Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தமிழ் மக்களின் பொதுவேட்பாளராக அரியநேத்திரனைத் தெரிவு செய்துள்ளார்களாம்.. — --- 🌟 **Congratulations to Mr. P. Arienanthairan!** 🌟 We are immensely proud to celebrate our esteemed Tamil nationalist, **Mr. P. Arienanthairan**, a former member of parliament. His notable contributions to democratic politics, especially his introduction and selection by the LTTE for democratic endeavors, have been exemplary. Today, we are thrilled to announce that Mr. P. Arienanthairan has declared his candidacy as the common presidential candidate. His vision and dedication promise a bright future for our community and the nation. Join us in supporting and honoring his remarkable journey and steadfast commitment to democratic values.
  2. தமிழ் பொது வேட்பாளரின் பெயர் இன்று வெளியாகும் தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவுள்ள பொது வேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்கான பொதுவேட்பாளராக பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டு ஆராயப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.வி.தவராசா ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் அவர்கள் இருவருடனும் கலந்துரையாடி யாரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப் போகிறோம் என புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அறிவிப்பதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று புதன்கிழமை இதுபற்றி அவரிடம் வினவியபோது, பொது வேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என அவர் உறுதிப்படுத்தினார். https://thinakkural.lk/article/307506
  3. அழிவின் விளிம்பில் கௌதாரிமுனை! பணிப்பாளரின் ஆசியுடன் சட்டவிரோத மணல் அகழ்வு! adminAugust 6, 2024 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளை இலக்கு வைத்து மீண்டும் பாரிய மணல் கொள்ளை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (06.08.24) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், மக்கள் போராட்ட அமைப்புக்களது போராட்டத்தையடுத்து கடந்த நான்கு வருடங்களிற்கு மேலாக நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டிருந்த மணல் அகழ்வு தற்போது கனியவள திணைக்கள அதிகாரிகளது பங்கெடுப்புடன் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் நூற்றுக்கணக்கிலான டிப்பர்கள் கனரக வாகனங்கள் மூலம் மணல் ஏற்றியவாறு வெளியேறிக்கொண்டிருக்கின்றன. அதனால் கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் ஆகிய இரு கிராமங்களும் அடுத்து வரும் ஒரிரு வருடங்களில் இல்லாது போய்விடுமென அஞ்சுகின்றோம். ஏற்கனவே போதிய போக்குவரத்து, வீதி வசதிகளற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ள எமது மக்கள் தற்போதை கனரக வாகன பயன்பாட்டால் முற்றாக பரமன்கிராய் மற்றும் கௌதாரிமுனை பகுதிகளிலிருந்து வெளியிடங்களிற்கான போக்குவரத்து முடக்கத்திற்குள்ளாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். ஏற்கனவே கௌதாரிமுனை வீதியை வழிமறித்து போக்குவரத்திற்கு தடையேற்படுத்தியுள்ள மணலை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய கனியவளத்திணைக்களம் அனுமதிக்காமையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கனிய வளத் திணைக்கள யாழ்ப்பாண அலுவலக பணிப்பாளர் தனது பெயர் பலகையற்ற வாகனத்தில் இரவு பகலாக அப்பகுதிகளில் நின்று மணல் அகழ்வினை முன்னெடுக்கும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கின்றது. ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் மணல் கொள்ளையை தலைமை தாங்கிய நபரே தற்போது வடக்கிற்கு பணிப்பாளராக அனுப்பட்டுள்ளதால் பரமன்கிராய் மற்றும் கௌதாரிமுனை கிராமங்கள் இல்லாதொழிந்து போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இலங்கை கனிய வளத்திணைக்களத்தினால் பூநகரியின் பொன்னாவெளி பகுதியில் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்ட முருகைகல் அகழ்விற்கு எதிரான மக்கள் போராட்டம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பாரிய மணல் அகழ்விற்கென வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டு மக்களது கிராமங்கள் பாதுகாக்கப்படவேண்டும். தவறுமிடத்து பூநகரி பொன்னாவெளியில் இதே கனியவளத்திணைக்கள பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்படவிருந்த பாரிய முருகைக்கல் அகழ்வு எவ்வாறு தடுக்கப்பட்டதோ அதே போன்று மக்கள் வீதிகளில் களமிறங்கி பாரிய போராட்டத்தின் மூலம் அரச அலுவலகங்களை முடக்கி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதனை வெளிப்படுத்தி நிற்கின்றோம். அத்துடன் ஒட்டுமொத்த மக்கள் போராட்ட குழு அழைப்பின் பேரில் எதிர்வரும் 9ம் திகதியினுள் வழங்கப்பட்ட பெமிட் அனுமதிகள் இரத்துச்செய்யப்படாவிட்டால் கிளிநொச்சி மாவட்டம் தழுவிய போராட்ட நடவடிக்கைகளிற்கு எமது உறவுகளிற்கு பகிரங்க அழைப்புவிடுக்கின்றோம். ஏற்கனவே பொன்னவெளியில் இணைந்து போராடிய உறவுகள் எம்முடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். 01.ஜனாதிபதி தேர்தலை ஒட்டு மொத்த மக்களும் புறக்கணிப்போம். 02.கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் காற்றாலை பணிகளை முடக்க போராட்டங்களை ஆரம்பிப்போம். 03.மக்கள் பயணிக்க கௌதாரிமுனை வீதியை திருத்தி தர இயலாத வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் மணல் எடுத்துச்செல்ல வீதியை அனுமதித்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். 03.கனிய வளத்திணைக்கள வடமாகாண பணிப்பாளர் உடனடியாக இடமாற்றம் செய்யப்படாதவிடத்து மாவட்ட செயலகம் மற்றும் பூநகரி பிரதேசசெயலக அலுவலக முற்றுகைப்போராட்டத்தை முன்னெடுப்போம். அவரது யாழ்ப்பாணத்திலுள்ள ஆடம்பர பங்களா முன்னதாகவும் முற்றுகை போராட்டத்தை முன்னெடுப்போம். ஆதானி காற்றாலை மூலம் எமது பகுதிக்கு பாலும் தேனும் ஓடப்போவதாக சொல்லிக்கொண்டு எமது கிராமங்களையே இல்லாதொழிக்கும் மண் மாபியாக்களின் பின்னணியிலுள்ள அரசியல் தரப்பினையும் நாம் அறிந்துள்ளோம். அத்தகைய தரப்பினை எமது போராட்டத்தின் மூலம் விரைவில் அம்பலப்படுத்துவோமென்பதையும் அறியத்தருகின்றோம் என தெரிவித்தனர் https://globaltamilnews.net/2024/205642/
  4. யுத்தம் இல்லாத காரணத்தால் மதப்பிரச்சினையை ஏற்படுத்த வடக்கிலும், தெற்கிலும் சதி! - அநுரகுமார முப்படைகள் முன்னிலையில் அநுரகுமார குற்றச்சாட்டு! யுத்தத்தால் நீண்டகாலமாக தங்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்ட ரணிலும் மஹிந்தவும், யுத்தம் இல்லாமல் போனதால் இப்போது சோர்வடைந் திருக்கின்றார்கள். இதனால்தான் அவர்கள் மீண்டும் ஒரு மதப் பிரச்சினையை ஏற்படுத்த வடக்கிலும் தெற்கிலும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்று ஜே.வி.பி.யின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற முப்படையினர் கூட்டமைப்பின் தேசிய மாநாடு கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- "மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில் நாட்டில் நிலவிய உண்மையான பிரச்சினைகள் பற்றி பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி மக்களுக்குச் சரியான விடயங்களை எடுத்துரைத்தோம். எனினும் சிலர் உருவாக்கிய இனவாத அரசியல் ஏனைய எல்லா விடயங்களையும் மூடிமறைத்து முழு நாட்டினதும் கவனத்தை யுத்தத்தின் பால் வழிப்படுத்தியது. 1948ஆம் ஆண்டில் பெருந்தோட்ட மக்களின் குடியுரிமை நீக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டில் ஒரு பிரச்சினையை உருவாக்கி 1958ஆம் ஆண்டில் 'ஸ்ரீ' எழுத்தை அழித்தார்கள். 1965ஆம் ஆண்டில் இனவாதத்தை ஊக்குவிக்கும் பேரணிகள் நடத்தப்பட்டன. இவ்வாறாக இவர்கள் (சிங்கள ஆட்சியாளர்கள்) செய்த அத்துமீறல்கள் நீட்சியானவை. இதன் தொடர்ச்சியாக 1981ஆம் ஆண்டு யாழ் நூலகத்தைத் தீக்கிரையாக்கினார்கள். யாழ் மக்களின் ஆன்மீக பிணைப்பு நிலவிய நூலகத்தை தீக்கிரைக்காக்கும்போது அவர்களுடைய இதயங்கள் வெடித்துச் சிதறமாட்டாதா? 1983ஆம் ஆண்டில் கறுப்பு ஜுலை உருவாக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தல் முறைப்படி நடத்தப்பட்டிருந்தால் யாழ் .மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திருக்கும். எனினும் ஜே.ஆர் ஜயவர்தன தன்னுடைய 5ஃ6 பெரும்பான்மை அதிகாரத்தை பேணிவர செயலாற்றியதன் காரணமாக வடக்கில் ஆயுத போராட்டத்துக்கு அது வழிசமைத்தது. இதுவே, 1983ஆம் ஆண்டில் கறுப்பு ஜுலை காரணமாக வும் தற்கொலைக் குண்டுதாரிகள் உருவாகுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தது. 1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் டவுன் ஹோல் குண்டு வெடிப்புக் காரணமாகவே சந்திரிகா ஜனாதிபதியாகினார். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யுத்தமே முக்கியமான இடம் வகித்தது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த கௌரவத்துக்காக இரண்டாவது தடவையாகவும் மஹிந்த ஜனாதிபதியாக்கப்பட்டார். சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக வருவதும் யுத்தத்திற்கு தலைமைத்துவம் வழங்கியதாலேயே. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் உருவாக்கிய குண்டுப்பீதி காரணமாகவே கோத்தாபய ஜனாதிபதியானார். அவர்கள் யுத்தத்தை உருவாக்கி நீண்ட காலமாக அவர்களின் இருப்பினை உறுதிசெய்து கொண்டாலும் இப்போது ரணிலும் மஹிந்தவும் யுத்தம் இல்லாமல் போனதால் சோர்வடைந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு மதப்பூசலை ஏற்படுத்துவதற்காக வடக்கிலும் தெற்கிலும் முயற்சி செய்து வருகிறார்கள் என்பது எமக்கு தெரியும். அதனாலேயே அவர்களுக்கு தேசபந்து வேண்டும். அவர்கள் ஒருபோதுமே யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களாக மாறாமல் தமது அரசியலுக்காக அதனைப் பயன்படுத்தி வந்தார்கள். யோஷித்த ராஜபக்சவை கடற்படையில் சேர்த்துக் கொள்வதற்காக அதுவரை ஆட்சேர்ப்புக்கு இருந்த குறைந்த பட்ச தகைமையை குறைத்தார்கள். அத்துடன் நின்று விடாமல் பிரிட்டனில் ஒரு பாடநெறிக்காக ஒரு கோடியே எண்பது இலட்சம் ரூபா பொதுப்பணத்தை செலவிட்டார்கள். அதன் பின்னர் உக்ரைனுக்கு ஒரு பாடநெறிக்காக அனுப்பி 36 இலட்சம் ரூபாவுக்கு கிட்டிய பொதுப் பணத்தை செலவிட்டார்கள். அதன் பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுடன் அவரை இணைத்து 27 தடவைகள் வெளிநாடு செல்வதற்காக வாய்ப்பளித்தார்கள். இந்த நாட்டில் சாதாரண பெற்றோரின் பிள்ளைகள் யுத்தத்திற்கு பலியாகின்ற வேளையில் அவர்களின் பிள்ளைகள் யுத்தத்தின் பயனாளிகளாக மாறினார்கள். வடக்கிலுள்ள தாய் தந்தையர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் இன்னமும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் - என்றார். (ச) https://newuthayan.com/article/யுத்தம்_இல்லாத_காரணத்தால்_மதப்பிரச்சினையை_ஏற்படுத்த_வடக்கிலும்,_தெற்கிலும்_சதி!
