Everything posted by தமிழ் சிறி
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை; ஈரான் விளக்கம்! இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின் முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை எனவும் அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை எனவும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. https://athavannews.com/2025/1436584
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. - ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.-
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
டிரம்புக்கு.... நோபல் பரிசு வேணுமாம். கொடுத்தாலும் கொடுப்பானுகள்...
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
செய்யிறது முழுக்க ஊத்தைவாளி வேலை. அதுக்குள்ளை, டிரம்புக்கு.... நோபல் பரிசு வேணுமாம்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ட்ரம்ப் என்ற இந்த யோக்கியர்தான் நேற்று எல்லாம் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு குடுக்காதது பற்றி பேசிக்கிட்டு இருந்தார்.
-
கருத்து படங்கள்
- 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் முன்னெடுப்பு!
2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் முன்னெடுப்பு! வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்றும்(21) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதிவழிப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது, ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர். இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர் காணிகளையும் முழுமையாக விடுவிப்பதே தமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்ற நோக்கில் குறித்தபோராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1436516- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்! ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பின்னரும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதுமே எங்கள் நோக்கமாகும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால் எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும் எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார். https://athavannews.com/2025/1436549- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
காணொளி. 👉 https://www.facebook.com/100005046279476/videos/1786181235600193 👈 பாகிஸ்தானிடம் உதவி கேட்கும் இஸ்ரேல் மக்கள். 😂 அவனைத் தொடுவான் ஏன்... அவதிப் படுவான் ஏன். 🤣- யாழில் நடைபெற்ற பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு!
யாழில் நடைபெற்ற பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு! பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு இன்றையதினம் (21) ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன், இந்திய தூதரக உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1436530- எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு!
இந்த விடுவிப்புகளுக்கு அனுமதி அளித்தவர்கள் யார் என்பதையும், விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவரின் அடையாளங்களையும் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடைபெற்று வருவதாக CID உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு! இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்கள் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாவை வைத்திருப்பது கட்டாயமாகும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டதால் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்கள் தூதரகத்திலிருந்து தொடர்புடைய ஆவணங்களைப் பெற்ற பிறகு எகிப்திய எல்லை வழியாக வௌியேறலாம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் முன்னர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இருப்பினும், நேற்று எகிப்திய எல்லையைக் கடந்து கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்பட்ட நான்கு இலங்கையர்களில் ஒருவருக்கு இஸ்ரேலிய விசா இல்லாத காரணத்தினால், எகிப்திய அதிகாரிகளால் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர், இது தொடர்பில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவருக்குத் தகவல் தெரிவித்த பிறகு, எகிப்திய எல்லை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார். அவசரநிலையில் கூட, செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசா இல்லாத அல்லது காலாவதியான விசா ஊடாக வெளிநாட்டினர் எகிப்துக்குள் நுழைய முடியாது என்றும், இவ்வாறு பயணிக்க முயற்சிப்பது நீண்ட விசாரணைகளுக்கும், கைதுக்கும் கூட வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, இஸ்ரேலிய விசாக்கள் இல்லாத அல்லது விசாக்கள் காலாவதியான இலங்கையர்கள் எகிப்து வழியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட மாட்டார்கள், மேலும் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்கள் இல்லாதவர்கள் இலங்கைக்கு புறப்பட டெல் அவிவ் சர்வதேச விமான நிலையம் திறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இலங்கை திரும்புவதற்காக மேலும் இரு இலங்கையர்கள் நேற்று (20) ஆவணங்களைப் பெறுவதற்காக தூதரகத்திற்கு வந்ததாக தூதுவர் தெரிவித்தார். இஸ்ரேலின் பல முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் நேற்று இரவும் இன்று அதிகாலையும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1436518- யாழ். பல்கலையில் போதைப் பாவனை இல்லை; போதை ஒழிப்பு RTI இல் வெளிவந்த உண்மை
