Everything posted by கிருபன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
22வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி ஆரொன் ஜோன்ஸனின் 52 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 22 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (மாற்றமில்லை): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 38 2 பிரபா USA 36 3 ரசோதரன் 36 4 ஈழப்பிரியன் 34 5 சுவி 34 6 நந்தன் 34 7 வாதவூரான் 32 8 ஏராளன் 32 9 குமாரசாமி 30 10 தமிழ் சிறி 30 11 கிருபன் 30 12 கந்தப்பு 30 13 வாத்தியார் 30 14 எப்போதும் தமிழன் 30 15 நீர்வேலியான் 30 16 வீரப் பையன்26 28 17 நிலாமதி 28 18 தியா 28 19 புலவர் 28 20 P.S.பிரபா 28 21 நுணாவிலான் 28 22 அஹஸ்தியன் 28 23 கல்யாணி 28 குறைந்தது இன்னும் ஒரு கிழமைக்கு @goshan_che ஐ முதல் படியில் இருந்து விழுத்தமுடியாது!
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
😊 போட்டியைத் திறமாக நடாத்திய @கந்தப்பு வுக்குப் பாராட்டுக்கள்! பல கேள்விகளுக்கு பதிலளிக்க நிறைய வாசிக்கவேண்டி இருந்தது! நிறையத் தரவுகள் இணையத்தில் இருந்ததால், நம்பகமான தரவுகளை மின்னம்பலம் சேர்வேயில் இருந்தே எடுத்தேன். 24வது கேள்விக்கு மாத்திரம் தரவை மீறி விருப்பமான பதிலைப் போட்டேன்! புள்ளி கிடைக்கவில்லை! ஆகவே ஃபீலிங்ஸ்ஸை விட்டுவிட்டு data ஐ நம்மவேண்டும்! தொடர்ந்தும் முன்நிலையில் நின்ற @நிழலிக்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் பாராட்டுக்கள்! 2026 தேர்தலில் கூட்டணி எப்படி அமைகின்றது என்பதை வைத்து போட்டியில் வெல்லலாம்😁
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாங்களும் தேடிக் களைத்து கைவிட்டுவிட்டோம். அவாஸ்ற்ரை நம்பி யாழைக் கைவிடவேண்டாம்👻
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி? தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகள் / கூட்டணிகள் 10% முதல் 18% வாக்குகளைப் பெற்றுவந்திருப்பதை மக்களவைத் தேர்தல்கள் உணர்த்தி வந்திருக்கின்றன. அந்த வாக்கு விகிதம் 20% தாண்டிச் சென்றதில்லை. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு விகிதம் 25%ஐத் தாண்டிச் சென்றிருக்கிறது. பாஜக தலைமையிலான கூட்டணி 18.28% வாக்குகளையும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (நா.த.க.) 8.11% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. அதேநேரம், மாநிலத்தில் திமுகவின் மூன்று ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் இது என்பதையும் மறந்துவிடக் கூடாது. அதிமுகவோடு இணைந்து பணியாற்ற வேண்டும் அல்லது அதிமுக தங்கள் கைகளுக்கு வர வேண்டும் என்று எண்ணும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுகவின் டிடிவி தினகரன் ஆகிய திராவிடக் கட்சிகளின் வழிவந்தவர்களையும் உள்ளடக்கிய அணிதான் பாஜக கூட்டணி. ஆனால், திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், பாஜக, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளுக்கும் மாற்றாக நா.த.க. தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது. தேர்தல் களமிறங்கிய 2016 முதல் தனித்துப் போட்டியிட்டு வருகிறது. உயரும் வாக்கு விகிதம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.07% வாக்குகள், 2019 மக்களவைத் தேர்தலில் 3.90% வாக்குகள், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.58% வாக்குகள் என வாக்கு வங்கியைச் சிறிது சிறிதாக உயர்த்திவந்தது நா.த.க. 2024 மக்களவைத் தேர்தலில் 8.11% வாக்குகளைப் பெற்று, தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உயரும் அளவுக்கு வாக்கு விகிதத்தை உயர்த்திக்கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்சியின் ‘பி’ அணி என்று நா.த.க. விமர்சிக்கப்பட்டாலும், மற்றொருபுறம் வாக்கு விகிதம் உயர்ந்துவருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்குகளை நா.த.க. பெற்றிருக்கிறது, இதில் திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் மூன்றாவது இடம். தேர்தல் வெற்றி, தோல்விக்கு அப்பால் 50% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவதை ஓர் உத்தியாக நா.த.க. பின்பற்றிவருகிறது. சிவகங்கை தொகுதியில் எழிலரசி 1.62 லட்சத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இவரைப் போலவே பல தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களைவிட பெண் வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, கன்னியாகுமரியில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இளையோர் வாக்குகள்: சீமான் பின்பற்றும் தமிழ்த் தேசிய, இனவாத, தூய்மைவாத அரசியல் தமிழ்நாட்டில் பிற கட்சியினரால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அதே நேரம், சீமான் பேசும் பேச்சை ரசிக்கும் முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் நா.த.க.வை ஆதரிப்பதன் வெளிப்பாடே மெதுவாக உயர்ந்துவரும் வாக்கு விகிதம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றைத் தேடும் நோக்கில் நா.த.க.வை இளைய தலைமுறையினர் ஆதரிக்கிறார்கள் என்று கூறப்படுவது உண்டு. அது சரி எனில், அவர்களின் வாக்குகளைக் கவர்வதில் திராவிடக் கட்சிகள் எந்தப் புள்ளியில் தடுமாறுகின்றன அல்லது தவறவிடுகின்றன என்கிற கேள்வி எழுகிறது. இரண்டு பொதுத் தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நா.த.க.வுக்கு இந்த முறை அந்தச் சின்னம் கிடைக்கவில்லை. 15 நாள் இடைவெளியில் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தைப் பிரபலப்படுத்தி, 8.11% வாக்குகளைப் பெற முடிகிறது என்றால், நா.த.க.வையும் சீமானையும் வாக்காளர்கள் கவனிக்கிறார்கள் என்பதை இனிமேலும் யாரும் மறுத்துக்கொண்டிருக்க முடியாது. இதுவரையில், கூட்டணியில் இல்லாமல் போட்டியிட்டு வரும் சீமான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி’ என்கிற முழக்கத்துக்கு மாறாக, தேர்தலில் பெறும் வாக்குகளைவிட வெற்றியின் முக்கியத்துவத்தை சீமான் உணரத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. https://akkinikkunchu.com/?p=279646
-
அமர்ந்தே இருப்பது ஆபத்து, ஏன்?
அமர்ந்தே இருப்பது ஆபத்து, ஏன்? கு.கணேசன் கொரோனா பெருந்தொற்று எப்போது பரவத் தொடங்கியதோ, அப்போதிருந்தே நம் அன்றாட வாழ்வியலில் பல மாற்றங்களைக் கண்கூடாகக் காண்கிறோம். ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, ‘இணையவழி வணிக’த்தில் இறங்கினோம். அதை இப்போதும் கைவிட முடியாமல் கஷ்டப்படுகிறோம். இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசி பொத்தானைத் தட்டி, வீட்டுக்குத் தேவையான ஊறுகாயிலிருந்து ஸ்மார்ட் போன், டிவி வரை எல்லாவற்றையும் வரவழைத்துவிடுகிறோம். கடைக்கு நடந்து செல்வதைக் குறைத்துக்கொண்டோம். மற்ற வேலைகளுக்கும் தெருவில் இறங்க வேண்டிய தேவை குறைந்துபோனது. கொரோனா காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், கைகளில் கைபேசியைக் கொடுத்து, ‘இணையவழி கற்றலு’க்குப் பழக்கப்படுத்தினோம். அதை இப்போதும் அவர்கள் உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டார்கள். மாலையில் விளையாடச் செல்லும் வழக்கத்தைக் கைவிட்டார்கள். கைபேசியே கதி என்று வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். பெரியவர்கள் நாம் பேருந்திலோ, சொந்த வாகனத்திலோ அலுவலகம் செல்ல முடியாமல் ‘வீட்டிலிருந்து வேலை’ செய்ய ஆரம்பித்தோம். அதுதான் வினையாயிற்று. கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்த பின்னும், பன்னாட்டு நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ கோட்பாட்டை நம் தலையில் கட்டின. கணினியும் கைபேசியும் நம்மை ‘ஆள’ வந்தன. அதனால் அமர்ந்தே செய்யும் வேலைகள் அதிகரித்தன. வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வதை ஒப்பிடும்போது அமர்ந்தே வேலை செய்வது சுலபமாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் புதிய போக்கு நம் ஆரோக்கியத்துக்கு எப்படியெல்லாம் குழி பறிக்கிறது என்பதை எத்தனை பேர் புரிந்திருக்கிறோம்? முதுகு வலியின் பிறப்பு! ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்துகொண்டு வேலை செய்யும்போது கீழ்முதுகில் கயிறு கட்டியதுபோல் அழுத்தம் அதிகரிக்கிறது; தசை இயக்கம் குறைகிறது; தசைநார் இறுகுகிறது. முதுகெலும்புச் சங்கிலியில் உள்ள இடைத் தட்டு (Disc) நசுங்குகிறது. இயல்பாக இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், உடற்பருமன் உள்ளவர்களுக்குச் சொல்லவா வேண்டும்? இடைத் தட்டு வீங்கிவிடுகிறது அல்லது விலகிவிடுகிறது. அப்போது கீழ் முதுகுவலி ஆஜர் ஆகிறது. நாம் அமர்வதிலும் ஓர் ஆரோக்கிய அம்சம் இருக்க வேண்டும். நிமிர்ந்து அமர்வதுதான் அந்த ஆரோக்கிய அம்சம். அப்படி அமர்பவர்கள் பாதிப்பேர்கூட இல்லை. சிலர் கூன் விழுந்த நிலையில் அமர்வார்கள். இன்னும் சிலர் ஒரு பக்கமாக சாய்ந்தும் முதுகு வளைந்தும் அமர்வார்கள். இன்னும் பலர் அமர்ந்த மாத்திரத்தில் அரை அடி ஆழத்துக்கு அழுந்திக்கொள்ளும் மெத்தைகளில் அமர்வார்கள். இப்படிச் செய்வது அவர்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். முதுகெலும்பின் வளைவுக்கு அவை மோசம் செய்யும். அப்போது முதுகு வலி ஆக்ரோஷம் அடையும். இப்போதாவது நாம் உஷாராக வேண்டும். இல்லையென்றால், கீழ்முதுகில் கொஞ்சம் கொஞ்சமாக வலி கூடிக்கொண்டே போய் பின்புறத் தொடைக்கோ, காலுக்கோ அது பரவிவிடும். ‘மின்சார ஷாக்’ மாதிரியான அந்த வலியைத் தொடர்ந்து கால் மரத்துப்போகும். படுத்து ஓய்வெடுத்தால் கால் வலி குறையும்; நடக்கும்போது வலி அதிகமாகும். நெல்லுக்குப் பாய்ச்சிய தண்ணீர் புல்லுக்கும் போய்ச் சேர்கிறமாதிரி முதுகில் ஏற்பட்ட பிரச்சினை இப்போது கால் நரம்புக்கும் பரவிவிட்டது என்று அர்த்தம். ‘சியாட்டிகா’ (Sciatica) எனப்படும் அந்தக் கால் குடைச்சல் சிலருக்குப் படுக்கையில் முடக்கிப்போடும் அளவுக்குக் கடுமையாகிவிடும் என்றால் அதன் கொடுமையைப் புரிந்துகொள்ளுங்கள். கழுத்து வலி நிச்சயம் இப்போதெல்லாம் அலுவலகத்தில் மேஜைக் கணினியில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் மடிக்கணினியில் வேலை செய்வதும் அதிகரித்துவருகிறது. அப்போது பொருத்தமான இருக்கைகள் இல்லாதபோது, பலரும் சோபாவில் அல்லது படுக்கையில் சாய்ந்துகொண்டு, கழுத்தைத் தூக்கிக்கொண்டும், குனிந்துகொண்டும்தான் மடிக்கணினித் திரையைப் பார்க்கிறார்கள். இந்தப் பழக்கம் கழுத்துத் தசைகளை இறுக்கிக் கழுத்துவலிக்கு மாலை சூடுகிறது. மாற்றம் காணும் வளர்சிதை மாற்றம் அடுத்து, வீட்டில் உள்ளவர்கள் அதிக நேரம் அமர்வது தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால்தான். அப்போது சும்மா அமர்வதில்லை. கையில் ஒரு தட்டு நிறைய நொறுவைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அளவில்லாமல் அதைத் தின்று தீர்க்கிறார்கள். இது நாள்பட நாள்பட உடற்பருமனை போனஸாகக் கொடுத்துவிடுகிறது. அத்தோடு நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது, உடலுக்குள் வளர்சிதை மாற்றப் பணிகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் விளைவாக, உடலுக்குள் ‘இன்சுலின் எதிர்ப்பு நிலை’ (Insulin Resistance) அதிகரிக்கிறது. இது இளம் வயதிலேயே சர்க்கரை நோயைத் தானமாகத் தந்துவிடுகிறது; கொஞ்ச நாளில் உயர் ரத்த அழுத்தத்தைத் துணைக்கு அழைக்கிறது. அமர்ந்தே இருக்கும்போது உணவுக் கலோரிகள் உடலில் சரியாக எரிக்கப்படாமல் போகும். அப்போது கெட்ட கொழுப்புக்குத் திருவிழா கொண்டாட்டம் ஆகிவிடும். பிறகு, இந்த மூன்றும் ஜோடி சேர்ந்து இதய நோய்க்கு ‘முன்பணம்’ கட்டும். இதை உறுதிசெய்யும் விதமாக வந்திருக்கிறது ‘ஹார்வர்டு ஹெல்த் ஸ்டடி’ (Harvard Health Study) எனும் அமெரிக்க ஆய்வு. ஆம், நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால், அது ஒரு சிகரெட் புகைப்பதற்குச் சமம் என்கிறது அந்த ஆய்வு. கூடவே உங்களுக்குப் புகைப்பழக்கமும் இருக்கிறது என்றால், மாரடைப்பு வாய்ப்புக்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கிறது என்று கூவுகிறது அதே ஆய்வு. இவை தவிர, நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது கால்களில் ரத்த ஓட்டம் தேங்கிவிடும். இதனால் ரத்த உறைவு (DVT) ஏற்படும். மாரடைப்பையும் பக்கவாதத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் ‘கூரியர்’ இது. சிலருக்குச் சுருள் சிரை நோய் (Varicose veins) வரக்கூடும். தப்பிக்க என்ன வழி? நீங்கள் அமரும் இருக்கை முதலில் சரியாக இருக்க வேண்டும். முதுகையும் கழுத்தின் பாரத்தையும் தாங்கும் வகையில் இருக்கையில் குஷன் இருந்தால் சிறப்பு. நிமிர்ந்து அமர்வதும், கால்களை செங்குத்தாகத் தொங்கப்போட்டு, தரையில் பதித்துக்கொள்வதும் முக்கியம். கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி, 20 அடி தொலைவில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால் கழுத்துக்கும் கண்ணுக்கும் நல்லது. அடுத்து, அமர்ந்த இடத்திலிருந்து மணிக்கொருமுறை எழுந்து 5 நிமிடம் நிற்கலாம்; நடக்கலாம்; கை, கால்களை நீட்டி மடக்கலாம். இந்த இடத்தில் மதுரையில் இருக்கும் என் பேராசிரியர் டாக்டர் சந்திரபோஸ் நினைவுக்கு வருகிறார். அவர் நோயாளிகளைப் பார்க்கும்போது தொடர்ந்து அமர மாட்டார். நோயாளி அமர்ந்த இடத்துக்கு அவரே சென்று நின்றுகொண்டுதான் பரிசோதிப்பார். இது நல்ல உத்தி. அலுவலகத்தில் முடிந்தவரை மின்தூக்கிகளைப் பயன்படுத்தாமல் படிகளைப் பயன்படுத்தலாம். இடைவேளையில் காபி/தேநீர் போன்றவற்றை உங்கள் மேஜைக்கு வரவழைக்காமல், வெளியில் சென்று அருந்திவிட்டு வரலாம். நீண்ட நேரம் கைபேசியில் பேசும்போது நடந்துகொண்டே பேசலாம். இது எதுவும் முடியாது என்றால், காலையில் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள் அல்லது சைக்கிள் ஓட்டுங்கள் அல்லது நீச்சல் மேற்கொள்ளுங்கள் அல்லது யோகா செய்யுங்கள். அமர்வதால் வரும் ஆபத்துகள் விலகிவிடும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-sitting
