Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அய்…. கோசானை மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. பாஸ்…. காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லெறிவார்கள். அதை எல்லாம் மனதில் வைக்காமல், @கந்தப்பு அவர்கள் நடத்தும் பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொண்டு உங்கள் கணிப்பை சொல்லுங்கள்.
  2. எல்லாம் போச்சா... சுமந்திரனின், அமைச்சர் கனவில் மண் அள்ளிப் போட்டு விட்டார்களே. 😂 உளறு வாயனுக்கு, ஆப்பு வைத்து விட்டார்கள். 🤣
  3. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம். 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம். 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம். 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம். 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை. 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை. 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம். 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை. 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை. 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை. 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை. 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம். 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம். 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம். 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) ஆம். 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம். 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம். 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம். 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை. 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம். 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம். 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம். 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம். வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி. 3 இடங்கள். 28) வன்னி தமிழரசு கட்சி. 3 இடங்கள். 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி. 2 இடங்கள். 30)திருமலை தேசிய மக்கள் சக்தி. 2 இடங்கள். 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி. 3 இடங்கள். 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி. 4 இடங்கள். 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி. 4 இடங்கள். 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி. 11 இடங்கள். 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 இடம். 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0. ஒன்றும் இல்லை. 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) அர்ச்சுனா இராமநாதன். வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி. 39) உடுப்பிட்டி தேசிய மக்கள் சக்தி. 40) ஊர்காவற்றுறை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி. 42) மன்னார் தமிழரசு கட்சி. 43) முல்லைத்தீவு. தேசிய மக்கள் சக்தி. 44) வவுனியா. தேசிய மக்கள் சக்தி. 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி. 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி. 47) திருகோணமலை தேசிய மக்கள் சக்தி. 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி. 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி. 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி. 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 5 இடங்கள். 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 6 இடங்கள். 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி. 1 இடம். 54)தமிழரசு கட்சி 7 இடங்கள். 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 இடம். 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 இடம் 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 14 இடங்கள். 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 54 இடங்கள். 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 138 இடங்கள். 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 2 இடங்கள். போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  4. @Kapithan கனடாவில் உள்ள கண் வைத்தியரிடம் கண்ணை காட்டி பரிசோதிப்பதற்குரிய செலவை கந்தையா அண்ணையின் அக்கவுண்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும். 😂
  5. அபின், கஞ்சா கடத்தி பிடிபடுகிறவனை... பிணை எடுக்கிறவன் எல்லாம், சட்டத்தரணி என்ற போர்வையில்... பாராளுமன்றம் போக நினைப்பது கடைந்து எடுத்த முள்ளமாரித்தனம்.😂
  6. ரொய்லற் பேப்பரை விட... அதை பாதுக்காக்க போட்ட, பூட்டு விலை அதிகம்.
  7. ஈழத்தின் மருமகன், தங்கத் தமிழன், வருங்கால முதல்வர்... விஜய் வாழ்க. 🙂
  8. ஆயுதக் குழுக்கள் புடை சூழ... சொந்த மண்ணில் வாக்குச் சேகரிக்கும் சுமந்திரன்.
  9. சுமந்திரனின் அல்லக்கைகள் ஆயுதத்துடன் ஊருக்குள் நடமாடுவதை பார்க்க, மணிவண்ணனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மீது, தாக்குதல்களை நடத்தியவர்கள் இவர்களாகவும் இருக்கலாம். 😮 சொந்த ஊருக்குள், வாக்குச் சேகரிக்க ஆயுதம் எதற்கு? இதே ஆயுதத்துடன் சுமந்திரன்... சிங்கள, முஸ்லீம் பகுதிகளில் ஒரு அடி எடுத்து வைத்து நடந்து விட முடியுமா? சிங்களவனும், சோனகனும்... சுமந்திரனை, "*****" எடுத்து விடுவார்கள். சொந்த இனத்தவனை வெருட்டி... வாக்குச் சேகரித்து பாராளுமன்றம் போக வேண்டிய "ரவுடி" அரசியலை, சுமந்திரன் செய்வது ஏன்? இது மற்றைய கட்சிகளுக்கும் முன்னுதாரணமாகி.. ஆயுதத்தை தூக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது கூட தெரியாத... *********** ************ சுமந்திரன்.
