Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு! தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 01ஆம் திகதி காலை 8.30 மணிஅளவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தின்போது, அருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர மதுரை.யில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. https://athavannews.com/2025/1438128
  2. ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: 69 பேர் உயிரிழப்பு, ரூ.700 கோடிக்கு மேல் சேதம். ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 37 பேர் காணாமற் போயுள்ளனர் என்றும், 110 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், காணமற் போனவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும், அம் மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். அத்துடன் கனமழை காரணமாக மண்டி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக துனாக் மற்றும் பக்சயெட் பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள், மின் இணைப்புகள், குடிநீர் குழாய்கள் ,வீதிகள், வாகனங்கள் போன்றனவும், பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அரசு நடத்திய கணக்கீட்டின்படி, மொத்த சேத மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.700 கோடியை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபாயை தற்காலிக உதவித் தொகையாக வழங்கி வருவதோடு, உணவு, மருத்துவம் மற்றும் தற்காலிக குடியிருப்பு வசதிகளையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஜூலை 7 ஆம் திகதி வரை கன மழை நீடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த அம் மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு ‘ கன மழை காரணமாக மக்களது அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக அரசு அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் ” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1438113
  3. மரத்தில் இருந்த இலையை, ஆடு கடித்து தின்று விட்டது. 😂 🤣
  4. ஆண்களுக்கு, இப்படி ஒரு பொறாமையா.... 😂
  5. என்ன இருந்தாலும்.... நல்ல கூறைச் சீலை வாங்கிறதெண்டதால், இந்தியாவுக்குத் தான் போகவேணும். அதுதான்... குமாரசாமி அண்ணை தன்னுடைய கொள்கையில் இருந்து U-Turn அடித்து, இந்தியாவை புகழ்ந்து தள்ளினவர் போலை இருக்கு. 😂 ஸ்ராலின் தான் வாறாரு... செம பகிடி 🤣. குதிரைக்கு கொம்பு முளைக்காததும் நல்லதுக்குத்தான். 😂
  6. சோளத்தில்... பலகோடி லஞ்சம் (25 மில்லியன்) மோசடியில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (04) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (04) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Vaanam.lk
  7. ரிதன்யாவின் மரணம் – மாமியார் கைது. திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 28-ந் திகதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தன் உயிரை மாய்த்துக்கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தனது மரணத்திற்கு தனது கணவர், மாமனார், மாமியார் காரணம் என உருக்கமாக பேசிய குரல் பதிவொன்று அனுப்பி இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சேவூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வர மூர்த்தியை கைது செய்தனர். இதையடுத்து மாமியார் சித்ராதேவி உடல் நலக்குறைவு காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டிருந்தார். கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை பிணையில் விடுவிக்க அனுமதிக்கு மாறு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் 7-ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ரா தேவியை தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர். சேயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ரிதன்யாவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து மாமியார் சித்ரா தேவியை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsரிதன்யாவின் மரணம் - மாமியார் கைதுதிருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கு...
  8. ■2 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட திருமணம், ■நகை, கார் என்று 3 கோடி ரூபாய் வரதட்சணை., ■5 கோடி ரூபாயை அந்த பெண்ணின் வங்கி கணக்கில் fixed deposit செய்தாலே 7% க்கு வட்டி கிடைத்து இருக்கும் அதாவது குறைந்தது மாதம் 3 லட்சம் ரூபாய் வருவாய்., ■இதை வைத்து அந்த பெண் 7 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிட முடியும்., ■ஆக இந்த திருமணத்திலும் பெண் நல்லா வாழனும் என்பதை விட பெற்றோரின் கௌரவம் தான் பிரதானமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.! ■பெற்றோரின் கௌரவத்துக்கு பணத்தாசை பிடித்த மிருகங்களிடம் சிக்கி பலியான பெண்ணுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். உண்மை உரைகல்
  9. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, கிரிமினல் மூளை வேலை செய்யும். 😂 @satan @குமாரசாமி, @விசுகு ஆகியோர் என்ன மாதிரியான பிளான் போட்டு வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்கும் தெரியாது. சில வேளை அவர்கள் நசுக்கிடாமல் போய் கொத்துரொட்டி சாப்பிட்டு வாற ஆட்களாகவும் இருக்கலாம். 🤣
  10. கள்ளச் சாராயம் குடித்து செத்தவனுக்கு பத்து லட்சம் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டவனுக்கு ஐந்து லட்சம்.
  11. முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா! ஒருவர் உயிரிழப்பு ,ஒருவர் படுகாயம்! முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Athavan Newsமுள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா!...முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (...