-
2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?- ப.சிதம்பரம்
2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?- ப.சிதம்பரம் “அனைத்து ஆண்களும் பெண்களும் கதாபாத்திரங்களே, அவர்கள் வருவதற்கும் போவதற்கும் தனித்தனி வழிகள்; கலைஞன் ஒருவனே - வேடங்களோ பல!” - வில்லியம் ஷேக்ஸ்பியர் இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவி ஏற்றிருப்பார். தனிக் கட்சியின் பெரும்பான்மை வலிமையுடன் இதுவரை ஆண்ட ‘யதேச்சதிகாரர் மோடி’ விடைபெற்றுக்கொள்வார்; பெரும்பான்மைக்குக் கூடுதலாக வெறும் 20 எம்.பி.க்களை மட்டுமே பெற்ற ‘பல கட்சி கூட்டணி அரசின் பிரதமர் (அடங்கி நடக்க வேண்டிய) மோடி’ ஆகப் பதவியேற்பார். இது அவருக்குப் புதிய அனுபவமாக இருக்கும். சென்ற 15 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் இப்படியொரு பாத்திரத்தை ஏற்க மோடி தயார்படுத்திக்கொண்டிருக்க மாட்டார்; ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக, பாஜகவின் பொதுச் செயலராக, குஜராத் மாநில முதல்வராக, இந்தியாவின் பிரதமராக என்று பல பாத்திரங்களை இதுவரை அவர் வகித்திருக்கிறார்; இப்போது பழக்கமில்லாத புதிய பாத்திரத்தை ஏற்கவிருக்கிறார். என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? சில வாரங்களுக்கு முன்பு வரை, ‘சாத்தியமே இல்லை’ என்று கருதப்பட்ட மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் சாதித்துவிட்டார்கள்: இனி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் (மக்களவை - மாநிலங்களவை) இனி ‘விதிகளின்படி’, அவை உறுப்பினர்களின் ‘கருத்தொற்றுமைப்படி’ நிகழ்ச்சிகளை நடத்தும்; அவைத் தலைவர், அவை முன்னவர் ஆகியோரின் ‘விருப்ப அதிகாரங்களின்படி’ நடைபெறாது. நாடாளுமன்றத்தின் அனைத்துக் குழுக்களும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், சம பலத்துடன் அமைக்கப்படும்; குழுக்களின் ‘தலைமைப் பதவி’ எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். முறையாக அங்கீகரிக்கப்பட்ட, ‘எதிர்க்கட்சித் தலைவர்’ அவையில் இருப்பார், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வலிமையான எதிர்க்கட்சிகள் அவையில் இருக்கும். ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்படாமல், அரசமைப்புச் சட்டம் இனி திருத்தப்பட மாட்டாது. மத்திய அமைச்சரவைக் கூட்டங்களோ, சில அமைச்சர்களை மட்டும் கொண்ட குழு கூட்டங்களோ – பிரதமர் எடுக்கும் முடிவை அப்படியே ஏற்று ஒப்புதல் அளிக்கும் சம்பிரதாய சடங்காக இருக்காது, அல்லது ஏற்கெனவே அமல்படுத்தத் தொடங்கிவிட்ட முடிவுகளை ஏற்கும் இடமாக இருக்கவே முடியாது – உதாரணம்: பணமதிப்பு நீக்க நடவடிக்கை. மாநில அரசுகளின் உரிமைகளுக்கு உரிய அங்கீகாரம் இருக்கும்; அவை பாதுகாக்கப்படும். மாநிலங்களுக்கும் அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் திட்டங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதி, கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் திருப்திக்கேற்ப இருக்கும், ஒரு சிலரின் விருப்ப அதிகாரத்தின்படி இருக்காது. முக்கியமான விவாதங்களின்போது அவையில் இனி பிரதமர் இருந்தாக வேண்டும், கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும், விவாதங்களிலும் பங்கேற்றாக வேண்டும்! தேர்தல் முடிவு தரும் பாடங்கள் மக்கள் தங்களுடைய ‘மனதின் குரல்’ என்னவென்று இந்தத் தேர்தலில் வெளிப்படுத்திவிட்டார்கள். அவர்கள் சுதந்திரத்துக்கு மரியாதை தருகின்றனர், பேச்சுரிமை – கருத்துரிமையை ஆதரிக்கின்றனர், அந்தரங்கம் காக்கப்பட வேண்டும் என்ற தனியுரிமையை விரும்புகின்றனர்; போராட்டம் நடத்தும் உரிமை அவசியம் என்கின்றனர். தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாகவும் – அவதூறு செய்துவிட்டதாகவும் போலியான குற்றச்சாட்டுகளின் பேரில், வழக்கு தொடுக்கும் ஆர்வத்தை அரசு இனி கைவிட்டுவிட வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் காவல் துறையினர் போலி மோதல் வழி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், புல்டோடர்களைக் கொண்டு வீடுகளையும் கட்டிடங்களையும் சட்டத்துக்குப் புறம்பாக இடித்துத் தள்ளுவதும் இனி கைவிடப்பட வேண்டும் (உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு இந்தத் தேர்தல் முடிவு புகட்டும் பாடம் இதுவே). அரசியலுக்கு அப்பாற்பட்டது ராமர் கோயில்; அதை மீண்டும் அரசியல் களத்துக்கு இழுத்துவரக் கூடாது (அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 77 வயது அவதேஷ் பிரசாத் (சமாஜ்வாதி கட்சி), பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலர், அயோத்தி கோயில் கட்டுமானத் திட்டமிடலுக்குப் பொறுப்பேற்றிருந்த நிருபேந்திர மிஸ்ராவின் மகனும், சிராவஸ்தி தொகுதியில் பாஜக சார்பில் நின்று தோல்வியைத் தழுவியவருமான சாகேத் மிஸ்ரா இருவரையும் இதுபற்றிக் கேளுங்கள்). உண்மையிலேயே சுதந்திரமான ஊடகங்களைத்தான் மக்கள் விரும்புகின்றனர்: போலியாக தயாரிக்கப்பட்ட வாக்குக் கணிப்பு முடிவுகள் வேண்டாம்; பிரதமரின் ஒவ்வொரு புருவ நெளிப்புக்கும் விளக்கம் தரும் ‘நேரலை ஒளிபரப்புகள்’ வேண்டாம்;, ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதில்களுக்குப் பொருத்தமாக கேள்விக் கேட்கும் பேட்டிகளும் கூடாது; வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (இடி), மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) ஆகியவை தயாரிக்கும் அறிக்கைகளை அப்படியே கேமரா முன் வாசிக்கும் போக்கும் கூடாது. மாநிலக் கட்சிகள் தங்களுடைய கொள்கை - தன்மைக்கேற்ப எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்; சொந்த மாநிலத்தில் ஒரு முகத்தையும் - டெல்லி மாநகரில் வேறொரு முகத்தையும் காட்டுவது கூடாது. அப்படிப்பட்ட கட்சிகளுக்கு - ஏஜிபி, எஸ்ஏடி, ஜேஜேபி, பிஆர்எஸ், ஜேடிஎஸ் கட்சிகளுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். அல்லது பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி போல ஆட்சியிழந்து போக வேண்டியதுதான். பாஜகவை இப்போது ஆதரிக்கும் டிடிபி, ஜேடியு கட்சிகளுக்கும் இதில் பாடம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தங்களுடைய வேலையை செய்ய வேண்டும், நாடாளுமன்றத்தில் நல்ல எதிர்க்கட்சிகளாகச் செயல்பட பத்தாண்டுகளுக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தங்களுடைய கோரிக்கைகளை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நன்கு வலியுறுத்த வேண்டும். மக்களின் கோரிக்கைகள் இந்தியா கூட்டணிக்கு கணிசமாக வாக்களித்து தேர்ந்தெடுத்ததன் மூலம், மக்கள் பின்வரும் கோரிக்கைகளை ஆதரித்துள்ளனர். சமூக – பொருளாதார தரவுகளுடன், சாதி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 106வது திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், 2025 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்குவதை உறுதிசெய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முதல் அனைத்து வகை வேலைகளுக்கும் அன்றாடம் ரூ.400க்குக் குறையாமல் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் கடன் சுமையை ஆராயவும், விவசாயக் கடன்களை அவ்வப்போது ரத்துசெய்யவும் நிரந்தர ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அரசிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுத் துறை நிறுவனங்களிலும் நிரப்பப்படாமல் இருக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ‘பணியாளர் பயிற்சி திட்டச் சட்ட’த்துக்கு உரிய திருத்தங்களைச் செய்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தொழில் – வணிக நிறுவனங்களும் பயிற்சி முடித்தவர்களுக்கு கட்டாயம் ஓராண்டு தொழில்பழகுநர் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பும் உரிய உதவித் தொகையும் வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். ராணுவத்தில் குறைந்த ஆண்டுகளே புணிபுரிவதற்கான ‘அக்னிவீர்’ ஒப்பந்த வேலைவாய்ப்பு திட்டம் கைவிடப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் பரிசீலித்து, அரசமைப்புச் சட்டப்படிச் செல்லத்தக்கதுதான் என்று அனுமதிக்கும் வரையில், குடிமக்கள் திருத்தச் சட்டத்தை அமல் செய்யாமல் நிறுத்திவைக்க வேண்டும். சிபிஐ, இடி, என்ஐஏ, எஸ்எஃப் ஐஓ, என்சிபி ஆகிய புலனாய்வு விசாரணை அமைப்புகளை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துவிட வேண்டும். புதிய ஆட்டம் ஜூன் 9 முதல் புதிய ஆட்டம் தொடங்குகிறது. புதிய ஆட்டக்காரர்கள் களத்தின் முன்னணியில் இருப்பார்கள். நுழைவு வாயிலையும் வெளியேறு வாயிலையும் பார்த்துக்கொண்டே இருங்கள்! https://www.arunchol.com/p-chidambaram-article-world-is-a-stage
-
இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை
இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை Vhg ஜூன் 11, 2024 இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழீழத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பான கோரிக்கையை தாம் அவரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் நேற்று (10-06-2024) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே, இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. இரண்டு கோரிக்கைகள் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன். இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும். ஆகவே கச்சத்தீவு மீட்டு தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களே பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவு விவகாரம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். கச்சத்தீவு மீட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. பாஜகவின் கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்துஅங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் முடிவு சரியானதாக உள்ளது. இருந்தபோதிலும் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்காக வாக்கு அளித்துஇருக்கிறார்களே அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. இலங்கை தமிழர்கள் விவகாரம் மற்றும் கச்சத்தீவு விவகாரம் என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன். பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பாஜக குறைந்த தொகுதிகளில்வெற்றி பெற்றதால் அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள். பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அமுக்கியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள். ஜனநாயக நாட்டில் தோல்வி வெற்றி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் ஆட்சி கால கட்டத்தில் எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சி புரிந்த காலகட்டத்தில் யாருடைய ஆட்சிகளையும் கலைக்கவில்லை. தமிழர்களுக்கு ஆதரவு இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். பிரதமர் மோடி சிவபெருமான் மீது பக்தியாக இருக்கிறார். தியானம் செய்கிறார், விபூதி பூசி கொள்கிறார். காசி விசுவநாதர் பிரதமர் எல்லா நாடுகளுக்கும் செல்கிறார் எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன், பாஜகவிற்காக நான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அதிமுக தோல்வி தழுவியுள்ளது. அதிமுக கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. இந்த தேர்தலில் பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தமிழகத்தில் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். இலங்கைக்கு நான் நேரில் சென்றால் என்னை சுட்டு விடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் இருந்தாலும் சிங்கள வெறியர்கள் அங்கே தான் இருக்கிறார்கள்” என கூறினார். https://www.battinatham.com/2024/06/blog-post_672.html
-
மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்…! தேடுதல் பணி தீவிரம்..!
மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்…! தேடுதல் பணி தீவிரம்..! தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் திங்கட்கிழமை காலை புறப்பட்ட மலாவிய பாதுகாப்பு படை விமானம், ராடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன” என்று மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது. விமான நிபுணர்களால் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதை அடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9:17 மணியளவில் விமானம் புறப்பட்டு, காலை 10:02 மணிக்கு Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட தரையிறங்க வேண்டும், ஆனால் விமானம் அப்படி இல்லாமல், ரேடாரில் இருந்து விலகியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த மே மாதம், ஹெலிகாப்டரில் சென்ற ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் பயணித்த அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/303482
-
யாழில் தமிழரசு கட்சியினரை சந்தித்தார் சஜித் பிரேமதாச
13ஆம் திருத்தம் நலிவடைந்து விட்டது – சஜித்திற்கு சுமந்திரன் எடுத்துரைப்பு! adminJune 11, 2024 அதிகார பகிர்வு குறித்து தமிழ் – சிங்கள மக்கள் தெளிவாக, விபரமாக அறிய கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவிடம் கூறினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசா தமிழரசு கட்சியினரை, யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு சந்தித்தார். குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் அவ்வாறு தெரிவித்தார். அதிகார பகிர்வு சம்பந்தமாக எங்களுக்கு இருக்கிற ஏமாற்றங்கள், தொடர்பில் எடுத்து கூறினோம். நாங்கள் வேண்டாம் என கூறும் 13ஆம் திருத்தத்தை கூட மிக மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். கொடுத்ததை கூட சூழ்ச்சிகள் ஊடாக மீள பெற்றுக்கொள்கின்றார்கள். அதனால் இப்போது அது மிக நலிவடைந்து காணப்படுகிறது. 13ஆம் திருத்தத்தை அமுல் படுத்துவேன் என கூறுவதில் கூட இன்றைக்கு அர்த்தம் இல்லாத நிலைமை காணப்படுகிறது என கூறினோம். எதிர்க்கட்சி தலைவர் தனது நோக்கு குறித்து கூறுகையில், கிராமங்கள் நகரங்களை கட்டி எழுப்பி அதனூடாக பிரதேசத்தை கட்டியெழுப்பி அதன் பின்னரே மாவட்டம், மாகாணம் நாடு என்பதே தன்னுடைய கோட்பாடு என்று கூறியிருந்தார். விசேடமாக நிதி பகிர்வு குறித்து கூறினார். அதிகார பகிர்வினை கொடுத்து விட்டு, நிதி பகிர்வை கொடுக்காவிடின் அதில் பயனில்லை என்றும் கூறினார். அதேவேளை இனங்கள் மத்தியில் உள்ள பரஸ்பர நம்பிக்கையீனத்தை இல்லாதொழிக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என எம்மிடம் கூறினார் அதன் பின்னர் நாம் எதிர்க்கட்சி தலைவரிடம், தமிழ் மக்களின் அடையாளம் பேணப்பட வேண்டும். தமிழர்களின் பூர்வீகமான நிலப்பரப்பான வடக்கு கிழக்கு தாயகம் இணைந்ததாக பூரண அதிகார பகிர்வு வேண்டும். அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் எமது மக்கள் எதிர்பார்க்கும் அதிகார பகிர்வு பற்றி பேசாமல் வேறு விடயங்களை சொல்வது அதிகார பகிர்வு குறித்து சொல்லாது தப்பி யோடுவதாக இருக்க கூடாது. அதிகார பகிர்வு தொடர்பில் விபரமாக தமிழ் சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டும் என கூறினோம். தனது தேர்தல் அறிக்கையில் அது குறித்து தெளிவாக கூறுவேன் என்றார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூறியதை வைத்து தான் தமிழ் மக்கள் உங்களுக்கு பெருவாரியாக வாக்களித்தனர். என கூறி , நீங்கள், கொடுக்கும் வாக்குறுதியை முழு நாட்டிற்கும் சொல்ல வேண்டும். அதனை வைத்து தான் நாம் தீர்மானிப்போம், என எதிர்க்கட்சி தலைவரிடம் கூறினோம். தேர்தலில் தமக்கு ஆதரவு தாருங்கள் என வெளிப்படையாக கேட்கவில்லை. ஆதரவினை பெறும் நோக்குடனான சந்திப்பாகவே இது அமைந்தது என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/204139/
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியில் சேர முதலே இதை நான் சொல்லியிருந்தேன்😁 @வீரப் பையன்26 என்னையே நான் மெச்சிக்க கன்யாகுமரி மகளுக்கு நன்றி😍 🍾🍷🍺🍻🥃 நான் இப்ப ட்ரிங்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கேன்! ஓணாண்டியிடம் கொடுத்தாலும் காரியமில்லை! ஓணாண்டி, முகவரி ப்ளீஸ்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிளப்பலாம்.. ஆனால் ஜூரியிடம் எடுபடாது!😃 ஆட்சேபனை மனுவை காலம்தாழ்த்திக்கூட ஒருவரும் தாக்கல் செய்யவில்லை😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (11 ஜூன்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK எதிர் CAN அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
21வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி4 விக்கெட்டுகளை 23 ஓட்டங்களிலேயே இழந்து தடுமாறினாலும், ஹென்றிக் க்ளாஸனதும் டேவிட் மில்லரினதும் நிதானமான ஆட்டத்தின் உதவியுடன் இறுதியில் 6 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய நிதானமாக ஆடினாலும் இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் வெல்வதற்கு எடுக்கவேண்டிய நிலையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 6 ஓட்டங்களையே எடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் என்ற நிலையை மட்டுமே அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 21 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 36 2 பிரபா USA 34 3 ரசோதரன் 34 4 ஈழப்பிரியன் 32 5 சுவி 32 6 நந்தன் 32 7 வாதவூரான் 30 8 ஏராளன் 30 9 குமாரசாமி 28 10 தமிழ் சிறி 28 11 கிருபன் 28 12 கந்தப்பு 28 13 வாத்தியார் 28 14 எப்போதும் தமிழன் 28 15 நீர்வேலியான் 28 16 வீரப் பையன்26 26 17 நிலாமதி 26 18 தியா 26 19 புலவர் 26 20 P.S.பிரபா 26 21 நுணாவிலான் 26 22 அஹஸ்தியன் 26 23 கல்யாணி 26 இப்போதைக்கு @goshan_che முதல்வர் பதவியில் இருந்து இறங்குகின்ற திட்டத்தில் இல்லை!
-
தமிழர் தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறது என்ற நம்பிக்கையில் டாவோஸ் மகாநாடு சிறப்பாக முடிவடைந்தது.
