Everything posted by கிருபன்
-
ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.!
ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.! விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் நேசித்தார்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.! இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாகப் பதிவு செய்கின்றேன். நான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே மடிந்த உன்னத வீர்கள். மடி சுரந்த பால்போல, மனம் தூய்மை யானவர்கலென்பதைக் கூறுவதற்கே. சமீபகாலமாக இணையத்தில் எம் வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகள் திட்டமிட்டு விதைக்கப்படுகின்றது. புதிய தலைமுறையிடம் பிழையான வரலாறு போய்ச் சேரக்கூடாதென்பது மட்டுமே எனது நோக்கம். இந்த சம்பவம் புத்தளத்தை அண்டி, எதிரி பிரதேசத்தில் நடந்த சம்பவம். சில காரணங்களுக்காக சம்பவம் நடந்த இடத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன். ஒரு நடவடிக்கை நிமித்தம், ஒரு அணியொன்று 1997களின் நடுப்பகுதியில் கொழும்புக்கு நகர்த்தப்பட்டிருந்தது. அந்த இலக்கை அழிப்பதற்கான நாள் நெருங்கி வரும் நேரம், எமது ஆதரவாளர் ஒருவரின் கைதின் மூலம் இந்த நடவடிக்கையாளர்கள் சிங்கள உளவுத்துறையால் இனம் காணப் பட்டனர். இதனால் இவர்களின் உயிர் ஆபத்தை கருத்தில் கொண்டும், வேறு சில காரணங்களுக்காகவும் இவர்களை தளம் திரும்பும்படி கட்டளையிப்பட்டிருந்தது. அன்றைய நேரத்தில் பல நாட்கள் நடந்தே, எமது அணி கொழும்புக்கு பயணபட்டுக்கொண்டிருந்தது. இதற்காக பல பாதைகள் பயன்பாட்டில் இருந்தது. அது போல நகர்வுக்கு, வேறு பல முறைகளும் இருந்து பாவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது வில்பத்து காட்டின் ஊடான பயணதின் போது. அதன்படி இவர்களுக்கான வழி காட்டிகள் துணையுடன், குறிப்பிட்ட இடமொன்றிலிருந்து வழிகாட்டி, மற்றும் ஒரு கரும்புலி வீரனுடன் சேர்த்து ஐந்து போராளிகள் நகர ஆரம்பித்தனர். அதன்படி ஆரம்ப இடத்திலிருந்து நடந்தும், வாகனத்திலுமாக புத்தளம் தாண்டி "தபோவ" என்ற இடத்தை சென்றடைந்தனர். அங்கிருந்து இந்த அணியை பெரும் காடு உள்வாங்கியது. அது வரை பயணத்தின் போது மிக எச்சரிக்கையாகவே பயணப்பட்டனர். இராணுவ காவலரண்கள், மினிமுகாம்கள், காவல் நிலையங்கள், ரோந்து அணிகள், அத்தோடு தமிழரை விரோதியாக பார்க்கும் சிங்கள குடிமக்கள் என, அனைத்து கண்ணிலும் மண்ணை தூவி, ஓரளவு பாதுகாப்பான இடம் ஒன்றை வந்து சேர்ந்திருந்தது அந்த அணி. அந்த இடத்தின் பாதுகாப்பான இடமொன்றில், கொண்டு வந்த உலர் உணவை பங்கிட்டு உண்டபின், சிறிய ஓய்வின் பின் தமது பயணத்தை ஆரம்பித்தனர். மூன்றுநாட்கள் பயணத்தின் பின் "பலகொள்ளகம" (balagollagama) என்ற இடத்தை அண்டி இந்த அணி நகர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு மலை நேரம். காடுகளின் ஊடக அணி நகர்ந்து கொண்டிருந்த போது, யாரோ உரையாடும் சத்தம் கேட்டது. உடனே போராளிகள் பாதுகாப்பான இடம் தேடிப்பதுங்கினர். இப்படி காடுகளின் ஊடான பயணத் தின் போது போராளிகள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை, ஒன்று, சிங்கள வேடைக்காரர்களால் கட்டி வைக்கப்படும் வேட்டை துவக்கு. இரண்டாவது, "சிங்கள அரசின் நடமாடும் சிறப்பு படையணியான SF" என்று சுருக்கமாக அழைக்கப்படும் உந்துருளிப்படையணியாகும். ஏனெனில், இந்த அணிகள்(போராளிகளுக்கு) நகரும் போது இவர்களது கையில் உள்ள வரைபடத்தில் எல்லா விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கேற்றால் போலவே இவர்கள் பயன்படுவார்கள். ஆனால், இந்த "நடமாடும் SF" எங்கு, எப்போது வருவார்கள் என்று தெரியாது. எங்காவது ஒரு இடத்தில் போராளிகளுடன் முட்டுப்படும் போதே அது தெரியும். இப்படியான ஒரு அவதானத்துடன் செல்லும் போது தான் அந்த சத்தம் கேட்டது. இப்போது அந்த சத்தம் இவர்களை நெருங்கி வந்தது. போராளிகளின் இதயத்துடிப்பும் வேகம் பெற்றது. இப்போது அந்த குரல்கள் தெளிவாக கேட்டது. அது மூன்று பெண்களின் உரையாடல் சத்தம்.! அந்த மூன்று இளம் பெண்களும் 22வயதிற்கு குறைவான இளம் வயதினர். தமது வீட்டு தேவைக்கான விறகு வெட்டிச் செலவதற்காக வந்திருந்தனர். அவர்கள் காய்ந்த விறகை தேடி நகர்ந்தபடி, போராளிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கினர். அப்போது போராளிகள் பயந்தது போலவே இவர்களைக் கண்டு விட்டனர் அந்த சிங்களப் பெண்கள்.! ஒரு நாட்டின் சிறப்பு படையணி வீரர்கள், எதிரி பிரதேசத்தினுள், நடவடிக்கை நிமித்தம் நகரும் போது, எப்படி எல்லா காலநிலைக்கும் தாக்குப்பிடித்து, கிடைப்பதை உண்டு உயிர்வாழ கற்றுக்கொடுக்கப்படுகின்றதோ, அது போலவே மிக முக்கியமானது இப்படியான நேரத்தில் யாராவது இவர்களது நடமாட்டத்தை கண்டால், அவரை கொன்று, அந்த உடலை மறைத்து பின் நகரவேண்டும். அது பொதுமக்களுக்கும் பொருந்தும்.! இந்த முறையையே பொதுவாக எல்லா நாட்டு சிறப்பு