Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை! பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரானஸ் மாறியுள்ளது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 72 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமையைத் தொடர்ந்து குறித்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372228
  2. சாந்தனின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்! சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இறுதி கிரியைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேவை இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்ற பின்னர் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் நாட்டுக்கு திரும்புவார் என அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக எதிர்ப்பார்த்திருந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி உடல் நலக்குறைவினால் சென்னையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372086
  3. 33 ஆண்டுகளாய் தன் மகனின் வரவுக்காக காத்திருந்தவள் கண்ட பொழுது… 😥
  4. சாந்தனுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வ அஞ்சலி ! இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது சாந்தனின் பூதவுடல் டிப்போ சந்தியில் அமைத்துள்ள அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மூத்த போராளியான காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார். இதேவேளை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையால் அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தி நுழைந்தவுடன், ஊர்தி தரித்து நின்ற இடத்தில் வாகனத்தை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளதாகவும் , மீறி நிறுத்தும் பட்சத்தில் ஊர்தியின் சாரதி கைதுசெய்யப்படுவார் எனவும் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி எச்சரித்துள்ளார். இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றநிலைமை உருவாகியதாகவும் பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2024/1372002
  5. யாழை நோக்கிப் பயணிக்கும் சாந்தனின் பூதவுடல் – பெருந்திரளானோர் அஞ்சலி : துக்கதினமும் அனுஷ்டிப்பு! முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28.02.2024 அன்று சுகவீனம் காரணமாக அரச மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைகள் மற்றும் விமான நிலைய நடைமுறைகளையடுத்து நேற்றையதினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. வவுனியா கொண்டு செல்லப்பட்ட சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர். வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து 11 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இன்று மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் பூதவுடல் நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள், அனைத்து இடங்களிலும் துக்கதினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. அத்துடன், சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் மற்றும் கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371979
  6. வவுனியாவில் சாந்தனின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி! இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டள்ளது. அத்துடன் கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதேவேளை சாந்தனின் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371975
  7. சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன், தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் உடலநல குறைவால் உயிரிழந்தமைக்கு தமிழக அரசே காரணம் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சாந்தன் உயிரிழப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் சிறப்பு முகாமின் மனிதாபிமானம் அற்ற நிர்வாகத்தின் காரணமாக சாந்தனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து. எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார். இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் இராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் கழிப்பதற்கு திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1371988
  8. சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிக்க இடமளிக்க வேண்டும்: போராளிகள் நலன்புரிச் சங்கம் கோரிக்கை. சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமும், பொலிஸாரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது இந்திய அரசால் சட்டப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட சாந்தனின் உடலத்தை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியாத இழுபறி நிலையில் இருந்தது. இது கூட இந்திய -இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1371924
  9. யாழ்ப்பாணத்தில் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி! முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, அன்னாரின் பூதவுடல் நாளை உடுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்கள்; மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அவரது குடுப்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டு நாளை காலை 10 மணிக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி இந்திய – திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனுக்கு நீதி கோரி யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு “போராட இந்தியத் துரோகத்தை வேரறுக்க தமிழர்களாய் ஒன்றிணைவோம்” எனும் தொனியில் இந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371864
  10. நீர்கொழும்பு வைத்தியசாலையில் சாந்தனின் உடல் : மீண்டும் பிரேத பரிசோதனை. சாந்தனின் உடலானது இலங்கையில் மீண்டும் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நீண்ட இழுபறிகளின் பின்னராக நேற்றைய தினம் உறவினரிடம் கையளிக்கப்பட்டது. எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்துக்கு பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதமாகியுள்ளது. தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் பூதவுடல் கையளிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் உறவினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1371867
  11. சாந்தனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது! இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடல், இன்று அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம் இன்று முற்பகல் 11.35 மணிக்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலை உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானோர் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். விமான நிலையத்தின் விதிமுறைகள் பூர்த்தியான பின்னர், நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேரடியாக யாழ்ப்பாணம், வடமராட்சி, உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது தயாரின் இல்லத்திற்கு சாந்தனின் கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் சாந்தனின் உடல், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நல பாதிப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இன்று சாந்தனின் உடல் அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1371847
  12. சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு! உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என அழைக்கப்படும் சுதேந்திர ராசாவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது சடலம், இன்று முற்பகல் 11.35க்கு ஸ்ரீPலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்ச்சாலையொன்றுக்கு கொண்டுவரப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371829
  13. எனக்கு முகமறியாத சாந்தனின் மரணம் இத்தனை துயரை இந்த நாளில் தரும் என்று எண்ணியிருக்கவில்லை. “சட்டத்தில் சாமானியர்களுக்கு எல்லா உரிமையும் இருகிறது. நீதிதான் சாமானியருக்கு இல்லை” சாந்தனுக்காக ஒரு கணம் வணங்கிக் கொள்வோம். Kuna Kaviyalahan
  14. செய்தி கேட்ட கணம் முதலாய் சேயைத் தேடிய தாய் தான் சிந்தை எங்கும் வந்து போகின்றாள் அக்காப் பிள்ளை அம்மா ஆரோ பெத்த பிள்ளை என்னைக் கண்ட போதே உச்சி மோந்து எஞ்சில் ததும்ப முத்தம் தந்து உவகை கொண்டு உருகி நின்றவள் பெத்த பிள்ளை தன்னை காண வருவானென்று எத்தனை ஆண்டாய்க் காத்திருந்தவள் கண்டிருந்தால் எப்படி எல்லாம் அணைத்து மகிழ்ந்திருப்பாள். எல்லாம் கானலாகிப் போனதுவே Inuvaijur Mayuran
  15. வெறும் ஒரு மணிநேர விமானப் பயணத்தில் அவனால் அவனின் அம்மாவின் கரம் பற்றியிருக்கமுடியும்.. அம்மாவின் வாசத்திற்காய், அம்மாவின் அரவணைப்பிற்காய் ஏங்கிய அந்த மனிதன் இன்று தன் மூச்சை நிறுத்திவிட்டான்.. விடுதலை என அறிவிக்கப்பட்டு, 16 மாதங்கள் கடந்த பின்னர் கூட தன் அன்புத் தாயுடன் அவனை சேரவிட மறுத்த இந்திய அதிகார திமிரை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். சாந்தன்.. இனியொருபோதும் திரும்பவரப்போவதில்லை. அவனின் நினைவுகளுடன் மட்டுமே தன் எஞ்சிய காலத்தை கழிக்கப் போகின்றார் சாந்தனின் அம்மா.. வக்கற்ற இந்த தமிழினத்தை மன்னித்துவிடுங்கள் அம்மா.. கண்ணீர் வணக்கம் சாந்தன்..😭😭😭 Nadarajah Anparasan
  16. சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை! சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கல்லீரல் செயலிழப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்துள்ளார். சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371552

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.