  10. (விக்னேஸ்வரனின்....) மணிவண்ணன் தலைமையில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி.
  11. மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் திட்டம்! -ஜனாதிபதி தெரிவிப்பு. மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். அத்துடன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பலமான நாடாளுமன்ற அதிகாரமும் அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி கடந்த காலங்களில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். குறித்த உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகளே மக்கள் மத்தியில் அவ்வாறான கோபம் ஏற்படக்காரணமாக இருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே ஊழலற்றவர்களைக் கொண்டு பலமிக்கதொரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1406017
  12. எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி! எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 17 உள்ளூராட்சி பிரிவுகளில் 17,295 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை வென்றுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை வென்றது. அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சுயேட்சை குழு 2,568 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது. பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி 1,350 வாக்குகளை பெற்று, ஒரு ஆசனத்தை வென்றது. தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது. இதேவேளை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 55,643 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1406013
  13. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1405986
  14. சுமந்தரனின் இந்தக் காணொளிக்கு... வாசகர் கொடுத்த பின்னூட்டங்கள். ஒரு பானை சோற்றுக்கு... ஒரு சோறு பதம் என்பார்கள். ஆனபடியால்.... மேலதிகமாக சுமந்திரனைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை. பிரித்தது சுமந்திரனேதான்.எனிமேல் உள்ள காலங்களில் சுமந்திரனை வெளியேற்றி நல்ல ஒரு கட்சியாக வலம் வரும் என நினைக்கிறேன். @varansinna807 கரு நாகத்தை விட அதிகம் நஞ்சு கொண்டவன் இந்த சுமந்திரன். @airportlimo3582 யாழ்மாவட்டமக்கள் இம்முறை தக்கபாடம் கற்பிப்பார்கள் @ponniahsanthakumar9428 நேரத்தை வீணாக்கும் பேட்டி @lfcmanwearemighty1495 வணக்கம் நெறியாளர் அவர்களே முதற்கண் சமந்திரனிடம் பேட்டி எடுத்தற்கு நன்றி 1 நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை சுமந்திரன் சொல்லாமல் வேறுவிதமாக பதில் சொல்லி தன்னை நல்ல வராக காட்ட முயல்கின்றார். 2 நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை சு -ம வழங்காது விட்டால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும் . அதைவிட அவரை தொடர்ந்து பேச அனுமதிக்க விட கூடாது. 3 இந்த பேட்டியை பார்க்கும் புதிய கேள்விகள் கேட்கப்பட்ட இல்லை 4 இன்னும் நிறைய காத்திரமான கேள்விகளை கேட்டு இருகலாம் 5.இந்த பேட்டியை பார்க்கும் போது சு -ம தெரிவு செய்த கேள்விகளை தான் உங்களுடைய கேள்விகளாக கேட்டது போல இருந்தது . 