Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. எந்த எந்த இடத்தில்.. எப்படி நடக்க வேண்டும் என்ற அடிப்படை பண்பும் இல்லாத மனிதன்தான் அர்ச்சுனா. பாராளுமன்றத்தில் இருந்து அர்ச்சுனா அனுப்பிய இந்தக் காணொளியை பார்க்க உண்மையிலேயே கோபம்தான் வந்தது. இன்னும் எத்தனை கேவலங்களை செய்து மானத்தை வாங்கப் போகின்றாரோ அச்சமும் கூடவே உள்ளது. பேசாமல் தனது இடத்தை மயூரனுக்கு கொடுத்துவிட்டுப் போவது சிறப்பு.
  2. பிரதி சபாநாயகராக முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு! பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல ( Asoka Sapumal Ranwala) நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து 10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1409273
  3. இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி! இனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக மக்களின் அபிலாஷையாக இருந்த தேசிய ஐக்கியத்தை நாட்டில் கட்டியெழுப்புவதற்கான பாரிய சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது. நாட்டு மக்களுடனான உறவுகளை பாதிக்க தானும் அரசாங்கமும் இடமளிக்க மாட்டோம். இந்த ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தாங்கள் கட்டுப்பட்டு அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 10 ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வின் போதான தனது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23 ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளது. வறுமையை ஒழிப்பதற்கான முதல் படியாக ‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்தொகை கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ஆதரிக்கின்றோம். மேலும், எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றும், ஒக்டோபர் மாதம் முதல் அனைத்து ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளிலும் ரூ.3,000 சேர்க்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடாளுமன்றில் முன்மொழியப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1409323
  4. இப்பிடி தெரிந்திருந்தால்... நானும் பாரளுமன்றத்துக்கு போயிருப்பனே... - சுமந்திரன் மைண்ட் வாய்ஸ். - 😂 🤣
  5. ஆமாம்... இரண்டு பேரும் ஓட்டகங்கள். சின்ன இடம் கேட்டு உள்ளே வந்து... முழுக் கூடாரத்தையும் காலி பண்ணி விட்டுத்தான் போவார்கள். 😂
  6. சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வில் ரவி கருணாநாயக்க! புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க, தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது என தெரிவித்தார். இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை என்றும் முழு கட்சியினருக்கும் பிரச்சினை இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதுடன், பலமான அரசியல் சக்தியாக அதனை சரியான பாதையில் வழிநடத்துவதே தமது கவனம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1409307
  7. சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும், "ரியூசன்" வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும் போலுள்ளது. 🙃
  8. யாழ் களத்திலுள்ள பிரபல அரசியல் ஆய்வாளர்களை பின்தள்ளி 😂 46 புள்ளிகள் எடுத்து, நான்காவது இடத்தில் இருக்கும் @நிலாமதி அக்காவிற்குப் பாராட்டுக்கள். 👍
  9. ஹிருணிகா பிரேமசந்திர மீது இருக்கும் பல்வேறு பட்ட விமர்சனங்களுக்கு அப்பால்... இவரின் துணிந்த கருத்துக்கள், இடம், பொருள், ஏவல் பார்க்காமல்.... உடனடியாக களத்தில் நின்று போராடும் தன்மை பாராட்டப் பட வேண்டியது. "அரகலய" போராட்டத்தின் போது... கோத்தா இருந்த ஜனாதிபதி மாளிகைக்குள், நான்கு அடுக்கு கடுமையான பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்ற துணிச்சலான பெண்மணி. மகிந்த, ரணில் ஆட்சியில் இருந்த போது கூட.. மக்களை திரட்டி... அவர்களின் வீட்டு வாசலில் நின்று போராடியவர். இந்த அரசாங்கம் அசுர பலத்துடன்... பாராளுமன்றத்தில் இருக்கும் நிலையில்.. இவர் போன்ற துணிச்சலான ஒருவர், பாராளுமன்றத்துக்குள் இருப்பது காலத்தின் கட்டாயம்.