  5. பிரபல பெண்கள் பாடசாலையில் பிள்ளையானின் சகாவினது சேட்டைகள்...! மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி : சாணக்கியன் MP ! By kugen பிரபல பெண்கள் பாடசாலையில் பிள்ளையானின் சகாவினது சேட்டைகள்...! மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி என பாராளமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளமன்றில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். , பல மாணவிகளுடன் சேட்டை விட்டுள்ளார். துணிந்த ஒர் மாணவியே வெளிகொனர்ந்துள்ளார். பெற்றோர்கள் இவ் விடயத்தில் மிகுந்த அவதானமாக செயல்பட வேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பிள்ளைகளை பாதுகாக்கவேண்டிய நிர்வாகமும் உடந்தை.. இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான் ) கட்சி ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் ஒருவர் பிரபல பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இவரை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சரின் நிலைப்பாடு என்னவென இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவிடம் நேரில் கேள்வி எழுப்பினேன். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பினேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ளார்.இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த ஆசிரியரை பொலிஸார் இன்றுவரை கைது செய்யவில்லை.தனது சட்டத்தரணி ஊடாக அவர் நீதிமன்றில் முன்னிலையாகுவார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பொலிஸாரின் கடமை இதுவல்ல,கோபிநாத் என்ற இந்த ஆசிரியர் தான் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகின்றார். இந்த மாணவியிடம் 'நான் குறிப்பிடுவதை போல் இருக்காவிடின் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்' என்று இந்த ஆசிரியர் மிரட்டியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்படவில்லை.இது தேசிய பாடசாலை. ஆகவே இந்த பிரச்சினைக்கு கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்துள்ளேன் என்றார். இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , சபாநாயகரே குறித்த பாராளுமன்ற உறுப்பினரிடம் நான் தகவல்களை கேட்டுள்ளேன்.கல்வி அமைச்சு ஊடாக தலையிட்டு,உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறு குறித்த சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்துகிறேன் என்றார் https://www.battinews.com/2024/08/mp_7.html
  6. வாட்ஸப்பில் இருந்து.. Dr முரளி வல்லிபுரநாதனின் குறிப்பு — மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 4.8.2024 ———- பகுதி 2- மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் ? ஏற்கெனவே முதலாம் பகுதியில், சில தினங்களுக்கு முன்னர் "மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக, இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்தவித சிகிச்சையும் இன்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார்" என்பதையும் "அதற்கு காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்து இருந்தேன். இந்த இரண்டாம் பகுதியில் ஒரு நோயாளி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதை விரிவாக ஆராய்வோம். "அதிகாலை இரண்டு மணியளவில் குருதிப் பெருக்குடன் அனுமதிக்கப்பட்ட தாயார் காலை 7.30 மணி வரை வைத்தியரினால் பார்வையிடப்படவில்லை" என்பதே தற்போது சம்பந்தப்பட்ட பலராலும் கூறப்படும் குற்றச்சாட்டாகும். 1. வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்டு அனுமதிக்கும் வைத்தியர் ஆரம்ப சிகிச்சை விடுதிகள் [preliminary care unit] உள்ள வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவில் உள்ள வைத்தியர் நோயாளர்களை முதலில் ஆரம்ப சிகிச்சை விடுதிக்கு அனுமதிப்பார்கள். அங்கு ஆகக் கூடியது நான்கு மணிநேரம் நோயாளர்கள் பராமரிக்கப்படுவார்கள். அதன் பின்னர் வீடு செல்லும் நிலையில் உள்ளவர்கள் வீட்டுக்கும் ஏனையவர்கள் உரிய விடுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவர். நோயாளி ஒருவரை விடுதிகளுக்கு அனுமதிக்கும் போது அவரது நோய்நிலையைக் கருத்தில் கொண்டு அனுமதிக்கும் வைத்தியர் (admitting officer) எந்த விடுதியில் நோயாளியை அனுமதிக்கவேண்டும் என்ற முடிவினை எடுப்பார். ஏனைய வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் நோயாளியைப் பார்வையிட்டு நோய்நிலை அடிப்படையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அல்லது சாதாரண விடுதிக்கு நோயாளியை அனுமதிப்பர். ஆரம்ப சிகிச்சை விடுதிகள் இருக்கும் வைத்தியசாலைகளில் கூட மகப்பேற்றியல் விடுதிக்குரிய நோயாளிகள் எவராவது விடுதியில் அனுமதிக்கப்பட வேண்டுமானால் -தாமதங்களைத் தவிர்த்து உடனடியாக உரிய துறைசார் வைத்தியர்கள் சிகிச்சைகளை ஆரம்பிக்க வசதியாக- நேரடியாகவே மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கும் நடைமுறை உள்ளது. 2. விடுதியில் கடமையில் இருக்கும் வைத்தியர் (duty officer) ஒரு நோயாளி விடுதியில் அதுவும் மகப்பேற்று விடுதியில் இரவில் அனுமதிக்கப்பட்டால், அவரைப் பார்வையிட்டு உரிய ஆரம்ப சிகிச்சைகளை ஆரம்பிப்பது, தேவை ஏற்படின் மகப்பேற்றியல் நிபுணருக்கு அறிவிப்பது ஆகியன அவ்வேளையில் கடமையில் இருக்கும் வைத்தியரது பொறுப்பாகும். மன்னாரில் குறித்த தாயாரை வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்ட வைத்தியர், அவரை அனுமதிக்கும்போது "சிகிச்சைக்கள (ward ) வைத்தியர் உடனடியாகப் பார்க்க வேண்டும்" என்ற குறிப்புடன் அனுப்பி இருந்ததாகவும், தாயார் விடுதிக்குள் அனுமதிக்கப்பவுடன், விடுதித் தாதி விடுதிக் கடமையில் இருந்த வைத்தியருடன் தொடர்பு கொண்டு தகவலைக் கூறியும் வைத்தியர் வரவில்லை என்றும்" குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 3. கடமையில் இருந்த தாதியர் நோயாளியின் நிலைமை மோசமடையும் போது சிகிச்சை களத்துக்கு பொறுப்பான வைத்தியர் நோயாளியை வந்து பார்க்கவில்லை என்றால் தாதி பொறுப்பான வைத்திய நிபுணருக்கோ அல்லது தாதிய நிர்வாகிகளுக்கோ அறிவிக்க வேண்டும். 'மறுநாள் காலை 7.30 மணியளவில் குழந்தையைப் பார்ப்பதற்காக வந்த குழந்தைகளுக்கான வைத்தியரே குழந்தையின் தாயார் மிகவும் மோசமான நிலையில் அவதானித்து உரிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தார்' என்று வைத்தியசாலையின் உள்ளகத் தகவல் கூறுகிறது. அதேவேளை, மரணமடைந்த இளம் தாயாரது தாயார் "மகளது நிலமை மோசமாக உள்ளதாக கூறியபோது "தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தம்மை விரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 'காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுததாகவும், நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியதாகவும்,தாம் மிகவும் கஷ்டப்பட்டுக் கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டதாகவும், இந்நிலையில் தாம் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள், பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள்' என்றும் கூறியுள்ளார். வயோதிபத் தாயாரது கூற்றின்படி "காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர். " என்பதும் தெரியவருகிறது. இதிலிருந்து வயோதிபத் தாயார் விளங்கிக் கொண்டது போல ஏழு யணியளவில் அவரது மகள் விழுந்த பின்னரும் வைத்தியர்கள் வந்ததாகக் கொள்ள முடியாதுள்ளது. மாறாக உள்ளகத் தகவல் கூறியவாறு, 7.30 மணிக்கு குழந்தைகளுக்கான வைத்தியர் வந்தபோது இளம் தாயார் இருந்த நிலையைக்க கண்டு பதறி அழைத்த பின்னரே மருத்துவர் பலர் வந்துள்ளார்கள் எனக் கொள்ளவேண்டியுள்ளது. மேலும், மகப்பேற்று விடுதியில் நோயாளியைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்வதற்குத் தாதியர்களோ சிற்றூழியர்களோ உதவவில்லை என்பதும் துலாம்பரமாகிறது. உதவவேண்டியது அவர்களது கடமையாகும். உதவியிருந்ததால் அவர்களுக்குத் தாயாரின் பாரதூரமான நிலைமை தெரியவந்திருக்கும். 4. பொறுப்பான வைத்திய நிபுணர் வைத்திய நிபுணர் தமது விடுதியில் அதுவும் மகப்பேற்று விடுதியில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாகக் கடமை வைத்தியர் அவசர அழைப்புகளுக்குக் குறித்த நேரத்திற்குள் வராது போனால் தாதியர்கள் நேரடியாக மகப்பேற்று நிபுணருக்கே அறிவிக்கும் ஒரு பொறிமுறையைச் செயற்படுத்தலாம். 5.மருத்துவ அத்தியட்சகர் மருத்துவமனைகளில் அன்றாடம் இடம்பெறக்கூடிய தவறுகளை இனங்கண்டு அவற்றை மீளவும் நடக்காதிருக்க உறுதிப்படுத்த வேண்டும். அதற்காகப் பல பல சுற்றறிக்கைகள், வழிகாட்காட்டிகள், மற்றும் விதிக்கோவைகள் உள்ளன. இந்த விடயத்தில் தற்போதுள்ள -புதிதாகக் கடந்த மாதமே பொறுப்பேற்ற- வைத்திய அத்தியட்சகரைக் காட்டிலும் முன்னர் இருந்தவர்கள் கட்டாயமாகப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஆவர். மேலும் கடந்த கால மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், தமது சொந்த மாவட்ட வைத்தியசாலையின் இழிநிலையைக் கவனிக்காது வெளிநாட்டுப் பயணங்களையும் தமது சொந்த வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தார்மீகப் பொறுப்பாளிகள் ஆவர். வேறுவிதமாகச் சொல்வதானால் சிந்துஜாவின் அநியாயச் சாவுக்கான கர்ம வினையானது நோயாளியைப் பாராதிருந்த பெருங்குடி வைத்தியர், மற்றும் அசட்டையாக இருந்த தாதியை மட்டுமல்லாமல் மேலே குறிப்பிட்ட அனைவரையும் சேரும். இது இவ்வாறிருக்க, 'மேற்படி விடுதியில் அந்த இரவில் கடமையில் இருந்த மருத்துவர் தென்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மாதத்தில் 2 வாரங்களே மன்னாருக்கு வருகை தந்து கொண்டு- ஒவ்வொரு நாளும் வேலை செய்பவராகவும், அத்துடன் தினமும் 4-6 மணி நேரம் வேலை செய்வதாக போலி குறிப்புகளை எழுதி- மாதம் 120 மணி மேலதிக வேலை செய்வதாகக் கணக்குக் காட்டிப் பல மாதங்களாக முழுச் சம்பளத்தையும், அத்துடன் மேலதிகக் கொடுப்பனவாக மாதம் தோறும் பல இலட்சம் ரூபாய்களையும் சுருட்டியவர்' என்றும் உள்ளகத் தகவல் சொல்கிறது. இதை விடத் தென்பகுதியில் பல பதவி வெற்றிடங்கள் இருந்த போதும் 'ஐஸ் அடிப்பதற்காக' வடக்குக்கு