தமிழர் தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறதுஎன்ற நம்பிக்கையில் டாவோஸ் மகாநாடு சிறப்பாக முடிவடைந்தது. June 10, 2024 தமிழர் தலைநிமிர் காலம் என்ற தொனிப்பொருளில் சுவிட்ஸர்லாந்து டாவோஸ் நகரில் கடந்த 3 நாட்களாக கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற 13வது உலகத்தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மகாநாடு சுவிஸ் நாட்டுக்கு தமிழர் அகதிகளாக வந்து 44 ஆண்டுகள் பூர்த்தியான நிகழ்வூட்டல் நினைவுடன் இனிதே நிறைவு பெற்றது. இம்மகாநாட்டில் உலகின் 27 நாடுகளிலிருந்து 550ற்கு மேற்பட்ட தமிழ் தொழில்முனைவோரும் திறனாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். மகாநாட்டின்போது உலகப்பொருளாதாரம், இயற்கைச்சூழல், தற்போதைய தொழில்நுட்பம், வியாபார முயற்சிகள், தொடர்பாடல், இலங்கை சிவில் சமுகத்தின் வாழ்க்மைமேம்பாடு போன்ற பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. நிகழ்வின்போது பல்வேறு திறமையாளர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ,இலங்கையின் வடகிழக்கு மலையகப்பிரதேசங்களிள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளதாக மாகாநாட்டின் ஏற்பாட்டாளர்களான The Rise எழுமின் அமைப்பினர் தெரிவித்தனர். கண்ணாரக் கண்டோம் – தமிழர் ஒற்றுமையின் வெற்றியை. சுவிட்சர்லாந்து Davos நகரில் நாங்கள் நின்று வென்று மகிழ்கிறோம். தமிழர்கள் நாங்கள் பெரிதாக உயர்வோம் என்ற நம்பிக்கை தூரத்து வெளிச்சமாய் தெரிகிறது. கருமேகங்கள் சூழ்கையில் ராசாளிகள் பதறுவதில்லை. அவை கருமேக வானுக்கு மேலே பறக்கின்றன. இடர் வரும் காலை நாங்களும் இடறுவதில்லை. உணர்வில், உறுதியில் நாங்களும் தமிழ் ராசாளிகள். இறைவன் எம்மோடு. இயற்கை எம்மோடு. அறம் எம்மோடு. அன்பும் நட்பும் எம்மோடு. அன்னைத் தமிழ் எம்மோடு. எமது தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறது. இனி நாங்கள் நம்பிக்கையுடன் முன் செல்வோம். The RISE எழுமின் அமைப்பின் 13-ம் உலக மாநாடு Davos நகரில் இனிதே நிறைவுற்றது! 27 நாடுகள்; 550 உறவுகள்; பல நூறு தொழில் வணிகக் கதைகள். நாளை நமதே!! எல்லோருக்கும் நன்றி என The RISE Global நிறுவனர் – தலைவர் தமிழ்ப்பணி வணபிதா ம. ஜெகத் கஸ்பர் அடிகளார் தனது நன்றியறிதலில் தெரிவித்துள்ளார். https://www.supeedsam.com/200802/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (10 ஜூன்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 21) முதல் சுற்று குழு D : திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA எதிர் BAN அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பத்தொன்பதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்திலும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றாலும், பின்னர் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் தடுமாறி விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள்வரை நன்றாக விளையாடியிருந்தும், இந்திய அணியின் இறுக்கமான பந்துவீச்சால் ஓட்டங்களை எடுக்கமுடியாமல் திணறி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- இருபதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், குறிப்பாக பிராண்டன் மக்முல்லன் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள், அதிரடி வேகத்தில் அடித்தாடி வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 13.1 ஓவர்களிலேயே 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் சுற்ற்றுப் போட்டிகளில் பாதி நிலையான இருபது போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 34 2 பிரபா USA 32 3 ரசோதரன் 32 4 ஈழப்பிரியன் 30 5 சுவி 30 6 நந்தன் 30 7 வாதவூரான் 28 8 ஏராளன் 28 9 குமாரசாமி 26 10 தமிழ் சிறி 26 11 கிருபன் 26 12 கந்தப்பு 26 13 வாத்தியார் 26 14 எப்போதும் தமிழன் 26 15 நீர்வேலியான் 26 16 வீரப் பையன்26 24 17 நிலாமதி 24 18 தியா 24 19 புலவர் 24 20 P.S.பிரபா 24 21 நுணாவிலான் 24 22 அஹஸ்தியன் 24 23 கல்யாணி 24
-
பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
பௌத்த வினாவல் - 2, ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பகுதி இரண்டு - தர்மம் அல்லது கோட்பாடு தர்மச்சக்கரம், தாய்லாந்து, 8-ஆம் நூற்றாண்டு 104. புத்தர் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? அகவிழிப்படைந்தவர் அல்லது முழுமையான ஞானத்தை அடைந்தவர். 105. இவருக்கு முன்பும் வேறு புத்தர்கள் இருந்தனர் என நீங்கள் குறிப்பிட்டீர்களே? ஆம். முடிவில்லா காரணகாரிய சுழற்சியில், அறியாமையால் மனிதகுலம் பெரும்துயரில் மூழ்கி அவதியுருகையில் அத்துயரிலிருந்து விடுபடும் ஞானத்தை மானுடத்திற்கு கற்பிக்க குறிபிட்ட கால இடைவேளைகளில் ஒரு புத்தர் பிறப்பெடுப்பார் என நாங்கள் நம்புகிறோம். 106. ஒரு புத்தர் எவ்வாறு உருவாகிறார்? ஒருவர் தான் வாழும் காலத்தில் பூமியிலுள்ள புத்தர்களில் ஒருவரைக் கண்டு, அவரின் சொற்களை கேட்டு, பின்தொடர்ந்து, எதிர்காலத்தில் தானும் அவ்வாறே வாழ முடிவெடுக்கிறார். அவர் அதற்கு தகுதி பெற்றபின்னர் அவரும் ஒரு புத்தராகி மனிதர்கள் பிறவிச்சுழலின் பாதையிலிருந்து விடுபடும் வழியைகாட்டுவார். 107. அவர் எவ்வாறு முன்செல்வார்? அந்த பிறவியிலும் அடுத்து எடுக்கவிருக்கும் எல்லா பிறவியிலும் அவர் தன் ஆசைகளை கட்டுக்குள் வைக்கவும், அனுபவங்களின் மூலம் ஞானம் பெறவும், ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வை வளர்த்துக்கொள்ளும் செயலில் முழுமையாக ஈடுபடுவார். இப்படி, அவர் பல படிநிலைகளாக அறிவடைந்து, உன்னத குணம் பெற்று, அறத்தில் வலுவடைந்து, இறுதியாக, எண்ணற்ற மறுபிறப்புகளுக்கு பின் அவர் அனைத்தும் அறிந்த, அகவிழிபடைந்த, மனிதகுலத்தின் தலைசிறந்த ஆசிரியராக முழுமைபெறுவார். 108. இவ்வாறு எண்ணற்ற பிறப்புகளில் பல படிநிலைகளில் அவர் வளர்ச்சியடையும் போது அவரை எப்பெயரில் அழைக்கவேண்டும்? போதிசத் அல்லது போதிசத்வர் என அழைக்கவேண்டும். இளவரசர் சித்தார்த்தன் ஒரு போதிசதவர். அவர் கயாவில் அருள்நிறைந்த போதி மரத்தின் அடியில் அமர்ந்து புத்தனாக முழுமையடைவும்வரை அவர் ஒரு போதிசத்வரே. 109. பல பிறப்புகளில் அவர் போதிசத்வராக பிறவியெடுத்ததை குறித்த ஆவணங்கள் ஏதும் உள்ளதா? போதிசத்வர்களின் அவதார கதைகளைக் கொண்ட நூலான ஜாதகக்கதையில் உள்ளது. இந்த நூலில் போதிச்சத்துவர்களின் பிறப்பைக் குறித்த பலநூறு கதைகள் உள்ளன. 110. இந்த கதைகள் என்ன கற்பிக்கின்றன? ஒரு மனிதன் நீண்ட மறுபிறப்பு தொடர்ச்சி முழுவதும் ”தீமையை வென்று அறத்தை வளர்த்துக்கொள்வதை” நோக்கமாக எடுத்துச்செல்ல முடியும் என காட்டுகின்றன. 111. புத்தனாகும் முன்பு போதிசத்வர் எத்தனை மறுபிறப்புகளை கடக்கவேண்டும் என்ற நிலையான கணக்கு ஏதேனும் உண்டா? நிச்சயமாக இல்லை. அது ஒருவரின் இயல்பான குணம், புத்தனாக முடிவெடுக்கும் போது அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி நிலை மற்றும் பல விஷயங்கள் அதை தீர்மானிக்கின்றன. 112. போதிசத்வர்களை வகைப்படுத்தமுடியுமா? முடியுமென்றால் அதை விளக்குங்கள். போதிசத்வர்கள், அதாவது வருங்கால புத்தர்கள் மூன்றாக வகைப்படுத்தப் படுகின்றனர் 113. சொல்லுங்கள், இந்த மூன்றுவகை போதிசத்வர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? பண்ணதிக்கா அல்லது உத்கதிதஜ்னா சத்ததிக்கா அல்லது விபசித்தஜ்னா விர்யதிகா அல்லது கினேயா பண்ணதிக்கா போதிசத்வர்கள் தூய அறிவின் பாதையில் பயணிப்பவர்கள். சத்ததிக்கர்கள் பக்தியின் பாதையில், விர்யதிக்கா ஆற்றல்மிக்க கர்மத்தின் பாதையில் பயணிப்பவர்கள். முதல் வகையினர் அறிவின் வழிகாட்டலில் அவசரமின்றி செயல்படுவர். இரண்டாம் வகையினர் முழுவதுமாக பக்தியின் வழியில் செயல்படுபவர்கள், இவர்கள் அறிவின் வழிக்காட்டுதலை பொருட்படுத்துவதில்லை. மூன்றாம் வகையினர் எது நல்லதோ அச்செயலை செய்ய தாமதிப்பதில்லை. இவர்கள் தங்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல், சரியாக செயலை கண்டு அதை செய்தாகவேண்டும் என்றால் செய்து முடிப்பர். 114. நமது போதிசத்தவர் புத்தரான போது, மனிதர்கள் துன்பத்திற்கு காரணமாக எதை கண்டார்? அதை ஒற்றை வரியில் சொல்லுங்கள். அறியாமை (அவித்யா). 115. இதற்கான தீர்வு என்ன என்று சொல்லமுடியுமா? அறியாமையை களைந்து சரியான அறிவை (பிரஜ்னா) பெறுவதே இதற்கான தீர்வு. 116. அறியாமை ஏன் துன்பத்திற்கு காரணமாகிறது? ஏனென்றால் அறியாமை மதிப்பற்றவைகளுக்கு மதிப்பளிக்கச் செய்கிறது, வருந்தவேண்டாதவைகளுக்கு வருந்தச் செய்கிறது. மாயையை உண்மையென காணச் செய்கிறது. வெற்று பொருட்கள் மீது ஆசை கொண்டு வாழ்வை கடக்கச் செய்கிறது, உண்மையில் எது பெருமதிப்புடையதோ அதை புறக்கணிக்க வைக்கிறது. 117. மிகவும் மதிப்புள்ளது எது? மனித இருப்பின் ரகசியத்தையும் அதன் இலக்கையும் முழுமையாக அறிவதே மதிப்புள்ளது. ஏனென்றால் இதன் மூலம் இந்த வாழ்வு மற்றும் அதிலுள்ள உறவுகள் பற்றிய சரியான மதிப்பீட்டை அடையமுடியும், அவைகளுக்கு உகந்ததல்லாதவற்றை மதிப்பிடாமல் இருக்க முடியும். இவ்வாறு வாழ்வதன் வழியாக நமக்கும் நம் சக மனிதர்களுக்கும் உயர்ந்த மகிழ்ச்சியை அளிக்கவும், துயரிலிருந்து விடுவிக்கவும் முடியும். 118. எந்த ஒளி நம்முடைய அறியாமையும், நமது துன்பங்கள் அனைத்தையும் களையும்? புத்தர் கூறிய ”நான்கு உயர்ந்த உண்மைகள்” பற்றிய அறிவு நம்மை இவற்றிலிருந்து விடுவிக்கும். 