Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல். 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்குக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தேசியப் பட்டியலிலிருந்து ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408743
  2. மனோ கணேசன் அவர்களே... கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நீங்கள் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும்... சஜித் பிரேமதாசாவின் கட்சி இலங்கை முழுக்க பலத்த அடி வாங்கியதும், அனுர அலையும் உங்களால் வெற்றி பெற முடியாமல் போய் விட்டது. அதனை நினைத்து வருத்தம் கொள்ளாதீர்கள். டக்ளஸ் என்ற வைக்கல் பட்டறை நாலுகால் பிராணியும் கொழும்பில் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்ததும் உங்கள் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கும்.
  3. தலைப்பின் கேள்வி: திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? ஆம். ஆனால், சுத்துமாத்து செய்து... மத்திய குழுவை மிரட்டி, Black mail பண்ணி... உள்ளே போவார் என்பதே பலரது கருத்து. அது... சுமந்திரன் பாராளுமன்றம் போகவேண்டும் என்று விரும்பி போட்ட வாக்குகள் அல்ல. அவரின் சுத்துமாத்துக்கு கிடைத்தவை. 😂 வடக்கிற்கு ஒன்று என்றால்... மலையகத்திலும் ஒன்று. 😂
  4. தனக்கு தனக்கு என்றால், சுளகு... படக்கு படக்கு என்று அடிக்குமாம். ஊருக்குத்தான் உபதேசம். உனக்கில்லையடி கண்ணே.... என்றானாம்.
  5. நெல் முளைத்த... வயலை உழுத கையுடன், பசளையும் தூவிய அதி நவீன விவசாயி. இந்த ரெக்னிக்கை... நாங்கள் ஜேர்மனியிலும் அறிமுகப் படுத்த வேணும். 😂 இவர் எத்தனையோ... குறளி வித்தை காட்டியும், மக்கள் அதனை கோமாளிக் கூத்தாக எடுத்து, தேர்தலில் நல்ல பாடம் புகட்டி, வீட்டிற்கு அனுப்பி உள்ளார்கள். 🤣
  6. அனுர கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு காரணமே... அவர்கள் சமூக மட்டத்தில் இருந்து... பல்வேறு மக்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியதுதான். ஆனால்.... இவர்களோ, தமக்கு.. காக்கா பிடித்து, குழை அடிப்பவர்களை தேர்வு செய்து நிறுத்தி... தமக்கும் தோல்வி ஏற்பட வழி சமைத்த பைத்தியக்காரர்கள்.
  7. 100% உண்மை விசுகர். அது புரியாமல் இன்னும் 1970´ம் ஆண்டுகளின் அரசியலை கள யதார்த்தம் புரியாமல்... செய்யும் முழு முட்டாள் சம்பந்தன், சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகளின் செயலால்... நன் மதிப்புடன் இருந்த தமிழரசு கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
  8. அது... சுமந்திரனுக்கு "முட்டுக் கொடுத்து" ... "குழை அடிப்பவர்கள்" செய்யும் தில்லாலங்கடி விளையாட்டு. 😂 மற்றவர்களையும், தமிழர்களையும் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டு, தமக்குத்தாமே... சேறு பூசிக் கொள்கின்றார்கள். 🤣
  9. தமிழரசு கட்சியின் பொதுக்குழுவில், சுமந்திரனின் ஆளுமை தான்.... தமிழரசு கட்சியை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. "உள்ளதும் போச்சுடா... நொள்ளைக் கண்ணா" நிலைமை.
  10. இனியும்.... இவரின், தேவையில்லாத ஆணி புடுங்கிற வேலை எல்லாம் தமிழரசு கட்சிக்கு தேவை இல்லை. சாணக்கியனுக்கு... இருக்கும் திறமை கூட இவருக்கு இல்லை. கிழக்கிலே தனி ஒருவனாக நின்று கட்சிக்கு நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துக் கொடுத்துள்ளார். சுமந்திரன்... இருந்த தொகுதிகளையும் பறி கொடுத்திட்டு, தானும் வெல்ல முடியாமல் அரசியலில் தோல்வி உற்ற மனிதன். அவர் இனி இருப்பதையும் கெடுக்காமல்... அரசியலில் இருந்து விலகி ஒய்வு எடுப்பதே.. தமிழ் மக்களுக்கு நல்லது. வடக்கு மாகாணத்தையே... சிங்களவனிடம் பறி கொடுத்தவர், தனது வெற்றியையே உறுதிப்படுத்தத் தெரியாதவர்... தமிழரசு கட்சியில் இருப்பது அவமானம்.
  11. சுமந்திரன் இந்தத் தேர்தலில் தோற்றுப் போவார் என்று, கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அவரின் நினைப்பு எல்லாம் அனுரா அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவி பெறுவதிலேயே இருந்தது. ஏன்.... பிரதம மந்திரி ஆசை கூட ஆளுக்கு இருந்தது. அதற்கான... முன்னேற்பாடுகளை சமூக வலைத்தளங்களில் சொல்லிக் கொண்டே வந்துள்ளார். 😂 🤣 இப்போ... மக்கள் அவரின் கனவில், சாணியில் தோய்த்த செருப்பால்... முகத்தில் அடித்து கலைத்து விட்டார்கள் என்பதே உண்மை.