வந்தவர் என்பதும், 'இரவு 9 மணிக்கு பின்னர் இவர் வேறு உலகத்தில் இருப்பதாகவும், நோயாளிகளைக் கவனிப்பதில்லை' என்பதும் வைத்தியசாலையினுள் கூறப்படும் குற்றச்சாட்டாகப் பொதுமக்கள் மத்தியில் பேச்சடிபடுகிறது. இந்த வைத்தியரை ஆரம்ப விசாரணையின் பின் தண்டனைக்குரிய குற்றம் என்ற பெயரில், அவரது சொந்த இடத்துக்குப் பாதுகாப்பாக "தண்டனை இடமாற்றத்தின் மூலம்" அனுப்ப GMOA மாபியா திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலே குறிப்பிட்ட அனைத்து நடைமுறை மீறல்களுக்கும் வழிகாட்டிகளாக, பாதுகாவலர்களாக சுகாதாரத்துறைத் தொழிற்சங்கங்களே உள்ளன. நோயாளியைச் சுத்தப்படுத்த முன்வராது சம்பளம் பெறும் சிற்றூழியரில் தொடங்கி, கடமைக்கே வாராது சம்பளம் பெறும் வைத்தியர்கள் மற்றும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது கையறுநிலையில் உள்ள மருத்துவ நிர்வாகிகள் அனைவரும் தத்தமது கடமைகளைச் செய்ய வேண்டுமானால் முதலில் சுகாதாரத் தொழிற்சங்க மாபியாக்கள் இல்லாதொழிக்கப்படவேண்டும். எனவே, சிந்துஜாவின் சாவு மன்னாரில் இடம்பெற்ற கடைசி அநியாயச் சாவாக இருக்க வேண்டுமாயின், 1. கவனக்குறைவாக இருந்த குற்றவாளி தண்டிக்கப்பட்டுச் சிறைக்கு அனுப்ப பட வேண்டும். அதைச் செய்வதற்குத் தன்னார்வ சட்ட ஆலோசகர் ஒருவர் இறந்தவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது, ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்களால் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, அந்த கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணிகளாலேயே இந்த வழக்கு முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திறமையுள்ள சட்டத்தரணிகள் எவரையும் கொண்டிராத இந்தக் கட்சி உறுப்பினர்கள் அவர்களை நம்பிய வைத்தியர் அர்ச்சுனாவை விளக்கமறியலில் இருந்து மீட்கும் முயற்சியில் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில், இவர்களால் வழிநடத்தப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய நட்டஈடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சுயாதீன நீதியாளர்கள் அக்குடும்பத்தைப் பாரமெடுத்து நீதி பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். 2. தற்போதைய மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை என்பது உண்மையில் -GMOA மாபியாக் கும்பலால் வழங்கப்படும் ஆதரவுடன்- அறுபது வைத்தியர்களில் அரைவாசி வைத்தியர்களே ஒரு குறித்த நாளில் கடமைக்கு சமூகமளிப்பதால் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைப் பற்றாக்குறை என்பதைப் புரிந்து கொண்டு, அனைத்து வைத்தியர்களும் தினசரி கடமைக்குச் சமூகமளிப்பதை உறுதி செய்யும் வகையில் தீவிர கண்காணிப்பும் கணக்காய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும். உரிய கணக்காய்வுகளை மேற்கொண்டால் மோசடி செய்யப்பட்ட பல மில்லியன் ரூபாய்களை மீளப்பெற முடியும் என்பதுடன் அனைவரையும் வேலைக்கு வரவைக்கவும் முடியும். 3. இனியாவது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் தமது பிரதேச வைத்தியசாலையில் என்ன நடக்கிறது என்பதைக் கண் திறந்து பார்த்து உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும். கடந்த காலத்தில் சுகாதாரத் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட நிபுணராக கடமையாற்றியவன் என்ற வகையில் மாவட்ட பொது வைத்தியசாலையாக மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்க நான் எப்போதும் தயாராக உள்ளேன். 3. சூட்டோடு சூடாக மன்னார் மக்கள் ஒன்று திரண்டு கவன ஈர்ப்புப் போராட்டங்கள் ஊடாக உரிய அழுத்தத்தைச் சுகாதாரத் தொழிற்சங்க மாபியாக்களுக்கு எதிராகப் பிரயோகிக்க தவறினால் இன்னும் பல சிந்துஜாக்களை மன்னார் இழக்க நேரிடலாம். நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர் 6.8.2024
  7. மோடி பாணியில் பயணித்த லேடி ஷேக் ஹசீனா! -ச.அருணாசலம் மக்கள் புரட்சிக்கு முன்பு ராணுவம் மண்டியிட்டது. இரும்பு பெண்மணி என்று இறுமாந்திருந்த பங்களா தேச பிரதமர் ஷேக் ஹசீனா மக்கள் சக்திக்கு முன்பு வெறும் துரும்பானார். மோடி பாணியை அப்படியே காப்பியடித்த ஹசீனா உயிருக்கு பயந்து இந்தியாவில் அடைக்கலம். வங்க தேசத்தில் என்ன நடக்கிறது..? ஷேக் ஹசீனாவின் மக்கள் விரோத சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர். மாணவர் போராட்டத்தை ஒடுக்க ஷேக் ஹசினா உத்திரவின் பேரில் காவல் துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சோர்ந்தனர். இதன் காரணமாக வங்கதேசம் முழுவதும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 500 காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. ராணுவத்தின் துப்பாக்கி சூட்டால் மக்கள் போராட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை. ’’மக்களை தாக்க வேண்டாம்’’ என முன்னாள் ராணுவ தளபதிகள் களத்தில் குதித்தனர். ராணுவமும் பிரதமர் பேச்சை கேட்க மறுத்தது. பிரதமரை பாதுகாக்க வழியில்லை என கை விரித்தது ராணுவம். ஹசீனா இந்தியாவில் அடைக்கலமாகியுள்ளார். ஜனவரி 2024ல் – நடந்த தேர்தலை முக்கிய எதிர்கட்சிகள் புறக்கணித்த சூழலில் முறைகேடாக வெற்றி பெற்று நான்காவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்த ஹசீனாவின் இன்றைய சரிவு எதிர்பாராதது அல்ல. வங்க தேச விடுதலைப்போரில் (1971)பங்கு பெற்றவர்களின் உறவினர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும் வண்ணம் 30% இட ஒதுக்கீடு செய்வதை எதிர்த்த மாணவர்களின் போராட்டம் உண்மையில் ஹசீனா ஆட்சியின் அலங்கோலங்களை எதிர்க்கும் மக்கள் போராட்டத்தின் துவக்கப் புள்ளியாக அமைந்தது. கடந்த 2009 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருந்த அவாமி லீக் கட்சியும் அதன் தலைவரான ஷேக் ஹசீனாவும் வங்க தேச பொருளாதாரத்தை தலை நிமிரச் செய்தார் என ஒரு சிலர் பாராட்டினாலும், அந்த வளர்ச்சி சமதளத்தில் இல்லை. வங்க தேசத்தில் பெருகி வளர்ந்து வந்த வேலையில்லா திண்டாட்டமும், ஹசீனாவின் எதேச்சதிகார போக்கும், எதிர்கட்சிகளை (தலைவர்கள், தொண்டர்கள்) சிறையிலடைப்பதும், பொய்வழக்குகள் மூலம் எதிராளிகளின் குரல் வளையை நெறிப்பதும் மக்கள் மத்தியில் பெருத்த கோபத்தை கிளறியது. மக்கள் தங்களது எதிர்ப்பை, தங்களது அதிருப்தியை, தங்களது எண்ணங்களை எதிரொலிக்க எந்த சுதந்திரமும் இல்லாத நிலையில் மாணவர் போராட்டம் அவற்றுக்கெல்லாம் ஒரு வடிகாலாக வந்து சேர்ந்தது! அன்று பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்க தேசம் பாகிஸ்தானின் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்து , ஜனநாயக உரிமைகளுக்காக போராடியது. குறிப்பாக கிழக்கு பாக்கித்தான் தேர்தலில் வென்ற முஜிபுர் ரகுமானை பதவியேற்க விடாமல் தடுத்த யாகியாகான் அரசை எதிர்த்து, வங்க தேச மக்கள் கிளர்ந்து எழுந்தனர் 1971ல். முஜிபுர் ரகுமானை வஞ்சகமாக கைது செய்து சிறையிலடைத்து , வங்க மக்கள் மீது ராணுவ அடக்கு முறையை ஏவிவிட்ட பாகிஸ்தானின் ராணுவத்தலைமைக்கு எதிராக போராடிய கிழக்கு வங்க மக்களுக்கு இந்தியா உதவியது. பிரதமர் இந்திராவின் முயற்சியால் , பாக். ராணுவம் முறியடிக்கப்பட்டு கிழக்கு வங்கம் விடுவிக்கப்பட்டது, வங்க தேசம் (பங்களா தேஷ்) தோன்றியது, முஜிபுர் ரகுமான் அதன் பிரதமரானார். முக்தி வாகினி (Mukti Bahini) என்றழைக்கப்பட்ட கொரில்லாப் படை வீர்ர்கள் பாக்.ராணுவத்திற்கெதிராக போராடினர் , இவர்களை வங்க தேச விடுதலை போராளிகள் என முஜிபுர் அரசு அறிவித்து , அவர்தம் குடும்பத்தினருக்கு, வங்க தேச அரசு துறைகளிலும், திட்டங்களிலும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தது, இட ஒதுக்கீடும் செய்தது. பங்க பந்து (Banga bandhu- வங்கத்தின் நண்பன்) என்று பாராட்டப்பட்ட முஜிபுர் ரகுமான் பிரதமராக பொறுப்பேற்ற சில ஆண்டுகளிலேயே ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச்சென்றார். 1971ல்தோன்றிய முஜிபுர் ஆட்சியில் மனித உரிமை மீறல்களும், எதேச்சதிகாரமும், அடக்குமுறைகளும் 1974ம் ஆண்டுவாக்கில் பெருக தொடங்கின. 1975ல் பல கட்சி முறையை ஒழித்து ஒற்றை கட்சி ஆட்சி முறையை முஜிபுர் ரகுமான் வங்க தேசத்தில் ஏற்படுத்தினார். மக்கள் தலைவராக உயர்ந்து, மக்கள் விரோதியாக மாறிய முஜிபூர் ரகுமான். அவாமி லீக் கட்சியைத் தவிர அனைத்து கட்சிகளும் தடை செய்யப்பட்டன. பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது , சென்சார் முறை அமலுக்கு வந்தது, பாராளுமன்ற முறை மாற்றப்பட்டு அதிபர் ஆட்சி முறை அமலுக்கு வந்தது, முஜிபுர் ரகுமான் வங்க தேச அதிபரானார். நீதித்துறையின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. தொழிலாளர் விவசாய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தடை செய்யப்பட்டன, இடதுசாரி செயல்பாடாளர்களை ஒடுக்க ஜத்திய ரக்கி பகினி (Jatiya Rakkhi Bahini) என்ற வன்முறை கும்பலை அரசே உருவாக்கி, இடதுசாரிகளை வேட்டையாடியது. வங்க தேசத்து மக்கள் முஜிபுர் ரகுமானை வெறுத்து ஒதுக்க தொடங்கினர் . புதிய ஆட்சி முறை வந்த ஏழாவது மாத்த்தில் முஜிபுர் ரகுமான் ஆகஸ்டு 15,1975ல் படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய இட ஒதுக்கீடு பின்னாளில் பல குளறுபடிகளை சந்தித்தது, விடுதலை வீரர்கள் பட்டியலில் அவாமி லீக் கட்சியாளர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டதால் நாளடைவில் இந்த ஒதுக்கீடு (reservation) நியாயங்களை இழந்து அவாமி லீக் கட்சியினருக்கு அரசு வழங்கும் சலுகையாக மாறியது! இந்தச் சீரழிவை எதிர்த்த குரல் நீண்ட காலத்திற்கு முன்பே எழுந்தது. 