109. புத்தர் கூறிய ”நான்கு உயர்ந்த உண்மைகள்” எவை? இருத்தலின் துக்கங்கள். விளைவாக மீண்டும் மீண்டும் சுழற்சியில் பிறந்து இறத்தல். ஆசையே துக்கத்திற்கு காரணம். ஆசை என்றும் நிறைவுறாதது, புதிதுபுதிதாக வந்துகொண்டே இருப்பது, தன்னலமானது. ஆசையை அழித்தல் அல்லது அதிலிருந்து தன்னை விடுவித்தல். ஆசையில் இருந்து விடுபடுவதற்கான வழிகள். 120. துயரத்தை உண்டாக்கும் சில காரணிகளை சொல்லுங்கள்? பிறப்பு, மூப்பு, நோய், இறப்பு, விரும்பிய பொருள்களை இழத்தல், வெறுக்கத்தக்க இயல்புடையவர்களுடன் இணைந்திருத்தல், அடையவே முடியாதவற்றுக்கு ஏங்குதல். 121. இது ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேறுபடுமா? ஆம். ஆனால் எல்லா மனிதரும் வெவ்வேறு விதங்களில் அக்காரணங்களால் துயருறுவர். 122. நிறைவுறாத ஆசைகளாலும், அறியாமையால் உண்டாகும் ஏக்கங்களாலும் ஏற்படும் துன்பத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? வாழ்க்கை மற்றும் அதிலிருக்கும் சுகபோகங்கள் மீதான வேட்கையை வென்று அழிப்பதன் வழியாக இந்த துன்பத்திலிருந்து விடுபடலாம். இந்த வேட்கையே துன்பத்திற்கு காரணம். 123. அதை எவ்வாறு வெல்வது? புத்தர் கண்டடைந்து நமக்கு சுட்டிக்காட்டிய எண்வகை மார்க்கத்தை பின்பற்றுவதின் வழியாக வெல்லலாம். (இது பாலி மொழியில் ’அரியோ அட்தங்கிகோ மக்கோ’ என குறிப்பிடப்படுகிறது. பார்க்க கேள்வி எண்கள் 77, 78) 124. அந்த எண்வகை மார்க்கங்கள் என்னென்ன? இந்த மார்க்கத்தின் எட்டு பிரிவுகள் அங்கங்கள் என அழைக்கப்படுகின்றன. அவை: சரியான நம்பிக்கை (கர்மம் அல்லது காரணகாரிய விதியை அடிப்படையாக கொண்டது) சரியான சிந்தனை சரியான பேச்சு சரியான செயல் சரியான வாழ்கைமுறை சரியான உழைப்பு/முயற்சி சரியான எண்ணம் மற்றும் சுயஒழுக்கம் சரியான தியானம் / சிந்தனையை சரியாக குவித்தல் இந்த அங்கங்களை மனதில் நிறுத்திக்கொண்டு பின்பற்றுபவர் துக்கத்திலிருந்து விடுபடுவார், இறுதியாக மோட்சத்தை அடைவார். 125. மோட்சத்திற்கு வேறு சிறந்த வார்த்தை உண்டா? உண்டு. விடுதலை அல்லது வீடுபேறு. 126. விடுதலை, அது எதனிடமிருந்து? உலகில் நம்முடைய இருப்பு மற்றும் பிறவி சுழல் ஆகியவற்றால் ஏற்படும் துன்பத்தில் இருந்து விடுதலை. இந்த துன்பங்கள் அனைத்துமே அறியாமை மற்றும் அசுத்த இச்சைகளாலும் ஆசைகளாலும் ஏற்படுபவை. 127. இந்த மோட்சம் அல்லது விடுதலையை எய்திய பின்னர் நாம் அடைவது என்ன? நிர்வாணம். 128. நிர்வாணம் என்றால் என்ன? மாற்றங்கள் அணைந்தும் முழுவதுமாக ஒடுங்கிய நிலை. முழு ஓய்வு எய்திய நிலை. ஆசைகளும் மாயைகளும் துன்பங்களும் அற்றநிலை. மனிதனாக பிறப்பெடுக்கக்கூடிய அனைத்து சாத்தியங்களும் முடிவுற்ற நிலை. நிர்வாணம் அடைவதற்கு முன் மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறான். நிர்வாண நிலைக்குப்பின் அவன் பிறப்பெடுப்பதில்லை. 129. நிர்வாணத்தை பாலி மொழியில் வேறு எந்தெந்த சொற்களால் வரையறுத்துள்ளனர்? மேலும், நிர்வாணம் என்ற சொல்மீது நடந்த விவாதங்களை எங்கே காணமுடியும்? சைல்டர்ஸ் (R.C.Childers) உருவாக்கிய புகழ்பெற்ற பாலி மொழி அகராதியில் இவற்றை காணலாம். (ஆனால் சைல்டர்ஸ் நிர்வாணத்தை பெசிமிஸ்டிக் (அவநம்பிக்கை) பார்வையில் அணுகுகிறார். நிர்வாணத்தை முற்றழிவு, நிர்மூலமாக்கம் என பொருள்கொள்கிறார். பிற்கால அறிஞர்கள் இவரை நிராகரிக்கின்றனர்.) 130. ஆனால் சிலர் நிர்வாணம் என்பதை விண்ணுலகம் அல்லது சொர்க்கலோகம் என கற்பனை செய்கின்றனர். பௌத்தம் அதை கூறுகிறதா? இல்லை. புத்தரின் சீடர் குடதந்தா (Kutadanta) ”நிர்வாணம் எங்கே உள்ளது” என கேட்டதற்கு புத்தர் “அஷ்டாங்க மார்க்க விதிகள் எங்கே கடைபிடிக்கப்படுகிறதோ அங்கேயுள்ளது” என பதிலளித்தார். 131. நாம் மீண்டும் பிறவியெடுப்பதற்கு எது காரணம்? பொருள்வய தளத்தில் இருக்கும் விஷயங்கள் மீது கொள்ளும் நிறைவேறாத தன்னல ஆசை (சம்ஸ்கிருதத்தில் இது ’திர்ஷ்ணா’ என்றும், பாலியில் ’தன்ஹா’ என்றும் குறிப்பிடப்படுகிறது). புறவயமான நம்முடைய இருப்பு (பாவ) மீது நாம் கொள்ளும் தீராத தாகம் என்பது ஒரு விசை. அது அதற்கேயுரிய படைப்பு சக்தியை கொண்டுள்ளது. அது வலுவானது. ஆகவே அது உயிர்களை உலகியலுக்குள் இழுத்துக்கொண்டே இருக்கிறது. 132. நம்முடைய நிறைவுறா ஆசைகளின் தாக்கம் நம் மறுபிறப்பில் உள்ளதா? ஆம். மேலும் நம்முடைய நற்செயல் மற்றும் தீயசெயல்களின் தாக்கமும் அதில் இருக்கும். 133. நமது நற்செயல்களும் தீயசெயல்களும் நாம் எவ்வாறு என்னவாக மறுபிறப்பெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்குமா? ஆம் தீர்மானிக்கும். நற்செயல்கள் சிறந்த மகிழ்ச்சியான பிறப்பிற்கும், தீயசெயல்கள் இழிவான துன்பமான பிறப்பிற்கும் வழிவகுக்கும் என்பதுதான் விதிமுறை. 134. பௌத்த கோட்பாட்டின் முதன்மையான தூண் என்பது ஒவ்வொரு காரியமும் அதற்கே உரித்தான ஒரு காரணத்தால் விளைகிறது என்னும் கருதுகோள். சரிதானே? ஆமாம். ஒவ்வொரு காரியமும் அதற்கான சமீபத்திய காரணம் அல்லது பலகாலம் முன்புள்ள காரணத்தின் விளைவே. 135. இந்த காரணகாரியத்தை எப்படி அழைப்பது? தனிநபர்களை பொருத்தவரை இது கர்மம், அதாவது செயல். நம்முடைய செயல்களே நாம் அனுபவிக்கும் இன்பதையும் துன்பத்தையும் நமக்கு அளிக்கின்றன. 136. ஒரு தீய மனிதன் தன்னுடைய கர்மவினைகளின் விளைவுகளிலிருந்து தப்பிக்கமுடியுமா? தம்மபதம் இவ்வாறு கூறுகிறது: “ஒருவன் செய்த தீயசெயல்களால் அவனுக்கு வரும் துன்பங்களில் இருந்து தப்பிக்கும் இடம் இந்த மண்ணிலும், விண்ணிலும், கடலிலும், ஏன் மலை முகடுகளிலும் இல்லை” 137. ஒரு நல்ல மனிதன் தப்பிக்க முடியுமா? நற்செயல்களின் விளைவாக ஒருவர் இடம், உடல், சூழல் மற்றும் கற்றலுக்கான நல்ல அனுகூலங்களை தனது அடுத்த படிநிலையில் பெறுவார். இவை அவரின் தீய கர்மங்கள் நீங்கவும் உயர்நிலை எய்தவும் உதவிசெய்யும். 138. அந்த அனுகூலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன என்ன? கதி சம்பத்தி (நல்ல இடத்திற்கான அனுகூலம்), உபாதி சம்பத்தி (நல்ல உடல்), கலால சம்பத்தி (நல்ல காலச்சூழல்) மற்றும் பயோக சம்பத்தி (நல்ல ஆன்மீக சூழல்). 139. இது பகுத்தறிவுடனும் நவீன அறிவியல் அறிவுடனும் ஒத்துப்போகிறதா அல்லது முரண்படுகிறதா? துல்லியமாக ஒத்துப்போகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. 140. அனைத்து மனிதர்களாலும் புத்தர்களாக முடியுமா? எல்லா மனிதர்களுக்கும் அவர்களது இயல்பில் புத்தனாகும் தன்மை இல்லை. ஒரு புத்தன் நீண்ட கால இடைவெளிகளில் பல படிநிலைகளாக மட்டுமே வளர்கிறார். குறிப்பாக மானுடம் முழுமையாக நிர்வாணத்திற்கான பாதையை மறந்து ஒரு ஆசிரியனை வேண்டிஇருக்கையில் உருவாகிறார். ஆனால் எல்லா உயிரும் நிர்வாணத்தை அடையலாம், அறியாமையை களைந்து ஞானத்தை அடைவதன் வழியாக. 141. மனிதன் மீண்டும் நம்முடைய உலகில்தான் மறுபிறப்பெடுப்பான் என்று பௌத்தம் கூறுகிறதா? பொதுவான விதிமுறை இதுதான், அவர் தன் எல்லைகளை மீறிய வளர்ச்சிநிலையை அடையாதவரை. ஆனால் உயிர் வாழத்தகுந்த உலகங்கள் எண்ணற்றவை. ஒருவர் தன்னுடைய அடுத்த பிறப்பை எந்த உலகத்தில் எடுப்பான் என்பதையும், அது எவ்வாறு அமையும் என்பதையும் அவரது முந்தைய பிறப்பின் நல்ல மற்றும் தீய செயல்கள்தான் தீர்மானிக்கின்றன. வேறு வகையில் சொல்வதென்றால், அறிவியல் மொழியில் அவனுடைய ஈர்ப்பால் அது தீர்மானிக்கப்படுகிறது எனலாம். அல்லது எங்களது, அதாவது பௌத்தர்களது வார்த்தைகளில் சொல்வதென்றால் கர்மத்தின் படி தீர்மானிக்கப்படுகிறது எனலாம். 142. நம்முடைய பூமியை காட்டிலும் நன்கு வளர்ச்சியடைந்த அல்லது வளர்ச்சி குறைந்த உலகங்கள் உண்டா? பௌத்தம் உயர்ந்த மற்றும் தாழ்ந்த பலவகையான உலகங்கள் கொண்ட முழுமையான அமைப்பை பற்றி கூறுகிறது. ஒரு உலகத்தில் வசிப்பவர்களின் வளர்ச்சிநிலை ஒத்ததன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறுகிறது. 143. புத்தர் தனது மொத்த கோட்பாட்டையும் ஒரே பாடலில் ஒன்றாக சேர்த்தாரல்லவா? ஆம். 144. அதை கூறுங்கள்? அது தம்மபதம் 183-ஆம் பாடல்: ஸப்ப பாபஸ்ஸ அகாரணம் குஸலஸ்ஸ உபஸம்பதா ஸசித்த பரியோதபணம் ஏதம் புத்திம் ஸாஸனம் அனைத்துவித பாவகாரியங்களிலில் இருந்தும் விலகுதல், நன்மைகளை மட்டுமே செய்தல், மனதை தூய்மையாக்குதல்: இதுவே எப்போதும் புத்தர்களின் அறிவுறுத்தல் 145. இந்த பாடலின் முதல் மூன்று வரிகளில் மிக முக்கியமான பண்புகள் உள்ளதல்லவா? ஆம். முதல் வரி ’வினய பிடகா’வின் முழு மெய்ப்பொருளையும், இரண்டாவது வரி ’சுத்த பிடகா’, மூன்றாவது ’அபிதம்மபிடகா’வின் மெய்ப்பொருளையும் அடக்கியுள்ளது. இந்த பாடல் வெறும் எட்டு பாலி வார்த்தைகளால் ஆனது எனினும் பனித்துளிக்குள் நட்சத்திரங்கள் பிரதிபலிப்பதுபோல புத்த தர்மத்தின் முழு மெய்ப்பொருளும் இதில் ஒளிர்கிறது. 146. இத்தகைய போதனைகள் பௌதத்தை செயலூக்கம் கொண்ட மதமாக காட்டுகிறதா? அல்லது செயலின்மை கொண்ட மதமாக காட்டுகிறதா? “பாவச்செயல்களை தவிர்த்தல்” செயலின்மை எனலாம். ஆனால் “நெறிகளை கடைபிடித்தல்” மற்றும் ”தன்னுடைய மனத்தை தானே சுத்திகரித்தல்” ஆகியவை செயலூக்கம் கொண்ட பண்புகள். தீயசெயல்கள் இல்லாமல் இருப்பதை மட்டும் புத்தர் கற்பிக்கவில்லை, நேர்மறையான நல்லியல்புகளை கொண்டிருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். 147. ஒரு பௌத்தர் பின்பற்றவேண்டிய மூன்று சரணங்கள்*என்ன? அவை திரிசரணத்தில் வருகின்றன. திரிரத்திணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன: புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன் நான் தர்மத்திடம் சரணம் அடைகிறேன் நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன் இவை மூன்றும்தான் உண்மையில் ”புத்த தர்மம்”. 