இராணுவப் படையணியினரும் கையால்கின்றனர்.! புலிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இது மரபுவழி இராணுவமாக இருந்த புலிகளின் சிறப்பு அணிகளுக்கும் பொருந்தும்.! யுத்தத்தில் இது தவிர்க்க முடியாதது.! அப்படி ஒரு சந்தர்ப்பம் தான், புலிகளின் சிறப்பு அணியினருக்கும் அன்று ஏற்பட்டிருந்தது.! அந்த நேரத்தில் சிங்கள இராணுவத்தினரின் சீருடையில் இருந்த புலிகள், உடனே பற்றையினுள் இருந்து வெளிவந்து, ஆயுத முனையில் அந்த பெண்களை தமது கடுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். குடிமனைகளில் இருந்து தொலைவில் இருந்தமையால் அது இலகுவாக்கி விட்டிருந்தது. அப்போது அந்த அணியின்பொறுப்பாக வந்த போராளி சரளமாக சிங்கள பேசக்கூடியவர். அவர்களுடன் உரையாடி அவர்கள் வந்த நோக்கத்தையும் அவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டனர். உரையாடலின் போதே அந்த பெண்களுக்கு இவர்கள் யாரென்று தெரிந்து விட்டது. மூவரும் அழ ஆரம்பித்தனர். அப்போது இவர்களைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் இவர்களை உயிரோடு விட்டால், அடுத்த சில மணி நேரத்தில் சிங்கள உந்துருளிப்படையணியால் சுற்றி வளைக்கப் பட்டு, கொல்லப்படுவார்கள் என்பது புலிகள் ஐந்து பேருக்கும் தெரியும். ஆகவே, கொல்வதற்கு ஆயத்தப்படுத்தும் போது, தங்களுக்கு நிகழப்போவதை உணர்ந்த, அந்த சிங்களப்பெண்கள் விழுந்து, தொழுதபடி கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது அழுதபடியே தங்களை "எது வேண்டுமானாலும் செய்யும் படி கூறி" தங்களை உயிரோடு மட்டும் விட்டு, விடும் படி மண்ராடினர்.! பல வருடங்கள் சிங்கள நாகரீகத்தை கரைத்து குடித்த அந்த அணித் தலைவனுக்கு, அவர்களின் வேண்டு கோளின் அர்த்தம் புரியாமல் இல்லை. சிறு புன்னைகையின் ஊடே அவர்களின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தபின், அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமான போது, அந்த அணியிலேயே வயது குறைந்த, ஒரு இளைய போராளி, அண்ணை கொஞ்சம் பொறுங்கோ... எனக்கு இவையளை பார்க்க பாவமா இருக்கு. இவர்களை இங்கேயே கட்டி போட்டு விட்டு போவம் என்றான். அதற்கு அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அந்த அணியில் இருந்த இனொரு போராளியும் அந்த இளைய போராளிக்கு உதவிக்கு வந்தான். தொடந்து அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அதுவரை அமைதியாக இருந்த, இவர்களுடன் பயணப்பட்ட கரும்புலிவீரனும் அவர்களுக்கு உதவிக்கு வந்தான். அப்போது அந்த மூன்று போராளிகளின் வற்புறுத்தல், அந்த அணித் தலைவனின் மனதை கரைத்து. வேறு வழி இல்லாது, அரைமனதுடன் அவர்களை உயிரோடு விட சம்மதித்தான்.! இராணுவ விதிமுறையை மீறினால், அதன் பின் விளைவு என்ன என்பது அந்த அணியினருக்கு நன்கு தெரிந்திருந்தது. எந்த நிமிடமும் இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். பெரும்பாலும் எல்லோரும் மரணிக்கலாம்.! அவர்கள் அதற்கு தயாராகவே இருந்தனர்.! அதன் பின் அந்த மூன்று பெண் களையும் இவர்களுடனேயே இன்னும் சில km தூரம் கூட்டி சென்றனர். பின் அவர்கள் மூவரையும் கை,கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அந்த பெண்கள் கூறிய நன்றியை காதில் வாங்கியபடி புலிகள் நகர ஆரம்பித்தனர். அந்த பெண்களுக்கும், அவர்களின் உறவினருக்கும் மட்டுமே, அன்று ஒரு உண்மை புரிந்திருக்கும்! புலிகளை எந்தளவு தூரம் "ஒழுக்கமாணவர்களாக" தலைவன் வளர்த்திருந்தாரென்று.! இந்த சம்பவத்தின் பின் அந்த அணியினருக்கு, தமது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் இந்த பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு போய்ச் சேராது போனால், இவர்களை தேடி, இவர்களது உறவினர்கள் வருவார்கள். எப்படியோ சில மணி நேரங்களில், எல்லோருக்கும் தகவல் கிட்டும். ஏதோ ஒரு இடத்தில் இவர்கள், சிங்கள SF படையணியுடன் முட்டுப்படுவார்கள். அதை உணர்ந்து ஒட்டமும் நடையுமாக தங்கள் பயணப்பதையை மாற்றிச் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பயந்தது போலவே, அடுத்த நாள் இவர்களை இனம் கண்ட எதிரி தாக்குதலை தொடுத்தான். இதில் அந்த இளைய போராளி கால் துடையில் காயமடைந்தான். அந்த போராளியையும் தூக்கிக் கொண்டு பெரும் காட்டை நோக்கி நகர்ந்தனர். உடனே எதிரி இவர்கள் முன்னோக்கி ஓடுவார்கள் என்றே கணிப்பார்கள் என்பதை உணர்ந்த அணித்தலைவர், காயமடைந்த அந்த இளைய போராளியுடன் பின்னோக்கி நகர்ந்தனர். ஒரு பாதுகாப்பான இடம் ஒன்றை அடைந்து அங்கு தங்க முடிவெடுத்தனர். அப்போது இவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடும் இருந்தது. அதோடு இன்னும் கடக்கவேண்டிய தூரமோ மிக அதிகம். அதனால் காயமடைந்த போராளியை தூக்கி சுமப்பதும் சிரமம். அப்படி தூக்கி சென்றாலும் வேகமாக நகர முடியாது.! அதனால், மீண்டும் எங்காவது முட்டுப்பட வேண்டி வரலாம்? அப்படி தூக்கி சுமந்தாலும் இரத்த