2018ல் ஷேக் ஹசீனா அரசு இந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது. அந்த அரசாணையை 2024 ஜூன் வங்க தேச உயர்நீதி மன்றம் (High Court) ரத்து செய்தது, முன்பிருந்த கோட்டா (இட ஒதுக்கீட்டை) முறைக்கு மீண்டும் உயிர் கொடுத்தது. இதை எதிர்த்து கிளர்ந்தெழுந்த மாணவர்கள் போராட்டம் சரியாக ஜூன் 6ல் தொடங்கியது. அகங்காரத்தின் உச்சியில் இருந்த பிரதமர் ஷேக் ஹசீனா, போராடும் மாணவர்களை சமாதானப்படுத்தவில்லை. மாணவர்களை அழைத்து பேசாமல் அவர்களை துரோகிகள் (razakar) என்று வசை பாடினார் மாணவர்களுக்கெதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்! சத்ர லீக் (அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பு) உறுப்பினர்களை போரிடும் மாணவர்கள் மீது ஏவி விட்டார். இந்த அடக்குமுறையை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என முத்திரையிட்டு கைது செய்தார் ஷேக் ஹசீனா! போராட்டத்தை ஒடுக்குவதற்காக ‘இன்டர்நெட்’ சேவையை முடக்கி வைத்தது வங்க அரசு. பத்திரிக்கையாளர்களை, சமூக ஊடகங்களை தடை செய்தார். இதற்கு முன்னரே , வங்க தேச எதிர்கட்சிகள் ஒவ்வொன்றாக பொய் வழக்குகள் மூலம் முடக்கப்பட்டன, எதிர்கட்சி தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களது தனிமனித மற்றும் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டன. பி். என். பி. எனப்படும் வங்க தேச தேசீய கட்சியை தடை செய்தனர், அதன் தலைவர் முன்னாள் வங்க தேச பிரதமர் கலீதா ஜியா மீது ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். உடல் நலக் குறைவிற்கான மருத்துவ வசதிகளும் சிகிச்சைகளும் அவருக்கு மறுக்கப்பட்டது. மோடியைப் போலவே கார்ப்பரேட்களை போஷிப்பது, மக்கள் போராட்டங்களை ஒடுக்குவது, அரசு அமைப்புகளைக் கொண்டு எதிர்கட்சி தலைவர்கள் மீது வழக்கு, ரெய்டு, சிறை எனத் துன்புறுத்துவது, ஆதரவாளர்களுக்காக அதிகார துஷ் பிரயோகம் செய்வது, ஊடகங்களை விலை பேசி துதிபாட வைப்பது, மதவெறி சக்திகளை வளரவிட்டு, சிறுபான்மை இந்துக்களை தாக்க அனுமதித்துக் கொண்டு மதச் சார்பின்மை வேஷம் போடுவது, வங்க இஸ்லாமிய மக்களை விரோதியாக பார்க்கும் மோடி அரசுடன் நெருக்கம் பாராட்டுவது.. என ஜகத்ஜால வித்தை காட்டிய ஹசீனா இன்று வங்க மக்களால் கடுமையாக வெறுக்கபடுகிறார். நோபல் பரிசு பெற்றவரும் , வங்க மக்களின் வாழக்கையில் கிராமீன் வங்கி மூலம் ஒளியேற்றியவருமான பொருளாதார விற்பன்னர் முகம்மது யூனுஸ் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைக்கப்பட்டார். காரணம், அவர் ஹசீனாவின் ஜனநாயக விரோத செயல்களை கண்டித்தது தான். தனது செயல்களை விமர்சிப்பவர் யாராயினும் அவர்களை அடக்கி ஒழிப்பதை தமது அரசியல் வியூகமாக ஷேக் ஹசீனா கடைப்பிடித்ததால் , அவர் ஜனவரியில் நடத்திய தேர்தலும் சுதந்திரமற்ற, நேர்மையற்ற தேர்தலாக நடந்தேறியது. எதிர்கட்சிகள் சில தடை செய்யப்பட்டன, எதிர்கட்சிகள் பல இந்த தேர்தலை புறக்கணித்தன! ஒற்றைக் குதிரையாக ஓடி தன்னை வெற்றியாளராக அறிவித்துக் கொண்டார் ஷேக் ஹசீனா! நான்காவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்து தனது அகங்காரத்தை , ஆளுமையை வெளிப்படுத்தினார். இவர் இந்தியாவுடன் போட்ட மின்சக்தி வாங்கும் ஒப்பந்தம் (அதானி நிறுவனம் மூலம் இந்தியா அளிக்கும் மின்சக்தி) , இந்தியா ,நேபால், பூட்டான் தொடர் பாதையில் வங்க தேசத்தை இணைத்த ஒப்பந்தம், ஆகியவற்றால் மேலும் வலுப்பெற்று ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இத்தகைய திட்டங்கள் இந்தியாவிற்கு சாதகமாக வங்க தேச நலன்களுக்கு எதிராக உள்ளது என்ற எண்ணம் தீத்சா நதிநீர் பங்கீட்டில் இந்தியா (வங்கதேச கோரிக்கைகளுக்கு ) விட்டுக் கொடுக்காமல் கறாராக இருந்ததால் மேலும் வலுப்பெற்றது. இந்திய ஆட்சியாளர்கள் இந்திய சிறு பான்மையினரான இஸ்லாமியரை சதா சர்வகாலமும் பாகுபடுத்தி சிறுமை படுத்துவதும், வங்க மக்களை இந்திய நாட்டுக்கெதிரான கறையான்கள் என்று வசை பாடுவதும், அவர்களை இந்திய அரசியலில் பகடைக் காய்களாக சித்தரிப்பதையும் வங்க மக்கள் விரும்பவில்லை. வங்க தேசத்தை இந்துக்களை அடக்கி ஒடுக்கும் நாடு என சித்தரித்து குடியுரிமை திருத்தம் கொண்டு வந்த பாஜக ஆட்சியாளர்களுடன்- கை கோர்த்துக் கொண்டு ஷேக் ஹசீனா அரசு ஒப்பந்தங்கள் போடுவது வங்க தேச நலனுக்கு எதிரானது என்ற எண்ணத்திற்கு வங்க மக்கள் வந்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் அரசு ஆதரவு அமைப்பான சத்ர லீக்கின் கண் மூடித்தனமான தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இத்தகைய வன்முறை வங்க தேச மக்களை ஹசீனா அரசிற்கெதிராக ஒன்றுகூட வைத்தது. அதே சமயம் ஷேக் ஹசீனாவிற்கு இந்திய ஆட்சியாளர்கள் ஆதரவளிப்பதும், வங்க மக்களை சினத்திற்குள்ளாக்கியது. எனவே, ”ஹசீனா பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கை ”இந்தியாவின் சொற்படி நடக்கும் ஹசீனா பதவி விலக வேண்டும்” என்பதாகவே முடிகிறது! ஹசீனாவை ஆதரித்து துதி பாடிய ஊடக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, மக்களால் என்பது கவனத்திற்கு உரியது. அதிகாரத் திமிரில் ஆட்டம் போட்ட 20 க்கு மேற்பட்ட அவாமி லீக் தலைவர்கள் போராட்டக்கார்களால் கொல்லப்பட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் ஐ.நா பொதுச்செயலரும் புதிதாக அமையும் அரசு வன்முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கூறி “மாற்றத்தை” ஏற்றுக் கொண்டு வரவேற்றுள்ளனர். இந்திய ஆட்சியாளர்கள் ஹசீனாவுக்கு அடைக்கலம் தந்துள்ளதும், வங்க மக்களின் உணர்வை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும், இதன் காரணமாக அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்படுவதை பொருட்படுத்தாதும் பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. ”ஷேக் ஹசீனா விலகியது இந்திய தேசீய நலன்களுக்கு நல்லதல்ல, வரவிருக்கும் ஆட்சி இந்தியாவிற்கு அனுசரணையாக இருக்குமா” என்ற கருத்துக்களை சில ஊடகங்கள் முன்வைக்கின்றனர். ஹசீனா ஆட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தை, ” இது முழுக்க, முழுக்க அமெரிக்க ஏகாதிபத்திய சதி…” என்று வங்க கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது. இது மக்களிடம் இருந்து அந்தக் கட்சி எந்த அளவுக்கு அன்னியப்பட்டுள்ளது என்பதையும், இந்த எழுச்சியை பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு அது பின் தங்கி இருப்பதையுமே காட்டுகிறது. முகம்மது யூனுஸ் இந்த நிலையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகம்மது யூனுஸ் போராட்டக்காரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் பொருளாதார, வங்கி சார்ந்த பல உயரிய பதவிகளை முகமது யூனுஸ் அலங்கரித்துள்ளார். பாரீசில் நடைபெற்று வரும ஒலிம்பிக் போட்டிகளின் ஆலோசகராகவும், தூதராகவும் செயல்பட்டு வருகிறார் முகமது யூனுஸ். ஹசீனா அரசு இவர் மீது ஏராளமான வழக்குகள் போட்டு சிறையில் தள்ளியதால், இவருக்கு மக்கள் அனுதாபம் கூடியது. இவரது தற்காலிக நியமனம் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளது. என்ன ஒரு துரதிர்ஷ்டமெனில், வங்க தேசத்தில் இந்த மக்கள் புரட்சியின் மூலம் ஒரு சிறந்த மக்கள் தலைவர் கிடைத்துவிட்டார் என யாரையும் அடையாளம் காண முடியவில்லை. பார்ப்போம். ச.அருணாசலம் https://aramonline.in/18765/sheikh-hasina-bengaladesh/
  8. மாடல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்! -சுப. உதயகுமாரன் திராவிட மாடலைப் புரிந்துகொள்வோம் – 4 சாதாரண மக்களை முன்னிறுத்தி சிந்தித்து செயல்பட்ட கேரளா மாடல்!கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க, சராசரி மக்களை சக்கையாக பிழிந்த குஜராத் மாடல்! கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அனைவருக்குமாக்கிய கியூபா மாடல்..போன்றவற்றை பார்க்கையில் திராவிட மாடல் எந்த ரகம் எனப் பார்ப்போமா..? ‘மாடல்’ என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்பதற்கென முன்னிறுத்தப்படும் அழகுப் பதுமைகளை, கட்டுமஸ்தான இளைஞர்களை மாடல் என்றழைக்கிறோம். ஓர் ஓவியருக்கு அல்லது புகைப்பட நிபுணருக்கு மாதிரியாக இயங்குபவரும் மாடல் தான். ஒருவரை மாடல் என்றழைப்பதன் மூலம் ஒரு நல்ல முன்னுதாரணத்தை உருவாக்குபவர் என்றும் கொள்ளலாம். உங்களின் கனவு வீடு ஒன்றைக் கட்டுவதற்கு முன், சிறிய நகல் ஒன்றை உருவாக்கிப் பார்க்கிறீர்களே, அதன் பெயரும் மாடல் தான். சமூக-பொருளாதார – அரசியல் தளத்தைப் பொறுத்தவரை, சில அடிப்படை விழுமியங்களை ஏற்றுக் கொண்டு, குறித்த நகர்வுகளை அமைத்துக் கொண்டு, விரும்பிய விளைவுகளை வென்றெடுத்து, முன்னுதாரணமாய் நின்று முனைந்து செயல்படுவதே மாடல் என்றாகலாம். கேரளாவின் இடதுசாரி மாடல்; கடந்த 1970-களிலிருந்து ‘கேரளா மாடல்’ குறித்த உலகளாவிய விவாதம் ஒன்று நடந்தது. அதாவது, மிகக் குறைந்த வருமானமே ஈட்டினாலும், கேரள மாநில மக்கள் எழுத்தறிவு அதிகம் பெற்றிருந்தார்கள். அவர்களின் உடல் நலம் உன்னதமாக இருந்தது. அரசியல் ரீதியாக தன்முனைப்புடன் செயல்பட்டார்கள். கேரளத்தின் பொதுவான மனித மேம்பாட்டுக் குறியீடுகள் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடப்படும் அளவுக்குச் சிறந்தவையாக இருந்தன… என்றெல்லாம் பொருளாதார வல்லுனர்கள் பாராட்டினார்கள். கேரளா 1956-ஆம் ஆண்டு தனி மாநிலம் ஆனதிலிருந்து, உடல் நலம், கல்வி எனுமிரண்டையும் முதன்மை விடயங்களாகப் பார்த்தது. இவை தவிர, கேரளம் பெற்றிருந்த உயர்ந்த அடிப்படை ஊதியம், நிலச் சீர்திருத்தம், சாலைகள் விரிவாக்கம், வலுவானத் தொழிற்சங்கங்கள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்கள்தான் கேரளத்தை உலகுக்கு உயர்த்திக் காட்டின. இறப்பு விகிதம் குறைந்து போனதால், கேரள மாநிலத்தின் மக்கள் தொகை உயர்ந்து நின்றது. நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசிகள் வழங்குவது, தொற்று நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறைகள், பேறு காலத்துக்கு முந்தைய மற்றும் பிந்தையச் சேவைகள் போன்றவை அம்மக்களுக்கு எளிதாகக் கிடைத்தன. உலகச் சுகாதார நிறுவனத்தின் உதவியோடு இந்தியாவெங்கும் தடுப்பூசிகள் போடப்படுவதற்கு முன்னரே, 1970-களில் கேரள மாநிலம் அங்கே வாழ்ந்த கர்ப்பிணிகளுக்கும், கைக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போட்டு முடித்திருந்தது. இன்னோரன்ன நடவடிக்கைகளால், கேரள மக்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பு உயர்ந்திருந்தது. அவர்கள் குறைந்த அளவிலான தனிமனித வருமானமே ஈட்டிக் கொண்டிருந்தாலும், உயர்ந்த நல்வாழ்வுக் குறியீடுகளைப் பெற்றிருந்ததால், ‘கேரளா மாடல்’ பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது. கடந்த 1980 மற்றும் 