Everything posted by தமிழ் சிறி
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
பொய் சொல்லி... சிங்கள எஜமானை திருப்திப் படுத்தினால்தானே, ஊர் வெக்கைக்குள்ளும்... கோட்டும், சூட்டும் போட்டுக் கொண்டு அல்லக்கைகளுக்கும், செம்புகளுக்கும்... பெரிய ஆள் மாதிரி "பிலிம்" காட்டலாம். இந்த முறை... அவர் தலைப்பாகை கட்டிக் கொண்டு, ட்ராக்கரில் வயல் உழவுக்கு போகவில்லையோ... 😂
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
சுமந்திரன்... சிங்களத்துக்கு ஆற்றும் சேவையை வைத்து, ஊரில் உள்ளவர்களும், யாழ் களத்தில் உள்ளவர்களும் 10 வருடத்துக்கு முன்பே.. அவரை.. சின்னக் கதிர்காமர் என்று கணித்த கணிப்பு... 100 வீதம் பலிக்கப் போகுது. 🤣
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
பிள்ளையான், கருணா, டக்ளஸ்... போன்ற பிரபல காட்டிக் கொடுப்பாளர்களுக்கே அமைச்சர் பதவி கிடைக்கும் போது... 😎 முட்டுக் கொடுப்பாளர் சுமந்திரன்... உள்நாட்டு விசாரணை போதும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சொல்லி, சிங்கள அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்து... போர்க் குற்ற விசாரணையில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றியமைக்கு, வெளிநாட்டு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்ப்பதுதான் நியாயமானது. 😂 🤣
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனுக்கு.... சம்பந்தன் செத்துப் போனது, "ரூட் கிளியர்" ஆகி இருக்கு. சம்பந்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்தப் பதவியையம் தனக்கே வேணும் என்று அழுது அடம் பிடித்து எடுத்திருப்பார். இப்போ.... சுமன் காட்டில் அடை மழை பெய்யப் போகுது.
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
தேர்தலில் தோற்றவர்கள்.. தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போவதும், ஒரு வகையில் பின்கதவு தான். சுமந்திரனுக்கு... இப்போது இருக்கும் தெரிவு, தேசியப் பட்டியல் மட்டுமே. அதைத்தான்... பிடித்து தொங்கிக் கொண்டு பாராளுமன்றம் போவார். நவம்பர் மாதம் மட்டும் பொறுத்து இருங்கள், அப்போ தெரியும் அவரின் வண்டவாளம். 🙂
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
முதலில்... சுமந்திரனுக்கு, மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்ப வேணுமே. 😎 கட்டுக்காசு கூட... சுமந்திரனுக்கு கிடைக்குமோ என்ற திரிசங்கு நிலையில்.. அமைச்சர் பதவி எல்லாம்... எட்டாக் கனியே. அப்படி சுமந்திரன்... பின் கதவால் வந்து பாராளுமன்றம் போனால் மட்டுமே, சின்னக் கதிர்காமர்... சுமந்திரனின் வாழ் நாள் கனவு நிறைவேறும். 😂
-
மதுபான அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு
அங்கஜன், விக்கியர், சுமந்திரன், சாணக்கியன், ஸ்ரீதரன், ஆனந்த சங்கரி, பிள்ளையான், கருணா, வியாழேந்திரன்... எல்லாரும், உங்களுடைய மதுபான அனுமதி பத்திரங்களை கெதியாக புதுப்பிக்கவும்.
-
மதுபான அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு
மதுபான அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு. அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மேலும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிகள் தேவைக்கேற்ப செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மற்ற வரிகளுக்கு பதிவு செய்தால், அது தொடர்பான அறிக்கைகள் கொடுக்கப்பட்டு செலுத்தப்பட வேண்டும். வரி செலுத்தப்படாவிட்டால் அதற்கான காரணங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும், அது தொடர்பான அனுமதி சான்றிதழ் நேரடியாக கலால் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1405727
-
போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹமாஸ்
போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹமாஸ். காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறும் வரை போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க ஹமாஸ் மறுத்துள்ளது. அந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எகிப்தின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று கெய்ரோவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த உறுப்பினரான ஹம்தான், காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறினால் மட்டுமே, தனது அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1405731
-
அரசுடன் இணையமாட்டோம்! - அமெரிக்க தூதுவரிடம் தமிழ் பிரதிநிதிகள் திட்டவட்டம்.
அரைச்ச மாவ அரைப்போமா, தோய்த்த துணியை தோய்ப்போமா... 😂
-
கருத்து படங்கள்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
- கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
இது என்ன… புது புரளியாய் இருக்கு. 😁 கமலாவுக்கு… இந்த விசயம் தெரியுமா. 🤣 உரும்பிராயை… பூர்வீகமாக கொண்ட கமலா, நிரந்தர தீர்வை பெற்றுத் தர வேண்டும்.- ஒரு (கட்டுக்) கதை.
மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா? குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா? ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது! இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்.. ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்குமாம்! கடைசி 1 வாரம் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்து விடுமாம். அதனுடைய முடிவு காலம் வரும் நாளுக்கு, முதல் நாள் மட்டும்... ஒரு கோமாதாவின் கோமியத்தை.. 7 சொட்டு அருந்துமாம்! அப்போது மயிலின் கண்கள் வேர்த்து 6 சொட்டு கண்ணீர்த் துளிகளை பத்திரமாக ஒரு பாறை பிளவுக்குள் விடுமாம்! அடுத்த நொடியே அந்த பாறை பிளந்து கொள்ள மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை நெருக்க அந்த முழுநாளும் மயில் ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே.. தன் உயிரை விடுமாம். தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல மரத்தில் விட்டு அது பிளந்ததும் இதே போல அமர்ந்து உயிர் துறக்குமாம்! வெள்ளை நிற மயில்கள் மட்டும் அக்கோவிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து விழுந்து தங்களை மாய்த்துக் கொள்ளுமாம்! அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய உண்மைகளை எல்லாம் படிக்கும் போது 48 தினங்கள் = 1 மண்டலம், 7 சொட்டு கோமியம் = ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக் கண்ணீர் = அறுபடைவீடு, செவ்வரளி = முருகனின் பூ, வேல மரம் = வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம் = யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது அல்லவா! அதனால் தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு வாகனமாக மட்டுமின்றி நம் நாட்டு தேசியப் பறவையாகவும் இருக்கிறது! இப்படி தனது மரணகாலத்தில் கூட மிகவும் அமைதியாக எந்த.. உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல் முருகர் கோவிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கிறது மயில்கள்! விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் அடிபட்டு சாகும் மயில்களை மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டுவிடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப் புற்றுக்குள் தள்ளி.. அந்த உடலை மூடிவிடும்! இது முற்றிலும் உண்மை இது குறித்து ‘மயிலாடுதுறை மயில்சாமி சித்தர்’ எழுதிய “மயில் அகவல்” என்னும் நூலில் இத்தகவல்கள் காணப்படுவதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது! மயில்சாமி சித்தர் உச்சி வெயிலில் பழனி மலையுச்சிக்கு சென்று, அங்கு.. ஒரு மொட்டைப் பாறையில் தனது ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருந்து முருகனிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து நோன்பிருந்து இறக்கவேண்டும். அதன் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பவையாகும்.!! தோகை விரிக்கும் போது மயில்களுக்கு உடல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும் உங்களுக்கும் மெய் சிலிர்க்கிறதல்லவா! ஓம் முருகா.. முருகா.. மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய மயில் அகவல் என்னும் நூல் கிடைத்தால் படியுங்கள்... நன்றிகள் !!! 😂 Kanaga Rajan Kanaga Rajan- திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திருமதி பாஞ்ச் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றோம்.- தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் - தமிழ் அரசு கட்சி வேட்பாளர் ச.குகதாசன்
திருகோணமலையில்... அனுர கட்சி சார்பாக கேட்கும் தமிழர் ஒருவருக்கு அதிக ஆதரவு உள்ளதாக சொல்கிறார்கள். ஏனென்றால்... தமிழரசு கட்சி தனது பெயரை "ரிப்பேர்" பண்ணி வைத்திருக்கு. வேணுமென்றால்... ஒன்று கிடைக்கலாம். மற்றது அனுர கடசிக்குத்தான் என்பது எனது ஊகம். தமிழரசு கட்சி அந்த ஒன்றுக்கே... தலையால் தண்ணி குடிக்க வேண்டி வரும். 😂- கருத்து படங்கள்
- இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
- காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ! வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர்கள் ஏன் இங்கு வருகை தந்தீர்கள் என்று கேட்கும் போது தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார். அத்துடன் அழைப்பது நல்லது விடையம் என்றும் நம்மிடம் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இதற்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் மேலும் நாங்கள் தெரிந்து பொய் சொல்பவர்கள் அல்ல. நாங்கள் பொறுப்போடு பதில் வழங்கிவிட்டு வருபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1405507- தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் - தமிழ் அரசு கட்சி வேட்பாளர் ச.குகதாசன்
- விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும்! – எலோன் எச்சரிக்கை!
விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும்! – எலோன் எச்சரிக்கை! விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும் என செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன், 3000 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து எலோன் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாகக் குறைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு விரைவில் திவால் ஆகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி நடைபெறும் பொது தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹரிசும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் எலோன் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் ட்ரம்பின் பிரச்சார குழுவினருக்கு நிதி உதவி அளித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1405484- சிரிக்கலாம் வாங்க
- வன்னியில் வேட்புமனு நிராகரிப்பு; தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்றம்!
வன்னியில் வேட்புமனு நிராகரிப்பு; தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்றம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும், அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், உண்மைகளை கருத்திற்கொண்ட உயர் நீதிமன்றம், பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என இன்று தீர்ப்பளித்தது. அதேநேரம், அவரது வேட்பு மனுவை அங்கீகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1405411- முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு! 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபரின் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது . இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபரின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என முன்னாள் கடற்படைத் தளபதி மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வசந்த கர்ணகொடவுக்கு எதிரான மூவரடங்கிய உயர் நீதிமன்றக் குழாம் முன்னிலையில் விசாரணை நடத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்தது. இதன்படி, குறித்த மனுவை விசாரிப்பதற்காக மேன்முறையீட்டு தலைமை நீதிபதியினால் ஐந்து பேர் கொண்ட மேன்முறையீட்டு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1405408- இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
தாக்குதல் அச்சம்; இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த பிரட்டன்! அறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் புதுப்பித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு, அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவித்தல் வரும் வரை அறுகம் வளைகுடா பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, அறுகம்பை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் எடுத்துள்ளனர். அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வு அமைப்புகளும் ஏனைய பாதுகாப்புப் படையினரும் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அறுகம்பை வளைகுடா மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சர்ஃபிங் செய்யும் பிரபலமான இடங்கள் காரணமாக இஸ்ரேலியர்கள் அடிக்கடி அங்கு செல்வதாகவும், அண்மைக்காலமாக கிடைத்த தகவல்கள் அவர்களை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெளிவுபடுத்தினார். கொழும்பில் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இதுவரையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனவே பொதுமக்கள் எத்தகைய அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1405367 - வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.