Everything posted by தமிழ் சிறி
-
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு! தனக்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைப்பதாக பில்லியனர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள அவர், Starlink now available in Sri Lanka! (ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது!) என்று கூறியுள்ளார். இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை அனுமதிக்கும் திருத்தத்தைத் தொடர்ந்து, 2024 ஆகஸ்ட் மாதம் ஸ்டார்லிங்க் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றது. கடந்த வாரம், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னே, ஸ்டார்லிங்க் குறித்த ஒரு முன்னோடித் திட்டம் ஏற்கனவே நடைபெற்று வருவதாகக் கூறினார். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கி வருகிறது. இது தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை அளிக்கப்படுவதால், இந்த இணைய சேவை நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும். https://athavannews.com/2025/1437859
-
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்!
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்! அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிற நிலையில் சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசா இரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தகுதி வாய்ந்ததாக மாற்றும் விதியை உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது. சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தங்கள் முழுநேர மாணவர் அந்தஸ்தை கடைப்பிடித்தால் அவர்கள் கல்வி முடியும் வரை அமெரிக்காவில் தங்கலாம் எனவும் இதை முன்னரே தீர்மானிக்கப்பட்ட தங்கும் காலத்திற்கு மாற்ற ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் விசாவில் ஒரு நிலையான காலாவதி திகதியுடன் சர்வதேச மாணவர்கள் அடிக்கடி விசா நீடிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். இது கூடுதல் தேவையற்ற தாமதங்கள், நிதிச் சுமை மற்றும் மாணவர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1437865
-
150 கி.மீ நீளம்; போர்த்துக்கலில் சுனாமி அலைகள் போல் தோன்றிய மேகங்கள்!
150 கி.மீ நீளம்; போர்த்துக்கலில் சுனாமி அலைகள் போல் தோன்றிய மேகங்கள்! போர்த்துக்கல் தற்போது மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை பாதித்த வெப்ப அலையை எதிர்கொள்கிறது. ஐபீரிய தீபகற்பத்தின் சில பகுதிகளிலும், கிரீஸ் மற்றும் பிரான்சிலும் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. அதேநேரம், போர்த்துக்கலின் வெப்பம் பல்வேறு அசாதாரண வானிலை நிகழ்வுகளை உருவாக்கியது. அவற்றில் திடீர் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவை அடங்கும். இதுபோன்ற ஒரு சம்பவம் போர்த்துக்கலின் கடற்கரைக்குச் செல்வோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜூன் 29 அன்று கடலுக்கு மேல் எழுந்த மிகப்பெரிய சுனாமி அலைகள் போல் தோன்றிய ரோல் மேகங்களால் அவர்கள் திகைத்துப் போனார்கள். வெவ்வேறு வெப்பநிலைகளின் காற்று நிறைகள் ஒன்றோடொன்று கலக்கும்போது மேகங்கள் உருவாகின்றன. ரோல் மேகத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மக்கள் பகிர்ந்து கொண்டனர். மேகம் அடிவானத்தில் எழுந்ததால் கடற்கரையில் சிறிது நேரம் இருள் சூழ்ந்ததாகக் காணப்பட்டது. 150 கி.மீ நீளம் கொண்டதாக காணப்பட்ட ரோல் மேகங்கள், ஃபிகுவேரா டா ஃபோஸிலிருந்து விலா டோ கோண்டே வரை நீண்டு காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை பார்த்த மக்கள், தாங்கள் பார்ப்பது மேகமா அல்லது சுனாமி அலைகளா என்று திகைத்துப் போனார்கள். இதனிடையே, கடுமையான வெப்ப நிலை போர்த்துக்கலில் காட்டுத்தீயையும் ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1437846
-
கருத்து படங்கள்
- செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
- ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தலுக்கு அனுமதி!
ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தலுக்கு அனுமதி! நாடு முழுவதும் ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டாய சீட் பெல்ட் பயன்பாடு குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தைத் தொடர்ந்து, கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கூறிய அவர், இந்த முன்மொழிவுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது, குருநாகல் மற்றும் அனுராதபுரம் இடையே மட்டுமே ஆன்லைன் அபராதம் செலுத்தும் முறை உள்ளது. இப்போது, அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் மொபைல் சாதனங்களை வழங்குகிறோம். இதனால் இந்த ஆண்டு முதல், போக்குவரத்து அபராதங்களை மொபைல் போன்கள் மூலம் எங்கிருந்தும் செலுத்த முடியும் – என்றும் கூறினார். https://athavannews.com/2025/1437827- ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை! கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 138,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் காட்டுகின்றன. இது 2024 ஜூன் மாதத்தில் வந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 21.8% அதிகமாகும். SLTDA வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து மொத்தம் 37,934 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 27.4% ஆகும். மேலும், இங்கிலாந்திலிருந்து 11,628 பேரும், சீனாவிலிருந்து 8,804 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,299 பேரும், பாகிஸ்தானியர் 6,833 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 ஆக உள்ளது. அவர்களில், 241,994 பேர் இந்தியாவிலிருந்தும், 112,312 பேர் ரஷ்யாவிலிருந்தும், 107,902 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என்று SLTDA குறிப்பிட்டது. https://athavannews.com/2025/1437830- இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை அங்கீகரித்த IMF நிர்வாகக் குழு!
இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை அங்கீகரித்த IMF நிர்வாகக் குழு! இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது. அதன்படி, இலங்கை இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறும். இதன் மூலம் இதுவரை வழங்கப்பட்ட மொத்த IMF நிதி உதவி சுமார் 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும். விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை மதிப்பிடுவதற்காக IMF இன் நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை கூடியது. 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் நான்காவது மதிப்பாய்வை IMF நிர்வாகக் குழு நிறைவு செய்ததாக இலங்கைக்கான IMF திட்டத்தின் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ இதன்போது உறுதிப்படுத்தினார். பின்னணி உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற மிக அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு கூட நிதியளிக்க அந்நிய செலாவணி தீர்ந்து போன பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை IMF இடமிருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு பொதியை பெற்றது. 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க வரி அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, இலங்கை அதன் முன்னோடியில்லாத நெருக்கடிக்குப் பின்னர் முதல் முழு ஆண்டு பொருளாதார விரிவாக்கத்தைப் பதிவு செய்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பொருளாதாரம் 5.4 சதவீதம் வளர்ச்சியடைந்தது, இது முழு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 5.0 சதவீதமாகக் கொண்டு வந்தது, இது 2023 இல் 2.3 சதவீத சுருக்கத்துடன் காணப்பட்டது. இலங்கையின் மோசமான பொருளாதார செயல்திறன் 2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதம் சுருங்கியது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல மாதங்களாக ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையானது வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது. இது இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தது. அவரை அடுத்து ஜனாதிபதியாக பெறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க வரிகளை இரட்டிப்பாக்கினார், மானியங்களைக் குறைத்தார், விலைகளை உயர்த்தினார் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஓரளவு மேம்படுத்தினார். எனினும், 2024 செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய நிர்வாகம், பிணை எடுப்புக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் மற்றும் வருவாயை உயர்த்துவதில் உறுதியாக இருப்பதாக IMF இடம் தெரிவித்தது. கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் EFF இன் கீழ் இலங்கையின் திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437821- அமெரிக்க இந்து ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்!
அமெரிக்க இந்து ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்! கடந்த ஜூன் மாதத்தில் பல இரவுகளில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் ஸ்பானிஷ் ஃபோர்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், ஆலயத்தின் கட்டிடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சந்தேகத்திற்குரிய வெறுப்பு குற்றமாக நம்பப்படுகிறது. இரவு நேரங்களில் பக்தர்களும் மற்றவர்களும் உள்ளே இருந்ததால், கட்டிடம் மற்றும் அருகிலுள்ள சொத்துக்களை குறிவைத்து கிட்டத்தட்ட 20 முதல் 30 தோட்டாக்கள் வளாகத்தில் சுடப்பட்டன. இது ஆயிரக்கணக்கான டொலர்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை இந்தியா கண்டித்துள்ளது மற்றும் விரைவான நடவடிக்கையை கோரியுள்ளது. https://athavannews.com/2025/1437836- 60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!
