Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்: ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள் 27 Sep, 2025 | 10:06 AM காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று வெள்ளிக்கிழமை (26) சுமார் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 16ஆம் திகதி தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அல்-வேஹ்தா தெரு, ஷாதி முகாம் மற்றும் நாசர் சுற்றுப்புறம் உள்ளிட்ட இடங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வெவ்வேறு தளங்கள் மற்றும் இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாகி வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகரித்த குண்டுவீச்சு தாக்குதலுக்கு மத்தியில், "ஒவ்வொரு எட்டு அல்லது ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு வான்வழித் தாக்குதலை" நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன், சர்ச்சைக்குரிய இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் தளங்களிலிருந்து உதவி பெற முயன்றபோது வெள்ளிக்கிழமை பலர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன https://www.virakesari.lk/article/226219
  2. மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் சனி, 27 செப்டம்பர் 2025 06:03 AM ஆசிரியர் - Editor II மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது மேலும், இரவு 12 மணியளவில் இரண்டாவது கட்டமாகவும் காற்றாலை உதிரிகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது மக்கள், அருட்தந்தையர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்.. இதன்போது அங்கிருந்த பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி , ஆயுத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர். இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். https://jaffnazone.com/news/50768
  3. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) இந்தியா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அவுஸ்திரேலியா 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா இங்கிலாந்து 6)அவுஸ்திரேலியா - இலங்கை அவுஸ்திரேலியா 7)இந்தியா - பாகிஸ்தான் இந்தியா 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா நியூசிலாந்து 9)இங்கிலாந்து - வங்காளதேசம் இங்கிலாந்து 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அவுஸ்திரேலியா 11)இந்தியா - தென்னாபிரிக்கா இந்தியா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் நியூசிலாந்து 13)இலங்கை - இங்கிலாந்து இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் தென்னாபிரிக்கா 16)இலங்கை - நியூசிலாந்து நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் அவுஸ்திரேலியா 19)இலங்கை - தென்னாபிரிக்கா இலங்கை 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் நியூசிலாந்து 21)இங்கிலாந்து - இந்தியா இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் இலங்கை 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அவுஸ்திரேலியா 25)இந்தியா - நியூசிலாந்து இந்தியா 26)இலங்கை - பாகிஸ்தான் இலங்கை 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து இங்கிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? இந்தியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இந்தியா இங்கிலாந்து நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? மும்பை 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? விசாகப்பட்டினம் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? அவுஸ்திரேலியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா
  4. மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு September 26, 2025 11:41 am அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. “வரும் ஒக்டோபர் 1-ம் திகதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும்.” என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதேபோல சமையலறை கேபினட்கள், குளியலறை பொருட்களுக்கு 50 சதவீதமும், தளபாடங்களுக்கு 30 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம். தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்கிறோம்” என தனது ட்ரூத் சோஷியல் பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வணிக துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் அதை ட்ரம்ப் நிராகரித்துள்ளார். ‘அமெரிக்காவில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்பனை செய்ய வேண்டி இந்த நடவடிக்கை’ என அவர் கூறியுள்ளார். https://oruvan.com/100-percent-tax-on-medicines-opposition-to-trumps-order/
  5. மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம் September 26, 2025 மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்தார் . மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி ஜே. ஜே. முரளிதரன் நேற்றைய தினம் முதல் பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஜே. எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை 15.09.2025 அன்று அனுமதி வழங்கப்பட்டடுள்ளது. இந் நியமனத்தினால் குறைந்த வயதில் அரசாங்க அதிபரானவர் என்ற பெருமையை ஜே.எஸ் அருள்ராஜ் பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர், 2003 ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். கிண்ணியா, சேருவில பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக இருந்ததுடன், வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு விசேட சேவையை ஆற்றியிருந்தார். நேற்று (25) வரை கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமைபுரிந்து வந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளராகவும், அரசாங்க அதிபராகவும் நியமிக்கப்பட்டு, இன்று முதல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரும் பணியாற்றவுள்ளார். https://www.battinews.com/2025/09/blog-post_932.html
