Everything posted by கிருபன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதல் சுற்றின் இறுதிப் போட்டியாகிய 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிக்கொலஸ் பூரனின் அதிரடியான 98 ஓட்டங்களுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 114 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 104 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 66 2 ரசோதரன் 66 3 ஈழப்பிரியன் 64 4 நந்தன் 64 5 கோஷான் சே 64 6 சுவி 60 7 தமிழ் சிறி 60 8 கிருபன் 60 9 கந்தப்பு 60 10 வாத்தியார் 60 11 எப்போதும் தமிழன் 60 12 நீர்வேலியான் 60 13 வீரப் பையன்26 58 14 நிலாமதி 58 15 குமாரசாமி 58 16 தியா 58 17 வாதவூரான் 58 18 ஏராளன் 58 19 அஹஸ்தியன் 58 20 P.S.பிரபா 56 21 கல்யாணி 56 22 புலவர் 54 23 நுணாவிலான் 52 முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்கள் வசம் போயுள்ளது!
-
நிகழ வேண்டிய வழி
நிகழ வேண்டிய வழி June 17, 2024 — கருணாகரன் — ‘இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகி விட்டது. அங்கே இப்போது மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லது அமைதியாக வாழக்கூடியதாக இருக்கும்’ என்ற எண்ணமே பொதுவாக உலகப் பரப்பில் உண்டு. யுத்தம் முடிந்தது உண்மைதான். ஆனால், யுத்தத்திற்குக் காரணமான இனமுரணும் இனப்பிரச்சினையும் முடிவுக்கு வரவில்லை. அது இன்னும் கொதிநிலையிலேயே உள்ளது. அதை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது அரசு. ஏனென்றால், இனவாதத்தில்தான் அரசுக் கட்டமைப்பே நிறுவப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளைப் பேசும் நான்கு இன மக்களைக் கொண்ட சின்னஞ்சிறிய நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்திருக்கிறது என்றால் இதை எப்படி விளங்கிக் கொள்வது? நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நிற்பதும் லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததும் பல்லாயிரம்பேர் உடல் உறுப்புகளை இழந்ததும் ஏனென்று இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. உலகமெங்கும் கையேந்திக் கடன் கேட்டுக் கொண்டிருக்கிறது இலங்கை. வேறு வழியில்லாமல் நாட்டின் வளங்களும் பிறருக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும் இனவாதத்தைக் கைவிடுவதற்கு யாரும் தயாரில்லை. பழைய பிரச்சினைகளோடு, புதிதாகப் பல பிரச்சினைகளை அரசாங்கம் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. தமிழ்பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மந்தைகளின் மேய்ச்சற்தரை தொடக்கம், பௌத்த அடையாளங்கள் என்ற பேரில் நிலங்களையெல்லாம் அபகரிக்கிறது. (இலங்கையில் சிங்களமும் பௌத்தமும் ஒடுக்குமுறைக்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது). மாறாக யுத்தத்திற் கொல்லப்பட்டோருக்கான இழப்பீடோ, நிவாரணமோ, வழங்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பிரச்சினைக்கு முடிவில்லை. இறுதி யுத்தத்தில் சரணடைந்த போராளிகளைப் பற்றிய எந்தச் சேதிகளும் பதிலும் இல்லை. யுத்தத்தின்போது உடல் உறுப்புகளை இழந்த பல்லாயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கான உதவித்திட்டங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. பெற்றோரை இழந்த குழந்தைகள் முப்பது ஆயிரத்துக்கு மேலுண்டு. அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லை. யுத்தத்தில் அழிவடைந்த பிரதேசங்களில் புதிய தொழில் முயற்சிகள் உருவாக்கப்படவில்லை. ஏன் நாட்டிலேயே தொழிற்சாலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக பௌத்த விஹாரைகளைக் கட்டுவதிலேயே அரசின் கவனம் உள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளான பொறுப்புக்கூறல், மீள நிகழாமை, பகை மறப்பு, சமாதான முன்னெடுப்பு, அமைதித்தீர்வு எவையும் நடக்கவில்லை. என்பதால் இதுபோன்ற பல பிரச்சினைகளோடுதான் தமிழ் பேசும் மக்கள் வாழ வேண்டியுள்ளது. இதற்குள் நாட்டை உலுக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி வேறுண்டு. முஸ்லிம் மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ‘சகரானின் குண்டுத் தாக்குதல்’* இன்னொன்று. ஆக சிங்கள மக்களை விட இரட்டிப்பு நெருக்கடியோடு தமிழ்பேசும் மக்கள் வாழ வேண்டியிருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால், அபாயங்களின் மீதே தமிழ்பேசும் சமூகங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் யாப்பு, சட்டம், நீதிபரிபாலனம், ஆட்சிமுறை எல்லாம் இனஒடுக்குமுறையை – இனப் பாரபட்சத்தை – மிக நுட்பமாக மேற்கொள்வற்கேற்ற வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் யார் அதிகாரத்தில் இருந்தாலும் இந்த அடிப்படையில் மாற்றமில்லை என்பதே சுதந்திர இலங்கையின் வரலாறும் நடைமுறையுமாகும். ஆட்சிக்கு வருவதும் அதிகாரத்தில் இருப்பதும்கூட எப்போதும் சிங்களர்களே. அவர்களே பெரும்பான்மையினர். என்பதால், அவர்களுக்கே அந்த வாய்ப்புகள் உண்டு. அதைக் கடந்து பிற சமூகத்தினர் (தமிழ் பேசும் தரப்பினர்) ஆட்சிக்கு வரவே முடியாது. அதற்கான பெரும்பான்மையும் இல்லை. பிறரை ஏற்றுக் கொள்ளும் உளநிலையும் உருவாகவில்லை. பன்மைத்துவ அரசியற் பண்பாடு, பல்லினத்துக்குரிய அரசியல் நடைமுறை இலங்கையில் வளர்ச்சியடையவில்லை. கட்சிகள் அனைத்தும் இனவாதத்தை மேற்கொள்ளக் கூடியவாறு இன அடிப்படையில், இன அடையாளத்தோடுதான் உள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்தேசியக் கட்சி, தமிழ் மக்கள் முற்போக்குக் கூட்டணி எனத் தமிழ்த்தரப்புக் கட்சிகள். இதற்கு நிகராக – போட்டியாக ஜாதிக ஹெல உறுமய, சிங்கள மகாசம்மத பூமிபுத்திரக் கட்சி, சிங்கள மகாசபை போன்றவற்றோடு வெளிப்படையாக இன அடையாளத்தைக் காட்டிக் கொள்ளாத பெருங்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி (J.V.P) எனச் சிங்களக் கட்சிகள். அடுத்த பக்கத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனப் பல முஸ்லிம் கட்சிகள். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி எனப் பல மலையகக் கட்சிகள் (இவை இந்திய வம்சாவழி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவை). இவை அனைத்தும் அந்தந்த இனங்களையே பிரதிநிதிப்படுத்துகின்றன. ஒன்றை ஒன்று குற்றம்சாட்டிக் கொண்டே தமது இன அடையாள – இனவாத – அரசியலை மேற்கொள்கின்றன. மக்களும் விரும்பியோ விரும்பாமலோ தத்தமது இனக் கட்சிகளுக்கே ஆதரவளிக்கின்றனர். இதைக் கடந்து, பன்மைத்துவமாகச் சிந்திக்கக் கூடிய அளவுக்கு, இந்த நெருக்கடிகளைத் தீர்க்கக் கூடியவாறு இலங்கையில் எந்தத் தரப்பும் இல்லை என்பதே துயரம். மிக நீண்ட யுத்தத்தையும் அதனால் ஏற்பட்ட பேரழிவையும் சந்தித்த பிறகும் எவருக்கும் படிப்பினைகள் ஏற்படவில்லை. “இனவாதத்தை முறியடிப்பேன், இலங்கைத்தீவில் சமாதானத்தை நிலைநாட்டுவேன்” என்று தன்னுடைய கட்சியை வழிநடத்துவதற்கு எந்தத் தலைவரும் நாட்டில் இல்லை. இதனால் சமாதானத்துக்காக வேலை செய்யக் கூடிய, செயற்படுகின்ற ஒரு பத்துப் பேரைக் கூட இந்த நாட்டில் நம்மால் கண்டு பிடிக்க முடியாலிருக்கிறது. அண்மையில் மேற்குநாட்டுத் தூதுவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கேட்டார் -“போரைச் செய்வதற்காக நீங்கள் நீண்டகாலத்தைச் செலவிட்டீர்கள். பல படையணிகளை உருவாக்கினீர்கள். பல போர்த்தளபதிகளும் உருவாக்கப்பட்டனர். பல உயிர்களைக் கொடுத்தீர்கள். போர் வெற்றிக்காக எவ்வளவோ இழப்புகளின் மத்தியில் நீண்ட காத்திருப்பில் இருந்தீர்கள். அதிலே நீங்கள் எந்த நன்மைகளையும் பெற்றதில்லை. கண்ணீரையும் துயரத்தையும் பகை உணர்வையும் சம்பாதித்ததுதான் மிச்சம். பதிலாக சமாதானத்துக்காக என்ன விலையைக் கொடுத்தீர்கள்? எத்தனைபேர் சமாதானத்துக்காக உங்கள் நாட்டில் உழைக்கிறீர்கள்? உலகத்தில் அமைதியாக, இணக்கமாக, சமாதானமாக வாழ்வதுதானே சிறப்பு?” என்று. இதற்கு என்ன பதிலைச் சொல்வது? எல்லோரும் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இனவாதத்திலேயே எல்லோருடைய அரசியலும் நடக்கிறது. அதற்கான நியாயங்களையும் நியாயப்படுத்தல்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. ஆனால், இதுவோ (Post – War period) போருக்குப் பிந்திய காலமாகும். போருக்குப்பிந்திய காலம் என்பது, போர் உண்டாக்கிய அழிவுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகும். அந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் பகை மறப்பு, மீளிணக்கம், சமாதானம் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய காலமாகும். உலகமெங்கும் போருக்குப் பிந்திய காலம் என்பது கற்றுக்கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில் முரண்களைக் களைந்து, புத்தாக்கத்தை உருவாக்கும் காலமாகவே இருக்கிறது. இந்த யதார்த்தத்தின்படி, இந்தக் காலகட்டத்தில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் அனைத்துத் தரப்பினரும் புதிய அரசியலை – புத்தாக்க அரசியலை – மேற்கொள்ள வேண்டும். அது இனவாதத்திலிருந்து முற்றிலும் விடுபடவேண்டிய அரசியலாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எவரும் – எந்தத் தரப்பும் தயாரில்லை. இதனால்தான் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு தமிழ்த்தலைமைகளாலும் எந்த ஆறுதலையும் கொடுக்க முடியாதிருக்கிறது. விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து மாபெரும் தியாகங்களைச் செய்த – அந்தப் போரில் பேரிழப்புகளைச் சந்தித்த மக்களுக்கான களப்பணிகளை ஆற்ற வேண்டும் என்று இந்தத் தலைமைகளால் சிந்திக்க முடியாதிருக்கிறது. “பிரமுகர் அரசியல்” விளையாட்டில்தான் இவை ஈடுபடுகின்றன. இதில் விடுதலை இயக்கங்களில் இருந்து வந்தவர்களும் (செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களும்) பெருந் தவறை இழைக்கின்றனர். பங்கேற்பு அரசியல் (Participation politics), பங்களிப்பு அரசியல் (Contribution politics) அர்ப்பணிப்பு அரசியல் (Commitment politics) என்பதையெல்லாம் கைவிட்டு, பிரகடன அரசியலுக்கு (Declaratory politics)த் தாவிச் சென்று விட்டனர். பிரமுகர் அரசியல் – அதாவது பிரகடன அரசியல் (Declaratory politics) தானே வசதி! இனவாதத்தை அல்லது இன அடையாளத்தை விட்டு விட்டால் தமக்குத் தோல்வி ஏற்பட்டு விடும். மக்கள் தம்மை நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் இந்தக் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் உண்டு. அதை மீறிச் செயற்படுவதற்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் இவர்கள் தயாரில்லை. இன எல்லைகளைக் கடந்து அனைத்துச் சமூகங்களிடத்திலும் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற எந்தப் பேராளுமையும் இலங்கையில் எழுச்சியடையவில்லை. என்பதால் தொடர்ந்தும் மலிவான முறையில் இன உணர்வைத் தூண்டித் தமது அரசியல் ஆதாயத்தை எட்டி விடுகிறார்கள். இதற்குப் போர்க்காலப் பாதிப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கிறார்கள். நம்பிக்கையீனம் பெரியதொரு நோய்ப்பாதாளமாக விரிந்து கொண்டே செல்கிறது. இதே உளநிலையில்தான் இலங்கையின் ஊடகங்களும் உள்ளன. அறிஞர்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் அந்தந்தச் சமூக – இன – எல்லையைக் கடந்து சிந்திப்பதேயில்லை. எனவே நாடு இனவாதத்திலேயே கட்டுண்டு கிடக்கிறது. இதற்குப் புறம்பாக மாற்றுச் சிந்தனையைக் கொண்ட – சமாதானத்தை விரும்புகின்ற தரப்புகளும் உண்டு. அவை சிறியவை. அவற்றுக்கு அதிகாரப் பெறுமானமோ சமூகச் செல்வாக்கோ, ஊடக அங்கீகாரமோ கிடையாது. ஆகவே, யுத்தம் முடிந்தாலும் நிலைமையில் மாற்மும் முன்னேற்றமும் உண்டாகவில்லை. யுத்தம் உருவாகுவதற்கு அடிப்படையாக இருந்த காரணங்களும் யுத்த கால நிலவரங்களை ஒத்த போக்கும் நீடிப்பதால் நாட்டை விட்டுப் பலரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு தமிழர்களே அதிகளவில் புலம்பெயர்ந்தனர். இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடியினால் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வெளியேறுகின்றனர். இதெல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம், இனவாதமும் ஒடுக்குமுறை அரசின் செயற்பாடுகளும்தான் என்று தெரிந்தாலும் அதைப் புரிந்து கொண்டு மாற்றங்களைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இவ்வளவுக்கும் இலங்கை இயற்கை வளத்தை அதிகமாகக் கொண்ட அழகிய நாடு. அதைப் புரிந்து கொள்ளாமல் பிச்சைக்காகக் கை ஏந்துகிறது. தனக்குள்ளே முரண்பட்டு முரண்பட்டு அழிகிறது. இந்தக் கவலை பலருக்கும் உண்டு. ஆனால், தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள் தங்களுடைய நியாயமான கவலைகளையும் சுய அறிவையும் தூக்கித் தூர எறிந்து விட்டு இனவாதத்திற்குப் பின்னே அணிவகுத்து விடுகிறார்கள். இது இலங்கைச் சமூகங்களைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலேயே வைத்திருக்கிறது. இதைத் தமக்கான நல் வாய்ப்பாகக் கொண்டு வெளிச்சக்திகள் இலங்கையில் ஆக்கிரமிப்பைச் செய்கின்றன. நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இன்னொரு நிலையில் நாட்டை, மீளமுடியாப் பெருங்கடனில் மூழ்கடிக்கின்றன. அதற்கு வட்டி வட்டியாகக் கட்ட வேண்டிய இடர்நிலை வேறு. இனமுரணும் பொருளாதார நெருக்கடியும் ஊழலும் மோசமான அரசியற் சூழலும் இதற்கெல்லாம் தாராளமாக உதவுகின்றன. இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்பூட்டக் கூடிய அளவுக்கு இலங்கையில் அறிஞர்களோ பல்கலைக்கழகத்தினரோ ஊடகங்களோ இல்லை. ஆக மொத்தத்தில் இனவாதத்துக்கே எல்லோரும் வழிவிடுகிறார்கள். இதை மீறுவோர் – மாற்றுப் பார்வையுடையோர் -“துரோகிகள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு சமூக விலக்கம் செய்யப்படுகின்றனர். இது படுபயங்கரமான ஜனநாயக மறுப்பாகும். ஆனால், அதை யாரும் அப்படிக் கருதிக் கொள்வதில்லை. பதிலாக குறித்த விடயம் அல்லது குறித்த ஆள் தமது இனத்தேசியத்திற்கு எதிரானவர் என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. இப்படியே இந்தப் பாசிஸக் கூறு வலுப்பெற்றுள்ளது. வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! இனவாதச்சிந்தனை என்றாலே அது எந்த நிலையிலும் வன்முறையைக் கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். தமிழர்கள் முஸ்லிம்களை நம்புவதில்லை. முஸ்லிம்கள் தமிழர்களை நம்புவதில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவரை நம்புவதில்லை. சிங்களவர்கள் தமிழரையும் முஸ்லிம்களையும் நம்புவதில்லை. இப்படியே ஒருவரையொருவர் சந்தேகிக்கும்போது, எப்படி நாட்டில் ஒருங்கிணைந்த தீர்மானங்களை எடுப்பது? எப்படி ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்? இதற்கெல்லாம் மூல விதையைப் போட்டது சிங்களவர்களே. நாடு சுதந்திரமடைந்த 1948 இல் ஆரம்பிக்கப்பட்ட இன ஒடுக்குமுறையை இன்றுவரை பராமரிக்கின்றனர். இதைத் தணிக்கும் உபாயத்தை வகுத்துக் கொள்வதற்குப் பதிலாகத் தாமே இந்த எரியும் தீக்கு ஆகியாகியது தமிழ்த்தரப்பு. சிங்கள இனவாதத்திற்குப் பதில் தமிழ் இனவாதம் என்ற போட்டியாக்கம் பெரும் தீமையில் வந்து முடிந்திருக்கிறது. இதேவேளை தம்மைப் பற்றிய உச்ச உயர்வுணர்வையும் (superiority complex) அதிக பாதுகாப்புணர்வையும் (sence of supreme security) இவை கொண்டிருக்கின்றன. சிலவேளை அதிக தாழ்வுணர்வையும் (inferiority complex) கொண்டிருப்பதுமுண்டு. நாட்டிற் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர்கள், ஒருபோது தாமே பெரும்பான்மையினர், தம்மிடமே ஆட்சி அதிகாரம் உண்டு, தாமே பெரும்பான்மையினர் எனத் தம்மை உயர்வானோராக (superiority complex) க் கருதுகின்றனர். மறுநிலையில், இலங்கையில் மட்டுமே சிங்களம் இருப்பதால், தாம் இந்த உலகத்தில் சிறுபான்மையினர், இந்தியா தமக்கு எப்போதும் எதிராகவே இருக்கிறது, அருகில் உள்ள தமிழ்நாடு தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதால், தமிழரையும் விடத் தாம் குறைந்தவர்கள் என தாழ்வுணர்ச்சிக்கு (inferiority complex) உள்ளாகின்றனர். இப்படித்தான் தமிழர்களின் உளநிலையும் செயற்படுகிறது. இலங்கையில் தாம் சிறுபான்மையினராக இருந்தாலும் தமிழகத்தோடு இணைத்து, தம்மைப் பெரிய தரப்பாகக் காட்ட முற்படுகின்றனர். இதனால் எப்போதும் குழப்பமும் பதட்டமும் தம்மைத் தற்காத்துக்கொள்ள வேணும் என்ற உச்ச உணர்வும் இரண்டு தரப்பையும் சூழ்ந்திருக்கிறது. எதிர்த்தரப்பின் மீது போரைத் தொடுப்பதற்கான வியூகங்களை வகுப்பதைப்பற்றிய சிந்தனையே ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இது நேரடியாக ஆயுதம் தாங்கிய போராகத்தான் நடக்கிறது என்றில்லை. பல வடிவங்களிலும் ஒடுக்குதலை மேற்கொள்வது, அரசியல் ரீதியாக விலக்குவது, விலகிக் கொள்வது, முரட்டுத் தனமாக எதிர்ப்பது, மற்றமைகளை நிராகரிப்பது, எதிர்த்தரப்புக்கு எதிராக எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பது, எதையும் மூர்க்கமாக எதிர்ப்பது, எதையும் சந்தேகிப்பது எனப் பல வகைப்பட்டிருக்கிறது. இதனால்தான் இந்திய, நோர்வே நாடுகளின் சமாதான (இணக்க) முயற்சிகளும் தோற்றன. குறித்த சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு இதுவொரு வசதியே. அவர்கள் சமூக எதிர்நிலை உணர்வுக்குத் தலைமையேற்பதாகக் காட்டி, தமது நலனுக்கான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். சமூக முரண்கள், இன முரண்கள் மேலும் கூராக்கப்படுகின்றன. இதனால் மக்களுக்கு உண்டாகும் அழிவுகள், இழப்புகள், சேதங்கள், பின்னடைவுகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. அப்படிக் கவலைப்பட்டிருந்தால் எந்த நிலையிலும் இனவாதத்தைக் கடந்த – இணக்கத்துக்கான, சமாதானத்துக்கான அரசியலையே இவர்கள் மேற்கொண்டிருப்பர். அதனுடைய நல் விளைவுகளும் உருவாகியிருக்கும். இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு யார் முன்வரவில்லை? அல்லது ஏன் பின்னிற்க வேண்டும்? எந்த அடிப்படையில் இணக்கத்திலும் சமாதானத்திலும் நம்பிக்கை வைப்பது? தமிழர்களும் முஸ்லிம்களும் சமாதான அரசியலுக்கு முன்வந்தாலும் அரசும் சிங்களத் தரப்பும் அதற்குத் தயாரா? அதற்கான உத்தரவாதம் என்ன? இதை யார், எப்படிக் கண்காணிப்பது? அதற்கான பொறிமுறையும் கால எல்லையும் என்ன? இனவாதத்தை ஆரம்பத்தில் உருவாக்கியது யார்? அவர்கள் ஏன் இதற்கான பொறுப்பேற்றலைச் செய்யவில்லை? அதற்கான பரிகாரங்களைக் காணவில்லை? இப்படிச் சில அடிப்படையான – நியாயமான கேள்விகளைச் சிலர் எழுப்பக் கூடும். சிங்களத் தரப்பு (ஐ.தே.க. வும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) இனவாதத்தைத் தூண்டியது உண்மையே. அதற்கான விலையையும் அவை கொடுத்துள்ளன. அவற்றின் தலைவர்கள் பலர் இனவாதத்திற்கு பலியாகியுள்ளனர். ஆனால், அதற்குப் போட்டியாகத் தமிழ்த் தரப்பும் பிறகு இனமுரணில் ஈடுபட்டது. இதையெல்லாம் கடந்து வர வேண்டும் என்றே காலம் நிர்ப்பந்திக்கிறது. இனவாதத்தைக் கடந்த அரசியலை மேற்கொள்வதற்கு இலங்கைத்தீவில் சிறியதாயினும் சில சக்திகள் உண்டு. மெய்யாகவே அவை சமத்துவத்தையும் அமைதியையும் விரும்புகின்றன. ஆனால், அவற்றை உதிரிகளாகவே மக்கள் நோக்குகின்றனர். ஊடகங்கள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவற்றுக்கு எப்போதும் எரியும் பிரச்சினைகளே வேண்டும். இதையெல்லாம் கடந்து அந்தச் சக்திகள் வளரவில்லை. அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை. இனவாதம் செழித்திருக்கும் ஒரு சூழலில் அதற்கு எதிரான தரப்புகள் எளிதாக வளர்ச்சியடைய முடியாது என்ற சூழலை ஆழமாக உணர்வோரினால் புரிந்து கொள்ள முடியும். அப்படி அந்தத் தரப்பு வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட காலமும் கடுமையான உழைப்பும் தேவை. மிகுந்த சவால்களின் மத்தியில்தான் அவை வேர் விடவும் துளிர் விடவும் முடியும். ஏனென்றால், இனவாதத்தில் திளைத்துப் போயிருக்கும், அதில் முதலிட்டிருக்கும் பிற அரசியற் தரப்புகளும் ஊடகங்களும் லேசில் இந்த மாற்றுத் தரப்புக்கான இடத்தை அளிக்காது. ஆகவே கல்லிலே துளிர் விடும் சிறு விதையைப்போலவே அமைதிக்கான தரப்புகள் ஓர்மத்துடன் முளைத்தெழ வேண்டும். பகை வளர்ப்பின் மூலம் ஒருபோதுமே தீர்வை எட்ட முடியாது என்ற தெளிவான பட்டறிவு இருந்தாலும் பலருடைய மனதும் எதிர்ப்பில், பகைமையில்தான் திளைக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை எல்லாம் தவறு என்று தெரிந்தாலும் அதைக் கடக்க விரும்பாமல் திளைப்பதைப்போன்றதே இதுவும். அது ஒரு போதையாகி விட்டது. பிறரை எப்போதும் எதிர்த்தரப்பாக நோக்கிப் பழகி விட்டோம். ஆனால் தென்னாபிரிக்காவில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் பகையைக் கடந்து நிற்கிறார்கள். இன்று யப்பானும் அமெரிக்காவும் பகையைக் கடந்த நிலையில் இணைந்து செயற்படுகின்றன. கிரோஸிமாவிலும் நாகஸாகியிலும் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் தாக்கம் இன்னும் யப்பானில் உண்டு. ஆனால், அதைக் கடந்து செல்வது யப்பானுக்கு அவசியமாக இருந்தது. இப்படிப் பகையைக் கடந்த பல செழிப்பான உதாரணங்கள் உண்டு. ஆனாலும் இதை ஒத்துக் கொள்வதற்கும் முன்மாதிரியாகக் கொள்வதற்கும் யாரும் தயாரில்லை. இலங்கையில் இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு முயற்சித்தவர்களை ஏற்கனவே மக்கள் தோற்கடித்து விட்டனர் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். இடதுசாரிய நண்பர்கள் துயரம்தோய்ந்த பகடியாக அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியமுண்டு. “இடதுசாரிகளைத் தோற்கடித்து விட்டு, இனவாதிகளை வளர்த்த மக்கள் அதற்கான துயரத்தை அறுவடை செய்கின்றனர்” என. உண்மைதான் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனவாத அரசியலுக்காக மிகப் பெரிய விலையைக் கொடுத்திருக்கின்றனர். ஆனாலும் மக்கள் இதில் பட்டறிவைப் பெறுவதற்கும் இதைக் குறித்தெல்லாம் சிந்திப்பதற்கும் மாற்று உபாயங்களைத் தேடுவதற்கும் தயாரில்லை. அவர்கள் மலக்குழிக்குள்ளே அமுதத்தைத் தேட முயற்சிக்கிறார்கள். அதற்கேற்றவாறு மலத்திலிருந்து தேனை எடுத்துத் தருவதாக இந்தத் தலைவர்களும் தங்கள் மக்களுக்கு இனிப்பாக வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கொள்வதற்குத் தமிழர்களால் முடியாதிருக்கிறது. அரசு பல வகையில் அதைத் தடுக்க முற்படுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழர்கள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கிறார்கள். “அந்த வேட்பாளர் ஒரு போதுமே வெற்றியடைய மாட்டார் என்றாலும் பரவாயில்லை, தமது எதிர்ப்பின் அடையாளமாக இருக்கட்டும்” என்று சொல்கிறார்கள். இப்படி நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்டுவதற்கு அவர்கள், தமிழ்பேசும் ஏனைய தரப்புகளான முஸ்லிம்களிடமும் மலையக மக்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை. இப்படித்தான் அறிவீனமாக அனைத்தும் சிந்திக்கப்படுகிறது. புத்தியைத் தீட்டுவதற்குப் பதிலாகக் கத்தியைத் தீட்டுவதிலேயே பலருடைய கரிசனையும் உள்ளது. ஆனால், எதிர்ப்பரசியலின் யுகம் விடுதலைப் புலிகளுடன் முடிவுக்கு வந்து விட்டது. அவர்களே அதனுடைய உச்சம். எதிர்ப்பரசியலைப் புலிகள் பல பரிமாணங்களில் மேற்கொண்டனர். தமக்கான ஆட்சிக்கான நிலப் பரப்பு, ஆட்சி, படையணிகள், தாக்குதல்கள், தொடர்ச்சியான போர், அதை எதிர்கொள்ளும் ஆற்றல், மக்கள் ஆதரவு, அரசாங்கத்தை நிலைகுலைய வைத்தல், சர்வதேசக் கவனத்தை ஈர்த்தல் எனப் பலவாக இருந்தது. இனி ஒரு எதிர்ப்பரசியலை மேற்கொள்வதாக இருந்தால், புலிகளைக் கடந்து நிற்க வேண்டும். அது சாத்தியமானதா? அதை யார் முன்னெடுப்பது? இந்தக் கசப்பான யதார்த்த வெளியில்தான் இலங்கையர்கள் தமது அரசியலை முன்னெடுத்து, எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளனர். சரியான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதாக இருந்தால், நாம் மரபார்ந்து சிந்தித்து வந்த இன அடிப்படையிலான சிந்தனை முறையிலிருந்து விடுபட வேண்டும். அதைத் தூக்கியெறிய வேண்டும். இங்கேதான், நம்முடைய வலிமையான – உறுதியான நிலைப்பாடும் போராட்டமும் தேவை. நாம் எந்த நிலையிலும் ஐக்கியத்தை, சமாதானத்தை, நீதியை, உரிமையை, அதிகாரப் பகிர்வை, அமைதித்தீர்வையே விரும்புகிறோம். எந்த நிலையிலும் நமக்குச் சமாதானமே வேண்டும் என்று உறுதியாக – விடாப்பிடியாக நிற்க வேண்டும். அதுவே இனவாத அரசையும் அதன் ஒடுக்குமுறையை இயந்திரத்தையும் உடைப்பதற்கான உறுதி மிக்க ஆயுதம். இதுதான் உலக மொழி. https://arangamnews.com/?p=10877
-
God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
தத்து எடுப்பது என்பது இலகுவான விடயம் அல்ல. மேற்குநாடுகளில் தத்து எடுப்பதற்கு கூர்மையான ஆராய்ச்சி (vetting process) எல்லாம் உண்டு. வாதத்தில் வெல்லவேண்டும் என்று கருத்தாடுவது எப்போதும் வீண்வேலை. அதை குருவிகள், நெடுக்காலபோவன் காலத்தில் இருந்தே யாழில் பார்க்கின்றோம்😂 ஜனநாயக நாடுகளில் வரும் சட்டங்கள் எல்லாம் பாராளுமன்றில், அரசசபையில் நீண்ட விவாதங்களுக்கு உள்ளாகித்தான் சட்டங்கள் ஆகின்றன. ஒருபால் திருமணங்களையும் “திருமணம்” (marriage) என்று சட்டரீதியாகச் சொல்ல பல காரணங்கள் உள்ளன. ஆனால் திருமணத்திற்கு அடிமுடி தேடினால் லெமூரியன் காலத்தில் “திருமணம்” என்றுதான் சொல்லப்பட்டது என்றும் வாதாடலாம்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (18 ஜூன்) முதல் சுற்றின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 40) முதல் சுற்று குழு C : செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG 18 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் 05 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தியா தமிழ் சிறி P.S.பிரபா பிரபா USA வாதவூரான் கிருபன் ரசோதரன் அஹஸ்தியன் கந்தப்பு வாத்தியார் எப்போதும் தமிழன் நந்தன் நீர்வேலியான் கல்யாணி ஆப்கானிஸ்தான் சுவி புலவர் நுணாவிலான் ஏராளன் கோஷான் சே நாளைய போட்டியில் எவர் புள்ளிகளை வெல்வார்கள்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
39வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து இறுதியில் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ஓட்டங்கள் பெற்று அடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமைதால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 39வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 64 2 ரசோதரன் 64 3 கோஷான் சே 64 4 ஈழப்பிரியன் 62 5 நந்தன் 62 6 சுவி 60 7 தமிழ் சிறி 58 8 ஏராளன் 58 9 கிருபன் 58 10 கந்தப்பு 58 11 வாத்தியார் 58 12 எப்போதும் தமிழன் 58 13 நீர்வேலியான் 58 14 வீரப் பையன்26 56 15 நிலாமதி 56 16 குமாரசாமி 56 17 தியா 56 18 வாதவூரான் 56 19 அஹஸ்தியன் 56 20 புலவர் 54 21 P.S.பிரபா 54 22 கல்யாணி 54 23 நுணாவிலான் 52
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி முதல்சுற்றில் நாளைதான் கடைசிப் போட்டி. 😀 நாளை முதல் சுற்றுக்கான மிகுதிப் புள்ளிகள் கிடைக்கும்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
37வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 19.3 ஓவர்களில் 106 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நேபாளம் அணி விக்கெட்டுகளை இழந்தாலும் 85 ஓட்டங்கள் வரை வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. ஆனால் 85 ஓட்டங்கள் இருக்கையிலேயே 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து, இறுதியில் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. முடிவு: பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. — 38வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி ஆரம்பத்திலிருந்தே வேகமாக அடித்தாடி இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நெதர்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. முடிவு: சிறிலங்கா அணி 83 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்தமைதால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (17 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) முதல் சுற்று குழு D : திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 22 பேர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் கல்யாணி இப்போட்டியில் 22 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது நேபாளம் முதலாவது வெற்றியை சுவைக்குமா? 38) முதல் சுற்று குழு D : திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED அனைவரும் சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் சிறிலங்கா அணி இரண்டு புள்ளிகள் பெற்று அனைவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா? 39) முதல் சுற்று குழு C : திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெல்லுமா அல்லது அனைவருக்கும் முட்டையா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
36வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து அதிக ஓட்டங்களைப் பெறமுடியவில்லை. இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும், இறுதியில் 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவிற்கு புள்ளிகள் கிடையாது. 36வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 58 2 ரசோதரன் 58 3 கோஷான் சே 58 4 ஈழப்பிரியன் 56 5 நந்தன் 56 6 சுவி 54 7 தமிழ் சிறி 52 8 ஏராளன் 52 9 கிருபன் 52 10 கந்தப்பு 52 11 வாத்தியார் 52 12 எப்போதும் தமிழன் 52 13 நீர்வேலியான் 52 14 வீரப் பையன்26 50 15 நிலாமதி 50 16 குமாரசாமி 50 17 தியா 50 18 வாதவூரான் 50 19 அஹஸ்தியன் 50 20 கல்யாணி 50 21 புலவர் 48 22 P.S.பிரபா 48 23 நுணாவிலான் 46
-
மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள்
-
வள்ளல்களும் தமிழரசியலும் - நிலாந்தன்
வள்ளல்களும் தமிழரசியலும் - நிலாந்தன் இலவசமாகக் கிடைப்பதைப் பெரும்பாலானவர்கள் கைவிடமாட்டார்கள். இது பெரும்பாலான எல்லாச் சமூகங்களிலும் காணப்படும் ஒரியல்பு. அதிலும் குறிப்பாக ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில்,கூட்டுக் காயங்களிலும் கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தில், உதவிக்காகக் காத்திருப்பவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். கடந்த 15 ஆண்டு கால ஈழத்தமிழ் அரசியலானது அவ்வாறு உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு பொருத்தமான நிவாரணத் திட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கத் தவறிவிட்டது. 2009இல் காணாமல்போன தனது இளம் கணவனுக்காக போராடிய இளம் மனைவி இப்பொழுது முதுமையின் வாசலை அடைந்து விட்டாள். அவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அப்படித்தான் காயப்பட்டவர்கள், அவயங்களை இழந்தவர்கள், மிகக்குறிப்பாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், கழுத்துக்குக் கீழ் இயங்க முடியாதவர்கள், இரு கண்களையும் இழந்தவர்கள், இரு கால்களையும் இழந்தவர்கள்… போன்றவர்களுக்கு உதவுவதற்கு ஒரு மையத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட எத்தனை கட்டமைப்புகள் உண்டு? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாக உள்ள பெண்களின் கண்ணீரை வைத்து அரசியல் செய்யும் ஒரு சமூகம், அப்பெண்கள் மத்தியில் காணப்படுகின்ற இளவயதினருக்குப் புதிய வாழ்வைக் கொடுக்கத் தவறிவிட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள ஒரு சமூகத்தில் பிறரிடம் இருந்து கிடைக்கக்கூடிய உதவிக்காக காத்திருப்பவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். தமிழ்ச்சமூகத்தில் பிறர் உதவியில் தங்கியிருக்கும் தொகையினரை கடந்த 15ஆண்டுகளாக அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள தனி நபர்கள், தன்னார்வ அமைப்புக்கள், இவைதவிர நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வள்ளல்கள், கொடையாளிகள் போன்றவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அரவணைத்து வருகிறார்கள். மேற்சொன்ன ஒவ்வொரு தரப்பும் அவரவர் நோக்கு நிலையில் இருந்துதான் அந்த மக்கள் கூட்டத்தை அரவணைக்கிறார்கள். அதனால் தேவை நாடிகளாக இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு விகிதமளவு நிவாரணம் கிடைக்கிறது. உதவிகள் கிடைக்கின்றன. உளவளத் துணையும் கிடைக்கின்றது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு செய்பவர்கள் தானம் செய்பவர்கள் முதலாவதாக, நல்லதைத்தான் செய்கிறார்கள். ஆனால் தொண்டும் தானமும் மட்டும் ஒரு சமூகத்தை அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ வைக்க உதவாது. அந்த மக்களைக் கையேந்தி மக்களாக வைத்திருப்பதற்கும் அப்பால் அவர்களை வாழ்வில் பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்களாக, விடாமுயற்சி உள்ள உழைப்பாளர்களாக மாற்ற வேண்டும். அது தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாடு. ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாடு.இந்த அடிப்படையில் சிந்தித்தால் தானமும் தொண்டும் கருணையின் பாற்பட்ட செயல்கள் மட்டுமல்ல. அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஒரு பகுதி.அவை தேசியக் கடமைகள். காயத்தில், துக்கத்தில், இழப்பில், தனிமையில் விழுந்து கிடப்பவர்களுக்குக் கைகொடுப்பது, அவர்களைத் தூக்கி நிறுத்துவது, அவர்களின் காயங்களை ஆற்றுவது, போன்றன ஒப்பீட்டளவில் “செட்டில்ட் “ஆன தமிழ் மக்களின் தேசியக் கடமைகள். அதற்கு ஓர் அரசியல் தலைமைத்துவம்தான் முழுமையான பொருளில் வழி நடத்த முடியும். ஓரளவுக்குச் சமூகத் தலைமைத்துவமும் மதத் தலைமைத்துவமும் செயற்பாட்டு அமைப்புக்களும் செய்யலாம். ஆனால் அப்படிப்பட்ட செய்முறைகள் கடந்த 15 ஆண்டுகளாக மிகக்குறைந்த அளவில்தான் நடநதிருக்கின்றன. மிகக் குறைந்த தொகையினர்தான் அவ்வாறு வலுவூட்டப்பட்டிருக்கிறார்கள். பெருந்தொகையானவர்கள் தொடர்ந்தும் கையேந்திகளாகவும் நிவாரணங்களுக்காகக் காத்திருப்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு சமூகப் பின்னணியை வள்ளல்களும் கொடையாளிகளும் தமக்கு வசதியாகக் கையாளப் பார்க்கிறார்கள். கடந்த வியாழக்கிழமை அப்படி ஒரு சம்பவம் நடந்தது. அன்று கொழும்புக்கான ஐநாவின் இணைப்பாளர், ஐநா அலுவலகம் ஒன்றில் குடிமக்கள் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திப்பதாக இருந்தார். ஆனால் அவருடைய பயணம் சிறிது நேரம் தாமதம் ஆகியது. ஏனென்றால் அவர் வரும் வழியில் நாவலர் வீதியில் ஒரு பல்பொருள் அங்காடியைச் சூழ உள்ள பிரதேசத்தில் அசாதாரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அங்குள்ள ஒரு பல்பொருள் அங்காடி உரிமையாளரின் பெருமெடுப்பிலான தான நிகழ்வே அந்த நெரிசலுக்குக் காரணம். அங்கே போலீசாரும் படை வீரர்களும் காணப்பட்டார்கள். எனினும் அங்கு பெருகிய மக்களைக் கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. அதனால் ஐநாவின் பிரதிநிதி சிறிது கால தாமதமாக சந்திப்புக்கு வந்தார். மேற்சொன்ன பல்பொருள் அங்காடியின் முதலாளி ஏற்கனவே அதுபோன்ற தான நடவடிக்கைகளுக்காக மிகவும் பிரபல்யமானவர். உதவி தேவைப்படுகிறவர்களுக்கு அவர் காசை அள்ளிவீசுவார். அன்றைய தான நிகழ்வுக்கு வெளியிடங்களில் இருந்து குறிப்பாக தூர இடங்களில் இருந்து மக்கள் முதல்நாளே இரவு பயணம்செய்து அங்கு வந்திருந்தார்கள். வயோதிபர்கள், நோயாளிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என்று பல வகைப்பட்டவர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களைக் கௌரவமான விதத்தில் ஒழுங்குபடுத்தி அதை ஒரு கௌரவமான தான நிகழ்வாகச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருந்திருந்தால், அன்றைக்கு அந்த நெரிசலைத் தவிர்த்து இருந்திருக்கலாம். அல்லது அது ஒரு கட்டுப்படுத்த முடியாத பெரும் விழாவாக வெளியில் தெரிவதை அந்த முதலாளி விரும்பினாரோ தெரியவில்லை. கொடையாளிகள் அல்லது வள்ளல்கள் எல்லாச் சமூகங்களிலுமே போற்றப்படுகின்றார்கள். எல்லா மதங்களிலுமே அவர்களுக்கு உயர்வான இடம் உண்டு. குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் புராண நாயகனாகிய கர்ணன், முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்த மன்னன் பாரி போன்றவர்கள் உதாரணங்களாகக் கூறப்படுவதுண்டு. நவீன வரலாற்றிலும் கோடீஸ்வரர்களும் உலகப் பெரு முதலாளிகளும் தாம் திரட்டிய செல்வத்தின் ஒரு பகுதியைத் தானம் செய்கிறார்கள். அல்லது தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழராகிய ராஜ் ராஜரத்தினம் அவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய்களை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தானம் செய்வதற்கு உழைக்க வேண்டும். உழைத்தால்தான்,செல்வத்தைத் திரட்டினால்தான், தானமாகக் கொடுக்கலாம் என்ற பொருள்பட அவர் தன்னுடைய “சமனற்ற நீதி” என்ற நூலில் எழுதியிருக்கிறார். தொண்டு செய்வது நல்லது. வள்ளல்கள் போற்றுதற்குரியவர்கள். ஆனால் தொண்டர்களும் வள்ளல்களும் அரசியலில் இறங்கலாம் என்று சிந்திக்கும் ஒரு போக்கு எங்கிருந்து வருகிறது ? தமிழகத்தில் எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றவர்கள் வள்ளல்களாக போற்றப்படுகிறார்கள். அதனால் லட்சக்கணக்கான ஆதரவாளர்களை அவர்கள் சம்பாதித்தார்கள். ஈழத்தமிழர்கள் மத்தியில் அவ்வாறு வள்ளல்கள் அரசியலில் ஈடுபடும் ஒரு போக்கு அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. வள்ளல்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று இக்கட்டுரை கூறவரவில்லை. கடந்த 15 ஆண்டுகால தமிழ் அரசியல் போக்கெனப்படுவது வள்ளல்களுக்கும் கொடையாளிகளுக்கும் வசதியான ஒன்றுதான். கொடைகளின்மூலம் வள்ளல்கள் சமூகத்தில் இயல்பாகவே அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் பெற்று விடுகிறார்கள். அதை அவர்கள் அரசியலில் முதலீடு செய்வது இலகுவானது. ஏற்கனவே தமது தொழில்சார் திறமைகள் காரணமாக புகழடைந்த,செல்வந்தர்களாகிய சிலர் தமிழரசியலில் இறங்கிவிட்டார்கள். செல்வந்தர்களாகவும் பிரபல்யங்களாகவும் இருக்கும் பலர் இறங்கத் துடிக்கிறார்கள் .இப்படிப்பட்ட ஓர் அரசியல் சூழலில் வள்ளல்கள் இலகுவாக அரசியலில் நுழையலாம். இது அரசியல்வாதியாக இருப்பதற்குரிய தகமை என்ன என்ற தமிழ்ச் சமூகத்தின் அளவுகோல்களைக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? அதுமட்டுமல்ல தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலை முன்னெடுக்கத் தவறிய ஒரு வெற்றிடத்தில்தான் வள்ளல்கள் ஒரு தேசியக் கடமையை தனிப்பட்ட தானமாகவும் கருணையாகவும் கருதி அதன் ஊடாக அரசியலில் பிரவேசிக்க முயற்சிக்கிறார்களா? கூட்டு மனவடுகளோடும் ஆறாத கூட்டுக்காயங்களோடும், அவநம்பிக்கைகளோடும் காணப்படும் ஒரு சமூகத்தை பண்புருமாற்றத்தின் ஊடாகக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு 2009க்குப் பின் வந்த எல்லாத் தலைவர்களுக்கும் இருந்தது. ஆனால் அது பொருத்தமான விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை. அதன் விளைவாக விழுந்த வெற்றிடத்தில்தான் வள்ளல்கள் தலைவர்களாக வர முயற்சிக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்துக்கு இப்பொழுது தேவையாக இருப்பது 15ஆண்டுகளின் பின்னரும் கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஒரு கூட்டு அரசியல் செயல்பாடுதான். ஆனால் அவ்வாறு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை முன்னெடுக்கவல்ல ஆளுமை மிகுந்த தலைவர்கள் எத்தனை பேர் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு? மக்களுக்கு நிவாரணம் வேண்டும்.உதவிகள் வேண்டும். நிதிவளம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் காசை என்ன செய்வது என்று தெரியாமல் கோவில்களில் கொண்டு போய்க் கொட்டுகின்றது. அந்தக் காசைப் பயன் பெறுமதி மிக்கதாக மாற்றலாம். அதற்கு 2009க்குப் பின்னரான தமிழ் அரசியலைக் குறித்த பொருத்தமான அரசியல் தரிசனமும் பொருளாதார தரிசனமும் நிவாரண தரிசனமும் இருக்க வேண்டும். வள்ளல்களுக்கு அவ்வாறான தரிசனம் இருக்குமாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் வள்ளல்கள் தங்களை புதிய எம்ஜிஆர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தான நிகழ்வை நாடகத்தனமாக ஒழுங்குபடுத்தி, பாட்டுக்கு எம்ஜிஆர் போல ஆடி, யுடியுப்பர்களுக்குச் செய்தியாக மாறும் போதுதான், அது விவகாரமாகிறது. தொண்டு நல்லது. தானம் நல்லது. ஆனால் தொண்டர்களும் வள்ளல்களும் அரசியல்வாதிகளாக வர விரும்பினால் அதற்குரிய ஒழுக்கமும் தரிசனமும் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும். தானம் ஒரு அர்ப்பணிப்புத்தான். ஆனால் அது மட்டும் போதாது. பொருத்தமான அரசியல் தரிசனம் இருக்க வேண்டும். அது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அதை ஒரு தேசியக் கடமையாக செய்ய வேண்டும். அற்புதமான ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. ஒரு கை கொடுப்பது மறுகைக்குத் தெரியக்கூடாது என்று. தானம் செய்வதால் தனக்குக் கிடைக்கும் புகழையும் பிரபல்யத்தையுங்கூடத் தானம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மகாபாரதத்தில் கர்ணன் இறக்கும் தறுவாயில் அவனுடைய தர்மமே அவனுக்குப் பாரமாக இருந்தது. அதனால் கர்ணன் தானம் செய்து தான் சம்பாதித்த புண்ணியத்தையும் தானம் செய்தான். அது புராண கால கர்ணன். அவனுக்குத் தலைகாத்த தர்மம் ஒரு பாரம். நவீன அரசியலில் தர்மம் ஒரு முதலீடா? https://www.nillanthan.com/6796/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எல்லோர் தெரிவுகளையும் ஆராய்ந்து பார்த்தேன். சிலரது பதில்கள் நடக்கவிருக்கும் சுப்பர்8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுந்ததாக உள்ளது. சில பதில்கள் போட்டிகளின்படி சரியாக இல்லாவிடினும் புள்ளிகளை வெல்ல சாதகமாக உள்ளது. சிலரது பதில்கள் நடக்கவிருக்கும் போட்டிகளுடன் ஒத்துவராது. எனவே, நடக்கவிருக்கும் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் பதில்கள் சரியாக இருந்தால், போட்டிகளை சரியாகக் கணிக்காவிட்டாலும், 2 புள்ளிகள் கொடுக்கலாம் என்று உள்ளேன். அதேவேளை போட்டிகளை சரியாகக் கணித்த்திருந்தும், வெல்லும் அணியைச் சரியாகக் கணிக்காவிட்டால் புள்ளிகள் கிடையாது. நடக்கவிருக்கும் போட்டிகளுடன் ஒத்துவராத பதில்களுக்கு இரண்டு புள்ளி கொடுக்கவா, ஒரு புள்ளி கொடுக்கவா என்று யோசிக்கின்றேன். எனினும் இன்னும் தீர்மானிக்கவில்லை!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
35வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி பிராண்டன் மக்முல்லெனின் அதிரடியான 60 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டினதும் மார்கஸ் ஸ்ரொயினதும் அரை சதங்களின் உதவியுடன் இரு பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைய ஸ்கொட்லாந்து துடுப்பாட்டத்தில் நன்றாக விளையாடியிருந்தும், அவுஸ்திரேலியாவின் அனுபவம் நிறைந்த வீரர்கள் வெற்றியை தமது அணிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் தகுதியை இழக்க, இங்கிலாந்து சுப்பர் 8 சுற்றுக்குள் செல்கின்றது. அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த @nunavilanக்குப் புள்ளிகள் கிடையாது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி இன்று ஞாயிறு (16 ஜூன்) இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 22 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து நுணாவிலான் இப்போட்டியில் 22 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இங்கிலாந்து அணியை சுப்பர் 8 சுற்றுக்குள் போகவிடாமல் தடுக்குமா? 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 22 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அயர்லாந்து சுவி இப்போட்டியில் பாகிஸ்தான் இரண்டு புள்ளிகள் தனது பெருமையை கொஞ்சம் காத்து 22 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
33வது போட்டியில் மழை காரணமாக ஒரு பந்துகூடப் போடமுடியவில்லை. எனவே போட்டியில் விளையாடவிருந்த கனடிய அணிக்கும் இந்திய அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன. முடிவு: முடிவில்லை! இப்போட்டிக்கு யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! ------ 34வது போட்டி மழை காரணமாக அணிக்கு 10 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வேகமாக அடித்தாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நமீபியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களையே பெறமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி DLS முறையில் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 34வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை!): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 54 2 ரசோதரன் 54 3 கோஷான் சே 54 4 ஈழப்பிரியன் 52 5 சுவி 52 6 நந்தன் 52 7 தமிழ் சிறி 48 8 ஏராளன் 48 9 கிருபன் 48 10 கந்தப்பு 48 11 வாத்தியார் 48 12 எப்போதும் தமிழன் 48 13 நீர்வேலியான் 48 14 வீரப் பையன்26 46 15 நிலாமதி 46 16 குமாரசாமி 46 17 தியா 46 18 வாதவூரான் 46 19 அஹஸ்தியன் 46 20 கல்யாணி 46 21 புலவர் 44 22 P.S.பிரபா 44 23 நுணாவிலான் 44
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
31வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நேபாளம் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வாய்ப்பு இருந்தும், குறிப்பாக கடைசி ஓவரில் எட்டு ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் 6 ஓட்டங்களை மட்டுமே எடுத்தமை, இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்களை எடுத்து வெற்றிவாய்ப்பை இழந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. --- 32வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய உகண்டா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 40 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய மிகவேகமாக அடித்தாடி 5.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 41 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் சிக்கலான விதிகளைக் கொண்டு வந்தால் கொஞ்சம் கஷ்டம்! குழு B உம் குழு C உம் பிரச்சினை கொடுக்கும் போலிருக்கு. பார்ப்போம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைய இங்கிலாந்து - நமீபியா போட்டி அல்லது நாளை மறுநாள் அவுஸ்திரேலியா - ஸ்கொட்லாந்து போட்டியில் ஒன்று மழையால் தடைபட்டாலும் இங்கிலாந்து அவுட். இங்கிலாந்து வெல்லவேண்டும், ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவிடம் தோற்கவேண்டும். அப்படி நடக்காவிட்டாலும் இங்கிலாந்து அவுட்! மழைதான் பெரிய எதிரி!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
புள்ளிகள் கூடலாம்! ஆனால் எல்லாரும் படிகள் மாறமாட்டினம்! நான் இப்பவே “சூல வைரவா சுழட்டிக் குத்து” கீறித் துப்பல் போட்டிருக்கின்றேன்😜
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி நாளை சனி (15 ஜூன்) நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 31) முதல் சுற்று குழு D : சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA எதிர் NEP அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது நேபாளம் அதிர்ச்சி கொடுக்குமா? 32) முதல் சுற்று குழு C : சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ எதிர் UGA அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் நியூஸிலாந்து இரண்டு புள்ளிகள் எடுத்து எல்லோருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா? 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND எதிர் CAN அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் இந்திய அணியை கனடா அதிர்ச்சிக்குள்ளாக்குமா அல்லது சுருண்டுவிடுமா? 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM எதிர் ENG அனைவரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியிலும் இங்கிலாந்து மிகவேகமாக அடித்தாடுமா அல்லது சுப்பர் 8க்கு போகமுடியாமல் திரும்புமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
30வது போட்டியில் மழை காரணமாக ஒரு பந்துகூடப் போடமுடியவில்லை. எனவே போட்டியில் விளையாடவிருந்த ஐக்கிய அமெரிக்கா அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன. முடிவு: முடிவில்லை! இந்தப் போட்டி கைவிடப்பட்டதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைகின்றது. அதேவேளை பாகிஸ்தான் அணி சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்துள்ளது! இப்போட்டிக்கு யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! 30வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை!): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 48 2 ரசோதரன் 48 3 கோஷான் சே 48 4 ஈழப்பிரியன் 46 5 சுவி 46 6 நந்தன் 46 7 தமிழ் சிறி 42 8 ஏராளன் 42 9 கிருபன் 42 10 கந்தப்பு 42 11 வாத்தியார் 42 12 எப்போதும் தமிழன் 42 13 நீர்வேலியான் 42 14 வீரப் பையன்26 40 15 நிலாமதி 40 16 குமாரசாமி 40 17 தியா 40 18 வாதவூரான் 40 19 அஹஸ்தியன் 40 20 கல்யாணி 40 21 புலவர் 38 22 P.S.பிரபா 38 23 நுணாவிலான் 38
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நானும் காரணங்களை எல்லாம் வாசித்தேன். பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. நன்றி. எனினும், சட்டத்தின் பார்வையில் திருமணம் என்று அமையாவிட்டால் பலவகைகளில் தன்பாலின தம்பதியினர் புறக்கணிக்கப்படுவார்கள். சமத்துவமான உரிமைகள் இருக்காது. இந்தக் கோணத்திலும் பார்க்கவேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@goshan_che இனி உய்ய வாய்ப்பில்லை! மழையும், மெதுவான ஆடுகளமும் அமெரிக்க @பிரபா வுக்கே வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. அவுஸ்திரேலியா சம்பியனாக வந்தால் அவரைப் நாலுகால் பாய்ச்சலில் கலைத்தாலும் பிடிக்கேலாது! பிட்ச் இன்ஸ்பெக்ஸன் நடக்குது! அம்பயர்மார் மிதித்துப் பார்க்கினம்!
