Everything posted by கிருபன்
-
காசா போர் நிறுத்தம் – ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் – ஹமாஸ் இணங்குமா?
காசா போர் நிறுத்தம் – ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் – ஹமாஸ் இணங்குமா? adminSeptember 30, 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் திட்டம் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிகிறது. ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக கூறப்படும் பலரது எச்சங்களையும் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்படுமானால், இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது. போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஹமாஸூக்கு வெள்ளை மாளிகையின் 20-அம்ச திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீன அரசுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Global Tamil Newsகாசா போர் நிறுத்தம் - ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் -...அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.…
-
கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!
கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்! adminSeptember 30, 2025 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோப்பாய் நன்னீர் திட்டம் , விவசாய நிலங்களுக்கு அருகாமையில் , உள்ள வெற்றுக்காணிக்குக்குள் வைத்தியசாலைக்கு சொந்தமான வாகனத்தில் , வைத்தியசாலையின் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். அதனை அவதானித்த ஊரவர்கள் , கழிவுகளை கொட்டுவது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் போது தாம் நீதிமன்ற அனுமதி பெற்றே நாம் இவ்விடத்தில் கழிவுகளை கொட்டுவதாக கூறியுள்ளனர். அதனை அடுத்து அப்பகுதி மக்கள் அது தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபைக்கும் அறிவித்துள்ளனர். அதற்கு கழிவுகளை கொட்டியவர்கள் அதற்கு தீ வைத்து விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்து , சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். https://globaltamilnews.net/2025/220960/
-
ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி
ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி jeyamohanSeptember 28, 2025 ரமேச்ன் 2023 விஷ்ணுபுரம் விழாவில் ரமேஷ் பிரேதன் சென்ற 25 செப்டெம்பர் அன்று இரவு ஒரு கவிதையை எழுதி தன் முகநூலில் வலையேற்றியிருந்தார். அது ஒரு காதல் கவிதை. அதன்பின் சில மணிநேரங்களில் மயக்கமுற்றிருக்கக் கூடும்.கடுமையான இதய அடைப்பு மற்றும் ரத்த அழுத்த உயர்வு. உடனடியாக 26 காலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். 27 செப்டெம்பர் 2025 மாலை 520க்கு உயிர்பிரிந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் நம் நண்பர்கள் உடனிருந்தனர். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் செய்திகளை அளித்தனர். முதல் நாளிலேயே ரமேஷ் மீள்வது அரிதினும் அரிது என்று கூறிவிட்டனர். மூளையில் முழுமையான ரத்தக்கசிவு. உள்ளுறுப்புகள் செயலிழந்துகொண்டிருந்தன. இதயம் நின்று நின்று இயங்கியது. கருவிகளின் உதவியுடன் உயிர் நீடித்தது. கருவிகளை எப்போது நீக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பது மட்டுமே 26, 27 ஆம் தேதிகளில் எஞ்சிய கேள்வியாக இருந்தது. சென்ற 2019 ல் ரமேஷ் என்னிடம் “எனக்கு விஷ்ணுபுரம் அவார்டு குடுய்யா” என்றார். “இப்ப என்ன அப்டி அவசரம்? வாலிப வயசுதானே?” என்றேன். “பணம் தேவை இருக்கு” என்றார். “பணம்தானே? அத அனுப்பிடறோம்…” என்றேன். அந்தப் பணத்தை அனுப்பினோம். அதன்பின் மீண்டும் 2021 ல் அழைத்தார். “இப்பயாச்சும் அவார்டு குடுய்யா. நான்லாம் கோவிட்ட தாண்டமாட்டேன்” என்றார். “உங்களுக்கெல்லாம் கல் மாதிரி ஆயுசு… அவார்டு முறையாத்தான் வரும்… சின்னப்பசங்களுக்கு குடுக்கிற அவார்டு இல்ல இது” என்றேன். அதன்பின் அவ்வப்போது தன் ஆயுள் முடிவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் கோவிட் அதன்பின் வந்த ஒரு நெருக்கடிக்காலம் ஆகியவற்றை கடந்துவிட்டார். அவருக்கு விருதை வரிசையை முந்திக்கொண்டு அறிவிப்பதே அவருடைய உடல்நிலை, ஆயுள் பற்றி நானும் ஐயப்படுகிறேன் என்று ஆகிவிடுமோ என்னும் குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆகவே அவருடைய நிரந்தர ஐயத்தை வேடிக்கையாகவே கடந்துகொண்டிருந்தேன். இந்த முறை அவருக்கு இயல்பாகவே வரிசையில் இடம் அமைந்தது. அதை ஆகஸ்டில் அவரிடம் சொன்னேன். “இப்பவே குடுத்திரு… டிசம்பரில் நான் இருக்கமாட்டேன்” என்றார். “நீங்க இருப்பீங்க….” என்றேன். மீண்டும் ஜூனில் அழைத்து “செப்டெம்பரில் தூரன் விழாவோட சேத்தே நடத்திரு… இருப்பேனான்னு தெரியலை” என்றார். ஆனால் உண்மையில் உடல்நிலை சற்று மேம்படத் தொடங்கியிருந்தது. ஃபோனில் அழைத்தால் உடல்நிலை மேம்படுவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கும் நம்பிக்கை வலுப்பெற்றது, நலம்பெறுவது இயல்வதல்ல. ஆனால் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வார் என எண்ணினேன். விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டபின் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். உண்மையில் அவர் உடல் மிகவும் நலிந்து எல்லையை அடைந்துகொண்டிருந்தது. நான் கண்ட அந்த ஊக்கம் என்பது விருது அளித்த மகிழ்ச்சியின் விளைவாக அவரே உருவாக்கிக்கொண்டதுதான். சென்ற பதினைந்தாண்டுகளில் அவரை அத்தனை உற்சாகமாக நான் பார்த்ததே இல்லை. வாழ்த்துவதற்காக அவர் எண், மின்னஞ்சல் இரண்டையும் கொடுத்திருந்தேன். தினம் இருபது முப்பதுபேர் கூப்பிட்டு வாழ்த்தினர்.தினம் மின்னஞ்சல்கள். “நோய் ஆஸ்பத்திரின்னு இல்லாம ஒரு ஃபோன் வர்ரதே இப்பதான்… ” என்று என்னிடம் சொன்னார். “இத்தனை பேர் படிச்சிருக்கானுக. இவங்கள்லாம் இதுவரை எங்க இருந்தாங்க?” அழைத்த ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருந்தார். குறிப்பாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்கள், இளம்பெண்கள் அழைத்தால் மிகுந்த குதூகலம் அடைந்தார்.அடுத்த தலைமுறை வாசிக்க வருகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் அழைத்தபோது ‘உங்க மனைவி கிருபா நேத்து கூப்பிட்டாங்க’ என்றாராம். இருவரையும் அவருக்கு முன்னர் தெரியாது. “ஒருத்தன் சிறுபத்திரிகைச் சூழலுக்கு வெளியே இருந்து கூப்பிட்டாலே சந்தோஷமா இருக்கு. புதிய ஆளுங்க வர்ராங்க” என்று நண்பரிடம் சொன்னார். நான் அவரிடம் செப்டெம்பர் 22 ஆம் தேதி, திங்களன்று பேசினேன். “உடம்பு நல்லா இருக்கு. கொஞ்சமா சுவரைப்பிடிச்சு நானே டாய்லெட் போய்ட்டேன்” என்று சொன்னார். நீண்டகாலமாக அவரால் படுக்கைவிட்டு அசையமுடியாத நிலை இருந்தது. ஆகவே அது மிகப்பெரிய முன்னேற்றம். நான் உற்சாகம் அடைந்து நிறைய பேசினேன். பெரும்பாலும் கேலி கிண்டல். தமிழிலுள்ள ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களையும் கேலி செய்துவிட்டோம். குறிப்பாக யுவன் சந்திரசேகரை. ரமேஷ் எனக்கு குற்றாலத்தில் கலாப்ரியா நிகழ்த்திய பதிவுகள் அரங்கில் அறிமுகமானார். வழக்கம்போல மிகக்கடுமையான எதிர்க்கருத்துக்களுடன் மோதிக்கொண்டோம். ஆனால் விஷ்ணுபுரம் 1997ல் வெளியானபோது ரமேஷ் அதை இந்தியாவில் எழுதப்பட்ட முதன்மையான இலக்கியப்படைப்பு என மதிப்பிட்டார்- அதை எழுதியுமிருக்கிறார். நேரில் சந்தித்தபோது எங்கள் உறவு சட்டென்று அணுக்கமாக ஆகியது. என்னைத் தழுவிக்கொண்டு “நாங்க கொள்கையா பேசினதெல்லாமே உங்க கிட்டேருந்து எழுத்தா வந்திருச்சி” என்றார். அது எனக்கும் மகிழ்ச்சி அளித்தது. விஷ்ணுபுரம் போன்ற ஒரு படைப்பை புரிந்துகொள்ள அன்றுமின்றும் சாமானிய வாசகர்களால் இயல்வதில்லை. ஒரு படைப்பில் கருத்துக்கள், உணர்ச்சிகள், தரிசனங்களின் முரணியக்கமாக உருவாகி வருவது என்ன என்று அவர்களுக்கு பிடிகிடைப்பதில்லை. அதன் ஏதேனும் சிலபகுதிகள், சில வரிகளைக்கொண்டு அதை வகுத்துவிடுவதையே இங்கே உள்ள அரசியல்சார்ந்த வாசிப்பு கற்றுத்தருகிறது. விஷ்ணுபுரம் பற்றி அன்று ஒரு பெரும் கூட்டம் அது இந்துத்துவ நாவல் என்று பிரச்சாரம் செய்து வந்தது. அதை ரமேஷ் ‘பௌத்தம் கடந்த பௌத்த நாவல்’ என்று வரையறை செய்தார். அறுதியாக அந்த பேருருவன் தொல்தந்தை மட்டுமே என்றும், அவனுடைய புரண்டுபடுத்தலில் அந்நாவல் முழுமையடைவதும் அவரை மிகவும் கவர்ந்திருந்தன. ‘எல்லாமே போய்ச்சேரும் பழங்குடிமனம்’ என்ற ஒன்றை வெளிப்படுத்திய நாவல் என்றார். அதன்பின் எங்களுக்குள் நட்பு உருவாகியது. ரமேஷ், பிரேம், மாலதி எங்கள் பத்மநாபபுரம் இல்லத்துக்கும், பின்னர் பார்வதிபுரம் இல்லத்திற்கும் வந்து தங்கினர்.