Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்! கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெடுநாள் மீன்பிடி படகுகள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் 4 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 25 சந்தேக நபர்களையும் பணியகம் கைது செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரையிலான காலப்பகுதி வரையில் கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கையகப்படுத்திய ஹெராயின் சுமார் 10.84 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என்றும், ஐஸ் போதைப்பொருள் சுமார் 12.16 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1437485
  2. விமானத்தில் அணில் குரங்கை கடத்திவந்த பயணி கைது! மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச் சோதனையில், மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஒரு பயணி அணில் குரங்கை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அணில் குரங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் . இதேவேளை, இந்த அணில் குரங்கு, அரியவகை விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437473
  3. சில வாரங்களுக்கு முன் இந்த வீதியால் பயணிக்கும் போது... பல இடங்களில் குப்பையை எரிக்கும் தீ ஆங்காங்கே எரிந்து கொண்டு இருந்தது. அந்தக் குப்பைகளில் உள்ள கழிவுகளை உண்ண ஏராளமான கட்டாக்காலி நாய்களும்... குறுக்க, மறுக்க ஓடி வாகன விபத்துக்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்தது.
  4. சில ஆட்கள்... முகத்தை ரசிப்பார்கள், சிலர் இடுப்பை ரசிப்பார்கள், சிலர் கூந்தலை ரசிப்பார்கள்... இவர் காலை ரசித்திருக்கின்றார். 😂 பாவம்... பிளைச்சுப் போகட்டும் என்று விட்டிருக்கலாம். 🤣 இதுக்கு... கோட்டு, கேசு, தண்டனை என்று அமர்க்களப் படுத்தி விட்டார்கள். 🤪
  5. பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்ய மீண்டும் தடை! யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ராணுவத்தினரால் மீண்டும் இன்று(28) முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உட்குதியில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதனால் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது என தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்ட ஆலயத்திற்குள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் கடந்த 6 மாத காலத்திற்கு முன்னர் அறிவித்திருந்தனர். இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக நேற்று முன்தினம்(26) முதல் மக்கள் சென்று வழிபடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். இதனையடுத்து பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினர் கடந்த வருடத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஆலயத்தினை சுத்தம் செய்துள்ளனர். பின்னர் இராணுவத்தின் வாகனத்தினூடாக கோவில் நிர்வாகத்தினரை மாத்திரம் அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர். இதனையடுத்து நேற்று முன்தினம் குறித்த பாதையினை விடுவித்து மக்கள் சிலர் வழிபாடுகளில் ஈடுபட்டு, வந்தனர். இந்த நிலையில் இன்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலயத்திற்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உட்குதியில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதால் வழிபட முடியாது என தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதை மூடப்பட்டு முட்கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்ததுடன் இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தபட்டிருந்தனர். இதன்போது ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்த வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன், செயலாளர், ஆலயத்தின் தலைவர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வருகைதந்திருந்த நிலையில் திரும்பிச் சென்றுள்ளனர். https://athavannews.com/2025/1437462
  6. இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது! இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட வேளையிலே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் 46,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டதுடன் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தனரெனவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 34, 43 மற்றும் 33 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1437448
  7. செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் மூன்றாம் நாள் பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வு பணிகளின் போது மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் 27 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்.com
  8. சுப. சோமசுந்தரம் ஐயா அவர்களே... நல்ல ஒரு பகிர்விற்கு நன்றி. 👍