1990-களில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் கேரளா மாடல் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அது மூன்றாம் உலக நாடுகளுக்கு உற்றதோர் எடுத்துக்காட்டாக முன்வைக்கப்பட்டது. ‘வளர்ச்சி’ என்பது மக்கள் தாங்கள் வாழ விரும்புகிற வழியில் வாழ்க்கையை வாழச் செய்யும் திறன்களை வழங்க வேண்டும் என்கிறார் அமர்த்யா சென். அவர் அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்கிறார். அவர்கள் சீனர்களை விட, கேரளாக்காரர்களை விட செல்வந்தர்கள்; ஆனால் இவர்கள் இருவரையும் விட கருப்பினத்தவர்களின் ஆயுட்காலம் குறுகலானது. ஏழ்மை என்பது குறைந்த வருமானம் கொண்டிருப்பது அல்ல; மாறாக, திறன் இழப்பு தான் ஏழ்மை என்கிறார் சென். அதே போல, ”பஞ்சம் என்பதை உணவுப் பற்றாக் குறை என்று புரிந்து கொள்வதை விட, உணவை வாங்கிக் கொள்ளும் பொருளாதாரச் சக்தி மற்றும் நிலையானச் சுதந்திரம் ஆகியவற்றை இழப்பது தான் பஞ்சம் எனக் கொள்ள வேண்டும்” என்கிறார். பொருளாதார மாற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஊதியத்தையும், உரிமைகளையும் வளர்த்தெடுப்பது தான் சிறந்த வழி என்கிறார் சென். ‘உலகமயமாதல் செல்வச் செழிப்பை உருவாக்கித் தருவதாகவும், பலரை பணக்காரர்கள் ஆக்குவதாகவும்’ அதன் ஆதரவாளர்கள் பூரிப்படைகிறார்கள். ஆனால், எதிர்ப்பாளர்களோ ”உலகமயமாக்கல் என்பது ஏழை நாடுகளின் வளங்களைச் சுரண்டி, சூழியல் நலத்தைச் சீரழித்து, உலகின் மீது வணிகத் தன்மையையும், போட்டி மனப்பான்மையையும், முதலாளித்துவச் சுரண்டலையும், நுகர்வுக் கலாச்சாரத்தையும் சுமத்துகிறது” என்கின்றனர். மூன்றாம் பார்வையாக, அமர்த்யா சென் கல்வி, உடல் நலம் போன்றவற்றுக்கான சமூகச் செலவுகளை அதிகப்படுத்தி அதையே நவீன உலகின் பொருளாதார வெற்றியின் அடிப்படையாகப் பார்க்க வேண்டும் என்று வாதிடுகிறார். மக்களின் வருமானம், அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு, மொத்த தேசிய உற்பத்தி (ஜி.என்.பி.) போன்றவற்றை விட, மக்களின் அன்றாட வாழ்வில் வளர்ச்சி ஏற்படுத்தும் நல்ல விளைவுகளையே பொருளாதார நலத்தின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறார் சென். இதைத் தான் அன்றே செய்தது கேரளா மாடல். அதனை அடியொற்றித் தான் கேரளம் இப்போதும் சிந்திக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் வரை கேரளத்தின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய தாமஸ் ஐசக் இப்படிக் கூறுகிறார்: “கேரளாவைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு ஒரு தகவல், குடிமக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்பான அனைத்து சமூகக் குறியீடுகளிலும் கேரளா இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமல்ல, அது தேசிய சராசரியை விட வேகமாக வளர்ந்து வருகிறது. கேரளாவில் தனிநபர் வருமானம் 60% அதிகம். சம பங்கு வளர்ச்சியுடன் முன்னேறுவதற்கு எடுத்துக்காட்டு கேரளா” (தீக்கதிர், 18.07.2024). அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய கியூபா மாடல்; கேரளா மாடல் மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட அதே நேரத்தில், கியூபா என்கிற ஒரு சிறிய நாடு, உலக வல்லரசான அமெரிக்காவின் எதிர்ப்பையும், அடக்குமுறைகளையும் மீறி திறம்பட இயங்கிக் கொண்டிருந்ததும் உலகெங்கும் உற்று நோக்கப்பட்டது. கியூபா 1970 முதல் 1985 வரை கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பெருமளவு வெற்றி கண்டது. இல்லாமையை இல்லாமலாக்கிய அந்நாடு, தொழிலாளர் கூட்டுறவு அமைப்புக்களைத் தோற்றுவித்து, தமக்கான வேலைகளை உருவாக்கி உன்னதமாக இயங்கியது. அமெரிக்க–சோவியத் பனிப் போரின் போது கியூபா சோவியத் ஒன்றியத்தின் உதவியோடு தான் நிலை நிற்க முடிந்தது. அதே போல, கியூபாவின் அடிப்படை பொருளாதார அமைப்பில் பெரிய மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. சோவியத் ஒன்றியம் தகர்ந்தபோது, அவர்கள் வழங்கிய மானியங்கள் மறைந்து, உள்நாட்டு உற்பத்திப் பொருளான சர்க்கரையின் விலையும் குறைந்து. கியூபாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 33 விழுக்காடு சரிந்தது. ஆனாலும், இன்றளவும் வீட்டு வசதி, போக்குவரத்து போன்றவை கியூபாவில் மலிவாக இருக்கின்றன. அரசு மானியத்தோடு கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள் மக்களுக்கு தேவையான அளவு கிடைக்கின்றன. கடந்த 2010-களில் தனியார் சொத்துக்களும், அந்நிய முதலீடுகளும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2021-ஆம் ஆண்டு மனித வளர்ச்சிக் குறியீட்டில் 191 நாடுகள் கொண்ட பட்டியலில் கியூபா 83-வது இடத்தைப் பெற்றது. சாதாரண மக்களை முன்னிறுத்திச் சிந்தித்த, செயல்பட்ட கேரளா மாடல், கியூபா மாடலைப் போலல்லாமல், இந்தியாவில் இன்னொரு மாடல் ஏகத்திற்கும் புகழ்ந்துரைக்கப்படுகிறது. அது நரேந்திர மோடி முதல்வராகப் பணியாற்றி முன்னின்று நடத்திய குஜராத் மாடல். மேற்குறிப்பிட்ட இடதுசாரி மாடல்களிலிருந்து பெரிதும் மாறுபட்ட இந்த இந்துத்துவா வலதுசாரி மாடல் தனியார் மயத்தைப் போற்றியது. மோடியின் கீழ் குஜராத் உலக வங்கியின் ‘எளிதாக வியாபாரம் செய்யும்” (“ease of doing business”) தரப் பட்டியலில் முதன்மை வகித்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களும், வரிச் சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன. முதலீடுகளைக் கவர்வதற்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர் நலச் சட்டங்கள் பலவீனப்படுத்தப்பட்டன. மோடி அரசுக்கு எதிராக மதவாதக் குற்றச்சாட்டுகள் எழுந்த போதெல்லாம், மேற்படி குஜராத் மாடல் கொடி உயர்த்திக் காட்டப்பட்டது. உண்மையில், கல்வி, ஊட்டச்சத்து, தனிமனித முன்னேற்றம், ஏழ்மை ஒழிப்பு போன்றவற்றில் குஜராத் பின்தங்கியிருந்தது. ஐந்து வயதுக்கும் குறைவானக் குழந்தைகளில் சற்றொப்ப 45 விழுக்காடு பேர் குறைந்த உடல் எடை கொண்டவர்களாகவும், 23 விழுக்காடு பேர் ஊட்டச்சத்து இல்லாதவர்களாகவும் துன்புற்றதாக மாநில பட்டினிக் குறியீடு கணக்கெடுப்பு தெரிவித்தது. இந்திய அரசும், யுனிசெப் அமைப்பும் சேர்ந்து நடத்தியக் கணக்கெடுப்பின்படி, மோடி அரசு குஜராத் குழந்தைகளுக்கு போதுமான அளவு தடுப்பூசி வழங்கத் தவறிவிட்டது என்று கண்டறியப்பட்டது. கடந்த 2001 முதல் 2011 வரையிலானக் காலக்கட்டத்தில் ஏழ்மை ஒழிப்பு, பெண்கள் எழுத்தறிவு போன்ற பல்வேறு விடயங்களில் குஜராத் மாநிலம் தேக்க நிலையில் தத்தளித்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு, அம்மாநிலம் ஒட்டுமொத்த இந்தியாவில் ஏழ்மையில் 13-வது இடத்தையும், கல்வியில் 21-வது இடத்தையும் பெற்றிருந்தது. அதே ஆண்டுக்கான மனித வளர்ச்சிக் குறியீட்டில், 21 இந்திய மாநிலங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தையேப் பிடித்தது குஜராத். குஜராத் மாநில அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் பிற மாநிலங்களைவிட மோசமாகவே இருந்தது. குஜராத் அரசின் சமூக நலக் கொள்கைகள் இசுலாமியர்களை, தலித் மக்களை, ஆதிவாசிகளை உள்ளடக்காமல், பெரும் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியது. முன்னேற்றம் என்பது நகர்ப்புற நடுத்தர வர்க்கத்துக்கு மட்டுமானதாகவே இருந்தது. கிராமப்புற மக்களும், ஒடுக்கப்பட்டச் சாதிகளைச் சார்ந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டனர். மோடி அரசு தேசிய சராசரியைவிடக் குறைவாகவே கல்விக்கும், சுகாதாரத்துக்கும் செலவிட்டது. பனிரெண்டு ஆண்டுகளாக குஜராத்தின் முதல்வராகப் பணியாற்றி முன்னெடுத்த இந்த குஜராத் மாடலின் படுதோல்விகளை மறைப்பதற்காக, 2020-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அகமதாபாத் நகருக்கு வந்தபோது பிரதமர் மோடி ஏழைகளையும், அவர்களின் குடியிருப்புக்களையும் அகற்றினார். அந்நகரைச் சுற்றி சுவர்கள் எழுப்பியும், திரைச்சீலைகள் கட்டியும் குஜராத் மாடலை மறைக்கப் போராடினார். வறுமைக் கோடு தொடர்பாக இந்தியாவிலுள்ள 21 மாநிலங்களில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் 44 விழுக்காடு மக்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கவில்லை. மோடியின் சொந்த மாநிலமான குஜராத் கடைசி இடத்தில் உள்ளது. அங்கே வெறும் 33 விழுக்காடு ஏழைகளுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கிறது. அதேபோல, உணவு பாதுகாப்பிலும் அம்மாநிலத்தின் 69 விழுக்காடு பேர் போதிய உணவில்லாமல் தவிக்கின்றனர் என்று கண்டுபிடித்திருக்கின்றனர் (தீக்கதிர், 20.07.2024). வட மாநிலங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் ‘சண்டிபுரா’ வைரஸால் போதுமான அளவு மருத்துவக் கட்டமைப்பு இல்லாத குஜராத் மாநிலம் உருக்குலைந்துள்ளது. ஆனால் கேரளா கடந்த இரண்டு ஆண்டுகளாக நிபா, குரங்கு காய்ச்சல் உள்ளிட்ட புதியவகை வைரஸ்களை அதிரடி முடிவுகளுடன் தங்கள் மாநிலத்தை விட்டு துரத்தியது மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்குப் பரவாமலும் பார்த்துக் கொண்டது. “இதனால் சமூக வலைத்தளங்களில் புதிய வைரஸ்[சைக்] கட்டுப்படுத்த கேரள மாடலில் இருந்து குஜராத் மாடல் பாடம் கற்க வேண்டும் என்ற கருத்துக்கள் கிளம்பியுள்ளன” (தீக்கதிர், 21.07.2024). “தாழக் கிடப்பாரை தற்காக்கும்” இடதுசாரி மாடல்களும், உச்சத்தில் இருப்பாரை உயர்த்திப் பிடிக்கும் வலதுசாரி மாடல்களும் கோலோச்சும் இன்றைய உலகில், எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க விரும்பும் திராவிட மாடலை எப்படிப் புரிந்து கொள்வது? என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். கட்டுரையாளர் சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர். https://aramonline.in/18644/different-model-governments/
  9. மந்திகை ஆஸ்பத்திரியைப் பற்றி உதயனில் பல குறைபாடுகளை ஒருவர் அடிக்கடி எழுதுகின்றார்! சிற்றூழியரை மருத்துவர் என்று தவறாக இந்த முறைப்பாட்டில் எழுதியுள்ளார். ஆனாலும் அம்புலன்ஸை வேலைக்கான போக்குவரத்துக்காக பாவிக்கும் அளவிற்கும், நோயாளிகளின் அவசர தேவைகளை மதிக்காத அளவிற்கும் சீரழிவுகள் பல காலமாக உள்ளன. இப்போது கவனம் இப்படியானவர்கள் மேலிருந்தாலும் மாற்றங்கள் வராது!