நான் ஊட்டியிலும் பிற ஊர்களிலும் ஒருங்கிணைத்த கவிதை உரையாடல் அரங்குகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டனர். ரமேஷின் வாழ்க்கையில் பின்னரும் நான் தொடர்புகொண்டிருந்தேன். நடுவே ஓர் இடைவெளி. அதற்கான காரணங்கள் நானோ ரமேஷோ அல்ல. அதை பிறிதொரு தருணத்தில் சொல்லவேண்டும். 2011 ல் வெள்ளையானை நாவல் நண்பர் அலெக்ஸின் எழுத்து பிரசுர வெளியீடாக வந்தபோது அவர் புதுச்சேரியில் ஒரு மதிப்புரைக்கூட்டம் ஏற்பாடு செய்தார். அந்நிகழ்ச்சி முடிவில் மீண்டும் ரமேஷைச் சந்தித்தேன். மெலிந்து ஒடுங்கி அழுக்கு வேட்டியும் சட்டையுமாக இருந்தார். “நல்லா இருக்கீங்களா?” என்று சம்பிரதாயமாகக் கேட்டேன். “நல்லா இல்லை” என்றார். நிகழ்ந்ததை அவர் சொன்னார். பிரேம், மாலதி இருவரும் அவரை கைவிட்டுவிட்டதாகவும், ஓராண்டுக்குமேல் ஒரு தோப்பில் காவலராக பணியாற்றியதாகவும், உடல்நிலை மோசமாக ஆனதனால் அவ்வேலையைச் செய்யமுடியாமல் அப்போது பாரதி நினைவில்லம் வராந்தாவில் வாழ்வதாகவும் சொன்னார். உறவினர்களிடம் செல்ல அவர் விரும்பவில்லை. உறவுகளை முன்னரே அவர் வெட்டிவிட்டிருந்தார். இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர் நண்பர்கள் உணவு வாங்கி அளித்து உதவிவருவதாகவும் பெரும்பாலும் நினைவில்லம் வருபவர்களிடம் கையேந்தி வாழ்வதாகவும் சொன்னார். “பிச்சை எடுக்கிறேன் ஜெயமோகன்” என்றார். நான் உணர்ச்சிவசப்பட்டு அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். “நான் சாப்பிடுற வரை நீங்களும் சாப்பிடுவீங்க. நான் கூரைக்குக் கீழே இருக்கிற வரைக்கும் நீங்க தெருவிலே இருக்க மாட்டீங்க” என்றேன். அன்றே அவரை ஒரு வாடகை அறையில் அலெக்ஸ் உதவியுடன் தங்கவைத்தேன். ஒரு வாரத்தில் மணி ரத்னம் அளித்த நிதி, என் சொந்த நிதி மற்றும் கே.வி.அரங்கசாமி அளித்த நிதியுடன் அவருடைய அக்காவின் வீட்டிலேயே ஒரு பகுதியை நிரந்தரக் குத்தகைக்கு எடுத்தோம். அப்பகுதியை செப்பனிட்டு குளிர்சாதன வசதி செய்து, கட்டில் போன்றவை வாங்கி அவரை குடியமர்த்தினோம். குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி என பிற பொருட்களை வாங்க பல்வேறு நண்பர்கள் உதவினர். அவர் ஓர் இல்லத்திற்குச் சென்றதுமே அமைதியடைந்தார். அதன்பின்னர் தான் கைவிடப்பட்டதைப் பற்றிய அகக்கொந்தளிப்பு உருவாகியது. முகநூலில் வசைகளை எழுதத்தொடங்கினார். நான் புதுச்சேரிக்குச் சென்று அவரிடம் பேசினேன். “நீங்கள் இந்தக்கசப்பிலிருந்து வெளியேறாத வரை உங்களால் எழுத முடியாது. உங்களுடைய அடிப்படைப்பிரச்சினைக்கு திரும்புங்கள்” என்றேன். அவர் அழுது கொந்தளிக்க நான் திரும்பத் திரும்ப “எழுதுங்கள். படைப்பு ஒன்றே மீளும் வழி. அது ஒன்றே உயிர்வாழ்வதன் பொருள்” என்றேன். சீற்றத்துடன் நான் சொன்ன ஒருவரி அவரை புண்படுத்தியது. “நான் நிதியளிப்பது ரமேஷ் என்ற எழுத்தாளனுக்கு. இந்த உடலுக்கு அல்ல” என்றேன். அவர் என்னை வசைபாடினார். “உனக்கு வந்தா தெரியும்…” என்றார் ஆனால் நான் வந்தபின் நீண்ட கடிதம் எழுதினார். “நீ சொல்றதுதான் சரி. உன்னோட கிப்ட் நீ யார்னு உனக்கு சின்னவயசிலேயே தெரியும்கிறதுதான்… எனக்கு இப்ப தெரியுது. நான் எழுத்தாளன், கலைஞன், அது மட்டும்தான். வேற ஒண்ணுமே இல்லை” அதன்பின்னர்தான் அவர் தன் தீவிரமான படைப்புகளை எழுதினார். அவருடைய படைப்புகள் அவர் இணைந்து எழுதியவையாகவும் வெளிவந்துள்ளன. ஆனால் எந்த வாசகரும் அவற்றில் இருப்பது அவருடைய ஆளுமை மட்டுமே என அறியமுடியும். இந்த இரண்டாம் கட்ட ரமேஷ் அவருக்கே உரிய பயணங்களின் வழியாக தமிழ்மெய்யியல் களத்திற்குள் நுழைந்தவர். அதுவே அவருடைய கலைச்சாதனை. ரமேஷிடம் தொடர்ச்சியாக தொடர்பிலும் உரையாடலிலும் இருந்தேன். கடலூர் சீனு, சிவாத்மா என புதுச்சேரி நண்பர்கள் தொடர்பில் இருந்தார்கள். ரமேஷ் இறுதியாக வெளியே வந்தது 2013ல் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோதுதான். அப்போதும் உடல்நிலை மோசமாக இருந்தது. அவர் வர விரும்பியமையால் பயண ஏற்பாடு செய்திருந்தோம். அன்று தன் வாசகர்கள் பலரை சந்தித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார். என்னிடம் விடைபெற்றபோது கண்களில் கண்ணீர் இருந்தது. “போதும், இத்தனைபேர் வாசிக்கிறாங்கன்னு தெரிஞ்சதே போதும்” என்றார். மீண்டும் புதுச்சேரிக்குச் சென்ற சிலநாட்களிலேயே பக்கவாதத் தாக்குதல். அதன்பின் வெளியே சென்றதெல்லாமே மருத்துவத்தின் பொருட்டுதான். ஆகவே இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்தே தீர்வேன் என்று உறுதியாக இருந்தார். ஓர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அழைத்து வருவதாகச் சொன்னோம். மேடைக்கு ஒரு தனிப்பாதை அமைக்கவும் முடிவுசெய்திருந்தோம். ரமேஷின் நோய் என்பது அவருடைய மரபணுவில் உள்ளது. பிறப்பு முதல் மிகமிக உயர்ந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என் இல்லத்திற்கு பிரேம், மாலதியுடன் வரும்போதே அச்சிக்கல் கடுமையாக இருந்தது. அவரால் குனியமுடியாது, மயங்கி விழுந்துவிடுவார். முகத்திலுள்ள சிறு பருக்கள் வெடித்து ரத்தம் கசியும். அவருடைய ரத்த அழுத்த அளவு நம்பவே முடியாத அளவு மிகுதி. சாமானிய ரத்த அழுத்தத்தைவிட இரு மடங்கு. அவர் உடல் அதற்கு பழகியிருந்தமையால்தான் அவர் வாழமுடிந்தது. 2010 ல் எங்கள் கவனிப்புக்கு வந்தபின் தொடர்ச்சியாக மருத்துவக் கவனிப்பிலேயே இருந்தார். பக்கவாதம், உள்ளுறுப்புகள் செயலிழப்பு எல்லாமே ரத்த அழுத்தத்தின் விளைவுதான். ஆனால் வாழ்வின்மீதான பற்று உடலை தாக்குப்பிடிக்கச் செய்தது. பதிமூன்றாண்டுக்காலம் நோயுற்றிருந்தார். படுக்கையில் மலம் கழிப்பவராகவும் இருந்தார். ஆனால் இறுதிக்கணம் வரை கலைஞனாக வாழ்ந்தார். அது மட்டுமே தான் என உணர்ந்தவராக விடுதலை அடைந்தார். வீடுபேறு என்பது வாழ்விலேயே அடைவது என்பதே என் கொள்கை. அவர் அவ்வகையில் நிறைவாழ்க்கை. அஞ்சலி ரமேஷ். நான் ஒரு துளியும் குறைவைக்கவில்லை என ஒரு முறை சொன்னீர்கள். அந்நிறைவே போதுமானது இன்று. https://www.jeyamohan.in/223291/
-
இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது – ஜப்பானில் ஜனாதிபதி
இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது – ஜப்பானில் ஜனாதிபதி September 27, 2025 ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக, ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை தின நிகழ்வு, இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. இந்த கலாசார நிகழ்வைக் காண ஏராளமான ஜப்பானியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கூடியிருந்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் இத் தருணத்தில், இலங்கை அதன் பொருளாதாரப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்றும், தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்ட இலங்கை, தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்புப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி வருவதாகவும், இந்த அபிவிருத்தியின் நன்மைகள் பரவலாகப் பகிரப்படும் என்றும், அந்த சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்வதாகவும் தெரிவித்தார். “எக்ஸ்போ 2025 ஒசாகா” கண்காட்சியில் இலங்கை மற்றும் ஜப்பானின் கண்காட்சி அரங்குகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், எக்ஸ்போ 2025 கண்காட்சி மூலம் இலங்கைக்கு தனது கலாசாரம், புத்தாக்கம் மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான நோக்கைப் பகிர்ந்து கொள்வதற்கான உலகளாவிய தளத்தை உருவாகும் என்று தெரிவித்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில், கடினமான காலங்களில் ஆதரவளித்தும் வெற்றிகரமான காலங்களில் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வலுவான பங்காளியாகவும் ஜப்பான் திகழ்கிறது என்று குறிப்பிட்டார். இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு: நட்புறவு என்பது மனிதகுலத்தின் மிகவும் விலைமதிப்பற்ற பிணைப்புகளில் ஒன்றாகும். இது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் கலாசாரங்களை இணைக்கிறது. எல்லைகளைக் கடக்கின்றது. மனித உறவுகளை வளர்க்கின்றது. மேலும், ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்காக பொதுவான இலக்குகள் மூலம் நாடுகளை ஒன்றிணைக்கிறது. “எக்ஸ்போ 2025” கண்காட்சி இந்த இலட்சியத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். நட்புறவு மற்றும் பொதுவான இலக்குகளை கொண்டாடும் இந்த நேரத்தில், ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ஒசாகாவில் எக்ஸ்போ 2025 கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் உங்களுடன் இணைவதை கௌரவமாகக் கருதுகிறேன். “எக்ஸ்போ 2025” என்பது 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர நட்புறவு, நல்லிணக்கம், கலாசார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து சமூகத்திலும் இருக்கும் மனித விழுமியங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் உலகளாவிய தளமாகும். இலங்கையின் பாரம்பரியத்தின் செழுமையை மாத்திரமன்றி, நிலைபேறான, வலிமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தேசம் என்ற எமது தெளிவான நோக்கையும் இங்கு நாம் உலகிற்கு முன்வைக்கிறோம். எக்ஸ்போ போன்ற சர்வதேச தளங்களில் எமது பலம் மற்றும் திறன்களை வெளிப்படுத்துவதன் மூலம், உலகளாவிய சமூகத்தில் பொறுப்புக் கூறத்தக்க மற்றும் எதிர்கால நோக்கைக் கொண்ட பங்காளராக எமது வகிபாகத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எக்ஸ்போ 2025 இல் இலங்கையின் பங்கேற்பு, நவீன மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான பொருளாதார மாற்றத்திற்கான நமது அர்ப்பணிப்பை உலகின் ஏனைய நாடுகளுக்கு நிரூபிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும். இதன்போது, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா வர்த்தகம், விவசாயம் மற்றும் நமது ஏராளமான கடல் வளங்களின் நிலைபேறான பயன்பாடு உள்ளிட்ட அதிக திறன் கொண்ட துறைகளை வளர்ப்பது தொடர்பான எமது தெளிவான கொள்கையை நன்கு பிரதிபலிக்கிறது. “எக்ஸ்போ 2025” இன் தொனிப்பொருள் “நமக்கான எதிர்கால சமூகத்தை உருவாக்குதல்” என்பதாகும். எதிர்கால சந்ததியினருக்கு, குறிப்பாக நம் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதே இதன் நோக்காகும். உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் இந்த சகாப்தத்தில், இலங்கை நமது பொருளாதார பயணத்தில் ஒரு முக்கியமான தருணத்தில் உள்ளது. தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட நாம், இப்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புகிறோம். இதன்போது, அபிவிருத்தியின் பலன்கள் பரவலாகப் பகிரப்படுவதையும், அந்தச் சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதையும் உறுதிசெய்கிறோம். எக்ஸ்போ 2025 கண்காட்சி ஊடாக இலங்கை தமது கலாசாரம், புத்தாக்கம் மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான நோக்கைப் பகிர்ந்து கொள்வதற்கு உலகளாவிய தளத்தை உருவாக்கும். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு பல நூற்றாண்டுகள் பழமையானது, சமீப காலங்களில் அது முன்பை விட வலுவடைந்துள்ளது. எமது நெருங்கிய நண்பராக, கடினமான காலங்களில் ஜப்பான் எமக்கு ஆதரவளிப்பதுடன், வெற்றியின் போது மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் எங்களுடன் இணைந்திருக்கும் பங்காளியாகவும் உள்ளது. பல இலங்கையர்கள் இப்போது ஜப்பானில் வசிக்கின்றனர். இதன் மூலம், நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம். இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும், எக்ஸ்போ 2025 கண்காட்சியில் உள்ள இலங்கை அரங்கம் நமது நாட்டின் விடாமுயற்சி, கலாசாரப் பெருமை மற்றும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது. இன்று எக்ஸ்போ 2025 ஐப் பார்வையிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கண்காட்சியை மாபெரும் வெற்றியடையச் செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அரங்கையும் இலங்கை தின நிகழ்வையும் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஜப்பான் அரசும் எக்ஸ்போ 2025 சங்கமும் வழங்கிய ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையின் பண்டைய கலாசார பாரம்பரியம், இயற்கை அழகு, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள், அத்துடன் இலங்கைத் தேயிலை, இரத்தினக் கற்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற பிரபலமான தயாரிப்புகளை உலகிற்கு காட்சிப்படுத்த எமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன்போது பெளதிக முன்னேற்றத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல், மனித விழுமியங்களின் அடிப்படையில் ஒரு வளமான உலகத்தையும் அழகான எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. ஒவ்வொரு கனவும் நனவாகும், அனைவரும் பிரகாசிக்கக்கூடிய மற்றும் தேசத்திற்கு மகத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய உலகை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு உங்கள் அனைவருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றார். https://www.ilakku.org/sri-lanka-is-currently-rebuilding-a-sustainable-and-participatory-economy-president-in-japan/
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
39 பேரை பலி கொண்ட விஜய் பிரசார கூட்டம்- புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் எந்த நேரத்திலும் கைது? தலைமறைவா? 28 Sep 2025, 8:45 AM கரூரில் நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 39 பேர் இறந்துள்ளனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூரில் விஜய் பிரசார கூட்டத்துக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் 39 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு விவரம்: குற்ற எண் 855/2025 பிரிவு 105,110,125 (b)r, 223 r/w 3 of,TNPPDL Act A1 குற்றவாளி மாவட்டச் செயலாளர் மதியழகன் A2 பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் A3 நிர்மல் குமார் மற்றும் பலர் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் கைது? புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மதியழகன் ஆகிய 3 பேரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் தவெக தலைவர் விஜய்யையும் இந்த வழக்கில் விசாரணைக்கு பிறகு குற்றவாளியாக சேர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைமறைவா? கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. https://minnambalam.com/vijays-campaign-rally-claims-40-lives-pussy-anand-nirmal-kumar-to-be-arrested-anytime/
