞர்கள் குழுவொன்றுடன் வந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குழு பேய் வீட்டிற்குச் சென்று உள்ளே நுழைந்தபோது, சவப்பெட்டியில் கிடந்த மனிதனை அவள் திருமணமான கணவன் என்று அடையாளம் கண்டாள். சடலமாக இருந்த நபரும் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டதாகவும், சடலமாக இருந்தவர் உடனடியாக எழுந்து பெண்ணின் தலையில் தாக்க முயற்சித்ததாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். குறித்த பெண்ணும், சடலமாக காட்சியளித்த நபரும் திருமண செய்துள்ள நிலையில், சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சட்ட ரீதியாக பிரிந்து வாழவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணை தாக்க முற்பட்டதையடுத்து அவருடன் இருந்த மற்ற இளைஞர்களும் பேய் வீட்டில் உள்ளவர்களை தாக்கியதாகவும், பேய் வீட்டில் இருந்த இளைஞர்களும் தாக்கியதால் பெரும் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதன்படி, பேய் வீட்டை ஒழுங்குபடுத்தும் குழுவினர் முதலில் நவகமுவ பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, மற்றைய குழுவினர் பின்னர் வந்துள்ளனர், சம்பவத்தை ஏற்படுத்திய யுவதியின் தந்தை உயர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதனால், தலையீடு செய்ததாக, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கமல் விஜேசிறி நீதிமன்றில் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறி இருப்பதும் தெரியவந்தது. https://www.tamilmirror.lk/செய்திகள்/பண-ஒரவரல-பய-வடடல-பசசகள-ஆடடம/175-339386
  23. புலிகள் இல்லாக் காலத்தில் பொதுவேட்பாளரே தமிழரின் ஆயுதம்! தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இருந்தது. ஆனால், இப்போது எமக்கான எந்தப் பாதுகாப்பும் இல்லை. அதனால் எமது இனத்தை தங்களின் காலடியில் வீழ்த்திவிடலாம் என பேரினவாதிகள் மனப்பால் குடிக்கின்றனர். ஆனால், அதனை முறியடித்து, புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் எமது புதிய ஆயுதமாக பொதுவேட்பாளர் விடயத்தைக் கையாள்வோம். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். கைதடியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நானும் இந்தப் பொதுவேட்பாளருக்கு ஆதரவானவன். ஜனாதிபதித் தேர்தலில் காலாதிகாலமாக இலங்கை தேசியக் கட்சிகளுக்கே தமிழ் மக்களாகிய நாம் வாக்களிக்கப் பழகியிருக்கின்றோம். பொதுவேட்பாளராக தமிழர் வெற்றி வாகைசூடமுடியாது என்பதும், எந்த ஒரு தமிழனும் ஜனாதிபதியாக இலங்கையில் வரமுடியாது என்பதும் எமக்கு நன்கு தெரியும். ஆனால், இங்கே வெற்றி தோல்வியென்பதற்கு அப்பால், எமது உரிமைக்கான குரலை அழுத்தமாக வெளிப்படுத்தும் ஒரு கருவியாக பொதுவேட்பாளரை முன்னிறுத்த வேண்டும். மீண்டும் இந்த பதிமூன்றாவது திருத்தம் பற்றிய கதையாடல்கள் மேலெழத் தொடங்கிவிட்டன. பொதுவாகத் தேர்தல் காலங்களில் பதின்மூன்றாம் திருத்தத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கதைத்து, அதனை மூலதனமாக்கி வாக்குகளை அள்ளுவது பேரினவாத வேட்பாளர்களுக்குக் கைவந்தகலை. அதையே இப்போதும் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். இம்முறை ஜனாதிபதித் தேர்தல்களத்தில் மூவர் போட்டியிடப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஆனால், அவர்களின் தலைவிதி தமிழர்களின் கையில் என்பதால்தான். அந்த மூவரும் அடிக்கடி வடக்குக்கு வருவதை வாடிக்கையாக்கிவிட்டார்கள். தமிழ் மக்களை சிங்களப்பேரினவாதம் கிள்ளுக்கீரையாக அடக்கியாள நினைத் தது. எப்பொழுது விடுதலைப் புலிகள் மீண்டும் திருப்பியடிக்கத் தொடங்கினார் களோ அன்றிலிருந்து தான் தமிழர்கள் மீது கைவைப்பதை சிங்களப் பேரின அரசு நிறுத்தியது. இப்பொழுது புலிகள் இல்லையென்பதால், மீண்டும் பழைய படி தமிழர்களை அடக்கியொடுக்க நினைக்கிறார்கள். வடக்கு-கிழக்கு முழுவதுமே இப்போது புலனாய்வாளர்களின் தீவிரக் கண்காணிப்பில் வந்துவிட்டது. தமிழ்மக்கள் எங்கு சென்றாலும் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒரு கருத்தைக் கூட சுதந்திரமாகச் சொல்லவிடாமல் தடுக்கிறார்கள். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இனியொரு ஆயுதப்போராட்டத்தை தமிழர்கள் இப்போதைக்கு சிந்தித்துக்கூடப்பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட கையறு நிலையில் எமது உரிமைகளை வென்றெடுக்க புதிய வழிகளைக் கண்டறியவேண்டும். அப்படியான புதிய வழிகளுக்கான முதற்படியாக, புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் எம தினத்தின் புதிய ஆயுதமாக பொதுவேட்பாளரை மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். (ச) https://newuthayan.com/article/புலிகள்_இல்லாக்_காலத்தில்_பொதுவேட்பாளரே_தமிழரின்_ஆயுதம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.