Everything posted by கிருபன்
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
நாடகம் நன்றாக இல்லை என்று யாரும் சொல்லவில்லையே மெசோ ஆன்ரி!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நீந்தக் காத்திருக்கும் விண்மீன் கயல் இணையும் புள்ளிகளைப் பொறுத்து வட்டமென்றும் சதுரமென்றும் செவ்வகமென்றும் அறுங்கோணமென்றும் அறிதலின்படி பிரபஞ்சம் வடிவங்களாலானது அதனதன் சுற்றளவு பரப்பளவுகளை கணக்கிடுவதே வேலையாயிருந்தது அளவீடுகள் தப்பிப் போய்ப் பட்டாம்பூச்சியின் இறக்கையில் விழுந்தேன் தேனுண்ட மயக்கத்தில் திளைத்திருந்த அதன் மென்னுடம்பு அதிர்வில் உயரப் பறக்கலாயிற்று மந்திரப் பாயில் பயணிப்பது போல சறுக்கியும் தவழ்ந்தும் விரிந்த அதனுலகில் அலகுகளேதும் நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை இருளடையாத ஆன்ம வெளிச்சத்தில் எந்த சுடருக்கும் நிழல்களேயில்லை ஒளிபொருந்தியப் பயணமொன்றில் விண்மீன்கள் நானென்ற பிரம்மையிலாழ்ந்தேன் பிரபஞ்சம் சுதந்திரமயமானது எண்ணிலடங்காப் புள்ளிகளிருந்தும் வடிவங்களற்ற அதனுலகம் பிடித்துப் போய் வாழ்க்கை முழுவதற்குமாய் அதனோடே வாசம் செய்ய நானுமொரு புள்ளியாய் வாழ்ந்து மறைய வலுவானதொரு காரணம் தேடிக் கொண்டிருக்கிறேன்… http://kayalsm.blogspot.co.uk/2012/12/blog-post_3.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
அலறல்களின் பாடல் கவின் மலர் வன்புணர் முலைகளை வெட்டியெறி பிறப்புறுப்பில் கடப்பாரையைச் செலுத்து தெறிக்கும் குருதிச் சிவப்பு உன் தெய்வங்கள் வீற்றிருக்கும் கோயிலின் சுற்றுச்சுவருக்கு வண்ணமாகிறது வன்புணர் முந்திரிக் காட்டில் நிர்வாணமாக்கு அவள் உடைகள் உன் கடவுளை அலங்கரிக்கின்றன வன்புணர் பள்ளிச்சீருடையில் ரத்தம் படரச் செய் பின் முள்காட்டில் தூக்கியெறியுமுன் அக்குழந்தையின் பால் மணத்தை உன் மேனியில் வழித்து எடு அதுவே கோயிலின் தெய்வீக மணமாகிறது வன்புணர் மொட்டைமாடியில் இருந்து வீசியெறி அவளின் அலறல் பக்திப் பாடலாகிறது வன்புணர் அவள் கதறலை அணுஅணுவாய் ரசி அவள் கண்ணீர் புனிதத் தீர்த்தமாகிறது வன்புணர் அடையாளம் தெரியாமல் அவளைச் சிதைத்து சிதையில் இடு அச்சாம்பல் பிரசாதத் திருநீறாகிறது வன்புணர் அவள் மூச்சை நிறுத்து இத்தனை காலம் அவள் உதிர்த்த புன்னகைகள் கோக்கப்பட்டு உன் கடவுளின் கழுத்தில் மலர்மாலையாகின்றன இனி நீ வல்லாங்கு செய்ய சேரிவாழ் பெண்கள் எவரும் இலர் காமுற்ற நீ கோயிலுக்குள் நுழைகிறாய் உன் முந்தைய வன்புணர்ச்சிகளின் சாட்சியங்களைச் சுமக்கும் அக்கோயிலுக்குள் நீ அடியெடுத்து வைக்க வைக்க பெண் கடவுளர்களின் கற்சிலைகள் நடுங்கத் தொடங்குகின்றன! http://kavinmalar.blogspot.co.uk/2013/01/blog-post_25.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