-
“ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார்
“ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார் 28 Sep, 2025 | 09:12 AM (நா.தனுஜா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்துள்ளார். இலங்கை - சுவிஸ்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த 14 - 21 ஆம் திகதி வரை சுவிஸ்லாந்தில் நடைபெற்றது. இச்செயலமர்வின் ஓரங்கமாக இலங்கையின் ஆளும், எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்ற 13 உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இச்செயலமர்வில் பங்கேற்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவ்வேளையிலேயே நிஹால் அபேசிங்கவின் கருத்தை மறுத்ததுடன் தாம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோருவதாகவும் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய”, அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய”, அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்தார். அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் இம்முயற்சியைத் தோற்கடிப்பதற்குத் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒருமித்து இயங்கவேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார் https://www.virakesari.lk/article/226278
-
யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி!
யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி! 28 SEP, 2025 | 11:06 AM யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்து கடந்த மூன்று தினங்களாக கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் இதனை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரள்தின்றது. https://www.virakesari.lk/article/226294
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
விஜய் கைதா? கரூர் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி! 28 Sep 2025, 4:45 AM கரூர் கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று (செப்டம்பர் 27) மாலை கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய பலர் கவலைக்கிடமாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 39 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து கரூர் வந்த முதல்வர் ஸ்டாலின், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து அதிகாலை 3.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மிகுந்த துயரத்தோடும் கனத்த இதயத்தோடும் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். கரூரில் நடந்திருக்க கூடிய இந்த கொடூரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு சோக சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி விவரமாக பேசுவதற்கு கூட என் மனது இடம் கொடுக்கவில்லை. அவ்வளவு வேதனையில் இருக்கிறேன். நேற்று இரவு 7.45 மணிக்கு சென்னையில் நான் அதிகாரிகளோடு பேசிக் கொண்டிருந்தபோது, கரூரில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டு இருக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி பல பேர் மூச்சு திணறலுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. அந்த செய்தி கிடைத்த உடனே, கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு, இந்த செய்தி உண்மையா என்று கேட்டேன். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று என்னவென்று பாருங்கள் என்று சொன்னேன். அதன் பிறகு கலெக்டரிடமும் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவரும் சில விஷயங்களை எல்லாம் சொன்னார். முதலில் 4,5 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. போகப் போக அதிகமானோரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு போகிறார்கள் என்று செய்தி தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதைத்தொடர்ந்து மரண செய்திகளும் வர ஆரம்பித்துவிட்டன. இதை கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. மரண செய்தி வந்ததும் எனக்கு அச்சம் ஏற்பட்டு, இந்த மாவட்டத்தின் பக்கத்து மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அந்த சமயத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தார். அவரை உடனே கரூர் செல்லுமாறு உத்தரவிட்டேன். அதற்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனையும் தொடர்பு கொண்டு உடனடியாக கரூர் சென்று என்னவென்று பாருங்கள் என்று அவரையும் அனுப்பி வைத்தேன். பிறகு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக இந்த விவகாரத்தை கவனிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டு அவர்களையும் அனுப்பி வைத்தேன். ஆனால் இங்கிருந்து வந்த செய்திகள் எல்லாம் என் மனதை கலங்கடித்தது. அதன் பிறகு உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு சென்று துரைமுருகன், நேரு, வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், டிஜிபி ஆகியோரை அழைத்து கலந்து பேசினேன். பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அதிகாரிகள், கரூரை ஒட்டி இருக்கக்கூடிய ஐந்து ஆறு மாவட்ட அரசு அதிகாரிகளை மருத்துவர்களை கரூருக்கு செல்ல உத்தரவிட்டேன். அந்த வகையில் அவர்களும் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த சம்பவத்தில் மொத்தம் 39 உயிர்களை இழந்திருக்கிறோம். இதில் ஆண்கள் 13 பேர். பெண்கள் 17 பேர். ஆண் குழந்தைகள் 4 பேர் பெண் குழந்தைகள் 5 பேர் ஆவர். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இதுவரை நடக்காதது. இனிமேலும் நடக்கக்கூடாது. 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26 பேர் ஆண்கள். 25 பேர் பெண்கள். இவர்கள் விரைவில் குணமடைந்து வரவேண்டும். இறந்து போன உயிர்களுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது குடும்பத்தினரை என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி கொண்டிருக்கிறேன். மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதுமட்டுமல்ல ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தான் மருத்துவமனைக்கு வரலாம் என்று விமான டிக்கெட்டை பதிவு செய்திருந்தேன். ஆனால் இந்த கொடூரமான காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்தபோது எனக்கு மனது கேட்கவில்லை. ஒரு மணி அளவில் விமானத்தை பிடித்து இங்கு வந்து சேர்ந்து இருக்கிறேன்” என்றார். இதைத்தொடர்ந்து விஜய் கைது செய்யப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வர் ஸ்டாலின், ”ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் நோக்கத்தோடு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. யார் கைது செய்யப்படுவார்கள், கைது செய்யப்பட மாட்டார்கள் என நீங்கள் எந்த எண்ணத்தில் கேட்கிறீர்களோ அதற்கு நான் உட்படுவதற்கு தயாராக இல்லை” என்று கூறினார். உரிய இடம் ஒதுக்கப்படவில்லை பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.. https://minnambalam.com/is-vijay-arrested-chief-minister-stalin-interview-at-karur-hospital/
-
கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!