  6. ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை 26 Sep, 2025 | 11:02 AM ரஷ்யா ஆரம்பித்த போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் உடனடியாக உதவ வேண்டும் என்றும், இல்லையெனில் உலகம் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரை நிறுத்த உலக நாடுகள் தயங்கினால், அது இந்தப் போர் ஒரு கட்டுப்பாடற்ற ஆயுதப் போட்டியைத் தூண்ட வழிவகுக்கும் என்று எச்சரித்தார். உக்ரைனில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் ஏற்பட்டுள்ள அசுரத்தனமான புதுமைகளை விவரித்த ஜெலென்ஸ்கி, செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) வருகையால் மனித வரலாற்றில் நடந்து வரும் ஆயுதப் போட்டி மிகவும் அழிவுகரமானது" என்று கூறினார். ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். ரஷ்ய ஜனாதிபதி புட்டின், போரை உக்ரைனுக்கு அப்பாலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் எளிய ட்ரோனை முதலில் யார் உருவாக்குவார்கள் என்று யோசிப்பதை விட, ரஷ்யாவை இப்போதே போரை நிறுத்த வலியுறுத்தவது மேலானது என்றும் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் அவர் குறிப்பிட்டார். ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்த ஒரு நாள் கழித்தே ஜெலென்ஸ்கியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. செவ்வாயன்று டிரம்ப் பேசுகையில், ரஷ்யாவுடன் போராடி, அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில் உக்ரைன் இருப்பதாகக் கூறினார். ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரைன் வெற்றிபெறும் என்றும், "நேரம், பொறுமை, ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போர் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரைனால் மீண்டும் அடைய முடியும்" என்றும் தெரிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரைத் தொடங்கியுள்ளார் என்றும், ஒரு உண்மையான இராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் டிரம்ப் கருத்துத் தெரிவித்தார். இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும், நேட்டோ வழியாக உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடா்ந்து விநியோகிக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார். நேட்டோ வான்வெளியை மீறும் ரஷ்ய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் யோசனையையும் அவர் ஆதரித்தார்.ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய மோதலைத் தூண்டியதிலிருந்து உக்ரைன் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகச் பேரில் ஈடுபட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226113
  7. பரந்தன் இரசாயன தொழிற்சாலை குறித்து அரசாங்கத்தின் திட்டம் 25 September 2025 பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், சோடா மற்றும் குளோரின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொது, தனியார் கூட்டுத் திட்டமான இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில், சோடா மற்றும் குளோரின் உற்பத்தி ஆலையை மீண்டும் ஆரம்பிப்பதன் சாத்தியப்பாடுகள் குறித்த ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமான பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான முதலீட்டாளர்களைத் தேடும் நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனூடான, சுமார் 95 நேரடி வேலை வாய்ப்புகளையும் சுமார் 2,000 மறைமுக வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். https://hirunews.lk/tm/422208/governments-plan-regarding-paranthan-chemical-factory
  8. 2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம் இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை, இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், "வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர். அவர்கள் நிதி உதவி செய்தனர். அந்த பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்தது. 2019 தேர்தலில் சுமார் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி நாங்கள். ஆனால் 2024 ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை வென்று வெற்றி பெற முடிந்தது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய இலங்கை, கடன்களை செலுத்த முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து எமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களை இலங்கை மக்கள் முதல் முறையாக வெளியேற்றினர். எங்களுக்கு இருந்த சவால்களில் ஒன்று பொருளாதார நெருக்கடியைத் தணிப்பது. மற்றொன்று இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது. பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருந்த நாட்டை நாம் தற்போது படிப்படியாக மீட்டு வருகிறோம். அனைத்து சர்வதேச அமைப்புகளும், மதிப்பீட்டு நிறுவனங்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும், இலங்கை ஒரு நெருக்கடியின் போது விரைவாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஒரு நாடாக இருந்ததாக அறிக்கைகளை வழங்கியுள்ளன. ஒரு பொருளாதாரம் இப்படி சரிந்தால், ஒரு நாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2022 ஆம் ஆண்டில் நாடு சரிந்திருந்தால், முந்தைய நிலைக்குத் திரும்ப 2032 ஆகும். ஆனால் நாடு சரிவதற்கு முன்பு 2019 இல் இருந்த பொருளாதாரத்தை அடுத்தாண்டு நாம் அடைய முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்றார். https://adaderanatamil.lk/news/cmg0a6sb300o8o29n0v72wr1x
  9. லஞ்சம் -ஊழலுக்கு உள்ளாகக்கூடிய நிறுவனங்களாக 10 நிறுவனங்களை மக்கள் தேர்ந்தெடுப்பு! adminSeptember 26, 2025 லஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, நாட்டின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் சுங்கத் திணைக்களம் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஒரு விரிவுரை ஒன்றின் போதே அவர் இந்தனைக் குறிப்பிட்டார். இலங்கை நிர்வாக வல்லுநர்கள் நிறுவனம் மற்றும் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விரிவுரை, தேசிய வளர்ச்சிக்கான நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த நீல் இத்தவெல, “2024 ஆம் ஆண்டில், தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம். அதில், பொதுமக்கள், இலஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகக்கூடிய நிறுவனங்களாகத் தேர்ந்தெடுத்த 10 நிறுவனங்களைப் பற்றி நான் உங்களுக்குச் கூறுகிறேன். முதலாவது காவற்துறை, இரண்டு அரசியல், மூன்று சுங்கம். மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை, பாடசாலை மற்றும் அமைச்சு. அத்துடன் காணிப் பதிவு அலுவலகங்கள், மாகாண சபைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச செயலகங்கள், பதிவாளர் நாயக அலுவலகம் போன்றவை பொதுமக்களின் கருத்தாகும். இருப்பினும், பொருளாதாரத்தை முக்கியமாக பாதிக்கும் 5 நிறுவனங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். ஒன்று சுங்கம், இரண்டாவது நிறுவனம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி திணைக்களம். அதேபோன்று மதுவரித் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் வாகனப் பதிவு அலுவலகம். அதேபோன்று மேலும் நிறுவனங்கள் உள்ளன. தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபை, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம். இது போன்ற நிறுவனங்கள் மூலம் ஊழல் பரவலாம். இது போன்ற நிறுவனங்களில் ஊழலிக்கு மேல் ஊழல் இடம்பெறுகின்றன. அவற்றின் மூலம், ஊழல் செய்பவர்களுக்கு ஒரு புகலிடம் உருவாக்கப்பட்டு, பணமோசடிக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது. பின்னர், நான் குறிப்பிட்ட கணக்கெடுப்பில், ஊழல் கலாச்சாரத்திற்கு பங்களிக்கும் காரணிகளாக பொதுமக்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர். நாட்டில் சரியான சட்டம் ஒழுங்கு இல்லாததே அதற்குக் காரணம். நாட்டில் ஊழல் கலாச்சாரம் உருவாகிறது. மேலும், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியதாக” அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலஞ்சம் ஊழல்ஆணைக்குழு https://globaltamilnews.net/2025/220819/