  10. சீனர்களுக்கு... பருத்தித்துறையில் ஒரு கண். அது இந்தியாவை குறி வைப்பதாகவோ, அல்லது கடுப்பு ஏற்றுவதாக மட்டுமே இருக்க முடியும். இந்த முறை... சீனத் தூதுவர், இங்கிருந்து இந்தியா எத்தனை கிலோ மீற்றர் என கேட்கவில்லை. போன முறை கேட்டு அறிந்து கொண்டது நினைவு இருக்கும் என நம்புகின்றேன். 😂
  11. எவ்வளவு பணம் இருந்தாலும்.... அரசாங்க சொத்தை அனுபவிப்பதே தனி சுகம். சம்பந்தனின் அரச வீட்டுக்கு "பெயின்ற்" அடிக்க, சுமந்திரன் மூன்று கோடி ரூபாயை, அரசிடம் இருந்து பெற்றுக் கொடுத்ததாக இங்குதான் வாசித்தேன். பல வருடங்களாகியும் வீட்டை அரசிடம் ஒப்படைக்காதவர்களிடம்... "டீல்" பேசிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வெளியே தூக்கி எறிந்து விட்டு, வீட்டை கையகப் படுத்த வேண்டும். மயிலே... மயிலே... இறகு போடு என்றால்.. மயில் போடாது. 😂
  12. கஞ்சிப்பானை இம்ரான், பூக்குடி கண்ணா... இப்படியான நல்ல பெயர்களை? எண்சாத்திரம் பார்த்து வைத்திருப்பார்களோ. 😂
  13. அவர்களுக்குத்தான் பதவி கொடுத்து... வாயில் கொழுக்கட்டையை செருகி விட்டார்கள். பதவிக்குத் தானே... இந்த உக்கிர ஆட்டம் ஆடியவர்கள். 😂 இனி... சிறுபான்மை இனம் (முஸ்லீம் / தமிழர்) ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று, கம்பு சுத்திக் கொண்டு வரமாட்டார்கள் என நினைக்கின்றேன். 🤣
  14. மக்களாக ஒதுக்க முதல்... இளையவர்களுக்கு வழி விட்டு அரசியலில் ஒதுங்குவது நல்ல விடயம்.
  15. நம்பிக்கை தரும்... அருமையான கவிதையை எழுதிய பசுவூர்க்கோபிக்கு நன்றி. புதிய அரசு... தமிழ் மக்களின் நீண்ட கால ஏக்கத்தையும், துயரத்தையும் போக்க முன் வர வேண்டும். இராணுவ முகாம் அகற்றுதல், பாதை திறப்பு போன்ற விடயங்கள் நல்ல முன்மாதிரியாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
  16. சீனத் தூதுவர் சுற்றி, சுற்றி... வடக்கு, கிழக்கில் தான் திரிகின்றார். இந்தியா... இதனை நிச்சயம் விரும்ப மாட்டாது. விடுதலைப் புலிகளை அழிக்க உதவி செய்த பலனை இந்தியா அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து கொண்டுள்ளது போலுள்ளது.
  17. ரணில், இந்தியாவிற்குப் போனதன் நோக்கம்... கோவில் தரிசனமா அல்லது மோடி தரிசனமா. 😂
  18. ந‌ன்றி மோக‌ன் அண்ணா.
  19. Sujee Van இது ஒரு வரலாற்று தவறாகக் கூட இருக்கலாம் ஒரு ஆட்சியை மாற்றக்கூடியதாகவும் இருக்கலாம் ஒரு நாள்.
  20. கௌசல்யாவிடம்... சுமந்திரன், படு தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டன.
  21. கௌசல்யாவிடம், சுமந்திரன்... படு தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டன.
  22. ஓம்... புத்தன். முஸ்லீம் நாடுகளிடமிருந்து பணம் பெற்று காத்தான் குடியை கிட்டத் தட்ட அரபு தேசம் மாதிரி நினைப்பது போன்றவை எல்லாம்... அவர்களுக்கு ஒரு வெறுப்புக் கலந்த அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.