6 ஒரு நெறியாளர் என்றால் பேட்டியளித்தவரிடம் எந்தவிதமான சமரசம் இல்லாமல் உங்களுக்கு சரி நினைத்ததை கேட்ட வேண்டும்.🎉🎉🎉🎉 @umepathyvalu926 இவர்களின் தூரநோக்கு அரசியல் சிந்தனை இல்லாமல் போனதால் இன்று திரிகோணமலை அம்பாறை போன்ற இடங்களில் பிரதிநிதித்துவம் பறிபோகும் நிலையில் உள்ளது. @abicreations2130 இவ்வளவு காலமும் கிழித்தது கானும் நடையை கட்டு ராசா.. @thambysiva1217 புடுங்கின ஆணி எல்லாம் காணும் ,யாருக்கு கம்பு சுத்துறிங்க. @louiesbasti4606 தம்பி பூவன் நீர் பெரிய வீராப்பு கதைச்சிட்டு சுமந்திரனை நேரில் கண்டதும் பம்மிற மாதிரி இருக்கே? ஏன் மக்களின் கேள்விகளை நாகரீகமான முறையில் கேட்க என்ன தயக்கம் இதைப்பார்த்தால் நேர்காணல் நேர்காணல்மாதிரி தெரியவில்லை சுமந்திரனுக்கு விளம்பரம் செய்தமாதிரி இருக்கு!! @selliahsooriyapragasam3325 சுமந்திரன் ஐயா அவர்களே ஏதோ உங்களின் முகத்தில் பயம் தெரிகிறது.. எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசியலில் நன்றாக கதைக்கக் கூடியவர் தான் ...ஆனால் இந்தத் தேர்தலில் வெல்லக் கூடியவர் அல்ல... @Thegodisbes அது என்ன திருகோணமலையில் சேர்ந்து போட்டியிட முடியும் மற்ற மாவட்டம் மட்டும் முடியாது எல்லாம் பதவியை தக்க வைப்பது தான் திட்டம் இவர்களை எல்லாம் நம்பவே கூடாது என்பதே உண்மை 💯💯💯💯 @Piratheep1985 கேள்வியும் பதிலும் இழுவையாக இருக்கு இருவரின் வீராப்பும் எங்கே போனது என்று மக்கள் கண்டுபிடித்து விட்டார்கள். @keethanchalijegarajah5278 அண்ணா மன்னிக்கவும் உங்கள் கேள்வியில் தலம்பல் தெரிகிறது அவரை நீங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும். அவரல்ல இவர் உங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கவில்லை.இது நேரத்தை வீணடித்த பேட்டி @thiyathiya4435 தம்பி பூவன், ஏன் பதுங்கி பதுங்கி பயந்து கேள்விகளை கேட்கின்றீர்கள்? கெட்டவனிடம் பேசும் போது இன்னும் துணிவாக கேள்விகளை கேட்க வேண்டும். இல்லாது போனால் ஊடக துறையும் ஒரு நாள் அழிந்து போகும். இவ்வளவுதான் உங்கள் வீராப்பு? @sutharsundar2192 கூட்டாச்சியில் ஒன்றும் கிழிக்க முடியல இனிப்போய் கிழிப்பிகள் என்பது உருட்டு. நீர் ஆர் தலைவருக்கு கட்டளை இட உமது கட்சிப் பதவி என்ன ??? த. கட்சியில் பொதுக்குழு கூடி முடிவு எடுக்க எடுக்க முடியாத???? எல்லா தீர்மானங்களையும் மத்திய குழுவும் நீரும் தான் எடுப்பீர்கள்??? @sivakumaranutharsan2301
  15. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்? நாடாளுமன்ற தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகமலும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று, சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்று, நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் கணக்கிடப்படும் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும், அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். https://athavannews.com/2024/1405925
  16. தரமான செயல். மாணவர்களுக்கும், ஓராயம் அமைப்பினருக்கும் பாராட்டுக்கள். இந்த முன்மாதிரியை மற்றைய பாடசாலை மாணவர்களும் பின்பற்ற வேண்டும். கார்த்திகை, மார்கழி மாதங்கள் நெருங்கும் வேளை... விதைப்பந்து தூவுவதற்கு, சரியான தருணம் இது.