  10. யாழில். தியாக தீபத்திற்கு சிலை வைத்து , வீதிக்கு பெயர் சூட்ட தீர்மானம்! adminSeptember 26, 2025 பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ தலைமையில் சபை முன்றலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொதுமக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அஞ்சலிச்சுடரினை பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடந்து தவிசாளரினால் அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டது. உறுப்பினர்களும் தமது அஞ்சலிகளை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரதேச சபையின் அவை அமர்வில் தியாக தீபத்தினை நினைவு கூர்ந்து முன்னைய காலங்களில் திலீபன் வீதி என பிரயோகத்தில் காணப்பட்டு பின்னரான சூழ்நிலையில் பொக்கணை வீதி காணப்படும் வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவடுவதற்கும் அவ் வீதியின் பெயரை நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக திலீபன் வீதி என மீளவும் மாற்றியமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமத்தினைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தியாக தீபம் திலிபன் அவர்களுக்கு திருவுருவச் சிலையினை 1975 ஆம் ஆண்டின் 4 இலக்க காட்சிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி அமைச்சரின் அனுமதியைப் பெற்று நிறுவுவதெனவும் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் முன் வைக்கப்பட்ட தீர்மானமும் சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. https://globaltamilnews.net/2025/220813/
  11. ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…! Vhg செப்டம்பர் 22, 2025 ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். ராஜினி இராஜசிங்கம் 1989ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், கூடவே யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும். ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார். 1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி மருத்துவராக யாழ்ப்பாண மருத்துவமனையில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் புலத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற் கூறியலில் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ராஜினி விடுதலைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார். 1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும், சிறிதரன், தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை (The Broken Palmyra) என்ற ஆங்கில நூலை எழுதினார். இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினர். செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர். ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக்,தோமஸ் என்ற இரண்டு ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களே யாழ் மாவட்ட ஈபிஆர்எல்எப் பொறுப்பாளரின் உத்தரவின் பெயரில் அந்தக் கொலையை செய்ததாகவும் அதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கார்த்திக் பின்னர் ஈபிடிபியில் இணைந்து செயற்பட்டதாகவும் அந்தத் தொடரில் தெரிவித்துள்ளார்.அற்புதன் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாட்களும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் மீது சேறடிப்பதற்காக இச்சம்பவத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றது சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசு. பேரினவாதத்தின் ஏவலைத் தலைமேல் ஏற்று இயங்கும், “சொந்த நலன்களுக்காகவும், அற்பமான விருப்பு வெறுப்புகளுக்காகவும், குறுகிய பழிவாங்கல்களுக்காகவும் சேர்ந்த சிறு கும்பலொன்று ” அயர்ச்சி கொள்ளாமல், “ராஜினியை விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள்” என்று ஒரு தலைமுறைக்கே பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால், இன்று இந்த சிறு கும்பலின் நவதூவாரங்களிலும் சுண்ணாம்பை வைத்து அடைத்தது போன்றதொரு வேலையைச் செய்துவிட்டது சிங்கள பேரினவாத அரசு. 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த தினமுரசு பத்திரிக்கை ஒன்றில் அற்புதன் என்பவர் , ராஜினி இராஜசிங்கத்தை இந்திய அமைதிப்படையும், ஈபிஆர்எல்எப் அமைப்பும் இணைந்து படுகொலை செய்ததை அம்பலப்படுத்தி எழுதிய, அந்தக் கட்டுரையை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வெளியான சிங்கள அரசின் அதிகாரபுர்வ பத்திரிகை, “சிலுமின”வில், 23 ஆம் பக்கத்தில் மொழிபெயர்த்து பிரசுரித்திருந்தார்கள். அதே பக்கத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட சமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் யாழ் சுதுமலை அம்மன் கோயில் வளாகத்தில் ஆற்றிய உரை தொடர்பாகவும் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கின்றது. பல வருடங்களுக்குப் பிறகு சிறிலங்கா அரசு இந்த விவகாரத்தை ஏன் கையில் எடுக்க வேண்டும்? அதைப் புரிந்து கொள்ள இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்ட காலப்பகுதியின் அரசியல் நிகழ்வுகளைப் படிக்க வேண்டும். கொழும்பு துறை முகத்தை இந்தியாவுக்கு கொடுப்பது தொடர்பான பிரச்சினை நடந்து கொண்டிருந்த காலம் அது. சனாதிபதி கோட்டபாய துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். அரசாங்க தரப்பின் பிறிதொரு தரப்பு அதை எதிர்த்து கொண்டிருந்த து. குறிப்பாக மகிந்த இராசபக்சவே எதிராக நின்றார். எதிர்ப்புகள் காரணமாகத் திட்டத்தை கைவிட்டார் கோட்டபாய. பதிலடியாக இந்தியா கொடுத்திருந்த கடன் ஒன்றை உடனடியாக திருப்பி தா எனக் கேட்டது. இந்திய அழுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே மேற்படி கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. பத்திரிக்கை நிர்வாகத்திற்கு மகிந்தவின் புதல்வர் ஒருவர் நேரடி அறிவுறுத்தல் கொடுத்திருக்கின்றார். இலங்கையுடனான இராசதந்திர உறவுகளில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்திய விரோத உணர்வாகும். சிங்கள மக்களின் இந்த மனப்பான்மையை மாற்றி அமைப்பதற்காகப் பலத்த முயற்சி செய்து வருகின்றது இந்தியா. அதிலொன்றாக இந்திய மொழி திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயல்கின்றது. இதற்காக இந்திய மொழித்திரைப்படங்களை சிங்கள