148. இந்த சூத்திரத்தை ஒருவன் மீண்டும் மீண்டும் ஓதுவதன் மூலம் என்ன செய்கிறான்? இதை ஓதுவதன் மூலம் அவன் புத்தரை எல்லாம் அறிந்த ஆசிரியனாக, நண்பனாக, முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறான். தர்மமானது சாராம்சமான நித்யமான நீதி மற்றும் சத்தியத்தை கொண்டது என்றும், சரியான மனஅமைதியை இப்புவியில் எய்துவதற்கான பாதையை காட்டுவது என்றும் உணர்ந்துகொள்கிறான். சங்கமானது புத்தர் போதித்த தம்மத்தை கற்பிப்பது என்றும், அதன் முன்னுதாரணம் என்றும் கொள்கிறான். 149. ஆனால் சங்கத்தின் உறுப்பினர்களில் சிலர் அறிவிலும் அறநெறியிலும் தகுதி குறைந்தவர்களாக இருப்பார்கள் அல்லவா? ஆம். ஆனால் புத்தரின் கற்பித்ததன்படி, ‘யார் கவனமாக தர்ம விதிகளை பின்பற்றியும், மனதை ஒழுங்குபடுத்தியும், புனிதமான அஷ்டாங்க மார்க்கத்தின் ஏதேனும் ஒரு படிநிலையில் முழுமை பெற்றும் அல்லது முழுமைபெற தீவிரமாக முயற்சிக்கிறார்களோ அவர்கள் மட்டுமே புத்தருடைய சங்கத்தின் உறுப்பினர்கள். திரிசரணத்தில் வரும் ‘சங்கம்’ என்பதற்கு வெளிப்படையாகவே ’அத்தா அறிய புகல’ என்றே பொருளுள்ளது. அதாவது, அஷ்டாங்க மார்கத்தில் ஒன்றை கற்று முழுமைபெற்ற உன்னதர்கள். காவியுடை அணிவதாலும், சமய வழிபாடுகளில் ஈடுபடுவதாலும் மட்டும் ஒருவர் தூய்மையோ, ஞானியோ அல்லது மரியாதைக்குரியவரோ ஆவதில்லை. 150. இதுபோன்ற தகுதியற்ற பிக்குகளை ஒரு உண்மையான பௌத்தன் வழிகாட்டிகளாக ஏற்கக்கூடாதுதானே? நிச்சயமாக கூடாது. 151. பௌத்தத்தை பின்பற்றும் குடியானவர்கள் பொதுவாக கடைப்பிடிக்கப்படவேண்டிய ஐந்து நெறிகள் அல்லது பஞ்சசீலம் என்பது என்ன? அவை பின்வரும் சூத்திரத்தில் உள்ளன. புத்த விகாரங்களில் பொதுவெளியில் ஓதப்படும் எந்த உயிரையும் கொல்லாமலும், தீங்கு செய்யாமலும் இருத்தல். பிறர் பொருளைக் களவாடாது இருத்தல். முறை தவறிய காமஉறவை தவிர்த்தல். மது வகைகளை உண்ணாது இருத்தல். பொய் பேசாது இருத்தல். (குடியானவர்கள் ஐந்து நெறிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. அவர்கள் முறைதவறிய காம உறவை தவிர்க்க வேண்டும். மண உறவை அல்ல. ஆனால் பிக்குகளுக்கு மண உறவு கண்டிப்பாக தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு குடியானவன் மொத்தமாக உள்ள பத்து நெறிகளில் எட்டு நெறிகளை குறிப்பிட்ட காலம் மட்டும் பின்பற்றுகிறான் என்றால், அந்த குறிப்பிட்ட காலத்தில் அவனுக்கும் மண உறவு தவிர்க்கப்பட்டுள்ளது. ஐந்து நெறிகள் புத்தரால் போதிக்கப்பட்டவை. அது அனைவருக்குமானது. ஐந்து அல்லது எட்டு நெறிகளை பௌத்தராக இல்லாதவர்களும் பின்பற்றலாம். அது அவர்களுக்கு பலனளிக்கும். திரிசரணத்தை பின்பற்றும் போதுதான் ஒருவர் பௌத்தர் ஆகிறார்.) 152. இந்த பஞ்சசீலங்கள் அதை படிக்கும் அறிவார்ந்த நபருக்கு உடனே உணர்வது என்ன? இச்சீலங்களை உறுதியாக பின்பற்றும் ஒருவன் மனித துயர்களின் ஊற்றுமுகத்திலிருந்து விடுபடுவான் என. வரலாற்றை படிக்கும்போது துயரங்கள் ஒவ்வொன்றும் இவற்றில் ஏதோ ஒன்றில் முளைத்ததாகத்தான் இருக்கும் என்பதை அறியலாம். 153. எந்த சீலங்களில் புத்தரின் தொலைநோக்கு ஞானம் மிக எளிமையாக கூறப்பட்டுள்ளது? ஒன்று, மூன்று மற்றும் ஐந்தாவது நெறிகள். கொலைசெய்தல், காமநாட்டம், போதைபழக்கம். இந்த மூன்றால்தான் தொன்னூற்றைந்து சதவிகித துயரங்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. 154. இந்த நெறிகளை கடைபிடிப்பதால் ஒரு மனிதன் அடையும் பலன்கள் என்னென்ன? ஒருவன் இந்த நெறிகளை பின்பற்றும் கால அளவை பொருத்தும், விதிகளின் எண்ணிக்கை பொருத்தும், குறைந்த அளவிலோ அல்லது கூடிய அளவிலோ நன்மையை அவன் அடைவான் என கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, அவன் ஒரு நெறியை முறையாக பின்பற்றி, மற்ற நான்கையும் முறையாக பின்பற்றாத போது அவனுக்கு அந்த ஒரு விதிக்கான நன்மை மட்டுமே கிடைக்கும். அவன் நீண்ட காலம் இதை கடைபிடித்தால் மேலும் நன்மைகள் கிடைக்கும். எல்லா நெறிகளையும் முறையாக பின்பற்றும் ஒருவனுக்கு உயர்ந்த மகிழ்ச்சியான இருத்தல் அமைந்துவிடுகிறது. 155. குடியானவர்கள் தானே முன்வந்து கடைப்பிடிக்கக்கூடிய நன்மை தரும் நெறிகள் வேறு உண்டா? அஷ்டாங்க சீலம் (எண்வகை நெறிகள்). இது மேலே குறிப்பிட்ட ஐந்து நெறிகளுடன் மேலும் மூன்று நெறிகளை சேர்த்துக் கொண்டது: முறையற்ற காலங்களில் உணவு உண்ணாதிருத்தல். பூ, வாசனைபொருட்கள், அலங்காரங்கள், நகைகள் மற்றும் நடனம், பாடல், இசை ஆகியவற்றை தவிர்த்தல். பெரிய உயர்ந்த மென்படுக்கையை பயன்படுத்தி உறங்குவதை தவிர்த்தல். இங்கே சொல்லப்பட்டுள்ள மென்இருக்கைகளும், மென்படுக்கைகளும் உலகியல் ஈடுபாடு கொண்டவர்களால் சுகத்திற்காகவும், புலன் இன்பதிற்காகவும் பயன்படுத்தப்படுவது. துறவிகள் இவைகளை தவிர்க்க வேண்டும். 156. ’உண்மையான மதிப்பு என்றால் என்ன’ என கேட்டால் ஒரு பௌத்தர் என்ன விளக்கம் தருவார்? உண்மையான மதிப்பு என்பது வெறும் புறசெயல்களால் வருவதல்ல. ஒரு செயலை தூண்டுவதற்கு காரணமாக உள்ளார்ந்த நோக்கத்தை பொறுத்தே உண்மையான மதிப்பு இருக்கும். 157. ஒரு உதாரணம் கூறமுடியுமா? ஒரு செல்வந்தர் லட்சங்கள் செலவுசெய்து மடாலயங்கள், விகாரங்கள், புத்தருக்கு சிலைகள் எழுப்புகிறார், திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் நடத்துகிறார், துறவிகளுக்கு உணவு மற்றும் ஏழைகளுக்கு பிச்சைகள் அளிக்கிறார், அல்லது மரம் நடுகிறார், குளம் வெட்டுகிறார், அல்லது வழிபோக்கர்களுக்கு விடுதி அமைக்கிறார். இவ்வாறு பல செயல்களை அவர் புகழ்தேடவோ, தன்னை முன்னிறுத்தவோ, அல்லது சுயநல தேவைகளுக்காகவோ செய்தால் அவருக்கு குறைந்த மதிப்பே கிடைக்கும். ஆனால் ஒருவர் அன்பான நோக்கத்தோடு, பிறன் நலனுக்காக மிகச்சில செயல்கள் செய்தாலும் அவருக்கு சிறந்த மதிப்பு கிடைக்கும். தீய நோக்கத்துடன் செய்யும் நற்காரியங்கள் பிறருக்கு பலன்கொடுக்கும், செய்பவருக்கல்ல. வேறொருவர் செய்யும் நற்காரியங்களை அங்கீகரிக்கும் ஒருவருக்கும் மதிப்பு பகிரப்படும், அவரின் உணர்வு உண்மையெனும் பட்சத்தில். தீய செயல்களுக்கும் இதே விதியே பொருந்தும். 158. எது எல்லா செயல்களைவிடவும் சிறந்த நன்மை அளிக்கும் செயல் என கூறப்படுகிறது? ’தர்மத்தை உலகெங்கும் பரப்புதலே’ வேறெந்த நற்செயலையும் விட சிறந்தது என்கிறது தம்மபதம். 159. எந்த புத்தகங்கள் புத்தருடைய போதனைகளின் மிகசிறந்த ஞானத்தை கொண்டுள்ளன? “திரிபிடகம்” என்று சொல்லப்படும் மூன்று தொகைகள் கொண்ட நூல். 160. அந்த மூன்று பிடகங்கள் அல்லது தொகைகளின் பெயர்கள் என்ன? வினயபிடகம், சுத்தபிடகம், அபிதம்மபிடகம். 161. இப்புத்தகங்களின் உள்ளடக்கம் என்ன? வினயப்பிடகம் சங்கத்தில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கவிதிகள் மற்றும் நெறிகளை கொண்டது. சுத்தப்பிடகம் எல்லோருக்கும் ஏற்புடைய நீதிநெறி போதனைகளை கொண்டுள்ளது. அபிதம்மபிடகம் புத்தரின் உளவியல் சார்ந்த கற்பித்தலை விளக்குகிறது, மேலும் இயற்கையின் இயக்கத்தை விளக்கும் இருபத்தினான்கு ஆழ்நிலை விதிகள் உள்ளன. 162. இந்த புத்தகங்கள் தெய்வீக அம்சத்தால் வெளிபடுத்தப்பட்டவை என பௌத்தர்கள் கருதுகின்றனரா? இல்லை. இவை மிகச்சிறந்த அனைத்து நெறிகளையும் கொண்டவை என மிகுந்தமதிப்புடன் அந்நூல்களை எடுத்துக்கொள்கின்றனர். இதை அறிவதன்மூலம் சம்ஸார (உலகவியல், பிறவிச்சுழல்) வலையின் சிடுக்குகளிலிருந்து மீள முடியும் என எண்ணுகின்றனர். 163. பிடகங்கள் மூன்றும் சேர்ந்த முழுதொகுப்பில் மொத்தம் எத்தனை வார்த்தைகள் உள்ளன? ரைஸ் டேவிட்ஸின் (Rhys Davids) கணக்குபடி 1,752,800 வார்த்தைகள். 164. பிடகங்கள் எப்போது முதன்முதலாக எழுத்துவடிவம் பெற்றன? பொ.மு.88-76 அல்லது புத்தர் பரிநிர்வாணம் அடைந்து முன்னூற்றி முப்பது ஆண்டுக்கு பின் சிங்கள அரசன் வட்டகமினி (wattagamini) தலைமையில் எழுத்துவடிவம் பெற்றிருக்கலாம். 165. புத்தரின் அனைத்து போதனைகளையும் நாம் பதிவுசெய்துவிட்டோமா? அநேகமாக இல்லை. அப்படி பதிவாகி இருந்தால் அது வினோதம்தான். புத்தரின் நாற்பத்தைந்து ஆண்டு கால பொது வாழ்வில் அவர் பல நூற்றுக்கணக்கான போதனையுரைகளை வழங்கியிருப்பார். ஆனால் அவைகளில் பல போர்களாலும், காழ்ப்புகளாலும் தொலைந்துள்ளன, பல தேசங்களுக்கு சிதறியுள்ளன, பல சிதைக்கப்பட்டும் இருக்கும். புத்த தர்மத்திற்கு எதிரானவர்கள் தென்னை மரம் உயரம் கொண்ட நம்முடைய புத்தக அடுக்குகளை தீயிட்டு அழித்தனர் என்றும் வரலாறு சொல்கிறது. 166. நாம் செய்யும் பாவங்களால் விளையும் பாதிப்புகளில் இருந்து தன்னுடைய மகிமையினால் நம்மை மீட்பவர் புத்தர் என பௌத்தர்கள் எண்ணுகின்றனரா? ஒருபோதும் இல்லை. மனிதன் தன்னைத்தானே விடுவித்துகொள்ள வேண்டும். அதை செய்யாதவரை அவன் மீண்டும் மீண்டும் பிறவியெடுத்துக்கொண்டே இருப்பான் - அறியாமைக்கு இலக்கானவனாக, இச்சைகளுக்கு அடிமையாக. 167. என்ன! பிறகு புத்தர் நமக்கும் பிற எல்லா உயிர்களுக்கும் என்னவாக உள்ளார்? அனைத்தையும் காண்பவர், எல்லாம் அறிந்த ஞானி, விடுதலைக்கான பாதையை கண்டறிந்து நமக்கு சுட்டிகாட்டியவர், மனித துன்பத்திற்கான காரணத்தையும் அதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியையும் தந்தவர். துன்பத்திலிருந்து தப்பிப்பதற்கான சரியான வழியை சுட்டிக்காட்டி அதில் நம் துணையாக வருபவர். விழிஇழந்த மனிதர்களாகிய நமக்கு சீறிப்பாய்ந்து சுழன்றோடும் ஆற்றின் மீதுள்ள குறுகிய பாலத்தை கடக்க உதவும் வழிகாட்டியும் ஆனவர். 