  12. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா தொடக்க நிகழ்வு; மக்கள் அவதானம்! தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) 2025 ஆகஸ்ட் 2 அன்று அதிகாரப்பூர்வமான ஆரம்ப விழா தனிப்பட்ட அழைப்பின் பேரில் மாத்திரம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, பிரமாண்டமான திறப்பு விழாவிற்கான அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அழைப்பின் பேரில் மட்டுமே என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேலும் எந்த மூன்றாம் தரப்பினரும் டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்கவோ அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும் – என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த மேம்பாட்டில் உலகத் தரம் வாய்ந்த, அதி-ஆடம்பரமான நுவா ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை இதில் அடங்கும். இது இன்றுவரை இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறை துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாக அமைகிறது. கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலை நிறுத்துவதில் இந்த தொடக்க விழா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே போலிவூட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இலங்கைக்கு வருகை தந்து, இந்த பிரமாண்ட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். https://athavannews.com/2025/1438045
  13. மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை! செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான தகவலை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அத்துடன் மொரட்டுவ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் இணைந்து இந்த மென்பொருளை உருவாக்க ஒத்துழைத்து வருவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த மென்பொருள் பொதுமக்கள் பாவனைக்கு விடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய மென்பொருள் பேசும் சிங்கள உள்ளடக்கத்தை சில நொடிகளில் தமிழில் மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டிருக்கும் என்றும், நேர்மாறாகவும் இது இருக்கும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1438062
  14. இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதிபதியும் எழுத்தாளரும் கைது! இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலன்னறுவை – கதுருவெல காதி நீதிமன்றத்தின் நீதிபதியும் எழுத்தாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால் இன்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் தங்களது அலுவலகத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். விவாகரத்து வழக்கு ஒன்று தொடர்பில் விரைவாக தீர்ப்பை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கதுருவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1438081
  15. முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு! இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (04) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நண்பர்களுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள மக்காச்சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438087
  16. 2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு! 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யை தமிழக வெற்றிக் கழகம் (TVK) இன்று (04) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலமாக அதிமுக – பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. TVK இன் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். அடுத்ததாக 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது குறித்தும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். https://athavannews.com/2025/1438055
  17. ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக மாறிய ரஷ்யா! ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை (03) மாறியுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து முறையான நற்சான்றிதழ்களைப் பெற்றதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் உற்பத்தித் திறன் கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பை வளர்க்கும் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு, இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று கூறியது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர். அப்போதிருந்து, அவர்கள் சர்வதேச அங்கீகாரத்தை நாடுகிறார்கள். அதேநேரத்தில் இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான நிபந்தனைகளையும் அவர்கள் அமுல்படுத்துகிறார்கள். இதுவரை எந்த நாடும் தாலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், அந்தக் குழு பல நாடுகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் சில இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பெரும்பாலும் பெண்கள் மீதான அதன் கட்டுப்பாடுகள் காரணமாக தாலிபான் அரசாங்கம் உலக அரங்கில் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 1996 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்ததை விட, தாலிபான்கள் ஆரம்பத்தில் மிகவும் மிதமான ஆட்சியை முன்னெடுப்பதாக உறுதியளித்த போதிலும், 2021 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தொடங்கினர். பெண்கள் பெரும்பாலான வேலைகள் மற்றும் பொது இடங்களில், பூங்காக்கள், குளியலறைகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெண்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை நிலைநிறுத்த தலிபான்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஏப்ரல் மாதம் தலிபான்கள் மீதான தடையை நீக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438028
  18. Free America Weekend: ட்ரம்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்! அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஜுலை 4 ஆம் திகதியான இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் “Free America Weekend” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கண்டித்து பேரணிகள், பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் கொள்கைகள் மக்கள் சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளையும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நியூயோர்க், சான் பிரான்சிஸ்கோ, டெக்சாஸ், புளோரிடா போன்ற நகரங்களில் மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். குறித்த போராட்டமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438018
  19. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற மாதிரி, ஊருக்குப் போக முதல்... அங்கு உள்ள ஆளும் கட்சிக் காரருக்கு ஐஸ் வைத்து விட்டுப் போனால் தான்... தற்செயலாக ஏதும் நடந்தாலும் பிணை எடுக்க வருவாங்கள். இல்லாவிடில் நாலாம் மாடியில் கொண்டு போய் வைத்து.. மொங்கிப் போட்டு, வெட்டித் தாட்டுப் போடுவாங்கள் பாவிகள். ஏற்கெனவே ஊரில் வாள் வெட்டு கோஸ்ட்டி முதுகிலை வாளை செருகிக் கொண்டு பறந்து திரிகிறாங்கள். அதுக்காகத்தான் வில்லங்கம் இல்லாமல் போய்... கொத்து ரொட்டி, அப்பம், தோசை, கூழ், இளநி என்று ஆசைப் பட்டதுகளை சாப்பிட்டு விட்டு கம்மென்று வந்து விட வேணும். 😂 இனி அனுரா, ஜேர்மனிக்கு வந்தால்... கறுப்புக் கொடியும், அழுகின தக்காளிப் பழமும்தான் வரவேற்கும். 🤣
  20. உங்கடை பாஸ்போட்டிலை... கியூபா விசா, கைலாசா விசா எல்லாம் குத்தி இருக்கு. என்ன அலுவலாக அந்த நாடுகளுக்கு எல்லாம் போனீங்கள். 😜
  21. வவுனியாவில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை! வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் பிரதாபன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்களைக் கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையஙகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பலரும் சுட்டிக் காட்டியிருந்ததாகவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதனை தாம் மாநகர எல்லைக்குள் நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையத்தை நடத்த முடியாது என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் 10 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கும் இடங்களில் மாணவிகள் மாற்றும் மாணவர்களுக்கான மலசல கூட வசதி, குடிநீர் வசதி என்பன இருக்க வேண்டும் எனவும், அதனை சுகாதார பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437983

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.