60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்! தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க தயாராகி வரும் நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக இப்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய தற்போதைய மோதலில் ஒரு திருப்புமுனையாகும். இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், எனது பிரதிநிதிகள் இன்று (செவ்வாயன்று) காசா போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலியர்களுடன் நீண்ட மற்றும் பயனுள்ள சந்திப்பை நடத்தினர். இதன்போது 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். அந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம். சமாதானத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்த கட்டார் மற்றும் எகிப்தியர்கள் இந்த இறுதி திட்டத்தை நிறைவேற்றுவார்கள். இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒப்பந்தம் இல்லையென்றால் நிலமை மோசமடையும் என்றார். டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு, ஜனவரி 19 அன்று தொடங்கிய முந்தைய போர் நிறுத்தம் மார்ச் வரை நீடித்தது. ஹமாஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி, இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியபோது விரோதப் போக்கு மீண்டும் தொடங்கியது. அப்போதிருந்து, பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் உயர் மட்ட விவாதங்களுக்காக வொஷிங்டனில் உள்ளார். அவரது நிகழ்ச்சி நிரலில் காஸா போர் நிறுத்தம், ஈரான் மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகள் அடங்கும். டெர்மர், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரையும் சந்திக்க உள்ளார். இதற்கிடையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார். இஸ்ரேலிய அறிக்கைகளின்படி, 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான போராளிகள் எல்லை தாண்டிய ஒரு கொடிய தாக்குதலை நடத்தியபோது போர் வெடித்தது. அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அப்போதிருந்து, இஸ்ரேலின் இராணுவ பதில் காசாவிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437824- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இலையான் மற்றும் நுளம்பின்.... கோடை கால நேர அட்டவணை. 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
■★◆●உடலில் அணிய வேண்டிய 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..? ■★◆● அம்மா / மகள் இருவரில் அது யாருடைய நகை..? என்ன நகை அது..? ■★◆●மதுரையில் இருந்து 25கிமீ மடப்புரம் கோயிலுக்கு காரை ஓட்டிக்கொண்டு வந்த மகள் நிகிதா... பின் சீட்டில் நகை வைக்கப்பட்ட அந்த காரின் சாவியை... முன் பின் பழக்கம் இல்லாத(?) 3ஆம் நபர் ஒருவரிடம் கொடுத்து பார்க்கிங் செய்யச் சொல்லிவிட்டு கோயிலுக்குள் போனது ஏன்..? ■★◆●தனக்கு கார் ஓட்டவே தெரியாத அஜித்குமார், காரை பார்க் செய்ய ஒப்புக்கொண்டு கார் சாவியை ஏன் பெற்றுக்கொண்டார்..? ■★◆●காரில் நகை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது அணிந்து கொள்ள வேண்டும் என்கிற பாதுகாப்புணர்வு ஏன் அம்மா மகள் இருவருக்கும் அப்போது ஏற்படவே இல்லை..? மற்ற பொருட்கள் எனில் பெண்கள் மறப்பார்கள். கவனமின்மை சாத்தியம். ஆனால், நகையை எப்படி பெண்கள் மறந்தனர்..? அம்மா சிவகாமி கூட ஞாபகப்படுத்தவில்லையா..? ■★◆●அஜித்திடம் சாவியை பெற்று காரை எடுத்து ஓட்டி பார்க் செய்த அந்த 4வது நபர் யார்..? ■★◆●நகை காணவில்லை என்றதும், நகைக்கு சொந்தக்காரர்கள், 7கிமீ அருகேயுள்ள திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ளூர் போலீசிடம் புகார் அளித்தார்களா..? ■★◆●30கிமீ தூரமுள்ள மானாமதுரையில் இருந்து யூனிஃபார்ம் அணியாமல் (லுங்கி, கோடு போட்ட பேண்ட், டி ஷர்ட், சாதா சட்டை எல்லாம் அணிந்தபடி வந்ததாக ஊர் மக்கள் கூறுகிறார்கள்) போலீஸ் தனிப்படை ஒன்று மடப்புரம் கோயிலுக்கு விசாரணைக்கு ஓடி வந்தது ஏன்..? ■★◆●பக்கத்தில் உள்ள திருப்புவனம் காவல் நிலையத்திற்கு கூட்டிப்போய் விசாரணை செய்யாமல் தனிப்பட்ட இடத்தில் விசாரணை நடந்தது ஏன்..? ■★◆●"தப்பி ஓடும்போது தடுக்கி விழுந்து காக்கா வலிப்பு ஏற்பட்டு மரணம்" என்கிற பொய் FIR போட்டது ஏன்..? போட ஒப்புக்கொண்டது ஏன்..? (யூனிஃபார்ம் போடாத டி ஷர்ட் அணிந்த ஒருவரின் பிரம்படி வீடியோ வெளியாகி காக்கா வலிப்பு கதை எல்லாம் பொய் என்றாகிவிட்டது). ■★◆●உயர் அதிகாரிகளின் உத்தரவின் படிதான் தங்கள் வீட்டுக் காவலர்கள் இதைப்போன்று மனிதமற்று சட்ட விரோதமான கொடூரத்தில் ஈடுபட்டதாக தர்ணா போராட்டம் செய்கிற கைதான காவலர் குடும்பத்தினர் கூறியுள்ளனர் எனில்... கீழ்நிலை காவலர்களுக்கு சட்ட விரோதக் கட்டளை இட்ட குற்றத்திற்காக கைதாகி சிறை செல்ல வேண்டிய அந்த உயர் அதிகாரிகள் யார்..? ■★◆●இதைவிட அதிகளவில்... 100 பவுன் 200 பவுன்... என்று நகைகள் திருடு போன வழக்கில் எல்லாம் மெத்தனம் காட்டும் போலீஸ்...இவர்களின் 10 பவுன் நகைக்காக போலீஸ் இத்தனை தீவிரமாக உடனடி நடவடிக்கையில் இறங்கியது ஏன்..? ■★◆●இந்த நிகிதா... சிவகாமி இருவரும் யார்..? இவர்களின் பின்னணி என்ன..?! மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன. வழக்கில் பல மர்மங்கள் விலக வேண்டியுள்ளது. குகன் அருமைநாட்டார்- பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
- செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
கண்விழித்தபடியே காத்திருந்த இந்த பொம்மைக்கு தெரியும் அங்கு நடந்த அத்தனையும். நீல நிற புத்தகப்பை, கண்ணாடி வளையல், காலணி, குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளோடு ஒரு மழலையவள் செம்மணி மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளாள். காலக்கண்ணாடியாக மாறப்போகும் பொம்மை இது. இதே தோற்றமுடைய பொம்மை என்னிடமும் இருந்தது. நல்ல தடிப்பான ரப்பரால் செய்யப்பட்ட பொம்மை, அதிலிருக்கும் நிறங்கள் மேற்பூச்சாக பூசப்பட்டிருக்காது. நன்றாக ஊற வைத்து எடுக்கப்பட்டு ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொம்மையாக இருக்கும். அன்றைய நாட்களில் தரமான பொம்மைகளில் ஒன்று. அது எனது அக்கா தன் மழலைக்காலத்தில் பாவித்து பின் நான் பாவித்த பொம்மையாகும். அக்காவின் இரண்டாவது பிறந்தநாள் (1985) நிகழ்வில் அப்பொம்மை இருக்கிறது. 80 களின் நடுப்பகுதியில் வெளியான தமிழ் சினிமாக்களில்கூட இப்படியான பொம்மைகளை காணமுடியும். இந்த பொம்மையும் இடப்பெயர்வுக்கு முன்பாக கோவில் திருவிழா கடைகளிலோ, பொம்மை கடைகளிலோ வாங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பொம்மையை இந்த மழலையின் சகோதர/ சகோதரி பாவித்து தன் தங்கைக்காக வைத்திருந்ததாகவே இருக்க முடியும். இடப்பெயர்வு காலத்தில் என்னைப்போல இந்த குழந்தையும் இந்த பொம்மையையும் கையோடு கொண்டுசென்றிருக்கும் என்பதை என்னால் நம்பமுடிகிறது. அச்சகோதர இரத்தம் உயிரோடு இருந்தால் இந்த குழந்தை இனங்காணப்படும். அதன்வழி இப்புதைகுழியின் காலம் வெளிப்படும். நன்றாக வாழ்ந்த ஒரு குடும்பம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளதாக என் உள்மனது சொல்கிறது. இயற்கை தன் கணக்கை தீர்க்கும் கணத்துக்காக இவற்றையெல்லாம் தன்னோடு வைத்துக்கொண்டது போலும். Janakan Sivagnanam- சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !
மஹிந்த ராஜபக்ஷவின் மச்சானும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவின் விளக்கமறியல் ஜூலை 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவர் ஶ்ரீலங்கா எயார்லைன்ஸில் நடைப்பெற்ற ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Vaanam.lk- சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !
கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு! இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இன்று (01) சிறை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையிலேயே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1437761- போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர்! வெளியான வீடியோவால் பரபரப்பு. சிவகங்கை அருகே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற 28 வயதான காவலாளி, பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், பத்ரகாளி அம்மன் கோயிலில் அஜித்குமார் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் அந்த கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களது காரை வாகன தரிப்பிடத்தில் விடுமாறு கூறி,காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் நிகிதா முறைப்பாடு அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல், நிகிதா மற்றும் கோயில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அஜித் குமார் கடுமையாக லத்தியால் தாக்கி விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அஜித்குமார் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து அஜித்குமாரை தாக்கி கொலை செய்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அஜித்குமார் உறவினர்கள் மடப்புரத்தில் ஜூன் 28-ம் திகதி போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மதுரை அரச மருத்துவமனையில் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல்துறையினர் டீNளுளு 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. மேலும் அந்த வழக்கு பதிவில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, கீழே விழுந்து அடிபட்டதில் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டு வந்த நிலையில்,தலை முதல் கை, முதுகு, கால்கள் என அனைத்திலும் காயங்கள் இருந்தன. மேலும், 18 இடங்களில் காயங்கள் இருப்பதும், பல இடங்களில் ரத்தக் கசிவு இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் அஜித்குமாரை தனிப்படை காவல்துறையினர் கோயில் பின்புறம் மாட்டு தொழுவத்தில் வைத்து கம்பால் தாக்கிய காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437720- போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
- செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!
செம்மணியில் எடுக்கப்படும் மனித எச்சங்களை AI இல் மாற்றி அமைப்பதனை தவிருங்கள். எது உண்மை என்று கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கிறது. வேணுமென்றால் உங்கட படங்களை செய்து பாருங்கள். Suren Karththikesu இதை வைத்தே அனைத்தையும் பொய்யாக்க போகிறார்கள். Baheerathan Kanagaratnam- வல்வெட்டித்துறையின் வரலாறு: வீரர் குடியேறிய நாடு.
வல்வெட்டித்துறையின் வரலாறு: வீரர் குடியேறிய நாடு 50 களில் எழுதப்பட்ட வல்வெட்டித்துறையின் வரலாற்றுக் குறிப்புகள் என்ற கட்டுரை பல தகவல்களைக் கொண்டுள்ளன. அவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன: • அமைவிடம் மற்றும் பொதுத் தகவல்கள் ◦ வல்வெட்டித்துறை ஒரு துறைமுகப் பட்டினம். ◦ இது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், காங்கேசந்துறையிலிருந்து கிழக்கே 9 மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகத் தெற்கே 30 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. ◦ இதன் பரப்பு 1 சதுரமைல். ◦ 1952 ஆம் ஆண்டு குடிசனமதிப்பின்படி, இங்கு 5,162 இந்து சமயத்தவர்களும் 122 கிறிஸ்தவ சமயத்தவர்களும் வாழ்கின்றனர். ◦ 1947 ஆம் ஆண்டு முதல் பட்டின சபையாலும், அதற்கு முன் சுகாதார சபையாலும் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. • பெயர் வந்த காரணம் ◦ 'வல்லி' என்னும் கால்நடை வியாபாரி பட்டி வைத்திருந்த இடமாதலால் 'வல்லிபட்டி' என அழைக்கப்பட்டு, துறைமுகம் ஏற்பட்ட பின் 'வல்லிபட்டித்துறை' என வழங்கி, பின்னர் 'வல்லிவெட்டித்துறை' எனத் திரிந்து, தற்காலம் 'வல்லுவெட்டித்துறை' என்றும் 'வல்வெட்டித்துறை' என்றும் வழங்கிவருகின்றது. ◦ இது சென்னபட்டினம் சென்னையெனச் சுருக்கி அழைக்கப்படுவது போல "வல்வை" என்றும் "வல்வை நகர்" என்றும் அழைக்கப்படுவதுமுண்டு. • ஆரம்பகால குடியேற்றம் - யுத்த வீரர்கள் ◦ ஆதியில் இவ்வூரில் குடியேறியவர்கள் இந்தியாவிலிருந்து ஊர்க்காவலுக்காக வரவழைக்கப்பட்ட போர் வீரர்களே. ◦ இவ்வீரர்கள் கடற்படை, தரைப்படை இரண்டிலும் சேர்ந்திருந்தவர்கள். ◦ உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பாடிய "வல்வைக் கலித்துறை" எனும் செய்யுளில் இவ்வூரவர்கள் "ஊர்க்காவலர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். ◦ தஞ்சாவூர் நாய்க்கன் படைகளுடன் வல்வெட்டித்துறைக் கரையில் இறங்கியதாகவும், பறங்கியர் தலைவன் தெமோற்றோ திடீரென்று தாக்கி தமிழரை வெருட்டியடித்த செய்தி "யாழ்ப்பாணவைபவ கௌமுதி"யில் காணப்படுகிறது. ◦ இவ்வூருக்குப் பக்கத்திலுள்ள சமரபாகுதேவன் குறிச்சி, வென்றிபாகுதேவன் குறிச்சி, கல்லிடைத் தேவன் குறிச்சி போன்ற பெயர்களும் அப்பகுதிகளில் யுத்த வீரர்கள் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன. • தொழில்களில் மாற்றம் ◦ நாட்டில் அமைதி நிலவியபின், யுத்த வீரர்களின் சேவை வேண்டப்படாமல் போனதால், அவர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபடலாயினர். ◦ கப்பல் கட்டுதல் மற்றும் கப்பலோட்டும் தொழில்: ▪ பணக்காரராயிருந்தவர்கள் "திரைகடலோடியுந் திரவியம் தேடு" என்னும் ஔவையார் வாக்கின்படி கப்பல்கள் கட்டுவித்து வியாபாரம் செய்து பொருள் ஈட்டத் தொடங்கினர். ▪ கடற்படையிலிருந்தவர்கள் கப்பலோட்டும் தொழிலிலும் கப்பல்கட்டும் தொழிலிலும் ஈடுபட்டனர். ▪ "நாவாய் சாத்திரம்" என்னும் கப்பல் கட்டும் சாத்திரத்தைக் கற்ற மேத்திரிமார் பலர் வல்வெட்டித்துறையிலே இருந்தனர். ▪ பெரிய பாய்க்கப்பல்களைக் கட்டுவதில் வல்ல மேத்திரிமார் இலங்கையில் இவ்வூரிலன்றி வேறெங்கும் காண்பது அரிது. ▪ திசைகாட்டும் கருவி, மணிகாட்டும் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே விண்மீன்களின் உதவியால் திசையையும் நேரத்தையும் அறிந்து கப்பல்களைப் பல தூர தேசங்கட்குமோட்டிப் பெயர்பெற்ற மாலுமிகள் பலர் இங்கு