ஒரு முறை அக்பர் கீழே குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பீர்பால் மன்னரின் பின்புறத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டினார். உடனே அக்பருக்கு கோபம் வந்து "ஏய் யாரங்கே உடனே பீர்பாலை சிரச்சேதம் செய்யுங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார். அப்போது அவையிலிருந்தவர்கள் மன்னா மன்னிக்க வேண்டும்.அவரது தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். சினம் தணிந்த அக்பரும் அப்படியெனில் பீர்பால் இதற்குத் தகுந்த காரணம் சொல்ல வேண்டும், அக் காரணம் இத் தவறை விட கூடுதலானதாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
உடனே சபையோரும் பீர்பால் தாமதிக்காமல் காரணத்தை கூறிவிட்டு தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள் என்றார்கள்.
சிறிது யோசித்த பீர்பால் மெல்ல அக்பரின் அருகே சென்று அவருக்கு மட்டும் கேட்கும்படி " அரசே உண்மையாகவே அது நீங்கள் என்று எனக்குத் தெரியாது, நான் மகாராணியார்தான் குனிந்து நிக்கின்றார்கள் என்று நினைத்து விட்டேன்" மன்னிக்கவும் என்றார்!
வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மேலும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய செவ்வந்தி, ஜீவா , விசுகு, இளைஞன், தீபச்செல்வன் மற்றும் ஏனையோருக்கும் தாமதமான ஆனால் மனங்கனிந்த இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
அன்புள்ளம் கொண்ட கு. சா, புத்தன் மற்றும் இவ் வாரம் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
மேலும் எனக்கு வாழ்த்துக்கள் கூறிய யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த இனிய நன்றிகள் உரித்தாகட்டும்!!
நித்தி போல நான் பணக்காரன் இல்லாமல் இருக்கலாம், பெரிய கார், பங்களா என்னிடம் இல்லைத்தான் ஆனால் உன்னை உயிருக்குயிராய் காதலிக்கிறேன்,உனக்காக உயிரையும் தருவேன்!
அதைப் பிறகு எடுக்கிறேன், இப்ப அந்த நித்தியை மட்டும் ஒரு முறை அறிமுகம் செய்து வையுங்கள் தயவு செய்து .... .