Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. திலீபன் அண்ணாவின் நினைவு தினம் வரும் ஒவ்வொரு முறையும், அவர் உண்ணாவிரதம் இருந்ததில் இருந்து இந்திய துரோக தேசத்தின் அலட்சியத்தினால் கொல்லப்பட்ட நாட்கள் வரைக்குமான தினங்களின் நினைவுகளும் வந்து போகும். மக்களே புலிகளாகவும் போராளிகளாகவும், புலிகளே மக்களாகவும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து இருந்த நாட்கள். ஒவ்வொரு தினமும் திலீபன் அண்ணாவுக்காக மெய்யுருகிப் போய் போராட்ட பணி செய்யும் மாணவர்களாக இருந்த நாட்கள் அவை. துண்டுப் பிரசுரம் அடிக்க வசதி இல்லாத மாணவர் பருவம் என்பதால், கையால் எழுதி எங்கள் ஊர் முழுதும் சின்ன சின்ன சுவரொட்டிகள் செய்த காலம் அது. அண்ணாவின் இறுதி மூச்சும் நின்று விட்ட அறிந்து கோபம் கொண்டு இந்திய அமைதிப் படையினைக் காணும் போதெல்லாம் காறி துப்பித் திரிந்தோம். வாழை மரங்களை ஒவ்வொரு வீதி சந்திகளிலும் தோரணங்களுடன் கட்டி சாத்தி இருந்தோம். ஊரெங்கும் மலர்களாள் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்கிக் கிடந்த காலம் அது. இன்று நினைக்கும் போதும் அன்று அந்த நாட்களில் எம் நாசிக்குள் போயிருந்த சோகம் கலந்த ஒரு வாசனை/ நெடி இன்னும் மறக்காமல் மனசுக்குள் எழுகின்றது. அண்ணாவின் இறுதி மூச்சினை கலந்து வந்த நெடி அது. சாவின் பின்னும் கூட மறக்காது.
  2. பிறந்த தின வாழ்த்துகளுக்கு உரிய ஒரு திரியில் இறந்த ஒருவரிற்கு நினைவு கூர்வது சரியாகப் படவில்லை (அவர் கள உறவே ஆனாலும்). துயர் பகிர்வோம் பகுதியில் புதிய திரி திறந்தோ அல்லது ஏற்கனவே இருக்கும் வசம்பு தொடர்பான திரியிலோ நினைவு கூர்வதே சரி என்று நினைக்கின்றேன்.
  3. பிரியாவுக்கும், நல்ல இசை ஆர்வமுள்ள மல்லிகை வாசத்துக்கும் என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. இன்று குதூகலமாகத் தன் பிறந்த நாளை கொண்டாடும் 'கிருபன்' இற்கு எம் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.
  5. ஓரளவுக்கு பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டு வருகின்றோம். ஆயினும் இடைக்கிடை சில தடங்கல்கள் ஏற்படுகின்றது. முற்றாக நிவர்த்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
  6. விசுகு, நான் தெளிவாக கூறியுள்ளேன். இவை தனி மனிதர்களாக எம்மால் செயற்படுத்தக் கூடியவை என்று. தனி மரம் தோப்பாக மாறாவிட்டாலும் தோப்பாக முயன்று வேர்களையே இழப்பதை விட தனி மரமாக நின்று கொண்டு சிலருக்காவது கனிகளை தரலாம் என நினைக்கின்றேன். அத்துடன் எல்லோரும் சேர்ந்து இயங்கும் ஒரு பொது வேலைத்திட்டத்தினை முன்வைக்க கூடியளவுக்கு எனக்கு தொடர்புகளும் இல்லை; நம்பிக்கைகளும் இல்லை. நன்றி.
  7. வெறுமனே அவலம் என்றும் நினைவு கூறல்களும் என்றும் சொல்லிக்கொண்டு இருப்பதும் சரி அல்ல என நினைக்கின்றேன். இந்த அவலத்திற்கு நாங்களும் ஒரு காரணம் என்பதாலும், எங்களது செயற்பாடுகள் இன்னமும் காத்திரமான வழியில் செல்லாது வெறுமனே குழு அரசியலிலும், முடி சூடுவதிலும் கழிவதாலும் தனி மனிதர்களாக எம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திப்போம். அடுத்த மே 18 இற்குள் பின்வருவனற்றை செய்ய ஆரம்பிப்போம். 1. இரண்டு குடும்பங்கள் சேர்ந்து, இன்னும் கல்வி வசதி அற்று இருக்கும் போரால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களின் கல்விக்கும் வாழ்க்கைக்கும் தேவையான விடயங்களை பொறுப்பெடுப்பது. 2. ஒரு வருடத்தில் நாம் செய்ய நினைத்து இருக்கும் களிப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றினைக் குறைத்து அதற்கான செலவை போரால் பாதிக்கப்பட்டு இருக்கும் பாடசாலை ஒன்றுக்கு உதவித் தொகையாகக் கொடுப்பது 3. தாயகத்தில் உள்ள நில புலங்களை விற்க நேரிடும் போது அதில் கிடைக்கும் பணத்தில் ஆகக் குறைந்த 2 சத வீதமெனினும் ஒரு முன்னால் போராளியின் சுயதொழிலுக்கு வழங்குவது. இதன்படி பத்து இலட்சத்துக்கு ஒரு வீட்டை / காணியை விற்றால் கூட 20,000 ரூபாவாவது கொடுக்க முடியும் (இன்று வடக்கில் உள்ள காணிகளின் வீடுகளின் விலை பல மில்லியன்கள்) 4. உதவ விருப்பம் இருப்பினும் இன்னும் உதவாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். அவ்வாறான உறவினர்களில் ஒருவரையாவது நேர்மையுடன் உதவி புரியும் அமைப்பின் தொடர்புகளை எடுத்து கொடுத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உதவ வைப்பது. இவை தனி மனிதர்களாக எம்மால் செய்யக் கூடியவற்றில் சில. உங்களுக்குத் தோன்றும் விடயங்களையும் எழுதவும்.
