Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. குடும்பத்தை இழந்து... தனி மரமாகி நின்ற, மிஷேலுக்கு.... வாழ்க்கையை... இனி, எப்படி நகர்த்துவது என்று புரியாத மாதிரி இருந்த போது... அதனை... எப்படியும், வெல்ல வேண்டும்... என்ற ஓர்மம் அவனை... உந்தித் தள்ளியது. திரும்பவும்... பழைய வேலை இடத்திற்கு சென்று, தான்... நடு விரலைக் காட்டிய முதலாளியிடம், வேலை கேட்கலாம் என்ற... தெரிவைத் தவிர, அவனுக்கு, வேறு வழியே இருக்கவில்லை. ஆனால்... எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அந்த முதலாளியிடம், மீண்டும் வேலை கேட்பது? என்ற அச்சம் இருந்தாலும்... நேரடியாக... தொழிற்சாலைக்கு போய் வேலை கேட்பது, இலகுவான விடயம் அல்ல. அவன்... இழந்ததில், முதலாளியின் தொலை பேசி இலக்கத்தையும், இழந்தது... பெரும் சோகம். ஒரு இரவு முழுக்க... நித்திரை முழித்து யோசித்ததில், அவனுக்கு... புது "ஐடியா" பிறந்தது.... ➡️ ➡️ ➡️ ..... ✍️ ✍️ ✍️ 🤣
  2. கண்ணைக் கவரும், அழகிய படமும்.. அருமையான கவிதையும்.... ரசித்தேன்... கண்மணி அக்கா.
  3. விழுந்த லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை, ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும், அவன்... ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே விட்டு விடுவான். அவனிடம் அதிக பணம் கையில் இருந்ததை கண்டு, பல புதிய நண்பர்கள், சேரத் தொடங்கிய பின்.. அவனது மிகுதிப் பணம் கரையத் தொடங்கியது. மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும், அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்... வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. "ஒரு தொழிற்சாலைக்கு, பொருட்களை... வாங்குபவர்கள் தான், முதலாளி" என்ற.. கோட்பாட்டை.. அவன் அறிந்திருக்கவில்லை. ஒரு வாடிக்கையாளர்... திருப்திப் படவில்லை என்றால், பத்து வாடிக்கையாளரை... இழந்ததுக்கு சமன் என்று சொல்வார்கள். ஏனென்றால்... தனது அதிருப்தியை, இரண்டு பேருக்கு சொன்னாலே... பத்துப் பேருக்கு... அந்தச் செய்தி போய்ச் சேர்வது இயல்பு. அதன் படி... அவனது தொழிற்சாலையை, இழுத்து மூட வேண்டி வந்து விட்டது. வாங்கிய புதுக் காரை... புது நண்பன், இரண்டு நாள் இரவலாக... கொண்டு போய், திருத்த முடியாத அளவுக்கு, விபத்துக்குள்ளாகி விட்டதை அறிந்து... மிஷேல்... மேலும் இடிந்து, போனான். வருமானம்.... சுத்தமாக, நின்று போன நிலையில்... வங்கியில்... கடனாக வாங்கிய வீட்டை, குறிப்பிட்ட தவணையில், கட்டவில்லை என்று... வங்கி அதனை... திருப்பி எடுத்து, ஏலத்தில் விற்று விட்டது. இதற்கு மேல்.... இந்த மனிதனுடன், வாழ முடியாது என்று, மனைவி... பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிரிந்து போய் விட்டார். மிஷேலுக்கு... 🌠 வெள்ளி திசை 🌟 அடித்து, 🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று.... எல்லாம் போன பின்தான்... மெல்ல புரிய ஆரம்பித்தது. 😎 ➡️ ➡️ ➡️ தொடரும்.... ✍️
  4. ராசுக் குட்டிக்கு... தன்ரை, தம்பியை... ஊர் முழுக்க காட்ட வேண்டும் என்று, ஆசை வந்திட்டுது போலை கிடக்கு. 😁 பாவம்... நேர்ஸ்.... அதைப் பார்த்து சரியாய் பயந்து போயிருக்கும். 🤣
  5. அய்யய்யோ.... சுவியர், உண்மையாகவா... சொல்கிறீர்கள். களத்தில்... வேறு பதிவுகளை, பார்த்துக் கொண்டு இருந்ததால்... இன்னும்.. எழுதுற மூடு, வரவில்லை. சம்பந்தன் ஐயா... பத்து வருசமாய் சொன்ன மாதிரி, தீபாவளிக்கும், பொங்கலுக்கும் தீர்வு வரும் என்று பொய் சொல்ல மாட்டேன். என்ன... நான், சொன்ன மணித்தியாலாக் கணக்கில்.. கொஞ்சம் பிந்தலாம். ஐயோ... ஏற்கெனவே பிந்தி விட்டது.. ஐயா.
