Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நான் கண்ட யாழ்ப்பாணம்!! 40 வருடங்களின் பின்பு ஒரு மாத சுற்றுலாவாக இலங்கை சென்றேன். நான் 75, 80ளில் பார்த்த அதே கோலத்தில் தான் யாழ்ப்பாணம் இன்றும் இருக்கின்றது. கார்பெட் ரோட்டுக்களையும் வீடுகளின் வாசல் கேட்டுக்களையும் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை. உலக நகர வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. அங்கே இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரியாது உலக நகரங்களை பார்த்த ஒருவருக்கு இதன் தாக்கம் நன்கு தெரியும். யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. மட்டக்களப்பு நகரம் யாழ்ப்பாண நகரத்தை விட சுத்தம் சுகாதாரத்தில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிட அழகும் தனியார் பேருந்துகளின் அழகும் அலங்கோலமாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளைத் தவிர மற்றய நாடுகளில் தனியார் பஸ்களும் அரசு பஸ்க்களும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதை பார்க்க முடிவதில்லை. அரசு பேருந்துகளும் டிப்பர் வாகனங்களும் ரோட்டில் வரும்பொழுது எமன் எதிரே வருவது போல எண்ணம் தோன்றுகிறது. அவ்வளவு ஆபத்து நிறைந்ததாக வீதிகளில் ஓடுவதை நான் நேரடியாக பார்த்தேன். அரசு பேருந்துகள் போதையில் ஓட்டுபவர்களை விட மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிந்தது. ராணுவ முகாங்கள் எல்லா இடங்களிலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் போல ராணுவ முகாங்கள் இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு ராணுவ முகாங்கள் வட பகுதிக்கு தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. பலாலியில் ஒரு வீதி நேரடியாக ராணுவமுகாமுக்கே சென்றுவிட்டது. பின்பு நான் சுதாஹரித்துக் கொண்டு பாதையை மாற்றினேன். வீதி பிரியும் இடத்தில் எந்தவித அடையாளமும் இல்லாததால் நான் ராணுவ முகாமுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் அங்கே காவலுக்கு நின்றவர்கள் எந்தவித பதட்டப்படவும் இல்லை. புண்முகத்துடன் நின்றார்கள். நானும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு திரும்பி வேறு பாதையால் சென்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் தங்கள் பாட்டில் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுடன் எந்தவித பிரச்சனையோ அல்லது சோதனைகளோ நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனாலும் ராணுவ முகாங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றது. வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு ராணுவ முகாங்கள் தேவையா என்று எனது மனதுக்குள் கேள்வி எழுந்தது. உலகம் மாறிவிட்டது, உணவு வழங்கும் முறைகள் உணவு உண்ணும் முறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் யாழ்ப்பானத்தில் உள்ள எந்த ஒரு உணவகத்திலும் அல்லது டீக்கடையிலோ பேப்பர் கப்பில் ஒரு காப்பியையோ அல்லது டீயையோ ( Take away ) பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது நல்ல சுகாதார தரத்துக்கு இன்னும் இவர்கள் முன்னேறவில்லை என்பதை காட்டியது. அதனால் நான் எந்த ஒரு கடையிலும் டீயோ காப்பியோ குடிக்கவில்லை. காரணம் சாதாரண கடைகளில் டீ கப்பை சுத்தம் செய்யும் முறை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையல்ல. யாழ்ப்பாணத்தில் யாரும் முகம் பார்த்து புன்னகைத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தெரியாததாகவும் இருக்கலாம் அல்லது பயமாகவும் இருக்கலாம் அல்லது இவரை பார்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் எண்ணலாம் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் மற்றையவர்களை பார்த்து புன்னகைக்க தெரியாதவர்களாகவும் இருப்பது கவலையாக இருந்தது. உண்மை உரைகல்
  2. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க முயன்றதாக இரா. சாணக்கியன் எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை குறித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சாணக்கியன் பிரதமரைச் சந்திக்கச் சென்ற வேளை, அவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்குதல் நடத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், உடல் ரீதியான காயங்களையோ அல்லது தாக்குதலையோ மேற்கொள்ள எந்த உரிமையும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளே பாதுகாக்கின்றமையினால், இது குறித்து கவனம் செலுத்தி, அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இது தொடர்பில் முறையான விசாரணையையும் நடத்த வேண்டும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1372640
  3. வெடுக்குநாறி ஆலய பூசகரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! சிவராத்திரியை முன்னிட்டு பூஜைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகரையும், நிர்வாகசபை உறுப்பினரையும் நேற்று நெடுங்கேணி பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1372652
  4. மட்டக்களப்பில் சங்குக் கடத்தலில் ஈடுபட்ட தேரர் கைது! மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளைக் கடத்தி வந்த தேரர் உட்பட இருவர் கல்குடாவில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் கல்குடா பொலிஸாரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1372655
  5. இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்! இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இதனை தெரிவித்தார். இதேவேளை போர் தொடுக்க எல்லா காலகட்டத்தில் நாம் இருக்கவேண்டும் என்றும் அமைதி காலகட்டத்திலும் நாம் தயார் நிலையில் இருத்தல் அவசியம். மேலும் நிலம், வான், கடல் என எந்தவழியிலும் எவரேனும் இந்தியாவை தாக்கினால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை கல்வான் பள்ளத்தாக்கில் சீன படைகளுக்கு நாம் நினைவுட்டுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1372633