திரும்பாத முத்தம் மனுஷ்ய புத்திரன் இடப் படாத முத்தமொன்று இரவின் முடிவற்ற கரிய தோள்களில் வந்தமர்ந்தபோது பனிக் காலத்தின் ஆயிரம் உறைந்த கண்கள் அதை உற்றுப் பார்த்தன இடப்படாத அந்த முத்தம் தன் கூச்சத்தின் இறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டது திசை தப்பி வந்த வேறொரு உலகத்தின் பறவையென அன்பின் துயர வெளியின் மேல் அது பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது அதற்கு தான் அந்த கணம் வந்தமர்ந்த இடம் குறித்து எந்த யோசனையுமில்லை ஒரு தந்திரமில்லை ஒரு கனவு இல்லை நடுங்கும் கைகளால் நான் அதைப் பற்றிக்கொள்ள விரும்பினேன் இடப்படாத அந்த முத்தம் சட்டென திடுக்கிட்டு எந்தக் கணமும் பறந்துபோய்விடலாம் யாராலும் பெற்றுக்கொள்ள முடியாத காதலின் ஒரு தானியத்தை அதற்கு எப்படியாவது ஊட்டிவிட முயன்றேன் இடப்படாத முத்தங்கள் எதையுமே பெற்றுக்கொள்வதில்லை எவ்வளவு தூரம் பறந்தாலும் அவற்றிற்குப் பசி எடுப்பதில்லை அவை பிசாசுகளைப் போல காற்றில் வாழ்கின்றன பனியைப்போல தனிமையில் நிகழ்கின்றன ஒரு வேளை நீ அந்த முத்தத்தை இட்டிருந்தால் அது முத்தமாகவே இல்லாமல் போயிருக்கலாம் http://nathiyalai.wordpress.com/2007/08/20/thirumbaatha-muththam/
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
தேவை ஒரு நாயார்... ஹேமா நிலவு பார்த்து நித்தம் குரைத்துக்கொண்டிருக்கிறது எப்போதும் நான் பார்க்கும் அந்த நாய். கடிக்காவிட்டாலும் குரைப்பதென்பதே அடையாளமாய் ஆக்கப்பட்டிருக்கிறது அதற்கு. கடிக்காவிட்டாலும் குரைக்காத நாயை நாயென்று சொல்வீர்களா நீங்கள் ? கடித்தும் குரைத்தும் நாயின் சாகசங்களோடுதான் மனிதன் இப்போ என்றாலும்.... வாலில்லாமலோவெண்டு நினைத்துச் சிரித்ததுண்டு நிமிர்த்தமுடியாததாலோ ! கடித்தால் பாசிசமாம் குரைத்தால் ஜனநாயகமாம் இரண்டுமாய் இருப்பான் மனிதன் அவன் அடையாளம் அது. கடிக்காவிட்டாலும் குரைக்கும் நாயொன்று இருத்தல் நல்லது என்னால் குரைக்கவோ கடிக்கவோ முடியவில்லை. யார் வந்தாலும் வாலாட்டிக் கொண்டிருக்கிறேன் என் இயல்போடு இன்றளவும் நான்!!! http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6122
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாறா அக்கா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வருடங்கள் உருண்டோடினாலும் வாழ்வை இளமையாகவும், இனிமையாகவும் வைத்திருக்க வாழ்த்துக்கள்.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