  12. பெருமையாக உள்ளது, தமிழ் சகோதரிகளே. மிக நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் தமிழ்ப் பெண்கள் இல்லாத குறையை நீங்கள் நீக்கி விட்டீர்கள். புலிகள் காலத்தில்… பத்மினி சிதம்பரநாதன் பாராளுமன்றில் இருந்தவர் என நினைக்கின்றேன். அனுர கட்சி தமிழ் பெண்களை போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றிகள்.
  13. திரும்ப வந்திட்டார். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும்… தான் முன்பே எழுதி வைத்த அறிக்கைகளை அச்சுப் பிசகாமல் பத்திரிகைகளில் வெளியிட்டு, தனது இருப்பையும் காட்டிக் கொள்ளும் சுயநல அல்ப புத்தி உள்ள மனிதன் தான் எரிக்சோல்ஹைய்ம். இவர் போர் முடிந்த பின்… சர்வதேச அளவில் தமிழ் மக்களுக்கக ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. மொத்தத்தில்… இவர் ஒரு காகிதப் புலி.
  14. தனிமனிதன்…. சுமந்திரன் ஒருவரை நம்பித்தான் 75 வருட பாரம்பரியம் உள்ள தமிழரசு கட்சியே உள்ள மாதிரி இங்கே கருத்து வைக்கப் படுகின்றவர்களின் நோக்கம்.... மக்களால் தோல்வி அடையச் செய்த ஒருவரை, மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதற்கான சதி வேலை என்றே கருத வேண்டி உள்ளது. சுமந்திரனை மீண்டும் பின்கதவால் பாராளுமன்றம் அனுப்பினால்…. 75 வருட கால தமிழரசு கட்சியே காணாமல் போய் விடும் என்பதை மறவாதீர்கள். மக்கள் தீர்ப்பை மதியுங்கள். அவர்கள் மேல், உங்களின் தனிப்பட்ட சுயநல ஆசைகளை திணிக்காதீர்கள். இனி…. உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்கள் வர இருக்கின்றன. தமிழரசு கட்சிக்கு… ஒரு புதிய ஊடகப் பேச்சாளாரை நியமித்து, சுமந்திரனை அப்புறப் படுத்துங்கள். சுமந்திரனின் மூஞ்சையை பார்த்தாலே மக்கள் வேறு கட்சிகளுக்கு வாக்கு போட்டு விட்டு போய் விடுவார்கள். அந்தளவு கோபத்தை சுமந்திரன், தனது தான் தோன்றித்தனமான செயல்களால் தமிழ் மக்களிடம் சம்பாதித்து வைத்துள்ளார்.
  15. திரி சங்கு நிலைமை. 😂 அந்த ஆளை கனடாவுக்கு கூப்பிட்டு விடுவமா. 🤣
  16. உண்மை யில் எனக்குத் தெரிந்த காெடுரம் இதுதான். Vic Jeyathevan
  17. இப்பவே... சுமந்திரன் உள்ளே போவதற்கு, சகல மட்டங்களிலும் தூள் பறக்கும் தொலை பேசி உரையாடல்களை இரவு பகலாக நடத்திக் கொண்டு இருப்பார்.
  18. ஆம். என வாக்களித்துள்ளேன். எப்படியும் சுமந்திரன்... வழக்கமாக செய்வது போல், மத்திய குழுவை மிரட்டி.. (Black Mail பண்ணி) உள்ளே வந்து விடுவார் என நினைக்கின்றேன். 😂
  19. போன தேர்தலில் மாவை சேனாதிராசாவை வீட்டுக்கு அனுப்பியவர்கள், இந்தத் தேர்தலில் சுமந்திரனை வீட்டுக்கு அனுப்பி உள்ளார்கள். 😂 மாற்றம் ஒன்றே மாறாதது. 🤣 நல்லாய் ஓய்வு எடுங்க ராசா.... 😂
  20. கட்சியினை பிரதிநிதிப்படுத்துவதற்கு சுமந்திரன் நல்ல தெரிவாக இருக்கலாம். ஆனால்... மற்றவர்களை அரவணைத்து செல்லும் பழக்க வழக்கம், இல்லாதவரை.. கட்சி இன்னும் விட்டு வைத்திருந்தால்... கட்சியே காணாமல் போய் விடும். தனிமனிதன் முக்கியமா? கட்சி முக்கியமா எனும் போது.... கட்சியே பலரது தெரிவாக இருக்கும். கீழே... @zuma எழுதிய அருமையான பதிவு ஒன்று உள்ளது. அதனைப் பார்த்தீர்களோ தெரியாது. உங்கள் பார்வைக்காக இணைக்கின்றேன். 👇 👉 //யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியின் தேல்விக்கு முக்கிய காரணம் சுமந்திரனே ஆகும். - ஒரு குழுவாக செயற்படாமை, தனது கட்சியின் தலைமை வேட்ப்பாளருக்கு எதிராக நிறுவப்படாத ஊழல் கட்டுக்கதைகளை பரப்பியமை. - தனது வெற்றிக்காக பிணாமி வேட்ப்பாளர்களை நியமித்தமை, அவர்கள் அனைவரும் ஒரே சமூக அந்தஸ்து ( social status) உடையவர்கள். - மக்களின் மனநிலை அறியாமல் மேட்டிக்குடி அரசியல் பேசியமை - மக்களுக்கும், அநுராவுக்கு இடையில் இடைத்தரகர் அரசியல் செய்ய நினைத்தமை. - தமிழரசு கட்சியை சமூக இயக்கமாக மாற்றாமல் ( NPP போல் ), தனது இருப்பை தக்க வைக்க செயற்பட்டமை என்று பலவற்றை கூறலாம்.// 👈

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.