போக்கு காரணமாக அந்த போராளி எம்மை விட்டு போவது தவிர்க்க முடியாது. அதனால் என்ன செய்வதென்று எல்லோருக்கும் குழப்பம். அப்போது அந்த போராளியை சுமந்து செல்வதற்கு முடிவெடுத்து, படுக்கை ஒன்றை தயார் செய்ய ஆரம்பித்த போது அந்த இளைய போராளி அதை தடுத்தான். அப்போது அவன் "அண்ணை நான் கன நேரம் உயிரோடு இருக்க மாட்டன்" என்னை காவி நீங்களும் அடி வேண்ட வேண்டி வரும், அந்த கரும்புலி வீரனை காட்டி "அவரது உயிர் முக்கியம்" நீங்கள் "தப்பி போங்கோ" என்றான் தீர்க்கமாக. அவனது வார்த்தையில் இருந்த உண்மை, அவனது கோரிக்கைக்கு எல்லோரையும் செவிசாய்க்க வைத்தது. அப்போது அந்த இளைய போராளி தன்னை கிடங்கு கிண்டி தாட்டு விட்டு செல்லும் படி கோரிக்கை வைத்தான். ஆகவே அதற்கான கிடங்கை கிண்டும் படி கூறினான். அதன்படியே ஏனைய போராளிகள், பெரும் மனச்சுமையுடன் தடியின் உதவியுடன் கையால் கிடங்கொன்றை கிண்ட ஆரம்பித்தனர். அது ஒரு மணல் பிரதேசம் என்பதால் அந்த வேலை இலகுவாக முடிந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த போராளி தனக்கு தாகமா இருக்கென்று கேட்டு, ஒரு குளிர்பான கானை உடைத்து சிறிது குடித்தான். சிறிது குடித்ததும் "அண்ணை எனக்கு போதும் இதை நீங்கள் பங்கிட்டு குடியுங்கோ, சாகப்போற எனக்கு எதுக்கு" என்றான்.! எல்லோரும் கண்ணீருடன் அவனை பார்த்த போது, தனது வலியை மறந்து எல்லோரையும் சிரிக்க வைக்க முயட்சி செய்து தோற்றுப்போனான்.! சிறிது நேரத்தின் பின் தன்னை அந்த கிடங்கில் தூக்கி வளர்த்தும் படி கூறினான்.! அதை யாரும் செய்ய முன்வரவில்லை.! சிறிது நேரத்தின் பின் தூரத்தில் எதிரியின் உந்துருளியின் சத்தம் கேட்டு எல்லோரிடமும் பதட்டம் தொற்றியது. அப்போது அந்த போராளி அங்கிருந்த படியே குப்பியை(சயனைட்) கடிக்க ஆயத்தமான போது, அதை தங்களால் பார்க்க முடியாதென்ற போராளிகள், அவனை தூக்கி அந்த கிடங்கில் வளர்த்தினர்.! எல்லோரும் கண்ணீருடன் அவனிடம் விடை பெற்ற போது, அவன் புன்னகையுடன் அதை ஏற்றான்.! தொடர்ந்து, இவர்களைப் பதுகாப்பாக சென்றுவிடும்படி கேட்டபின், அந்த அணித்தலைவனிடம், தனது மரண செய்தியை இவனே தனது பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தான். அத்தோடு என்ன காரணத்துக்காக தான் மரணமடைந்ததையும், தன் தாயிடம் கூறும்படி கூறினான்.! ஏனெனில், அந்த இளைய போராளிக்கு இரண்டு பெண் சகோதரிகள் இருந்தார்கள்.! ஆகவே, தனது உணர்வை அவனது தாயால் உணரமுடியுமென்றும், அவரது மனம் அதனால் சாந்தியடையுமென்றும் வேண்டினான். அப்போது அந்த அணித்தலைவன், அவனிடம் கூறினான், நான் எடுத்த ஒரு தவறான முடிவால் உன்னை இழந்துவிட்டேன் என்றபோது, இல்லை அண்ணை நீங்கள் எடுத்தது தான் சரியான முடிவு. அவர்கள் என் சகோதரிகள் போல இருந்தார்கள் என்றான்.! அது போலவே ஏனைய போராளிகளுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது, தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்களை காப்பாற்றியதற்கு. ஆனால், எல்லோருக்கும் பொதுவான ஒரு காரணம் இருந்தது.! எவ்வளவு தூரம் எமது மக்களை இந்த போராளிகள் நேசித்தர்களோ, அந்தளவு தூரம் எதிரியின் மக்களையும் நேசித்தார்கள்.! இவர்கள் தான் எங்கள் போராளிகள்.! சில நிமிடங்களின் பின்,மரணித்த அந்த வீரனுக்கு, உளமார தங்கள் வீரவணக்கத்தை செலுத்திய பின், தமது இருப்பிடம் நோக்கி நகர ஆரம்பித்தனர். அதன் பின் பல ஆபத்துகளைக் கடந்து எதிரியின் தாக்குதல்களையும் முறியடித்து, பல நாட்கள் தாமதமாக உணவில்லாது, கிடைத்தவற்றை உண்டு, தமது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர்.! ஒரு வாரத்தின் பின் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்த அவனது வீட்டுக்கு சென்ற அந்த அணித் தலைவனால், சில நிபந்தனைகளுடன் அவனது பெற்றோருக்கு வீரச்சாவுச் செய்தி அறிவிக்கப்பட்டது. அந்த போராளிக்கு ஒரு நடுகல் கூட இல்லாது, ஊரறியாது, தங்கள் சோகங்களை மறைத்து வாழ்ந்தது அந்த குடும்பம். பின்னைய நாளின் அந்த அணித் தலைவனின் குடும்பமானது அந்த குடும்பம், அவனை மகனாகவும், சகோதரனாகவும் ஏற்றது அந்த குடும்பம்.! ஒரு வெளித்தெரியாத வீரனின் வரலாற்றை, பெருமை, பெயர்,புகழ், கல்லறை, மாவீரர் குடும்பம் என்ற கௌரவம், என எல்லாவற்றையும் துறந்து, தங்களை, தங்கள் நாட்டுக்காக அர்ப்பணித்த குடும்பங்களில் அந்த இளைய போராளியின் குடும்பமும் ஒன்று.! இது தான் எங்கள் மக்கள்.! இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.!! From Facebook
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழத் தாயக விடுதலைக்காக போராடி வீரமரணமடைந்த போராளிகளுக்கும், ஆயுதப் போரின்போது மரணித்த பொதுமக்களுக்கும் அஞ்சலிகள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பலர் யாழில் உறுப்பினர்களாகச் சேராமல் முகநூல் ஊடாக வருகின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் முகநூலில் புரொபலை மாற்றினால் யாழும் காட்டுது போலிருக்கு.
