Everything posted by தமிழ் சிறி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவுக்கு இஸ்ரேலில் என்ன வேலை? இஸ்ரேலுக்கும்- பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது போர்க்கப்பலை அனுப்பிய விடயம் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது ”இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது விமானம் தாங்கிப் போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு இஸ்ரேலில் என்ன வேலை? காசாவிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குண்டுமழை வீசுவதற்கே அமெரிக்கா இந்த வேலையில் இறங்கியுள்ளது. காசாவுக்குள் தண்ணீர் செல்லும் பாதைகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மருத்துவமனைகள் செயற்படும் நிலையில் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பாடசாலை என கருணையின்றி குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. உலகம் இதனை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. யாரும் எதுவும் சொல்வதில்லை. மனித உரிமைகளுக்கு என்ன ஆனது?” இவ்வாறு எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார். https://athavannews.com/2023/1353456 ############### ################ ######### இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை : மௌனம் காக்கும் மேற்கத்திய நாடுகள். காசா பகுதியை இஸ்ரேல் முழுமையாக முற்றுகையிட ஆரம்பித்துள்ள நிலையில் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். காசா மீது கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்படும் தீவிரமான குண்டு தாக்குதலில் 970 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2.2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் நிலம், கடல் மற்றும் வான்வழி ஊடான முற்றுகைக்கு மத்தியில் எங்கும் செல்ல வழியின்றி வாழ்கின்றனர். இந்நிலையில் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் மிருகத்தனமான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1353491- கருத்து படங்கள்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் வெண் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்? “தடை செய்யப்பட்ட வெண் பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாக” ஹமாஸ் போராளிகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மோசமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இத்தாக்குதலில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது. இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், போரில் பயன்படுத்த சர்வதேச நாடுகள் மத்தியில் தடை விதிக்கப்பட்டிருந்த வெண் பொஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வெண் பொஸ்பரஸ் குண்டுகள் நெருப்புக் கோளமாக வெடிப்பவை. சுமார் 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும், நெருப்பையும் உமிழ்வதோடு, மனிதர்களை நடைபிணமாக முடக்கக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1353392- இரசித்த.... புகைப்படங்கள்.
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன – இஸ்ரேல் இராணுவம். இஸ்ரேல் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. காசா பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இஸ்ரேலியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாகவும் அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. இதேநேரம் காசாவை விட்டு வெளியேற விரும்பும் பாலஸ்தீனியர்களுக்கு திறக்கப்பட்டிருந்த எகிப்து வழியான பாதை தற்போது மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. https://athavannews.com/2023/1353197 ################## #################### ############## குறைந்தது 770 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு. இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 770 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதலில் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறந்தவர்களில் 140 குழந்தைகள் மற்றும் 120 பெண்கள் அடங்குவதாகவும் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். https://athavannews.com/2023/1353294 ############## ################ ################ தாக்குதல் நடத்தினால் ஒவ்வொரு பணயக் கைதிகள் உயிரிழப்பார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் போதும் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்படுவார் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸ் உறுப்பினர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து சென்றுள்ளனர். இவ்வாறு பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட மக்கள் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை எவ்வித முன்னறிவிப்புகளும் இன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பாரிய தாக்குதலில் 1500 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள அதேநேரம் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, ஹமாஸுக்கு எதிராகப் போரிடுவதற்காக இஸ்ரேல் இராணுவத்திலிருந்து வெளியேறிய சுமார் 300,000 பேர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மொஸ்கோவிற்கு விஜயம் செய்வதற்கான முயற்சிகளை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், மேற்கொண்டு வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2023/1353158- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- கருத்து படங்கள்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான அறிக்கைக்கு ஐநா பாதுகாப்பு சபை உடன்படவில்லை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போருக்கு மத்தியில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் கூடிய ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸை கடுமையாகக் கண்டிக்குமாறு சபையின் 15 உறுப்பினர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்த போதும் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவை வழங்கவில்லை. மேலும் சுமார் 90 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது ஐ.நா.வின் மத்திய கிழக்கு அமைதித் தூதுவர் டோர் வென்னஸ்லாந்திடம் விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1352929- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
//எனது மகள் Shani Louk ஜேர்மன் பிரஜாவுரிமை உடையவர், இன்று காலை ஒரு உல்லாசப் பயணிகள் உள்ள குழுவில் இருந்து இஸ்ரேலின் தென் பகுதியில் வைத்து பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினரால் ஒரு வாகனத்தில் நினைவு இழந்த நிலையில் கடத்தப் பட்டு, காஸா பகுதியை நோக்கி சென்ற காணொளியை தன்னால் துல்லியமாக பார்க்கக் கூடியதாக இருந்தது. தயவு செய்து ஒவ்வொரு உதவியும், அதனைப் பற்றிய புதிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்பவும். மிக்க நன்றி.//- கருத்து படங்கள்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் குண்டு மழை; 200 பேர் உயிரிழப்பு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளி குழுவுக்கும் இடையே மோதல் இடம்பெற்று வரும் நிலையில், ரொக்கெட் மற்றும் விமான தாக்குதல்களில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை காயமடைந்தவர்களில் 70 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஹமாஸ் போராளிகள் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு , பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரேன் , இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், லெபனானில் உள்ள போராளிகுழுக்களுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறு இருப்பினும் இரு தரப்பும் மோதலை கைவிடுமாறு ரஷ்ய ஜனாதிபதி புடின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் போரில் காயம் அடைந்தவர்களுக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்படுவதாகவும், மக்கள் இரத்ததானம் செய்ய முன்வருமாரு இஸ்ரேல் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போர் ஒரு வருடம் கடந்து நீடித்து வரும் நிலையில் , இஸ்ரேலுக்கும் பாலிஸ்தீனத்துக்கும் இடையிலான போர் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2023/1352866- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- கருத்து படங்கள்
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஆஹா... கண்ணை பாதுகாக்க இப்படி ஒரு வழியை கண்டுபிடித்த நர்ஸ்சம்மாவுக்கு ஒரு சபாஷ். 😂- சிரிக்கலாம் வாங்க
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு. காசா பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று காலை இஸ்ரேலை நோக்கி பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. ஒரு சில ஊடகங்கள் 5000 ஏவுகணைகள் வரை பாய்ந்ததாகக் கூறுகின்றன. ஆனால் ஏவுகணைகளின் எண்ணிக்கையை இஸ்ரேல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை. ஆனால் எதிர்பாராத திடீர் ஏவுகணைகள் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்க இஸ்ரேல் அரசு போர் நிலை சூழல் உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. https://athavannews.com/2023/1352824- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு