Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. வாழ்வை உறிஞ்சி நீளும் கோடை சித்தாந்தன் கடைசியில் கடவுள் சாத்தானுடன் கைகுலுக்கிக் கொண்டார். அங்கவஸ்திரத்தில் படிந்திருந்த புழுதியை இலாவகமாக உதறிவிட்டார். கைகளில் படிந்திருந்த குருதிக் கறையை அவரால் கழுவ முடியவில்லை. தன்னைத் துரத்தும் ஓலங்களிலிருந்தும் அவரால் மீளமுடியவில்லை. பிணங்களின் மீதமர்ந்து விழிகளைப் பிடுங்கும் காகங்களின் மீது சாபமாய் இரண்டொரு வார்த்தைகளை வீசினார் அவையும் உதடுகளைக் கூடத் தாண்டவில்லை. சலிக்கும் வாழ்வை எழுதியெழுதி வெறுப்புற்றார். சாபங்களின் புற்றில் பாம்புகளுடன் சல்லாபித்து காலத்தைக் கழிப்பதே விதியென்றான பின் தகிக்கும் கோடை வாழ்வை உறிஞ்சி நீள்வதாய் புலம்பினார். நிலம் பிளந்து வேர்கள் இறுகி கிளை விரித்த மரத்தில் காய்களோ கனிகளோ இருக்கவில்லை பறவைகள் கூட வந்தமரவில்லை. http://tarunam.blogspot.co.uk/2013/09/blog-post.html
  2. செய்தவனே சீமான் -சோலைக்கிளி- நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுவர் பண்டங்கள் பலவற்றை நமக்குள்ளே வைத்து சுற்றி எழுப்பப்பட்ட தோல் வேலி இந்த வேலிக்குத்தான் நீ ஆடைகள் அணிவதும் ஆபரணங்கள் அது இது என்று சூடுவதும் காலையில் இருந்தே பொங்கித் திரிகின்றாய் பால் பானைபோல எங்கு போக எங்கு போனாலும் இந்த உருண்டைக்குள்தானே கிலுங்கப்போகிறாய் அறுத்துச் சமைத்து சட்டிக்குள் கிடக்கின்ற மிளகாயில் ஊறிய மீன் துண்டின் தரத்தில் காலுக்கு செருப்பையும் மாட்டு கட்டிய வேலியின் அடியில் பச்சைக்கு சிறு கொட்டை தூவியதாய் முளைத்து கண்ணுக்குத் தெரியும் அவை அழகு செய்யும் விழிகளுக்கு இமைகள் கை கால் விரல்களுக்கு நகங்களென நுட்பத்தின்மேல் நுட்பம் வேலி கட்டியவன் வீரன்தான் மூக்கின் துவாரத்தினுள்ளும் உரோமங்கள் தூசு தடுப்பானாய் செய்தவனே சீமான் சதைவைத்து எலும்புவைத்து நாம் இயங்க நூறு கருவிகளைப் பூட்டி நமக்கு மேலாலே தோல் தகரம் அடித்திருக்கும் தோட்டக்காரனின் இந்த வேலியிலே நீ செய்திருக்கும் சோடனைகள் நம் வாசல் மதிலில் கொடி படர்ந்து பூத்திருக்கும் எண்ணத்தைத் தருவதனால் எனக்கு என் தென்னம் வண்டே நீ அறுத்த குருத்தைப்போல் சாய்ந்து கிடக்கின்றேன் ஓரிரண்டு குரும்பட்டி கொட்டி அழியப்போகின்ற வேலி உயிரோடு ஒரு முள்ளு ஏறிவிட்டால் வீங்கும் சீழ் வடியும் நாறும் பூசி மினுக்கி இதற்கு வெள்ளைவைக்கத் தொடங்கினால்தான் ஊத்தையாவோம் http://malaigal.com/?p=2638
  3. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் கோமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். சூரிய சந்திரருக்கு தனது லீக்கில் என்னைச் சேர்க்க ஆசையாக்கும். வயதும் பக்குவமும் வரும்போது நானாகவே வந்து சேர்கின்றேன்
  5. அறிமுகம் கு. அழகர்சாமி பிரயாணத்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அவளோடு நான் பேசாமலேயே போய் விடக் கூடுமோ? ஒரு இனம் புரியாத் தயக்கத்தின் தீவிரம் இரத்தத்தில் தீப்பற்றியிருக்கும். மரக்கிளைகளில் பறவைகள் மாறி மாறி அமர்வது போல மனத்தில் சொற்கள் மாறி மாறி வந்தும் என்ன பேச அவளோடு என்று தோன்றும்? அவள் பேசினாலென்ன? தர்க்கிக்கும் மனம். அறிமுகத்துக்கான தருணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். தலையணையும் தலையணைப் பக்கம் கரடி பொம்மையுமாய் கறுப்பினப் பெண் இப்போது கண்மூடிக் கொண்டிருப்பாள். இனிப் பேச அவசியமில்லை என்பது எனக்கு நான் நெருக்கமாய் இருக்கச் செய்யும். சொற்கள் வீசாமல் மனக்கேணி கண்ணாடியாய்த் தெளியும். பக்கம் திரும்பிப் பார்க்க இருக்கை காலியாயிருக்கும். ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் செல்லும் அவளை நோக்கி இயல்பாய்க் கையசைப்பேன்.. அவளும் கையசைப்பாள். கரடி பொம்மையும் கையசைக்கும். http://solvanam.com/?p=27699
  6. அம்மாக்கள் இறவாத வானமெங்கே.. வித்யாசாகர் வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள் அழுகையில் அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்; இரவில் நனைந்த என் தலையணை எனதம்மாவின் நினைவைத் தான் நிறையச் சுமந்திருக்கிறது; நிலாச்சோறு நாட்களின் இனிமையைப் போலவே அம்மா இல்லாத நொடிகளும் கொடுமையானது; வெறும் அழைக்கவும் அழைக்கையில் இருக்கேன்பா என்று சொல்லவும் மட்டுமேனும் அம்மா வேண்டும்; அம்மாவை அழைத்த நாளும் அவள் என்னோடு பேசியிருக்கும் பொழுதுமே என் உயிருள்ள பொழுதாகும்.. அவளில்லாத பொழுதை எண்ணும் நொடியில் மட்டுமே எனக்கு வாழ்க்கை அப்படி வலிக்கிறது; அம்மா இல்லாத பிள்ளைகள் பாவம் முள்ளில் நடப்பவர்கள் அவர்கள்; மறுசட்டை எடுக்கவும் ஒருவேளைப் பட்டினிக்கு வருந்தவும் அம்மாப் போல் உலகில் யார் வருவா ? முகத்தில் சிரிப்புடுத்தி மஞ்சளாய் சிரிக்கும் நிலவு வராதஇருளில் வரும் பகல் வெண்மையற்றது; அம்மாவிற்காக நான் தினம் தினம் நிறைய அழுகிறேன் நிறைய சேமிக்கிறேன் நாட்களை; ஆனாலும் சுகர் என்றும் பிரசர் என்றும் சொல்லிக்கேட்கையில் அம்மாயென்றும் ஒரு மனசு பதறுவதை கடவுள் புரிவாரா தெரியாது; புரிவாரெனில் மட்டும் விடியட்டும் எனக்கான காலை.. http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=6216
  7. மனிதனும் பறவையும் ராஜமார்த்தாண்டன் சாலையோரம் கிடக்கிறது அந்தக் காக்கை அனாதைப் பிணமாக. சற்று முன்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் அதன் மரணம். விபத்தா? எதிரிகளின் தாக்குதலா? இயற்கை மரணமா? எதுவென்று தெரியவில்லை. மரக்கிளைகளில் மதில்சுவர்களில் கரைந்திரங்கல் தெரிவித்து கலைந்து போயிற்று உறவுக்கூட்டம் அனாதையாகக் கிடக்கிறது அது. சற்று