-
குரு(தி)ஷேத்திரம் - கரும்பறவை
குரு(தி)ஷேத்திரம் - கரும்பறவை பங்குனி, வைகாசி 1992 சிரித்திரன் இதழில் கரும்பறவை எழுதிய உண்மைச்சம்பவம் இது. மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் பேரவையை உருவாக்கியவர்களில் ஒருவரும், சட்டத்தரணியும், போராளியுமான பொன்.வேணுதாசின் துணைவி ஜமுனாவின் படுகொலை பற்றிய பதிவு இது. தனது பெயரின் முதலெழுத்தான 'P'என்பதை ஒரு தாளில் எழுதி அந்தப் பவுடர் ரின்னில் ஓட்டினான் பிரசாத். விளையாட்டாக தான் அப்படி ஒட்டிய பவுடர் ரின்தான் பின்னர் தடயப் பொருளாக அமையப்போகிறதென்பது அப்போது அவனுக்குத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் இளைஞன் தானே அவன்? காலையிலும் மாலையிலுமாவது பவுடர் போட்டுக்கொள்ள வேண்டுமென்று அவனுக்கொரு ஆசை. ஆனால் அதற்கு வசதியில்லை. ஜமுனாக்கா வேணு அண்ணாவைச் சந்திக்க வரும்போது தனது கைப்பையில் பவுடர் கொண்டு வருவார். அப்படி வரும் சமயங்களில் அந்தப் பவுடரை இவன் எடுத்துப் பூசுவதுண்டு. அதனால் 'ஜமுனாக்கா வந்தா பவுடர் பூசலாம்' என்று இவன் அடிக்கடி கூறுவதுண்டு. மட்டக்களப்பு நகர மக்கள் வங்கிக் கிளையில் பணியாற்றும் ஜமுனாக்கா தனது கணவரான பொன்.வேணுதாசைச் சந்திப்பதென்றால் சுலபமான காரியமல்ல. எத்தனையோ இராணுவக் காவலரண்களைத் தாண்டி வரவேண்டியிருக்கும். சில சமயங்களில் தனது குழந்தைகள் அபராஜிதா, பிரவீனா இருவரையும் கூட்டிக்கொண்டு வந்து அவருக்குக் காட்டுவதுமுண்டு. இவ்வளவு சிக்கலுக்குள்ளால் பன்குடாவெளிக்குப் போகவேண்டுமென்பதால் அதைப் பெரும்பாலும் அவர் தவிர்த்து வந்தார். போகும் போது எதாவது விபரீதம் நடந்தால்... இதற்காகவே அதனைத் தவிர்த்து வந்தார். குழந்தைகளைக் காண தந்தை ஏங்குவார் என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் என்ன செய்வது? மட்டக்களப்பு நகரினுள் இராணுவம் நுழைந்ததற்குப் பின்னர் வேணு அண்ணர் பன்குடாவெளிப் பகுதியிலேயே இருந்தார். போராளிகள், ஆதரவாளர்கள், இயக்கத்திலிருந்து விலகியோர், பொதுமக்கள் எல்லோருமே அப்பகுதியில் ஒன்றாகத்தான் இருந்தனர். எந்த வித்தியாசமும் இல்லை. *** அது மழைக்காலம். 22.12.1990 அன்று இரவு ஜமுனாக்கா பன்குடாவெளிக்கு வந்தார். வழக்கமாக அவரைச் சந்திக்கும் வீட்டில் எல்லோரும் அவருடன் கதைத்துக்கொண்டிருந்தனர். நகரத்தில் உள்ள நிலமைகளை அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் பிரசாத்தின் ஆடைகளைக் கவனித்தார். 'டேய்..... பிரசாத்.. அடுத்த முறை நான் வாற போது உனக்கு சாரனும் சேட்டும் வாங்கிற்று வாறன் ' *** 23.12.1990 அன்று காலை ஜமுனாக்கா வீட்டுக்குப் புறப்பட்டார். 'அக்கா இரவு நான் கண்ட கனவு சரியில்ல.. கலங்கின தண்ணி, வெள்ளம் கண்டால் நல்லமில்ல எண்டு சொல்லுவாங்கள். நீங்கள் இண்டைக்கு நிண்டுத்துப் போகலாமே? என்ன அவசரம்?' என்று கேட்டான் ரொமேஷ். 'இல்லடா வருஷக் கடைசி.... வேலை கூட. அதோட வாழைச்சேனைக்கு வேலை மாறுற சம்பந்தமாக கொஞ்ச அலுவல் இருக்கு. அதோட இன்னொரு பிரச்சினை - வருஷக் கடைசியில நேர்சறியில நடக்கிற கலை நிகழ்ச்சிக்கு எல்லாப் பெற்றோரும் போனவை. நாங்கள் தான் போகல்ல. அப்பா இல்லாத இடத்துக்கு நானாவது போயிருக்கவேணும். எனக்கு நேரம் கிடைக்கல்ல. நியூ இயருக்காவது பிள்ளைகளோட நான் இருக்கவேணும். இல்லாட்டி பிள்ளைகளுக்கு மனசில ஏக்கமாய் இருக்கும். எங்கட பிள்ளைகள் என்ன அப்பா அம்மா இல்லாத அநாதைப் பிள்ளைகளா?' என்று கேட்டார். இவ்விதம் கேட்கும் போது அவரது முகத்தில் பெருமிதம் தெரிந்தது. மகேந்திரன் என்பவன் அக்காவை வழியனுப்பக் கூட்டிக்கொண்டு போனான். அப்போது சற்றுத் தள்ளியிருந்த சுரேஷ் என்பவன் சொன்னான், 'மகேந்திரன் அக்காவ கொம்மைக்கு குடுக்கக் கூட்டித்துப் போறான்!¨ - அவன் மீது பிரசாத் சீறிப் பாய்ந்தான். 'டேய்.... அப்படியொண்டும் சொல்லாத!' *** கொடுவாமடு சந்தியில் அனைவரும் காத்திருந்தனர். செங்கலடியிலிருந்து ஒருவரும் வரவில்லை. இந்தப் பக்கமிருந்து வேறு யாரும் செல்லும் அறிகுறியும் இல்லை. மக்கள் நடமாட்டம் இருந்தால் தான் அந்தப் பாதை வழியாக அனுப்பலாம். எனவே மயிலவெட்டுவான் வழியாகச் சென்று சித்தாண்டிக்குச் செல்லத் தீர்மானித்தனர். வழியில் மூன்று வயோதிபர்கள் வந்தனர். அவர்கள் செங்கலடிப் பாதை வழியாக மட்டக்களப்புக்குச் செல்வதாகக் கூறவே அவர்களுடன் அக்காவை அனுப்பி வைத்தனர். பிள்ளைகளைச் சந்திக்கும் வரை அக்காவுக்கு மனதில் அமைதி இருக்காது. பிள்ளைகளை நினைக்கும் போது கூடிய நடையின் வேகம் இராணுவத்தினரின் காவலரண்களை நெருங்கும் போது படிப்படியாகக் குறைந்தது. சிறிது நேரத்தில் வேட்டொலிகள் கேட்டன. இவர்களை அனுப்பிவிட்டுக் காத்திருந்த அனைவருமே திடுக்கிட்டனர். மகேந்திரன், சுரேஷ், பிரசாத், ரொமேஷ், வேணு அண்ணன் மனதில் அந்த வசனம் எதிரொலித்தது - 'அக்காவைக் கொம்மைக்கு குடுக்கப் போறான்!' *** எல்லோரும் மீண்டும் கொடுவாமடுவுக்கு ஓடி வந்தனர். ஜமுனா அக்காவுடன் போன மூன்று வயோதிபர்களில் ஒருவர் மட்டும் ஓடி வந்தார். அவருக்குச் சூடு பிடித்திருந்தது. அக்காவைக் காணவில்லை. முதலில் இவருக்கு மருந்து கட்டுவோம் என்றெண்ணி அவரைக் கூட்டிக்கொண்டு சென்றனர். விஷயத்தைக் கேட்பதற்கு முன்பே வயோதிபர் சொன்னார், 'சுட்டுப் போட்டானுகள் தம்பி! செங்கலடி ஆஸ்பத்திரிக்குக் கிட்ட இருந்த வஸ் கோல்டில ஆமிக்காரனுக்கள் நிண்டானுகள். எங்களைக் கண்டு திரும்பிப் போகச் சொல்லிக் கையைக் காட்டினானுகள். திரும்பி நடக்கத் துடங்க சடசட வென்று சுட்டானுகள். என்னோட வந்தரெண்டு பேரும் செத்துப் போயிற்றினம். - மகேந்திரன் அவசரப்படுத்தினான். 