ச்சே. அமெரிக்கர்கள் அவசரப்பட்டு, வெட்கம் மானத்தை இழந்து, தன்மானத்தை விட்டு ரசியர்களிடம் கேட்டு விட்டார்கள். ரசியர்களும் இதுதான் சந்தர்பமென்று அமெரிக்கர்களைப் பழிவாங்குவதற்காக 'தயாரிப்புச் செலவு கூடிய " பென்சிலை அவர்களுக்குக் குடுத்திருக்கிறார்கள்.
அவர்கள் மடடும் நம்மிடம் கேட்டிருந்தால், கிணத்தடிக்குப் பக்கத்திலிருக்கிற சுடுதண்ணி அடுப்பை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு நல்ல வீர விறகுக் கரிக்கட்டி நாலைப் பொறுக்கி அவர்களிடம் கொடுத்திருக்கலாம். 'தயாரிப்புச் செலவும் மிக மிக கம்மி". அவர்களும் வேண்டியமட்டும் ரொக்கட்டின் மேல்சுவர், பக்கச்சுவர் என்று எல்லா இடத்திலும் கிறுக்கித் தள்ளி கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.
பி.கு: நம்ம அறிவு உலகஅளவுல பிரபலமாவதற்கு ஏதோவொன்டு தடையாகக் கிடக்கு.