  8. நல்ல விடயம். ஆனால் அவலத்தின் இறுதி நாள் என்பது தவறான பதம் என நினைக்கின்றேன். பெரும் அவலம் ஒன்றின் ஆரம்ப நாள் தான் இது. எம் இனத்தின் மீது பூட்டப்பட்ட அடிமை விலங்கை நிரந்தரமாக்கிக் கொண்ட நாள் இது.
  9. வேறு எவரும் இன்னும் இது பற்றிக் குறிப்பிடவில்லை. நான் மூன்று உலாவிகளிலும் முயன்று பார்த்தேன், படக் என்று யாழ் திறக்கின்றது. வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை இருக்கா? எடுக்கும் அநேகமான படங்களில் உராங்குட்டான் மாதிரி மூஞ்சியை 'உர்' என்று வைத்துக் கொண்டு இருக்கின்றன் என்று தான் எல்லாரும் குறை சொல்லுவினம். இருக்கும் படங்களில் 'ஈ' என்று சிரிக்கும் படத்தினை எடுத்துப் போட்டால் அதுக்கும் இந்த பெண் இப்படி குறை சொல்றா...
  10. purmaal என்ற உறுப்பினரின் பெயர் அவர் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க 'பெருமாள்' என்று தமிழில் மாற்றியுள்ளேன்.
  11. இன்று தான் கவனித்தேன்... udayam என்ற ஆங்கில எழுத்தில் இருந்த பெயரை 'உதயம்' என தமிழ் எழுத்துக்கு மாற்றியுள்ளேன்.
  12. நிலாமதி அக்காவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள். வாதவூரானுக்கு என் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்.
  13. மெசோ அக்காவுக்கு என் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்.
  14. அன்புத் தங்கை யாயினிக்கு மீண்டும் என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
  15. யாயினிக்கு இன்றல்ல, நாளைதான் பிறந்த தினம் என்று புலநாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. விசுகுவின் மனைவிக்கு என் பிறந்த தின வாழ்த்துகள்.
  16. இனிய சகோதரி, யாயினிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.
  17. r.raja என்ற உங்கள் உறுப்பினர் பெயரை S..முத்து என்று நீங்கள் கேட்டதுக்கு இணங்க மாற்றி உள்ளேன். sagevan என்ற உங்கள் பெயரை சுவைப்பிரியன் என்று மாற்றியுள்ளேன். வண்டுமுருகன் என்ற உங்கள் பெயரை கதாநாயகன் என்று மாற்றியுள்ளேன். தமிழை வேண்டும் என்றே எழுத்துப் பிழைகளுடன் எழுதுவதை நிறுத்தி சரியாக எழுதினால் நன்று. அல்லது தமிழ் பழகும் வரை அரிச்சுவடி பக்கம் மட்டும் எழுத அனுமதி தரவேண்டிய நிலைக்கு நிர்வாகம் போக வேண்டி வரும். நன்றி
  18. ஒருவருடைய முகவரி தொட்டு தனிப்பட்ட விடயங்களை கோரும் இவ்வகையான தளங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதும் அவசியம். எதேச்சாதிகார அரசுகள் கூட தமக்கு எதிரானவர்களின் விபரங்களை திரட்டுவதற்கு இவ்வாறான தளங்களையும் உருவாக்கக்கூடிய சந்தர்பங்கள் இருக்கும் போது தனிப்பட்ட விபரங்களைக் கொடுக்கும் போது கூடிய கவனம் தேவை. யாழ் இணையத்தில் பதிவிடப்பட்ட செய்தி / தகவல் என்பதற்காக விபரங்களைக் கொடுக்கும் போது அலட்சியமாக இருக்க வேண்டாம். நன்றி.
  19. வண்டு, முதலில் தமிழில் ஓரளவுக்கேனும் எழுத்துப் பிழை விடாமல் எழுதிப் பழகுங்கோ....இல்லையென்றால் பிடிச்சு அரிச்சுவடி பக்கம் போட்டு தமிழ் படிப்பிக்க வேண்டி வரும்
  20. கு.சா அண்ணா, அடுத்த முறை பெயர் மாற்றும் போது முதல் என்ன பெயர் என்றதையும் குறிப்பிடுகின்றேன். அதே நேரம் உங்களாலும் அவரது Profile இற்குச் சென்று வலப்பக்கம் இருக்கும் Display name history என்பதை பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.
  21. மாற்றியாச்சு.............
  22. எங்கள் அமைதிப் புறா இணையவனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்.
  23. ஒருவர் போட்ட பச்சையை அகற்றி மீண்டும் நிர்வாகத்தாலோ அல்லது தானியக்கமாகவோ அவர் quota வில் சேர்க்க மென்பொருளில் வழியில்லை. ஆனால் ஒருவர் தான் போட்ட பச்சையை unlike செய்ததன் மூலம் அவரே அதனை அகற்றி தன் கணக்கில் (quota) வில் சேர்க்க முடியும்.
  24. ரதிக்கு என் பிறந்த தின வாழ்த்துகள். பாட்டி ஆக முதல் ஒரு நல்ல மனுசனை அல்லது ஒரு மனிசியைத் தேடிக் கண்டு பிடித்து கலியாணம் கட்ட மேலும் வாழ்த்துக்கள்.
  25. உங்கள் பெயரை ரோமியோ என்று ஆங்கிலத்திலா வைக்கப் போறீர்கள்... ? யாழ் ஒரு தமிழ் தளமப்பா...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.