11:30 க்கு அரைவாசி இருக்கைகள் கூட நிறையவில்லை என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். 12 மணிக்கு மண்டபம் நிறைந்திருந்ததுதான் என்று அங்கு முன்கூட்டியே வந்தவர்கள் சொன்னார்கள். ஆனாலும் மக்களின் வருகை முன்னைய காலங்களைவிட வீழ்ச்சி கண்டிருந்தது. மாவீரர் தினத்தை வைத்து அரசியல் குழு அரசியல் செய்வதை விடுத்து எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சிங்கள இனவாத அரசுக்கு எதிரான அரசியலைச் செய்யவேண்டும். அதற்காக கூட மக்கள் குழுமியிருந்ததால் அந்நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் தவறேதும் செய்யாத அப்பழுக்கற்றவர்கள் என்ற கருத்தியலை ஏற்றுக்கொள்ளமுடியாது. எதிர்காலத்தில் இரண்டு பொத்தல் குடைகள் தேவையில்லை. ஒரு நல்ல குடையே தேவை.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
[size=5] ஒரு பிரியமான எதிரியின் மரணம் [/size] கிரிஷாந் மரணம் ,இரவின் மௌனத்தை நச்சரித்துக் கொண்டிருக்கிறது . கோப்பையில் தேங்கிய தேநீரின் அழுத்த நெடி அறையெங்கும் கவிந்திருந்தது . புத்தகமொன்றின் கீழே கசக்கி வைக்கப்பட்டிருந்தது என் நீண்ட நாள் எதிரியின் புகைப் படம் . அவன் இறந்து போனான் . நான் அவனை அவனில்லாத ஆட்டங்களை ரசிக்க முடியாதவனாக இருந்தேன் . அவன் ,நான் நேசிக்கும் வேற்று மொழிப் பாடலை ஒத்தவன் புரிந்து கொள்ள என்னால் அவன் இறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது . என் நண்பர்கள் ,"அவன் உன்னைத் தோற்கடிக்கப் பார்க்கிறான் "என்றார்கள் என் அயலார் ,"அவன் உன்னை சாகடிக்கப் போகிறான் "என்றார்கள் . ஆனால் நீ அவர்களை விடவும் மகத்தானவன் . இருளும் ஒளியும் உறையும் இந்தக் காலத்தை நானும் ஒரு நாள் கடப்பேன் அதுவரை,இந்த அப்பழுக்கற்ற ஒரு வார்த்தையை உன் மீது சார்த்துகிறேன் "மன்னித்து விடு ". http://www.uyirmmai....s.aspx?cid=6092
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
நான் இரண்டு மணிக்கு வந்து நிகழ்வுகள் முடியும் வரை நின்றிருந்தேன். வருடம் தவறாமல் தொடர்ந்தும் போவதால் வந்தவர்களின் தொகையின் வீழ்ச்சியை இலகுவாகக் கணிக்கமுடிந்தது.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
எக்ஸெல் மண்டபத்திற்கு அதிகம் பேர் வந்திருந்தாலும், முன்னைய வருடங்களுடன் ஒப்பிடும்போது வருகையில் வீழ்ச்சி தெரிந்தது. அத்தோடு எல்லோரையும் மண்டபத்தில் இருக்க வைக்கும் தலைவரின் உரை, அதன் பின்னர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பொழிப்புரை போன்றன இல்லாததால் வந்தவர்கள் மாவீரர்களுக்கு வணக்கங்களைச் செலுத்திவிட்டு திரும்பவும் போய்க்கொண்டிருந்தனர். தற்போது தேர்தல் காலம் இல்லையென்பதால் ஆங்கிலேய அரசியல்வாதிகளின் வருகையும் மிகவும் குறைவு (Siobhain McDonagh வந்திருந்தார்). சில ஆங்கிலேய பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறு உரை காணொளியில் காண்பிக்கப்பட்டது.