  6. கனடாவில் இலங்கையர்கள் படுகொலை விவகாரம் : வெளியான முழுமையான தகவல்கள்! கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவனும் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின், தெற்கு ஒட்டாவாவிலுள்ள பார்ஹேவன் புறநகரில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த பயங்கரம் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைச் சம்பவத்தில் குறித்த வீட்டில் வசித்துவந்த தாய் மற்றும் பிள்ளைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தவகையில், 35 வயதுடைய தர்ஷினி பண்டாரநாயக்க எனும் தாய், அவரது 7 வயது பிள்ளையான இனுக விக்ரமசிங்க, 4 வயது பிள்ளையான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயது பிள்ளையான ரியானா விக்ரமசிங்க, 2 மாதக் குழந்தையான கெல்லி விக்ரமசிங்க, மற்றும் குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சலாகே காமினி அமரகோன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் நேற்றையதினம் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா (Febrio De-Zoysa) எனும் சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர், தனது 19 ஆவது பிறந்த தினத்தை படுகொலை செய்யப்பட்ட குறித்த குடுப்பத்தாருடன் இணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடியிருந்தாகவும் இவரும் இலங்கையிலிருந்து கனடாவுக்கு மாணவர் விசாவில் வருகை தந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பார்ஹேவன் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1372680
  7. வடக்கின் பெரும் போர்-யாழ் நகர் எங்கும் பெரு விழா..! வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. இன்று காலை 9.30 மணியளவில் இரண்டு கல்லூரிகளினதும் கீதங்களுடன் போட்டி ஆரம்பமானது. https://thinakaran.com/வடக்கின்-பெரும்-போர்-யாழ/
  8. ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்! வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372617
  9. அமெரிக்க ஜனாதிபதியை நேரலை விவாதத்திற்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு! அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரலை விவாதம் ஒன்றிற்கு வருமாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவருடன் எந்தவொரு நேரத்திலும் நேரடி விவாதத்தில் பங்கேற்க தாம் தயாராக உள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நேரடி விவாதங்களில் பங்கேற்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க குடியரசுக்கட்சியின் வேட்பாளர் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹேலி வெளியேறியதை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹேலி பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்டசி வேட்பாளர் ஜோபைடனுக்கு எதிராக குடியரசுகட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372557
  10. நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ”தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும்” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”நான் ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் கிடையாது. நீங்கள் இங்கு தினமும் தனி இராஜ்ஜியம் பற்றிதானே பேசுகின்றீர்கள். சமஷ்டி தொடர்பாக பேசுவதில் பிரச்சினையில்லை. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகத்தான் நாமும் பேசிக் கொண்டிருக்கிறோம். வடக்கு- கிழக்கு மக்கள், இந்த நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் இல்லை என்று கூறுகின்றார்கள். 1983 ஆம் ஆண்டில் எனது தந்தையின் தமிழ் நண்பர்களும்தான் கொல்லப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் செய்த விசாரணையில், 6 இலட்சத்து 50 பேர் தங்கள் நேசித்தவர்களை இழந்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது. வடக்கில் மட்டும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஒரு நிவாரணம் வேண்டும் என்பதுதான் எமதும் கோரிக்கையாகும். இது உண்மையான தீர்வாக அமையாவிட்டாலும், நாம் இதனை ஆரம்பிக்க வேண்டும். இந்த எண்ணக்கருவை எம்மால் கைவிட முடியாது. இதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதற்கான ஆலோசனைகளை வழங்க தமிழ் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்” இவ்வாறு அலி சப்ரி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1372551
  11. நீருக்கு அடியில் இந்தியாவின் முதல் ரயில் சேவை! இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் 32 மீற்றர் ஆழத்தில் குறித்த மெட்ரோ ரெயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372463
  12. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…! சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 24வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372460
  13. உண்மையை சொன்னால், அடிக்க வருவார்கள். வேண்டாம்... விட்டுடுங்க.
  14. பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி. “பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி” என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்துள்ளார். பசில் ராஜபக்சவின் வருகை இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனினும் பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்துஅமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணியாக உள்ளார். இலங்கையில் பணம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளையே நாங்கள் விரும்புகிறோம். இலங்கையின் ஹம்பகராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அமெரிக்காவில் பணம் செலவழிக்க விரும்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1372389
  15. பிரான்ஸ்காரன் கருக்கலைப்பு செய்ய, அடையார்... பெருகிக் கொண்டு போகப் போறாங்கள்.
  16. சாந்தனின் முடிவே எங்களுக்கும்! – முருகன் சாந்தனின் உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் விடுவிக்கப்பட்டு இலங்கை திரும்ப முடியாமல், சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வு தொடர்பாக வழங்கிய ஒலிப்பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சாந்தனுடன் 33 வருடங்கள் நான் சிறையில் கழித்துள்ளேன். சாந்தன் தனது தாய் மண்ணில் கால் வைப்பதற்கு முன்னரே அவரது உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளது. இதுவே எனக்கும் ராபர்ட் பயஸ்ஸுக்கும்,ஜெயகுமாருக்கும் நடக்கப் போகின்றது. 33 வருடங்களாக சிறையில் மனதையும் , உடலையும் திடமாக வைத்திருந்த ஒருத்தர், சிறப்பு முகாமில் ஒரு வருடத்திற்கு எவ்வாறு இப்படி மாறி போனார். இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மக்களின் அஞ்சலி ஊடாக வெளி உலகுக்கு எமக்கு இழைக்கப்பட்ட அநீதி தெரிய வர வேண்டும்” இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1372189

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.