உபதலைப்புகளுடன் இருவெட்டுகளில் தெரு தெருவாக விற்கப்படுகின்றது. இருவெட்டு தயாரிக்கும் வேலைகள் இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் புறக்கோட்டை மற்றும் தெகிவளை பிரதேசங்களில் இயங்கும் இரண்டு தொழில் இடங்களில் நடந்து வருகின்றது. தொடர் நாடகங்கள் சிலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தியா இப்படி முயற்சிகள் செய்து வரும் நிலையில், தம் மீது அழுத்தங்களைக் கொடுத்தால் இந்திய விரோதத்தை மக்கள் மத்தியில் வளர்த்து விடுவோம் என்ற செய்தியைச் சொல்லவே மேற்படி கட்டுரைகளை அரச பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தார்கள். இதற்குப் பதிலடியாகத் தான், லொகானி எனும் சிங்கள பாடகியின் பாடல், இந்திய நடிகரும், இந்திய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரின் கணவருமான அமிதாப்பச்சன் மூலம் இந்தியாவில் பிரபலமாக்கப்பட்டது. இதனால் இந்தியா தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தில் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்.... இந்தியாவுக்குச் சேதி சொல்லப் போய், நீண்டகாலம் பொத்தி வைத்துக் கொண்டிருந்த உண்மையை அவிழ்த்து விட்டு விட்டார்கள். மேற்படி கட்டுரையில் ராஜினி இராஜசிங்கம், இந்திய அமைதிப் படையின் கோரமுகங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த காரணத்தால், அவரை முடக்கும் நோக்கில் இந்திய அமைதிப் படையே ஈபிஆர்எல்எப் அமைப்பை ஏவி கொலை செய்தது என கூறப்படுகின்றது. அடுத்த கட்டுரையில் இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் விடுதலையை புலிகள் மற்றும் சிங்கள தரப்பின் விருப்பு இன்றி இந்திய அரசு தனது ஏதேசதிகாரத்தை நிலைநாட்டியது என்ற கருத்துச் சொல்லப்படுகின்றது. இந்த விடயத்தை அரச பத்திரிக்கை ஒன்றின் மூலம் அதுவும் இவ்வளவு காலம் கடந்து வெளியிடுவது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல். உண்மை எவ்வளவு தாமதமாக வெளியே வந்தாலும் சுடும். ராஜினி இராஜசிங்கம் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பை உருவாக்கி இந்திய அமைதி படையினரின் அயோக்கிய செயல்களை வெளிப்படுத்தி வந்திருந்தார். மேலும், இது தொடர்பான விபரங்கள் அடங்கிய “முறிந்த பனை“ எனும் நூலை, ஆங்கில மொழியில் சக விரிவுரையாளர்களான தயா சோமசுந்தரம், ராஜன் ஊள், சிமாறிதரன் ஆகியோருடன் இணைந்து வெளியிட இருந்த தறுவாயில் படுகொலை செப்பப்பட்டிருந்தார். இந்நூலில் 1948 இல் மலையக தமிழர்களின் பிரசாவுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், 1987 இல் அமைதியை காக்கின்றோம் என்ற பெயரில் இந்தியப் படை தமிழ் பகுதிகளில் செய்த அட்டூழியங்கள் விவரமாக எழுதப்பட்டிருந்த து. குறிப்பாக இந்திய அமைதிப்படை யாழ் வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மட்டத்திலிருந்து இவ்வாறான விடயங்கள் ஆங்கில மொழியில் வெளிவருவது சர்வதேச கவனத்தைப் பெறும், அத்துடன் அமைதிப் படை என்ற பெயரில் இந்தியா செய்யும் கோரச் செயல்களை உலகின் முன் அம்பலப்படுத்தி விடும் என்ற பதற்றமே, ராஜினியின் படுகொலைக்குப் பிரதான காரணம் என்பதை, 22 வருடங்களுக்குப் பின்னர் சிறிலங்கா அரசே இன்று உறுதிப் படுத்தி இருக்கின்றது. தமிழ்ச் சூழலில் புதிதாக எழுத வருபவர்கள், முற்போக்கு , இடதுசாரி அரசியலில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களை எல்லாம் அலேக்காக அள்ளிக் கொண்டு சென்று மூளைச் சலவை செய்ய இலக்கியம் - இடதுசாரியம் - முற்போக்கு அரசில் என இயங்கும் கும்பலொன்று இருக்கின்றது. இவர்களின் சூத்திரக் கயிறு சிறிலங்கா பேரினவாத அரசு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மெல்ல மெல்லவோ, அல்லது எந்த நாடகம் போட்டே தமிழர்கள் சுயமரியாதை, அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையைக் கோருவதை மடைமாற்றுவது. இந்த இடுபணியை செய்ய கையிலெடுத்திருக்கும் பிரதான ஆயுதம் விமர்சனம் என்ற பெயரில் புலிகள் மீதும் விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவதூறு பரப்பி வருவது. புதியவர்கள் இவர்களது வலையில் விழுவது தவிர்க்க இயலாத நிர்ப்பந்தம். ஏனெனில், இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாப்பியத்தனத்தை மீறி இங்குத் தடம் பதிப்பது இலகுவான காரியம் அல்ல. ஒரு உதாரணம் இதை விளங்கப்படுத்தும். சில வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் வருடாந்த இலக்கிய சந்திப்பு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுகளிலிருந்து ஈழத்து சூழலின் முக்கிய எழுத்தாளர்களின் ஒருவரான தீபச்செல்வன் ஒதுக்கப்பட்டிருந்தார். இத்துணைக்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் எழுத்தாளர் தீபச்செல்வன் வசிக்கின்றார். காரணம், தீபச்செல்வன் தமிழின விடுதலையை மூச்சாக கொண்டு எழுதி வருபவர். நன்கு அறியப்பட்ட தீபச்செல்வனுக்கே இந்த நிலைமை என்றால்….? இந்த மாபியா கும்பலின் ஒரு தரப்பு தான் ராஜினி இராஜசிங்கத்தை “விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள்“ என்பதைப் பிரச்சாரம் செய்து வருபவர்களும். தமிழ்ச் சூழலில் கலை, இலக்கிய, அரசியல் செயற்பாடுகளில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களை எந்த கேள்வியுமின்றி புலி எதிர்ப்பை ( மறைமுகமாகத் தமிழின விடுதலை எதிர்ப்பு அரசியல் ) ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திப்பது தான் இவர்களது வேலை. இல்லையெனில் அங்கீகாரமும், வாய்ப்பும் இங்கு மறுக்கப்படும். இவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களில் எந்த நேர் விளைவுகளும் இருப்பதில்லை. வெறுமனே காழ்புணர்வு மாத்திரமே இருக்கும். ராஜினி இராஜசிங்கம் முறிந்த பனை புத்தகத்தை எழுதியதற்காக விடுதலைப் புலிகள் கொலை செய்ததாகச் சொன்னார்கள். ஆனால், புத்தகத்தை வாசித்தால் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளும், இந்தியா அமைதிப் படை என்ற பெயரில் நடத்திய கொடூரங்களும் தான் அம்பலமாகி இருந்தது. விடுதலை இயக்கங்கள் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் , குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக இருந்தாலும் கூட, அவர்களது இராணுவ செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியவை அல்ல. அவை சரி செய்து கொள்ளப் பட வேண்டிய கருத்துகளாகவே இருந்தது. முறிந்தபனை நூல், முதலில் ஆங்கிலத்தில் தான் வெளிவந்தது. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் ராஜினி படுகொலை செய்யப்பட்ட பின்னர் தான் புத்தகம் வெளியே வந்திருக்கின்றது. தமிழ் மொழி பதிப்பு 1996 ஆம் ஆண்டு தான் வந்தது. ஆக, இங்கும் இந்த புத்தகம் விடுதலைப் புலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது எனச் சொல்வது அர்த்தமில்லாதது. புத்தகத்தில் கட்டுரை எழுதுவதற்காக தகவல் திரட்டிய விரிவுரையாளர் ஒருவர் , தான் இந்தியப் படை அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். அச்செய்திகள் அப்போதைய பத்திரிக்கையிலும் வெளி வந்திருக்கின்றது. இந்திய அமைதிப் படை யாழ் வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் மிகமிலேச்சத்தனமானவை. இந்த விடயம் வெளியே அதிகமாக கதைக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கே இருக்கின்றது. இன்றுவரை அதை அவர்கள் செய்கின்றார்கள். ராஜினி இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதம் ஒன்றில் உள்ளூர் இராணுவ அதிகாரிகள் தன்னை பழிதீர்க்க முயல்வதாக எழுதி இருக்கின்றார். பொதுவாக விடுதலைப்புலிகள் தங்கள் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அவசியம் ஏற்படும் இடங்களில் மாத்திரமே மறுப்பு சொல்வார்கள். அதுவும் பிறர் மீது பழிகள் போடுவதில்லை. ஆனால், ராஜினி படுகொலை விவகாரத்தில் மறுப்பு சொல்லியதோடு, ஈபிஆர்எல்எப் ம், அவ்வமைப்பின் சார்பில் அப்போது வடகிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து இந்திய அமைதி படையுடன் இணைந்து செயற்பட்ட வரதராஜபெருமாளும் தொடர்பு பட்டதைச் சொல்லி இருக்கின்றார்கள். வரதராஜபெருமாள், இந்திய அமைதிப்படையுடனும், தமிழ் தேசிய இராணுவம் என்ற பெயரில் தமிழ் இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டும் செய்த அட்டூழியங்களை ராஜினி அம்பலப்படுத்தி இருந்தார். படுகொலைக்குப் பின்னர், தியாகி திலீபனின் உடலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து பெறுவது தொடர்பாக ராஜினியுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கு காரணம் என வரதாராஜன் சொல்லி இருந்தார். ( தியாகி திலீபன் விரும்பியபடி விடுதலை புலிகளே அவரது உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கொடுத்தனர்) இப்படி எழும் கேள்விகளும், ராஜினியை கொலை செய்தவர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் நிரூபிக்க வாய்ப்பிருந்தும் செய்யாமையும், இந்த படுகொலையை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி தொடர்ந்து பிரச்சாரம் செய்வது மூலம் இந்திய தரப்பு தப்பித்து கொள்ள முயல்வதும். ராஜினியை புலிகள் கொன்றார்கள் என பிரச்சாரம் செய்து நினைவு கூர்ந்து வருபவர்கள் ஒருபோதும் அவர் முறிந்த பனை நூல் மூலம் சொல்லிய விடயங்கள் தொடர்பாகக் கதைக்க விழையாமையும் உண்மை என்ன என்பதைப் புடம் போட்டுக் காட்டுகின்றது. இன்று சிறிலங்கா பேரினவாத அரசே அந்த உண்மையை அம்பலப்படுத்தி உதவி இருக்கின்றது https://www.battinatham.com/2025/09/blog-post_480.html
  12. வெனிசுவெலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 25 Sep, 2025 | 11:27 AM வெனிசுவெலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், எல்லை பகுதியருகே அமைந்த வீடுகள், அலுவலக கட்டிடங்களில் இருந்து பலர் தப்பி வெளியே ஓடினர். எனினும், இரு நாடுகளிலும் உயிரிழப்பு பற்றி எந்தவித தகவலும் வெளிவரவில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சியில் வெனிசுவெலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். நிலநடுக்கத்தின்போதும், அதற்கு பின்னரும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடையூறு எதுவும் ஏற்படவில்லை. இதன்பின்பு, ஜூலியா மாகாணத்தில் 3.9 மற்றும் பரினாஸ் மாகாணத்தில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. https://www.virakesari.lk/article/226033
  13. 7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சித்தப்பாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் 25 Sep, 2025 | 12:15 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான, பாதிக்கப்பட்ட சிறுமியின் சித்தப்பாவுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார். அதன்படி, குறித்த நபருக்கு, அவர் செய்த முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றத்துக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2007இல் 7 வயது சிறுமியினது தந்தையின் சகோதரனான 32 வயதுடைய சித்தப்பா, அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில், அவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு இடம்பெற்று வந்துள்ளது. குறித்த நபர், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்றமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டு, அந்த நபர் குற்றவாளியாக கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை இனங்காணப்பட்டார். இதனையடுத்து, இவ்வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி தீர்ப்பளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். https://www.virakesari.lk/article/226041
  14. புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை முன்பாக பதற்றம் ; பொலிஸார் பாதுகாப்பு கடமையில் 25 Sep, 2025 | 11:41 AM குருணாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக தற்போது உறவினர்கள் ஒன்று கூடியுள்ளதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குருணாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகொட பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 04.50 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் இருந்து சென்றதாக கூறப்படும் வேன் ஒன்றே விபத்தில் சிக்கியதாக தெரியவந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக உறவினர்கள் தற்போது திரண்டுள்ளனர். குறித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்த நிலையில், விபத்தில் மேலும், மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்சமயம் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக தற்போது உறவினர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில் ஆடைத்தொழிற்சாலை பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/226035
  15. மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி நீக்கம் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது. இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான் ஒருவர் நீதிவான் ஒருவருக்குரிய கண்ணியமான நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான சான்றுகள் முற்படுத்தப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து குறித்த நீதிவான் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தினை உடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 23 ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். நேற்று (24) நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மல்லாகம் நீதிமன்றத்திற்கு காலை வேளை பிரசன்னமாகி பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவானின் சமாதான அறை மற்றும் அதில் உள்ள பொருட்களைப் பொறுப்பேற்று நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் புதிய நீதிவான் ஒருவர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார் என சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் தெரிவித்திருந்தார். https://adaderanatamil.lk/news/cmfyzur3n00moqplpvvhmpsr9