'அக்காவுக்கு என்ன நடந்தது?' இளைத்தபடியே அவர் சொன்னார். 'அந்தப்புள்ள எண்ட கையைப் புடிச்சிக்கொண்டு ஓடிவந்தது. முருகா முருகா என்னைக் காப்பாத்து எண்டு சொல்லிக்கொண்டு ஓடி வந்தது.... அப்படி ஓடி வரக்குள்ள வெடிப்பட்டுத்து. என்னைத் தூக்கிக்கொண்டு போங்க என்று கத்திச்சு அந்தப்புள்ள. நான் தூக்கிறத்துக்குக் குனிஞ்சன். அப்பதான் எனக்குச் சூடுபட்டது. என்னால - முடியல்ல ஓடி வந்திட்டன்' என்றார். வயோதிபரை அனுப்பிவிட்டு தொடர்ந்தும் அங்கே காத்திருந்தனர். காந்தன், வேணு அண்ணன், மகேந்திரன், பிரசாத், சுரேஷ், ரொமேஷ் உடன் வேறுசிலர். மழை பெய்துகொண்டிருந்தது. நனைந்தபடியே காந்தனிடம் வேணு அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். 'ஜமுனா எப்பிடியும் தப்பியிருக்கும். இந்த மழைக்குள்ள எதாவது ஒரு மரத்துக்கு கீழ நிக்கும். காந்தன்!... நான் கலியாணம் முடிச்சுக் குடும்பம் நடத்தினன் எண்டு பேர்தான். எனக்கு இத்தினை வயதாச்சு... கடையில உடுப்பு எடுக்கக் கூடத் தெரியாது. எல்லாமே அவள்தான். நான் சட்டத்தரணியா வந்ததே அவளால தான். எல்லாம் அவளின்ர ஆசைதான்... அவளுக்கு ஒரு முறை மச்சான் இருந்தான். அவனுக்கு இவளைத்தான் சாணக்குறி போட்டது. அவன் இவளைக் கட்டுவான் எண்டுதான் காத்திருந்தினம். ஆனா அவன் படிச்சு சட்டத்தரணியானதுக்குப் பிறகு இவளைக் கலியாணம் செய்ய விரும்பல்ல. அவனுடைய தகுதிக்கு இந்தக் குடும்பத்தில கலியாணம் செய்ய அவனுக்கு கஷ்டமா இருந்தது. அவன் வேற இடத்தில கலியாணம் செய்திட்டான். – ஆனால் இவள் துவண்டு போகல்ல. வாழ்க்கையைச் சவாலா எடுத்துக் கொண்டாள். அந்த நிலையில அவள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டாள். தான் முடிக்கிற ஆளைக் கலியாணத்துக்குப் பிறகு சட்டத்தரணி ஆக்கிறதெண்டு. அவளின்ர விருப்பத்துக்காகத்தான் சட்டத்தரணி ஆனன். என்னுடைய விருப்பத்துக்குத் தமிழில சத்தியப்பிரமாணம் செய்தன். அண்டைக்குச் சத்தியப்பிரமாணம் செய்ததில 17 பேர் தமிழர். இதில நானும் பொன்.பூலோகசிங்கமும் தான் தமிழில சத்தியப்பிரமாணம் செய்தம். அண்டைக்கு அவள் பட்ட சந்தோசம்! அவள் என்ர மனுஷியாக நடக்கல. என்ர அம்மா மாதிரி நடந்தாள். நாங்கள் கலியாணம் முடிச்சதில இருந்து குடும்பமா இருந்த நாள்கள் மிகக் குறைவு. ஜெயிலில இருந்தும் தலைமறைவாகியும் இருந்ததால எங்கட பிள்ளைகள் கூட அப்பாட அரவணைப்பில்லாமல்தான் வளந்ததுகள். அப்படியிருந்தும் என்னுடைய போக்கை மாத்தைச் சொல்லிக் கேக்கல. இண்டைக்கு அவள் வெடிப்பட்டுக் காயத்தோட மழைக்கு நனைஞ்சு கொண்டு நிக்கிறாள்' மழைக்கு போட்டியாக அவர் கண்களும் நீரைச் சொரிந்துகொண்டிருந்தன. *** அன்று முழுக்க சம்பவம் நடந்த பகுதியை நோக்கிப் போகமுடியவில்லை. அனைவரும் பன்குடா வெளிக்குத் திரும்பினர். இதற்கிடையில் வலையிறவுப் பக்கமாக ஒருவரை நகரத்துக்கு அனுப்பினார்கள். அக்கா போய்ச் சேர்ந்திட்டாரா என்பதை அறிந்து வரச் சொன்னார்கள். இல்லாவிடில் செஞ்சிலுவைச் சங்க மூலமாக அக்காவின் நிலையை அறியுமாறு சொல்லி அனுப்பினார்கள். அன்று காந்தன் நித்திரைக்குப் போவதற்கிடையில் ஆயிரம் தடவை வேணு அண்ணன் சொல்லி இருப்பார், 'ஜமுனா எப்படியும் தப்பியிருக்கும். ஆற்றை வீட்டிலயாவது ஒளிச்சிருந்திட்டு வரும்'. நகரத்தில் தகவலைத் தெரிவித்தவரிடம் வேணு அண்ணாவின் மூத்த மகள் அபராஜிதா வினவினாள். 'அப்பாவைச் சுட்டதா? அம்மாவைச் சுட்டதா? அப்பாவைத்தான ஆமி தேடினவன்? அப்ப அம்மாவை ஏன் சுட்டான்' குழந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை அவருக்கு. 'உன்ட அம்மாவைப்போல ஆக்களைச் சிங்களவன் சுடுறதைத் தடுக்கத்தான் அந்தக் காலத்தில தமிழ் இளைஞர் பேரவை அமைச்சவர் உன்ட அப்பா' என்று சொல்லுமளவுக்கு அரசியல் தெரிந்தவரில்லை அவர். *** நித்திரை செய்த நேரம் குறைவுதான். நேரத்துடன் கண்விழித்து விட்டான் காந்தன். பக்கத்தில் படுத்திருந்த வேணு அண்ணாவைக் காணவில்லை. எங்கே போயிருப்பார் என்றெல்லாம் சிந்திக்கவில்லை. நேரே கொடுவாமடுச் சந்திக்கு வந்தான் பக்கத்தில் போன காந்தனிடம் அவர் சொன்னார்.... 