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக அறிவித்துளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதான விடயத்தை அவர் தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வேட்பாளராக முன்நிறுத்தப்பட கூடாதென்பதே வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 45 சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு,கிழக்கு தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்ற கலந்துரையாடல்கள் கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிஆர்எல்எப், ரொலோ, புளொட் உட்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டன. தொடர்ச்சியாக இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் பின்புலத்திலேயே அனந்தி சசிதரன் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். என்றாலும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் எவரும் தேர்தலில் களமிறக்கப்பட கூடாதென்ற நிலைப்பாட்டின் பிரகாரமே சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபை கலந்துரையாடல்களை நடத்திவந்தது பேராசிரியர் ஒருவரை களமிறக்கும் அடிப்படையிலான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு பேச்சுகள் தொடரும் சூழலில் சிவில் அமைப்புகளுக்கு தெரியாது அனந்தி சசிதரன், தாம் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக எந்த அறிவித்துள்ளார் என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.. அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரிய வரலாற்றுத் தாயகம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எழுபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிங்கள தேசம் ஒரு தலைப் பட்சமாகத் தீர்மானித்துவந்துள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசு ஈழத்தமிழர் தேசத்தையும் அதன் தாயகத்தையும் ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமித்துள்ள சிங்கள தேசம் நிர்ணயிக்கும் தேர்தல் அரசியலுக்குள் புகுந்து விளையாடி ஆக்கிரமிக்கப்பட்ட தேசம் தனக்குரிய அரசியற் தீர்வைக் கண்டுவிடச் சற்றும் இடமளிக்காத வகையில் இலங்கை அரசின் ஒற்றையாட்சித் தன்மையும் மத ரீதியான முதன்மைத்துவமும் அரசியலமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் அரசியலில், அதுவும் குறிப்பாக பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சித் தேர்தல்களில் ஏன் தமிழர்களான நாமும் பங்கேற்கிறோம் என்றால், அதற்கு ஒரு காரணம் உள்ளது. ஈழத்தமிழர்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகத்தின் பிரதேச வாரியான பிரதிநிதித்துவம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு எமது தேசிய இனத்தின் அரசியல் வேணவா மறுதலிக்கப்படுவதற்கும் மலினப்படுத்தப்படுவதற்கும் இந்தத் தேர்தல் அரசியல் ஓர் அரசியல் வெளியாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதற்காகவும் எமது மக்களிற் பெரும்பான்மையினரின் ஜனநாயக ஆணை இல்லாதோர் எமது பிரதிநிதிகள் போல வலம்வந்து எமது தேசிய வேணவாவைத் திரிபு படுத்தாமல் இருப்பதற்காகவும் எமது பிரதேச ரீதியான தேர்தல் அரசியலை நாம் ஓர் தடுப்பு உத்தியாகப் பயன்படுத்துகிறோமே அல்லாது, தேர்தல் அரசியலை மூலோபாய வழிவகையாக ஈழத்தமிழர்கள் பயன்படுத்தவில்லை. இத் தேர்தல்களில் நாம் போட்டியிடுவதன் மூலம் இலங்கையின் ஒற்றையாட்சி முறையை நாம் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்வதாக எவரும் ஒரு போதும் பொருள்கோடல் செய்ய இயலாது. அதுமட்டுமன்றி, அவ்வப்போது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வளங்களை ஏதேனும் ஒரு வகையில் ஆற்றுப்படுத்த இயலுமா என்ற முயற்சியிலும் இந்தப் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்துகிறோம். சர்வதேசத் தளத்தை நோக்கி எமது குரலை ஓங்கி ஒலிப்பதற்கு இந்தப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்தித்துப் பயன்படுத்துகிறோம். இவ்வகையில் மாகாண சபையின் அங்கீகாரத்தோடு ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்குச் சென்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தேசத்தின் கருத்தியலை எண்ணற்ற வழிகளில் முன்வைத்து வந்துள்ளேன். பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் மாகாண சபைப் பிரதிநிதித்துவமும் எவ்வாறு பொருத்தமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய மிகச் சில தமிழ் அரசியல் பிரதிநிதிகளே செயற்பட்டுள்ளனர். காத்திரமான சில நகர்வுகளை மாத்திரமே மேற்கொள்ள முடிந்துள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டு வடமாகாண சபை நிறைவேற்றிய இன அழிப்பு நீதிக்கான தீர்மானம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. தேர்தல் அரசியல் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கைத் தீவில் ஒரு மூலோபாய வழியாக அமையும் தகுதியை எப்போதோ இழந்துவிட்டது. அதை எந்த அளவில் உத்தியாகப் பயன்படுத்துவது என்பதில் மட்டுமே நாம் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் என்பது பெயரளவில் ஜனாதிபதி என்ற ஒரு தனிமனிதரிடம் வைப்பாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த நிறைவேற்று அதிகாரம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையையோ ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகம் மீதான மத ரீதியான முன்மைத்துவத்துவத்தையோ எமது மூலோபாயத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்காது. இதைப் போலவே இலங்கைப் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இந்த அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையையும் தீவு முழுவதிலுமான தேரவாத சிங்கள அரசியற் பௌத்தத்தின் முதன்மைத்துவத்தையும் மாற்றுவதற்கோ நீர்த்துப்போகச் செய்வதற்கோ எவ்வகையிலும் இடமளிக்கப் போவதில்லை. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாகினும் சரி, பாராளுமன்றப் பெரும்பான்மையாகினும் சரி ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட எந்தத் தீர்வையும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட அழுத்தம் இன்றி ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இன அழிப்புப் போரின் பின்னரான முழுமையான ஆக்கிரமிப்புச் சூழலில் அந்த நிலைமை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் மெய்நடப்பு அரசொன்றைக் கட்டியெழுப்பி, அமைதிப் பேச்சுக்களைத் தீவுக்கு அப்பாலான மூன்றாம் தரப்புச் சர்வதேச அனுசரணையோடும் மத்தியஸ்தத்தோடும் ஏற்படுத்தும் சூழலைத் தோற்றுவித்து, ஒற்றையாட்சித் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு எமக்குத் தேவையான மூலோபாய அழுத்தத்தை ஏற்படுத்த முடிந்தது. அதன் போது தனது சுயநிர்ணய உரிமையை ஈழத்தமிழர் தேசம் நடைமுறையில் எடுத்தாண்டது. அதன்மூலம் அரசியற் தீர்வுக்கான அரசிலமைப்புக்கு அப்பாலான சூழல் உருவாக்கப்பட்டு அரசியற் தீர்வு பற்றிப் பேசப்பட்டது. யார் பேச்சுவார்த்தை மேசையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்கவேண்டும் யார் பங்கேற்கக் கூடாது என்பதை மக்களாணையோடு எடுத்தாள தேர்தல் அரசியல் பயன்பட்டது. அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. எப்போதோ தந்தை செல்வா அவர்களால் முடித்துவைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டிருந்த கட்சி மீண்டும் மேற்கொண்டுவரப்பட்டது தேர்தல் இலச்சினையை ஒரு அரசியல்வாதி முடக்கியதால் நேர்ந்த ஒரு விபத்து மாத்திரமே. இதையெல்லாம் மீண்டும் சிறிதாவது மக்களுக்கு நினைவுபடுத்தவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 15 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்டு வருகின்ற சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசை உள்ளாக்க சர்வதேச அழுத்தம் ஒன்றே ஈழத்தமிழர் தேசத்திடம் எஞ்சியுள்ள வழிவகையாக உள்ளது. இதுவே மூலோபாய முன்னெடுப்புக்கான பாதை. ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமை எனப்படுவதும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி எனப்படுவதும் இரண்டு பெரும் மூலோபாயத் தூண்கள். ஆகவே, இந்த மூலோபாய வழிவகையை ஈழத்தமிழர் தேசம் எடுத்தாள வேண்டுமானால் சிங்களப் பேரினவாத வேட்பாளர்களை நிறைவேற்று அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக்கும் தேர்வுகளுக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத்தமிழர் தேசம் ஈடுபடுவது எதுவகையிலும் பொருத்தமற்றது. அவர்களோடு பேரம் பேசியும் எதையும் சாதிக்கமுடியாது. அவர்கள் நலிவடைந்துள்ளார்கள், பிளவடைந்துள்ளார்கள் என்று எம்மை நாமே ஏமாற்றி தெரிவுகளை மேற்கொண்டு எதையும் மூலோபாய ரீதியாகச் சாதித்துவிட இயலாது. இதற்கு ஏற்கனவே வரலாறு பல பாடங்களைப் புகட்டியுள்ளது. தற்காலிக உத்தியாக ஜனாதிபதித் தேர்தலைக் கையாண்டு மூலோபாயத்துக்குரிய அரசியற் பயணத்தைச் சிதைத்துவிடுவது தவறானது மட்டுமல்ல ஆபத்தானதுமாகும். இதனாற் தான், ஜனாதிபதித் தேர்தலை நாம் எவ்வாறு கையாளுவது என்பதில் மூலோபாயத்துக்குரிய அணுகுமுறைக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற கருத்து மேலெழுகிறது. இதனாற் தான் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையை நானும் ஆதரிக்கிறேன். ஆனால், அதற்கு ஏற்ற சரியான கொள்கை வகுப்பு இருக்கவேண்டும். அதுமட்டுமன்றி அதற்குரிய சரியான வேட்பாளரும் எம்மிடம் இருக்கவேண்டும். ஈழத் தமிழருக்கான சர்வதேச அரசியலை முன்னெடுப்பதில் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையற்ற சூழலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழல் உருவாக்கியுள்ளது. ஆதலால், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஈழத்தமிழருக்கான ஒரு பொதுப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவரை ஈழத்தமிழர்களின் நிழல் ஜனாதிபதியாக சர்வதேசம் கணிப்பிடும் நிலையைத் தோற்றுவிப்பதே காலத்தின் தேவையாக உள்ளது. இருப்பினும் இதைச் சரிவரச் செய்யவேண்டுமானால், ஆக்கிரமித்துள்ள தேசத்தின் ஜனாதிபதி வேட்பாளர் எவரையும் விட அதிக வாக்குகளைப் பெறும் வகையில் ஒருவரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள ஈழத்தமிழர் தேசம் தகுந்த தேர்தல் விஞ்ஞாபனத்தோடு நிறுத்தவேண்டும். அவர் அதிக வாக்குகளால் வெற்றிபெறவேண்டும். அவர் எமது நிழல் ஜனாதிபதியாக இயங்கவேண்டும். பொதுவேட்பாளரின் முழுமுயற்சியும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி நோக்கியதாக அமையவேண்டும். இதற்குரிய அஞ்சாநெஞ்சத் துணிவும், தகைமையும் வன்மையும் பொருந்திய ஒருவர் ஈழத்தமிழர் நிழல் ஜனாதிபதிக்குரிய பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படவேண்டும். இதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒத்துழைக்க நிர்ப்பந்திப்பது ஈழத்தமிழர் ஒவ்வொருவரதும் கடமையாகும். அதுமட்டுமல்ல, அரச பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி போன்றவற்றின் தார்ப்பரியங்களைப் புரியாத, அவற்றை எடுத்தாள இயலாத ஒருவர், அதுவும் இவ் விடயங்களில் முன் அனுபவம் எதுவும் இல்லாத ஒருவர் பொதுவேட்பாளராகி இந்தக் கைங்கரியத்தைச் சாதிக்கமுடியாது. ஆகவே, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடிக் குரலாக சர்வதேச நீதி கோரிய பயணத்தில் காத்திரமாகப் பங்கேற்ற தன்மைகளோடு பயணித்து அனுபவமுள்ளவளாகிய நான் அந்தக் களத்தில் பயிற்சி பெற்றுள்ள அனுபவத்தோடு துணிந்து களமிறங்கத் தயாராக உள்ளேன் என்பதை இது குறித்த அக்கறையுள்ள அனைவரின் கவனத்துக்கும் இத்தருணத்தில் கொண்டுவருவது எனது கடமையாகிறது. அதுவும், எந்தக் கட்சியினதும் அல்லது கூட்டினதும் பிரதிநிதியாக அன்றி, ஈழத்தமிழருக்கான பொதுப் பிரதிநிதியாக என்னை மாற்றிக்கொள்ளவும், இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பு மேற்கொள்ளப்படும்போது அதற்குக் கட்டுப்பட்டு இயங்கவும் தயாரக உள்ளேன் என்பதையும் பரந்துபட்ட சமூகத்துக்குத் தெரிவிப்பதும் எனது கடமையாகிறது. அதுமட்டுமன்றி, இவ்வாறான தன்மைகளோடு என்னை விடவும் ஆற்றலுள்ள வேறு எவரேனும் நம்பகமாக நிறுவப்படக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டால் அவ்வாறான வேட்பாளரை ஆதரிக்கவும் நான் தயாராக உள்ளேன் என்பதையும் நான் சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன். ஆகவே, இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பை ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுச்சபை மேற்கொள்ளவேண்டும். அதனால், இதைச் சரிவர மேற்கொள்ள இயலுமா என்பதை நிறுவுவதும் அதை நடைமுறையிற் சாதிப்பதும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் தேசத்தின் சமூகப் பொறுப்பாகும். பொதுவேட்பாளர் வேண்டுமா வேண்டாமா என்று விவாதித்துக்கொண்டிருப்பதிலேயே காலத்தைச் செலவிட்டு எந்தவித பொறுப்புக்கூறலும் அற்ற வகையில் விவாதங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்காமல் நடக்கவேண்டிய விடயத்தை பொறுப்புக்கூறலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இதயசுத்தியுடனும் அணுகவேண்டும். இதை எதிர்பார்க்கும் வேளையில், குறிப்பாக எதிர்வரும் நாட்களில் தென்னிலங்கையில் களமிறங்கத் தயார் என்று அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்களிடம் இயன்றளவு நேரடிச் சந்திப்புகளை மேற்கொண்டு சில ஆழமான கேள்விகளை எழுப்பி இலங்கை ஒற்றையாட்சி ஜனாதிபதிக்கான சிங்கள தேசத்தின் வேட்பாளர்களை ஈழத்தமிழர்கள் ஏன் நிராகரிக்கவேண்டியுள்ளது என்பதை அவர்களிடம் நேரடியாகவே தெரிவிக்கவுள்ளேன். அதன் விளைவுகளை மக்களுக்கும் அறிவிக்கவுள்ளேன். என்னால் இயன்ற அர்த்தமுள்ள பங்கு இதுவாகவே இருக்கமுடியும். குறிப்பாக, ஆறாம் சட்டத்திருத்தத்தை அகற்றி, ஈழத்தமிழர் பாரம்பரியத் தாயகக் கோட்பாட்டை அங்கீகரித்து, தீவின் வடக்கு-கிழக்குப் பகுதியில் பௌத்தத்திற்கான முதன்மைத்துவத்தை நீக்குவதே தனது விருப்பம் என்று பகிரங்கமாக எந்த ஒரு சிங்கள வேட்பாளரேனும் தெரிவிக்கத் தயாராக உள்ளாரா என்ற கேள்வியையும், இலங்கைத் தீவில் இன அழிப்பு நடைபெற்றதா இல்லையா என்பதை இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான பட்டயத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்கி அரச பொறுப்புக்கூறலை விசாரிக்க சர்வதேச நீதி மன்றை நாடும் துணிவு சிங்கள வேட்பாளர்களில் எவருக்கேனும் உண்டா என்றும் அவர்களிடன் நேரடியாகவே வினவி அவர்கள் அதற்குத் தரும் பதிலை ஈழத்தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தவும் என்னாலியன்ற முயற்சியை மேற்கொள்ள உள்ளேன். ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தைப் போலவே, புலம் பெயர் சமூகத்திலும் ஒற்றுமையின்மை காணப்படுகிறது. இதற்கு, பிராந்திய அரசியலும் சர்வதேச அரசியலும் பிரதான காரணம். இமாலயப் பிரகடனம் எங்கிருந்து இங்கு வந்தது என்ற கேள்வியைக் கேட்டால் இதற்குரிய விடை கிடைக்கும். இருப்பினும் இலங்கை அரசின் இன அழிப்புக்கான அரச பொறுப்பைச் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்குவதில் சில காத்திரமான நகர்வுகள் பல முனைகளில் இருந்தும் புலம்பெயர் ஈழத்தமிழர் தரப்புகளால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தவகையில், காத்திரமான நகர்வுகள் முன்னேறிச் செல்லும் வகையில் எமது மூலோபாய முடிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை இத்தால் வலியுறுத்துகிறேன். https://oruvan.com/sri-lanka/2024/06/14/ananthi-sasitharan-is-running-as-a-tamil-general-candidate
-
தமிழ்ப் பொதுவேட்பாளரால் சமஷ்டிக்குப் பாதிப்பில்லை! - விக்னேஸ்வரன் விளக்கம்
அனந்தி சசிதரன் பொதுவேட்பாளராக தான் களமிறங்கத் தயார் என்று அறிவித்திருக்கின்றார்! பொது வேட்பாளருக்கே பத்துபேர் குடுமிபிடி சண்டை பிடிப்பார்கள் போலிருக்கு!