Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அனுரவின் இப்படியான வெருட்டல்கள் இல்லாவிட்டால்…. இவர்கள், பெரிய கொம்பு முழைத்த ஆட்கள் மாதிரி நாட்டாண்மை செய்து கொண்டு இருப்பார்கள். இப்ப பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கின்றார்கள். 🤣
  2. ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய மேலதிக அரசாங்க வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை அவை கையளிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1404815
  3. இவர் என்ன வழி விடுகிறது. 😃 இந்தத் தேர்தலுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளப் படுவார். 😂 எல்லாம்... பட்டுத்தான் தெளிய வேண்டும் என்று விதி இருந்தால், நாம் ஒன்றும் செய்ய முடியாது. 🤣
  4. இவர்களுக்கு இந்தியா நல்ல கொழுத்த சம்பளம் கொடுத்து வைத்திருக்குது போலை. அதுதான்... இந்தியாவின் சீலைத்தலைப்பில் தொங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவோடு இவர்கள் மினக்கெடுகின்ற நேரம், சீனாக்காரனுடன் சேர்ந்து அரசியல் செய்து இருந்தாலும்... பிரயோசனமாக இருந்திருக்கும்.
  5. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
  6. 400 பில்லியனுக்கும் மேல் கடன் பெற்றுள்ள தற்போதைய அரசாங்கம் – நாடு மீண்டும் அதள பாதாளத்துக்கு செல்லுமா? தற்போதைய அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். நிதி அதிகாரம் ஜனாதிபதியிடம் அல்ல. நாடாளுமன்றத்திடம் உள்ளது. ஜனாதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது, அது எவ்வாறு செய்யப்பட வேண்டும், சரியானதா? அல்லது தவறானதா? எனக் கணக்கிடுவது அவசியம். நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பும் நாடாளுமன்றத்திடம் உள்ளது. எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வதற்கு தகுதியானவர்கள் நாடாளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாடு மீண்டும் அதள பாதாளத்திற்குச் செல்லும். முன்னைய அரசாங்கம் கடன் பெற்று, மக்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது, அந்த பணம் முன்னனைய அரசாங்கத்தால் திருடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்தது. அதேபோலவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1404776
  7. அநுரவின் கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதா? – செல்வம் அடைக்கலநாதன் சாடல். அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார். அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ‘ஒருவன்’ பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் அவர் வலியுறுத்தியதாவது, ”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால், இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது. வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும். 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது. இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார். https://athavannews.com/2024/1404797
  8. போருக்குப் பின்.... தமிழ் அரசியல் கட்சிகள் விட்ட பிழைகளால் தானே... மக்கள் தென்னிலங்கை அரசியலை நாட வேண்டி வந்தது. மக்கள் அதனை விரும்பி ஏற்கவில்லை, மாறாக…. தென்னிலங்கை அரசியலை நோக்கி தள்ளப் பட்டார்கள் என்பதே உண்மை. நிலைமை கட்டுமீறி போனபின்பும்... தம்மை சுய பரிசோதனை செய்யத் தயார் இல்லாத தமிழ் அரசியல் தலைமைகளை என்ன வென்று சொல்வது. தாமாக திருந்த மாட்டார்கள் எனும் போது... முதலில் பதவி ஆசை, கதிரை ஆசை பிடித்த சுயநல கும்பல்களை துடைத்து எறிய வேண்டும்.
  9. ஈழப்பிரியன்... நிச்சயம் வைத்தியசாலையில் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் ஒருவர் அரசியல் செல்வாக்குடன் இருந்திருப்பார். அவர்களை மாற்றல் செய்வித்து... தனது நலனை செழுமை ஆக்கியிருப்பார் என நினைக்கின்றேன். இவர், மகாஜனா கல்லூரியின் பழைய மாணவராம்.
  10. யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி ஆரம்பித்து விட்டது. எமது விளம்பர அனுசரணையாளர் @வீரப் பையன்26 அவர்களை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂
  11. முருகேசு சந்திரகுமார்... சஜித் பிரேமதாசவின் கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். சின்னம்: தொலைபேசி. (கல்குலேட்டர் அல்ல) 😂
  12. விசுகர், கனவு காண்பதற்கும் ஒரு நியாயம் வேண்டாமோ.... சுமந்திரன் பாரளுமன்றம் போறதுக்கே பெரிய இழுபறியாய் கிடக்கு, இதுக்குள்ளை... 15 விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போற பிளான் இருக்குதாம்.
  13. மிக்க மகிழ்ச்சி வாதவூரான். பலர் கலந்து கொண்டால்தான்... முசுப்பாத்தியாய் இருக்கும். யாழ் மாவட்டத்தில் 6 எம்.பி பதவிக்காக 396 வேட்பாளர்களும் வன்னி மாவட்டத்தில் 6 எம்.பி பதவிக்காக 423 வேட்பாளர்கள் போட்டியிடும் போது.. நாமும் யாழ். கள போட்டியில் அதிகளவிலான ஆட்கள் கலந்து கொள்ள வேண்டும். அநேகமாக இம்முறை திடுக்கிடும் முடிவுகள் வரும் என்பது மட்டும் நிச்சயம். 🙂
  14. கந்தையா அண்ணை... இவ்வளவு நாட்டு நடப்புகளை தெரிந்த நீங்கள் பயப்படலாமா? ஒரு கணிப்புத்தானே, எவ்வளவு தூரம் சரியாக கணித்திருக்கின்றோம் என்று எம்மை நாமே.. சோதித்துப் பார்க்க நல்ல ஒரு சந்தர்ப்பம். தவற விடாதீர்கள். துணிந்து போட்டியில் இறங்குங்கள்.
  15. டாக்டர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா அனுரவின் கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். சின்னம்: திசைகாட்டி.
  16. 15 பிளாஸ்ரிக் கதிரைகளுடன் ஒரு மேசையும் இலவசமாக கிடைக்கும். 😂 “ஆ”வெண்டு பார்த்துக் கொண்டு இருங்கோ… சுமந்திரன். 🤣 நீங்கள் செய்யிற வேலைக்கு... 15 செருப்படிதான் கிடைக்கும். வாங்க ரெடியாய் இருங்கோ. 😂
  17. "யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி" கந்தப்பு அவர்களால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 👇 கீழுள்ள இணைப்பிற்கு சென்று, போட்டியில் பங்கு பற்றுங்கள். 👇
  18. யாழ். கள தேர்தல் போட்டியை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றி கந்தப்பு. 👍🏽 நல்ல கேள்விகள். நன்றாக யோசித்து பதில் சொல்ல வேண்டும். நிச்சயம் நானும் போட்டியில் கலந்து கொள்வேன். மற்றவர்களையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப் படுத்துகின்றேன். மீண்டும் நன்றிகள் கந்தப்பு. 🙏
  19. ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து! ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது. இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் டேங்கர்கள் தடம் புரண்டதாகவும், அவற்றில் இரண்டு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல யானைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவ‍ேளை ரயில் தடம் புரண்டதன் காரணமாக குறித்த மார்க்க மூடான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பாதையும் பாரியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், இன்று (18) காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டது. மட்டக்களப்பு-கொழும்பு பிரதான பாதையின் ரயில் சேவைகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1404652
  20. ஆம் விசுகு. அதுகும்... இவரின் கொலைக்காக கருணாவும், புளொட்டும் கைகோர்த்தது என்றால், தமிழருக்கு பலன் கொடுக்கக் கூடிய எப்படியான ஆளுமை அவர் என்பதை புரிந்து கொள்ளலாம். தமிழன் நன்மை பெறுவதை இந்தத் தீய சக்திகள் விரும்பவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.