//யாழ். பல்கலையில் போதைப் பாவனை இல்லை; போதை ஒழிப்பு RTI இல் வெளிவந்த உண்மை// இது உண்மையான செய்தியாக இருந்தால்... மகிழ்ச்சியான செய்தியே. ஆனால்... இதனை, அப்படியே என்னால் நம்ப முடியாமல் உள்ளது.- யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்
சில மாதங்களுக்கு முன்பு யாழ். களத்தில் வந்த செய்தியில்... உப அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் மகன், நிறை போதையில் தந்தையின் அரச வாகனத்தை செலுத்தி, கந்தர்மடத்தில் பெரிய விபத்து ஒன்றை ஏற்படுத்தியதாக வாசித்த நினைவு உள்ளது. அந்த வாகனத்தில்... மகனின் நண்பரும் இருந்து பெரும் காயம் அடைந்ததாக செய்தி வந்திருந்தது. அதனைப் பற்றிய செய்தி இணைப்பை தேடினேன் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. யாராவது கண்டால்... இணைத்து விடவும். மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்... அரச செல்வாக்கு, மகன் செய்த குற்றங்களை மறைத்தது மட்டுமல்ல பாதுகாத்து பதவி உயர்வும் பெற்றுக் கொடுத்துள்ளது. தேசிய மக்கள் சக்தியும்.... மற்றைய சிங்கள கட்சிகளைப் போல்தான். மாற்றம் வரும் என்று நம்பியவர்களுக்கு.. "அல்வா" கொடுக்கின்றது.- சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து
சிங்கள சம்பந்திகளுக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு என்ன? என்பதை... பத்திரிகைகள் ஏன் வெளியிடவில்லை. இதில்... சுத்துமாத்துத்தனம் செய்வதற்காக அதை இரகசியமாக வைத்துள்ளார்களோ. விக்கியரின்... மாகாணசபைத்தலைவர் பதவிவிக்கு ஆப்பு வைத்த சுமந்திரன், இதிலும் விக்கியரின் காலை வருவார் என எதிர்பார்க்கலாம்.. சிலருக்கு... பட்டும், புத்தி வரமாட்டுது என்றால்.. ஒன்றும் செய்ய முடியாது.- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
- கருத்து படங்கள்
- சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து
சிவஞானமும், சுத்துமாத்து சுமந்திரனும்தான்... அந்த கறுப்பாடுகள்.- செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது! யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில் முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும் நாடக அளிக்கையும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் போராட்டத்தின் இறுதி நாளன்று ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர்டர்க் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1436493- எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு!
எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு! குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில் எந்தவித ஆவணங்களும் இன்றி 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தது. இந்நிலையில், சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறைக்கைதிகள் குழு பல்வேறு பிரிவுகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதையும் விசாரனை செய்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 37 பேர் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சிறைச்சாலைத் திணைக்களத்தின் விரிவான மறுசீரமைப்பு குறித்து நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதுடன் அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே நாளில் பிற்பகல் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தலைமையில் மற்றொரு கலந்துரையாடலும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436484- நல்லூரில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் புதிய நிலையம் விரைவில் அமைக்கப்படும்; தவிசாளர் மயூரன் அறிவிப்பு
நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை! நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள நிலையத்தில் மருத்துவ, இலத்திரனியல், இரசாயன, பொலித்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரிக்காமல் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அண்மைக்காலமாக இனம் தெரியாத நபர்கள் குறித்த கழிவுகளுக்கு இரவு வேளைகளில் தீ வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான நிலையில் இதனை ஒரு பொதுத் தொல்லையாகவும் சூழல் மாசடையக் கூடிய வகையில் காணப்படுகின்றமை தொடர்பிலும் யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் குறித்த வழக்கின் மீதான விசாரணைகளை அடுத்து அப்பகுதியில் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும் அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2025/1436491- கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!
கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி! குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 314 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 291 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து குறித்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படுவதுடன் அங்கு குறித்த அசோதா பரீசிலனை செய்யப்படும். இதேவேளை குறித்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். மேலும், அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436481- தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் முன்னெடுப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.