  16. இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 20 வருட கடூழிய சிறை Editorial / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 10:19 தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இருகுற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும்பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறுமட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார். மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தை உள நலம் பாதிக்கப்பட்ட தனது ஒருமகள் உட்பட 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களையும் கடந்த 2016 அக்டோபர் மாதம் பாலியல்துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார் இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளின் கீழ்பொலிஸார் வழக்கு பதிவு செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக 16 வயதுக்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கைமூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 27 ம் திகதி இனம் காணப்பட்டார். இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது 8 வயதுசிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது குற்றத்துக்காக 10 ஆயிரம், தண்டப்பணம்செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டார். அடுத்து பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாவும், நான்காவது குற்றத்துக்காக 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாகசெலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குமாறும் இரு 20 வருட கடூழியசிறைத்தண்டனை சமகாலத்தில் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி கட்டளை பிறப்பித்ததுதீர்ப்பளித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/இரு-மகள்களை-பாலியல்-துஷ்பிரயோகம்-தந்தைக்கு-20-வருட-கடூழிய-சிறை/175-365258
  17. மருத்துவத் தவறால் கை அகற்றம் தாதிய உத்தியோகத்தர் கைது; நாட்டைவிட்டு வெளியேறத் தடை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர். இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உசைன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான கு.புரந்திரன்,செ.லக்சன் ஆகியோர் பல்வேறு விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.வழக்கின் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிவான், இது தொடர்பான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறும். விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, அந்தத் தாதிய உத்தியோகத்தர் சிறுவர், பெண்கள் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அந்தத் தாதிய உத்தியோகத்தருக்குப் பிணை வழங்கிய நீதிவான், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு பயணத்தடையையும் விதித்துள்ளார். https://newuthayan.com/article/மருத்துவத்_தவறால்_கை_அகற்றம்_தாதிய_உத்தியோகத்தர்_கைது;_நாட்டைவிட்டு_வெளியேறத்_தடை#google_vignette
  18. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்! adminSeptember 25, 2025 நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் , நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர். அவரது பதவி விலகலை, நீதி சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை , அடுத்து , நேற்றைய தினம் புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி, மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு சென்ற நிலையில், நீதவானின் சமாதான அறை மற்றும் நீதிமன்றத்தில் நீதவானின் கட்டுப்பாட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் என்பன மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், நீதவான், நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார். https://globaltamilnews.net/2025/220774/
  19. லொறியும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்து – நாலவா் உயிாிழப்பு adminSeptember 25, 2025 குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வா் உயிரிழந்துள்ளனா். அந்த விபத்து இன்று (25) அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வானும், எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இந்த வான் ஜா-எலயில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தது எனவும் உயிாிழந்தவா்களில் வான் சாரதியும் உள்ளடங்குவதாகவும் வான் சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தலாவ காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் காவல்துறையினா் குறிப்பிட்டுள்ளனா். https://globaltamilnews.net/2025/220791/
  20. ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க September 21, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு செவ்வாய்கிழமையுடன் (23/9) சரியாக ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் நேரடியாக முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 வாக்குகளை பெறாவிட்டாலும், இலங்கையில் இடதுசாரி அரசியல் இயக்கத்தின் தலைவர் ஒருவர் ஜனநாயக தேர்தலின் மூலம் முதற்தடவையாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த சந்தர்ப்பமாக அது இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அதேவேளை, தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக ஆயுதக் கிளர்ச்சியொன்றை நடத்திய இடதுசாரி அரசியல் இயக்கம் ஒன்று தேர்தலின் மூலம் அதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாகவும் திசநாயக்கவின் அந்த வெற்றி இலங்கையை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது. முன்னென்றும் இல்லாத வகையில் இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியை (2022 அறகலய) தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதியாக வந்த திசநாயக்கவிடமும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும் மக்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள். தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக அதன் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர்கள் தாங்கள் உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆசனங்களை தந்தால் போதும் என்று வெளிப்படையாகவே கேட்டபோதிலும் கூட, நாட்டு மக்கள் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்தை வழங்கினார்கள். அதுவும் குறிப்பாக ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தாங்கள் மட்டுப்பாடில்லாத அதிகாரத்தை மக்களிடம் இருந்து கேட்கவில்லை என்றும் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைப் பலத்தை தந்தால் போதுமானது என்றும் கூறினார். “புதிய