  9. 'வறுமையில் பிறந்த உணவு': அமெரிக்காவில் 'உணவுக்கான ஆஸ்கர்' வென்ற மதுரை தமிழர். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் பருவங்களுக்கு ஏற்ற வகையில் மாறி வரும் உணவின் சுவைக்கு நடுவே, சமையல் கலைஞர் விஜய் குமார் அமைதியாக ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார். நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞருக்கான ஜேம்ஸ் பியர்ட் விருதைப் பெற்று அசத்தியுள்ளார் விஜய் குமார். தனிநபருக்கான அங்கீகாரம் மட்டுமின்றி கலாசார மாற்றத்தின் புள்ளியாக இந்த விருது கருதப்படுகிறது. உணவுகளின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் சென்னையைச் சேர்ந்த ராகேஷ் ரகுநந்தன் இது குறித்து பேசும் போது, "இந்த விருதுகளை ஏற்கனவே வென்ற தமிழ் வம்சாவளியினரான ராகவன் ஐயர் மற்றும் பத்ம லட்சுமியின் வழியே, விஜய் குமாருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம், உலக சமையல் அரங்கில் வளர்ந்து வரும் தென்னிந்தியர்களின் குரல்களை பிரதிபலிக்கிறது," என்று கூறினார். "இலங்கை தமிழ் மற்றும் இதர தென்னிந்திய உணவு முறைகளுடன், தமிழ் உணவுகள் உலக அரங்கில் உள்ள உணவகங்களில், மேம்படுத்தப்பட்ட, உயர்ந்த மற்றும் கலாசாரத்தில் வேரூன்றிய உணவு வகைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது," என்றும் அவர் கூறினார். தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் அரசம்பட்டி என்ற சிறிய விவசாய கிராமத்தில் பிறந்தவர் விஜய் குமார். 44 வயதான அவர் எப்போதும் தன்னுடைய நினைவுகளில் இருந்து உணவை தேர்வு செய்கிறார். காடுகளும், உணவு தேடல்களும், விறகு அடுப்பும், வீட்டிற்கு தேவையான உணவை சமைக்கும் அம்மாவும் பாட்டியுமாக அந்த நினைவு நிரம்பியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cyvjq05drr1o?fbclid=IwY2xjawLMryRleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR4nhltk2eBLL5RAfc_kyVpkYhxppK2pVcmfr_54kUfwQK086Kvx2LDCHXGMKw_aem_BmJ_GOXwGjt2Iq6B8kFT2g
  10. ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் நட்டமாம். இஸ்ரேல் ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டு... ஈரானிடம் செமத்தியாய் வாங்கிக் கட்டியிருக்கு. நீண்ட வருடங்களின் பின், இந்தப் போரில் தான்... இஸ்ரேல் மக்கள் அகதியாக கூடாரத்தில் வசித்த காட்சியையும் உலகம் பார்த்தது. யாழ். களத்தில் ஒருவர், ஈரானுக்கு... இஸ்ரேலிடம்தான் மருந்து இருக்கு என்று பெரிய அரசியல் அறிவாளி மாதிரி வருசக்கணக்கில் சொல்லிக் கொண்டு திரிந்தார். அதுக்கும்... ஆமாம் போட்டுக் கொண்டு, சிலர் பின்னால் திரிந்தது எல்லாம் உங்களுக்கு நினைவிற்கு வருகின்றதா. 😂
  11. காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் எட்டப்படும்! இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் எட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதேவேளை, நேற்றைய தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், உதவிப் பொருட்களைத் தேடி பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்களை “வேண்டுமென்றே சுட” படையினருக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான தகவல்கள், காசாவில் “போர்க்குற்றங்களுக்கு” மேலும் சான்றாகும் என காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 56,331 பேர் கொல்லப்பட்டதுடன் 132,632 பேர் காயமடைந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1437424
  12. செம்மணி மனித புதைக்குழி விவகாரம் – மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு! செம்மணி மனித புதைக்குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று(27) இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு மனித சிதிலங்களும், ஏனைய சிறு சிறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தன. செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கு அமைய வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினத்துடன் இதுவரை 24 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437390
  13. மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு! மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று தீப்பிடித்து எரிந்ததில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பாடசாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பாடசாலையில் இந்த ஆண்டுக்கான இறுதித் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். இதனை தொடர்ந்து பாடசாலை கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதற்கிடையே தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. https://athavannews.com/2025/1437379
  14. மத்தியப் பிரதேசம்; தண்ணீர் கலந்த டீசலை... நிரப்பியதால், முதலமைச்சர் மோகன் யாதவின் வாகன ஊர்தியில் சென்ற 19 வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.