கேபிள் கார் விபத்து;மேலும் ஒரு துறவி மரணம் Simrith / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 10:47 மெல்சிரிபுராவில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, குருநாகல் ஆதார மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த மற்றொரு துறவி காலமானார். பல துறவிகளின் உயிரைப் பறித்த இந்த சம்பவத்தின் விளைவாக, தற்போது இறப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், துறவி நேற்று உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், சம்பவத்தில் இறந்த ஏழு துறவிகளில் ஐந்து பேரின் இறுதிச் சடங்குகள் நேற்று மெல்சிரிபுர - பன்சியகம பொது மயானத்தில் செய்யப்பட்டன. https://www.tamilmirror.lk/செய்திகள்/கேபிள்-கார்-விபத்து-மேலும்-ஒரு-துறவி-மரணம்/175-365397
-
ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி
ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம் பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 13 வயதுடைய லிங்கம் லட்சுமி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் குறித்த சிறுமி அவரது தாய் மற்றும் இரட்டை சகோதரியும் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தந்தையார் இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள்வாங்குவதற்கு பணம் அனுப்பியுள்ளதுடன் அடுத்த மாதம் நாட்டுக்கு திரும்பி வந்ததும் குறித்த சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் தருவதாக கூறியுள்ளார். தனக்கு ஆடைகள் வாங்க தந்தை பணம் தரவில்லை என கோபமடைந்த சிறுமி வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இதேவேளை தன் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் பட்டியலில் மட்டக்களப்பு இரண்டாவதாக உள்ளதுடன் கடந்த வருடம் 2024ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதி வரை 48 பெண்கள் உட்பட 172 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ம் திகதி வரை 12 வயது சிறுவன் ஒருவர், 26 பெண்கள் உட்பட 105 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் மாவட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஆடை-வாங்க-பணம்-தராததால்-உயிரை-மாய்த்த-சிறுமி/73-365398
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
வெளிநாட்டுப் பயணத்தை பாதியில் முடித்து கரூர் விரைந்த துணை முதல்வர் உதயநிதி 28 Sep 2025, 11:02 AM கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டம் நேற்று நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள கரூர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கரூரில் குவியத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துபாயில் இருந்த நிலையில் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 39 பேரில் 13 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள், குழந்தைகள் 9பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 32 பேர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2 பேர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் உடல் பிரேத பரிசோதனைக்க பின் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. 7 அமைச்சர்கள் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலித்தி உள்ளோம். அரசு சார்பாக என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துள்ளோம். கரூர் மாவட்டத்தில் உள்ள 200 மருத்துவர்கள் மற்றம் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அது தவிர சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 145 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.என தெரிவித்தார். எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு குறித்த வேள்விக்கு, இந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. அதற்காகதான் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை ஆணைத்தின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். https://minnambalam.com/karur-tragedy-udhayanidhi-stalin-press-meet/#google_vignette
-
அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி!
அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி! September 28, 2025 12:09 am *சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று கூறப்படும் நிலையில், அநுரவுடன் கைகோர்க்கும் ஐநா… *தமிழ்த் தரப்பில் ஒருமித்த குரல் செயற்பாடுகள் அற்ற தன்மையை சாதகமாக பயன்படுத்தும் சர்வதேசம்… *கனடா அரசின் இராணுவ நிபுணர் கொழும்பில் பயிற்சி வழங்கியுள்ளார். அ.நிக்ஸன்- — — — ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை என்று தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வரும் பின்னணில், ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பை காப்பாற்றும் முயற்சியிலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. அத்துடன், 1920 இல் ஆரம்பித்த சிங்கள – தமிழ் முரண்பாடுகள், முப்பது வருட அஹிம்சைப் போராட்டத்தின் மூலமும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும் தீர்க்க முடியாமல் போன சந்தர்ப்பங்களில், 2009 இற்குப் பின்னரான கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் என தமிழர்கள் கோருகின்றனர். இப் பின்புலத்தில், மேற்கு – ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் பக்கம் நிற்பதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ரசிய – உக்ரெய்ன் போர், இஸ்ரேல் – காசா போர் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வரிகள் உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு மத்தியில் உலக அரசியல் சமநிலை தற்போது குழப்பமடைந்துள்ளது. இதன் காரண – காரயமாக சிறிய நாடு ஒன்றைக் கூட தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தியை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் வகுத்துள்ளன. டொனால்ட் ட்ரம்ப்பும் அந்த நிலைப்பாட்டில் தான் இயங்குகிறார். இங்கே, வல்லரசுகளின் இப் போட்டித் தன்மைகளை சிங்கள அரசியல் தலைவர்கள் நன்கு புரிந்து கையாளுகின்றனர். பாலஸ்தீனம் தனிநாடு அதாவது இரு அரசுத் தீர்வு முறைக்கு எப்போதோ அங்கீகாரம் பெற்றுவிட்டது. ஆனாலும், அமெரிக்க அழுத்தங்கள் மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் பாலஸ்தீன விவகாரம் முடிவின்றி நீடிக்கிறது என்பதே உண்மை. அதேநேரம் பாலஸ்தீன விவகாரத்துக்கு இரு அரசுத் தீர்வு என ஏற்கனவே கூறிய சர்வதேச நாடுகள் கூட மனதளவில் அதனை முழுமையாக விரும்பவில்லை என்பது மற்றொரு உண்மை. இந்த ஊடாட்டங்களுக்கு மத்தியில் சர்வதேச அரசியல் நலன்கள் என்ற தன்மையை ஆழமாக அறிந்து குறிப்பாக சமகால புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிச் சூழலுக்கு ஏற்ப, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐநாவில் கூறியிருக்கிறார். மகிந்த ராஜபக்சவும் அவ்வாறு கூறியிருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என கூறப்பட்ட மைத்திரி – ரணில் ஆட்சியிலும் பாலஸ்தீனம் பற்றி அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அது இலங்கை அரசின் பாலஸ்தீனம் பற்றிய உண்மையான அரசியல் பார்வையல்ல. இருந்தாலும், பாலஸ்தீனம் தனி நாடு ஆக வேண்டும் என கூறுவது ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பின் ஒரு உத்தி. அதாவது, ஈழத் தமிழர் விவகாரத்தில் அமெரிக்க – இந்திய அரசுகளை தொடர்ந்து தம் பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கையாளப்படும் அரசியல் அணுகுமுறை அது. குறிப்பாக, அமரிக்கா போன்ற மேற்கு நாடுகளும் அயல் நாடான இந்தியாவும் இஸ்ரேல் ஆதரவு நிலையில் செயற்படும் பின்னணியில், சிறிய நாடான இலங்கைத்தீவின் ஜனாதிபதி ஒருவர் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என பேசியிருப்பது அரசியல் ரீதியான தேவைகளின் அடிப்படை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உலக அரசியல் ஒழுங்குகள் குழப்பமடைந்து வரும் ஒவ்வொரு சூழலிலும் இலங்கை ஜனாதிபதிகள் அவ்வாறான இராஜதந்திர பேச்சை முன்னெடுப்பது வழமை. இதற்கு அநுரகுமார திஸாநாயக்கவும் விதிவிலக்கல்ல. அதற்கான பிரதான காரண – காரியம் என்பது, ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்து உள்ளக விசாரணை பொறிமுறையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கமாகும். அதற்கு மேற்கு – ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். அதுவும் இந்தியா மிகவும் தேவையான ஒரு நாடு. ஆகவே, சர்வதேச அளவில் அந்த நாடுகள் தற்போது கொண்டுள்ள பாலஸ்தீனம் தொடர்பான தற்போதைய அரசியல் கொள்கைக்கு மாறான கருத்து ஒன்றை உலக அரங்கில் பகிரங்கப்படுத்தினால், உடனடியாக அந்த நாடுகள் இலங்கையை நோக்கி அவதானம் செலுத்தும் என்ற நம்பிக்கை சிங்கள அரசியல் தலைவர்களிடம் உண்டு. இந்த அவதானம் என்பது, இலங்கை ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என விரும்பும் சிங்கள அரசியல் தலைவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற மேற்கு – ஐரோப்பிய நாடுகள் இந்தியா ஊடாக காய் நகர்த்த முற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்கும். கடந்த காலங்களிலும் சிங்கள அரசியல் தலைவர்கள் இவ்வாறான அரசியல் காய் நகர்த்தல்களை கன கச்சிதமாகச் செய்திருக்கின்றனர். இதனை மேலும் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதானால், 