Everything posted by தமிழ் சிறி
-
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை. போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது பொலிஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் – நடிகைகளை பொலிஸார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பாக அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் கூறிய தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த பொலிஸார் திட்டமிட்டனர். இதன்போது நடிகர் கிருஷ்ணா, கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அவரைக் கைது செய்ய பொலிஸார் கேரளாவுக்கு விரைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று பொலிஸார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பிறகு அவருக்கு அரசு வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437172
-
ஈரான் மீதான தாக்குதலை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டு பேசிய ட்ரம்!
ஈரான் மீதான தாக்குதலை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டு பேசிய ட்ரம்! ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களின் தாக்கத்தை ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (25) இரண்டாம் உலகப் போரின் முடிவுடன் ஒப்பிட்டுப் பேசினார். அதாவது, அமெரிக்க நடவடிக்கையை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவெடிப்புகளுடன் ட்ரம்ப் ஒப்பிட்டார். இந்த தாக்குதலில் 150,000 முதல் 246,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இவர்களில் பொரும்பாலானோர் பொது மக்கள். அதேநரேம், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் கிடைக்கக்கூடிய உளவுத்துறை அறிக்கைகள் முடிவில்லாதவை என்றாலும் சேதம் கடுமையானது என்று வாதிட்டார். ஈரானின் அணுசக்தி திட்டம் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூறிய போதிலும், தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் செயற்பாடுகளை சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தும் என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன. அதேநேரம், அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களை “கடுமையாக சேதப்படுத்தியதாகவும்” அவற்றின் செயற்பாடுகளை பல ஆண்டுகள் பின்னோக்கிச் நகர்த்தியதாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) தலைவர் கூறியுள்ளார். CIA இன் பணிப்பாளரான ஜான் ராட்க்ளிஃப், தாக்குதலில ஈரானின் முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறினார். இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் அறிவிக்கவில்லை. அமெரிக்க தாக்குதலுக்கு பின்னரும், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய கூறுகள் அப்படியே இருந்ததாக பென்டகன் உளவுத்துறை நிறுவனத்திடமிருந்து கசிந்த முதற்கட்ட மதிப்பீடு தெரிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. https://athavannews.com/2025/1437195
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
நோபல் பரிசு எல்லாம் கெஞ்சிக் கேட்டு பெறுகின்ற கேவலமான நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். . 😂
-
கருத்து படங்கள்
- இலங்கை சொற்களுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்!
இலங்கை சொற்களுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்! ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல தனித்துவமான இலங்கைச் சொற்களைச் சேர்த்துள்ளது. குறிப்பாக கொத்து ரொட்டி, கிரிபாத் உள்ளிட்ட பல பிரபலமான இலங்கை வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர, ‘பைலா’ மற்றும் ‘பப்பரே’ என்ற கலாச்சாரச் சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது உலகளாவிய ஆங்கில பயன்பாட்டில் இலங்கை உணவு வகைகள் மற்றும் மரபுகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைக் குறிக்கிறது. புதிய உள்ளீடுகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமகால பயன்பாட்டை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி ஆசிரியர் குழு ஏற்கனவே உள்ள பல இலங்கை ஆங்கில சொற்களையும் திருத்தியுள்ளது. அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய இலங்கை சொற்கள் அஸ்வெத்துமைஸ், அவுருது, பைலா, கிரிபத், கொத்து ரொட்டி, மல்லுங், ஒசரி, பப்பரே, வளவ்வ, வட்டலப்பம். திருத்தப்பட்ட சொற்கள் : சிலோன் காபி, சிலோன் டீ, சிலோனீஸ், கொழும்பு, டகோபா, கங்கானி, சிங்களி, தமிழ், யுஎன்பி, வேத்தா, விஹாரா மற்றும் பிற. இந்த புதுப்பிப்பு உலகளாவிய மொழியியல் நிலப்பரப்புகளில் இலங்கை கலாச்சாரம் மற்றும் மொழியின் வளர்ந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1437181- ஐ.நா ஈழத்தமிழரை கைவிட்டது, மலையக தமிழரையும் கை விடாதீர்கள்