  17. கடுமையாக்கப்பட்டுள்ள சட்டம் – 5 வருடம் சிறை. பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரின் குடும்பத் தகராறுகள் குழந்தைகளை கடுமையாகப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1405868
  18. வெளியானது ஜனாதிபதி தேர்தலுக்கான செலவின அறிக்கை – 19.9 கோடி செலவு செய்துள்ள மொட்டு கட்சி. தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் ஒருவருக்காக, வேட்பாளர் ஒருவர் 109 ரூபாவை செலவிட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவின கணக்கறிக்கை வெளியாகியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்காக 186 கோடியே 82 இலட்சத்து 98, 586 ரூபாய் செலவிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 பேர் உரிய செலவின அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் தமது செலவின அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர். ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 83 கோடியே 62 இலட்சத்து 58,524 ரூபாவை செலவு செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவும் தமது செலவறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஜேவிபி கட்சியின் வங்கி கணக்குகளில் பெறப்பட்ட நன்கொடைகள் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளார்களால் வழங்கப்பட்ட 52 கோடியே 79 இலட்சத்து 99,089 ரூபாய் 38 சதத்தை தேர்தல் நடவடிக்கைகளுக்காக அவர் செலவிட்டுள்ளார். சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளராக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிக செலவினத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துள்ளார். அவர், 99 கோடியே 3 இலட்சத்து 27,687 ரூபாய் 16 சதத்தை செலவிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எழுது பொருட்களுக்காக மாத்திரம் 20,000 ரூபாவை பயன்படுத்தியுள்ளதாக அவரது செலவறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், இலத்திரனியல், அச்சு ஊடக மற்றும் சமூக ஊடக பிரசார நடவடிக்கைகளுக்காக இரண்டு கோடியே 31 இலட்சத்து 44,987 ரூபாவை செலவிட்டுள்ளதுடன், 38 கோடியே 89 இலட்சத்து 39,000 ரூபாவை தேர்தலுக்காக செலவிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொத்த வருமானம் 18.8 கோடி என்பதுடன், 19.9 கோடி ரூபாய் செலவினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரன், பத்தரமுல்ல சீலரத்ன தேரர், சரத் கீர்த்திரத்ன மற்றும் ஏனைய 10 கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது செலவறிக்கைகளை இதுவரையில் சமர்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1405865
  19. பிலிப்பைன்சில் டிராமி புயல்-65 பேர் உயிரிழப்பு! பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட இயற்றை அனர்த்தங்களில் சிக்குண்டு, 65 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்சின் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும. இங்கு பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையை தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதுடன் இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், தற்போது அங்கு மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமற் போயுள்ளதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1405910
  20. ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஈரானில் உள்ள பல இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று காலை வான்வழித் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன ஒக்டோபர் 1ஆம் திகதி ஈரானின் கிட்டத்தட்ட 200 ஏவுகணைத் தாக்குதல்கள் மீதான தாக்குதல் உட்பட, பல மாதங்களாக ஈரானிய ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. அதன்படி ஈரான் தலைநகரின் மேற்கு மற்றும் தென்மேற்கில் அமைந்துள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இந்த வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தாக்குதல்களின் குறிப்பிட்ட இலக்குகள் குறித்து இஸ்ரேல் இன்னும் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை. இதற்கிடையில், ஈரானைத் தவிர, சிரியாவின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் உள்ள சில இராணுவ நிலைகளை இஸ்ரேல் குறிவைத்துள்ளதாக சிரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1405893
  21. @Kandiah57 லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரித்த தமிழரசு கட்சி வேட்பாளரின் செய்தி இங்கு உள்ளது.
  22. அரசியலுக்கு வருவதே… பணம் சம்பாதிக்கத்தானே. மூன்று நாட்களுக்கு முன் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒருவர், வாக்காளர்களுக்கு 5’000 ரூபா கொடுத்ததாக செய்தி இங்கு பதியப் பட்டு இருந்தது. அவர் தேர்தலுக்கு செலவழித்த காசை… சிங்களத்துக்கு தனது இனத்தை விற்று, காட்டிக் கொடுத்துத்தானே மீண்டும் எடுக்க முடியும். முன்னைய காலங்களில்…. தூய்மையான அரசியலை செய்தார்கள். இப்போ இருப்பவர்கள் கள்வர் கூட்டம். எங்கு தட்டிச் சுற்றலாம் என்று அலைந்து கொண்டு திரிகிறார்கள்.
  23. அனுர ஜனாதிபதியாக வந்திருக்காவிடில், இன்னும் 10 வருசத்துக்கு இருந்திருப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.