168. புத்தருடைய கோட்பாட்டின் முழு ஆன்மாவையும் ஒரே வார்த்தையில் பிரதிநிதித்துவம் செய்ய முயற்சித்தால், எந்த வார்த்தையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்? தர்மம். அடிக்குறிப்பு: சரணம் - விஜேசிங்க முதலியார் (Wijesinha Mudaliar) எனக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: “சரணம் என்பதை ஆங்கிலத்தில் Refuge என ஐரோப்பிய பாலி அறிஞர்கள் மொழிபெயர்த்தனர், இங்குள்ள பாலி அறிஞர்கள் அதை ஒத்துக்கொண்டனர். இது பிழையானது. பாலி மொழியின் சொற்பிறப்பியல் (etymology) படியும், பௌத்த தத்துவத்தின் படியும் Refuge என்ற மொழிபெயர்ப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. Refuge என்பதற்கு திரும்பி வருதல், அடைக்கலமான இடத்திற்கு வருதல் என்று பொருள். உண்மையான பௌத்த கொள்கைக்களுக்கு இது பொருந்தாது. பௌத்தம் ஒவ்வொரு மனிதனும் தனக்கான விடுதலைக்காக அவன்தான் முயற்சிக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்பதை வழியுறுத்துகிறது. சரணம் என்பதன் வேர்ச்சொல் ’ஸ்ர்’ என்ற சம்ஸ்கிருத சொல், பாலியில் ’ஸர’. இதற்கு அர்த்தம் ’செல்’, ’முன்னகர்’. சுரிணம் என்ற சொல் ’வழிகாட்டுனர் ஒருவருடன் முன்னகர்தலை’ குறிக்கிறது. ’புத்தம் சரணம் கச்சாமி’ வரியை நான் இவ்வாறு மொழிபெயர்க்கிறேன்: ’சரணம் - எனது வழிகாட்டுனர், புத்தம் - புத்தருடன், கச்சாமி - நான் செல்கிறேன்’. ஆகவே திரிசரணத்திற்கு ‘Three Refuge’ என்ற மொழிபெயர்ப்பு தவறான புரிதலை அளிக்கிறது. மேலும் இது பௌத்தர்கள் உண்மையல்லாதவற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் மற்றும் இல்லாதவற்றில் அடைக்கலம் புகுகின்றனர் என பௌத்தத்தின் மறுத்தரப்புகள் சொல்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. Refuge என்ற சொல் நிர்வாணத்திற்கு பொருந்தும், நிர்வாணத்தின் ஒரு இணைச்சொல் சரணம். தலைமை பிக்குவான சுமங்கலா சொல்லியது இப்போது நினைவுக்கு வருகிறது. ஸர என்ற பாலி வேர்ச்சொல்லுக்கு அழித்தல் என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு. அப்படியென்றால், ’புத்தம் சரணம் கச்சாமி’ வரிக்கு இவ்வாறு பொருள்கொள்ளலாம்: ”நான் புத்தரிடம், தம்மத்திடம், சங்கத்திடம் செல்கிறேன், என் பயங்களை அழிப்பவை அவை. முதலாவது அவரின் போதனை, இரண்டாவது அவர் அடைந்த மெய்மை, மூன்றாவது அந்த மெய்மையின் பல சான்றுகளும் அதற்கான வழிமுறைகளும் அடங்கியது”. ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி விஷ்ணுகுமார் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார். இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார். இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. https://www.kurugu.in/2024/06/dhamma.html
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
119 all out 18 பேருக்கு சுடச்சுட…
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
https://yarl.com/forum3/topic/291526-யாழ்-கள-t20-உலகக்-கிண்ண-கிரிக்கெட்-போட்டி-2024/?do=findComment&comment=1718194
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
@விசுகு ஐயா, இப்படியே தொடர்ந்து உரையாடலாம். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. மாற்றமும் இல்லை. புலம்பெயர் அமைப்புக்கள், ஏன் தாயக அமைப்புக்களும் கூட, மக்களிடம் நேரடித் தொடர்புகளை வைத்திருக்கவில்லை. அவர்கள் இயங்குவதற்குத் தேவையான நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவதில்லை. அப்படித் திரட்ட வந்தால்தான் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். செயற்திட்டங்களை விளக்கவேண்டும். இவையெல்லாம் 2009 க்கு முன்னர் நடந்தவை. கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் அளித்தவர்களும் இருக்கின்றார்கள். ஆத்திரம் கொண்டு பொங்கினவர்களும் ஒரு சிலர் இருக்கின்றார்கள். பலர் அமைப்புக்களில் இருந்து ஒதுங்கியபின்னரும் 2009க்குப் பின்னர் பல அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் இப்போதும் இயங்குகின்றார்கள். இந்த அமைப்புக்கள் செயற்படத் தேவையான நிதிபலத்தை அவர்களின் சொந்த முதலீட்டில் உள்ள வியாபாரங்கள் மூலமும், அவர்களுக்கு இணக்கமான வியாபாரிகள் மூலமும் பெற்றுக்கொள்கின்றார்கள். அவர்களின் சொந்த முதலீடுகள் ஒரு காலத்தில் போராட்டத்திற்கு மக்களால் கொடுக்கப்பட்ட நிதிகளில் இருந்துதான் வந்தவை. இப்படித் தேவையான நிதிபலம் ஒவ்வோர் அமைப்புக்களுக்கும் இருப்பதால்தான் அவர்களால் தனித்தனியே தொடர்ந்தும் செயற்படமுடிகின்றது. ஒன்றிணையவேண்டிய தேவையும் இல்லை என்பதைத்தான் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கும் நிகழ்வுகள், சம்மர் விளையாட்டுப் போட்டிகள் உட்பட, காட்டுகின்றன. ஆக மொத்தத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் என்பது வியாபாரிகளின் கைகளில் சென்றுவிட்டது. சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. இதுவும் உங்களுக்கு வக்கிரமாகத் தெரியலாம்😄
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
கொடுக்கிறவர் நீங்கள். இதில் சொல்லப்பட்டவைக்கா கொடுக்கின்றீர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்பதற்கா கொடுக்கின்றீர்கள்?😃 👇🏾 https://tgte-us.org/?page_id=480
-
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரு வருடங்களுக்கு நீட்டிப்பதாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தையும் அதனடிப்படையில் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பதவிக் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால் பெரும்பாலான அமைச்சர்கள் அதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு இணக்கம் தெரிவிப்பார்கள் என அரசியல் வட்டாரங்களிலில் பேசப்படுகிறது. அதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் சர்வஜன வாக்கெடுப்பை எதிர்வரும் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ஜனாதிபதிக்கு சமீபமான பெரும்பாலானோரின் நிலைப்பாடு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது சிறந்தது எனவும் இரு வருடங்களில் நாடு ஸ்தீரமடைந்த பின் தேர்தலை நடத்துவது சிறந்தது என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது எனவும் அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1982ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்க மேற்கொண்ட சர்வஜன வாக்கெடுப்பு முறைமையை தற்போது மேற்கொள்ள முடியுமா என அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சிலர் சட்டத்தரணிகளிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவ்வாறு நீதிமன்றத்தின் முன்னிலையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படின் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவிலும், பத்தரமுல்லை ‘Waters edge‘ ஹோட்டலிலும் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம், தமிழ் உறுப்பினர்கள் சுமார் 30க்கும் அதிகளவில் காணப்படுவதால் அவர்களில் பெருமபாலானோர் சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் அவர்களின் நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக முன்வைக்கவில்லை. இதன் காரணமாக சர்வஜன வாக்கெடுப்புக்கு அவர்களின் விருப்பம் கிடைக்குமா கிடைக்காதா என்பது தொடர்பில் உறுதியான ஒரு சூழல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டுமெனில் அரசியலமைப்பை மீறிய ஒரு சட்டத்தை அரசாங்கம மூலம் தயாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், சர்வஜன வாக்கெடுப்பு கொண்டு வரப்படுமேயானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தயார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=279426
-
தமிழர் இருப்புக்காக செயற்றிட்ட வரைவு!
தமிழர் இருப்புக்காக செயற்றிட்ட வரைவு! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தயாரிப்பு (ஆதவன்) தமிழ்த் தேசிய இருப்புக்காக, ஐந்து அம்ச யோசனைகளைக் கொண்ட மூலோபாயக் கொள்கை மற்றும் செயற்றிட்ட வரைவைத் தயாரிக்க முன்முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினர் தெரிவித்ததாவது:- * தமிழர் தாயகத்தில் தமிழர் குடிப்பரம்பலை நிலைநிறுத்தலும், பிறப்பு வீதத்தை அதிகரித்தலும், அனைத்துத் தமிழர் கல்வி அடைவுமட்ட உயர்த்தலும் * தாயகக் கிராமங்களில் விஞ்ஞானத்துறை ஆசிரிய வளத்தை அதிகரித்தலும், வளப் பங்கீட்டை உறு திப்படுத்தலும் * தமிழர் பிரதேசங்களில் சுகா தார மருத்துவ சேவைகளை மேம்படுத்தலும் மருத்துவமனைகளில் மனிதவளம் குறிப்பாகத் தமிழ்த் துணை மருத்துவ ஆளணி மேம்பாட்டை அதிகரிக்கும் வேலைத்திட்ட முன்னெடுப்பும் * தமிழர் எதிர்கொள்ளும் விவசாய, மீன்பிடி, கால்நடை வளர்ப்புச் சவால்களை வெற்றிகொள்ளலும், ஏழைத்தமிழரின் நீண்டகால வாழ்வாதாரத்தை மேம்படுத்தலும் *இளையோர் எதிர்கொள்ளும் போதை, தற்கொலை, விபத்துப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர முயல்தலும், தமிழ் மாணவர்களின் அறநெறிக் கல்வியை வலுப்படுத்தலும்ஆகியனவே இந்த ஐந்து அம்சத் திட்ட யோசனைகளாகும். இதேவேளை நிபுணர் குழுவில் இணைந்து பங்களிக்க விரும்புவோர் எமக்கு அறியத்தரலாம் என்பதுடன், பொருத்தமானவர்களை முன்மொழியலாம் - என்றுள்ளது.(ஏ) https://newuthayan.com/article/தமிழர்_இருப்புக்காக_செயற்றிட்ட_வரைவு!