ஈழத் தமிழரை கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கை விட்டுவிடாதீர்கள்! -மனோ கணேசன். ”ஈழத்தமிழரைக் கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கைவிட்டு விடாதீர்கள்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிற்கும், எதிர் கட்சி தலைவர்களுக்கும் இடையில் நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது. இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடை பெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐநா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51வது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு கோருகின்றேன். இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பிலும் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன். இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1437173- மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் புதன்கிழமை (25) இரவு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, புனித யோவான் ஸ்நானகரை கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க, அவர்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளை ஆன்லைனில் பரவிய காணொளிகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர். தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையல், ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். மெக்ஸிகோ நகரத்தின் வடமேற்கே உள்ள குவானாஜுவாடோ, பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் கட்டுப்பாட்டிற்காகப் போராடுவதால், நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாநிலத்தில் 1,435 கொலைகள் நடந்துள்ளன. இது வேறு எந்த மாநிலத்தையும் விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437154- மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை ஆணிக்கட்டைகளை வீசி மடக்கிப் பிடித்த பொலிஸார் - பளையில் சம்பவம்
சரியான செயல். படங்களை பார்க்க சிரிப்பாக உள்ளது. 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
👉 https://www.facebook.com/watch?v=615000964377174 👈 ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம்! நைசாக... நழுவிய, சாணக்கியன்! செம்மணி போராட்ட களத்தில் பெரும் பரபரப்பு. Samugam 24×7- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
சுமந்திரன்... நரியன். எங்கை தனக்கு அடி விழும் என்று முன்பே தெரியும். 😂 ஏற்கெனவே சுமந்திரனுக்கு... அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று சர்வதேச லெவலில் வாங்கிக் கட்டிய அனுபவம் உண்டு. 🤣 செம்மணிக்கு தான் போனால்... கோட்டு, சூட்டு எல்லாம் கழட்டி துவைத்து எடுத்து விடுவார்கள் என்று தெரியும். அதுதான்... தான், பதுங்கிக் கொண்டு, சிவஞானத்தை நோட்டம் பார்க்க அனுப்பியவர். அதுகும் வந்து, வளமாய் வாங்கிக் கட்டிக் கொண்டு போயிருக்குது. 😂- சிரிக்கலாம் வாங்க
- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
பொதுமக்களால் ஓட ஓட கலைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் சீ.வி.கே சிவஞானம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வடமாகாண சபை அவைத்தலைவரும், தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்று (25) 3ஆவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் மதியம் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சீ.வி.கே சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றி இருந்தனர். யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள் என கூறியே போராட்டக்களத்தில் இருந்து சீ.வி.கே சிவஞானத்தை அப்புறப்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
செம்மணிப் படுகொலையின் சூத்திரதாரிகள். “அம்மணியும், அல்லக்கையும்." Rj Prasath Santhulaki- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
செம்மணியில் செருப்பை விட்டு விட்டு ஓடிய.... NPP பாராளுமன்ற உறுப்பினர்கள். Inuvaijur Mayuran- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
உச்சிக் கம்பத்தில் நின்று... குறளி வித்தை காட்டினாலும், காசு வாங்க.. கீழை இறங்கித்தான் வர வேண்டும். அற்ப ஆசன ஆசைகளுக்காக தமிழ் விரோத & துரோகக் குழுக்களோடு கூட்டுவச்சிட்டு, வெள்ளை வேட்டியோட மக்கள் மத்தியில் வந்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் என்ன நடக்கும் என்பது இன்று தெளிவாகியிருக்கும். கே. சிவஞானம் & சாணக்கியன்🪕🤥 மற்றவையும் கவனம்🧘🏿♂️ Rj Prasath Santhulaki- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
‘அணையா தீபம்‘ போராட்டக்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள்! செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி கோரி செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி முதல் 3 நாட்கள் ”அணையா தீபம்’ எனப்படும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவான மக்கள் குறித்த பகுதியில் ஒன்று கூடி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது போராட்டக் களத்திற்கு தமிழ் அரசியல் தலைவர்களான இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த போராட்டக்காரர்கள் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்ளை வெளியேறுமாறு கூச்சலிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த அரசியல் தலைவர்கள் போராட்டக் களத்திலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437082- பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல்! பெண்கள் உட்பட மூவர் கைது!
பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல்! பெண்கள் உட்பட மூவர் கைது! மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தி, பொல்லுகளால் தாக்குதல் நடாத்தியதில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று(25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு ஆண் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் 3 பேர் தப்பி சென்றுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவர் தலைமறைவாகி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த திருடன் அவரது வீட்டில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவதினமான இன்று (25) பிற்பகல் 01.30 மணியளவில் குறித்த நபரை கைது செய்வதற்காக இரு பொலிசார் சிவில் உடையில் அங்கு சென்று கைது செய்ய முற்பட்டனர். இதன் போது அங்கு பொலிசார் மீது திருடன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த இரு பெண்கள் உட்பட குழுவினர் பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டதில் இரு பொலிசார் பலத்த காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை நடாத்திய திருடன் உட்பட 3 பேர் தப்பி ஓடியுள்ளனர். இதனை தொடர்ந்து பொலிசார் மீது தாக்குதலை நடாத்திய திருடனின் தாயார் மனைவி ஆகிய இரு பெண்கள் ஆண் ஒருவர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்தனர் . இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1437122- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் போர்: காசாவில் 4 லட்சம் பேர் மாயம்! “காசாவில் கடந்த 2 வருடங்களில் 4 இலட்சம் பேர் மாயமாகியுள்ளனர்” என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காசா மீது கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப்போரினால் இதுவரை காசாவில் சுமார் 60,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மையில் இது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசாவில் 3,77,000 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் காணாமல் போனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது. அத்துடன் போருக்கு முன்னர் காசாவில் 22 லட்சம் பேர் வசித்து வந்துள்ளனர் எனவும், தற்போது 19 லட்சம் பேர் மாத்திரமே அங்கு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல்களும், மனிதாபிமான உதவிகளைத் தடுப்பதும் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் இப் போரின்போது மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் அல்லது காணாமற் போய் இருக்கலாம் என்றாலும் கணிசமான எண்ணிக்கையிலானோர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கே வரக் கூடியதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்” உலக நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் காஸா மக்களுக்கு உதவியை வழங்க முன்வந்தாலும், அதை பெற வரும் மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மே மாத இறுதியில் இருந்து இன்று வரை, மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது 450 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 3,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437103- அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்!
அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்! அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி முனை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) பாகிஸ்தான் இராணுவம் ரகசியமாக உருவாக்கி வருவதாக வொஷிங்டனில் உள்ள உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பின்னர் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை மேம்படுத்த விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டிய அந்த அறிக்கை, பாகிஸ்தான் அத்தகைய ஏவுகணையை வாங்கத் தொடர்ந்தால், வொஷிங்டன் அந்த நாட்டை அணுசக்தி எதிரியாக அறிவிக்கும் என்றும் கூறியது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவோ அல்லது எதிரியாகவோ கருதப்பட்டால், அது அணுசக்தி எதிரியாகக் கருதப்படுகிறது. தற்போது, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகியவை அமெரிக்காவிற்கு எதிரியாகக் கருதப்படுகின்றன. இதனிடையே, பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் இந்தியாவைத் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக இஸ்லாமபாத் எப்போதும் கூறி வருகிறது. அதன் கொள்கை குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாக கூறுகிறது. அணு மற்றும் வழக்கமான போர்முனைகள் இரண்டையும் பொருத்தக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs), 5,500 கி.மீ.க்கு மேல் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. தற்போது பாகிஸ்தானிடம் ICBMகள் இல்லை. https://athavannews.com/2025/1437071- அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?
நடிகை ஸ்ரீரெட்டி சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்ட ஆள். 😄 அவர் கால் வைக்காத துறையே இல்லைப் போலுள்ளது. 😂 அமைச்சர் உதயநிதியும்... நடிகை ஸ்ரீ ரெட்டியின் வாடிக்கையாளர் என்பதில் இருந்து, ஸ்ரீரெட்டி சர்வதேச லெவலில் புகழ் பெற்ற ஒருவர்.. நமது தமிழ் சினிமாவில் இருப்பது... நமக்கெல்லாம் பெருமைதானே. 🤣- சாரதி இல்லாத டக்ஸி சேவையை ஆரம்பித்துள்ள டெஸ்லா!
சரியாகச் சொன்னீர்கள். இப்ப இருக்கின்ற இளம் தலைமுறைக்கு.. சுழிச்சுக் கொண்டு, வெட்டி ஆடுற கெட்டித்தனம் குறைவு என்று நினைக்கின்றேன். போன தலைமுறை... மூக்காலை போய் காதாலை வெளியே வருவார்கள். - இலங்கை சொற்களுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.