இருந்தனர். ▪ இந்தியாவிலுள்ள கப்பல் வர்த்தகர்கள் இவ்வூரிலுள்ள மேத்திரிமாரை அழைத்துக் கப்பல்கள் கட்டுவித்து பெரும் சீர்வரிசைகள் வழங்கியுள்ளனர். ▪ கீரிமலையில் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலும் மடாலயமும் கட்டுவித்த வடிவேலு மேத்திரியார் மற்றும் எல்லாக் கிரகங்களினதும் கதிவக்கிரம் முதலியவற்றைக் காட்டவல்ல அதி நூதனக் கடிகாரத்தைச் செய்தவரும், தோட்டங்களுக்கு யந்திரம் மூலம் நீர் பாய்ச்சுவதற்குரிய யந்திரத்தை முதல் முதல் கண்டுபிடித்துச் செய்துதவியவருமாகிய வா. ஆறுமுகம் (பொன்னுச்சாமி மேத்திரியார்) ஆகியோர் இத்தகைய கௌரவம் பெற்றவர்களில் சிலர். வா. ஆறுமுகம் 1930 இல் காலமானார். ▪ நீண்ட காலமாக இவ்வூரவர்கட்கு நாட்டுக்கோட்டைத் தனவணிகர்கள் கப்பல் கட்டுவதற்குப் பணம் கடன் கொடுத்துதவி வந்திருக்கின்றனர். ◦ வேளாண்மை மற்றும் வியாபாரம்: தரைப்படையிலிருந்தோர் வேளாண்மை, வியாபாரம் முதலிய தொழில்களை மேற்கொண்டனர். • ஆலயங்கள் ◦ "கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்" என்ற முதுமொழிக்கேற்ப இங்கு கோவில்களுக்குக் குறைவில்லை. ◦ முக்கியமான பெரிய ஆலயங்கள்: ▪ கிழக்குப் பகுதியில் நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோவில். ▪ மேற்குப் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில். ▪ முத்துமாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வாலாம்பிகாசமேத வைத்தீசுவரன் கோவில். ▪ இம்மூன்று ஆலயங்களிலும் ஆண்டுதோறும் உற்சவங்கள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. ▪ இலங்கையில் கோபுரம் கட்டப்பட்ட முதற் கோயில் இம்முத்துமாரியம்மன் கோயிலே. ▪ வாலாம்பிகாசமேத வைத்தீசுவரன் கோவிலில் நடைபெறும் ஆறுகாலப் பூசைக் கிரமங்களும், ஆகமசாத்திரங்களிற் கூறப்பட்டபடி அமைந்திருக்கும் ஆலய அழகும் பெரிதும் போற்றற்குரியன. ◦ சிறு ஆலயங்கள்: தில்லையன் மடத்து வயிரவர் கோவில், உலகுடைய பிள்ளையார் கோவில், சடையாண்டி வயிரவர் கோவில், வைகுந்தப் பிள்ளையார் கோவில், நறுவிலடிப் பிள்ளையார் கோவில், மீனாட்சியம்மன் கோவில், கப்பலுடைய பிள்ளையார் கோவில், புட்டணியுப் பிள்ளையார் கோவில் என வழங்கும் 8 சிறு ஆலயங்களும், ஓர் கத்தோலிக்க மதத்தினர்க்குரிய ஆலயமும் உள. ◦ திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையின் பங்களிப்பு: ▪ மேலே குறிப்பிட்ட சிவாலயம் திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையால் 1867 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1883 ஆம் ஆண்டு வைகாசியில் பிரதிட்டாபிடேகஞ் செய்விக்கப்பட்டது. ▪ இவ்வாலயத்து லிங்கம் "பாணலிங்கம்". காசிக்குச் சென்று கங்கையாற்றிலிருந்து இவ்லிங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்துதவியவர் விசுவநாதர். ▪ ஆலயத் தூபித் தங்கக் கலசம், நடராஜர் முதலியவற்றை வார்ப்பித்துக் கொடுத்தவர் விசுவநாதரின் குமாரர் சரவணமுத்து. ▪ திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையை யாவரும் "பெரியவர்" என்றே அழைப்பது வழக்கம். இவரைப் பற்றிச் சிவசம்புப் புலவரவர்களால் பாடப்பெற்ற "வல்வைக் கலித்துறை"ப் பாடல்கள் உள்ளன. ▪ வைகாசி மாதத்தில் நிகழும் வற்றாப் பழைப் பொங்கலுக்காக கடல் மார்க்கமாகச் செல்பவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக முல்லைத்தீவுக் கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் மடாலயமும், ஒவ்வொருவரினதும் வருணாச்சிரமங்களுக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் கூடங்களும் இவரால் அமைக்கப்பட்டனவே. இவர் 1892 ஆம் ஆண்டு சிவபதமடைந்தார். ▪ இவரது தம்பியார் திரு. குழந்தைவேல் பிள்ளைதான் கொழும்பு செக்கடித் தெருவில் யாழ்ப்பாணித்தார் கோவில் என வழங்கும் சுப்பிரமணியர் ஆலயத்தைத் தாபித்தவர். இவர் அக்காலத்து இந்துஸ்தான் வங்கியில் சிறாப்பராகவும் பிரபலமான வியாபாரியாகவும் இருந்து கொழும்பிலுள்ள தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருந்தவர். இவர் 1905 ஆம் ஆண்டு சிவபதமடைந்தார். • புலவர்களும் அட்டாவதானியும் ◦ ஆதியில் வட மராட்சிப் பகுதி மணியகாரராயிருந்து கடமை பார்த்த புண்ணிய மூர்த்தி மணியகாரனின் மகளை மணந்தவர் ஏகாம்பரப் புலவர். (இப்புண்ணிய மூர்த்தியார் வேங்கடாசலம் பிள்ளை, குழந்தைவேல்பிள்ளை ஆகியவர்களின் தந்தையாகிய திருமேனியாரின் மூத்த சகோதரர்). ◦ ஏகாம்பரப் புலவரின் சகோதரியுடைய மகன் ஏகாம்பரம் என்பவர்தான் இலங்கையில் முதல் முதல் "அட்டாவதானஞ்" செய்து காட்டி அரும்பெரும் புகழ் பெற்றவர். இவர் "அட்டாவதானியார்" என்றே அழைக்கப்பட்டு வந்தவர். ◦ இவர்களுக்குப்பின் ச. வைத்தியலிங்கம் பிள்ளை, த. அருணாசலம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, பொன்னையாபிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை ஆகிய புலவர்கள் இருந்திருக்கின்றனர். ◦ இவர்களுள் ச. வைத்தியலிங்கப் புலவர் குறிப்பிடத்தக்கவர். இவர் நாற்பொருட் கவிராச நம்பியகப் பொருள், வள்ளியம்மை தெய்வயானையம்மை திருமணப் படலம், கந்தரலங்காரம், மறைசையந்தாதி, கல்வளையந்தாதி முதலிய நூல்கட்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டதுமன்றி, "சிந்தாமணி நிகண்டு" என்னும் நிகண்டு ஒன்றும் யாத்து வெளியிட்டுள்ளார். ஈழ நாட்டில் நிகண்டு நூல் செய்த புலவர் இவரன்றி வேறு யாரும் இலர். ◦ இவர் தர்க்கத்தில் தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கியவர். ◦ இவர் காலத்து நிகழ்ந்த பல சண்டைகள் தொடர்பான கண்டனங்களையும் துண்டுப்பிரசுரமாக வெளியிட்டுள்ளார். ◦ "சைவாபிமானி" என்னும் பத்திரிகையொன்றைச் சொந்த அச்சியந்திர சாலை நிறுவி அச்சிட்டுப் பத்து ஆண்டுகள் வெளியிட்ட பின்னர் 1901 ஆம் ஆண்டு காலமானார். ◦ ஏனைய புலவர்கள் இயற்றியவை அச்சுவாகனம் ஏறாததால் ஒன்றும் தெரியவரவில்லை. • கவிக்குக் கனசுந்தருதல் (கவிஞர்களுக்கு சன்மானம்) ◦ வல்வெட்டித்துறை கோ. கந்தசாமி என்பவர் மட்டக்களப்பில் பிரபல மர வியாபாரியாக விளங்கியவர். ◦ உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்கள் இவர் மீது "பிரபாவப் பாமாலை" ஒன்றை பாடிச் சென்றபோது, கந்தசாமிப்பிள்ளை புலவரை மட்டக்களப்புக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி சிறு பொருளுதவி செய்தார். ◦ புலவர் சில மாதங்கள் கழித்து மட்டக்களப்புக்குச் சென்றபோது, கந்தசாமிப்பிள்ளை இல்லாத நிலையிலும், அவரது மனைவி சொன்ன சொற்படி ஆயிரம் ரூபாயை வழங்கினார். • கல்விச்சாலைகள் ◦ "சிதம்பர வித்தியாலயம்" என வழங்கும் ஓர் ஆங்கிலக் கல்லூரியும். இது 1896 இல் திரு. கு. சிதம்பரப்பிள்ளையவர்களால் நிறுவப் பெற்றது. பின்னர் அவரது மைத்துனர் திரு. ஞா. தையல்பாகர் அவர்களின் பரிபாலனத்தின் கீழ் வளர்ந்து வருகின்றது. ◦ "சிவகுரு வித்தியாசாலை" என வழங்கும் ஓர் தமிழ்ப் பாடசாலையும். இத்தையல்பாகர்தான் சிவகுரு வித்தியாசாலையைத் தாபித்தவர். ◦ அமெரிக்கன் மிஷனரிமாரால் நடத்தப்படும் ஓர் தமிழ்ப் பாடசாலையும். ◦ கத்தோலிக்க மதத்தினரால் தாபிக்கப்பட்ட ஓர் தமிழ்ப் பாடசாலையும் உள. ◦ திரு. ஞா. தையல்பாகர் தனது உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் வித்தியாசாலைகளின் அபிவிருத்திக்காக அர்ப்பணம் செய்து அரும் பாடுபட்டு வருகின்றார். • முக்கியமான சமூக மற்றும் பொருளாதார அம்சங்கள் ◦ இவ்வூரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கலப்பு மணம் செய்துகொள்ளும் வழக்கம் இல்லை. ◦ உள்ளூரவர்களே எல்லாவிதமான வியாபாரங்களையும் ஏற்று நடத்தி வருகின்றனர். ◦ அரசாங்க சேவையில் ஈடுபாடு: ▪ பண்டைக் காலம் தொடங்கி இவ்வூரவர்கள் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ளனர். ▪ திருமேனியாரின் தாயாருடன் கூடிப் பிறந்த பொன்னம்பலம் என்பவர் இந்தியாவிலும் இலங்கையிலும் பிரபல வியாபாரியாக விளங்கியதுடன், ஒல்லாந்த அரசாங்கத்தாரால் "முதலியார்" பட்டம் வழங்கப்பெற்றார். ▪ இவருக்குப்பின் வேலுப்பிள்ளை என்பவரும் அவருக்குப் பின் புண்ணியமூர்த்தி என்பவரும் மணியகாரராயிருந்தவர்கள். ▪ இன்னும் இவ் வல்வெட்டித்துறை வாசிகள் பலர் இலங்கை அரசாங்க சேவையில் எல்லாத் துறைகளிலும் அமர்ந்து சேவை செய்து வருகின்றனர். ▪ மலாயா, பர்மா முதலிய இடங்களிலும் பலர் இருக்கின்றனர். ▪ இந்தியாவுக்கும் இவ்வூரவர்கட்குமுள்ள தொடர்பு இன்றும் இருந்து வருகின்றது. ◦ சமூக பங்களிப்புகள்: ▪ இவ்வூரவரொருவர் (முகாந்திரம் அப்புக்குட்டியாபிள்ளை) ஒரு லட்சம் ரூபாய் செலவில் **"இந்திராணி வைத்தியசாலை"**யைக் கட்டி அரசினரிடம் ஒப்புவித்துள்ளார். ▪ "ஜனசமூக நிலையம்" (Community Centre) ஒன்று ஊரவர்களால் ரூ. 13,500 செலவில் கட்டிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண புலனாய்வு ·- குட்டிக் கதைகள்.
திருவிழா கூட்டத்தில் இரண்டு நபர்கள் அவரவர் மனைவிகளை தொலைந்துவிட்டார்கள். அந்த இருவரும் அவர்களது மனைவிகளை தேடி அங்கும் இங்குமா தேடித் திரிந்தார்கள்.பிறகு.... அவர் : ஏங்க,உங்க மனைவியும் காணவில்லையா? இவர் : ஆமாங்க.அரை மணி நேரமா தேடிட்டு இருக்கேன். என் மணைவி இன்னும் கிடைக்கல.உங்க மனைவி கிடச்சுட்டாங்களா? அவர் : அட இன்னும் கிடைக்கலங்க. நானும் தேடிட்டு தான் இருக்கேன். ஆமா உங்க மனைவி எப்படி இருப்பாங்க? இவர் : என் மனைவி பாக்குறதுக்கு நயன்தாரா சாயல்ல இருப்பாங்க.அவ சிரிச்சா கண்ணத்துல அழகா குழி விழும்.அதுக்கு பக்கத்துலயே சின்ன மச்சம் ஒன்னு இருக்கும்.ரோஸ் கலர் சாரி கட்டியிருப்பா.பாக்குறதுக்கு சின்ன பொண்ணு மாதிரியே இருப்பாங்க. சரிங்க உங்க மணைவி எப்படி இருப்பாங்கனு சொல்லுங்க? அவர் : அத விடுங்க. அவ கிடக்குறா கழுதை. வாங்க முதல்ல உங்க மனைவியே தேடுவோம்.- சிரிக்கலாம் வாங்க
- போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
தமிழகம் தலை குனிந்த தருணம். மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள். கட்டெறும்பு- போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
இது புதுசா இருக்கே.கொலைகாரனுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் உள்ளே பிடிச்சு போடுங்கள் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றம் நீங்கள் நினைத்தால் என்ன வழக்கு வேணாலும் போடலாம் போட்டு அவர்களை உள்ள தூக்கி போடுங்க. Narendira Kumar Subramaniam - செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.