-
கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ் வந்துவர் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் கைது
கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ் வந்துவர் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் கைது adminJune 9, 2024 கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணம் சென்று, போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்தை விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடும்பத்தினருடன் சென்ற நபர் ஒருவர் அரியாலை பகுதியில், நாள் வாடகைக்கு வீடொன்றினை பெற்று குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த நபர் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரம் , மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படும் தாள்கள் என்பவற்றை நபர் ஒருவருக்கு விற்பனை செய்யும் நோக்குடன் காத்திருந்த போது , கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நபரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த பொருட்களையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட நபரை காவல்து நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அவர் குடும்பத்துடன் அரியாலை பகுதியில் தங்கியிருப்பது தெரிய வந்து , குறித்த வீட்டிற்கு காவல்துறைக் குழு சென்ற போது, வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2024/204032/
-
தமிழ் மக்கள்பொதுச்சபை - நிலாந்தன்
தமிழ் மக்கள்பொதுச்சபை - நிலாந்தன் “கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று சுயாதீனக் குழு நம்புகிறது. தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்டகால நோக்கில் பண்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியத்தையும் சமூகப் பொறுப்பையும் சுயாதீனக் குழு ஏற்றுக்கொள்கிறது. தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும். இனிவரும் காலங்களில் தமிழ் அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் அதிகரித்த தார்மீகத் தலையீட்டைச் செய்வதற்கு தேவையான வளர்ச்சியைத் தமிழ் சிவில் சமூகங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்”. இது கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுவின் அறிக்கையின் இறுதிப்பகுதி. அப்பொழுது நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காக மேற்படி சுயாதீனக்குழு உழைத்தது. அதற்காக கட்சித் தலைவர்களை சந்தித்தது. எனினும் சந்திப்பின் விபரங்களை ஓர் அறிக்கையாக வெளியிட்டதுக்குமப்பால் அக்குழு தொடர்ந்து செயல்படவில்லை. அந்த அறிக்கையில் கூறப்பட்டபடி ஒரு மக்கள் அமைப்புக்கான தேவை தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வந்தது. அந்த விவாதத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்படி சுயாதீன குழுவிலும் அங்கம் வகித்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் ஐந்தாண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வவுனியாவில் ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தினார்கள். 32பொதுமக்கள் அமைப்புகள் கலந்துகொண்ட சந்திப்பின் முடிவில் வவுனியா தீர்மானம் என்று அழைக்கப்படும் ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழு தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சித் தலைவர்களையும் கட்சிப் பிரமுகர்களையும் கட்சி சாரா முக்கியஸ்தர்களையும் சந்தித்தது. அதேசமயம் அச்சத்திப்புகளுக்குச் சமாந்தரமாக மக்கள் அமைப்புகள், மாவட்ட மட்ட ஒன்றியங்கள் போன்றவற்றையும் அக்குழு சந்தித்தது. கூட்டுறவாளர் ஒன்றியங்கள்; கடல் தொழிலாளர் ஒன்றியங்கள்; வணிகர் கழகங்கள்; பார ஊர்திகள் சங்கங்கள் போன்றவற்றை அக்குழு சந்தித்தது. இச்சந்திப்புக்களின் போது மக்கள் ஒரு பொது வேட்பாளருக்கு அமோகமாக ஆதரவு தெரிவித்தார்கள். எந்த ஒரு சந்திப்பிலும் யாரும் அது தேவைதானா என்று கேட்கவில்லை. கடந்த 15 ஆண்டு கால அரசியல் செயற்பாடுகளின் மீது அவர்கள் சலிப்பும் விரக்தியும் அடைந்து விட்டார்கள். அவர்கள் மாற்றத்தைக் கேட்கிறார்கள் என்று சந்திப்பில் கலந்து கொண்ட குடிமக்கள் சமூக பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள். இதில் அரசியல் கட்சிகளுடான சந்திப்பின் விவரங்களை அக்குழு கடந்த வாரம் ஓர் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையானது கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக்குழு வெளியிட்ட அறிக்கையோடு ஒரு விடயத்தில் அதிகம் ஒத்திருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் சில கட்சிகளைத்தவிர பெரும்பாலான ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகள் ஏறக்குறைய ஒன்றுதான் என்பதே அந்த ஒற்றுமை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக்குழு ஒரு கட்டத்துக்கு மேல் செயல்பட முடியவில்லை.ஏனெனில் கட்சிகளை ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒருங்கிணைக்கும் சக்தி தமிழ் மக்கள் பேரவைக்கு இருக்கவில்லை. அதாவது மக்கள் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்யக்கூடிய சக்தி மையங்களாக இருக்கவில்லை. ஆயின், மக்கள் அமைப்புக்கள் தங்களைப் பலமான சக்தி மையங்களாக வளர்த்தெடுத்துக் கொண்டால்தான் தமிழ் அரசியலை ஒரு புதிய பண்பாட்டை நோக்கிச் செலுத்தலாம் என்பதே கடந்த 15 ஆண்டுகளில் கற்றுக் கொண்ட பாடமாகும். இந்தப் பட்டறிவின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் கூடிய குடிமக்கள் அமைப்புகள் மீண்டும் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவெளிக்குப் பின் கடந்த ஐந்தாம் திகதி, தியாகி சிவக்குமாரனின் நினைவு நாளன்று, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள ராஜா கிரீம் ஹவுஸ் மண்டபத்தில் கூடின. இக்கூட்டத்தில் மேற்படி குடிமக்கள் சமூகங்களின் ஒன்றிணைவானது தன்னை “தமிழ்மக்கள் பொதுச்சபை” -Tamil people’s Assembly- என்று பெயரிட்டுக் கொண்டது. தமிழ் மக்கள் பொதுச் சபையானது தனது செயற்பாட்டுத் தேவைகளுக்காக கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி கட்டமைப்புகள் தேவையான புதிய கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் பொதுச்சபையைப் பலப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 15ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய தமிழ் மக்கள் பேரவை; தமிழ் மரபுரிமைப் பேரவை; பி2 பி மக்கள் இயக்கம் போன்றவற்றின் தொடர்ச்சியாக மற்றொரு புதிய மக்கள் அமைப்பு உதயமாகியிருக்கிறது. தமிழ்மக்கள் பொதுச்சபையானது ஒரு நிரந்தர பெயர் அல்லவென்றும் எதிர்காலத்தில் அதன் பெயர் அதன் கட்டமைப்புக்குள் உட்பட அனைத்தும் பொருத்தமான விதங்களில் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குடிமக்கள் சமூகங்கள் தங்களை பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கைதான். அதற்குச் சமாந்தரமாக பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்த பின் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து ஒரு கலப்புப் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிகிறது. இக்கலப்புப் பொதுக் கட்டமைப்பு அதற்கு வேண்டிய உப கட்டமைப்புகளை உருவாக்கி அவற்றின்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் என்றும் தெரிகிறது. பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஓர் உபகுழு; வேட்பாளருக்குடைய தேர்தல் அறிக்கை தயாரிக்க ஓர் உபகுழு; நிதி நடவடிக்கைகளுக்கு ஓர் உபகுழு என்று பல்வேறு உபகுழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒரு பொது வேட்பாளர் முன்னுறுத்தப்படுவார் என்றும் தெரிகிறது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் இணைந்து கூட்டாக உழைத்தால் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தும் விடயம் ஒப்பீட்டளவில் இலகுவானதாக இருக்கும். அது மட்டுமல்ல தமிழ் அரசியலில் அது ஒரு புதிய பண்பாட்டை வளர்க்கும். தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பொறுப்புக்கூறும் ஒரு பண்பாடு அது. அவ்வாறு பொறுப்புக் கூறும் பண்புடைய ஒரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கினால் அதன் விளைவாக கண்ணியமான, நேர்மையான, அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் அதிகமாக மேலெழுவார்கள். தனி நபர்களுக்காக, கட்சிக்காக வாக்குத் கேட்கும் மிதவாத அரசியல் பண்பாட்டை மாற்றி, தேசத்துக்காக வாக்கைத் திரட்டும் ஒரு புதிய பண்பாடு வளர்த்து எடுக்கப்படும். ஒருபுறம் தமிழ்மக்கள் தங்கள் தெரிந்தெடுத்த பிரதிநிதிகளை சந்தேகிக்கின்றார்கள்; திட்டுகிறார்கள். இன்னொருபுறம் தமிழ்மக்கள் பல துண்டுகளாக உடைந்துபோய்க் காணப்படுகிறார்கள். அவிழ்த்து விடப்பட்ட பாக்கு மூட்டை போல சிதறும் ஒரு மக்கள் கூட்டத்தை, ஒவ்வொரு நெல் மணியாகத் திரட்ட ஒரு புதிய அரசியல் பண்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு ஜனாதிபதித் தேர்தலை ஒரு களமாகப் பயன்படுத்துவது. தமிழ் மக்கள் பொதுச்சபையானது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தையொட்டி உருவாக்கப்பட்டாலும் அதன் இறுதி இலக்கு நீண்ட காலத் தரிசனத்தைக் கொண்டது என்பது வவுனியா தீர்மானத்தின் இறுதிப் பந்தியில் கூறப்பட்டிருக்கிறது. ஒரு தேசிய இனமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உச்சபட்ச தீர்வு ஒன்றைப் பெறும் விதத்தில் தமிழ் மக்களை பலப்படுத்துவதற்கு இவ்வாறான மக்கள் அமைப்புக்கள் அவசியம். தமிழரசியலை ஒரு புதிய பண்பாட்டை நோக்கித் திரட்டுவதற்கு இது போன்ற மக்கள் அமைப்புக்கள் அவசியம். கடந்த நூற்றாண்டில் கட்சிகள் தோன்றுவதற்கு முன்பு தமிழ் அரசியலில், மக்கள் அமைப்புக்கள்,மகா சபைகள்,வாலிப காங்கிரஸ்கள் போன்றன தோன்றின. கடந்த நூற்றாண்டில் முதலாவது தசாப்தத்தில் யாழ்ப்பாண சங்கம், மட்டக்களப்புச் சங்கம் போன்றன தோன்றின. அதன்பின் 1921இல் தமிழர் மகாசபை தொடங்கியது. 1924இல் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் தொடங்கியது. அதன்பின் கட்சிகள் அரங்கினுள் பிரவேசித்தன. கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் முதலில் ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம் 1968ல் தொடங்கியது. பின்னர் தமிழ் மாணவர் பேரவை 1970இலும், தமிழ் இளைஞர் பேரவை 1973இலும், 1976அளவில் “மனிதன்” இயக்கமும் தோன்றின. ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும் முதல் இரண்டு கட்ட ஈழப் போர்களின் போதும் அன்னையர் முன்னணிகள், பிரஜைகள் குழுக்கள் போன்ற மக்கள் அமைப்புகள் தோன்றின. 1980களின் ஆரம்பத்தில் கிராமிய உழைப்பாளர் சங்கம் தோன்றியது. 1981இல் யாழ் பல்கலைக் கழகத்தில் மறுமலர்ச்சிக் கழகம் தோன்றியது. 1985இல் யாழ் பல்கலைக்கழக கலாசாரக் குழு தோன்றியது. அதன் தொடர்ச்சியம் வளர்ச்சியாக, 1990களின் தொடக்கத்தில் அரங்கச் செயற்பாட்டுக்குழு தோன்றியது. அரங்கச் செயற்பாட்டுக்கு குழுவே பொங்கு தமிழ் பேரெழுச்சியை நொதிக்கச் செய்தது. யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின் யாழ்ப்பாணத்தில் முதலில் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கான மக்கள் அமைப்பு என்ற அமைப்பு இயங்கியது. அதன் தொடர்ச்சியாக மனிதநேய அமைப்புக்களின் இணையம் என்ற ஓர் அமைப்பு இயங்கியது. இறுதிக்கட்டப் போரில் அதாவது நாலாம் கட்ட ஈழப் போரில், சில கிறிஸ்தவ மனிதநேய அமைப்புகளைத் தவிர, குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் இயக்கங்கள் எவையும் இயங்க முடியாத அளவுக்கு சிவில் வெளி ஒடுக்கப்பட்டிருந்தது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் தமிழ்மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமைப் பேரவை, பி2 பி மக்கள் இயக்கம் போன்ற அமைப்புகள் தோன்றின. அதாவது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக மக்கள் அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அரசியல் இயக்கங்கள்; இளையோர் இயக்கங்கள்; மத மறுமலர்ச்சி இயக்கங்கள்; பிரஜைகள் குழுக்கள்; அன்னையர் முன்னணிகள்; கலாசாரக் குழுக்கள்…. என்று தமிழ்மக்கள் ஏதோ ஒரு மக்கள் இயக்கத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கி வந்திருக்கிறார்கள். கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்மக்கள் மத்தியில் மகத்தான மக்கள் அமைப்பு உருவாக்கிகளும் நிறுவன உருவாக்கிகளும் தோன்றியிருக்கிறார்கள். இந்த விடயத்தில் தமிழ் மக்களிடம் மிகச் செழிப்பான ஒரு பாரம்பரியம் உண்டு. அந்த செழிப்பான பாரம்பரிய அடித்தளத்தில் இருந்து இப்பொழுது ஒரு புதிய மக்கள் இயக்கம் தோன்றியிருக்கிறது. https://www.nillanthan.com/6787/