  6. மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன், அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்.... அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரிய வீடு 🏡 ஒன்றை, அந்த வீட்டின் பெறுமதியில்... பாதிப் பணம் கொடுத்து, மிகுதியை... ஒவ்வொரு மாதமும்... வங்கியில் கட்டுவதாக, 🖋️ ஒப்பந்தம் எழுதி வாங்கினான். 🧐 நல்ல வீடு இருந்தால்... முற்றத்தில் பெரிய கார் இருக்க வேண்டும் என்பது, எழுதப் படாத, சட்டம் என்றாலும்... மிஷேல் வீட்டு முற்றத்திலும்... அவன் ஆசைப் பட்ட கார் நின்றது. 🚘 அதற்கிடையில்... அவன், வேலையை விட்டு வரும் போது... தனது பழைய முதலாளிக்கு, "தினாவெட்டாக"... சொல்லி விட்டு வந்த வாக்கியங்களை மறக்காமல்... 🤨 தான்... பார்த்த வேலை அனுபவத்தை, வைத்து... தன்னுடைய, நான்கு நண்பர்களை சேர்த்து... சிறிய 🛠️ தொழிற்சாலையை ஒன்றை ஆரம்பித்தான். 😜 இடைவேளை... !!! ??? இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில், மீண்டும் தொடரும்.... 🤣
  7. கருத்தும், ஊக்கமும் பகிர்ந்து கொண்ட.... குமாரசாமி அண்ணா, நாதமுனி, உடையார், ஈழப்பிரியன், சுவி, கிருபன் ஜீ, வல்வை சகாறா, விவசாயி விக், காவலூர் கண்மணி அக்கா, நிலாமதி அக்கா, புங்கையூரன்,விசுகு, மல்லிகை வாசம், சாந்தி அக்கா, தனிக்காட்டு ராஜா, புத்தன், வளவன்,ரதி, பெனி, யாயினி, தமிழினி, சுவைப்பிரியன், நுணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள். 🙏 இன்று மாலை, மிகுதியை... தொடர்வேன் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன். வெளிவர இருக்கும் மிகுதிப் பகுதியில்... சுவராசியமான, எதிர்பாரத சம்பவங்கள் நிச்சயம் உண்டு.
  8. இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள், நெடுக்ஸ்.
  9. பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த... தோழர் புரட்சி, கவி அருணாசலம், சுவைப் பிரியன், அகஸ்தியன் ஆகியோருக்கு.... உளமார்ந்த நன்றிகள். 🙏 கவி அருணாசலம் வரைந்த படத்தை மிக ரசித்தேன். ❤️ புகைப்படம் எடுத்த மாதிரி... முகவெட்டு அமைந்துள்ளது மிகக் சிறப்பு. 👍 இந்தப் படத்தை... ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பேன். நன்றிகள் ஐயா. 🙏
  10. வாழ்த்துக்களுக்கு.... மிக்க நன்றி, சகோதரி ஜெகதா துரை.
  11. புங்கை... நம்ம கிருபன் ஜீ, செம்புகளுக்கு.... “ஸ்பெல்லிங்” மாறி எழுதிப் போட்டார் என நினைத்து விட்டேன். 🤣
  12. விமானம், ஓட்டுவது... எப்படி ❓ ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவன், விமான ஓட்டி அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி"என்ற புத்தகத்தை கண்டான். அவன் அந்த புத்தகத்தை பிரித்தான்.முதல் பக்கத்தில், "இஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது.அவன் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினான்,இஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது ! அவனுக்கு ஒரே குஷியாகி விட்டது. இரண்டாவது பக்கத்தை புரட்டினான்."விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற பட்டனை அழுத்துக"என எழுதி இருந்தது. அவனும் அப்படியே செய்தான். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓட துவங்கியது. இப்போது அவனுக்கு பறக்கும் ஆசை வந்தது.மூன்றாவது பக்கத்தை பிரித்தான்."விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் பட்டனை அழுத்தவும்" என்று இருந்தது. அவனும் பச்சை கலர் பட்டனை அழுத்தினான்.விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது." அவனும் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தான். அவன் மிகவும் திருப்தி அடைந்தவனாக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் 4 வது பக்கத்தை பிரித்தான். அவ்வளவுதான், அவனுக்கு மயக்கம் வந்து கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. காரணம், 4வது பக்கத்தில் எழுதி இருந்தது,"விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்பதை கற்றுக்கொள்ள இந்த புத்தகத்தின் இரண்டாவது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடையில் வாங்கி படியுங்கள்"!!!! 🤣
  13. பிறந்தநாள் வாழ்த்துக்களை... தெரிவித்துக் கொண்ட அருமை நண்பர்கள்.... சுவி, ஈழப்பிரியன், தனிக்காட்டு ராஜா, யாயினி, கந்தையா அண்ணர், பாஞ்ச் அண்ணா, எப்போதும் தமிழன், நுணாவிலான், உதயகுமார், ரதி, கிருபன் ஜீ, நிழலி, குமாரசாமி அண்ணா, நிலாமதி அக்கா, புங்கையூரன், விசுகு, பெருமாள், உடையார், நந்தன், நிகே... ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களது வாழ்த்துக்கள்.. எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது உறவுகளே. 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.