முன்னதாக ஏதேனும் வீட்டு வாசலில் அல்லது கொல்லை மரக்கிளையில் உறவின் வருகையறிவித்து அதற்கான உணவை யாசித்திருக்கலாம். செத்துக்கிடந்த எலியை இனத்துடன் சேர்ந்து கொத்திக் குதறியிருக்கலாம். மைனாக் குருவியை விரட்டிச் சென்றிருக்கலாம். கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம். தன் ஜோடியுடன் முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம். கூடுகட்ட நினைத்திருக்கலாம். இப்போது அனாதையாய் இந்தச் சாலையோரம். மனிதன் இறந்துகிடந்தால் காவலர் தூக்கிச்செல்வர். அற்பப் பறவையிது. கவனிப்பாரில்லை. சற்று நேரத்தில் நாயோ பூனையோ கவ்விச் செல்லலாம். குப்பையோடு குப்பையாய் மாநகராட்சி வாகனத்தில் இறுதிப்பயணம் செய்யலாம். அற்பப் பறவையன்றோ அது http://azhiyasudargal.blogspot.co.uk/2013/06/blog-post_23.html
  8. முன்னேர் வழிசெல்லும் பின்னேர் சுழியன் அவர்கள் தோழிகளாக இருக்கும் போது, எதிர்பார்ப்புகள் ஏதுமில்லா பரிசுத்த அன்பை பொழிபவனைப் போலவே இருந்தான். அவர்கள் காதலிகளாக மாறும் போது, அன்பின் ஆழ அகலத்தின் பரிமாணங்களை நீக்கமற விளக்குபவனைப் போலவே இருந்தான். அவர்கள் மனைவிகளாக எதிபார்த்துக் காத்திருக்கையில், புறமுதுகைக் காட்டிக் கொண்டு பக்கத்து வீடுகளில் பேராண்மையை நிரூபித்துக் கொண்டிருந்தான். இதெற்கெல்லாம் முன்னமும் முன்னொரு காலத்தில், அவன் தான் தேவதைகளாக இருந்தவர்களை சிறைப்பிடித்து தான் பாதி தின்ற கனியை தின்னக் கொடுத்து பெண்களாக மாற்றிக் கொண்டிருந்தான். http://suzhiyam.blogspot.co.uk/2010/09/blog-post.html
  9. ஒரு செடியின் கதை அமீதாம்மாள் பொத்திக் கிடந்த பூவித்து புறப்பட்டது-மண் வழிவிட்டது நாளும் வளர்ச்சி நாலைந்து அங்குலம் ஆறேழு தளிர்கள் அன்றாடம் பிரசவம் தேதி கிழித்தது இயற்கை புதுச் சேதி சொன்னது செடி முகம் கழுவியது பனித்துளி தலை சீவியது காற்று மொட்டுக்கள் அவிழ்ந்து பூச்சூட்டியது பட்டாம்பூச்சிக் கெல்லாம் பந்தியும் வைத்தது முதுகுத் தண்டில் பச்சைப் பூச்சிகள் கிச்சுச் செய்தது தேன் சிட்டொன்று முத்தமிட்டது கூசுகிறதாம் சிரித்தது செடி உதிர்ந்தன சருகுக் கழிவுகள் திமிறிய அழகில் திமிரும் வளர்ந்தது மமதைச் செருக்கில் செடி மண்ணிடம் சொன்னது ‘கடவுளும் காதலும் எனக்காக என் கழிவுகள் மட்டுமே உனக்காக என் கழிவைத் தின்று கழுவிக் கொள் உன் வயிறை’ நக்கலடித்தது செடி தத்துப் பூச்சிகளிடம் தட்டான்களிடம் சொல்லிச் சொல்லிச் சிரித்தது அறியாமை பொறுக்கலாம் ஆணவம் பொறுப்பதோ? கூடவே கூடாது வேரை விட்டு விலகிக் கொண்டது மண் முதுகுத் தண்டு முறிந்து மண்ணில் சாய்ந்தது செடி செடியிடம் சொன்னது மண் ‘உனக்கு உன்னையும் தெரியவில்லை என்னையும் தெரியவில்லை நீ வாழ்வதிலும் பொருளில்லை செடியைச் செரித்து மீண்டும் அசைவற்றுக் கிடந்தது மண் http://puthu.thinnai.com/?p=20574