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பெரும் வெற்றிக் கோசத்துடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட காலம் முதல், இன்றைய அநுரகுமார திஸாநாயக்க வரையும் நீட்சியடையும் பிரதான அரசியல் உத்தி இது. ஏனெனில், தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்பதில் இந்திய மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை. சீனாவை மையப்படுத்திய இந்தோ – பசுபிக் விவகாரத்தில், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவுடன் பனிப் போர் நிலவினாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் அந்த நாடுகள் இந்தியாவை கடந்து எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாது என்பதற்கு கடந்த கால செயற்பாடுகள் உதாரணமாகும். இவற்றையெல்லாம் அறிந்தே சிங்கள அரசியல் தலைவர்கள் செயற்படுகின்றனர். கட்சி அரிசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மகிந்த சமரசிங்க, அமரர் மங்கள சமரவீர, ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் பீரிஸ், மிலிந்த மொறகொட போன்றவர்கள் சிங்கள அரசியல்வாதிகள் என்பதற்கும் அப்பால், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் மிக நுட்பமாக கையாளும் சிறந்த இராஜதந்திரிகளாவர். இந்தியாவைக் கையாள மிலிந்த மொறகொட வகுத்துள்ள அரசியல் உத்திகளையே அநுரகுமார திஸாநாயக்க தற்போது நன்கு பயன்படுத்துகிறார் என்பது வெளிப்படை. இதனை மையமாகக் கொண்டே அநுரகுமார திஸாநாயக்கா பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை துணிந்து ஐநாவில் கூறியிருக்கிறார். இது மேற்கு – ஐரோப்பிய நாடுகளுக்குப் புரியாத புதிர் அல்ல. ஆனாலும், இந்தோ – பசுபிக் விவகாரத்தில் இலங்கைத்தீவு முக்கிய ஒரு தளமாக இருப்பதை கருத்தில் கொண்டு சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சி கட்டமைப்பை நியாயப்படுத்தும் அரசியல் செயன்முறைகளுக்கு ஆதரவு வழங்கக் கூடிய ஏற்பாடுகளை செய்வார்கள் என்பதே உண்மை. உதாரணமாக, வடக்கு கிழக்கில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரி ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறிக்கு இலங்கை இராணுவம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. கொழும்பில் உள்ள அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் இந்த மாதம் 8 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட பாடநெறியின் நிறைவு விழா இந்த மாதம் 19 இடம்பெற்றிருக்கிறது. இன அழிப்பு அல்லது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடுகளின் இராணுவத்தினர் ஐநாவின் இப்படியான பாடநெறிகளுக்குத் தெரிவு செய்யப்படுவதில்லை. ஆனால், இலங்கை இராணுவம் 2009 இற்குப் பின்னரான சூழலில் பல சந்தர்ப்பங்களில் இப் பாட நெறிகள் மற்றும் சர்வதேச கூட்டு பயிற்சிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் இலங்கை இராணுவம் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றன. ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பயணத் தடைக் கூட விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட பயணத் தடை விதித்திருக்கின்றன. ஆகவே, மிலிந்த மொறகொட, பேராசிரியர் ரொஹான் குணவர்த்த போன்றவர்கள் சர்வதேச அளவில் இலங்கை இராணுவம் தொடர்பாக மேற்கொள்ளும் தொடர் பிரச்சாரங்களில் ஐநா நம்பிக்கை கொண்டுள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாகின்றனர் என பிரகடனப்படுத்தியுள்ள கனடா அரசின் டிரேசி மார்டினோ என்ற இராணுவ நிபுணர் பயிற்சிக் குழுவுக்கு தலைமை தாங்கியமை அதனை கோடிட்டுக் காண்பிக்கிறது. இப் பாடநெறியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 20 அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், பங்களாதேஷ், ஃபிஜீ, இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 09 வெளிநாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அர்ஜென்டீனாவைச் சேர்ந்த திரு. விக்டர் மானுவல் நுனேஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல் நரேஷ் சுப்பா ஆகியோர் பிற பாட நிபுணர்களாகப் பணியாற்றினர். ஆகவே, அநுர அரசாங்கத்தை முன்னேற்றி, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தமது புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுவதே மேற்கு – ஐரொப்பிய நாடுகளின் நோக்கமாக உள்ளன. ஐநா இலங்கையின் நலன்களுக்கு ஏற்ப ஒத்துழைப்பு வழங்கும் என, ஐநாவின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ், அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவான சில நாட்களில் சந்தித்தபோது கூறியதை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன், அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையை ஐநா எப்போதும் கையாளும். ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட இனமாக ஒருமித்த குரலில் தமது அரசியல் உரிமை பற்றிய செயற்பாடுகளை உரிய முறையில் செயற்படுத்த தவறினால், ஐநா போன்ற சர்வதேச அமைப்புகள் அந்த இனத்தை ஒடுக்கும் அரசுகளுடன் கைகோரக்கும் ஆபத்து உருவாகும். ஆகவே 2009 இற்குப் பின்னரான தமிழர்களின் செயற்பாடுகளில் ஒருமித்த செயற்பாடுகள் அற்ற தன்மை மேலோங்கி வருவதால், ஐநா போன்ற அமைப்புகளும் சர்வதேச நாடுகளும், இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த மக்கள் என்ற அடிப்படையில் “இலங்கை அரசு” என்ற கட்டமைப்புடன் மாத்திரம் உறவை பேணி அபிவிருத்தி அரசியலை புகுத்துகின்றன. இதனை அநுரகுமார அல்ல, வேறு எந்த ஒரு சிங்கள தலைவரும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். https://oruvan.com/anuras-un-speech-and-international-background/
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
விஜய் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார் – தவெக வழக்கறிஞர்! 28 Sep 2025, 1:17 AM தவெக பிரச்சார கூட்டத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், விஜய் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார் என்று அக்கட்சி வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார். கரூர் பரப்புரை கூட்டத்தில் 38 பேர் உயிரிழந்த நிலையில், பிரச்சாரத்தை முடித்த கையோடு திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் அவரது கருத்தை கேட்டறிய காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசாமல் தவிர்த்து சென்றார். சென்னை விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வந்த விஜய், அங்கிருந்து தனது கார் மூலம் தீவிர பாதுகாப்புடன் பனையூரில் உள்ள வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் கரூரில் இன்றிரவு தவெக வழக்கறிஞர் அறிவழகன் அளித்த பேட்டியில், ’விஜய் மிகுந்த துயரத்தில் இருக்கிறார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக துணை நிற்கிறது. தலைவர் விஜய் தமிழக மக்களை நேசிக்கக்கூடியவர். இந்த துயர சம்பவம் அவரை மிகவும் பாதித்திருக்கிறது. எங்களிடம் இன்னும் தலைவர் பேசவில்லை. அவர் இந்த துயரத்திலிருந்து மீண்டு வரவேண்டும். இதுதொடர்பாக விசாரணை செய்ய வேண்டும். செய்தி அறிந்த உடனேயே தனது வருத்தத்தை பதிவு செய்தார் விஜய். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தவெக துணை நிற்கும். காவல்துறை நிபந்தனைகளை எல்லா இடங்களிலும் தவெக பின்பற்றியது. மக்களை சரியான முறையில் சந்தித்துவிட்டுதான் வந்திருக்கிறார்’ என்று கூறினார். https://minnambalam.com/vijay-is-in-unspeakable-grief-tvk-lawyer/#google_vignette
-
ஐ.நா.வில் நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள்
நெதன்யாகுவின் ஆடையில் அணிந்திருந்த QR குறியீடு சொல்வது என்ன? 27 September 2025 இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றும் போது தனது ஆடையில் QR குறியீடு பொத்தானை அணிந்திருப்பதைக் காண முடிந்தது. காசாவில் போர் தொடங்கியதிலிருந்து தனது நாட்டின் நடவடிக்கைகளை நன்கு புரிந்துகொள்ள, குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு அவர் வலியுறுத்தினார். குறியீட்டை ஸ்கேன் செய்வது, ஒக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களின் கொடூரமான படங்கள் மற்றும் காணொளிகளைக் கொண்ட ஒரு வலைத்தளத்திற்கு செல்லும். வலைத்தளத்தைப் பார்வையிடுபவர்களுக்கும் எச்சரிக்கை அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. சபையில் உரையாற்றிய நெதன்யாகு, உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒக்டோபர் 07 இப்போது நினைவில் இல்லை, ஆனால் நாங்கள் அதை நினைவில் கொள்கிறோம். இஸ்ரேல் நன்றாக நினைவில் கொண்டுள்ளது. நாம் ஏன் சண்டையிடுகிறோம்? நாம் ஏன் வெல்ல வேண்டும்? இதையெல்லாம் நீங்கள் இந்த குறியீட்டினுள் செல்வதன் ஊடாக காண்பீர்கள். இந்த வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம், காசா மற்றும் பிற இடங்களில் இஸ்ரேல் தனது எதிரிகளுடன் ஏன் தொடர்ந்து போராடுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்," என்று அவர் கூறினார். மேலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை ஹமாஸ் செய்ததாக வலைத்தளம் குற்றம் சாட்டுகிறது. https://hirunews.lk/tm/422426/what-does-the-qr-code-on-netanyahus-clothes-say
-
அண்ணா, எம்ஜிஆரை கீழ்த்தரமாக விமர்சித்த சீமான்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிமுக!