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
வரித்த இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
[size=6] உடன் நடக்கும் நீ [/size] எம் கோபாலகிருஷ்ணன் விநோதமான பாதை அது, மூர்க்கம் உலராத வெயில் போர்த்தி நீண்டும் நெளிந்தும் போகிறது, தொலைவானில் வட்டமிட்டுப் பறக்கிறது கழுகுக்கூட்டம், இதோ உடன் நடக்கும் உன் முகம் நான் முன்பு அறியாதது, இப்பாதையில் என்னுடன் எது வரையிலும் உடன்வருவாய் என்றும் தெரியாது, பாதங்களைத் தடுமாற்றி நடை சிதைக்கும் நன்னிலம், முகம் அறைந்து விரட்டும் ஈனக்காற்று, நல் வருகையல்ல உமது என எச்சமிட்டுப் பறக்கிறது அண்டங்காக்கை, இருவரும் நடக்கிறோம், இன்னுமொரு தப்படியில் கண்ணிவெடிகள் நம்மை சிதறடிக்கலாம் வெட்டவெளிகள் கைநீட்டி மார்நோக்கி துப்பாக்கிகளை நீட்டலாம் உள்ளதனைத்தும் களவாடப்படலாம், அல்லது இதுவொன்றுமே நிகழாமல் போகலாம் நீயும் நானும் இப்பாதை கிளை பிரியும் தொலைவு வரை இப்படியே நடக்கலாம், இப்போதைக்கு உடன் நடந்து செல்கிறோம், நீயும் நானும். http://solvanam.com/?p=22516
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
[size=6]பரிசு[/size] [size=6][size=4]காலபைரவன்[/size][/size] [size=5] எல்லையற்ற கருணை நிரம்பிய இவ்வுலகில்தான் ஒரு தற்கொலையை மேற்கொண்டு சிறு முத்தத்தை சமப்படுத்த வேண்டியிருக்கிறது [/size] http://kalabairavan....og-post_10.html
-
பெயர் மாற்றங்கள்.
ஓஹோ! அவர்களையே உளவு பார்க்கவேண்டும் என்றால் அவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடும்
-
பெயர் மாற்றங்கள்.
நீங்கள் "மறைவில்" இருந்தால் (உள்ளே நுழையும்போது login anonymously என்பதை tick செய்யுங்கள்) profile க்கு வருகை தருவது தெரியாது. விரும்பினால் எனது profile ஐ உளவு பார்க்கலாம்!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
பழஞ்சொல், அல்லது உதிரபலி, அல்லது பழங்குடி அல்லது பிணங்களின் வெள்ளை அறிக்கை, அல்லது உங்களது சாவுப் பத்திரம், இறுதியாக மிஞ்சப்போவது எதுவுமேயில்லை..... கொற்றவை கோமான்களே கனவான்களே கைவிடப்பட்ட எம் மக்களின் கனவுகளை தோட்டாக்களாக்கும் பேராற்றலில் திளைத்தவர்கள் நினைவூட்டத் தவறுவதேயில்லை எங்கள் மூத்திரம் மரங்களின் வேர்களில் கலந்திருந்தது பூக்களில் நாற்றம் வீசியதில்லை மணக்கும் அப்பூக்களை கொன்றறுத்துச் சூடியதில்லை பசியென்ற சொல் சதையானபிறகே தோளிலேறும் வில் எளிய வேட்டை இப்படியாகத்தான்.......... சில காலம் முன்பு வரை இப்போது நாங்கள் புதிய வாடைகளை நுகர்கிறோம் உடல்களில் சாம்பல் நிறம் தேமலெனப் பரவுகிறது நாசி கந்தக வாசத்தில் கருகி எரிகிறது தொப்புள் துவள்கிறது எம் வியர்வையில் வாசம் இல்லை அடர்த்தியான வனங்களின் ஊடே நிர்வாணமாய் இருந்த பாறைகள் பிணங்களை உடுத்தத் துவங்கி வெகு காலமாயிற்று எங்கள் மண் நிறமிழந்து இருக்கிறது சிதறி விழும் நிழல்கள் சிவப்பைக் கக்குகின்றது பிள்ளைகள் மணல்களை, பாறைகளை, மரங்களை மற்றும் இதுவரை கேள்விப்பட்டிராத மரணத்தின் விழிகளை வரைந்து