அரசியல் கலாசாரத்தையும் முறைமை மாற்றத்தையும்” கொண்டுவரப்போவதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல்களின்போது வழங்கிய வாக்குறுதியை மக்கள் எந்தளவுக்கு நம்பினார்களோ தெரியவில்லை. ஆனால், பழைய பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீது தங்களுக்கு இருந்த கடுமையான வெறுப்பையும் ஆத்திரத்தையும் தேர்தல்களில் அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தினார்கள். இத்தகையதொரு பின்புலத்திலேயே, ஜனாதிபதி திசநாயக்கவின் ஒரு வருடகால ஆட்சியின் செயற்பாடுகளை நோக்க வேண்டும். கடந்த வருடம் இரு தேசிய தேர்தல்களிலும் நாட்டு மக்களுக்கு தாங்கள் வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளின் நடைமுறைச் சாத்தியமற்ற தன்மையை ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் இப்போது ஒரு வருடம் கடந்த நிலையில் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்பலாம். பொருளாதார இடர்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கு விரைவான நிவாரணங்களை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த சனத்தொகையில் அதிகப் பெரும்பான்மையானவர்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் அந்த உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்போவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது. ஆனால், அதே உடன்படிக்கையின் நிபந்தனைகளை எந்த விதமான மாற்றமும் இன்றி பின்பற்றுவதை தவிர, புதிய அரசாங்கத்துக்கு வேறுவழி இருக்கவில்லை. உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து நேர்மறையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்ற போதிலும், சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரங்களில் உருப்படியான எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகளையே தொடர்ந்து முன்னெடுக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் சொந்த பொருளாதாரக் கொள்கைகளை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது எவருக்கும் தெரியவில்லை. முன்னைய ஆட்சியாளர்களை மக்கள் வெறுத்து ஒதுக்கிய காரணங்களை நன்கு உணர்ந்தவர்களாக ஜனாதிபதி திசநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் தங்களது நிருவாகம் ஊழலுக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுகிறா்கள். கடந்த கால ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதிலும் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகிறது. மற்றைய முனைகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு மந்தநிலை காணப்படுகிறது. பதவிக்காலத்தின் முதல் வருடத்தில் ஒரு அரசாங்கத்திடமிருந்து நாம் எதிர்பார்பார்க்கக்கூடியவற்றுக்கு ஒரு மட்டுப்பாடு இருக்கிறது என்ற போதிலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு வருடகால செயற்பாடுகள் அதன் எதிர்காலத் திசைமார்க்கத்தை மதிப்பிடுவதற்கு ஓரளவுக்கேனும் போதுமானது என்பது நிச்சயம். ஜே.வி.பி.யின் கடந்தகால அரசியல் குறித்த பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், ஜனநாயக தேர்தல்களின் மூலமாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த கட்சி தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறைகளையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பழைய பாரம்பரிய அதிகார வர்க்க அரசியல் கட்சிகளின் அரசாங்கங்களுக்கு சேவை செய்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு முறைமை மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது நடைமுறையில் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதை ஜே.வி.பி.யின் தலைவர்கள் தற்போது தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். தங்களது கொள்கைகளின் பிரகாரம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பில் சீற்றமடைந்த ஜே.வி.பி.யின் முக்கிய அமைச்சர்கள் அண்மைக்காலங்களில் வெளியிட்ட கருத்துக்கள் அவர்களின் அந்த புரிதலின் வெளிப்பாடேயாகும். அடுத்த சுனாமி உயர்மட்ட அதிகாரிகளையே தாக்கும் என்று கூட ஒரு அமைச்சர் கூறினார். பழைய அரசு இயந்திரத்தைப் பொறுப்பேற்று நிருவகிப்பதையே ஒரு வருடகாலமாக தேசிய மக்கள் சக்தி செய்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சி, முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மாபெரும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு முன்னெடுத்த அரசியலமைப்புச் சீர்திருத்த மற்றும் ஜனநாயக பரீட்சார்த்தங்களின் தோல்வியை உலகிற்கு அம்பலப்படுத்தியது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கடந்த நூற்றாண்டில் இரு தசாப்தகால இடைவெளியில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஒரு இடதுசாரி அரசியல் இயக்கம் என்ற வகையில் ஜே.வி.பி. நேபாள நிகழ்வுகளை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கையை பொறுத்தவரை, புதிய அரசியல் கலாசாரம் என்பது ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியல் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதுடன் மாத்திரம் நின்று விடுவதல்ல. இனத்துவ உறவுகளிலும் முன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு காணப்பட வேண்டிய அரசியல் தீர்வுக்கான அணுகுமுறையிலும் ஏற்படவேண்டிய முக்கியமான மாற்றத்தை பிரதிபலிப்பதாக அந்த புதிய அரசியல் கலாசாரம் அமைய வேண்டும். முன்னைய ஆட்சியாளர்களைப் போலன்றி ஜனாதிபதி திசநாயக்க சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக வடபகுதி தமிழர்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதில் கூடுதல் அக்கறை காட்டுகிறார். பதவியேற்ற ஒரு வருடகாலத்தில் அடிக்கடி யாழ்ப்பாணத்துக்கு அவர் விஜயங்களை மேற்கொண்டிருக்கிறார். சகல சமூகங்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களது கொள்கை என்றும் ஓயாது பிரகடனம் செய்கிறார். ஆனால், கடந்த காலத்தில் அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட இனப்பாகுபாட்டுக் கொள்கைளினாலும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளினாலும் பாதிக்கப்பட்டு வந்திருக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் முகங்கொடுக்கும் பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு ஒரு இடைக்காலத் தீர்வுகளையேனும் காண்பதில் அக்கறை காட்டாமல் சகலரையும் சமத்துவமாக நடத்துவதாக பிரகடனம் செய்வதில் அர்த்தமில்லை என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஜே.வி.பி.யை பொறுத்தவரை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு குறிப்பாக அதிகாரப் பரவலாக்கத்தை செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த ஒரு கசப்பான கடந்த காலத்தைக் அது கொண்டிருக்கிறது. ஆட்சியதிகாரத்துக்கு வந்த பின்னராவது அந்த கடந்த காலத்தில் இருந்து வேறுபட்ட ஒரு போக்கை கடைப்பிடிப்பதில் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை ஜே. வி.பி. தலைவர்கள் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதி திசநாயக்க போன்றவர்களை இனவாதிகள் என்று கூறுவதை விடவும் இனவாதத்தின் கைதிகள் என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த இனவாதச் சிறைக்குள் இருந்து அவர்கள் வெளியில் வரவேண்டும். இனத்துவ உறவுகளும் தேசிய இனப்பிரச்சினையும் இதுகாலவரையில் சிங்கள அரசியல் சமுதாயத்தினாலும் தமிழ் அரசியல் சமுதாயத்தினாலும் கையாளப்பட்ட நடைமுறைகள் காரணமாக இலங்கையின் இனப்பிளவு தொடர்ந்தும் ஆழமானதாகவே இருந்துவருகிறது. இனத்துவ உறவுகளுடன் தொடர்புடைய விவகாரங்களில் வடக்கும் தெற்கும் இரு வேறு உலகங்கள் போன்றே காணப்படுகின்றன. அத்தகைய கவலைக்குரிய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கு சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, பெரும்பான்மைச் சமூகத்தையும் பழைய சிந்தனைப் போக்கில் இருந்து விடுபட வைக்கக்கூடிய மார்க்கத்தில் பயணம் செய்வதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் இனிமேலாவது தயாராக வேண்டும். https://arangamnews.com/?p=12333
  21. புலிகளுக்குசொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு ஒப்படைப்பு செவ்வாய், 23 செப்டம்பர் 2025 07:43 PM குற்றப்புலனாய்வு துறை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அவர்களிடம் தெரிவித்தன் படி விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கிக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவச் செயல்பாடுகளின்போது முகாம்கள், விடுதலைப் புலிகளின் வங்கிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில் இவை அடங்குகின்றன. இதற்கு முன்னர், நீதிமன்றம் தேசிய ரத்தின, ஆபரண ஆணையத்துக்கு தங்கத்தை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்திற்கும் CIDக்கும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. CID அதிகாரிகள் தெரிவித்ததாவது, மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்ட 6,000 பொருட்கள் எடை மற்றும் கலவை விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பான முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அந்தத் தங்கங்கள் ஆரம்பத்தில் உள்ளூர் மக்கள் தன்னார்வத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஒப்படைத்தவை என நீதிமன்றத்தில் முன்பு வெளிப்படுத்தப்பட்டது. இதற்கான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டது. https://jaffnazone.com/news/50707
  22. மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 24 September 2025 யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆவணம், வட்சப் செயலி ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளைத் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ ஆவணம் கிடைத்த பின்னர் அதன் விபரங்களைத் தாம் பகிரங்கப்படுத்த முடியும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாடிகளுக்கு மேலதிகமாக, ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான 14 காற்றாடிகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியின் பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த காற்றாலை நிறுவல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டங்களின் பின்னர் நிலைமையை அறிந்து பரிந்துரைக்கும் வகையில் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி அமைத்திருந்தார். அந்த குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி பணிப்புரையும் வெளியாகியுள்ளது. அதேநேரம், இந்த பணிப்புரைக்கு மேலதிகமாக, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள சுற்றாடல் சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளையும் உரிய முறையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதியால் அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட ஆவணம் தமக்குக் கிடைத்துள்ளதாக காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் போராட்டக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அருட் தந்தை மார்க்கஸ் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். எனினும், ஜனாதிபதியின் பணிப்புரையைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். https://hirunews.lk/tm/421865/president-directs-to-continue-progressing-the-mannar-wind-farm-project
  23. தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு September 24, 2025 10:48 am இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த சூறாவளி காரணமாக தாய்வானில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வௌ்ள நிலையும் ஏற்பட்டுள்ளது. தாய்வானின் கிழக்கு ஹுவாலியனில் உள்ள ஒரு ஏரியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் 14 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்த அனர்த்தத்தில் 120க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தாய்வானின் தீயணைப்பு படை அறிவித்துள்ளது. அதேநேரம், இந்த சூறாவளி காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே ஹொங்கொங் தமது எச்சரிக்கையை 10ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது, இது உச்சபட்ச எச்சரிக்கையாகும். இதன்காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், ரகாசா சூறாவளி ஹொங்கொங்கை தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணிநேரம் மூடப்பட்டுள்ளது. தெற்கு சீன பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக பாரிய மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்கூறப்பட்டுள்ளது. https://oruvan.com/typhoon-ragasa-hits-taiwan-hard-14-dead/
  24. இலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத்தும் அமெரிக்கா சென்றுள்ளார். அதன்படி, இன்று (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்ற உள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். இதேவேளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி வெளியுறவுச் செயலாளர் எலிசன் ஹூக்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfxgot3u00mpo29n2uhbmlnw
  25. செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்; நாளை முதல் செப்ரெம்பர் 29 வரை ஐந்து தினங்கள் நடைபெறும்! தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இரவு - பகலாக எதிர்வரும் 29ஆம் திகதி மாலை 4 மணிவரை இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. எனவே, தமிழ் மக்கள் பெருவாரியாக இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் - என்றனர். https://newuthayan.com/article/செம்மணி_வளைவில்_சர்வதேசத்திடம்_நீதிகோரி_உணவுத்_தவிர்ப்புப்_போர்;

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.