  10. மஞ்சள் தடவிய மரணப் பத்திரிக்கை. கமலேஷ் உன் மௌனம் பாய்ந்து சிதைந்து போன என் இதயத்தின் துணுக்குகளை சேகரித்துக் கொண்டே கேட்கிறேன். அதற்க்கு முன் உன் நாசியினில் ஓர் கைக்குட்டையை கட்டிக் கொள். ஏனெனில் உன்னால் காயம் பட்ட என் சுவாசப் பைகளிலிருந்து இரத்தத்தின் வாடை வீசக் கூடும். * நரமாமிசம் தின்னும் இந்த செவிட்டு உலகின் பிடியிலிருந்து என்னை ரட்சிக்கும் பொருட்டு நம் நிறை மாத சிசுவை இரையிடுகிறேன் என்கிறாய். நீரிலிருந்து ஈரம் கழித்த பின் பாவி ! மிச்சமென்னடி இன்னும் மிச்சம். ஒற்றை சிறகை இழந்த பறவை முறிந்த கிளையில் அமர்ந்து உறைந்த முகாரியை எத்தனை காலம் இசைக்குமென எண்ணித் துணிந்தாயா இக் கர்மம். இதோ - துடிக்க துடிக்க என் காதலை புசிக்கிறது பார் உன் பெரு மௌனம். * சலனமற்று நீ நீட்டும் இந்த உன் மண ஓலை உறையிடப்பட்ட எனது கல்லறை நடுங்கும் விரலோடு மெல்ல மயானத்தின் கதவுகள் திறக்கிறேன். அங்கே அச்சிடப்பட்டிருக்கிறது என் மரணத்தின் தேதி. * இக் கவிதையின் இறுதி ஊர்வலத்தில் எதிரொலிக்கும் பறையோசையில் உனக்காக நான் விட்டு போவது ஒற்றை குறிப்பை மட்டும்தான் தோழி. என் தீர்ப்பின் முற்றுப் புள்ளியில் நீ ஒடித்த பேனா முனையென உன் இமையிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் எனக்காக முறியுமெனில் உன்னை மன்னித்ததின் அடையாளமாய் எரியும் என் சிதையிலிருந்து பிறண்டு விழும் ஓர் விறகு. http://kkamalesh.blogspot.co.uk/2010/06/blog-post_23.html
  11. ஜெகஜோதியாக இருப்பதால் எங்களுக்கு எல்லாப் பக்கத்தாலும் வரும்!
  12. இல்லை. 2009க்குப் பின்னர் சில நேர்த்திக்கடன்களை கழிக்கவேண்டும் என்பதற்காக சடாமுடி தரித்திருத்திருக்கின்றேன். சடாமுடி வந்ததும் ஒளிவட்டமும் வந்துவிட்டது
  13. மாற்றவேண்டும் என்று நினைத்திருந்தேன் எனினும் நேரம் கிடைக்கவில்லை. தாய்க்குலத்தின் கோரிக்கையை தட்டக் கூடாது என்பதற்காக மாற்றியுள்ளேன்
  14. உடலை விட்டு எப்படி வெளியேறுவது? குட்டி ரேவதி பகல் இரவு என்றில்லாது எலும்பின் மஜ்ஜையும் நிணம் பாய்ந்த வெளிகளும் கூட ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன கனவுகளின் பெருவெளிகளாய் சிதறிக்கிடந்த அங்கங்களை வாரிச்சுருட்டி அள்ளி எடுக்கவே நூறாண்டுகள் ஆயிற்று இவ்விடம் இக்கணம் என்னிடம் மிச்சமிருப்பது இவ்வுடல் மட்டுமே நீ கூட உடனில்லை புழுக்கள் நெளியும் சிந்தனை வெளியை விசிறி விசிறி தின்றுக் கொழுத்தப் புழுக்களிடமிருந்து எலும்புகளின் திட மிச்சங்களைப் பொறுக்கி எடுப்பதற்கே வாழ்வின் வறண்ட பாலைகளையும் பாறைகளையும் கடக்க வேண்டியிருந்தது மொழியைத் துலக்கித் தான் கண்கள் என்றும் செய்து கொள்ளமுடிந்தது கங்குகள் விரித்த பாதைகள் எங்கும் வரலாற்றின் பொதிகளைச் சுமந்து