  10. ஆசான் ஜெயமோகனின் தளத்தில் இமைக்கணம் நாவல் பற்றிய எனது “வாசக நயப்பு” வெளிவந்துள்ளது😀 https://www.jeyamohan.in/203567/
  11. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கா?; தமிழ் பொது வேட்பாளரின் பின்புலம் என்ன? ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற பின்புலத்தில் அந்த விடயத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ”தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஊடாக தமிழ் மக்கள் கடந்த ஏழு தசாப்தங்களாக பேசிவரும் பிரச்சினையை தோல்வியில் முடிவடைய செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.” தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார். என்றாலும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், டொலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட பல முன்னாள் நாடாளுமன்ற, மாகாண உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகின் கூட்டணியும் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் செயல்படுகின்றனர். இந்த நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சி நாட்டம் காட்டவில்லை என்பதுடன், கட்சியில் ஓர், இருவர் மட்டுமே அந்த நிலைப்பாட்டை ஆதரவளிக்கு எண்ணத்தில் இருப்பதாக தெரியவருகிறது. எதிர்வரும் 10, 11ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடம் கூட உள்ளது. இதன்போது யாருக்கு ஆதரவளிப்பதென தீர்மானிக்கப்பட உள்ளது. தேசிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடாமையால் அக்கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி ஏற்கனவே எடுத்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் தமிழரசுக் கட்சியின் ஆதரவை கோரியுள்ளனர். ஆனால், இன்னமும் இறுதி நிலைப்பாட்டை கட்சி எடுக்கவில்லை. என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி எடுக்க அதிகளவான வாய்ப்புகள் உள்ளதாக கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. அவ்வாறான நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி எடுத்தால் அது ரணில் விக்ரமசிங்கவுக்கு பாரிய பாதிப்பை தேர்தலில் ஏற்படுத்தும் என வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் பொது வேட்பாளரின் பின்புலம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் சமூகத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தெற்கின் பிரதான வேட்பாளர் ஒருவரின் நிகழ்ச்சி நிரலின் கீழும் அவரின் வெற்றியை உறுதிப்படுத்தவுமே இத்தகைய நகர்வுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள பின்புலத்தில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு கிடைத்தால் அது பிரதான வேட்பாளர்களில் ஒருவராக உள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி வாய்ப்பை கடுமையாக பாதிக்கும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். https://akkinikkunchu.com/?p=287048
  12. திருகோணமலையில் நாற்பதாயிரம் ஏக்கருக்கு மேல் மக்களின் காணிகள் அபகரிப்பு: ச.குகதாசன் எம்.பி August 6, 2024 அரசின் ஓர் அங்கமான வனத் துறை திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் ஏக்கர் நிலைத்தையும் தொல்பொருள்துறை 2600 ஏக்கர் நிலைத்தையும் கையகப் படுத்தி வைத்துள்ளனர் என திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (06)தனது முதலாவது கன்னியுரையின் போதே இவ்வாறு தெரிவித்த ச.குகதாசன், தொடர்ந்தும் உரையாற்றுகையில், திருக்கோணேச்சரம் வரலாற்று புகழ்மிக்க ஒரு புனிதத் தலம் இக்கோவிலுக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் இந்த இடத்தின் அழகைக் கண்டு களிக்க விரும்புகின்றனர். சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகள் இதற்குத் தடையாக உள்ளன. மேலும் இக்கடைகளினால் கோவிலின் புனிதத் தன்மை கெடுவதோடு இங்கு சில சமூக விரோதச் செயல்பாடுகளும் இடம் பெறுகின்றன. எனவே இக்கடைகளை வேறு ஒரு தகுந்த இடத்திற்கு மாற்ற வேண்டும் என 2019 மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப் பட்டது எனினும் இம்முடிவு இது வரையிலும் செயற்படுத்தப்பட வில்லை இந்த முடிவை விரைந்து செயற்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது நாட்டின் குடியரசுத் தலைவரும் அரசும் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். எனினும் அரசின் ஓர் அங்கமான வனத் துறை திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் ஏக்கர் நிலைத்தையும் தொல்பொருள்துறை 2600 ஏக்கர் நிலைத்தையும் கையகப் படுத்தி வைத்துள்ளனர். இந்தக் காணிகள் 1985ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் பயிர் செய்த நிலங்கள் ஆகும். 1985ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் பயிர் செய்த நிலங்கள் விடுவிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறிய பொழுதும் அது நடைபெறவில்லை. இந்தக் காணிகளை விடுவிக்க அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். வனத்துறை கையகப்படுத்தி வைத்துள்ள பகுதிக்குள் 80 சிறு குளங்கள் உள்ளன. வனத்துறை இந்த நிலங்களை விடுவித்து இக்குளங்களை திருத்தி அமைப்பதன் மூலம் சில ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை நெற்செய்கையின் கீழ் கொண்டுவர முடியும். இவற்றின் மூலம் நாட்டின் நெல் உற்பத்தியை பெருக்குவதோடு உழவரது பொருண்மிய நிலையையும் மேம்படுத்தலாம். மூன்றாவதாக திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள கடற் தொழிலாளர் எதிர்கொள்ளும் சிக்கல்களை பற்றி தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். இந்த மாவட்டத்தில் ஏறத்தாழ 23,000 ஆயிரம் குடும்பங்கள் கடற் தொழிலை நம்பி வாழ்கின்றனர் எனினும் நவீன மீன்பிடி முறைமைகள் எதுவும் பின்பற்ற படுவதில்லை. பன்னாள் மீன்பிடிப் படகு வைத்திருக்கும் மீனவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். பெரும்பாலும் ஓர் எந்திரம் பூட்டிய படகில் சென்று மீன் பிடிப்பவர்களே மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களால் அதிக மீன்களையும் பிடிக்க இயலவில்லை கடலுக்குச் செல்லும் பொழுது அடிக்கடி காணாமலும் போகின்றனர். அப்படி துன்பப் பட்டு போராடிப் பிடித்த மீன்களுக்கு சரியான விலையும் கிடைப்பதில்லை பெரும்பாலும் இடைத் தரகர்களே இலாபம் ஈட்டுகின்றனர். இதற்கான தீர்வாக ஏழை மீனவர்களுக்கு பன்னாள் மீன்பிடிப் படகு கொள்வனவு செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன் கொடுக்கும் திட்டங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும். மேலும் பன்னாள் மீன்பிடிப் படகுத் துறைகள் திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் துறை முகத்துவாரம், சம்பூர் மற்றும் சல்லி ஆகிய மீன்பிடி கிராமங்களில் நிறுவப்பட வேண்டும். இதனால் மீன் பிடியையும் மீனவர் பொருண்மியத்தையும் கூட்ட இயலும் என்பதோடு கடலில் காணாமற் போவோரின் எண்ணிக்கையும் குறையும். அதுமட்டுமின்றி படகுககள் காணாமற் போகுமிடத்து அப்படகுகளை வானூர்திகள் மூலம் தேடும் நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும். திருக்கோணமலை மாவட்டக் கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மற்றுமொரு சிக்கல் சுருக்குவலையில் மீன் பிடிப்பதாகும் . இதன் காரணமாக கடல் வளம் வரம்பை மீறிச் சுரன்டப் படுவதோடு 100 ஏழை மீனவர் பிடிக்கும் மீன்களை ஒரே ஒரு பெரும் முதலாளியின் சுருக்குவலை படகு பிடிக்கின்றது. சுருக்குவலை சிக்கலுக்குத் தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அவற்றை முழுவதுமாக அமுல்படுத்தப்பட வேண்டும். நான்காவதாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் நிலவும் கல்வி தொடர்பான சிக்கல்களை தங்கள் மேலான பார்வைக்கு கொண்டு வருகின்றேன் இம் மாவட்டத்தில் 166 தொடக்க கல்வி ஆசிரியர் பற்றாக்குறையும் 116 கணித ஆசிரியர் பற்றாக்குறையும் 53 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் 60 அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறையும் 52 கணினி ஆசிரியர் பற்றாக்குறையும் 53 தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையும் ஆக மொத்தம் 500 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.இதனால் மாணவர்களது கல்வி மிகவும் பாதிக்கப் படுகிறது எனவே ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு போதிய ஆசிரியரை மாவட்டதிற்கு ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். இப்பொழுது உள்ள முறையில் ஆசிரியர் வளப் பங்கீடு சரியான முறையில் அமையவில்லை மாகாணங்களுக்கு ஆசிரியர் நியமிக்கும் பொழுது பெரும்பாலான ஆசிரியர் திருக்கோணமலை மாவட்டத்திற்கு வருகின்றார்கள். வந்த சில காலங்களில் தத்தம் மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுகொண்டு சென்று விடுகின்றனர். இந்தச் சிக்கலைத் தீர்பதற்குக் கல்வியல் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் பொழுது பிரதேச செயலாளர் மட்டத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்தால் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம். உள்நாட்டு அமைச்சு கிராம அலுவலர்களை நியமிக்கும் பொழுது பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களுக்கு. அவ்வவ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளவர்களையே நியமிக்கின்றார்கள் இதே முறையை கல்வி அமைச்சும் பின் பற்றினால் ஆசிரியர் பற்றாக்குறைச் சிக்கலுக்கு தீர்வு காணலாம். மேலும் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. கல்வித் துறைக்கு 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 1.3% நிதி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 1.5% ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் குறைந்தது 5% ஆவது உயர்த்தப்பட வேண்டும். மேற்கு நாடுகள் தமது வரவு செலவுத் திட்டத்தில் 5% க்கும் கூடுதலான தொகையை கல்விக்கு ஒதுக்குகின்றன என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். அடுத்ததாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் மாவட்ட மருத்துவமனையில் 54 மருத்துவர் பற்றாக்குறையும் 9 துறைசார் மருத்துவ நிபுணர் 7 செவிலியர் பற்றாக்குறையும் 3 மருந்தாளர் பற்றாக்குறையும் 39 சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையும் 3 சாரதிகள் பற்றாக்குறையும். மேலும் மாகாண அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 40 துறைசார் மருத்துவ நிபுணர் பற்றாக்குறையும் 21 மருத்துவர் பற்றாக்குறையும் 27 செவிலியர் பற்றாக்குறையும் 22 மருந்தாளர் பற்றாக்குறையும் 6 மிகைஒலி ஊடுகதிர் தொழில்நுட்பவியலாளர் பற்றாக்குறையும் 100 சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆவன செய்யுமாறு உரிய அமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றேன். திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் ஒரு பகுதி கட்டப்பட்ட நிலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளன. இப்பிரிவில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால், நோயாளிகளை நிர்வகிக்க போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது. இக்கட்டடத்தை கட்டி முடிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் திருக்கோணமலை மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரிவு ஒன்று இல்லை இதனால் இம் மாவட்ட மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காகச் செல்கின்றனர். இதன் விளைவாக இம்மக்கள் பணச் செலவு, போக்குவத்து, நேரம், மொழி, தங்குமிட வசதி முதலிய சிக்கல்கள்களை எதிர்நோக்குகின்றனர். இவற்றை தீர்ப்பதற்கு புற்றுநோய் பிரிவு ஒன்றை இம்மாவட்ட மருத்துவமனையில் நிறுவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அடுத்ததாக திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் விளையாட்டு அரங்கு இல்லாமல் இருப்பதே ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள முதன்மையான மிகச் சிறந்த பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய Mc.Heizer விளையாட்டு அரங்கு நீண்ட காலமாக மறுசீரமைக்கப் படாமல் புதர் மண்டிபோய் உள்ளது. இதை மறுசீரமைப்பதன் மூலம் திருக்கோணமலையில் விளையாட்டு துறையில் சாதிக்க எண்ணும் பல நூற்றுக்கணக்கான இளையோர்கள் முன்னேறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதோடு பன்னாட்டு விளையாட்டு போட்டிகளை இங்கே நடத்தமுடியும் இதன் வழியாக நாட்டிற்கு அந்நிய நாணய மாற்று வருவாயை கொண்டு வர முடியும். அடுத்ததாகத் துறைமுக அதிகார சபையானது, பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதினொரு கிராம அலுவலர் பிரிவில் உள்ள 5572 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தியுள்ளது. இதில் 1868 ஏக்கர் நிலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வாழ்கின்றார்கள்.துறைமுக அதிகார சபையின் கையகப் படுத்தல் காரணமாக மக்கள் தங்கள் நிலத்தில் எந்தவித செயற்பாடுகளையும் செய்ய இயலாமல் உள்ளது ஆகவே இவ்விடங்களை அங்கு வாழும் மக்ககளுக்கு கையளிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்ததாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ 10,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன இவர்கள் போதிய படிப்பறிவு, பட்டறிவு மற்றும் வினைத்திறன் அற்றவர்களாக காணப்படுகின்றனர் ஆகவே இவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை கொடுத்து கமத்தொழில், கைத் தொழில், கால்நடை வளர்ப்பு, சேவைத் துறை முதலியவற்றில் சுயதொழில் செய்வதற்கு ஆவன செய்யப்பட வேண்டும். திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகள் தெளிவாக இல்லை இதனால் அதிகாரிகளும் பொது மக்களும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இந்த எல்லைகளை தெளிவு படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, நான் இதுவரையில் திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், நோயாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்த உயரிய அவையில் கவனத்திற்கு கொண்டு வந்து உள்ளேன் இவற்றைத் தீர்ப்பதற்கு உரிய அமைச்சர்கள் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் என்றார். https://www.ilakku.org/திருகோணமலையில்-நாற்பதாய/