'ஜமுனா செத்துப் போச்சு! அதில சந்தேகம் இல்லை. அவளின்ர (B)பொடியை எடுக்க வேணும்' இண்டைக்கு எப்பிடியும் எடுத்திடவேணும்'- உறவால் அவருக்கு மருமகனாக இருந்தாலும் 'அண்ணன்' என்றே காந்தன் அழைப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் 'ஓம் மண்ணன் .... இண்டைக்கு எப்பிடியும் எடுப்பம்' என்றான் அவன். நகரத்துக்குச் சென்றவர் ஜமுனாக்கா அங்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். நேரம் போய்க்கொண்டிருந்தது. அன்று செங்கலடிப் பாதை வழியாக மக்கள் பன்குடாவெளி வருவதற்கு அனுமதித்திருந்தனர் இராணுவத்தினர். அவ்வாறு வந்தவர்களிடம் ஜமுனாக்காவைப் பற்றி விசாரித்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலைச் சொன்னார்கள். 'நீலச் சீலையுடுத்த பொம்பிளை ஒண்டின்ர (B)பொடி கிடக்குது' - 'ஒரு (B)பொடிய காகம் கொத்துது' - இதற்கு மேலால் வேணு அண்ணனால் தாங்க முடியவில்லை. 'காந்தன்.... ஜமுனாவின்ர (B)பொடியில ஒரு துண்டை எண்டாலும் எடுத்துக் கொண்டந்து எரிக்க வேணும்' என்றார். ஒரு குழு தேடுதலுக்குப் புறப்பட்டது. முன்னே பிரசாத்தும் மகேந்திரனும் சென்றுகொண்டிருந்தார்கள். முதலில் வயோதிபர்கள் இருவரது உடல்களும் அகப்பட்டன. அக்காவைப் பற்றிய தடயங்களைக் காணவில்லை. முதல் நாள் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிய வயோதிபர் மீண்டும் வரவழைக்கப்பட்டார். அவர் ஜமுனாக்கா சூடு பட்டு விழுந்த இடத்தை அடையாளம் காட்டினார். அந்தப்பகுதியில் தொடர்ந்து தேடினர். அப்போது பிரசாத்தின் கண்ணில் அகப்பட்டது ஒரு பவுடர் ரின். அதைப் புரட்டிப் பார்த்தபோது அவன் ஒட்டிய 'P' என்னும் எழுத்து காணப்பட்டது. *** நிலமட்டத்துக்குக் கிட்டத் தண்ணீர் கொண்டிருந்த கிணற்றை எட்டிப் பார்த்தான் மகேந்திரன். ஜமுனா அக்காவின் பிரேதம் மிதந்துகொண்டிருந்தது. 'பிரசாத் அண்ண!.. ஜமுனாக்காட (B)பொடி கிடக்குது' என்று கத்தினான். ஓடி வந்த பிரசாத்தும் அவனுமாக பிரேதத்தை எட்டித் தூக்கினார்கள். ஒரு சாக்கில் கிடத்தித் தூக்கிக் கொண்டு வந்தனர். காந்தனுக்குப் பக்கத்தில் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்த வேணு அண்ணன் அப்போது தான் கவனித்தார். ஜமுனா அக்காவின் கை நிலத்தில் இழுபட்டபடி வந்து கொண்டிருந்தது. 'ஜமுனா..... கை முட்டுது' உரக்கக் கத்தினார் வேணு அண்ணன். அந்தக் கணத்தில்தான் ஜமுனா அக்கா இல்லாத உலகம் தன்னெதிரில் இருப்பது புரிந்தது. இவ்வளவு நேரமும் அடக்கிக்கொண்டிருந்த அழுகை பீறிட்டெழுந்தது. கரத்தையொன்றில் ஜமுனா அக்காவின் சடலம் கிடத்தப்பட்டது. கொட்டும் மழைக்கிடையில் கரத்தையைப் பிடித்தபடி சென்றுகொண்டிருந்தார் வேணு அண்ணன். இந்தக் காட்சியை எப்படிச் சகிப்பது என்று திண்டாடிக்கொண்டிருந்த காந்தனிடம், 'காந்தன்... தொந்தரவு செய்யிறதா நினைக்காத. புதுச்சீலை யொண்டும் சட்டையொண்டும் வேணும் 'என்றார் அவர். பிரசாத்துக்குப் புது உடுப்பு எடுத்துக்கொண்டு வருவதாகச் சொன்ன அக்காவுக்குப் புது உடுப்பு எடுக்க வேண்டிய நிலை - சாக்கினால் சுற்றப்பட்ட அவரது உடல் - இதை நினைக்கக் காந்தனுக்குத் தலை கிறுகிறுத்தது. ஆனாலும் ரவையாய் விரைந்தான். புறப்பட்டு விட்டானேயொழிய அவன் மனதில் ஒரு கேள்வி, 'இந்த இடத்தில புதுச் சீல சட்டைக்கு எங்க போறது?' எள் என்றால் எண்ணெயாய் நிற்பவர்கள் தானே மட்டக்களப்பு மக்கள். ஜமுனா அக்காவின் உடல் வருகின்றது என்பதை கேள்விப்பட்டவுடன் தனது மகளுக்கென வாங்கிய ஒரு புதுச் சேலையை வெளியில் எடுத்து அதற்கு ஏற்ற வகையில் சட்டை தைத்துக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. (பங்குடாவெளியைச் சேர்ந்த பாக்கியம்பா என்ற பாக்கியவதி) காந்தனைப் பொறுத்தவரை திருப்தி. ஜமுனா அக்காவுக்கு ஒரே ஒரு சூட்டுக்காயம். முதுகில் பட்ட ரவை வயிறு வழியாக வெளியேறியிருந்தது. வைத்தியம் செய்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். கழுத்தில் தெரிந்த காயம் காப்பு, சங்கிலி போன்ற ஆறு பவுணுக்கு மேற்பட்ட நகைகளைக் கைப்பற்றத்தான் இவரைக் கொன்றிருக்கின்றார்கள் என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டியது. புகைப்படப் பிடிப்பாளனான சுரேஷ் ஜமுனா அக்காவின் சடலத்தை படமெடுக்க முயன்றான். அதனைத் தடுத்து விட்டார் வேணு அண்ணண். 'நான் உயிரோட இருக்கு மட்டும் அவளின்ர உருவம் மட்டும் எப்பவும் எனக்கு நினைவில இருக்க வேணும், அவள் இந்த உலகத்தில இப்ப இல்ல எண்டு காட்டுற ஆதாரம் எதுவும் இருக்கக்கூடாது. தயவுசெய்து படமெடுக்காதீங்க' என்றார் வேணு அண்ணண். காந்தனைத் தனியாக அழைத்த சுரேஷ் 'நான் அழிவுகள், உயிரிழப்புக்கள் நடந்தால் அந்த இடத்துக்குப் போய் எத்தனையோ புகைப்படங்கள் எடுத்திருக்கிறன். ஆனா இந்த இடப்பெயர்வுக்குப் பிறகு எங்களுக்கு ருசியாச் சமைச்சுத் தந்த ஜமுனாக்காவைப் படம் எடுக்க முடியலையே' என முணுமுணுத்தான். சடலம் எரிந்துகொண்டிருந்தது. நகரத்திலிருந்து வந்த லொறி அந்த இடத்தை வந்தடைந்தது. அதில் வேணு அண்ணருக்கு அவரது உறவினர் ஒருவர் அனுப்பிய கடிதம் வந்தது. அவர் கலங்காமலிருப்பதற்காக அது எழுதப்பட்டது. 