பார்த்து மகிழ்கின்றனர் அதில் அழித்தொழிப்பின் இளிநகை செங்கோடுகளாக நெளிகிறது சொல்லியிருக்கிறோம் எங்கள் சிறார்களுக்கு இயற்கையின் பிதாமகர்கள்... (அப்படித்தான் எக்கணமும் உங்களை எங்கள் முன் உச்சரித்து, அனுபவித்து, எங்கள் உடல் பதறுமளவுக்குச் சொல்வீர்கள். முட்டாள்களே... இவ்வார்த்தைகளை நீங்கள் எமக்கெதிராக உச்சரிக்கையில் எமது பற்கள் இறுகி உதிர்வதை எப்போதும் கண்டதில்லை நீங்கள். ) மாசற்ற ரப்பர் பொம்மைகளை அனுப்பி வைப்பார்களென்று உறுதி அளித்திருக்கிறோம் எங்கள் உடல் சூட்டின் உரிமைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குள் சேர்க்கப்பட்டுவிட்டது ஒளிக்கற்றைகள் பேராசைமிக்க விழிகளைக் கொண்டு பதுங்கு குழிகளுக்குள் இருக்கும் சிறார்களின் புன்னகைகளைப் பிடுங்கிச் செல்கிறது அவை எம் குடியினருக்கான அருங்காட்சியகத்திற்காக சேர்க்கப்பட்டுவருவதாக அரசின் சமாதானத் தூதுவர் புன்னகையுடன் எம் சிறுமிகளின் இளமுலைகளை கண்டுணர்ந்து சொல்லிச் செல்கிறார் தானியங்கிகள் கூட இரும்புக்குறிகளை ஈணித்தள்ளுகிறது எம் பெண் மக்களைக் காணும் பொழுது ஆதிக்கம் தனது கொடிய சங்கை ஊதிப் பிளிறுகிறது வனம் தனது தூக்கத்தை இழக்கிறது போர் தொடங்குகிறது சதை, நிணம், உங்களது அரிய பார்வையில் ஊளையாகி சீழ் வீசும் எமது மண் மிதக்கும் கைப்பிடி இதயம் வழியும் குருதி கைதூக்கிய சொற்கள் அனைத்தும் களைத்து விழுகிறது உடல்களுக்கு தாக்குதல் ஓரிருமுறை யோனிகளின் சிதைவு எண்ணிக்கைக்குள் அடங்குவதில்லை (எப்பொழுதும் பேரழிவுக்கு முன்னும் பின்னும் யோனிகள் கருகி எரிவது ஏனென்று தெரியவில்லை. பாலியல் வல்லுறவுக்கு முன்னும் பின்னும் அன்னையின் முகமும் தெரிவதில்லை. பெண்களுக்கு முகமே யோனிகளாய் இருக்கிறது.... புணருங்கள் ஆண்களே) உங்களது வரைபடத்தில் சுழல்கிறது புவி உங்களின் கரங்களுக்கு சிலுவைகளில் இடமில்லை ஆதிக்கம் அவ்வாறே என்பதற்கு எங்களிடம் பிணத்தை பிணச்சூட்டை கருகிய மரத்தை கந்தக நிலத்தை இப்படியாக.... கிழிக்கப்பட்ட நைய்யப்பட்ட குருதியோடிய இன்னும்...... துப்பாக்கிகள் நுழைக்கப்பட்ட பார்த்து மகிழ்ந்த வெந்து தணிந்த சிதைந்த சிறிய பெரிய முதிர்ந்த விழிகள் கரங்கள் சதைகள் மற்றும் இறுதியின் இறுதியாக எல்லாச் சிதைவுகளுக்கும் சாட்சியாக இருக்கும் மரத்த யோனிகளைத் தவிர யெது வுமில்லை எங்களுக்கு எதுவுமில்லை எதுவுமே........................யில்லை. கற்களையெரித்து சாம்பலாக்கும் ஆற்றலை மின் தகனங்கள் கொண்டிருக்கவில்லை துரதிருஷ்டம் சாபத்திற்கு உண்டந்த பலம் தங்களது மேன்மை பொருந்திய இருதய அளவிலும் சிறிதாய்ப் போனது எம்மக்கள் வயிறு குடல்கள் தின்னத் துவங்கிய எங்கள் வயிற்றின் தசை நார்களில் வெளிப்படுகிறது உறைந்துபோன எங்கள் கனவுகள் கண்ணீர் இழந்த எமது இளமை வரலாற்றின் பக்கங்கள் நிகழ்வுகளின் பாவக் கணக்குகளை சேமித்து வருகிறது இயற்கை எல்லாவற்றையும் எப்பொழுதும் சகித்துக்கொள்வதில்லை அது கணிக்கும் கண்காணிக்கும் அழிவின் தும்மலை அறிவித்து வாரிக்குடிக்கும் எம்மக்களின் கையில் திணிக்கப்பட்ட உங்களது ரப்பர் பொம்மைகளும் வாசலில் சிரிக்கும் சுத்தமான நறுமணம் கமழும் உங்களின் பிணங்களின் இளித்த புன்னகை கண்டு நிறையட்டும் உங்கள் வயிறு இயற்கையைச் செரிக்க இம்மண்ணில் பெருவயிறு எவருக்கும் இல்லை இல்லை இல்லை இனி இடம்பெயர யெதுவுமே இப்படி எதுவுமே இனி எப்பொழுதுமே எதுவுமே இருக்கப்போவதில்லை. (குறளி இதழில் வெளிவந்துள்ள கவிதை) http://saavinudhadug...og-post_10.