  13. பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு! August 6, 2024 மருத்துவர் ஒருவர் அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்புவதற்காக, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களை அலைக்கழித்து காக்கவைக்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு காக்கவைக்கப்பட்டே அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு நோயாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட்-02) அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த விடுதிகளில் இருந்து சக்கர நாற்காலிகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்கும் புதிய கட்டிடத்தின் கீழ் தளத்திற்கு அன்றைய தினம் மதியம் 2.00 மணியளவில் கொண்டுவரப்பட்டிருந்தனர். இருதய பாதிப்பு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் அவசர நோயாளர் காவு வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் மற்றைய நோயாளர்களும் அதில் ஏற்றப்பட்டிருந்தனர். சிறிது நேரத்தில் இருதய நோயாளி தவிர்நத ஏனைய நோயாளர்கள் அவசரமாக அதிலிருந்து இறக்கப்பட்டனர். மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளம் யுவதி ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாகவே அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட வேண்டியிருந்ததால் அவ்வாறு அவர்கள் இறக்கப்பட்டதற்கான காரணம் அங்கிருந்த ஊழியர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்றைய அவசர நோயாளர் காவு வாகனத்தின் வந்து கொண்டிருப்பதாகவும் வந்த உடன் அதில் ஏற்றி அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய அவசர நோயாளர் காவு வாகனம் உடனடியாகவே வந்திருந்த போதிலும் காக்கவைக்கப்பட்ட நோயாளர்களை விடுதிக்கு அழைத்து சென்று விடுமாறும் மாலை 4 மணிக்கு பின்னரே அவசர நோயாளர் காவு வாகனம் புறப்படும் எனவும் அவசர நோயாளர் காவு வாகனத்தில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான பெண் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏனைய சிற்றூழியர்கள் அதிருப்தியை வெளிக்காட்ட முடியாது புறுபுறுத்தவாறே நோயாளர்களை விடுதிக்கு கொண்டு சென்றிருந்தனர். இந்நிலையில் திடீரென உடனடியாக நோயாளர்களை பழைய வெளிநோயாளர் பிரிவு வாசல் பகுதிக்கு கொண்டு வருமாறு சிற்றூழியர்களுக்கு அறிவுறுத்தல் வந்துள்ளது. இதையடுத்து 06 ஆம் இலக்க விடுதியில் இருந்த நோயாளியை மீண்டும் சக்கர நாற்காலி மூலமாக அழைத்துச் சென்று அவசர நோயாளர் காவு வாகனத்தில் ஏற்றிய நிலையில் புதிய கட்டிட பகுதியில் வைத்து ஏனைய இரு நோயாளிகளும் அன்று பிற்பகல் 03.30 மணியளவில் ஏற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு ஏற்றப்பட்ட போதிலும் அவசர நோயாளர் காவு வாகனம் புறப்படாது காத்திருந்துள்ளது. ஏற்கனவே ஒரு அவசர நோயாளர் காவு வாகனத்தில் ஏற்றி இறக்கப்பட்டதுடன் மீளவும் விடுதிக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்த நிலையில் அவதியுற்ற நோயளிகள் மேலும் ஏற்பட்ட காலதாமத்தினால் அதிருப்தியடைந்து அவசர நோயாளர் காவு வாகனத்தின் சாரதியிடம் தாமதத்திற்கான காரணத்தை வினவியபோது கடும் தொனியில் அதிருப்தியுடன் இதோ வாறா.. அவவிடமே கேளுங்கள் என்பதாக அவசர நோயாளர் காவு வாகனத்தில் சாதரண உடையில் ஏறிய பெண்ணை காட்டி கூறியிருந்தார். அத்துடன் அவர்கள் ஏதோ கேக்கினம் அதுக்கு பதில் சொல்லுங்கோ அதுக்கு பிறகு எடுக்கிறன் என குறித்த பெண்ணிடம் சாரதி தெரிவித்திருந்தார். குறித்த பெண் எதுவும் நடக்காதவர் போன்று அமைதியாக இருக்க சுமார் நான்கு மணியை நெருங்கும் நேரத்தில் அம்பியுலன்ஸ் புறப்பட்டது. சாதாரண உடையில் தாமதமாக வந்து ஏறிய அவசர நோயாளர் காவு வாகனத்தில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான பெண் உத்தியோகத்தரை புத்தூர் சந்திக்கு அண்மித்த பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு நோயாளர்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோக்கி பயணித்தது அவசர நோயாளர் காவு வாகனம், அவசர நோயாளர் காவு வாகனத்தில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான குறித்த பெண் உத்தியோகத்தர் தனது கடமை நேரம் முடிந்த பின்னர் அவசர நோயாளர் காவு வாகனத்திலேயே வீடு திரும்பும் நோக்கிலேயே மதியம் 2.30 மணிக்கு அனுப்பவேண்டிய நோயாளர்களை 4.00 மணி வரை காத்திருக்க வைத்து அலைக்கழித்துள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது. தனது சொந்த தேவைக்காக நோயாளர்களை காக்கவைத்து அலைக்கழித்துள்ளதுடன் அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பியுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செய்றபாடுகளாகும். குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வாறான தவறுகள் மீளவும் நடைபெறாதென்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். https://www.ilakku.org/பருத்தித்துறை-அவசர-நோயா/
  14. ஹமாஸின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹமாஸ் இயக்கம், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காசாவின் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலின் நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் போர் தொடர்ந்து வருகிறது. இதனிடையே ஈரானில் கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத் தலைவர் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில் ஹமாஸின் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் நியமிக்கப்பட்டுள்ளார். யேஹ்யா சின்வர் பொதுவெளிகளில் அதிகம் தோன்றாவிட்டாலும், ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். முகமது டேயிஃபியின் நெருங்கிய நண்பரான இவர், அமைப்பின் இராணுவப் பிரிவை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.S https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஹமாஸின்-புதிய-தலைவராக-யேஹ்யா-சின்வர்/50-341738
  15. காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் இந்தியாவின் நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தமானில் இருந்து நாக்கை வந்த ‘சிவகங்கை கப்பல்’ நாளை மறுநாள் இலங்கைக்கு சோதனை பயணமாக வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன https://newuthayan.com/article/காங்கேசன்துறை_–_நாகப்பட்டினம்_கப்பல்_சேவை_மீண்டும்_ஆரம்பம்
  16. காங்கேசன் துறைமுகத்தில் கண்வைக்கிறது இந்தியா! 30 ஆண்டு குத்தகைக்கு இலங்கையிடம் கோரிக்கை காங்கேசன்துறை துறை முகத்தின் அபிவிருத் திக்காக 62 மில்லியன் அமெரிக்க டொலரை மானியமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் துறைமுகத்தை 30 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்துக்கொள்ளவும் இந்தியா முயற்சிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . ஆரம்பத்தில், காங்கேசன்துறை துறை முகத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் கடன் வழங்க எண்ணியது. எனினும், தற்போதைய பொருளாதார நிலை காரணமாக இலங்கையில் திட்டங்களை முன்னெடுப்பதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. ஆயினும், இந்தியாவின் மானிய உதவியின் கீழ் குறித்த துறைமுக அபிவிருத்திக்கான முன்மொழிவுக்கு இலங்கை அண்மையில் அனுமதி வழங்கியது. ஆரம்பகால முன்மொழிவுகளின்படி இந்தியக் கட்டமைப்பாளர் ஒருவர் குறித்த திட்டத்தை நிறைவேற்றுவார் என துறை முகங்கள்,கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் செயலர் கே.டி. எஸ்.ருவன்சந்திரா தெரிவித்துள்ளார். "இந்தியா 30 ஆண்டுகள் குத்தகையில் அதன் வணிகச் செயற்பாடுகளை காங்கேசன்றை துறைமுகத்தில் முன்னெடுக்க முயன்றது. எனினும், குறித்த விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை” என்றும் கே. டி. எஸ்.ருவன்சந்திரா மேலும் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/காங்கேசன்_துறைமுகத்தில்_கண்வைக்கிறது_இந்தியா!
  17. வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா வீட்டிற்கு தீ வைப்பு! Aug 06, 2024 14:12PM IST வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அவாமி லீக் கட்சியின் எம்.பி-யுமான மஷ்ரஃப் பின் மோர்தசா வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் புகுந்த மாணவர்கள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மேலும், அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளை குறிவைத்து மாணவர்கள் தாக்கி வருகின்றனர். இந்தநிலையில், நரில் தொகுதி அவாமி லீக் எம்.பி-யும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான மஷ்ரஃப் பின் மோர்தசா வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டிற்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் நடந்தபோது, மஷ்ரஃப் பின் மோர்தசா அவரது வீட்டில் இருந்து தப்பிச்சென்றார். டி20, ஒருநாள், டெஸ்ட் என 117 போட்டிகளில் மஷ்ரஃப் பின் மோர்தசா வங்கதேச அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 36 டெஸ்ட் மேட்ச், 220 ஒருநாள் போட்டிகள், 54 டி20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மஷ்ரஃப் பின் மோர்தசா, அவாமி லீக் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து நரில் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். https://minnambalam.com/political-news/protesters-set-ex-bangladesh-cricketer-mashrafe-mortaza-house/
  18. தமிழ் பொது வேட்பாளர்; தமிழரசின் முடிவுக்கு காத்திருப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழரசு கட்சியின் சம்மதம் கிடைக்க பொறாமை காரணமாக பொது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான நீண்ட கலந்துரையாடல் சில மாதங்களாக இடம் பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஏழு தமிழ் கட்சிகளும் ஆறு சிவில் அமைப்புகளும் இணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி பொது வேட்பாளர் தொடர்பான தெரிவை முன்னெடுப்பதற்கான உப குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளராக தமிழரசு கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியனேத்திரன் ஆகியோரின் பெயர்கள் இறுதி முடிவுக்காக பரிசீலனையில் எடுக்கப்பட்டது. இருவரும் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் தமிழரசு கட்சிக்குள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சார்பு அணி பொது வேட்பாளருக்கு ஆதரவாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆதரவு அணி பொது வேட்பாளருக்கு எதிராகவும் இருப்பதால் தமிழரசு கட்சியின் சம்மதம் கிடைக்கப்பெறாமல் உள்ளது. இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு இல்லாமல் இருவருடைய பெயர்களில் ஒருவரை தெரிவு செய்வதில் சிக்கல் காணப்படுவதாலேயே பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://akkinikkunchu.com/?p=286936
  19. 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்கவேண்டும். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயமாகும். அந்த வாக்கினை இன்னாருக்கு அளியுங்கள் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளை யாருக்கு அளிக்கவேண்டும் என்பது குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அவ்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்கவேண்டும். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயமாகும். இதுகுறித்து அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். இந்த வேட்பாளருக்குத்தான் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கினை அளிக்கவேண்டும் என்று நான் எந்தவொரு கோரிக்கையையோ அல்லது ஆலோசனையையோ முன்வைக்கவில்லை. ஊடகவியலாளர்களால் பல கேள்விகள் முன்வைக்கப்படும்போது, எமது அடிப்படைக் குறிக்கோள்களை நாங்கள் சிதைத்திருப்பதாக எனது பதில்களைத் திரித்து வெளியிடும் பழக்கம் சில ஊடகவியலாளர்களுக்கு இருப்பதைக் காணமுடிகின்றது. ஆனால் அவை என்னுடைய கருத்துக்களன்று. நான் சில காலத்துக்கு முன்னர் தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று கூறியது உண்மைதான். இப்போதும் இந்த ஜனாதிபதித்தேர்தலினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து நான் அஞ்சுகிறேன். எந்தவொரு சிங்கள வேட்பாளரினாலும் 50 சதவீத வாக்குகளைப் பெறமுடியாமல்போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலைவரம் கவலைக்கிடமாகலாம். பல தீயசக்திகள் நாட்டில் குழப்பநிலையைத் தோற்றுவிக்க முனையலாம். சீனா தனது படையை நாட்டுக்கு அனுப்பவிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இது சிறுபான்மையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். நாட்டின் பொருளாதார நிலைவரத்திலும், ஸ்திரத்தன்மையிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். வெளிநாட்டு ஊடுருவல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கலாம். இவையனைத்தையும் கருத்திற்கொண்டே தேர்தலை பிற்போடுவது சிறந்தது என்று நான் கூறினேன். அதேவேளை நாட்டின் நலன்கருதி மூன்று பிரதான வேட்பாளர்களும் இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கலந்தாலோசிக்கலாம் எனவும் கூறினேன். அவ்வாறு கூறியதை மனதில் வைத்துத்தான் சில ஊடகங்கள் நான் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு தமிழ் மக்கள் 2 ஆவது விருப்பு வாக்கினை அளிக்கவேண்டும் என்று கூறியதாக தவறாக செய்தி வெளியிட்டிருக்கின்றார்கள். நாட்டின் நலன்கருதி நான் கூறியதற்கும் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவில் எனது திடமான முடிவுக்கும் உறவமைத்து கூறியமை பத்திரிகையாளர்களின் ஊகமாகும். தமிழ் பொதுவேட்பாளருக்கே தமிழ் மக்கள் தமது முதல் வாக்கினை அளிக்கவேண்டும். 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையாகும். இன்னாருக்கு அதனை அளியுங்கள் என்று எந்தத் தருணத்திலும் நான் கூறவில்லை. கூறவும் மாட்டேன் என்றார். https://akkinikkunchu.com/?p=286956
  20. இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா இலண்டன் செல்கிறார்… August 6, 2024 தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தில் 15 ஆண்டு கால ஷேக் ஹசீனாவின் ஆட்சியை மாணவர்களின் ஒரு மாத கால போராட்டம் முடிவுக்கும் கொண்டுவந்துள்ளது. கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 300- பேர்வரையில் உயிரிழந்துள்ளனர். மேலும் போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்தான் நீக்கியது. ஆனாலும், தொடர்ந்த போராட்டம் அரசுக்கு எதிரானதாக மாறி ஒரு கட்டத்தில் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரும் கிளர்ச்சியாக மாறிவிட்டது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா லண்டனுக்கு புறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில், வங்கதேச கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து வங்கதேசத்தின் முன்னணி வார இதழான `பிளிட்ஸ்’ ஆசிரியர் சலா உதின் சோகிப் சவுத்ரி எழுதிய தலையங்க கட்டுரையில் கூறியிருப்பதாவது: வங்கதேச மாணவர்கள் போராட்டத்தை 157 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிஎன்பி கட்சிக்கு முக்கிய தொடர்பு உள்ளது. பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் டேவிட் பெர்க்மான் போராட்டத்தை தூண்டினார். பிரிட்டனுக்கு தப்பியோடிய பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான், அங்கிருந்து கொண்டு வங்கதேச போராட்டத்தை வழிநடத்தினார். இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் ஆவார். வங்கதேச மாணவர் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் இருக்கிறது. மாணவர்களின் பெயர்களில் ஏராளமான தீவிரவாதிகளும் களமிறங்கி, போராட்ட களத்தை போர்க்களமாக மாற்றினர் என்று மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதே நேரம் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/இந்தியாவில்-தஞ்சம்-அடைந்/