'ஜமுனா உயிரோடதான். விசயத்தை வெளியில விடவேண்டாம். எப்படியும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் முயற்சித்து ஆளை வெளியில் எடுக்கலாம்' ஓர் இரு நாட்களில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டனர் அபராஜிதாவும் பிரவினாவும். பிரவினாவுக்கு வயது நாலு. அவள் பெரிய மனிசி என்ற தோரணையில் புறுபுறுத்துக்கொண்டிருந்தாள். 'அப்பா வேலைக்கு போவார் - ஆமிக்காரன் புடிச்சுக்கொண்டு போவான், அம்மா வேலைக்குப் போவா. ஒவ்வொரு நாளும் கொள்ளையா நேரம் காத்திருக்க வேணும் நாங்கள். இப்ப செத்துப்போயிற்றா - எரிஞ்சுபோனா - எப்ப திரும்பி வருவாவோ தெரியாது' ....... *** மேஜர் வேணு 11.12.1991. அன்று சிவப்புப் பாலத்தடியில் புளொட், டெலோ, இராணுவம் கூட்டாக மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவெய்தினார். இதில் குறிப்பிடப்படும் பிரசாத் குருநாகலில் பொலிசாரால் கைதாகி இருந்தார். இவரைப் பற்றிய விபரம் அறிந்த இராணுவத்தினர் இவரைக் கையேற்க வந்த சமயத்தில் சைனட் உட்கொண்டு சாவைத் தழுவினார். http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=55d6804d-b054-4074-9e5b-886dc082d198
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கருத்துக்களைக் கருத்துக்களால் வெல்லமுடியாமல், குதர்க்கம் பேசுபவர்களால் விவாதத்தில் வெல்ல முடியுமே தவிர ஒருவரின் கருத்தியலை வெல்லமுடியாது!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
துருச்சாமி சுவி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நான் கண்ட நாய்கள் -முகமூடி நான் கண்ட நாய்கள் பலவிதம். நேற்றுப் பிறந்த குறிதெரியாத "இள"ம்நாய்களிலிருந்து.. விரைவீங்கித் தொங்கும் வாலிப வயோதிக நாய்கள் வரை.. நான் கண்ட நாய்கள் பலவிதம். சில நாய்கள் கொள்கைக்காகக் கத்துவதாய் சொல்லிக் கொள்கின்றன. கொள்கை குறித்தி விசாரிக்கப் போனால் கத்துவதை விடுத்து கடியையே பதிலாக தருகின்றன... அந்நாய்களின் கொள்கைகளைக் அவைகளே தீர்மானிப்பதில்லை என்பதைக்கூட அறியாமலேயே வாழும் நாய்ப்பாடு பெரும்பாடு... தனக்குக் கொள்கையில்லை என்ற பிரகடனத்துடன் தன் உள்மன அழுக்குகளையெல்லாம் கொள்கையாக்கிக் கத்துகிற நாய்கள் சில இங்குண்டு. இன்னும் சில நாய்கள் பொறாமையில் கத்தும்.. சில நாய்கள் அரசியல் சார்பில் அடியாட்களாய்க் கத்தும்... ஜாதிகள் இல்லையென்று கொக்கரிக்கும்சில நாய்கள் பின்னொருநாள் ஜாதிக்கட்சிகளை நக்கி மகிழும். அந் நக்கலை நியாயப்படுத்த ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். என்றாலும் பெண் துவாரம் தேடும்போது ஜாதியை மறந்துவிடுகிற இவை தன் ஜோடியை தேடும்போது மட்டும் ஜாதியை மறக்காத சுபாவத்தை இயற்கையிலேயே கொண்டிருப்பவை.. இலக்கியச் சேவையென்று கத்துகிற நாய்கள் சில உண்டு.. எதிரே இல்லாத பிடிக்காத எழுத்தாளனை பாய்ந்து பிடுங்குவதாய் வேஷம் கட்டும் அவற்றை அவற்றின் கோஷத்தை வைத்தே எளிதில் அடையாளம் காணலாம்... பதவிக்காகக்கத்துகிற நாய்களும் சில இங்குண்டு. இந்நாய்களின் குரலில் எஜமானன் மீதான நன்றியுணர்ச்சி வழியும். பதவி கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாய் பரம்பரை பழக்கத்தில் இவை கத்திக் கொண்டிருக்கின்றன. இவை சில நேரங்களில் எஜமானனுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு எஜமானன் சொல்லாமலே கத்தி உபத்திரவங்கள் கொண்டு வருவதுமுண்டு. இனச்சேவை, மொழிச்சேவை என்ற பெயரில் இருப்பை காட்ட கத்தும் சில நாய்கள். சினிமா சான்ஸு என்ற பெயரில் சில்லரைக்காக கத்தும் சில நாய்கள். தன் குரல் தானே கேட்கிற மகிழ்ச்சியில் குயிலென்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து கத்துகின்ற நாய்களும் உண்டு. பெரிய நாய்களோடு சேர்ந்து கத்தினால் கவனிக்கப்படுவோமென்று கத்துகிற குட்டிநாய்களும் உண்டு. தனியாகப் பார்க்கும்போதுவாலைக் குழைத்து நெளிந்து வளைந்து பின் - கூட்டத்தில் தைரியமாகக் கத்துகிற நாய்களும் உண்டு. தன் குரலின் அருமை அறியாமல் அடிக்கடிக் கத்திக் கல்லடி வாங்குகிற நாய்களும் உண்டு. கத்துவதற்கு நேரமில்லை பின்னர் வருகிறேன் என்று சொல்லிப்போகிற நாய்களும் உண்டு. நாய்ப்பெருமை பேசித் திரியும் இந்நாய்களை யாரும் நாயென்று விளித்துவிட்டால் இவற்றுக்குப் பிடிக்காது. "யார் நாயென்று" தன்னினம் தாழ்த்தித் தானே கத்துகிற சிந்தனைத்திறம் பெற்றவை இவை. இருட்டில் வாழ்கிற இந்நாய்கள் வெளிச்சத்துக்கு ஏங்குபவை. ஆனால் வெளிச்சத்தைக் கண்டால் அஞ்சுபவை. அதனால் - திருடர்களின் துணைகொண்டு வெளிச்சக் கம்பங்கள்மீது சிறுநீர் கழித்துச் சிரிக்கின்றன. பின்னெழுகிற கோபத்தில் சிலநேரங்களில் தங்கள் கண்களுக்குள் தங்கள் சிறுநீரைப் பீச்சிக் கொண்டு