வந்திருக்கிறேன் இன்னும் இன்றும் கூட யாக்கை என்பது வாக்கிற்கும் உன் தீண்டலுக்கும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருவறைச் சிற்பம் நீ உருவி எடுத்த பின்னும் உன் குறியை மறந்து சிந்தித்துக் கொண்டிருக்கும் கலையைச் செய்து கொண்டிருக்கும் உடல் உன்னுடன் வெளிகளுக்கிடையே வேகமாய்ப் பயணித்தும் கொண்டிருக்கும் நீ நினைப்பது போல உடல் சொற்பமுமன்று நான் நினைத்திருப்பது போல அது அற்புதமுமன்று அற்பங்களால் கட்டியெழுப்பப்பட்ட உடலை இன்னது இதுவென சுட்டிக்காட்ட நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன் என் காலடியில் உடலை எறிந்து விட்டு எட்டப் போ அல்ல அதற்கு உன் யாக்கையை அறிமுகப்படுத்து உன்னால் இப்பொழுது இயலாது என நான் அறிவேன் இன்னும் உனக்கும் ஒரு நூறு ஆண்டுகளேனும் ஆகும் ஆகட்டும் அதற்குள் என் உடலுக்கு சில நூறு வானங்களையேனும் விரிக்க வேண்டும் http://kuttyrevathy.blogspot.co.uk/2013/04/blog-post_22.html
  15. நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் உரித்தாகுக.
  16. மெசோப்பாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். யானைத் தந்தத்தில் செய்த ஊன்றுதடி பரிசாகக் கிடைத்ததா?
  17. நாய்க்குட்டியை வசியம் செய்தல். சுழியன் ஒரு நாய்க்குட்டியை வசியப்படுத்துவதென்பது ஒரு கலை. முதலில் தாயோடு இருக்கும் குட்டிகளில் செழிப்பானதொரு செவளையையோ வெள்ளையையோ தெரியாமல் கவர வேண்டும். கருப்புகள் வளர்ந்தபின் வசீகரிப்பதில்லை, எனவே அவை வேண்டா ! உங்கள் விட்டுக்கு வந்தபின் கழுத்தில் சிறு மணி கோர்த்து விலைஉயர்ந்த ஒரு சங்கிலியில் கட்ட வேண்டும். பின்பு தனியாய் அது தூங்கிக் கொண்டிருக்கும் போது சீட்டி அடித்தோ சத்தம் செய்தோ அதன் கவனத்தை உங்கள் பக்கம் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் உங்களுக்கு பிடித்த ஒரு செல்லப் பெயர் கொண்டு அதைக் கொஞ்ச வேண்டும் முதுகை தட்டிக் கொடுத்தல், சிற்சிறு முத்தங்கள் சீக்கிரம் பலன் தரும் இப்போது அது உங்களைப் பர்த்தவுடன் வாலாட்டும். இந்த பருவம் மிக முக்கியம் கொஞ்சம் சிரமம் பாராமல் ரொட்டித் துண்டும், பாலும் கொடுத்து பரிவுடன் தடவிக் கொடுக்க வேண்டும் இனி அது உங்களை பார்த்தவுடன் செல்ல சத்தம் எழுப்பி காலைப் பிடித்துக் கொண்டு விளையாட ஆரம்பிக்கும் - நீங்கள் 'ஷேக் ஹேண்ட்" கொடுக்க, தாவி பந்தை பிடிக்க என புதுப் புது விளையாட்டை சொல்லிக் கொடுக்க வேண்டும் அந்த குட்டி இனி உங்கள் வசம் உங்கள் பார்வைக்கு, விரலசைவிற்கு அடிமையாய் வாலாட்டி எப்போதும் உங்களையே சுற்றத் துவங்கி விடும். இப்போது, நீங்கள் அதைக் கண்டு கொள்ளாமல் உங்கள் வேலையை செய்ய வேண்டும் உங்களை தொந்தரவு செய்து எரிச்சல் படுத்துவது போல குழையக் குழைய வலம் வரும் போது எட்டி உதைத்து