  21. இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் படுகொலைகளின் விளைவுகள் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ் August 6, 2024 பாலஸ்த்தீன இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதலில் 12 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக லெபனான் மீது பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் நிகழ்த்தலாம் என எதிர்பார்க் கப்பட்ட போதும் இஸ்ரேலின் எப்-35 ரக தாக்குதல் விமானங்கள் லெபனான் மீது மேற் கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பிராந்திய தளபதிகளில் ஒருவரான பேட் சுஹிர் கொல்லப்பட்டிருந்தார். இந்த தாக்குதல் இடம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்குமான போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் தொடர் பேச்சக்களில் ஈடுபட்டிருந்த ஹனியே கொல்லப்பட்டது என்பது அமைதிக்கான முயற்சிகளை சீர்குலைத்து போரை மேலும் விரிவாக்கம் பெறவைக்கும் என்ற கருத்துக்களையே தற்போது உருவாக்கியுள்ளது. அமைதி முயற்சியில் நடுவராக செயற்பட்ட ஒருவரை ஒரு தரப்பு படுகொலை செய்யும் போது அமைதி எவ்வாறு சாத்தியமாகும் என கேள்வி எழுப்பியுள்ளார் கட்டாரின் வெளிவிவகார அமைச்சர். ஈரானின் புதிய அதிபர் மசூட் பெஸஸ் கியானின் பதவியேற்பு விழாவில் செவ்வாய்க் கிழமை(30) கலந்துகொண்டுவிட்டு ஈரானின் தலைநகர் தெஹிரானின் வடக்கு பகுதியில் உள்ள அரச விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த சமயம் ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள் ளார். கட்டாரின் டோகாவில் தங்கியிருந்த கனியா அங்கிருந்தே ஈரான் சென்றிருந்தார். அவரின் படுக்கை அறையினை அதிகாலை 2 மணியளவில் ஏவுகணை துல்லியமாகத் தாக்கி யதாகவும், இந்த சம்பவத்தில் அவரும் அவரின் மெய்பாதுகாப்பாளரும் கொல்லப்பட்டதாகவும் ஈரானின் புரட்சிகர இராணுவம் தெரிவித்தள்ளது. ஆளில்லாத தாக்குதல் விமானத்தின் மூலம் ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக ஈரானின் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். ஒரே ஒரு வெடிப்பதிர்வு கேட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து சமூகவலைத்தளங்களில் கூட அதிக செய்திகள் பகிரப்படவில்லை. இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் பொதுச் செயலாளர் சியாட் அல் நகலாவும் அவரின் அணியினரும் கனியாவின் கட்டிடத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தங்கியிருந்தபோதும் அவர்கள் இந்த தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனர். இந்த சம்பவம் என்பது ஈரானின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கேள்விகளை எழுப்பியுள் ளதுடன், ஈரான் தனது நாட்டுக்குள் நிகழ்ந்த தாக்குதலுக்கு பதிலடியை கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களையும் தோற்றுவித்துள்ளது. தனது நாட்டுக்குள் இடம்பெற்ற இந்த தாக்குதல் குறித்து ஈரான் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் முறையிட்டுள்ளது.அதேசமயம் தனது சிறப்பு படைப்பிரிவான காட் படைப்பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் அவசரமான பாதுகாப்பு மாநாட் டையும் நடத்தியுள்ளது. இந்த கோழைத்தனமான கொலை குறித்து இஸ்ரேல் கவலைப்படும் நிலையை ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ள ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் ஈரான் தனது ஆட்புல ஒருமைப்பாடு,கௌரவம் ஆகியவற்றை பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவரின் கொலைக்கு பழி வாங்குவது ஈரானின் கடமை என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளமை மத்திய கிழக்கை முழு மையான ஒரு யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள் ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத் தின் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான பேராசிரியர் நடெர் ஹசேமி குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் தலைவரின் படுகொலை முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என அவர்தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த தாக்குதல் குறித்து தமது அமைச்சர்கள் யாரும் கருத்துக்க ளைத் தெரிவிக்கக்கூடாது என்ற உத்தரவை இஸ் ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத் தனியாகு பிறப்பித்துள்ளார். மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதால் இஸ்ரேலின் சில பகுதிகளில் வான்போக்கு வரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து தமக்கு அதிக தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது அமெரிக்கா. அதே சமயம் இஸ்ரேல் மீது தாக்குதல் இடம்பெற்றால் அமெரிக்கா உதவிக்கு செல்லும் என அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கான உரிமையை இஸ் ரேல் கோராதுவிட்டாலும், இதனை இஸ்ரேல் தான் மேற்கொண்டது என ஈரான் மற்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் ஆரம்பமாகிய பின்னர் கொல்லப்பட்ட ஹமாஸின் இரண்டாவது அரசியல் பிரிவுத் தலைவர் இவராவார். கடந்த ஜனவரி மாதம் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸின் அரசியல் பிரிவின் நான்காவது நிலைத் தலைவரான சாலே அல் அருhரி கொல்லப்பட்டிருந்தார். அந்த தாக்குதலின் பின்னர் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஹமாஸின் எல்லாத் தலைவர்களும் இவ்வாறு கொல்லப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித் துள்ள ரஸ்யா இந்த அரசியல் படுகொலையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. கட்டார் துருக்கி, பாகிஸ்தான், சீனா ஜோர்டான் உட்பட பல நாடுகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் என்பது மத்தியகிழக்கில் அமைதி ஏற்படுவதை பாதிப்பதுடன் போர் மேலும் விரிவாக்கம் பெறவே வழிவகுக்கும் என பல நாடுகள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஊடகமான சிஎன்என்னும் அதனைத் தான் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஹமாஸின் நடவடிக்கைகளை இந்த தாக்குதல் பாதிக்காது என இஸ்ரேலின் பாதுகாப்புச் சபையின் முன்னாள் தலைவர் கொய்ரா எய்லான்ட் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மற்றும் லெபனான் அமைப்புக்களுக்கு தலைவர்களை இழப்பது ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. 1992 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பின் நிறுவுனரும் தலை வருமான சயித் அபாஸ் முசாவியையும் அவரின் குடும்பத்தினரையும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு படுகொலை செய்திருந்தது. ஆனாலும் அதன் பின்னர் பதவியேற்றிருந்த தற்போதைய தலைவர் சயீட் ஹசான் நஸ்ரல்லா அந்த அமைப்பை மேலும் வலுவான நிலைக்கு உயர்த்தியிருந்தார். ஹமாஸ் அமைப்பும் பல தலைலவர்களை இழந்துள்ளது ஆனாலும் அடுத்த தலைமுறை போராட்டத்தை வழிநடத்தவே செய்கின்றது. இருந்தபோதும் இஸ்ரேலின் இந்த நடவடிக் கையின் பொருள் என்னவென்றால் மிகப்பெரும் போர் ஒன்று எற்படும் அபாயம் அருகில் வந்துள்ளது. ஒரு மிகப்பெரும் போரின் ஊடாகவே மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால் இந்த போரில் பெருமளவான அப்பாவி மக்கள் பலியாகப்போவது தான் வருத்தமானது. https://www.ilakku.org/இஸ்ரேல்-மேற்கொள்ளும்-தொட/
  22. திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம்; குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி திருக்கோணமலை மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த சந்திப்பு திருகோணமலை நகராட்சி மன்ற பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றது. இதன் போது வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், மக்களுடைய காணிகள் விடுவிப்பு, மக்கெய்சர் விளையாட்டு அரங்கு தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன் இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். https://thinakkural.lk/article/307386
  23. ’உள்ளாடைகளை’ அள்ளிய வன்முறையாளர்கள் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த உள்ளாடைகளையும் கூட அள்ளிச் சென்றது. ஒரு சிலரோ ஷேக் ஹசீனா வீட்டில் கொள்ளையடித்த சேலைகளை அங்கேயே அணிந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடிய மாணவர்கள் பெயரிலான கும்பல்தான் இத்தகைய அட்டூழியங்களை செய்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா , 16 ஆண்டுகள் அந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். வங்கதேச விடுதலைக்கு போராடியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு மாணவர்களின் பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இந்த புரட்சிதான் ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே கவிழ்த்துவிட்டது. கடந்த சில மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. பாதுகாப்புத் தரப்பில் பலர் கொல்லப்பட்டதால் ஈவு இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் உச்சகட்டமாக ஷேக் ஹசீனா தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஷேக் ஹசீனாவின் மாளிகையை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் வன்முறை கும்பல் முற்றுகையிட்டதால் உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடி வந்தார். முதலில் திரிபுரா சென்ற ஷேக் ஹசீனா பின்னர் இந்திய விமானப் படை பாதுகாப்புடன் டெல்லி அருகே உள்ள காசியாபாத் விமான படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதனிடையே டாக்காவில் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் அங்கிருந்த அத்தனை பொருட்களையும் ஒன்றுவிடாமல் கொள்ளையடித்துச் சென்றது. இதில் படுகேவலமாக ஷேக் ஹசீனா மாளிகையில் இருந்த உள்ளாடைகளையும் விட்டுவைக்கவில்லை. R https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உள்ளாடைகளை-அள்ளிய-வன்முறையாளர்கள்/50-341669
  24. சிசுவின் தலையை சுவரில் மோதினேன்; கொல்லப்பட்ட குழந்தையின் தாய் ஒப்புதல்! அளவெட்டியைச் சேர்ந்த 45 நாள் சிசு உயிரிழந்த விவகாரத்தில், சிசுவின் தலையைச் சுவருடன் மோதிக் கொடூரமாகத் தாக்கியதை விசாரணையில் தாய் ஒப்புக்கொண்டுள்ளார் . கடந்த சனிக்கிழமை தாய்ப்பால் அருந்திவிட்டு, தூங்கிய சிசு அதிகாலையில் நினைவற்றிருந்ததையடுத்து, அளவெட்டி பிரதேச மருத்துவமனைக்கு சிசு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டது என்று தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். அளவெட்டியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற 45 நாள் சிசுவே உயிரிழந்தது. வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபால்சிங்கம் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார். சிசுவின் உடலில் காயங்கள் காணப்பட்டதை அடுத்து சிசுவின் இறப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிசுவின் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. உடற்கூற்றுப் பரிசோதனையில் சிசுவின் கால் எலும்பில் முறிவு இருந்ததும், தலைக்குள்ளும்,காது. வாய் என்பவற்றின் உட்புறங்களிலும் காயங்கள் இருந்தமையும் கண்டறியப்பட்டது. தாயிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிசு பால் அருந்தாததால் கால்களை முறுக்கினேன் என்று தெரிவித்திருந்தார். விசாரணைகளை அடுத்துத் தாய் கைது செய்யப்பட்டார். தாயிடம் பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரணைகளில், சிசுவைக் கடுமையாகத் தாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். சிசு தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்ததால் தலையைச் சுவரில் மோதித் தாக்கியமையையும், காதுக்குள் பிரம்பை விட்டு குத்தியமையையும் தாய் ஒப்புக் கொண்டுள்ளார். சிசுவின் கால் எலும்பு முறிவு நாட்பட்டதாகக் காணப்படுகின்றது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தாய் தனது வாக்குமூலத்தில் சிசுவின் காலை மிதித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் ஏற்பட்ட எலும்புமுறிவை அடுத்தே சிசு தொடர்ச்சியாக அழுதிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. தாயிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 7 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாயை மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை குற்றத்தடுப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/article/சிசுவின்_தலையை_சுவரில்_மோதினேன்;_கொல்லப்பட்ட_குழந்தையின்_தாய்_ஒப்புதல்!
  25. பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம் வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிவர்பூல் மற்றும் சவுத்போர்ட் பகுதிகளில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு கலவரங்களும் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர். 17 வயதுடைய சந்தேக நபரான Axel Rudakubana, 17, பிரித்தானியாவில் பிறந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வன்முறை, தீவைப்பு மற்றும் கொள்ளையில் இறங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். லிவர்பூல், பிரிஸ்டல், ஹல் மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகிய இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையை தடுக்க முற்பட்ட பொலிஸார் இதன் போது காயமடைந்துள்ளனர். லிவர்பூலில் குறைந்தது இரண்டு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன மற்றும் சூறையாடப்பட்டுள்ளன. தென்மேற்கு நகரமான பிரிஸ்டலிலும் இதுபோன்ற சம்வபங்கள் பதிவாகியுள்ளன. பெல்ஃபாஸ்டில், சில வணிக நிலையங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை சவுத்போர்ட்டில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. நகரங்கள் முழுவதும் கூடுதல் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு பாரிய கலவரம் ஏற்பட்டிருந்தது. லண்டனில் ஒரு கறுப்பினத்தவரை பொலிசார் சுட்டுக் கொன்றதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கியதால், மிகப்பெரிய வன்முறை வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=286694

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.