அண்ணா, எம்ஜிஆரை கீழ்த்தரமாக விமர்சித்த சீமான்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிமுக! 26 Sep 2025, 6:05 PM அண்ணா, எம்ஜிஆரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த நிலையில், அதிமுக தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 26) விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “விஜய் மாற்றம் என்பது குறித்து சொல்லவே இல்லை.. அவர் திமுகவிலிருந்து இரண்டு இட்லியையும், அதிமுகவில் இருந்து இரண்டு தோசையையும் எடுத்து ஒன்றாக பிச்சு போட்டு ஒரு உப்புமா கிண்டி விட்டார். ஒரு பக்கம் அண்ணாவையும், ஒரு பக்கம் எம்ஜிஆரையும் வைத்து கொண்டார். இதில் என்ன மாற்றம் வருகிறது. இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. இரண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டையை தைத்து விட்டார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பி விட்டார். சரி.. மாற்றம் என்றால் எப்படிப்பட்ட மாற்றம்.. என்பதை பற்றி எல்லாம் அவர் சொல்லவே இல்லையே. நாங்கள் ஸ்ட்ரெய்ட்டாக பாயிண்டுக்கு வருவோம் என்கிறார். இதுவரை ஒரு பாயிண்டுக்கும் வரவில்லை. நாளை கரூர், நாமக்கல் என இரண்டு பாயிண்ட்களில் பேசுகிறார். அதுதான் அவருடைய பாயிண்ட்” என விமர்சித்திருந்தார். விஜய்யை விமர்சிப்பதாக கூறி தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் இருவரையும் கீழ்த்தரமாக சீமான் சாடியுள்ளது திமுக, அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வேடிக்கை பார்க்காது! அதிமுக மாநில ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “பேரறிஞர் அண்ணாவை பற்றியோ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பற்றியோ இழிவாகப் பேச சீமானுக்கு என்ன தகுதி உள்ளது? மறைந்த தலைவர்களை எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீமானுக்கு இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் ஏமாற்றி திரள்நிதி வசூல் செய்து உடம்பை வளர்க்கும் சீமானுக்கு எம்.ஜி.ஆர் யார் என தெரியாது, ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யார், என்ன செய்திருக்கிறார் என பிரபாகரனுக்கு தெரியும், சொல்லி இருக்கிறார். பாலியல் குற்ற வழக்கில் மாட்டி மூளை பிசகி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு போய் சரணடைந்ததால், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை எல்லாம் வாய்க்கொழுப்பில் விமர்சித்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது!” என அவர் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/seeman-who-spoke-disparagingly-of-anna-and-mgr/
-
ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன்
ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன் September 26, 2025 வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கிவுல் ஓயா என்னும் பெயரில் நீர்பாசனத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகளையும், தமிழர்களின் பூர்வீக கிராமங்களையும் அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள இந்தக் கிவுல் ஓயா திட்டத்தினை உடன் நிறுத்தி, தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு தன்னிறைவு பெறுவதற்கும் வழிவகைகளை ஏற்படுத்துமாறும் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் இன்று (26) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மகாவலி அதிகார சபையின் (எல்) வலயத்தால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தால் எமது தமிழ் மக்களுக்கு ஏற்படவுள்ள பாரிய பாதிப்பு நிலைதொடர்பிலும் இந்த உயரியசபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மாயா அல்லது பெரிய ஆறு மற்றும் சூரியன்ஆறு ஆகிய ஆறுகளை மறித்து பாரிய அணைக்கட்டு அமைக்கப்பட்டு கிவுல் ஓயாத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் 6000 ஏக்கர் நீர்ப்பாசன விவசாயக் காணிகள் வெலிஓயாவில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறாக கிவுல் ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியாவடக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் பலவும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்த வகையில் இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக் குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ் வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடை கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்து பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும். அதேவேளை தமிழர்களின் இதயபூமி எனப்படுகின்ற பூர்வீக மணலாற்றுப் பிரதேசத்தை வெலிஓயாவாக மாற்றிவிட்டு அங்கு அத்துமீறிக்குடியேற்றப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர்களே இந்த கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தால் பயன்பெறவுள்ளனர். அத்தோடு தற்போது ஆட்சி பீடத்தில் இருக்கின்ற இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தை செயற்படுவதில் அதிக அக்கறையோடு செயற்படுவதாகவும் அறியமுடிகின்றது. தமிழ் மக்களின் சிறிய பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்கள் என்பவற்றை விழுங்குகின்ற இந்த கிவுல் ஓயாத் திட்டத்தை தயவுசெய்து உடனடியாக நிறுத்துமாறு இந்த உயரியசபையினூடாக கோருக்கின்றேன். அத்தோடு மகாவலி அதிகார சபை இந்தத் திட்டத்திற்கென ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற தமிழர்களது பூர்வீக சிறிய விவசாய குளங்கள் மற்றும் அவற்றின் கீழான விவசாயநிலங்களையும், பூர்வீகத் தமிழ்க் கிராமங்களையும் உடனடியாக விடுவிக்குமாறு இந்த உயரிய சபையினைக் கோருகின்றேன். எமது தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு தன்னிறைவு பெறுவதற்கும் வழிவகைகளை ஏற்படுத்துமாறும் இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார். https://www.ilakku.org/stop-the-oya-project-immediately-ravikaran/#google_vignette
-
ஐ.நா.வில் நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள்
நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதன்படி, இன்று இரவு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேச அழைக்கப்பட்டார். அப்போது, அரங்கத்தில் இருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறினர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர். என்றாலும், நேதன்யாகு வெறிச்சோடிய ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும். காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம். உலகின் பெரும்பகுதியினர் ஒக்டோபர் 7ஆம் திகதியை நினைவு கொள்வதில்லை. ஆனால் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதைவிட, தீமையை ஏற்றுக் கொள்கின்றனர். பொது வெளியில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் பல தலைவர்கள், இரகசியமாக (மூடிய அறைக்குள்) நன்றி தெரிவிக்கின்றனர். பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் சில நாடுகளின் முடிவு, அப்பாவி யூத மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். எங்களுடைய தொண்டையில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்க அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு நேதன்யாகு தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmg10h5q000nwqplpsibo47mf
-
காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்: ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள்
காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்: ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள் 27 Sep, 2025 | 10:06 AM காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று வெள்ளிக்கிழமை (26) சுமார் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 16ஆம் திகதி தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அல்-வேஹ்தா தெரு, ஷாதி முகாம் மற்றும் நாசர் சுற்றுப்புறம் உள்ளிட்ட இடங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வெவ்வேறு தளங்கள் மற்றும் இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாகி வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகரித்த குண்டுவீச்சு தாக்குதலுக்கு மத்தியில், "ஒவ்வொரு எட்டு அல்லது ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு வான்வழித் தாக்குதலை" நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன், சர்ச்சைக்குரிய இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் தளங்களிலிருந்து உதவி பெற முயன்றபோது வெள்ளிக்கிழமை பலர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன https://www.virakesari.lk/article/226219
-
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் சனி, 27 செப்டம்பர் 2025 06:03 AM ஆசிரியர் - Editor II மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது மேலும், இரவு 12 மணியளவில் இரண்டாவது கட்டமாகவும் காற்றாலை உதிரிகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது மக்கள், அருட்தந்தையர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்.. இதன்போது அங்கிருந்த பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி , ஆயுத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர். இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். https://jaffnazone.com/news/50768