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
[size=5] கரையில் தேடும் சிறுமி [/size] - தாட்சாயணி (இலங்கை) நுரை சுழித்த கடலின் கரையில், நீண்ட நாட்களாக ஒரு சிறுமி வந்து போகிறாள்…! அவள் எதைத் தேடுகிறாள்…? சிப்பிகளும்,சோகிகளும்… தேடும் வயதுதான்… என்றாலும், அது குறித்த ஆர்வம் அவளுக்கிருப்பதாய் இன்னும் அறியப்படவில்லை! அவள் அலைகளுக்கிடையில் நுரை பிடிக்க முயற்சித்தாளுமில்லை! நெடுந்துயர் விரவிக்கிடக்கிறது அவள் விழிகளில்… அவளறியாத எதையோ… அவளிடமிருந்து யாரோ… பறித்துவிட்டார்கள்… அவளறிய… அது என்னவென்று தெரியவில்லை அவளுக்கு… உலகில் சிப்பிகளுக்கும்,சோகிகளுக்கும் மேலாக… எதுவோ இருக்கிறதுதான்…! அவளறிய… அது என்னவென்று தெரியவில்லை அவளுக்கு… நுரை சுழித்த கடலின் கரையில் அவள் எதையோ… தேடிக்கொண்டிருக்கிறாள் ! http://www.oodaru.com/?p=5589
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
[size=5] ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் [/size] [size=5][size=4] சமயவேல் [/size][/size] [size=4] ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம் ஓங்கிய அரிவாளின் கீழே தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட மரணம் பற்றிய பிரக்ஞையற்று குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை; உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள் பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள் எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள் விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள் என்று வதைபடும் மனிதர்களை விட எத்தகு மேன்மையான வாழ்வுடன் நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள் எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள் கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று ஒருவரை யொருவர் கொல்வது பற்றி உங்களால் மே என்று கூட கத்த முடியாது எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட உங்களால் வரைய முடியாது. 2 இருமைகள் என்பது எதார்த்தம் எனில் அதில் ஒரு கை அள்ளி என் கண்களைக் கழுவுவேன் இரவு பகலோ, இறப்போ பிறப்போ இருமைகள் றெக்கைகளாக ஒரு பறவைக் கூட்டமாய் பழுப்பு வானில் பறந்து திரிவேன் மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன் இதுவும் அதுவும் கவ்வி முயங்கும் இடமோ பொழுதோ வெளியோ சிந்தும் இன்மையின் இனிமையை பருகி மகிழ்வேன் ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான் எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது அதன் வெண்மணற் பரப்பில் கோபுரங்களும் மலைகளும் கடல்களும் நகரங்களும் ஆகாயமும் கூட சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும் புதைந்து கிடக்கின்றன என் புல் வெளியில் மரணம் ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில் நான் ஒரு நாகலிங்க மரமாவேன் என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள் பூக்களாய் தொங்கும் எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான். [/size] http://samayavel.blo...01_archive.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
[size=5]தலைகளைப் பறி கொடுத்தோர்!! [/size] [size=4]மா.சித்திவினாயகம்[/size] [size=4]உண்மையிலேயே அந்தப் பலசரக்குக் கடை விளம்பரங்களைப் படித்துப்பார்த்ததில் மிக…மிக…சர்ச்சைக்குரியதாகவும்….சஞ்சலப்படுத்துவதாகவும்… பயப்பட வைப்பதாகவும்…இருந்தது![/size] [size=4]தலையுள்ள இறால்களை விட………… தலையில்லா இறால்களுக்கும் தலையுள்ள நெத்தலிகளை விட…………… தலையில்லா நெத்தலிகளுக்கும் அதிக விலையும் அதிக மவுசும் என அந்த விளம்பரங்கள் –என்னைக்குழப்பி விடுகின்றன ![/size] [size=4]தலைகள் இருப்பதே கேவலமாகவும் கௌரவக் கோளாறாகவும் உணருகிற நாட்கள் இது ! மண்ணுள் புதைந்த பாறாங் கல்லெனச் சிந்திப்பதையே மறுதலித்தெறிந்து[/size] [size=4]பழைய பித்தலாட்டக்காரர்கள்… காலம் காலமாக விரித்துப் போட்டிருக்கிற கட்டுக் கட்டான பொய்ப் பந்தல்களின் மேல் தலையே இல்லாமல் – நீ தத்தி நடக்கலாம் ! படுத்து உறங்கலாம் ! குந்தியிருந்து பஞ்சாயத்து நடத்தலாம் ![/size] [size=4]செத்தபிணங்கள் முரசமொலிக்க எலும்புக்கூடுகள் ஊர்வலம் போகுமாம். சிந்திய குருதியுள் நாடுகள் அமிழ்ந்து நமக்கென ஒருபெரு உலகம் விரியுமாம். கதையளந்து, வெறும் வாய்ப்பந்தல் போடலாம்! உரலில் போட்ட தானியம் போல உன் இனத்தை – நீயேகுத்தி அரிக்கலாம் ! அழுது புரண்டெழும் வாழ்விற்கு அர்த்தமிருப்பதாய் புரட்டுக் கூறித் தீபாவளி ,பொங்கல், புதுவருசம் எனச் சலிப்புகளை உற்சாகங்களாக்கி வியாபாரமாய் விற்றுத் தள்ளலாம் ![/size] [size=4]பிரபஞ்சத்திற்கான புதிய சங்கீதங்களைச் சுடுகாடாக்கி விட்டு அடுத்தவன் பிரக்ஞையை உன் பிரக்ஞை என்று வாதிடும் உனக்கு – வட்டமாய் திரண்ட ஓர் தலையிருந்தென்ன ??? இல்லாமலிருந்தென்ன ??[/size] [size=4] http://inioru.com/?p=30881[/size]
-
பெயர் மாற்றங்கள்.
சகாறா என்றால் வறண்டுபோயிருப்பதுதான் நினைவுக்கு வருகின்றது. எனவே பெயர் மாற்றவேண்டும் என்று அடம் பிடித்தால் செழிப்பான பெயராகத் தெரிவு செய்யுங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புதிய பதிவுகளைக் காண்பிக்கவும் என்று அழுத்தினால் திண்ணை ஒளிந்துகொள்கின்றது. சுவாரஸ்யமான சம்பாஷனைகளை பார்க்கமுடியாமல் இருக்கு!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புதிய மட்டுக்களுக்கு வாழ்த்துக்கள். ரதியின் கேள்வியிலும் (எப்பவும் போல) நியாயம் இருக்குத்தான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.