வெளிச்சத்தைத் துரத்திவிட்டதாய் ஆனந்தப்படுவதுமுண்டு. தான் தின்றதைத் தான் கக்கிப் பின் தானே நக்கித்தின்னும் நாய்கள் அல்ல இவை. எஜமானர்களின் ஏவலுக்கேற்ப அவர்கள் சொல்லும் கக்கலை அதிசுவாரஸ்யமாய் நக்கித் தின்பவை. இவ்வாறுஇந்நாய்கள் இருப்பை நியாயப்படுத்த தொடர்ந்து கத்துகின்றன. என்றாலும் - தன்வீட்டைத் தாண்டிவந்து பொதுமைதானத்தில் பூனையுடன் சண்டைபோடுகிற தைரியத்தைக்கூட தம் விரைகள் தமக்கு வழங்காத வருத்தம் இந்நாய்களுக்கு உண்டு. தன் குறியைத் தான் விறைத்து தனக்குமுன்னே ஆட்டிக்காட்டி அவ்வருத்தம் போக்கிக் கொள்ளும் இந்நாய்கள். குரலையும் இரவல் வாங்கிக் கத்துகிற இந்நாய்கள் சுயமாய்க் கத்துகிற வக்கில்லாதவை. கத்தலையே குரைத்தல் என்று கற்பனையில் திளைப்பவை என்றாலும் - தங்களை நாய்களென்று உணராதிருப்பதாலும் பெரும்பாலான நேரங்களில் தம்பெட்டையைத் திருப்திபடுத்த மட்டுமே பிறர்மீது பாய்ந்துபிடுங்குவதாலும் இந்நாய்களை நேசிக்கலாம் நாம்... http://mugamoodi.blogspot.co.uk/2006/05/blog-post_21.html?m=1
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவருக்கும், பகலவனுக்கும் மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜன் விஷ்வாவுக்கும் சுமேரியர் ஆன்ரிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.? அத்துடன் அண்மையில் பிறந்ததினத்தைக் கொண்டாடிய ராசவன்னியன் ஐயாவின் பேரனுக்கும் பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கொழும்பானுக்கும் தனிக்காட்டு முனிவர் ஜீக்கும் பிறந்தின வாழ்த்துக்கள்???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பச்சை போடுவதற்கு அலாரம் வைத்துவிட்டால் பிரச்சினை சுலபமாகத் தீர்க்கலாம். ஒரு நாளுக்கு ஐந்து பச்சைகள் என்ற எல்லை இருக்கும்போதே குழந்தைப் பிள்ளைகள் மிட்டாய்கள் சேர்ப்பதுபோல ஆளுக்கு ஆள் மாறி மாறிப் பச்சை குத்தி சேர்க்கின்றார்கள்?. எல்லையைத் தளர்த்தினால் அம்போதான்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழத்திருமகன்?
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
பூனைமை-கவிதை அனார் இசாத் றெஹானா புகையிலைத் தோட்டங்களுக்குள் புதைந்திருக்கும் கல்லறை வாசியான பூனை மடிந்த குறுவால் சுழற்றி தன் தோற்றங்களை பன் மடங்காக்குகின்றது ஆந்தையின் கண்களில் விடிந்திருக்கின்ற பௌர்ணமியைப் பிராண்டுகின்றது கரும் சுருள்களாய் முகில்கள் சூழும் வேளை ஆபத்தான சமிக்ஞைகளை கூறுபோடும் தந்திரங்களை வேட்கை வாடைகளை மோப்பம் பிடிக்கின்றது பார்வைக் கூர்மையால் மன உறுத்தலை அறியும் பச்சைக் கண் பூனை பலியின் இரத்தத்தை விடாய் கொண்டு நக்கிடும் கைகளால் வருடி அளைதல் பொழுதுகளில் உள்ளங்கை மேலே மென் பாதம் பதிந்து “மியா“ என்கின்றது மென்மையாக…… நீல இருளில் உலவும் வசீகரப் பேயுருப்பூனை விசுவாசமற்றது http://www.naduweb.net/பூனைமை/
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்? இல்லறத்தில் திளைத்தாலும் இடைக்கிடை யாழை எட்டிப்பார்க்க பாரியாரிடம் அனுமதிகேட்டு வாருங்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்வின் முக்கிய மைல்கல்லை அடைந்திருக்கும் தமிழ் சிறி அண்ணாவுக்கு (ஐயாவுக்கு) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!??? என்றென்றும் தேக ஆரோக்கியத்துடன் திடமாக இருக்க வெள்ளிக்கிழமை விரதம் உதவும்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்த்தியன், நுணா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எல்லாம் இரவல்தான். சொந்தம் என்றால் இன்னும் சூப்பராக வந்திருக்கும் நீண்ட நேர்காணல் ஒன்று இணைத்திருந்தேன். அதில் சொல்லப்பட்டிருந்தது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நான் உணர்ந்த சுதந்திரத்தை உலகத்திற்கு சொல்ல நினைக்கிறேன். அதை செவிமடுப்பவர்கள் கேட்கலாம். பிடிக்காதவர்கள் விலகிக் கொள்ளலாம். ஏனெனில் ஒருவன் அடிமையாக இருக்கிறான் என்பதை சொல்லத்தான் முடியும். விடுதலை என்பது அவரவர் முயற்சி சார்ந்தது. வெளிப்படையான சிறையிலிருந்து ஒருவரை விடுவிப்பது எளிது. ஆனால் அவரே விரும்பும் மனச்சிறையிலிருந்து விடுவிப்பது விருப்பம் சார்ந்தது அல்லவா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன்???
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
தனிமை – கு.அழகர்சாமி தனிப் பனை. ஓர் ஆட்டை அதில் யாரோ கட்டி விட்டுப் போயிருக்கிறார்கள். வெயிலில் தனிப் பனையின் சொற்ப நிழல். அது போதும்; ஆடு சுகம் காணும். எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பருந்தமரும் பனையின் மேல். தனிப் பனை இனியும் உயர்ந்து தெரியும். சூரியன் பனையின் தலை மேல் தங்குவான் சிறிது. பனை செய்யும் தனித்தவத்தில் சிவந்து மேலும் ஒளிர்வான். தனிப் பனையைப் பார்க்கப் பார்க்க எனக்குப் புரியும். என் தனிமை நெட்டுக்குத்தலாயிருப்பது. https://solvanam.com/?p=51373