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) இந்தியா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அவுஸ்திரேலியா 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா இங்கிலாந்து 6)அவுஸ்திரேலியா - இலங்கை அவுஸ்திரேலியா 7)இந்தியா - பாகிஸ்தான் இந்தியா 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா நியூசிலாந்து 9)இங்கிலாந்து - வங்காளதேசம் இங்கிலாந்து 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அவுஸ்திரேலியா 11)இந்தியா - தென்னாபிரிக்கா இந்தியா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் நியூசிலாந்து 13)இலங்கை - இங்கிலாந்து இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் தென்னாபிரிக்கா 16)இலங்கை - நியூசிலாந்து நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் அவுஸ்திரேலியா 19)இலங்கை - தென்னாபிரிக்கா இலங்கை 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் நியூசிலாந்து 21)இங்கிலாந்து - இந்தியா இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் இலங்கை 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அவுஸ்திரேலியா 25)இந்தியா - நியூசிலாந்து இந்தியா 26)இலங்கை - பாகிஸ்தான் இலங்கை 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து இங்கிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? இந்தியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இந்தியா இங்கிலாந்து நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? மும்பை 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? விசாகப்பட்டினம் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? அவுஸ்திரேலியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா
-
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு September 26, 2025 11:41 am அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. “வரும் ஒக்டோபர் 1-ம் திகதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும்.” என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதேபோல சமையலறை கேபினட்கள், குளியலறை பொருட்களுக்கு 50 சதவீதமும், தளபாடங்களுக்கு 30 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம். தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்கிறோம்” என தனது ட்ரூத் சோஷியல் பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வணிக துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் அதை ட்ரம்ப் நிராகரித்துள்ளார். ‘அமெரிக்காவில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்பனை செய்ய வேண்டி இந்த நடவடிக்கை’ என அவர் கூறியுள்ளார். https://oruvan.com/100-percent-tax-on-medicines-opposition-to-trumps-order/
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம் September 26, 2025 மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்தார் . மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி ஜே. ஜே. முரளிதரன் நேற்றைய தினம் முதல் பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஜே. எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை 15.09.2025 அன்று அனுமதி வழங்கப்பட்டடுள்ளது. இந் நியமனத்தினால் குறைந்த வயதில் அரசாங்க அதிபரானவர் என்ற பெருமையை ஜே.எஸ் அருள்ராஜ் பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர், 2003 ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். கிண்ணியா, சேருவில பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக இருந்ததுடன், வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு விசேட சேவையை ஆற்றியிருந்தார். நேற்று (25) வரை கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமைபுரிந்து வந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளராகவும், அரசாங்க அதிபராகவும் நியமிக்கப்பட்டு, இன்று முதல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரும் பணியாற்றவுள்ளார். https://www.battinews.com/2025/09/blog-post_932.html
-
ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை 26 Sep, 2025 | 11:02 AM ரஷ்யா ஆரம்பித்த போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் உடனடியாக உதவ வேண்டும் என்றும், இல்லையெனில் உலகம் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரை நிறுத்த உலக நாடுகள் தயங்கினால், அது இந்தப் போர் ஒரு கட்டுப்பாடற்ற ஆயுதப் போட்டியைத் தூண்ட வழிவகுக்கும் என்று எச்சரித்தார். உக்ரைனில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் ஏற்பட்டுள்ள அசுரத்தனமான புதுமைகளை விவரித்த ஜெலென்ஸ்கி, செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) வருகையால் மனித வரலாற்றில் நடந்து வரும் ஆயுதப் போட்டி மிகவும் அழிவுகரமானது" என்று கூறினார். ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். ரஷ்ய ஜனாதிபதி புட்டின், போரை உக்ரைனுக்கு அப்பாலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் எளிய ட்ரோனை முதலில் யார் உருவாக்குவார்கள் என்று யோசிப்பதை விட, ரஷ்யாவை இப்போதே போரை நிறுத்த வலியுறுத்தவது மேலானது என்றும் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் அவர் குறிப்பிட்டார். ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்த ஒரு நாள் கழித்தே ஜெலென்ஸ்கியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. செவ்வாயன்று டிரம்ப் பேசுகையில், ரஷ்யாவுடன் போராடி, அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில் உக்ரைன் இருப்பதாகக் கூறினார். ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரைன் வெற்றிபெறும் என்றும், "நேரம், பொறுமை, ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போர் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரைனால் மீண்டும் அடைய முடியும்" என்றும் தெரிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரைத் தொடங்கியுள்ளார் என்றும், ஒரு உண்மையான இராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் டிரம்ப் கருத்துத் தெரிவித்தார். இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும், நேட்டோ வழியாக உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடா்ந்து விநியோகிக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார். நேட்டோ வான்வெளியை மீறும் ரஷ்ய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் யோசனையையும் அவர் ஆதரித்தார்.ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய மோதலைத் தூண்டியதிலிருந்து உக்ரைன் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகச் பேரில் ஈடுபட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226113
-
பரந்தன் இரசாயன தொழிற்சாலை குறித்து அரசாங்கத்தின் திட்டம்
பரந்தன் இரசாயன தொழிற்சாலை குறித்து அரசாங்கத்தின் திட்டம் 25 September 2025 பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், சோடா மற்றும் குளோரின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொது, தனியார் கூட்டுத் திட்டமான இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில், சோடா மற்றும் குளோரின் உற்பத்தி ஆலையை மீண்டும் ஆரம்பிப்பதன் சாத்தியப்பாடுகள் குறித்த ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமான பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான முதலீட்டாளர்களைத் தேடும் நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனூடான, சுமார் 95 நேரடி வேலை வாய்ப்புகளையும் சுமார் 2,000 மறைமுக வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். https://hirunews.lk/tm/422208/governments-plan-regarding-paranthan-chemical-factory
-
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம் இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை, இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், "வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர். அவர்கள் நிதி உதவி செய்தனர். அந்த பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்தது. 2019 தேர்தலில் சுமார் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி நாங்கள். ஆனால் 2024 ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை வென்று வெற்றி பெற முடிந்தது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய இலங்கை, கடன்களை செலுத்த முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து எமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களை இலங்கை மக்கள் முதல் முறையாக வெளியேற்றினர். எங்களுக்கு இருந்த சவால்களில் ஒன்று பொருளாதார நெருக்கடியைத் தணிப்பது. மற்றொன்று இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது. பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருந்த நாட்டை நாம் தற்போது படிப்படியாக மீட்டு வருகிறோம். அனைத்து சர்வதேச அமைப்புகளும், மதிப்பீட்டு நிறுவனங்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும், இலங்கை ஒரு நெருக்கடியின் போது விரைவாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஒரு நாடாக இருந்ததாக அறிக்கைகளை வழங்கியுள்ளன. ஒரு பொருளாதாரம் இப்படி சரிந்தால், ஒரு நாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2022 ஆம் ஆண்டில் நாடு சரிந்திருந்தால், முந்தைய நிலைக்குத் திரும்ப 2032 ஆகும். ஆனால் நாடு சரிவதற்கு முன்பு 2019 இல் இருந்த பொருளாதாரத்தை அடுத்தாண்டு நாம் அடைய முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்றார். https://adaderanatamil.lk/news/cmg0a6sb300o8o29n0v72wr1x