தள்ள வேண்டும் நீங்கள் எத்தனை முறை தள்ளினாலும் வாலாட்டிக் குழைவதை ஒரு போதும் நிறுத்தாது அந்த அடிமை. ஏனென்றால், உங்கள் வசியம் அப்படி. இதே முறையை நீங்கள், பெண்களை வசியம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஜாக்கிரதை ! ஒரு பூனைக் குட்டியை வசியம் செய்ய இந்த முறையை பயன்படுத்தாதீர்கள். http://suzhiyam.blogspot.co.uk/2010/03/blog-post_22.html
  18. காலம் எஸ்.எம்.ஏ.ராம் பொற் காலங்களை இழந்தாயிற்று; இழந்தபின்னரே அவை பொற்காலங்கள் என்று புலனாயின. புதிய பொற்காலங்களுக்காகக் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. காலம் கருணையற்றது. பூமியின் அச்சு முறிந்து அது நிற்கும் என்று தோன்றவில்லை. பிரபஞ்சத்தின் பெருஞ் சுழற்சியில் தனி மனிதனின், ஏன், ஒரு சமூகத்தின்- துக்கங்களுக்குக் கூட மரியாதை இல்லை. http://puthu.thinnai.com/?p=19173
  19. இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் ரதி! இன்றுபோல் என்றும் இனிமையாகவும் இளமையாகவும் இருக்க வாழ்த்துக்கள்!!!
  20. யாழ்வாலி நல்ல பெயர். கண்ட கண்ட காவாலி, விடுகாலியளோட சேரக்கூடாது என்று அம்மா அடிக்கடி சொல்லுவார். அதனால்தான் காவாலியோட பேசும்போதெல்லாம் கள்ளம் செய்கின்ற மாதிரி இருக்கும் . இனி அந்தப் பிரச்சினை இல்லை.
  21. என் சாயல் சித்ரா கால் பரப்பி அவிந்து அவிந்து வெளியே தின்னப்பட்டு கொண்டிருக்கிறது காமம். கால் மேல் கால் போட்டு காமத்தை மேசைக்கு வரவழைக்க தெரிந்து வைத்திருக்கிறது உன் காதல். மூச்சு முட்ட கழுத்தை நெரிக்கிறது காதலோடு உபரியாக வந்த உன் நிபந்தனைகளற்ற அன்பு படுக்கையறை சிணுங்கல்களை பக்கத்து அறையில் தன்முறைக்கு காத்திருப்பவளுக்கு கேட்காமலிருக்க பார்த்து கொள்கிறது உன் கம்பீரம் மெல்லியதிலும் மெல்லிய அரிய ஆடையென்று நடுதெருவில் நிர்வாணமாகவே நடத்தபடுவது அறியாத ராஜாவின் பூரிப்பில் தெரிகிறது என் சாயல். http://www.vallinam.com.my/issue51/poem3.html
  22. பலூன் மாதிரி ஆக்களைக் கண்டு பயந்து ஓடாமல் இருந்தால் பிடித்து விழுங்கிவிடுவார்கள் அல்லவா!
  23. இரத்தம் குடிக்கும் காட்டேரிகளுக்குத்தான் பயப்படவேண்டும். நீங்கள் அப்படி இருப்பதாக நீங்களே சொல்லக்கூடாது. போன சம்மருக்கு ஒரு ஆன்ரி எனக்கு பலூன் விற்கத் துரத்தினார். அது நீங்கள்தான் என்று இப்பதான் விளங்குகின்றது
  24. உங்கள் எழுத்துக்கள் வெளிப்படுத்தப்படும் சிந்தனைகள் ஆன்ரிகளை ஞாபகப்படுத்துகின்றன என்பதால்தான் ஆன்ரி என்று குறிப்பிட்டேன்! ஆனால் உங்களை எங்கும் கண்டதாகத் தெரியவில்லை!
  25. வலைப்பதிவுகளை வைத்துக்கொண்டு பின்னூட்டத்திற்காக ஏங்குபவர்களை நினைத்துப் பார்த்தேன்! எப்படித்தான் எழுதித் தள்ளுகின்றார்களோ!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.